14 April, 2011

Our Shepherd’s name is Emmanuel ஆயனின் மறுபெயர்... எம்மானுவேல்



Last year on 29th June we began a journey and it comes to an end today after 42 weeks. Not even in the faintest of my dreams did I think that we would take 42 weeks for the journey on Psalm 23. If I sound like ‘blowing a trumpet’, I am happy about it since I am deeply aware that I am only the trumpet – rather, a flute – which the Shepherd has used to play the music all these weeks. I am also aware that the treasures hidden in each of these 6 verses and their phrases are not fully exhausted. Perhaps if we revisit this Psalm, say after a year, we can surely find more inspiration.

I am greatly indebted to Harold Kushner whose book “The Lord Is My Shepherd – Healing Wisdom of the Twenty-third Psalm” has been a great source of inspiration. Those who can, kindly get a copy of this book for your personal collection. You will not regret it! Over the 175 pages of this book (First Anchor Books Edition, September 2004), the key theme that has been emphasised by Kushner over and over again is: God is with us through thick and thin. This presence of God will not change the world dramatically, but will change us drastically if we are willing to believe! I hope I have interpreted Kushner properly.
There is no better way to conclude this series on Psalm 23 except with the words of Kushner. I have simply highlighted some of the phrases and ideas that are very inspiring for me in these lines. Here are the closing paragraphs from Harold Kushner:

The psalmist repaid God with prayers of gratitude and with acts of righteousness. But in addition, he repaid God for all of His kindness by writing a psalm, so that future generations would come to know what he had come to know about God. And this is what he has to tell us:

When we are frightened because the world is a scary place, God is with us. If He cannot always protect us from harm or from our own mistakes, He can ease our fears and our pain by being with us.

When we are exhausted because the world asks so much of us, God gives us times and places of refuge from the claims of the world, to calm and restore our souls. God renews our strength so that we can “mount up with wings as eagles” and continue tirelessly to do what is right.

When we are terrified at the prospect of losing control over our emotions and doing ourselves serious harm, God is with us to help us do things with Him at our side that we were not sure we would do alone.

When illness, bereavement, and the losses that come with age cast a shadow over our lives, God is there to fill the empty space, to remind us that shadows are cast only because the sun is shining somewhere, to take us by the hand and lead us through the valley of the shadow and into the sunlight.

When events in our world bring us dismay and we fear that evil is prospering, God reminds us that evil acts invariably carry the seeds of their own destruction.

When people disappoint us, when they cannot give us what we need, whether because our needs are too great or because their emotional resources are too meager, God is our reliable friend, an inexhaustible source of love and strength.

And when we find ourselves wandering aimlessly through the world, wondering why we are here and what our lives will have meant when they are over, God blesses us with a sense of purpose, a challenge, a list of moral obligations and opportunities, every one of which will give us the sense of living our days in His presence.

There is pain in the world. If we are to be truly alive, we cannot hide from it. But we can survive it, and God’s caring presence lessens the pain.
There is death in the world, robbing us of the ones we love and one day robbing them of our presence. But God who is immortal assures us that death may take a person out of our future but cannot remove him from our past, that all the things we loved a person for have entered so deeply into our souls that they remain part of us. The Lord gives, but the Lord does not take away, and their presence is every bit as real as their absence.
There is fear in the world. There is vulnerability and uncertainty. God cannot tell us that nothing bad will ever happen to us. But God can tell us that we need not be afraid of the future, no matter what is holds. He cannot protect you from evil without taking away from other people the human power of choosing between good and bad. He cannot protect you from illness and bad luck. He cannot spare you from death and let you and those around you live forever. But He can give you the resources to transcend and overcome those fears, so that bad luck never causes you to lose faith in humanity, so that the inevitability of death never causes you to give up on the holiness of life.
There will be dark days, days of loss and days of failure, but they will not last forever. The light will always return to chase away the darkness, the sun will always come out again after the rain, and the human spirit will always rise above failure. Fear will assault us, but we will not be afraid, “for Thou art with me.”
 
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.

 
இது 42வது வாரம்... 42வது விவிலியத் தேடல். ஆம், அன்பர்களே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருப்பாடல் 23ல் நாம் ஆரம்பித்தப் பயணம் இன்று 42 வாரங்கள் கழித்து முடிவுக்கு வருகிறது. இதை ஒரு சாதனை என்று எண்ணுவதை விட அருள் நிறைந்த பயணமாக எண்ணவே தோன்றுகிறது. இந்தத் திருப்பாடல் தேடல்களை ஆரம்பித்தபோது, என் மனதில் பத்து அல்லது பதினைந்து தேடல்கள் நமது பயணம் தொடரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஆச்சரியங்களின் பிறப்பிடமான இறைவன் The God of Surprises வேறு திட்டங்களை வைத்திருந்தார். இந்த இறுதித் தேடலில் நாம் கடந்து வந்த பாதையின் ஒரு சில பகுதிகளைத் திரும்பிப் பார்க்க உங்களை அழைக்கிறேன்.

06-07-10
நம்பிக்கை எனும் அமுதை கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் அமுத சுரபி "ஆண்டவர் என் ஆயர்" என்ற திருப்பாடல் 23 என்று சொன்னால், முற்றிலும் அது உண்மை. கவலைகள், மனவலிகள் என்று நம்மை இருள் சூழும் நேரங்களிலும், நிறைவு, நன்றி என்று நம் மனதில் ஒளி எழும் நேரங்களிலும் இந்தத் திருப்பாடலை நாம் பயன்படுத்துகிறோம். மற்ற 149 திருப்பாடல்களை விட, விவிலியத்தின் பிற பகுதிகளை விட திருப்பாடல் 23ஐ பலரும் பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?
இந்தத் திருப்பாடல் நாம் எல்லாரும் எளிதில் ஏற்கக்கூடிய ஒர் உண்மையைத் தன் ஆறு திருவசனங்களில் சொல்கிறது. அதனால்தான் இது இவ்வளவு பயன்படுகிறது. என்ன உண்மை இது? உலகில் நடக்கும் அநீதிகள், அவலங்கள் எல்லாவற்றையும் நாம் காணும் போது, அல்லது அந்தக் கொடுமைகள் நம் வாழ்வைத் தாக்கும்போது, "இறைவா நீ எங்கிருக்கிறாய்? ஏன் என்னை இந்த இருளில் தள்ளிவிட்டாய்?" என்று நம் மனதில் கேள்விகள் எழும் போது, கடவுளின் பதில் இப்படி கேட்கலாம்:
“இந்த உலகம் நீதியாக, அமைதியாக, பிரச்சனைகள் இன்றி இருக்கும் என்று நான் வாக்குறுதி தரவில்லை. மாறாக, பிரச்சனைகளை நீ சந்திக்கும் போது நான் உன்னோடு இருப்பேன் என்றுதான் நான் உறுதி கூறியுள்ளேன்.” இந்த எண்ணத்தை ஆழமாகச் சொல்கிறது இந்தத் திருப்பாடல்.
தீமைகள், துன்பங்கள் இல்லாத உலகம் என்ற உறுதியைவிட அந்தத் துன்பங்களில் கடவுளின் துணை உண்டு என்ற உறுதியைத் திருப்பாடல் 23 வழங்குவதாலேயே இது இவ்வளவு தூரம் பயன் படுத்தப் படுகிறது. புகழும் பெற்றுள்ளது. திருப்பாடல் 23 சொல்லித்தரும் இந்த வாழ்க்கைப் பாடங்களின் உதவியோடு இந்த உலகைப் பார்க்கும் போது, உலகைப் பற்றிய பல பயங்கள் குறையும். ஏனெனில் இறைவன் நம்மோடு நடந்து வருகிறார்.
"நீங்கள் இனி பயப்படவேத் தேவையில்லை... புற்று நோயில் இருப்பவர்களுக்கு திருப்பாடல் 23ன் சிந்தனைகள்" (“You Don’t Have to be Afraid Anymore: Reflections on Psalm 23 For People with Cancer” Prepared by Dr. Ken Curtis) என்று தலைப்பிடப்பட்ட DVD 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புற்று நோயில் உள்ளவர்கள் இந்தத் திருப்பாடல் மூலம் அடைந்த பயன்களை சாட்சியமாகக் கூறும் ஒரு ஆவணப் படம் இது. 104 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த ஆவணப் படம் ஒரு சில விருதுகளைப் பெற்றுள்ளது. விருதுகளுக்கு மேலாக, பல புற்று நோய் உள்ளவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.


20-07-10...

23ம் திருப்பாடலைத் தாவீது எழுதினார் என்பது பரவலான ஒரு கருத்து. இந்தப் பாடலை அவர் தன் வாழ்வின் இறுதியில் எழுதியிருக்கலாம் என்பதும் மற்றொரு பரவலானக் கருத்து.
வாழ்வின் இறுதியில், முதிர்ந்த வயதில், வாழ்வைப் பற்றியப் பல தெளிவுகள் ஏற்படும். நடந்து வந்த பாதையை மீண்டும் பார்க்கும் போது, அதில் கற்றுக் கொண்ட பாடங்களை மீண்டும் அசைபோடும் நாம், அந்தப் பாடங்களை அடுத்த சந்ததியினருக்கு வழங்க முயற்சி செய்வோம். தாவீது தன் வாழ்வுப் பாடங்களைத் திருப்பாடல்கள் வழியே தாராளமாக வழங்கிச் சென்றுள்ளார். அதுவும், திருப்பாடல் 23 என்ற ‘அணுவைத் துளைத்து, ஏழு கடலைப் புகட்டிச்’ சென்றுள்ளார்.
23ம் திருப்பாடல் ஒரு செபமா? அப்படித் தெரியவில்லை. ஓ இறைவா... என் இறைவா... என்று பல திருப்பாடல்களில் பாடலாசிரியர் இறைவனை அழைத்துப் பேசியிருப்பது போல் இந்தத் திருப்பாடலில் இறைவனைக் கூப்பிடவில்லை. ஆண்டவர் என் ஆயர் என்ற ஒரு கூற்றுடன் ஆரம்பமாகிறது இந்தப் பாடல். ஆனாலும், நாம் இந்தத் திருப்பாடலை அழகானதொரு செபமாகத்தான் பயன்படுத்துகிறோம்.
இந்தத் திருப்பாடல் புகார்களின் பட்டியலும் அல்ல. வேறு பலத் திருப்பாடல்களில் புகார்களின் பட்டியல்கள் நீளமாக உள்ளன. ஆனால், இந்தத் திருப்பாடலில் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வரிகளே அதிகம். எனவே, இதை ஒரு நன்றி நவிலல் எனக் கருதலாம்.
வழக்கமாக, விழாவொன்று நடந்தால், இறுதி நிகழ்வாக நன்றிகள் சொல்லப்படும். தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருந்த தாவீது, தன் வாழ்வை ஒரு விழாவாகப் பார்த்ததால், இந்த நன்றிப் பாடலைப் பாடினாரோ? அவர் வாழ்வு அப்படி ஒன்றும் விழாக்கோலமாய் இருந்ததைப் போல் தெரியவில்லையே. அவர் வாழ்விலும் எத்தனையோ இழப்புகள், துயரங்கள் இருந்தன. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஆயனாய் பசும் புல்வெளிகளில், காடு மலைகளில் அவர் வாழ்வு முழுவதையும் அனுபவித்திருந்தால், முழு வாழ்வும் விழக்கோலமாய் இருந்திருக்கலாம்.
அந்த மகிழ்விலிருந்து கடவுள் அவரைப் பறித்து வந்து ஓர் அரண்மனையில் சிறைப்படுத்தி வைத்ததைப் போல் அல்லவா தாவீதின் வாழ்க்கை மாறிவிட்டது!... திரும்பிய இடமெல்லாம் துன்பம் அவரைத் துரத்தித் துரத்தி வந்ததே.
தாவீது தன் வாழ்வில் நிகழ்ந்த இழப்புகள், துயரங்களை மறக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அவைகளைப் பட்டும் படாமல் "சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்குகள், எதிரிகள்.." என்று இரு இடங்களில் மட்டும் குறிப்பிட்டு விட்டு, மீதிப் பாடல் முழுவதையும் பசும்புல் வெளி, அமைதியான நீர்நிலை, புத்துயிர், நீதி வழி, உமது கோல், நெடுங்கழி, விருந்து, நறுமணத்தைலம், நிரம்பி வழியும் பாத்திரம்... என்று நன்றி உணர்வால், மகிழ்வால் நிரப்பியுள்ளார். வாழ்வின் இறுதியில், தெளிவுகள் கிடைக்கும் என்று சொன்னோமே, அதுதான் இது. தாவீதுக்குக் கிடைத்தத் தெளிவு அவரை நன்றி உணர்வால் நிறைத்தது.


இந்தத் தேடல்களில் பல கதைகளை, உண்மைச் சம்பவங்களை நாம் பகிர்ந்து வந்தோம். அவைகளில் என் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாம் சிந்தித்த Ma Li, Zhai Xiaowei, மற்றும் Kamlesh Patel ஆகிய மூன்று இளையோரைப் பற்றி நாம் சிந்தித்த அந்தப் பகுதி. விபத்துக்களாலும், பிறவியில் ஏற்பட்ட ஒரு வியாதியாலும் உடலில் குறைகளைத் தாங்கிய இந்த இளையோர் நமக்குத் தந்த பாடங்கள் இன்னும் பலருக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவர்களைப் பற்றிய இரு வீடியோக்களை நான் குறிப்பிட்டேன்.


17-08-10

இந்த வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் ஏங்குகிறது. வாய்ப்பு உள்ளவர்கள், தவறாமல் நேரம் ஒதுக்கி, இந்த இரு வீடியோக்களையும் பாருங்கள். அந்த வீடியோ பதிவுகளின் ஒரு சில மணித்துளிகளையாவது ஒலி வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆண்டவர் என் ஆயன். எனக்கேதும் குறையில்லை. என்று நாம் சொல்லும் 23ம் திருப்பாடலின் முதல் இரு வரிகளின் விளக்கத்தை வீடியோ வடிவில் அமைத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இரு வீடியோக்களும் எடுத்துக்காட்டுகள். Ma Li, Zhai Xiaowei, Kamlesh Patel என்ற இந்த மூன்று இளையோரின் நடனங்கள் உலகத்தில் குறைகளே இல்லை என்பதை இன்னும் ஆழமாய் நம்மை நம்ப வைக்கின்றன. இந்த மூன்று இளையோரின் நடனம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவர்களது பின்னணி நமக்குப் பாடமாகிறது.
இந்த மூவரின் நடனத் திறமையைக் கண்டு வியக்கும் நாம், இவர்கள் தொலைக்காட்சியில் அளித்துள்ள பேட்டிகளைக் கேட்டு இன்னும் வியக்கிறோம், பாடங்களைப் படிக்கிறோம். கம்லேஷ் சொல்லும் அழகான எண்ணங்கள் இவை:
"உடலில் குறையுள்ளவர்களுக்கு நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை நான் உடல் குறையுடன் இருந்து சொல்ல வேண்டும் என்பதைக் கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். மன உறுதிக்கும், விடா முயற்சிக்கும் முன் உடல் குறைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான் நான் உலகிற்கு, முக்கியமாக, இந்தியாவுக்குத் தரக் கூடிய நல்ல செய்தி... நடனம் ஆட, இரு கால்கள் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கோ, நடனம் ஆட கால்கள் இல்லை. கடவுள் நம்பிக்கை இருக்கிறது."
இவர்களைப் போல் உலகில் உடல் குறைகள் இருந்தும் சாதனைகள் படைத்த பல மேதைகளைப் பற்றி நமக்குத் தெரியும். Helen Kellerன் (1880 – 1968) சாதனைகள் கடந்த நூற்றாண்டின் காவியம். Ludwig van Beethovan (1770 - 1827) என்ற இசைமேதை கேட்கும் திறனை முற்றிலும் இழந்த பின்னும் அறுபுதமான இசையை உருவாக்கினார். John Milton (1608 – 1674) என்ற கவிஞர், பார்வை இழந்த பின்னும் காவியங்களை உருவாக்கினார். இந்த சாதனை வரலாறு தொடரும். தனக்கு இருப்பது குறையில்லை என்று தீர்மானிக்கும் உள்ளங்கள் இருக்கும் வரை, இந்த சாதனை வரலாறு தொடரும்.


சாதனை வரலாறு தொடரும். உள்ளத்தில் நம்பிக்கை இருக்கும் வரை, அந்த நம்பிக்கையை வளர்க்கும் திருப்பாடல் 23 இருக்கும் வரை சாதனைகள் தொடரும். மதம், விவிலியம் என்ற வேலிகளைத் தாண்டி, உலகமனைத்திலும் உள்ள மக்கள் வாழ்வில் திருப்பாடல் 23 தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
பரந்து விரிந்த புல்வெளிகளில், அமைதியான நீர்நிலைகளுக்கருகில், இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஆயனாம் இறைவன் நம்மை வழிநடத்த, நமது வாழ்வுப் பயணம் தொடரட்டும். பயணத்தின் இறுதியில் இறைவனின் இல்லத்தில், அவரது அன்பான அணைப்பில் என்றென்றும் வாழும் வரத்தை நாம் அனைவரும் பெற ஒருவர் ஒருவருக்காக வேண்டுவோம்.


இறுதியாக ஓர் எண்ணம்... ஆண்டவர் என் ஆயன் என்ற இந்த நம்பிக்கை தரும் திருப்பாடலை நாம் சிந்தித்து முடிக்கும் வேளையில், தமிழ் நாட்டில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. தமிழக மக்களை நல்வழியில் நடத்தும் நல்ல தலைவர்களை, தமிழ் நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி நடத்திச் செல்லும் தலைவர்களைத் தமிழகம் பெறவேண்டும் என்று உருக்கமாக வேண்டிக் கொள்வோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

10 April, 2011

BEYOND THE TOMB… கல்லறையைக் கடந்து...


The Desire of Ages by Ellen G. White

I am not sure how many of us would have the opportunity to read our own obituary. Alfred Nobel had one. On April 13th, 1888, when he opened the newspaper, he saw one of the headlines reading: ‘The Merchant of Death Is Dead.’ All of us know that Alfred Nobel, the famous chemist, was known more for his invention of dynamite. When Ludvig Nobel, the brother of Alfred died, the papers had mistakenly reported that Alfred had died. Perhaps they wanted him dead? What was written under that heading was not complimentary. "Dr. Alfred Nobel, who became rich by finding ways to kill more people faster than ever before, died yesterday." Alfred was disappointed with what he read and concerned with how he would be remembered. He survived his obituary for another 7 years. But, it had surely given him a perspective on life. Alfred signed his last will and testament and set aside the bulk of his estate to establish the Nobel Prizes. So, Alfred Nobel lives on in people’s memory more positively.

Today, April 10th, 2011 is exactly the 80th death anniversary of a famous poet of the twentieth century – Khalil Gibran! The words written next to Gibran's grave are: "a word I want to see written on my grave: I am alive like you, and I am standing beside you. Close your eyes and look around, you will see me in front of you ...." We know that Gibran has outlived his earthly life through his immortal poetry!

We are invited to reflect on life after our earthly life. Today’s Gospel talks of one of the most popular miracles of Jesus – the Raising of Lazarus from the dead. Jesus had raised quite many people from the dead; but the case of Lazarus was special. In the other cases (the son of Nain’s widow or the daughter of Jairus) Jesus was present soon after the person died. In the case of Lazarus, Jesus came to Bethany after four days. Among the Jews there was a belief that the soul of the buried person lingered on for three days in the grave and on the fourth day it departed forever and the body began to decay. So, when Jesus arrived at Bethany, it was really too late.

How many times in our lives we have felt that God came too late, or did not come when required! Mary and Martha expressed this to Jesus… “If you had been here, my brother would not have died.” (John 11: 21, 32) We expect God to come in a particular way and in a particular time; but God comes at an unexpected time and way. One of the most beautiful aspects of God is… Surprise… the God of Surprises!

We can pay attention to the words of Jesus spoken in front of the tomb of Lazarus. The first command of Jesus was: “Take away the stone.” (Jn. 11:39) To roll away the stone was not a big deal for Jesus. A word or a thought from him would have accomplished the task. But, Jesus wanted the people around him to do that. God would like us to do what we can, and not expect God’s intervention at every moment in our lives. The faith proclaimed by Martha began the process of this miracle. “Lord,” Martha said to Jesus, “if you had been here, my brother would not have died. But I know that even now God will give you whatever you ask.” (Jn. 11: 21-22) Jesus wanted to instil such a trust in the people standing around the tomb, who had given up on Lazarus, since it was already the fourth day. Jesus wanted to tell them, “Whether it is four days or four thousand years, God can open the graves and bring out miracles if only we trust.”

Such a trust is expressed by the Prophet Ezekiel in the first reading given in today’s liturgy. This is what the Sovereign LORD says: My people, I am going to open your graves and bring you up from them; I will bring you back to the land of Israel. Then you, my people, will know that I am the LORD, when I open your graves and bring you up from them. I will put my Spirit in you and you will live, declares the LORD. (Ez. 37: 12-14) Ezekiel speaks these inspiring words after his famous vision of the valley filled with dry bones. (Ez. 37: 1-11)

Opening the grave or rolling away the tomb stone is our job and giving life is God’s work. But, there was a problem with the rolling away of the stone. Martha expressed this problem directly to Jesus: “But, Lord,” said Martha, the sister of the dead man, “by this time there is a bad odour, for he has been there four days.” (Jn. 11: 39) Martha, although a very practical lady, was still living in the past and Jesus invited her to live in the present and in the future. Martha is an example for many of us who wish to live in the past, especially with the past hurts, unpleasant memories… We tend to carry around the dead weight of the past.

I am reminded of a story… a repulsive story, perhaps… but one with a very good lesson. In Virgil, there is an account of an ancient king, who was so unnaturally cruel in his punishments that he used to chain a dead man to a living criminal. It was impossible for the poor wretch to separate himself from his disgusting burden. The carcass was bound fast to his body -- its hands to his hands; its face to his face; the entire dead body to his living body. Then he was put into a dungeon to die suffocated by the foul emissions of the stinking dead body… (http://www.cbcisite.com/Sunday%20Homily.htm) The story is surely very repulsive. But quite many of us live with such repulsive habits… the habit of carrying the past with us… especially past hurts!

The second command of Jesus was: “Lazarus, come out!” (Jn. 11: 43) Lazarus who was buried for four days came out just as he was buried. We can surely learn to believe that many of our dreams buried deep within can come alive if only we could hear God’s call. We need to be sensitive to hear this call echoing in the tombs we have built over our dreams and hopes.

The third command of Jesus was: “Take off the grave clothes and let him go.” (Jn. 11: 44) Even though Lazarus could walk out of the tomb, he still needed the help of others to set him completely free. We need to learn how to untie the knots and chains people are bound with. If we fail to do so, there is every possibility that these persons would go back to their graves once again.

Raising people from the dead is surely not within our power… that is left to God. But we can surely do our bit… We can roll the stone away, we can untie the people who have managed to come out of their graves. If in case we are buried, we can hear God’s call and come out of our tombs.

Dear Friends, This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.

"மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்பில் 1888ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பத்திரிகையில் செய்தியொன்று வெளியானது. அந்தச் செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய இறப்புச் செய்தியை நாமே வாசிக்கும் வாய்ப்பு நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆல்பிரட் நொபெல். அவரது சகோதரர் Ludvig Nobel இறந்ததைக் குறிப்பிடுவதற்குப் பதில் ஆல்பிரட் இறந்துவிட்டதாக பத்திரிகையில் தவறான செய்தி வெளியானது. ஆல்பிரட் அந்தச் செய்தியைத் தொடர்ந்து வாசித்தார். தன்னைப் பற்றி பத்திரிகை உலகம் என்ன நினைக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டார்.

ஆல்பிரட் நொபெல் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்தி அவ்வளவு சிறப்பாக இல்லை. பல்லாயிரம் உயிர்களை கொன்று பணம் திரட்டும் ஒரு பயங்கர மனிதர் அவர் என்பதைச் செய்திகள் பல வடிவங்களில் சொல்லியிருந்தன.

நாம் இறந்தபின் நம்மைப் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்பிரட் தன்னைப் பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். வெடிமருந்தால் தான் சம்பாதித்த செல்வத்தை எல்லாம் நொபெல் விருதுகள் வழுங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால் அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். சரியாக 80 ஆண்டுகளுக்கு முன் 1931ம் ஆண்டு, இதே ஏப்ரல் மாதம் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: “என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.”

கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியில் வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). நாம் கடந்த இரு வாரங்களாய் சொன்னதுபோல், யோவான் நற்செய்தி வெறும் நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடுவதில்லை. மாறாக, அந்நிகழ்ச்சி வழியாக, ஒரு இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.

இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர விதவையின் மகன், யாயீர் என்ற தொழுகைக் கூடத்தலைவனின் மகள் என்று பலரை உயிர்ப்பித்திருக்கிறார். ஆனால், இலாசரை உயிர்ப்பித்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. மற்றவர்கள் இறந்த உடனேயே இயேசு அங்கு பிரசன்னமாகி அவர்களைச் சாவினின்று மீட்டார். இலாசரையோ நான்காம் நாள் உயிர்ப்பித்தார்.

இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்து விடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப் போக, அழிந்து போக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்." (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். (யோவான் நற்செய்தி 11: 21-22 )மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருச்சபை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி இவர்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்டு, அழிந்து போன தங்களையும், தங்கள் திருச்சபையையும் கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் இறைவன் என்ற நம்பிக்கையை வளர்க்க இலாசர் புதுமை உதவியது.

இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத் தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக் கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புத காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 திருவசனங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். “இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன் நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அவரது உயிர்ப்பின் போது இயேசுவின் கல்லறையைத் தேடி வந்த பெண்கள் அந்தக் கல்லை யார் நமக்கு அகற்றுவார்கள் என்று பேசிக் கொண்டு வந்த போது, (மாற்கு நற்செய்தி 16: 3) ஏற்கனவே கல் அகற்றப்பட்டிருந்ததல்லவா? அதே போல், இயேசு இங்கும் தன் வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு புதுமைகள் செய்தது தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். இயேசு அவர்களது அந்த அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறைக் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவைகளை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.

நம் வீடுகளில் நடக்கும் ஒரு அழகான நிகழ்ச்சியை உங்களுக்கு இங்கு நினைவுறுத்த விரும்புகிறேன். நாலு காலில் தவழும் குழந்தைகள் முதல் முறையாகத் தட்டுத் தடுமாறி எழுந்து நடக்கும் அனுபவம் நம் குடும்பங்களில் மகிழ்வான ஒரு நிகழ்வு. குழந்தை கீழே விழுந்து அழுவதும் இந்த மகிழ்வின் ஒரு பகுதி. கீழே விழும் குழந்தையைத் தூக்கி விட்டு, மீண்டும் அக்குழந்தையை நடக்கச் சொல்லி பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு பதில், குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, குழந்தையைத் தூக்கிச் சுமந்தால், குழந்தை நடை பழகவே பழகாது. அதுபோலத்தான் கடவுளும். நம்மால் இயன்றதை நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.

இயேசு அங்கிருந்தவர்களிடம் கல்லறையை மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்து விட்டது, அழிந்து விட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக் கொள்ளும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

பழங்காலத்தில் வாழ்ந்த ஓர் அரசனைப் பற்றிய ஒரு பயங்கரமான கதை இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசன் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவன். அவற்றை மக்கள் மேல் திணித்தவன். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டி விடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் சிறிதும் அசையமுடியாத வண்ணம் கட்டி, ஒரு இருண்ட குகையில் தள்ளி விடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும். இதற்கு மேல் இந்த தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.


அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இந்தச் சித்ரவதையை நம்மில் பலர் நமக்கேத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம். அல்லது, எத்தனை முறை இது போல் பிணங்களுடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம். நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து மீண்டும் வெளிவர தவக்காலமும், இன்றைய நற்செய்தியும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நமது கல்லறைகளிலிருந்து வெளியேறுவோம்.


வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ள முடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.


இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மைக் கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக் கொணர வேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.



இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

08 April, 2011

'Keep your fork …the best is yet to come.' 'நல்லவைகள் இன்னும் வரும்'


In Heaven, There Are No Litter Boxes
Published by Steve Landsburg


One of the most common uses of Psalm 23 is at a funeral Mass. Quite often this is used as a responsorial psalm. I guess the main reason for this is due to the last verse: “I shall dwell in the house of the Lord all the days of my life (forever).”

Death is looked at from various angles. Quite many stories and imageries are used for this inevitable end of human life. In most cultures and religions death is talked about in terms of ‘going home’ or ‘reaching the other shore.’ In the Christian liturgy we use a prayer that for God’s faithful life is changed not ended and when this earthly dwelling is gone we receive a permanent dwelling place in Heaven. These lines are an echo of what St Paul has written in his Second Letter to the Corinthians: For we know that if the earthly tent we live in is destroyed, we have a building from God, an eternal house in heaven, not built by human hands… Therefore we are always confident and know that as long as we are at home in the body we are away from the Lord. For we live by faith, not by sight. We are confident, I say, and would prefer to be away from the body and at home with the Lord. (II Cor. 5: 1, 6-8)

While searching for thoughts on death, I came across this lovely quote, an Eskimo proverb. I was quite stunned by the poetry in how this proverb looks at stars: “Perhaps they are not stars, but rather openings in heaven where the love of our lost ones pours through and shines down upon us to let us know they are happy.” - Eskimo proverb

Here is a lovely story I received from my sister in email last week. It gave me a very different perspective on death and on the life to come. There was a young woman who had been diagnosed with a terminal illness and had been given three months to live. So as she was getting her things 'in order,' she contacted her Pastor and had him come to her house to discuss certain aspects of her final wishes. She told him which songs she wanted sung at the service, what scriptures she would like read, and what outfit she wanted to be buried in. Everything was in order and the Pastor was preparing to leave when the young woman suddenly remembered something very important to her. 'There's one more thing,' she said excitedly.. 'What's that?' came the Pastor's reply. 'This is very important,' the young woman continued. 'I want to be buried with a fork in my right hand.' The Pastor stood looking at the young woman, not knowing quite what to say. ‘That surprises you, doesn't it?’ the young woman asked. 'Well, to be honest, I'm puzzled by the request,' said the Pastor. The young woman explained. 'My grandmother once told me this story, and from that time on I have always tried to pass along its message to those I love and those who are in need of encouragement. In all my years of attending socials and dinners, I always remember that when the dishes of the main course were being cleared, someone would inevitably lean over and say, 'Keep your fork.' It was my favorite part because I knew that something better was coming...like velvety chocolate cake or deep-dish apple pie. Something wonderful, and with substance!' So, I just want people to see me there in that casket with a fork in my hand and I want them to wonder 'What's with the fork?' Then I want you to tell them: 'Keep your fork ..the best is yet to come.' The Pastor's eyes welled up with tears of joy as he hugged the young woman good-bye. He knew this would be one of the last times he would see her before her death. But he also knew that the young woman had a better grasp of heaven than he did. She had a better grasp of what heaven would be like than many people twice her age, with twice as much experience and knowledge. She KNEW that something better was coming. At the funeral people were walking by the young woman's casket and they saw the cloak she was wearing and the fork placed in her right hand.. Over and over, the Pastor heard the question, 'What's with the fork?' And over and over he smiled. During his message, the Pastor told the people of the conversation he had with the young woman shortly before she died. He also told them about the fork and about what it symbolized to her. He told the people how he could not stop thinking about the fork and told them that they probably would not be able to stop thinking about it either. He was right. So the next time you reach down for your fork let it remind you, ever so gently, that the best is yet to come.

Sometimes there is a fierce debate as to whether we just wait for heaven to come to us after we are dead or do we create heaven on earth. Negro Spirituals are songs composed by the African American slaves while they suffered horrible tortures. These songs usually gave them some hope that the best things were yet to come. The psalmist talks about the house of God in the future… I shall dwell in the house of the Lord!

As against this futuristic heaven, there were thoughts – mostly from liberation theology – that we are called to create heaven here on earth and not wait for ‘the pie in sky when we die.’ The author of the Twenty-third Psalm, who has been meditating on all the good things that God does for him, has saved the best for the last. God has said to him… You have found Me, and I will not abandon you. Like the shepherd who watches his flock by day and at night, I will be with you in sunshine and in shadow, in happy times and in tragic times. My house is your home. (Harold Kushner)

Dear Friends, This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.

கிறிஸ்தவ அடக்கச் சடங்குகளில் அல்லது திருப்பலியில் திருப்பாடல் 23 பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இத்திருப்பாடலின் இறுதி வரிகளான "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள், (என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்" என்ற ஆறுதலான வரிகள். அமைதியும், நம்பிக்கையும் தரும் வரிகள். மரணத்தைப் பல கோணங்களில் இருந்து நாம் பார்க்கலாம். பல உருவகங்களால் விவரிக்கலாம். பல மதங்களில் மரணத்தைக் குறிக்கும் பொதுவான இரு உருவகங்கள் வீடு சேர்வது அல்லது கரை சேர்வது. இவ்விரு உருவகங்களில் அழுத்தமாக ஒலிக்கும் ஒரு கருத்து... நிம்மதி, நிறைவு.

கிறிஸ்தவ அடக்கச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஓர் அழகிய செபம் என் நினைவுக்கு வருகிறது. "இறைவா, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை." இந்த மாற்றத்தைப் பல உருவகங்களில் நாம் சிந்திக்கலாம். இந்த உலக வாழ்வு ஒரு பயணம்; விண்ணகம் நாம் சென்றடைய வேண்டிய இடம். இந்த உலகம் நாம் வாழும் ஒரு வாடகை வீடு; விண்ணகம் நாம் வாழப்போகும் நிரந்தர வீடு. இந்த உலக வாழ்க்கை ஓர் இரவு விளக்கு. விண்ணகம் காலைப் பொழுது. காலைப் பொழுது விடிந்துவிட்டால், இரவு விளக்கை அணைத்து விடுகிறோமே, அதுதான் மரணம். எஸ்கிமோ மக்கள் மத்தியில் விண்ணகம் பற்றி ஓர் அழகிய பழமொழி கூறப்படுகிறது. வானில் மின்னும் விண்மீன்களை அவர்கள் வித்தியாசமாகப் பார்த்துள்ளனர். "வானத்தில் மின்னுவது விண்மீன்கள் அல்ல. நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள அன்புள்ளங்கள் விண்ணகத்திலிருந்து மகிழ்வோடு நம்மீது தங்கள் அன்பைப் பொழிய அவர்கள் ஏற்படுத்தியுள்ள இடைவெளிகளே விண்மீன்களாய் மின்னுகின்றன." “Perhaps they are not stars, but rather openings in heaven where the love of our lost ones pours through and shines down upon us to let us know they are happy.” - Eskimo proverb இவ்விதம், மரணத்திற்கு, இவ்வுலக வாழ்வுக்கு, மறு உலக வாழ்வுக்கு, விண்ணகத்திற்கு நாம் கூறும் பல அழகிய உருவகங்கள் உள்ளன.

உருவகங்கள் மட்டுமல்ல, மரணம், அதன்பின் வரும் விண்ணகம், இறைவனின் இல்லம் இவற்றைப்பற்றி பல கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம். கடந்த வாரம் மின்னஞ்சலில் எனக்கு வந்திருந்த ஒரு கதை மரணத்தைப் பற்றிய மற்றொரு அழகான கருத்தை எனக்கு உணர்த்தியது. இதோ அக்கதை:

இளம் பெண் ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இன்னும் ஒரு வாரம் வாழ்வதே கடினம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். செய்தி கேட்டு, அந்த இளம்பெண் மனமுடைந்து போனாலும், விரைவில் தெளிவு பெற்றார். தன் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையானவற்றை அவரே முடிவு செய்தார். பங்குத் தந்தையை அழைத்து, தன் முடிவுகளைத் தெரிவித்தார். தன் அடக்கத் திருப்பலியில் என்னென்ன வாசகங்கள் வாசிக்க வேண்டும், தனக்குப் பிடித்தமான பாடல்கள் என்னென்ன பாடவேண்டும் என்று அவரிடம் கூறினார். அவைகளையெல்லாம் பங்குத்தந்தை குறித்துக் கொண்டார். அவர் கிளம்பும் நேரத்தில், அந்த இளம்பெண் அவரிடம், "சாமி, ஒரு முக்கிய விஷயம்..." என்றார். குரு நின்றார். "என்னைச் சவப்பெட்டியில் வைத்தபின், என் வலது கையில் ஒரு முள்கரண்டியையும் வைக்க வேண்டும்." என்று அந்தப் பெண் சொன்னதும், குரு குழப்பத்துடன், ஆச்சரியத்துடன் அப்பெண்ணைப் பார்த்தார். இளம்பெண் தன் புதிரை விளக்கினார்: "என் பாட்டி என்னிடம் ஒரு அனுபவத்தைக் கூறி, அதன் கருத்தையும் கூறினார். நானும் என் நண்பர்கள் மத்தியில் இந்த கருத்தை அடிக்கடி கூறியுள்ளேன். பாட்டி எனக்குச் சொல்லித் தந்தது இதுதான். விருந்து நடக்கும்போது, நாம் சாப்பிட்ட தட்டுகளை எடுத்துச் செல்வர். அப்போது, 'உங்கள் முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்' 'Keep the fork' என்று யாராவது சொன்னால், ஒரு தனி ஆனந்தம் வரும். அதாவது, இன்னும் சுவையுள்ள உணவு வகைகள் வரவிருக்கின்றன என்பதன் மறைமுகமான அறிவிப்பே 'முள்கரண்டியை வைத்துக் கொள்ளுங்கள்' என்ற அன்புக் கட்டளை. வாழ்க்கையோடு இந்த அனுபவத்தை ஒப்புமைப்படுத்தி 'நல்லவைகள் இன்னும் வரும்' என்ற எதிர்பாப்புடன் வாழ்வதே மகிழ்வான வாழ்க்கை என்று என் பாட்டி எனக்குச் சொல்லித் தந்தார். நான் சவப்பெட்டியில் படுத்திருக்கும்போது, என் கையில் உள்ள முள்கரண்டி பலருக்குக் கேள்வியை எழுப்பும். அவர்களுக்கு நீங்கள் இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்.... 'நல்லவைகள் இன்னும் வரும், அதனால், முள்கரண்டியை வைத்திருங்கள்' என்று நான் சொன்னதாக என் அடக்கத்திற்கு வரும் அனைவருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் சாமி..." என்று அந்த இளம்பெண் விளக்கியபோது, பங்குத்தந்தையின் கண்களில் கண்ணீர் மல்கியது.

தான் பல ஆண்டுகள் மரணத்தைப் பற்றி படித்தது, சிந்தித்தது, தியானித்தது எல்லாவற்றையும் விட, இந்த இளம் பெண் மரணத்தைப் பற்றி சொன்ன அந்த எளிய, அற்புதமான எண்ணங்கள் அவரை அதிகம் பாதித்தன. 'நல்லவைகள் இன்னும் வரும், எனவே முள்கரண்டியை வைத்திருங்கள்.' என்பதே அந்தப் பெண்ணின் அடக்கத் திருப்பலியில் பங்குத் தந்தை சொன்ன ஒரே செய்தியாக இருந்தது. கேட்ட அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. இளவயதிலேயே அந்தப் பெண்ணை இழந்ததால் உண்டான சோகமும், அந்தப் பெண் விட்டுச் சென்ற செய்தியின் ஆழத்தை உணர்ந்ததால் உண்டான மகிழ்வும் அவர்கள் கண்ணீரில் கலந்திருந்தன.

மரணம் வாழ்வின் மறுகரைக்கு நம்மை அழைத்துச் செல்லும். அங்கு, இறைவனின் இல்லம் செல்லும்போது, கையில் முள்கரண்டியை எடுத்துச் செல்லும் மனநிலையோடு 'இன்னும் நல்லவைகள் நமக்குக் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்புடன் நாம் அந்த இல்லத்தில் நெடுநாள் வாழச் செல்வோமே!

இந்த விண்ணகம், இறைவனின் இல்லம் மரணத்திற்குப் பின்தான் நம்மை வந்து சேருமா? அல்லது இந்த உலகிலேயே இந்த இல்லத்தை, அங்கு வாழும் ஒரு நிறைவான வாழ்வை நாம் உணர முடியுமா? மண்ணில் விண்ணகத்தைக் கொண்டு வர முடியுமா? அல்லது, மண் நம்மை மூடி மறைத்தபின்னரே விண்ணகம் தோன்றுமா? இந்தக் கேள்விகள் பல சவால்களை எழுப்பியுள்ளன. திருப்பாடலின் ஆசிரியர் இந்த வரியில் "நானும் ... வாழ்ந்திருப்பேன்." என்று கூறியிருப்பது, எதிர்காலத்தில் நடக்க விருக்கும் ஒரு கனவாக ஒலிக்கிறது.

இதுபோன்ற மறுவாழ்வின் கனவுகள் பல கறுப்பின மக்களின் பாடல்களாய் உருபெற்றுள்ளன. அமெரிக்காவில் அடிமைத் தளைகளில் அதிகம் துன்புற்ற இவர்கள் Negro Spiritual என்ற ஒரு வகைப் பாடல்களைப் பாடி தங்கள் துன்பங்களுக்கு விடை தேடினர் என்று சொல்லப்படுகிறது. விடை எதுவும் கிடைக்காதபோதும், இந்தப் பாடல்கள் நம்பிக்கை தந்தன. இவை புரட்சிப் பாடல்கள் அல்ல, மாறாக, இறைவன் இருக்கிறார்...அவர் பார்த்துக் கொள்வார்... அவரிடம் நான் செல்லும் நாளுக்காக ஏங்கியிருக்கிறேன்... என்ற கருத்துக்கள் அடங்கிய அழகானப் பாடல்கள். இந்த உலகில் எது நடந்தாலும், உன் கண்கள் அடுத்த உலகின் மீது பதியட்டும். அப்போது நீ இப்போது படும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்ற கருத்தோட்டம் இது. இதையே பவுல் அடியாரும் தன் திருமுகங்களில் கூறியுள்ளார்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4 : 8-9, நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை: குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப் படுவதில்லை: வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5 : 1, 6, 8 நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!... ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம்...இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.

இறைவனின் இல்லம் இனி வரும்; அதுவரை காத்திருப்போம் என்ற கனவால் உலகில் நடக்கும் தீமைகளை, அநீதிகளைத் தட்டிக் கேட்காமல் இருப்பதா? என்ற கேள்வி எழுகிறது. இறந்தபின் அடுத்த உலகில் நான் மகிழ்வாக இருப்பேன் என்பதற்காக, இந்த உலகில் நான் தினமும் சாக வேண்டுமா? இதுதான் கடவுளின் விருப்பமா? என்ற கேள்விகள் எழுகின்றன. விடுதலை இறையியல் என்ற கண்ணோட்டத்தில் வேறுபட்ட எண்ணங்கள் சொல்லப்பட்டன. மறு உலகில் கிடைக்கப்போகும் இறைவனின் இல்லத்தை, இறைவனின் அரசை இந்த உலகிலேயே கட்டியெழுப்பவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணங்களும் இன்று நம்மிடையே அதிகம் உள்ளன.

இறைவனின் அரசை, அல்லது அவரது இல்லத்தை காத்திருந்து மறு உலகில் பெறுவதானாலும் சரி, இவ்வுலகில், இப்போதே கட்டி எழுப்புவதானாலும் சரி, அந்த முயற்சிகள் முதலில் நம் உள்ளங்களில் இருந்து ஆரம்பமாக வேண்டும்.

ஒரு கதை, நாடகம் அல்லது திரைப்படம் இவற்றில் இறுதிப் பகுதிதான் மிகச் சிறந்த பகுதியாக இருக்கும். நல்லதொரு, சுகமான முடிவை நோக்கிச் செல்லும் கதையில் இந்த இறுதிப் பகுதியை வாசிக்கும்போது, அல்லது பார்க்கும்போது மனதில் ஒரு நிறைவு தெரியும். கதையின் பெரும் பகுதியில் கோபம், சோகம், குழப்பம், படபடப்பு என்று பல உணர்வுகளை நாம் அடைந்திருந்தாலும், இந்த இறுதிப் பகுதியில் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, மனம் மகிழ்வில் நிறையும்.

திருப்பாடல் 23ன் இறுதியில் இத்தகையதொரு உணர்வை நாம் பெறுகிறோம். இப்பாடல் முழுவதுமே அழகிய பல எண்ணங்கள் ஒவ்வொரு திருவசனத்திலும் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த இறுதித் திருவசனத்தில், அதிலும் சிறப்பாக இந்த இறுதி வரியில் மிக உன்னதமான, உயர்ந்த எண்ணங்கள் சொல்லப்பட்டுள்ளன. "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள், (என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்"

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

03 April, 2011

CHECKING OUR PERSPECTIVE… களங்கமற்ற பார்வை பெற வேண்டும்...



Last Sunday we reflected on the gospel passage of Jesus talking to a Samaritan woman (John 4: 5-42)). The focus of that passage was ‘water’. Today we have another passage from John (John 9: 1-41) which invites us to reflect on ‘light’ – especially the light within. Let me begin with a short story and the subsequent reflection from Fr Joseph A.Pellegrino.

A man had just sat down at his desk to begin the working day when one of his associates came storming into his office. "You won't believe this," he said. "I was just almost killed outside. I had just walked out of the deli where I buy my egg sandwich every morning. Suddenly a police car came down the street with its lights flashing and sirens blaring. The police were chasing another car. The other car stopped right in front of me. The guys jumped out and began shooting at the police. I hit the ground and could hear bullets buzzing over my head. I'm telling you, I'm lucky to be alive." After a moment of silence the first man said: "You eat an egg sandwich every morning?"

The point of the story … is that we can become so involved in our own narrow interests that we miss the obvious. This Sunday’s Gospel illustrates the destructiveness of such narrowness. Jesus had just healed a blind man, "to let God's work shine forth." But by doing this he threatened the comfortable ordered life of the Jewish leaders. How could God possibly be working through someone other than them? If people were to claim God's work outside of their structure, then their authority was being threatened. They missed the fact that God was indeed working. They were more concerned with the minor part. He was working, but not through them. They focused on the egg sandwich instead of the whole picture of what was taking place. So, these leaders sought some way to discredit what he had done. They condemned Jesus for working on the Sabbath. Even though it was a sign of the presence of the Messiah that sight would be given to the blind, and even though the man's parents testified that he was indeed born blind, they refused to see the presence of God among them. By the end of the reading it is clear that they are blind. (Called from Darkness to Light - http://www.st.ignatius.net/03-02-08.html)


Last week we mentioned that John’s Gospel is more of a theological treatise than a mere compilation of incidents in Jesus’ life. One of the favourite themes recurring in John’s gospel as well as his letters is LIGHT, perhaps, next to his most favourite theme – Love! In today’s gospel passage, we see John contrasting the visually challenged person, gaining not only the physical sight but inner light, with the Pharisees, born with good eye-sight but slowly losing their inner light.

Between these two contrasting streams of thought, John gives us other minor points to reflect on… The first one is that the man born blind, after his cure, was not recognised by the others. His neighbours and those who had formerly seen him begging asked, “Isn’t this the same man who used to sit and beg?” Some claimed that he was. Others said, “No, he only looks like him.” But he himself insisted, “I am the man.” (John 9: 8-9) People who had seen him blind and begging could not see him (recognise him) when he was all right. Perhaps the touch of Jesus had worked such a transformation in him that he was not recognised. This does happen to many people who have experienced the divine touch.

The transformed beggar was happy to bear witness to the miracle, least expecting that this would lead to trouble. The trouble came in the form of the Pharisees. John’s detailed narration about the conversation between the healed man and the Pharisees is a master stroke that brings out the stark contrast between those who are willing to see and those who refuse to see. The man born blind had not seen his parents or the Pharisees from his birth. This was the first time he saw them. They must have presented a pathetic sight to this man. He must have pitied his parents who were not willing to open their eyes to the full truth. It was much more pitiable for him to see the Pharisees. Being so close to God and the Temple, how could they not see the finger of God in this miracle, he must have wondered. Refusing to see the light or willing to see only partially is a common weakness among us.


Let us close our reflections with a short story that I shared sometime ago. Husband and wife move into a new house. The next day morning, the lady sips her coffee and sees through her glass window the backyard of the next house. She then calls her husband and tells him, “Oh, our neighbour doesn’t know how to wash clothes. See, how dirty they are.” This complaint goes on for three days. On the fourth day, the lady is surprised to see the washed clothes all spotless and clean. She calls her husband and says: “Our neighbour must have heard my comments. Today she has done a good job. See, how clean those clothes are!” The husband said, “Honey, this morning I cleaned our window panes.”

Lent is a good time to check our perspective. We pray God that we may see better.


Dear Friends, This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


சேகர், செந்தில் என்ற இரு நண்பர்கள் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்தனர். ஒரு நாள் மதியஉணவு இடைவேளை முடிந்து, சேகர் அலுவலகத்திற்கு தலைதெறிக்க ஓடி வந்தான். அங்கு அமர்ந்திருந்த செந்திலிடம், "நான் எதிர்ல இருக்கிற ஹோட்டல்ல பிரியாணி சாப்டுட்டு வெளியே வந்தப்ப, ஒரு கார் என்மேல மோதுறது மாதிரி வந்து ப்ரேக் போட்டது. அந்தக் காரைத் துரத்திகிட்டு ஒரு போலிஸ் ஜீப் வந்தது. கார்ல இருந்து மூணு பேர் முகமூடி போட்டுக்கிட்டு எறங்குனாங்க. அவங்க வச்சிருந்த துப்பாக்கியால சரமாரியா சுட ஆரம்பிச்சாங்க. நான் அப்படியே ரோட்ல குப்புற படுத்துகிட்டேன். எனக்கு உயிரே போயிடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க கார்ல ஏறி போயிட்டாங்க. நானும் தப்பிச்சோம், பொழச்சோம்னு வந்து சேர்ந்தேன்" என்று சேகர் பபடப்புடன் சொல்லி முடித்தான். செந்தில் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் சேகரிடம், "அப்ப, நீ என்ன விட்டுட்டு, ஹோட்டலுக்குப் போய் பிரியாணி சாப்டுட்டு வந்திருக்க. அப்படித்தானே?" என்று கேட்டான்.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில் நகைச்சுவை வெறும் சிரிப்புக்காக மட்டுமல்ல. சிந்தனைக்கும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில் செந்திலின் கடைசிக் கேள்வி நம்மைச் சிரிக்க வைத்தாலும், சுருக்கென்று ஒரு ஊசியையும் நம் மனதில் ஏற்றுகிறது. தான் செத்துப் பிழைத்து வந்ததைப் பற்றி சேகர் சொல்லிக்கொண்டிருக்கும்போது, செந்திலின் கவனத்தை ஈர்த்ததெல்லாம் சேகர் சாப்பிட்ட பிரியாணி. அதுவும் தன்னை விட்டுவிட்டுத் அவன் தனியே சென்று சாப்பிட்ட பிரியாணி. செந்திலின் குறுகியப் பார்வையே அவனது கேள்விக்குக் காரணம்.

உடல் அளவில் முழுமையான பார்வைத் திறன் கொண்ட நாம், பலமுறை அகத்தில் குறுகிய பார்வை கொண்டிருக்கிறோம், அல்லது அகக்கண்களை இழந்திருக்கிறோம். நம் அகக்கண்களைப் பற்றி, நமது பார்வை, அல்லது கண்ணோட்டத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.


பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்கிய நிகழ்ச்சியை இன்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தப் புதுமை யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு திருவசனங்களில் முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறை வசனங்கள் வழியாக யோவான் ஒரு இறையியல் பாடமே நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள். பார்வை இழந்த மனிதர் உடல் அளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டு கொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடல் அளவில் பார்வை கொண்டிருந்த பரிசேயர்கள் படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும் யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர் அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும் யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. யோவான் நற்செய்தி 9: 7ல் “அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.” என்று சொல்லப்பட்டுள்ளது. அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

பார்வை பெற்றவர் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? தனக்கு இந்தப் புதுமையை, பெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். பல்வேறு உடல் குறைகளால் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள் மத்தியில் தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். தான் எதுவும் கேட்காதபோது, தனக்கு இந்தப் புதுமையைச் செய்த அந்த மகானிடம் அவர்களையும் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். இத்தனை நல்ல எண்ணங்களுடன் வந்தவர், தான் பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை. வாழ்க்கையில் மலை போல் குவிந்திருந்த பல பிரச்சனைகளில் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.

அதுவரை அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்து வந்த பலர் அவர் குணமான பின் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சந்தேகப்பட்டனர். உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார். சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார். 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வுக்கு வந்த முதல் பிரச்சனை பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களில் பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். அப்படிப்பட்டவர்கள் இந்தப் புதுமை ஒய்வு நாளில் நடந்தது என்று தெரிந்தபின் சும்மா இருப்பார்களா?

பார்வை பெற்றவர் பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். பரிசேயர்கள் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனை ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது. அந்த பார்வையற்றவர் பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரை, அந்த பரிசேயரைப் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் இவர்கள் கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அவரது சாட்சியம் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்த போது, "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமையாய் சரணடைகிறார்.

படிப்படியாக பார்வை பெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. இயேசுவின் மீது அவர்கள் வளர்த்து வந்த பொறாமை, வெறுப்பு இவைகள் ஏற்கனவே அவர்கள் பார்வையை வெகுவாய் பாதித்திருந்தன. "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." (யோவான் 9: 16) என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார்.

ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயந்தனர். இருளுக்கு பழகி விட்ட கண்களுக்கு பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல் கோப வெறியாக மாறவே, அவர்கள் இயேசுவின் அந்த சாட்சியை வெளியே தள்ளினர்.


உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஒரு எல்லையைத் தாண்டும் போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத் தான் அடிக்கடி கூறுகிறோம். 'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் கண்களில் படுவதில்லை. "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுபவர்களை "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான வாக்கியங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன. உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார். “கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.” (மத்தேயு 6 : 22)


பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்குப் புதிதாகக் குடி வந்தனர். அந்தப் பெண், காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத்தலைவி துணிகளைத் துவைத்து, காய வைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.." என்று கணவனிடம் அடுத்த வீட்டுக் குறையைச் சுட்டிக் காட்டினார். முறையீடுகள் 3 நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில் வழக்கம் போல் ஜன்னல் வழியே பார்த்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்." என்று கணவனை அவசரமாக அழைத்தார். கணவன் வந்ததும், மனைவி சொன்னார்: "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒண்ணும் குறை இல்ல. இன்னக்கி நம்ம ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்." என்று சொன்னார்.

பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... மனதையும், அறிவையும் குறுக்காமல், பரந்து விரிந்த பார்வை பெற வேண்டும்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/