18 December, 2011

"Do They Know It's Christmas?" 'இது கிறிஸ்மஸ் காலம் என்பது அவர்களுக்கு தெரியுமா?'



Annunciation


Exactly a week to go… Next Sunday will be Christmas. Almost everyone in the world knows that it’s Christmas time. But, do THEY know it’s Christmas? Who? The starving millions in Africa. ‘Do They Know It’s Christmas?’ was the tile of a song written by two famous musicians from Ireland and Scotland. The images of starving children and adults from the continent of Africa, especially from Ethiopia, began appearing on TV and newspapers in 1983 and they pierced the conscience of the human race. Bob Geldof, an Irish singer and songwriter, saw the report, and called Midge Ure, a Scottish guitarist, and singer. Together they quickly co-wrote the song, "Do They Know It's Christmas?" in the hope of raising money for famine relief. Geldof then contacted colleagues in the music industry and persuaded them to record the single under the title 'Band Aid' for free. Performed by a collection of British and Irish musicians, the song was released on 7 December 1984 and became the fastest-selling single ever in Britain and raised £8 million. Encouraged by this outpouring of goodwill from the people, Geldof then set his sights on staging a huge concert to raise further funds for famine-stricken Ethiopia.

Famous singers around the world came together on July 13, 1985, to perform ‘Live Aid’ to help the starving millions of Ethiopia. Billed as the "global jukebox", the event was held simultaneously in Wembley Stadium in London, England, United Kingdom (attended by 72,000 people) and John F. Kennedy Stadium in Philadelphia, Pennsylvania, United States (attended by about 100,000 people). On the same day, concerts inspired by the initiative happened in other countries, such as Australia and Germany. The concert grew in scope, as more acts were added on both sides of the Atlantic. It was one of the largest-scale satellite link-ups and television broadcasts of all time: an estimated global audience of 1.9 billion, across 150 nations, watched the live broadcast. As a charity fundraiser, the concert far exceeded its goals: on a television programme in 2001, one of the organisers stated that while initially it had been hoped that Live Aid would raise £1 million with the help of Wembley tickets costing £25.00 each, the final figure was £150 million (approx. $283.6 million). (Wikipedia)

One of the songs performed during this Live Aid concert was Paul McCartney’s “Let It Be”. The whole idea of ‘Live Aid’ as well as the song “Let It Be” are relevant for our Sunday reflection today. Paul McCartney (of Beatles fame) claimed in some interviews that the song ‘Let It Be’ was inspired by a dream he had about his own mother named Mary. But the words ‘Mother Mary’ that Paul has used in this lyric, as well as the phrase ‘Let it be’ often repeated in this song, bring to one’s mind the image of our Lady, the Mother of Jesus, and her famous lines spoken to Angel Gabriel during the scene of the Annunciation… “Let it be to me according to your word.”
Here are the opening lines of the famous song “Let It Be”.
When I find myself in times of trouble, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness she is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be

As Christmas approaches, schools and parishes would enact the Christmas story. This story usually begins with the scene of the Annunciation, and then goes on to show the Visitation, the Nativity, Shepherds and the Magi…. all in a matter of half an hour. Usually children enact these scenes and hence they are made all the more lovely. A few years back, when we were returning home after one such tableau, one of my friends suddenly posed this question: “Was the first Christmas this good?” This question was like a wake-up call!
What was the first historical Christmas like? Surely not such a happy, peaceful event. When history is transformed into pages in a book, we tend to remember the glorious moments of that history and tend to forget the real pain and misery of those events. Similarly, when reading the Gospels during our liturgical celebrations, our minds tend to ‘spiritualise’ these events. It is so easy for us to say at the end of the Gospel reading that it is Good News. Today after reading the scene of the Annunciation during the Mass, the Priest said in a clear loud voice, “This is the Gospel (Good News) of the Lord” and all of us responded “Praise to You, Lord Jesus Christ.” But, was it really ‘good news’ when this scene took place the very first time?

The original Christmas story was far from happy and holy. It was loaded with pain and misery. So many things worked against happiness and holiness. We shall consider only one aspect… namely, that Judea was an occupied territory. Army soldiers are not the best models of virtue, to say the least. The duty of army personnel, by definition, is to protect a country. But, unfortunately, there are soldiers who have joined the army for various other reasons. Such soldiers are a threat to common people. Women, especially young girls, who live around army camps, do not live. They die each day in fear. If people have to fear the soldiers of their own country, what can we say about soldiers from foreign lands? If we can talk to the people of Afghanistan or Iraq we would know what it means to live in country occupied by foreign troops. This was the plight of Mary, who had to live through horrors enacted by Roman soldiers day after day… everyday. Not a day must have passed without Mary raising questions and prayers to God about their liberation. Her prayers, her questions were answered. God said, “I shall send my Son to save you. You will become the mother of my Son.” Mary wanted to escape the frying pan and God seemed to offer her the fire. God wanted her to become an unwed mother!

Mary knew full well what this meant. Sure death… death by being stoned! Mary must have witnessed such brutal murders. Especially, after the Roman occupation, quite a few young girls, raped by the Roman soldiers, must have faced such sentences and, hence, the frequency of such gory scenes must have increased, haunting Mary day and night. When Mary cried to God for liberation, God offered her an ‘impossible’ invitation. God invited her to become an unwed mother!
Most of us imagine the scene of the Annunciation in terms of holy light, soft music and Mary’s immediate ‘Yes’ to God. She would not have said an immediate “Yes, my Lord…” Much less would she have jumped up in joy to sing “The Magnificat”. She may have suffered sleepless nights to gather enough courage to say this ‘yes’ to God. Finally, she did say ‘yes’, relying totally on God and not thinking about all the earthly consequences… Here are the closing lines of today’s Gospel:
And the angel said to her, "The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; therefore the child to be born will be called holy, the Son of God. And behold, your kinswoman Elizabeth in her old age has also conceived a son; and this is the sixth month with her who was called barren. For with God nothing will be impossible." And Mary said, "Behold, I am the handmaid of the Lord; let it be to me according to your word." (Luke 1: 35-38)
It is the ‘let it be’ of Mary that made the whole scene of the Annunciation ‘good news’. Without that surrender of Mary, trusting only on God, this scene would be far from ‘good news’.

During the Live Aid concert in 1985, people around the world must have had so many questions about the famine in Ethiopia. The song “Let It Be” may have come as some sort of an answer, although not a complete one.
Mary’s ‘let it be’ was not the complete solution for all the problems; but the starting point of the salvation history. It required great courage and trust on the part of Mary to say this ‘let it be’. May Mother Mary teach us this courage and trust to overcome our personal troubles and the troubles of the world around us during this Christmas.


Live Aid Logo


உலகின் பல கோடி மக்களை ஒரே நேரத்தில் மனிதாபிமானம் நிறைந்த ஒரு முயற்சியில் இணைத்த  அந்த நாள்... 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி. ஆப்ரிக்காவின் வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள் மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. Bob Geldof மற்றும் Midge Ure என்ற இரு பெரும் இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களை மனதில் கொண்டு, முக்கியமாக அங்கு பட்டினியால் இறக்கும் குழந்தைகளை மையப்படுத்தி, 'இது கிறிஸ்மஸ் காலம் என்பது அவர்களுக்கு தெரியுமா?' "Do They Know It's Christmas?" என்ற கேள்வியை எழுப்பும் ஒரு பாடலை இவர்கள் இயற்றி பாடினார்கள். அந்தப்பாடல் மிகப்பெரும் அளவில் பிரபலமானது. அந்தப் பாடலின் இசைத்தட்டுகள் விற்பனையில் கிடைத்த தொகையை இவர்கள் எத்தியோப்பியாவிற்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும், அவர்கள் மனம் திருப்தி அடையவில்லை. இன்னும் அதிகம் செய்யவேண்டும் என்று எண்ணினர். எத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன் Live Aid என்ற இசை விழாவை இவ்விருவரும் ஏற்பாடு செய்தனர்.
மைக்கில் ஜாக்சன் உட்பட, உலகப் புகழ்பெற்ற பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இலண்டன் மாநகரின் Wembley விளையாட்டுத் திடலிலும், அமெரிக்காவில் Philadelphia மாநகர் கென்னடி விளையாட்டுத் திடலிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி செயற்கைக்கோள் வசதிகளுடன் உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யட்டது. அதுவரை விளையாட்டுப் போட்டிகளும் திரைப்பட விழாக்களும் மட்டுமே உலகின் பல நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. 150 நாடுகளில் 190 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் பாப்பிசைக்கு ஒரு புது இலக்கணத்தை வடித்து, இசை உலகின் முடி சூடா மன்னர்களாக விளங்கிய Beatles என்ற இசைக்குழுவின் நால்வரில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல் நமது ஞாயிறு சிந்தனையுடன் நெருங்கியத் தொடர்புடையது.
Paul McCartney பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்" அல்லது "அப்படியே இருக்கட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:
"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.
'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்."
“When I find myself in times of trouble, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness she is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be”
என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது. “Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம் தன் தாயே என்று Paul McCartney தன் பேட்டிகளில் கூறியுள்ளார். பாடலாசிரியர் Paul McCartneyன் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல் “Let It Be” என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா அன்று விண்ணகத்தூதர் கபிரியேலிடம் சொன்ன அந்தப் புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவுறுத்துகிறது.

உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா சரி என்று சொன்ன பதிலும் இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியாக ஒலிக்கிறது. எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் புத்தகத்தில் பக்கங்களாக பதியும்போது அந்த நிகழ்வின் பெருமை நம் கண் முன்னே அதிகம் தோன்றும். அங்கு உண்டான காயங்கள் பெருமளவு மறக்கப்படும். அதேபோல், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள  வரலாற்று நிகழ்வுகளை நாம் திருப்பலியில் வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம் இவைகள் மேலோங்குவதால் அந்நிகழ்வுகளின் வேதனைகள் காயங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான் இன்று நாம் இப்பகுதியை வாசித்ததும், துணிவோடு "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேலுக்கும் இளம்பெண் மரியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில் இது கட்டாயம் நற்செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.
கிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்த நாட்களில் பல பள்ளிகளில், பங்குத் தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... அரை மணி நேரத்தில் அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவைகளைப் பார்க்கும்போது மனம் மகிழும்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பி வரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்றார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.
வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப் பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கம், அராஜகம் நடந்து வந்தது. இந்த அடக்கு முறையை உறுதி செய்வதற்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ எந்த நேரத்திலும் இந்தப் பெண்களுக்குப் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்த நாட்டுப் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கேட்டு வருகிறோம். ஒன்பது ஆண்டுகள் ஆக்ரமிப்பிற்குப் பின், அமெரிக்கப் படைகள் கடந்த புதனன்று ஈராக்கை விட்டு வெளியேறினர் என்று செய்திகளில் வாசித்தோம். இந்தச் செய்தியைக் கேட்டு, அந்த நாட்டுப் பெண்கள் கட்டாயம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்த இளவயது கிராமத்துப் பெண் மரியா.
தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையிலடைக்கப் பட்டதைப் போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா?" என்று தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைக்கான தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால் அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துவந்து, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. தன் தோழிகளில் ஒரு சிலர் உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்று, ஊருக்கு நடுவே கல்லால் எறியப்பட்டு இறந்ததை மரியா பார்த்திருப்பார். இதோ, இதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னைத் தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது பெரும் இடியாக மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.
இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும்... எல்லாம் ஒன்று தான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.
இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே இந்த முழுப் பகுதியையும் நற்செய்தியாக மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை நற்செய்தி என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள் இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.

1985ம் ஆண்டு Paul McCartney பாடிய “Let It Be” பாடல் வழியாக மீண்டும் மரியா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள் பலருக்கு நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும். பசிக்கொடுமைகள், போர் கொடுமைகள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், சாதி, மதம், இனம் என்று பல்வேறு பாகுபாடுகளால் உருவாகும் கொடுமைகள்... என்று கொடுமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்த உலகில், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு இல்லையா என்று மனம் கேள்விகளை எழுப்பும். Live Aid இசை நிகழ்ச்சியைக் கண்ட பலகோடி உள்ளங்களில் எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவுகள் பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வகையில் விடைதரும் வண்ணம் Paul McCartney பாடிய “Let It Be” என்ற இந்தப் பாடல் அமைந்ததென்று சொல்லலாம். நம்பிக்கையற்ற ஒரு சூழலை நற்செய்தியாக மாற்றிய 'அப்படியே ஆகட்டும்' என்ற மரியாவின் வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்பாடல், பலரது உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்திருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் அனைவருமே துன்பங்களால், துயரங்களால் துவண்டு போகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை.
இதேபோல், தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து, அதனால் மனம் வெறுத்து கொடுமையான பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் ஆண்டவன் தரும் ஆயிரம் அழைப்புக்களில் ஒரே ஓர் அழைப்பை உணர்ந்து, அருள் நிறைந்த ஒரே ஒரு தருணத்தைப் பயன்படுத்தி, 'ஆகட்டும்' என்று ஆண்டவனிடம் சரண் அடையும்போது, அங்கும் புதிய சக்தியும், விடுதலையும் பிறக்கும்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை முடிவெடுக்கும் துணிவு. இறைவனிடம் சரணடையும் பணிவு. இவ்விரண்டும் மரியாவின் மங்கள வார்த்தை நிகழ்வில் நாம் காணும் அற்புதங்கள். மரியாவின் துணிவையும், பணிவையும் நாமும் பெற அந்த அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்.


11 December, 2011

REJOICE SUNDAY மகிழும் ஞாயிறு




The Third Sunday of Advent is called ‘Gaudete’ Sunday – ‘Rejoice’ Sunday. Two years back, when we celebrated this Sunday, I opened my reflections with a passage from the lovely book ‘The Little Prince’ written by Antoine de Saint-Exupery. The Little Prince from another planet happens to become friendly with a fox. Here is a passage from The Little Prince that talks of the good friends - the prince and the fox:
The next day the little prince came back. "It would have been better to come back at the same hour," said the fox. "If, for example, you come at four o'clock in the afternoon, then at three o'clock I shall begin to be happy. I shall feel happier and happier as the hour advances. At four o'clock, I shall already be worrying and jumping about. I shall show you how happy I am! But if you come at just any time, I shall never know at what hour my heart is to be ready to greet you...."
Joy-in-waiting is well explained here.
I have witnessed a similar experience in the Jesuit community where I live. We have in our community three Jesuits who are beyond 90. One of them is wheel-chair bound. On Sundays one of his friends comes regularly to visit him around 4 p.m. for a cup of tea. It is something special to see how this priest gets ready for this weekly meeting. Already by 3 O’clock he is ready! He talks about this visit and his friend already during lunch. Joy-in-waiting is a special type of joy.

The Entrance Antiphon of today’s liturgy talks of this joy-in-waiting. It is taken from Paul’s Letter to the Philippians: Rejoice in the Lord always; again I will say, Rejoice… The Lord is at hand. (Phil. 4: 4-5) Although we have a fortnight to go for Christmas, the Church invites us to rejoice. Isn’t this a bit too early, one may feel. But, look at the commercial world! They began Christmas celebrations soon after Thanksgiving, almost a month ahead. They have also been bombarding us with what would make this Christmas special and happy. From my childhood days onwards I remember that MERRY CHRISTMAS and HAPPY NEWYEAR were the usual phrases strung together for this Season. Unfortunately, in recent times, a more general term like HAPPY HOLIDAYS seem to be replacing these phrases. The trade world tries to sweep under the carpet all the terms and symbols with religious connotations. It also tries to define what type of happiness would make these ‘Happy Holidays’ worthwhile.

The Church, for its part, tries to define Christmas Joy on this Gaudete Sunday. While the commercial world tries to define happiness in terms of accumulating and hoarding things via discounts and sales, the Church and the Liturgical Readings today try to tell us that happiness consists not in directing everything towards us, as the commercial world would suggest, but towards others, especially towards the less privileged. This tone is set in the opening lines of today’s first reading from Isaiah.
Isaiah 61: 1-2
The Spirit of the Lord GOD is upon me, because the LORD has anointed me to bring good tidings to the afflicted; he has sent me to bind up the broken-hearted, to proclaim liberty to the captives, and the opening of the prison to those who are bound; to proclaim the year of the LORD's  favour, and the day of vengeance of our God; to comfort all who mourn…

Happiness also consists in knowing who we are and what our role is in this world. When we fail to understand and appreciate ourselves, and thus yearn to be someone else, God sends his little angels to teach us the most important lesson – namely, be yourself and you’ll be happy. Of the many stories I read while preparing for this Sunday’s reflections, one stood out. Here is that little story as narrated by an Irish lady.  I heard a knock at the door. Two children in ragged, outgrown coats got inside as I opened the door. “Any old papers, lady?” I was busy.  I wanted to say’ no’ until I looked down at their feet. Thin little sandals, sopped with sleet. “Come in, and I’ll make you a cup of hot cocoa.”  There was no conversation.  Their soggy sandals left marks upon the hearthstone.  I served them cocoa and toast with jam to fortify them against the chill outside.  Then I went back to the kitchen and started again on my household budget… The silence in the front room struck me. I looked in. The girl held the empty cup in her hands, looking at it. The boy asked in a flat voice, “Lady, are you rich?”“Am I rich? Mercy, no!” I looked at my shabby slipcovers. The girl put her cup back in its saucer carefully. “Your cups match your saucers.” Her voice was old, with a hunger that was not of the stomach. They left then, holding their bundles of papers against the wind. They hadn’t said, “Thank you.” They didn’t need to. They had done more than that.  They told me that my plain blue pottery cups and saucers matched. I boiled the potatoes and stirred the gravy. Potatoes and brown gravy, a roof over my head and my man with a good steady job: I was lucky. I moved the chairs back from the fire and tidied the living room. The muddy prints of small sandals were still wet upon the hearthstone. Were not they the foot prints of the Lord who visited me to intensify my joy by His presence? I let the prints remain. I wanted those footprints there in case I ever forget again how very rich I am.  http://cbci.in/Sunday-Reflections.aspx
Our Hindu friends have a lovely custom of drawing the footprints of Baby Krishna in the house to symbolise that through those footprints, many blessings would ‘walk’ into one’s house. Every Christmas we await the footprints of the Divine Child in human history. Let these footprints leave a lasting impression on us. May this little Child of Bethlehem teach us what true bliss is!

The forerunner of this Divine Child, the cousin of Jesus, also teaches us good lessons in today’s gospel. John the Baptist is the best example of a person who knew himself and his role well. The Gospel vouches for this:
John 1: 6-8, 19-20
There was a man sent from God, whose name was John. He came for testimony, to bear witness to the light, that all might believe through him. He was not the light, but came to bear witness to the light. And this is the testimony of John, when the Jews sent priests and Levites from Jerusalem to ask him, "Who are you?" He confessed, he did not deny, but confessed, "I am not the Christ."
Using the popularity he had already gained, John could have easily grabbed the lime-light for himself; but he did not do so. In spite of all the hardships he faced in his life, John must have lived a happy, contented life since he had a true knowledge of himself and his mission. If only we could have at least part of the clarity about self and mission that John the Baptist had, our lives would be blissful and happy.

A closing thought on John ‘bearing witness to the light’… This phrase reminds me of a lovely imagery that describes what Christmas is: There is an old story of a father who, on a dark, stormy night woke up with a start because of the lightning and claps of thunder. He thought of his small son alone in his bedroom upstairs who might be scared of it all. So he rushed upstairs with his flashlight to check on the boy to see if he was all right. He was flashing the light around the room when the boy woke up and said, with a startled cry, "Who's there? Who's in my room?" The father's first thought was to flash the light in the face of the boy, but then he thought, "No. If I do that, I will frighten him all the more." So he turned the light on his own face. And the little boy said, "Oh, it's you, Dad." The father said, "Yes, it's Dad. I'm just up here checking on things. Everything's O.K., so go back to sleep." And the little boy did. That is what the Incarnation is all about. God's shining the light in His own face so that you and I might know that everything really is O.K. The flash light that God uses to illuminate the face of Jesus is John the Baptist. That is why the gospel says that John ‘was not the light but came to bear witness to the light.’ How happy this world would be if all of us could become flashlights turning our beams on to the Divine Child!

 Rejoice in the Lord always; again I will say, Rejoice… The Lord is at hand. (Phil. 4: 4-5)

"The Little Prince" என்பது ஒரு கற்பனைக் கதை. வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. புமிக்கு வந்த இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒரேநாளில் நட்பை மலரச் செய்த அந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் இளவரசன் வந்ததும், நரி அவனிடம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே இன்றும் வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்." என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "நீ தினமும் நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத்  தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வாக இருக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்க முடியாதே" என்று நரி சொல்கிறது. நல்லதொன்று நடக்கப்போகும் வேளையில், மனதுக்குப் பிடித்த ஒருவரை எதிர்பார்த்திருக்கும் வேளையில், அந்த நிகழ்வை, அந்த நண்பரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. நிகழ்ச்சிக்கு முன் உருவாகும் மகிழ்ச்சி. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம்.
நான் வாழும் இயேசுசபை துறவு இல்லத்தில் மூன்று குருக்கள் 90 வயதைத் தாண்டியவர்கள். அவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியில் வாழ்வைக் கழிப்பவர். ஒவ்வொரு வாரமும், ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் அவரைக் காண ஒரு நண்பர் வருவார். அவரது வருகையைப் பற்றி இந்த குரு ஞாயிறு காலையிலேயே எங்களிடம் பேச ஆரம்பித்து விடுவார். நிகழ்ச்சிக்கு முன் உருவாகும் மகிழ்ச்சி.

பொதுவாக எந்தக் குடும்பத்திலும் குழந்தை ஒன்று பிறக்கப்போகிறது என்பது, மகிழ்வு கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். அதேபோல், மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கிறது.
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, Gaudete Sunday அதாவது, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். புனித பவுல் அடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இறை வார்த்தைகள் இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்றன.
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். (பிலிப். 4:4-5)
மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.
கிறிஸ்து பிறப்புக்கு, கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு இரு வாரங்கள் இருக்கும்போதே இந்த மகிழ்வைப் பற்றிப் பேசவேண்டுமா என்று ஒரு கேள்வி எழலாம். ஆனால், வர்த்தக உலகம் ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த மகிழ்வைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டதே. வர்த்தக உலகைப் பொருத்தமட்டில், நவம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் ஆரம்பமாகிவிட்டது. கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைப் பற்றிய இலக்கணங்களை வர்த்தக உலகம் கடந்த ஒரு மாதமாக, வெவ்வேறு வகையில் சொல்லி வருகிறது. இன்று திருச்சபையும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைப் பற்றி சொல்கிறது. வர்த்தக உலகம் சொல்லும் மகிழ்வைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் வழியாகக் கேட்டு வரும் நாம், திருச்சபையும், விவிலியமும் சொல்லும் மகிழ்ச்சியைப் பற்றி, மகிழ்ச்சியின் உண்மையான இலக்கணம் என்ன என்பதைப் பற்றி  ஒரு நாளாகிலும் சிந்திக்க வேண்டாமா?

உண்மையான மகிழ்வு என்றால் என்ன என்பதைச் சொல்ல பல கதைகள் உண்டு. அவைகளில் ஒன்று அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சொன்ன கதை. இந்தக் கதையை அவர் சொல்வதாகவேக் கேட்போம்:
பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் என் வீட்டுக் கதவைத் தட்டியபடி ஒரு சிறுவனும், சிறுமியும் நின்றனர். அவர்கள் வறுமையில் இருந்தனர் என்பதை அவர்கள் அணிந்திருந்த உடையே பறைசாற்றியது. "உங்களிடம் எதுவும் பழைய பத்திரிக்கைகள் உள்ளனவா?" என்று அக்குழந்தைகள் என்னிடம் கேட்டனர். அப்போதுதான் அவர்களது கால்களை நான்  பார்த்தேன். அந்தக் கொட்டும் பனியிலும் அவர்கள் சாதாரண செருப்புக்களை அணிந்திருந்தனர். ஒருவேளை பழையச் செய்தித் தாள்களை விற்று பணம் சேகரிக்க முயல்கிறார்களோ? அவர்களை வீட்டுக்குள் வரச்சொன்னேன். அவர்கள் அணிந்திருந்த பரிதாபமான செருப்புக்கள் பனியில் ஊறிப்போயிருந்ததால், வீட்டின் தரையில் ஈரமான, அழுக்கான தடங்களைப் பதித்தன.
சுடச்சுட தேநீரும், சில பிஸ்கட்டுகளும் தந்தேன். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் சென்று, பழைய நாளிதழ்கள், அதோடு அவர்கள் அணிவதற்கு சில உடைகளையும், காலணிகளையும் கொண்டு வந்தேன். தேநீரை அருந்திய சிறுவன் என்னிடம், "நீங்கள் பணக்காரரா?" என்று கேட்டான். எனக்குள் எழுந்தது சிரிப்பு. நான் எவ்வளவு ஏழை என்பது அவர்கள் அமர்ந்திருந்த அந்த சோபாவைப் பார்த்தாலே தெரியும். நடுத்தர வருமானம் உள்ள என்னைப் பார்த்து அவன் அந்தக் கேள்வியை ஏன் கேட்டான் என்று புரியாமல், "நானா, பணக்காரியா? இல்லையே. ஏன் அப்படி கேட்கிறாய்?" என்று அவனிடமே கேட்டேன். அப்போது அவனது தங்கை என்னிடம், "நீங்கள் தேநீர் கொடுத்த இந்த கப்பும் தட்டும் ஒரே நிறத்தில் உள்ளன. அதனால், நீங்கள் பணக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்." என்று பதில் சொன்னாள் அந்தச் சிறுமி.

இதைச் சொன்னபின், நான் தந்தவைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். என்னிடம் நன்றி என்று கூட அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் நன்றி சொல்லவும் தேவையில்லை என்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், நான்தான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். என்னைப் பற்றி நானே இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ளும்படி செய்த அவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும்.
அவர்கள் சென்றபின், அந்த கப்பையும் தட்டையும் பார்த்தேன். ஒரே நிறத்தில் அவை இருந்தது அவர்கள் கண்களில் ஒரு பணக்காரியாக என்னைக் காட்டியது. ஆனால், என் கண்களில், என் எண்ணத்தில் நான் என் வறுமையைப்பற்றி மட்டுமே எண்ணி வருந்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். உண்ண உணவு, உடுத்த உடை, நான் வாழ ஒரு வீடு இவைகளைத் தந்த இறைவனை அப்போது நன்றியோடு எண்ணிப் பார்த்தேன்.
வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, அவர்களது நனைந்த, அழுக்கான பாதங்கள் விட்டுச்சென்ற தடங்களைச் சத்தம் செய்யாமல் விட்டுவைத்தேன். நான் பணம் படைத்தவள் இல்லையே என்று ஏங்கும்போதெல்லாம், அந்தப் பாதச் சுவடுகள் நான் எவ்வளவு பணக்காரி என்பதை மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுறுத்த வேண்டும் என்பதற்காக அந்தச் சுவடுகளை துடைக்காமல் விட்டுவைத்தேன்.
அந்த வீட்டில் அவ்விரு குழந்தைகளின் பாதங்கள் மட்டும் பதியவில்லை. அவர்கள் வரவால் அந்தப் பெண்ணின் மனதில் பல அற்புத பாடங்களும் பதிந்துவிட்டன. குழந்தை வடிவில் வரும் கண்ணனின் பாதங்களை வீட்டுக்குள் வரைந்தால், நல்லவைகள் நடக்கும் என்று எண்ணுவது இந்திய மண்ணில் ஓர் அழகிய மரபு. குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

உள்ளதை அனுபவித்து மகிழ்பவர்களே உண்மையில் செல்வந்தர்கள் (The truly rich are those who enjoy what they have.) என்பது ஒரு யூதப் பழமொழி. இல்லாத தேவைகளையெல்லாம் உருவாக்கி இன்னும் அதிகம், அதிகமாய் பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்மஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. இதற்கு நேர் மாறான பாடங்களை, உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வைப் பற்றிய பாடங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.
நம்மிடம் உள்ளவைகள் இறைவன் அளித்துள்ள கொடைகள் என்றும், அக்கொடைகளுக்காக நன்றியுள்ளவர்களாய் வாழ்வதில்தான் உண்மை மகிழ்வு உள்ளது என்றும் இன்றைய வாசகங்கள் சொல்லித் தருகின்றன. இந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் முதல் இரு வாசகங்களின் ஒரு சில வரிகளை இப்போது கேட்போம்:
இறைவாக்கினர் எசாயா 61: 10
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.
தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5: 16-24
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்...அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.

தன்னிடம் உள்ளவற்றைக் கொண்டு மன நிறைவும் மகிழ்வும் அடைந்த திருமுழுக்கு யோவானை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். தான் யார் என்பதையும் தனக்கு அளிக்கப்பட பணி எத்தகையது என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தவர் திருமுழுக்கு யோவான். தான் உலக மீட்பர் அல்ல, தான் அந்த மீட்பர் வருவதற்கான பாதையைக் காட்டும் கைகாட்டி மட்டுமே என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதை உணர்ந்தது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இதை வெளிப்படையாகவும் சொல்லி வந்தார். இதைத்தான் இன்றைய நற்செய்தி கூறுகிறது. இன்றைய நற்செய்தியில் அவரைப் பற்றி கூறப்படும் வரிகளில் ஒரு சில:
யோவான் நற்செய்தி 1: 6-8, 19-20
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார்... அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்... நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்லஎன்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
நற்செய்தியின் இந்த வரிகள் எனக்கு கிறிஸ்மஸைப் பற்றிய ஒரு உருவகத்தை நினைவுபடுத்துகிறது. கிறிஸ்மஸ் பெருவிழாவை விவரிக்கக் கூறப்படும் பல உருவகங்களில் என் மனத்தைக் கவர்ந்த உருவகம் இது. நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய புயல் ஒன்று வீட்டைச் சூழ்ந்தபோது, தனி அறையில் படுத்திருக்கும் தன் சிறுவயது மகன் பயந்துவிடுவானே என்று அவனைப் பார்க்கச் செல்கிறார் ஒரு தந்தை. அங்கு, இருளில் படுத்திருக்கும் மகனைக் காண ஒரு டார்ச் விளக்கை எடுத்துச் செல்கிறார். அவர் கதவைத் திறந்து டார்ச் விளக்கை அடித்ததும் சப்தம் கேட்டு, எழுந்த மகன் பயத்தில் "யாரது?" என்று கேட்கிறான். தந்தை உடனே அந்த டார்ச் விளக்கை அவன் மீது அடித்து, அவனை இன்னும் பயத்தில் ஆழ்த்தாமல், அந்த டார்ச் ஒளியைத் தன் மீது திருப்பி, "மகனே, நான் தான்!" என்று சொல்கிறார். மகனும் அந்த ஒளியில் தந்தையைக் கண்டு பயம் தெளிகிறான். மகிழ்கிறான். இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்கு திருமுழுக்கு யோவான்.

நம்மைப் பற்றிய தெளிவான எண்ணங்கள், நம்மிடம் உள்ளவைகளைக் கொண்டு நிறைவடையும் ஓர் உள்ளம் இவைகளில் நம் உண்மையான மகிழ்வு உள்ளதென்று இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன. உண்மையான மகிழ்வு என்பது வண்ணத்துப் பூச்சியைப் போன்றது. விரட்டி விரட்டி அதைப் பிடிக்க நாம் ஓடுகிறோம். பின்னர், களைத்துப் போய் நாம் அமரும்போது, நம் பிடிக்குள் வராமல் பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி நமது தோள்களில் வந்து அமர்கிறது. மகிழ்வு என்பது சின்னச் சின்ன எளிதான உண்மைகளில் மென்மையாக ஒளிர்கிறது. அமைதியாக அமர்ந்து, நம் வாழ்வில் உள்ளவைகளை நன்றியோடு எண்ணிப்பார்த்தால் இந்த மகிழ்வு தானாகவே நம் தோள்களில் அமரும், நம் மனங்களை நிரப்பும். மகிழும் ஞாயிறு இந்த வரத்தை நமக்குத் தர மன்றாடுவோம்.


05 December, 2011

Change for the better! மாற்றங்கள் நிறைந்த மறுவாழ்வு


John the Baptist

Word association is a fun game which stimulates one’s brain cells. I shall begin with a string of words starting with C. Contrition, Conversion, Conviction and Commitment. John the Baptist talks about these in today’s Gospel. John the baptizer appeared in the wilderness, preaching a baptism of repentance for the forgiveness of sins. (Mark 1:4) What is given in this line set me thinking in those ‘C’ words. Before we begin our journey through those C words, a quick thought about the opening line of today’s Gospel.
Mark begins his Gospel with a solemn opening line: The beginning of the gospel of Jesus Christ, the Son of God. (Mark 1:1) Naturally, my mind began expecting the story of Jesus as in the Gospels of Matthew and Luke. But, Mark goes on to talk about John the Baptist who in turn preaches on baptism of repentance and forgiveness. On a superficial level the opening line and the subsequent lines on John the Baptist, repentance and forgiveness don’t seem congruent. But, on a deeper analysis we can see that ‘the gospel of Jesus Christ’ is precisely what John the Baptist preached, namely, repentance and forgiveness. I am trying to expand this ‘good news’ through my C words.

Contrition, Conversion, Conviction and Commitment. Each of them is a gem, valuable and precious. But when strung together they become a priceless jewel. They seem to have a logic about them. Let me try to explain this logic with an example.
Suppose I have wronged another person… (I can hear you, friend! Why suppose this? I have wronged quite a few persons in truth… But that is not the point now!) I feel sorry for what I have done. This is contrition. Feeling sorry is a good sentiment. It is a gem. But, if I just stay in my feeling-sorry-state alone, not much good can come out of it. I need to get converted, meaning, I need to get back to the person I have wronged to ask for his/her pardon. Contrition leading to conversion… great! No, it is still not great. This act of mine should lead me to some sort of conviction that I should not repeat this again. This conviction leads me to a commitment to set things right not only with this one person I have wronged but with everything wrong in my life. So, contrition, conversion, conviction and commitment… are gems stung together into a priceless jewel. When they follow one another in some order, there would be another C word… CHANGE! Change within me and around me… Change for the better!

Such changes have occurred in human history many, many times. I wish to turn your attention to the change brought about by Shane Paul O'Doherty, a former IRA member. Shane Paul O’Doherty joined the Irish Republican Army when he was 15 and became a leading IRA bomber for over five years. The Volunteer – A Former IRA Man’s True Story (published in 2008) is a racy and exhilarating autobiography of O’Doherty’s involvement in the IRA, his incarceration, and his reinvention of himself as one of the first advocates for the peace process.
O’Doherty was convicted of a letter bomb campaign in London and spent over 14 years in prison. 
Wracked by guilt of his actions that resulted in injuries to innocent citizens, O’Doherty wrote letters
to his victims and their families from his cell.  He publicly renounced his allegiance to the IRA and its code of beliefs. http://sbpra.com/shaneodoherty/

For 300 years the people in Ireland have lived in the past. For 350 years, really, all they have done is remember the past, taking revenge on one another.  But slowly, one by one, on both sides, people began to repent, to look, not to the past, but to the future. One of the first to do so was a man named Shane O'Doherty. He was the first former IRA member to come out publicly for peace. Twenty years ago he was sent to jail for mailing letter bombs. At his trial as a terrorist for the IRA, he had to sit and listen to people tell what it was like to open those letters. Fourteen people testified against him, all innocent victims, many of them mutilated because of what he had done. He said it was sitting in that court, face to face with people who had been harmed by his actions that his conversion began. But it was completed in prison, in his cell, as he was reading scripture. First he experienced Jesus' love for him. Then he experienced Jesus' requirement of him. He knew he had to change. When he got out of prison, O'Doherty started to talk about building a new future in Ireland, instead of just repeating the past. He found that his life was now being threatened by his former colleagues. But he continued to do it, because, he said, "I believe that one person is able to make a difference just by talking about peace, just by making his witness. It begins in any nation, in any community, with one person, then another, and then another, saying, ‘I'm going to accept the future that God is giving to us, rather than simply repeating the past.’"

Contrition, conversion, conviction, commitment… all these are evident in Shane’s life and he has CHANGED himself and, up to a point, Ireland. Come to think of it, Shane and John the Baptist do have some similarities. Both of them wished to bring about the liberation of their people. As Shane was a member of the IRA trying to bring about a drastic change in Ireland, John the Baptist too, according to some Bible scholars, may have been a member of one of the revolutionary groups of his times, trying to bring about the liberation of Israel from the Roman oppression. Shane received his grace of conversion and commitment in prison while John received his grace in the wilderness. Both were not satisfied with their personal change alone, but wished to change the society around them… and succeeded up to a point!
Advent is a time of grace for each one of us to get converted, convinced and become committed to change – change ourselves and the society around us!


திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று மாற்கு நற்செய்தியின் தொடக்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: என்று பிரமாதமாக ஆரம்பமாகும் இந்த முதல் வரியைக் கேட்கும்போது, எக்காளம் ஒலித்து, பறை அறிவித்து சொல்லப்படும் முக்கியச் செய்தியைப் போல் இது ஒலிக்கின்றது. தொடர்ந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி சொல்லப்படும் என்று நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திருமுழுக்கு யோவான் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் சொல்லும் முதல் வார்த்தைகளும் பாவ மன்னிப்பு, மனமாற்றம் என்ற போக்கில் அமைந்துள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி என்று மாற்கு ஆரம்பித்ததற்கும் அவர் தொடர்ந்து சொல்வதற்கும் தொடர்பில்லாமல் இருப்பதைப் போல் தோன்றுகிறது. ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், மன்னிப்பு மனமாற்றம் ஆகியவைகளே இயேசு கிறிஸ்து உலகிற்குக் கொண்டு வந்த நற்செய்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு... என்ற மந்திரச் சொற்களில் நம் மனதைக் கட்டிப் போடுகிறது இன்றைய நற்செய்தி. 'பாவ மன்னிப்படைய மனம் மாறித் திருமுழுக்கு - அதாவது, மறுவாழ்வு - பெறுங்கள்' என்று திருமுழுக்கு யோவான் அன்று பாலை நிலத்தில் முழங்கியச் சொற்கள், திருச்சபையின் அனைத்து கோவில்களிலும் இந்த ஞாயிறன்று முழங்குகின்றன.

மனவருத்தம் கொள்வது,
மன்னிப்புப் பெறுவது,
மனமாற்றம் அடைவது,
மறுவாழ்வில் நுழைவது...
இவைகளே திருமுழுக்கு யோவான் சொல்லவந்த நற்செய்தி, இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குக் கொண்டுவந்த நற்செய்தி. இவை ஒவ்வொன்றும் மதிப்புள்ளவை. இவை ஒவ்வொன்றையும் தங்க வளையங்களாக நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இந்தத் தங்க வளையங்கள் தனித்து நின்றால் ஓரளவு மதிப்பு உண்டு. ஆனால், இவ்வளையங்கள் அனைத்தும் இணைந்து ஒரு சங்கிலியாக உருவானால், இவற்றின் மதிப்பு பலமடங்கு உயரும். அற்புதமான மாற்றங்கள் உருவாகும். ஓர் எடுத்துக்காட்டுடன் இந்தச் சங்கிலித் தொடரின் உயர்வை விளக்க முயல்கிறேன்.
உதாரணமாக, நான் இன்னொருவருக்கு எதிராகத் தவறு செய்துவிட்டேன் என்று வைத்துக் கொள்வோம். நான் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்துகிறேன். தவறை உணர்ந்து வருந்துவது நல்ல பண்புதான். ஒரு தங்க வளையம்தான். சந்தேகமில்லை. அத்தோடு நான் நின்றுவிட்டால், பயனில்லை. நான் தவறு இழைத்தவரிடம் என் மனவருத்தத்தைச் சொல்லி, மன்னிப்பு பெற வேண்டும். மன்னிப்பு என்பதும் அழகான ஒரு தங்க வளையம்தான். ஆனால், மன்னிப்பு பெற்றதோடு நின்றுவிட்டால், மீண்டும் பயனில்லை. தவறுகள் தொடர்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கும். எனவே, மன்னிப்பைத் தொடர்ந்து நான் மனமாற்றம் அடைய வேண்டும். நான் மனமாற்றம் அடைந்துள்ளேன் என்பது எப்படி வெளிப்படும்? என் வாழ்வில் மாற்றங்கள் உருவாக வேண்டும், என்னைச் சார்ந்தவர்கள் வாழ்விலும் நான் மாற்றங்களை உருவாக்க வேண்டும். இந்த மாற்றங்கள் என்னிலும், என்னைச் சுற்றிலும் புதியதொரு வாழ்வை உருவாக்கும்.
மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மாற்றங்கள் நிறைந்த மறுவாழ்வு... அந்த மறுவாழ்வில் மீண்டும் சில தவறுகள் நேரும்போது மீண்டும் ஒருமுறை மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம் என்று இந்த சங்கிலி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட அழகான ஒரு சங்கிலித் தொடரால் நம்மைக் கட்டிப் போட இயேசுவும், திருமுழுக்கு யோவானும் இவ்வுலகிற்கு வந்தனர். இவர்களை, இவர்கள் கொண்டு வந்த நற்செய்தியை, அந்தத் தங்கச்சங்கிலியைத் தகுந்த முறையில் ஏற்றுக்கொள்வதற்காகவே திருச்சபை நமக்கு இந்தத் திருவருகைக் காலத்தை அளித்துள்ளது.

மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு... இவை நான்கும் இணைந்து உலகில் மாற்றங்களை உருவாக்கிய பல வரலாற்று நிகழ்வுகளை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று அயர்லாந்தில் நிகழ்ந்த மாற்றம்.
பிரித்தானிய அடக்கு முறைக்கு எதிராக இந்தியா விடுதலைக்குப் போராடியதுபோலவே, அயர்லாந்தும் போராடியது. இந்தப் போராட்டங்களின் உச்சக் கட்டத்தில் Irish Republican Army (IRA) என்ற புரட்சிக் குழு ஒன்று உருவானது. இந்தப் புரட்சிக் குழுவில் ஒருவராக தன் 15வது வயதில் சேர்ந்தவர் Shane Paul O'Doherty. பலவகை வெடிகுண்டுகள் செய்வதில் தன் அறிவுத் திறன், ஆற்றல், இளமை அனைத்தையும் செலவிட்டார் Shane. பிரித்தானிய அரசுக்கு எதிராக இவர் காட்டிய வெறுப்பும், எதிர்ப்பும் கடித வெடிகுண்டுகளாக வடிவெடுத்தன. பல அப்பாவி ஆங்கிலேயக் குடும்பங்களுக்கு இவர் கடித வெடிகுண்டுகளை அனுப்பி, அவர்களது நிம்மதியையும் குடும்ப வாழ்வையும் சிதைத்தார்.
இவரது குற்றம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இவர் கைது செய்யப்பட்டார். வழக்கு மன்றத்தில் இவருக்கு எதிராக 14 பேர் சாட்சி சொல்ல வந்திருந்தனர். அவர்களில் பலர் இவர் அனுப்பிய கடித வெடிகுண்டுகளால் தங்கள் பார்வையை, கைகளை அல்லது நெருங்கிய ஓர் உறவை இழந்தவர்கள். தன்னால் சிதைக்கப்பட்ட அவர்களை நீதி மன்றத்தில் சந்தித்தது தன்னை அதிகம் பாதித்தது என்று Shane தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அங்கு ஆரம்பமானது இவரது மன வருத்தமும், மன மாற்றமும்.
தொடர்ந்து இவர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தனித்தனியே கடிதங்கள் அனுப்பினார். இம்முறை கடித வெடிகுண்டுகளுக்குப் பதில், அக்கடிதங்கள் அவர் மனதிலிருந்து எழுந்த வருத்தம் மன்னிப்பு கோரிக்கை இவைகளைச் சுமந்து சென்றன. கடித வெடிகுண்டுகள் மூலம் புரட்சியை உருவாக்கலாம் என்று Shane எண்ணினார். ஆனால், அவர் உருவாக்கியதேல்லாம் வேதனைகளே. இப்போது அவர் அனுப்பிய இந்தக் கடிதங்கள் வேறொரு வகையில் புரட்சியை ஆரம்பித்து வைத்தன. தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து நேரில் பெற முடியாத மன்னிப்பை இறைவனிடம் வேண்டினார். மனமாற்றம் பெற்றார். ஒவ்வொரு நாளும் சிறையில் விவிலியத்தை வாசித்தார். 14 ஆண்டுகள் கழித்து, Shane விடுதலை அடைந்தார்.

சிறையை விட்டு அவர் வெளியேறியபோது, ஒரே ஒரு தீர்க்கமான எண்ணத்துடன் வெளியேறினார்... சிறையில் தான் அடைக்கப்பட்டபோது தன் மனதைத் திறந்து உள்ளே நுழைந்த இறைவன், தன் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கியதைப் போல், வெறுப்பென்ற சிறைக்குள் தன்னையே பூட்டி வைத்திருக்கும் அயர்லாந்து சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் Shane சிறையிலிருந்து வெளியேறினார். அயர்லாந்து மாற்றம் அடைய வேண்டுமென்றால், பிரித்தானியர்களின் அடக்கு முறையால் ஏற்பட்ட கடந்த காலக் காயங்களிலேயே அந்நாடு வாழாமல், எதிர்காலத்தை உருவாக்க என்ன செய்யமுடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று Shane உணர்ந்தார். இந்த உண்மையை அவர் பேச ஆரம்பித்தார். வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இதைப் பற்றி அவர் பேசி வந்தார்.
இவரது எண்ணங்கள் பலரை கவர்ந்தன. அயர்லாந்து மக்களிடையே மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. அதே நேரம், இவர் அடைந்த மாற்றம், இவர் அயர்லாந்தில் உருவாக்க நினைத்த மாற்றம் ஆகியவற்றை இவரது பழையப் புரட்சிக் குழுவின் தோழர்கள் விரும்பவில்லை. அவர்கள் பலவழிகளில் இவரை மௌனமாக்க முயன்றனர். ஆயினும், Shane தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், அவர்களை எதிர்க்கத் துணிந்தார். அவர் கொண்ட நிலைப்பாட்டை தன் சுயசரிதையில் அவர் இவ்விதம் கூறுகிறார்:
"'இறந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்குப் பதில், இறைவன் தரும் எதிர்காலத்தை நான் நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஒருவர் சொல்ல ஆரம்பித்தால் போதும்... அந்த எண்ணம் சிறிது சிறிதாக அடுத்தடுத்த மனிதரை பற்றிக்கொள்ளும். எந்த ஒரு நாட்டிலோ, அல்லது சமுதாயத்திலோ தனி மனிதர் ஒருவர் அடையும் மாற்றம்தான் அடுத்தவர்களை ஒவ்வொருவராக மாற்றுகிறது."
இதுவே Shane Paul O'Dohertyன் தாரக மந்திரமானது. இதுவே இன்று திருமுழுக்கு யோவானிடமிருந்தும் நாம் கேட்கும் செய்தியாக உள்ளது.

Shaneக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் இடையே பல ஒப்புமைகளை நாம் காண முடியும். இருவருமே தங்கள் நாடு விடுதலை பெற வேண்டுமென்ற வேட்கையில், முதலில் புரட்சி வழிகளைச் சிந்தித்தவர்கள். பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மன மாற்றம் பெற்று தங்கள் வாழ்வையே மாற்றியவர்கள். மற்றவர்களையும் மாறும்படித் தூண்டியவர்கள்.
இறைவனை எதிர்பார்த்து காத்திருக்கும்  இந்தத் திருவருகைக் காலத்தில் நாமும் இறைவனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். திருமுழுக்கு யோவானைப் போல், Shane Paul O'Dohertyஐப் போல் இறைவனால் முழுமையாக ஆட்கொள்ளப்படுவதற்கு, மனவருத்தம், மன்னிப்பு, மனமாற்றம், மறுவாழ்வு ஆகிய படிகற்களில் ஏறும் துணிவும், பக்குவமும் பெற இறையருளை இறைஞ்சுவோம்.