26 November, 2009

HELP ME OVERCOME MY UNBELIEF! என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!

One of the reasons for me to explore the miracles of Jesus is to reflect on the milieu and the people of Jesus’ times thus trying to draw lessons for our times. More than the miracle, it is these aspects that provide enough scope for our reflections. Today, I have taken the miracle of Jesus healing the boy suffering from epilepsy – mainly to highlight the struggle the father of the boy must have gone through having to bring up a son with epilepsy. This gives me an opportunity to consider many parents who have to struggle bringing up a sickly child through life… the struggle parents have to go through dealing with a son or a daughter caught up in drugs.

Mark 9:17-27
The Healing of a Boy with an Evil Spirit

A man in the crowd answered, "Teacher, I brought you my son, who is possessed by a spirit that has robbed him of speech. Whenever it seizes him, it throws him to the ground. He foams at the mouth, gnashes his teeth and becomes rigid. I asked your disciples to drive out the spirit, but they could not."
"O unbelieving generation," Jesus replied, "how long shall I stay with you? How long shall I put up with you? Bring the boy to me."
So they brought him. When the spirit saw Jesus, it immediately threw the boy into a convulsion. He fell to the ground and rolled around, foaming at the mouth.
Jesus asked the boy's father, "How long has he been like this?"
"From childhood," he answered. "It has often thrown him into fire or water to kill him. But if you can do anything, take pity on us and help us."
" 'If you can'?" said Jesus. "Everything is possible for him who believes."
Immediately the boy's father exclaimed, "I do believe; help me overcome my unbelief!"
When Jesus saw that a crowd was running to the scene, he rebuked the evil spirit. "You deaf and mute spirit," he said, "I command you, come out of him and never enter him again."
The spirit shrieked, convulsed him violently and came out. The boy looked so much like a corpse that many said, "He's dead." But Jesus took him by the hand and lifted him to his feet, and he stood up.


The father mentioned in this passage is a good, caring father. The boy had this problem from childhood. It must have been very difficult for the father to bring him up especially in the Jewish community. His family would have been branded and ostracised as one cursed by God. How else could one explain a child born with epilepsy? The boy as well as the father must have gone through hell before reaching Jesus.
I cannot but think of parents who abandon their children at the doorsteps of an orphanage, in trash bins… for so many reasons. A physical defect traced at birth is a serious reason for a child to be abandoned. As against this, there are parents who also devote their entire life caring for children born with disabilities. Disabilities at birth is a cross these parents carry all their life… Disabilities that the son or daughter picks up along the way is another great cross – disabilities like getting addicted to drugs…
The main reason for me to choose this passage is to highlight the torture youth go through by succumbing to drugs. The torture is not confined to the young man or woman. It is experienced in a more acute way by the whole family. The description given in the gospel about the boy in seizure is typical of what happens to the young man or woman. A walk into a rehab centre will give you pictures of those going into convulsions, falling and rolling on the ground, foaming at the mouth, cutting and bruising themselves… all mentioned in today’s gospel.
There was a time when I used to think that doing drugs was a hobby of the filthy rich. I was woefully wrong. Drugs are omnipresent – across classes across all age groups. I happened to see a short video made by BBC on drug addicts of Bangladesh. What was shocking in the video was the fact that many of those drug addicts were children around the age of 10. This movie - “Letters from an anonymous addict” by Taimoor Sobhan (BBC) - is available at: http://www.bbc.co.uk/filmnetwork/films/p004vkd7
One of the opening slates of this movie gives this shocking statement: “Drug abuse is an alarming problem in Bangladesh. There are approximately 3 – 4.5 million drug users in the population. Of these many are children and teenagers. This number is steadily increasing.”
My heart goes out to the parents and the immediate family who are spending day and night… nay, days and nights, perhaps months in rehabilitation centres trying to bring back their son or daughter from the jaws of death. Rehabilitation is a painful process – long, tedious, torturous… A great challenge to one’s faith. This omnipresent drug problem can be tackled only if the whole world unites in the battle. But, that will not happen, since there are way too many ‘interested parties’ who sell drugs. For these who are selling drugs, rehab centres are great obstacles.
What I read in the web about two months back shocked me. Here is the news report:
http://www.guardian.co.uk/world/2009/sep/03/gunmen-drug-rehabilitation-centre-mexico
Gunmen kill 17 in Mexican drug rehabilitation centre
Officials say attackers in violent border town lined victims up against wall before shooting them dead. Thursday 3 September 2009
Gunmen have shot 17 people dead after breaking into a drug rehabilitation centre in northern Mexico.
The gunmen broke down the door of the El Aliviane centre, in the border town of Ciudad Juárez, and lined the victims up against a wall before opening fire, said Arturo Sandoval, a spokesman for the regional prosecutor's office. At least five others were injured.
The authorities had no immediate information about the suspects or victims.
To kill youngsters who were in the rehab centre wanting to get rid of their habit…tells the horrible tale of drug-trafficking in the world. This is not even the tip of the iceberg. It is simply a speck or a drop in the ocean called drug empire. The painful truth is that many governments are party to this trade.
The epileptic boy who suffers from seizures and who, according the father, is bound by the devil, gives us an opportunity to think of so many who are bound by drugs and suffer seizures. The prayers and efforts of these youngsters and those around them will surely knock at the gates of heaven. Although they seem dead, they will be brought to life by the touch of Jesus.

ஆறில் சாகலாம், நூறில் சாகலாம் ஆனால் இளமையில் சாவது கொடுமை என்ற வரிகளை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இளமை என்பது வாழ்வதற்கு... ஆனால், எப்படியும் வாழ்வதற்கல்ல. எப்படியும் வாழலாம் என்று ஆரம்பித்து, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இளையோரைப் பற்றி, முக்கியமாக, போதைப்பொருட்களுக்கு வாழ்வை பணயம் வைத்துவிட்டு, உடலால், மனதால் நோயுற்று ஊனமுற்று இருக்கும் இளையோரைப் பற்றி… இவர்களை நோயிலிருந்து அழிவிலிருந்து காப்பாற்ற, இவர்களைப் பேணி காக்கப் பெற்றோர் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி சிந்திக்க இன்றைய விவிலியத் தேடல் மூலம் உங்களை அழைக்கிறேன்.
வலிப்பு நோயுடன் போராடும் ஒரு சிறுவன், அவனைக் காப்பாற்ற போராடும் அவன் தந்தை இவர்களை இன்றைய விவிலியத்தில் சிந்திப்போம்.

நற்செய்திக்கு செவி மடுப்போம்.

மாற்கு, 9:17-27
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ' போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ' என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ' நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ' இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ' என்று கேட்டார். அதற்கு அவர், ' குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ' என்றார். இயேசு அவரை நோக்கி, ' இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ' நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ' என்று கதறினார். அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ' ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே ' என்றார். அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், ' அவன் இறந்துவிட்டான் ' என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் தந்தை உண்மையிலேயே பாசம் மிகுந்தவர். குறையுடன் பிறந்த தன் மகனைக் குப்பைத் தொட்டியில் போடாமல், அவனை அந்த யூத சமூகத்தில் வளர்த்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
குப்பைத் தொட்டியில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. குழந்தைகள் பிறப்பதென்னவோ ஒரு தாயின் உதரத்தில்தான். ஆனால், ஆயிரமாயிரம் காரணங்களுக்காய், கோடி கொடியாய் குழந்தைகள் குப்பைத் தொட்டியிலும், அனாதை இல்ல வாசல்களிலும், கோவில் முகப்புகளிலும் எறியப்படுவது இன்றும் நடக்கும் உண்மை. இந்தக் குழந்தைகளை எறிந்து விட சொல்லப்படும் காரணங்களில் ஒன்று... பிறக்கும் போதே ஏதோவொரு குறையோடு குழந்தை பிறப்பது தான். நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் தந்தை குறையோடு பிறந்த தன் குழந்தையைத் தூக்கி எறியவில்லை. அதுவும், குறையோடு பிறந்த ஒரு குழந்தையை யூதர் குலத்தில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒரு சவால். எந்த ஒரு நோயும், உடல் குறையும் கடவுளின் சாபம் என்று தப்பு கணக்கு போட்டு வந்த யூத சமூகத்தில், பலரும் சொல்லும் பழிச் சொற்களைக் கேட்டும் கேளாத வண்ணம், குறையோடு பிறந்த தன் மகனை வளர்க்க இந்தத் தந்தை அதிகம் போராடி இருக்க வேண்டும்.
உடலளவில் தன் மகன் சந்தித்த போராட்டங்களை இவர் இயேசுவிடம் விளக்குகிறார். தன் மகனின் குறையைத் தீர்க்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டு அவரது உள்ளம் தளர்ந்து போயுள்ளது. அதையும் நற்செய்தி படம் பிடித்து காட்டுகிறது.
“உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். (9: 22-24)
உள்ளத்தை உருக்கும் வரிகள்..
பொதுவாகவே, ஆண்கள் அழக்கூடாது, அதுவும் போது இடங்களில், பலருக்கு முன் அழக்கூடாது என்பது நாமாகவே வகுத்துக் கொண்ட நியதி. இங்கு நாம் சந்திக்கும் தந்தை கூட்டத்தின் முன்னால் கதறி அழுகிறார். தன் மகனைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அவர் இதுவரைக் கண்ட தோல்விகள், எல்லாவற்றையும் உள்ளத்தில் போட்டு பூட்டி வைத்து, ஒருவேளை இரவில், தனிமையில் அவர் அழுதிருக்கக்கூடும். அப்படி தேக்கி வைத்த உணர்வுகளெல்லாம் மடைதிறந்து கொட்டுகின்றன இயேசுவுக்கு முன்னால். அவர் உள்ளத்தின் காயங்களெல்லாம் இயேசுவுக்கு முன்னால் திறக்கப்படுகின்றன. மகன் குணமாகும் அந்த நேரத்தில், தந்தையும் குணமாகிறார்.

இந்த தந்தை தன் மகனது குறையை விளக்கும் வரிகள் இன்றைய இளையோரைப் பற்றி சிந்திக்க, அதுவும் அழிவைத் தேடிக்கொள்ளும் பல பழக்கங்களுக்கு அடிமையாகிப் போன இளையோரைப் பற்றி சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தருகின்றன.
"என் மகனைப் பிடித்துள்ள தீய ஆவி, அவனைப் பேச்சிழக்க வைத்துள்ளது. அவனைப் பிடித்து கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நேரிக்கிறான். உடம்பும் விறைத்துப் போகிறது.... இவனை ஒழித்து விடத் தீயிலும், தண்ணீரிலும் பல முறை இந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு."
நாம் இந்த விவிலியத் தேடலில் சிந்தித்துக்கொண்டிருக்கும் இதே வேளையில் உலகத்தின் லட்சக் கணக்கான மறு வாழ்வு மையங்களில் தன் மகனின் நிலையைப் பற்றி இந்த தந்தை சொன்ன அதே வரிகள் நிஜமாய் நடந்து வருகின்றன என்பதை சிந்திப்போம்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாவது பணம் படைத்தவர்கள் மட்டுமென்று நான் எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் இந்த பழக்கம் சமூகத்தில் ஏழை பணக்காரர் என்ற எல்லா நிலையினரிடையேயும், எல்லா வயதினரிடையேயும் இருப்பது அதிர்ச்சியைத் தரும் உண்மை. அண்மையில் நான் பார்த்த ஒரு குறும் படத்தில், பங்களாதேஷில் உள்ள உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
“Letters from an anonymous addict” by Taimoor Sobhan (BBC)
Drug abuse is an alarming problem in Bangladesh. There are approximately 3 – 4.5 million drug users in the population. Of these many are children and teenagers. This number is steadily increasing.
http://www.bbc.co.uk/filmnetwork/films/p004vkd7
மதுவுக்கும், போதை பொருள்களுக்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைத்துவிட்ட பல இளையோரை நாம் சந்தித்திருக்கிறோம். சாவின் வாசல் வரை சென்றுவிட்ட இவர்களை மீண்டும் வாழ்வுக்குக் கொண்டு வர போராடும் பெற்றோர், குடும்பத்தினர் எல்லாரையும் பெருமையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம்.
அந்த மறு வாழ்வு மையங்களில் உடல் விறைத்து, வாயில் நுரை தள்ளி படுத்திருக்கும் மகனுக்கு, அல்லது மகளுக்கு அருகே இரவும் பகலும் கண் விழித்து, தவமிருக்கும் பெற்றோரை, அல்லது வாழ்க்கைத் துணையைப் பார்த்து விசுவாசப் பாடங்களை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். இந்த மறு வாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு நாள், இரு நாளில் முடியும் கதையல்ல. பல வாரங்கள், பல மாதங்கள் நடக்கும் சிலுவைப் பாதை.
இந்த மறுவாழ்வு மையங்களில் இளையோரும், அவர்களது குடும்பங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு எல்லாரும் சந்தோஷப்படப் போவதில்லை. முக்கியமாக மனசாட்சியை விற்று விட்டு, இவர்களுக்கு போதைப் பொருள்களை வழங்கி வரும் வியாபாரிகள் இந்த மறு வாழ்வுக்கு எதிரிகள். இரு மாதங்களுக்கு முன்னர், செப்டம்பர் துவக்கத்தில் மெக்ஸிகோவுக்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் நம்மை நிலை குலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது.
மெக்சிகோ நகருக்கருகே ஒரு மறுவாழ்வு மையத்தில் ஒரு நாள் பட்டப்பகலில் துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர் நுழைந்தனர். அங்கு போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சி மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு கொண்டு வந்தனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொன்றனர். போதையிலிருந்து விடுதலை பெற விழைந்தவர்களுக்கு இவர்கள் நிரந்தர விடுதலை தந்து விட்ட வெறியில் மறைந்து விட்டனர். காவல் துறையினர் கொலையாளிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
அன்பர்களே, போதைப் பொருள் வியாபாரம் இன்று உலகத்தில் பல ஆயிரம் கோடி மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடக்கும் இந்தத் தொழிலால் அழியும் குடும்பங்களின் கதறல்களை ஓரளவு இன்றைய விவிலிய சிந்தனையில் கேட்க முயன்றோம். முடிவில்லாதது போல் தெரியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இளைய உள்ளங்கள் அவர்களைக் கரை சேர்க்க பாடுபடும் அவர்களது குடும்பத்தினர் .... அனைவரையும் இறைவன் குணமாக்க வேண்டுமென வேண்டுவோம்."நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்." என்று இந்த உள்ளங்கள் எழுப்பும் கதறல்கள் கட்டாயம் அந்த விண்ணகக் கதவுகளைத் திறக்கும்.

24 November, 2009

CHRIST A KING? VIS-À-VIS CHRIST THE KING!... ராஜாதி ராஜ கிறிஸ்து? அல்லது உண்மை அரசர் கிறிஸ்து!


Let me begin with a confession. The image of Christ the King leaves me uncomfortable. Christ the Shepherd, Christ the Saviour, Christ the Son of David, Christ the crucified, Christ the Lord…. So many other images of Christ as Light, Way, Vine, Living Water… all these do not create problems for me. Christ the King? Hmm… Christ and King seem to be two opposite, irreconcilable poles. Why do I feel so uncomfortable with the title Christ the King? I began thinking… Then I found some explanation for my discomfort.
My image of a king was the cause of the problem. The moment I think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd my mind. Christ would be a king this way? No way… Christ does talk about a kingdom. A Kingdom not bound by a territory, a Kingdom not at war with other kingdoms created by human endeavour. A Kingdom that can be realised only in human hearts. Is such a kingdom possible? If this is possible, then Christ the King is possible.
So, we are talking of two different worlds, worlds that are poles apart. These two poles are represented by two figures - Pilate and Jesus - given to us in today’s gospel of John (John 18:33-37).
JOHN, 18: 33-37
33Pilate then went back inside the palace, summoned Jesus and asked him, "Are you the king of the Jews?"
34"Is that your own idea," Jesus asked, "or did others talk to you about me?"
35"Am I a Jew?" Pilate replied. "It was your people and your chief priests who handed you over to me. What is it you have done?"
36Jesus said, "My kingdom is not of this world. If it were, my servants would fight to prevent my arrest by the Jews. But now my kingdom is from another place."
37"You are a king, then!" said Pilate. Jesus answered, "You are right in saying I am a king. In fact, for this reason I was born, and for this I came into the world, to testify to the truth. Everyone on the side of truth listens to me."

Who is Pilate? Every Sunday and on every great feast day when Christians recite the creed, they use the names of only two human persons in the creed… Virgin Mary and Pontius Pilate. The channel that infused life into Jesus and the channel that drained life out of him. What a paradox! The person who was responsible for condemning Jesus to death has somehow sneaked into the profession of Christian faith.
Who is this Pilate? He was the representative of the great, mighty Roman emperor – Caesar. He is referred to as the fifth Procurator of Judea, he is best known as the judge at Jesus' trial and the man who authorized his crucifixion. His main task was to procure taxes from the Jews and send them over to Rome. Some would even say he was personally angry with Jesus since he had made two of his tax collectors give up their jobs: the Levi (Matthew) and Zacchaeus. So, probably Pilate had a personal score to settle with Jesus.
We have heard the famous axiom: Power corrupts and absolute power corrupts absolutely. Pilate had tasted power in some ways and he was not willing to give up. He would go to any length to safeguard his position. Here was a threat to his power and ambition – in the form of a young man named Jesus, the Nazarene. He couldn’t believe his ears when the priests whispered to him that this man was challenging the power of Caesar and Rome. How far can a person be disillusioned, thought Pilate. Little did he realise that it was him who was the most disillusioned.
Sure, Pilate told himself, there was something about this man that challenged him. He could not but be impressed with the Nazarene. There was something magnetic about him. He wanted to know what created this aura around this frail carpenter. He tried to engage him in conversation about his kingdom and kingship. This is what is given in today’s gospel. He could not get any clear answer for his queries. What Jesus told him was way beyond his comprehension, since Pilate could not think of any other way a king or kingdom could exist except the roman way. Such a poor, narrow view! Jesus tried to tell him that truth would set him free. For Pilate truth was a distant memory. When was the last time he had been truthful?
Even now, he knew in his heart of hearts that the one who was standing in front of him was innocent. But, the moment he realised that there were other pulls, other equations, then he compromised…. Yes, all his life he had done only that… compromises. Compromise and truth cannot be in the same league. They are actually opposite poles. Just like… Pilate and Jesus.
Between Pilate and Jesus who was in power? Who was really in charge? The one who was sitting on the throne so tight since he thought that his throne would slip away if he got up, or the one who was standing in front of him calm and dignified? Who was the king… the real King? All of us can answer this question intellectually. My prayer is that all of us enthrone this real King in our hearts.

இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும் போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பல கோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். ஆயனான கிறிஸ்து, மீட்பரான கிறிஸ்து, வழியாக, ஒளியாக, வாழ்வாக, உணவாக, திராட்சைக் கொடியாக வரும் கிறிஸ்து... என்று இந்த ஒப்புமைகளைத் தியானிக்கும் போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.
ஆனால் அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம் மனதில் பல சங்கடங்களை விதைக்கிறது. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்தித்ததுண்டு. அப்படி சிந்திக்கும் போது ஒரு உண்மை தெரிந்தது. சங்கடம் கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.
அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்த சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ பராக்கிரம, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர,... இப்போது சொன்ன பல வார்த்தைகளுக்குச் சரியாகக் கூட அர்த்தங்கள் தெரியாது, ஆனால் இந்த முழக்கங்களுக்குப் பின் மனத்திரையில் தோன்றும் உருவம்? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஓர் உண்டு கொழுத்த உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர், அதிகாரம் செய்ய, அடுத்தவர்களைக் கால் மணையாக்கி, ஆட்சி பீடம் ஏறி அமர்பவர், தன்னைப் பார்ப்பவர்கள் எல்லாரும் முகம் குப்புற விழுந்து வணங்கி எந்நேரமும் தன் துதிபாட வேண்டும் என விரும்புபவர், வற்புறுத்துபவர்... அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்த கற்பனைக்கும், ஏசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. அப்புறம் எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.
ஆனால், இயேசுவும் ஒரு அரசர், ஒரு அரசை நிறுவியவர். அந்த அரசுக்குச் சொந்தக்காரர்... அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்து விட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை. இன்னும் ஆழமான ஒரு உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். அப்படிச் சேர்ந்து வரும் மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். இந்த அரசில் யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், எல்லாருக்குமே, இந்த அரசில் அரியணை, எல்லாருக்குமே மகுடம், எல்லாருக்குமே சாமரம், ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு மகுடம் சூட்டுவதிலேயே குறியாய் இருப்பதால், அடுத்தவருக்கு சாமரம் வீசுவதிலேயே குறியாய் இருப்பதால், அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள்... ஒருவேளை, இயேசுவை இங்கு தேடினால், அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, அதன் விளைவாக தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற நம் கவிஞன் ஒருவனின் கனவு நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட கனவு நனவாகும் ஒரு நாள் இந்தத் திருநாள்.
‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக் கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இரண்டும் நீரும் நெருப்பும் போல் ஒன்றோடொன்று கொஞ்சமும் பொருந்தாதவை. இந்த இரு வேறு உலகங்களையும், அரசுகளையும், அரசர்களையும் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகின்றது.

நற்செய்திக்குச் செவிமடுப்போம்:
யோவான் நற்செய்தி 18: 33-37
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர்” என்றார்.

இருவேறு உலகங்களின் பிரதிநிதிகள் - பிலாத்தும், ஏசுவும். முதலில் பிலாத்து பற்றிய சிந்தனைகள்... இந்த பிலாத்து யார் என்று புரிந்து கொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இருள் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே, ஒளி என்றால் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும். அதுபோல் தான் இதுவும்.

இந்த போஞ்சு பிலாத்து யார்?
செசாரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவனது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து ரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது. பிலாத்து இந்தப் பதவிக்கு வர பல பாடுகள்பட வேண்டியிருந்தது. அவனது கணக்குப்படி, இது ஒரு படிதான். அவன் ஏறவேண்டிய படிகள் பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, சீசரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் சீசராகவே மாற வேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவன் பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவன் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ விஷயங்களுக்கு அவன் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது அந்த மற்ற விஷயங்களை நினைத்து பார்க்க, அவனுடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவன் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகன் மூலம் வந்திருக்கும் சவால் அது. அந்த நேரத்தில் பிஆத்தின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
“நான் ஏன் பதவி காலத்தில் பலருக்கு மரணதண்டனை கொடுத்திருக்கிறேன். சீசருக்குப் பிடிக்கும் என்று தெரிந்தால், ஏன் பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தால், தவறான தீர்ப்புகளை, அநியாயம் என்று மனதார உணர்ந்தும், தந்திருக்கிறேன். ஏன் வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம், பதவிகள் பெற வேண்டும், கிடைத்தப் பதவிகளைத் தக்க வைத்து கொள்ள வேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இப்படியே வாழ்ந்து பழகி விட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனைப் பார்த்ததிலிருந்து, அவனிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து ஏன் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது. ச்சே, நான் வாழ்வதும் ஒரு வாழ்க்கை தானா என என் மனசாட்சி என்னைச் சித்ரவதை செய்துகொண்டிருக்கிறது. என் மனசாட்சி மட்டுமல்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இவனுக்கு மரணதண்டனை வழங்கினால், அவளும் என்னை விட்டு விலகிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த இளைஞனை அநியாயமாகக் கொல்லச் சொல்கிறார்கள் மதத்தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆவேசமான ஓலைங்களை எல்லாம் மீறி, என் மனசாட்சியின் குரலுக்கு, என் மனைவியின் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிகிறது. ‘இவனை நீர் விடுவித்தால், நீர் செசாரின் நண்பரல்ல... தன்னை அரசனாக்கிக் கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்.’ என்று இவர்கள் சொன்னது என்னை நிலைகுலையச் செய்துள்ளது. எனக்கு முன் நிற்கும் இந்தப் பரிதாபமான இளைஞன் ஒரு அரசனா? அதுவும் செசாருக்கு எதிராக, போட்டியாக எழக்கூடிய அரசனா? நம்ப முடியவில்லை. ஒருபுறம் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ஏன் இந்த விபரீத விளையாட்டு? எனக்கு என் பதவிதான் முக்கியம், அதுதான் என் வாழ்க்கை. என் மனசாட்சி, என் மனைவி முக்கியமல்ல. இயேசு என்னும் இந்த இளைஞனை, சாவுக்கு, அதுவும் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிடப்போகிறேன்.”

இப்படி பதவிக்காக, ஒரு பேரரசனுக்காகத் தன் மனசாட்சியையும், சொந்த வாழ்வையும் பணயம் வைக்கும் மனிதனுக்கு முன் நிற்கும் இயேசு அப்போது என்ன நினைத்திருப்பார்? இதோ, மற்றொரு கற்பனை: “பாவம் இந்த பிலாத்து, இவர்மட்டும் என் அரசை ஏற்பதற்கு தன் உள்ளத்தைத் திறந்தால், இந்த ரோமையப் பதவிகளையெல்லாம் விட மேலான பதவி, புகழ் எல்லாம் நிரந்தரமாக இவருக்கு நானும் என் தந்தையும் தருவோமே. இவர் இதய வாயிலருகே நின்று கதவைத் தட்டுகிறேன். தட்டிக்கொண்டே இருப்பேன். இவர் கட்டாயம் ஒருநாள் என் குரலைக் கேட்பார், இதயத்தைத் திறப்பார். அன்று நானும் என் தந்தையும் இவர் உள்ளத்தில் அரியணை கொள்வோம், இவரையும் அரியணையில் ஏற்றுவோம்.”
இரு வேறு துருவங்களிலிருந்து வந்த உள்ளக் குரல்களை, குமுறல்களைக் கேட்டோம். இந்த இருவரில் யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? எந்த நேரத்திலும் அரியணை பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிலாத்தா? அல்லது, பொய் குற்றம் சாட்டப்பட்டாலும் தன் வாழ்வு தந்தையின் கையில் இருப்பதை ஆழமாய் உணர்ந்திருந்ததால், எந்த பதட்டமும் இல்லாமல், உடல் களைத்தாலும், உள்ளம் களைக்காமல் நிமிர்ந்து நின்ற இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?
முடிக்குமுன் இரு எண்ணங்கள்:
கிறிஸ்து அரசர் திருநாளுக்கான பின்னணி இதுதான்: முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி இவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது அரசர்களின், தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், தங்கள் அதிகாரம் இன்னும் பல மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென இவர்கள் நாடுகளிடையே வளர்த்த பகைமையைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் திருச்சபைத் தலைவர்களும், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக 1925ஆம் ஆண்டு அறிவித்தனர். கிறிஸ்துவும் ஒரு அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் மக்கள் கண்டு பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டாவதாக, நற்செய்தியில் கிறிஸ்து அரசரைப் பற்றிய ஒரு நல்ல தகவல்: இயேசுவை அரசர் என்று குறிப்பிடும் வார்த்தைகள் அவரது பாடுகளின் வாரத்தில் பெரும்பாலும் கூறப்பட்டுள்ளன. எருசலேமில் "ஓசான்னா" புகழோடு அவர் நுழைந்த போது உன் அரசர் உன்னிடம் வருகிறார் என்று ஆரம்பித்து, அவர் அறையுண்ட சிலுவையில் மாட்டப்பட்ட அறிக்கையில் "இயேசு கிறிஸ்து யூதர்களின் அரசன்" என்பது வரை... இயேசு அரசனாகப் பேசப்படுவதற்கு பாடுகள் முக்கிய காரணமானது. இந்த வகை அரசத் தன்மையைத்தான் இயேசு விரும்பியிருப்பார்.இப்படிப்பட்ட கிறிஸ்து அரசரை நம் உள்ளங்களில் அரியணை ஏற்றவும், அதன் வழியாய் நாமும் இறைவன் அரசில் அரியணை ஏறவும், அரசரான கிறிஸ்து நமக்கு மணிமகுடம் சூட்டவும் வேண்டுவோம்.

20 November, 2009

18 November, 2009

SABBATH AND SYNAGOGUE – PART II ஓய்வுநாள்...தொழுகைக்கூடம்... பாகம் 2

Last week I rounded off my reflections on Sabbath and Synagogue this way: Jesus heals the person with the withered hand. He heals the people around. Did the Pharisees get healed? Unfortunately, no. The gospel says: But they were furious and began to discuss with one another what they might do to Jesus.
Why were they angry to such an extent? I wish to discuss this next week. I shall try and present the side of the Pharisees and the law makers… They may have something to tell us, perhaps.
What is the side of the Pharisees? What was their real problem with Jesus? I don’t think they were upset about his preaching and healing. There were many healers and preachers in Jesus’ time. So, for the Pharisees, here was just another one. Perhaps they were taken aback by the popularity this young man commanded. A bit jealous, perhaps?
What was really bothering them was the way Jesus was interpreting the laws and the prophets. What was more disturbing was the fact that He was teaching a new way to the common person. Jesus was teaching a new way… he was the New Testament. So, what? Well this may be easy for us to digest. Not for the Pharisees and the others. Why? Before we go into this question, we need to look at who these Pharisees are.
Who is a Pharisee? For us who live in this era, Pharisee = one who is hypocritical, crooked, rigid… This picture may have emerged since Jesus uses such strong language against them in the Gospels. Jesus, I think, is not against all the Pharisees. Pharisees, in fact, were good-intentioned people. They followed rules and wanted every Jew to follow them. The zeal for the Law consumed them. Unfortunately, it also made them consume so many other human considerations. Laws and rituals slowly became their life. Among the laws of Moses, the one on the Sabbath was THE MOST IMPORTANT. The text of this law can be read from:

Exodus 20: 1, 8-11
1And God spoke all these words: 8 "Remember the Sabbath day by keeping it holy. 9 Six days you shall labor and do all your work, 10 but the seventh day is a Sabbath to the LORD your God. On it you shall not do any work, neither you, nor your son or daughter, nor your manservant or maidservant, nor your animals, nor the alien within your gates. 11 For in six days the LORD made the heavens and the earth, the sea, and all that is in them, but he rested on the seventh day. Therefore the LORD blessed the Sabbath day and made it holy.

A very clear mandate. The Pharisees and the others who were guardians of the Law, took upon themselves the duty of making this law understood and observed by everyone. Here started the trouble. Their explanations began piling up. Have you seen the cars we use during festivals? We place the statues of Christ, Our Lady, or other saints. Then we begin the decorations. Most of the time, the decorations are over done. The statues are submerged in a heap of flowers. This is the symbol that comes to my mind when I think of the explanations given by the Pharisees. The law of Sabbath was lost in the details. Probably, the law was imprisoned in the fetters of instances and examples.
I am sure most of us know the story of the cat and the pooja. For those who have forgotten, here it is: The monk and his disciples sat down to perform their daily pooja. A cat which, by mistake, had come into the mutt was running around. The guru asked his disciples to tie the cat on to a pillar, so that they could perform the pooja without much distraction. Everyday, the cat was tied and the pooja was performed. After about two or three weeks, when they sat down for the pooja, the cat was not there. So, some of the disciples went around the mutt, looking for the cat. It was sleeping in a corner. They brought the cat to the pooja hall, tied it to the pillar and sat down for the pooja. A few years later, the cat died. The disciples began wondering what to do. They were, by then, convinced that the pooja would not be complete without tying a cat on to the third pillar of the hall. They went around the town looking for a cat… not any cat… but a cat that was white all over with a black dot on the forehead… just like the cat that died. They found a cat that almost resembled the one which died; brought the cat to the mutt; tied it to the third pillar and then sat down for the pooja. They were happy that they could do EXACTLY as had been done traditionally. A cat which was tied to the pillar since it was a nuisance to the pooja, had become an essential part of the pooja. I am sure this story drives home the point that tradition, laws and rituals can imprison us. This is exactly what had imprisoned the Pharisees.
The Sabbath was prescribed with a special intention. God, through Moses, was telling the people of Israel that they need to take a break. Work and work alone can blind them to other realities like… their personal health, their spiritual health, the health of family life etc. So, God would say, take a break and see other noble realities around. This suggestion is very much applicable for us today, isn’t it? If only our over-driven world takes a break! Takes a Sabbath!
Unfortunately, the Pharisees had piled up so many nitty gritty details on to the Sabbath, that the original meaning was lost. Well, Jesus wanted to reinstate the core of the Sabbath and he succeeded to a great extent. The Sabbath and the God of Sabbath were reinstated in the hearts of the simple people. Jesus was happy to given to God what was God’s.

ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில் வலது கை சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமையை சென்ற வார விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இயேசு அந்த நன்மையைச் செய்தபோது, அதைப் பார்த்த மறைநூல் வல்லுனரும், பரிசேயரும் இயேசுவின் மீது கோப வெறி கொண்டதாக லூக்கா நற்செய்தியில் வாசித்தோம். அவர்கள் கோப வெறி கொண்டதைக் கேள்விப்பட்டு, நாம் கோபமடைந்தோம். போன வார விவிலியத் தேடலில் நான் கூறிய இறுதி வரிகளை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
“ஒரு மனிதர் நல்லது செய்யும் போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்து விட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம்.
ஆனால், அவருக்கு எதிர் பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே. அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.”
பரிசேயர்களின் பக்கம் தான் என்ன? இயேசு குணமளிக்கிறார், போதிக்கிறார் என்பதெல்லாம் பரிசேயர், மறைநூல் அறிஞர்களுக்குப் பிரச்சனை அல்ல. ஒருவேளை இயேசுவின் புகழ் வெகு வேகமாகப் பரவி வந்ததால், கொஞ்சம் பொறாமை இருந்திருக்கும். அவர்களது பெரிய பிரச்சனையே இயேசு விதிமுறைகளை மீறுவது தான். மீறுவது மட்டுமல்லாது, அந்த விதிமுறைகளைப் பற்றிய புதிய பாடங்களை மக்களுக்குச் சொல்லித் தருவதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்களது கோபத்தையோ அதன் நியாய, அநியாயத்தையோ புரிந்து கொள்வதற்கு முன்னால், இவர்கள் யாரெனப் புரிந்து கொள்ள முயல்வோம். யூதர்கள் மத்தியில் மதம், கோவில் சம்மந்தமான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டவர்கள்: பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்... இவர்கள் அனைவரைப் பற்றியும் புரிந்து கொள்ள நேரமில்லை. இப்போதைக்கு, இக்குழுவிலிருந்து பரிசேயர்களைப் பற்றி மட்டும் புரிந்து கொள்ள முயல்வோம்.
பரிசேயர்கள் என்றதும் நம் மனதில் வில்லன்களைப் போன்ற உருவங்கள் நிழலாடலாம். வெளிவேடக் காரர்கள் என்று இயேசு இவர்களைச் சாடியது ஒரு காரணமாக இருக்கலாம். பரிசேயர்கள் அனைவருக்கும் இந்த முத்திரை குத்தி ஒதுக்கி விட வேண்டாம்.
பரிசேயர்கள் அடிப்படையில் நல்லவர்கள். கடவுள் கட்டளைகளையும், மோசே தந்த கட்டளைகளையும் மிக நுணுக்கமாக, துல்லியமாகக் கடைபிடித்தவர்கள்... மக்களும் அதைக் கடைபிடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை, கடவுள், அவரது ஆலயம், அவரது கட்டளைகள், தலைமுறை தலைமுறையாய் அவர்கள் கடைபிடித்த சாத்திரங்கள், சம்பிரதாயங்கள் இவை அனைத்தும் முக்கியமானவை, இன்றியமாயதவை, எள்ளளவும் தவறாமல், பிசகாமல் வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை... அவர்கள் வளர்ந்ததெல்லாம் இப்படிப்பட்ட ஒரு பின்னணியில். எனவே, கட்டளைகள், விதிமுறைகள், சடங்குகள், சாத்திரங்கள்.... இவைகளே இவர்களது வாழ்வாக மாறிவிட்டன.
இவர்களது வாழ்வோடு அதிகம் கலந்துவிட்ட, இவர்கள் வாழ்வை அதிகம் ஆக்ரமித்தவை - ஒய்வு நாள் ஒழுங்குகளும், தொழுகைக்கூட நியதிகளும்... இறைவன் தந்த கட்டளைகளிலேயே மிக முக்கியமாக இவர்கள் கருதி வந்தது ஒய்வு நாள் கட்டளையே. இதைப் பற்றி விடுதலைப் பயண நூல் கூறுவது இதுதான்:

விடுதலைப்பயணம் 20/1, 8-11
1கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: 8ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.9ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.10ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.11ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

ஒய்வு நாளைப் பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியும், இந்த கட்டளையை மீறும் பலரை இவர்கள் பார்த்து கோபமுற்றனர். ஒய்வு நாள் என்றால் என்ன, அன்று செய்யகூடிய, செய்யக்கூடாத வேலைகள் என்ன... மக்களுக்கு விளக்கங்கள் தந்தனர். நாளடைவில் இந்த விளக்கங்களே சட்டதிட்டங்களாக மாறின.
ஒய்வு நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடதென்பதை விளக்க இவர்கள் தந்த உதாரணங்களே பெரியதொரு பட்டியலாக நீண்டது. ஒய்வு நாளில் சமைக்கக் கூடாது, பொருளை சேகரிக்கக் கூடாது, எதையாவது கைதவறி கீழே போட்டுவிட்டால், குனிந்து எடுக்கக் கூடாது, பயணம் செய்யக்கொட்டது, பாரம் சுமக்கக் கூடாது... இப்படி ‘கூடாது’ என்ற இந்த பட்டியல் மிக நீளமானது. ஒய்வு நாள் குறித்த விளக்கங்களில் பரிசேயர், சதுசேயர், மறைநூல் வல்லுநர் இவர்களுக்கிடையே பற்பல சர்ச்சைகள் எழுந்தன. உதாரணத்திற்கு, ஒய்வு நாளில் எவ்வளவு பாரம் சுமக்கலாம் என்பதற்கு சர்ச்சைகளுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது: காய்ந்து போன அத்திப் பழம் ஒன்று எவ்வளவு எடையோ, அதுவே ஓய்வுநாளில் சுமக்க அனுமதிக்கப்படும் எடை. அதற்கு மேல் பாரமான எதையும் எடுக்கவோ, சுமக்கவோ கூடாது.
இதேபோல், எவ்வளவு தூரம் நடக்கலாம், எவ்வளவு உண்ணலாம், குடிக்கலாம்.... என்று மிகவும் நுணுக்கமான விதிமுறைகள் எழுந்தன. மோசே வழியாக இறைவன் கொடுத்த ஒய்வு நாள் பற்றிய கட்டளைக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட இந்த விளக்கங்கள் அந்த அடிப்படை கட்டளையையே மறைத்து விட்டது. திருநாட்களில், ஊர்வலத்தில் கொண்டு செல்ல இறைவனின், அல்லது புனிதர்களின் திரு உருவைத் தேரில் ஏற்றுவோம். அந்தத் தேர் முழுவதும் அலங்காரத்தால் நிரப்புவோம். இந்த அலங்காரங்கள், பூக்கள் பல சமயங்களில் அந்த திருஉருவத்தையே மறைத்து விடும், இல்லையா? சில சமயங்களில் இந்த அலங்காரங்களைச் செய்தவர்கள், அல்லது பூக்களுக்கு நிதி உதவி செய்தவர்கள் பெயர்கள் தேரில் பெரிதாக எழுதப்படும். இல்லையா? இறைவனை விட, புனிதர்களை விட பூக்களும், அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகி விடுவதில்லையா? அதேபோல் தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வு நாள் கட்டளையை விட, அதற்கு சொல்லப்பட்ட விளக்கங்கள், உதாரணங்கள் பெரும் மலையாக உயர்ந்து விட்டதால், பரிசேயர்களும், மக்களும் கடவுள் தந்த ஒய்வு நாள் கட்டளைகளை மறந்து விட்டனர். இதைத் தான் இயேசு கடுமையாக எதிர்த்தார்.
பரிசேயர்கள் மேல ஏசுவுக்கு இருந்த மற்றொரு கோபம் அவர்கள் மக்களை விட, ஏன் கடவுளை விட சட்டதிட்டங்களுக்குத் தந்த அளவு கடந்த மதிப்பு. சட்டங்களும் சம்பிரதாயங்களும் பெரிது. மனிதர்களோ, அல்லது அவர்கள் வாழ்வோ பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென சொல்வது... அதாவது, சட்டங்களைத் தந்த கடவுளுக்கு இணையாக, சில சமயம் கடவுளுக்கும் மேலாக, சட்டங்களையே கடவுளாக்குவது மதியற்ற செயல். இதை இயேசு உணர்ந்திருந்தார். பரிசேயரை உணரவைக்க முயன்றார். முடியவில்லை.
சட்டங்களுக்கு தேவைக்கும் அதிகமாக முதலிடம் தருவதால், நாம் எப்படி சிறைபடுவோம் என்பதைக் கூறும் ஒரு கதை. எல்லாருக்கும் தெரிந்த கதை. சுருக்கமாக நினைவு படுத்துகிறேன். துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பூஜை நேரத்தில் கரடி கேட்டிருக்கிறோம். ஆனால், பூஜை நேரத்தில் பூனை? பெரிய குரு அந்தப் பூனையை ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். இப்படி சில நாட்கள் பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜை ஆரம்பிக்கப் போகும் நேரத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள் மடம் எங்கும் தேடி, பூனையைக் கண்டுபிடித்து கொண்டு வந்து, தூணில் கட்டிவைத்து விட்டு, பூஜையை ஆரம்பித்தனர். பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழல் உருவாகி விட்டது.
சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பூனை இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனை வங்கி வர அல்லது தேடி கண்டுபிடிக்க சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர். அந்தப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்க வேண்டும், அதன் கழுத்தில் ஒரு கருப்பு வட்டம் இருக்க வேண்டும். மிகவும் முயற்ச்சிகள் எடுத்து பூனையைக் கண்டுபிடித்தனர். கொண்டுவந்து மடத்தில் முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் இதைக் கட்டி, பின்னர் பூஜைக்கு அமர்ந்தார்கள். பூஜைக்குத் தடையாக இருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்கு முக்கியமாகத் தேவைப்பட்டது. பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழ்நிலை உருவாகிறது. பூனையா? பூஜையா? என்ற கேள்வி வந்தால், பூனை வென்று விடும்.
பூஜைகளை மறக்கச் செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது ஆபத்து என்று இயேசு சொல்லிப் பார்த்தார். பூனையை மறந்துவிட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்று இயேசு சொல்லிப் பார்த்தார், செயலில் காட்டினார். கடவுள் தந்த ஒய்வு நாள் மனிதருக்கு நலம் பயக்கும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை, வேலை என்று அலைய வேண்டாம். அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும் பணம் இவைகளை விட இன்னும் மேலானவை வாழ்க்கையில் உள்ளன. இந்த மேலானவைகளைத் தேடி கண்டுபிடிக்க வேலையை விட்டு வெளியே வா... ஓய்வேடு... இறைவனை, பிறரை, குடும்பத்தை நினைத்துப் பார்க்க ஒய்வு நாள் தேவை. இதுதான் ஒய்வு நாளைப் பற்றி இறைவன் சொல்லித்தர விரும்பிய முக்கிய பாடம். ஆனால், ஒய்வு நாளைச் சொன்ன கடவுளையே மறந்து விட்டு ஒய்வு நாளை வழிபட ஆரம்பித்த பரிசேயர்கள், மனிதாபிமானமற்ற வகையில் ஒய்வு நாளை வழிபட ஆரம்பித்தது இயேசுவை அதிகமாய் பாதித்திருக்க வேண்டும். எனவே தான் அவர், ஒய்வு நாளை மீறினார். அதுவும் தொழுகைக்கூடத்தில் ஒய்வு நாளை மீறும் வண்ணம், மனிதர்களுக்கு நலம் அளித்தார். நலம் பெற்ற மனிதர்கள், நலம் தரும் புதுமையைப் பார்த்த மனிதர்கள் கடவுளைப் புகழ்ந்த போது, இயேசு ஒய்வு நாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும் மக்கள் மனங்களில் அரியணை ஏற்றினார். கடவுளுக்குரியதை கடவுளுக்குத் தந்த திருப்தி இயேசுவுக்கு.

14 November, 2009

APOCALYPSE SANS SPFX (Special Effects)… இறுதிநாட்கள்...சினிமா காட்சி அல்ல

The English expression: ‘last minute preparation’ blends quite a few emotions… expectation, excitement, tension, anxiety... After having done enough to prepare for the exams, it still seems not enough unless we turn over some pages at the entrance of the exam hall. After having done enough to prepare for the wedding, having checked the list, still there are last minute frantic calls… I am sure each of us has a list of ‘last minute adventures’.
In the above instances, probably the end result is something desirable. Hence, the excitement and anxiety that accompany them are desirable. We don’t crib about last minute efforts getting doubled or tripled. But, if the event is not something desirable, then tension and anxiety overpower us - the tension that is palpable in hospital corridors, outside ICUs.
Expectation is in the air as we approach the final moments of this year’s liturgical calendar. This is the last Sunday of the Ordinary Time. The first reading from the book of Daniel and the gospel of Mark talk about the end of times.
End of times… I can recall the occasions I was walking down the roads in Chennai, when someone would suddenly thrust a paper, a pamphlet or a booklet into my hands. Those were the roadside preachers who were preoccupied with ‘saving the world’ from the impending disaster. The Day of the Lord is Near… was their constant theme. This frenzy would reach a feverish pitch when something disturbing happens… The devastating earthquake in Gujarat, Pakistan, the twin tower attack in USA, the tsunami in Asia… all these events naturally brought us to think about the end. Many explanations were easily available during these disasters… Among them Nostradamus was the most popular name.
Last Friday, Nov.13 (Friday-the 13th, a combination very much feared and detested by quite many) a film was released in the US. The title of the movie? 2012. The film talks of the Mayan doomsday prophecy and has some link to…? Yes, you guessed it right… Nostradamus! The film portrays the end of the world as on December 21, 2012. Roland Emmerich who has directed 2012, has done a hat-trick. Three films on the destruction of the world: Independence Day (1996), The Day After Tomorrow (2004) and now 2012 (2009). If at all anything happens in 2012, then Emmerich would surely tell us: Didn’t I say so?
Talking of the end and interpreting it – are they just pastime? For Emmerich or Hollywood it could be pastime… all entertainment. When Hollywood talks of apocalypse, it does so with lots of special effects. This makes the catastrophic, cataclysmic end glamorous, desirable. The readings today give us a different picture. Kindly take time to read these passages:

Daniel 12:1-3
1 "At that time Michael, the great prince who protects your people, will arise. There will be a time of distress such as has not happened from the beginning of nations until then. But at that time your people—everyone whose name is found written in the book—will be delivered. 2 Multitudes who sleep in the dust of the earth will awake: some to everlasting life, others to shame and everlasting contempt. 3 Those who are wise will shine like the brightness of the heavens, and those who lead many to righteousness, like the stars for ever and ever.

Mark 13:24-32
24"But in those days, following that distress, " 'the sun will be darkened, and the moon will not give its light; 25the stars will fall from the sky, and the heavenly bodies will be shaken.'
26"At that time men will see the Son of Man coming in clouds with great power and glory. 27And he will send his angels and gather his elect from the four winds, from the ends of the earth to the ends of the heavens.
28"Now learn this lesson from the fig tree: As soon as its twigs get tender and its leaves come out, you know that summer is near. 29Even so, when you see these things happening, you know that it is near, right at the door. 30I tell you the truth, this generation will certainly not pass away until all these things have happened. 31Heaven and earth will pass away, but my words will never pass away.
32"No one knows about that day or hour, not even the angels in heaven, nor the Son, but only the Father.


I was talking of how Hollywood makes disaster seem glamorous. There lurks a danger when we see destruction in such monster-budgeted special effects movies. The ‘wow-effect’ created by such movies make us more and more desensitized about real disasters, real destructions. When giant waves sweep over New York’s skyscrapers, it really looks good. But, we know that tsunami which brought giant waves to our shores, was not good. Reality calls for a different mindset.
Many of us take lots of efforts to know the future. If at the end of such efforts, the future we hear of is all fairy tale happiness, it is okay. But, if the future foretold is not so good, then we regret having taken such efforts. The future is a mixed bag of good and bad. The famous line: “For all that has been… thanks. For all that will be… yes.” crosses my mind. This yes to the future can be said from a heart that trusts in itself and in the Lord. May we pray for this trust to grow in us. May we foster such trust in people around us.

கிறீஸ்தவ பாரம்பரியத்தில் ஒவ்வொரு ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக் காலம். இந்தப் பொதுக் காலம் இந்த ஞாயிறோடு முடிகிறது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு திருவருகைக் காலம் ஆரம்பமாகிறது. பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறான இன்று, இறுதி நாட்களைப் பற்றி சிந்திக்க இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு: "last minute preparation" – கடைசி நிமிட தயாரிப்பு. எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்க இருக்கும் ஒரு அனுபவம் இது. தேர்வுகளுக்கு தயார் செய்கிறோம். பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், அந்த தேர்வு எழுதும் அரங்கத்திற்கு முன்பு எத்தனை தயாரிப்புகள்... வீட்டில் வைபவங்களுக்குத் தயாரிக்கிறோம். ஆனாலும் வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை அரக்க, பரக்க ஓடியாடி வேலைகள் செய்கிறோம்.
வேலைக்கான interview , வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... இப்படி கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். மேலே சொன்ன சம்பவங்களி லெல்லாம் ஒரு வித ஆவல், ஆர்வம் இருக்கும். கொஞ்சம் பயம், கலக்கமும் இருக்கும். பொதுவாக இவற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எதிர்பார்ப்பு... இதுதான் இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையம்.
நல்ல காரியங்களை எதிர்பார்க்கும் போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மை செயல்பட வைக்கும். ஆனால், நலமில்லாத, வருத்தம் தரும் காரியங்களில்... நமது மனநிலை? உடல் நலமின்றி, அதுவும் மிகவும் seriousஆக நாமோ, அல்லது நமக்கு நெருங்கியவர்களோ மருத்துவ மனையில் இருக்கும் போது, என்னவித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கேட்டதோ, அவை எதிர்காலத்தோடு தொடர்புடையவை...
நம் ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! நல்லா இருக்குமா? இள வயதில் இது போன்ற ஒரு சக்திக்காக நான் ஏங்கியதுண்டு. உதரணத்திற்கு, படிக்கும் காலத்தில் அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப் போகும் வேலை, நமக்கு வரும் வாழ்க்கைத் துணை, நமது ஒய்வு கால வாழ்க்கை இவைகளைத் தெரிந்து கொண்டால், எவ்வளவு நல்லா இருக்கும்...
நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப் படுகிறோம்...
எதிர்காலம் முழுவதும் "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.
எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் எல்லாரும் மரணத்தைப் பல வழிகளில், வடிவங்களில் சந்தித்திருக்கிறோம். நாமும் அதை ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி பேச, எண்ண தயங்குகிறோம். நவம்பர் மாதம் மரணத்தைப் பற்றி, மரித்தோரைப் பற்றி சிந்திக்க திருச்சபை அழைக்கும் ஒரு மாதம். இம்மாத துவக்கத்தில் வத்திக்கான் வானொலியில் என்னோடு பணியாற்றும் சகோதரி திரேசாவும், நண்பர் கிறிஸ்டோபரும் மரணத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டது உங்கள் மனதில் கட்டாயம் இன்னும் நிழலாடும், இல்லையா? இன்றும் நமது இறுதி காலம் பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு. இந்த ஞாயிறு வாசகங்கள் இறுதி காலம் பற்றிய முன்னறிவிப்புகளாகச் சொல்லப்பட்டுள்ளன. தானியேல் நூலிலிருந்தும், மாற்கு நற்செய்தியில் இருந்தும் இறை வார்த்தைகளைக் கேட்போம்.

தானியேல் 12: 1-3
அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

மாற்கு நற்செய்தி 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். ' அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ' ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

நவம்பர் 13 வெள்ளியன்று அமேரிக்காவில் ஏறத்தாழ 3000 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை பிரமாண்டமாகக் காட்டும் திரைப்படம். இந்த படத்தின் trailer ஐப் பார்த்தேன். உலக அழிவு special effects பயன்படுத்தி அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அழிவு... அழகாக... காட்டப்படுகிறது. இந்த அழிவைப் பெரியத் திரையில் பிரமாண்டமாய்ப் பார்க்க கூட்டம் அலைமோதுவதாகவும், அதனால் இந்தப் படம் வசூலில் சாதனை படைக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இது முதல் முறையல்ல. அழிவைப் பற்றி ஹாலிவுட் திரை உலகத்தில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். 2012 என்ற இந்தத் திரைப்படத்தை இயக்கிய Roland Emmerich 2004ஆம் ஆண்டிலும் 1996ஆம் ஆண்டிலும் இரு பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தந்தார். இரண்டும் உலக அழிவைப் பற்றியது. இரண்டும் வெற்றிப் படங்கள்.
ஞாயிறு சிந்தனைக்கு பதில் திரை விமர்சனம் பேசுகிறேனோ என்று ஒரு சிலர் கோபப்படலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப் பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஒரு உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக திரைப்படங்கள், அழிவை special effects மூலம் பிரம்மாண்டமாக, ஏன், கவர்ச்சியாகவும் காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள் அழிவைப் பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மைத் தூரப்படுத்தி, அந்நியப்படுத்தி நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடிப் பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகி விட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில் பல உயிர்கள் அழிக்கப்படுவத்தையோ, அல்லல்படுவதையோ உணர முடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.
இந்த அழிவுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும் போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்து விடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை சாயும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், வேர்விட்டு வளர்ந்து விடும். அப்போது எடுக்கப்படும் அவசர முடிவுகளால் இன்னும் அதிக அழிவைத் தேடிச் செல்லும் ஆபத்து உள்ளது. இப்படி அழிவைத் தேடும் ஆயிரமாயிரம் பேரை, முக்கியமாக இளையோரை நினைத்துப் பார்ப்போம்.
'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்க வேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்க வேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப் போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதை விட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல் பாடுகளும் இருக்கும். எந்த பொருள் கொண்டு எதிர் காலத்தைப் பார்க்கிறோம்? எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!" "இதுவரை நடந்தவைகளுக்கு நன்றி... இனி நடக்கப் போகின்றவைகள் நல்லவையே..." என்ற கண்ணோட்டம் எதிர்காலத்தில் நல்லவற்றையே உயர்த்திப் பிடிக்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனை என்ற கூட்டத்தைச் சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெற வேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.

12 November, 2009

SABBATH… SYNOGOGUE… ஓய்வுநாள்...தொழுகைக்கூடம்...

Last week when I was talking about the miracles related to the widow of Nain and the lady bent double with infirmity (healed on a Sabbath), it occurred to me that it would be interesting to reflect on Jesus performing miracles on the Sabbath. Luke records the very first miracle of Jesus and quite a few other miracles as occurring on the Sabbath. In almost all of them, the miracles occur in the synagogue. Sabbath and synagogue… Working miracles on a Sabbath was scandalous enough. Jesus seems to be stretching his luck a bit too far by performing these Sabbath miracles in the synagogue... Was Jesus looking for trouble? inviting trouble? If Jesus wanted to heal only an individual, He could have easily performed these miracles on one-to-one basis, just Jesus and him or her. There are a few miracles done this way, where Jesus even tells the person not to talk about it. These Sabbath miracles, on the other hand, are not simply meant for the person alone. Jesus was bent on showing to his listeners, and, more especially, to the Scribes and the Pharisees that Sabbath was made for humans and not the other way around. For our reflection, I have chosen the miracle recorded in the sixth chapter of Luke. Jesus heals a man with a withered hand. Here is the passage from Luke:

LUKE 6: 6-11
On another Sabbath he went into the synagogue and was teaching, and a man was there whose right hand was shriveled. The Pharisees and the teachers of the law were looking for a reason to accuse Jesus, so they watched him closely to see if he would heal on the Sabbath. But Jesus knew what they were thinking and said to the man with the shrivelled hand, "Get up and stand in front of everyone." So he got up and stood there.
Then Jesus said to them, "I ask you, which is lawful on the Sabbath: to do good or to do evil, to save life or to destroy it?"
He looked around at them all, and then said to the man, "Stretch out your hand." He did so, and his hand was completely restored. But they were furious and began to discuss with one another what they might do to Jesus.


Let’s begin our reflection on who were present in the synagogue and why… Jesus was present. Why? He was there to teach and to heal. There were people, mostly the poor and the sick people. Why? They were there to listen to Jesus and to get healed. If Jesus and the people alone were there, no drama and no interest… In any drama, we need a third point to create tension. We need villains. Enter the Pharisees and the teachers of the law. Jesus seems to have begun his ministry in full swing healing people on the Sabbath. But, this did not go well with the Pharisees and other religious leaders. So, they were looking for an opportunity to corner him. They did not need to wait long. They heard that Jesus was in the synagogue. What was more? They heard that a man with shrivelled hand was also spotted in the synagogue. What more could they ask for?

Here is a passage from Pastor Kent Crutcher who describes the situation better:
The opportunity was ripe. The opportunity for the Pharisees to achieve their goal. Their main objective: getting rid of Jesus. All the ingredients were in place. There was a man, and that man needed healing. There was Jesus. And of all days, it was the Sabbath!
"We have Jesus now, right where we want Him. If he doesn't heal the man, then the people will think He doesn't care. If He does heal the man, the people will think He's a Law-breaker. This is a good way to get rid of Jesus. We'll cut His influence in half and word will spread that He's a Law-breaker or He doesn't care about people. And we will look good again."

http://mcdonaldroad.org/sermons/97/970823.htm

Everything seemed to fall in place for the coup. But, they had not done their homework well. They had underestimated Jesus’ intelligence. The gospel points out this lacuna… “But Jesus knew what they were thinking…” Jesus had sized them up. What Jesus does after this is a bit startling, a bit disconcerting… He calls the physically challenged person to come to the middle. An embarrassing moment, indeed!
Our present generation has improved a lot in treating physically challenged persons better. Even the nomenclature has changed over a period of time: Handicapped, disabled, physically challenged and now differently-abled… These days we are taught in so many ways not to even stare at a person with a physical infirmity. We are taught to integrate them into the human family without condescension. Such is our time and we should be happy about it. But, the Jewish community was far from it. Those with infirmity were considered sinners, cursed by God. If this was the case, then why did Jesus do this, embarrassing an infirm person to stand up in the middle of a group?
I am reminded of another event where the woman with haemorrhage is brought to the centre of the crowd. (Luke 8:41-48) On that occasion, Jesus could have easily left the woman alone. She did not want to draw any attention to herself. All she wanted to do was to slip into the crowd, touch only the hem of His garment and slip away quietly. All she wanted was only the hem, the fringe, not the centre. But, Jesus had other ideas. He did not want the woman alone to get healed… He wanted to heal the crowd too. That is why He brought her to the centre.
Jesus was doing the same here, in the synogogue. He wanted to heal not only the man with the withered hand but those around him… mainly, the religious leaders – the leaders who had come prepared to trap Jesus. Keeping the sick person in the middle, Jesus raises a question: "I ask you, which is lawful on the Sabbath: to do good or to do evil, to save life or to destroy it?" The question is not directed to anyone in particular. But, it reaches home… home to those who wanted to question Jesus. Questioning the questioner… The Pharisees and the teachers of the law were floored. They could not answer Jesus. Luke is silent about this reaction, but the Gospel of Mark says that Jesus was angry with their silence (Mark 3: 4-5).
Jesus heals the person with the withered hand. He heals the people around. Did the Pharisees get healed? Unfortunately, no. The gospel says: But they were furious and began to discuss with one another what they might do to Jesus.
Why were they angry to such an extent? I wish to discuss this next week. I shall try and present the side of the Pharisees and the law makers… They may have something to tell us, perhaps.

குணமாக்கும் புதுமைகளில் பலவற்றை இயேசு ஒய்வு நாட்களில் நிகழ்த்தினார். லூக்கா நற்செய்தி கூறும் இயேசுவின் புதுமைகளில் மூன்றில் ஒரு பகுதி ஓய்வு நாட்களில் செய்யப்பட்டவை. இயேசு ஆற்றியதாக லூக்கா கூறும் முதல் புதுமையே ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் நடந்தது. ஓய்வு நாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக் கூடத்தில் மீறுவது அதைவிட பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இப்படி செய்தார். பிரச்சனைகளைத் தேடி சென்றாரா? மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி தோன்றலாம். ஆனால் இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு இவற்றை ஒரு தீர்மானத்தோடு செய்வது விளங்கும். புதுமைகளால் தனி ஒருவர் மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது தேவையுள்ளவர் வீடு தேடி சென்று புதுமைகள் செய்திருக்கலாம். இவை போன்ற புதுமைகளும் சொல்லப் பட்டுள்ளன. ஆனால், ஓய்வு நாள் - தொழுகைக் கூட புதுமைகளில் இயேசுவின் எண்ணங்கள் வேறு வகையில் இருந்ததால், பிரச்சனைகளுக்கு மத்தியில், கேள்விகளுக்கு மத்தியில் புதுமைகளை ஆற்றுகிறார். யூதர்களுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும் ஒய்வு நாள் குறித்த பாடங்களைச் சொல்லித்தருவது இயேசுவின் தலையாயக் குறிக்கோளாகத் தெரிகிறது. நாமும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. லூக்கா நற்செய்தி ஆறாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் ஆற்றும் ஒரு புதுமையில் இயேசு பிரச்சனையைச் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட, பிரச்சனையை ஆரம்பிக்கிறார் என்பது அதிகம் பொருந்தும். இப்படி பிரச்சனையின் மத்தியில் இயேசு ஆற்றும் புதுமையை லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 6 6-11
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

கோவில், தொழுகைக் கூடம் செல்வதற்குப் பல காரணங்கள். அவைகளைப் பட்டியலிட இப்போது நேரமில்லை. நாம் வாசித்த நற்செய்தியில் தொழுகைக் கூடத்தில் இருந்தவர்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம். இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்தார். காரணம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு வரக் காரணம்? இயேசுவின் போதனைகள் மற்ற மறை நூல் அறிஞர்கள் போதிப்பது போல் இல்லாமல், நன்றாக இருப்பதாக செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க.
போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் வலக்கை சூம்பிய ஒருவர் இருந்தார். ஒரு வேளை, யேசுவிடம் தன் குறையைச் சொல்லி ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருப்பார். ஓய்வு நாளில் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் தொழுகைக் கூடத்தில் இருந்தனர். காரணம்? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? ஜெபம் செய்யவா? மக்களை ஜெபத்திலும், தொழுகையிலும் வழிநடத்தவா? அல்லது மக்களைத் திசைதிருப்பவா?
ஒருவேளை மக்களை ஜெபத்திலும், தொழுகையிலும் வழிநடத்த அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவை அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், இயேசுவுக்கு முன்னால் குறையுள்ள அந்த மனிதரைப் பார்த்ததும் அவர்கள் வந்த காரணம், குறிக்கோள் எல்லாம் மாறியது. அவர்கள் உதட்டோரம் லேசான ஒரு புன்னகை. இயேசுவை மக்கள் முன் மட்டம் தட்ட இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால் மோசே வகுத்த சட்டங்களை, ஆண்டவனே தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தப்பு, செய்யாமல் இருப்பதும் தப்பு. இயேசு இன்னைக்கி நல்லா மாட்டிகிட்டார். அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தப்பு... இயேசுவின் அறிவுத்திறனைக் கொஞ்சம் குறைவாக மதிப்பிட்டுவிட்டனர். நற்செய்தி சொல்லும் அழகான ஒரு சொற்றொடர்: "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." நமது இன்றைய பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால், இயேசு “அவங்களை அளந்து வெச்சிருந்தார்”.
ஒரு கற்பனைக் காட்சியை காண்பதற்கு உங்களை அழைக்கிறேன். இயேசுவைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் வருவது போலவும் இந்த காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். இயேசு போதித்துக் கொண்டிருப்பார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருப்பர். எல்லாருடைய முகத்திலும் ஒரு வித அமைதி, ஆவல் காட்டப்படும். சூம்பியக் கை உள்ளவரும் அவ்வப்போது காட்டப்படுவார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென, இசை மாறும். காமெரா ஒரு பகுதியைக் காட்டும். அங்கு பரிசேயர், மறைநூல் வல்லுநர் வந்து நின்று கொண்டிருப்பர். மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரியும். இது வரை அங்கு இருந்த சகஜமானச் சூழ்நிலை மாறி ஒரு இறுக்கமானச் சூழல் உருவாகும்.
வாழ்க்கையில் இதை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம். நல்லதொரு சூழலில் நண்பர்களுடன் நாம் பேசி, சிரித்துக்கொண்டிருக்கும் போது, நமக்குப் பிடிக்காத ஒருவர் அந்தப் பக்கம் வந்தால், அந்த சூழ்நிலையே மாறிவிடும். அன்போடு ஆனந்தமாய் இருந்த சூழல் மாறி, ஒரு வித அமைதி, இறுக்கமான அமைதி அங்கு குடிகொள்ளும். தொழுகைக் கூடத்தில் நிலவிய இறுக்கத்தைக் குறைக்க அல்லது உடைக்க இயேசு முன்வருகிறார். சூம்பிய கையுடையவரிடம், "எழுந்து நடுவே நில்லும்." என்கிறார். சங்கடமான ஒரு சுழ்நிலை.
உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிது படுத்தாமல், அவர்களை முடிந்தவரை சகஜமான வாழ்க்கையில் ஈடுபடுத்த அனைவரும் முயல வேண்டும் என்பது குழந்தைகளுக்கும் இன்று பள்ளிகளில் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். இப்பாடங்களை எல்லாம் நாம் பின்பற்றுகிறோமா என்பதைச் சிந்திக்கலாம். இயேசுவிடம் வருவோம்.
உடல் நோய் உள்ளவர்களை, குறை உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், இயேசு உடல் குறை உள்ள ஒருவரை ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்கும். கூட்டத்தில் குணமானப் பெண்ணை, கூட்டத்தின் நடுவில் நிறுத்தி, அவர் வழியாகக் கூட்டத்தைக் குணமாக்கவில்லையா? அதேபோல் தான் இந்த நிகழ்விலும். அந்தப் பெண்ணாவது குணமான பின் கூட்டத்தின் மையத்திற்கு அழைக்கப்பட்டார். இவரோ? குறையோடு நிற்கிறார், கூட்டத்தின் நடுவில்.
குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக் காயாக்கி அவரை குணமாக்கினாலும், குமமாக்காவிட்டாலும் இயேசுவை எப்படியாவது மடக்கி விடலாம் என்று நினைத்த அந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலை குலையச் செய்வதற்கு இயேசு இந்த வழியைக் கடைபிடிக்கிறார். ஊனமுள்ள அந்த மனிதர் நின்றதும், அவரது குறையைக் கண்டதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "ஐயோ பாவம் இந்த மனுஷன். இவரைக் கட்டாயம் இயேசு குணப்படுத்துவார்..." என்று பரிதாபமும், நம்பிக்கையும் கலந்த மன நிலையில் அந்த மக்கள் அமர்ந்திருக்கின்றனர். இயேசுவின் கேள்வி அவர்களைத் தட்டி எழுப்புகிறது. இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.
இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. மக்களின் மனதில் ஓய்வுநாளைப் பற்றி நல்ல கருத்துக்களை உருவாக்கியிருப்பார். இந்த கேள்வி மதத்தலைவர்களுக்கு. பதில் எதையும் காணோம். ஓய்வு நாளை வைத்து இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். வாயடைத்து நின்றார்கள்.
இயேசு நல்லது செய்கிறார். ஊனமுற்றவருடைய கை நலமடைந்தது. சூழ இருந்த எளியவர்களின் மனங்கள் நலமடைந்தன. நிறைந்தன. அனால், அவர்களோ... எவர்கள்? மதத்தலைவர்களோ... “கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.” இவை நற்செய்தியின் இறுதி வரிகள்.
ஒரு மனிதர் நல்லது செய்யும் போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள் தானா? தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்து விட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர் பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே. அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.

07 November, 2009

GIVE TILL IT HURTS… உடல் வருத்தி கொடு...

It is a happy coincidence that we are reflecting on ‘giving’ once again. My last blog was also on ‘giving’. I guess we cannot say enough on this. This Sunday’s (31st Sunday in Ordinary Time - B Cycle) readings – the first one from I Kings and the Gospel of Mark talk of two widows giving out of their nothing. Here are the two Bible passages:

I Kings 17:10-16
Elijah went to Zarephath. When he came to the town gate, a widow was there gathering sticks. He called to her and asked, "Would you bring me a little water in a jar so I may have a drink". As she was going to get it, he called, "And bring me, please, a piece of bread."
"As surely as the LORD your God lives," she replied, "I don't have any bread—only a handful of flour in a jar and a little oil in a jug. I am gathering a few sticks to take home and make a meal for myself and my son, that we may eat it—and die."
Elijah said to her, "Don't be afraid. Go home and do as you have said. But first make a small cake of bread for me from what you have and bring it to me, and then make something for yourself and your son. For this is what the LORD, the God of Israel, says: 'The jar of flour will not be used up and the jug of oil will not run dry until the day the LORD gives rain on the land.'"
She went away and did as Elijah had told her. So there was food every day for Elijah and for the woman and her family. For the jar of flour was not used up and the jug of oil did not run dry, in keeping with the word of the LORD spoken by Elijah.


Mark 12:41-44
The Widow's Offering
Jesus sat down opposite the place where the offerings were put and watched the crowd putting their money into the temple treasury. Many rich people threw in large amounts. But a poor widow came and put in two very small copper coins, worth only a fraction of a penny.
Calling his disciples to him, Jesus said, "I tell you the truth, this poor widow has put more into the treasury than all the others. They all gave out of their wealth; but she, out of her poverty, put in everything—all she had to live on."


Let’s meet the widow from Zarephath. She and her son live in misery - absolute misery. “I am gathering a few sticks to take home and make a meal for myself and my son, that we may eat it—and die.” These are the words that come out of this lady. This is a death sentence. What else can she do? All avenues to life have been closed to her and her son. She was gathering sticks to prepare their last meal… She wanted to go out in style! As she and her son are inching towards the portals of death, the Lord intervenes in her life through Elijah. What an intervention! Elijah comes to add more trouble to her life. He asks for water, first. But, as she was going to get it, he drops a bomb… “And bring me, please, a piece of bread.” Oh, Elijah, for God’s sake, be serious! Please don’t make fun of a desperate person like this widow. To this seemingly ridiculous request of Elijah, the lady comes out with her famous statement of purpose – the purpose to die! And she makes this statement in the name of the living God.
This seemingly insensitive taunt of Elijah turns into a blessing. But, I am not sure whether the lady understood all that the prophet was saying in terms of the future. Future is for those who have a lot in the present. She had nothing at present and therefore no future. She did not probably pay attention to most of what the Elijah was saying. She had already decided to help the prophet. Having faced starvation so many days in her life, she is very sensitive to any one who is famished and the prophet looked like one of them. Even if there is no miracle as the prophet was promising, she would help satisfy his hunger to some extent.
This, my friends, is the heart of the poor. Having gone through hell in their lives, they try their best to create little heavens where there is a chance, whenever there is a chance. The widow’s effort to feed the prophet ahead of her son or her own self is rewarded with a miracle. “So there was food every day for Elijah and for the woman and her family. For the jar of flour was not used up and the jug of oil did not run dry, in keeping with the word of the LORD spoken by Elijah.” She lived ever after happily… feeding hundreds of those who were hungry!
The widow of Zarephath had given all that she had at the word of the prophet. The widow mentioned in the Gospel does the same. According to Jesus, “She, out of her poverty, put in everything—all she had to live on.” When we compare the contribution of the poor widow to that of the other rich persons, hers is NOTHING… But, such a comparison dealing only with numbers is wrong… The comparison should actually be in terms of what was left after the contribution. In the case of the rich, they gave ‘something’ to the temple… that contribution did not even pinch them. That is why the Gospel uses the term ‘they threw in large amounts.’ But, for the widow, after she had ‘put in the copper coins…’ she was left with nothing. She had not only put in what she had (her present) but also “put in everything—all she had to live on” (her future). She was left with NOTHING. That is what makes her offering invaluable and draws such a great compliment from Jesus.
What is more appealing in this case is that she did not even know that she was doing something so wonderful, specatacular. She did not stay back to enjoy the compliments of Jesus. She simply vanished from the scene. Such wonderful, complete gift… an oblation, a burnt offering… nothing left – just pure gift.
“Give till it hurts” are the words attributed to Blessed Mother Teresa. She, in her life, had set a standard for giving. May the good Lord give us a heart to learn from these two widows and from Blessed Mother Teresa at least the basics of total, unconditional ways of giving.

இன்று இரு கைம்பெண்களைப் பற்றி சிந்திக்க, அவர்கள் வழியே சில பாடங்களைக் கற்றுக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு. அரசர் நூலிலிருந்து ஒரு பகுதியையும், மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியையும் நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அரசர்கள் முதல் நூல் 17: 10-16
அந்நாட்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்ட வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அபப்மும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார். அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்.” எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது: கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார். அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை: கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.
மாற்கு நற்செய்தி 12: 41-44
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.

அரசர்கள் நூலில் எலியா என்ற இறைவாக்கினர் சந்திக்கும் கைம்பெண்ணை நாமும் சந்திப்போம். அவரைப் பற்றி சிந்திப்போம். அந்த கைம்பெண்ணும், அவரது மகனும் வாழ்ந்தது ஒரு அவலமான வாழ்க்கை. இன்றைய நமது உலகில், இந்தியாவில் வாழும்… (வாழும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு ரொம்பத் தயக்கமாக உள்ளது.) வாழ்வும் முடியாமல், சாகவும் முடியாமல், தினமும் போராடும் பலகோடி ஏழைகளின் பிரதிநிதிகள் இவர்கள். அடுத்தநாள் ஏன் விடிகிறது என்ற கேள்வியோடு, அல்லது அடுத்தநாள் விடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தோடு படுக்கச் செல்லும் கோடிக்கணக்கான ஏழைகளில் இவர்களும் அடங்குவர். விடிந்தால் தானே, தூக்கம் கலைந்து எழ வேண்டும்? விடிந்தால் தானே, அடுத்த நாள், அடுத்த வேளை உணவு தேவைப் படும்? விடியவில்லை என்றால், தூங்கிக்கொண்டே இருக்கலாம், ஒரு வேளை நல்ல வாழ்வு வரும் என்ற கனவாவது தூக்கத்தில் வரலாமே, வயிற்று பசியை மறக்க இந்தக் கனவுகள் உதவலாமே... இப்படி வாழும் கோடிக்கணக்கானோரை எண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பை நமக்குத் தருகிறது இன்றைய அருள்வாக்கு.
அரசர்கள் நூலின் ஒரு பகுதி இந்தக் கைம்பெண் வைத்திருந்த சொத்து விவரங்களைக் கொடுத்துள்ளது. “என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன.” ஒரு பானை, அதில் கையளவு மாவு, மற்றொரு கலயம் அதில் சிறிது எண்ணெய்... இவ்வளவு தான் இவரது சொத்து. இவற்றை வைத்து அன்றையப் பொழுதை முடிக்கலாம். அடுத்த நாள்? சாகத்தான் வேண்டும் என்று அவரே தீர்ப்பு எழுதிவிட்டார். சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்கள் இப்படி இருந்திருக்குமோ என்று நினைத்துப் பார்க்கிறேன். "கடவுளே, இன்னைக்கி செய்ற அப்பங்கள் ரெண்டு பேருக்கும் போதாதுன்னு நினைக்கிறேன். பாவம் என் பையன். அவன் வயிறாரச் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு? எனக்கு ஒன்னும் கிடைக்கதேன்னு நினச்சு அவன் பட்டினி கிடக்கிறான். இன்னக்கி ஏதாவது பொய்யைச் சொல்லி அவனைச் சாப்பிட வெச்சிட்டு அப்புறம் ஏதாவது மிச்சம் இருந்தா, நான் சாப்பிட்டுகிறேன். என்பையனை இன்னக்கி நல்லா சாப்பிட வைக்க ஏதாவது வழியக் காட்டு ஆண்டவனே..." இப்படிக் கடவுளோடு பேசிக்கொண்டே சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அந்த கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுகிறார்.
எலியா என்ற இறை வாக்கினர் வழியாகக் கடவுள் வருகிறார். சும்மா வரவில்லை. ஒரு பிரச்சனையைக் கொண்டு வருகிறார். அந்த பெண்ணின் உணவில் பங்கு கேட்டு வருகிறார். கொடூரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவரது வயிற்றில் அடிக்க வருகிறார். முதலில் எதேச்சையாகத் தண்ணீர் மட்டும் கேட்கும் எலியா, அந்தப் பெண் போகும் போது, 'கொஞ்சம் அப்பமும் கொண்டு வா' என்கிறார். ஏதோ அந்தப் பெண் வீட்டில் அப்பங்களைச் சுட்டு அடுக்கி வைத்திருப்பது போலவும், அவைகளில் ஒன்றிரண்டைக் கொண்டு வா என்பது போலவும் உள்ளது எலியாவின் கூற்று. மேலோட்டமாகப் பார்த்தால், எலியா அவரைக் கேலி செய்வது போலவும் தோன்றுகிறது.
ஆனால் அது கேலி அல்ல, ஒரு மறைமுக அழைப்பு. கடவுள் புதுமைகள் செய்வதைக் காண்பதற்கு ஒரு அழைப்பு. “எனக்குக் கொஞ்சம் அபப்மும் கையோடு கொண்டு வருவாயா?” என்று அந்தக் கைம்பெண்ணுக்கு இப்படி ஒரு அழைப்பை மறைமுகமாகத் தருகிறார். அந்த அழைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை அந்தப் பெண்ணுக்கு. தன் பசி, அதைவிட தன் மகனின் பசி இவையே அவரது மனதை ஆக்ரமித்ததால், தன் இயலாமையை, விரக்தியை இவ்வார்த்தைகளில் கூறுகிறார். “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்.” மனதை உலுக்கும் வகையில் அந்தப் பெண் சொன்ன மரண அறிக்கையைக் கேட்ட பின்னர் எலியா அவரிடம் இறைவன் செய்யக்கூடிய அற்புதங்களைச் சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கு அவர் சொன்னதெல்லாம் விளங்கியதோ இல்லையோ, "அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார்" என்று இறைவாக்கு கூறுகிறது.
அன்பர்களே, அந்தப் பெண் எலியாவை முன்பின் பார்த்தது கிடையாது... இந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். "இன்னைக்கி என் மகனும், நானும் சாப்பிட்டா, இன்னும் ரெண்டு நாள் உயிரோட இருப்போம். அதுக்கப்புறம் சாகத்தான் வேண்டும். சாகுறதுக்கு முன்னால இன்னொரு மனுஷனுடைய பசியை தீர்த்துட்டு சாகலாமே... பாவம், அந்த மனுஷன்."
புதுமை நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அந்த ஏழை கைம்பெண் எலியாவுக்கு அப்பம் சுட்டு தந்திருக்கலாம். ஆனால், அதைவிட, மேலாக தனது இயலாமையிலும், வறுமையிலும் பசியிலும் இன்னொரு மனிதரின் பசியைப் போக்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்திருக்க வேண்டும். ஏழைகளின் மனம் அப்படிப்பட்டது. அவர்களுக்குத்தான் தாழ்வதென்றால், தவிப்பதென்றால், பசிப்பதேன்றால் என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். அவர்களுக்குத் தான் தங்களிடம் உள்ளத்தைப் பகிர்ந்து பசியைப் போக்கும் புதுமை செய்யத் தெரியும். மற்றவர்களின் தேவைகள், துன்பங்கள் இவற்றைத் துடைப்பதையே பெரிதாக எண்ணும் மனம் அவர்களது...
அந்தக் கைம்பெண் அந்த இரண்டு மூன்று அப்பங்களைச் சுடும் போது, அடுத்த நாள் பற்றி கூட நினைக்காமல் தன்னிடம் இருந்த மாவனைத்தும் சுத்தமாய் துடைத்து எடுத்து நல்ல காரியம் செய்கிறார். நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணும் இதையே செய்கிறார். இயேசு அந்தப் பெண்ணைப்பற்றி கூறும் வார்த்தைகள் ஆழமானவை: “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல். கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று இப்படி செய்தாரா? அந்தக் கண்ணோட்டம் வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் நீ இவ்வளவு தா என்ற பேரம்... இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் தந்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை. கட்டடங்களிலும், கற்களிலும், போஸ்டர்களிலும் பெயர்களைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக நல்லது செய்வது ஏழைகளின் அழகு. இதற்கு நேர் மாறாக, அங்கு காணிக்கை செலுத்த வந்த மற்ற செல்வந்தர்கள். அவர்கள் செலுத்திய காணிக்கைகளோடு இந்தக் கைம்பெண்ணின் காணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால்?.... கொஞ்சம் பொறுங்கள்… எந்த வகையில் ஒப்பிடப் போகிறோம்? எவ்வளவு போட்டார்கள் என்று அளந்தால், செல்வந்தர்கள் போட்டது ஒருவேளை 1000 ரூபாய் என்றால், இந்த ஏழை போட்டது... 50 காசுகள். ஆனால், அது கணக்கல்ல. எவ்வளவு போட்டார்கள் என்பதை விட, காணிக்கை செலுத்திய பின் அவர்களிடம் என்ன மீதி இருந்தது என்பது தான் காணிக்கையின் மதிப்பைக் காட்டும். காணிக்கையின் மதிப்பைக் கூட்டும். இதைதான் ஏசுவும் கூறுகிறார். “இந்த ஏழைக் கைம்பெண்... தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்”
இதைத் தான், அன்னை தெரசா இன்னொரு வகையில் சொல்வார்: "Give till it hurts " "கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." அல்லது, "கொடுங்கள், உங்கள் உடலை வருத்திக் கொடுங்கள்." என்று. நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் தந்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.
கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது எதையும் எதிபார்க்காமல், நம் உடலை, வாழ்வை வருத்தி தர வேண்டும். அதுவே மேலான காணிக்கை. இதைச் இன்றைய இறைவாக்கு வழியேச் சொல்லித்தந்த இரு கைம்பெண்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

GIVE WITHOUT SEEKING ATTENTION… மாலைகளைத் தேடாமல், கொடு...

Luke’s gospel has given proper credit to those who have been neglected by the Jewish community – tax collectors, sinners, sick persons, women (especially, widows) etc. Luke’s special affinity to Our Lady has made him give such a wonderful account of Maria in the infancy narrative. The same respect is carried over when he speaks of women throughout his gospel. Today we pay special attention to two miracles of Jesus – both of them involve ladies, a widow and a sick woman. Here are the gospel passages of these two incidents.

Luke: 7/11-17 Raising a Widow’s Son
Soon afterward Jesus went to a town called Nain, and his disciples and a large crowd went with him. As he approached the town gate, a man who had died was being carried out, the only son of his mother (who was a widow), and a large crowd from the town was with her. When the Lord saw her, he had compassion for her and said to her, “Do not weep.” Then he came up and touched the bier, and those who carried it stood still. He said, “Young man, I say to you, get up!” So the dead man sat up and began to speak, and Jesus gave him back to his mother. Fear seized them all, and they began to glorify God, saying, “A great prophet has appeared among us!” and “God has come to help his people!” This report about Jesus circulated throughout Judea and all the surrounding country.
Luke: 13/10-13 Healing on the Sabbath
Now he was teaching in one of the synagogues on the Sabbath, and a woman was there who had been disabled by a spirit for eighteen years. She was bent over and could not straighten herself up completely. When Jesus saw her, he called her to him and said, “Woman, you are freed from your infirmity.” Then he placed his hands on her, and immediately she straightened up and praised God.

What made me take these two together is the point that Jesus performs these two miracles un-asked-for. Luke has recorded 17 miracles in his gospel. 11 of them are performed when the sick person or someone on behalf of the sick person makes the request. The rest, 6 of them, are performed without a requisition. Four of these (including the one we have taken for our reflection today – Luke 13) are performed on Sabbath day… just to prove a point to the religious big-wigs that human beings are more precious than the Sabbath regulation. The fifth one is about the lady with the issue of blood. She, of course, had not made a verbal request, but she came with a request in her heart. Since Jesus had already tuned his heart to hers, the miracle happened. The sixth one is for the widow of Nain. In all these six instances, Jesus performs the miracles without anyone asking for them.
Receiving something without asking for it, makes it a gift. I am sure all of us have enjoyed the thrill of having received such ‘gifts’. I am also sure all of us have enjoyed the thrill of giving such ‘gifts’. There is more joy in giving than in receiving – a clichéd statement perhaps, but one that makes lots of sense to those who have gone through such an experience.
I cannot help but think of two aberrations when talking of giving and receiving: The first one is about our petty leaders who make such a fuss when they ‘give’… Trumpets blow; ligts flash incessantly… sickening, to say the least! The other aberration is the long queues of people trying to receive something from the government. I have read quite a few news items that talk about how some of them get their requests granted long after they are dead and gone.
Let’s keep aside aberrations and come back to Jesus. He gives in both these instances and makes it look so simple. I am sure the widow of Nain was overjoyed to see her son alive. By the time she came to her senses and wanted to thank the one who had done this, He was gone! Similarly, the lady who was bent over… Probably by the time she straightened up, He was gone! That is the power and beauty of selfless giving.
The other point to consider here is the plight of women, especially, widows and sick women. So much can be said about these. I shall leave this task to each one of you!

கேட்காமல் கொடுக்கப்படும் உதவிகள், பெண்கள் சந்திக்கும் சவால்கள் இவைகளைப் பற்றி சிந்திப்போம். லூக்கா நற்செய்தி யூத சமுதாயத்தில் பலவகைகளிலும் தாழ்ந்தவர்களென கருதப்பட்ட ஆயக்காரர்கள், பாவிகள், நோயாளிகள், பெண்கள், விதவைகள் என்று பலரையும் மதித்து, சமுதாயத்தில் அவர்களுக்குரிய இடத்தைத் தரும் வகையில் எழுதப்பட்டுள்ள ஒரு நற்செய்தி. லூக்கா மரியன்னையின் மேல் தனி அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால் அவருக்கென்று தன் நற்செய்தியில் தனி இடம் கொடுத்திருந்தார். அதேபோல், இந்த நற்செய்தியில் புதுமைகள், உவமைகள், இன்னும் மற்ற சம்பவங்களில் பெண்களுக்குத் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய இரு புதுமைகளை சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
நயீன் நகர விதவையின் ஒரே மகனை உயிர்பித்தது, கூன் விழுந்தப் பெண்ணைக் குணமாக்கியது. இவ்விரு நிகழ்வுகளையும் கூறும் நற்செய்திகள் இதோ:

லூக்கா நற்செய்தி 7: 11-16
அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார்.இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.


லூக்கா நற்செய்தி 13 : 10-13
ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.11 பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.12 இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, ' அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர் ' என்று கூறி,13 தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இந்த இரு புதுமைகளில் முதலில் மனதில் படும் ஒரு சிறப்பு அம்சம் - இரு புதுமைகளிலும் இயேசு தானாக முன்வந்து இந்தப் புதுமைகளைச் செய்கிறார். லூக்கா நற்செய்தியில் இயேசு நலம் நல்கும் புதுமைகள் 17 காணக் கிடக்கின்றன. அவற்றில் 11 புதுமைகளில் நோயுற்றோர் அல்லது அவர் சார்பாக வேறொருவர் விண்ணப்பிக்கும் போது இயேசு குணமளிக்கிறார். மீதம் ஆறு புதுமைகளில், மூன்று புதுமைகள் சச்சரவான சூழ்நிலையில் நிகழ்கின்றன. இயேசுவுக்கும் பிற மதத் தலைவர்களுக்கும் நடக்கும் போராட்டங்களில் ஒன்று அவர் ஒய்வு நாளில் குணமாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு. இந்தப் பிரச்சனைக்கு மத்தியில், இயேசு மூவரை அவர்கள் கேட்காமலேயேக் குணமாக்குகிறார். (லூக்கா6:6-11, 11:14-15, 14:1-16) ஒய்வு நாளைப் பற்றி மக்களும் மதத்தலைவர்களும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென இயேசு இந்தப் புதுமைகளைச் செய்வதுபோல் தெரிகிறது.
நான்காவது புதுமையில் நாம் ஏற்கனவே சிந்தித்தது போல், ரத்தக் கசிவுள்ள பெண் கூட்டத்தில் யாரும் அறியாமல் குணம் பெற விரும்பி, இயேசுவின் ஆடைகளின் விளிம்பைத் தொட்டார். விண்ணப்பங்கள் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட புதுமைகள் இந்த நான்கும். இவைகளைப் போல்தாம் இன்றையப் புதுமைகளும். நயீன் நகர விதவை, கூன் விழுந்த பெண் (இதுவும் ஒரு ஓய்வுநாள் புதுமை) ஆகிய இருவரின் வாழ்க்கைப் பிரச்சனைகளை, அவர்கள் சந்தித்த போராட்டங்களை நன்கு உணர்ந்த இயேசு இப்புதுமைகளை எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி செய்கிறார்.
குறிப்பறிந்து செயல் படுவதைப் பற்றி சிந்திக்கலாம். உதவிகள் தருவதிலும், பெறுவதிலும் பல வகைகள். உதவி தேவை என்று ஒருவரிடம் கூறும் போது, அல்லது விண்ணப்பிக்கும் போது அந்த உதவியைத் தருவதிலும், பெறுவதிலும் ஒரு தனி நிறைவு கிடைக்கும். ஆனால் அதைவிட மேலான ஒருநிலை உண்டு. நமது கவலைகளை யாரிடம் சொல்வது, சொன்னாலும் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று கவலையிலும், விரக்தியிலும் நாம் இருந்த போது, நம் நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ நம் மனதை அறிந்தவர்கள் போல், நம் கவலைகளுக்குத் தீர்வுகள் சொல்லும் போது, அல்லது அந்தக் கவலைகளைத் தீர்த்து வைக்கும் போது, நாம் ஆனந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறோம், இல்லையா? செய்கின்ற உதவிகளைப் படம் பிடித்து, போஸ்டர் ஒட்டி, கட் அவுட் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, இப்படி நண்பர்களோ, அல்லது முன்பின் தெரியாதவர்களோ உதவிகள் செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும் போது, எதோ அந்த இறைவனே இவர்கள் வடிவில் வந்து போனது போல் நாம் உணர்ந்ததில்லையா? அந்த நிலைதான் இந்தப் புதுமையிலும். “கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டு கொடுக்கும்” என்பதைக் கேள்விபட்டிருக்கிறோம்.
தருவதையும், பெறுவதையும் பற்றி பேசும் போது ஒரு நெருடலான எண்ணமும் மனதில் தோன்றுகிறது. அரசிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க நாள் முழுவதும் வெயிலில் நின்று விண்ணப்பத்தை அரசிடம் சமர்ப்பித்து விட்டு வந்து, மாதங்கள் பலவாக, சில சமயங்களில் ஆண்டுகள் பலவாகக் காத்திருந்தும் ஒரு பயனும் இல்லாமல், தினம் தினம் அரசின் கதவுகளைத் தட்டி, தட்டி கையும், மனமும் ஓய்ந்து போகும் ஏழைகளை நினைத்துப் பார்க்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்னால், விவிலியத் தேடலில் இரத்தக் கசிவு நோயுள்ள ஒரு பெண்ணை இயேசு குணமாக்கிய புதுமையைச் சிந்தித்தோம். அப்போது, இயேசு அந்தப் பெண்ணைக் காட்டிலும், அவரைச் சுற்றியிருந்த கூட்டத்தை எப்படி குணமாக்கினார் என்ற கோணத்தில் அந்தப் புதுமையைச் சிந்தித்தோம். இன்று இப்புதுமைகளில் இரு வேறு பெண்களைப் பற்றி சிந்திக்க நமக்கு ஒரு அழைப்பு.
முதலில், நயீன் விதவையைப் பற்றி சிந்திப்போம். யூதர் குலத்தில் பொதுவாகவே பெண்கள் இரண்டாம் நிலை குடிமக்கள். அதிலும் விதவைகள் இன்னும் பரிதாபமான நிலை வகிப்பவர்கள். இன்றும் நம் நாட்டில் இந்த நிலைதானே. நல்ல காரியம் நடக்கும் வேளையில், அங்கு விதவைகளுக்கு இடமில்லை, அப்படியே அங்கு வந்தாலும், அவர்கள் ஒதுங்கி நிற்க வேண்டும். இது போன்ற நியதிகள் இன்னும் நம் பழக்கத்தில் இல்லையா?
நயீன் விதவைக்கு இருந்ததோ ஒரே மகன். அவனும் இளைஞன். அவனை அந்தத் தாய் எவ்வளவு அன்போடு, நம்பிக்கையோடு வளர்த்திருக்க வேண்டும். தனி ஒரு பெண்ணாய் பிள்ளைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது நாம் வாழும் இக்காலத்தில் நம் கண்ணால் காணும் ஒரு எதார்த்தம். இத்தனைச் சவால்களையும், பயங்கரமான சூழல்களையும் சமாளித்து அந்த விதவை வளர்த்த அந்த நம்பிக்கை இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார்.
தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான் பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளைச் சாகும் நிலையில் இருக்கும் போது, எத்தனை பெற்றோர் அந்த பிள்ளைக்குப் பதிலாகத் தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நயீன் விதவையும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அந்த பெண் இருந்த நிலையை இயேசு உணர்ந்திருந்தார். ஒரு வேளை மகனது அடக்கத்தை முடித்து விட்டு, தன் வாழ்வையும் முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக அந்த சவ ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த விதவையின் நிலையை இயேசு நன்கு உணர்ந்தவராய், அந்த பெண்ணைக் கேட்காமலேயே இறந்த மகனை உயிர்ப்பிக்கிறார். மகனை மட்டும் அல்ல, அந்தத் தாய்க்கும் மறு வாழ்வு தருகிறார்.
விதவைகளின் மறு வாழ்வு பற்றி மதங்களும், பிற சமூக சேவை நிறுவனங்களும் பேசுகின்றன. ஆனால், நடைமுறையில் இன்றும் விதவைகள் சந்திக்கும் பல போராட்டங்கள் தீரவில்லை. கணவனை இழந்த இவர்கள் மேலும் சமுதாயத்தால் தங்கள் மதிப்பையும் இழப்பது நியாயமற்ற செயல். நயீன் பெண்ணுக்கு மறுவாழ்வு தந்த இயேசு நாம் வாழும் சமுதாயத்திலும் விதவைகளைப் பேணி காக்கும், மதித்து வாழும் மனதை நமக்கு தர வேண்டுவோம்.

அடுத்ததாக, கூன் விழுந்த பெண். நற்செய்தி இவரைப் பற்றி சொல்லும் இரு குறிப்புகள் இவை: 18 ஆண்டுகளாய் இந்த நோயினால் கட்டுண்ட பெண். தொழுகைக்கூடத்தில் இருந்த பெண். இவைகளைப் பார்க்கும் போது, ஒரு சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. 18 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு வேளை எதாவது ஒரு குடும்பத்தில் இருந்த இப்பெண், அவரது நோய் காரணமாக குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும். சமுதாயத்தால் பல வகைகளில் குட்டப்பட்டு, குனிந்து குள்ளமாய்ப் போன சக்கேயுவைப் பற்றி ஒரு சில வாரங்களுக்கு முன்னால் சிந்தித்தோம். அதே போல் தன் குடும்பமும் சமூகமும் அவர் மீது சுமத்திய பழிச் சொற்களால், கூனிக் குறுகி வாழத் தொடங்கிய இந்தப் பெண்ணின் உடலில் கூன் விழுந்து போனது. யூதர்களின் தொழுகைக் கூடங்களில் பெண்கள் தங்குவது அரிது. ஊரே ஒதுக்கி வைத்த பின், யார் கதி? கடவுளே கதி என்று தொழுகைக் கூடத்தில் தஞ்சம் புகுகின்றார். நோயுற்றோரையும், முதியோரையும் ஒதுக்கி வைக்கும் நமது இன்றைய சமூகத்தை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அக்டோபர் மாதத்தில் வயதானோருக்கென ஒரு நாளை ஒதுக்கி வைக்கிறோம். நாளை மட்டும் ஒதுக்கினால் பரவாயில்லை. ஆளையே ஒதுக்கி விட்டால்?
அன்புள்ளங்களே, இன்றையப் புதுமைகள் வழியாக ஒரு சில பாடங்கள்:
கேட்காமலே தருகின்ற பெரிய மனதை இறைவன் தர வேண்டுவோம்.பெண்கள், அதிலும் சிறப்பாக நலமிழந்த, கணவன் என்ற உறவிழந்த பெண்கள், வயதில் முதிர்ந்த பெண்கள்... எல்லாரையும் நமது சமுதாயம் பேணி காக்க வேண்டுமென மன்றடுவோம்.