13 April, 2019

Spontaneous ‘people power’. தானாகத் திரளும் மக்கள் சக்தி


Jesus' Triumphal Entry Into Jerusalem

Palm / Passion Sunday

The people belonging to the greatest democracy in the world are exercising their democratic power these days. Yes, India has gone to elections from April 11th. For the past three months or more, India had witnessed innumerable processions and meetings organised by the political parties. Almost all these meetings have been a show of strength for the different leaders. This show of strength is usually achieved by ‘buying’ people! Against such an ‘organised artificiality’, there have been processions and meetings that showed spontaneous ‘people power’.

On March 11, 2018, around 50,000 farmers marched into Mumbai city to press for their demands. Having been forced to the culture of death, as evident from the number of suicides, the farmers of Maharashtra sprang to life and demanded justice. From the media reports, we learnt that the government of Maharashtra agreed to fulfill the demands of the farmers. Hence, the farmers ended their protest on March 12. This date, namely, March 12, reminds us of another peaceful protest. Yes, on March 12, 1930, Gandhiji began the ‘Salt March’ (also known as the Dandi March and the Dandi Satyagraha) against the British oppressors.
On March 24, 2018, around 500,000 - mainly high school students - gathered in Washington D.C. U.S.A., for what was known as the ‘March For Our Lives’. The March For Our Lives, was a rally organized by students who survived the Feb. 14 school shooting in Parkland, Florida, demanding stricter gun control in the U.S.
On January 17, 2017, young women and men of Tamil Nadu took up a peaceful protest on Marina Beach against the ban of ‘Jallikattu’, the traditional bull-fight. It was a well-organized protest with utmost control, thus telling the Indian government that people’s power can achieve results.
In 2011, the call of a senior Gandhian, Anna Hazare, to abolish corruption in India met with overwhelming, spontaneous response from the people – from the elite to the illiterate!
Such ‘people power’ was evident in countries like Tunisia, Egypt, Libya, and in many other countries in 2011. What started as the "Jasmine Revolution" in Tunisia, then spread to other countries and was labelled as ‘the Arab Spring’. People in these countries gathered together without much pre-planning. The spontaneity and enthusiasm of the people in the above instances shook the so-called ‘well-established-powers’!

This was the case 2000 years ago. People power took to the streets in Jerusalem. All of a sudden, the Roman and Temple powers were shaken by a tornado which came in the form of Jesus, when he was given a warm welcome by the people of Jerusalem! This is what we celebrate on Palm Sunday.

When I was searching for thoughts on the Palm Sunday, I came across a news item, namely, “Palm Sunday Tornado 1920”. I could not have asked for a better starting point for my refelctions. Palm Sunday and Tornado seem like a perfect match which unfold many a thought.Tornadoes, I am told, are a common feature in the U.S., especially in the months of March and April. Here is the excerpt from an article in Wikipedia:
The Palm Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215 injured.
Here is another excerpt from the same article that acknowledges the discrimination prevalent in those days. According to Thomas P. Grazulis, head of the Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920, could have easily been much higher, since the deaths of non-whites were omitted as a matter of official state protocol, even when it came to fatalities from natural disasters.

Right through human history discrimination has ruled supreme. Among the Israelites too there were those who did not count. These ‘non-countable’ people created a tornado in Jerusalem when Jesus entered the city. Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘intruder’ called Jesus and His ‘non-countable’ people.
Tornado has another name ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Putting things in order? Well, depends on which point-of-view one takes. For those in power, things were thrown completely out of gear; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a call to begin anew!

With the Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine God – a God who was willing to suffer! He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during this week, one could call this week Holy, since these events resulted in the Supreme Sacrifice.

The Palm Sunday is also celebrated as the World Youth Day (WYD) by the Catholic Church. Pope St John Paul II established WYD in 1985, the International Year of the Youth. Prior to this, in the year 1983, Pope John Paul II had declared the Holy Year of Redemption. For this special year, a huge cross was erected in St Peter’s Basilica for the veneration of thousands of pilgrims pouring into Vatican for the Holy Year. At the end of this Holy Year of Redemption, Pope John Paul II invited the youth to come to Rome for the Feast of the Palm Sunday.
The Vatican officials were expecting that around 60,000 youth would respond to the invitation of the Holy Father. But, on April 15, 1984, for the Feast of the Palm Sunday, a ‘tornado’ entered Rome. Yes… More than 300,000 young men and women poured into St Peter’s Square. Looking out to the crowds who answered his invitation, Pope St John Paul II said, “What a fantastic spectacle is presented on this stage by your gathering here today! Who claimed that today’s youth has lost their sense of values? Is it really true that they cannot be counted on?” It was obvious that the youth broke the prejudice which stamps youth as disinterested in spiritual affairs.
Pope St John Paul II also made a special gesture to the youth at the end of the Palm Sunday celebrations. The Holy Father entrusted to the youth, the Cross that was kept in St Peter’s Basilica for the Holy Year of Redemption. This Cross is now known as the World Youth Day Cross, to be carried throughout the world as a symbol of the love of Christ for humanity.
Here again, we can see that another prejudice about the youth is broken, namely, that the youth are not willing to bear the cross and that they go after fleeting pleasures of life. Ever since 1985, for the past 30 plus years, this special Cross has been carried by the youth for all the World Youth Day celebrations, including the last one held in Panama in January 2019.  

Some closing thoughts: April 14, this Sunday, people belonging to the Tamil culture celebrate the Tamil New Year Day. Every New Year brings to mind new resolutions. These resolutions are usually meant to better one’s personal life. But, there have been great thinkers and poets who have also dreamt of the betterment of human society in general. One such poet is Bharathi Thasan, who dreamt of a world where selfishness and war are to be weeded out.

These dreams of Bharathi Thasan come to mind, because April 14, is also ‘Global Day of Action on Military Spending (GDAMS)’. Each Spring, the Stockholm International Peace Research Institute (SIPRI) releases global military spending.
Summarizing some key details from the SIPRI’s Year Book 2018 summary on military expenditure:
  • Total world military expenditure rose to $1739 billion in 2017.
  • After 13 consecutive years of increases from 1999 to 2011 and relatively unchanged spending from 2012 to 2016, total global military expenditure rose again in 2017.
  • Military spending in 2017 represented 2.2 per cent of global gross domestic product (GDP) or $230 per person.
230 Dollars per each person in the world will be a great resource to wipe out poverty and famine around the globe. That is a surer way to peace than to pile up arms to safe-guard peace!

Palm Sunday, World Day of the Youth and Global Day of Action on Military Spending when taken together, seem to reflect the dream of the Prophet Zechariah. The entry of Jesus into Jerusalem was already dreamt by the Prophet Zechariah as a process of ‘disarmament’:
Rejoice greatly, O Daughter of Zion! Shout, Daughter of Jerusalem! See, your king comes to you, righteous and having salvation, gentle and riding on a donkey, on a colt, the foal of a donkey.
This dream is further expanded to include the mission of this king:
I will take away the chariots from Ephraim and the war-horses from Jerusalem, and the battle bow will be broken. He will proclaim peace to the nations. His rule will extend from sea to sea and from the River to the ends of the earth. (Zechariah 9: 9-10)
Isn’t this our dream too? A world without weapons? A world without war?

May the Prince of Peace as envisaged by Zechariah, the Palm Sunday Tornado, bring true peace to so many countries torn by war and hatred. May the people of India choose leaders who will ensure peace and prosperity for all Indians. May the Youth, the architects of a ‘world without war’ dream of peace!

The Lord's Triumphal Entry into Jerusalem

குருத்தோலை / பாடுகள் ஞாயிறு

உலகின் மிகப்பெரும் குடியரசு என்றழைக்கப்படும் இந்தியாவில், மக்கள், நாட்டின் நலனுக்காக, தங்களிடம் உள்ள ஒரே ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆம், ஏப்ரல், 11ம் தேதி, கடந்த வியாழன் முதல், மே, 19ம் தேதி முடிய, நடைபெறும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில், பல்வேறு எதிர்பார்ப்புக்கள், ஐயங்கள், அச்சங்கள் நிலவியபோதிலும், மக்கள், நம்பிக்கையுடன் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, கூட்டங்களும், ஊர்வலங்களுமாய், நாடே, நாடக மேடையாக மாறியிருந்தது. பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் ஒருவரது பெருமையை, சக்தியைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் நாடகங்களே. பணம் கொடுத்து சேர்க்கப்படும் இந்தக் கூலிக் கூட்டங்களுக்கு, முற்றிலும் மாறாக, தானாகவே வந்துசேரும் கூட்டங்களும் அவ்வப்போது உருவாகின்றன.

சென்ற ஆண்டு, மார்ச் 11, 12 ஆகிய இரு நாட்களில், 50,000த்திற்கும் அதிகமான விவசாயிகள், மகாராஷ்டிரா மாநிலத்தின், நாசிக் நகரிலிருந்து நடைப்பயணமாகப் புறப்பட்டு, மும்பை நகரில் நுழைந்தனர். இவர்களின் எழுச்சியைக் கண்டு, மகாராஷ்டிர அரசு, விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவு செய்வதாக வாக்களித்தது.
சென்ற ஆண்டு, மார்ச் 24ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில், 5 இலட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவியர் ஓர் ஊர்வலத்தை மேற்கொண்டனர். அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும் துப்பாக்கிப் பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், இவர்கள், இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, 2017ம் ஆண்டு, சனவரி மாதம், சென்னை மெரீனா கடற்கரையில், தமிழகத்தின் இளம் பெண்களும், இளைஞர்களும் இணைந்து, மேற்கொண்ட ஒரு போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்தது. அரசியல் நாற்றம் அறவே இன்றி நடத்தப்பட்ட இந்த அறப்போராட்டம், நம்பிக்கையை விதைத்தது.
இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கட்டுப்படுத்த, ஜன் லோக்பால் (Jan Lokpal) மசோதா, சட்டமாக்கப்பட வேண்டுமென்று, வயதில் முதிர்ந்த காந்தியவாதி அன்னா ஹசாரே (Anna Hazare) அவர்கள், 2011ம் ஆண்டு, தன் 72வது வயதில், புது டில்லியில் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம், பல இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த போராட்டத்திற்கு, மக்கள் வழங்கிய. ஆதரவு, மத்திய அரசை ஆட்டிப்படைத்தது.

மக்கள் நடுவே, தானாக உருவான இவ்வெழுச்சிகளைப் போல், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஒரு கூட்டமும், ஊர்வலமும், எருசலேம் நகரில் நடந்தன. அந்நிகழ்வுகளை, நாம், குருத்தோலை ஞாயிறன்று நினைவுகூருகிறோம்.

குருத்தோலை ஞாயிறு என்றதும், ஒரு வரலாற்றுப் பதிவு நம் நினைவில் தோன்றுகிறது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920 – “குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920. அவ்வாண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களில், குருத்தோலை ஞாயிறன்று வீசிய 37 சூறாவளிகளைப் பற்றிய செய்தி அது. குருத்தோலை ஞாயிறு, சூறாவளி, இவை இரண்டையும் இணைத்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.
சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; தன் பாதையில் உள்ள அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு, எருசலேமில், பலவற்றை, தலைகீழாகப் புரட்டிப்போட்டது என்பதை உணரலாம்.

இயேசு, எருசலேமில் நுழைந்தபோது, அவரைச் சுற்றி தானாகவே உருவான கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டது. இயேசு, தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்தே, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வுக்கு, சவால்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அந்த சவால்களின் சிகரமாக, எருசலேம் நகரில், இயேசு, பெற்ற வரவேற்பு அமைந்தது. அதைத் தொடர்ந்து, மதத் தலைவர்களின் அரணாக விளங்கிய எருசலேம் கோவிலில் இயேசு நுழைந்து, அங்கு குவிந்திருந்த அவலங்களை, சாட்டையைச் சுழற்றி, சுத்தப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும், தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்புப் பெருவிழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்றழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாள்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருக்குலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறானத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர், இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவார நிகழ்வுகள் வழியே, நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம், கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர்கள் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, இத்தனை நூற்றாண்டுகளாக, நாம், கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு - சிலுவையில் அறையுண்ட இயேசு!

ஒவ்வோர் ஆண்டும், குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. 1984ம் ஆண்டு, குருத்தோலை ஞாயிறன்று, இளையோரை, உரோம் நகருக்கு வரும்படி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று வருகைதரும் இளையோரின் எண்ணிக்கை, 50,000, அல்லது, 60,000 இருக்கும் என்று திருஅவைத் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அன்று, ஒரு சூறாவளி, உரோம் நகரில் நுழைந்து, தலைவர்களின் எதிர்பார்ப்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. ஆம், அன்று, உரோம் நகரில் 60,000 அல்ல, 300,000 இளையோர் கூடி வந்திருந்தனர். அங்கு, கூடியிருந்த இளையோரைக் கண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் கூறிய அற்புதமான வார்த்தைகள், "உலக இளையோர் நாள்" என்ற எண்ணத்திற்கு வித்திட்டன:
"ஆயிரமாயிரம் இளையோர், இவ்வளவு ஆர்வமாகக் கூடிவந்து, அர்த்தமுள்ள முறையில் இந்நாளைச் சிறப்பித்தது, உண்மையிலேயே வியப்பிற்குரியது. ஆன்மீக உணர்வுகளையும், உயர்ந்த கொள்கைகளையும் இளையோர் இழந்துவிட்டனர் என்று, இப்போது, யாரால் சொல்லமுடியும்? அவர்களை நம்புவது வீண் என்று, இனி யாராலும் சொல்லமுடியுமா?" என்று புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோருக்கு நற்சான்றிதழ் வழங்கியதை, இளையோர் ஆரவாரமாக வரவேற்றனர்.

அன்று கொண்டாடப்பட்ட குருத்தோலை ஞாயிறு வழிபாட்டிற்குப் பின், புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்கள், அற்புதமானதோர் அடையாளச் செயலைச் செய்தார். 1983ம் ஆண்டு கொண்டாடப்பட்ட மீட்பின் புனித ஆண்டுக்கென புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை, இளையோர் கரங்களில் திருத்தந்தை ஒப்படைத்தார். கிறிஸ்துவின் அளவற்ற அன்பைப் பறைசாற்றும் அந்த அற்புத அடையாளத்தை, இளையோர் உலகெங்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று, திருத்தந்தை இளையோரிடம் குறிப்பாக விண்ணப்பித்தார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை. துன்பங்களைக் கண்டால், பயந்து, விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச்செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து சென்றுள்ள சிலுவை, 2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளிலும் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது.

இறுதியாக சில சிந்தனைகள்: இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் புனித வியாழனன்று, இந்தியாவின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமையை, தமிழக மக்கள் பெற்றிருப்பதை, இறைவன் வழங்கியுள்ள ஓர் அடையாளமாகக் கருதுவோம். ஏனெனில் அந்த இறுதி இரவுணவின்போது, தலைவர் எனில், உண்மையானப் பணியாளராக இருக்கவேண்டும் என்ற உண்மையை, தன் சீடர்களின் உள்ளங்களில் ஆழமாய்ப் பதிக்க, இயேசு அவர்களுடைய காலடிகளைக் கழுவினார். அந்தப் புனிதமான நாளில், உண்மையானத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை, தமிழக மக்கள் பெறவேண்டும் என்ற வேண்டுதலை, இயேசுவிடம் எழுப்புவோம்.

அடுத்து, ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று, தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புத்தாண்டிலும், நல்லவை நிகழும் என்ற கனவுகள் நமக்குள் எழுவது இயல்பு. இந்தப் புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் தேர்தலும் நடைபெறுவதால், நல்லவை நிகழும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் பங்கேற்போம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் விட்டுச்சென்ற நன்மை தரும் கனவுகளை, இப்புத்தாண்டு நாளன்று நினைவுகூருவோம்:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)

பாரதிதாசனின் கனவு வரிகளை, ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று எண்ணிப்பார்க்க ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14ம் தேதி, "இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாள்" கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும், இராணுவச் செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. 2017ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு செலவிட்ட மொத்தத் தொகை - 1,75,390 கோடி டாலர்கள். அதாவது, 1,20,32,141 கோடி ரூபாய். இத்தொகையின் பிரம்மாண்டத்தை வெறும் பூஜ்யங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இத்தொகையைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தால், நம் உலக அரசுகளின் மதியற்ற இராணுவ வெறியைப் புரிந்துகொள்ள முடியும்.
2017ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்டத் தொகையை உலகில் உள்ள மனிதர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 230 டாலர்கள், அதாவது, 15,922 ரூபாய் கிடைக்கும். இத்தகைய நிதி உதவி, பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் கிடைத்தால், அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாது. இல்லையா?

குருத்து ஞாயிறு, இளையோர் உலக நாள், தமிழ் புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச் செலவை எதிர்க்கும் உலக நாள்", தற்போது இந்தியாவில் நிகழும் தேர்தல், ஆகிய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது,  அமைதியின் மன்னன் இயேசு எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகள் நம் எண்ணங்களில் எதிரொலிக்கின்றன:
இறைவாக்கினர் செக்கரியா  9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்துவிடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறுகடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.

சிறப்பாக, தங்கள் எதிர்காலம் வளமாக அமையவேண்டும் என்ற கனவோடு, தகுதியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். அத்துடன், ஒவ்வொரு குருத்து ஞாயிறன்றும் கத்தோலிக்கத் திருஅவை உலக இளையோர் நாளைக்  கொண்டாடி வருவதாலும், போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும் முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதாலும், அவர்களை இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.


10 April, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை 7


Illegal banners and flexes piled up. (Photo | EPS)

பூமியில் புதுமை – அரசுத்தடைகள் மட்டும் புவியைக் காப்பாற்றாது

ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல், மே மாதம் 19ம் தேதி முடிய, இந்தியாவில், பாராளுமன்றத் தேர்தல், 7 கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தல் அட்டவணையை, மார்ச் 13ம் தேதி அறிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்றக் கூடிய இரு பரிந்துரைகளை வழங்கியது.
1. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, தூக்கியெறியப்படும் மக்காதப் பொருள்களைத் தவிர்க்கவேண்டும். 2. ஒலிப்பெருக்கிகள் வழியே உருவாகக்கூடிய ஒலி மாசுக்கேட்டை தவிர்க்கவேண்டும் என்பன, தேர்தல் ஆணையம் தந்த பரிந்துரைகள்.
அவ்விரு பரிந்துரைகளில், தேர்தல் நாளையொட்டி, ஒலி மாசுக்கேடு நின்று போகும். ஆனால், மக்காதப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் அடுத்தத் தலைமுறையினரின் வாழ்வை சீர்குலைக்கும் விளைவுகளை உருவாக்கும். பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படும் ஃபிளெக்ஸ் பதாகைகள் குறித்து, ‘துணிப்பை பிரசாரகர் என்ற புனைப்பெயருடன் எழுதிவரும், கிருஷ்ணன் சுப்ரமணியன் அவர்கள், ‘தி இந்து நாளிதழில், சில நாள்களுக்கு முன் வெளியிட்ட கருத்துக்களில் ஒரு சில இதோ:
எந்த ஒரு பொருளையும் தயாரிக்கும்போதும், பயன்படுத்தும்போதும், தூக்கி எறியும் போதும், அவை, என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்தே நமது குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப்போகிறோம் என்பது முடிவாகிறது. தேர்தலுக்கென பி.வி.சி. (Polyvinyl Chloride - PVC), எனும் ஞெகிழியால் உருவாக்கப்பட்ட ஃபிளெக்ஸ் பதாகைகள், நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, கேலிக்கூத்தாக்கும் ஒரு பொருளாகவே உள்ளது.
பி.வி.சி. எனும் ஞெகிழியை, அறிவியலாளர்கள், நச்சு ஞெகிழி என்றே குறிப்பிடுகின்றனர். காரணம், மற்ற ஞெகிழிகளைவிட, இதை எரிக்கும்போதுதான் டையாக்சின் என்ற நச்சு வாயு மிக அதிகமாக வெளிவருகிறது. டையாக்சின், உணவுச் சங்கிலிக்குள் புகுந்து, புற்றுநோயைத் தூண்டும் தன்மை கொண்டது.
அரசியல்வாதிகள் மட்டும் இந்த பி.வி.சி. நச்சுப்பொருளைப் பரப்புவதற்குக் காரணம் அல்ல, நாம் ஒவ்வொருவரும், இந்த நச்சுப்பொருளை ஒவ்வொருநாளும் சுமந்து திரிகிறோம் என்பதை, கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்:
உலக நாடுகள் பல, பி.வி.சி.யால் செய்யப்படும் பொம்மைகளையும், பால் புட்டிகளையும் தடை செய்துள்ளன. நாமோ, குழந்தையின் காதணி விழாவுக்கு ஃபிளெக்ஸ் பதாகை அடித்து, அந்தப் பதாகையை குப்பைக் கிடங்கில் எரித்து, அதில் உருவாகும் நச்சு வாயு வழியே, குழந்தைகளின் வாழ்வில் நஞ்சைக் கலக்கிறோம்.
நம் வாரிசுகள் நலமுடன் வாழ, இந்தப் புவியை, தகுந்த சூழலுடன் விட்டுச்செல்ல வேண்டிய கடமை, நமக்கு உள்ளது. அரசு விதிக்கும் தடைகளால் மட்டுமே, புவியைக் காப்பாற்றிவிட முடியாது. (தி இந்து)

The man healed of paralysis and his friends

ஒத்தமை நற்செய்தி முடங்கியவருக்கு முழு விடுதலை 7

ஒரு கற்பனைக் காட்சியுடன் இன்றையத் தேடலைத் துவக்குவோம். நோயாளி ஒருவர், மருத்துவரைக் காணச் செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். மருத்துவர் அறைக்குள், நோயாளி நுழைந்ததும், அவரிடம், ஒரு வார்த்தையும் பேசாமல், அவருக்குத் தேவையான, சரியான மருந்தை, மருத்துவர் தருகிறார் என்று வைத்துக்கொள்வோம். நோயாளியைப் பார்த்த உடனேயே, அவரது தேவையை உணர்ந்து, மருந்து வழங்கும் அந்த மருத்துவரைப் பாராட்டத் தோன்றுகிறது. இதையொத்த ஒரு காட்சி, முடக்குவாதமுற்ற மனிதருக்கு அன்று நிகழ்ந்தது.

பொதுவாக, இயேசு, பிறரைக் குணமாக்கும் நிகழ்வுகளில், நோயுற்றவரிடம், அல்லது, நோயுற்றவர் சார்பில் தன்னை அணுகியவரிடம் சில வார்த்தைகள் பேசிய பின்னரே, குணமளிக்கும் செயலை ஆற்றுவார். எடுத்துக்காட்டாக, பார்வை இழந்த ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் நிகழ்வில்இயேசு திமேயுவின் மகன் பர்த்திமேயுவைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார் (மாற்கு 10:51) என்று வாசிக்கிறோம்.

முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் நிகழ்விலோ, இயேசு நோயாளியின் தேவை என்ன என்பதைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதைக் காண்கிறோம். பிரிக்கப்பட்ட கூரை, அதன் வழியே இறக்கப்பட்ட நோயாளி ஆகியவற்றை இயேசு பார்த்தார் என்று கூறும் நற்செய்தியாளர் மாற்கு, பின்னர், அங்கு நடந்ததை இவ்வாறு கூறியுள்ளார்:"இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார்" (மாற்கு 2:5)

இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் பலவற்றில், குணமிழந்த தனி மனிதனுக்கு நேரடியான முறையில் குணமளிக்கும் வேளையில், சுற்றி நிற்கும் பலருக்கு மறைமுகமான முறையில் குணமளிப்பதையும் நாம் நற்செய்திகளில் காண்கிறோம். இயேசு. தொழு நோயாளரைத் தொட்டு குணமாக்கினார் என்பதை இதற்கு முந்தியப் புதுமையில் சிந்தித்தோம். அந்தத் தொடுதலினால், சுற்றி நின்றவர்களையும் இயேசு குணமாக்கினார். இயேசு, தூரத்தில் நின்றவாறு, ஒரு சொல்லால், அந்தத் தொழுநோயாளரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவர், தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். (மாற்கு 1: 41-42)

இயேசு தொழுநோயாளரைத் தொட்டது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, கூட்டத்தில் இருந்தோரும் குணம்பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, சகமனிதர்களை, மிருகங்களிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு, தொழுநோயாளரைத் தொட்டார். இயேசுவின் தொடுதலால், தொழுநோயாளர் குணமானார். அதே தொடுதலால், இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும், ஓரளவாகிலும் குணமாகி இருக்கவேண்டும்.

முடக்குவாதமுற்றவரை குணமாக்கிய வேளையிலும், இயேசு, அதிர்ச்சிதரும் ஒரு பாணியைப் பின்பற்றுகிறார். கூரை வழியே இறக்கப்பட்ட முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, "குணம் பெறுக." என்று சொல்லியிருந்தால் போதுமானது. ஆனால், இயேசு அவரிடம், "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறுகிறார். பிரச்சனை ஒன்று எழுகிறது.

பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்வது இயேசுவுக்குக் கைவந்த கலையோ என்றுகூட, சில சமயங்களில், நமக்கு எண்ணத் தோன்றுகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால்பிரச்சனைகளை வளர்ப்பதற்கல்ல, மாறாகபிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பதற்காக இயேசு எடுத்துக்கொண்ட முயற்சி இது என்பதை உணர்வோம். முடக்குவாதமுற்று, பல ஆண்டுகளாக, தன் படுக்கையில் சிறைப்பட்டிருந்த அவரது உடலை மட்டும் இயேசு குணமாக்க விரும்பவில்லை. அது முழு குணம் ஆகாது என்பது அவருக்குத் தெரியும். மாறாக, நோயுற்ற தன்னை, பாவி என்று முத்திரை குத்திய சமுதாயத்தின் மேல் அவர் வளர்த்துக்கொண்ட கசப்பு, வெறுப்பு என்ற பாவங்களையும் நீக்கி, அவருக்கு முழு குணம் அளிக்கவே, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார். இயேசுவின் இக்கூற்றினால் அங்கு எழுந்த சலசலப்பையும், அதை இயேசு கையாண்ட முறையையும் நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:
மாற்கு 2:6-11
அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், "இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?" என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்? முடக்குவாதமுற்ற இவனிடம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’, என்பதா? எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார்.

இயேசு, முடக்குவாதமுற்றவருடைய பாவத்தை மட்டுமல்ல, சுற்றி நின்ற அனைவரது பாவங்களையும், முக்கியமாக, நோயுற்றவருக்கு, தவறானத் தீர்ப்புகள் அளித்து, அவரையும், தங்களையும், கட்டிப்போட்டிருந்த குருக்கள், பரிசேயர், மக்கள் ஆகிய அனைவருடைய பாவங்களையும் மன்னிக்கிறார்.
முழுமையான மன்னிப்பு, ஆறாக அங்கு பெருகி ஓடியபோது, அழகியதொரு புதுமை நிகழ்கிறது. அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், "இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் (மாற்கு 2:12) என்று இப்புதுமை நிறைவடைகிறது.

பல ஆண்டுகளாய், படுக்கையோடு முடங்கிப்போயிருந்தவர், தட்டுத் தடுமாறி எழுகிறார். தன் கால்களில் அவர் உணர்ந்த வலிமை, உடல் முழுவதும், உள்ளம் முழுவதும் பரவி, தன்னை இதுவரைத் தாங்கிவந்த படுக்கையை அவர் தாங்கிக்கொண்டு வெளியே செல்கிறார். அவர் உள்ளே வருவதற்கு இடம் தராமல், வழியை மறைத்து நின்ற அந்த கும்பல், முக்கியமாக, அவர் இயேசுவை நெருங்கமுடியாமல் வழி மறைத்து நின்ற குருக்கள், பரிசேயர் கூட்டம், வியப்புடன், மரியாதையுடன் வழி விட, அவர் கம்பீரமாய் வெளியே செல்கிறார். வீட்டின் கூரை மீது நின்று இந்த அற்புதத்தைக் கண்ட நண்பர்கள், அங்கிருந்தபடியே, இயேசுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவசரமாய் இறங்கிவந்து, தங்கள் நண்பனுடன் மகிழ்வாகச் செல்கின்றனர். வரும்போது அவரைச் சுமந்துவந்த படுக்கையை, எல்லாரும் சேர்ந்து, குப்பையில் எறிந்துவிட்டு போயிருக்கவேண்டும்.

இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்துவிடலாம் என்பதை உணர்த்தும் தவக்காலத்தின் இறுதி நாள்களை அடைந்துள்ளோம். இவ்வேளையில், வாழ்வில் நாம் சுமக்கும் சுமைகளையும், பிறர் மீது நாம் சுமத்தும் சுமைகளையும் பற்றி சிந்திக்கலாம்.

ஒரு சிறுமி, தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கிருந்த மருத்துவர், சிறுமியிடம் "அவன் பாரமாயில்லையா?" என்று கேட்டபோது, அச்சிறுமி, "அவன் பாரமில்லை, அவன் என் தம்பி" என்று சொன்னதாக, ஒரு குட்டிக் கதை உண்டு. சுகமான சுமைகள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கின்றன. தாயின் கருவில் வளரும் குழந்தையை, வழக்கமாக, அந்தத் தாய் சுமையாக நினைப்பதில்லை. ஆனால், மற்ற சுமைகள்? இதோ இன்னொரு கதை.

வயதான தொழிலாளி ஒருவர், சாலையில், சுட்டெரிக்கும் வெயிலில், பெரிய சுமையை, தன் தலைமீது தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். அவ்வழியே சென்ற ஒரு லாரியின் ஓட்டுனர், தொழிலாளியின் துன்பத்தைக் கண்டு, பரிவுகொண்டு, லாரியை நிறுத்தி, அந்த தொழிலாளியைத் தனது லாரியின் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார். தொழிலாளி பின்புறமாய் ஏறியதும், ஓட்டுனர், லாரியை ஓட்டிச்சென்றார். சிறிது தூரம் போனதும், தொழிலாளி எப்படி இருக்கிறார் என்று பார்ப்பதற்கு திரும்பியபோதுஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். காரணம்? அந்தத் தொழிலாளி இன்னும் தன் தலையில் அந்த சுமையை வைத்துக்கொண்டு லாரியில் நின்றதைப் பார்த்தார். லாரியை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று,  "ஐயா, அந்தச் சுமையை இறக்கி வைக்க வேண்டியதுதானே" என்று சொன்னதற்கு, அந்தத் தொழிலாளி, "வேண்டாம் ஐயா. நீ எனக்கு இடம் கொடுத்ததே பெரிது. இதையும் ஏன் உன் லாரி சுமக்கணும்? நானே சுமந்துக்கிறேன்" என்று சொன்னாராம்.

சுமைகளைச் சுமப்பதும், சுமைகளைப் பிறர் மீது சுமத்துவதும் நமக்குக் கைவந்த கலைகள். சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். சுமைகளை நீக்குவார். சுகம் தருவார்.


07 April, 2019

Misery and Mercy இரக்கப்படவேண்டிய ஒன்றும், இரக்கமும்


Jesus and the woman caught in adultery

5th Sunday of Lent

We are approaching the peak of the Lenten journey. Next Sunday will be the Palm Sunday, followed by the Holy Week, culminating in the Feast of the Resurrection. To help us journey through these summit experiences, today’s Gospel gives us the famous episode of Jesus meeting the woman caught in adultery.
Last Sunday – Laetare Sunday – we heard the famous parable of the Lost Son, which depicted one of the peak experiences any human being can attain, namely, the joy of forgiving and being forgiven. Jesus, in a way, ‘scandalized’ us by narrating to us how the ‘prodigal Father in heaven’ will deal with us. This Sunday he practised what he had preached.

We should thank the Scribes, Pharisees and the Teachers of the Law who were contemporaries of Jesus. They brought the best out of Jesus. Last Sunday, we saw them murmuring against Jesus, saying, that he was associating himself with sinners. Though it was a murmur, they made sure that Jesus heard it. The response of Jesus came in the form of the great parables: the Lost Sheep, the Lost Coin and the Lost Son. This Sunday we see them again challenging Jesus by bringing a woman caught in adultery. This time Jesus preferred not to preach through words but through action. (John 8: 1-11). One can easily see that Jesus meeting the woman caught in adultery as a parable-of-mercy-in-action. If we take up a ‘contemplative reading’ of this episode from John, we will be richer by learning quite a few deep lessons for our life. 

The opening lines of this passage give us something to reflect on. Jesus went to the Mount of Olives. At dawn he appeared again in the temple where all the people gathered around him, and he sat down to teach them. (John 8: 1-2)

How do we begin our day? Early mornings are usually spent in quiet, personal works… going to the Church, taking a walk, practising yoga or simply reading the newspaper with a cup of coffee… Usually we do not begin the day with something that would upset us, right? Jesus did what was most pleasing to him. After having spent the night in prayer, he came to the temple at dawn to share his ‘Abba experience’ with the people.

This peaceful setup was disrupted by the Pharisees and the teachers of the law. What a way to begin the day for those pathetic souls! As Jesus was spending his night in prayer, those religious leaders were spending their night in… plotting against Jesus. Jesus must have felt pity for them as well as felt angry at them for using a woman as a pawn, in their plot.

Using another human person is probably the most grievous of all sins. The ‘use-and-throw-culture’ we have brought on ourselves, unfortunately, not stopped with things alone. With ecological sensitivity gaining momentum in our era, we now speak of how we have “raped” nature. We begin to speak with respect about how to use things and how to treat animals etc. Unfortunately, we are becoming less sensitive towards how we ‘use’ another human being. On many occasions Pope Francis has talked of ‘the throw-away-culture’, ‘the globalisation of indifference’ and ‘the exploitation of nature’.

The Pharisees must have been the synthesis of all the concerns expressed by Pope Francis. For them, Jesus had become the principal or the ONLY ‘thorn’ that was to be weeded out! They tried to use anything and anyone to trap Jesus. When they brought the woman before Jesus, they claimed that they had caught her in the very act of committing adultery.

I remember a play on the life of Jesus that I saw many years back. The playwright (Cyril Desbruslais, a Jesuit) had portrayed Jesus more as a revolutionary leader. This scene of the religious leaders bringing the woman to Jesus was enacted in that play with a slight twist. When the Pharisees made the claim of catching the lady red-handed, Jesus asked them: “You claim to have caught this woman red handed. That means that the man was with her at that time. Where is the man?” The Pharisees and others were silenced by this question.

We do not have such a question recorded in the Gospel of John. But, I am sure such a thought would have surely crossed the mind of Jesus. Especially, when the teachers of the law were trying to remind Jesus about the law of Moses, Jesus would have surely thought about the twist they were giving to this law.

The law of Moses clearly states this: If a man commits adultery with another man's wife—with the wife of his neighbor—both the adulterer and the adulteress must be put to death. (Lev. 20:10) Both must be put to death, not the woman alone. It was very obvious that the leaders who had come with the woman were concerned with only one objective – to trap Jesus. Nothing else. Anything (even the sacred law of Moses) can be bent, anyone can be bent, broken, used, abused… just to trap Jesus. Their pathetic paranoid silenced Jesus. So he began to scribble something on the ground – a strange occurrence! But, they were bent on getting a statement from him. Then he said: "If any one of you is without sin, let him be the first to throw a stone at her." (John 8:7)     

They did not expect this. They had come for a serious argument on the law and a possible condemnation of the woman. They did not expect this boomerang. They had no other option but leave. Apart from this statement, Jesus kept writing on the ground. One interpretation says that Jesus was writing out the sins of those present there. This may be a far fetched explanation. No such thing was required. The Pharisees and the teachers of the law knew Jesus too well to challenge him further and they simply disappeared, starting from the elders.

Here comes the most beautiful moment in this episode. Jesus was left alone with the woman standing before him. Jesus looked up and said to her, “Woman, where are they? Has no one condemned you?” She said, “No one, Lord.” And Jesus said, “Neither do I condemn you; go, and do not sin again.” (John 8:9b-11)
St. Augustine, writing a commentary on this episode, captures this moment with a graphic remark: “Relicti sunt duo: misera et Misericordia” - “There are but two left: misery and mercy”. When Pope Francis closed the year of the Extraordinary Jubilee of mercy on Sunday, 20 November, 2016, he signed his Apostolic Letter ‘Misericordia et Misera’ (Mercy and Misery) addressed to the whole of the Church so as to continue living the mercy experienced throughout the entire year of the Extraordinary Jubilee. Pope Francis began this Apostolic Letter with the reflection of St. Augustine.

Another highlight of this moment is the way Jesus speaks to the woman. He calls her ‘Woman’. This brings to mind the way he spoke to Mary at the wedding feast in Cana: “O woman, what have you to do with me? My hour has not yet come.” (John 2:4) Jesus is making this lady feel special by giving her the due respect which she may have lost.

In any event of forgiveness, the one who forgives seems to have a higher position than the one who is forgiven. Some people make it a point to sit on ‘thrones of mercy’ and ‘dole out’ forgiveness, making the other person cringe before them in shame. None of this pomp took place here. Jesus simply made the woman feel special and restored her self-worth. The woman who was literally dragged on dirt when the crowd entered the temple, now left the temple as a dignified lady.

This brings us back to the parable of the Lost Son. When the Son returned to the Father’s house, he would have been more than happy to have been ‘treated as one of the hired servants’ (Lk. 15:19). But, the Father had other plans. He restored him to his full dignity with ‘the best robe, a ring on his hand, and shoes on his feet’ (Lk. 15:22). This is the definition of ‘unconditional love’!

It is said that the early Church could not handle this passage of Jesus forgiving the woman caught in adultery, and hence, it was removed from John’s Gospel for quite a few centuries. Why? It showed Jesus as a person too lenient with sin. Thank God, such a stance was corrected soon. Jesus did not condone sin, he was concerned about sinners. This passage is a beautiful example of mercy triumphing over justice.

Jesus became incarnate to prove only one truth – God was unconditional and infinite in loving. Such unconditional love does not become a license to sin. When understood properly, such a love is a great challenge and not a license. It is much easier to live with a ‘just God’ who punishes us for our mistakes. We would be careful not to get punished. But, such a life would be devoid of freedom. When we are confronted by ‘an all loving, caring God’, our life is dictated by love and not fear.
Imagine the prodigal son! After his royal return to the father’s house, would he offend his father again? He could; but would not.

In today’s Gospel the parting words of Jesus to the woman were: “Go, and do not sin again.” (John 8:7). Was there the need for Jesus to tell her not to sin again? I don’t think so. This incident, steeped in love and mercy, would have completely transformed the woman. Yes, dear friends, unconditional love can work lots of miracles. The illogic of love is stronger than the logic of justice. The madness of love is much more real than the sense of justice. 

As we approach the Holy Week, “Let us then with confidence draw near to the throne of grace, that we may receive mercy and find grace to help in time of need.” (Hebrews 4:16)

Go and Sin No More

தவக்காலம் 5ம் ஞாயிறு

தவக்காலத்தின் சிகரத்தை நெருங்கிவந்துள்ளோம். அடுத்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு. அதைத் தொடர்வது, புனித வாரம். அதற்கு அடுத்த ஞாயிறு, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இந்தச் சிகர நிகழ்வுகளுக்கு ஓர் அழகிய அறிமுகமாக, இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.
சென்ற ஞாயிறை, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடினோம். உண்மையான மகிழ்வு, மன்னிப்பிலும், ஏற்றுக்கொள்வதிலும் அடங்கியுள்ளது என்பதைக் கூற, 'காணாமல் போன மகன்' உவமை நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டது. திரும்பி வந்த மகனை, எந்தக் கேள்வியுமின்றி, நிபந்தனையுமின்றி, தடையுமின்றி ஏற்று, அரவணைத்தத் தந்தையை, இயேசு, அவ்வுவமையில் அறிமுகம் செய்துவைத்தார்.
தான் சித்திரித்த அந்தத் தந்தையிடம் விளங்கிய அன்பை, இயேசு, தன் வாழ்வில் வெளிப்படுத்திய ஓர் அற்புத நிகழ்வை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் (யோவான் 8:1-11). தீர்ப்பு வழங்குவதற்காக தன்னிடம் இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தீர்ப்புக்குப் பதில், மன்னிப்பு வழங்கி அனுப்பிவைத்த இயேசுவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். இந்நிகழ்வை, ஆழ்ந்து சிந்தித்தால், வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களை, குறிப்பாக, உறவுகள் குறித்த பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். ஏன்? இயேசுவை எப்படியும் மடக்கி, அடக்கிவிடலாம் என்ற கற்பனையில், அவர்கள், இயேசுவுக்கு விடுத்த சவால்கள் அனைத்தும், அவரிடமிருந்து அற்புதமான சொற்களையும், செயல்களையும் வெளிக் கொணர்ந்தன.
சென்ற ஞாயிறு நாம் சிந்தித்த காணாமற்போன மகன் உவமை, இப்படிப்பட்ட ஒரு சவாலுக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட உவமை. பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே (லூக்கா 15:2) என்று முணுமுணுத்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் பதில்சொல்ல, காணமற்போன ஆடு, காணமற்போன காசு, காணமற்போன மகன் என்ற அழகான மூன்று உவமைகளை இயேசு கூறினார்.
இந்த ஞாயிறு கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தியிலும், இயேசுவுக்குச் சவால்விடும் வண்ணம், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் செயல்பட்டனர். இம்முறை, இயேசு எதையும் போதிக்காமல், தன் செயல் வடிவில், ஓர் அற்புதமான பாடத்தைச் சொல்லித்தந்தார், அவர்களுக்கும், நமக்கும்.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் நம் அன்றாட வாழ்வு எவ்விதம் ஆரம்பமாகவேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறது. நம்மில் பலர், பொழுது விடிந்ததும், கோவிலுக்குப் போவது, யோகாசனம் செய்வது, உடற்பயிற்சிக்காக நடப்பது, ஒரு கப் காப்பியை வைத்துக்கொண்டு செய்தித்தாளைப் படிப்பது என, அமைதியான செயல்களிலேயே காலைப்பொழுதைச் செலவழிப்போம். அவ்வேளையில், நிம்மதியைக் குலைக்கும், எரிச்சலூட்டும் செயல்களில் பொதுவாக ஈடுபடுவதில்லை.

இந்நிகழ்வில், அமைதியாக தன் நாளை இயேசு துவக்குவதையும், அந்த அமைதியைக் குலைக்க மதத் தலைவர்கள் திரண்டு வருவதையும் நற்செய்தியாளர் யோவான் சித்திரித்துள்ளார். "இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார்." (யோவான் 8:1-2) இரவெல்லாம் ஒலிவ மலையில் கழித்த இயேசு, பொழுது விடிந்ததும், கோவிலுக்குத் திரும்பினார். எதற்காக? இரவு முழுவதும் செபத்தில் தான் சந்தித்த தந்தையை மக்களுக்கு அறிமுகம் செய்ய, அவர் கோவிலுக்கு வந்திருந்தார்.
அந்த அமைதியானச் சூழலில், புயல் ஒன்று இயேசுவை நெருங்கியது. மறை நூல் அறிஞர், பரிசேயர் வடிவில் வந்த புயல் அது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு வந்தது, அந்த கும்பல். பொழுது விடிந்ததும், ஒரு வழக்கை ஆரம்பிக்க இவர்கள் வந்திருந்தனர் என்றால், இரவு முழவதும் அவர்கள் சதித் திட்டத்தில் நேரத்தை வீணடித்திருக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும், அடக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களது சதிக்குப் பயன்படுத்திய பகடைக்காய், ஒரு பெண்.

உடலளவில் அந்தப் பெண்ணைப் பயன்படுத்திவிட்டு ஓர் ஆண் ஓடிப்போயிருக்க வேண்டும். அவன் அங்கு இழுத்துவரப்பட்டதாக நற்செய்தி சொல்லவில்லை. பரிசேயரும், மறைநூல் அறிஞரும், தங்கள் ஆணவ விளையாட்டில், அந்தப் பெண்ணை மட்டும் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த இழுத்து வந்தனர். இது சிந்திக்க வேண்டிய ஒரு கருத்து.

மற்றொரு மனிதரை, சுயநலனுக்காகப் பயன்படுத்துவதைவிட பெரிய பாவம் உலகில் இல்லை. ஆழமாய் அலசிப்பார்த்தால், பாவங்கள் என்று நாம் பட்டியலிடும் பல செயல்களில், இறுதியில், இந்த உண்மை ஒன்றே, பின்னணியில் இருக்கும்... பொருட்களைப் பயன்படுத்துகிறோம், பயன் தீர்ந்ததும், குப்பையில் எறிகிறோம். பொருட்களைப் பயன்படுத்துவதில்கூட நாம் கவனமாக இருக்கவேண்டும்; தேவைக்கதிகமாய் பொருட்களைச் சேர்ப்பதும், பயன்படுத்துவதும், அதன் விளைவாக, சுற்றுச்சூழலைச் சீரழிப்பதும், அண்மைக் காலங்களில், பாவங்கள் என்று பேசப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

பொருட்களையும், இயற்கையையும் பயன்படுத்துவதிலேயே இவ்வளவு கவனம் தேவை என்று சொல்லும்போது, மனிதர்களைப் பயன்படுத்துவதில் எவ்வளவு கவனம் தேவைப்படுகிறது?... ‘மனிதரைப் பயன்படுத்துதல் என்ற சொற்றொடரே, தவறான கருத்து. மனிதர்களோடு பழகுவது, வாழ்வது என்பன, சரியான சொற்கள். ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில், பொருட்களும், மிருகங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. மனிதர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். செல்லப் மிருகங்களுடன் எவ்வாறு வாழ்வது என்பதைச் சொல்லித்தரும் பாடங்களும், பயிற்சிகளும் மலிந்துவிட்டன. இவ்வளவு முன்னேறியுள்ள நாம், மற்ற மனிதர்களை, பொருட்களைவிட, மிருகங்களைவிட கீழ்த்தரமாக பயன்படுத்தி வருகிறோம் என்பதுதான் நம் சமுதாயம் இன்று இழைத்துவரும் பாவம். இந்தப்பாவம் அன்று இயேசுவுக்கு முன் அரங்கேறியது.

விபச்சாரத்தில் ஒரு பெண்ணை, கையும் மெய்யுமாகப் பிடித்துவந்ததாகக் கூறுகின்றனர், பரிசேயரும், மறைநூல் அறிஞரும். இவர்கள் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? இவர்களுக்குத்தான் சட்டங்களெல்லாம் தலைகீழாய்த் தெரியுமே! அந்தப் பெண்ணைத் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உண்டே... பின் எதற்கு இந்த நாடகம்? இயேசுவை எப்படியும் மடக்கவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். அதற்கு, இது ஒரு வாய்ப்பு. மற்றபடி, அந்த பெண்ணோ, சட்டங்களோ அவர்களுக்கு முக்கியமில்லை.

நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு நாடகம் என் நினைவுக்கு வருகிறது. அந்த நாடகத்தை எழுதியவர், இயேசுவை ஒரு புரட்சியாளராகவே அதிகம் காட்டினார். அந்த நாடகத்தில், இன்றைய நற்செய்தி நிகழ்வு, ஒரு காட்சியாகக் காட்டப்பட்டது. நாடக ஆசிரியர் வடித்திருந்தக் காட்சியில், இயேசு, பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்பார். "இந்தப் பெண்ணை, விபச்சாரத்தில், கையும் மெய்யுமாகப் பிடித்ததாகச் சொல்கிறீர்களே. அப்படியானால், அந்த ஆண் எங்கே?" என்று இயேசு கேட்க, அவர்கள் மௌனமாகிப் போவார்கள்.
இயேசுவின் இந்தக் கேள்வி, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்படவில்லை. உண்மைதான். ஆனால், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், இயேசு, இப்படி ஒரு கேள்வியைக் கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார். அதிலும் முக்கியமாக, பரிசேயர்கள், கல்லால் எறியவேண்டும் என்ற சட்டத்தை இயேசுவுக்கு நினைவுபடுத்தியபோது, இக்கேள்வி கட்டாயம் அவருக்குள் எழுந்திருக்கும். மோசேயின் சட்டப்படி, விபச்சாரத்தில் ஈடுபடும் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (லேவியர் 20:10) அப்படியிருக்க, அந்த ஆணை அவர்கள் இழுத்து வந்ததாகக் கூறவில்லை. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற அளவில் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் மோசே சட்டத்தை மாற்றியமைத்து விட்டனர். இவ்விதம், ஒரு பெண்ணையும், மோசே சட்டத்தையும் பகடைக் காய்களாக்கிய பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் வேதனையோடு நினைத்து, பரிதாபப்பட்டு, இயேசு மௌனமாகிப்போனார். ஆனால், அவர்களோ அவரை விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார்: உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.”  (யோவான் 8: 7)

ஆண் வர்க்கத்திற்கு, சிறப்பாக, பெண்களை, போகப்பொருளாக, அடிமைகளாக, பகடைக் காய்களாக நடத்தும் ஆண் வர்க்கத்திற்கு இயேசு கொடுக்கும் ஒரு சாட்டையடி இது... உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.  இயேசுவுக்கு சவால்விட வந்திருந்த பரிசேயருக்கும், மறைநூல் அறிஞருக்கும் இது பெரும் மரண அடி. முதியோர் தொடங்கி, எல்லாரும் போகவேண்டியதாயிற்று.

இயேசு இந்த வாக்கியத்தைச் சொல்வதற்கு முன்னும் பின்னும் தரையில் எழுதிக் கொண்டிருந்தார் என்று நற்செய்தி கூறுகிறது. இயேசு அங்கு என்ன எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு சிலர் கொடுக்கும் விளக்கம் இது. அந்தப் பெண்ணை நோக்கி கல்லெறிய நினைத்த ஒவ்வொருவரின் பாவங்களையும் அவர் மண்ணில் எழுதினார் என்பது அந்த விளக்கம். இந்த விளக்கமே தேவையில்லை. இயேசுவைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், அந்த பரிசேயர்கள். எனவே அவரது நேர்மையான, தீர்மானமான அந்தக் கூற்றுக்குப் பதில்சொல்ல அவர்களால் இயலவில்லை. அந்த இடத்தைவிட்டு தப்பித்துக் கொள்கின்றனர்.

இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். (யோவான் 8:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் காட்சியைப்பற்றி கூறும் புனித அகுஸ்தீன், "இறுதியில் அங்கு இரண்டு மட்டுமே இருந்தன. இரக்கப்படவேண்டிய ஒன்றும், இரக்கமும்" என்று கூறியுள்ளார். புனித அகுஸ்தீன் பயன்படுத்திய "Misericordia et misera" என்ற இவ்விரு சொற்களையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது மடலின் தலைப்பாக வழங்கியுள்ளார்.

இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில், "அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?" (யோவான் 8:10) என்று இயேசு கேட்கிறார். இச்சொற்களில், கனிவும், மரியாதையும் வெளிப்படுகின்றன.

அப்பெண்ணை இயேசுவிடம் கொணர்ந்த மதத் தலைவர்கள், 'இப்பெண், அவள், இவள்...' என்று மரியாதைக் குறைவான மொழியைப் பயன்படுத்தினர். ஆனால், இயேசு இறுதியாக, அப்பெண்ணிடம் பேசும்போது, "அம்மா" என்று அவரை அழைக்கிறார். இயேசு பயன்படுத்திய "அம்மா" என்ற இச்சொல், நமக்கு கானா திருமண விருந்தை நினைவுக்குக் கொணர்கிறது. அங்கும், திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதென அன்னை மரியா கூறியதும், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?" (யோவான் 2:4) என்று இயேசு கேட்டபோது, அவர் பயன்படுத்திய 'அம்மா' என்ற சொல், தாய் என்ற உறவைக் குறிப்படும் சொல் அல்ல, அது, பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் ஒரு சொல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மரியாதை ஏதுமின்றி, இயேசுவுக்கு முன் இழுத்துவரப்பட்ட இப்பெண்ணுக்கு இயேசு தகுந்த மரியாதை வழங்கி வழியனுப்பி வைக்கிறார்.

பொதுவாக, ஒருவர் மற்றொருவருக்கு மன்னிப்பு வழங்கும் வேளையில், மன்னிப்பளிப்பவர் உயர்ந்த நிலையிலும், மன்னிப்பு பெறுபவர், தாழ்வான நிலையிலும் இருப்பதைப்போல் உணர வாய்ப்புண்டு. ஒரு சிலர் மன்னிப்பு வழங்கும்போது, தங்களை அரியணையில் அமர்த்திக்கொண்டு, மன்னிப்பு பெறுபவரை கால்மணை போல நடத்துவதும், அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பு தான் போடும் பிச்சை என்று உணரவைப்பதும், நாம் அவ்வப்போது காணும் காட்சிகள்.
நாம் இன்று தியானிக்கும் இந்நிகழ்வில், இயேசு அப்பெண்ணை 'அம்மா' என்றழைத்தபோது, அச்சொல்லில் கனிவு மட்டும் வெளிப்படவில்லை, அதைவிடக் கூடுதலாக, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அப்பெண்ணை மீண்டும் ஒரு பெண்மணியாக உயர்த்தி, அவர், அக்கோவிலிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேச் செல்லுமாறு இயேசு உதவி செய்தார்.

சென்ற வாரம் நாம் சிந்தித்த 'காணாமல்போன மகன்' உவமையில், தந்தையின் இல்லத்தில் ஒரு பணியாளனாக இருந்தால் போதும் என்ற தாழ்வான மனநிலையில் திரும்பி வந்த மகனுக்கு, 'முதல்தரமான ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடி...' (லூக்கா 15:22) என்று மரியாதைகள் பல வழங்கப்பட்டன. மகனுக்கு உரிய மதிப்பு வழங்கிய அந்தத் தந்தையைப் பற்றி பெருமையுடன் பேசிய இயேசு, இன்று, அந்த தந்தையாக தானே மாறி, அப்பெண்ணுக்கு உரிய மதிப்பு அனைத்தையும் மீண்டும் தந்தார்.

இரக்கத்தின் இலக்கணத்தை வரையறுக்கும் இந்நிகழ்வு, திருஅவையின் ஆரம்ப காலத்தில், பல சங்கடங்களை விளைவித்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே, இப்பகுதி, யோவான் நற்செய்தியிலிருந்து, சில நூற்றாண்டுகள் நீக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருஅவையின் ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட சங்கடம் தான் என்ன?

'விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட' (யோவான் 8:4) ஒரு பெண்ணை, இயேசு மன்னித்து அனுப்பும் இந்நிகழ்வு, மக்களை, பாவம் செய்வதற்கு அனுமதி வழங்கும் ஒரு கதையாக மாறிவிடும் என்ற அச்சமே, இப்பகுதியை நற்செய்தியிலிருந்து அகற்றிவிடத் தூண்டியது என்று விவிலிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இயேசு வழங்கிய இந்த மன்னிப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அவரது இரக்கத்தை எப்போதும் பெறலாம் என்ற துணிவில் மக்கள் இன்னும் அதிகம் பாவத்தில் விழக்கூடும் என்ற அச்சம் தோன்றலாம்.

இது தேவையற்ற, காரணமற்ற அச்சம். கடவுள் எந்த நிபந்தனையும் இன்றி அன்பு செய்பவர் என்பதை ஆணித்தரமாய் சொல்லத்தானே இயேசு உலகிற்கு வந்தார். அதைச் சொல்லத்தானே காணமற்போன மகன் உவமையைச் சொன்னார். அதே நிபந்தனையற்ற அன்புக்கு, இந்த மன்னிப்பின் வழியே, செயல் வடிவம் கொடுத்தார் இயேசு. நீதியை விட, இரக்கத்தை விரும்பும் கடவுளைத்தான் விவிலியம், அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளது.

குற்றங்களைத் தண்டிக்கும் கடவுளோடு வாழ்வது எளிது. குற்றங்களுக்குத் தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிந்து, அந்த பயத்தில் குற்றம் புரியாமல் வாழ்வது சுதந்திரமான, முழுமையான வாழ்வு அல்ல. ஆனால், எந்நேரமும், எந்நிலையிலும், அன்பு ஒன்றையே வாரி, வாரி, வழங்கும் ஒரு கடவுளோடு வாழ்வது, பெரிய சவால். அந்த அன்புள்ளத்தை துன்பப்படுத்தக் கூடாதென்று நல்வழியில் வாழ முயல்வதுதான் சுதந்திரமான, முழுமையான வாழ்வு. இந்த வாழ்வைத்தான் கடவுள் விரும்புகிறார். இயேசுவும் விரும்புகிறார்.

திரும்பி வந்த அந்த காணாமல் போன மகனை நினைத்துப் பாருங்கள். அவனுக்குக் கிடைத்த அந்த வரவேற்பிற்குப் பின், தன்னை வாரி அணைத்து, விருந்து கொடுத்து ஏற்றுக் கொண்ட அந்த தந்தையின் மனதை இனி அந்த மகனால் துன்பப்படுத்த முடியுமா? முடியும். ஆனால், மாட்டான். அன்பைச் சுவைத்தவன், இனி அந்த அன்புக்கு பதிலாக, நல்வழி செல்வதையே தினமும் நினைத்திருப்பான்.

இயேசுவும் அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியபோது, "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி அனுப்புகிறார். அதை அவர் சொல்லியிருக்கவில்லை என்றாலும், இப்படி ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அப்பெண், முற்றிலும் மாறிய ஒரு வாழ்வை ஆரம்பித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிபந்தனையேதுமின்றி நம்மீது அன்பு கொண்டுள்ள கடவுளோடு வாழும் துணிவைப் பெற, தவக்காலத்தின் சிகர நிகழ்வுகள் நமக்கு உதவி செய்யட்டும்.