29 September, 2013

Rich-nobody and Mr Lazarus பெயரற்ற செல்வரும் திருவாளர் இலாசரும்

Illustration of Lazarus at the rich man's gate by Fyodor Bronnikov, 1886.

‘Wall Street’ is a Hollywood movie released in 1987. At one point in the movie, the hero Gordon Gekko says: Greed is good. Greed is right, greed works. Greed clarifies, cuts through, and captures the essence of the evolutionary spirit. Greed, in all of its forms; greed for life, for money, for love, knowledge has marked the upward surge of mankind.
In 2010 another movie – possibly a sequel – was released with the title: ‘Wall Street: Money Never Sleeps’. In this movie, the same hero says: Someone reminded me I once said, 'Greed is good'. Now it seems that it's legal. Greed has been idolized in various forms and at present it seems to have been legitimized. Such a trend seems to have seeped through to the younger generations.

Here is a story I received via email which demonstrates what I am trying to say. A little girl accompanied her mother to the “General Store”. After the mother had made a large purchase, the store owner invited the little girl to help herself to a handful of candy. The child held back. “What’s wrong, don’t you like candy?” the proprietor asked. The child said, “Yes, I like candy!” The proprietor, thinking that the girl was shy, put his own hand into the jar and dropped a generous portion into the girl’s cupped hands. Later, in the car, the mother asked her daughter why she had not taken the candy in the first place when it was offered. The little girl, with a mischievous grin said, “Because his hand was much bigger than mine!”
Smart girl, some would say. Greedy, some others would say… Let’s hold back our judgement. In fact let’s get up from the seat of the judge and take the position of the accused. Yes, I think all of us need to take responsibility for the way this child had thought. Where does a child get such ideas? The parents and immediate family, of course. But, the blame must be shared by the larger human family. Children pick up so many ideas from us, adults, without our teaching them.

We have heard of the different stages of human growth as proposed by Sigmund Freud, the first of which is the ‘oral stage’. During the first months the infant’s palms are always closed. Whatever we extend, whether it is our finger or a toy, the infant grabs it and takes it to the mouth. For the infant the whole world is there to be consumed. With much care, we try to wean the child from this stage. We begin teaching things like sharing… “Tom, give the candy to Jerry… No, don’t grab everything… Let your sister play with the toy for a while…” We tend to ‘preach’ to the child while we practice very different things. When a child sees the contradiction between what the adults say and do, it tends to follow the deed than the word. For not helping our children grow up to be caring, sharing adults, all of us need to stand accused. When we stand accused in the court of the world, the judgement from above will sound similar to the words used by Amos in today’s first reading:
Amos 6: 1, 3-7
Woe to you who are complacent in Zion, and to you who feel secure on Mount Samaria
You lie on beds inlaid with ivory and lounge on your couches. You dine on choice lambs and fattened calves…
You drink wine by the bowlful and use the finest lotions, but you do not grieve over the ruin of Joseph. Therefore you will be among the first to go into exile; your feasting and lounging will end.

Greed creates an introverted look so that we never grow beyond our baby years, namely, the ‘oral stage’. Jesus warns us of this ‘all-for-me’ attitude in the famous parable – the Richman and Lazarus. 
The detailed analysis of this parable will be quite long. We shall confine our reflections only to the first few lines where Jesus introduces the two characters – the rich man and Lazarus.
Luke 16: 19-21
There was a rich man, who was clothed in purple and fine linen and who feasted sumptuously every day.  And at his gate lay a poor man named Laz'arus, full of sores,  who desired to be fed with what fell from the rich man's table; moreover the dogs came and licked his sores.

I would like to do a compare and contrast exercise out of these lines:
Rich man         
  • A rich man
  • Clothed in purple and fine linen
  • Feasted sumptuously every day
Poor man
  • A poor man named Laz'arus
  • Lying at his gate
  • Full of sores
  • Desired to be fed with what fell from the rich man's table        
  • Dogs came and licked his sores
Three details about the rich man and five details about the poor man.

Combining these eight details, one can draw three comparisons which can teach us valuable lessons. The first comparison is identification given to the rich and the poor men. The very opening lines of this parable must have shocked the Pharisees. Jesus mentions a nameless rich man and a beggar named Lazarus. Of all the parables of Jesus, this is the only parable where the character in the story gets a proper name. For a Jew, and more especially for a Pharisee, being rich is a blessing from God, while being poor is a curse from God. Jesus subverted this equation. He made the rich man a non-entity and made the beggar a real person with a proper name. Unfortunately, even today the rich get individually recognised and respected, while the poor are just statistics.

The second comparison between the rich man and Lazarus runs a dagger through the heart. The rich man was dressed in purple linen, while Lazarus was covered with sores. Purple, scarlet, red… all shades of royalty. While the rich man clothed himself with royalty in an artificial way, Lazarus was regal in a very different way. He was possibly a distant image of Jesus, covered with sores, hanging on the cross which carried a title: Jesus of Nazareth, the King of the Jews.

The third comparison is what brought trouble to the rich man. He was feasting sumptuously everyday… and therefore had to face hell. Seems like an unwarranted and disproportionate punishment. The rich man was not punished for feasting in luxury, but feasting in luxury while there was a beggar at his gate. Actually, one can argue that the rich man was a gentle person… If he wanted, he could have easily got rid of Lazarus. On second thoughts, I feel that if the rich man had done something like that, his punishment would have been less. Is this puzzling? Let me explain. If the rich man had taken some effort to get rid of the beggar, he would have at least established the fact that he had acknowledged Lazarus as a human person. The rich man in this parable did nothing positive or negative about Lazarus. He simply ignored him. For him, Lazarus was no more than a piece of furniture in his house… Perhaps, the furniture in his house would have got enough attention by being wiped with a rag. Lazarus was laid out at his gate like a piece of rag. For the rich man Lazarus was no more than the dust under his feet. We don’t usually pay attention to the dust under our feet unless the speck of dust soars high and gets into our eyes. This is exactly what happened in the second part of the parable. Lazarus, the dust, was carried to the bosom of Abraham and became the yardstick by which the rich man’s eternity was measured.

Ignoring a human person is the worst type of treatment one can give. The rich man was guilty of this and he had to face the consequence. Far too many Lazaruses are laid out in our life’s journey. Let’s tread carefully! Treat them with care and respect!

தாய் ஒருவர் தன் ஐந்து வயது மகளுடன் கடைக்குச் சென்றார். கடையில் பல பொருட்களை வாங்கிவிட்டு, பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்றபோது, கடைக்காரர், தாயுடன் நின்ற சிறுமியைப் பார்த்து, மிட்டாய்கள் இருந்த ஒரு கண்ணாடி ஜாடியைக் காட்டி, "உனக்கு வேண்டிய அளவு மிட்டாய்களை எடுத்துக்கொள்." என்றார். சிறுமி தயங்கி நின்றாள். "உனக்கு மிட்டாய் பிடிக்காதா?" என்று கேட்ட கடைக்காரரிடம், "எனக்கு மிட்டாய் ரொம்பப் பிடிக்கும்." என்று சொன்னாள். சிறுமி மிட்டாய்களை எடுக்க வெட்கப்படுகிறாளோ என்று எண்ணியக் கடைக்காரர், அந்த ஜாடிக்குள் அவரே கைவிட்டு, மிட்டாய்களை எடுத்துக் கொடுத்தார். கடைக்காரர் தந்த மிட்டாய்களை, சிறுமி இருகைகளிலும் பெற்றுக்கொண்டார். தாயும், மகளும் வெளியே வந்ததும், "கடைக்காரர் மிட்டாய் எடுத்துக்கொள்ளச் சொன்னபோது, ஏன் நீ எடுக்கவில்லை?" என்று தாய் கேட்டார். அதற்கு, அச்சிறுமி ஒரு குறும்புப் புன்னகையுடன், "என் கையைவிட கடைக்காரர் கை பெரிதாக இருந்தது, அதனால்தான்." என்று பதில் சொன்னாள்.
அச்சிறுமியின் சிந்தனை ஓட்டத்தை, அறிவுத்திறமை என்றோ, தந்திரம் என்றோ முடிவு செய்யலாம். அச்சிறுமிக்கு இவ்வளவு பேராசை கூடாது என்று நம்மில் சிலர் தீர்ப்பும் எழுதலாம். அச்சிறுமிக்குத் தீர்ப்பு வழங்குவதற்கு முன், நாம் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவேண்டும். ஆம் அன்பர்களே, அச்சிறுமிக்கு இப்படி ஓர் எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும்? வயது வந்தவர்கள், வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும் இவ்வகை எண்ணங்களை அக்குழந்தையின் உள்ளத்தில் விதைத்திருக்க வேண்டும். அச்சிறுமியின் பெற்றோரை, குடும்பத்தை மட்டும் நாம் குறை கூறக்கூடாது. இன்றைய ஒட்டுமொத்த சமுதாயமும் இப்படிப்பட்ட எண்ணங்களைக் குழந்தைகள் மனங்களில் வளர்த்துவருகிறது. எனவே, இக்குழந்தையின் பேராசைக்கு நாம் அனைவரும் பொறுப்பேற்று, குற்றவாளிக் கூண்டில் நிற்கவேண்டும்.

ஆசையே அனைத்து துனபங்களுக்கும் காரணம் என்று புத்தர் கூறியது தலைகீழாக மாறி, இன்று ஆசையே அனைத்து நன்மைகளுக்கும் காரணம் என்று இவ்வுலகம் சொல்லித்தர துணிகிறது.
பேராசையால் செல்வத்தைக் குவித்து, பின்னர் அச்செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை சென்ற வாரம் வீட்டுப் பொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறினார். இவ்வுவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16:13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.
நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள் எப்போதுமே நம்மைச் சுற்றியுள்ள ஏழைகளே என்பதை ஓர் உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். 'செல்வரும் இலாசரும்' என்ற மிகப் புகழ்பெற்ற உவமை இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. இவ்வுவமை ஒரு வைரத்தைப்போல் வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இந்த வைரத்தின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், இவ்வுவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.
லூக்கா நற்செய்தி 16:19-21 உள்ள முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில் இவ்வுவமையின் இரு நாயகர்களை இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில் செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:
  • செல்வர் ஒருவர் இருந்தார்.
  • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
  • நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:
  • இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
  • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
  • அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்...என்பது முதல் ஒப்புமை. இயேசு கூறிய இவ்வரிகளைக் கேட்டதும், யூதர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும் இந்த ஓர் உவமையில் மட்டுமே கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இவ்வுவமைக்குரிய தனிச் சிறப்பு. தனித்துவமான இச்சிறப்பு தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.
செல்வங்கள் பெறுவதை இறைவனின் ஆசீராகவும், வறுமை, ஏழ்மை இவற்றை இறைவனின் சாபமாகவும் எண்ணிவந்த இஸ்ரயேல் மக்களுக்கு, குறிப்பாக, மதத் தலைவர்களுக்கு, இயேசு ஏழைக்கு கொடுத்த மதிப்பு அதிர்ச்சியைத் தந்திருக்கும். கடவுள் எப்போதும் ஏழைகள் பக்கம்தான் என்பதை வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இயேசு வலியுறுத்தி வந்தார். இந்த உவமையில் ஏழைக்கு இலாசர் என்ற பெயர் கொடுத்து, இந்த உண்மையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஏழைகளைத் தாழ்வாக எண்ணி வந்த இஸ்ராயலர்கள் மேல் அவசரப்பட்டு கண்டனம் சொல்லவேண்டாம். இதே மனநிலைதானே இன்றும் நம்மிடையே உள்ளது! ஒரு செல்வரைப்பற்றி பேசும்போது, திருவாளர் இவர், திருவாளர் அவர் என்ற அடைமொழியுடன் பேசுகிறோம். ஏழைகளைக் குறிப்பிடும்போது, பொதுவாக அவர்களை ஓர் எண்ணிக்கையாகக் குறிப்பிடுகிறோம். எடுத்துக்காட்டாக, திருவாளர் மாணிக்க வள்ளலார் அவர்கள் இன்று நடத்திய தண்ணீர் பந்தலுக்கு நூற்றுக்கணக்கான ஏழைகள் வந்தனர்என்பதுதானே நமது பேச்சு வழக்கு? ஏழைகளை எண்ணிக்கைகளாகக் கணக்கிடாமல், மனிதப் பிறவிகளாக மதிக்கவேண்டும் என்பதற்கு இயேசு தன் உவமையில் கூறியுள்ள முதல் ஒப்புமை நல்லதொரு பாடம்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசாரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்பு. செல்வர் தன்னைத்தானே  ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசாரோ உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். யூதர்களின் அரசன் என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது இந்த ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமை வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.
  • செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
  • இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகள் உதவியுடன், இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் என்று செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர் இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை, இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்பதையாகிலும் அச்செல்வர் உணர்ந்திருப்பார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும் அவர் வீட்டில் இருந்த ஒரு மேசைநாற்காலியும் ஒன்றே... ஒருவேளை அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்” (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.
செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும் இலாசரும் ஒன்று. தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பகுதியை இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகம்தான் கிடைக்கும் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல் செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதற்கு மேலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?


23 September, 2013

To Serve or not to Serve – God or mammon பணிவிடை செய்வது... பரமனுக்கா பணத்திற்கா?


Rich vs Poor

September 15, last Sunday, we remembered the Feast of the Mother of Sorrows. The figure of Mother Mary carrying the lacerated body of Christ is etched deep in every Christian’s mind. This image naturally brought to mind thousands of mothers who mourn the loss of their children in places like Syria.
September 15, was also the International Day of Democracy. September 21, Saturday, was the International Day of Peace. Democracy and Peace are probably getting removed from the vocabulary of the next generation. For them, these terms could have only some historical value. Or, they would be taught another warped definition of Peace and Democracy.
One of the most popular definitions of Democracy that our generation can still remember is the famous line given by Abraham Lincoln: “Democracy is the government of the people, by the people, for the people.” The moment I thought of this quote, my mind instinctively thought of another popular quote of Lincoln, namely: “You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.” (There are various versions of this quote, although the sense remains the same.) Is there an intrinsic connection between these two quotes of Lincoln? Has ‘fooling all the people all the time’ got anything to do with Democracy – and Peace - as we see today?

As I was thinking of the combination deception and democracy, my mind also thought of the word ‘scam’ and I was literally flooded with information from the web about scams in human history. One of them was titled “THE BIGGEST SCAM IN HISTORY”. This article was about the Federal Reserve Bank, a private company of bankers in the U.S. The opening line of this article goes like this: “Pay attention now, you're about to read about the biggest and most successful scam in History.” For a person living at present these words would sound as a joke, since we keep hearing of scams right, left and centre. As I was browsing through this article, I came across some interesting data about Lincoln and Kennedy. I quote from this article:
On June 4, 1963, President Kennedy signed a Presidential decree, Executive Order 11110.  This order virtually stripped the Federal Reserve Bank of its power to loan money to the United States Government at interest.  President Kennedy declared the privately owned Federal Reserve Bank would soon be out of business.  In less than five months after signing that executive order President Kennedy was assassinated on November 22, 1963.
Lincoln also took on the bankers and that brave bold step may also have cost him his life.
During the Civil War (from 1861-1865), President Lincoln needed money to finance the War for the North. The Bankers were going to charge him 24% to 36% interest. Lincoln was horrified and greatly distressed, and he would not think of plunging his beloved country into a debt that the country would find impossible to pay back.
So Lincoln advised Congress to pass a law authorizing the printing of full legal tender Treasury notes to pay for the War effort… The Treasury notes were printed with green ink on the back, so the people called them "Greenbacks". Lincoln had printed 400 million dollars worth of Greenbacks (the exact amount being $449,338,902), money that he delegated to be created, a debt-free and interest-free money to finance the War…Lincoln was assassinated shortly after the war and Congress revoked the Greenback Law and enacted, in its place, the National Banking Act…
When you follow the money, you find there was no one in the world who had a better reason to kill these two Presidents than the bankers.

We usually think that the American President is a very powerful person. But, when I read about these two Presidents, my ideas changed. There seem to be other super powers controlling the American President – mainly money power! When money becomes powerful enough to replace God, what becomes of a President? It is interesting that on every dollar bill of the U.S. the words “In God We Trust” are printed. What a paradox! The ‘God’ mentioned in a dollar bill, I presume, is the Dollar itself! The power of money is not a phenomenon specific to the U.S. This is a world-wide phenomenon.
Why are we speaking about money in our Sunday reflection? We are invited to reflect on choosing between God and mammon in today’s Gospel. Jesus closes today’s Gospel with a clear, powerful statement: “You cannot serve God and mammon.”   

Any person with some practical sense would hesitate to take these words of Jesus seriously. How does one live without money? – would be the most common-sense question. Is Jesus saying that we need to give up money in order to obtain God? I don’t think so. In the above statement of Jesus the key word is – Serve. You cannot serve God and mammon. If we look at the whole verse, this becomes clear:
No servant can serve two masters; for either he will hate the one and love the other, or he will be devoted to the one and despise the other. You cannot serve God and mammon. (Luke 16:13)
Once a person begins a debate between whom to serve… God or mammon (money), the unseen God gets side-lined while the much seen money is enthroned on the altar. Unfortunately such an enthronement relegates not only God, but all human values.
Getting back to our topic of how the U.S. seems to serve mammon, I came across some videos of the interviews given by John Perkins, the author of the famous best-seller of 2004 – namely, Confessions of an Economic Hit Man.
In his interview he spoke about ‘Corporatocracy’ – the reign of corporate people! He claims that whether the U.S. is ruled by the Republicans or the Democrats it is the corporate people who pull all the strings. He talks of how the U.S. got into the Latin America, Asia and the Gulf countries to extend the empire of the corporate giants.
As a member of the group of economic hit men sent to the Latin American countries, he seems to be speaking from his personal experience. It is frightening to listen to him. Even if half of what he says is true, it is still disturbing and frightening. Countries like India which suffered heavily as a British colony, now suffer from neo-colonisation of the U.S., rather from ‘Corporatocracy’.

My friend, Fr E. Abraham S.J., the present Director of XLRI, India, had sent me a short reflection with the title - NOT JUST AN ECONOMIC CRISIS. Let me quote a few lines from this write-up:
Unfortunately, wealth has become an idol of immense power in our globalized world – a power that, in order to keep going, demands more and more victims everyday. It is a power that dehumanizes and impoverishes human history more each day.  Right now we find ourselves trapped in a crisis that is brought about, for the most part, by an obsession with accumulating things.
In effect, everything is organized, moved, and energized from this rubric: go for more productivity, more consumption, more well-being, more energy, more power over people… This rubric is imperialistic. If we don’t stop it, it can put at risk all human beings and the planet itself.

Maybe the first step is to be conscious of what is happening. This isn’t just an economic crisis. It’s a social and human crisis. At this point we already have enough data gathered from near and far to see the extent of the human drama we are immersed in. Every day it is more evident that a system that leads a minority of the rich to accumulate more and more power, abandoning millions of human beings to hunger and misery, is an unacceptable stupidity. It’s needless to look any further.
At this point even the most progressive societies aren’t capable of providing a dignified job for millions of their citizens. What kind of progress is it that pushes us toward well-being, while leaving so many families without resources to live in dignity?
This crisis is destroying the democratic process. Pushed by the demands of big money, governments can’t serve the true needs of their people. What is politics if it no longer serves the common good?

What happened on September 7 must be still fresh in our memory. In the choice between God and mammon, many of us, irrespective of religion, chose God on that day through our prayers and fasting. On that day, when money power was muscling its way to bombard Syria, millions across the globe turned to God to rein in this destructive power. At least for the time being, God seems to have won this encounter. Let us continue to put God back on the altar, removing mammon from the prime place in our personal lives, first, so that we can hope to remove mammon from the high place it holds in our world!


Rich vs Poor

செப்டம்பர் 15, சென்ற ஞாயிறு, துயருறும் அன்னை மரியாவையும் சிரியா நாட்டின் ஆபத்தையும் இணைத்துச் சிந்தித்தோம். துயருறும் அன்னை மரியா என்றதும், உருக்குலைந்த மகனை மடியில் கிடத்தி அமர்ந்திருக்கும் அந்த உருவம் மனதில் ஆழமாய் பதிகிறது. அதே செப்டம்பர் 15ம் தேதியன்று, அனைத்துலக மக்களாட்சி நாளும் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை அகில உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டது.  மக்களாட்சி, உலக அமைதி என்ற உயர்ந்த இலட்சியங்களை இனி கொண்டாடமுடியுமா என்ற கேள்வி நம் மனங்களை வாட்டுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குக் காயப்பட்டு, உருக்குலைந்து கிடக்கும் மக்களாட்சி என்ற மகனை மடியில் ஏந்தி அழுதுகொண்டிருக்கும் பல தாய்நாடுகளை எண்ணி வேதனைப்படவேண்டிய நாள், அனைத்துலக மக்களாட்சி நாள். மக்களாட்சிஎன்ற சொல்லுக்கு அளிக்கப்பட்ட பல இலக்கணங்களில் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அளித்த இலக்கணம் அதிகப் புகழ்பெற்றது.

மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், அவர் சொன்ன வேறொரு கூற்றும் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்:
•              எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.
•              You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.

ஏமாற்றுவதுபற்றி லிங்கன் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்காவில் வங்கிகள் தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது, போர்ச் செலவுக்கு வங்கி உரிமையாளர்களிடம் லிங்கன் பணம் கேட்டார். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்றுணர்ந்த லிங்கன், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசே பண நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு அவர் உள்நாட்டுப் போரின் செலவுகளைச் சமாளித்தார். உள் நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் கொல்லப்பட்டார். அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது.
இதேபோல், ஜான் கென்னடி அரசுத் தலைவராக இருந்தபோது, 1963ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். அதே ஆண்டு நவம்பர் 22ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னடி இருவரின் கொலைகளுக்கும் தெளிவான முடிவுகள் இதுவரைத் தெரியவில்லை. இவர்களது கொலைகளுக்கும் பணம் படைத்த வங்கியாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது வரலாற்றில் அவ்வப்போது அதிக சப்தமில்லாமல் பரிமாறப்படும் கருத்துக்கள்.
இவ்விரு எடுத்துக்காட்டுகளும் Tip of the iceberg என்று சொல்லப்படும் பனிப் பாறையின் மேல் நுனிதான். பணம் அல்லது செல்வம் என்ற பனிப்பாறையில், தெரிந்தும், தெரியாமலும் மோதி, பல நாடுகள் கடன் என்ற கடலில் மூழ்கி வருவது இன்றைய அவலநிலை.
இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் பண சக்தியைப் பற்றி இன்று நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். தீவிரமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறும் திட்டவட்டமான சொற்கள் நம்மைத் விழித்தெழச் செய்கின்றன: "நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக்கா 16: 13)

இயேசுவின் இந்தக் கூற்று நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராததுபோல் தெரிகிறது. செல்வம் இன்றி, பணம் இன்றி வாழமுடியுமா என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. கடவுளையும் செல்வத்தையும் எதிரும் புதிருமாக அமைத்து, இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ள, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 13ம் இறைச் சொற்றொடர் முழுவதையும் சிந்திப்பது உதவியாக இருக்கும்.
லூக்கா 16: 13
"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறியுள்ளார்.

பணமின்றி, செல்வமின்றி வாழ்க்கை நடத்துங்கள் என்றோ, செல்வத்தைத் துறந்துவிட்டு கடவுளுக்குப் பணிவிடை செய்யுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. கடவுளுக்கும் செல்வத்துக்கும் சமமான இடத்தைக் கொடுப்பதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒருவருடைய வாழ்வில் எப்போது அவர் சேர்த்த செல்வம், இறைவனுக்குப் போட்டியாக எழுகிறதோ, அப்போது போராட்டம் துவங்குகிறது. இறைவனா, செல்வமா என்ற இந்தப் போட்டியில், கண்ணால் காண முடியாத இறைவனைவிட, கண்ணால் காணக்கூடியச் செல்வத்தை நாம் எளிதில் பீடமேற்றிவிடுகிறோம்.
இன்றைய உலகில் செல்வம் எந்தெந்த வழிகளில் பீடமேற்றப்பட்டு வணங்கப்படுகிறது என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாக உள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் என்ற பதவி உலகிலேயே மிகப் பெரும் பதவி என்று எண்ணுவோர், ஆபிரகாம் லிங்கனையும், ஜான் கென்னடியையும் சிறிது எண்ணிப் பார்க்கவேண்டும். அத்தனை அதிகாரங்களும் கொண்ட அவர்களே பணம் படைத்த செல்வந்தர்களை எதிர்த்ததால் பலியாயினர். அவர்கள் கொலை செய்யப்பட்டதன் முழு உண்மைகளும் இதுவரை வெளிவராமல் இருப்பதற்குக் காரணம்... பின்னணியில் இருக்கும் செல்வம் படைத்தவர்களே! அமெரிக்க அரசுத் தலைவர்கள் பலர் ஆட்சிப்பீடத்தில் அமர்வது உண்மை. ஆனால், அவர்களை ஆட்டிப் படைப்பவர்கள், பணத்தைப் பீடமேற்றித் தொழுதுவரும் செல்வர்களே என்பதில் ஐயமில்லை.

செல்வர்கள் ஒருசிலர் இவ்வுலகை எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றனர் என்பதை John Perkins என்பவர் ஒரு நூலில் எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான இந்நூலின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது: Confessions of an Economic Hit Man - அதாவது, 'பொருளாதாரம் கொண்டு கொலைசெய்த ஒருவரின் பாவ அறிக்கை' என்பது இந்நூலின் தலைப்பு.
இந்நூலை அவர் எழுதியபிறகு பல இடங்களில் பேட்டிகள் அளித்துள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தன் பேட்டிகளில் அமெரிக்க செல்வர்களைப் பற்றி Perkins சொல்வது இதுதான்... அமெரிக்காவை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சியில் இருப்போரை ஆட்டிப் படைப்பதெல்லாம் செல்வம் படைத்த ஒரு சிலரே. இச்செல்வர்கள் தங்கள் நாட்டில் வளர்த்துள்ள வர்த்தகம் போதாதென்று, அடுத்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தால், அதற்கு அமெரிக்க அரசும் துணைபோக வேண்டும். அமெரிக்க அரசுத் தலைவருக்கே இந்நிலை என்றால், ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

செல்வர்கள் அடுத்த நாட்டுக்குள் காலடி வைக்க எடுக்கும் முயற்சிகளை John Perkins தன் பேட்டியொன்றில் படிப்படியாக விவரித்துள்ளார். பணத்தைக் காட்டி அடுத்த நாட்டுத் தலைவர்களை விலைபேசும் முயற்சிகள் முதலில் நடைபெறும். இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் இவ்வித முயற்சிகளில் ஈடுபட பொருளாதார ஆலோசகர்என்ற பெயரில் தான் சென்றதாக Perkins கூறியுள்ளார். இந்த முயற்சி தோற்றுப்போனால், மக்களின் போராட்டம் என்ற பெயரில் அந்நாட்டில் குழப்பங்களை உருவாக்கி, அங்கு அமெரிக்க அரசின் இராணுவத் தலையீடு இருக்கும்படி செய்வது அடுத்தக் கட்டம் என்று Perkins கூறியுள்ளார். அண்மையில் சிரியாவில் அமெரிக்க இராணுவம் நுழைய முற்பட்டதும் இத்தகையதொரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்விதம் செல்வர்கள் பல நாடுகளில் உருவாக்கியுள்ள, இன்னும் உருவாக்கிவரும் அழிவுகளைப் பற்றி John Perkins பேசுவதைக் கேட்கும்போது, மனம் அதிர்ச்சியுறுகிறது. செல்வம் மிகுந்த நாடுகளில் வாழும் செல்வர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு, இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அரபு நாடுகளில், ஆசிய நாடுகளில் புகுந்துள்ளதை நாம் உணர முடிகிறது. இவ்விதம் வெளிநாட்டிலிருந்து வந்துதான் ஒரு நாட்டின் மக்களாட்சியையோ அல்லது அந்நாட்டின் இயற்கை வளங்களையோ அழிக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாட்டுக்குள் வாழும் செல்வர்களே இந்த அழிவை உருவாக்குவதை ஒவ்வொரு நாட்டிலும் நாம் காணலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், செல்வர்கள் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர் எனபதற்கு அனைத்து நாடுகளும் எடுத்துக்காட்டுகள். இவ்விதம் செல்வர்கள் சக்தி பெறுவதற்கு அவர்கள் திரட்டியிருக்கும், அவர்கள் பீடமேற்றி தொழுதுவரும் செல்வமே முக்கியக் காரணம். ஒருவகையில் பார்த்தால், நாடுகளை ஆட்டிப்படைக்கும் செல்வர்களை, நாளெல்லாம் ஆட்டிப்படைப்பது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வம்.

பேராசையில் வாழும் செல்வர்கள், அனைத்தையும், அனைவரையும் தாங்கள் வழிபடும் செல்வத்திற்குப் பலியாக்குவது தொன்றுதொட்டு மனித வரலாற்றில் நிகழ்ந்துவரும் ஒரு சாபம்தான். இறைவாக்கினர் ஆமோஸ் காலத்தில் வாழ்ந்த செல்வர்களும் இறைவனைவிட செல்வத்திற்கு மதிப்பு அளித்ததால், அவர்களுக்கு ஒய்வு நாளும் ஒரு பெரும் சுமையாக மாறியது. இதோ இறைவாக்கினர் ஆமோஸ் இச்செல்வர்களைப் பார்த்து விடுக்கும் எச்சரிக்கை:
ஆமோஸ் 8: 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இவ்விதம் உலகெங்கும் நிறைந்திருக்கும் ஒரு சில செல்வர்களின் சக்தியால், அவர்கள் வழிபடும் செல்வத்தின் சக்தியால், இன்று உலக அரசுகள், அகில உலக அமைப்புக்கள் சக்தி இழந்து வருகின்றன. அண்மையில் சிரியா மீது இராணுவத் தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க அரசு முடிவெடுத்தபோது, அந்த முடிவுக்குப் பின்னணியில் பல செல்வர்களின் தூண்டுதல் இருந்ததென்பதை பல விவாதங்களில் நாம் கண்டோம்.  ஐ.நா.வின் கருத்துக்களுக்கும் செவிகொடுக்காமல் அமெரிக்க அரசும், பிரெஞ்ச் அரசும் விடுத்த அறிவிப்புகள் மீண்டும் ஓர் உலகப் போரை உருவாக்குமோ என்ற பயத்தை வளர்த்தது.

என்னைப் பொருத்தவரை இந்த ஆபத்திலிருந்து நம்மை ஓரளவு காத்தது, செப்டம்பர் 7ம் தேதியன்று, உலகெங்கும் மக்கள் மேற்கொண்ட உண்ணாநோன்பும் செபங்களுமே! மதம் என்ற எல்லையைக் கடந்து நாம் இறைவனை நாடிச்சென்றது ஏதோ ஒரு வகையில் தீர்வைத் தந்துள்ளது. செல்வர்களின் பேராசையால் உந்தித்தள்ளப்பட்டு செயலாற்றும் அரசுகள் ஒருபுறம், இறைவனை நாடிச்சென்ற உள்ளங்கள் மறுபுறம் என்று நாம் இரு வாரங்களுக்கு முன் கண்ட அந்த நிலை மீண்டும் இயேசுவின் கூற்றை நினைவுறுத்துகிறது. "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது." கடவுளும் செல்வமும் மேற்கொண்ட இந்த மோதலில் கடவுள் வென்றது நிம்மதியைத் தருகிறது.
இந்த நிம்மதி தொடரவேண்டுமெனில், பீடமேற்றி வணங்கப்படும் செல்வம் பீடத்தை விட்டு நீக்கப்படவேண்டும். நாம் உருவாக்கிய செல்வங்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் கடவுளாக மாறியுள்ள மயக்கத்திலிருந்து இவ்வுலகம் மீளவேண்டும். இத்தகைய விண்ணப்பங்களை இறைவனிடம் இன்று நம்பிக்கையோடு ஏந்திச் செல்வோம்.


15 September, 2013

Lost and Found காணாமல் போவதும்... கண்டுபிடிக்கப்படுவதும்

A woman holding a wounded relative during protests against president Saleh in SanaaYemen October 15, 2011. 
Photograph © Samuel Aranda.

The month of September has three Feasts of our Lady coming in quick succession. September 8 – Birthday of Mary; September 12 – The Holy Name of Mary and September 15 – The Mother of Sorrows. Of these, September 8, and 15 fall on Sunday, this year. Hence, we did not really celebrate these Feasts. Still, the Birthday of Mary, which is also celebrated as the Lady of Good Health in India (especially Velankanni), and the Feast of the Mother of Sorrows require some attention in the context of the world as well as the Gospel for this Sunday.
Good Health and Sorrows are two ‘motherly’ aspects which all of us have experienced. Mothers suffer sorrow after sorrow while providing good health to the family members. The world today seems to be drifting in the opposite direction to these ‘motherly’ qualities. The world seems to deny good health to its people by inflicting sorrow after sorrow. In recent times, our conversations have been on chemical weapons, military attack, more loss of life, more misery to the people who have already suffered the tragedy of war for the past two years.

Against such a background, Pope Francis called for a day of prayer and fasting on September 7. The response to this call – not only from the Christian world, but from all over the world – was a clear proof that the human family is craving for peace, harmony… in short, Good Health. The efforts undertaken on the eve of the Feast of our Lady of Good Health (Sep. 7) seem to have infused some health into this ‘trigger-happy’ world. For the past one week there is less talk of military aggression and more thoughts on diplomatic solutions to the problems of Syria.
Although we thank God and our Lady for this ‘improved health’ of the world, we are still far from safe. The war clouds around Syria are still dark and gloomy. Hence, we bring those innocent people before the Lord once again this week. These ‘lost people’ need to get back home!  

The Gospel we have for this Sunday’s liturgy talks of getting back home. It makes very much sense with the present situation, especially around Syria! When I speak of how the Gospel makes sense with this situation, I am disturbed by the efforts of the media world, especially in the U.S., to make sense of the present tense situation of Syria vis-à-vis the Bible. There have been some programmes raising the question: If and when the U.S. begins its attack on Syria, would that be the ‘end of Damascus’ as predicted in the Bible by the Prophet Isaiah?
While Pope Francis and the Christian world are trying to make sense of this meaningless tragedy that has surrounded Syria and many other countries, with the help of God’s words, it is sickening to see how the media in the U.S. is trying to ‘sensationalise’ the destruction of Damascus via Biblical references!
Here are two headlines that appeared in the media depicting this ‘media game’:
Fox News Discusses Possibility That Syria War Fulfills Biblical Prophecy
—By Tim Murphy| Tue Sep. 10, 2013
Oh Magog! Why End-Times Buffs Are Freaking Out About Syria
Novelist Joel Rosenberg has the ear of Rick Santorum, Rick Perry, and the Heritage Foundation. He thinks conflict in Syria was foretold by the Old Testament.
—By Tim Murphy | Wed Sep. 4, 2013

Leaving aside this media game, let us turn to today’s Gospel taken from Luke Chapter 15. This Chapter from Luke is called ‘A Gospel within the Gospel’, since it gives us those uplifting ‘lost and found’ stories of the Sheep, Coin and Son! It is the story of getting back home, being welcomed by God… all that is the core of God’s love.
I may have reflected on this parable at least on ten different occasions for my homilies. Almost on all these occasions, I have focussed more on the second part of the parable… the sweet ending which tells us that the Father, the Lost Son and, possibly, the First Son ‘lived ever after happily’!
Today I would like to spend more time on the first part of the parable… namely the part where the younger son gets lost and rediscovers himself! Getting lost could be a help to fresh discovery. The younger son, the Lost Son gets his enlightenment while feeding the pigs – a very unlikely place for ‘enlightenment’! 

My inspiration to focus on the first part of the parable came from Ron Rolheiser, a great Columnist and Author. In one of his reflections titled ‘Lost is a Place Too’, he writes like this (I quote him extensively):
During the summer when I was fourteen, my inner world collapsed. It began with the suicide of a neighbor. A young man whose health and body I envied went out one night and hung himself. Then another young man from our small farming community was killed in an industrial accident, and the summer ended with a classmate, a close friend, dying in a horse-back riding accident. I served as an altar-server at each of their funerals. My outside world stayed the same, but inside…things were dark, spinning, scary. I was in a free-fall. The specter of death suddenly colored my whole world and, even though I was only fourteen years old, I was now an old man inside. A certain youthfulness and joie de vivre slipped away from me for good. It truly was a summer of my discontent. I envied everyone who wasn't as depressed as I was. I felt myself the saddest 14 year-old in the world.
But, as all that pain, disillusionment, and loss of self-confidence was seeping into my life, something else was seeping in too, a deeper faith, a deeper vision of things, an acceptance of my vulnerability and mortality, and a sense of my vocation. I'm a priest today because of that summer. It remains still the most painful, insecure, depressed period of my life. But it remains too the time of deepest growth. Purgatory on earth, I had it when I was fourteen.
Sometimes when the world is falling apart and we are haunted by the question: What is wrong? The real answer is that there is nothing wrong. The necessary storm has finally arrived and it is a good thing too because our falling apart is the only thing that can break down and transform that spoiled, rich, self-centered kid that is inside us all. http://www.ronrolheiser.com/columnarchive/?id=376

September 5 marked the 16th anniversary of the death of Bl. Mother Teresa. The whole world, irrespective of nation, language, religion, keeps talking highly of this great lady. Mother Teresa has been the model of so many Christian virtues. She could also be a great example of one whose world fell apart; but who rebuilt it in a matchless way… Hard to believe that Mother Teresa had tough time in her life? Read on.
A book published in 2007 is titled “Mother Teresa: Come Be My Light - The Private Writings of the Saint of Calcutta (Edited and with Commentary by Brian Kolodiejchuk, M.C.) I have not read this book. But I saw some enlightening remarks made by Ron Rolheiser on this book and on Mother Teresa. Once again, I quote him extensively:
A recent book on Mother Teresa, Mother Teresa: Come Be My Light, makes public a huge volume of her intimate correspondence and in it we see what looks like a very intense, fifty-year, struggle with faith and belief. Again and again, she describes her religious experience as "dry", "empty", "lonely", "torturous", "dark", "devoid of all feeling". During the last half-century of her life, it seems, she was unable to feel or imagine God's existence.
Many people have been confused and upset by this. How can this be? How can this woman, a paradigm of faith, have experienced such doubts?And so some are making that judgment that her faith wasn't real. Their view is that she lived the life of a saint, but died the death of an atheist. What's to be said about all of this? Was Mother Teresa an atheist? Hardly! In a deeper understanding of faith, her doubts and feelings of abandonment are not only explicable, they're predictable.
What Mother Teresa underwent is called "a dark night of the soul." This is what Jesus suffered on the cross when he cried out: "My God, my God, why have you forsaken me?" When he uttered those words, he meant them. At that moment, he felt exactly what Mother Teresa felt so acutely for more than fifty years, namely, the sense that God is absent, that God is dead, that there isn't any God. But this isn't the absence of faith or the absence of God, it is rather a deeper presence of God, a presence which, precisely because it goes beyond feeling and imagination, can only be felt as an emptiness, nothingness, absence, non-existence.
In a remarkable book, The Crucified God, Jurgens Moltmann writes: "Our faith begins at the point where atheists suppose that it must end. Our faith begins with the bleakness and power which is the night of the cross, abandonment, temptation, and doubt about everything that exists! Our faith must be born where it is abandoned by all tangible reality; it must be born of nothingness, it must taste this nothingness and be given it to taste in a way no philosophy of nihilism can imagine."
Mother Teresa understood all of this. That is why her seeming doubt did not lead her away from God and her vocation but instead riveted her to it with a depth and purity that, more than anything else, tell us precisely what faith really is.

I would like to add this note on Mother Teresa here. What she did for most part of her life would have drained any human being of both physical and emotional energy… even spiritual energy. She was dealing with misery, abandonment and suffering 24x365 year after year. Witnessing the darkest side of humanity day after day must have drained out all her energy. Every night she must have asked quite a few questions to God about the misery she was witnessing. If these questions did not arise in her, she was either a robot simply programmed to do charitable works or an angel camouflaged as a human. She was neither. She was simply an ordinary human being with an extraordinary heart. That is why even when her world was totally dark, she brought light to so many thousands. Only a person like Teresa could have gone through hell so long!
This picture of Mother Teresa also brings to mind the Mother of Sorrows. She was standing at the foot of the cross and was witnessing the darkest hour of Christ’s agony when he seemed lost; when he raised the piercing question: My God, why have you forsaken me? (Mt. 27: 46) The Mother must have prayed that her Son would be able to find himself, his God and his home. Her prayers must have been answered, since Jesus found peace in placing himself in his Father’s hands. (Lk. 23: 46)

Let us come back to the younger son feeding the pigs… While feeding the swine, he decided not to be buried in self-pity, but to get up and go back to the father. I have read somewhere that the difference between a saint and us ordinary mortals is that when a saint comes to the end of a rope, he or she makes a knot and hangs on. Jesus did. Mother Teresa did. The Prodigal Son did. We are called to do so!
We pray that through the intercession of the Mother of Sorrows, people all over the world, especially those in Syria who are totally lost, may find themselves, their God and Peace!

A boy experiencing severe pain from TB meningitis is comforted by his mother at Svay Rieng Provincial Hospital, Svay Rieng, Cambodia. Family members provide much of the personal care at hospitals in the developing world. 
Photograph & Caption © James Nachtwey-VII.

செப்டம்பர் 8, 15 ஆகிய இரு தேதிகளும் அன்னை மரியாவின் திருவிழா நாட்கள். செப்டம்பர் 8 - மரியன்னையின் பிறந்த நாள்... (புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவிழா). செப்டம்பர் 15 - துயருறும் அன்னை மரியாவின் திருநாள். இவ்வாண்டு, செப்டம்பர் 8,15 ஆகிய இரு தேதிகளும் ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால், அன்னையின் திருவிழாவை மையப்படுத்த வாய்ப்பில்லாமல் போயிற்று. இருப்பினும், நலம்தரும் அன்னை மரியாவையும், துயருறும் அன்னை மரியாவையும் எண்ணிப்பார்க்க இன்றைய உலகச்சூழல் நம்மைத் தூண்டுகிறது. நலம் தருதல், துயர் உறுதல் என்ற இரு கோணங்களில் அன்னை மரியாவின் திருநாள்கள் தொடர்ந்து வருவது நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. தான் எவ்வளவுதான் துயருற்றாலும் தன் குழந்தைகளுக்கு நலம் தருவது தாய்மையின் ஒரு தலை சிறந்த பண்பு. இதனை நமக்கு நினைவுறுத்தவே இவ்விரு திருநாள்களும் ஒன்றையொன்று தொடர்ந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தத் தாய்மைப் பண்புக்கு எதிர் முனையில் இவ்வுலகம் இருப்பதுபோன்ற செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். துயர் தருவதிலும், நலம் மறுப்பதிலும் உலக அரசுகள் மும்முரமாக இருப்பதைப் போன்ற நிலை நம்மைச்சுற்றி உருவாகியிருக்கிறது. இந்நிலைக்கு ஒரு மாற்றாக, ஒப்புரவை, மன்னிப்பை, அமைதியை உலகில் நிலைநாட்ட திருத்தந்தை பிரான்சிஸ் போன்ற பல உன்னதத் தலைவர்களும் முயன்றுவருவதைக் கண்டு மனம் ஓரளவு நம்பிக்கை கொள்கிறது.
சிரியா நாட்டின் அமைதிக்காக செபிக்கும்படி கடந்த வாரம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று, உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களுடனும் திருத்தந்தையுடனும் இணைந்து உண்ணாநோன்பும், செபங்களும் மேற்கொண்டோம். சிரியாவைச் சூழ்ந்திருந்த போர் நெருக்கடியை அமைதி வழியில் வெல்வதற்கு செப்டம்பர் 7ம் தேதி மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருவிழிப்பு வழிபாட்டை திருத்தந்தை முன்னின்று நடத்தினார். இந்த வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு மதத்தினரும் கலந்துகொண்டு, உலக அமைதிக்காக, குறிப்பாக, சிரியாவில் அமைதி நிலவ செபங்களை எழுப்பியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
நலம்தரும் ஆரோக்கிய அன்னையின் திருநாளுக்கு முந்தின நாள், செப்டம்பர் 7ம் தேதி, உலகமெல்லாம் நலமடையவேண்டும் என்று திருத்தந்தையுடன் நாம் மேற்கொண்ட செபமுயற்சி, இவ்வுலகிற்கு ஓரளவு நலனை வழங்கியுள்ளது என்றே சொல்லவேண்டும். கடந்த ஒரு வாரமாக, ஆயுதத்தாக்குதல், அழிவு என்ற வன்முறைக் கருத்துக்களைப் பேசாமல், அரசியல் வழி தீர்வுகள், பேச்சு வார்த்தைகள் என்ற தொனியில் பல நாட்டுத் தலைவர்கள் சிந்திக்க முயன்றுவருவதற்காக இறைவனுக்கும், அன்னை மரியாவுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும். இருப்பினும், போர் மேகங்கள் இன்னும் முற்றிலும் நீங்கவில்லை. அமைதியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் சிரியாவின் அப்பாவி மக்களையும், உலகின் பல நாட்டினரையும் இந்த ஞாயிறன்று நம் செபங்களில், சிந்தனைகளில் இறைவன் முன் மீண்டும் ஏந்தி வருவோம்.

செப்டம்பர் 15, இந்த ஞாயிறன்று துயருறும் அன்னை மரியாவின் திருநாள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் வேதனை அனுபவித்து, சிலுவையில் தன் மகன் இறந்தபோது, அன்னை மரியா சிலுவையடியில் நின்றார் என்று நற்செய்தி சொல்கிறது (யோவான் 19: 25). அந்த அன்னையின் வீரத்தைக் கொண்டாடும் திருநாள் இது. இறந்த தன் மகன் இறுதியாக அமைதியில் உறங்கும் வண்ணம் அவரது உடலை மடியில் தாங்கி அமர்ந்திருந்த அன்னை மரியாவின் தியாகத்தைக் கொண்டாடும் திருநாள் இது.
அன்னை மரியாவைப் போலவே துயரத்தின் சிகரத்தில் உறுதியுடன் நிற்கும் அன்னையரை, குறிப்பாக, சிரியாவிலும், ஏனைய நாடுகளிலும் தம் பிள்ளைகளை வன்முறைகளுக்கு ஒவ்வொரு நாளும் பலிகொடுத்து பரிதவிக்கும் அன்னையரைச் சிறப்பாக இன்று நினைவில் கொள்வோம்.

துயரங்கள் மிகுந்த சூழலிலும் நம்பிக்கையை வளர்க்கும் பொருள்மிகுந்த இத்திருநாளன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியும் பொருத்தமாகத் தெரிகிறது. லூக்கா நற்செய்தியின் 15ம் பிரிவில் காணப்படும் மூன்று உவமைகள், இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளன. காணாமற்போய் கண்டுபிடிக்கப்படும் மகிழ்வைப் பறைசாற்றும் உவமைகள் இவை. லூக்கா நற்செய்தியின் 15ம் பிரிவு, "நற்செய்திக்குள் ஒரு நற்செய்தி" என்று அழைக்கப்படுகிறது. காணாமற்போன ஆடு, காணமற்போன நாணயம், காணமற்போன மகன் என்ற இந்த மூன்று உவமைகளில், காணாமற்போன மகன் உவமை உலகப் புகழ்பெற்ற உவமை.
காணமற்போன மகன் உவமையை பலமுறை சிந்தித்திருக்கிறேன். என் சிந்தனைகள் எல்லாமே திருந்திவந்த மகன், அவரை ஏற்று விருந்தளித்த தந்தை, அதை ஏற்றுக் கொள்ளாத மூத்த மகன், அவரைச் சமாதானப்படுத்த முயன்ற தந்தை என்று இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் என் கவனம் அதிகமாய் இருந்து வந்தது. இன்று, முதல் பகுதியில் நம் சிந்தனைகளை அதிகம் பகிர்வோம். இளைய மகனைப்பற்றி சிந்திப்போம்... அதுவும், மனம்மாறி திரும்பி வந்ததால்கண்டுபிடிக்கப்பட்ட மகனைவிட, காணாமல் போன மகனைப்பற்றி அதிகம் சிந்திப்போம். காணாமல் போவது என்ன என்பதை அறிய முயல்வோம்.
சிரியா போன்ற நாடுகளில் போர்ச் சூழல்களாலும், வேறுபல வேதனைகளாலும் தங்கள் வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும், தங்கள் உறவுகளையும் தொலைத்துவிட்டு வேதனையுறும் மக்களை முன்னிறுத்தி, காணாமல் போவது அல்லது, தொலைந்து போவதைக் குறித்துச் சிந்திக்க முயல்வோம்.

ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர், அருள்பணியாளர் Ron Rolheiser. காணமற்போன மகன் உவமைக்கு அவர் தரும் விளக்கத்தில், காணாமல் போவதுபற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். அவரது சிந்தனைகளே என்னையும் இவ்வழியில் சிந்திக்கத் தூண்டின. 14வது வயதில் தன் வாழ்வில் நடந்தவைகளை Rolheiser இவ்வாறு கூறியுள்ளார்:
எனக்கு 14 வயதனபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த ஒரு 20 வயது இளைஞன் என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர் வேலை செய்யும் இடத்தில், ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர் குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார். இந்த மரணங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச்சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாதது போல் நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறியது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான ஒரு 14 வயது இளைஞன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.
இந்தச் சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும் அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஒரு குருவாக இருப்பதற்கு அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில் காணாமற் போனதைப்போல் நான் உணர்ந்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.
ஆம், காணாமல் போவதன் வழியாக, பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், முற்றிலும் நொறுங்கிவிடும் நிலைகள் நிரந்தர முடிவுகள் அல்ல. அந்த இருள், அந்த நொறுங்குதல் புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, காணாமல் போவதும் உதவி செய்யும்.

சரியாக பத்துநாட்களுக்கு முன், செப்டம்பர் 5ம் தேதி, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்ததன் 16ம் ஆண்டை நினைவுகூர்ந்தோம். அந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்த இடத்தை இந்த அருளாளர் மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைப்பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். இப்படி நான் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். தொடர்ந்து கேளுங்கள்.
2007ம் ஆண்டு"Mother Teresa - Come Be My Light" என்ற நூல் வெளியானது. அன்னை தெரேசா தனிப்பட்ட வகையில் எழுதி வைத்திருந்த எண்ணங்களைத் தொகுத்து Brian Kolodiejchuk என்பவர் இந்நூலை வெளியிட்டார். இந்நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. ஆனால், இதை வாசித்தவர்கள் அன்னை தேரேசாவைப் பற்றி அதிர்ச்சி அடைந்ததாக எழுதியுள்ளனர். தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள் அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் வெளியிடப்பட்டுள்ளன.
உயர்ந்த நிலையில் நாம் போற்றி மதிக்கும் மனிதர்கள் எவரும் கேள்விகள், குழப்பங்கள் இவற்றால் அலைகழிக்கப்படுவது கிடையாது என்று நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற அற்புத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்ட, இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்கமுடியும் என்பது விளங்கும். அதிலும் சிறப்பாக, அவர் செய்துவந்த பணியில், இந்த உலகத்தின்மீது நம்பிக்கையைக் குறைக்கும் துன்ப நிகழ்வுகளையே ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.
இருள், துயரம், கலக்கம் இவைகளைச் சந்திக்காத மனிதர்களே கிடையாது. ஆனால், அந்த நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் நம்மில் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர்... அன்னை தேரேசாவைப் போல்.

நமது இன்றைய உவமையின் நாயகனிடம் திரும்பி வருவோம். பன்றிகள் நடுவே, பசியில் மயங்கிய இளையமகன் பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவைகள்தான் இனி தன் வாழ்வென்று விரக்தியடையாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்." (லூக்கா 15: 17-19) என்று எழுந்தாரே...அந்த நேரத்தில், காணாமற் போயிருந்த தன் வாழ்வை அவர் மீண்டும் கண்டெடுத்தார்.
காணாமல் போவதும், ஒரு வகையில் பார்க்கப்போனால், அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை வாழ்வில் நாம் கண்டும் காணாமல் ஒதுக்கிவைத்திருந்த பல உண்மைகளையும் விசுவாச உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும்.
சிலுவையில் அறையுண்டிருந்த இயேசு, தன் தந்தையைத் தொலைத்துவிட்டதைப் போல் உணர்ந்தார். தானும் காணாமற் போய்விட்டதைப் போல் உணர்ந்தார். இருப்பினும் இறுதியில் அந்த இறைவனை மீண்டும் கண்டுபிடித்து, அவர் கரங்களில் தன் உயிரை ஒப்படைத்தார். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் துயருறும் அன்னை மரியா, தன் மகன் அந்தச் சிலுவையில் தன்னையேத் தொலைத்துவிட்டு கதறிய அவலக்குரலை கேட்டிருப்பார். அவர் தன் மகனுக்காக இறைவனிடம் மன்றாடியிருப்பார்.
அந்த அன்னையின் பரிந்துரை வழியாக, சிரியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும் தங்கள் உடமைகள், உறவுகள், அமைதி என்று அனைத்தையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருக்கும் கோடான கோடி மக்கள், தாங்கள் தேடும் அமைதியைப் பெறவேண்டும் என்பதே நமது தொடர்ந்த செபமாக அமையட்டும்.


08 September, 2013

Disciple… No ‘average Christian’ சீடர்... சராசரி கிறிஸ்தவர் அல்ல


The Cost of Discipleship

We begin today’s reflections with an anecdote narrated by one of the Presbyterian Ministers: When I was at Duke, Will Willimon was telling our class about a parent who called him one day, very upset, and said, “I hold you personally responsible for this!” It turns out his daughter was going to—in his words—“throw it all away” to go do mission work in Haiti with the Presbyterian Church: “A B.S. in Mechanical Engineering from Duke, and she’s going to dig ditches in Haiti!” As the conversation went on, Willimon pointed out that it was actually the parents who had started all of this. They were the ones who had her baptized, who read Bible stories to her, who took her to Sunday School. “You’re the ones who introduced her to Jesus, not me,” he said. And the father said, “But all we ever wanted her to be was a Presbyterian.”

To be a Presbyterian, to be a Roman Catholic, to be a Christian… What does it entail? Being an ‘average Christian’, fulfilling the Sunday obligations, doing some charitable works that does not involve ‘too many risks’? When someone decides not just to follow a Christian Denomination, but Christ Himself, it becomes more challenging. Discipleship was and is always tough. When we listen to Jesus in today’s gospel, we get some idea of what is in store for a true disciple of Jesus.
Luke 14: 25-33
Large crowds were travelling with Jesus, and turning to them he said: “If anyone comes to me and does not hate his father and mother, his wife and children, his brothers and sisters—yes, even his own life—he cannot be my disciple. And anyone who does not carry his cross and follow me cannot be my disciple.
“Suppose one of you wants to build a tower. Will he not first sit down and estimate the cost to see if he has enough money to complete it? For if he lays the foundation and is not able to finish it, everyone who sees it will ridicule him, saying, 'This fellow began to build and was not able to finish.'
“Or suppose a king is about to go to war against another king. Will he not first sit down and consider whether he is able with ten thousand men to oppose the one coming against him with twenty thousand? If he is not able, he will send a delegation while the other is still a long way off and will ask for terms of peace. In the same way, any of you who does not give up everything he has cannot be my disciple.”

Here is an extract of a sermon titled ‘The Cost of Discipleship’, preached by Dr. Mark E. Hardgrove on this Gospel passage:
Dietrich Bonhoeffer lived in Germany during the regime of Hitler. Bonhoeffer was part of the resistance to the Gestapo, and though he lived in America for a short time and could have avoided persecution, he chose to go back to Germany. He went to encourage others in Germany, especially the church, to refuse to crumble before the despot government ruling the country that he loved. Eventually Bonhoeffer, along with other members of his family, were arrested and placed in concentration camps. While in Tegel Prison Bonhoeffer was a source of encouragement to many other prisoners. Even the guards took a liking to him and they often smuggled out his writings and poems. Eventually, Bonhoeffer was executed at the Flossenburg Concentration Camp on April 9th, 1945, just a few days before it was liberated by the Allies…
I told you all of this to let you know that the man who wrote the book ‘The Cost of Discipleship’ was writing out of experience… Bonhoeffer didn’t just write about this, but he lived and died the truths he believed. He understood the cost of discipleship, he counted those costs, and still he chose to follow Jesus rather than capitulate to the popular political agenda of the time.

A quick, superficial glance at the second part of today’s gospel (verses 28-33) gave me lot of comfort. ‘He who fails to plan, plans to fail’ is a basic tenet of management lessons. Planning a course of action, planning a career is basic common sense. Jesus, after having spoken tough words, really tough words, about discipleship in the first part of the gospel (verses 25-27), suddenly becomes a master in management lessons… lessons in how to plan a building, how to plan a war… This is what made me feel comfortable.
In my comfort zone, I began dreaming of ‘what if’s… We are aware of the popular books ‘If Aristotle Ran General Motors’ and ‘If Harry Potter Ran General Electric’ written by Tom Morris. ‘If Jesus Taught in a Business School’ was the title of my book… To my surprise, in Google search, I came across two books with similar titles: ‘Jesus CEO’ by Laurie Beth Jones (1995), and ‘Jesus Christ: Millionaire, Entrepreneur, CEO’ by John R.Colt Ph.D., (2002). Thinking of Jesus as a CEO, as a professor in a business school was a cute dream!

As I was lost in these dreams, came the PUNCH… The last line of today’s Gospel! It was a KNOCKOUT PUNCH! “In the same way, any of you who does not give up everything he has, cannot be my disciple.”
When I read this last line, I felt as if some logic was missing there. Sometimes in our Sunday liturgy we omit certain verses in our readings. I thought that in today’s Gospel some verses were omitted before this final line. So, I checked. No. Today’s Gospel was Luke 14: 25 to 33 with no omission. The last line simply flowed from the previous lines.
  • Now, what is the big fuss about this last line and calling it a punch etc.?
  • The last line reads this way: “In the same way, any of you who does not give up everything he has, cannot be my disciple.”
  • Yes, I can see that… Jesus always talks about sacrifice, giving up etc… So what?
  • Not so fast, dear Friend. Please read the last line again.
If Jesus had simply said ‘If any of you who does not give up…’ it would have been the usual ‘formula’ of Jesus. But, this sentence begins with ‘In the same way…’ This phrase seems out of place here. But, on deeper reflection, this line seems to be the punch line of the whole Gospel… perhaps, the whole concept about discipleship for me. The KO Punch!

The phrase ‘In the same way…’ set me thinking. In the same… which way?
This is how I rephrase this last line of Jesus… Jesus seems to say: “When one of you wants to build a tower or when one of you goes to war, don’t you sit down and plan every detail? Building a tower occupies your mind day and night, every day… Going to war may occupy not only your days and nights, but precious years of your life. In the same way… IN THE SAME WAY… becoming my disciple should involve you, should occupy your thoughts, words and deeds day and night, every day, ALL YOUR LIFE.” Dear Friends, this is how I interpret the phrase ‘In the same way…’ used by Jesus in the last line of this Gospel passage.
How many, in today’s world have given up sleep, food, family… so many necessities of life in order to reach a position or power. We have surely seen and heard of people who pursued, or who were ‘driven’ by a dream in their life. Perhaps, a ‘worldly’ dream! We have also seen and heard of those who have pursued ‘other-worldly’ dreams… like Bonhoeffer, many other saints – recognised and unrecognised by the Church! This is the real challenge for us… to match the passion and perseverance of those who pursue ‘this worldly’ and ‘other-worldly’ dreams… This is the criterion to become a true disciple!

P.S. By the way, all these reflections on discipleship are meant NOT ONLY to priests and religious. Jesus did not address these words to his disciples when they were alone. The first line of today’s Gospel says: Large crowds were travelling with Jesus, and turning to them he said… Yes. This gospel is addressed to the large crowds, to every Christian, to you and me!


 அந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகிவந்த பங்கு அருள்பணியாளர் இளையோரை அதிகம் கவர்ந்தார். அவர் அங்கு வருவதற்குமுன், வறுமையில் வாடும் ஒரு நாட்டில் பல ஆண்டுகள் பணியாற்றிவர். எனவே, அவர் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்த நாட்டில் தான் பெற்ற ஆழமான அனுபவங்களை இளையோரிடம் பகிர்ந்துவந்தார்.
ஒருநாள் ஞாயிறு திருப்பலி முடிந்தபின், ஓர் இளம்பெண்ணின் பெற்றோர் அவரைக் காண காத்திருந்தனர். அருள் பணியாளர் அறைக்குள் நுழைந்ததும், "சாமி, எங்கள் மகள் எடுத்துள்ள முடிவுக்கு நீங்கள்தான் காரணம்" என்று குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் மகள் எடுத்த முடிவு என்ன? நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஓர் ஏழை நாட்டுக்கு ஆறு மாதங்கள் உழைக்கச் செல்வதாக அந்த இளம்பெண் பெற்றோரிடம் கூறினார். அந்த முடிவு பெற்றோரை நிலைகுலைய வைத்தது. அப்பெண் கல்லூரிப் படிப்பை முடிக்க இன்னும் ஓராண்டு உள்ளது. இந்த வேளையில் இதுபோன்ற ஒரு முடிவா? என்று திகைத்த பெற்றோர், தங்கள் மகளை இவ்விதம் மாற்றியது பங்குத் தந்தை என்று எண்ணி, அவரிடம் முறையிட வந்தனர். "எங்கள் மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று அவர்கள் சொன்னதும், பங்குத்தந்தை ஒரு புன்முறுவலுடன், "இல்லை... நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர்களிடமே திரும்பக் கூறினார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த பெற்றோரிடம், "ஆம், உங்கள் மகளுக்கு முதலில் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியது யார்? நான் இல்லையே" என்று அருள் பணியாளர் சொன்னார்.
உடனே, அந்த பெற்றோர், "எங்கள் மகள் ஒரு சராசரி கிறிஸ்தவப் பெண்ணாக வளரவேண்டும் என்றுமட்டும்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காகத்தான் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினோம்" என்று சொன்னார்கள்.

கிறிஸ்துவுக்கு அறிமுகமாவது ஒரு வெற்றுச்சடங்குதான். அவரை அவ்வப்போது கோவிலில், திருப்பலியில் சந்தித்தால் போதும்; அவர் பெயரைச் சொல்லி ஒரு சில தான தர்மங்கள் செய்தால் போதும் என்று வாழ்வதுதான் பாதுகாப்பான, சராசரி கிறிஸ்தவ வாழ்வு என்று எண்ணியிருப்பவர்களுக்கு இன்றைய நற்செய்தி ஒரு பெரும் அதிர்ச்சியைத் தர காத்திருக்கிறது. தனக்கு அறிமுகமானவர்கள், தன்னைப் பின்தொடர விழைபவர்கள் (மேலே விவரிக்கப்பட்டபடி) சராசரி கிறிஸ்தவர்களாக வாழ்வது கடினம் என்பதை இயேசு அழுத்தந்திருத்தமாக கூறியுள்ளார். இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தருவது ஓர் அதிர்ச்சி மருத்துவம்.

லூக்கா நற்செய்தி 14 : 25-27
அக்காலத்தில், பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.   

Dietrich Bonhoeffer, (1906-1945) ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் வாழ்ந்த ஒரு லூத்தரன் சபை பணியாளர், இறையியலாளர். ஹிட்லரின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். துன்பங்களைச் சந்தித்தவர். ஹிட்லரின் இராணுவத்தில் கட்டாயப் பயிற்சியில் சேர்வதைத் தவிர்க்க, அவர் அமேரிக்கா சென்றார். ஆனாலும், தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது அவர் மனதை உறுத்தியது. மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பினார். Bonhoeffer ஜெர்மனிக்கு வந்தபின், அவரும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். Flossenberg என்ற சித்ரவதை முகாமில் 1945 ஏப்ரல் 9ம் தேதி, Bonhoeffer சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
Dietrich Bonhoeffer எழுதிய ஓர் அற்புதமான, புகழ் பெற்ற புத்தகத்தின் பெயர் 'The Cost of Discipleship'  அதாவது, 'சீடராவதற்குத் தரவேண்டிய விலை'. Bonhoeffer இந்த நூலை வெறும் அறிவுப்பூர்வமான விளக்கமாக எழுதவில்லை. தான் அந்நூலில் விவரித்த சீடராக அவரே வாழ்ந்து காட்டினார்.

இயேசுவின் சீடராக வாழ்வதென்பது, உலகத்தோடு ஒத்துப்போகும், கும்பலோடு கும்பலாகக் கலந்துபோகும், கலைந்துபோகும் வாழ்வு அல்ல. Bonhoeffer விரும்பியிருந்தால், ஹிட்லரின் கொள்கைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். அல்லது, ஏற்றுக்கொண்டது போல் நடித்திருக்கலாம். 39 ஆண்டுகளே வாழ்ந்த Bonhoeffer, அமேரிக்கா சென்றபோது, அங்கேயே தங்கிவிட்டு, போர் முடிந்தபின் ஜெர்மனி திரும்பியிருக்கலாம். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பல புத்தகங்கள் எழுதி புகழ் பெற்றிருக்கலாம்.
இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்று இங்கு நான் பட்டியல் இட்டவைகள் எல்லாமே உலக வழியில் எழும் சிந்தனைகள். நாம் முதலில் கூறிய கதையில் வரும் இளம்பெண்ணின் பெற்றோர் விவரித்த 'சராசரி' கிறிஸ்தவராக வாழ்வது எப்படி என்ற கோணத்தில் எழும் எண்ணங்கள். ஆனால், Bonhoeffer உலகம் சொன்ன வழியைவிட, 'சராசரி' கிறிஸ்தவ வழியைவிட, இயேசு சொன்ன வழியை, இன்றைய நற்செய்தி சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடராய் வாழ்வதற்கான விலையைக் கொடுத்தார். தூக்கிலிடப்பட்டார்.

Dietrich Bonhoefferரை இவ்விதம் வாழத்தூண்டிய இயேசுவும், அவர் வாழ்ந்த காலத்தில், உலகத்தோடு ஒத்துப்போயிருந்தால், இளமையிலேயே இறந்திருக்கத் தேவையில்லை. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வாய் வாழ்ந்திருந்து, இன்னும் பல்லாயிரம் அற்புதங்களைச் செய்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் அவர் அற்புதம் செய்யும்போது, இயேசுவின் புகழ் பெரிதும் பரவியது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்வதுபோல், ‘பெருந்திரளான மக்கள் இயேசுவை எப்போதும் பின்பற்றிய வண்ணம் இருந்தனர். கூட்டங்கள் சேர்ப்பதும், மக்களைத் தன் பக்கம் ஈர்த்து, தன் புகழை வளர்ப்பதுமே இயேசுவின் எண்ணங்களாய் இருந்திருந்தால், இந்த மக்கள் கூட்டத்தை எப்போதும் மகிழ்விக்கும் செய்திகளையேச் சொல்லி,  புதுமைகள் செய்து, இயேசு சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஒரு வேளை அவர்களது அரசராகக் கூட மாறியிருக்கலாம்.

இவ்வழிகளை இயேசு பின்பற்றியிருந்தால், இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவர் ஓரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருப்பார். தலைமைத்துவம் என்றால் என்ன என்று இன்றைய உலகில் மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் ஓர் இலக்கணமாக இயேசு இருந்திருப்பார். மேலாண்மை நிறுவனங்களில் "இயேசுவின் வழிகள்" என்பது கட்டாயப் பாடமாகவும் இருந்திருக்கும்.
இயேசுவையும், மேலாண்மைப் பாடங்களையும் இணைத்துப் பேசுவது, கேலியாகப் பேசுவதுபோல் தெரியலாம். ஆனால், மேலாண்மைப் பாடங்களில் சொல்லித்தரப்படும் 'திட்டமிடுதல்' என்ற பாடத்தை இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகக் கூறியுள்ளார். திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார். (He who fails to plan, plans to fail) என்பது மேலாண்மைப் பாடங்கள் சொல்லும் ஓர் அரிச்சுவடி.
வாழ்வில் திட்டமிடுவது மிகவும் அவசியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடம். நாம் சர்வ சாதாரணமாகப் பேசும்போதே, இதைப்பற்றிக் கூறுகிறோம்:சும்மா எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் செஞ்சிடக்கூடாது. ஆர அமர யோசிச்சுத்தான் செய்யணும் என்று. ஆர, அமர சிந்திப்பதைப் பற்றி இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு முறை அல்ல, இருமுறை கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளவைகளை நற்செய்தியிலிருந்து கேட்போம்:

லூக்கா நற்செய்தி 14: 28-32
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லைஎன்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

ஆர அமர சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும் என்ற மேலாண்மைப் பாடங்களை ஒத்தக் கருத்துக்களைக் கூறும் இயேசு, திடீரென, சற்றும் எதிர்பாராத ஒரு கருத்தையும் கூறுகிறார். அதுதான் இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் கூறும் ஒரு திருப்பம். இதை நான் வாசித்தபோது, முகத்தில் குத்தப்பட்டு, தடுமாறி விழுந்ததைப்போல் உணர்ந்தேன். இயேசு, கூறும் இறுதி வார்த்தைகள் இவை:

"அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டு விடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14: 33)

இயேசு பயன்படுத்திய 'அப்படியே' என்ற வார்த்தைதான் முகத்தில் விடப்பட்ட குத்து போல் இருந்தது. 'அப்படியே' என்று இயேசு குறிப்பிடுவது எதை? அதற்கு முன் அவர் கூறிய அந்த இரு எடுத்துக்காட்டுகளை... இயேசு கூறுவது இதுதான்... எப்படி திட்டமிட்டு கோபுரம் எழுப்புவீர்களோ, எப்படி திட்டமிட்டு போருக்குச் செல்வீர்களோ, அப்படியே தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது.
மேலோட்டமாய் இந்த விவிலியப் பகுதியை வாசித்தால், இயேசு அந்த இரு எடுத்துக்காட்டுகளில் கூறிய கருத்தும், அந்த இறுதி வாக்கியத்தில் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணான, தொடர்பில்லாத எண்ணங்களைப் போல் தெரியும். ஆனால், இந்த வாக்கியத்தை ஆழமாகச் சிந்தித்தால், Punch dialogue அல்லது Punch line என்று நாம் சொல்லும் பாணியில், இயேசு இந்த வரிகளில் ஓர் உண்மைச் சீடனுக்குரிய சவாலை முன் வைக்கிறார். இதைத் தான் முகத்தில் விழும் குத்து என்று சொன்னேன்.

ஒரு கோபுரம் கட்டுபவர் இரவும் பகலும் அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார். ஒரு போருக்குச் செல்பவர், கோபுரம் கட்டுபவரைவிட இன்னும் தீவிர எண்ணம் கொண்டிருப்பார், அத்துடன் துணிவும் கொண்டிருப்பார். அதேபோல், இயேசுவைப் பின்தொடர்வதிலும் இரவும் பகலும் ஒரே தீவிர எண்ணம் வேண்டும், துணிவு வேண்டும் என்பதைத்தான் அந்த 'அப்படியே' என்ற வார்த்தை சொல்வதாக நான் எண்ணிப் பார்க்கிறேன். சீடராக இயேசுவைப் பின்பற்றுவதென்பது ஏதோ ஓரிரவில் தோன்றி மறையும் அழகான, இரம்மியமான கனவு அல்ல. மாறாக, வாழ்நாள் முழவதும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் பகலும் நம் சிந்தனை, சொல், செயல் இவைகளை நிறைக்க வேண்டிய ஒரு தாகம் என்பதைத்தான் இயேசு இந்த வரிகளில் சொல்லியிருக்கிறார்.
பணத்திற்காக, புகழ், பெருமைகளுக்காக, ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக தூக்கம் மறந்து, உணவை மறந்து, குடும்பத்தை மறந்து உழைக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஆரம்பித்ததை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று அவர்கள் கொண்டுள்ள அந்தத் தீவிரத்தை, வெறியை  தன் சீடர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.

இறுதியாக ஓர் எண்ணம்... இந்த எண்ணம் உங்களை ஆச்சரியமடையச் செய்யலாம்; சிறிது  அதிர்ச்சியைத் தரலாம்; உங்களுக்குச் சவாலாக அமையலாம். இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் எல்லாம், குருக்கள், துறவறத்தாருக்கு என்று எண்ணி, தப்பித்துக் கொள்ளவேண்டாம், அன்பர்களே. இயேசு இந்த வார்த்தைகளைத் தன் சீடர்களுடன் தனித்து இருக்கும் போது சொல்லவில்லை... மாறாக, தன்னைப் பின் தொடர்ந்த பெருந்திரளான மக்களை நோக்கிச் சொல்கிறார். அதாவது, நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.
தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்கள் என்னைப் பின் தொடர்வது இயலாது என்று கூறும் இயேசுவுக்கு நமது பதில் என்ன?