23 February, 2014

Turning the other cheek is a U-Turn… மறுகன்னம் காட்டுவது, மற(று)க்கமுடியாத திருப்பம்


One day a truck driver stopped at a restaurant for dinner and ordered a steak. Before he could eat it, in walked a motorcycle gang, with dirty leather jackets and long, unkempt hair. They took the man's steak, cut it into six pieces, and ate it. The driver said nothing. He simply paid the bill and walked out. One of the gang members said, "That man couldn't talk. He didn't say a word." Another one said, "He couldn't fight, either; he didn't lift a hand." A waiter added, "I would say that he couldn't drive either. On his way out of the parking lot, he ran over six motorcycles crushing all of them." Something in us loves that story. We tend to support what truck driver had done – namely, ‘teaching a lesson’ to the motorcycle gang. We love stories and film scenes that talk of ‘an eye for an eye’, especially when they are connected with the protagonist.

Here is another scene, slightly different, of a protagonist – in the movie ‘Gandhi’! In this scene, Gandhi is shown walking with a friend Chalie Andrews who is a Presbyterian minister. The two suddenly find their way blocked by young thugs. The Reverend Andrews takes one look at the menacing gangsters and decides to run. Gandhi stops him and asks, "Doesn't the New Testament say if an enemy strikes you on the right cheek, you should offer him the left?" Andrews mumbles something about Jesus speaking metaphorically. Gandhi replies, "I'm not so sure. I suspect he meant you must show courage; be willing to take a blow, several blows, to show you will not strike back nor will you be turned aside."

The words of Jesus asking his disciples to turn the other cheek is given to us in today’s gospel (Matthew 5: 38-48). These words have been a source of inspiration as well as varied interpretations! Gandhi’s interpretation in this movie sounds quite chivalrous. According to Gandhi, turning the other cheek meant, showing courage in adversity. This could be one of the interpretations and not the only one.
Many of the sayings of Jesus lend themselves to myriads of interpretations. We need to look at the words of Jesus in the context. If not, there will be the danger of quoting His words out of context. It is said that even the devil does this!
For instance, Jesus, who asked his disciples ‘to turn the other cheek’ did not do it himself. We see this in the high priest’s house during the trial of Jesus (John 18: 19-23). We need to see the context in which Jesus did not turn his other cheek. During His trial (as in many other trials) when Jesus was speaking the truth, he was being silenced by the slap of the official. Hence, Jesus had to speak up. This is the context.

Coming to our gospel today, Jesus poses quite a few challenges to his disciples: “You have heard that it was said, ‘Eye for eye, and tooth for tooth.’ But I tell you, do not resist an evil person. If anyone slaps you on the right cheek, turn to them the other cheek also. And if anyone wants to sue you and take your shirt, hand over your coat as well. If anyone forces you to go one mile, go with them two miles. Give to the one who asks you, and do not turn away from the one who wants to borrow from you.” (Matthew 5: 38-42)
All these challenges are given by Jesus not to exhibit one’s courage, not even to accumulate one’s spiritual wealth. If we turn the other cheek only for our own benefit, it is of less importance. We need to turn the other cheek; we need to go the extra mile in order to win over the enemy. Enemy?
Does the disciple of Jesus have enemies? No. Remember last week’s challenge of leaving the offering at the altar even at the thought of others having a misunderstanding with us? Hence, a disciple of Jesus does not have enemies. But, if others behave as enemies, then it is the duty of the disciple to win them over. To do this, the disciple needs to take up all the challenges given by Jesus in today’s gospel: turning the other cheek, handing over the coat, and walking the extra mile.

When I was ‘googling’ with the phrase – ‘turning the other cheek’ – I came across very many life events that inspired me. These events are not simply stories of forgiveness. They are stories where the ‘enemy’ was won over by the ‘disciple’. Here is one of them:

A Short Lesson on Turning the Other Cheek - With Stories That Show How it is Better!
It was 8:30pm and over a hundred men and some women partners were all gathered in a park eating a really lovely meal served up to the poor and homeless in Sydney, Australia. One of my friends had finished his meal and was standing chatting when a big angry man came up and smashed him on the cheek with a punch. Nick, my friend, recovered from the shock and said, "Do you need to do that again?" The thug hit him with another hard punch and he got the same reply from Nick, "Do you need to do that again?" The thug hit Nick, who was a black belt in his own right, four times and four times Nick asked the same question. The heart of the thug was broken through this and he began to weep. He said, "Why won't you ring the police and put me in jail?"
Nick realized that this man was having a real hard time being out in free society after being locked up in the jail routines for too many years. Nick put his arm around him and said, "Do you want to come with me and have a nice brewed coffee and we will have a good chat?"

Those of you who would like to read more, please read these inspiring events:
Turning the Other Cheek
Modern Day Turn the Other Cheek
Litigious world can't fathom compassion
Such events do happen day after day around us. Only a few get the attention of the media. Unfortunately, our media seems to revel more often in stories of ‘Eye for eye and tooth for tooth’. We are aware of the famous quote: “An eye for an eye will make the whole world blind,” attributed to Gandhi. There is also a Chinese Proverb which says: “Whoever pursues revenge should dig two graves; one for the avenged and one for himself.”

An-eye-for-an-eye formula has made our world more of a graveyard than a nursery where love can be grown. Against such a formula, there are millions of us, ordinary humans, who still sow seeds of love. Here is one of us – Gladys Staines! Gladys Staines is the wife of Graham Staines who was burnt alive along with his two sons Philip and Timothy in Orissa, India (22nd January, 1999). When Dara Singh, who was convicted of these murders, was sentenced to death, Gladys made a plea to the court and to the government to commute the death sentence. She also made a public statement that she had forgiven those who had committed this crime. She believed that only in forgiveness can hope survive. Let us grow in courage and hope to turn the other cheek and go the extra mile to win over persons suffering from hatred!

Jesus is clearly advocating a new covenant which offers his peace, rather than the humanly orchestrated peace which is usually achieved through retaliation and aggression. President Abraham Lincoln often spoke kindly of Southerners, who of course during the Civil War were the enemies of the Union and its armies. A woman challenged Lincoln about his kindness, and told him that he should speak of Southerners as “enemies” and that he should intend to “destroy them.” President Lincoln is said to have replied, “Do I not destroy my enemies when I make them my friends?” (Greg Albrecht) http://www.ptm.org/uni/resources/ptmupdate/051010/1.html

நெடுவழிப்பாதையின் ஓரமாய் இருந்த 'ஓட்டலுக்கு முன்பாக ஒருவர் தன் லாரியை நிறுத்திவிட்டு, உள்ளே சாப்பிடச் சென்றார். அவர் கேட்ட உணவை, பரிமாறுபவர் கொண்டுவந்து வைத்தார். அப்போது, ‘மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு, அல்லது ஏழுபேர், அவரது உணவுத் தட்டைப் பறித்து, அட்டகாசமான வெற்றிச் சிரிப்புடன், தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். எதுவும் பேசாத லாரி ஓட்டுனர், தன் உணவுக்குரியத் தொகையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், "அவனுக்குப் பேசத்தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஓடிட்டான்" என்று சொல்லி உரக்கச் சிரித்தார். அந்தக் கும்பலைச் சார்ந்த மற்றொருவர், "அவனுக்குச் சண்டைபோடவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். கையை ஓங்காமலேயே ஓடிட்டான்" என்று கூறி, அவரும் பலமாகச் சிரித்தார். அப்போது ஓட்டலில் பரிமாறிக் கொண்டிருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "அவருக்கு லாரி ஒட்டவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நீங்க நிறுத்தி வச்சிருந்த மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் லாரி ஏத்தி நொறுக்கிட்டுப் போயிட்டார்" என்று சொன்னார்.
இந்தக் கதையைக் கேட்கும்போது, நம் மனங்களில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி உண்டாவதை உணர்கிறோம். இவ்விதமான காட்சிகள் நம் திரைப்படங்களில் அடிக்கடி வந்து நம் கைத்தட்டைப் பெற்றுள்ளன. அந்த லாரி ஓட்டுனர், மோட்டார் சைக்கிள் தாதாக்களுக்கு நல்ல பாடம் சொல்லித்தந்தார் என்ற மகிழ்ச்சியே கைத்தட்டலாக மாறுகிறது. 'பழிக்குப் பழி'யைப் பலவழிகளில் சொல்லும் கதைகளை, காட்சிகளை நாம் இரசிக்கிறோம்.
'பழிக்குப் பழி', 'பதிலுக்குப் பதில்', 'பல்லுக்குப் பல்' 'கண்ணுக்குக் கண்' ... இவை எதுவுமே கிறிஸ்தவ வாழ்வு முறை அல்ல என்பதை இன்றைய நற்செய்தி, ஆழமாய், மிக, மிக ஆழமாய் சொல்லித்தருகிறது. இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஒளியைத் தரவேண்டுமென்ற வேண்டுதலுடன் நம் சிந்தனைகளை இன்று துவக்குவோம்.

'காந்தி' என்ற திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவப் பணியாளர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறைத்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று சொல்வார்.
இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், ஒன்று 'ஹீரோத்தனமாகத் தெரியலாம், அல்லது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். நம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்களும் காந்தியடிகள் சொல்வதுபோல் அடிகளைத் தாங்கிக் கொள்வார்கள்... ஆனால், சிறிது நேரம் கழித்து, தாங்கள் பெற்ற அடிக்கு பல மடங்கு திருப்பித் தருவார்கள். நம் கைத்தட்டலைப் பெறுவார்கள்.

மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? என்ற கேள்விகள், இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கின்றன. இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறிவிடுகிறது. இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவற்றை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதுதான் அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்துகொள்ள முடியும்.
மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று கூறிய இயேசு, தலைமைக் குருவின் காவலர் தன்னை அறைந்தபோது, மறுகன்னத்தைக் காட்டுவதற்குப் பதில், "ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று கேள்வி கேட்டார் (யோவான் 18: 22-23). அவர் போதித்தது ஒன்று, அவர் செய்தது ஒன்று என்று அவசர முடிவுகள் எடுப்பதற்குப் பதில், இயேசுவின் கூற்றுகளை, சூழ்நிலையுடன் பார்ப்பது நல்லது.

தலைமைக் குருவுக்கு முன் விசாரணை நடந்தபோது, உண்மைகள் புதைக்கப்படக் கூடாது என்ற வேட்கையில் இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறிய சங்கடமான உண்மைகளை மௌனமாக்க காவலர் அறைந்தார். அந்தச் சூழலில் உண்மை வெளிவர வேண்டும் என்பது முக்கியம் என்று இயேசு உணர்ந்ததால், தன்னை மௌனமாக்க நினைத்த காவலரை எதிர்த்து கேள்வி கேட்டார்.
தன்னை அறைந்தவருக்கு மறுகன்னத்தைக் காட்டாமல் கேள்வி எழுப்பிய இயேசு, இன்றைய நற்செய்தியில், மறுகன்னத்தைக் காட்டச் சொல்கிறார்; உள்ளாடையைப் பறித்துச் செல்பவருக்கு மேலாடையையும் அவர் கேட்காமலேயே கொடுக்கச் சொல்கிறார்; நம்மை வலுக்கட்டாயமாக ஒரு மைல் தூரம் இழுத்துச் செல்பவருடன் இரண்டு மைல் தூரம் நடக்கச் சொல்கிறார். இவை அனைத்திற்கும் இயேசு சொல்லும் ஒரு முக்கியக் காரணம் இன்றைய நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. இப்பகுதியை மலைப்பொழிவின் உயிர்நாடி என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
மத்தேயு 5 : 43-45
“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாகஎனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

"மறுகன்னம்" (The Other Cheek) என்ற வார்த்தையைச் சுற்றி, நல்ல விளக்கங்கள், குதர்க்கமான விளக்கங்கள், விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல் என்பது பழையச் சட்டம். "கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே குருடாகிப்போகும் என்று காந்தியடிகள் சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொன்னதுபோல், அல்லது நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதுபோல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?
துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த துஷ்டன் மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அதைத்தான் இயேசு தரச்சொல்கிறார். நமது மறுகன்னத்தைக் காட்டும்போது, நமது பகைவர் மாறும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

மறுகன்னத்தைக் காட்டியதால் பகைவரிடம் உண்டான மனமாற்றங்கள், அவர்கள் பெற்ற மறுவாழ்வு இவற்றைக் கூறும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உலகில் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் இரவு 8 மணிக்கு ஒரு பூங்காவில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்பட்டன. Nick என்ற இளைஞனும் இக்கூட்டத்தில் ஒருவர். அவர் கராத்தேயில் திறமைபெற்று, கறுப்புப்பட்டை பெற்றவர். பொருளாதாரச் சரிவால் அவரும் இக்கூட்டத்தில் சேரும் நிலைக்கு உள்ளானார். அவர் அன்றிரவு தன் உணவை முடித்த வேளையில், அவரைவிட பலம் மிகுந்த ஒருவர் திடீரென Nickஇடம் வந்து அவரது முகத்தில் குத்தினார். நிலை தடுமாறி விழுந்தார் Nick. சுதாரித்து எழுந்த அவர், தன்னைக் குத்தியவரிடம், "மீண்டும் குத்துவதற்கு விருப்பமா?" என்று கேட்டார். அந்த பலசாலி மீண்டும் குத்தினார். மீண்டும் விழுந்து எழுந்த Nick, "மறுபடியும் குத்த விரும்புகிறாயா?" என்று அவரிடம் கேட்டார். இப்படி நான்கு அல்லது ஐந்து முறை குத்தியபின், அந்த பலசாலி கீழே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதார். Nick அவரருகே அமர்ந்தார். பலசாலி Nickஇடம், "நான் உன்னைக் குத்தினேன் என்று காவல் துறைக்குச் சொல்... அவர்கள் வந்து என்னைக் கைது செய்யட்டும்." என்று அழுதபடியே சொன்னார்.
அந்தப் பலசாலி பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். விடுதலை பெற்று வந்ததிலிருந்து உலகம் அவரை ஏற்றுக்கொள்ளாததால், அவரால் வெளி உலகில் வாழ முடியவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்புவதே மேல் என்று அவர் எண்ணினார். Nick அவரிடம், "சரி, வா. நாம் போய் காபி அருந்தியபடியே பேசுவோம்." என்று அவரை அழைத்துச்சென்றார். பலசாலியின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சிறைக்குள் அடைத்துக்கொள்வதே மேல் என்று எண்ணிய அந்த மனிதர், தன்னைச் சுற்றி எழுப்பியிருந்தச் சிறைகளிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தது Nick அவரிடம் தன் மறுகன்னத்தைக் காட்டிய அந்த நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து, Nick காட்டிய பரிவு.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல வீரர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் வீரச் செயல்களில் நூற்றில் ஒன்று அல்லது ஆயிரத்தில் ஒன்று என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை இரத்தத்தில் எழுதும் நம்மைப்பற்றி சொல்லப்படும் ஒரு சீனப் பழமொழி இது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவன் இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
பழிக்குப் பழி  என்று இவ்வுலகை ஒரு கல்லறைக்காடாக மாற்றும் உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக அங்கு துயருற்ற தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்த Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகரையும், Philip, Timothy என்ற அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் கேட்டுக்கொண்டார் என்ற செய்தியை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம்.

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களையும் மாற்றும் கனிவையும், துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

16 February, 2014

Internal and external offering… உள்ளும் புறமும் காணிக்கையாக...

The Heartbeat of Christianity is...

For the second week in succession, we are reflecting on the words of Jesus from the Sermon on the Mount. Last week we considered two imageries used by Jesus – Salt and Light. This week we begin our reflections with the imageries of Fire and Water. These imageries are given in the first reading from the Book of Sirach. The passage given today is very direct and lucid. Here it is:
SIRACH 15: 15-20
If you will, you can keep the commandments, and to act faithfully is a matter of your own choice. He has placed before you fire and water: stretch out your hand for whichever you wish. Before a man are life and death, and whichever he chooses will be given to him.

Fire and water are placed before us and we are asked to stretch out our hand to… touch? take? whichever we wish to choose. In the same way, life and death are before us and we are asked to choose. It is simple common sense that between fire and water we would stretch out our hands only towards water. Between life and death, we would choose only life. But… wait a moment! Things are not that simple and clear in life. Common sense does not guide all our choices all the time. There are other factors like habits, emotions and situational pressures. We can surely think of moments when we stretched out our hands towards fire. Dancing flames, though dangerous, are attractive. When a child, attracted by dancing flames, moves closer to the fire, we do not allow the child on this dangerous expedition… But, as grown ups, haven’t we undertaken such expeditions? Haven’t we played with fire?

Water and fire are in themselves lovely gifts from God, provided we use them properly. It is here that we, as a human family, have not learnt our lessons – especially the lesson of sharing these lovely gifts. We have ‘played with fire’ over the issue of equitable sharing of water resources. All of us know the anxiety expressed by very many knowledgeable people that ‘the third world war will be fought over water’.
A recent report "Water Cooperation for a Secure World" published (2013) by Strategic Foresight Group concludes that active water cooperation between countries reduces the risk of war. This conclusion is reached after examining trans-boundary water relations in over 200 shared river basins in 148 countries. (Wikipedia – Water conflict)

Sirach also talks of the choice between Life and Death. The famous Jesuit, Walter Burghardt, focused in on the phrase, ‘Before a man are life and death, whichever he chooses shall be given to him.’ He goes on to state that to the ancient Hebrews, life meant far more than the period between conception and death.  Life was what proceeded from loving and obeying God.  And death was not just that which followed the last breath on earth.  To the ancient Hebrews, death was the rejection of the living God. “Seek the Lord and you will live,” the prophet Amos tells the people.  He was not just speaking of eternity.  He was speaking of living life to its fullest right now.  And, conversely, isolate yourself from the love of the Lord, and you will join the living dead. (Homily from Father Joseph Pellegrino - http://homilies.net/)

Hence, for a faithful Hebrew, life was not measured in terms of quantity - the number of years, but in terms of the quality of life, spent in loving and obeying God. Unfortunately, the idea of loving and obeying God was reduced to following the Laws of Moses. Even here, the Israelites tended to follow the ‘letter’ of the Law than the ‘spirit’, since they were misled by the religious leaders. Jesus makes a subtle reference to this when he says in today’s Gospel: “For I tell you, unless your righteousness exceeds that of the scribes and Pharisees, you will never enter the kingdom of heaven.” (Mt. 5: 20)
The contrast between the ‘letter’ and the ‘spirit’ of the Law is the main theme of today’s Gospel passage – Matthew 5: 17-37. Jesus differentiates between the letter and spirit in two formulas… “You have heard that it was said … But I say unto you.” For the Jews who heard Jesus speak this way, this must have sounded too presumptuous. A carpenter’s son from Nazareth trying to be greater than Moses and the Prophets? Unthinkable! Hence, Jesus begins today’s discourse with a clarification:
Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them. For truly I tell you, until heaven and earth disappear, not the smallest letter, not the least stroke of a pen, will by any means disappear from the Law until everything is accomplished. Therefore anyone who sets aside one of the least of these commands and teaches others accordingly will be called least in the kingdom of heaven, but whoever practices and teaches these commands will be called great in the kingdom of heaven. (Matthew 5: 17-19)

Jesus is not setting aside the Law; but sets it up on a higher plane. He challenges his listeners to follow the spirit of the Law and live rather than follow the letter of the law and become living dead. The challenge of Jesus can be understood better if we take one set of the Laws – the laws prescribed for temple offerings. The Mosaic Law prescribed many details about the type of offering to be made for different occasions. For instance, minute details were given as to how old must the sacrificial lamb be and that it should be without blemish etc. (cf. Lev. 22:21)
The Laws dealt mostly with external requirements. They did not speak much on the internal requirements. Jesus brings the latter into focus. He says: “Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother or sister has something against you, leave your gift there in front of the altar. First go and be reconciled to them; then come and offer your gift.” (Matthew 5: 23-24)

This passage is a favourite one of mine in the Sermon on the Mount. It gives us a very high standard of reconciliation. Imagine the scene painted by Jesus, in these verses: You are at the altar to offer your gift. There you remember… Remember what? Remember that you have something against your brother or sister? NO… Remember that your brother or sister has something against you… This is the benchmark. Even when your brother or sister has something against you and you happen to remember it, then you cannot proceed to offer your gift. Your first duty is reconciliation; only then comes the offering.
I was just wondering what would be Jesus’ response if I asked him, “What if I had something against my brother or sister?” I can well imagine Jesus responding this way: “Well, if that is the case, forget about bringing any gift to the altar. Your first job is to be reconciled even before approaching the altar.” This is a very great challenge for us. If this challenge of Jesus is taken very seriously, then most of our Sunday Masses will have to come to an end by the time we come to the offertory. Almost all of us, including the priest, will have non-reconciled relationships. They need to be mended before offering the gifts. We need to become a better gift internally before we can offer the external gift at the altar.
Throughout today’s gospel, Jesus offers us quite a few challenges. In fact the whole Sermon on the Mount is very challenging. It makes us wonder whether such a life is possible here on earth. It makes us hunger and thirst after such a life here on earth. Such wonder, such hunger and thirst are steps to the altar of holiness where we can offer ourselves as a worthy Offering.

Leave there your gift before the altar
Stock photos courtesy of photos-public-domain.com - pdphoto.org

மலைமீது இயேசு தந்த மறையுரையின் மற்றொரு பகுதியை இரண்டாவது வாரமாக, தொடர்ந்து நாம் சிந்திக்க வந்திருக்கிறோம். சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச் சிந்தித்தோம். இந்த வாரம், நீரும், நெருப்பும் என்ற வேறு இரு உருவகங்களுடன் நமது சிந்தனைகளை ஆரம்பிப்போம். இன்றைய முதல் வாசகம் இவ்வுருவகங்களை நமக்குத் தருகிறது. சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இவ்வாசகம் மிக எளிய வார்த்தைகளில், அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களை நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் முதல் பகுதியைக் கேட்போம்.
சீராக்கின் ஞானம் 15: 15-17
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

நீரா, நெருப்பா? வாழ்வா, சாவா? என்ற கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான விடைகளை எளிதில் சொல்லிவிடலாம். நெருப்புக்குப்பதில், கைநீட்டி, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவுக்குப் பதில், வாழ்வை விரும்புவதே மேல் என்றும் நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில் நம்மை அறிவு மட்டுமா வழிநடத்துகிறது? உறவுகள், உணர்வுகள், ஊறிப்போன பழக்கங்கள் என்று வேறு பல கட்டாயங்களும் நம்மைத் தவறான வழியில் நடத்துகின்றனவே! சுடும் என்று தெரிந்தும், புண்படுவோம் என்று தெரிந்தும், நெருப்பைத் தேடிச்சென்று தொட்ட நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.

நம் கண்முன் நடனமாடும் நெருப்பு பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடி குழந்தை ஒன்று தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம்பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், எத்தனை முறை நாம் நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்? நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகள் நெருப்பில் சாம்பலாகியுள்ளன?
இறைவனின் படைப்பில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால், அவற்றை நாம் பயன்படுத்துவதைப் பொருத்து, நன்மை விளையலாம்; தீமையும் விளையலாம். நீரையும், நெருப்பையும் அளவுடன் பயன்படுத்தும் வழிகளை அனைவரும் கற்றுக்கொண்டால், அவை, அனைவருக்கும் பயன்படும் கருவிகளாக மாறும். அளவுகளை, கட்டுப்பாடுகளை நாம் மீறும்போது, அவை அழிவுக்கருவிகளாக மாறும்.
அளவற்ற, தேவையற்ற வகையில் நீரை வீணாக்கும் முதல் உலக நாடுகளின் மக்களை இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்போம். மூன்றாம் உலகப் போரென்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் நிகழும் என அஞ்சும் அளவுக்கு, நீரின் பற்றாக்குறை பெருகிவரும் இன்றையச் சூழலில், முதல் உலக நாட்டு மக்களும், இரண்டாம், மூன்றாம் உலகில் வாழும் செல்வந்தர்களும் விழிப்படைந்து, மிகுந்த கவனத்துடன் நீரைப் பயன்படுத்தும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுவோம். அதேபோல், பலவழிகளில் நெருப்போடு விளையாடுவோரை, குறிப்பாக இளையோரை, இந்நேரத்தில் நினைத்து, அவர்கள் தங்கள் விபரீதப் போக்குகளை விட்டு, நல்வழி வந்து சேர வேண்டுவோம்.

சீராக்கின் ஞானம் தரும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பமுடியும், விரும்பவேண்டும் என்று எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து Walter Burghardt என்ற இயேசுசபை அருள்பணியாளர் கூறும் விளக்கம், இக்கேள்வியை மற்றொரு கோணத்தில், இன்னும் சிறிது ஆழமாய் சிந்திக்க உதவும்.

சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற உடல் செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட வாழ்வு அல்ல. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, சீராக்கைப் பொருத்தவரை, இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், சீராக் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்கள் சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே. எனவே, மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன என்று சீராக் கூறும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் அவர் வைக்கிறார் என்று விளக்குகிறார் அருள்பணியாளர் Walter Burghardt.

இறைவனின் வழி வாழ்வதை, இஸ்ரயேல் மக்களில் பலர், மோசே தந்த இறைச் சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும் என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர். மோசேயின் சட்டங்களை, தங்கள் வசதிக்கேற்ப வளைத்து, அவ்வழியில் மக்களையும் தவறாக வழிநடத்தி வந்தனர், மதத்தலைவர்கள். எனவே, குருட்டுத்தனமாய் சட்டங்களைப் பின்பற்றும் மதத்தலைவர்கள் காட்டும் வாழ்வு, வெறும் மூச்சுவிடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை இயேசு மறைமுகமாக இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார்: மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். (மத். 5: 20) என்ற எச்சரிக்கையை மக்கள் முன் வைக்கிறார் இயேசு.
அதுமட்டுமல்ல, "முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்று இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்புலத்தில் வாழும் அதன் ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்றவேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

மோசே கூறிய சட்டங்களை இயேசு இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார். என்பதை, ஒரே ஓர் எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்துகொள்ள முயல்வோம். காணிக்கை பற்றி மோசே தந்த சட்டங்களை இயேசு எவ்விதம் எண்ணிப்பார்க்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
கோவிலுக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பவை, மோசே தந்த காணிக்கைச்சட்டங்களாய் இருந்தன. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறத்தில் உங்கள் கைகளில் ஏந்திவரும் காணிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும்; காணிக்கை செலுத்தவரும் உங்கள் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.
மத்தேயு நற்செய்தி 5: 23-24
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

நம் மனதில் அழகானதொரு காட்சியைத் தீட்டுகிறார் இயேசு. காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? இயேசு கூறும் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால் இன்னும் உயர்ந்ததாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... நம் சகோதரர் சகோதரிகள் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்லவேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று இயேசு சொல்கிறார்.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால்... என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் ஒருவேளை இவ்விதம் இருந்திருக்கும். நீ உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்கவேண்டாம். முதலில் உன் உறவைச் சீராக்குவதுபற்றி சிந்தித்து, செயல்படு. பின்னர் உனது காணிக்கையைப்பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.

காணிக்கைச் சட்டங்களைப் போலவே, இன்றைய நற்செய்தி முழுவதும் இயேசு சுட்டிக்காட்டும் மோசேயின், பல சட்டங்களும் வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு விடுக்கும் சவால்கள், நமது உள்புறத்தைச் சார்ந்தவை. வெளிப்படையான மாற்றத்திற்கு அல்ல, உண்மையான மனமாற்றத்திற்கு நம்மை அழைப்பவை.
தொடர்ந்து இரு வாரங்களாய் இயேசு தன் மலைப்பொழிவின் மூலம் சவால்களை நம்முன் வைக்கிறார். இப்படியும் வாழமுடியுமா என்ற கேள்வியை, பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை, கனவைத் தூண்டும் சவால்கள் இவை. இந்தச் சவால்களைச் சந்திக்கும் முயற்சியில் நாம் ஈடுபடும்போது, நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப் புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிக்கற்கள். அச்சிகரத்தை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் முதல் படியில் நாம் இன்று காலடி எடுத்துவைப்போம்.


09 February, 2014

Images linger longer… உருவகங்கள் உள்ளத்தில் உலவும்


Global Mandate Institute - Banner

“Courage, dear brothers! Probably half of us are in our old age. Old age, they say, is the seat of wisdom. The old ones have the wisdom that they have earned from walking through life. Let us give this wisdom to the youth: like good wine that improves with age, let us give the youth the wisdom of our lives.” This was the very first talk given by Pope Francis, when he met the College of Cardinals on March 15. One can easily see wit, wisdom and the power of imagination in this talk. Use of imageries has become the hallmark of Pope Francis. His homilies, talks, and writings have been quoted right, left and centre… mainly because of the rich images he has used. Here are just a few samples:
  • “Some end up sad – sad priests - in some sense becoming collectors of antiques or novelties, instead of being shepherds living with ‘the odour of the sheep’. This I ask you: be shepherds, with the ‘odour of the sheep’, make it real, as shepherds among your flock, fishers of men.” This was the homily given to the Priests during the Chrism Mass on Maundy Thursday morning – March, 28.
  • “But who is this God you believe in? An ‘all-over-the-place-god, a 'god-spray' so to speak, who is a little bit everywhere but who no-one really knows anything about?” was the question posed by Pope Francis while celebrating the morning Mass at Santa Martha on April 18.
  • An exclusive interview of Pope Francis, conducted by Fr Antonio Spadaro, S.J., editor in chief of La Civiltà Cattolica, the Italian Jesuit journal, became very famous due to its candour and rich imageries used. During the interview Fr Spadaro asked Pope Francis: “What kind of church do you dream of?” The Pope answered: “I see the church as a field hospital after battle.” This interview was published in September 19.  
  • On the same day (September 19) Pope Francis met the newly appointed Bishops who had come to Vatican for a meeting. Towards the end of his talk, he made an earnest appeal to the Bishops, which, once again, caught the attention of the media: “Espouse your community, be profoundly bonded to it!” the Pope said concluding his address. “I beg you, please, to stay among your people. Avoid the scandal of being 'airport bishops'!”
Imageries such as – ‘smell of the sheep’, ‘god-spray’, ‘the church as a field hospital’ and ‘airport bishops’ – have become some of the most quoted phrases of Pope Francis in the past 10 months.

Jesus has used stories and images in his preaching. Due to this, his messages have withstood the test of times and still make a lot of sense. The layers of meaning one can find in his parables and imageries seem unending. Matthew has collated most of the teachings of Jesus in one section (Chapters 5 to 7) as the Sermon on the Mount. As an apt preparation for the Lenten Season, we reflect on the famous passages from this Sermon today as well as the following four Sundays.
In today’s gospel passage - Matthew 5: 13-16 - Jesus uses the famous imageries of Salt and Light. Both have become universal imageries.
A deeper analysis of just two of the sentences from this Sunday’s Gospel would be enough for this Sunday’s reflections. “You are the salt of the earth… You are the light of the world…” Jesus did not say that we must be or need to be the salt or the light of the earth. Nor did he say we shall be the salt or the light. He simply said that WE ARE the salt and the light. This is not a condition or a future prediction. This is simply the present reality. You and I, dear friends, are already the salt of the earth and the light of the world. To be salt and light is the defining qualities of every disciple of Christ… of every Christian. Hence, it would be helpful to understand what is meant by ‘being salt’ and ‘being light’.

Salt is an essential ingredient of food; but, it cannot become one’s food. It needs to be added in small quantities to food to provide the necessary taste. Just because salt is an essential part of food, it cannot be added more than necessary. An overdose of salt makes the food unpalatable and it is thrown away. Salt also preserves food and has some healing qualities, as in the case of sore throat.
Similarly, a true disciple is an essential part of this world. He or she cannot stand aloof from the world but needs to mingle with this world in a proportionate way. When this proportion is lost, then the world becomes fit for the garbage along with the disciple. When the disciple is present in the world in the proper way, the world can be preserved and, if needed, healed.

The moment Jesus talks of us as salt of the earth, he comes up with a warning. What if we lose our saltiness?... There are quite a few explanations, some very scientific, to demonstrate how salt can lose its taste. Salt diluted beyond the limit, over exposed to elements of nature or exposed to other forces like electricity… can be some of the reasons given for salt to lose its taste. Once again, the parallel between salt and a disciple is clear.
The salt that has lost its taste, ‘is no longer good for anything, except to be thrown out and trampled underfoot.’ The image of salt getting trampled underfoot brought to my mind some sections of humanity who, like salt, serve as the essential part of the world and still get trampled by society all the time. I am thinking of those labourers involved in cleaning our roads, toilets etc. I am thinking of the agricultural labourers who toil hard to put food on our tables. If these labourers stop working just for a day, it would almost choke life out of the world. These very same labourers who are life-line of the world are denied their life-line and the necessary respect they fully deserve! The are trampled underfoot!

You are the light of the world… is another sentence replete with meaning. Once again, we need to look at the main traits of light. The moment we think of the word ‘light’, the word ‘darkness’ comes to mind. Even if the darkness is overpowering, a tiny lamp is enough to drive away darkness. A lamp does not draw attention to itself, but brings to light all things and persons around it. A lamp – whether it is a candle, an oil lamp, or an electric lamp – is able to spread light only when it burns its energy. All these and other characteristics of ‘light’ can be applied to a true disciple.

How to become a light to the world is eloquently answered in today’s first reading from Isaiah:
Isaiah 58:9-10
“If you do away with the yoke of oppression, with the pointing finger and malicious talk, and if you spend yourselves in behalf of the hungry and satisfy the needs of the oppressed, then your light will rise in the darkness, and your night will become like the noonday.”

Pope Francis, in the interview conducted in person by Fr Antonio Spadaro, S.J., editor in chief of La Civiltà Cattolica, the Italian Jesuit journal, gives us an idea of how the Church can serve as salt and ligt in today’s context. During the interview Fr Spadaro asked Pope Francis: “What does the church need most at this historic moment? Do we need reforms? What are your wishes for the church in the coming years? What kind of church do you dream of?”
“I see clearly,” the pope continued, “that the thing the church needs most today is the ability to heal wounds and to warm the hearts of the faithful; it needs nearness, proximity. I see the church as a field hospital after battle. It is useless to ask a seriously injured person if he has high cholesterol and about the level of his blood sugars! You have to heal his wounds. Then we can talk about everything else. Heal the wounds, heal the wounds.... And you have to start from the ground up.”

Let us be the Church that is able to heal the wounds (Salt) and to warm the hearts (Light) in the world which is a battle field!

"ஆடுகளின் இயற்கை மணத்தைத் தாங்கி, அவை மத்தியிலேயே தங்கும் மேய்ப்பர்களாக அருள் பணியாளர்கள் வாழ வேண்டும்." சென்ற ஆண்டு மார்ச் மாதம், புனித வியாழன் காலையில் இந்த வார்த்தைகள் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஒலித்தன. அன்று காலை, புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள் பணியாளர்களுக்கென வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
"நாம் மேலோட்டமாக நம்மீது தெளித்துக்கொள்ளும் நறுமண 'spray' போல இறைவனைக் கருதுகிறோமா? அல்லது, அவர் நம் வாழ்வில் இணைந்த ஓர் உறவாக விளங்குகிறாரா?" என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மார்த்தா இல்லத்தில், ஏப்ரல் மாதம் ஆற்றிய ஒரு திருப்பலியில் எழுப்பினார்.
உரோம் நகரில் செயலாற்றும் Civiltà Cattolica என்ற மையத்தின் இயக்குனரான இயேசு சபை அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்தந்தையுடன் மேற்கொண்ட ஒரு நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்குத் திருத்தந்தை அவர்கள், "போர்க்களத்தில் செயலாற்றும் ஒரு மருத்துவமனையைப் போல, திருஅவையை நான் காண்கிறேன்" என்று பதில் அளித்தார். இந்த நேர்காணலின் பதிவுகள் செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டு, உலகெங்கும் பெருமளவு வரவேற்பை பெற்றன.
அதே செப்டம்பர் 19ம் தேதியன்று, புதிதாகப் பொறுப்பேற்ற ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்தித்தபோது, "உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுடன் அதிக நேரம் தங்குங்கள். விமான நிலையத்து ஆயர்களாக மாறி, மக்களுக்கு அதிர்ச்சியூட்டாதீர்கள்" என்று அறிவுரை வழங்கினார்.

"ஆடுகளின் மணம்", "கடவுள் Spray", "போர்க்கள மருத்துவமனை", "விமான நிலைய ஆயர்கள்" என்ற உருவகங்கள் கடந்த சில மாதங்களாக உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த உருவகங்கள். உருவகங்களில் பேசுவது ஒரு தனி கலை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்கலையில் தேர்ந்தவராகத் தோன்றுகிறார். இவ்வுருவகங்களுடன் சேர்ந்து, அவர் கூறிய பல உண்மைகள் மனதில் ஆழப் பதிந்துள்ளன.
உருவகங்கள், உவமைகள் வழியே இயேசு கூறிய பல உண்மைகள், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னும், நமக்குள் தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. இயேசு பயன்படுத்திய உருவகங்கள் தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை. எவ்வித அடுக்குமொழியோ, அலங்காரமோ இல்லாமல், அவர் உருவகங்களின் உதவியுடன் சொன்ன உண்மைகள், மக்கள் மனங்களில் ஆழமாய், பாடங்களாய் பதிந்தன.
இயேசுவின் படிப்பினைகள் பலவற்றைத் தொகுத்து, மத்தேயு தனது நற்செய்தியில் 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில் மலைப்பொழிவாகத் தந்துள்ளார். அடுத்த மாதம் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு ஏற்ற ஒரு தயாரிப்பாக, இந்த ஞாயிறன்றும், இனி தொடரும் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மலைப்பொழிவின் வெவ்வேறு பகுதிகளைக் கேட்கவிருக்கிறோம்.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில் இயேசு இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்று இயேசு தன்னைச் சூழ்ந்திருந்த மக்களிடம் கூறியுள்ளார். உப்பும் விளக்கும் இல்லாத வீடுகள் இல்லை. ஏழை-பணக்காரன், அரசன்-ஆண்டி என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா வீடுகளிலும் பயன்படுவது உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களையும் ஆழமாய் அலசுவது பயனளிக்கும்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பாக இருப்பது என்றால் என்ன? உலகிற்கு உப்பாக இருப்பது என்றால் என்ன? என்ற இரு கேள்விகளை எழுப்பலாம்.
  • உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், ஒரு பகுதியாக இருப்பது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையே இல்லை. ஆனால், உப்பே உணவாக முடியாது. அப்படி யாராவது உப்பை உணவாகக் கொண்டால், அவர் தாகத்தால் தவிக்க வேண்டியிருக்கும்.
  • உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பு, ஓரு குறிப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தானே மிகவும் முக்கியம் என்று எண்ணி, உப்பு தன் அளவைக் கடந்து உணவுடன் சேர்ந்தால், அந்த உணவு குப்பைக்குத்தான் போக வேண்டும். உப்பில்லா உணவும், உப்பு அதிகமான உணவும் குப்பையிலே.
  • உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர் உலகின் உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?
  • அவர்கள் உலகின் ஒரு பகுதியாய், ஒரு முக்கியப் பகுதியாய் கலந்து, கரைந்து வாழ்கிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை.
  • உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும் உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.
  • உலகிற்கு மருந்தாகவும், உலகை அழிவிலிருந்து காக்கவும் இவர்கள் கருவிகளாக இருக்கின்றனர்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பே சுவையிழந்து போனால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், சூரிய வெப்பத்தால் உப்பு அதிகம் தாக்கப்பட்டால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, தளர்ந்து, உலகச் சக்திகளால் ஈர்க்கப்பட்டால், தாக்கப்பட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.
மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, என் மனதில் வேறொரு எண்ணமும் எழுகிறது. உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடித்து உழும் விவசாயிகள், என்று பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதை, மதிப்பு இவற்றை வழங்கும் மனம் நமக்கு வேண்டும்; உலகமும் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கவேண்டும் என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது இயேசுவின் அடுத்த உருவகம். ஒளி என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள் என்ற சொல் தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள் சூழும்போதுதானே ஒளியைப்பற்றி, விளக்கைப்பற்றி நாம் எண்ணிப்பார்ப்போம். நடுப்பகலில் விளக்கைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை.
இரவில் ஏற்றப்படும் விளக்கு, உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, தன்னையே விளம்பரப்படுத்துவதில்லை. தன்னையே வெளிச்சமிட்டு காட்டுவது அல்ல, மாறாகசுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்வதே விளக்கின் முக்கியப் பணி.
மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான் வெளிச்சம் தர முடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்க, இழக்க மறுக்கும் விளக்கு ஒளி தர முடியாது.
உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களையே விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

இயேசுவின் இவ்விரு கூற்றுக்களில் புதைந்துள்ள மற்றொரு நுணுக்கமான உண்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும் என்றோ, உப்பாக, ஒளியாக மாறுங்கள் என்றோ இயேசு கூறவில்லை. "நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்" என்று மலைமீது நின்று, உலகெல்லாம் கேட்கும்படி நம்மைப்பற்றி இயேசு பெருமையுடன் பறைசாற்றியுள்ளார். நம்மீது இயேசு கொண்டிருக்கும் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப உப்பாக, ஒளியாக வாழ்வோம்.

உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழவேண்டும் என்பதை தினசரி வாழ்வின் எதார்த்தங்களோடு இணைத்து, இறைவாக்கினர் எசாயா கூறும் கருத்துக்கள் இன்றைய முதல் வாசகத்தில் இவ்விதம் ஒலிக்கின்றன:
எசாயா 58: 8-10
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Civiltà Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில் உலகின் உப்பாக, ஒளியாக விளங்க வேண்டிய திருஅவையைக் குறித்து அழகான எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்:
"எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப் போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்க வேண்டும். பின்னர் ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை தன் பணிகளைத் துவக்கவேண்டும்." என்று தெளிவாகக் கூறினார்.
போர்க்களமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உப்பாக, ஒளியாக திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.


02 February, 2014

Holding a baby… a special art குழந்தையை ஏந்துவது தனிப்பட்ட ஒரு கலை


The Presentation in the Temple
Bead by Bead – Meditations of the Rosary

Years ago a young man was riding a bus from Chicago to Miami. He had a stop-over in Atlanta. While he was sitting at the lunch counter, a woman came out of the ladies’ restroom carrying a tiny baby. She walked up to this man and asked, “Would you hold my baby for me? I left my purse in the restroom.” He did. But as the woman neared the front door of the bus station, she darted out into the crowded street and was immediately lost in the crowd. This guy couldn’t believe his eyes. He rushed to the door to call the woman, but couldn’t see her anywhere. Now what should he do? Put the baby down and run? When calmness finally settled in, he went to the Traveler’s Aid booth and together with the local police; they soon found the real mother. You see, the woman who’d left him holding the baby wasn’t the baby’s real mother. She’d taken the child. Maybe it was to satisfy some motherly urge to hold a child or something else. No one really knows. But we do know that this man breathed a sigh of relief when the real mother was found. After all, what was he going to do with a baby?
In a way, each of us is in the same sort of situation as this young man. Every Christmas God Himself walks up to us and asks, “Would you hold My Baby for Me, please?” and then thrusts the Christ Child into our arms. And we’re left with the question, “What are we going to do with this Baby?” But an even deeper question is just, “Who is this Baby?” http://christchild.org/2013.html

Prophet Isaiah has responded to this question with a list of titles: For to us a child is born, to us a son is given; and his name will be called "Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace." (Is. 9:6)
Throughout the Bible, many more titles have been given to this Baby. Among the titles given to this Divine Child, one stands out as THE favourite – ‘Emmanuel, God with us’. This God is not a God who stays aloof in the heavens. If it were so, he would have chosen the temple or a great mountain top as the ‘site or his manifestation’. He chose rather to be born in a manger… He, as it were, just slipped into the crowd! It is quite symbolic that today’s gospel talks of how he ‘was taken’ to the Temple on the 40th day … just to fulfil some prescribed laws - (Luke 2: 22).

In the First Reading, Prophet Malachi talks of how the Lord will pay a surprise visit to the temple and how such a visit would ‘purify’ the practices of the temple.  "Behold, the Lord whom you seek will suddenly come to his temple, says the Lord of hosts. But who can endure the day of his coming, and who can stand when he appears? "For he is like a refiner's fire and like fullers' soap; he will sit as a refiner and purifier of silver, and he will purify the sons of Levi and refine them like gold and silver, till they present right offerings to the Lord. (Malachi 3: 1-3)
Malachi was saddened by the ‘defective’ practices… especially the unwholesome sacrifices being offered in the temple.
You say, 'How have we despised thy name?' By offering polluted food upon my altar. When you offer blind animals in sacrifice, is that no evil? And when you offer those that are lame or sick, is that no evil? Present that to your governor; will he be pleased with you or show you favor? says the Lord of hosts. (Malachi 1: 6-8)

The Temple in Jerusalem had been a source of scandal during the times of the Prophets as well as during the time of Jesus. Into this temple, the ‘perfect sacrifice’ was brought in by Mary and Joseph. But, the people around were not able to see this extraordinary grace, except two – Simeon and Anna! Simeon, although failing in his eyesight, was able to see the arrival of his salvation. He went up to Mary and made a special request: "Can I hold your Baby for a few minutes, please?"
Holding a new-born baby is an art. We need to be extra careful in handling the fragile body of the baby. The moment the baby is handed over, especially if the baby were asleep, it may scream. There could also be embarrassing moments when the baby answers nature’s call without any warning.
All these ‘problems’ become insignificant when the child, oblivious to the whole world, nestles in our arms and goes to sleep; or, better still, when the child gives us a heavenly smile. Nothing in this world would match this lovely moment in terms of beauty and satisfaction.
Simeon, overwhelmed by this beauty and filled with satisfaction could say those lovely words of farewell:  "Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word; for mine eyes have seen thy salvation which thou hast prepared in the presence of all peoples, a light for revelation to the Gentiles, and for glory to thy people Israel." (Lk. 2: 29-32)

This lovely scene is etched deep in my memory due to an incident that happened in the Community where I live. Our Jesuit Community has a floor reserved for senior Jesuits who need continuous nursing care. On this floor there is a chapel. Three years back there was a proposal to renovate this chapel with a mosaic as the background for the altar. Some of us suggested that a scene from the life of Jesus curing a person could be depicted. Fr Marko Rupnik, a Jesuit well-known for his mosaic art, was given this task. The scene he suggested took many of us by surprise. He suggested that he would like to depict the scene of Simeon holding the Baby Jesus in his arms. When asked for reason, he said that those who came to this community had reached a stage in their life where they were not asking the Lord to heal them; they were rather telling the Lord, like Simeon, “"Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word". That made more sense to us who had suggested other gospel scenes.
As we are contemplating this lovely scene of Jesus in the hands of Simeon, we pray for Priests and Religious the world over who are advanced in age and frail in health. We pray that the final phase of their lives be filled with the satisfaction experienced by Simeon.

We also think of thousands of ‘Anna’s who are spending their lives in doing very silent, menial works in and around Parish Churches. The lines describing Anna seem to suit many of the senior ladies and nuns who devote so much of their time and energy for the Church.
Anna did not depart from the temple, worshiping with fasting and prayer night and day. And coming up at that very hour she gave thanks to God, and spoke of him to all who were looking for the redemption of Jerusalem. (Lk. 2: 37-38)
Anna became an apostle in her own rights. We pray that all the silent workers of our Parishes may become living witnesses to the silent, redemptive power of God!

பெருநகர் ஒன்றை நோக்கி விரைந்தது ஒரு பேருந்து. நீண்ட பயணம் என்பதால், வழியில் உணவு இடைவேளைக்கென பேருந்து நின்றது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர், அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று, உணவு உண்ண அமர்ந்தார். அந்நேரம் அந்த உணவு விடுதியின் கழிவறையிலிருந்து வெளிப்பட்ட ஓர் இளம்பெண் இளைஞரை அணுகினார். அவர் கையில் ஒரு குழந்தை. அப்பெண் அவரிடம், "குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறீர்களா? என் 'பர்ஸ்'ஸை 'டாய்லெட்'டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்று கூறினார். இளைஞரும் குழந்தையைத் தன் கைகளில் பெற்றுக்கொண்டார். அப்பெண்ணோ, மீண்டும் கழிவறை பக்கம் செல்வதற்குப் பதில், உணவு விடுதியின் வாசலுக்கு விரைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞர், குழந்தையுடன் அவர்பின்னே சென்றார். வாயிலை அடைந்ததும், அந்த இளம்பெண் வேகமாக ஓடி மறைந்துவிட்டார்.
இளைஞருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையுடன் அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைக் கூறினார். காவல் துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, அக்குழந்தையின் தாயைக் கண்டுபிடித்தனர். அத்தாயைக் கண்ட இளைஞர் அதிர்ச்சியுற்றார். ஏனெனில், அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றது வேறொரு பெண். இப்போது வந்தவர் வேறொருவர். ஆனால், இவர்தான் உண்மையானத் தாய். ஓடிப்போன பெண், அக்குழந்தையை அருகிலிருந்த ஊரிலிருந்து கடத்திவந்திருந்தார். அவர் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ, அக்குழந்தையை இளைஞரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் மறைந்துவிட்டார். குழந்தையை அதன் உண்மையானத் தாயிடம் ஒப்படைத்தத் திருப்தியுடன் இளைஞர் அவ்விடம் விட்டு அகன்றார்.
உலகின் பல இடங்களில் இதையொத்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன. இந்நிகழ்வை ஓர் உவமைபோல எண்ணி, நம் சிந்தனைகளைத் தொடரலாம். இந்நிகழ்வில் இடம்பெறும் ஒரு காட்சி நம் ஞாயிறு சிந்தனைக்குப் பொருத்தமாகத் தெரிகிறது. குழந்தை இயேசுவை, கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளை, இஞ்ஞாயிறன்று கொண்டாடுகிறோம். கிறிஸ்துபிறப்பு விழா முடிந்து சரியாக 40வது நாள் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ், மற்றும் இன்றையத் திருநாள் இரண்டையும் இணைத்துச் சிந்திக்க, மேலே கூறிய நிகழ்வில் ஒரு காட்சி நமக்கு உதவியாக இருக்கும்... அதுதான், பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞர் கைகளில் எதிர்பாராதவிதமாக குழந்தை ஒன்று ஒப்படைக்கப்பட்டக் காட்சி.
நாம் அனைவரும் உலக வாழ்வு என்ற பயணத்தை மேற்கொண்டவர்கள். இந்தப் பயணத்தில் திடீரென ஒரு குழந்தை குறுக்கிடுகிறது. ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் நாம் சந்திக்கும்,ிந்திக்கும் உண்மை இது. தாயும் தந்தையும் ஆன இறைவன் நம் உலகப்பயணத்தின்போது குறிக்கிட்டு, "கொஞ்சநேரம் இக்குழந்தையை வைத்திருப்பாயா?" என்று, தன் அன்பு மகனை ஒரு குழந்தையாக நம் கைகளில் ஒப்படைக்கிறார்.

இயேசு என்ற குழந்தை, கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டார் என்ற உண்மையை இன்று நாம் கொண்டாடும்போது, இக்குழந்தை, இவ்வுலகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட, அல்லது நேர்ந்துவிடப்பட்ட குழந்தை என்பதையும் உணர்கிறோம். நேர்ந்துவிடப்பட்ட இக்குழந்தையைக் கைகளில் ஏந்தும்போது, "இக்குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?" என்ற கேள்வி நம் மனங்களில் எழுகிறது. அதைவிட இன்னும் ஆழமான, அடிப்படையான "இக்குழந்தை யார்?" என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த அடிப்படைக் கேள்விக்கு விடையாக, விவிலியம் முழுவதும் பல்வேறு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. இந்த அடைமொழிகளில் சிலவற்றை, இறைவாக்கினர் எசாயா இவ்விதம் தொகுத்துள்ளார்.
எசாயா 9: 6
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்.

இறைவாக்கினர் எசாயா குறிப்பிடும் இந்த அடைமொழிகள் அனைத்திற்கும் மேலாக, இக்குழந்தையைக் குறிப்பிட, நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஓர் அடைமொழி... எம்மானுவேல், அதாவது, நம்மோடு கடவுள். இந்தக் கடவுள், விண்ணகத்தில், எட்டாத தூரத்தில் வாழும் கடவுள் அல்ல, நம்மில் ஒருவர் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூற விழைந்தார். எனவே, கடவுளின் இல்லமான கோவிலில் தோன்றாமல், ஓர் எளிய மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பிறந்து 40 நாட்கள் சென்றபின்னரே, முதன்முறையாக, இறைவனின் இல்லம் என்று மக்களால் அழைக்கப்படும் கோவிலுக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார்.

தன் சொந்த இல்லத்திற்கு இறைவன் வருவார்; அதுவும் யாரும் எதிர்பாராத வகையில் வருவார்; அவரது வரவு சுகமான வரவாக இருக்காது என்பதை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் கூறியுள்ளார்:
மலாக்கி 3: 1-2
நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.

இறைவாக்கினர் மலாக்கி இவ்விதம் எச்சரிக்கை விடுப்பதற்குக் காரணம் இருந்தது. அவர் காலத்தில், எருசலேம் கோவில், தவறுகள் மண்டிப்போயிருந்த ஓர் இடமாக இருந்தது. இத்தவறுகளை இறைவாக்கினர் மலாக்கி தொகுத்துள்ளார். அவர் சுட்டிக்காட்டும் குறைகளில் ஒன்று இதோ:
மலாக்கி 1: 7-8
உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலியிடக் கொண்டு வருகிறீர்கள். அது குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ?” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
சமுதாயத் தலைவர்களிடம் கொடுக்கமுடியாத குறையுள்ள உயிரினங்களை கடவுளுக்குப் பலியிட்டுவந்த எருசலேம் கோவிலில், முழுமையான பலிப்பொருளாக இறைமகன் இயேசு கொண்டுவரப்பட்டார். அந்த முழுமையான பலிப்பொருளை அடையாளம் காணமுடியாமல் மக்களின் பார்வை மங்கிப்போயிருந்தது. ஆனால், உடலளவில் பார்வை மங்கிப்போயிருந்தாலும், ஆவியாரின் தூண்டுதலால் மனக்கண்களில் கூர்மைப் பெற்றிருந்த சிமியோன், அன்னா என்ற இருவரும் இந்தப் பலிப்பொருளைக் கண்ணாரக் கண்டனர். "என் குழந்தையைக் கொஞ்சநேரம் வைத்திருக்கிறாயா?" என்று கடவுள் சிமியோனைத் தூண்டியிருக்கவேண்டும்... எனவே அவராகவே முன்வந்து, மரியாவிடம், "அம்மா, உன் குழந்தையை நான் கொஞ்ச நேரம் வைத்திருக்கட்டுமா?" என்று கேட்டு, அவரைத் தன் கரங்களில் ஏந்தி நின்றார்.
பச்சிளம் குழந்தைகளைக் கையில் ஏந்துவது தனிப்பட்ட ஒரு கலை. குழந்தையை ஏந்தும்போது, அது அழுதுவிடுமோ அல்லது நேரம் காலம் தெரியாமல் குழந்தை இயற்கையின் நியதிகளை நிறைவேற்றிவிடுமோ என்ற பயங்கள் பலருக்கும் இருக்கும். இக்கவலைகள் ஏதுமின்றி, குழந்தையைக் கரங்களில் ஏந்தும்போது, அந்நேரத்தில் குழந்தை நம்மைப் பார்த்து சிரிக்கும்போது, அதில் கிடைக்கும் மனநிறைவு மிக, மிக உயர்ந்த ஒரு நிறைவு. அதைத்தான் சிமியோனும், அன்னாவும் அடைந்திருக்கவேண்டும்.

இந்தக் காட்சியைச் சிந்திக்கும்போது, உரோம் நகரில் உள்ள ஒரு சிற்றாலயம் என் நினைவுக்கு வருகிறது. இயேசுசபையில், வயதில் முதிர்ந்து, நோயுற்றிருக்கும் பலரை கண்காணித்துவரும் ஓர் இல்லத்தில் ஒரு சிற்றாலயம் அமைந்துள்ளது. அச்சிற்றாலயத்தில், பீடத்திற்குப் பின்புறம் ஓர் பொருத்தமான ஓவியம் வரைவதென்று முடிவு செய்தபோது, பல கருத்துக்கள் வெளிவந்தன. இயேசு குணமளிக்கும் ஏதாவது ஒரு நிகழ்வு அந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. அந்த ஓவியத்தை வரையவிருந்த ஓவியர் Marko Rupnik, ஒரு இயேசுசபை அருள் பணியாளர். அவரிடம் கருத்து கேட்டபோது, தான் தீட்ட விழைந்ததாக அவர் சொன்ன காட்சி ஆச்சரியம் தந்தது. வயதில் முதிர்ந்த சிமியோன், எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கைகளில் ஏந்தி நிற்கும் காட்சியே பொருத்தமானது என்று அவர் கூறினார். அவரிடம் காரணம் கேட்டபோது, அவர் சொன்னது இதுதான்: முதிர்ந்த வயதில், நோயுற்று, இந்த கண்காணிப்பு இல்லத்திற்கு வரும் இயேசுசபைத் துறவிகள், தங்களைக் குணப்படுத்தவேண்டும் என்று வேண்டுவதைவிட, தங்களை இவ்வுலகிலிருந்து அமைதியாக அழைத்துக் கொள்ளும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் நிலையில்தான் இங்கு வந்துள்ளனர் என்று அவர் விளக்கம் அளித்தார். அச்சிற்றாலயத்தில், குழந்தை இயேசுவைக் கரங்களில் தாங்கி, அக்குழந்தையின் முகத்தோடு தன் முகத்தை இணைத்துஅந்தத் தெய்வீகக் குழந்தையைப் பார்த்தபடியே சிமியோன் நிற்கும் காட்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிமியோன் அக்குழந்தையின் காதில் பின்வரும் புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்வதுபோல் இக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது: "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன" (லூக்கா 2:29-31).
குழந்தை இயேசுவைக் காணிக்கையாக அர்ப்பணித்தத் திருநாளான இன்று, இக்காட்சியை சிந்திக்கும்போது, வயதில் முதிர்ந்து, உடலால் தளர்ந்துள்ள அருள் பணியாளரை, துறவியரை எண்ணிப்பார்ப்போம். இவர்கள் ஒவ்வொருவரும் இறைமகனை ஏந்தியவண்ணம், மனநிறைவுடன் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற வேண்டுமென மன்றாடுவோம்.

அதேபோல், கோவிலைவிட்டு நீங்காமல், நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்த கைம்பெண் அன்னா அவர்களும்,  அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார் (லூக்கா 2: 37-38) என்று இன்றைய நற்செய்தியில் வாசித்தோம். எவ்வித விளம்பரமும் தேடாமல், திரைமறைவில் இருந்தபடி, நமது பங்குக் கோவில்களில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் அன்னையரை, அருள் சகோதரிகளை நன்றியோடு எண்ணிப்பார்ப்போம். கைம்பெண் அன்னா, கடவுளின் வருகையை எல்லாரிடமும் எடுத்துரைத்த திருத்தூதராக மாறியதுபோல, இவர்களும் தங்கள் பணி மூலம் கடவுளின் அழகை அமைதியாகப் பறைசாற்றிவருவதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். அவர்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.