15 February, 2024

Lenten Season = Season of Love - Spring தவக்காலம் = அன்பின் வசந்தகாலம்


I Sunday of Lent

On February 14, Wednesday, we began the Lenten Season. This year, Ash Wednesday happens to coincide with Valentine’s Day. Valentine (or St Valentine) may or may not be a historical figure. But, the legend around him is quite interesting.
The Roman festival of Lupercalia in February began a festival of love. In the third century, Claudius II was the emperor of Rome and was keen on having soldiers who were single rather than married men. To realise his ideal army, he banned love and marriage from his empire. Valentine, a priest, defied the emperor’s edict and got young couples married in secret. When the emperor learnt of this, he imprisoned Valentine, tortured him and, finally, beheaded him on February 14th around the year 270.

Although the commercial world has hijacked Valentine’s Day as a marketing event to ‘sell love’, we need to make a sincere effort to understand the original meaning of this day, namely, that true and lifelong loving relationships require lots of sacrifice. The attempt of emperor Claudius to ban love and marriage in order to have young men join the army and kill innocent lives, brings to mind the present leaders waging senseless wars in Gaza, Ukraine and other parts of the world. Leaders in India, although not involved in direct war, still feed the minds of youngsters with hatred in order to gain their selfish interests. Hence, on this Valentine’s Day, the Feast to celebrate true Love, it is our duty to pray for the youth that they may understand that the path of ‘eye-for-an-eye’ attitude shown by the power-crazy leaders is going to lead them to total blindness. 

Valentine’s Day coinciding with Ash Wednesday this year gives us an opportunity to think of Lenten Season as a season of love that brings to life all the dormant sentiments of true love in our hearts. Etymologically, the word ‘Lent’ has two references in two different languages. In Latin, Lent comes from the word ‘lente’ which means ‘slowly’. The word ‘Lenten’ comes from the Anglo-Saxon word ‘Lencten’ which signifies ‘Spring’. (‘Lencten’ or ‘Lengten’ – simply denotes the ‘lengthening’ of the daytime. This implies that winter is getting over…and Spring is at hand). When we combine ‘slowly’ and ‘spring’, we arrive at a comparative imagery between Lent and Spring. As the spring – slowly and steadily – renews the face of the earth, Lent renews us!

Usually, when we think of the Season of Lent, the symbol of ash dominates our imagination. For a change, it might be better to think of the Lenten Season in terms of Spring. In countries that have the four clear seasons, winter is preceded by the fall season. During these two seasons – fall and winer – which extend to five or six months, trees and plants are pretty barren, devoid of leaves. A cursory, quick look at plant life during these months would make one easily assume that these plants and trees are ‘as good as dead’.
‘As good as dead’ sounds like a contradiction. What is good about being dead? This is the whole mystery of the Lenten Season and the Paschal Season… Death is a doorway to life. Under the heavy cover of snow, life begins to germinate. Come Spring… life will be in full bloom. Lenten Season (Spring) is an invitation to believe that death is not the final word. Moreover, Spring does not spring a surprise on us by overnight changes. These changes – the life affirming changes take place –  ‘lente’ – ‘slowly’!

Every year we begin the Season of Lent with Ash Wednesday. When the ash is applied on our forehead, the priest says: “Repent and believe in the Gospel”. The older formula for this ritual was: “Thou art dust and to dust thou shalt return!” The change in the formula for the Ash Wednesday rite, clearly indicates that from the position of seeing ash as a sign of death and destruction, we have moved to a better position of seeing ash as a symbol of change and conversion!

Talking of the imagery of the ash, I would like to present the ideas shared by one of my favourite columnists, Fr Ron Rolheiser. In his column written under the title “Lenten Ashes” (2022), he says:
We enter the season of Lent by putting ashes on our foreheads. What’s symbolized here? Perhaps the heart understands better than the head because more people go to church on Ash Wednesday than on any other day of the year, including Christmas. The queues to receive the ashes in many churches are endless. Why? Why are the ashes so popular?
Their popularity, I suspect, comes from the fact that, as a symbol, ashes are blunt, primal, archetypal, and speak the language of the soul… Ashes are dust, soil, humus; humanity and humility come from these. Ashes have always been a major symbol inside all religions. To put on ashes, to sit in ashes, is to say publicly and to yourself that you are in a penitential mode, that this is not “ordinary time” for you… All ancient traditions, be they religious or mythical, abound with stories of having to sit in the ashes. For example, we all know the story of Cinderella. This is a centuries-old, wisdom-tale that speaks about the value of ashes in life. The name Cinderella itself speaks to this. Literally, the name Cinderella means, “the young girl who sits in the cinders, the ashes.”  Moreover, as the tale makes plain, before the glass slipper is placed on her foot, before wearing the beautiful gown, before going to the ball, before dancing with the prince, and before marrying him, there must first be a period of sitting in the cinders, of being humbled, of waiting patiently, while you are being readied for a sublime joy and consummation. In the story of Cinderella, we can see a spirituality of Lent.

Ash is very much associated with fire. When we think of fire as a source of destruction, then ash is thought of as the net result of destruction. But, when we can think of fire as a source of life as well as purification, then ash can take on other meanings. Ash, as we know well, is used as a fertilizer, helping in the process of new life. Ash also is used as a ‘detergent’ to clean objects and make them glitter! Life-giving and cleansing are two crucial processes of Lent!

The lovely assurance that death and destruction are not the final words, is presented to us in the First Reading (Genesis 9: 8-15). God promises a revival of the earth after the great deluge and also places the lovely symbol of the rainbow. Rainbow has been used as a symbol of hope across the world.
Then God said to Noah and to his sons with him, “Behold, I establish my covenant with you and your descendants after you, and with every living creature that is with you… I establish my covenant with you, that never again shall all flesh be cut off by the waters of a flood, and never again shall there be a flood to destroy the earth.” And God said, “This is the sign of the covenant which I make between me and you and every living creature that is with you, for all future generations: I set my bow in the cloud, and it shall be a sign of the covenant between me and the earth.” (Gen. 9: 8-13)

Every year, on the First Sunday of Lent, the Church invites us to reflect on temptation – the episode of Jesus being tempted in the desert. The word ‘temptation’ usually brings in uncomfortable feelings in most of us. Yet it is an essential part of human life. No one escapes temptation… not even Jesus. Today’s Gospel (Mark 1:12-15) talks about this. How do we see temptation and the tempter (called variously as… Satan, devil, the evil one)?

A few years back, I was discussing the theme of the I Sunday of Lent, namely, ‘temptation’ with a priest friend of mine. The moment he saw the theme ‘temptation’, he broke into an old Tamil film song that talked of the hero being crushed by trials and temptations. “Lord, enough of this wave after wave of temptations and trials” (Sothanai mel sothanai podhumadaa saami), cries the hero! One can easily feel the sense of desperation that runs through that song.

Our generation suffers from what I would like to call ‘the negativity-syndrome’. A major part of this ‘negativity syndrome’ comes from our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there are many more blessings that happen too. Natural calamity, like an earthquake, as well as human-made tragedy, like the senseless wars being waged in Gaza and Ukraine, ‘make good business’ for the media. In every tragedy, there are many distressing facts and figures. There are equally, if not more, uplifting events. The media is more interested in reporting the negatives than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. The temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them is the most dangerous temptation our present generation needs to handle!

Jesus, when he was about to begin his public ministry faced a similar situation. He was soaked in bad news coming from the unjust occupation of the Romans. Hearing of these oppressive news day after day for 30 years of his hidden life in Nazareth must have ‘tempted’ Jesus either to give up or to take up arms for the liberation of the people. Jesus did neither. He overcame the temptations through fasting and prayer for 40 days.

After his stay in the wilderness with ‘wild beasts’ as well as ‘angels’, he was ready to face the world. What he did immediately gives us a clue as to how we can deal with our temptations of ‘giving up’. “Now after John was arrested, Jesus came into Galilee, preaching the gospel of God” (Mark 1:14). Choosing to go back to Galilee must have been a hard decision for Jesus. Judea and Galilee were under the jurisdiction of Herod, who arrested his cousin John and later beheaded him. Knowing full well that Galilee would be a risky territory, Jesus stepped into it. Jesus, as it were, entered the lion’s den, not to show off his bravado, but to ‘preach the gospel of God’. 

We are invited to follow the footsteps of Jesus. Instead of saying that ‘nothing can be done about the world’, we can do something about ourselves. The least that we can do is not to entertain such negativity, especially when we hear ‘bad news’ of war and riots. Let us try and see how best we can counter this ‘bad news’ with ‘Good News’!

May Jesus who faced temptations squarely, help us face our trials with determination. May this Lent bring in slow and steady changes in us so that our lives can usher in life-giving spring into the world which seems to be frozen under the winter of death, destruction and despondency! 

Hope of Spring

தவக்காலம் முதல் ஞாயிறு

பிப்ரவரி 14, புதன்கிழமை, நாம் தவக்காலத்தைத் தொடங்கினோம். பிப்ரவரி 14ம் தேதி 'காதலர் தினம்' என்று அழைக்கப்படும் Valentine's Day அன்று நாம் திருநீற்று புதனையும் சிறப்பித்தோம். வாலன்டைன் (அல்லது புனித வாலன்டைன்) ஒரு வரலாற்று நபராக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரைப்பற்றி கூறப்படும் பாரம்பரியக் கதை நமக்கு உண்மை அன்பு, அல்லது உண்மைக் காதலைப் பற்றியும், தவக்காலத்தின் பொருள் குறித்தும் சிந்திக்க உதவுகிறது.
உரோமையப் பேரரசில் பிப்ரவரி மாதத்தில், Lupercalia என்ற திருநாள் கொண்டாடப்படும். அதைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.

மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் கிளாடியஸ் (Claudius) மன்னனாய் இருந்தபோது, படைக்கு ஆட்கள் சேர்ப்பது அதிகக் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து, படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, மன்னன் கிளாடியஸ், இந்த பிப்ரவரி மாதத் திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அக்காலத்தில் உரோமையில் வாழ்ந்த வாலன்டைன் என்ற அருள்பணியாளர், அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்திவைத்தார். இதை அறிந்த அரசன், அந்த அருள்பணியாளரைக் கைது செய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். பின்னர், 270ம் ஆண்டு, பிப்ரவரி 14 அன்று வாலன்டைன் அவர்கள், தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். 

மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே வெறுப்பை, வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. தங்கள் காதலைத் துறந்து, போர்வெறியை வளர்த்துக்கொள்ள, வீரர்கள் முன்வரவில்லை என்பதை உணர்ந்த மன்னன் கிளாடியஸ், காதலை, திருமணங்களைத் தடை செய்தான். அன்பைத் தடுத்து, வெறியை உருவாக்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினான்.
வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க, அருள்பணியாளர் வாலன்டைன் செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருந்தாத சொற்றொடர்). வாலன்டைன் அவர்கள், போராட்டம், கலவரம் என்று மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த அருள்பணியாளர், அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.

மனித வரலாற்றில், வெறுப்பு, வெறி ஆகிய எதிர்மறை உணர்வுகளே படை பலம், அதிகார பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. இன்றும், காசா, உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெறும் போர்களில், அதிகாரத்தின் வெறியை, நேரடியாக நம்மால் காணமுடிகிறது. இந்தியாவின் அடிப்படைவாத அரசியலில் இந்த அதிகார வெறியை மறைமுகமாகக் காண்கிறோம்.
இவற்றின் எதிர் துருவத்தில், அன்பும், அதைச் சார்ந்த அற்புதங்களும், அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. படை பலத்தோடு ஆண்ட அரசன் கிளாடியஸுக்கு திருநாள் எதுவும் இல்லை. அன்பை வளர்த்த  வாலன்டைனுக்கு திருநாள் உண்டு. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்கவைக்கும் அளவுக்கு, Valentine's Day என்பதற்கு, காதலர் தினம் என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வர்த்தக நிறுவனங்கள் அடையும் இலாபத்திற்கு, நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில், அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு, இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது. அன்பு, காதல் ஆகிய புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும் வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று குழம்பிப் போயிருக்கும் நம் இளையோர் தெளிவு பெற இறை அருளை வேண்டுவோம்.

அதேவேளையில், மன்னன் கிளாடியஸ் போல, இன்றைய இளையோரை வெறுப்பில் வளர்க்கும் உலகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள் காட்டும் பாதை, நம் இளையோர் அனைவரையும் அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை இளையோர் உணர்ந்து, அன்பின் பாதையை தெரிவு செய்ய தேவையான உள்ளொளியை தூய ஆவியார் வழங்கவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

Valentine's Day என்றழைக்கப்படும் அன்பின் திருநாளன்று நாம் தவக்காலத்தைத் துவங்கியிருப்பதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வரமாக எண்ணிப்பார்ப்போம். நாம் துவங்கியுள்ள தவக்காலம் முழுவதையும், அன்பு எண்ணங்களால், செயல்களால் நிறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம். மேலும், இந்த வழிபாட்டு காலத்திற்கு, நாம் வழங்கியுள்ள பெயர், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தமிழில் தவக்காலம் என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.

Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்றால், ‘மெதுவாக என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது உருவாகும், மெதுவாக வரும் வசந்தகாலம் என்ற சொற்றொடர், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில், மரங்களையும், செடிகளையும் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும். வசந்தகாலத்தில் மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.

வசந்தம் - கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய் உயிரற்று காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்த காலம் வந்துசேர்கிறது. மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலத்தை, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை.

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில், அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, நம் அனைவருக்கும் தெரிந்த 'சின்டரெல்லா' (Cinderella) என்ற பாரம்பரியக் கதை உதவியாக இருக்கும். 'சின்டரெல்லா' என்ற இந்தப் பெயர், இரு சொற்களின் இணைப்பு. 'Cinders', அதாவது, சாம்பல், மற்றும், 'Puella', அதாவது, 'சிறுமி' அல்லது 'சிறிய பெண்' என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே, Cinderella.
இந்தப் பாரம்பரியக் கதையின் கருத்து, மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. "ஒருவர் அழகு மிக்கவராக, அனைவராலும் விரும்பித் தேடப்படுபவராக, பெரும் விருந்துகளில் கலந்துகொள்பவராக மாறுவதற்கு முன், சாம்பலுடன், தனிமையில் நேரத்தைச் செலவிடவேண்டும். அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், பணிவோடு செய்யவேண்டும்" என்பதே, சின்டரெல்லா கதை நமக்குச் சொல்லித்தரும் பாடம். தவக்காலம், நம்மை, சாம்பலில் அமர அழைக்கிறது.

ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே, சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம். ஆனால், அதே சாம்பல், உயிர்களை வளர்க்கும் உரமாகவும், பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அழிவின் அடையாளங்களாக நாம் கருதும், சாம்பலையும், நெருப்பைப்போலவே, பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக் கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை, இன்றைய முதல் வாசகம் - தொடக்கநூல் 9: 8-15 - நமக்கு நினைவுறுத்துகிறது. நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கின்றன: கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்... நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.” (தொடக்கநூல் 9: 8-13)

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தை, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளையும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி (மாற்கு 1:12-15) நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நம்மால் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின்மையை, உள்ளத்தில் ஆழமாக ஊன்றிவிடும் ஆபத்தான சொற்கள் இவை.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? நோவா காலத்தில் வந்ததுபோல், தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும் பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றிபெறவும், நமக்கு சக்தி உள்ளது. இதையும் நாம் நம்பவேண்டும்.

நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில், ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்ன உலகமிது" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.
இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். அதிலும் குறிப்பாக, தன் உறவினரும், முன்னோடியுமான யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்தபின், இயேசு, அவரது கைது நிகழ்வால் மனம் தளர்ந்து போகாமல், "கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே கலிலேயாவிற்கு வந்தார்" (மாற்கு 1:14) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

"கலிலேயாவிற்கு வந்தார்" என்ற சொற்களில் பொதிந்துள்ள பொருள், நாம் சோதனைகளை எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பதற்கு மற்றுமொரு பாடமாக அமைகின்றது. யூதேயா, கலிலேயா ஆகிய இரு பகுதிகளும், ஏரோது மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. தன் உறவினரான யோவானைக் கொலை செய்தது ஏரோது என்பதை அறிந்தும், அவரது அதிகாரத்திற்கு கீழ் இருந்த கலிலேயாவிற்கு இயேசு வந்தார். அவர் அங்கு வந்தது, ஏரோதுக்கு சவால் விடும் தன் துணிவைக் காட்டும் ஒரு வருகை அல்ல, மாறாக, தான் பறைசாற்ற வந்த நற்செய்தியின் சக்தியால் அவர் அந்த முடிவை எடுத்தார்.
இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, அதைத் தொடர்ந்து நற்செய்தியை பறைசாற்ற சென்றது ஆகிய நிகழ்வுகள், நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமாகவிளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நிகழவிடாமல், நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கும், மனத்தளர்வில் ஆழ்ந்திருக்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும், தூய ஆவியார் நமக்கு துணிவை வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.


08 February, 2024

Love - the best therapy அன்பே மிக உன்னத சிகிச்சை

 
World Day of the Sick

6th Sunday in Ordinary Time
World Day of the Sick

Pope St John Paul II was diagnosed with Parkinson’s disease in the 90’s. Some sources say that it was in the year 1993. But, a few other sources say that it was already in 1991. Pope John Paul II had been diagnosed with Parkinson's disease as early as 1991, an illness which was only disclosed later, and it is significant that he decided to create a World Day of the Sick only one year after his diagnosis. (Wikipedia)
Let us not bother about the ‘when’ of his illness. We can learn so much from ‘what’ the Holy Father did when he learnt of his illness… lessons as to how we can view sickness and, more especially, how we should treat those who are sick. The whole world witnessed how St John Paul II suffered from this debilitating sickness during the final decade of his life. During this frail phase of his life, he identified himself with the suffering humanity in a very noble way. In the year 1992 he established the World Day of the Sick. He declared February 11, the Feast of our Lady of Lourdes, as a special day to remember the sick people the world over.

It is no surprise that the Feast of our Lady of Lourdes was selected as this special Day, since millions of sick people have flocked to our Lady of Lourdes for more than 160 years. (This Sunday marks the 166th anniversary of Mother Mary appearing to Bernadette Soubirous on 11 February, 1858.) It was in 1862, Pope Pius IX authorized Bishop Bertrand-Sévère Laurence to permit the veneration of the Blessed Virgin Mary in Lourdes.
Today, we also celebrate the 32nd World Day of the Sick. Is it appropriate to say that we ‘celebrate’ the World Day of the Sick? Yes, it is. We don’t celebrate sickness, but we can, and, must celebrate the courage and faith of those who are sick as well as the dedication and love shown by so many others who take care of the sick.

Soon we shall be celebrating Ash Wednesday, which, this year, falls on February 14th, Valentine’s Day. It is a pity that many of the meaningful Days like the Valentine’s Day, Mother’s Day, Father’s Day and Friendship Day … have been hijacked and misappropriated by the commercial, advertising world. The original purpose of these days – namely, the celebration of gratitude for parental care, conjugal love and friendship – has been buried under the heap of flowers, greeting cards, and gifts! The commercial world won; and we, the people, lost! Fortunately, the commercial world has not set its eyes on the World Day of the Sick. It probably will not, since this day does not offer an opportunity for promoting merchandise.

Similarly, there was another day that passed, unnoticed by the commercial world. That was the World Leprosy Day. World Leprosy Day is observed internationally every year on the last Sunday of January to increase the public awareness of leprosy or Hansen's Disease. This date was chosen by French humanitarian Raoul Follereau as a tribute to the life of Mahatma Gandhi (who died on January 30) who had compassion for people afflicted with leprosy. The day began to be observed in 1954. (Wikipedia) This year we celebrated World Leprosy Day on January 28.  This Sunday’s Liturgy invites us to think of the Sick, especially those who are sick with the dreaded disease called Leprosy.

In my Sunday Reflections, I usually take Biblical passages from the Revised Standard Version (RSV). Today I am quoting from the Contemporary English Version (CEV) for reasons I shall explain.
Here are the first three verses of today’s gospel passage from CEV:
A man with leprosy came to Jesus and knelt down. He begged, "You have the power to make me well, if only you wanted to." Jesus felt sorry for the man. So he put his hand on him and said, "I want to! Now you are well." At once the man's leprosy disappeared, and he was well. (Mark 1: 40-42)

Why did I choose CEV over RSV? Obviously, because of the opening line. While CEV identifies the sick person as ‘a man with leprosy’, RSV identifies him as ‘a leper’. There is a world of difference between the expressions – ‘leper’ and ‘man with leprosy’ or ‘leprosy patient’. The word ‘leper’ talks of what the person is… By saying that someone IS a disease, instead of saying that he/she HAS a disease, we tend to see him or her as a lesser human being or, as in the case of leprosy, no human being at all. The term ‘leprosy patient’ talks of what the person has… a human person suffering from a disease.

Why make such a big fuss about words?... you may wonder. Well, words form thoughts and we need to be careful about our vocabulary… Out of the fullness of the heart the mouth speaks… True. But, out of what our mouth keeps speaking, the heart can also be filled with right or wrong thoughts.

As human beings, we can truly feel proud about the progress we have made in the diagnosis as well as the treatment of leprosy or Hansen’s disease. We can also feel proud about the way we have brushed up our vocabulary regarding those afflicted with this disease. We have become much more sensitive and therefore more respectful in labelling these persons who are sick with leprosy. Contemporary English has progressed in being more gender-sensitive and more sensitive towards those who are sick. We no longer use terms like chairman, housewife, blind, deaf, handicapped, leper etc. From this perspective, the Gospel today is Good News – not only in terms of its content but also in terms of its form. We need to search within ourselves and see whether the ‘form’ (namely, the words) we use is only a matter of lip-service or does it also indicate a change in our inner attitude.

Turning our attention to the content of today’s gospel, we admire the courage of the man with leprosy who took the risk of coming before Jesus. The plight of a leprosy patient was very tragic among the Israelites. This is explained in today’s first reading from Leviticus 13:1-2, 44-46. When this person had to come into the town, he had to shout ‘unclean, unclean’ and warn the others so that they kept away from him. If by chance someone was touched by the leprosy patient or if someone touched this person, he / she became impure… For such accidental contacts the leprosy patient might have been punished… even, stoned to death. The Mosaic rules were harsh and the strict observance imposed by the religious leaders made them very inhuman.

Let us imagine the scene presented in today’s Gospel. The leprosy patient must have known about the whereabouts of Jesus and wanted to meet him. So, he had to come into town shouting ‘unclean, unclean’. The people standing around Jesus, as soon as they heard the shouting, must have backed off in horror. But, Jesus stood where he was and allowed the leprosy patient to come to him. Then, Jesus did the unthinkable. He broke the Mosaic law and touched the leprosy patient, thus making himself impure and even an outcast. Jesus was not keen on shocking the people just for the sake of shocking. He wanted the healing of not only the leprosy patient but also the crowd around Him.

Last week and this week we have been reflecting on the healing miracles of Jesus. Last week we said that the healing of a person begins with one’s personal belief of getting cured. Without this belief, cure is not possible. Similarly, in today’s gospel, we see that if a person is given his / her human dignity, then full healing is possible.

Although our present world claims that leprosy has been eradicated, there are still thousands of people suffering from this dreaded disease. They still face open rejection and subtle discrimination from the rest of us. All of us have gone through the painful experiences of ‘social distance’ and ‘isolation’ during the COVID-19 pandemic. Not only this virus, but the viruses of casteism and racism have created unjust and insane divisions by which some sections of the human family are denied basic human dignity.

Pope Francis has published his message for the 32nd World Day of the Sick (11, February, 2024) with the theme: “It is not good that man should be alone” - Healing the Sick by Healing Relationships. It may be a great help for all of us to read the full message (just a page and a half) of the Pope: https://www.vatican.va/content/francesco/en/messages/sick/documents/20240110-giornata-malato.html
Here are a few excerpts from this message for our reflection: 
  • I think of all those who found themselves terribly alone during the Covid-19 pandemic: the patients who could not receive visitors… 
  • I share too in the pain, suffering and isolation felt by those who, because of war and its tragic consequences, are left without support and assistance. War is the most terrible of social diseases, and it takes its greatest toll on those who are most vulnerable. 
  • At the same time, it needs to be said that even in countries that enjoy peace and greater resources, old age and sickness are frequently experienced in solitude and, at times, even in abandonment. This grim reality is mainly a consequence of the culture of individualism… 
  • Let us remember this central truth in life: we came into the world because someone welcomed us; we were made for love; and we are called to communion and fraternity. This aspect of our lives is what sustains us, above all at times of illness and vulnerability. It is also the first therapy that we must all adopt in order to heal the diseases of the society in which we live.
Through the intercession of Our Lady of Lourdes, let us pray, that all of us experience God’s healing touch on each of us. May our Mother, Health of the Sick, guard and protect especially those who suffer not only physical illness, but the pain of social discrimination and isolation!

Jesus healing the leprosy patient

பொதுக்காலம் 6ம் ஞாயிறு
நோயாளரின் உலக நாள்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், பார்கின்சன்ஸ் (Parkinson’s) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை, 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தான் ஒரு நோயாளர் என்பதை உணர்ந்ததும், நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே அவர் இணைத்துக்கொண்டார். நோயுற்றோரை மையப்படுத்தி, 1992ம் ஆண்டு, நோயாளரின் உலக நாளை அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று, இந்த உலகநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி, இந்த ஞாயிறு, 32வது முறையாக, நோயாளரின் உலக நாளை நாம் சிறப்பிக்கின்றோம்.

நோயாளருக்கென ஓர் உலக நாளை அர்ப்பணிப்பது குறித்து, நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்கள் பெருமளவு நம் மனதில் உருவாவதால், இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். நோயை நாம் கொண்டாடவில்லை, மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, இவற்றையும், நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு  இவற்றையும், நாம் கொண்டாடுகிறோம்.
பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், இந்த நோயோடு, தன் வாழ்வின் இறுதி 14 ஆண்டுகள் எவ்விதம் வாழ்ந்தார் என்பதையும், நோயுற்றோர் பலருக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் மற்றொரு நிகழ்வை, இந்த ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.

நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான முதல் படி, தான் நலமடைவோம் என்று, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இந்தக் கருத்தை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். நமது நம்பிக்கையின் ஊற்றான இறைவனை நாடிவருவதால் குணமடைகிறோம் என்பதை, ஒரு மருத்துவரே தெளிவாகக் கூறியுள்ளார்.
ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியர், கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் மிக அதிக அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் மிச்செல் அவரிடம் சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே, நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார். இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.
ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில், நம் சிந்தனைகள் அமையவேண்டும்.

நோயாளரின் உலக நாளை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் சிறப்பித்த மற்றொரு முக்கியமான நாளும் நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி, அல்லது, அதற்கு அருகில் வரும் ஞாயிறன்று, தொழுநோயாளரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 28, ஞாயிறன்று, நாம் தொழுநோயாளரின் உலக நாளைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் இதோ: ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். (மாற்கு நற்செய்தி 1:40-42)
இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, ஆண்டவர் வழங்கும் நற்செய்தி என்று, உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்வைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், நல்ல செய்திதான். அந்த சொற்களைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில் உருவான மனமாற்றம்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் விவிலியத்தில், இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு, இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால் நாம் அடைந்துள்ள மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம். 1986 வெளியான விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும் என்று வேண்டினான். (மாற்கு 1:40)
இதே இறைவாக்கியம், 1995 வெளியான விவிலியப் பதிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். (மாற்கு 1:40)

பழைய விவிலியப் பதிப்பில் தொழுநோயாளியைச் சுட்டிக்காட்ட, அவன்’, என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளரை, அவர்’, என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். தொழுநோயாளரை, ஒரு மனிதராக மதித்து, அவருக்குரிய மரியாதையை வழங்குவது, நாம் அண்மைய ஆண்டுகளில் பின்பற்றும் அழகான முன்னேற்றம்.

தொழுநோய், தொழுநோயாளர் என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில், தொழுநோயாளர் என்ற சொல்லுக்குப் பதில் குஷ்டரோகி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்தில், leper என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
குஷ்டரோகி என்பதற்கும், ‘தொழுநோயாளர் என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. வெறும் சொற்களில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல. மாறாக, அவர்களைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை, அச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போது, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியானச் சொற்களைப் பயன்படுத்தும் அளவு நாம் பக்குவமடைந்துள்ளோம்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். ஒருவரை நாம் எவ்வித வார்த்தைகள் கொண்டு அழைக்கிறோம் என்பதிலேயே, அவரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் மதிப்பு, அல்லது, அவமதிப்பு ஆகியவை தெளிவாகத் தெரிந்துவிடும். ஒருவரை, குஷ்டரோகி என்று சொல்லும்போது, அவர் அந்த நோயாகவே மாறிவிட்டதைப்போன்ற உணர்வு எழுகிறது. அதற்குப் பதில், அவரை, தொழுநோயாளர் என்று சொல்லும்போது, சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவர் அந்த நோயில் துன்புறுவதை ஏற்றுக்கொள்கிறோம். அப்படிப்பட்ட புரிதலில், அவரைப்பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும்.
சாதிய மடமை என்ற நோயால் துன்புறும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு, அவர்களுக்கென்று உரிய பெயரை மறந்துவிட்டு, அல்லது, மறுத்துவிட்டு, அவர்கள் பிறந்த சாதியை அவர்களது அடையாளமாக மாற்றிவிடுகிறோம். இந்தியாவின் சாபக்கேடாக விளங்கும் இந்தச் சமுதாயக் குற்றத்திற்கு, இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

முத்திரைகள் குத்தி, மக்களைப் பிரிப்பதில் யூத மதத் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். நோயுற்றோரை, இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று அவர்கள் தீர்மானித்தனர். அதிலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனிதர்களுடன் வாழத் தகுதியற்ற பெரும் பாவிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது. தொழுநோய் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டிய கொடுமைகளை, இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். (லேவியர் 13:44-46)

இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளர்களை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்கவேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், தீட்டு, தீட்டு, என குரலெழுப்பியவாறு வரவேண்டும். அதைக் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்க்கவேண்டும். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில், அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்தக் கோபம், வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு, கொல்லப்படலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும், அந்தத் தொழுநோயாளி, இயேசுவை அணுகிச் சென்றார். அந்த நம்பிக்கையே, அவர் குணமடைந்ததற்கு முதல் படியாக அமைந்தது.

இயேசு, தூரத்தில் நின்றபடி, அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளரைத் தொட்டார். இயேசு இவ்வாறு செய்தது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். மதத் தலைவர்கள் தவறாகக் கற்பிக்கும் சட்டங்களால் கட்டுண்டு, மனிதர்களை, விலங்குகளிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியின் உடலைத் தொட்டு குணமாக்கிய இயேசு, சூழ இருந்தவர்களின், மனதைத் தொட்டு, குணமாக்க முயன்றார்.

மூன்றாவது வாரமாக, இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டுவருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையான மற்றொரு முக்கிய வழி என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

இன்றைய உலகில், தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நாம் கூறிவந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த பயங்கர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் வெளிப்படையான நிராகரிப்பு மற்றும் மறைமுகமான புறக்கணிப்பு ஆகியவற்றை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்றின் வேளையில், நாம் அனைவரும் 'சமூக தூரம்' மற்றும் 'தனிமைப்படுத்துதல்' ஆகியவற்றின் வேதனைகளை உணர்ந்திருக்கிறோம். கோவிட் பெருந்தொற்று மட்டுமல்ல, சாதிவெறி மற்றும் இனவெறி ஆகிய கிருமிகள் இன்னும் நம் சமுதாயத்தில் அர்த்தமற்ற பிளவுகளை உருவாக்கியுள்ளன. நம் சமுதாயத்திலிருந்து இந்நோய்கள் நீங்கவேண்டும் என்று, பிப்ரவரி 11ம் தேதி நாம் கொண்டாடும் லூர்துநகர் அன்னைமரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவோம்.

நாம் ஏற்கனவே கூறியதுபோல், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளாக மட்டுமல்லாமல், நோயாளரின் உலக நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் நோயாளரின் 32வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று" - உறவுகளை குணமாக்குவதன் வழியே, நோயுற்றோரை குணமாக்க... என்ற மையக்கருத்துடன் தன் செய்தியை வெளியிட்டுள்ளார். இச்செய்தியில் அவர் கூறும் ஒரு சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
  • கோவிட்-19 பெருந்தொற்றின்போது யாரையும் காண அனுமதியின்றி, தனித்து விடப்பட்ட நோயாளிகளை நினைத்துப் பார்க்கிறேன்.
  • போர் மற்றும் அதன் துயரமான விளைவுகளால், ஆதரவும் உதவியும் இல்லாமல் தவிப்பவர்கள் படும் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன். இன்றைய சமுதாயத்தில், போர், மிக பயங்கரமான நோய்.
  • அமைதி மற்றும் அதிக வளங்களை பெற்றிருக்கும் நாடுகளிலும், முதியோர், மற்றும் நோயுற்றோர் தனிமையிலும், ஒருசில வேளைகளில், கைவிடப்பட்ட நிலையிலும் வாழ்வதை நாம் அறிவோம். சுயநலத்தை போற்றி வளர்க்கும் நம் கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு, தனிமை என்ற இந்த நோய்.
  • வாழ்க்கையில் இந்த மைய உண்மையை நினைவில் கொள்வோம்: யாரோ நம்மை வரவேற்றதால், நாம் உலகிற்கு வந்தோம்; நாம் அன்பிற்காக படைக்கப்பட்டோம். சமுதாயத்தின் நோய்களைக் குணப்படுத்த நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முதல் சிகிச்சை, அன்பு ஒன்றே.
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை மரியாவின் பரிந்துரை வழியே, நாம் அனைவரும், உடல் நோய்கள் மற்றும், சமுதாய நோய்கள் அனைத்திலுமிருந்து நலம் பெற்று வாழ, இறையருளை இறைஞ்சுவோம்.