25 September, 2009

Healing of the Paralytic. தன்னைச் சுமந்ததைத் தான் சுமந்து சென்றான்...

Here is the miracle of the healing of the paralytic. To me, my friends, the heroes of this miracle are the friends who carried the paralytic and took all the risks to bring him in front of Jesus – even running the risk of dismantling the roof of the house. Why would these friends do this? Because, they loved their friend. For them, the man lying on the cot was not simply a burden to be carried; but a friend. They would go through hell to bring him to heaven. I am reminded of the lovely song “Be not afraid”… This is one of my all time favourites among the many English hymns. Bear with me for quoting this at length… I have heard that this was a favourite of the former Jesuit General, Fr Pedro Arrupe of happy memory! Here is the song:

http://members.cox.net/rss1910/blessing.html

You shall cross the barren desert,
but you shall not die of thirst.
You shall wander far in safety
though you do not know the way.
You shall speak your words in foreign lands
and all will understand.
You shall see the face of God and live.

Be not afraid.I go before you always;
Come follow me,and I will give you rest.

If you pass through raging waters in the sea,
you shall not drown.
If you walk amid the burning flames,
you shall not be harmed.
If you stand before the pow'r of hell
and death is at your side
,
know that I am with you through it all.

Standing before the pow’r of hell and staring death in the face… this was the situation of the friends who carried the paralytic. “Seeing their faith…” Jesus worked the miracle!
They came carrying the paralytic. The paralytic went back carrying the cot… probably he and his friends threw away the cot on their way back. Hopefully, no more burdens for the rest of their lives!
I have also talked of how we are fond of carrying burdens and imposing burdens on others. I have closed my reflections with a short story:
An old man was walking along the road in the hot sun, carrying a burden on his head. A lorry passed that way. The lorry driver took pity on the old man and asked him to climb on the back of the lorry. As they were going, the driver turned around to see how the old man was and to his utter surprise, he found the old man standing in the lorry still carrying the load on his head. The driver told the old man to put down the load. The old man replied, “No, sir, already you are doing me a favour by taking me in the lorry. I shall not add more burden to your lorry with my load. Let me carry it myself.”
Some of us (Many of us?) seem to feel comfortable carrying our burdens for long…

அன்பர்களே, சென்ற வாரம் விவிலியத்தேடலில் இயேசு தொழுநோயாளி ஒருவரைக் குணமாக்கிய புதுமையைப் பற்றி சிந்தித்தோம். இந்த வாரம் முடக்கு வாதமுற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையைப் பற்றி சிந்திப்போம். சென்ற வாரமே இந்தப் புதுமையைப் பற்றி கொஞ்சம் பேசினோம். இந்த வாரம் இன்னும் ஆழமாய் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, இயேசு ஆற்றியப் புதுமைகளை அவருடைய இறை வல்லமை வெளிப்படும் அருங்குறிகள் என்ற கோணத்தில் பார்ப்பது நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு அந்தப் புதுமைகைளை ஆற்றிய போது இருந்த சூழ்நிலை, அந்தப் புதுமையில் பங்கு பெற்றவர்கள் ஆகியவைப் பற்றியும் சிந்திப்பது பயனளிக்கும். இந்த கண்ணோட்டத்துடன், இன்று நாம் சிந்திக்கவிருக்கும் புதுமையை லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா, 5, 17-26.
17 ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.18 அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர்.19 மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டுபோக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள்.20 அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்.21 இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், ' கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என்று எண்ணிக்கொண்டனர்.22 அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, ' உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன?23 ' உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன ' என்பதா, அல்லது ' எழுந்து நடக்கவும் ' என்பதா, எது எளிது?24 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ' என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உமக்குச் சொல்கிறேன்; நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்! ' என்றார்.25 உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.26 இதைக் கண்ட யாவரும் மெய்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், ' இன்று புதுமையானவற்றைக் கண்டோம்! ' என்று பேசிக் கொண்டார்கள்.

முதல் வசனத்தைத் திரும்பவும் கேட்போம். "ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்."

லூக்கா நற்செய்தியின்படி இயேசுவின் வல்லமை ஒரு சில புதுமைகளின் வழியே, அதிலும் சிறப்பாக, குணமாக்கும் புதுமைகளின் வழியே பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. இதைக் கேள்விப்பட்டு, பலர் யேசுவிடம் என்னதான் நடக்கிறதென்ற ஆர்வத்தில் அவரைக் காண வந்தனர். ஏராளமான எளிய மக்கள் இது போல ஏதாவது தங்கள் வாழ்விலும் நடக்கும் என்ற நம்பிக்கையோடு, ஏக்கத்தோடு இயேசுவைத் தேடி வந்தார்கள். இவர்களெல்லாம் வந்தது சரிதான். ஆனால், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள்? இவர்களுக்கு அங்கே என்ன வேலை? அதுவும் யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்திருந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார்.

அன்பர்களே, மதுரை அல்லது திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஒரு சின்ன ஊரில் இருக்கும் ஒரு தனி மனிதரிடம் அசாத்திய திறமைகள், சக்திகள் வெளிப்படுவதாகவும் அவர் வழியாக ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதாகவும், அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன என்று வைத்துகொள்வோம். விரைவில் அந்த ஊருக்கு சென்னையிலிருந்து அல்லது டெல்லியிலிருந்து அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? சம்பவங்களில் பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அந்த சம்பவத்தைப் பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்ல வேண்டும்... அல்லது அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும் காரியங்கள் சட்டபூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்... இவையே இவர்களின் முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை பொம்மைகள் இவர்கள்.

இயேசுவைச் தேடி வந்தவர்களிடமும் பல்வேறு நோக்கங்கள். இயேசு ஆற்றும் அருங்குறிகளைக் காண வேண்டும், அவரிடமிருந்து அற்புதங்களைப் பெற வேண்டுமென எளிய மக்கள் வந்திருந்தனர். இயேசுவிடம் குற்றங்களைக் காண வேண்டும், அவருக்குக் குற்றப் பத்திரிகைத் தரவேண்டுமென பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் வந்திருந்தனர். இந்த நேரத்தில் இன்னும் நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப் போனால், இவர்கள்தாம் இன்றைய நிகழ்வின் நாயகர்கள்.

இந்த நான்கு நண்பர்களும் வெறும் ஆர்வக் கோளாறினால் அங்கு வரவில்லை. ஒரு தீர்மானத்தோடு வந்திருந்தார்கள். பல ஆண்டுகளாய் செயல் இழந்து படுக்கையில் இருக்கும் தங்கள் நண்பனைக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் நண்பனின் இந்த அவலமான நிலையைக் கண்டு இதுதான் அவனுக்கு வந்த விதி என்று அவன் வாழ்வையும் தங்கள் நம்பிக்கையையும் மூடிவிடாமல், அவனுக்கு என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தவர்கள் இந்த நண்பர்கள். இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டார்கள். தங்கள் நண்பனைக் கொண்டு வந்தார்கள்.

வந்த இடத்தில் மீண்டும் ஒரு தடங்கல். இயேசு இருந்த வீட்டில் அதிக கும்பல். அந்த கும்பலில் வெளிச் சுற்றில் நின்றவர்கள் குருக்கள், பரிசேயர்... அவர்களைக் கடந்து தங்கள் நண்பனைக் கட்டிலோடு வீட்டினுள் இருந்த யேசுவிடம் கொண்டு போவதென்பது மிகவும் ஆபத்தானது. காரணம்? நோயாளி கடவுள் சாபம் பெற்றவன் அவனை தொட்டாலோ, அல்லது அவன் தங்களைத் தொட்டாலோ, தாங்கள் தீட்டு பெறுவோம் என்பதால், நோயாளி கூட்டத்திற்குள் வந்துவிட்டான் என்று கண்டுபிடித்தால் அவனுக்கு உரிய தண்டனை வழங்குவதிலேயே குறியாய் இருக்கும் கும்பல் இந்த குருக்கள், பரிசேயர் கும்பல். இந்த கொடூரமான எண்ணங்களை இவர்கள் அடிக்கடி சொல்லியுள்ளதையும், அவற்றைச் செயல் படுத்தியத்தையும் பார்த்தவர்கள் இந்த நண்பர்கள். தங்கள் நண்பனை இவர்களின் சித்திரவதைக்கு ஆளாக்காமல் யேசுவிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கொஞ்ச நேரம் குழம்பினார்கள். திடீரென தோன்றியது அந்த ஒளி, ஒரு புது பாதை தெரிந்தது. இயேசு நின்ற இடத்திற்கு மேலிருந்த கூரையைப் பிரித்து, தங்கள் நண்பனை இயேசுவுக்கு முன்பு இறக்கினார்கள். இவர்களது நம்பிக்கையை ஒரு வெறி என்று கூட சொல்லலாம்.

கட்டிலை வீட்டின் கூரை மீது ஏற்றி, ஓடுகளைப் பிரித்து.... அவர்கள் செய்தது மிகவும் ஆபத்தான செயல். இயேசு போதித்துக்கொண்டிருந்த வீடு ஒரு மாளிகை அல்ல, எளிய வீடு. அந்த வீட்டுக் கூரையின் மீது நான்கு, ஐந்து பேர் ஏறினால், கூரை முழுவதும் உடைந்துவிடும் ஆபத்து உண்டு. வீட்டின் கூரை முழுவதும் உடைந்திருந்தால்... கீழே இருந்த பலருக்கும், இயேசுவுக்கும் சேர்த்து ஆபத்து. இப்படி பல வகையிலும் ஆபத்து நிறைந்த செயலை அவர்கள் செய்தனர். இதைத்தான் வெறி என்று சொன்னேன்.

தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன, முழம் என்ன என்ற வரிகள் நினைவிருக்கலாம். நம்பிக்கை இழக்கச் செய்யும் இந்த வரிகளை இன்னும் தொடர்ந்து சிந்திப்போம்... தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளத்தில் தத்தளிக்கும்போது, கரை தெரிந்தால், எஞ்சிஇருக்கும் வலிமை எல்லாம் கூட்டி கரையை அடைய மாட்டோமா? அப்படித்தான் இந்த நண்பர்களும்.... பல ஆண்டுகளாய் பற்பல வெள்ளங்களைச் சந்தித்தவர்கள் இவர்கள். இதோ கரை நெருங்கிவிட்டது. கூரை நெருங்கி விட்டது என்றும் சொல்லலாம். இந்த நேரத்தில் பின் வாங்கக் கூடாது. எப்படியாவது இயேசுவுக்கு முன்னால் தங்கள் நண்பனைக் கொண்டு செல்லவேண்டும். கொண்டு சென்றார்கள்.

லூக்கா நற்செய்தியின் 20 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்க தூண்டுபவை. "அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு..." ஆம்... கட்டிலில் கிடந்தவன் நம்பிக்கையை விட அவனைத் தூக்கிவந்தவர்கள் நம்பிக்கை இயேசுவை அதிகம் கவர்ந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவனை இயேசு குணமாக்குகிறார்.

இயேசுவின் பல குணமளிக்கும் நிகழ்வுகளில் குணமிழந்த தனி மனிதனுக்கு மட்டும் குணமளிக்காமல், சுற்றி நிற்கும் பலருக்கும் குணமளிக்கிறார் இயேசு. தொழு நோயாளியைத் தொட்டு குணமாக்கினார் என்று சென்ற வாரம் பார்த்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இன்று மீண்டும் இயேசு அதையே செய்கிறார்.

அந்த முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறுகிறார். பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட நான் சில சமயங்களில் எண்ணுவதுண்டு.

ஆழமாக சிந்தித்தால், பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல... மாறாக, பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம்.. இயேசு முடக்குவாதமுற்றவரது உடலை மட்டும் குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்த சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி அவருக்கு முழு குணம் அளிக்கவே, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன." என்று கூறினார்.

இயேசு அவருடைய பாவத்தை மட்டுமல்ல சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக முடக்குவாதமுற்றவருக்கு இதுவரை தவறான தீர்ப்புகள் அளித்து அவரையும் தங்களையும் கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் எல்லாருடைய பாவங்களையும் இயேசு மன்னிக்கிறார்.

மன்னிப்பு ஒரு ஆறாக அங்கு பெருகி ஓடிய போது, அழகிய ஒரு சம்பவம் நிகழ்கிறது. பல வருடங்களாய் கட்டிலோடு முடங்கிப்போனவர் தட்டுத் தடுமாறி எழுகிறார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவி, தன்னை இதுவரைத் தாங்கி வந்த கட்டிலை அவர் தூக்கிக் கொண்டு வெளியே செல்கிறார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராத அந்த கும்பல், முக்கியமாக அவரை இயேசுவிடம் சேர்க்க முடியாமல் வழி மறைத்து நின்ற குருக்கள், பரிசேயர் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழி விட, அவர் கம்பீரமாய் வெளியே செல்கிறார். வீட்டின் கூரை மீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள் இயேசுவுக்கு அங்கிருந்தபடியே நன்றி சொல்லிவிட்டு அவசரமாய் இறங்கி வந்து நண்பனுடன் மகிழ்வாக செல்கின்றனர். வரும்போது அவரைச் சுமந்து வந்த கட்டிலை எல்லாரும் சேர்ந்து குப்பையில் எறிந்து விட்டு போயிருக்க வேண்டும்.

யேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம்.
வாழ்க்கையில் நாம் சுமக்கும், பிறர் மீது நாம் சுமத்தும் சுமைகளைப் பற்றி சிந்திக்கலாம்.

ஒரு சிறுமி தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற போது, அங்கிருந்த ஒரு டாக்டர் சிறுமியிடம் "அவன் பராமாயில்லையா?" என்று கேட்டபோது, அந்த சிறுமி, "பாரமில்லை, அவன் என் தம்பி." என்று சொன்னதாக ஒரு சின்னக் கதை உண்டு. சுகமான சுமைகள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. தாயின் கருவில் வளரும் குழந்தையை வழக்கமாகத் தாய் சுமையாக நினைப்பதில்லை. ஆனால், மற்ற சுமைகள்? இதோ இன்னொரு கதை.

ஒரு வயதான தொழிலாளி சாலையில் பெரிய சுமையைத் தூக்கிக்கொண்டு போகிறார். அந்த வழியே வந்த ஒரு லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்தி, அந்த தொழிலாளியைத் தனது லாரியின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னாராம். தொழிலாளி ஏறியதும், லாரியை ஓட்டிச் சென்றாராம். சிறிது தூரம் போனதும், தொழிலாளி எப்படி இருக்கிறார் என்று பார்ப்பதற்கு திரும்பியபோது, ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். காரணம்? அந்த தொழிலாளி இன்னும் தன் தலையில் அந்த சுமையை வைத்துக்கொண்டு லாரியில் நின்றதைப் பார்த்தார். லாரியை நிறுத்திவிட்டு அவரிடம், "ஐயா, அந்த சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே." என்று சொன்னதற்கு, அந்த தொழிலாளி, "வேண்டாம் ஐயா. நீ எனக்கு இடம் கொடுத்ததே பெரிது... இதையும் ஏன் உன் லாரி சுமக்கணும்? நானே சுமந்துக்கிறேன்." என்று சொன்னாராம்.

சுமைகளைச் சுமப்பதும், சுமைகளைப் பிறர் மீது சுமத்துவதும் நமக்குக் கைவந்த கலைகள். சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.

Jesus Healing the Leprosy Patient. தொழு நோயாளியைத் தொட்டு...

Dear Friends,
I have shared with you my reflections on the Multiplication of the Loaves. That was my first in the series called Viviliya Thedal where I reflect on the miracles of Jesus. I have shared with you my first and fourth reflections – Multiplication and Jesus Stilling the Storm. Here I am sharing with you two more of my reflections on the Mircales of Jesus – both of them miracles of healing… healing the leprosy patient and healing a paralytic...
When talking about the miracle of healing the leprosy patient, I have spent quite a bit of my time on the idea of using words like leper, servant etc… This, to me, denotes a state… almost like stamping someone at birth by caste. The word ‘leper’ is very different from ‘leprosy patient. Similarly the word ‘domestic help’ or ‘domestic employee’ is very different from ‘servant’. Thank God, of late we have begun to use proper terms to denote persons… terms like ‘physically challenged’ or ‘differently abled’ rather than ‘handicapped’…
Why make such a big fuss about words. Well, words form thoughts and we need to be careful about our vocabulary… I am sure you are conscious of using gender-neural terms like ‘chairperson’, ‘cameraperson’ instead of the older terms ‘chairman’ or cameraman’. If you have not started on these terms, high time you did. As you can see, I have used the occasion of Jesus healing the leprosy patient to talk about how each of us can get healed in so many ways.

சென்ற வார விவிலியத் தேடலில் இயேசு அப்பத்தைப் பலுகச் (பகிரச்) செய்த புதுமையைப் பற்றி சிந்தித்தோம். இனி வரும் வாரங்களில் லூக்கா நற்ச்செய்தியில் காணக்கிடைக்கும் புதுமைகளைப் பற்றி சிந்திப்போம். இன்று இயேசு தொழு நோயாளியைக் குணமாக்கியதைப் பற்றி சிந்திப்போம்.

லூக்கா நற்செய்தி, 5/12-14:
12 இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, ' ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் ' என மன்றாடினார்.13 இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, ' நான் விரும்புகிறேன் ' உமது நோய் நீங்குக! ' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று.14 இயேசு அவரிடம், ' இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ' என்று கட்டளையிட்டார்.

நாம் வாசித்த நற்செய்தியில், தொழுநோயாளியை அவர், இவர் என்று குறிப்பிடுகிறோம். அவன், இவன் என்றல்ல. முன்பு இருந்த விவிலிய மொழிபெயர்ப்பில் அவன், இவன் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழு நோயாளியை ஒரு மனிதராகப் பாவித்து அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டிருக்கிறது. இது நாம் அண்மையில் பின்பற்றும் ஒரு அழகான பழக்கம். வார்த்தைகளை எப்படி பயன் படுத்துகிறோம் என்பதிலிருந்தே பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

இயேசுவின் இந்தப் புதுமையைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னால், தொழு நோய், தொழு நோயாளி என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். பழையத் தமிழில் தொழு நோய் உள்ளவர்களைக் குஷ்டரோகின்னு சொல்வோம். ஆங்கிலத்திலும் அவர்களை leper என்று சொல்வோம். நல்ல வேளையாக ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியான வார்த்தைகளை இப்போது பயன்படுத்துகிறோம்.

குஷ்டரோகி என்றோ, leper என்றோ சொல்லும்போது இந்த நோய் உடையவர்கள் மனிதப் பிறவியிலிருந்து ஒரு படி... ஏன், பல படிகள் தாழ்ந்த நிலையில் உள்ள ஒரு பிறவியாக நினைத்தோம், அவர்களை அப்படியே நடத்தினோம். சாதிய மடமையில் வாழும் இந்திய சமுதாயத்தில் ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே முத்திரை குத்தி, ஏதோ பிறவியிலேயே குறையுடன் பிறந்தவர்கள் போலவும் அதனால் அவர்களை பார்க்கும் விதம், அவர்களோடு பழகும் விதம் இவைகளில் வேறுபாடுகள் காட்டுவது நமது சமுதாயத்தின் சாபக்கேடு.
குஷ்டரோகி என்பதற்கும், தொழு நோயாளி என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். வெறும் வார்த்தைகளில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல, மாறாக, சிந்தனையிலேயே இவை இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன. Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள்.

ஆங்கிலத்தில் பல வார்த்தைகளுக்கு நாம் மாற்று கண்டுபிடித்திருக்கிறோம். servant என்ற சொல்லுக்கு domestic help, அல்லது domestic employee என்றும் handicapped என்ற சொல்லுக்கு physically challenged அல்லது diffrently abled எனவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வார்த்தைகள் என்ன அவ்வளவு முக்கியமான்னு உங்கள்ள சில பேர் நினைக்கலாம். ஆம், அன்பு நண்பர்களே, உள்ளத்தின் நிறைவிலிருந்துதான் வாய் பேசும் என்றும், தீயைவிட அதிக சூடானது வார்த்தைகள் என்றும் நாம் கேட்டிருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம்.

வார்த்தைகளில் சொல்வது ஆழ்மனதில் உண்டாக்கும் எண்ணங்களுக்கும் அந்த எண்ணங்களிலிருந்து பிறக்கும் செயல்களுக்கும் வழிவகுக்கும். ஆங்கிலத்தைப்போல் தமிழிலும் இந்த முயற்சி நடை முறையில் உள்ளது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.

விவிலியத் தேடலில் நாம் இருக்கிறோம். விவிலியத்தில் தொழுநோய் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? முழு ஆராய்ச்சியில் ஈடுபட இப்போது நேரம் இல்லை. மேலோட்டமாக பாப்போம்.

பழைய ஏற்பாட்டில் லேவியர் ஆகமம் யூதர்கள் வாழ்வில், சடங்குகளில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சட்டங்கள் பற்றி கூறும் நூல். இந்த நூலில் 13, 14 என்ற இரு அதிகாரங்கள் தொழு நோய் பற்றி விவரமாகக் கூறுகின்றன. இந்த நோய் கண்டதும் குருக்களிடம் சென்று காட்ட வேண்டும். நோயின் தீவிரத்தை குரு பரிசோதித்து, ஒருவன் தீட்டுபட்டவனா இல்லையா என்பதை தீர்மானிப்பார். நோய் தீவிரமாக இருந்தால், சமுதாயத்திலிருந்து விலக்கப்படுவான். நோய் குணமானதும் மீண்டும் குருவிடம் காட்டி, அவர் சம்மதம் அளித்தபின்னரே அவன் சமுதாயத்தில் சேர்க்கப்படுவான்.

அன்பர்களே, விவிலியத்தில் பரிசுத்தம், புனிதம் என்ற வார்த்தைகளும், நலம் அல்லது சுகம் என்ற வார்த்தைகளும் ஒரே அடிப்படை வார்த்தையிலிருந்து வந்தவை. கடோஷ் என்ற எபிரேய சொல்லுக்கு, இறைமை, முழுமை என்ற அர்த்தங்கள் உண்டு. எதெல்லாம் முழுமையாக, நலமாக உள்ளனவோ, அவையெல்லாம் பரிசுத்தமாக, புனிதமாக உள்ளன.
இந்த அடிப்படையில் தான் நலம் இழந்தோரை இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று தீர்மானித்தனர் யூதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பாவிகள் என்ற கண்டனம் எழுந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டியதை லேவியராகமம் கூறுகிறது: லேவியராகமம் 13, 45-46.

45 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு , என குரலெழுப்ப வேண்டும்.46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

தொழு நோயாளிகள் பற்றிய எண்ணங்கள் மிக கொடுமையானவை. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்க வேண்டும், ஊருக்குள் வர வேண்டிய அவசியம் இருந்தால், ஒரு மணியை அடித்தவாறு வர வேண்டும். இந்த மணி சப்தம் கேட்டதும் எல்லோரும் விலகி விடுவார்கள். தொழு நோயாளி யாரையாவது தீண்டி விட்டால், அவர்கள் தீட்டுப் பட்டவர் ஆகி விடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி மிகுந்த தண்டனை அனுபவித்திருக்கலாம். கல்லெறி பட்டு இறந்தும் இருக்கலாம்.

இந்த பின்னணியில் இந்த சம்பவத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். யேசுவைச் சுற்றி எப்போதும் ஒரு சின்ன கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த தொழு நோயாளியின் நிலையைக் கற்பனை செய்வோம். அவர் மனதில் எவ்வளவு போராட்டம் இருந்திருக்கும். அந்த கூட்டத்தின் நடுவே சென்றால் அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்த கோபம் வெறியாக மாறினால் கல்லெறிபட்டு சாகவும் நேரிடும் என்று தெரிந்தும் இந்த தொழு நோயாளி யேசுவிடம் வருகிறார்.

இயேசு தூரத்தில் இருந்தபடி வார்த்தைகளை கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு அவரைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி அவரைத் தொடுகிறார். இது சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிஇருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக அவர்களும் நலம் பெற வேண்டும் என்பதே அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு மக்களில் பலரை மிருகங்களிலும் கேவலமாக நடத்தும் தன் இன மக்களைக் குணமாக்கவே இயேசு இதைச் செய்தார். தொழு நோயாளியும் குணமானார். யேசுவைச் சுற்றி இருந்தவர்களும் குணமாயினர்.

ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் உள்ள தொழு நோய் மருத்துவமனையில் ஒரு மாதம் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. தொழு நோய் பற்றி எனக்குள்ளே இருந்த பல பயங்களை இந்த பணி மாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு. பல மாற்றங்கள் நடந்தது உண்மை. இருந்தாலும், ஆழ்மனதில் இருந்த, இன்னும் இருக்கும் பயங்கள் இன்னும் சுத்தமாக நீங்கவில்லை என்பதும் உண்மை.

அங்கு பணி செய்துகொண்டிருந்த போது, ஒரு நாள் மாலை தொழு நோய் கண்ட குழந்தைகளுடன் விளையாடும் சூழ்நிலை. அந்த நேரத்தில் ஒரு குழந்தை என்னிடம் ஒரு மிட்டாயை நீட்டியது. வாங்குவதா வேண்டாமா என்ற போராட்டம். தைரியமாக வாங்கினேன். பைக்குள் வைத்துக் கொண்டேன். பின்னர் அறைக்குள் சென்று அதை குப்பைத் தொட்டியில் போடலாமா என்ற போராட்டம். அந்த போராட்டத்தையும் வென்று, அந்த மிட்டாயைச் சாப்பிட்டேன். இது ஒரு சின்ன போராட்டம் தான். இருந்தாலும் என்னுடைய ஒரு மாத பணி அனுபவத்தில் ஒரு உச்சக்கட்டம் என்று சொல்லலாம். இந்த நோய் பற்றிய எண்ணங்களில் சின்னதாக எனக்குக் கிடைத்த ஒரு குணம் என்று சொல்லவேண்டும்.

தொழு நோய் பற்றியும், நாம் வாழும் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் AIDS நோய் பற்றியும் நம் எல்லோருக்கும் தெளிவான எண்ணங்கள் உண்டாகவும் இதனால் நாம் அனைவரும் நலம் பெறவும் வேண்டுவோம்.

24 September, 2009

How to tune in to Vatican Radio on the Web? இணைய தளத்தில் வத்திக்கான் வானொலியைக் கேட்பது எப்படி?

As you can see, organisation is not my strength. I began the blog… just like that… and now I am trying to put some logic into my posts…
Did I tell you how to tune in to Vatican Radio on the internet? I guess not. Better late than never. Right? Let me begin with a confession. When I was in India, I did not listen to Vatican Radio. I tried to tune in to the SW in my transistor; but did not succeed. At that time, I did not know that Vatican Radio had an internet podcast facility. Only after reaching Rome, Eureka... I discovered that. Let me give you the details as to how you can tune in to the programmes over the internet.
You need to open the following website for the homepage. http://www.radiovaticana.org/index.html
On the homepage, there are lots of language choices. Click on the Thamizh தமிழ் language. This takes you to the next page where we post all the news, views and other features of the day in Thamizh. The full text of my reflections will appear on this page. On the top right you will see a column just under the date, titled Nigazchigalai Kel நிகழ்ச்சிகளைக் கேள். Under this, there is Kettukondathan Peril கேட்டுக்கொண்டதன் பேரில். Click on this and it takes you to the next page titled: Broadcast On Demand & Podcast. All the audio programmes for the day are posted here. The fourth section is Tamil 19’. Click on the Asia mp3 button. You can listen to that day’s programme. This page is updated every day around 5 or 5.30 p.m. If you click on the PODCAST sign on the top of this section, it takes you to the next page where the whole week’s programmes are posted. Tuesdays and Saturdays around 5 p.m. my programmes Viviliya Thedal (விவிலியத் தேடல்) and Gnayiru Chinthanai (ஞாயிறு சிந்தனை) are posted on the internet. They will be there for 24 hours.
I hope I have made things clearer and easier… Happy listening…
A bit busy working on the news for the day. I shall try and post my past programmes and my next Sunday Reflection soon. Some of you have given me some feedback, especially on the way I speak during the programme. Hope to improve on that. Thanks, for the feedback.

22 September, 2009

In the eye of the Storm... புயலில் நடக்கும் சுயம்வரம்.

This is great... I am getting excited like a child. I am posting the programme I had recorded today. I shall try and post fresh ones on Tuesdays and Saturdays... the days that my programme will go on air. I shall also try and post my older ones. The programme I do on Tuesdays is called விவிலியத்தேடல். This is a Bible Programme. Actually my mission in the Radio began with one such programme, where I had talked about the miracle of the Multiplication of Loaves. This is a weekly programme, available on the Radio this evening (Tuesday evening) and tomorrow morning. The programme I do on Saturdays is the Sunday Reflections.

Today, I have spoken about the miracle of Jesus stilling the storm - taken especially from the Gospel of Luke 8, 22-25. Basically, I have said that even in the eye of the storm, we can have great faith. I have quoted one instance from the Tsunami tragedy. This is about the couple Parameswaran and Choodamani, who lost all their three children along with the parents of Param... a total of 10 members in the family were lost in the sea. But, in the midst of such a storm that raged within and without, something beautiful happened. Please read the following report from the Hindu.

http://www.hindu.com/2006/01/02/stories/2006010205620300.htm

DINDIGUL : Even as tsunami `swallowed' all their three children and washed away their happiness once and for all, it could not wipe out humanism and confidence from the minds of the couple, K. Parameswaran and Sudamani of Nagapattinam.
The couple, suffering from irrevocable loss, along with 16 child survivors of tsunami aged between three and 14 years adopted by them, came to Dindigul on Sunday to address a meeting `Humanism 2006,' organised by the Rotary Club of Dindigul West on the New Year day with an aim of building confidence.
Mr. Parameswaran's emotion-soaked outpouring of reactions moved a huge gathering.
"It happened on my birthday," said Mr. Parameswaran.
First, my last son saw a giant wave, higher than many trees. I alerted my son to run. I could see my kid's two little legs moving at pace. In a few seconds, I could see thousands of bodies floating in water. I lost all my three children, my father and mother and 10 of my relatives from Karnataka, he recalled.
"We have crores of rupees, but did not have a piece of cloth to cover my children's bodies before burial. With confidence instilled by my wife, we went to a fishermen hamlet near coastline the next day where many destitute children were roaming without parents."
"I have a bungalow without children. They have no parents and house. We brought four children home for providing shelter. Later, the number rose to 16," he said.
Confidence is essential for survival. Humanism alone would unite all, for which patriotism should be injected in the blood of every child, he said.
Bishop Antony Papusamy said the services of Mr Parmeswaran were pure, selfless and unconditional. Rotarian, K. Venkataramanan said humanism should start from home and spread to other places. It was the responsibility of every parent, he said.
The debate speaker, I. Leoni, assured to offer proceeds of his one programme for their service. Later, tsunami-hit children with other children cut a cake to celebrate the New Year. A real attempt to sow seeds of humanism in every mind.

© Copyright 2000 - 2006 The Hindu

Well, dear friends, this and some more things I have shared in today's radio talk.

விவிலியத்தேடல்

லூக்கா நற்செய்தி, 8/22-25
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், ' ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள் ' என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, ' ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம் ' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், ' உங்கள் நம்பிக்கை எங்கே? ' என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், ' இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ? ' என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

புயல் வீசிக்கொண்டிருந்தது. இயேசு தூங்கிக் கொண்டிருந்தார்.
புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா?
மனசாட்சியோடு சண்டைகள் எதுவும் இல்லாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள் நன்றாகத் தூங்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சில சமயங்களில் நானும் அப்படி தூங்கி இருக்கிறேன். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். சம்மனசுகள் வந்து குழந்தையிடம் பேசுகின்றன என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு தூக்கம் இயேசுவுக்கு. நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள் பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில் 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல தூக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.

நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும் போது, உடலும், மனமும் சோர்ந்து விடுகின்றன. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவைகள்தாம் நல்ல தூக்கத்திற்கு வழிகளா? சிந்திப்பது நல்லது.

எனக்குத் தெரிந்த ஒரு வழியைச் சொல்கிறேன். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை முடிந்த வரை கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயல வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு வழி. நமது பாரங்களைப் பற்றி ஒரு நல்ல நண்பரிடம் பேசுவது. அதன் மூலம் கிடைக்கும் தெளிவு.
நமக்கெல்லாம் தெரிந்த ஒரு ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

தூக்கத்தைப் பற்றி அதிகம் பேசிவிட்டேனோ? தயவுசெய்து விழித்துக்கொள்ளவும்.

புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயல் அடங்கிப் போனது.
அதன் பிறகு தன் சீடர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். "உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று?" புயலையும், விசுவாசத்தையும் சேர்த்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் தருகிறது இன்றைய விவிலிய வாசகம்.

புயல் வீசும் நேரத்தில் நம் விசுவாசம் எங்கே போகிறது?
ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா?
அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா?
அல்லது புயல் வரும் போதெல்லாம் விசுவாசம் நமக்கு டாட்டா காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

புயல் நேரத்தில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் பழக்கமான சூழ்நிலையில்தான் இருந்தனர். தினமும் மீன் பிடித்து வந்த அதே ஏரி. தினமும் பயன்படுத்தி வந்த அதே படகு. ஏறக்குறைய எல்லாமே பழக்கமானவைதாம்.
பழக்கமான சூழ்நிலையில் திடீரேனே எதிபாராதவை நடக்கும் போது, நமக்கு அதிர்ச்சி அதிகமாகும். தெரியாத, புரியாத சூழ்நிலை என்றால் எல்லாருமே கவனமாகச் செயல்படுவோம். அந்த நேரத்தில், எதிர்பாராதவைகள் நடந்தால்... அவற்றிற்கு நாம் தயாராக இருப்போம். ஆனால், தினம், தினம், திரும்ப, திரும்ப பார்த்து பழகிவிட்ட இடம், ஆட்கள் என்று வரும் போது நமது கவனம் தீவிரமாக இருக்காது. அந்த நேரத்தில் நாம் முற்றிலும் எதிபாராத ஒன்று நடந்தால், பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட வீட்டில் ஏற்படும் ஒரு விபத்து, நமது நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ளும் முறை... இப்படி அதிர்ச்சிகளை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த அதிர்ச்சிகள் புயல் போன்றவை.

வீசும் புயலில் பல ஆண்டுகளாய் வேரூன்றி நின்ற மரங்கள் சாய்வதில்லையா? அது போல, நமது இடம், நமது நண்பர்கள் என்று நாம் வேர் விட்டு வளர்ந்த பிறகு, வருகின்ற அதிர்ச்சி வேரோடு நம்மைச் சாய்த்து விடுகிறது. அந்த நேரங்களில்... முடிந்த வரை நமக்குத் தெரிந்த, பழக்கமான மற்ற துணைகளைத் தேடி செல்வோம். ஆனால் ஒருவேளை அந்தத் துணைகளும் மாறிவிடுமோ அந்த நண்பர்களும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற
கலக்கம் நமக்கு இருக்கத்தானே செய்யும்.

புயல் வீசும் நேரத்தில் நமது விசுவாசம் எங்கே இருக்கிறது?

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ? என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது சுயம்வரத்தைப் பற்றி, அல்லது மற்ற நல்ல காரியங்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும். இந்தப் புயல் போய்விடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள் சுயம்வரம், திருமணம் என்று திட்டமிடலாம்.
ஆனால், புயலை மட்டும் மனதில், எண்ணத்தில் பெரிது படுத்தும் போது, வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

இரு வாரங்களுக்கு முன்னால், ஞாயிறு சிந்தனையில் புல்லைப் பற்றிய ஒரு கவிதை சொன்னேன். உங்களுக்கு நினைவிருக்கலாம். தன்னைச் சுற்றி எல்லாமே எரிந்து, அழிந்து சாம்பலாய் போனாலும், அந்த அழிவுக்குத் தன்னையே உட்படுத்தாமல், தலை நிமிர்ந்து நிற்கும் புல்லை, ஆங்கிலக் கவிஞன் தைரியம் என்றான். நான் விசுவாசம் என்றேன்.

புயல் வரும் வேளையில் பூவொன்று சுயம்வரத்துக்குப் புறப்படுவதும் இதுபோன்ற ஒரு நம்பிக்கை தரும் செயல்தானே.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், டிசம்பர் 26 சுனாமியால் ஏற்பட்ட அழிவுகள் நம்மில் பலருக்கு இன்னும் ஆறாத காயங்களாய் வலித்துக் கொண்டிருக்கும். அந்த பேரழிவின் நடுவிலும் எத்தனையோ விசுவாச அறிக்கைகள் வெளியாயின. கடவுள், மதம் என்ற பின்னணிகளே இல்லாமல் பார்த்தாலும் அந்த நேரத்தில் நடந்த பல அற்புதங்கள் மனித சமுதாயத்தின் மேல் நமது நம்பிக்கையை வளர்க்கும் விசுவாச அறிக்கைகளாக வெளி வந்தன. அப்படி வந்த விசுவாச அறிக்கைகளில் ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

சுனாமியில் தன் குழந்தைகள் மூவரையும் சேர்த்து தன் குடும்பத்தில் பத்து பேரை இழந்த பரமேஸ்வரன், சூடாமணி தம்பதியரைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். டிசம்பர் 26 பரமேஸ்வரனின் பிறந்த நாள். அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது வந்த சுனாமி அவரது மூன்று குழந்தைகளையும் மற்ற உறவினர்களையும் கடலுக்கு இரையாக்கியது. குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் - சூடாமணி தம்பதியர் நம்பிக்கை இழந்து வெறுப்பைச் சுமந்து கொண்டு போகவில்லை. மாறாக, ஒரு சுயம்வரம் ஆரம்பித்தார்கள்... சுயம்வரம் என்பது மனதுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தேடுப்பதுதானே. அந்த சுனாமியால் பெற்றோரை இழந்து தவித்த 16 அனாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

சுனாமி அவர்கள் குடும்பத்தை அழித்தாலும், அவர்களது மனித நேயத்தை அழித்துவிடவில்லை. அந்த குழந்தைகளின் மதம், இனம், இவைகளையெல்லாம் கடந்து மனித நேயம் என்ற அடிப்படையில் மட்டுமே குழந்தைகளைத் தத்தேடுத்தார்கள். 3 வயது முதல் 16 வயது வரை உள்ள 16 பேரைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மனித குலத்தின் மேல் அவர்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினர். மனித குலத்தின் மேல் நமக்குள்ள விசுவாசத்தை வளர்த்திருக்கின்றனர்.

ஆழ்ந்த துன்பத்திலிருந்து வரும் அற்புதமான விசுவாசம் இது. பேரழிவை உண்டாக்கிய புயலின் மையத்திலிருந்து வரும் விசுவாசம் இது.
புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பரமேஸ்வரனுக்கும், சூடாமணிக்கும் புயலுக்கு நடுவிலிருந்து அமைதி வந்தது.

புயலுக்கு நடுவே, நமது விசுவாசம் எங்கே இருக்கிறது? யோசித்து பார்க்க வேண்டும். அந்தப் புயல் நடுவில் இறைவன் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கை நமக்கெல்லாம் வேண்டும். ஒருவேளை அவர் உறங்கிப் போனதுபோல் தெரிந்தாலும், அவர் அங்கே இருக்கிறார் என்பதே ஒரு பெரும் நிம்மதியைத் தரும்.
இறைவன் எழுந்ததும், புயல் தூங்கிவிடும்.
இறைவன் எழுவார். புயலை அடக்குவார்.
புயல் நேரங்களில், நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்வோம். புயல் நேரங்களில், நல்லவைகளையேத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரத்தை நடத்துவோம்.

21 September, 2009

Jesus Curing the Deaf-Mute.

As you can see blogging is not my cup of tea... I have posted the Sunday Reflections meant for Sep 13th before posting the one meant for Sep 6th. Well, both 6th and 13th are old ones. So, no problem about sequence... Here is my Sunday Reflection for Sep 6th, Jesus curing the deaf-mute. My reflections begin with a reference to the Feast of Our Lady of Velankanni - நலமளிக்கும் ஆரோக்ய அன்னை. The main focus of these reflections?.... Lessons I have learnt from PAIN. I shall be happy if you can share the lessons you have learnt from pain in your life.

மாற்கு நற்செய்தி 7, 31 - 37
இறை ஏசுவிலும் அன்னை மரியாவிலும் என் அன்பு சகோதர சகோதரிகளே, நலன்களைப் பெற்றுத்தரும் ஆரோக்ய அன்னையின் பெருவிழாவை எதிர்நோக்கி ஆயிரமாயிரம் பக்தர்கள் வேளை நகருக்கும் ஆரோக்ய அன்னையின் பல திருத்தலங்களுக்கும் செல்லும் வேளை இது. ஆரோக்ய அன்னையின் விழாவுக்கு முந்திய ஞாயிறன்று இடம் பெரும் வாசகங்கள் ஆரோக்யத்தைப் பற்றி நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன.

நோய், பிணி, துன்பம், வறுமை போன்ற வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தங்களைப் பற்றி சிந்திக்க முயல்வோம். நோய், பிணி, … இவற்றில் நாம் வாடும் போது நம் மனதில் எழும் எண்ணங்கள் என்ன? நோயுற்றோரை, வறியோரைப் சந்திக்கும் போது நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம்?

நோய், வறுமை இவற்றைப் பற்றி இஸ்ராயலர்கள் ரொம்பத் தெளிவா இருந்தாங்க. இவைகளெல்லாம் பாவத்தின் தண்டனைகள். நோயாளிகள், ஏழைகள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களை விட்டு மற்றவர்கள் விலகி இருப்பது நல்லது. அதிலும் ஒரு சில நோய் உடையவர்களைப் பார்த்தாலோ, அல்லது அவர்கள் நிழல் கூட தம்மைத் தீண்டினாலோ, தாங்களும் தீட்டுப் பட்டவர்கள் ஆகிவிடுவோம் என்ற பயம். நாம் வாழும் இந்திய சமூகத்தில் இன்னும் இது போன்ற எண்ணங்கள் சாதிய அடிப்படையில் இருப்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. இஸ்ராயலர்களின் இந்த பயத்தால் நோயாளிகள், அதிலும் முக்கியமாக, தொழுநோயாளிகள், இரத்த கசிவு நோய் உள்ளவர்கள் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டார்கள். நோயாளி அல்லது ஏழை என்றவுடன் தீர்ப்புகள் எழுதப்பட்டன. இவன் செய்த குற்றம் அல்லது இவன் பெற்றோர் செய்த குற்றம் என கணக்குகள் எழுந்தன.

துன்பம் ஏன்? அதிலும் மாசற்றவர் துன்புறுவது ஏன்? என்ற கேள்விகள் மனித சமுகத்தை எப்போதும் தாக்கி வரும் கேள்விகள். இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு மாபெரும் காவியம் நமது விவிலியத்தில் இடம்பெறும் யோபு ஆகமம். இன்று அதைப் பற்றி அதிகம் பேச முடியாது. யோபுவின் வாழ்வில் நடந்தவைகள் நம்மில் பலருக்கு நடந்திருக்கலாம். செல்வம், உடல் நலம் இழந்து நாம் இருந்த போது அல்லது இன்னும் அந்த சூழ்நிலையில் நாம் தவிக்கும் போது ஆழமான கேள்விகள் மனதை தாக்குகின்றன.

இந்த கேள்விகளுக்கு இந்த ஞாயிறு வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன.
முதல் வாசகத்தில் நாம் கேட்கும் எசயாவின் வார்த்தைகள் வேதனையில் இருக்கும் ஒரு உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள். அனால் வெறும் வேதனை மட்டும் அங்கு இல்லை. அந்த ஆழமான வேதனையிலும் இறைவனிடம் விசுவாசம் கொண்ட ஒரு உள்ளத்திலிருந்து வெடித்து கிளம்பும் வார்த்தைகள்.

எல்லாம் அழிந்துவிட்டது என்று விரக்தியின் எல்லைக்கு போகும்போது, மனம் பாறையாய் இறுகிப் போகும். அந்த பாறைக்குள்ளிருந்து சின்னதாய்க் கிளம்பும் ஒரு நீர் கசிவு போன்ற விசுவாசம், கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து, பின்னர் பாறையைப் பிளந்து கொட்டும் அருவியாய் மாறும்.

புல்லைப் பற்றிய ஒரு ஆங்கில கவிதை.. எனக்கு ரொம்ப பிடித்த கவிதை... கதை என்றும் சொல்லலாம். அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும் போது திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம். "தைரியம்னா என்னாண்ணே?" என்று அண்ணனிடம் கேட்கிறான். அண்ணன் தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை வைத்து தைரியத்தை விளக்கப் பார்த்தான். தம்பிக்கு பாதி விளங்கியது. அப்போது அவர்கள் போய்க்கொண்டிருந்த பாதையில் யாரோ ஒருவர் புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்து போன புல்தரையின் நடுவில் ஒரு சின்னப் புல் மட்டும் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. அண்ணன் தம்பியிடம் அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான். கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்த காட்சி நமக்கு முக்கியம்.

முற்றிலும் எரிந்து போன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல் நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில் கலந்து மறைந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பது தான் தைரியம், என்னைப் பொறுத்தவரை அது விசுவாசம். இந்த விசுவாசத்தை இறுக பற்றிக்கொண்டு எசாயா கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆணித்தரமாய் பதிய வேண்டும்.

எசாயா 35, 4-7. உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார். அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும். எசாயாவின் இந்த வார்த்தைகளைக் கேட்கும் போது இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழும். அழகான கற்பனை. நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்று மூடப்பட்ட வாழ்கையை, மூடப்பட்ட கல்லறையைத் திறந்து, எழுந்து வரும் விசுவாச வார்த்தைகள் இவை. ஜோ டேரியோன் (Joe Darion) எழுதிய "The Impossible Dream" என்ற பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த பாடலில் இரு வரிகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
To dream the impossible dream,
To be willing to march into Hell For a heavenly cause
இந்த வரிகளை மொழிபெயர்ப்பு செய்வதை விட இதே தொனியில் கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகளை இங்கே நினைத்துப் பார்க்கிறேன். "அசையும் கொடிகள் உயரும், உயரும்... நிலவின் முதுகை உரசும்." என்ற இந்த வரிகளும் நடக்க முடியாததை கூறும் வரிகள். துன்பத்தின் பிடியில், விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது நம் மனதிலும் இது போன்ற உணர்வுகள் வர வேண்டும். எசாயாவின் விசுவாச வார்த்தைகள் நமதாக இறைவனை வேண்டுவோம்.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் மிகவும் தெளிவான பாடங்களைத் தருகின்றது. ஏழைகளை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்?

பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான். மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபபட்டு, இரக்கப்பட்டு உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் ஏழைகளை மதிக்கிறோம்? இதுதான் யாக்கோபு மடலில் எழுப்பப்படும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர் கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பி வந்த யூதர்கள் மத்தியில் இயேசு "வறியோர் பேறு பெற்றோர்" என்று மலை உச்சியில் சொன்னார். யூத மதத் தலைவர்களுக்கு இயேசு சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும், தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில் நம்பிக்கை பிறந்திருக்கும்.

இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை நமக்கும் விடுக்கிறார்.

இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், யூத சமூகத்திற்கும், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும்.
யேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக யேசுவிடம் வரவில்லை. தன் குறைகளைப் பார்த்து தன்னை ஒரு குற்றவாளி என்றும் கடவுளின் தண்டனையை அனுபவிப்பவன் என்றும் முத்திரை குத்திய யூத சமுதாயத்தின் மேல் அவன் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். ஏசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவன் அவன். அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யேசுவிடம் அவனை கொண்டு வந்தனர். முடக்கு வாதத்தில் கட்டிலிலேயே முடங்கிப் போன ஒருவனை அவன் நண்பர்கள் யேசுவிடம் கொணர்ந்ததை இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து அவனுடைய நண்பர்கள் இதைச் செய்தனர்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இன்றும் நாம் சந்தித்து வருகிறோம். நான் கல்லூரியில் பணியாற்றிய போது, தினம், தினம் ஒரு அற்புதத்தைப் பார்த்தவன். போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஒரு இளைஞனை அவனது நண்பன் தினமும் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வருவான். அவன் பாடம் பயின்ற கட்டிடத்தில் லிப்ட் வசதி இல்லாததால், இந்த நண்பன் அவனைக் குழந்தையைப் போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு இரண்டு மாடிகள் ஏறுவான். ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

யேசுவிடம் அவன் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்ததும் இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. “இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.”

இயேசுவின் செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது இதுதான்: "உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."

இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசு நம்மை கட்டவிழ்த்ததால், நல்லவைகளைப் பார், நல்லவைகளைப் பேசு, நல்லவைகளைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்வோம்.

சிறப்பாக வறுமை, பிணி இவற்றில் நாம் சிக்கியிருக்கும் போதும், இந்தச் சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும் போதும், எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நமதாக்குவோம். இல்லாதது, முடியாதது என்று ஒன்றும் நம்மை சிறைப் படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவன் துணையோடு, நம்பிக்கையோடு வாழ்ந்தால், பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.6 காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இறை மகனும், ஆரோக்ய அன்னையும் நமக்கு துணை இருப்பார்களாக.

MORE TO SHARE... IN தமிழ்.

Two of my friends who read the first post said that I should do this in two languages... English and தமிழில். I shall... in the course of time. For the time being, kindly put up with my தமிழ், mostly. The following is my Sunday Reflections (meant for Sep. 13) on the famous incident popularly called the Caesarea Philippi event. Jesus posing the famous two questions: "Who do people say that I am?" and "Who do you say that I am?"
Why am I posting it now? This incident brings to focus a common experience of human life - the experience of SEARCH. I shall try and give you the summary of my reflections in English. The article by GEOFF THOMAS written and posted on 7th December 2003 in
http://www.alfredplacechurch.org.uk/Sermons/mark40.htm
was the basic starting point for my reflections.

What Jesus went through in Caesarea Philippi is a process most of us go through many times in our lives... lots of soul searching, raising basic questions about who we really are and how do we come across to others etc. Unfortunately, for some of us the question about how others see us, or what others think of us, basically, who do people say that we are... becomes VERY VERY VERY VERY IMPORTANT... a paranoia! The sooner we snap out of this nightmare, the better...

The second question of Jesus "Who do you say that I am?" is a very good question, provided it starts off a sincere, serious search. I wish we could do this more often in our families, among close friends.

Here is a story (by Fr Anthony de Mello?) of a drunkard who does a total turnaround (180 degrees). He is met by the parish priest who asks him the reason for this great change. He says that he had met Jesus. The parish priest begins his enquiry. Here is the conversation:

Priest: " You say, you have met Jesus. Now, tell me where was he born?"
Man: "Don't know, Father... Perhaps, Jerusalem?"
Priest: How long did he live?
Man: Hmm... May be 50, 60?
Priest: Where and how did he die?
Man: Don't know, Father.
Priest: (Controlling his temper) Even a little child would give me clear answers to these questions and you?.... How can you say you met Jesus?
Man: Father, I don't know answers for these questions. I know one thing for sure. Last year, I was given to heavy drinking. My family was in ruins. My wife and children would dread my coming home in the evening. Now, for the past one month, I have given up drinking. My debts are getting cleared. My wife and children wait eagerly for my return home. My kids come running towards me when I come home. All these were possible since I met Jesus.... As for these questions, I am really sorry, I can't answer them properly.

Priest: (SILENCE)


Two types of knowledge. Two questions: Who do people say that I am? Who do you say that I am? One is bookish, all the details about God, Theology.... Perhaps the answer to the first question: Who do people say that I am? What does the Scripture say, what does my catechism say, what does my priest say in Sunday Mass (hopefully, something there...). All of us need this, to some extent.

But there is another type of knowledge of God that leads one to action. Who do you say that I am? A direct encounter with God. A personal knowledge of God, Jesus... This leads to... some changes!

தமிழில் என் தேடல்...

கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த டயோஜீனஸ் பற்றி ஒரு சம்பவம். ஏதென்ஸ் நகர வீதிகளில் இவர் பகல் நேரத்தில் ஒரு விளக்கை வைத்துக் கொண்டு அலையும் போது, மக்கள் இவரிடம் "என்ன தேடுகிறீர்கள்?" ன்னு கேட்டால், "நல்ல மனிதர்களைத் தேடுகிறேன்." அப்பிடீன்னு சொல்வாராம்.

மனிதர், மனிதரைத் தேடும் எத்தனையோ கதைகள் நமக்கெல்லாம் தெரியும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்களும் நம்ம எல்லாருக்கும் உண்டு. நமது தேடல்களில் ஒரு முக்கியமான கேள்வி நம் மனதில் எழுந்திருக்கும். அதுதான், மத்தவங்க என்னைப் பத்தி என்ன நினைக்கிறாங்க? ஒரு சிலருக்கு இதுவே வாழ்க்கை பிரச்சினையாகவும் மாறிவிடும். இது போன்ற ஒரு சம்பவத்தைத் தான் இன்று நற்செய்தியில் வாசித்தோம்.

ஒரு கற்பனை சம்பவத்துடன் இந்த ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம். தலைவன் ஒருவன் நண்பர்களோடு நடந்து கொண்டிருக்கிறான். திடீரென, நண்பர்கள் பக்கம் திரும்பி, "மக்கள் என்னைப்பத்தி என்ன சொல்றாங்க?" ன்னு கேட்கிறான். நண்பர்கள் ஒரு சில நிமிடங்கள் திகைச்சு போய் நிக்கிறாங்க. கொஞ்சம் மென்னு முழுங்கி, ம்ம்... வந்து... என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் மனசுல ஓடுற எண்ணகள் பலவாறாக இருக்கும். அந்தத் தலைவன் மக்களுக்கு நல்லது செய்யும் தலைவனா இருந்தா, துவக்கத்தில் ஏற்படும் தயக்கத்திற்கு பிறகு, பல உண்மை பதில்கள் வெளிவரும்.

உதாரணத்திற்கு, மகாத்மா காந்தியைப் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?
மதர் தெரசாவைப் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?
அப்துல் கலாம் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?
சச்சின் டெண்டுல்கர் பத்தி மக்கள் என்ன சொல்றாங்க?
இந்த கேள்விகளுக்கு எளிதாக பதில்கள் சொல்லலாம். அவர்கள் செய்த பணி, அல்லது அடைந்த வெற்றிகள் இவைகளுடைய அடிப்படையில் இந்த பதில்கள் சொல்லப்படும்.
ஆனால் அந்தத் தலைவன் ஒரு தாதாவாகவோ அல்லது ஒரு அரசியல் வாதியாகவோ இருந்தால்... இந்த கேள்விக்கு உண்மையான பதில் சொல்ல முடியாமல், அவனுடைய நண்பர்களே தடுமாறி போவார்கள்.

நம்ம கற்பனையைத் தொடர்வோம். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், தலைவன் மீண்டும் திரும்பி, "ஜனங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்னைப் பத்தி என்ன சொல்றீங்க" ன்னு கேட்டால், அந்த நண்பர்களெல்லாம் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிடுவார்கள். உடன் பதில்கள் வராது... ஏன்னா இது ஆழமான கேள்வி. நாக்கு நுனியிலிருந்து வார்த்தைகளைக் கொட்டி பதில் சொல்லி விடலாம். ஆனால், அந்த வார்த்தைகளில் போலித்தனம் தெரியும். இந்தக் கேள்விக்கு ஆழமான மனதில் இருந்து பதில் வரணும். "உடனே பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல... யோசிச்சு சொல்லுங்க"ன்னு தலைவன் சொன்னதும் அந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் எளிதாக மாறும். அந்த நேரத்தில் யாராவது ஒருவர் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலைச் சொல்ல ஆரம்பித்தால், மற்றவர்களும் தங்கள் மனதில் பட்டதைச்சொல்ல, அங்கு ஒரு நல்ல கருத்து பரிமாற்றம் நடைபெறும். வெறும் சிந்தனை அளவில் எழும் வார்த்தைகளாக இல்லாமல், உள்ளத்தைத் திறந்து வரும் உண்மைகளாக இருக்கும்.

நாம் நமது நண்பர்களோடு, அல்லது நமது குடும்பங்களில் இது போன்ற பகிர்வுகளை வளர்த்துக்கொண்டால், நம்மைப் பற்றி நமக்கே தெரியாத பல உண்மைகள் வெளிவரும். பல பிரச்சனைகள் தீரும். ஆனால், இது ஒரு பெரிய சவால். முயன்றுதான் பார்க்கலாமே!

மீண்டும் நமது நற்செய்திக்கு வருவோம். இயேசு இந்த நற்செய்தியில் கேட்கும் இரு முக்கியமான கேள்விகள்: மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? நீங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.
குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவனைப் பங்கு தந்தை சந்திக்கிறார். காரணம் கேட்கும் போது குருவிடம் யேசுவைச் சந்தித்தாக சொல்கிறார்.
பங்கு குருவுக்கும், அவருக்கும் இடையே எழும் உரையாடல்:
இயேசு எங்கே பிறந்தார்?
ம்... எருசலேம்ல பிறந்திருக்கலாம்.
இயேசு எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
ம்... ஒருவேளை, 50 60 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்.
பங்கு தந்தைக்கு கோபம். இந்த சாதாரண கேள்விகளுக்கு பதில் தெரியலை.
மனம் மாறிய அவர் சொல்லுவார். "நீங்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது. அனால் ஒன்று தெரியும். என் வாழ்க்கை இதுவரை பயங்கரமாக இருந்தது. அனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. இதற்குக் காரணம் இயேசு. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்."

பங்கு தந்தை கேட்ட கேள்விகளெல்லாம் அறிவுப்பூர்வமானவை. மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? விவிலியம் யேசுவைப் பற்றி என்ன சொல்கிறது? மறை கல்வி, இறையியல், புத்தகங்கள் இவை யேசுவைப் பற்றி என்ன சொல்கிறது? அறிவுப் பூர்வமாகத் தெரிந்துகொள்ளும் உண்மைகள், கருத்துகள் ஆகியவை வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால், இவைகளைவிட, மிக முக்கியமான கேள்வி: “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
முதல் வகையில் நாம் பெறுகின்ற ஞானம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். இரண்டாவது வகையில் நாம் பெறுகின்ற ஞானம் நமது வாழ்க்கையை மாற்றும். இந்த சவாலைத்தான் இயேசு இன்று நமது நற்செய்தி வழியாக நமக்குத் தருகிறார். பேதுரு அன்று சொன்னது ஆழமான பதில். ஆனால் அந்த பதிலோடு அவர்கள் பரிமாற்றம் அன்று நின்றுவிடவில்லை.
இயேசு தொடர்ந்து சொன்னது: "என்னைப் பற்றி ஓரளவு உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லது. இன்னும் என்னை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், என்னைப் போல நீங்களும் துன்பப்பட வேண்டும். என்னையும் என் வார்த்தைகளையும் சரியாக புரிந்து கொண்டால், என் செயல்பாடுகளிலும், என் சிலுவையிலும் உங்களுக்கு பங்கு உண்டு."
கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
அன்பர்களே, இந்த ஞாயிறு சிந்தனையின் இறுதியில் நான் சொல்ல விரும்புவது இதுதான். நம் நண்பர்கள் மத்தியிலோ, நமது குடும்பங்களிலோ வெறும் உதட்டளவு வார்த்தைப் பரிமாற்றங்கள் இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பரிமாற்றங்கள் அதிகமாக வேண்டும்.
இந்த வகைப் பரிமாற்றங்களிலிருந்து நம்மைப் பற்றி இன்னும் அதிகத் தெளிவு கிடைக்கும். அதேபோல் நமது பரிமாற்றங்களில் நாம் நம்புகின்ற கடவுளைப் பற்றியும் பேசுவோம். நம்மைப் பற்றியும், கடவுளைப் பற்றியும், யேசுவைப் பற்றியும் தெளிவும், ஆழமும் கிடைக்கும் போது, அந்த எண்ணங்கள், உணர்வுகள் நமது வாழ்க்கையைக் கட்டாயம் மாற்றும். இந்தப் புதுமை நமக்கெல்லாம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

உணவைப் பலுகச் (பகிரச்) செய்தார் இயேசு.

அப்பத்தைப் பலுகச் செய்த புதுமை
யோவான் 6, 5-13.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.


இந்தப் புதுமையை நான்கு நற்செய்திகளும் எடுத்துரைக்கின்றன. இயேசுவின் சீடர்களிடையே அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய புதுமை இது.
C.L.Moody என்பவரது வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவம் இந்தப் புதுமையைப் புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். C.L.Moody ஒரு அனாதை இல்லம் நடத்தி வந்தார். மிகுந்த கடவுள் நம்பிக்கைக் கொண்டவர். ஒரு நாள் அவரது இல்லத்தில் குழந்தைகள் சாப்பிட இரவுணவு ஒன்றும் இல்லை. குளிர் காலம் பனி பெய்து கொண்டிருந்தது. C.L.Moody செய்வதறியாது திகைத்து நின்றார். எதோ மனதில் தோன்றவே, தான் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு, முழந்தாள் படியிட்டு செபிக்கத் துவங்கினார். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. யாரோ ஒருவர் அனாதை இல்லத்தின் நுழைவாயில் மணியை அடித்தார். C.L.Moody சென்று கதவைத் திறந்தபோது, முன் பின் தெரியாத ஒரு நபர் கதவருகே நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பின் ஒரு வேன் நின்று கொண்டிருந்தது.
அவர் ஒரு ரோட்டிக் கடையின் முதலாளி. பக்கத்து ஊருக்கு ரொட்டி கொடுப்பதற்கு சென்று கொண்டிருந்தார். அனாதை இல்லத்தின் முன் வேன் நின்று விட்டது. என்ன முயன்றும் அவரால் வேனை மீண்டும் ஓட்டிச் செல்ல முடியவில்லை. பனி வேறு அதிகமாகி விட்டது. எனவே அந்த கடை முதலாளி வேனில் கொண்டுவந்த ரொட்டிகள் அனைத்தையும் அந்த அனாதை இல்லத்திற்கு வழங்கினார்.
இக்கட்டான சூழ்நிலைகளில், எதிர்பாராத இடங்களில் இருந்து புதுமைகள் நிகழத்தான் செய்கின்றன. யோவான் நற்செய்தியிலும் அப்படி ஒரு சூழ்நிலை தான். இந்த பாலை நிலத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது என்று கவலையில், கலக்கத்தில் இருந்த சீடர்களின் கேள்விகளுக்கு இறைமகன் இயேசு உணவளித்து விடை அளித்தார். ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் ஆசீர்... ஐந்தாயிரம் பேர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது. இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச் செய்தது ஒரு புதுமைதான். இது ஒரு கண்ணோட்டம்.
மற்றொரு கண்ணோட்டம் - ஒரு சில விவிலிய அராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து.
யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவுக்கு அதிகம் கஷ்டப்பட்ட ஒரு குலம். எனவே, அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்து செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவின் போதனைகளைக் கேட்க வந்திருந்த போது, அவர்கள் உணவு கொண்டு வந்திருந்தார்கள். மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவு பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால் பகிர வேண்டுமே!
இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்கு பகிர முடியும்? இந்த கேள்விகளில் அவர்கள் முழ்கி இருநதார்கள். இயேசுவின் சீடர்களுக்கும் இதே சிந்தனை. யார் ஆரம்பிப்பது? அப்போது அந்த புதுமை நிகழ்ந்தது. ஒரு சிறுவன் தான் கொண்டு வந்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் யேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். ஆரம்பமானது ஒரு அற்புத விருந்து.
ரயில் பயணங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். உங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும் பொழுது, உணவு நேரம் வந்ததும், ஒரு சின்ன தயக்கம். எல்லாரிடமும் உணவு இருந்தாலும், யார் முதலில் உணவு பொட்டலத்தை பிரிப்பது என்ற சின்ன தயக்கம். ஒருவர் ஆரம்பித்ததும் மற்றவர்களும் அரம்பிபார்கள். இதில் சில சமயங்களில் இன்னும் என்ன அழகு என்றால், ஒருவர் தன் உணவில் கொஞ்சம் மற்றவரோடு பகிர ஆரம்பித்ததும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வர். அவரவர் கொண்டு வந்திருந்த உணவை விட, இன்னும் அதிக ருசியான பல்சுவை விருந்து அங்கு நடக்கும்.
இதே போன்றதொரு அனுபவம் அன்று யேசுவைச் சுற்றி அன்று நடந்திருக்கலாம். ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த மகிழ்விலேயே அங்கு இருந்தவர்களுக்கு பாதி வயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவே தான் அவர்கள் உண்டது போக மீதி 12 கூடைகளில் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை.
நாம் வாழும் இன்றைய உலகில் இந்த புதுமை அதிகம் தேவைப் படுகிறது. இத்தனை வளங்களும் நவீன வசதிகளும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் ஆயிரமாயிரம் மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள். அண்மையில் கிடைத்த ஒரு புள்ளி விவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவை அற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 680 கோடி. உலகில் தினம் தினம் உற்ப்பதியாகும் உணவு 720 கோடி மக்கள் உண்பதற்கு தேவையான அளவு உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் 130 கோடிக்கும் மேலாக மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். 30 லட்சம் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பசி பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.
இந்த தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்க வேண்டும். இயேசு இன்று நம்மிடையே வந்தால் உணவை இன்னும் பலுக செய்வதைவிட இருக்கும் உணவைப் பகிர்ந்து கொள்ளும் புதுமையைச் செய்வார்.
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. உலகத்தை வாழ வைக்க, வளப்படுத்த பகிர்ந்துண்ணும் மனதை நமக்கு தர வேண்டும் என இறைமகனிடம் வேண்டுவோம்.முன்னேற்றத்தின் பெயரால் உலகத்தையும் இயற்கையையும் அழிப்பதை நிறுத்திவிட்டு, உலகை வளப்படுத்தும் அறிவை, மனதை தரவேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம்.

WHY THIS ADVENTURE?

Dear Friends,


Dominic, a good friend of mine, told me over the phone, "Jerry, why don't you post your thoughts on a blog?" I did not give it much thought in the beginning. But, then, being an ordinary mortal that I am, this thought kept ringing in my heart and in my ears. Here I am trying to put down my ideas, especially my thoughts from September 1, 2009.


What is so special about Sep. 1? That was the day I began work in the Vatican Radio. If this is a surprise to many, I am sorry. I did not make my departure from India and from Loyola, Chennai too loud. I am in Rome. I have begun to work in the Indian Section (specially the Tamil Section) of the Vatican Radio from September 1.


Why this adventure? I mean, the blog adventure? For MORE SHARE & CARE. What I have done here is only to begin a sharing process. Coincidentally, my very first programme in the Vatican Radio was on the miracle of the Multiplication of Loaves. I have tried to interpret that miracle more as A MIRACLE OF SHARING... I have begun sharing. I shall be very happy if there is MORE SHARING & CARING. Awaiting your sharing & caring, Jerry.

அன்பு நண்பர்களே,


என் நண்பன், தோமினிக் அவன் பெயர், போன்ல சொன்னான்: "ஜெரி, உன் எண்ணங்களையெல்லாம் ஏன் ஒரு 'ப்ளாக்' போடக்கூடாது?" இந்தக் கேள்வி ஆரம்பித்து வைத்துள்ளது இந்த 'ப்ளாக்'கை. என் மனதில் பட்டவைகளை, எனக்குத் தெரிந்த தமிழில் சொல்ல முயல்கிறேன்.


இன்னும் கொஞ்சம் (அல்லது அதிகமாக) பரிவோடு பகிர்வோம் என்று இந்த 'ப்ளாக்'குக்கு பேர் வெச்சிருக்கேன். உங்களுடைய பரிவு, பகிர்வு இதெல்லாம் கிடைக்கும்கிற நம்பிக்கை.


இந்த மூன்று வாரங்கள் நான் வத்திக்கான் வானொலியில சொன்ன கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். போக, போக பல்வேறு பகிர்வுகள் நடந்தால், எல்லாருமே பயன் அடையலாம்னு நினைக்கிறேன். ரொம்ப தொணதொணன்னு பேசிகிட்டு இல்லாம, நான் செப்டம்பர் முதல் தேதி வானொலியில் சொன்ன கருத்துக்களுடன் என் பகிர்வை ஆரம்பிக்கிறேன். சரியா?


இன்னும் ஒரே ஒரு கருத்து... நான் முதலில் வானொலியில் பேசியது இயேசு செய்த ஒரு அற்புதத்தைப் பத்தி... அதாவது, உணவைப் பலுகச் செய்த அந்த புதுமையைப் பத்தி சொன்னேன். அதுல பகிர்வைப் பத்தி பேசியிருக்கேன். வாசிங்க, கேளுங்க... உங்க கருத்தைப் பகிர்ந்துக்கோங்க.

உங்க பகிர்வுக்காகக் காத்திருக்கும் ஜெரி.