12 October, 2023

Ignoring invitations… அழைப்பும் அலட்சியமும்...

Wedding Feast

28th Sunday in Ordinary Time

Charles (Chuck) Feeney, one of the greatest philanthropists of our times, went to his eternal rest on October 9, last Monday. The New York Times, on that day, published an article with the headline: "Charles Feeney, Who Made a Fortune and Then Gave It Away, Dies at 92".
Here are a few more headlines of articles on Charles Feeney during his lifetime:
"He Gave Away $600 Million, and No One Knew". The New York Times. 2017
"Out of Sight, Till Now, and Giving Away Billions". The New York Times. 2007
"Chuck Feeney: The billionaire who gave it all away". BBC News. 2022.
"The secret billionaire giveaway". Reuters. 2017
"Chuck Feeney champions the pleasure of giving while living". ezramagazine.cornell.edu. 2023

Charles Francis Feeney (April 23, 1931 – October 9, 2023) was an American businessman and philanthropist who made his fortune as a co-founder of the Hong Kong based Duty Free Shoppers Group. He was the founder of ‘The Atlantic Philanthropies’, one of the largest private charitable foundations in the world. Feeney gave away his fortune in secret for many years, until a business dispute resulted in his identity being revealed in 1997. Feeney gave away more than $8 billion in his lifetime. (Wikipedia)
He became an inspiration to quite a few billionaires like Warren Buffet and Bill Gates. The headline of the official website of ‘The Atlantic Philanthropies’ gives us a picture of Charles Feeney in a nutshell:
From Anonymity to Philanthropic Role Model
Chuck Feeney’s message: Give big now. Don’t wait until you’re old or, even worse, dead

Recalling the story of Charles Feeney is a small, but necessary attempt to keep our hopes alive in human beings in the midst of destructive, negative news from Palestine-Israel, Ukraine, Sudan, Syria, Myanmar and Manipur, sweeping over us like a tsunami. The Liturgy for the 28th Sunday in Ordinary Time invites us to hope in our God who ‘will swallow up death, wipe away tears and prepare a feast of rich food and seasoned wine’. In the first reading, Prophet Isaiah describes a dream banquet spread by God (Isaiah 25: 6-10); in the responsorial Psalm, we hear the famous words: You prepare a table before me in the presence of my enemies; you anoint my head with oil, my cup overflows (Psalm 23:5); and in the gospel (Matthew 22: 1-14) Jesus presents the Kingdom of Heaven as a wedding feast.

May the opening lines of the first reading from Prophet Isaiah serve as our prayerful wish for the world, especially for the Holy Land which is torn by war:
Isaiah 25:6-9
On this mountain the Lord Almighty will prepare a feast of rich food for all peoples, a banquet of aged wine - the best of meats and the finest of wines.
On this mountain he will destroy the shroud that enfolds all peoples, the sheet that covers all nations; he will swallow up death forever.
The Sovereign Lord will wipe away the tears from all faces; he will remove his people’s disgrace from all the earth. The Lord has spoken.

To understand the full implication of the dream banquet described by Isaiah, we need to look into the background of the Israelites. For the Israelites, oppressed under the yoke of slavery in a foreign land, sitting at table and eating a proper food and drinking wine was a very distant, almost impossible dream. Against such a collective longing of the people, Isaiah paints a dream banquet spread by God - a feast of rich food for all peoples, a banquet of aged wine— the best of meats and the finest of wines. (Isaiah 25:6)

Wine, which was a matter of pride in the Israelite banquet, is mentioned twice in the opening line itself… aged wine, finest of wines! As we all know, it takes a lot of time and patience to produce good wine, aged wine and finest of wines. It is a matter of pride for any one to serve the best wine in banquets. (Remember the anxiety of Mother Mary during the wedding feast at Cana when the wine was running out?) Isaiah’s account of this dream banquet must have lifted the spirit of his people and given them hope that they would get back to their days of glory, enjoying finest wines and best of meats.

A banquet is not just an occasion to fill one’s stomach and go home. It is a place where one can build relationships, a place where we can learn how to look into the needs of others. A real good banquet – not the type where the host wishes to show off – can create family spirit and equality. From this point of view, Jesus tells us in today’s parable how the persons who were invited to expand the horizons of their lives by participating in the banquet, turned down the invitation and went back to their own little shells of personal lives. But they paid no attention and went off - one to his field, another to his business. The rest seized his servants, mistreated them and killed them. (Matthew 22: 5-6)

Our liturgical readings today are a grim reminder to us about how our present-day world has turned down the invitations extended by God. As in the days of slavery and starvation suffered by the Israelites, we witness many countries suffer from want in this 21st century, while a few other countries continue to ‘suffer from excess’ and, hence, indulge in ‘throw-away’ culture.

Pope Francis, in his Encyclical ‘Fratelli Tutti’ – published in 2020, at the height of the COVID 19 pandemic – has spoken about how we have become so accustomed to this ‘use-and-throw’ culture. In the first chapter DARK CLOUDS OVER A CLOSED WORLD, he devotes a section to - A “throwaway” world. Here are a few lines from this section:
Some parts of our human family, it appears, can be readily sacrificed for the sake of others considered worthy of a carefree existence.  Ultimately, persons are no longer seen as a paramount value to be cared for and respected, especially when they are poor and disabled, ‘not yet useful’ – like the unborn, or ‘no longer needed’ – like the elderly.  We have grown indifferent to all kinds of wastefulness, starting with the waste of food, which is deplorable in the extreme… (Fratelli Tutti, No. 18)
The appeal by Pope Francis is an invitation to all of us - an invitation not to be slighted or ignored as was done by the invitees in today’s gospel. They ignored the invitation and went back to attend to their personal preoccupations.

I am reminded of a news item I heard a few years ago. This has all the ingredients of what we are reflecting on. This news is about Africa – Sudan, in particular. It is about the famine that was ravaging Sudan; it is about how one young man was so busy with doing his ‘business’ in the midst of the famine, which should have served as an invitation given to him by God. Here is the account of what happened in Sudan in 1993.
The brilliant Sudanese photographer Kevin Carter won the Pulitzer Prize with a photograph, taken in a small village in Sudan in the region of Ayod. The picture has toured the world. It shows a hopeless little girl, totally emaciated, lying on the floor, exhausted by hunger and dying, while in the background, the black silhouette of a vulture watching and waiting for her death. The destitution shown in the photograph is the direct result of the continuous meddling of Western foreign powers in Sudan in order to grab its riches. As a result of this and the inefficiency and corruption of the local government, Sudanese die of starvation in a country considered to be the richest in Africa in terms of agriculture.
In March 1993, while on a trip to Sudan, Carter was preparing to photograph a starving toddler trying to reach a feeding center when a vulture landed nearby. Carter later said that he waited 20 minutes to see if the vulture would flare its wings. He finally took a picture and then chased off the vulture. However, he came under criticism for failing to help the girl. The St. Petersburg Times in Florida said this of Carter: "The man adjusting his lens to take just the right frame of her suffering, might just as well be a predator, another vulture on the scene."
In 1994, the photograph won the Pulitzer Prize for Feature Photography. Four months later, overwhelmed by guilt and driven by a strong dependence on drugs, Kevin Carter committed suicide. Portions of Carter's suicide note read: " I'm really, really sorry. The pain of life overrides the joy to the point that joy does not exist. …depressed … I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners." (Wikipedia)

For Kevin Carter, the starving child was, perhaps, only an object to be photographed. He failed to see in the child, the invitation sent by God. What about us? What does starvation in Africa, Asia or, elsewhere in the world, mean to us? Right now, in the Gaza strip which is known as ‘the biggest open-air prison in the world’ innocent people, especially children, suffer from lack of food, electricity and medical aid. Is this conflict between Palestine and Israel, just one more news item to satiate my curiosity? One more photo in the morning papers to be browsed, with a cup of coffee in the other hand? Or, is this an invitation from God which we cannot ignore in good conscience? In the answer to these questions, we may find our salvation!

A final note… Although the parable of the wedding banquet is reported both in Matthew and Luke (Mt. 22:1-14; Lk. 14: 15-24), only in Matthew we find the episode of one of the guests being punished for not wearing the wedding dress. When the invited guests refuse to show up, the king orders his servants to bring in all those they find on the road. In such a situation, we wonder why the king was angry when one of those coming in from the streets, not wearing the wedding dress. This seems like an uncalled-for reaction from the king. But, when we reflect on the wedding rituals in Israel, we tend to understand the reason for the anger of the king.

In wedding banquets of the Israel, especially the one hosted by the king, whoever came in had to do a ritual washing at the entrance and then put on the wedding dress, given freely, before entering the banquet hall. By entering the hall without the proper dress, the guest was indirectly insulting the host, the king. Accepting and not accepting invitations is not the only lesson given to us in this parable. Even after accepting the invitation, we need to fulfil certain other duties to honour the host.

Jesus closes this parable with the famous saying: “For many are called, but few are chosen.” (Mt. 22:14). We pray that we become worthy of being counted among the few, and that we are able to take up this special privilege with humility.

Invited man – no proper dress


பொதுக்காலம் 28ம் ஞாயிறு

உலகின் மிகச் சிறந்த கொடைவள்ளல்களில் ஒருவராக வாழ்ந்த சார்ல்ஸ் ஃபீனி (Charles Feeney) அவர்கள், அக்டோபர் 9, கடந்த திங்களன்று இறைவனடி சேர்ந்தார். அவரது மரணத்தையொட்டி, நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி, "பெரும் செல்வத்தை திரட்டி அதை அப்படியே வாரி வழங்கிய சார்ல்ஸ் ஃபீனி 92வது வயதில் இறந்தார்" என்ற தலைப்பைத் தாங்கி வந்தது.
சார்ல்ஸ் ஃபீனி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரைப்பற்றி வெளியான வேறு சில செய்திகளுக்கு தரப்பட்டிருந்த தலைப்புக்கள் அவரைப்பற்றி நமக்கு உணர்த்துகின்றன:
"600 மில்லியன் டாலர்களை யாருக்கும் தெரியாதவண்ணம் கொடுத்தவர்" - நியூ யார்க் டைம்ஸ்
"தன்னிடம் இருந்த அனைத்து செல்வத்தையும் வாரி வழங்கியவர்" - நியூ யார்க் டைம்ஸ்
"இரகசியமாக கொடுத்த பெரும் செல்வந்தர்" - ராய்ட்டர்ஸ்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த பெரும் செல்வந்தர்களில் ஒருவரான சார்ல்ஸ் ஃபீனி அவர்கள் உருவாக்கிய The Atlantic Philanthropies என்ற கோடை நிறுவனம், உலகிலேயே, தனி ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் கோடை நிறுவனமாக இருந்தது. சார்ல்ஸ் அவர்கள் தான் சேர்த்துவந்த செல்வங்களையெல்லாம், எவ்வித விளம்பரமும் இல்லாமல், தானமாக வழங்கிவந்தார். பல ஆண்டுகள் இரகசியமாக கொடைகளை வழங்கிவந்த சார்ல்ஸ் அவர்கள், 1997ம் ஆண்டு, சட்ட ரீதியான ஒரு சிக்கல் காரணமாக தன் அடையாளத்தை வெளியிட வேண்டியிருந்தது. அவர் தன் வாழ்நாளில் 8 பில்லியன் அதாவது 800 கோடி டாலர்களை கொடையாக வழங்கியுள்ளார். Warren Buffet, Bill Gates போன்ற பெரும் செல்வந்தர்கள், சார்ல்ஸ் ஃபீனி அவர்களின் தாராள குணத்தால் தூண்டப்பெற்று, தங்கள் செல்வத்தை மக்களோடு பகிர்ந்துகொள்ளும் வண்ணம் அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளனர்.
சார்ல்ஸ் ஃபீனி அவர்கள் உருவாக்கிய கோடை நிறுவனத்தைப் பற்றி வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் சார்ல்ஸ் அவர்கள் மனித சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற அறிவுரையாக அமைந்துள்ளன: "இப்போதே பெருமளவில் கொடுங்கள். வயது முதிர்ச்சி அடையும்வரை காத்திருக்கவேண்டாம், அல்லது, மரணம் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே கொடுங்கள்."

எதையும் எதிர்பாராமல் தன்னிடம் இருந்த செல்வம் அனைத்தையும் வாரி வழங்கிய சார்ல்ஸ் ஃபீனி அவர்களைப் பற்றிய இந்த விவரங்கள், மனித குலத்தைப் பற்றி நம் உள்ளங்களில் நம்பிக்கையை வளர்க்கும் என்ற எண்ணத்துடன் இங்கு பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. பாலஸ்தீனா-இஸ்ரேல், உக்ரைன், சூடான், சிரியா, மியான்மார், மணிப்பூர் ஆகியவற்றைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் வழியே நாம் கேட்டுவரும் வேதனை தரும் செய்திகள், நம் உள்ளங்களில் நம்பிக்கை நரம்புகளை அறுத்துவரும் வேளையில், இத்தகைய செய்திகள் நமக்கு நம்பிக்கையைத் தரும் என்று நம்புகிறோம். 

பொதுக்காலத்தின் 28வது ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்களும் நமக்குள் நம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்பாகத் தெரிகின்றன. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து, எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து, மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை அகற்றிவிடும் கடவுளை இன்றைய வாசகங்களின் வழியே சந்திக்க நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 23:6-10), இறைவாக்கினர் எசாயா, இறைவன் தரும் ஒரு விருந்தை விவரிக்கும்போது, முதலில், அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளைப் பட்டியலிடுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், இவை வெறும் உணவுப்பொருட்களின் பட்டியலைப்போல் தெரிகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்துவந்த அடிமைவாழ்வின் பின்னணியிலிருந்து சிந்தித்தால், இந்த விருந்தைப்பற்றிய விவரங்கள், அவர்கள் ஏங்கித்தவித்த ஒரு விடுதலை வாழ்வின் கனவுகள் என்பது புரியும்.

பல நூற்றாண்டுகள், அடிமைகளாய், புலம்பெயர்ந்தோராய், நாடோடிகளாய் வாழ்ந்துவந்த இஸ்ரயேல் மக்கள் உண்டதெல்லாம், பரிதாபமான உணவு வகைகளே. விலங்குகளுக்குத் தரப்படுவதுபோல், பெரிய பாத்திரங்களில், அல்லது, பாய்விரிப்பில் கொட்டப்படும் உணவை, அந்த அடிமைகள் உண்ணவேண்டும். அதுவும், ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு உண்ணவேண்டும். பொறுமையாய், நாகரீகமாய் காத்திருந்தால், ஒன்றும் கிடைக்காது. இப்படி, ஒவ்வொரு நாளும், ஒரு துண்டு ரொட்டிக்காக போராட வேண்டியிருந்த இஸ்ரயேல் மக்கள், ஆற அமர நாற்காலிகளில் அமர்ந்து, விருந்துண்பது எப்படி என்பதையே மறந்திருந்தனர். அவர்களிடம், இறைவன் தரும் விருந்தைப்பற்றி, இறைவாக்கினர் எசாயா, இவ்விதம் கூறுகிறார்:
படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். (எசாயா 25: 6)

இறைவாக்கினர் எசாயா, இந்த வாசகத்தில் குறிப்பிட்டிருக்கும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போம். நல்ல, சுவையான திராட்சை இரசத்தை விருந்து நேரத்தில் பரிமாறுவதே ஒரு பெருமை. இந்தப் பெருமை பறிபோய்விடுமோ என்ற கவலையில், அன்னை மரியா, கானாவில் நடந்த திருமணத்தின்போது, இயேசுவை அணுகிய அந்த நிகழ்வு, நம் நினைவில் நிழலாடுகிறது.
வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசத்தைஉருவாக்க, நேரமும், கவனமும் தேவை. நேரம் எடுத்து, கவனம் செலுத்தி உணவுப்பொருட்களையோ, திராட்சை இரசங்களையோ உருவாக்கும் அந்தப் பழக்கத்தையே, பல நூற்றாண்டுகளாய் இழந்து தவித்தனர், இஸ்ரயேல் மக்கள். சுவையுள்ள திராட்சை இரசத்துடன் விருந்து கொடுத்து பெருமைகொண்ட காலங்களெல்லாம், அவர்களுக்கு, தூரத்துக் கனவுகளாக இருந்தன. இவ்விதம் தவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த உணவுப் பட்டியல், தங்கள் பாரம்பரியப் பெருமையை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பைத் தந்திருக்கும். அல்லது, வரப்போகும் விடுதலை வாழ்வைப்பற்றிய நம்பிக்கையை, அவர்கள் உள்ளங்களில் வளர்த்திருக்கும்.

அன்று, தங்கள் சுயமரியாதையை இழந்து, உணவுக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களைப்போல, நாம் வாழும் இன்றையச் சூழலிலும் உணவுக்காகப் போராடும் பலகோடி மக்களை எண்ணிப்பார்க்க இன்றைய வாசகங்கள் நமக்கு ஓரு வாய்ப்பைத் தருகின்றன. அன்று உணவுக்காகப் போராடிய இஸ்ரயேல் மக்களின் அரசு, இன்று, பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த காஸாப் பகுதியை ஆக்ரமித்து, அப்பகுதியை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் உருவாக்கி, அங்கு வாழும் பாலஸ்தீனிய மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, உணவு, மருந்து, மின்சக்தி என்ற பல அடிப்படை தேவைகளையும் தடைசெய்து வைத்துள்ள கொடுமை, நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது.

உலகின் பல நாடுகளில், பசியின் கொடுமையால், உயிருக்குப் போராடுவோரை நினைத்துப்பார்க்க; அவர்கள் மீண்டும் மனிதர்களாக வாழ்வதற்கு நாம் என்ன செய்யமுடியும் என்பதை எண்ணிப்பார்க்க; இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. குறிப்பாக, நமக்கு உணவு வழங்கும் விவிசாயிகள், தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கியுள்ள இந்திய அரசின் செயல்பாடுகள், நம்மில் எத்தனை பேரை பாதித்துள்ளது என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக நாம் மேற்கொள்ள இந்த ஞாயிறு அழைப்பு விடுக்கிறது.

தங்கள் சுயநலத்திற்காக வறியோரின் உழைப்பை உறுஞ்சுவதும், தங்கள் தேவை நிறைவேறியதும், அம்மக்களைத் தூக்கியெறிவதும், அரசியல் தலைவர்களுக்கு பழக்கமான ஒரு பாணி. நம் நடுவிலும், பயன்படுத்தி தூக்கியெறியும் இந்தப் போக்கு எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது என்பதை ஆய்வு செய்வது நல்லது. தூக்கியெறியும் கலாச்சாரம், நம்மில் எவ்வளவு பாதகமான விளைவுகளை உருவாக்கியுள்ளது என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார்.
2020ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அனைவரும் உடன்பிறந்தோர்" (Fratelli Tutti) என்ற தலைப்பில் வெளியிட்ட திருமடலில், 'தூக்கியெறியும் உலகம்' என்ற பகுதியில் தன் வேதனைகளை இவ்வாறு வெளியிட்டுள்ளார்: "மனித குடும்பத்தில் முக்கியமானவர்கள் அல்ல என்று கருதப்படும் வறியோர், மாற்றுத்திறனாளிகள், 'இதுவரை பயனில்லை' என்ற முத்திரை குத்தப்பட்ட, பிறக்காத உயிர்கள், 'இனியொரு பயனில்லை' என்ற முத்திரை குத்தப்பட்ட, வயதில் முதிர்ந்தோர், ஆகியோர் தூக்கியெறியப்படுகின்றனர். உணவில் துவங்கி, பல்வேறு பொருள்களை வீணாக்கும் போக்கு, வேதனையளிக்கும் அளவு அதிகரித்துள்ளது. தூக்கியெறியப்படும் உணவைப்போலவே, மனிதர்களும் நடத்தப்படுகின்றனர்." (Fratelli Tutti திருமடல் 18)

தூக்கியெறியும் கலாச்சாரம், நம் உள்ளங்களில், அடுத்தவரைப்பற்றிய உணர்வுகளையும் பெருமளவு மழுங்கடித்துவிட்டது. வறுமைப்பட்ட பல நாடுகளில் நிலவும் வறட்சியும், பட்டினிச் சாவுகளும் நாம் பல ஆண்டுகளாகக் கேட்டுவரும் ஒரு செய்தி என்பதால், அது நம் உள்ளத்தைத் தொடாமல் போக வாய்ப்பு உண்டு.

அரசன் தந்த அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு, தங்கள் வயலுக்கும், கடைக்கும் போன மனிதர்களை, இன்றைய  நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். அதேபோல், வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகளைப்பற்றி கேள்விப்படும்போது, "வறுமையும், பட்டினியும் உலகில் எல்லா இடங்களிலும் இருக்கத்தானே செய்கின்றன. என்னால் என்ன செய்யமுடியும்?" என்று, அப்பிரச்சனை வழியே வரும் அழைப்பை அலட்சியப்படுத்திவிட்டு, நம் சொந்த வாழ்வில் மீண்டும் மூழ்கிவிடும் ஆபத்து நமக்கும் உண்டு.

வறுமைப்பட்ட நாடுகளில் நிகழும் பட்டினிச் சாவுகளைப் பற்றிப் பேசும்போது, முன்னர் வாசித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. இந்தப் பட்டினி சாவுகளால் சிறிதும் பாதிக்கப்படாமல், தனக்கு விடப்பட்ட பணியை மட்டும் செய்துவிட்டுத் திரும்பிய ஒரு புகைப்படக் கலைஞரைப் பற்றிய செய்தி அது.
மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் புகைப்படங்கள், அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் சிறந்த படத்திற்கு, ஒவ்வோர் ஆண்டும், Pulitzer என்ற விருது வழங்கப்படும். 1994ம் ஆண்டு, இந்த விருதைப்பெற்ற புகைப்படம், சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். அங்கு நிலவிய பட்டினிக் கொடுமையை விளக்கும் ஒரு படம். எலும்பும் தோலுமாகக் காணப்படும் ஒரு குழந்தை, தரையில் ஊர்ந்துசெல்வதாக, அப்படத்தில் காட்டப்பட்டிருந்தது. பல நாள்கள் பட்டினி கிடந்ததால், எழுந்துநடக்கும் சக்தியை இழந்திருந்த அக்குழந்தை, அருகிலிருந்த உணவு மையத்திற்கு, ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அக்குழந்தைக்குப் பின்புறம், பிணம்தின்னும் கழுகு ஒன்று அமர்ந்திருந்தது. அக்குழந்தை எப்போது இறந்து விழும், தன் விருந்தை ஆரம்பிக்கலாம் என்று அந்தக் கழுகு காத்திருந்தது. சூடானில், மனிதர்கள், உணவின்றி இறந்து வந்ததால், பிணம் தின்னும் கழுகுகளுக்கு பெருமளவு உணவு கிடைத்தது என்பதை, அந்தப் படம் சொல்லாமல் சொன்னது.

விருதுபெற்ற அந்தப் படத்தை எடுத்தவர், கெவின் கார்ட்டர் (Kevin Carter) என்ற 33 வயது இளைஞர். ஐ.நா.அமைப்பு, சூடானில் மேற்கொண்ட பணிகளை படங்களாகப் பதிவுசெய்யச் சென்றவர் அவர். அவருக்கு Pulitzer விருது கிடைத்த அன்று, பலர், அவரிடம் அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது?” என்று கேட்டார்கள். அவர் பதிலுக்கு, "நான் அந்தப் படத்தை எடுத்தபின், கழுகை விரட்டிவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டேன். அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது" என்று சொன்னார். அவர் சொன்ன அந்தப் பதிலைக் கேட்டபின், ஒரு நாளிதழ், "குழந்தைக்கு இந்தப் பக்கம் அமர்ந்து படம் எடுத்த இவருக்கும், குழந்தைக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அந்தப் பிணம் தின்னும் கழுகுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை" என்று, கெவின் கார்ட்டரைப்பற்றி எழுதியிருந்தது: விருதுபெற்ற இந்தப் புகைப்படத்தினால் அவர் பெற்ற கண்டனங்கள் கெவின் கார்ட்டரின் மனதை உடைத்தன. விருதுபெற்ற அதே ஆண்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

பசி, பட்டினி, வறுமை இவற்றை நாம் எவ்விதம் நோக்குகிறோம்? பட்டினிச் சாவுகள் நமக்கு வெறும் புள்ளி விவரங்களா? தினசரி செய்திகளா? காட்சிப் பொருள்களா? அல்லது, இவை அனைத்தும், இறைவன் நமக்குத் தரும் சிறப்பான அழைப்புக்களா? நான், எனது, என்ற சிறைகளிலிருந்து வெளியேறுவதற்கு, இறைவன் நமக்குத் தரும் அழைப்புக்களை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு, நம் அன்றாட வாழ்வில் மட்டும் கவனம் செலுத்துவது, வலியச் சென்று, நம்மையே, தன்னலச் சிறைகளுக்குள், மீண்டும் அடைத்துக்கொள்ளும் வழிகள். இறைவன் தரும் இந்த அழைப்பைவிட நம் தனிப்பட்ட, தினசரி வாழ்வே பெரிது என்று எத்தனை முறை நாம் வாழ்ந்திருக்கிறோம்? அந்த அழைப்பின் வழி வந்த நல்ல எண்ணங்களை, எத்தனை முறை, கொன்று, குழிதோண்டி புதைத்திருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு, இன்றும், இனி வரும் நாட்களிலும், பதில்கள் தேடுவது, நமக்கு மீட்பைத் தரும்.

மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள திருமண விருந்து உவமை, திருமண உடை அணியாத ஒருவரை, அரசர் தண்டிக்கும் புதிரான ஒரு நிகழ்வுடன் நிறைவடைகிறது. தான் அழைத்தவர்கள் வரவில்லை என்பதால், அரசர், சாலையோரங்களில் காணும் அனைவரையும் கூட்டிவரச் சொல்கிறார். அப்படியே நல்லோர், தீயோர் யாவரும் வந்து சேர்கின்றனர்... திருமண மண்டபம் நிரம்பி வழிகிறது. அந்நேரத்தில் அங்கு வரும் அரசர், அங்கிருந்த ஒருவர் திருமண ஆடை அணியாததைக் கண்டு கோபம் கொள்கிறார். அவருக்குத் தண்டனையும் வழங்குகிறார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது  அநியாயமாகத் தெரிகிறது. தெருவோடு போன ஒருவரை வீட்டுக்குக் கூட்டிவந்து, அவர் சரியான உடை அணியவில்லை என்று கூறி, அவரை தண்டிப்பதா? என்று நாம் எரிச்சலடையலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களின் கலாச்சாரத்தைக் கொஞ்சம் ஆய்வுசெய்தால், சிறிது தெளிவு பிறக்கும்.

இஸ்ரயேல் சமுதாயத்தில், வீடுகளில் விருந்துண்ண செல்லும்போது, வாசலருகே தொட்டிகளில் உள்ள நீரை எடுத்து, விருந்தினர் ஒவ்வொருவரும் தங்கள் கரங்களையும், கால்களையும் சுத்தப்படுத்திய பிறகே வீட்டுக்குள் செல்லவேண்டும். வீட்டிற்குள் நுழைந்ததும், நறுமணத் தைலம் கரங்களிலும், தலையிலும் பூசப்படும். இவை அனைத்தும் இணைந்து, தூய்மைப்படுத்தும் சடங்கு என்று அழைக்கப்பட்டது.

அரசர் அளிக்கும் விருந்து என்றால், விருந்துக்கு வரும் ஒவ்வொருவரும் தங்களையே சுத்தம் செய்து, நறுமணத் தைலம் பூசிக்கொள்வதோடு, கொடுக்கப்படும் சிறப்பான உடையையும் அணிந்துகொள்ள வேண்டும். சாலையோரத்திலிருந்து திரட்டப்பட்ட மக்கள் என்றாலும், ஒவ்வொருவரும் தங்களையே சுத்தப்படுத்திக்கொண்டபின், தரப்பட்ட ஆடைகளை அணிந்தபின்னரே விருந்துண்ணும் இடத்திற்குச் செல்லவேண்டும். இந்தப் பழக்கங்கள் பிடிக்காதவர்கள் விருந்துக்குச் செல்லாமல் இருந்திருக்க வேண்டும். விருந்துக்கும் சென்று, அங்கு கடைபிடிக்கவேண்டிய முறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பது, அழைத்த அரசரை அவமதித்ததாகக் கருதப்படும். எனவேதான், திருமண ஆடை அணியாத அந்த மனிதர் மீது அரசர் அவ்வளவு கோபம் கொண்டார் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

இறைவன் தரும் அழைப்பு, நம் வாழ்வில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதை  ஏற்பதோ, அலட்சியப்படுத்துவதோ நாம் எடுக்கும் முடிவு. அவரது அழைப்பை ஏற்ற பின்னரும், விருந்தில் கலந்துகொள்ளும் பக்குவத்துடன் அங்கு நுழையவேண்டும் என்பதும், திருமண விருந்து உவமை வழியே இயேசு நமக்கு முன் வைக்கும் ஒரு சவால். இறைவன் தரும் அழைப்பிலும் பல எதிர்பார்ப்புக்கள், சவால்கள், கடமைகள் இருக்கின்றன. இறைவன் அழைப்பைப் பெற்றுவிட்டோம் என்ற உரிமையை மட்டும் பெரிதுபடுத்தி, அழைப்புடன் வரும் கடமைகளை ஒதுக்கிவிடுவது, அல்லது அலட்சியப்படுத்துவது, அழைத்த இறைவனையே அலட்சியப்படுத்துவதற்கு சமமாகும்.

திருமண விருந்து உவமையின் முத்தாய்ப்பாக, மகுடமாக இயேசு கூறும் வார்த்தைகள்: "அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்." (மத்தேயு 22: 14) அந்தச் சிலரில் ஒருவராக நாமும் அழைப்பை ஏற்போம்; இறைவன் வழங்கும் ஆனந்த விருந்தில் தகுந்த முறையில் பங்கேற்போம்.


05 October, 2023

A Call to wipe out violence வன்முறையை வேரறுக்க அழைப்பு

 
The Parable of the Tenants

27th Sunday in Ordinary Time

On October 1, 2017, many of us were shocked to hear of the mass shooting that took place in U.S.A. On that fatal day, 64-year-old Stephen Paddock opened fire from the 32nd floor of the hotel where he was staying, on a crowd attending a music festival. He fired more than 1,000 bullets, killing 60 people and wounding at least 413. The ensuing panic brought the total number of injured to 867. About an hour later, he was found dead in his room from a self-inflicted gunshot wound. The motive for the shooting is officially not known. This incident is the deadliest mass shooting by a single gunman in American history. ‘The Las Vegas massacre’ as it was called by the media had shocked the world, once more, due to its sheer madness. A seemingly normal person suddenly kills 60 people and fatally wounds more than 400 persons for apparently no reason at all.
The statement made by the local police shocks us. The sheriff of the Las Vegas Metropolitan Police Department said, “What we know is Stephen Paddock is a man who spent decades acquiring weapons and ammo (ammunitions?) and living a secret life, much of which will never be fully understood.” This seems to be a well-planned violence on the part of Stephen.

Violence almost always borders on madness. But there have also been many instances where one can see this madness being well planned. In many of the terrorist attacks, we can see a ‘method-to-madness’ carried out in full details. We hear of the masterminds who plan these attacks. Most of these masterminds are intelligent and well-qualified persons. When these masterminds put their minds to maximum use, they must be putting their conscience to sleep. In recent years, the role played by governments in state sponsored violence is painfully shocking. The violence unleashed upon innocent people in Ukraine, Sudan, Syria and Manipur are the painful samples of state sponsored violence.

What caught my attention in the mass shooting in the U.S., was the name of the town in which this massacre took place. The town is called ‘Paradise’. In the Bible, the term ‘paradise’ is used six times – thrice in the Old Testament and thrice in the New Testament. The most popular of these six verses, is the promise given by Jesus on the cross to the criminal crucified with him – “Truly I tell you, today you will be with me in Paradise.” (Luke 23:43)
The Biblical notion of ‘Paradise’ is a place of great beauty and peace created by God. Many commentators refer to the Garden of Eden as the Paradise created by God for Adam and Eve and the future generations of men and women. Taking a cue from this, we tend to refer to any beautiful, peaceful place on earth as Paradise. Down the centuries, we, human beings, due to our evil tendencies, especially due to our uncontrolled violence, have created hell out of the Paradise created by God. The senseless violence that took place in the town named ‘Paradise’, is a sample of the human tendency to create hell even in paradise!

There are three reasons why we are dwelling on thoughts of violence today. The first reason – Every year, October 2 is observed as the International Day of Non-violence. As many of us know, October 2 is celebrated as Gandhi Jayanthi (the Birthday of Gandhi) in India. We can presume that when Gandhi was born on October 2, 1869, non-violence was also born with him as his twin. In the year 2007, this day was declared by the U.N. as the International Day of Non-violence as a mark of respect to Gandhi, the great apostle of non-violence. We hear that the Indian government took enormous efforts to establish this International Day in the U.N. Unfortunately, non-violence seems like a distant memory in India in the recent years. The painful memory of what happened in Manipur – to two ladies as well as to two teenagers – is still raw in our minds and hearts. October 2 – the International Day of Non-violence – is the first reason to talk of violence, or, non-violence today.

The second reason is the Feast of St Francis of Assisi celebrated on October 4. For St Francis, all human beings as well as all the creatures of the world were his kith and kin. We know that in 1219, St Francis took a lot of risk in meeting with the sultan, Malek al-Kamil, when the Fifth Crusade was in full swing. The famous prayer of St Francis ‘Make me a channel of your peace’ is his testimony of how to win over violence with love. It is very significant that we have begun the ‘Synod on Synodality’ on the Feast of St Francis. October 4, is the second reason to talk of violence, or, non-violence today.

The third reason to reflect on violence comes from today’s liturgical readings. In the gospel reading – Matthew 21: 33-43 – we come across one of the parables of Jesus where he portrays the planned violence on the part of the tenants in a vineyard.
Reading this parable gives us a creepy feeling as if we were reading our daily newspaper. We come across such events of planned violence almost on a daily basis. The tenants wanted to become owners. Such a reversal could be achieved only through violence, they thought. We could so easily point out fingers at those – especially our political mafia – who claim unjust ownership where there is none.

Every time we point one finger at others, we are challenged to look at three more fingers pointing at us. We are tenants, pilgrims here on earth. But, so often we fancy that we own this world. The present generation stands accused in front of God for claiming ownership of this globe and treating this globe violently. When God, the prime designer of the whole universe has taken so much effort to fashion this world, we seem to thwart God’s plans to our own ends. This ‘violence’ is expressed in the first reading from Prophet Isaiah:
Isaiah 5:1-2
My loved one had a vineyard on a fertile hillside. He dug it up and cleared it of stones and planted it with the choicest vines. He built a watchtower in it and cut out a winepress as well. Then he looked for a crop of good grapes, but it yielded only bad fruit.

The Prophet then goes on to talk about how the disappointed owner would destroy this vineyard. Here are those ominous lines:
Isaiah 5:3-6
Now you dwellers in Jerusalem and men of Judah, judge between me and my vineyard.
What more could have been done for my vineyard than I have done for it? When I looked for good grapes, why did it yield only bad?
Now I will tell you what I am going to do to my vineyard: I will take away its hedge, and it will be destroyed; I will break down its wall, and it will be trampled. I will make it a wasteland, neither pruned nor cultivated, and briers and thorns will grow there. I will command the clouds not to rain on it.
The last few lines remind us about what is happening around us these days. Wasteland, no crops, no rains, or, on the other hand, raging fires and floods… I am not sure whether we have woken up to these realities still.

Our final thoughts turn towards Vatican where the ‘Synod on Synodality’ started on October 4, last Wednesday. We are aware that this Synod has a special significance since it has given more participation to the laity and has given them the power to vote. (Till now, only Bishops were allowed to vote in Synods.) We pray that this Synod may give us a better understanding of the true nature of the Church, which is an all-inclusive family of God. We pray that the words of St Paul to the Philippians which we hear in the Second Reading today, especially the Christian values of truth, nobility, justice, and purity may become more and more evident in the Church and in the whole world.
Philippians 4:6-9
Do not be anxious about anything, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God. And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus.
Finally, brothers and sisters, whatever is true, whatever is noble, whatever is right, whatever is pure, whatever is lovely, whatever is admirable— if anything is excellent or praiseworthy— think about such things… And the God of peace will be with you.

Wild grapes from God’s vineyard

பொதுக்காலம் 27ம் ஞாயிறு

வன்முறை என்ற சொல் ஒவ்வொரு நாளும் நமது செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெறும் சொல்லாக மாறிவிட்டது. நமது ஊடகங்கள் காட்டும் வன்முறைகள் நம்மை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அறியாத அளவு, நாம் வன்முறைக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கிறோம். அண்மைய ஆண்டுகளில் வெளியாகிவரும் திரைப்படங்களில் வன்முறை பல வடிவங்களில், பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்படுகின்றது. திரைப்பட நாயகர்களை, தெய்வங்களாகத் தொழுதுவரும் நம் இளைய தலைமுறையினர், அந்த நாயகர்களைப்போல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, வன்முறைதான் சிறந்த வழி என்ற முடிவுக்குச் செல்லும் ஆபத்தில் உள்ளனர்.
தமிழில் நாம் பயன்படுத்தும் ‘வன்முறை’ என்ற சொல்லை பதம்பிரித்து பொருள் காணும்போது, பல சிந்தனைகள் எழுகின்றன. வன்முறை என்ற சொல், வன்மை, முறை என்ற இரு சொற்களின் இணைப்பாகத் தெரிகின்றது. வன்மை என்ற சொல், மென்மைஎன்ற சொல்லின் எதிர்மறை. கோபம், கொடூரம், இவற்றை வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், இந்த சொல்லுடன் 'முறை' என்ற சொல்லை இணைத்திருப்பது, புதிராக இருந்தாலும், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில், வன்மையானச் செயல்கள், முறையோடு, திட்டமிட்டு நடத்தப்படுவதால், இதை ‘வன்-முறை’ என்று சொல்வது, பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள், வன்முறைகளுக்காக ஏவிவிடப்படும் கூலிப்படைகள், கொலைப்படைகள், ஏதோ ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிவதுபோல், தங்களுக்குக் குறித்துவிடப்பட்ட பணியை, 'கச்சிதமாக' முடிக்கின்றனர். வன்முறையை ஒரு வர்த்தகப் பொருளைப்போல் பட்டியலிட்டு விற்கின்றனர். உயிரைப் பறிக்க ஒரு தொகை, ஆள் கடத்தல், உடலை ஊனமாக்குதல் இவற்றிற்கு ஒரு தொகை என்று, வன்முறை, விற்பனை செய்யப்படுகிறது.

முறைப்படி, திட்டமிட்டு நடத்தப்படும் வன்மைகளின் உச்சக்கட்டமாக விளங்குவது, தீவிரவாதம். ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலுக்கும் முன்பு, மிகத் துல்லியமான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், தாக்குதலில் ஈடுபடுபவர்கள், அவற்றைத் திட்டமிடுபவர்கள் எல்லாருமே உயர்கல்வி முடித்த பட்டதாரிகள் என்றும் அறியும்போது, மனம் அதிகமாக வேதனைப்படுகிறது. தாங்கள் செய்யப்போவது, கொடுமையானச் செயல்கள் என்று தெரிந்தும், திட்டமிட்டு வன்முறைகளை நிறைவேற்றும் இவர்கள், தங்கள் மனசாட்சியைக் கொன்று புதைத்துவிட்டு, பின்னர் மக்களைக் கொல்கின்றனர்.

வன்முறை வெறியர்களை கட்டுப்படுத்த நாம் தெரிவு செய்துள்ள அரசு அதிகாரிகள், தலைவர்கள் ஆகியோர், வன்முறைகளைத் தூண்டிவிட்டு, அவற்றின் வழியே தங்கள் சுயநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் போக்கு, அண்மைய ஆண்டுகளில், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் வளர்ந்துவருவதை இவ்வேளையில் நாம் வேதனையோடு ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் மணிப்பூரில் இன்றும் தொடர்ந்துவரும் வன்முறைகள், உக்ரைன் நாட்டில் இரஷ்யா மேற்கொண்டுவரும் வன்முறைகள், சிரியா, ஏமன் போன்ற நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் தொடர் வன்முறைகள், சூடான் நாட்டில் அண்மைய சில மாதங்களாக நடைபெற்றுவரும் இனவெறி வன்முறைகள் ஆகியவை, அரசுகளின் உதவியுடன் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளுக்கு எடுத்துக்காட்டுகள்.

வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம்... ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, நாம் கொண்டாடிவரும் காந்தி ஜெயந்தி. இந்த நல்ல நாளில் மகாத்மா காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில் மற்றொரு கண்ணியமான அரசியல் தலைவரான லால் பகதூர் சாஸ்திரி அவர்களும் பிறந்துள்ளார். இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ் அவர்கள் இறந்த நாள். இந்த மூன்று தலைவர்களை நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில் நானும் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள். ஆனால், இன்று அரசியல் என்றதும் அராஜகம், அடாவடித்தனம், வன்முறை, இவையே இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது வேதனையைத் தருகிறது.

1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது, அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும் உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது. எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா. பொது அவை அக்டோபர் 2ம் தேதியை அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம். வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம்.

இரண்டாவது காரணம் - அக்டோபர் 4, கடந்த புதனன்று நாம் கொண்டாடிய ஒரு புனிதரின் திருநாள். அசிசி நகர் புனித பிரான்சிஸ், மனிதர்களோடு மட்டுமல்லாமல், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களோடும் பாசமான உறவுகளை வளர்த்துக்கொண்டவர். பகைமையையும், வன்முறைகளையும் களைந்து, அமைதியின் கருவிகளாக நாம் வாழ்வதற்குத் தேவையான அழகிய செபத்தை உருவாக்கியவர். வன்முறைகளின் எதிர் துருவமாக வாழ்ந்த புனித பிரான்சிஸ் அவர்களின் திருநாளன்று, வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் துவங்கியிருப்பது பொருத்தமாகத் தெரிகிறது. வன்முறையற்ற உலகை உருவாக்க தாய் திருஅவைக்கு தனிப்பட்ட அழைப்பு உண்டு என்பதை உலகறிய பறைசாற்றுவது நம் பணி.

வன்முறையைப் பற்றி இன்று எண்ணிப்பார்க்க மூன்றாவது காரணம் நமக்கு இன்று தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். இறைவாக்கினர் எசாயா மற்றும் மத்தேயு நற்செய்தி இரண்டிலும் திராட்சைத் தோட்டம் ஒன்றை மையப்படுத்தி சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை இணைத்துப் பார்க்கும்போது, வன்முறையைப்பற்றி இரு கோணங்களில் நாம் சிந்திக்க முடியும்.

ஒரு திராட்சைத் தோட்ட உரிமையாளருக்கு எதிராக, அத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் தொழிலாளர்கள் திட்டமிட்டு செய்யும் வன்முறைகளை நற்செய்தியில் இயேசு கூறியுள்ளார். கவனமாக தான் வளர்த்துவந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரர்களிடம் கொடுக்கிறார் ஒரு முதலாளி. அறுவடை நேரம் வந்ததும், தனக்குச் சேரவேண்டிய பங்கை கேட்டதற்கு, அவருக்குக் கிடைக்கும் பதில்கள் அநீதியானவை. திராட்சைத் தோட்டத் தொழிலாளிகள் செய்ததாக நாம் நற்செய்தியில் வாசிக்கும் வரிகள் இவை:
மத்தேயு நற்செய்தி 21: 35-36
தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள்,  ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள்.

இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும்போது, எதோ ஒரு தினசரி செய்தித்தாளை வாசிக்கும் உணர்வு எனக்குள் மேலோங்கியது. நாம் செய்திகளில் வாசிக்கும் ஒரு சில நிகழ்வுகளை, அந்நிகழ்வுகளுக்குப் பின்னணியில் வன்முறைகளைத் திட்டமிடும் பல தலைவர்களை நினைத்துப் பார்க்க வைத்தது. மக்களின் பிரதிநிதிகளாக பொறுப்பேற்கும் பல அரசியல் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள்தான் என்பதையும், தங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புக்கு கணக்கு கொடுக்கவேண்டியவர்கள் என்பதையும், சிறிதும் எண்ணிப் பார்க்காமல், எதோ அந்த நாடு, அந்த மாநிலம், அங்குள்ள மக்கள் எல்லாமே தனக்குரிய பொருள்கள் என்பதுபோல் அவர்கள் செயல்படும் போக்கு, பல நாடுகளில் வளர்ந்துவருவதை, இந்த உவமை எனக்கு நினைவுறுத்தியது. பொறுப்புக்களை மறந்து செயல்படும் தலைவர்களுக்கு அப்பொறுப்புக்களைப் பற்றி யாராவது நினைவுறுத்தினால், அவர்கள் பழிதீர்க்கப்படுவார்கள். தன்னை மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் உருவாகும் வன்முறை, இன்றைய வாசகங்கள் தரும் ஒரு கோணம்.

மற்றொரு கோணம், நம் அனைவரையுமே குற்றவாளிகளாக்குகிறது. அதாவது, நாம் அனைவருமே இந்த உலகில் குத்தகைக்காரர்கள். இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல. இது நம் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து, அல்லது வேண்டுமென்றே மறுத்து, நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்துவரும் வன்முறைகளையும் சிந்திக்க இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. சுவையுள்ள பழங்கள் தரும் திராட்சைத் தோட்டமாக இந்த உலகை இறைவன் உருவாக்க முயலும்போது, அந்தத் திட்டத்திற்கு எதிராக நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதை இறைவாக்கினர் எசாயா கூறியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா 5:1-2
செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டு, கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்:... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். மாறாக, காட்டுப்பழங்களையே அது தந்தது.

இறைவனின் கைவண்ணமான இந்த உலகை, இயற்கைச் சூழலை நமது பொறுப்பற்ற செயல்களால் சீரழித்து வருகிறோம். நமது பூமியை, தேவைக்கும் அதிகமாகக் காயப்படுத்தி வருகிறோம். இந்த காயங்களுக்குப் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை அவ்வப்போது இயற்கைப் பேரழிவுகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இருந்தாலும், நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டதைப் போல் தெரியவில்லை.

பழங்களை எதிர்பார்த்து ஏமாந்துபோகும் இறைவனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறும் இந்த வரிகளை வாசிக்கும்போது, நம் குடும்பங்களில் வளர்ந்து வரும் நம் குழந்தைகளைப் பற்றியும் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பல திட்டங்கள், கனவுகளோடு பல்வேறு பாடுகள் பட்டு நாம் வளர்க்கும் குழந்தைகள், நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, வேறு வழிகளில் செல்லும்போது, ஒவ்வொரு பெற்றோரும் படும் வேதனைகளை, இறைவனின் வேதனைகளாக, இறைவாக்கினர் எசாயா வர்ணித்துள்ளார். நம் குடும்பங்களில், இனிய சுவையுள்ள, நல்ல பழங்கள் தரும் கொடிகளாய் நம் குழந்தைகள் வளர வேண்டும் என்று, சிறப்பாக மன்றாடுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... அக்டோபர் 4, கடந்த புதனன்று, வத்திக்கானில் "Synod on synodality", அதாவது, கூட்டொருங்கியக்கம் என்பதை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பமானது. இதுவரை நிகழ்ந்துள்ள ஆயர் மாமன்றங்களில் ஆயர்களே அதிகமாக கலந்துகொண்டனர். ஆயர்கள் மட்டுமே மாமன்றங்களில் நிறைவேற்றப்படும் முடிவுகளைக் குறித்து வாக்களித்தனர். இப்போது நடைபெறும் மாமன்றத்தில், பொதுநிலையினரின் பங்கேற்பு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருஅவை வரலாற்றில் முதல் முறையாக இந்த மாமன்றத்தில், பொதுநிலையினர் வாக்களிக்கும் உரிமையும் பெற்றுள்ளனர். இந்த ஆயர் மாமன்றம் வழியே, கத்தோலிக்கத் திருஅவையின் ஒரு முக்கியமான பண்பை, அதாவது, திருஅவை, அனைவரையும் சமமாக உள்ளடக்கிய இறைவனின் குடும்பம் என்ற பண்பை உலகறிய செய்யும் என்ற நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வோமாக!

திருஅவை என்ற உலகளாவிய இந்த குடும்பத்தில் நிலவவேண்டிய பண்புகளை, திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறியுள்ளார். இந்த பண்புகள், தற்போது நடைபெறும் ஆயர் மாமன்ற நாள்களிலும், இனி வரும் காலத்திலும் நம்மிடையே வளரவேண்டும் என்ற வேண்டுதலுடன், புனித பவுலடியாரின் சொற்களை மனதில் பதியவைப்போம்:
பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4: 6-9
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்... அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்... சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.