18 September, 2011

‘Generust’ (Generous-Just) God தாராள நீதியுள்ள கடவுள்




Long queues are more of a norm than an exception in India. I have experienced these queues at the railway reservation counters. Once when I went to book a train ticket, the queue was rather long and only one counter was open. I had mentally resigned myself to the fact that it would take at least half an hour for me to reach the counter. Thank God, I brought a book with me. So, I tried to immerse myself in the book. After half an hour, I was closer to the counter. I was actually the next person in line. At that time, another counter was opened and those who stood behind me rushed to the new counter and were attended to immediately. I could sense a wave of irritation sweep over me.

Fr Ron Rolheiser, one of my favourite homilists and columnists, recounts a similar incident that happened to him at an airport. He draws a parallel between his experience and the parable of the Labourers in the Vineyard (Matthew 20:1-16) given for our reflection today. Here is Fr Rolheiser’s account of what happened to him at the airport and his subsequent reflection:
I was alright with the long wait and moved patiently in the line - until, just as my turn came, another security crew arrived, opened a second scanning machine, and a whole line-up of people, behind me, who hadn't waited the forty minutes, got their turns almost immediately. I still got my turn as I would have before, but something inside of me felt slighted and angry: "This wasn't fair! I'd been waiting for forty minutes and they got their turns at the same time as I did!" I'd been content waiting, until those who arrived later didn't have to wait at all. I hadn't been treated unfairly, but some others had been luckier than I'd been.
That experience taught me something, beyond the fact that my heart isn't always huge and generous. It helped me understand something about Jesus' parable concerning the workers who came at the 11th hour and received the same wages as those who'd worked all day and what is meant by the challenge that is given to those who grumbled about the unfairness of this: "Are you envious because I'm generous?”
Are we jealous because God is generous? Does it bother us when others are given unmerited gifts and forgiveness? You bet! And ultimately that sense of injustice, of envy that someone else got  a break is a huge stumbling block to our happiness. Why? Because something in us reacts negatively when it seems that life is not making others pay the same dues as we're paying.
(From the homily of Fr Rolheiser: ON BEING JEALOUS OF GOD'S GENEROSITY - 2005-09-18

Jesus is the ‘story-teller par excellence’! He packs his parables with many surprising punches and unexpected reversals. The parable of the labourers in the vineyad is no exception. The owner of the vineyard employs labourers at various hours of the day, including the eleventh hour. Here is an extract from the homily of Fr Joseph Pellegrino talking of these labourers:
The hired laborers of the parable were the lowest class of Jewish workingmen. They and their families lived on the poverty level. If they were unemployed for even a day, the family would go hungry.
Their situation was known to be so bad that when they were hired for a day's work, Old Testament law commanded they be given salaries before sundown. Thus, they were able to shop and put bread and milk on the table…
The men standing in the plaza at 5 PM were not street bums. The plaza was the labor exchange. They would come there before sunrise with their tools. Their lucky friends had been already hired. The balance waited hoping. The fact that the last men waited till 5 PM showed how badly they wanted employment…

The focus of the parable is not the labourers but the owner of the vineyard. This man seems to go against all that we think is logical. For instance, we would expect him to pay the labourers starting from the ones who had worked the whole day. But, he begins with the last ones. Jesus seems to make a point here. The owner could have easily sent away the full day labourers giving them their due wages – namely, one denarius and then he could have called in the eleventh hour men and given them whatever he wanted. That way, things would have gone on smoothly. But, parables are not meant to smooth things out. They are supposed to drive home a point. By seeing the eleventh hour labourers get paid one denarius, the expectation of the full-day labourers soared. Thus, their disappointment became all the more poignant when they too were paid only one denarius. Many of us would feel that the owner was unfair. But from the point of view of the owner, he had not done any injustice to those who had worked all day. They were not deprived of their just wages – the wages agreed upon. When it came to the eleventh hour workers, the owner wanted to go beyond calculations and be generous.

Generosity and Justice are two facets of God that often seem to clash. We can understand a generous God who lavishes gifts on us. We can also understand a just God who pays what is due to each of us. But, a generous-just (GENERUST) God or a just-generous God seems to give us headaches. This is because our definition of generosity and justice are very different from that of God. Unfortunately, we tend to make God think like us.
This parable rudely upsets our picture of God. It tells us that our human standards are useless in measuring God or attempting to understand Him. What is God up to?  There is an indication in Isaiah 55, 8: "For my thoughts are not your thoughts, my ways not your ways - it is the Lord who speaks."
God is telling us through this strange parable: "Don't cut me down to your size. I will not squeeze into your stereotypes. You wish your enemies revenge, but I want mercy. You fashion God made to your own image, but I will not play your game. I have my own. And it will surprise you every time. I am a complete original. There is no one like me." (Fr Joseph Pellegrino)

Instead of shaping or creating God in our image, let us allow God to be God… the illogical, generous, prodigal Father who can blend Justice and Love in a unique style very different from ours. If we allow God to be God, then probably some traces of this divine generosity may rub off on us too!

சில ஆண்டுகளுக்கு முன், சென்னையில் ஒருநாள் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கு நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். வரிசை மிக நீளமாக இருந்தது. இவ்வளவு கூட்டம் இருந்தும், ஒரே ஓர் அலுவலர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். எப்படியும் நான் அந்த முன்பதிவு சன்னல் பக்கம் செல்ல இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிந்தது. வேறு வழியின்றிநான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அரைமணி நேரம் சென்றது. நான் பதிவு செய்யும் சன்னலை நெருங்கி விட்டேன். நான்தான் அடுத்தது. அந்த நேரம் பார்த்து, மற்றொரு அலுவலர் அடுத்த சன்னலைத் திறந்தார். எனக்குப் பின் வரிசையில் வெகு குறைந்த நேரமே நின்றுகொண்டிருந்த பலர் அந்தச் சன்னலுக்குச் சென்றனர். முன்பதிவை ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் எனக்கு முன் தன் வேலையை முடித்துவிட்டுப் போனார். அவர் என்னைப் பார்த்துச் சிரித்ததைப் போல் எனக்குத் தோன்றியது. எனக்குள் ஏகப்பட்ட எரிச்சல், கோபம். நான் அரைமணி நேரமாய் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குப் பின் வந்தவர்கள் அவ்வளவு நேரம் வரிசையில் நிற்கவில்லையே என்ற எரிச்சல்.

வீட்டுக்குத் திரும்பியதும், ஏன் எனக்கு எரிச்சலும் கோபமும் வந்தது என்று கொஞ்சம் ஆராய்ந்தேன். நான் வரிசையில் நிற்க ஆரம்பித்தபோது, எப்படியும் நான் வந்த வேலை முடிய அரைமணி நேரம் ஆகும் என்று தீர்மானித்துவிட்டேன். அதேபோல், அரைமணி நேரம் கழிந்ததும் என் வாய்ப்பு வந்தது. என் வரிசையில் யாரும் குறுக்கே புகவில்லை. என் வாய்ப்பை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை. ஆனால், அடுத்த சன்னல் திறந்ததால், எனக்குப் பின் வந்து வரிசையில் நின்ற சிலர் எனக்கு ஈடாக, அல்லது எனக்கு முன்னதாக வாய்ப்பு பெற்றனர். இதைக் கண்டு நான் ஏன் எரிச்சல் கொ்ண்டேன்? என்னுடைய வரிசையில் நான் காத்திருக்கும் வரை அமைதியாக இருந்த நான், அடுத்த வரிசை, அடுத்த சன்னல் திறந்ததும் ஏன் கோபமடைந்தேன்? எனக்குப் பின் வந்தவர்கள் என்னைப் போல் நேரத்தை வீணாக்கவில்லை என்று கோபமா? அல்லது, அவர்களுக்கு என்னைவிட கூடுதல் அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதே என்று கோபமா?
நியாயமாகப் பார்த்தால், எனக்குப் பின் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அரைமணி நேரமாவது அந்த வரிசையில் நின்றிருக்கவேண்டும். நியாயமாகப் பார்த்தால்என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் நீதி, நியாயங்கள் எல்லாம் நம்மைவிட மற்றவர்கள் அடையும் அதிர்ஷ்டத்தைப் பார்த்து நாம் அடையும் பொறாமையை நியாயப்படுத்த நாம் சொல்லிக்கொள்ளும் சாக்கு போக்குகள்.
என் எரிச்சல், கோபம் எல்லாம் எனக்கு ஒன்றை மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லித் தந்தன. என் மனம் இன்னும் கொஞ்சம் பரந்து விரிய வேண்டும் என்ற உண்மையை இந்தக் கோபம் எனக்கு உணர்த்தியது.

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லியிருக்கும் உவமையை நினைத்துப் பார்க்கும்போது, இதேபோன்றதொரு கோபம் தலைதூக்கியதைப் போல் உணர்ந்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கும் கோபம் தலைதூக்கலாம். நாள் முழுவதும் உழைத்தவருக்கும், நாள் இறுதியில் வந்து ஒரு மணி நேரம் உழைத்தவருக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கும் ஒரு முதலாளியைப் பற்றிய உவமை இது.  இந்த உவமையை முற்றிலும் புரிந்துகொள்வது கடினம் என்று ஒரு சில விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவேதான், இந்த உவமை ஒரே ஒரு நற்செய்தியில், அதாவது மத்தேயு நற்செய்தியில் மட்டும் உள்ளது என்பது அவர்கள் கணிப்பு.

தன் திராட்சைத் தோட்டத்தில் பணி செய்ய ஆட்களைத் தேடிச் செல்லும் ஒரு முதலாளியின் கதை இது. காலை 6 மணி முதல் அவர் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறார். மாலை ஐந்து மணி வரை ஆட்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றனர். மோசேயின் சட்டப்படி, எந்த ஒரு தொழிலாளிக்கும் மாலை 6 மணிக்கு  கூலி கொடுக்கப்படவேண்டும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் ஊதியம் பெற்றால்தான் அவர்கள் வீட்டில் உணவு இருக்கும். எனவே, அவர்களுக்கு மாலை 6 மணிக்கு கூலி கிடைத்தால்தான் அவர்களால் இரவு உணவை தன் மனைவி, மக்களுக்கு வாங்கிச் செல்ல முடியும் என்ற எண்ணத்தில் இந்த சட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
எனவே, உவமையில் வரும் முதலாளி மாலை ஆறுமணி ஆனதும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கத் துவங்குகிறார். இனி தொடர்ந்து, இந்த உவமையை இயேசுவின் வார்த்தைகளிலேயே கேட்போம்:
மத்தேயு நற்செய்தி 20: 8-16
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்து, கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும்என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம் தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரேஎன்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்என்று இயேசு கூறினார்.

இயேசுவின் எல்லா உவமைகளிலும் புரட்சியான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. பாரம்பரியம் என்ற பெயரில் சமுதாயம் கொண்டிருந்த தவறான எண்ணங்களைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த உவமையிலும் புரட்டிப் போடுதல்நடந்துள்ளது. நமது எண்ணப்படி, அந்த முதலாளி யாருக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும்? காலையிலிருந்து வேலை செய்தவர்களுக்கு முதலில் கூலி கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, அவர் இறுதியாக வந்தவர்களுக்கு முதலில் கூலி கொடுக்கிறார். இந்த உவமையின் புரட்சி இங்கு ஆரம்பமாகிறது.
ஒரே ஒரு மணி நேரம் உழைத்த அவர்களுக்கு ஒரு நாள் முழுவதற்குமான கூலி - அதாவது, ஒரு தெனாரியம் - கொடுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தலை கால் புரியாத, ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலை 6 மணி முதல் மாலை 6 வரை உழைத்தவர்களுக்கும் இதைக் கண்டு மகிழ்ச்சி... அவர்களுக்கு வேறொரு வகையில் மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் உழைத்தவர்களுக்கே ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் கிடைத்ததென்றால், தங்களுடைய 12 மணி நேர உழைப்பிற்கு, 12 தெனாரியம் கிடைக்கலாம் என்று அவர்கள் மனம் கணக்கிட்டிருக்கும். எனவே அவர்களும் ஆனந்த எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குப் பேசப்பட்ட ஒரு நாள் கூலியான ஒரு தெனாரியம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அத்தொழிலாளிகளின் கண்ணோட்டத்தில் இது அநியாயம், அக்கிரமம், அநீதி. நமது கண்ணோட்டத்திலும் அவர்களது ஏமாற்றம், கோபம் நியாயமாகத் தெரிகிறது. ஆனால், முதலாளியின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், உழைத்த எந்தத் தொழிலாளியையும் அந்த முதலாளி ஏமாற்றவில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கவில்லை. அனைவருக்கும் நியாயமான, பேசப்பட்ட கூலியையே கொடுத்தார். இறுதியில் வந்தவர்களுக்கு நீதி, நியாயம் என்ற கணக்கையெல்லாம் தாண்டி, தாராளமாகக் கொடுத்தார். முதலாளி காட்டிய தாராள குணம், நீதி இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை பணியாளர்களால்.

இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராள குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி அவ்வப்போது நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவனின் அன்பு அளவற்றது, நிபந்தனையற்றது என்பதையெல்லாம் சிந்திக்கும்போது, அவரது நீதி எங்கே என்ற கேள்வி எழுகிறது. அவர் நீதியானவர் என்பதை வலியுறுத்தும்போது, அவர் அன்பு எங்கே போயிற்று என்ற சந்தேகம் எழுகிறது. நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், இயேசு சொல்லும் உவமைகள் அமைந்துள்ளன.
இந்த உவமைகள் வழியாக இயேசு நமக்குக் காட்டும் கடவுளும் நமது எண்ணங்களில் வளர்ந்துள்ள கடவுளும் மாறுபட்டவர்கள். இந்த உவமையின் இறுதியில் அந்த முதலாளி கேட்ட கேள்வியை மீண்டும் ஒரு முறை செவிகொடுத்து, கவனமாகக் கேட்போம்.
தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை... உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’
"நான் கடவுளாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?" என்று கடவுள் நம்மைப் பார்த்து கேட்டால், என்ன பதில் சொல்வோம்? கடவுளை கடவுளாய் இருக்க விடாமல், நமது எண்ணங்களின்படி அவரைப் பல விதங்களில் வளைத்து, நெளித்து விடுகிறோமோ என்று அஞ்சுகிறேன். அளவுகடந்த அன்பும், தரமறியாது வழங்கும் தாராள குணமும் கொண்டவர் இறைவன். உண்மைதான். நீதியோடு, நடுநிலையோடு செயல்படுபவர் இறைவன். உண்மைதான். இவ்விரு குணங்களையும் தனித்தனியே சிந்திக்கும்போது பிரச்சனைகள் இல்லை. ஆனால், இறைவனின் அன்பையும், நீதியையும் இணைத்துப் பார்க்கும்போதுதான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

கடவுளின் அளவு கடந்த அன்பையும், நீதியையும் இணைக்க முடியாமல் தவிப்பது நாம்தான். கடவுள் இல்லை. கடவுள் தன் நீதியிருக்கை மீது அமர்ந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், நாம் கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு தீர்ப்புகள் வழங்கிவிடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் வழங்கிய தீர்ப்பைத்தான் கடவுளும் தருவார் என்றும் முடிவு செய்து விடுகிறோம். அந்த நேரத்தில் கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராள குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன?

கடவுளை கடவுளாகவே இருக்க விடுவோம். அப்போது நமக்கும் அந்தத் தெய்வீக இயல்பில் ஒரு சிறு பங்காவது கிடைக்கும்.

12 September, 2011

70 times 7 = 24x7 = ALWAYS… எழுபது தடவை ஏழுமுறை = எப்போதும்...



The cross installed on a pedestal at Ground Zero c. 2003



President Clinton tells of his first meeting with Nelson Mandela. In his conversation with this great leader of South Africa, the president said, “When you were released from prison, Mr. Mandela, I woke my daughter at three o’clock in the morning. I wanted her to see this historic event. As you marched from the cellblock across the yard to the gate of the prison, the camera focused in on your face. I have never seen such anger, and even hatred, in any man as was expressed on your face at that time. That’s not the Nelson Mandela I know today. What was that all about?”
Mandela answered, “I’m surprised that you saw that, and I regret that the cameras caught my anger. As I walked across the courtyard that day I thought to myself, ‘They’ve taken everything from you that matters. Your cause is dead. Your family is gone. Your friends have been killed. Now they’re releasing you, but there’s nothing left for you out there.’ And I hated them for what they had taken from me. Then, I sensed an inner voice saying to me, ‘Nelson! For twenty-seven years you were their prisoner, but you were always a free man! Don’t allow them to make you into a free man, only to turn you into their prisoner!’”
Let Me Tell You a Story By Tony Campolo (p.66-67)
Thank God, Nelson Mandela listened to this inner voice. Otherwise, he would still be serving life-imprisonment in his hatred. Forgiveness had set him a free person and today, at the age of 93, he is still an inspiration to thousands of men and women all over the world.

Today’s Gospel invites us to reflect on one of the basic needs of human beings – the need to forgive and be forgiven. Both these are two sides of the same coin, as expressed by St Francis of Assisi in his famous prayer for peace: “In pardoning, we are pardoned.” We are called to reflect on this basic need of human beings on a special day – September 11.
It is now 10 years since the ‘9/11 attacks’ took place in the U.S. 9,10,11… are not simply numbers. They are painful memories etched deep in the psyche of not only the people in the U.S. but of the rest of the world as well. Quite a few events are planned to commemorate this tragic event. One of them is the opening of the 9/11 Memorial in New York at Ground Zero. This Memorial has many meaningful exhibits, one of them being a cross. Here is a newspaper report on this cross:
A cross-shaped steel beam found amid the wreckage in the days following the September 11 terrorist attack has been lowered 70 feet down into the bowels of where the twin towers once stood to become part of the exhibit at the National September 11th Memorial and Museum. The two-ton, 20-foot-high T-beam, which has now become a religious relic, was taken from its temporary post near the oldest Roman Catholic parish in New York City, St Peter's, it was a symbol of hope for many working on rescue and recovery there, so much so that the construction worker who discovered it believes he stumbled on to a miracle. 'I saw Calvary in the midst of all the wreckage, the disaster,' Frank Silecchia recalled. 'It was a sign... that God didn't desert us.' (By Daily Mail Reporter, 25th July 2011)

Although the American Atheists have objected to this Cross being part of the Memorial, it is very heartening to see that thousands have drawn inspiration from the Cross. The Cross inspires people in so many ways and teaches us so many lessons. One of the lessons learnt from the Cross and, more particularly, from the Crucified Christ is forgiveness. He preached and practised forgiveness all his life. He ‘breathed’ forgiveness and hence when he was about to stop breathing, he wanted to leave that as his last breath. We are surely and direly in need of forgiving and being forgiven on a day like 9/11.

It would be hard for us to deal with all that Jesus did and said about forgiveness. We shall focus on just one aspect of forgiveness taught by Jesus. How many times do we forgive someone who errs? All of us must have faced this question in our lives. Peter had this doubt too. Here are the opening lines from today’s Gospel:
Matthew 18: 21-22
Then Peter came up and said to him, “Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?” Jesus said to him, “I do not say to you seven times, but seventy times seven.”
7, 70, 7x70… As we mentioned earlier, 9,10,11 are not simply numbers but memories, meaningful memories. Similarly in today’s Gospel, Jesus is not giving us a lesson in numbers. Forgiveness goes beyond numbers and calculations. When Peter asked Jesus whether forgiving seven times would be sufficient enough, Peter would have imagined that Jesus would appreciate him. Forgiving someone seven times was quite a generous gesture for a Jew. But, Jesus tells him to go beyond.
I imagine the conversation between Jesus and Peter in this fashion:
Peter: Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?
Jesus: Peter, your question is pretty surprising to me. ‘How often should I forgive my brother?’ It is like asking me, ‘How often should I breathe?’ If you don’t breathe, you die. If you don’t forgive, you die too. The simple formula… Forgiving = breathing.
Peter must have been stumped. So are we all. To say that forgiving should be as much part of us as breathing seems too contrived, too much of an exaggeration, isn’t it? But, it is surely worth the try.

There are people in the world who have tried this and have lived out forgiveness to the full – one of them being Nelson Mandela. I am sure most of us have heard of many instances where people were ready to forgive way beyond expectations. I am reminded of the news item which talked about how a father went to the death row to meet the young man who had raped and killed his teenage daughter. After coming back from meeting the young man, the father told the media that putting that man to death was surely not a solution and that he would want that man to come out of prison to lead a better life.

I have heard of a documentary “As We Forgive” made by Laura Waters Hinson in 2008 about the people of Rwanda. In February 2009, inspired by this movie, Catherine Claire Larson wrote a book: As We Forgive: Stories of Reconciliation from Rwanda. Here is a review of the book from Publishers Weekly:
Rwanda—bloodied, scarred and nearly destroyed by the 1994 brutality of the Hutu genocide of Tutsis—is now called an uncharted case study in forgiveness by author Larson, who was inspired by the award-winning film As We Forgive. Individual stories form prototypes: there is Rosaria, left for dead in a pile of bodies, who forgives her sister’s killer. And Chantal, whose family is brutally murdered yet who forgives her neighbor for the crimes. Devota, mutilated and left for dead, survives, forgives and eventually adopts several orphans. Each story is horrible and deeply personal as Larson mines the truths of forgiveness deep in each ones tale. Helpful interludes offer readers hands-on ways to facilitate forgiveness and take the next step to reconciliation in their own lives. This isn’t an easy book to read or digest, yet its message is mandatory: Forgiveness can push out the borders of what we believe is possible. Reconciliation can offer us a glimpse of the transfigured world to come.
Copyright © Reed Business Information, a division of Reed Elsevier Inc. All rights reserved.

Following the tragic events of 9/11, there were many decisions made – decisions that were official as well as personal. Official decisions were focussed more on hunting down the perpetrators of this tragedy. These decisions resulted in more deaths in Afghanistan and Iraq. Retaliations by the ‘terrorists’ took place in other places. The chain of revenge, retaliation, retribution still continues. Unfortunately, only these violent events have been reported by the media and are embedded in our memory. But, there were hundreds and thousands of personal decisions made by individuals to snap this chain of violence and begin the process of reconciliation. Revenge, retaliation, retribution can be stopped by reconciliation at the personal level as was done by Nelson, Rosaria, Chantal, Devota… and thousands more. There must have been thousands of such healing stories after the 9/11 attacks.

The Lord invites us today to search for and concentrate on these true events that are not easily available to us from the media. We need to go the extra mile to reach reconciliation. We need to fathom deeper to discover forgiveness. It has taken ten years to clear the debris of Ground Zero and turn that spot into a Memorial. It would take each of us a life long time to clear the debris of hatred and revenge in our hearts to turn them into 24x7 clinic of healing!



தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலாவும், முன்னாள் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளிண்டனும் முதல் முறையாகச் சந்தித்தபோது, கிளிண்டன் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்பினார். "நீங்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, அமெரிக்காவில் அதிகாலை மூன்று மணி. அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியைக் காண, நான் என் மகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்பினேன்" என்று பேச ஆரம்பித்த கிளிண்டன், தன மனதில் இருந்த கேள்வியை மண்டேலாவிடம் கேட்டார். "நீங்கள் அந்தச் சிறையில் இருந்து வெளியே வந்த நேரத்தில் பல TV காமிராக்கள் உங்களையேச் சுற்றிச் சுற்றி வந்தன. உங்கள் முகத்தை மிக நெருக்கமாய் அவர்கள் காண்பித்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த முகத்தில் நான் கண்ட கோபம், வெறுப்பு இவைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்." என்று கிளிண்டன் தயங்கித் தயங்கிப் பேசினார்.

அவரது தயக்கத்தைப் புரிந்து கொண்ட நெல்சன் மண்டேலா, அவருக்குப் பதிலளித்தார்: "நான் சிறையில் இருந்து வெளியே வந்தபோது எனக்குள் பொங்கியெழுந்த கோபமும் வெறுப்பும் காமிராக்களில் பதியும்படி வெளிப்பட்டதை அறிந்து நான் வருந்தினேன். அந்தக் கோபம், வெறுப்பு எங்கிருந்து வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அந்தச் சிறை வளாகத்தில் நான் நடந்தபோது, எனக்குள் எழுந்த எண்ணங்கள் இந்தத் திசையில் சென்றன: 'நெல்சன், உன் வாழ்வில் அர்த்தமுள்ளதென்று நீ நினைத்ததையெல்லாம் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். நீ வைத்திருந்த கொள்கை இறந்து விட்டது. உன் குடும்பம் காணாமற் போய்விட்டது. உன் நண்பர்கள் கொலையுண்டு போய்விட்டனர். இப்போது இவர்கள் உன்னை விடுதலை செய்கிறார்கள். இதோ இந்தச் சிறைக்கு வெளியே நீ சந்திக்கப் போகும் உலகில் உனக்கென ஒன்றும் இல்லை.' இச்சிந்தனைகள் என்னுள் கோபத்தையும், வெறுப்பையும் கிளறிவிட்டன. இதைத்தான் காமிராக்கள் படம் பிடித்தன. நல்லவேளை, அந்த நேரத்தில் மற்றொரு குரல் எனக்குள் ஒலித்தது. 'நெல்சன், கடந்த 27 ஆண்டுகள் நீ சிறைக்குள் அவர்கள் கைதியாய் இருந்தாய். ஆனால், உள்ளுக்குள் நீ சுதந்திர மனிதனாய் இருந்தாய். இப்போது சிறையை விட்டு வெளியேறும்போது, உன்னையே நீ வெறுப்பில் சிறைப்படுத்திக் கொள்ளாதே. அவர்களது கைதியாக மாறாதே.' என்று இந்தக் குரல் எனக்குச் சொல்லித் தந்தது."
- Tony Campolo “Let Me Tell You a Story”  

நெல்சன் மண்டேலா தன் சிந்தனைகளிலேயே மூழ்கிவிடாமல், இந்தக் குரலைக் கேட்டதால், தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மன்னிக்க முடிந்ததால், அவர் இன்று சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இன்றும், தனது 93வது வயதில் உலகின் தலை சிறந்த ஒரு தலைவராக, பலரது வாழ்வில் நல்ல பல தாக்கங்களை உருவாக்கி வரும் நல்ல மனிதராக அவர் வாழ்ந்து வருகிறார். 27 ஆண்டுகள் சிறைப்பட்டிருந்த அவர் வெளியே வந்தபோது, தன்னைச் சிறைப்படுத்தியவர்களை இனி ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தால், நெல்சன் மண்டேலா தன் வாழ்நாளெல்லாம் சிறைப்பட்டுப் போயிருப்பார். வரலாற்றில் தன் காலடித் தடங்களைப் பதிப்பதற்கு பதில், தன் உள்ளத்தில் பற்றியெரிந்த அந்த வெறுப்புத் தீயில் சாம்பலாகியிருப்பார்.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படைத் தேவையான மன்னிப்பைப் பற்றி சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு பெறுவதும் வழங்குவதும் நாம் வாழ்வில் அடிக்கடி உணர்ந்துள்ள ஓர் அனுபவம். இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள். அவற்றைத் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நாம் எப்போதெல்லாம் பிறருக்கு மன்னிப்பை வழங்குகிறோமோ, அப்போதெல்லாம் மன்னிப்பைப் பெறுகிறோம்... மன்னிப்புடன் வரும் ஆழ்ந்த அமைதியை, நிறைவைப் பெறுகிறோம். இதைத்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்கான தன் செபத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்: "மன்னிப்பதாலேயே, நாம் மன்னிப்பு பெறுகிறோம்." என்று.

இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மன்னிப்பைப் பற்றி பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவைகளை, செய்தவைகளை எல்லாம் சிந்திக்க பல நாட்கள் தேவைப் படும். இன்று அவர் மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தைச் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும் போது, எத்தனை முறை மன்னிப்பது? நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான் பேதுருவுக்கும் எழுந்தது. இதோ இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
மத்தேயு நற்செய்தி 18: 21-22
அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது இயேசுவின் பதில். 7x70=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள். யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது நிறைவைக் குறிக்கும் ஓர் எண். ஆறு நாட்கள் இந்த உலகைப் படைத்து, ஏழாவது நாள் மன நிறைவோடு இறைவன் ஓய்வெடுத்தார் என்று தொடக்க நூலில் நாம் வாசிக்கிறோம். எனவே, பேதுரு தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி, ஒரு முழுமையான, நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை முறை மன்னிக்க வேண்டும்என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொறுத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறிவிட்டன. இயேசு தன் இறுதி மூச்சுக்காக சிலுவையில் போராடியபோதும் 'தந்தையே, இவர்களை மன்னியும்' என்று சொன்ன கல்வாரி நிகழ்வுகள் நமக்கு நினைவிருக்கும், இல்லையா?

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நெல்சன் மண்டேலா. அண்மைக் காலங்களில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட மற்றொரு செய்தி இது.

2008ம் ஆண்டு Laura Walters Hinson என்ற அமெரிக்க இளம் பெண் ஆப்ரிக்காவின் Rwandaவைப் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுத்தார். அந்தப் படத்தின் தலைப்பு: As We Forgive - நாங்கள் மன்னிப்பது போல். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, திரையில் தோன்றும் முதல் வரிகள் இவை: "சிறையில் இருக்கும் ஒரு கொலைகாரனை நீங்கள் வாழும் பகுதியில் விடுதலை செய்யப்போகிறார்கள் என்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நாளை இந்த அரசு ஒருவரை அல்ல, 40000 கொலையாளிகளை விடுதலை செய்கிறார்கள். இவர்கள் நம் மத்தியில் வாழப் போகிறார்கள்." மனதை உறுத்தும் இந்த வரிகளுடன் இந்த ஆவணப் படம் ஆரம்பமாகிறது.
Rwandaவில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களில் 10 லட்சம் பேருக்கு மேல் 1990களில் கொல்லப்பட்டனர் இதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இந்தக் கொடூரக் கொலைகளைச் செய்ததாக 70000 பேருக்கும் மேற்பட்ட வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் ஒத்துக்கொண்டனர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2005ம் ஆண்டு இவர்களை அரசு விடுவித்தது. தாங்கள் கொலை செய்தது போக எஞ்சியிருந்த அதே மக்கள் மத்தியில் இவர்கள் மீண்டும் வாழ வந்தனர். கொலையாளிகளுக்கும், கொலை செய்யப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையே நடந்த அந்த ஒப்புரவை நாங்கள் மன்னிப்பது போல்என்ற இந்த ஆவணப் படம் காட்டுகிறது.

மனதைச் சங்கடப்படுத்தும் பல காட்சிகள் இந்தப் படத்தில் உள்ளன. கொலையாளிகளை மன்னிக்கவே முடியாது என்று ஆரம்பத்தில் கூறும் மக்கள், முடிவில் அவர்களை மன்னிக்கும் காட்சிகள் உள்ளத்தை அதிகம் பாதிக்கின்றன. நம்பிக்கையைத் தருகின்றன. அதே போல், அந்தக் கொலையாளிகளும் உண்மையிலேயே மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவது மனதைத் தொடும் காட்சிகள். இவர்கள் நடிகர்கள் அல்ல, மன்னிப்பை உண்மையாக வாழ்ந்தவர்கள். இந்த ஆவணப்படம் பல திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளை மையமாக வைத்து 2009ம் ஆண்டு இதேத் தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. Catherine Larson எழுதிய இந்தப் புத்தகம் பல்லாயிரம் மனங்களில் மன்னிப்பை வழங்கியுள்ளது, மன்னிப்பை வழங்கத் தூண்டியுள்ளது.

இந்த ஆவணப் படத்தில் ஒருவர் சொல்லும் கூற்றை மட்டும் இங்கு கூற விழைகிறேன். மன்னிப்பைப் பற்றி அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்கெல்லாம் நல்லதொரு பாடமாக அமைகிறது: "இந்த மக்கள் தங்களது வேதனை, கசப்பு, வெறுப்பு இவைகளிலேயே வாழ்ந்து வந்தால், இந்த உணர்வுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். ஓர் உலோகக் கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள அமிலமானது எப்படி அந்தக் கிண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, இறுதியில் அந்தப் பாத்திரம் முழுவதையும் கரைத்து, அழித்து விடுகிறதோ, அதே போல் இவர்களது இந்த கசப்பான எண்ணங்கள், நினைவுகள் இவர்களை முற்றிலும் அழித்து விடும். மன்னிப்பு ஒன்றே இவர்களைக் காப்பாற்ற முடியும்."

மன்னிப்புக்குப் பதில் வெறுப்பு நம் மனங்களில் புரையோடிப் போய் நமது மனதையும் வாழ்வையும் ஓர் அமிலமாய் அரித்துவிட்டால், அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு செப்டம்பர் 11ம் தேதி நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை நாளாக அமைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் 11 அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலக வர்த்தகக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஒரு பெரும் பாரமான பாடமாக இருந்து வருகிறது. செப்டம்பர் 11ம் தேதியின் பத்தாம் ஆண்டு நினைவைச் சுமந்து போராடும் அமெரிக்க மக்களை, முக்கியமாக உலக வர்த்தகக் கோபுரங்களில் இந்த மதியற்ற வன்முறையால் உயிரிழந்தோரின் குடும்பங்களை, இப்போது இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களில் உயிரிழந்தோர் குடும்பங்களை இறைவனின் பாதத்திற்கு அழைத்து வருவோம். அவர்கள் வெறுப்பிலிருந்து வெளியேறி, மன்னிப்பில் வளர அவர்களுக்காகச் சிறப்பாக வேண்டுவோம்.

இரண்டாம் உலகப் போரில் நாட்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பல ஆயிரம்.
நாட்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் காணப் பட்ட வரிகள் இவை. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். ஒரு செபம் போல ஒலிக்கும் இந்த வரிகளுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவைகளையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.

04 September, 2011

RELATIONSHIPS… HANDLE WITH CARE உறவுகள்... கவனமாகக் கையாளவும்




Some emails go around the web world quite a few times. One such mail that I have been receiving now and then in the past five years is the short reflection written by Brian G. Dyson, who was the former CEO of Coca Cola. I am sure all of you must have seen this reflection quite a few times. What Brian had written as well as today’s gospel talks about family relationships. Here is what Brian wrote:
Imagine life as a game in which you are juggling some five balls in the air.
You name them - Work - Family - Health - Friends - Spirit, and you're keeping all of these in the air.
You will soon understand that work is a rubber ball. If you drop it, it will bounce back. But the other four balls -- family, health, friends and spirit are made of glass. If you drop one of these, they will be irrevocably scuffed, marked, nicked, damaged or even shattered. They will never be the same. You must understand that and strive for balance in your life.

Brian goes on to give 12 tips as to how one can balance one’s life. Today’s Gospel talks of how to achieve balance in a relationship that is soured or how to set right the mistake committed in our family circles. The words of Jesus sound simple - I would even say simplistic - but, very challenging. Here is the text from today’s Gospel of Matthew:
Matthew 18: 15-17
Jesus said: “If your brother sins against you, go and show him his fault, just between the two of you. If he listens to you, you have won your brother over.
But if he will not listen, take one or two others along, so that 'every matter may be established by the testimony of two or three witnesses.'
If he refuses to listen to them, tell it to the church; and if he refuses to listen even to the church, treat him as you would a pagan or a tax collector.”

The opening words of Jesus are a veritable salvo… Although I have read this passage quite a few times, this was the first time I noticed this salvo. Jesus begins by saying, “If your brother sins against you,…
When a problem arises in our family or among friends, we expect the one who had committed the mistake to take the first step. But, here Jesus reverses this logic. Not the one who sins, but the one who is sinned against needs to take the first step towards setting things right! I am reminded of the famous lines of Jesus in his Sermon on the Mount.
Matthew 5: 23-24
Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother has something against you, leave your gift there in front of the altar. First go and be reconciled to your brother; then come and offer your gift.

In both these instances, I presume Jesus was more keen on getting the problem resolved rather than spending time on investigations as to who caused the problem or wait for the ‘culprit’ to take the initiative. Hence, he proposes that we take the initiative and He says this simply AS A MATTER OF FACT, as a matter of NORMAL COURSE OF ACTION. If only in every family someone takes the initiative to resolve the conflict as soon as it arises, instead of allowing it to fester, so many hurt feelings can be healed… So many psychiatrists, or even priests, would go out of business!

Jesus proposes three steps. The first one is the most sensible adult-to-adult transaction. Confronting (or, care-fronting) the person privately and telling him or her about the mistake… calling a spade a spade! When this does not work, then the second and third steps, namely, the third party intervention is needed.
Quite a few scripture scholars say that the very last step proposed in Matthew’s gospel, namely, “treat him as you would a pagan or a tax collector”, may have been an addition by Matthew. This line does not reflect the ‘all-inclusive-attitude’ of Jesus. I tend to agree with this view especially since Jesus, in the opening lines of this passage, proposes the hard step of taking the initiative to resolve problems. This initiative is more towards reconciliation and healing rather than sitting in judgement on my brother or sister.

During my summer vacation, I watched some of the episodes from two soap operas (mega-serials, as they are known in India) which are running very successfully in Tamil TV channels. Every episode tried to make family problems more and more complicated. The more complex the problem, the better for the soaps. Unfortunately, there is a sizeable audience which tends to agree with soaps that tell us that family problems are always complicated. As against this, when Jesus tells us that problems can be resolved, we tend to brush his words aside saying that they are too idealistic or impossible!

If only we could give an honest chance for the words of Jesus!!!...  


கடந்த ஐந்து ஆண்டுகளாக மின்னஞ்சலில் ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. இந்த மின்னஞ்சல் எனக்கே பத்து முறைகளுக்கும் மேல் என் நண்பர்களால் அனுப்பப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய சிறு கட்டுரை இது.
பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையின்போது, கையில் இருப்பது ஒன்று அல்லது இரண்டு பந்துகள் என்றால், அந்தரத்தில் சுற்றிவரும் பந்துகள் இரண்டு அல்லது மூன்று இருக்கும். இந்த வித்தையை அனைவரும் செய்துவிட முடியாது. தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson எழுதியுள்ள இக்கட்டுரையிலிருந்து முதல் சில வரிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்:
பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் - அதாவது குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறி விடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதைச் ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு சிந்தனை நம்மை அழைக்கிறது.

ஜூலை மாதம் நான் கோடை விடுமுறையில் இருந்தேன். அந்நேரத்தில், நமது தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் இரண்டு மெகாத் தொடர்களின் ஒரு சில பகுதிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது... இதை வாய்ப்பு என்பதா, அல்லது நிர்ப்பந்தம் என்பதா... என்று சொல்லத் தெரியவில்லை. அந்த இரு தொடர்களிலும் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் காட்டப்பட்டன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா?  அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டு கொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்பட்டன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் ஒவ்வொரு நாளும் வெகு நேரம் காட்டப்பட்டன.

நான் பார்த்த அந்தத் தொடர்கள், தற்போது தமிழ் நாட்டில் ஈராண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று கேள்விப்படுகிறேன். இந்தத் தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு.இந்தத் தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன என்று கேள்விப்படுகிறேன். அவ்வப்போது நிஜமானக் குடும்பத்தில் மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகள் பின்புலத்தில் இந்தக் குடும்பங்களைப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்படுகிறேன். நான் கேள்விப்படுவதும், சந்தேகப்படுவதும் உண்மையாக இருக்கக் கூடாது என்பது என் விருப்பம், என் செபம்.

குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி நம் தொலைக்காட்சித் தொடர்கள் சொல்வதைப் பரவலாக ஏற்றுக்கொள்ளும் நம்மிடம், பிரச்சனைகளைத் தீர்க்கும் மாற்று வழியொன்றை இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:
மத்தேயு நற்செய்தி 18: 15-17
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.

இப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும்.  Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்தப் பாடங்களை விவிலியத்திலும், மனநலவியல் நூல்களிலும் எத்தனையோ முறை வாசித்திருக்கிறோம். இருந்தாலும், இப்பாடங்களைக் கற்று, தேர்ச்சி பெறமுடியாமல் தவறி விடுகிறோம். இன்று இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, அவைகளில் தேர்ச்சி பெற இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சாட்டையடிபோல, நம்மை விழித்தெழச் செய்கிறது. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். இந்த முதல் வரியில் இயேசு கூறியிருப்பதே ஒரு சவால் என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீ உன் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அது இயல்பாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.

பொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச் சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்ல வேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற கணக்கெல்லாம் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வர வேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் மட்டுமல்ல, மனதாலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விஷயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்று விடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம் விட்டுப் பேசுவதற்குப் பதில் பல மாறுபட்ட, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம். நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

இயேசு கூறும் இலக்கணப்படி அமையும் குடும்பங்களில் குற்றம் புரிந்தவர் திருந்தி வரவேண்டும் என்று காத்திருக்காமல், முதல் முயற்சிகளை நாம் மேற்கொண்டால், அங்கு பிரச்சனைகள் தீர வழியுண்டு. உறவுகள் வலுப்பட வழியுண்டு. அவர்கள் கூடிவரும் நேரத்தில் இறைவனின் பிரசன்னம் அங்கு நிறைந்து பொங்கவும் வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:

இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு நற்செய்தி 18: 20