11 April, 2010

Thank you, Thomas… சந்தேகம்... தோமாவின் தனி சொத்தல்ல.


The Incredulity of Saint Thomas
is a painting by the Italian Baroque master Caravaggio
c.1601-1602.


Any Tom, Dick and Harry, the moment he/she begins to doubt, becomes only a Tom. Doubting Tom. Unfortunately, Tom seems to hold a monopoly over one of the most common human experiences called doubting. Kindly spare a thought for Tom, I mean St Thomas, the Apostle. He was not the only one to doubt the Resurrection of Jesus. All the disciples were shrouded in a cloud of doubt and fear. Only Thomas verbalised their collective doubt. “Unless I see…” This Sunday’s Liturgy focuses on the encounter of Thomas with Jesus. Here is the Gospel passage:

John 20:19-29
On the evening of that first day of the week, when the disciples were together, with the doors locked for fear of the Jews, Jesus came and stood among them and said, "Peace be with you!" After he said this, he showed them his hands and side. The disciples were overjoyed when they saw the Lord.
Again Jesus said, "Peace be with you! As the Father has sent me, I am sending you." And with that he breathed on them and said, "Receive the Holy Spirit. If you forgive anyone his sins, they are forgiven; if you do not forgive them, they are not forgiven."
Now Thomas (called Didymus), one of the Twelve, was not with the disciples when Jesus came. So the other disciples told him, "We have seen the Lord!" But he said to them, "Unless I see the nail marks in his hands and put my finger where the nails were, and put my hand into his side, I will not believe it."
A week later his disciples were in the house again, and Thomas was with them. Though the doors were locked, Jesus came and stood among them and said, "Peace be with you!" Then he said to Thomas, "Put your finger here; see my hands. Reach out your hand and put it into my side. Stop doubting and believe."
Thomas said to him, "My Lord and my God!"
Then Jesus told him, "Because you have seen me, you have believed; blessed are those who have not seen and yet have believed."


John’s Gospel glides over the fact that the other disciples doubted too. Luke’s Gospel makes it more explicit.
Luke 24: 36-39
While they were still talking about this, Jesus himself stood among them and said to them, "Peace be with you." They were startled and frightened, thinking they saw a ghost. He said to them, "Why are you troubled, and why do doubts rise in your minds? Look at my hands and my feet. It is I myself! Touch me and see; a ghost does not have flesh and bones, as you see I have."

Both Luke and John talk of Jesus showing them his hands, feet and side. He also invited them to touch Him. If these disciples (sans Thomas) simply accepted Jesus’ Resurrection, then this invitation to ‘touch and see’ was un-called-for. Jesus must have seen the doubt in their eyes, although they did not speak out. Only our poor Tom seems to have spoken out. For our reflection, we shall consider all the disciples as ‘doubting Thomases’.

Some of us may have already taken the judgement seat trying to pronounce our judgement on Thomas: “What a pity! After having lived with Jesus so closely for three years, this guy still doubted Jesus!” Well, after having listened to hundreds of treatises on Resurrection, I still have my moments of hesitation. How can I judge Thomas, who came from the Jewish background where the idea of Resurrection was not that strong?

If I were present in Jerusalem on the last few days of Jesus’ life, I would have had more doubts than Thomas, especially after having seen those last few hours on Calvary. So, I dare not take the judgement seat. Let me see whether I can stand along with the ‘accused’ Thomas and the other disciples and try to see this incident from their perspective.

The disciples left their trade, their parents, their everything... to follow Jesus. In those three years, Jesus became everything to them. He was their world. This world was brutally uprooted and nailed to the cross. The vacuum created by the absence of Jesus was filled by doubts and fear. Their doubts were very real. One of them betrayed him and another denied him. They could no longer believe in one another, neither could they believe in themselves. The way most of them ran away from the scene of the arrest of Jesus was still very raw. Probably most of them did not even attend the funeral of Jesus, since they were already buried in their own fears and worries. They decided to lock themselves up and wait for the inevitable… the certainty of their own execution by the Romans. They had already built their tomb in the upper room.

Jesus did not want his loved ones see decay. He wanted to open their graves and bring them alive. Hence, He entered their ‘tomb’ and stood among them. How did He come in? All the doors were locked… then, how could He? That was and, still, is the beauty of Jesus. The God of surprises! From his birth, He had surprised the Jewish world. It was the trademark of Jesus to defy expectations. He had done it once again.

Surprise and the sense of wonder are part of the world of a child… not that of an adult since the adult world is governed more by ‘safe’ logic and intellectual assumptions. In this adult world two and two is ALWAYS four. In a child’s world two and two can sometimes be FIVE! Jesus wanted to bring in such ‘high-fives’ into the world of the disciples.

Thomas was an adult all right. Unfortunately, he went a bit far. He was still smarting from the pain of the last few days and hence he did not want to believe the ‘stories’ of his companions. They too had been hallucinating like the women who went to the tomb, he thought. He wanted solid proof, tangible proof that can be seen and touched. “Unless I see… and touch…” he demanded. He got more than he asked for.

When Jesus offered him this solid proof, Thomas became a child again. We are not sure whether Thomas went the full distance of his verification process, meaning, whether he touched Jesus at all. The Gospel of John is silent on this. But, this Gospel is loud and clear about the profession of faith that Thomas made: “My Lord and my God!”. Thomas was the first human being to call Jesus by the title ‘God’. This was indeed a ‘child-like giant leap’ for a proof-seeking adult!

We are thankful to Thomas for being absent the first time when Jesus appeared to the other disciple. Otherwise such a lovely encounter would not have taken place. We are more thankful to Thomas since his doubt brought out one more ‘beatitude’ from Jesus – a beatitude addressed to all of us: “Blessed are those who have not seen and yet have believed."

Thank you, my Lord and my God! Thank you, Thomas!
Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.

ஏப்ரல் 11, நாளுமொரு நல்லெண்ணம்
முட்புதர் ஒன்றில் தேள் ஒன்று மாட்டிக் கொண்டது. வெளியே வர முடியவில்லை. அதைப் பார்த்த ஒரு துறவி அந்தத் தேளை விடுவிக்க முயன்றார். தேள் அருகில் அவர் கை சென்றதும் தேள் அவரைக் கொட்டியது. முட்புதரும் அவர் கையைப் பதம் பார்த்தது. இருந்தாலும் அந்தத் துறவி தேளை விடுவிக்க மீண்டும் மீண்டும் முயன்றார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் பொறுமை இழந்தார். அத்துறவியிடம், "உமக்குக் கொஞ்சமும் மூளை இல்லையா? அந்தத் தேள்தான் உம்மைக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே. ஏன் அதை விடுவிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, "கொட்டுவது தேளின் குணம். அதை மாற்ற முடியாது. அதற்குப் பயந்து, கஷ்டப்படும் ஒரு ஜீவனைக் காப்பாற்றும் என் குணத்தை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?" என்று பதில் கேள்வி கேட்டார்.
மனிதர்களின் மிருகக் குணத்திற்குப் பயந்து, நம்மில் உறைந்திருக்கும் தெய்வீகத்தை நாம் மறைக்க வேண்டுமா? மறக்க வேண்டுமா?

ஞாயிறு சிந்தனை

"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு... எல்லாமே பயமயம்." என்று தமிழ் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவையாகப் பேசுவார் அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களைச் சந்திக்கும் மனிதர் அவர். பயம், சோகம், கோபம் என்று உணர்வுகளின் ஆதிக்கத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை நாம் செலவழிக்கிறோம். செலவழிக்கிறோம் என்பதை விட, வீணடிக்கிறோம், அல்லது தொலைத்து விடுகிறோம் என்று கூடச் சொல்லலாம்.
மனித உணர்வுகளுக்கு நான் எதிரி அல்ல. அவை நம் வாழ்வுக்கு மிகவும் அவசியம். ஆனால், இந்த உணர்வுகளை நாம் ஆள்வதற்குப் பதில், உணர்வுகள் நம்மை ஆள விட்டு விடும் போது, வாழ்க்கையைத் தொலைக்க வாய்ப்புண்டு. இப்படி நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஓர் உணர்வா என்று கூட உங்களில் சிலர் சந்தேகப்படலாம். நான் அதை ஒரு கூட்டு உணர்வு என்று சொல்வேன். சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம் என்று கூட்டுக் குடித்தனம் மனதில் ஏற்படும்.

சந்தேகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர் தோமையார் என்று அழைக்கப்படும் தோமா. உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அப்படி சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.
தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு." என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறுவது எளிது.

இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவ பாரம்பரியத்தில் ஒருவனாய் இன்று வாழும் நானோ நீங்களோ அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாறுகிறோம். அப்படியிருக்க, இத்தனை விளக்கங்கள் இல்லாத, அதுவும் உயிர்ப்பு பற்றிய எண்ணங்களே தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.
கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம்.
ஆகவே, தீர்ப்புகளை எழுத பேனாக்களைத் திறந்து வைத்திருந்தால், அவைகளை மூடிவிட்டு, முதலில் அந்த நீதி இருக்கைகளிலிருந்து எழுந்து வாருங்கள். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த சம்பவத்தைப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியைக் கேட்போம்.

யோவான் 20: 19-29 (சுருக்கமான வாசகம்)
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.

இப்போது வாசித்த நற்செய்தியின் முதல் பகுதியைக் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை. எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும்.
யூதர்களுக்குப் பயந்து சீடர்கள் கதவு சன்னல் எல்லாவற்றையும் மூடி வைத்திருந்த அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றார். மூடியிருந்த கதவு காற்றில் லேசாக ஆடினாலும், கதவை யாரோ தட்டுவது போலவும், தங்களைத் தாக்க யாரோ வந்துவிட்டது போலவும் சந்தேகத்தில், அச்சத்தில் வாழ்ந்தனர் அந்தச் சீடர்கள். அந்தச் சூழலில், கதவு மூடியபடி இருக்க, இயேசு அவர்கள் முன் நின்றபோது, அவர்கள் மகிழ்ந்திருப்பார்களா? சந்தேகம் தான். அரண்டு போயிருப்பார்கள். யோவான் நற்செய்தியில் சீடர்கள் பயந்ததாய்க் குறிப்பிடவில்லை ஆனால், இதை லூக்கா நற்செய்தி அப்பட்டமாகக் கூறுகிறது.

லூக்கா 24: 36-39
சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்.

லூக்கா, யோவான் என்ற இரண்டு நற்செய்திகளிலும் இயேசு அவர்களுக்குத் தன் கையையும், விலாவையும் காட்டினார் என்றும், தன்னைத் தொட்டுப் பார்க்க அழைத்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இயேசு வந்து நின்றதும் அவரைச் சீடர்கள் மகிழ்வாய் வணங்கித் தொழுதிருந்தால், இயேசு அவர்களிடம் தன்னை வந்து தொடும்படி அழைப்பு விடுத்திருக்க மாட்டார். இல்லையா? அவர்கள் கண்களில் அந்த சந்தேகம் தெரிந்ததால், இயேசு இந்த அன்பு அழைப்பைத் தந்தார்.
இயேசுவிடம் கேட்க முடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத் தான் தோமா வாய் விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில் பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், தங்கள் பெற்றோர் எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்த சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக் கோட்டைகள் தரை மட்டமாக்கப்பட்டன.
எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்து விட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச் சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பி விட்டன. யாரையும், எதையும் சந்தேகப் பட்டனர். தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்தது அவர்களது சந்தேகத்தை இன்னும் அதிகமாக்கியது. இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது.
சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்து விட்டனர் சீடர்கள். அந்த கல்வாரிக்குப் பின், சிலுவைக்குப் பின் ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்துவிட்டனர். இன்னும் ஏதாவது மீதம் இருக்கிறதென்றால், அது தங்கள் அழிவு மட்டுமே என்று அறிவுப் பூர்வமான ஒரு முடிவுக்கு வந்து விட்டனர்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த அந்த சீடர்களை இயேசு அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். இயேசு அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய சாத்தப்பட்ட கதவுகள் ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.
சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை அவர்களால் நம்ப முடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஒரு அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல். இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும் போது, சந்தேகம் எழும். அறிவு அந்தச் செயலை ஏற்க மறுக்கும்.
ஆனால், அறிவு சொல்வதை மட்டும் வைத்து வாழ்க்கை நடத்திவிட முடியாதே. இரண்டும் இரண்டும் நான்கு தான். ஆனால், சில சமயங்களில் இரண்டும் இரண்டும் ஐந்தாகலாம். இதைக் காண மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவு இங்கே உதவாது. எத்தனை முறை இது போன்ற ஒரு அனுபவம் நமக்கு இருந்திருக்கிறது!
நமது அறிவு ஒரு வழியில் சிந்திக்கும் போது, மனம்... ஆழ் மனம் வேறு வழியில், அறிவுக்கு முற்றிலும் மாறுபட்ட வழியில் சிந்தித்திருக்கிறதல்லவா? பல சமயங்களில் அறிவை விட மனம் சொல்வது மிக அழகானதாய், அற்புதமானதாய், உண்மையாய் இருந்திருக்கிறது. உண்மைதானே?

அறிவை மட்டும் நம்பி தங்கள் நம்பிக்கையை முழுவதும் இழந்திருந்த அந்தச் சீடர்களுக்கு, அந்த அறிவுப் பசிக்குத் தீனி கேட்கும் வகையில் தோமா “அவர் காயங்களில் நான் விரலை வைக்க வேண்டும்” என்று விதித்த நிபந்தனைக்கு விடையாக இயேசு சொன்னது இது: “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்… நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். (யோவான் 21: 27-29) இந்தச் சொற்களை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி வாழாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு."

தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" இயேசுவை கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, நம் தாயகத்திலும் பறை சாற்றினார் தோமா.

தோமா சந்தேகித்ததாய், சீடர்கள் சந்தேகித்ததாய் நாம் சிந்தித்த இந்த சம்பவம் ஒரு சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன. அறிவு சொல்வதை மட்டும் நம்பி வாழ்வது போதாது, மனம், ஆன்மா இவைகளின் குரலுக்கும் நாம் செவி சாய்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலர் குறித்து முடிவுகள் எடுக்கிறோம். ஒரு சில சமயங்களில் ஒருவர் பிறந்த இடம், குலம், அவர் செய்யும் தொழில் இவற்றின் அடிப்படையில் Prejudice என்று பொதுவாய் நாம் அழைக்கும் பல முற்சார்பு எண்ணங்களால் முடிவுகள் எடுத்து, மனக்கதவுகளை மூடி வைத்து விடுகிறோம்.
அந்த நேரங்களில் மூடிய மனக்கதவுகளை உடைத்து விட்டு, நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அந்த ஒரு சிலர் அல்லது மிகப் பலர் நம் முன் நிற்கும் போது, தொடர்ந்து அவர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், சந்தேகங்களை மூடி வைத்து விட்டு, மனங்களைத் திறந்து அவர்களைத் தொடும் பக்குவம் பெற முயல்வோம்.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள், அவர்கள் குறித்த நம் எண்ணங்களை மீறக் கூடியவர்கள் என்பதை இயேசுவும், மூடிய கதவுகளுக்குப் பின் வாழ்ந்து வந்த சீடர்களும், அவரைக் கடவுள் என்று அறிக்கையிட்ட தோமாவும் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.முற்சார்பு எண்ணங்களை உடைக்க, மூடப்பட்ட மனக் கதவுகளை நாம் திறக்க, அறிவை மட்டும் நம்பி வாழாமல், மனதை, இறைவனை நம்பி வாழ இறைஅருள் வேண்டுவோம்.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

07 April, 2010

The Book of Psalms – the Centre of the Bible… திருப்பாடல்கள் - அமுதசுரபி, வைரம், நமது மூச்சு...




This copy of "The Bay Psalm Book" is part of a collection of ancient books located in the US Library of Congress in Washington DC.




Looking at “this day that year” has become a job for me in the past six or seven months, after I joined the Vatican Radio. Looking at the world history gives some interesting starting points for my reflections. One such start was the Palm Sunday Tornado. Remember?
On April 7th 1506, St Francis Xavier was born and on April 7th 1541, his 35th birthday, he began his voyage to India. We are going on a voyage as we begin a new series of Bible Reflection – the Book of Psalms.
April 7 is also observed as the World Health Day since on this day in 1948 WHO (World Health Organisation) was established. The world constantly needs to take stock of its health. Bible, especially the Book of Psalms, can be of immense help to keep a sane mind and a healthy human life.

The Book of Psalms is probably the most frequently used book in our liturgy, common prayers etc. Almost everyday in our liturgy, we use the psalms as the responsorial. In the Divine Office recited by priests and religious, Psalms are used over and over again. Here is an interesting calculation! We know that all through the day Masses are said in different spots in the world… ‘from the rising of the sun to its setting’. The Divine Office is recited at least three times a day. Taking only these two factors – the Holy Mass and the Divine Office – into account, we can imagine Psalms – in the form of prayers and hymns – rising from the face of the earth 24 hours a day, 365 days! One can easily imagine Psalms as the life-breath of the Christian world.

Apart from these common practices, Psalms are used in the personal lives of people… in the different functions in the family, in prayer meetings, near the bedside of a sick person etc. Quite many of my friends use the Bible very often and it shows. A look at their Bible tells me that they use it more often than me. Among the different books of the Bible, the Book of Psalms and the New Testament are used more often than other books. Hence, in many editions of the New Testament, the Book of Psalms is also added.

The way we use the Bible, sometimes, may seem childish. I would rather call this child-like! I know many who, when faced with a difficult situation or an important decision, would take the Bible, close their eyes and open it at random. They would open their eyes and the verse that falls on their eyes would help them resolve the problem or help them take a decision. Childish? Child-like? Depends on how one thinks of the Word of God.
In such a practice, there are more chances of the Book of Psalms getting opened at random. How? In most editions of the Bible, the Book of Psalms is around the centre. Hence, this book, I am sure, gets opened most often and thus has helped people tide over many problems in their personal lives.

Once I got a mail from one of my friends with the title: The Centre of the Bible. Just type these words in your internet search and you will find about 11,900,000 results there. Really. Here is the gist of the very first result from http://www.eureka4you.com/fish/biblecentre.htm:

The centre of the Bible, and more importantly, the central truth of the Bible
Q. Which chapter is at the centre of the Bible? A. Psalm 118
Q. What is the central theme of the Bible? A. Psalm 118:8

The chapters in the Bible are not part of the original scriptures, but this exercise is still interesting.
Psalm 117 Is the shortest chapter in the Bible
Psalm 119 Is the longest chapter in the Bible
Psalm 118 This chapter is at the centre of the Bible
There are 594 chapters in the Bible before Psalm 118
There are 594 chapters in the Bible after Psalm 118
1188 chapters. This number can be split 118-8 or Psalm 118:8

Isn't it odd how this little word exercise worked out, or was God in the centre of it all? I think He was and still is today! Should this central verse not have a fairly important message? It does.
Psalm 118:8 "It is better to trust in the Lord than to put confidence in man."

A few years back I visited a convent during the Lent. The nuns there followed a lovely practice. After their morning prayers and the Eucharist, when they came for breakfast a box was passed among them. That box contained tiny cards with a verse from the Bible, mostly from the Psalms, printed on them. Each one picked a card. The verse found there guided their special prayer and, possibly, their action for the day.

I am sure there are hundred other ways in which the Book of Psalms is used in our daily life. We shall continue our voyage in the coming weeks and, hopefully, find many treasures in the Book of Psalms!




Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.




ஆழ் கடலில் முத்தேடுக்கச் செல்வோம் வாருங்கள் அன்பர்களே. விவிலியம் ஒரு பெருங்கடல் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை. இந்தக் கடலில் நாம் கண்டெடுத்த முத்துக்கள் பல. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி, விவிலியத் தேடலில் இயேசுவின் புதுமைகள் என்ற முத்துக்களையும், தவக்காலத்தில், இயேசு சிலுவையில் கூறிய அந்த ஏழு சொற்கள் என்ற முத்துக்களையும் கண்டெடுத்தோம். இந்த விவிலியத் தேடல் துவங்கி, இனி வரும் வாரங்களில் சங்கீதங்கள் என்று நாம் வழக்கமாகக் கூறும் திருப்பாடல்கள் நூலிலிருந்து முத்துக்களை எடுப்போம். தொடுப்போம்.



என் நண்பர் ஒருவரும் அவரது மனைவியும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்வர். பல ஜெபக் கூட்டங்களை முன்னின்று நடத்துவர். ஒவ்வொரு ஜெபக் கூட்டத்திற்கும் அவர்கள் தவறாமல் எடுத்துச் செல்வது அவர்களது விவிலியம். அவர்களிடம் இருந்த விவிலியத்தைக் கண்டு நான் வியந்ததுண்டு. அந்த இரு விவிலியங்களும் கொஞ்சம் அழுக்காய், ஓரங்கள் மடிந்து, ஒரு சில பக்கங்கள் தையல் பிரிந்து வெளியே வந்து... பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். புது விவிலியங்கள் அவர்களுக்குப் பரிசாக வந்தாலும், பல ஆண்டுகளாய் அவர்கள் பயன்படுத்திய அந்த விவிலியங்கள்தான் அவர்கள் எப்போதும் கொண்டு செல்லும் பொக்கிஷங்கள். அந்த விவிலியங்களை நான் புரட்டிப் பார்த்தபோது, திருப்பாடல்கள் பகுதி பக்கம் பக்கமாக தையல் பிரிந்து, ஒரு சில பக்கங்கள் லேசாகக் கிழிந்து, ஒட்டுபோடப்பட்டிருந்தன. அதற்கடுத்தபடியாக, அதிகம் சிதைந்திருந்த மற்றொரு பகுதி நற்செய்தி பகுதி.

என் விவிலியத்திற்கும் இதே கதி தான். உங்களிடம் உள்ள விவிலியமும் இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். விவிலியத்தின் பக்கங்கள், அழுக்கேறி, கிழிந்து போய் ஒட்டப்பட்டு, தையல் பிரிந்திருப்பதில் இவ்வளவு பெருமையா? ஆம் அன்பர்களே... இப்படி ஒரு நிலை நம் விவிலியங்களுக்கு ஏற்படுவது பெருமைக்குரிய விஷயம். விவிலியத்தை அவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பது தானே இதன் பொருள்.
நீங்கள் பயன்படுத்தும் விவிலியத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். அங்கு மிக அதிகமாக, மிகப் பல சூழ்நிலைகளில் நாம் பயன்படுத்தும் ஒரு நூல்... திருப்பாடல்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். திருப்பாடல்கள் அள்ள, அள்ளக் குறையாத ஓர் அமுதசுரபி. பட்டை தீட்டப்பட்ட ஒரு வைரம். தோண்ட, தோண்ட வெளிவரும் ஒரு நீர்ச்சுனை... உங்களுக்குத் தெரிந்த பல்வேறு அடைமொழிகளில் இந்நூலை வர்ணிக்கலாம். அனைத்தும் இந்த நூலுக்குப் பொருந்தும்.
நமது தனிப்பட்ட வாழ்வில் பல நிகழ்வுகளில், பல்வேறு மன நிலைகளில் இந்த நூலை பயன்படுத்தியிருக்கிறோம். பலனும் பெற்றிருக்கிறோம். திருப்பாடல்களின் வரிகளைத் தனியே தியானித்திருக்கிறோம். அதே போல், நமது இல்ல வைபவங்களில், குழு செபங்களில், திருவழிபாடுகளில் நாம் திருப்பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே இது ஒரு அமுதசுரபி.
ஒவ்வொரு முறையும் ஒரு சங்கீதத்தைப் பயன்படுத்துகிறோம். அடுத்த முறை அதே சங்கீதத்தை வேறொரு நாள் படிக்கும் பொது அன்றையச் சூழ்நிலைக்குத் தகுந்தது போல் அந்தத் திருப்பாடல் நமக்கு பொருள் தருவதையும் உணர்ந்திருக்கிறோம். எனவே, இந்த நூல் ஒரு வைரம். பலவித ஒளியில் பலவித வண்ணங்களைத் தருகின்றதே. அதனால் இது ஒரு வைரம்.

விவிலியத்திலேயே திருப்பாடல்கள் நூலும், புதிய ஏற்பாடும் மிக அதிகமாகப் பயன்படும் நூல்கள் என்பதால், பல புதிய ஏற்பாடு பதிப்புகளில் திருப்பாடல்கள் நூலும் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பாடல்கள் ஒரு சராசரி நாளில் எவ்வளவு அதிகமாய் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கணக்கு.

கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவ திருவழிபாடுகளில் வருடத்தின் 365 நாட்களில் குறைந்தது 300 நாட்களாகிலும் திருப்பலியில் பதிலுரைப் பாடலாக திருப்பாடல்கள் இடம் பெறும். ஒரு நாளுக்கு 24 மணி நேரங்கள். அந்த 24 மணி நேரங்களில் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு திருப்பலி நிகழ்ந்த வண்ணம் இருக்கும்... அங்கு திருப்பாடல்கள் ஒலிக்கும். இதுவன்றி, பல துறவு மடங்களில், குரு மடங்களில், தினமும் காலை, மதியம், மாலை செபங்களில் திருப்பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரு நிகழ்வுகளை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, உலகம் என்ற கோளத்திலிருந்து பாடல்களாக, வாசகமாக, செபமாக திருப்பாடல்கள் என்ற நூலின் பல பகுதிகள் வான் வெளியில் 24 மணி நேரமும் 365 நாட்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இது அல்லாமல், தனிப்பட்டவர்களின் வீட்டு வைபவங்களில், செபக் கூட்டங்களில், நோயுற்றோர் படுக்கையருகில் என்று பல சூழ்நிலைகளிலும் இந்த நூலின் பல பகுதிகள் வாசிக்கப்பட்ட வண்ணம் இருக்கும். மொத்தத்தில், இந்த உலகத்தை ஒரு மனிதப் பிறவியாக கற்பனை செய்தால், திருப்பாடல் அந்த மனித உயிர் இடைவிடாமல் உள்வாங்கி வெளிவிடும் மூச்சைப் போல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.



அமுதசுரபி, வைரம், நமது மூச்சு... இப்படி பல வகையில் நாம் சிந்திக்கும் இந்த நூல் இவ்வளவு புகழ் பெற காரணம் என்ன? இந்த நூலில் பெரிய அறிவுசார்ந்த தத்துவங்கள் இல்லை, இது ஒரு வரலாற்று நூல் இல்லை. இந்த நூல் தருவதெல்லாம் செபங்களும், கவிதைகளும். நம் தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் காணக் கிடக்கும் பல உண்மைகளை, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை, மகிழ்ச்சிகளை, துக்கங்களை எடுத்துக்கூறும் எளிய நூல்.
வாழ்க்கையின் எதார்த்தங்கள் இந்த நூலின் பல பாடல்களில் எதிரொலிப்பதால், வாழ்வின் பலச் சூழல்களுக்கு இதிலிருந்து பொருள் தேடிக் கொள்கிறோம். நம் தேடுதல் சில சமயங்களில் குழந்தைத் தனமாக இருப்பது போல் தெரியலாம்.
உதாரணமாக, நம்மில் பலர் வாழ்வில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணும் போது, ஒரு முக்கிய முடிவெடுப்பதற்கு முன், விவிலியத்தைக் கையில் எடுத்து, கண்களை மூடி எதேச்சையாக ஒரு பக்கத்தைத் திறப்போம், அங்கு நம் கண்களில் படும் விவிலிய வசனத்தை படிப்போம். அது நமக்கு இறைவன் வழங்கும் வார்த்தையாக, நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு ஒரு முடிவாக நாம் ஏற்போம்.
இப்படி ஒரு சூழ்நிலையில் நாம் விவிலியத்தில் அடிக்கடி திறக்கும் ஒரு பகுதி திருப்பாடல்கள் நூலாக இருக்கும். எப்படி? எந்த ஒரு விவிலியத்திலும், பழைய ஏற்பாட்டின் மையப் பகுதியில் இந்தப் புத்தகம் அமைந்திருப்பதால், இப்படி எதேச்சையாகப் பிரிக்கும் நேரத்தில் பல முறை திருப்பாடல்கள் நூலை நாம் பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி வாழ்வில் பிரச்சனைகளைத் தீர்க்க, முக்கியமான முடிவுகள் எடுக்க, நம்மில் பலருக்கு திருப்பாடல்கள் நூல் உதவியிருக்கும். பொதுவாகவே திருப்பாடல்கள் புத்தகம் விவிலியத்தின் மையப் பகுதியாக இருப்பதை பலரும் பல வழிகளில் உணர்ந்திருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டுக்கு மத்தியில் மட்டுமல்ல, விவிலியத்தின் மையப் பகுதியாக திருப்பாடல்கள் இருப்பதை ஒரு முறை மின்னஞ்சலில் வந்தத் தகவல் எனக்குச் சொல்லியது. இன்றும் இந்தத் தகவல் இணையதளத்தில் உள்ளது. ‘Centre of the Bible’ ‘விவிலியத்தின் மையம்’ என்று இணைய தளத்தில் தேடினால், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் இவை: விவிலியத்தின் மையம் திருப்பாடல்களின் 118ஆம் அதிகாரம். அதாவது, 118ஆம் திருப்பாடலுக்கு முன் விவிலியத்தில் 594 அதிகாரங்கள் உள்ளன. 118ஆம் திருப்பாடலுக்குப் பின் 594 அதிகாரங்கள் உள்ளன. இந்த இணையதளத்தில் இன்னும் பல தகவல்கள் உள்ளன. வாசித்துப் பாருங்கள். எதேச்சையாகவோ, எண்ணிக்கை வழியாகவோ நாம் கண்டெடுக்கும் திருப்பாடல்கள் ஏதாவது ஒரு நல்ல செய்தியை நமக்குத் தரும். உதாரணத்திற்கு இப்போது நாம் சொன்ன அந்த 118 ஆம் திருப்பாடல் அழகான ஒரு நன்றிப் புகழ் மாலை. அந்தத் திருப்பாடலை முழுவதும் இன்று வாசித்துப் பாருங்கள். பயனடைவீர்கள். அந்தத் திருப்பாடலிலிருந்து ஒரு சில வரிகள்:

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 118
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு... நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்? மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!... ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்... கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம்... ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்... ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

நான் ஒரு முறை ஒரு கன்னியர் மடத்திற்கு தவக் காலத்தின் போது சென்றேன். அங்கிருந்த கன்னியர் ஒரு அழகிய பழக்கத்தைப் பின் பற்றுவதைக் கண்டேன். விவிலியத்தின் பல வாசகங்கள், அதிலும் முக்கியமாக திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்கள் சிறு துண்டு அட்டைகளில் எழுதப்பட்டிருந்தது. தவக் காலத்தின் ஒவ்வொரு நாளும் அவர்கள் காலை செபங்கள், திருப்பலி முடித்து காலை உணவிற்கு வரும் போது, ஒவ்வொருவரும் ஒரு அட்டையை எடுப்பார்கள். அதில் காணப்படும் இறைவார்த்தைகளின் படி அவர்களது அன்றைய தியானங்கள், செயல்பாடுகள் இருப்பதற்கு முயற்சி செய்வார்கள்.

திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள் என்ற நூலில் நம் விவிலியத் தேடலை ஆரம்பித்திருக்கிறோம். முதல் சில தேடல்களில் இந்த நூலின் தனி சிறப்புகளைச் சிந்தனை செய்வோம். இந்த நூல் ஒரு கவிதைத் தொகுப்பு என்று, இசைக்கு ஏற்ற பகுதி என்று, செபிக்கக் கற்றுத் தரும் பகுதி என்று நாம் தொடர்ந்து விவிலியத் தேடல் நிகழ்ச்சிகளில் சிந்திப்போம்.




இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org