28 April, 2013

Not Give-and-Take Love, but Give-and-Give Love எடுக்கும் அன்பல்ல... கொடுக்கும் அன்பு


Tough Love


Last week I received a newsletter from one of the universities in Los Angeles. It carried a story of a student who had joined the university to pursue his studies, after spending 20 years in prison for a crime he did not commit. In 1992, at the age of 16, Franky Carrillo Jr. was sentenced to 30 years to life in prison, plus a second life sentence, for a murder he didn’t commit. In 2011, Franky was released after witnesses who testified in his murder trial admitted they had lied. 20 long years for nothing. Nothing? Well, Franky Carrillo does not think so. When I read his interview in the newsletter, I was very impressed by his comments and they were the starting points for this Sunday’s reflections for me. Here is an excerpt from that interview:
When you told other prisoners you were innocent, did they believe you?
Surprisingly, they did. I realized at some point that I needed to tell someone. That was healthy, and it helped me stay true to my battle. Whether it was my roommate, someone in the yard, a cop or a teacher, I was always glad that the response was that they knew I didn’t belong there even before they heard my story. Their feedback encouraged me to not give up.
These words of Franky gave me a clue as to what keeps our hopes alive. More than all the external helps that Franky would have received from outside the prison, it is the affirmation from fellow prisoners that must have been more helpful to Franky.

Here is another prison-story that gives us the same idea – namely, that hope and change in prison happen from within.  In 1921, Lewis Lawes became the warden at Sing Sing Prison. No prison was tougher than Sing Sing during that time. But when Warden Lawes retired some 20 years later, that prison had become a humanitarian institution. Those who studied the system said credit for the change belonged to Lawes. But when he was asked about the transformation, here's what he said: "I owe it all to my wonderful wife, Catherine, who is buried outside the prison walls." Catherine Lawes was a young mother with three small children when her husband became the warden. Everybody warned her from the beginning that she should never set foot inside the prison walls, but that didn't stop Catherine! When the first prison basketball game was held, she went ... walking into the gym with her three beautiful kids, and she sat in the stands with the inmates. Her attitude was: "My husband and I are going to take care of these men and I believe they will take care of me! I don't have to worry."
She insisted on getting acquainted with them and their records. She discovered one convicted murderer was blind so she paid him a visit. Holding his hand in hers she said, "Do you read Braille?" "What's Braille?" he asked. Then she taught him how to read. Years later he would weep in love for her. Later, Catherine found a deaf-mute in prison. She went to school to learn how to use sign language. Many said that Catherine Lawes was the body of Jesus that came alive again in Sing Sing from 1921 to 1937. Then, she was killed in a car accident.
The next morning Lewis Lawes didn't come to work, so the acting warden took his place. It seemed almost instantly that the prison knew something was wrong. The following day, her body was resting in a casket in her home, three-quarters of a mile from the prison. As the acting warden took his early morning walk he was shocked to see a large crowd of the toughest, hardest-looking criminals gathered like a herd of animals at the main gate. He came closer and noted tears of grief and sadness. He knew how much they loved Catherine. He turned and faced the men, "All right, men, you can go. Just be sure and check in tonight!" Then he opened the gate and a parade of criminals walked, without a guard, the three-quarters of a mile to stand in line to pay their final respects to Catherine Lawes. And every one of them checked back in. Every one! They learned the commandment of love as practiced by Catherine. [Stories for the Heart compiled by Alice Gray (Portland: Multnomah Press, 1996), pp. 54-55.]

Today’s readings tell us about love, hope and transformation that took place among the first Christians when they were faced with tough situations. Both the passages from the Acts of the Apostles as well as the Book of Revelation talk of hope. This hope was born amidst the most trying period of Christian history. The Book of Revelation was written by St John when he was exiled by Roman emperor Domitian to the island of Patmos. One can imagine Christians huddled together in some hidden cave, or underground place reading these words of St John:
Rev. 21: 1-5
Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and the sea was no more. And I saw the holy city, new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride adorned for her husband. And I heard a loud voice from the throne saying, “Behold, the dwelling place of God is with man. He will dwell with them, and they will be his people, and God himself will be with them as their God. He will wipe away every tear from their eyes, and death shall be no more, neither shall there be mourning, nor crying, nor pain anymore, for the former things have passed away.” And he who was seated on the throne said, “Behold, I am making all things new.”
The hope these words created in them, the hope born of love had kept them alive amidst all those tough years. The great Roman Empire, which relied on power, is no more, whereas Christianity, which relied only on love and hope, has flourished for the past 20 centuries.

Early Christians were identified by the sharing of their wealth, as suggested in the Acts. (Acts 2: 44-45; 4: 32-35) This sharing was prompted by their sharing of the Bread which was a lovely commemoration of what Jesus did during the Last Supper. It is during this Supper, Jesus gave them the new commandment of love. We recall this in today’s Gospel:
John 13: 34-35
Jesus said to his disciples: “A new commandment I give to you, that you love one another: just as I have loved you, you also are to love one another. By this all people will know that you are my disciples, if you have love for one another.”

I am sure all of us have heard stories centred on the theme of love. Here is a story that caught my attention recently. In the lovely book, Chicken Soup for the Soul, there's a story about a man who came out of his office one Christmas morning and found a little boy from a nearby project looking with great admiration at the man’s new vehicle. The little boy asked, "Does this car belong to you?" And the man said, "Yes. In fact my brother gave it to me for Christmas. I've just gotten it."  With that, the little boy's eyes widened. He said, "You mean to say that somebody gave it to you? And you didn't have to pay anything for it?"  And the man said, "That's right.  My brother gave it to me as a gift." With that the little boy let out a long sigh and said, "Boy, I would really like..."  And the man fully expected the boy to say, "I would like to have a brother like that, who would give me such a beautiful car," but instead the man was amazed when the little boy said, "Wow! I would like to be that kind of brother.  I wish I could give that kind of car to my little brother."

The little boy really understood what Jesus said to his disciples – “Love one another just as I have loved you.” It is not a love that expects to be loved back… It is not “Love me just as I have loved you.” It is simply a love that is ready to give and give… not give and take. Such love will keep our hopes alive even in the most trying circumstances of our lives – as happened to Franky Carrillo and as happened in Sing Sing Prison.

Sing Sing prison


அமெரிக்காவின் Los Angeles நகரில், இருபது ஆண்டுகளுக்குமுன், Franky Carrillo என்ற 16 வயது இளைஞர், கொலைகுற்றம் சுமத்தப்பட்டு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபின், அண்மையில் விடுதலைபெற்று, இயேசு சபையினர் நடத்தும் ஒரு கல்லூரியில் தற்போது அவர் சட்டப்படிப்பை ஆரம்பித்துள்ளார். 1992ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலையில் Frankyக்கு எதிராகச் சான்று பகர்ந்தவர்கள், 2011ம் ஆண்டு தாங்கள் கூறியது பொய் என்று ஒத்துக்கொண்டதால், Franky விடுதலை செய்யப்பட்டார். தான் செய்யாத ஒரு கொலைக்காக, 20 ஆண்டுகள் சிறையில் இருந்த Franky, சென்றவாரம் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றன.
அவரிடம் பேட்டி எடுத்த நிருபர், "தவறாகத் தீர்ப்பிடப்பட்டு, 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது உங்களால் எப்படி நம்பிக்கை இழக்காமல் வாழ முடிந்தது?" என்று கேட்டார். அதற்கு, Franky: "சிறையில் இருந்த கைதிகள், அங்கு காவல் செய்த அதிகாரிகள் அனைவரும் நான் குற்றமற்றவன் என்பதை நம்பினர். அடிக்கடி அதை என்னிடம் கூறிவந்தனர். அதுதான் என்னை நம்பிக்கையுடன் வாழவைத்தது" என்று பதில் சொன்னார்.
சிறையிலிருந்த Frankyக்கு வெளியிலிருந்து உதவிகளும், ஆதரவும் வந்திருக்கும். சிறையில் அவரைச் சந்திக்கச் சென்ற பெற்றோரும், நண்பர்களும் அவருக்குக் கட்டாயம் நம்பிக்கை அளித்திருப்பர். ஆனால், அதைக் காட்டிலும், சிறைக்குள்ளிருந்து Franky பெற்ற நம்பிக்கையே அவருக்கு இன்னும் அதிக உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறை என்ற நம்பிக்கையற்ற சூழலில் உருவான நம்பிக்கைக்கும், மாற்றங்களுக்கும் இதோ மற்றுமோர் எடுத்துக்காட்டு... கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோரை கடுமையான காவலில் வைத்திருக்கும் Sing Sing சிறை நியூயார்க் நகரில் உள்ளது. (தற்போது இது, Ossining சிறை என்று அழைக்கப்படுகிறது.) 1921ம் ஆண்டு Lewis Lowes என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்கு சென்றார். 20 ஆண்டுகள் கழித்து, அவர் பணிஒய்வு பெற்றபோது, அச்சிறையில் அற்புதமான பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் தன் அன்பு மனைவி Catherine என்று கூறினார் Lewis.
Lewis இச்சிறைக்கு பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி Catherineஇடம் அனைவரும் தந்த ஒரே அறிவுரை... எக்காரணம் கொண்டும் அவர் அந்தச் சிறைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்பதே. ஆனால், அவரோ, அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள், தன் அழகான மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். அவரைத் தடுக்க முயன்ற அனைவரிடமும் அவர் சொன்னது இதுதான்: என் கணவரும், நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம். பதிலுக்கு, அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
விரைவில், Catherine கைதிகளிடம் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் பார்வைத்திறன் அற்றவர் என்பதை அறிந்த Catherine, அவருக்காக Braille மொழியைக் கற்று, அதை அவருக்கும் சொல்லித்தந்து, Braille மொழியில் இருந்த பல புத்தகங்களை அவர் வாசிக்க உதவினார். மற்றொரு கைதி பேசவும், கேட்கவும் முடியாதவர் என்பதை அறிந்து, தான் சைகை மொழியைக் (Sign language) கற்றுக்கொண்டு, அவருடன் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
Lewisம் Catherineம் Sing Sing சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937ம் ஆண்டு, Catherine ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே, ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் Catherine உடல் வைக்கப்பட்டிருந்தது. Catherine மரணத்தைப் பற்றி அறிந்த கைதிகள் அனைவரும், சிறையின் நுழைவாயிலுக்கருகே திரண்டு, மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றனர். வன்முறையில் இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் அனைவரும் Catherineக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பலாம் என்று கூறினார். அனைவரும் அமைதியாக Catherine வீட்டுக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். மாலையில் ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். ஒருவரும் தப்பித்துச் செல்லவில்லை. Catherine உடல், அந்தச் சிறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

மாற்ற முடியாதவர்கள் என்று சமுதாயம் அடைத்து வைத்திருந்த அந்தக் கைதிகள் மத்தியில் தங்களையே முற்றிலும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள் மாற்றத்தை உருவாக்கிய Lewisம் Catherineம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? குற்றம் ஏதும் செய்யாமல், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட Frankyயின் மனதில் நம்பிக்கையை அணையாமல் காத்த மற்ற கைதிகள் நமக்கு என்ன சொல்லித்தர விழைகின்றனர்? நம்பிக்கையற்றதாகத் தெரியும் ஒரு சூழலில், அச்சூழலுக்கு உள்ளிருந்து பிறக்கும் நம்பிக்கையே, சக்தி வாய்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணரும். இத்தகைய மாற்றங்களைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை வேட்டையாடியது. கிறிஸ்தவர்களை மிருகங்கள் கிழித்து உண்பதைக் காண ஆயிரக்கணக்கான உரோமையர்கள் கூடிவந்து இரசித்தனர். இத்தகையக் கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.
அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமைய அரசு இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நம்பிக்கைச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று நம்மிடையே புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளன.

புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும், திருவெளிப்பாடு நூலிலிருந்தும் நாம் இன்று கேட்கும் சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்றைய இரண்டாம் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய பகுதி. நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி.
உரோமைய அரசர் தொமிசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டனர். புனித யோவானை பத்மோஸ் (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார் தொமிசியன். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறிஸ்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் நம்பிக்கைச் சொற்கள் இதோ:

திருவெளிப்பாடு 21: 1-5
பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன... அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்... பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. வேறு எதுவும் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. (திருத்தூதர் பணிகள் 2: 44-45; 4: 32-35) அப்பம் பகிரும் அந்த அற்புத நிகழ்வை முதன் முதலாக கிறிஸ்து ஆற்றியபோது, சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு முக்கிய கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:
யோவான் நற்செய்தி : 13: 34-35
இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்என்றார்.

அன்பை மையப்படுத்தி சொல்லப்படும் ஆயிரமாயிரம் கதைகளில், அண்மையில் என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...
உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சிறுவன் சொன்னான்.

அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அன்பளிப்பால் அடுத்தவரை நிறைப்பது, எவ்வளவோ மேல். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தலைசிறந்த வார்த்தைகளால் சொல்லிச் சென்றார்: நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள் என்று சொல்வதற்குப் பதில், உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச் சென்றார். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இத்தகைய அன்பு வளரும் இடங்களில் நம்பிக்கையும் தானே செழித்து வளரும்.


21 April, 2013

Leadership… to Serve? or to be Served? தலைமைத்துவம்... பணியா? பதவியா?



Painting named: The Lost Sheep, by Alfred Soord

Let’s begin today’s reflections with a legendary leader – Alexander the Great. When Emperor Alexander the Great was crossing the Makran Desert on his way to Persia, his army ran out of water. The soldiers were dying of thirst as they advanced under the burning sun. A couple of Alexander's lieutenants managed to capture some water from a passing caravan. They brought some to him in a helmet. He asked, “Is there enough for both me and my men?” “Only you, sir,” they replied. Alexander then lifted up the helmet as the soldiers watched. Instead of drinking, he tipped it over and poured the water on the ground. The men let up a great shout of admiration. They knew their general would not allow them to suffer anything he was unwilling to suffer himself.

Sensitivity of Alexander and his desire to be identified with his soldiers are strongly portrayed in the above-mentioned incident. Sensitivity, tenderness and identifying with people are not usually considered the most important aspects of a worldly leader. Unfortunately, these aspects are not considered the most important for religious leaders too in the 21st century. The model of leadership set by the worldly leaders has, unfortunately, become a yardstick by which Church leadership is also measured. We talk of how ‘efficient’ our Church or Religious leaders are. We are also sadly aware that quite many of our leaders – like Bishops, religious Superiors – are given training in ‘managerial skills’ by management schools. This Sunday gives us an opportunity to think of leadership in the Church by a different yardstick… the model of Christ – the Good Shepherd.
The Fourth Sunday of Easter is called the Good Shepherd Sunday. This is also The World Day of Prayer for Vocations. April 21, this Sunday, Pope Francis is ordaining ten deacons in St Peter’s Basilica. Hence, we can see this Sunday as an invitation to reflect on leadership in the Church and pray for the present and future leaders of the Church.

What are the primary qualities expected of Church / Religious Leader? Instead of browsing through erudite articles from books, let us try to learn from an open book, living in Vatican. Yes… I am talking of Pope Francis, who has been, for the past one month, giving a fresh outlook on how to be a leader and how to look at leadership in the Church. It is interesting to see that his leadership style seems to have rubbed on to the world leaders as well – at least to some extent.
When Pope Francis assumed leadership of the Church on March 19th, he emphasized on the theme of sensitivity and tenderness in his homily. What he preached, he had already practiced during his interactions with the people gathered in St Peter’s Square. Before the Inaugural Mass, when he took a ride in the Square, he was keen on reaching out to the people, especially to the sick. He got down from his vehicle to embrace and kiss a differently-abled person. During the homily he spoke of the aspect of sensitivity very clearly. Here is an excerpt from his homily:
Please, I would like to ask all those who have positions of responsibility in economic, political and social life, and all men and women of goodwill: let us be “protectors” of creation, protectors of God’s plan inscribed in nature, protectors of one another and of the environment. Let us not allow omens of destruction and death to accompany the advance of this world! But to be “protectors”, we also have to keep watch over ourselves! Let us not forget that hatred, envy and pride defile our lives! Being protectors, then, also means keeping watch over our emotions, over our hearts, because they are the seat of good and evil intentions: intentions that build up and tear down! We must not be afraid of goodness or even tenderness!
Here I would add one more thing: caring, protecting, demands goodness, it calls for a certain tenderness. In the Gospels, Saint Joseph appears as a strong and courageous man, a working man, yet in his heart we see great tenderness, which is not the virtue of the weak but rather a sign of strength of spirit and a capacity for concern, for compassion, for genuine openness to others, for love. We must not be afraid of goodness, of tenderness!

Identifying with the people is another key feature of any leader, especially of the leaders of the Church. This has been the special feature of our Holy Father in the past one month. We are aware that he has almost always used the word ‘Bishop of Rome’ rather than the word ‘Pope’ to refer to himself. I think this is a conscientious decision he has made, namely, to identify himself as the pastor of a particular flock rather than as the head of a nameless entity called the universal church. From the moment he appeared on the balcony of St Peter’s Basilica on March 13th night, to this day, he has made it very clear that he was walking along with the people. Quite often he has mentioned that he was a sinner like any of us, requiring our prayers.

On Maundy Thursday morning (March 28th) when he celebrated the Chrism Mass, he addressed the Priests in a special way and told them, “We need to ‘go out’, then, in order to experience our own anointing, its power and its redemptive efficacy: to the ‘outskirts’ where there is suffering, bloodshed, blindness that longs for sight, and prisoners in thrall to many evil masters. It is not in soul-searching or constant introspection that we encounter the Lord.
A priest who seldom goes out of himself, who anoints little misses out on the best of our people, on what can stir the depths of his priestly heart. Those who do not go out of themselves, instead of being mediators, gradually become intermediaries, managers… This is precisely the reason why some priests grow dissatisfied, become sad priests, lose heart and become in some sense collectors of antiques or novelties – instead of being shepherds.”
That same day (Maundy Thursday) evening, Pope Francis celebrated the Mass of the Lord’s Supper with the juvenile prisoners in Casal del Marmo, Rome. He washed their feet. When the young boys at the juvenile detention facility in Los Angeles heard of Pope Francis’ plan of celebrating Mass at Rome’s Casal del Marmo prison with the young inmates, they wrote letters to him, thanking him for his gesture of love and service, and praying for him. Here are some of those letters that are both painful and hopeful at the same time:

Dear Pope Francis,
Thank you for washing the feet of youth like us in Italy. We also are young and made mistakes.
Society has given up on us, thank you that you have not given up on us.
Dear Pope Francis,
I don't know if you have ever been to where I live. I have grown up in a jungle of gangs and drugs and violence. I have seen people killed. I have been hurt. We have been victims of violence.
It is hard to be young and surrounded by darkness. Pray for me that one day I will be free
and be able to help other youth like you do.
Dear Pope Francis,
I am glad you picked the name Francis. When I was little I read about St.Francis. He is a cool saint. He was a man of peace and simplicity. I am praying to you that you pray that we have peace in our gang filled neighborhoods.
Dear Pope Francis,
I have never been to Rome. I do not know if it is near Los Angeles because all my youth I have only known my neighborhood. I hope one day I will be given a second chance and receive a blessing from you and maybe even have my feet washed on Holy Thursday.
Dear Pope Francis,
From reading I know that us kids are capable of making decisions like older people do. I have seen pictures of brains of kids and adults. I am asking you as Pope to help us and help other people understand we can change and want to change.

It is very clear that the gesture of Pope Francis going in search of the lost sheep has touched the core of these young persons. We can be sure that the youth in Casal del Marmo have also been touched and transformed likewise!

Ten days back, on 11th April, President Barack Obama posthumously awarded Korean War Army chaplain Fr Emil Kapaun the Medal of Honour, bestowing the highest military honour. The moment we think of army or military, we always think of those who have fought with weapons. But, here was a Catholic Priest who was in the military but never carried a weapon. "This is the valor we honor today - an American soldier who didn't fire a gun, but who wielded the mightiest weapon of all, a love for his brothers so pure that he was willing to die so that they might live," said Obama. Fr Kapaun brought hope and healing among the soldiers. His bravery was proved, not in killing enemies, but in bringing Christ to friends and foes alike. In his speech, Obama often referred to Fr Kapaun as the "shepherd in combat boots."
We pray God that the Holy Spirit guides Pope Francis, and all of us to become more authentic leaders. Authentic leadership comes from our internal conviction that we are primarily called to be caring and loving shepherds filled with sensitivity, tenderness and the desire to identify ourselves with the people whom we serve. If only the Leaders put into practice the most important qualities lived by Jesus, the Good Shepherd, the youth – the future leaders – would easily recognize God’s call in their lives.


Pope Francis washing the feet of a young man in Casal del Marmo
L’Osservatore Romano

மாவீரன் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக் கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைக்கும் விருப்பம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே பார்ப்போம்.
மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்ப்பது செயற்கையானது, வீணானது என்பது நமது உறுதியான எண்ணம். உலகின் அரசியல் மற்றும் வர்த்தகத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம் இவ்விதம் நம்மை எண்ணத் தூண்டுகிறது.

இதில் பொதிந்துள்ள மற்றொரு ஆபத்து என்னவென்றால், உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கும் உருவாகி வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. 1963ம் ஆண்டு திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நாளின் பொன்விழா, இந்த நம்பிக்கை ஆண்டில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், ஏப்ரல் 21, இந்த ஞாயிறன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், பத்து தியாக்கோன்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர் அருள்பொழிவு பெறும் ஞாயிறு என்ற எண்ணங்களை எல்லாம் இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு உருவாக்கித் தருகிறது.

திருஅவையின் இன்றையத் தலைவர்களிடமும், நாளையத் தலைவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும், அல்லது எதிர்பார்க்க வேண்டிய பண்புகள் எவை? இந்தக் கேள்விக்கு புத்தகங்களிலும், கட்டுரைகளிலும் ஏட்டளவு பதில்களைத் தேடாமல், நடைமுறை வாழ்விலிருந்து பதில்களைத் தேட முயல்வோம். நடை முறை வாழ்வில் நாம் தேடும் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எண்ணிப்பார்க்கலாம். ஒரு தலைவருக்கு வேண்டிய பண்புகள் எவை என்பதை, கடந்த ஒரு மாத காலமாக, தன் சொல்லாலும், செயலாலும், திருஅவைக்கு மட்டுமல்ல, உலகத் தலைவர்களுக்கும் அவர் பல வழிகளில் உணர்த்தி வருகிறார்.

மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகப் பணியேற்றபோது, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பல்லாயிர மக்களும், பல உலகத் தலைவர்களும் இந்தப் பணியேற்புத் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். திருப்பலிக்கு முன், திறந்த ஒரு 'ஜீப்'பில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம்நீட்டி அவரால் தொடமுடியவில்லை என்றாலும், அவரது செய்கைகளாலும், முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளாலும், அம்மக்களின் மனங்களைத் தொட்டார் என்பது தெளிவானது. ஓரிடத்தில், 'ஜீப்'பை நிறுத்தச்சொல்லி, இறங்கிச்சென்றார். அங்கிருந்த ஒரு மாற்றுத் திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, மக்கள் மத்தியில் ஆழ்ந்ததோர் தாக்கத்தை உருவாக்கியது.
கடந்த ஒரு மாதமாக, அவர் மக்களைச் சந்தித்த அத்தனை தருணங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைத் தொட்டு ஆசீர்வதிப்பதை, தன் சந்திப்பின் ஒரு முக்கிய செயலாகவே ஆற்றிவருகிறார். மார்ச் 31, உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் மீண்டும் ஒருமுறை வலம் வந்தபோது, மாற்றுத் திறனாளியான Dominic Gondreau என்ற 8 வயது சிறுவனை அணைத்து முத்தமிட்டது, பல கோடி மக்களின் மனதில் பதிந்த ஓர் அழகிய காட்சியாக அமைந்தது. "கடவுள் எங்கள் குடும்பத்தை அணைத்து அளித்த ஒரு முத்தமாக இதைக் கருதுகிறோம்" என்று Dominicகின் தாய் Christiana கூறியுள்ளார்.

தன் இளகிய, மென்மையான மனதையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் செயல்வழி வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், தலைமைப் பணியின் இலக்கணத்தை வரையறுத்தார். தலைவர் ஒரு பாதுகாவலர் என்ற கோணத்தில், புனித யோசேப்பு, புனித பேதுரு ஆகியோரை எடுத்துக்காட்டாக மக்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதை தெளிவாக்கினார். தலைவர், அல்லது காவலர் என்பவர் இளகிய, மென்மையான மனம் கொண்டவராக இருக்கத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமுதாயத் தளங்களில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களுக்கும், அனைத்து நல்மனம் கொண்டோருக்கும் நான் சிறப்பான ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். கடவுளின் திட்டம் ஆழப் பதிந்துள்ள படைப்பின் பாதுகாவலர்களாக நாம் இருப்போம். நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது.
புனித யோசேப்புவின் பெருவிழாவுடன், உரோம் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணியின் துவக்கவிழாவையும் இன்று நாம் கொண்டாடுகிறோம். பேதுருவின் வழித்தோன்றல் என்ற நிலை அதிகாரமுள்ள ஒரு நிலை. இயேசு பேதுருவுக்கு அதிகாரம் அளித்தார். ஆனால், அது, எவ்வகை அதிகாரம்?
பணிபுரிவதே உண்மையான அதிகாரம். இந்தப் பணியில் தன்னை முழுவதும் இணைத்து, சிலுவையில் இறுதியில் இணைவதே திருத்தந்தையின் அதிகாரம். சிறப்பாக, மனுக்குலத்தில் வறியோர், வலுவிழந்தோர், எவ்வகையிலும் முக்கியத்துவம் பெறாதோர் திருத்தந்தையின் பணியில் முதலிடம் பெறவேண்டும். அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.

மக்களைப் போலவே தானும் ஒரு பாவி என்பதையும், மக்களோடு பயணம் செய்யும் ஒரு பயணி என்பதையும் அடிக்கடி கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் தனக்காகச் செபிக்கவேண்டும் என்பதையும், தன் உரைகளில் கூற மறப்பதில்லை.
மக்களில் ஒருவராகத் தன்னை கரைத்துக்கொள்ளாத அருள் பணியாளர்கள் வாழ்வு பயனற்றது என்பதையும், மக்களிடமிருந்து விலகி, ஒரு தீவாக வாழும்போது அருள் பணியாளர்கள் விரக்தி அடைகின்றனர் என்பதையும் புனித வியாழனன்று ஆற்றிய காலைத் திருப்பலியில் அழுத்தந்திருத்தமாகக் கூறினார் திருத்தந்தை. அன்று மாலை, அவர் உரோம் நகரில் உள்ள Casal del Marmo எனும் இல்லத்தில், வளர் இளம் கைதிகளுக்குத் இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலியாற்றியபோது, அவர்கள் காலடிகளைக் கழுவினார். சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இளையோரை ஒரு நல்ல ஆயனாகத் தேடிச்சென்று அவர்களுக்குரிய மதிப்பை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த முயற்சி, அமெரிக்காவின் Los Angeles நகரில் உள்ள வளர் இளம் கைதிகளின் மனதைப் பெரிதும் ஈர்த்தது. அவர்களில் பலர் திருத்தந்தைக்கு மடல்கள் எழுதியுள்ளனர். இதோ, அக்கடிதங்களில் சில:

அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
இத்தாலியில் எங்களைப் போல் சிறையில் இருக்கும் இளையோரின் காலடிகளை நீங்கள் கழுவியதற்காக நன்றி. சமுதாயம் எங்கள் மீது நம்பிக்கை இழந்தபோதிலும், நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி.
அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
நான் கடந்து வந்த வாழ்வைப் போல ஓர் அனுபவம் உங்களுக்கு இருந்ததா என்பதை அறியேன். போதைப் பொருளிலும், வன்முறையிலும் ஊறிய குழுக்கள் அடங்கிய காட்டில் நான் பிறந்து வளர்ந்தேன். சிறுவயது முதல் கொலைகளைப் பார்த்துப் பழகியவன் நான். இளவயதில் இத்தகைய இருளால் சூழப்படுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு நாள் எனக்கு விடுதலை கிடைத்து, நானும் உங்களைப் போல் மற்ற இளையோருக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
என்னைப் போன்ற ஓர் இளைஞனின் காலடிகளை நீர் கழுவுகின்றீர். போதைப் பொருளுக்கு அடிமையானவன் நான். தற்போது அதிலிருந்து விடுதலை பெற எங்களில் பலர் முயன்று வருகிறோம். நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள். இப்பழக்கத்தைக் கைவிடவும், போதைக்கு அடிமையான மற்றவர்களைக் காப்பாற்றவும் நான் முயற்சிகள் எடுப்பேன்.
அன்புத் திருத்தந்தை பிரான்சிஸ்,
நான் ஒரு கத்தோலிக்கனாகப் பிறந்து வளர்ந்தேன். உங்களைப் போல் ஒரு திருத்தந்தை இருப்பதால், கத்தோலிக்கன் என்று சொல்லிக்கொள்வதில் இப்போது நான் மகிழ்கிறேன். வன்முறையில் மூழ்கியுள்ள இவ்வுலகில் உங்களைப் போன்ற எடுத்துக்காட்டுகள் தேவை. உங்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கிறேன்.

நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர் திருநிலை பெறும் ஞாயிறு என்ற மூன்று எண்ணங்களையும் இணைத்துச் சிந்திக்கும் இந்த நாளில், நல்ல ஆயர்களாக தங்கள் வாழ்வாலும், மரணத்தாலும் சான்று பகர்ந்த இரு அருள் பணியாளர்களின் எடுத்துக்காட்டுகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
பத்து நாட்களுக்கு முன், ஏப்ரல் 11, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க இராணுவத்தில் மிக உயரிய விருது ஒன்றை மறைந்த அருள் பணியாளர் Emil Kapaun அவர்களுக்கு வழங்கினார். வீரத்துடன் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றிபெறும் வீரர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் விருது இது. ஆனால், தன் இராணுவப் பணியில் ஒரு நாளும் ஆயுதங்களைப் பயன்படுத்தாத அருள் பணியாளர் Emil Kapaun, கோரிய போரில் வீரர்கள் மத்தியில் ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில், அரசுத்தலைவர் ஒபாமா தன் உரையில் கூறியது இதுதான்: "துப்பாக்கியால் ஒரு முறை கூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் கௌரவப்படுத்துகிறோம். அருள் பணியாளர் Emil Kapaun இராணுவத்தில் பணியாற்றியபோது பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு - தன் நண்பருக்காக உயிரைத் தந்த அன்பு" என்று கூறினார் ஒபாமா.
அருள் பணியாளர் Emil Kapaun பங்கேற்ற அதே கொரியப் போரில் மற்றொரு அருள் பணியாளரைக் குறித்து சொல்லப்படும் உண்மைச் சம்பவம் இது. அப்போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஒரு குருவிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் குருவுக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஒரு குரு" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த குருவிடம் எச்சரித்தார். அதற்கு அந்த குரு, "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்." என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், குருவும் அமைதியாக இறந்தனர்.

தலைவராக இருப்பதற்குத் தேவையானவை, கனிவு, பரிவு, பணிவு, எளிமை என்ற உண்மையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியில் கழித்த முதல் மாதத்தில் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். தன் சொல்லாலும், செயலாலும் நல்லாயன் கிறிஸ்து கூறிய இத்தகையத் தலைமைத்துவப் பண்புகளுக்கு திருஅவைத் தலைவர்களும், அருள் பணியாளர்களும், துறவியரும் தங்கள் வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்தால், இறைவனின் அழைப்பை ஏற்க இன்னும் பல்லாயிரம் இளையோர் தாங்களாகவே முன்வருவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத்தகைய புது வசந்தம் கிறிஸ்தவ சமுதாயத்தில் உருவாக இறைவனை இறைஞ்சுவோம்.


14 April, 2013

Leaving God? Latching on to God? விட்டு விலகுவதா? சரணடைவதா?


Icon from Holy Transfiguration Monastery


P.S. – Post Script. I am not sure about you, but more often I have read the P.S. in a letter before the letter. And… guess what… I have found them more interesting than the letter itself. Many of us think that P.S. is an after thought – ‘By-the-way’ or ‘Oh-I-forgot-to-tell-you’ stuff. But, I think it is more than that. A P.S. usually springs a surprise. It is similar to the famous story of ‘Keep Your Fork… the Best is Yet to Come’. I have already shared this story in one of my earlier reflections (on Psalm 23). The story is about a senior lady or a woman with a terminal illness who gave instructions to her Pastor about her funeral. She told him that she wanted to be buried with a fork in her hand. Naturally, the curious Pastor wanted to know why such a ‘strange’ request.
The woman explained: “In all my years of attending church socials and potluck dinners, I always remember that when the dishes of the main course were being cleared, someone would inevitably lean over and say, 'Keep your fork.' It was my favourite part because I knew that something better was coming...like velvety chocolate cake or deep-dish apple pie. Something wonderful, and with substance! So, I just want people to see me there in that casket with a fork in my hand and I want them to wonder ‘What's with the fork?’ Then I want you to tell them: ‘Keep your fork... the best is yet to come.’” http://blessingsforlife.com
The pastor's eyes welled up with tears of joy as he hugged the woman good-bye. He had learnt one of the best imageries for after-life from the dying woman. The dessert served at dinners is not an after thought, but a well planned surprise. I consider a P.S. to be somewhat close to this.

In a novel, or in a movie the final pages or the final moments are usually described as the climax. In John’s Gospel we reach a climax in the 20th chapter and then there is a P.S. in the form of the 21st chapter – one of the post-resurrection apparitions of Jesus by the Sea of Tibe'ri-as. Keeping aside all the scriptural investigations about who the author of this chapter might be (whether John himself or one of his close disciples etc.), we are thankful to God for this lovely P.S.

We know well that the whole Gospel of John is not simply a diary of the events and sayings of Jesus, but more of a theological treatise. In this event, by the Sea of Tibe'ri-as, we come across one such theological treatises of John.
Chapter 21 of John begins with a list of those who are taking part in this event. One of them is Thomas called the Twin. We are naturally reminded of the Gospel we heard last Sunday – how the Risen Christ ‘healed’ the ‘doubting Thomas’. In today’s Gospel too we come across another healing session – the Risen Christ healing ‘Peter the coward’, who denied Jesus. Last week we reflected that not only Thomas, but all the disciples doubted the Resurrection. In the same way, we can say that not only Peter but almost all the disciples were cowards and, given a chance, they too would have denied Jesus. Thomas and Peter are only representatives of the whole group. Hence, it was the first mission of Jesus to heal the whole group of their fears and doubts.

The disciples, locked up in the upper room for fear of … almost everyone, including themselves – probably wanted to give up and get back to their old trade – fishing! When Peter proposed this, all of them agreed. It was almost like a full cycle – back to square one! These were simple fishermen and Jesus called them with a promise that henceforth they would be catching men. (Lk.5: 10). It was true that during the last three years they had learnt this ‘new trade’ of catching people to some extent… but always with Jesus. Now that he was gone, they did not dare think of catching people. On the other hand, the disciples feared that the people were trying to catch them and hand them over to the Romans. Hence, they had to be in hiding. They were convinced that without Jesus it was useless to linger on in that life. Hence, they decided to get back to their old trade which they knew well – to catch fish!

But, returning to their old ways did not prove to be easy. They went out and got into the boat; but that night they caught nothing, (John 21:3) says the evangelist. As fishermen, they have had many a night when they caught nothing. But on that night in Tibe'ri-as when they caught nothing, their minds, inadvertently went to a similar night they had spent at the lake of Gennes'aret when they caught nothing throughout the night. But, their disappointment was turned into unbelievable joy over the rich haul of fish in the morning (unusual time for fishing, indeed). This was possible, since they had ventured into the deep and had let down their nets at the bidding of one stranger called Jesus of Nazareth. (Luke 5: 4-11)

Juxtaposing these similar-looking events at Gennes'aret and Tibe'ri-as, we learn many things about ourselves as well as about Peter. When the great haul of fish was seen by Peter in Gennes'aret, he fell down at Jesus' knees, saying, "Depart from me, for I am a sinful man, O Lord." (Lk 5: 8). At the Sea of Tibe'ri-as when a similar miracle occurred, Peter sprang into the sea and reached Jesus.
At Gennes'aret, we are not sure whether Peter was aware of what he was saying – about his being sinful as well as about asking Jesus to leave him. Now, at Tibe'ri-as, Peter was very much aware that he had sinned – sinned greatly against Jesus and yet he did not want Jesus to leave him, but, rather he went seeking Jesus.
Sometimes, when we are surrounded by abundant, unconditional love, we can either surrender ourselves to this undeserved love or, we can close in on ourselves feeling very unworthy and wanting that overpowering love to leave us alone. Thus, left alone, we wallow in self-pity. This is what happened to Peter at Gennes'aret, during the first meeting with Christ. Fortunately for Peter he was willing to enter the school of love that Jesus had invited him in. Hence, after three years, here he was at Tibe'ri-as plunging into the sea to reach Jesus, knowing full well that he had sinned against that very same person.

Once Peter took that initiative, then Jesus took over. Peter was restored to his original position as the leader of the group. The one lesson we can learn from Peter in today’s episode at the Sea of Tibe'ri-as is this: whatever we are, wherever we are, we can ALWAYS get back to God, to Christ.
This was one of the favourite themes expressed by our Holy Father Francis in many of his homilies given during his first month as the successor of Peter, the Apostle. Pope Francis has said: “Never forget this: The Lord never gets tired of forgiving us. It is we, who get tired of asking for forgiveness.”  

இளைஞர் ஒருவர் தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார். மாதத்தின் இறுதி ஞாயிறன்று அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில் ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று, அச்சிறுவர்கள் விரும்பிய உணவை வாங்கி, அனைவரும் சேர்ந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவன் இளைஞரை நோக்கி," அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டான்.
முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நாள் முழுவதும் தங்களை மகிழ்வில் நிறைத்ததைக் கண்ட அந்தச் சிறுவனின் மனதில் எழுந்த அந்தச் சந்தேகம், இயேசுவுடன் மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள் மனதிலும் எழுந்தது. ஆனால், அவர்களால் கேட்க முடியவில்லை. "சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்." (யோவான் 21:12) என்று இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
  
ஒரு 'நாவலை' வாசிக்கும்போது அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது இறுதி பக்கங்களில், அல்லது, இறுதி மணித்துளிகளில் வரும் 'கிளைமாக்ஸ்' நமது கவனத்தை அதிகம் ஈர்க்கும். நாவல் முழுவதும் நம் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்கு இறுதிப் பகுதியில் பதில்கள் கிடைக்கும். இன்று நமது ஞாயிறு வழிபாட்டில் வாசிக்கும் பகுதி, யோவான் நற்செய்தியில் வரும் உச்சகட்டம் - 'கிளைமாக்ஸ்' - என்று சொல்லலாம். உண்மையிலேயே, இது ஒரு பிற்சேர்க்கை.
சில வேளைகளில் நாம் கடிதங்கள் எழுதும்போது இறுதியில் பி.கு. அதாவது பின்குறிப்பு என்று எழுதி, ", சொல்ல மறந்துட்டேனே..." என்று ஒரு மகிழ்வான செய்தியைச் சொல்வோமே, அவ்விதம் இந்த இறுதிப் பிரிவை நாம் எண்ணி பார்க்கலாம். இந்தப் பிற்சேர்க்கையை நற்செய்தியாளர் யோவானோ அல்லது அவருடைய சீடர்களில் ஒருவரோ இணைத்துள்ளார் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. ஆய்வுக்கணிப்புக்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், 21ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வு ஆழமான உண்மைகளை உள்ளத்தில் விதைக்கின்றது.

யோவான் தன் நற்செய்தியை, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவாக எழுதாமல், ஓர் இறையியல் பாடமாக அளித்துள்ளார். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும் யோவான் நற்செய்தியில் பல இறையியல் எண்ணங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்திப் பகுதியை ஒரு காட்சித் தியானமாக, ஓர் இறையியல் பாடமாக நாம் அணுகுவோம்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல் என்று யோவான் தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமா என்று ஆசிரியர் குறிப்பிட்டதும், நம்மையும் அறியாமல் நமது நினைவில் சென்ற வாரம் ஞாயிறன்று சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்த நிகழ்வின் நாயகன் தோமா - சந்தேகத் தோமா. சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு இன்று சொல்லப்படுகிறது. இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை இன்றைய நற்செய்தி சொல்கிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்: "அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)
யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, மேல் மாடியில் பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவர்களது எண்ணங்களுக்கு ஒரு வடிவம் தந்ததுபோல் ஒலித்தது, பேதுருவிடமிருந்து வந்த யோசனை: "நான் மீன் பிடிக்கப் போகிறேன்".

மீன் பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச் சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று அவரைப் பின் சென்றவர்கள் சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் தொழிலை ஓரளவு புரிந்துகொண்டனர். ஆனால், கல்வாரியில் அவர் சிலுவையில் இறந்தபின் நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள் மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள் இவர்களைப் பிடித்து உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அந்தச் சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர். இயேசுவுடன் வாழ்ந்தபோது எப்போதும் மக்கள் கூட்டம் சூழ எதோ கனவுலகில் வாழ்ந்ததுபோல் இருந்தவர்களுக்கு, கடந்த மூன்று நாட்கள் கசப்பான பாடங்களைச் சொல்லித் தந்தன. எனவே, மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் கிளம்பினர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு இனி திரும்பப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்திப்பது ஏமாற்றம். இரவு முழுவதும் முயன்றும், அவர்களுக்கு  'மீன் ஒன்றும் கிடைக்கவில்லை' (21: 3).

மீன்பிடித் தொழிலில் ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று திபேரியக் கடலில் இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும்,  ஒன்றும் கிடைக்காமல் போனது அவர்கள் மனதில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா 5ம் பிரிவில் (5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும் அவர்கள் இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது.
இயேசுவின் மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம் என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றம் மீண்டும் அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே மீண்டும் ஒருமுறை திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும் உழைத்துக் காணாத பலனை விடிந்ததும் இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள் பிடிபட்டதாக நற்செய்தியாளர் கூறுகிறார். (யோவான் 21:11)

கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது. இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு நம் வாழ்விலும் ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.
கெனசரேத்து ஏரியில் கிடைத்த அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5: 8) என்று வேண்டினார். திபேரியக் கடலில் அபரிமிதமான மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து செல்கிறார் இயேசுவை நோக்கி.
கெனசரேத்து ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்து சொன்னாரா என்பதில் தெளிவில்லை, ஆனால், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும் என்பதைத் தெளிவாக உணர்ந்தார்.
திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன் தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுத்த பாவி தான் என்பதை நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை இயேசுவை விட்டு விலகிச் செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் செல்கிறார்.

நம் வாழ்வைச் சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் ஓர் அற்புதம் நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும் சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால் போதும் என்று எண்ணுவோம். அப்படி நமக்குள் நாமே ஒளியும்போது, கூடவே நம்மைப் பற்றிய தாழ்வான எண்ணங்களும் நம்மை நிரப்பி, சுய பரிதாபத்தில் (self-pity) நம்மை மூழ்கடிக்கும். கெனசரெத்து ஏரியில் பேதுரு பெற்றது இத்தகைய அனுபவம். அங்குதான் இயேசுவின் அன்புப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.
இயேசுவுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளில் பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம் இதுதான். எந்த நிலையில் தான் இருந்தாலும், இயேசுவிடம் தனக்குப் புகலிடம், தஞ்சம் உண்டு என்பதே அந்த அழகிய பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்த நிலையில் நாம் இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம் இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன் தலைமைப்பணியைத் துவக்கி, முதல் முப்பது நாட்களை நிறைவு செய்துள்ளார். அவர் தன் மறையுரைகளில் அடிக்கடி கூறிவரும் ஒரு கருத்து இதுதான்: "கருணை காட்டுவதில், அன்புடன் அரவணைப்பதில் கடவுள் களைப்படைவதே இல்லை; அவரை அண்டிச்செல்ல நாம்தான் தயங்குகிறோம், களைப்படைகிறோம்".
இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து, சலித்துப்போன சீடர்களுக்கு காலை உணவைத் தயாரித்து, அவர்களை உண்ணும்படி அழைத்த உயிர்த்த இயேசுவின் சலிப்பற்ற கருணையை, அரவணைப்பை இந்த உயிர்ப்புக் காலத்தில் உணர இறைவனை மன்றாடுவோம்.