28 September, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 6

Under the Shadow of His Wings

செப்டம்பர் 29, இப்புதனன்று, மிக்கேல், கபிரியேல், இரபேல் என்ற மூன்று தலைமை வானத்தூதர்களின் திருநாளைச் சிறப்பிக்கிறோம். வானதூதர்கள், உடலும், உருவமும் அற்றவர்கள் என்பதை நாம் அறிந்திருந்தாலும், அவர்களை நாம் ஓவியங்களில் வடிக்கும்போது, இறக்கைகள் கொண்ட மனிதப் பிறவிகளைப்போல் சித்திரிக்கிறோம்.
ஒரே கடவுளைப் பறைசாற்றும் கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மூன்று மறைகளின் புனித நூல்களில், வானத்தூதர்களைப் பற்றியும், அவர்களது இறக்கைகள் பற்றியும் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வானத்தூதர்களின் இறக்கைகள், கடவுளின் சக்தியையும், அவர் தரும் பாதுகாப்பையும் உணர்த்தும் அடையாளங்கள் என்பதைக்கூறும் பகுதிகளை, இம்மூன்று மறைகளின் புனித நூல்களில் காணலாம்.

யூத மரபில் வளர்ந்த தாவீது, கடவுளின் பாதுகாப்பை வேண்டி, 17வது திருப்பாடலில் எழுப்பும் வேண்டுதலில், 'கண்ணின் மணி', மற்றும், 'சிறகுகளின் நிழல்' என்ற இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளதில் வியப்பில்லை. இவ்விரு உருவகங்களில், 'கண்ணின் மணி' என்ற உருவகத்தை சென்ற விவிலியத்தேடலில் நாம் சிந்தித்தோம். இன்று, 'சிறகுகளின் நிழல்' என்ற உருவகத்தில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

'சிறகுகளின் நிழல்', அல்லது, 'இறக்கைகளின் நிழல்' என்ற உருவகம், இன்னும் சில திருப்பாடல்களில் இடம்பெற்றிருப்பதை நாம் காண்கிறோம்.
கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். (திருப்பாடல் 36:7) என்று, 36வது திருப்பாடலிலும்,
கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். (திருப்பாடல் 57:1) என்று, 57வது திருப்பாடலிலும்,
நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். (திருப்பாடல் 63:7) என்று, 63வது திருப்பாடலிலும்,
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். (திருப்பாடல் 91:4) என்று, 91வது திருப்பாடலிலும், காண்கிறோம்.

கடவுளின் கனிவையும், பாதுகாப்பையும் உணர்த்த, இயேசு, நற்செய்தியில், இறக்கை என்ற உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார். எருசலேம் நகரைக்குறித்து அவர் வேதனையுடன் எழுப்பும் புலம்பல், மத்தேயு, மற்றும் லூக்கா ஆகிய இரு நற்செய்திகளில் இவ்வாறு பதிவாகியுள்ளது: “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே!" (மத்தேயு 23:37; லூக்கா 13:34)

இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் 'கண்ணின் மணி', மற்றும் 'சிறகுகளின் நிழல்' என்ற இரு உருவகங்களை, தாவீது, 17வது திருப்பாடலில், இணைத்து கூறியிருப்பதுபோல், இணைச்சட்ட நூலில் இவ்விரு உருவங்களும் இணைத்து சொல்லப்பட்டுள்ளன. இணைச்சட்ட நூலின் இறுதியில், மோசே தன் மரணத்திற்கு முன், இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு பாடலையும் ஆசீரையும் வழங்குகிறார்.
பின்னர் இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார் (இணைச்சட்டம் 31:30) என்ற அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இப்பாடல், 43 இறைவாக்கியங்களாக பதிவாகியுள்ளது. இப்பாடலின் 9 மற்றும், 10 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இஸ்ரயேல் மக்களை, குறிப்பாக, யாக்கோபை ஆண்டவர் எவ்வாறு காப்பார் என்று கூறும்போது, 'கண்ணின் மணி', மற்றும் 'சிறகுகள்' என்ற இரு உருவகங்களை மோசே ஒன்றன்பின் ஒன்றாகக் கூறியுள்ளார்:
இணைச்சட்டம் 32:9-12
ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார். கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்துசெல்வது போலும் ... ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.

இஸ்ரயேல் மக்களையும், யாக்கோபையும் இறைவன் கண்ணின் மணியாக, கழுகின் சிறகுகளைப்போல் அணைத்துக் காத்ததற்குக் காரணம், அம்மக்களைச் சூழ்ந்திருந்த ஏனைய இனத்தவர் மற்றும் ஏனைய தெய்வங்கள் என்பதை மோசே தன் இறுதிப் பாடலில் கூறியுள்ளார். அதேவண்ணம், இறைவன் கண்ணின் மணியாக தன்னைக் காக்கவேண்டும், என்றும், சிறகுகளின் நிழலில் தன்னை மூடிக்கொள்ளவேண்டும் என்றும் தாவீது வலியுறுத்திக் கூறுவதன் காரணம், அவரைச் சூழ்ந்திருக்கும் பொல்லார் மற்றும் எதிரிகள் என்பதை, 17ம் திருப்பாடலின் 9 முதல் 12 முடிய உள்ள 4 இறைவாக்கியங்களில் கூறியுள்ளார்.
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும். (திருப்பாடல் 17:8-9) என்று வேண்டும் தாவீது, தன் எதிரிகள் எத்தகையவர் என்பதையும், அவர்களால் தனக்கு உருவாகியிருக்கும் ஆபத்தையும், அடுத்த 3 இறைவாக்கியங்களில் விவரிக்கிறார்.
அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள். தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள். அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர். பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர். (திருப்பாடல் 17:10-12)

தன்னை, எதிரிகள் சூழ்ந்திருக்கும் வேளையில், இறைவன் தன்னை 'சிறகுகளின் நிழலில்' மூடிக்கொள்ளவேண்டும் என்று தாவீது வேண்டியது, அத்தகையை நெருக்கடியானச் சூழல்களில் வாழ்ந்த பலருக்கு ஓர் உந்துசக்தியாக அமைந்தது என்று எண்ணிப்பார்க்கலாம். அவர்களில் ஒருவர், அசிசி நகர் புனித பிரான்சிஸ் துறவுசபையைச் சேர்ந்த அருள்பணி Gereon Goldmann அவர்கள்.
ஜெர்மன் நாட்டில் பிறந்த Goldmann அவர்கள், அருள்பணித்துவப் பயிற்சியை முடித்தபின், அந்நாட்டின் நாத்சி படையில் வலுக்கட்டாயமாக பணியில் இணைக்கப்பட்டார். நாத்சி வதைமுகாம்களில், உடன் இராணுவ வீரர்கள் பலரின் கிறிஸ்தவ நம்பிக்கையைக் காக்கவும், வதைமுகாமில் அடைபட்டோர் நடுவிலும், தன் அருள்பணித்துவ பணிகளைத் தொடர்ந்தார். 'பீறிப்போடத் துடிக்கும் சிங்கம்போல' அவரைச் சூழ்ந்திருந்த நாத்சி வெறியர்கள் நடுவே, அவர் ஆற்றியப் பணிகளைப்பற்றி, 2000மாம் ஆண்டு அவர் ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு, "The Shadow of His Wings: The True Story of Fr. Gereon Goldmann, OFM" அதாவது, "அவரது சிறகுகளின் நிழல்: அருள்பணி Gereon Goldmannன் உண்மைக்கதை"
The Shadow of His Wings – The book-cover

"ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்ற வேண்டுதலுடன், தன் வழக்கைத் துவக்கிய தாவீது, தன்னைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களை இறைவனிடம் கூறியபின், தனக்கெதிராக திரண்டிருக்கும் பொல்லாதவருக்கு, ஆண்டவர் வழங்கக்கூடிய தண்டனைகளை, அடுத்த இரு இறைவாக்கியங்களில் பட்டியலிடுகிறார்:
ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடியும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும். ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து — இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து — உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். (திருப்பாடல் 17:13-14அ)
ஏனையத் திருப்பாடல்களைப்போல், 17வது திருப்பாடலையும், தாவீது, நம்பிக்கை நிறைந்த சொற்களுடன் நிறைவுசெய்துள்ளார். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவுபெறுவேன். (திருப்பாடல் 17:15)

இத்திருப்பாடலின் இறுதி இரு இறைவாக்கியங்கள், எதிரெதிர் துருவங்களாக விளங்குகின்றன என்று விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். "இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும்" மனிதர்களைப்பற்றி 14ம் இறைவாக்கியத்தில் கூறும் தாவீது, அடுத்த இறைவாக்கியத்தில், தன் கதி, இறைவனின் முகத்தைக் கண்டு நிறைவடைவது என்று கூறி முடிக்கிறார்.

தாவீது, தனக்குள்ளேயே ஒரு நீதிமன்றத்தை அமைத்து, தன் நிலையையும், தன் எதிரிகள் நிலையையும் விளக்கிக் கூறி, இறுதியில் "மாண்புமிகு நீதிபதி அவர்களே..." என்று, இறைவனிடம் தன் விண்ணப்பங்களைச் சமர்பித்துள்ளார், இந்தத் திருப்பாடல் வழியாக.

நாமும் வாழ்க்கையில் பலமுறை நம் மனங்களில், நம் குடும்பங்களில், நீதி மன்றங்களை அமைக்கிறோம். வாதிடுகிறோம் தீர்ப்பும் சொல்கிறோம். அந்நேரங்களில், தாவீது, இத்திருப்பாடல் வழியாக சொல்லித்தரும் ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.

நாம் வாழ்க்கையில் வழக்குகளை உருவாக்கும்போது, அல்லது சந்திக்கும்போது, நம்மைப்பற்றிய தெளிவும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப்பற்றிய தெளிவும் இருக்கவேண்டும். இந்தத் தெளிவு இருந்தால், நம் வழக்குகளின் பிரச்சனைகள் பாதி தீர்த்துவிடும். தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள் சூழும்போது, இறைவன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், மீதிப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்... இதைத்தான் 17வது திருப்பாடலின் வழியே தாவீது நமக்குச் சொல்லித்தருகிறார்.

தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள், வழக்குகள் மத்தியில், இறைவன் மீது நம் நம்பிக்கையை இன்னும் ஆழப்படுத்துவதற்கு உதவியாக, 17வது திருப்பாடலின் ஒருசில வரிகள் நம் மனங்களில் இன்றும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து ஒலிக்கட்டும்.
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். (திருப்பாடல் 17:7-8,15)

24 September, 2021

The vaccine against selfishness சுயநலத்தை எதிர்க்கும் தடுப்பூசி

 
If your hand causes you to sin...

26th Sunday in Ordinary Time

In Greek history we read of a young man who so distinguished himself in public games that his fellow citizens raised a statue in his honour, to keep fresh the memory of his victories. This statue so excited the envy of another rival who had been defeated in the races, that, one night he stole out under cover of darkness with the intention to destroy the statue. But he only nicked it slightly. He gave it a final heave and it fell – on top of him and killed him. - Frank Michalic in ‘1000 Stories You Can Use’.
Right from the time of Cain and Abel, history has shown that envy always harms the person who harbours it. Those who suffer from envy, may have to do things ‘under the cover of darkness’ rather than in broad daylight.

Our Sunday Readings, taken from the Book of Numbers (11: 25-29) and the Gospel of Mark (9: 38-48) talk of envy. Envy, like many other vices, begins with the shortest and the most dangerous English word ‘I’. Once the ‘I’ or the ‘We’ is put on a pedestal, there is no room for others to share the pedestal.

In the First Reading, we come across Joshua who wants Moses to forbid two persons - Eldad and Medad - who were prophesying even though they did not come to the tent to receive the spirit. The reply given by Moses is very magnanimous:
Numbers 11: 28-29
And Joshua the son of Nun, the minister of Moses, one of his chosen men, said, "My lord Moses, forbid them." But Moses said to him, "Are you jealous for my sake? Would that all the Lord's people were prophets, that the Lord would put his spirit upon them!"

A similar scene is reported in today’s Gospel.
Mark 9: 38-39
John said to Jesus, "Teacher, we saw a man casting out demons in your name, and we forbade him, because he was not following us." But Jesus said, "Do not forbid him; for no one who does a mighty work in my name will be able soon after to speak evil of me.”

What is so striking in these two episodes is, that, envy oozes out of ‘holy people’, engaged in a ‘holy mission’. We are sadly aware, of the scandal of envy that is found among Catholic leaders, Christian leaders and, in general, leaders of all religions. If this is the case with the ‘green tree’, what about the ‘dried-up tree’ – namely, the envy that rules the commercial and political worlds? While the envy in ‘holy circles’ comes out surreptitiously, the envy in commercial and political circles is expressed openly as ‘cut-throat-competition’!

The responses of both Moses and Jesus give a very simple solution. Both of them have suggested that it is better that everyone has equal share of all the blessings of God. But, unfortunately, when a few try to grab everything for themselves, troubles multiply.

In the second reading taken from the Letter of James, we hear very strong words spoken against the rich who wish to hoard everything for themselves.
James 5:1-6
Come now, you rich, weep and howl for the miseries that are coming upon you. Your riches have rotted and your garments are moth-eaten. Your gold and silver have rusted, and their rust will be evidence against you and will eat your flesh like fire. You have laid up treasure for the last days.  Behold, the wages of the laborers who mowed your fields, which you kept back by fraud, cry out; and the cries of the harvesters have reached the ears of the Lord of hosts. You have lived on the earth in luxury and in pleasure; you have fattened your hearts in a day of slaughter. You have condemned, you have killed the righteous man; he does not resist you.
After having given such a direct, forthright condemnation of the rich, it is no surprise that Apostle James was inviting trouble and eventual martyrdom.

St James must have been inspired by the courage shown by Jesus on various occasions during his earthly ministry. One such courageous moment in recorded in today’s Gospel. Jesus uses strong language to condemn those who are a cause of sin for the little ones.
“Whoever causes one of these little ones who believe in me to sin, it would be better for him if a great millstone were hung round his neck and he were thrown into the sea.” (Mark 9:42)

When we hear these strong words of Jesus, our minds recall thousands of ‘little ones’ who have been sexually abused by priests and bishops in the Catholic Church. We are also sadly aware of how women (especially nuns) have been exploited by the same group of church personnel. ‘The little ones’ that Jesus is speaking of here are not only children, but also the women, the poor, the excluded, the marginalised … the ‘anawim’, who have nurtured a ‘simple faith in Jesus’.

For those who are prone to sin, Jesus goes on to give a crude solution. He says that it is better to lose a limb than life – eternal life. I am reminded of a news story I read some years back. It was about a man working in the railways in a remote part of Australia. As he was engaged in some work, he was bitten on his hand by a poisonous snake. He had hardly any chance to reach the hospital quickly. He knew that every second he waited, would make his life more precarious. He chopped his hand off, using an axe. He continued to live with an amputated hand. For the question of choosing between life and limb, he had chosen, life!

This may be a rare case. But, the question – life or limb – is often asked in our hospitals. This question does not pop up all of a sudden, as in the case of our friend from Australia, bitten by the snake. The question of life or limb that echoes in our hospitals, often comes, as the last resort to those who have not heeded earlier warnings. Imagine a person suffering from diabetes. If he/she takes care of his/her eating, and does regular exercises, he/she can live with this problem. Different warnings may come his/her way, as for instance, a small wound! But, if he/she ignores these warnings and goes on with his/her usual life style, the wound develops into gangrene and he/she will have to come to the point of ‘life or limb’ choice!

After having reflected on envy that excludes others, as well as Jesus’ concern expressed for the ‘little ones’, our closing thoughts turn to this Sunday, the last Sunday of September, which is commemorated in the Catholic Church as the ‘World Day of Migrants and Refugees’.

The origins of the World Day of Migrants and Refugees can be traced back to 1914, a few months before the outbreak of World War I. Touched by the difficult circumstances under which millions of Italians who had migrated abroad since the beginning of the 20th century, Pope St Pius X called on all Christians to pray for migrants. A few months later, his successor Pope Benedict XV instituted the Day of the Migrant to support spiritually and economically the pastoral work for Italian emigrants. 
Since 1985, Pope St John Paul II has issued a message each year drawing attention to some of the specific realities and difficulties of people on the move, calling the Church to action. In 2004, the Pontifical Council for the Pastoral Care of Migrants and Itinerant People extended the day to refugees calling it the World Day of Migrants and Refugees. At the behest of Pope St. John Paul II, since 2005, the World Day of Migrants and Refugees has been celebrated by the Universal Church on the 2nd Sunday after the Epiphany.

On the 104th World Day of Migrants and Refugees, January 14, 2018, Pope Francis announced the change in the date of celebration which will be the last Sunday of September. Hence, this year, the 107th World Day of Migrants and Refugees is celebrated for the third time on the last Sunday of September.
For this year’s celebration, Pope Francis published a message with the title: TOWARDS AN EVER WIDER “WE” – a message that insists on inclusion, especially after the pandemic. Here are the opening lines of this message:
In the Encyclical Fratelli Tutti, I expressed a concern and a hope that remain uppermost in my thoughts: “Once this health crisis passes, our worst response would be to plunge even more deeply into feverish consumerism and new forms of egotistic self-preservation. God willing, after all this, we will think no longer in terms of ‘them’ and ‘those’, but only ‘us’” (No. 35).
For this reason, I have wished to devote the Message for this year’s World Day of Migrants and Refugees to the theme, Towards An Ever Wider “We”, in order to indicate a clear horizon for our common journey in this world.

Envy as well as other vices born of selfishness have killed the ‘We’ sense in our present world. Let us pray that we nurture a broader sense of inclusiveness advocated by Moses, Jesus and many other Popes, including Pope Francis. Let the strong words of Jesus spoken in today’s Gospel – a bitter medicine – serve as a vaccine to fight against all forms of selfish viruses, in the post-pandemic life!

If your eye causes you to sin…

பொதுக்காலம் 26ம் ஞாயிறு

கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளைஞர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் புழுங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.
பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைச் சந்தித்தனர் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

பொறாமை என்ற உணர்வின் அடித்தளமாக இருப்பது, நமக்குள் நாமே உருவாக்கிக்கொள்ளும் பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.
மோசேயிடமிருந்து நேரடியாக ஆசீரைப் பெறாத எல்தாது, மேதாது என்ற இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இயேசுவைச் சாராத ஒருவர், அவரது பெயரால் பேய் ஓட்டுவதைக் கணடு, அவரைத் தடுக்கமுயன்ற, இயேசுவின் சீடர் யோவானை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. அத்துடன், இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.
நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை, ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்துவருகிறோம். நமது பொறாமை உணர்வை குணமாக்கும் மருந்தை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது. மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார். (எண்ணிக்கை 11:29)
அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது. அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார். (மாற்கு 9: 39)

புனிதப்பணியாற்றும் ஆசீர் அனைவருக்கும் கிடைத்தால் எவ்வளவோ அழகானது என்றெண்ணும் பரந்துவிரிந்த உள்ளத்தை வளர்த்துக்கொள்ளாமல், அனைத்து ஆசீரும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று ஒருவர் எண்ணும்போது, பிரச்சனைகள் தோன்றுகின்றன. அனைத்தும் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் செல்வங்களை குவித்துவைக்கும் செல்வர்களுக்கு, திருத்தூதர் யாக்கோபு வழங்கும் எச்சரிக்கை இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:
யாக்கோபு 5: 1-6
செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப்போயிற்று... உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும்.
உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
செல்வர்களுக்கு எதிராக இத்தனை துணிவுடன் கண்டனங்களை அடுக்கிவைத்த திருத்தூதர் யாக்கோபு, கொல்லப்பட்டதில் சிறிதும் வியப்பில்லை!

புனித யாக்கோபை இவ்வளவு துணிவு கொள்ளச்செய்தது, அவர் இயேசுவின் பணிவாழ்வில் கண்ட துணிவு. இயேசுவின் துணிவு, இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் கடினமான எச்சரிக்கைகளில் தெளிவாகிறது.
சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறிவது மேல் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன. இந்த ஆலோசனைகள், நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

சவால்கள் நிறைந்த இயேசுவின் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ள, அவர் எந்தப் பின்னணியில் இவற்றைச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளை, சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப்போல் மாறுங்கள் என்று கூறினார் இயேசு. ஆனால், நடைமுறையில் அவர் கண்டது வேறு. அவரது கூற்றுகளுக்கு நேர் மாறாக, குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை, வயதில் முதிர்ந்தவர்களின் உலகில், வலுக்கட்டாயமாக திணிப்பவர்களைக் குறித்து, இயேசு இன்றைய நற்செய்தியில் எச்சரிக்கை விடுக்கிறார். மனசாட்சியற்ற இந்த அரக்கர்களால் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துக்களை நினைத்து, கொதித்தெழுகிறார்.

குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள், சமுதாயத்தில் சிறியவர்கள், அனைவரையும் இச்சிறியோருள் என்ற சொல்லில் இணைத்துவிடுகிறார் இயேசு. "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையை பெரும் வேதனையில் ஆழ்த்திவரும் ஒரு குற்றச்சாட்டு, சிறியோருக்கும், பெண்களுக்கும் எதிராக, ஒருசில அருள்பணியாளர்களாலும், ஆயர்களாலும் இழைக்கப்பட்டுவரும் பாலியல் குற்றங்கள். இனிவரும் காலங்களில், சிறியோரும், பெண்களும், திருஅவையில், பாதுகாப்பை உணரும்வண்ணம், தகுந்த வழிமுறைகள் உருவாகவேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.

சமுதாயம் என்ற உடலின் நலனைக் கெடுக்கும் நோயாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவரையை, இயேசு, இன்றைய நற்செய்தியில், கடினமான வழியில் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மாற்றங்களை உருவாக்குவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டியிருக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கை, கால் இவற்றை வெட்டிப்போடுங்கள், கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், என்று இயேசு கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையில் கொத்திவிடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு அது. மருத்துவமனை செல்வதற்கு நேரமோ, வாகனவசதியோ இல்லாத நிலை. வாகனத்திற்காகக் காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து இருந்தது. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவர், தன் கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற பல நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில், உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயத்தால் புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.
உயிரா, உறுப்பா என்ற கேள்வியைச் சந்திக்கும் இறுதிநிலை, ஒரு நாளிலோ, ஓரிரவிலோ வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கொத்தியதால், கையை வெட்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற இறுதிநிலைக்குத் தள்ளப்படுவது, அடிக்கடி நிகழ்வதுதானே. அந்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்வைப் புரட்டிப்பார்த்தால், சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு வரும் சர்க்கரை வியாதியை எண்ணிப்பார்ப்போம். அந்த வியாதி வருவதை, பல வழிகளில் நம்மால் தடுக்கமுடியும். அடுத்து, அந்தக் வியாதி உள்ளதென்று கண்டுபிடித்தவுடன், நமது உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி, மருந்துகள் என்று, காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், சர்க்கரை வியாதி என்ற குறையோடு பல ஆண்டுகள் வாழமுடியும். அவ்வகை கட்டுப்பாடுகள் இல்லாமல் வாழ்வோரின் கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும், அவர்களுக்கு தரப்படும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய நிலை வரும்.

உடல்நலனைக் கெடுக்கும் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும், என்ற அறிவுரைகள், எல்லாருக்கும் தேவையானவைதானே! இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக்கொள்வது நல்லது. அந்த மாற்றம், இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.

இறுதியாக, ஓர் எண்ணம், ஒரு வேண்டுதல்... ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளைச் சிறப்பிக்கிறது. இந்த உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள செய்தி, "இன்னும் விரிவடைந்த 'நாம்'- என்பதை நோக்கி" (Towards An Ever Wider “We”) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இச்செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை கூறியுள்ள சொற்களுடன் நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம்:
'அனைவரும் உடன்பிறந்தோர்' (Fratelli Tutti) திருமடலில் நான் வெளியிட்ட ஒரு நம்பிக்கை என் எண்ணங்களில் இப்போது மேலோங்கியுள்ளது: "உலகமனைத்தும் சந்திக்கும் இந்த நலவாழ்வு நெருக்கடி கடந்துபோகும் வேளையில், நாம் நுகர்வுக் கலாச்சாரத்திலும், தன்னை மட்டுமே காத்துக்கொள்ளும் சுயநலத்திலும் இன்னும் அதிகமாக மூழ்கிவிடும் ஆபத்து உண்டு. இறைவனுக்கு விருப்பமானால், இனி, 'அவர்கள்' 'அவை' என்ற எண்ணங்களை விடுத்து, 'நாம்' என்ற எண்ணத்தில் சிந்திப்போமாக".

நான் என்ற சுயநல நிலையிலிருந்து வெளியேறி, நாம் என்ற பரந்துவிரிந்த மனதை அனைவரும் பெறுவதற்கு இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.



21 September, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல் 17 - மாசற்றவனின் மன்றாட்டு 5

The apple of your eye

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள், இரு வாரங்களுக்குமுன், செப்டம்பர் 3ம் தேதி வெளியிட்ட ஓர் அரசாணையின் அறிமுக வரிகள் இவை:
"2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி (9/11) நடைபெற்ற அரக்கத்தனமான தாக்குதல்களின் முழு விவரங்களை அறிவதற்கு, இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த தாக்குதல்களில் தப்பிப் பிழைத்தவர்கள் ஆகியோர் உட்பட, பல அமெரிக்கர்கள் விழைகின்றனர். இந்தத் தாக்குதல்களின் 20ம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில், இந்த தாக்குதல்களைப் பற்றி அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுக்குத் தெரிந்த தகவல்களைப் பெறுவதற்கு, அமெரிக்க மக்களுக்கு உரிமை உள்ளது"

நியூ யார்க் நகரில் கட்ட்ப்பட்டிருந்த இரட்டை வர்த்தகக் கோபுரங்கள், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் தலைமையகமான, 'பென்டகன்' என்ற கட்டடம் ஆகியவற்றில், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களைப்பற்றிய முழு உண்மைகள் வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்தி, அரசுத்தலைவர் பைடன் அவர்கள், இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். இதற்குப் பிறகாவது, முழு உண்மைகள் வெளிவருமா என்பதை, காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேபோல், உலகின் பல நாடுகளில், மக்களின் கண்முன்னே, பட்டப்பகலில், பொது இடங்களில் நடைபெற்ற பல வன்முறைகள், இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளாக நீதிமன்றங்களில் நடைபெற்றுவருகின்றன. இந்தியாவில் நடைபெற்ற மும்பை கலவரம், கந்தமால் கலவரம், குஜராத் கலவரம், தூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' துப்பாக்கிச்சூடு, இன்னும், ஒவ்வோர் ஆண்டும், தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் அனைத்தும், பல்வேறு வழக்குகளாக நீதிமன்றங்களில் குவிந்துள்ளன. இந்த வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள், அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் எனில், அந்த வழக்கின் தீர்ப்புகள் முடக்கப்படலாம், அல்லது, திரித்துச் சொல்லப்படலாம்.
அத்தகைய ஒரு சூழலை, தாவீது சந்தித்தார். தன் உயிரைக் கொல்ல வெறிகொண்டு அலைவது, மன்னர் சவுல் என்பதால், அவரைப்பற்றிய வழக்கை, தாவீது, வேறு யாரிடமும் கொண்டுசெல்ல வழியின்றி, கடவுளின் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றார் என்பதை, 17ம் திருப்பாடல் உணர்த்துகிறது.

இறைவனின் நீதிமன்றத்தில், "ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்" (திருப்பாடல் 17:1) என்று தன் வழக்கைத் துவங்கிய தாவீது, இந்த வழக்கின் தீர்ப்பு, அதாவது, தனக்குரிய நீதி, 'இறைவன் முன்னிலையிலிருந்து கிடைக்கவேண்டும்' (காண்க. திபா 17:2) என்பதையும், இவ்வழக்கின் துவக்கத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார்.

15 இறைவாக்கியங்களைக் கொண்ட 17ம் திருப்பாடலில், 1 முதல் 9 முடிய உள்ள முதல் பகுதியில், தாவீது, தான் குற்றமற்றவர் என்பதை, முதல் 5 இறைவாக்கியங்களில், பல வழிகளில், ஆண்டவரிடம் கூறுகிறார். இதைத்தொடர்ந்து, 6 முதல் 9 முடிய உள்ள 4 இறைவாக்கியங்களில், தன்னை இறைவன் காத்தருளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைக்கிறார். இந்த விண்ணப்பத்தில், 7, 8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இறைவன் வழங்கும் பாதுகாப்பை, மூன்று உருவகங்கள் வழியே உணர்த்துகிறார், தாவீது.
திருப்பாடல் 17:7
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
என்ற வரிகளில், இறைவனின் 'வலக்கரம்' என்று, தாவீது பயன்படுத்தியுள்ள முதல் உருவகம், விவிலியத்தில் வேறு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவிலியத்தில், 'ஆண்டவரின் வலக்கரம்' என்ற உருவகமும், ஆண்டவரின் வலப்புறம் என்ற உருவகமும், இரு பொருள்களை உணர்த்துகின்றன. ஆண்டவரின் ஆற்றலையும், அவர் வழங்கும் பாதுகாப்பையும் உணர்த்த, 'வலக்கரம்' என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை (திருப்பாடல் 89:13) என்று, 89ம் திருப்பாடலிலும்,
நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. (திருப்பாடல் 63:8) என்று, 63ம் திருப்பாடலிலும், தாவீது உறுதியுடன் கூறுகிறார்.

அதேவண்ணம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் வழங்கும் உறுதிமொழியில், அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்(எசாயா 41:10) என்று கூறியுள்ளதை, இறைவாக்கினர் எசாயா பதிவுசெய்துள்ளார்.

இவ்வாறு, 'ஆண்டவரின் வலக்கரம்' என்ற உருவகம், ஆற்றலையும், பாதுகாப்பையும் உணர்த்த பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்டவரின் வலப்புறம் என்ற உருவகம், ஒருவருக்கு உரிய மாண்பை வழங்கும் அடையாளமாக விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவரின் வலப்புறத்தில் அமரும் மகிமை, இயேசுவுக்கு வழங்கப்பட்டது என்பதை, தாவீது ஏற்கனவே, 110ம் திருப்பாடலில் முன்மொழிந்துள்ளார்:
ஆண்டவர் என் தலைவரிடம் நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று உரைத்தார். (திருப்பாடல் 110:1)
இந்த வரிகளை, தாவீது, தன்னைப்பற்றி அல்ல, மாறாக, இயேசுவைப்பற்றிக் கூறினார் என்று, நாம் புதிய ஏற்பாட்டில் இருமுறை வாசிக்கிறோம். (காண்க. மத்தேயு 22:44; திருத்தூதர் பணிகள் 2:34)

தன் பாடுகளின்போது, தலைமைச் சங்கத்திற்குமுன் இழுத்துச் செல்லப்பட்ட இயேசுவிடம், "நீ மேசியா தானா? எங்களிடம் சொல்" (லூக்கா 22:67) என்று மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கேட்டபோது, இயேசு பதில் மொழியாக, "இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" (லூக்கா 22:69) என்று சொல்கிறார். அவர் தன்னை கடவுளுக்கு இணையாக உயர்த்தினார் என்று அனைவரும் ஆத்திரம் அடைகின்றனர்.

தன் நற்செய்தியின் இறுதி வரிகளில், மாற்கு, இயேசுவின் விண்ணேற்றத்தை சித்திரிக்கும்போது, கடவுளின் வலப்புறம் என்ற சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார்: இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு, விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். (மாற்கு 16:!9).

திருத்தொண்டரான ஸ்தேவான், தன் மரணத்திற்குமுன் கூறும் சொற்களில், இயேசு கடவுளின் வலப்பக்கம் இருக்கிறார் என்று பறைசாற்றியது திருத்தூதர் பணிகள் நூலில் பதிவாகியுள்ளது. அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன் என்று கூறினார். (தி. பணிகள் 7:55-56)

வலிமையும், மாண்பும் கொண்ட வலக்கரத்தால், ஆண்டவர் தன்னை விடுவிக்கவேண்டும் என்ற உருவகத்தைப் பயன்படுத்தும் தாவீது, அடுத்த இறைவாக்கியத்தில், இறைவனின் பாதுகாப்பை உணர்த்த, 'கண்ணின் மணி', ‘சிறகுகளின் நிழல் என்ற இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். (திருப்பாடல் 17:8)

நம் உடலின் மிக மென்மையான, அதேவேளையில், மிக முக்கியமான பகுதியாக விளங்குவன, நம் கண்கள். கண்களின் முக்கியத்துவத்தை, இயேசு, மலைப்பொழிவில் தெளிவாக உணர்த்தியுள்ளார்
"கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்." (மத்தேயு 6:22-23)

எனவே, கண்களைப் பாதுகாக்க, பல கவசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உறுதியான எலும்பு அமைப்பைக் கொண்ட மண்டையோட்டில், ஒரு குழியான பகுதியில் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்களில் எந்தத் தூசியும் விழாமல் தடுக்கும் இமைகளும், நெற்றியிலிருந்து வழியும் வியர்வையைத் தடுக்க கண்ணுக்கு மேலே புருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தனை பாதுகாப்பையும் தாண்டி, ஒருவேளை, நம் விழிகளில் தூசி விழுந்தால் அதை, உடனடியாகக் கழுவி, சுத்தம் செய்ய, கண்ணீர் சுரப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்தனை பாதுகாப்புடன் காக்கப்படும் கண்ணில், கருவிழிக்கு நடுவே அமைந்துள்ள கருமையான துளையே, 'கண்ணின் மணி' என அழைக்கப்படுகிறது. இந்தக் கருந்துளையானது, சுருங்கி, விரிந்து, தேவையான அளவு ஒளியை உள்ளே அனுமதிப்பதால், நம் விழித்திரையின் மீது, நாம் காணும் பொருள்களின் பிம்பங்கள் பதிகின்றன.

கண்ணின் மணி, இத்தனை பாதுகாப்புகளுடன் அமைந்துள்ளதை மனதில் கொண்டு, அத்தகைய பாதுகாப்பை இறைவன் தனக்கு வழங்கவேண்டும் என்று தாவீது வேண்டுகிறார். இதைத் தொடர்ந்து, தாவீது பயன்படுத்தியுள்ள 'சிறகுகளின் நிழல்' என்ற உருவகத்தின் பொருளையும், இன்னும் 17ம் திருப்பாடலில் பதிவாகியுள்ள ஏனைய எண்ணங்களையும் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.