30 September, 2010

Water, water… in every religion மதங்களில் தண்ணீருக்குத் தனியொரு இடம்

Drop – Photographer: Dan

September 29 – the Feast of the Archangels - Michael, Gabriel and Raphael. Although this has no direct link to Psalm 23 we are reflecting on, I did not want to miss out on sharing one of my favourite songs by ABBA – the famous Swedish pop music group in the 70s and 80s. The title of the song is “I have a dream.” It has a chorus line that talks of angels: “I believe in angels.” The moment I thought of the Feast of the Archangels, this song crossed my mind. In case you have not heard of this song, here is the text:


ABBA - I Have A Dream

I have a dream, a song to sing
To help me cope with anything
If you see the wonder of a fairy tale
You can take the future even if you fail
I believe in angels
Something good in everything I see
I believe in angels
When I know the time is right for me
I’ll cross the stream - I have a dream

I have a dream, a fantasy
To help me through reality
And my destination makes it worth the while
Pushing through the darkness still another mile
I believe in angels
Something good in everything I see
I believe in angels
When I know the time is right for me
I’ll cross the stream - I have a dream



Over to our reflection on Psalm 23: “He leads me beside still waters…” Today our reflection revolves around the significance of water in a few major religions and the Christian, Judaic tradition. I have borrowed heavily from http://www.africanwater.org/religion.htm

Water has a central place in the practices and beliefs of many religions for two main reasons. Firstly, water cleanses… Secondly, water is a primary building block of life. Without water there is no life. The significance of water manifests itself differently in different religions and beliefs but it is these two qualities of water that underlie its place in our cultures and faiths.
Buddhism
Water features in Buddhist funerals where water is poured into a bowl placed before the monks and the dead body. As it fills and pours over the edge, the monks recite: "As the rains fill the rivers and overflow into the ocean, so likewise may what is given here reach the departed."
Hinduism
To Hindus all water is sacred, especially rivers… Pilgrimage is very important to Hindus. Holy places are usually located on the banks of rivers, coasts, seashores and mountains. Sites of convergence, between land and river or two, or even better, three rivers, carry special significance and are especially sacred… The Ganges River is the most important of the sacred rivers. Its waters are used in puja (worship) and if possible a sip is given to the dying.
For Hindus, morning cleansing with water is a basic obligation… Physical purification is a part of daily ritual which may, in the case of sadhus, be very elaborate… Every temple has a pond near it and devotees are supposed to take a bath before entering the temple.
Islam
In Islam water is important for cleansing and purifying. Muslims must be ritually pure before approaching God in prayer… This comes from the Koran 5: 7/8 "O you, who believe, when you prepare for prayer, wash your faces and your hand to the elbows; rub your head and your feet to the ankles". Every mosque has running water.
Shinto
Shinto is Japan's indigenous religion and is based on the veneration of the kami - the innumerable deities believed to inhabit mountains, trees, rocks, springs and other natural phenomenon. Worship of kamis, whether public or private, always begins with the all important act of purification with water. Inside the many sacred shrines troughs for ritual washing are placed. Waterfalls are held sacred and standing under them is believed to purify.
Zoroastrianism
The significance of water in Zoroastrianism is a combination of its purifying properties and its importance as a fundamental life element… When the world was created the Evil Spirit Angra Mainyu attacked the earth and among other things made pure water salty… The sanctity of water is very important to Zoroastrians. People must not urinate, spit or wash one's hands in a river or allow anyone else to.


We turn our attention to the role of water in Christianity and its predecessor Judaism. One of the interesting observations on water is given by Harold Kushner in his book ‘The Lord Is My Shepherd’. Once again, I am resorting to a longer quote from this book:
In the part of the world where the Bible was written, the climate is different than it is in the temperate United States or Europe. There are only two seasons, six months during which it rains more or less regularly (unless there is a periodic drought) and six months during which the skies are cloudless and no rain falls… And this is the part of the world where, as I learned when I was living in Israel, the radio and television news programs stop giving weather forecasts after May I because every day’s weather will be the same, sunny and hot under cloudless skies.
In those conditions, water is life not only for the individual but for the community. Rain is not just something that cancels picnics and inconveniences shoppers, as we experience it today. Rain replenishes the moisture in the soil and lets the crops grow, giving people and their animals something to eat. Think of all the biblical stories that begin ‘Now there was a famine in the land…’

Out of my curiosity, I searched for these references to famine in the Old Testament. Here are a few:
Genesis 12:10Now there was a famine in the land, and Abram went down to Egypt to live there for a while because the famine was severe.
Genesis 26:1Now there was a famine in the land, besides the earlier famine of Abraham's time, and Isaac went to Abimelech king of the Philistines in Gerar.
II Samuel 21:1During the reign of David, there was a famine for three successive years; so David sought the face of the Lord.
II Kings 25:3By the ninth day of the fourth month the famine in the city had become so severe that there was no food for the people to eat.


So, when the psalmist thanks his faithful shepherd for leading him to water, it is more than thirst-quenching refreshment for which he is grateful. It is life itself. I guess we have enough evidence to convince ourselves that water is the source of life. But, we are sadly aware that water can also be the cause of death… A little bit of water refreshes us; too much water frightens us. We shall continue our reflections on our fears of water.


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


செப்டம்பர் 29 – நாளுமொரு நல்லெண்ணம்
1970களில் (1972 முதல் 1983 வரை) உலகப் புகழ்பெற்றிருந்த ABBA என்ற ஸ்வீடன் நாட்டு இசைக் குழுவினர் எழுதிய பல புகழ்பெற்ற பாடல்களில் பலரது மனங்களையும் கவர்ந்த ஒரு பாடல் "வானத்தூதரை நான் நம்புகிறேன்." (I Believe in Angels). அப்பாடலில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள் இவை:
கனவும், கவிதையும் கைவசம் உள்ளன,
கடினமான வாழ்வை எளிதாக்க...
கற்பனைக் கதைகளில் அற்புதம் காணும்
வித்தைகள் என்னிடம் உள்ளதால்
வாழ்வு தொலைந்து போனது போல் நான் உணரும்போதும்
எதிர்காலத்தை மீண்டும் பற்றிக் கொள்ள முடிகிறது.
எனக்கு நானே வகுத்த இலக்கு உயர்ந்ததாய் தெரிவதால்
இப்போது இருள் என்னை சூழ்ந்தாலும்,
முன்னேறிச் செல்லும் முயற்சி கூடுகிறது.
வானத்தூதரை நம்புகிறேன்.
வாழ்வு நதியில் நீந்துகிறேன்.
காணும் அனைத்திலும் நன்மை ஒன்றையேக் காண்கிறேன்.
செப்டெம்பர் 29 - தலைமை விண்ணகத் தூதர்களான புனித மிக்கேல், கபிரியேல், இரஃபேல் ஆகியோரின் திருநாள். எனவே இவ்வெண்ணங்கள்.

திருப்பாடல் 23ன் தொடர்ச்சி
"அமைதியான நீர் நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்" - திருப்பாடல் 23ன் இந்த வரியில் நம் சிந்தனைகளை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இன்றும் தொடர்கிறோம். நாம் கருவில் உருவானது முதல், கல்லறையில் உறங்குவது வரை தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறோம். கடல், நதிகள், நிலத்தடி நீர், நீராவி, மேகம், மழை, காற்றில் கலந்துள்ள ஈரம் என்று பல வகைகளிலும் தண்ணீர் நம்மைச் சூழ்ந்து காத்து வருகிறது. நீரின்றி இவ்வுலகம் உயிர் வாழாது... இவைகளையெல்லாம் எண்ணி, இறைவனுக்கு நன்றி சொன்னோம். இன்று, உலகின் பல மதங்களிலும் விவிலியத்திலும் தண்ணீர் குறித்த சிந்தனைகள் என்ன என்று சிறிது ஆராய்வோம்.

உலகின் பழம்பெரும் மதங்கள் அனைத்திலும் தண்ணீருக்குத் தனிப்பட்ட, உயர்ந்ததொரு இடம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு சிந்திப்போம்.
புத்த மதத்தில் சடங்குகள், அடையாளங்கள் ஆகியவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதை அறிவோம். இருந்தாலும், தண்ணீருக்கு அங்கு தனி மதிப்பு உண்டு. புத்தத் துறவிகளில் ஒருவர் மரணம் அடைந்தால், தண்ணீரை மையப்படுத்தி ஓர் அழகிய பழக்கம் பின்பற்றப் படுகிறது. இறந்தவர் உடலுக்கருகே ஒரு கிண்ணம் வைக்கப்படும். அக்கிண்ணத்தில் நீர் ஊற்றப்படும். கிண்ணம் நிறைந்து வழிந்தாலும், நீர் தொடர்ந்து ஊற்றப்படும். அவ்வேளையில், இறந்தவர் உடலைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற துறவிகள் பின் வரும் மந்திரத்தைச் சொல்வார்கள்: "வானிலிருந்து விழும் மழை, ஆற்று நீராய் நிறைந்து கடலில் கலப்பது போல, இங்கு ஊற்றப்படும் தண்ணீரும் இவ்வுலகை விட்டுப் பிரிந்த ஆன்மாவுடன் கலப்பதாக."
இந்திய மண்ணில் வேரூன்றி வளர்ந்துள்ள இந்து மதத்தில் தண்ணீர் வகிக்கும் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். நமது நதிகள் அனைத்தையும் புனிதம் என்று கருதுகிறோம். ஒரு சில நதிகள் மிகவும் புனிதமானவை. அந்நதிகளின் கரைகளில் புனிதத் தலங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, கங்கை நதிக் கரையில் இறந்து, அந்நதியோடு சங்கமமாவது வான்வீட்டின் வாயிலைத் திறந்து விடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஏறத்தாழ எல்லா இந்துமதச் சடங்குகளிலும் தண்ணீர் ஓர் இன்றியமையாத அம்சம்.
இறைவனின் பிரசன்னத்தில் நுழைவதற்கு தூய்மை மிக அவசியம் என்பதால் இஸ்லாமியர்களும் தண்ணீரைத் தங்கள் வழிபாடுகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். "தொழுகைக்குத் தயாரிக்கும் போது, உன் முகம், கைகளைக் கழுவ வேண்டும்." என்பது திருக்குர்ஆன் கூறும் விதிமுறை. திருக்குரானைத் தொடுவதற்கு முன் கைகளைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தொட்டிகள் இல்லாத இஸ்லாமியத் தொழுகைக் கூடங்கள் இல்லை என்று சொல்லலாம்.
ஜப்பானியர்கள் பின்பற்றும் ஷின்டோ மதத்தில் இயற்கையின் பல வடிவங்களில் கடவுள் உறைவதாக நம்பிக்கை உண்டு. வழிந்தோடும் அருவிகள் புனிதம் என்பதும், அருவியில் குளிப்பதாலோ, அதனருகே நிற்பதாலோ நாமும் தூய்மை அடைகிறோம் என்பதும் இம்மதத்தின் நம்பிக்கை.
Zoroastrian மதத்தில் கடல்களில் காணப்படும் உப்பு நீருக்கு அவர்கள் வழங்கும் விளக்கம் இது. படைப்பின் துவக்கத்தில், உலகெங்கும் உப்பு கலக்காத நல்ல தண்ணீர் மட்டுமே இருந்தது. Angra Mainyu என்ற தீய ஆவி இந்த உலகத்தைத் தாக்கியபோது, நல்ல நீரை உப்பு நீராக்கியது என்று சொல்லப்படுகிறது. இம்மதத்தைப் பொறுத்தவரை, இயற்கை நீரை, முக்கியமாக ஆற்று நீரை மாசு படுத்தும் எந்த முயற்சியும் பாவமாகக் கருதப்படுகிறது.
இவ்வாறு, உலகின் மாபெரும் மதங்கள் அனைத்திலுமே உயிரளிப்பது, கறைகளை நீக்குவது என்ற இரு அம்சங்களின் அடிப்படையில் தண்ணீர் தனியொரு, புனிதமான, இடம் பெற்றுள்ளது.

கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், அதன் முன்னோடியான யூத பாரம்பரியத்திலும் தண்ணீரின் தனித்துவம் பற்றி அறிய விவிலியப் பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். அதற்கு முன், விவிலியப் பக்கங்கள் உருவான யூதேயா பகுதிகளை, மத்தியக் கிழக்குப் பகுதிகளைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில், பல நாடுகளில் ஒவ்வோர் ஆண்டிலும் நான்கு வகை பருவக் காலங்களைப் பார்க்கலாம். வசந்தம், கோடை, குளிர்காலம், இலையுதிர் காலம் என்று நான்கு தெளிவாகப் பிரிக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் இரண்டே காலங்கள் - ஆறு மாதங்கள் மழை அல்லது குளிர்க் காலம், ஆறு மாதங்கள் வறட்சிக் காலம்.
இவ்விரு காலங்கள் பற்றி Harold Kushner தன் புத்தகத்தில் விவரிக்கும் போது, ஒரு வினோதமான குறிப்பைச் சொல்கிறார். இப்பகுதியில் உள்ள தொலைக் காட்சி, வானொலி ஆகியவற்றில் மே மாதம் முதல் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு வானிலை அறிக்கை இருக்காது. காரணம், அந்த ஆறு மாதங்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல், வானம் தெளிவாக, சூரிய ஒளியுடன், வெப்பமாக இருக்கும். வானம் தெளிவாக இருக்கும் அந்த நாள் வெப்பமாக இருக்கும் என்பதை எத்தனை முறை சொல்வது என்று, வானிலை அறிக்கையே நிறுத்தப்படும். இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு மழை என்பது ஒரு பரபரப்பான செய்தியாகி விடும். அதுவும் வறண்ட ஆறு மாதங்களில் மழை என்பது தலைப்புச் செய்தியாகி விடும். இந்தியாவிலும் இது போன்று பல பகுதிகள் உள்ளன என்பதை அறிவோம்.
இந்தப் பின்னணியில் எழுதப்பட்டது நமது விவிலியம். விவிலியத்தில் வறட்சி, பஞ்சம், பட்டினி இவைகளைப் பற்றி பல முறை கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யோசேப்பு என்று தொடக்க நூலில் ஆரம்பித்து, தாவீது காலம் தாண்டி, இஸ்ராயேலின் பல சந்ததியினர் பஞ்சம் பட்டினியில் துன்புற்றனர் என்பதை விவிலியம் அடிக்கடி கூறியுள்ளது. இதோ, ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

தொடக்கநூல் 12 : 10 - அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
தொடக்கநூல் 26 : 1 - முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
சாமுவேல் இரண்டாம் நூல் 21 : 1 - தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார்.
அரசர்கள் முதல் நூல் 18 : 1-2 - பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன் என்று கூறினார். அவ்வாறே எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.
அரசர்கள் இரண்டாம் நூல் 25 : 3 - அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
இதுபோல் பழைய ஏற்பாட்டில் மட்டும் ஏறத்தாழ 20 இடங்களில் பஞ்சம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

யூத குலத்தின் தலைவனாய் இருந்த தாவீது இந்த எண்ணங்களை எல்லாம் மனதில் வைத்து 23ம் திருப்பாடலை எழுதும் போது, அதிலும் சிறப்பாக, "ஆண்டவர் என் ஆயன். நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்வார்." என்ற வரியை சொல்லும் போது, தாகம் தணிப்பதை மட்டும் மனதில் கொண்டு இவ்வரியை எழுதியிருக்க மாட்டார். தாகம் தணிப்பதைத் தாண்டி, தன் குலத்தவரை பஞ்சம், பட்டினி இவைகளிலிருந்து காத்து ஒரு நாடாகத் தங்களை உருவாக்க ஆதாரமாகத் தண்ணீர் இருந்ததை எண்ணி, அந்த நீர் ஊற்றுக்களைத் தங்களுக்குத் தந்த இறைவனை எண்ணி, இவ்வரியை எழுதியிருப்பார்.
உயிரளிக்கும் ஊற்றான தண்ணீர், பல வேளைகளில் உயிரை அழித்து விடுகிறதே. தேவையான அளவு நீர் படைப்பைப் பேணிக் காக்கும். தேவைக்கும் அதிகமாகப் பெருகும் நீர் படைப்பை அழிக்கும். அனைத்து உயிர்களும் தண்ணீரில்தான் உருவாயின என்றாலும், நமது பரிணாம வளர்ச்சியில் (படிப்படியான உயிர் மலர்ச்சி) மனித உயிர்கள் தண்ணீரிலிருந்து வந்தவர்கள்தாம் என்றாலும், நம்மைப் பொறுத்த வரை தண்ணீரை விட, தரையில் காலூன்றி நிற்பதையே நாம் பாதுகாப்பு எனக் கருதுகிறோம். தண்ணீர் குறித்த நம் பயங்களைப் பரிசீலனை செய்வோம் அடுத்த விவிலியத் தேடலில்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

27 September, 2010

The Dust Under Our Feet… காலடியில் மிதிபடும் மண்...

The Rich Man And Lazarus


Here is a story I received via email. A little girl accompanied her mother to the “General Store”. After the mother had made a large purchase, the store owner invited the little girl to help herself to a handful of candy. The child held back. “What’s wrong, don’t you like candy?” the proprietor asked. The child said, “Yes, I like candy!” The proprietor, thinking that the girl was shy, put his own hand into the jar and dropped a generous portion into the girl’s cupped hands. Later, in the car, the mother asked her daughter why she had not taken the candy in the first place when it was offered. The little girl, with a mischievous grin said, “Because his hand was much bigger than mine!”
Smart girl, some would say. Greedy, some others would say… Let’s hold back our judgement and take the position of the accused. Yes, I think all of us need to take responsibility for the way this child had thought. Where does a child get such ideas? The parents and immediate family, of course. But, the blame must be shared by the larger human family. Children pick up so many ideas from us, adults, without our teaching them.

We have heard of the different stages of human growth as proposed by Sigmund Freud, the first of which is the ‘oral stage’. During the first months the infant’s palms are always closed. Whatever we extend, whether it is our finger or a toy, the infant grabs it and takes it to the mouth. For the infant the whole world is there to be consumed. With much care we try to wean the child from this stage. We begin teaching things like sharing… “Tom, give the candy to Jerry… No, don’t grab everything… Let your sister play with the toy for a while…” We tend to ‘preach’ to the child while we practice very different things. When a child sees the contradiction between what the adults say and do, it tends to follow the deed than the word. For not helping children grow into caring, sharing adults, all of us need to stand accused. When we assume the role of the accused, the judgement from above will sound similar to the words used by Amos in today’s first reading:

Amos 6: 1, 3-7
Woe to you who are complacent in Zion, and to you who feel secure on Mount Samaria …
You lie on beds inlaid with ivory and lounge on your couches. You dine on choice lambs and fattened calves…
You drink wine by the bowlful and use the finest lotions, but you do not grieve over the ruin of Joseph. Therefore you will be among the first to go into exile; your feasting and lounging will end.

Is God a killjoy? I sweat and earn my money… or, I have acquired money bequeathed by my Dad or my Grandpa and I enjoy this… What’s wrong in this? Nothing. Nothing is wrong as long as this world is made up of only me and my family. The whole world is only for me as in the case of the child in ‘oral stage’. The moment the concept of the ‘neighbour’ comes in, things change. Life has to change. Let’s not try to be smart as the lawyer in Luke 10: 29 asking Jesus who our neighbour is. Any one in need is my neighbour. The synonym is ‘poor’. I would like to recollect the final words of my reflection last Sunday – September 19. “Jesus was sure that the kingdom of heaven belonged to the poor. So, he suggests that we need to gain their friendship at the expense of the riches we have gathered. How to befriend the poor? The coming week’s Gospel will teach us… See you then!”

Today’s Gospel gives us one of the famous parables of Jesus – the rich man and Lazarus. The detailed analysis of this parable will be quite long. We shall confine our reflections only to the first few lines where Jesus gives us a description of the two characters in this parable – the rich man and Lazarus.

Luke 16: 19-21
There was a rich man who was dressed in purple and fine linen and lived in luxury every day. At his gate was laid a beggar named Lazarus, covered with sores and longing to eat what fell from the rich man's table. Even the dogs came and licked his sores.

I would like to do a compare and contrast exercise out of these lines:
Rich man
A rich man
Dressed in purple and fine linen
Lived in luxury every day

Poor man
A beggar named Lazarus
Was laid at the gate
Covered with sores
Longing to eat what fell from the rich man’s table
Dogs came and licked his sores

Three details about the rich man and five details about the poor man.
The background as to why Jesus said this parable would make our analysis sharper. Last Sunday we closed our Gospel on Luke 16:13. The very next verse goes like this: “The Pharisees, who were lovers of money, heard all this, and they scoffed at him. But he said to them…” (Lk. 16:14) This parable is part of the answer Jesus was giving to the Pharisees who were laughing at him.

The very opening lines of this parable must have shocked the Pharisees. Jesus mentions a nameless rich man and a beggar named Lazarus. Of all the parables of Jesus, this is the only parable where the character in the story gets a proper name. For a Jew, and more especially for a Pharisee, being rich is a blessing from God while being poor is a curse from God. Jesus subverted this equation. He made the rich man a non-entity and made the beggar a real person with a proper name. Unfortunately, even today the rich get individually recognised and respected, while the poor are just statistics.

The second comparison between the rich man and Lazarus runs a dagger through the heart. The rich man was dressed in purple linen, while Lazarus was covered with sores. Purple, scarlet, red… all shades of royalty. While the rich man clothed himself with royalty in an artificial way, Lazarus was regal in a very different way. He was possibly a distant image of Jesus hanging on the cross, covered with sores…

The third comparison is what brought trouble to the rich man. He was living in luxury… and therefore had to face hell. Seems like an unwarranted and disproportionate punishment. The rich man was not punished for living in luxury, but living in luxury while there was a beggar at his gate. Actually, the rich man seems like a gentle person… If he wanted, he could have easily got rid of Lazarus. On second thoughts, I feel that if the rich man had done something like this, his punishment would have been less. Is this puzzling? Let me explain. If the rich man had taken some effort to get rid of the beggar, he would have at least established the fact that he had acknowledged Lazarus as a human person. The rich man in this parable did nothing positive or negative about Lazarus. He simply ignored him. For him, Lazarus was no more than a piece of furniture in his house… Perhaps, the furniture in his house would have got enough attention by being wiped with a rag. Lazarus was laid out at his gate like a piece of rag. For the rich man Lazarus was no more than the dust under his feet. We don’t usually pay attention to dust under our feet unless it gets into our eyes.
Ignoring a human person is the worst type of treatment one can give. The rich man was guilty of this and he had to face the consequence. Far too many Lazaruses are laid out in our life’s journey. Let’s tread carefully!





Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.





பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு தாய் தன் ஐந்து வயது மகளுடன் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றார். அப்பெண் நிறையப் பொருட்களை வாங்கியிருப்பதைக் கண்ட கடைக்காரர், கூடவே சிறுமி இருந்ததைப் பார்த்து, மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு நீயே மிட்டாய்களை எடுத்துக்கொள்." என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம், "எனக்கு மிட்டாய் மிகவும் பிடிக்கும்." என்று சொன்னாள். ஒருவேளை சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாள் என்று எண்ணியக் கடைக் காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, கை நிறைய மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். சிறுமி இருகைகளிலும் அம்மிட்டாய்களைப் பெற்றுக் கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?" என்று தாய் கேட்டார். அதற்கு, அந்தச் சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள்.
அந்தச் சிறுமியைத் தந்திரக்காரி, பேராசைப் பிடித்தவள் என்றெல்லாம் தீர்ப்புக்களை எழுதுவதற்கு முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்பதை சிந்திக்கும் போது, வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் நாம் அனைவரும் இந்த எண்ணங்களை அந்தக் குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அச்சிறுமியின் பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நான் இங்கு குறை கூறவில்லை. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்ப்பதற்குப் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்க வேண்டும்.
நாம் அந்தக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது, இறைவனின் தீர்ப்பு ஒலிக்கும். இறைவன் நமது தன்னலம், பகிராத் தன்மை பற்றி கூறும் தீர்ப்பை இன்றைய திருவழிபாட்டின் முதல் வாசகம் நமக்கு அழுத்தந்திருத்தமாய்க் கூறுகிறது:

ஆமோஸ் 6 : 1, 3-7
சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! ... உங்களுக்கு ஐயோ கேடு!
தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள். தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஐயோ கேடு! கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள். ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

நான் கடினமாய் உழைத்தேன், சம்பாதித்தேன்... அல்லது, என் தந்தை, பாட்டனார் காலத்துச் சொத்துக்கள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அவைகளை நான் அனுபவிக்கிறேன். இதில் ஒன்றும் தவறில்லையே? என்ற கேள்வி எழும். தவறு இல்லை. இந்த உலகத்தில் நான் மட்டுமே, எனதுக் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வந்தால், என் சொத்துக்களை நான் அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், "அடுத்தவர்" என்ற அந்த உண்மை என் வாழ்வில், என் உலகத்தில் எப்போது நுழைகிறதோ, அப்போது, எல்லாமே மாறும். அன்று இயேசுவிடம் சாமார்த்தியமான கேள்வி கேட்பதாக எண்ணி, எனக்கு அடுத்தவர், என் அயலவர் யார் என்று கேட்ட அந்த அறிவாளியைப் போல் நாம் இந்த அடுத்தவரைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டாம். தேவையில் இருப்பவர் எல்லாருமே நமது அடுத்தவர், அயலவர். இவர்களுக்கு மறு பெயர் ஏழைகள்.
சென்ற வார ஞாயிறு சிந்தனையின் இறுதியில் நான் சொன்ன வரிகளை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்: ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.

ஏழைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது, அவர்களை எப்படி மதிப்பது, மதிக்கவில்லையெனில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் இன்றைய நற்செய்தி நமக்கு விளக்குகிறது. 'செல்வரும் லாசரும்' என்ற இந்த உவமை இயேசுவின் பிரபலமான உவமைகளில் ஒன்று. இவ்வுவமை ஒரு வைரத்தைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் வெவ்வேறு வண்ணத்தில் வெவ்வேறு ஒளி தரும். இந்த வைரச் சுரங்கத்தை முழுவதும் தோண்டி எடுக்க நேரம் இல்லாததால், இந்த உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது சிந்தனைகளைச் செலுத்தி, முடிந்த வரைப் பாடங்களைப் பயில்வோம்.
லூக்கா நற்செய்தி 16 : 19-21 வரை மூன்று வசனங்களில் கதையின் இரு நாயகர்களை இயேசு விவரிக்கின்றார்.
செல்வர் ஒருவர் இருந்தார்.
விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.

லாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வரைப் பற்றி மூன்று விவரங்கள். ஏழையைப் பற்றி ஐந்து விவரங்கள். இந்த எட்டு விவரங்களில் மூன்று ஒப்புமைகளை இயேசு காட்டுவதைப் பார்க்கலாம். பாடங்கள் பல சொல்லும் ஒப்புமைகள் இவை.
“செல்வர் ஒருவர் இருந்தார். லாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...” இயேசுவின் இந்த முதல் வரிகளைக் கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வருக்குப் பெயரில்லை. ஆனால், ஏழைக்கு இயேசு பெயர் கொடுத்தார். பெயர் கொடுத்ததால் கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறிய அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உவமைக்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இது.
செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவைகளை இறைவனின் சாபமாகவும் எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மனதில் இயேசு ஏழைக்கு கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில் ஏழைக்கு லாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏழைகளைத் தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டு கண்டனம் சொல்ல வேண்டாம். இதே மனநிலைதானே இன்று நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப் பற்றி பேசும் போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்றெல்லாம் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும் போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். “திருவாளர் திலகரத்தினம் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக் கணக்கான ஏழைகள் வந்தனர்” என்பது தானே நமது பேச்சு வழக்கு? ஏழைகளை எண்ணிக்கைகளாக இல்லாமல், மனிதப் பிறவிகளாக மதிக்க வேண்டும் என்பதற்கு இந்த முதல் வரி நல்லதொரு பாடம்.

செல்வரையும், லாசரையும் குறித்து இயேசு கூறும் அடுத்த ஒப்புமை வரிகள்: செல்வர் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்; இன்னும் குறிப்பாக, செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... லாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லிய செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். லாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவப்புத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத் தானே ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். லாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இவரைப் பார்க்கலாம். யார் உண்மையில் அரசன்?

மூன்றாவது ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் அறைகின்றன. செல்வர் மறு வாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த வரிகள் காரணங்களாகின்றன. நரக தண்டனை பெறுமளவு அந்தச் செல்வனின் தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார். அதனால்... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இந்த தண்டனை கிடையாது... அவருக்கு முன் தேவையுடன் ஒருவர் இருந்தபோது, அவருடைய தேவையைப் போக்க எந்த வகையிலும் முயற்சி எடுக்காமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இந்த தண்டனை.
ஓர் ஏழையைத் தன் வீட்டு வாசலில் விட்டுவைத்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், லாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து விரட்டி இருக்கலாம். காவலாளிகள் உதவியுடன் லாசரைத் தன் கண்களில் படாத வண்ணம் செய்திருக்கலாம். இப்படி எதுவும் செய்திருந்தால் ஒருவேளை குறைந்த தண்டனை கிடைத்திருக்குமோ என்று கூட நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
லாசர் மீது ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, லாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருக்கிறது என்பதையாகிலும் அந்த செல்வர் உணர்ந்திருப்பார். இந்த உவமையில் கூறப்பட்டுள்ள செல்வந்தனைப் பொறுத்த வரை, லாசரும் அவர் வீட்டில் இருந்த ஒரு மேசை, நாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை நாற்காலியைத் துடைக்கும் துணியை விட கேவலமாக அவர் செல்வரது வாயிலருகே கிடந்தார். “அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” என்று இயேசு அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். செல்வந்தனைப் பொறுத்த வரை, அவரது காலடியில் மிதிபட்ட மண்ணும் லாசரும் ஒன்று.
ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல் இருப்பது, அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப் போல ஒருவரை நடத்துவது மிகவும் கொடிய ஒரு போக்கு. இதைத்தான் அந்த செல்வர் செய்தார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள் கூட லாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும் இயேசு இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.
வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று போன வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை மனிதப் பிறவிகளாகக் கூட நடத்த மறுத்தால், நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். லாசரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட கருதாமல் செல்வர் லாசருக்கு உருவாக்கிய அந்த நரகம் எப்படி இருக்கும் என்பதை அவரே உணர வேண்டும் என்பதற்காகக் கடவுள் தந்த பாடம் இந்த மறு வாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?






இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

23 September, 2010

Lessons from WATER தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள்

DANCING WATER © Okea Dreamstime.com



For the past twelve weeks we have been reflecting on the Psalm 23 and its first two lines: “The Lord is my shepherd. I shall not want; he makes me lie down in green pastures.” Today we go on to the next line: “He leads me beside still waters…” Still waters… waters… water. I have narrowed down my reflections to the word ‘water’.
5 April, 1887… a young lady, 21 years old, was leading a six year old child to a water pump. She was an ill tempered child who lived in a world of her own… a miserable world. The lady was dragging the child rather than leading her. The child was not very cooperative. Still, the young lady would not give up. She forced the child to extend her hand and feel the running water. As the child was feeling the chill water on one hand, the lady began to spell W A T E R on the other hand of the child. The child’s face brightened up. A miracle began to happen. Here is what the child had to say, later in her life, about this experience: "We walked down the path to the well-house, attracted by the fragrance of the honey-suckle with which it was covered. Someone was drawing water and my teacher placed my hand under the spout. As the cool stream gushed over one hand she spelled into the other the word water, first slowly, then rapidly. I stood still, my whole attention fixed upon the motions of her fingers. Suddenly I felt a misty consciousness as of something forgotten, a thrill of returning thought, and somehow the mystery of language was revealed to me."
http://www.rnib.org.uk/aboutus/aboutsightloss/famous/Pages/helenkeller.aspx

By now, my friends, you must have guessed who this child was… Yes, it was Helen Keller. The lady who taught her was Anne Sullivan, the miracle worker. ‘The Miracle Worker’ is a cycle of 20th century dramatic works derived from Helen Keller's autobiography The Story of My Life. Each of them describes the relationship between Keller — a deaf-blind and, initially, almost feral child — and Anne Sullivan, the teacher who introduced her to education, and made her an international celebrity… The title ‘The Miracle Worker’ takes its origin from Mark Twain's description of Sullivan as a "miracle worker." Mark Twain was an admirer of both women. (Wikipedia)
The miracle that happened near the water pump continued in the life of Helen and she, in turn, became a miracle to millions of persons who are differently-abled. Not only Helen Keller, but thousands upon thousands have learnt lessons from water.

Here is a passage that portrays beautifully that of all the elements of nature, water is the best teacher:
“Of all the elements of the world, Fire, Water, Earth, Mineral, and Nature, the Sage takes Water as his guide. Water is yielding, but all-conquering. Water extinguishes Fire. Finding itself likely to be defeated, it escapes as a steam and reforms. Water washes away Soft Earth, and when confronted by rocks, seeks a way round. Water corrodes Iron til it crumbles to dust; it saturates the atmosphere so that Wind dies. Water gives way to obstacles with deceptive humility. No power can prevent it following its destined course to the sea. Water conquers by yielding; it never attacks, but always wins the last battle. The Sage, who makes himself as Water, is distinguished for his humility. He embraces non-action and conquers the world.” These words from the Chinese Sage Lao Tzu capture the spiritual powers of Water. (Malidoma Somé - ‘A Shamanic Reflection On Water’)
http://www.rowecenter.org/centerpost/2006-spring/MalidomaSome.htm

Let us begin our lessons from the basics. I am not sure how much you know about water – facts and trivia. I came across a website which gave me six pages of information on water. I am just sharing a few interesting ones. Those who are interested, kindly visit:
http://www.lenntech.com/water-trivia-facts.htm
Water Facts and Trivia
Most of the earth's surface consists of water; there is much more water than there is land. (71% water and 29% land.)
Water can not only be found on the surface, but also in the ground and in the air.
There is the same amount of water on earth as there was when the earth was formed. The overall amount of water on our planet has remained the same for two billion years…
Water is the only substance that is found naturally on earth in three forms: liquid, gas, solid.
Approximately 66% of the human body consists of water. Water exists within all our organs and it is transported throughout our body to assist physical functions. The total amount of water in the body of an average adult is 37 litres. Human brains are 75% water. Human bones are 25% water. Human blood is 83% water.
A person can live about a month without food, but only about a week without water.

“Water is life… Scientists looking for the possibility of life on other planets look first for evidence of water. There can be no life without water.” (Harold Kushner) Each of us began our life in water. All of us are aware that we were surrounded by water while we were being formed in our mother’s womb. The moment we are born, we are bathed in water and, in most cultures, the moment we die we are again bathed in water. During our life time, we are constantly surrounded by water… water below us, above us and around us. The very imagination of being surrounded by water is a refreshing thought… like getting drenched in rain. Perhaps physically getting drenched in rain may lead to some health problems. But, nothing stops us from getting drenched in rain… in imagination. This rain can soak us, cleanse us and help us feel the cool comfort. “He leads me beside still waters…” In the coming weeks, we shall continue our reflections on this life-giving, life-nurturing gift – WATER!


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.

"ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்."
என்ற 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளில் நம் சிந்தனைகளை இதுவரைப் பகிர்ந்தோம். இன்று இத்திருப்பாடலின் அடுத்த வரியில் நம் சிந்தனைகளை ஆரம்பிக்கிறோம். "அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்." அமைதியான நீர்நிலைகள்... என்ற வார்த்தைகள் நீரைக் குறித்து நம்மை இன்று சிந்திக்க அழைக்கின்றன.

1887ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள்... 21 வயது இளம் பெண் 6 வயது சிறுமியை ஒரு நீர்க் குழாய் அருகே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றார் என்பதை விட இழுத்துச் சென்றார் என்று சொல்லலாம். அந்தச் சிறுமி பல வகையிலும் இளம் பெண்ணின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தார். இருந்தாலும், அந்த இளம் பெண் விடுவதாக இல்லை. அந்தச் சிறுமியின் கைகளைக் குழாயடியில் நீட்டவைத்து, அவைகள் மேல் தண்ணீர் விழும்படிச் செய்தார். பின்னர் W A T E R 'தண்ணீர்' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துக்களை அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் எழுதினார். அதுவரைப் பலவகையிலும் அடம்பிடித்த அந்தச் சிறுமியின் முகத்தில் ஒளி தோன்றியது. அந்தக் குழாயடியில் ஒரு புதுமை ஆரம்பமானது. அந்தச் சிறுமியின் பெயர்... ஹெலன் கெல்லர். அவருக்கு வார்த்தைகள் சொல்லித் தந்த இளம் பெண்... Anne Sullivan.
தன் இரண்டாவது வயதில் வந்த ஒரு கொடிய காய்ச்சலால் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் இழந்த குழந்தை ஹெலன் கெல்லர், சிறிது சிறிதாக பேசவும் மறந்து இருளும், அமைதியும் மண்டிக் கிடந்த ஓர் உலகத்தில் தன்னையே புதைத்துக் கொண்டாள். அவளை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்க Anne Sullivan ஒரு மாதமாக மேற்கொண்ட பல முயற்சிகளிலும் அவர் தோல்வியையே கண்டார். ஹெலன் நாளுக்கு நாள் கோபத்தில் மட்டும் வளர்ந்து வந்தாள். அன்று அந்தக் குழாயடியில், கொட்டும் நீர் வழியாக, Anne Sullivan ஹெலன் வாழ்வில் புதுமைகளைப் புகுத்தினார். ஆறு வயதில் ஆரம்பித்த இந்தப் புதுமை, ஹெலன் கெல்லர் வாழ்வில் தொடர்ந்தது. புலன் திறமை இழந்த பலருக்கு ஹெலன் கெல்லர் ஒரு புதுமையாக மாறினார். ஹெலன் வாழ்வில் மட்டுமல்ல, பலரது வாழ்வில் தண்ணீர் பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்த வண்ணம் உள்ளது. தண்ணீர் சொல்லித் தரும் பாடங்களை இன்று கற்றுக் கொள்ள முயல்வோம்.

தண்ணீரைப்பற்றி Lao Tzu என்ற ஞானி எழுதிச் சென்றுள்ள சில வரிகளை ஒரு சிறு தியானமாக மேற்கொள்வோம்.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.
அலைகளெனும் தூரிகையால் உலகக் கண்டங்களின் எல்லைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி வரைவது தண்ணீர்தானே.
தண்ணீர் மிகவும் மென்மையானது; ஆனால், அனைத்தையும் வெல்வது.
தண்ணீர் நெருப்பை அணைத்துவிடும். அணைக்க முடியாத வண்ணம் எரியும் நெருப்பிலிருந்து தண்ணீர் தப்பித்துச் செல்லும் நீராவியாக. தப்பித்த நீராவி மீண்டும் சேர்ந்துவிடும் மேகமாக.
மென்மையான மணலை அடித்துச் செல்லும் தண்ணீர், பாறைகளுக்கு முன் பணிந்து விடும். பாறைகளைச் சுற்றி ஓடிவிடும்.
பாறைகளுக்கு முன் பணிந்து விடும் அதே தண்ணீர், இரும்புக்குள் ஈரமாய்ப் புகுந்து, இரும்பைத் துருவாக்கி, கரைத்துவிடும்.
விண்வெளியில் தண்ணீர் துளிகளாய் நிறைந்து, வீசும் காற்றையும் நிறுத்தி, வான் வெளியை மௌனமாக்கி விடும்.
எந்த ஒரு தடை வந்தாலும் சமாளித்து ஓடும் தண்ணீர் கடலை அடைவது உறுதி.
தண்ணீர் சொல்லித் தரும் பாடங்கள் எண்ணற்றவை, ஆழமானவை.

"அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்."
நீரைக் குறித்து உங்களுக்கு எவ்வளவு விவரங்கள் தெரியும், தெரியாது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், 23ம் திருப்பாடலின் இந்த வரியை நான் வாசித்ததும் நீரைக் குறித்து விவரங்களைத் தேடினேன். இணையதளத்தில் நான் கண்ட விவரங்களிலிருந்து ஒரு சில கருத்துக்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நாம் வாழும் உலகின் மேல் பரப்பில் 70.8 விழுக்காடு (36.1 கோடி சதுர கிலோ மீட்டர் அல்லது 13.9 கோடி சதுர மைல்) பரப்பளவு பெருங்கடல்களால் நிறைந்தது. 30 விழுக்காட்டுக்கும் குறைவானதே நிலப்பரப்பு. (அதாவது 15 கோடி சதுர கிலோ மீட்டருக்கும் குறைவானது.) பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3.8 கிலோ மீட்டர். ஒரு சில இடங்களில் கடலின் ஆழம் 10 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ளது. இவை எல்லாமே உப்பு நீர். நம் நிலப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என்று பல வடிவங்களில் நல்ல நீர் உள்ளது. இவை அல்லாமல், நிலத்தடி நீரும் உள்ளது.
நாம் வாழும் உலகில் நம்மைச் சுற்றிலும் நல்ல நீர், உப்பு நீர்... நமக்குக் கீழ் நிலத்தடி நீர். நமக்கு மேல் விண்வெளி நீர். எனவே ஒரு வகையில் கற்பனை செய்து பார்த்தால், நீர் சூழ்ந்த ஒரு மகாப் பெரும் கடலில் இந்த உலகமே நீந்தி வருகிறது. அந்த உலகத்தோடு நாமும் இந்தக் கடலில் நீந்தி வருகிறோம், அல்லது இந்தக் கடலில் மிதந்து மகிழ்கிறோம் என்று சொல்வது மிகையான கற்பனை அல்ல.

அன்புள்ளங்களே, வெளி உலகம் நீரால் நிறைந்துள்ளதைப் போல், நமது உள் உலகமும் நீரால் நிறைந்துள்ளது. நாம் பிறக்கும் முன் தாயின் உதரத்தில் எப்போதும் நீரால் சூழப்பட்டிருந்தோம். அந்த நீரில்தான் நம்முடைய உடல் உருவானது. குழந்தைகளின் உடலில் 75 விழுக்காடு நீரால் ஆனது. நன்கு வளர்ந்துள்ள மனித உடலில் 55 முதல் 60 விழுக்காடு நீரால் ஆனது. மனித மூளையில் 75 விழுக்காடு, மனித எலும்புகளில் 25 விழுக்காடு, மனித இரத்தத்தில் 83 விழுக்காடு என்ற அளவு நீர் நமது உடலில் உள்ளது. ஒரு சராசரி மனிதன் உணவின்றி ஒரு மாதம் உயிர் வாழ முடியும். ஆனால், நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ முடியாது.
நீருக்கும் உயிருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விண்வெளி ஆய்வை மேற்கொள்பவர்கள் எந்த ஒரு கோளத்திலும் உயிரினம் இருக்கிறதா என்பதை ஆராயும் போது, அந்தக் கோளத்தில் நீர் இருக்கிறதா என்பதைத்தான் முதலில் கண்டு பிடிக்கிறார்கள். நீர் இருந்தால், அங்கு உயிர் இருக்கும் என்பது அறிவியல் கணிப்பு.

அங்கிங்கெனாதபடி எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை நினைவுறுத்தும் வண்ணம் நம்மைச் சூழ்ந்திருக்கும் நீரை கற்பனையாய் எண்ணி ஒரு சிறு தியானத்தோடு இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.
பசும் புல் வெளியை மனக் கண்ணால் கண்டோம். அங்கு வீசிய தென்றலை மனத்தால் உணர்ந்தோம். அங்கு ஆயன் வாசித்த புல்லாங்குழலை கேட்டோம். அதே போல், இப்போது கற்பனையில் கொட்டும் மழையில் நனைவோம், அல்லது கொட்டும் அருவிக்கடியில் நிற்போம். தலை முதல் கால் வரை நம்மைக் குளிர வைக்கும் அந்த நீருக்கு நன்றி சொல்வோம். நம்மேல் உள்ள அழுக்கை நீக்கி நம்மைத் தூய்மையாக்கும் நீருக்கு நன்றி சொல்வோம். தண்ணீரின் குளிர் நமது உடலெங்கும் பரவி நிரப்புவதை உணர்வோம். நம்மைக் கழுவி, குளிர்வித்து, மகிழ வைக்கும் அந்த நீரைப் போல, ஆயனாம் இறைவனும் நம் உள்ளம் எழுந்து நம்மைக் கழுவிட, நம்மை இதமாய்க் குளிர்வித்திட, நம்மை மகிழ்வில் நிறைத்திட வேண்டுவோம்.

‘நீர் நிலைக்கு நம்மை ஆயன் அழைத்துச் செல்வார்’ என்பதைச் சிந்திக்கும் போது, கருவில் தோன்றியது முதல் கல்லறைக்குள் உறங்கும் வரை தண்ணீர் நம்மை உருவாக்கி, உயிர் கொடுத்து வளர்த்து வருவதை எண்ணிப் பார்ப்போம். நம் உள் உலகில், வெளி உலகில் நம்மைப் பேணி வளர்க்கும் நீருக்காக, அந்த நீரை நம் வாழ்வில் உயிர் தரும் ஊற்றாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி கூறுவோம்.தண்ணீர் எவ்வாறு உலகின் எல்லா மதங்களிலும் முக்கியதொரு அடையாளமாக உள்ளது, விவிலியத்தில் தண்ணீர் குறித்த சிந்தனைகள் யாவை, நீருடன் தொடர்பான சமுதாய சிந்தனைகள் என்னென்ன என்பவைகளைத் தொடர்ந்து சிந்திப்போம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

20 September, 2010

In admiration of dishonesty? ஏமாற்றுபவரைப் போற்றுவதா?

The Unjust Steward


On September 15 we celebrated the Feast of the Mother of Sorrows. It was also the International Day of Democracy. One of the most popular definitions of democracy was given by Abraham Lincoln: “Democracy is the government of the people, by the people, for the people.” The moment I thought of this quote, my mind instinctively thought of another popular quote of Lincoln, namely: “You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.” (There are various versions for this quote, although the sense remains the same.) Is there an intrinsic connection between these two quotes of Lincoln, I wonder. Has ‘fooling all the people all the time’ got anything to do with democracy as we see it today?
As I was thinking of the combination 'deception and democracy', my mind also thought of the word ‘scam’ and I got a flood of information from the web about scams in human history. One of them was titled “THE BIGGEST SCAM IN HISTORY”. This article was about Federal Reserve, a private company of bankers in the U.S. with twelve branch banks… The opening line of this article goes like this: “Pay attention now, you're about to read about the biggest and most successful scam in History.” As I was browsing through this article, I came across some interesting data about Lincoln and Kennedy. I quote from this article:

On June 4, 1963, President Kennedy signed a Presidential decree, Executive Order 11110. This order virtually stripped the Federal Reserve Bank of its power to loan money to the United States Government at interest. President Kennedy declared the privately owned Federal Reserve Bank would soon be out of business. In less than five months after signing that executive order President Kennedy was assassinated on November 22, 1963.
Lincoln also took on the bankers and that brave bold step may also have cost him his life.
During the Civil War (from 1861-1865), President Lincoln needed money to finance the War for the North. The Bankers were going to charge him 24% to 36% interest. Lincoln was horrified and greatly distressed, and he would not think of plunging his beloved country into a debt that the country would find impossible to pay back.
So Lincoln advised Congress to pass a law authorizing the printing of full legal tender Treasury notes to pay for the War effort… The Treasury notes were printed with green ink on the back, so the people called them "Greenbacks". Lincoln had printed 400 million dollars worth of Greenbacks (the exact amount being $449,338,902), money that he delegated to be created, a debt-free and interest-free money to finance the War…Lincoln was assassinated shortly after the war and Congress revoked the Greenback Law and enacted, in its place, the National Banking Act…
When you follow the money you find there was no-one in the world who had a better reason to kill these two Presidents than the bankers. It seems inconceivable that anyone could still think there was no conspiracy in the assassination of JFK, especially when you consider the many people that were murdered or had suspicious deaths and who were associated in some way with Kennedy's assassination. Is this proof? NO. Is this strong circumstantial evidence? YOU DECIDE.
http://www.wtv-zone.com/Mary/BIGGESTSCAMINHISTORY.HTML

Under the banner of democracy, deceptions have taken place around the world. Lincoln knew this and hence his famous statement on 'fooling all the people all the time'. Fooling the world is the theme of this Sunday’s Readings. Both the first reading (The Book of Amos 8: 4-7) as well as the gospel of Luke (16: 1-13) talk of cheating, defrauding, deceiving…

The words deceive and cheat have a large family of words in English.
deceive (verb)
mislead, delude, swindle, trick, cheat, outwit, fool, rob, defraud, practice deceit, not play fair, victimize, hoax, betray, beguile, take advantage of, impose upon, entrap, ensnare, hoodwink, play one false, gull, cozen, dupe, lead astray, bamboozle, fleece, beguile out of, humbug, circumvent, get around, lie to, falsify accounts, pass off, … (I can assure you, it is a truly long list. I have given only one third of this list…) Please visit: http://thesaurus.yourdictionary.com/deceive)
cheat (verb)
defraud, swindle, dupe, trick, deceive, victimize, hoax, con*, bilk, gull, bamboozle, fleece, overcharge, shortchange, gyp*, gouge*, rook, chisel*, cozen, mulct, be dishonest, practice fraud, crib*, plagiarize, copy, be unfaithful, play around, fool around, two-time*, stack the deck, stack the cards, play with marked cards, load the dice…
http://thesaurus.yourdictionary.com/cheat

Although cheating and deceiving are negative traits, one cannot but admire the various ways used for deceiving people. Every scam that comes to light seems to dazzle more brilliantly than the previous ones. Jesus talks in a tone of admiration about the dishonest steward. But, he does not simply stop with this admiration. He goes on to give some solutions as to how one can deal with money collected dishonestly.
The master commended the dishonest manager because he had acted shrewdly. For the people of this world are more shrewd in dealing with their own kind than are the people of the light. I tell you, use worldly wealth to gain friends for yourselves, so that when it is gone, you will be welcomed into eternal dwellings. (Luke 16: 8-9)
Jesus was sure that the kingdom of heaven belonged to the poor. So, he suggests that we need to gain their friendship at the expense of the riches we have gathered. How to befriend the poor? The coming week’s Gospel will teach us… See you then!



Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.



நான்கு நாட்களுக்கு முன் நாளுமொரு நல்லெண்ணத்தில் செப்டம்பர் 15 அனைத்துலக மக்களாட்சி நாள் என்றும், மக்களாட்சிக்கு நல்லதொரு இலக்கணம் சொன்னவர் ஆபிரகாம் லிங்கன் என்றும் சிந்தித்தோம். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தைக் குறிப்பிட்டதும், லிங்கன் சொன்ன வேறொரு கூற்று உள்ளத்தில் பளிச்சிட்டது. சொல்லப் போனால், மனக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது. அப்படி வந்த கூற்று இதுதான்:
எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.
You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.

லிங்கன் ஏமாற்றுவது பற்றி இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்காவில் வங்கிகள் தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது, போர்ச் செலவுக்கு லிங்கன் வங்கி உரிமையாளர்களிடம் பணம் கேட்டார். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்று உணர்ந்த லிங்கன், பாராளு மன்றத்தின் அனுமதியுடன் அரசே பண நோட்டுக்களை அச்சிடும் வண்ணம் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு உள்நாட்டுப் போரின் செலவுகளைச் சமாளித்தார். உள் நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் கொல்லப்பட்டார். அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது.
இதேபோல், ஜான் கென்னெடி அரசுத் தலைவராக இருந்தபோது, 1963ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். அதே ஆண்டு நவம்பர் 22ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னெடி இருவரின் கொலைகளுக்கும் தெளிவான முடிவுகள் இதுவரைத் தெரியவில்லை. இவர்களது கொலைகளுக்கும் பணம் படைத்த வங்கியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது வரலாற்றில் அவ்வப்போது அதிக சப்தமில்லாமல் பரிமாறப்படும் கருத்துக்கள்.
இவ்விரு எடுத்துக்காட்டுகளும் பனிப் பாறையின் மேல் நுனிதான். (Tip of the iceberg) பணம் என்று வந்து விட்டால், மக்களின் கண்களைப் பலவகையிலும் கட்டி, வித்தைகள் செய்வது உலக வரலாற்றில் அடிக்கடி நடந்துள்ளது.

எல்லாரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது என்று லிங்கன் சொல்லிச் சென்றது அவரது வாழ்க்கையிலேயே பொய்த்துப் போய், இன்றும் அது தொடர்ந்து பொய்யாகிப் போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கும் பண சக்தியை, பணத்தைக் கடவுளாக்கி வழிபடும் அரசியல் வாதிகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் எல்லாரும் எல்லா நேரங்களிலும் எமாற்றப்படுகிறோமோ என்ற ஆழ்ந்த கவலை மனதை அழுத்துகிறது.

அரசியலை, அரசியல் வாதிகளை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டும் போது, மற்ற விரல்கள் என்னைக் குத்திக் காட்டுவதை உணர்கிறேன். அரசியல் வாதிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, அல்லது, அவர்களையும் மிஞ்சிவிடும் அளவு நாம் வாழும் இந்த சமுதாயம் ஏமாற்றி வருகிறது. பாலில் நீரைக் கலந்து, அரிசியில் கல்லைக் கலந்து ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இன்று சிமென்ட்டில் சாம்பலைக் கலந்து கட்டப்படும் கட்டிடங்கள் இடிந்து உயிர்சேதம் உண்டாகிறது. நாம் வெகு விரைவில் மேற்கொள்ளவிருக்கும் ‘காமன்வெல்த்’ விளையாட்டுப் போட்டிகளுக்குக் கட்டப்பட்டிருக்கும் அரங்கங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறலாம் என்று கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. மருந்துகளில் கலப்படம் செய்யப்பட்டு மனித உயிர்கள் பலியாகியுள்ளன. பத்திரத்தாள் மோசடி, சீட்டுக் கம்பெனிகள், அயல் நாட்டு வேலைகள், அசலைப் போல போலிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், கள்ள நோட்டுகளை அச்சடித்தல், திருமண சந்தைகள் என்று எமாற்றுவது ஒரு முழு நேர வியாபாரமாகி விட்டது.
ஒவ்வொரு ஏமாற்றுச் செய்தியும் வெளி வரும் போது, பின்னது முன்னதை விஞ்சும் அளவுக்கு திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. திட்டமிட்டு ஏமாற்றுவதை ஆமோஸ் இறைவாக்கினர் இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகத்தில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்:

ஆமோஸ் 8 : 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

ஏமாற்றுவதை ஒரு தொழிலாக எடுத்து நடத்தி வருபவர்களைக் கண்டு வேதனை, கோபம் இவைகள் அதிகம் எழுந்தாலும், கூடவே வியப்பும், பிரமிப்பும் மனதில் எழுகின்றன. இவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டு ஏமாற்றுகிறார்களே என்ற வியப்பு. இந்த வியப்புதான் இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு கூறிய உவமைகளிலேயே புரிந்து கொள்வதற்கு வெகு கடினமான உவமை லூக்கா நற்செய்தி 16ம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ள இந்த ‘வீட்டுப் பொறுப்பாளர்’ உவமை. வழக்கமாக, இயேசுவின் உவமைகளில் வரும் கதாபாத்திரங்கள் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நாலு பேருக்குப் பாடமாக, முன் உதாரணமாக இருப்பார்கள். இன்று இயேசு கூறும் இந்த உவமையின் நாயகன் நேர்மையற்ற, ஏமாற்றுகிற வீட்டுப் பொறுப்பாளர். இவரது ஏமாற்றும் திறன் கண்டு இயேசு வியந்து போகிறார்.
வீட்டு உரிமையாளரின் செல்வத்தைப் பாழாக்கியதால், வேலையை விட்டு நீக்கப்பட இருந்த இந்த manager, தன் வீட்டுத் தலைவரிடம் கடன் பட்டவர்களை வரவழைத்து, அவர்களைத் தப்புக் கணக்குகள் எழுதச் சொல்லி, தன் எதிர்காலத்தைப் பாது காத்துக் கொள்கிறார். கதையின் முடிவில், நேர்மையற்ற அந்தப் பொறுப்பாளர் பாராட்டுகளைப் பெறுவது நம்மை வியக்கச் செய்கிறது.

இயேசு இவ்வாறு வியந்து பாராட்டுவது அவரது ஓர் அழகிய குணத்தை வெளிப்படுத்துகிறது. திறமை கண்டவிடத்து பாராட்டும் குணம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி என் நினைவுக்கு வருகிறது. "Give the devil his due" அதாவது, சாத்தானுக்குரிய பாராட்டைக் கொடு. சீசருக்கும், இறைவனுக்கும் உரியவைகளை ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல், அவரவருக்குரியவைகளைக் கொடுக்கச் சொன்னவர்தானே இந்த இயேசு. திறமை கண்டவிடத்து பாராட்டுவதற்கு பரந்த மனம் வேண்டும். இப்படி பாராட்டுவதால், இயேசு சாத்தான் பக்கம், அல்லது நேர்மையற்ற பொறுப்பாளர் பக்கம் சாய்ந்து விட்டார், அவர் செய்ததை நியாயப்படுத்துகிறார் என்று அர்த்தமல்ல. பாராட்டுவது வேறு, பின்பற்றுவது வேறு.
ஒளியின் மக்களையும் இந்த உலக மக்களையும் ஒப்புமைப் படுத்தி, உலக மக்களின் முன் மதியை பாராட்டுகிறார். இந்த பாராட்டுடன் இயேசு நிறுத்தவில்லை. தன் கருத்துக்களைத் தொடர்கிறார். முன் மதியுடன் சேர்த்து வைக்கும் செல்வத்தை பூச்சி அரிக்கும், அல்லது கள்வரால் திருடப்படும் கருவூலங்களில் சேர்ப்பதோ, தானியக் கிடங்குகளைப் பெரிதாக்கி மேலும், மேலும் சேர்த்து வைப்பதோ மதியீனம் என்று சில வாரங்களுக்கு முன் எச்சரித்துள்ளார் இயேசு. (லூக்கா 12 : 13-21; 33-34)

இன்று அவர் தரும் அறிவுரை இதுதான்: லூக்கா 16 : 9
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
இதே எண்ணத்தை ஆறு வாரங்களுக்கு முன் வேறொரு வகையில் எடுத்துரைத்தார் இயேசு. லூக்கா 12 : 33
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.
ஏழைகள் விண்ணரசின் உரிமையாளர்கள் என்பது இயேசுவின் நம்பிக்கை. (மத்தேயு 5 : 3; லூக்கா 6 : 20அ) எனவே, அழிந்து போகும் செல்வங்களைக் கொண்டு இந்த ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்வது முன் மதியுடன் நடந்து கொள்ளும் ஒரு செயல். அப்படி செய்து கொண்டால், விண்ணரசில் நமக்கும் இடம் கிடைக்கும் என்று தெளிவு படுத்துகிறார் இயேசு. ஏழைகளை எவ்வாறு நண்பர்களாக்குவது, அல்லது குறைந்த பட்சம் எப்படி அவர்களை மரியாதையாய் நடத்துவது என்பதை அடுத்த ஞாயிறு சிந்தனைக்குரிய நற்செய்தி நமக்குத் தெளிவு படுத்தும்.






இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

16 September, 2010

The Marble Marvel... பளிங்கில் புதுமை


The year 1498 - 1499. A young man, 23 years of age, was engrossed in creating a marble marvel. The young man… Michelangelo. The marvel… Pieta. It is one the most complete works of Michelangelo. Even if one is not a believer, this statue of Mary carrying Jesus on her lap, after his death, would evoke feelings of devotion. I have stood before this statue spell bound many a time. As I stood there in rapt attention, questions have crept in my mind… questions as to how a mother could look so serene in her sorrow when her son was killed in such a brutal way.
There have been questions as to whether such a scene has any biblical backing. There seems to be no biblical or historical evidence that such a scene would have occurred on Calvary. This scene of Mary carrying the dead body of Jesus under the cross is a popular Christian tradition. This popular tradition has been rendered in a timeless way in Pieta by Michelangelo.
I have two reasons to talk about Pieta today. One: today is September 15, the Feast of the Sorrowful Mother Mary (Seven Dolours). Another reason is the interpretation Harold Kushner has given to this masterpiece in his book ‘The Lord Is My Shepherd’.

One of the greatest artistic creations ever fashioned by human hands is the Pieta of Michelangelo, a sculpture done in 1498 (some say 1499) when the artist was only twenty-three… There is no questioning its status as a masterpiece of artistic skill. There is only one problem with it: The scene it portrays probably never happened. If you reread the accounts of the Crucifixion in the four gospels, you will find that only in the Gospel of John is Mary even present at the Crucifixion, and even then she is sent away before Jesus dies. In the other three versions, Mary is not listed among the Galilean women witnessing Jesus’ death. All accounts of Jesus being taken down from the cross and buried mention other people being involved, but not his mother.
How can Michelangelo’s Pieta move us so deeply, how can it strike us as so right and so true, if it portrays an event that never took place? Let me suggest that the woman in the sculpture, the figure holding the broken body of the crucified Jesus, looking at it so sadly and tenderly, is not Mary but God, God in His feminine aspect, not the God who created the world and taught us how to live in it, but the God who created life in all of its fragile vulnerability, the way a mother creates life, a God who grieves for His children when they suffer, who suffers with them when they are cruel to one another, when they hurt and kill one another. Every mother, every parent who suffers the loss of a child is reenacting God’s grief at the death of any one of His children. As one of America’s most prominent clergymen, the Reverend William Sloane Coffin, insisted, reaffirming his faith after the death of his son in an accident, “God’s was the first heart to break.” This, then, might be the response of God to those who ask, “If the Lord is our shepherd, why do innocent people suffer and die?” God does not, God cannot promise us happy endings in a world where laws of nature and human cruelty take their daily toll. God’s promise is not that we will be safe, but that we will never be alone.

The Eastern spirituality and religious tradition can easily identify the feminine, motherly aspects of God. Three other details of this statue help us deepen the interpretation of God as the figure of the mother in Pieta. The fist detail is about the age of the woman in the statue. When Jesus died, Mary would have easily been around 50, but the face of the woman in this statue is around 20. Michelangelo wanted to show that Mary was the unsullied virgin and hence age would not have had any effect on her. But, this young face can also be interpreted as God, who is timeless, being depicted as ever young.
The second detail is the power of the woman. It is highly impossible for a lady to carry a full grown man on her lap as depicted in this statue. To make this possible, Much of Mary's body is concealed by her monumental drapery, and the relationship of the figures appears quite natural. Once again, if this lady is seen as God, then not only can God carry Jesus, but the whole suffering world on the lap.
The third detail is the way the two hands of the woman are positioned. The right hand seems to hold Jesus; but the left hand is a bit outstretched either inviting us to share this moment of agony, or, as if to call our attention to what is being laid out on her lap. It is as if the lady is telling us, “See what you have done to my son.” Once again, if this lady were to be God, we can surely remember the Gospel of John 3: 16. It is as if God were telling each one of us, “I loved the world so much as to give my only son. But, see what the world has done to him.” All the three details of this statue seem to fit the interpretation that the lady depicted in the statue of Pieta can be looked at as the symbol of the motherhood of God.

One more aspect of this statue, namely, the face of Jesus, will bring us closer to linking this statue with Psalm 23, especially the second verse: “He makes me lie down in green pastures.” The face of Jesus in this statue is extremely calm. Quite often the face of those who meet with tragic death is not that serene. But, Jesus’ face in this statue is a definition of serenity. We have seen the deep, comfortable sleep children enjoy while they are carried by one of the parents. This is how Jesus looks when he is carried on the lap of his mother. We have reflected on how the sheep, a highly nervous animal, requires a totally calm, quiet ambience to lie down. When one sees Jesus lying calmly on the lap of the lady, we are reminded of the Shepherd who could make this possible… the green pastures where he makes me lie down.


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


1499ம் ஆண்டு. 23 வயது இளைஞன் சிலை ஒன்றை வடித்துக் கொண்டிருந்தார். முழு ஈடுபாட்டுடன், கவனத்துடன் அவர் வடித்த அந்தச் சிலை கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகப் புகழ்பெற்ற ஒரு சிலையாக உள்ளது. அந்த இளைஞன்... மிக்கேலாஞ்சலோ. அந்தச் சிலை "Pieta" என்ற மரியன்னையின் சிலை. மிக்கேலாஞ்சலோ வடித்த பல சிலைகளிலும் மிக அதிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், முழுமையாக உருவாக்கப்பட்ட சிலை Pieta என்று சொல்லப்படுகிறது.
இறந்து போன இயேசுவை மடியில் தாங்கி நிற்கும் தாய் மரியாவின் உருவம் அது. சிலுவையில் வீரனாய் இறந்த தன் மகனை மடியில் கிடத்திப் பெருமைப்படும் தாயை அங்கு காணலாம். இந்த உலகத்தால் பலவாறாக அலைகழிக்கப்பட்டு, அலங்கோலமாகிப் போன தன் மகனுக்கு ஓய்வை, ஆறுதலை, இளைப்பாறுதலைத் தரும் வகையில் மடியில் மகனைத் தாங்கியிருக்கும் தாயை அங்கு காணலாம். அன்பு, வேதனை, அமைதி, உறுதி என்று பல உணர்வுகளை அந்தத் தாயின் முகத்தில் காணலாம். கிறிஸ்தவம், விவிலியம் இவைகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் மனதிலும் இந்தத் தாயின் உருவம் ஒரு மரியாதையை, பக்தியை உருவாக்கும். இந்தத் தாயின் உருவத்தை நான் பார்க்கும் போதெல்லாம், சில கேள்விகள் என்னுள் எழும்.
இறந்து போன, அதுவும் இவ்வளவு அநியாயமாக, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும்? ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று இந்த அன்னையின் உருவைப் பார்க்கும் போது என் மனதில் கேள்விகள் எழுகின்றன.
இந்தக் காட்சி உண்மையில் நிகழ்ந்ததா? என்ற வேறொரு கேள்வியும் பலருக்கு எழுந்துள்ளது. இயேசுவின் பாடுகளைக் குறித்துப் பேசும் நான்கு நற்செய்திகளிலும் அன்னை மரியா சிலுவையடியில் நின்று கொண்டிருந்தார் என்பதை யோவான் நற்செய்தி மட்டும் ஒரே ஒரு முறை கூறுகிறது. (யோவான் 19 : 25-27) மரியாவைப் பற்றி அதிகம் கூறும் லூக்கா நற்செய்தியில் கூட, இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும் வழியில் எருசலேம் மகளிரைச் சந்தித்ததாகவும், அவரது மரணத்தை, பெண்கள் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். (லூக்கா 23 : 27-31, 49) ஆனால், மரியாவைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. தூரமாய் இருந்து பார்த்த பெண்கள் என்று லூக்கா கூறியிருப்பதிலிருந்து பெண்கள் கல்வாரிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனரா என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, இயேசுவின் தாய்க்கும் அந்த அனுமதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இயேசு சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு, புதைக்கப்பட்ட போதும் பெண்கள் அங்கு இருந்ததாகத் தெரியவில்லை.
எனவே, இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவமாய் Pieta அமைந்துள்ளது.

Pieta திரு உருவைப் பற்றி இன்று நான் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று... இன்று செப்டம்பர் 15 - வியாகுல அன்னை என்று நாம் வழங்கும் துயருறும் அன்னை மரியாவின் திருநாள். அன்னை மரியாவின் துயரங்களாய் பாரம்பரியம் கொண்டாடும் ஏழு துயர நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் கல்வாரியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் விவிலிய ஆதாரங்கள் தெளிவாக இல்லை. இருந்தாலும், ஒரு தாய் என்ற முறையில் அன்னை மரியா கட்டாயம் இந்தத் துயரங்களை அனுபவித்திருப்பார் என்று கிறிஸ்தவ பாரம்பரியம் நம்புகிறது. அந்தத் துயரங்களை நினைவு கூறும் நாள் செப்டம்பர் 15.
இரண்டாவது காரணம்... நாம் கடந்த சில வாரங்கள் விவிலியத் தேடலில் சிந்தித்து வரும் திருப்பாடல் 23உடன் Pieta உருவைத் தொடர்பு படுத்தி நம் சிந்தனைகளை எழுப்பலாம். Harold Kushner எழுதிய "ஆண்டவர் என் ஆயன்" என்ற புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளேன். அன்னை மரியா தன் மகனைத் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று கூறும் Kushner, தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல... மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைமையை பெண்மை, தாய்மை வடிவங்களில் பார்ப்பது நமது இந்திய, ஆசிய ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.

மிக்கேலாஞ்சலோ வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது 50 இருந்திருக்கும். ஆனால், Pieta வில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.
நன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், Pieta வில் உள்ள பெண் அதையும் சாதித்திருக்கிறார்.இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ செதுக்கியுள்ளார். இது இரண்டாவது அம்சம்.
இந்த இரு அம்சங்களும், Pieta வில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள்... Pieta வில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு அமர்ந்திருப்பது தாய்மை உருவில் இறைவன் என்று பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கவும் முடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்... நன்கு வளர்ந்துள்ள தன் மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் இறைவன் என்பதையும் உணரலாம்.

Pieta வில் காணப்படும் மற்றொரு அம்சத்தை நான் தாய்மை உருவில் அமர்ந்திருக்கும் இறைவனோடு இணைத்துப் பார்க்கிறேன். Pieta வில் உள்ள பெண்ணின் வலது கரம் மகனைத் தாங்கியிருக்கும் போது, இடது கரம் நம்மை நோக்கி நீட்டப்பட்டிருப்பது போல், அல்லது தன் மடியில் இருப்பவரைப் பாருங்கள் என்று உலகிற்குச் சொல்வது போல் இருக்கும்... தன் ஒரே திருமகனை அளிக்கும் அளவுக்கு (யோவான் 3 : 16) இந்த உலகின் மேல் அன்பு கூர்ந்த இறைவன், தான் அனுப்பிய மகனை இந்த உலகம் என்ன செய்துள்ளது என்பதை மீண்டும் நமக்குக் காட்டுவது போல் இதை எண்ணிப் பார்க்கலாம்.
உயிர்களை உருவாக்குவது தாய்மை, பேணி வளர்ப்பதும் தாய்மை, அந்த உயிர்கள் சிதைந்து, அழிந்து போகும் போது, உடைந்து போவதும் தாய்மை. இந்தத் தாய்மையின் முழு இலக்கணமாக Pieta உருவத்தை உலகம் கண்டு பயனடைந்து வருகிறது. தாயாக இருக்கும் இறைவனை எண்ணிப் பார்க்கவும் இந்த உருவம் நமக்கு உதவுகிறது.

Pieta உருவத்தின் மற்றொரு அழகு... இயேசுவின் முகம். மரணமடைந்தவர் முகங்கள் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. அதுவும், மிகக் கொடிய, சொல்லொண்ணாத் துயரங்கள் பட்டு இறப்பவர் முகங்களில் அமைதி அதிகம் இருக்காது. மாறாக, Pieta வில் இயேசுவின் முகம் ஆழ்ந்த அமைதியில் இருக்கும். தாய் அல்லது தந்தையின் அரவணைப்பில் உலகையே மறந்து உறங்கும் சிறு குழந்தையைப் போல் இயேசுவின் முகம் ஆழ்ந்த, முழுமையான அமைதியில் இருக்கும்.
சென்ற வாரம் விவிலியத் தேடலில் தன் ஆடுகள் பயம் ஏதுமின்றி பசும் புல் வெளியில் படுத்துறங்குவதற்கு, அமைதியானச் சூழலை ஆயன் உருவாக்கித் தர வேண்டும், அப்படி செய்வதற்கு ஆயன் தனிப்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் என்பவைகளைச் சிந்தித்தோம். Pieta உருவைப் பார்க்கும் போது, இதே எண்ணம் மீண்டும் மனதில் எழுகிறது. ஆழ்ந்த அமைதியில் படுத்துறங்கும் வகையில் இயேசுவைத் தாங்கி அமர்ந்திருக்கும் அந்தத் தாய் ஆழ்ந்ததோர் அமைதியை உருவாக்கும் திறமை பெற்ற நமது ஆயனை மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

இறுதியாக, கல்லில் சிலை வடிப்பது குறித்து ஒரு சிந்தனை...
எந்த ஒரு சிலையையும் வடிக்கத் தகுதியற்றதென பல கலைஞர்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பளிங்குக் கல்லிலிருந்து தாவீது என்ற உலகப் புகழ் பெற்ற சிலையை மிக்கேலாஞ்சலோ வடித்தார் என்பது வரலாறு. அவர் தாவீதை வடித்து முடித்ததும், "அந்தப் பளிங்குக் கல்லில் ஒரு வானதூதர் சிறைப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அவரை நான் விடுவித்தேன்." என்று சொன்னதாக வரலாறு கூறுகிறது.
நாம் இன்று பிரமிப்புடன், மரியாதையுடன், பக்தியுடன் காணும் இந்த Pieta உருவமும் ஒரு பளிங்குக் கல்லில் சிறைபட்டிருந்த உருவம் தான். அந்தப் பளிங்குக் கல்லை அதற்கு முன் பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், மற்றவர்கள் அதை வெறும் கல்லாகக் கண்டனர்... மிக்கேலாஞ்சலோ அந்த பளிங்குக் கல்லை முதலில் பார்த்தபோது அதனுள் ஒரு தாய் தன் மடியில் மகனைச் சுமந்திருந்த உருவைப் பார்த்திருப்பார். அந்தக் கல்லுக்குள் சிறைபட்டிருந்த அந்த உருவங்களை உலகறியக் காட்டினார். பளிங்குப் பாறைகளாய் இறுகிப் போன மனங்களில் சிறைபட்டிருக்கும் நம்மை அற்புதக் கலைஞனாம் இறைவன் வெளிக் கொணரவும், அமைதியின்றி அலையும் உள்ளங்களுக்கு ஆறுதலையும், இளைப்பாறுதலையும் ஆயனாம் இறைவன் வழங்கவும் நம்மைத் தொடர்ந்து பசும்புல் வெளியில் நடத்திச் செல்வாராக.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

13 September, 2010

Feeding the swine can bring enlightenment… பன்றிகள் மத்தியில்…ஆன்மீக ஒளி

The Prodigal Son among the Swine by Albrecht Durer, 1497-1498
http://www.backtoclassics.com/gallery/albrechtdurer/the_prodigal_son_among_the_swine/

How does one achieve enlightenment? Sitting under the Bodhi Tree, as the Buddha, or on the peak of a mountain or in a dense forest, making meditations and undertaking lots of penance… Can any one get enlightenment feeding the swine? Unthinkable? Think again. Today’s Gospel talks of a young man getting his enlightenment while he was feeding the swine.
Luke’s Chapter 15 carries probably the most popular parable of Jesus – The Parable of the Prodigal Son or Lost Son, along with parables of the Lost Sheep and the Lost Coin. I may have reflected on this parable at least on ten different occasions for my homilies. Almost on all these occasions, I have focussed more on the second part of the parable… the sweet ending which tells us that the Father, the Lost Son and, possibly, the First Son ‘lived ever after happily’! In the IV week of Lent this year we reflected on this parable, where I have painted two types of the Father in this story. (Kindly see my earlier blogpost ‘Prodigal Father’ on Saturday, March 13, 2010.)
Today I would like to spend more time on the first part of the parable… namely the part where the younger son gets lost and finds himself! Getting lost could be a help to fresh discovery. This can also be called ‘enlightenment’. The younger son, the Lost Son gets his enlightenment while feeding the pigs. My inspiration to focus on the first part of the parable came from Ron Rolheiser. He is a great Columnist and Author. He is a Roman Catholic priest and member of the Missionary Oblates of Mary Immaculate, is president of the Oblate School of Theology in San Antonio, Texas. (as his website says: http://www.ronrolheiser.com/)

In one of his reflections titled ‘Lost is a Place Too’, he writes like this (I quote him extensively):
During the summer when I was fourteen, my inner world collapsed. It began with the suicide of a neighbor. A young man whose health and body I envied went out one night and hung himself. Then another young man from our small farming community was killed in an industrial accident, and the summer ended with a classmate, a close friend, dying in a horse-back riding accident. I served as an altar-server at each of their funerals. My outside world stayed the same, but inside…things were dark, spinning, scary. I was in a free-fall. The specter of death suddenly colored my whole world and, even though I was only fourteen years old, I was now an old man inside. A certain youthfulness and joie de vivre slipped away from me for good. It truly was a summer of my discontent. I envied everyone who wasn't as depressed as I was. I felt myself the saddest 14 year-old in the world.
But, as all that pain, disillusionment, and loss of self-confidence was seeping into my life, something else was seeping in too, a deeper faith, a deeper vision of things, an acceptance of my vulnerability and mortality, and a sense of my vocation. I'm a priest today because of that summer. It remains still the most painful, insecure, depressed period of my life. But it remains too the time of deepest growth. Purgatory on earth, I had it when I was fourteen.
Many of us associate Christina Crawford, with the famous biography, Mommy Dearest, a book within which she shares what it was like to be the adopted and emotionally abused daughter of Joan Crawford. It's a story worth reading and I heartily recommend her follow-up book, a further biographical work entitled, Survivor. In it she chronicles her journey out of Hollywood and into spirituality and religion. And that journey…involved deep pain and soul-shattering disillusionment. Her story tells us what a dark night of the soul can look like. At one point, when things were at their darkest, she states that she was "completely lost", but adds: "Lost is a place too!"
She's right! Lost is a place too! And a very important one, humanly and spiritually.
Sometimes when the world is falling apart and we are haunted by the question: What is wrong? The real answer is that there is nothing wrong. The necessary storm has finally arrived and it is a good thing too because our falling apart is the only thing that can break down and transform that spoiled, rich, self-centered kid that is inside us all.
http://www.ronrolheiser.com/columnarchive/?id=376

I guess the spoiled, rich, self-centred kid Rolheiser is referring to here, can easily be christened the Prodigal Son.

Last two weeks we have been talking of, thinking of Mother Teresa very much. Her Birth Centenary as well as her 13th Death Anniversary came in quick succession. The whole world, irrespective of nation, language, religion… were talking highly of this great lady. Mother Teresa has been the model of so many Christian virtues. She could also be a great example of one whose world fell apart; but who rebuilt it in a matchless way… Hard to believe that Mother Teresa had tough time in her life? Read on.
A recent book published in 2007 is titled “Mother Teresa: Come Be My Light - The Private Writings of the Saint of Calcutta” (Edited and with Commentary by Brian Kolodiejchuk, M.C.) I have not read this book. But I saw some enlightening remarks made by Ron Rolheiser on this book and on Mother Teresa. Once again, I quote him extensively:
A recent book on Mother Teresa... makes public a huge volume of her intimate correspondence and in it we see what looks like a very intense, fifty-year, struggle with faith and belief. Again and again, she describes her religious experience as "dry", "empty", "lonely", "torturous", "dark", "devoid of all feeling". During the last half-century of her life, it seems, she was unable to feel or imagine God's existence.
Many people have been confused and upset by this. How can this be? How can this woman, a paradigm of faith, have experienced such doubts?And so some are making that judgment that her faith wasn't real. Their view is that she lived the life of a saint, but died the death of an atheist. What's to be said about all of this? Was Mother Teresa an atheist? Hardly! In a deeper understanding of faith, her doubts and feelings of abandonment are not only explicable, they're predictable.
What Mother Teresa underwent is called "a dark night of the soul." This is what Jesus suffered on the cross when he cried out: "My God, my God, why have you forsaken me?" When he uttered those words, he meant them. At that moment, he felt exactly what Mother Teresa felt so acutely for more than fifty years, namely, the sense that God is absent, that God is dead, that there isn't any God. But this isn't the absence of faith or the absence of God, it is rather a deeper presence of God, a presence which, precisely because it goes beyond feeling and imagination, can only be felt as an emptiness, nothingness, absence, non-existence.
In a remarkable book, The Crucified God, Jurgens Moltmann writes: "Our faith begins at the point where atheists suppose that it must end. Our faith begins with the bleakness and power which is the night of the cross, abandonment, temptation, and doubt about everything that exists! Our faith must be born where it is abandoned by all tangible reality; it must be born of nothingness, it must taste this nothingness and be given it to taste in a way no philosophy of nihilism can imagine."
Mother Teresa understood all of this. That is why her seeming doubt did not lead her away from God and her vocation but instead riveted her to it with a depth and purity that, more than anything else, tell us precisely what faith really is.
http://www.ronrolheiser.com/columnarchive/?id=373

I would like to add this note on Mother Teresa here. What she did for most part of her life would have drained any human being of both physical and emotional energy… even spiritual energy. She was dealing with misery, abandonment and suffering 24x365 or 366… year after year. Witnessing the darkest side of humanity day after day must have drained out all her energy. Every night she must have asked quite a few questions to God about the misery she was witnessing. If these questions did not arise in her, she was either a robot simply programmed to do charitable works or an angel camouflaged as a human. She was neither. She was simply an ordinary human being with an extraordinary heart. That is why even when her world was totally dark, she brought light to so many thousands. Only a person like Teresa could have gone through hell so long!

Let us come back to the younger son feeding the pigs… While feeding the swine, he decided not to be buried in self-pity, but to get up and go back to the father. I have read somewhere that the difference between a saint and us ordinary mortals is that when a saint comes to the end of a rope, he or she makes a knot and hangs on. Mother Teresa did. The Prodigal Son did. We are called to do so!Let us get up… go back to the Father and in that journey rediscover ourselves. It is good to get lost once in a while!


Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


ஞானோதயம், அறிவொளி, ஆன்மீக ஒளி எங்கே கிடைக்கும்? போதி மரத்தடியில், மலை முகடுகளில், அல்லது அடர்ந்த காடுகளில் கிடைக்கும். பன்றிகள் மத்தியில் பசி மயக்கத்தில் இருக்கும் போது, இந்த ஆன்மீக ஒளி கிடைக்குமா? கிடைக்கும். கிடைத்தது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது.
நமக்கெல்லாம் மிகவும் தெரிந்த உவமை, இயேசு கூறிய உவமைகளிலேயே மிகவும் பிரபல்யமான, புகழ்பெற்ற உவமை என்று சொல்லப்படும் ஊதாரி மகன் அல்லது காணமற்போன மகன் உவமை இந்த நல்ல செய்தியை நமக்குத் தருகிறது. நம் கதையின் நாயகன், அந்த காணாமற்போன மகன், ஆன்மீக ஒளி பெற்ற நிகழ்வை இன்றைய நற்செய்தி இவ்வாறு கூறுகிறது:

லூக்கா 15: 13-19
இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்தவராய், “... நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்” என்று சொல்லிக்கொண்டார்.

இந்த உவமையை இதுவரை பல முறை நான் சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்தி வந்த மகன், அவனை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவனைச் சமாதானப் படுத்த முயன்ற தந்தை என்று இக்கதையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்றைய ஞாயிறு சிந்தனையில் முதல் பகுதியில் நம் சிந்தனைகளை அதிகம் பகிர்வோம். இளைய மகனைப் பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்த, கண்டுபிடிக்கப்பட்ட மகனை விட, காணாமல் போன மகனைப் பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.

ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த) ஒரு குரு. இவரது சிந்தனைகள் எனக்கு அதிகம் பிடிக்கும். அவர் இந்த உவமையைப் பற்றி எழுதும் போது, காணாமல் போவது பற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். அவரது சிந்தனைகளே என்னையும் இவ்வழியில் சிந்திக்கத் தூண்டின. Ron Rolheiser வாழ்வில் 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறியுள்ளார்:
“எனக்கு 14 வயது ஆனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப் போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தான். அவனைப் பார்க்கும் போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவனைப் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவன் தூக்கில் தொங்கி இறந்தான். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவன் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்தில் இறந்தான். வேறொரு நண்பன் குதிரை சவாரி பழகும் போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தான். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச் சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக் கொண்டாலும், என் உள் உலகம் சுக்கு நூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னை விட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக் கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக் கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.”

தனது 14வது வயதில் நடந்தவைகளை இவ்வாறு கூறும் Ron Rolheiser, தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு புத்தகங்களைப் பற்றிக் கூறுகிறார். Christina ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்தப் புத்தகங்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப் பற்றி அவர் எழுதும் போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்." என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்." என்றும் குறிப்பிடுகிறார்.
ஆம் அன்பர்களே, காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டு பிடிக்கலாம். முற்றிலும் காணாமல் போகும், முற்றிலும் நொறுங்கி விடும் நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.

அன்னை தெரேசாவை அண்மையில் அதிகமாய் நினைத்து மகிழ்ந்தோம். பெருமை பட்டோம். அவரது பிறப்பின் 100ம் ஆண்டு நிறைவு நாள், அவரது மறைவின் 13ம் ஆண்டு நிறைவு நாள் இரண்டும் தொடர்ந்து வந்தன. அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்த அருளாளர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைத் தொடர்ந்து சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற புத்தகம் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவைகளைப் பற்றி எழுதியுள்ளார்.
யாருமே செய்ய விரும்பாத ஒரு பணியை ஆழ்ந்த அன்புடன் நாள் தவறாமல் செய்து வந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதவும், அவர் அந்தப் பணிகளைச் செய்து வந்த காலத்தில் இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில் 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? புத்தகத்தை வாசித்த பலருக்கும் எழுந்த கேள்விகள் இவை. இந்தப் புத்தகம் வெளி வந்ததும், ஒரு சிலர் அன்னை தெரேசா வாழ்ந்த வாழ்க்கை, அவரது சேவை அனைத்தின் மீதும் சந்தேகங்களை எழுப்பி, அவரைக் குறித்து தவறான முடிவுகளுக்கும் வந்தனர்.
உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். மகாத்மா காந்தி எழுதிய "சத்திய சோதனை" என்ற புத்தகமும் காந்தியைக் குறித்து கேள்விகளை எழுப்பவில்லையா?

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்க முடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அவர் செய்து வந்த பணியில் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தின் மிகவும் மோசமான, இருள் நிறைந்த, நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே. இப்படி கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எந்த வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், ஒன்று அவர் உணர்வுகள் அற்ற ஓர் இயந்திரமாய் இயங்கி இருக்க வேண்டும். அல்லது, மண் மீது நடந்தாலும், வானில் பறக்கும் வானதூதராக இருந்திருக்க வேண்டும். அவர் ஒரு சாதாரண மனிதப் பிறவி. ஆனால், அவர் உன்னதமான மனிதப் பிறவியாக இருந்ததால், இந்த இருளின் நடுவிலும் அவரால் தன் பணிகளைத் தொடர முடிந்தது.
"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று இயேசு கதறியது நினைவிருக்கலாம். இறைவனின் மகனே இப்படியொரு இருளைச் சந்தித்தபோது, தான் அல்லது தன் கடவுள் காணாமல் போய்விட்டதாக உணர்ந்த போது, அன்னை தேரேசாவைப் போன்ற சாதாரண, ஆனால், உன்னத மனிதர்கள் இந்த இருளைச் சந்தித்ததில் ஆச்சரியம், அதிர்ச்சி எதற்கு?

இருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசாவைப் போல்.
நமது இன்றைய நற்செய்திக் கதையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளைய மகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள் தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்." என்று எழுந்தானே... அதுதான் அழகு.
காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப் போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.

இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மைக் கண்டுபிடிப்போம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org