11 August, 2022

Needed, courageous Prophets துணிவுள்ள இறைவாக்கினர்கள் தேவை

 
“I came to cast fire on the earth!”

20th Sunday in Ordinary Time

Sometimes, out of the blue, there comes a word, a statement, or a picture, which sparks off a stream of thoughts in us. This week, as I was preparing for the Sunday reflection, a sentence (I don’t know whether it is a proverb or not!) gripped my attention strongly. I wish to begin my reflections with that sentence: “He (She) who is on fire cannot sit on a chair.” When I read these words, I was instantly reminded of the famous bestseller written (1989) by Robert Fulghum – “It Was on Fire When I Lay Down on It”.
This bestseller begins with this story: A tabloid newspaper carried the story stating simply that a small-town emergency squad was summoned to a house where smoke was pouring from an upstairs window. The crew broke in and found a man in a smoldering bed. After the man was rescued and the mattress doused, the obvious question was asked: “How did this happen?”
“I don't know. It was on fire when I lay down on it.”
Fulghum goes on to say: The story stuck like a burr to my mental socks. And reminded me of a phrase copied into my journal from the dedication of some book: “Quid rides? Mutato nomine, de te fabula narratur.” Latin. From the writings of Horace. Translated: 'Why do you laugh? Change the name, and the story is told of you.'
It was on fire when I lay down on it.
A lot of us could settle for that on our tombstones. A life-story in a sentence.

“He (She) who is on fire cannot sit on a chair.” talks of a person who is on fire and, hence, cannot rest. Fulghum’s title seems to suggest that even when our surrounding is on fire, we could ‘sleep’ or ‘sleep-walk’ through it! This Sunday’s liturgy invites us to examine ourselves and see what is our role in this world – do we carry a fire within or do we insulate ourselves with fire-proof material and walk through, or, sleep blissfully, amidst hundreds of burning problems.

Most of the Prophets carried the Word of God like a burning flame within themselves. We meet one of them – Jeremiah – in today’s First Reading. (Jeremiah 38: 4-10). In Chapter 20, Jeremiah describes the agony of living as a prophet. In this section, he says: For the word of the Lord has become for me a reproach and derision all day long. If I say, “I will not mention him, or speak any more in his name,” there is in my heart as it were a burning fire shut up in my bones, and I am weary with holding it in, and I cannot. (Jer. 20:8b-9)

Since he cannot hold his peace, Jeremiah got into trouble all the time. In today’s First Reading, we see Jeremiah becoming, once more, the victim of dirty-politics. He is condemned to die in a cistern for telling the truth about the invasion of the Babylonian King. Jeremiah, being thrown into a muddy cistern (cf. Jer. 38:6), is a perfect symbol of many prophets – including our modern-day prophets – who sink into deeper and deeper troubles. We remember two of these prophets – St Oscar Romero, the Archbishop of San Salvador and Fr Stan Swamy, the Jesuit Priest who fought for the fundamental rights of the tribal people of India. 

First – St Oscar Romero: When President Jimmy Carter announced, in February 1980, that he was going to increase U.S. military aid to El Salvador by millions of dollars a day, Archbishop Romero was shocked. He wrote a long public letter to President Carter, asking the United States to cancel all military aid. Carter ignored Romero's plea, and sent the aid. A month later, on March 24, 1980, Archbishop Romero was killed by a paid assassin while celebrating the Mass. (Between 1980 and 1992, the U.S. spent $6 billion to kill 75,000 poor Salvadorans.)

Knowing well that his death was imminent, Romero spoke to the farm workers, in these words: “If they kill all your priests and the bishop too, each one of you must become God's microphone, each one of you must become a prophet.” In an interview with the Mexican journalist Jose Calderon Salazar, Excelsior Journal correspondent in Guatemala, two weeks before his death, he said: “I have often been threatened with death. Nevertheless, as a Christian, I do not believe in death without resurrection. If they kill me I will rise in the Salvadoran people. I say so without meaning to boast, with the greatest humility. As a pastor I am obliged by divine mandate to give my life for those I love – for all Salvadorans, even those who may be going to kill me… A bishop will die, but the Church of God, which is the people, will never perish”

Another prophet we have been talking about for the past two years is the Jesuit Priest, Fr Stan Swamy. Recently, on July 5, 2022, we celebrated the first death anniversary of this modern-day prophet. In commemoration of this event, Fr Cedric Prakash, a Jesuit who is a member of the Gujarat Jesuit province and a human rights, reconciliation and peace activist and writer wrote an article on Fr Stan. Here are some excerpts from this article:
A year ago, on July 5, 2021, when Father Stan Swamy left us, the world mourned the death of a great human being who epitomized compassion, courage, collaboration and commitment…
There is no doubt that Stan has left behind a rich legacy worthy of emulation. He had a legion of friends- mainly the Adivasis and the subaltern groups. He identified with them; walked the talk and accompanied them in their struggle for jal, jungle aur jameen (water, forest and land). He left no stone unturned, in the defense of their legitimate Constitutional rights…
Prophets, like Stan are inconvenient; it was so obvious that Stan was a sheer nuisance to these vested interests. He thwarted some of their plans of destroying the lives of Adivasis, their livelihood and their environment. They wanted him out of the way and they succeeded!
Like a true Jesuit and a worthy son of St Ignatius, Stan did all he could to “set the world on fire” through the many values he epitomized, among them Compassion, Courage, Collaboration and Commitment.

At the end of the article Fr Prakash recalls the prophetic words of Fr Stan Swamy a few days before his arrest. Here are the closing lines of the aricle:
A few days before his arrest in October 2020, in a video-message which went viral, Stan said, “What is happening to me is not something unique happening to me alone. It is a broader process that is taking place all over the country. We are all aware how prominent intellectuals, lawyers’ writers, poets, activists, students, leaders, they are all put into jail because they have expressed their dissent or raised questions about the ruling powers of India. We are part of the process. In a way I am happy to be part of this process. I am not a silent spectator, but part of the game, and ready to pay the price whatever be it.”
Stan was not a silent spectator and has certainly paid the price. Stan is no longer in our middle at a time, when the nation desperately needs the likes of him. One thing however, is certain Stan will never die and whatever the consequences, his legacy lives forever.

Today’s readings remind us that the Church needs prophets like Archbishop Oscar Romero and Fr Stan Swamy and caution contemporary prophets that their course will not be easy. Today’s Gospel serves as a shock therapy to us who are accustomed to see Jesus – as meek and humble of heart, prince of peace. Here is the Gospel passage that will dethrone Jesus from the safe ‘pious’ niches we have created for him, and take us on a reality-trip:
Luke 12: 49-53
Jesus said to his disciples: "I came to cast fire upon the earth; and would that it were already kindled! … Do you think that I have come to give peace on earth? No, I tell you, but rather division; for henceforth in one house there will be five divided, three against two and two against three; they will be divided, father against son and son against father, mother against daughter and daughter against her mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against her mother-in-law."

From today’s Gospel passage, I would like to reflect on the image of Jesus casting fire on earth and bringing about division within a family. Fire can be used for constructive purposes as well as destructive purposes. For instance, the fire lit up in the kitchen is usually meant for cooking food. But, sadly, the same fire in the kitchen has been used for ‘bride-burning’ in India. (I am not sure whether this tragedy happens in other countries too!) The fire brought in by Jesus is meant to re-create and regenerate life. It is meant to burn trash to ashes, but to help clean up gold!

The other shock given by Jesus in today’s gospel is, when he talks of not bringing peace but division. This brings us to reflect on ‘peace’. The peace spoken of by Jesus is very different from the idea of peace as defined by the world. Peace as promised or given by the world is mainly the absence of conflict, or, simply, the peace that prevails in a graveyard. Peace as promised by Jesus is a way of life. This way of life will have its own fair share of conflicts. These conflicts become more acute when they occur within the family. When we take a stand, then, even family ties are strained. So, the divisions that Jesus talks of in today’s Gospel…  father against son and son against father, mother against daughter and daughter against her mother, mother-in-law against her daughter-in-law and daughter-in-law against her mother-in-law are not simply emotional break-ups, but divisions caused by questions of conscience and conviction.

To achieve peace in the world, we have to begin from within. This is what Dalai Lama said: “We can never obtain peace in the outer world until we make peace with ourselves”.
Martin Luther King Jr. who fought for peace in his country and in the world, had very clear ideas on what true peace is, namely, peace based on Justice and Equality: “I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality... I believe that unarmed truth and unconditional love will have the final word.”

Our closing thoughts are on the 75th Independence Day of India. We have spoken about prophets setting the world on fire as well as standing for truth even to the point of facing conflicts from within the family. The politicians in India and elsewhere in the world are the complete antithesis of true prophets. They too set the world on fire as Nero set fire to Rome and played the fiddle. Our politicians strangle the prophets who speak uneasy and bitter truth.
We pray that the Independence Day of India serves as a grim reminder that not only India but the whole world needs to constantly work towards real independence based on truth and justice. To create this true liberty, we need more and more courageous prophets among us! We need to become prophets starting from our own family circles!

Becoming a flame to defeat fire

பொதுக்காலம் - 20ம் ஞாயிறு

சற்றும் எதிர்பாராத வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படமோ, ஒரு கூற்றோ, நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் உணர்ந்திருப்போம். என் கண்ணில் பட்ட அத்தகைய ஓர் ஆங்கிலக் கூற்று, இன்றைய வழிபாட்டுச் சிந்தனைகளைத் துவக்கிவைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அந்த ஆங்கிலக்கூற்றை, தமிழில் சொன்னால், அது இவ்விதம் ஒலிக்கலாம்: "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".
இச்சொற்கள், 1989ம் ஆண்டு வெளியான ஓர் ஆங்கில நூலின் தலைப்பை என் நினைவுக்குக் கொணர்ந்தன. புகழ்பெற்ற ராபர்ட் ஃபுல்கம் (Robert Fulghum) என்ற எழுத்தாளர் உருவாக்கிய அந்நூலின் தலைப்பு: “It Was On Fire When I Lay Down On It”, அதாவது, "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது."

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன், ஃபுல்கம் அவர்கள், இந்நூலை ஆரம்பித்துள்ளார். ஒரு வீட்டின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறவே, அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு, எரிந்துகொண்டிருந்த ஒரு படுக்கையில் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். அவரை மீட்டு, தீயை அணைத்தபின், அவரிடம் நடந்ததென்ன என்று கேட்டபோது, "எனக்குத் தெரியாது. நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்று சொன்னாராம்.
இந்தக் கதையைக் கேட்டு, நமக்குள் இலேசான புன்னகை தோன்றினால், ஃபுல்கம் அவர்கள், Horace என்ற கவிஞரின் ஒரு கூற்றை நினைவுபடுத்துகிறார். "ஏன் சிரிக்கிறாய்? பெயரை மாற்று, அந்தக் கதை உன்னைப்பற்றி கூறும்" என்ற அக்கூற்றை நினைவுபடுத்தும் ஃபுல்கம் அவர்கள், எரியும் கட்டிலில் படுத்திருந்த அம்மனிதரின் கூற்று, நம்மில் பலருக்குப் பொருந்தும்; இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், "நான் அதில் படுத்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற சொற்களை நம்மில் பலர் நம் கல்லறை வாசகமாகவும் எழுதலாம் என்று இந்நூலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

"பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற முதல் வாக்கியம், பற்றியெரியும் சுடர்களாக இவ்வுலகில் வாழ்வோரைக் குறிக்கிறது. "நான் அதில் படுத்திருந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற இரண்டாவது வாக்கியமோ, தங்களைச் சுற்றி அனைத்தும் பற்றியெரிந்தாலும், கண்மூடித் துயில்வோரைக் குறிக்கிறது. இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், இறைவனின் உண்மையால் பற்றியெரிந்த எரேமியா, இயேசு என்ற இரு தீப்பிழம்புகளைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள், இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா, தன்னை இறைவன் ஏமாற்றி, தன்மேல் வெற்றி கொண்டுவிட்டதால், பிறரது நகைப்புக்கு உள்ளானதாகவும், ஆண்டவரின் வாக்கு தன்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் உள்ளாக்கியது என்றும் கூறுகிறார். (காண்க. எரேமியா 20:7-8) இருப்பினும், தன்னால் அமைதி காக்க இயலவில்லை என்பதை, அவர் கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறைவாக்கினரை நம்மால் காணமுடிகிறது. "அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. (எரேமியா 20: 9). என்ற கதறல் எரேமியாவிடமிருந்து எழுகிறது.

இறைவார்த்தையால் தூண்டப்பட்ட ஒரு தீப்பிழம்பாக வாழ்ந்த எரேமியாவின் உயிருக்கு வந்த ஆபத்தை, இன்றைய முதல் வாசகம் (எரேமியா 38: 4-10) எடுத்துரைக்கிறது. எரேமியா இந்த நெருக்கடிக்கு உள்ளானதற்குக் காரணம், அவர் சொன்ன உண்மை. யூதேயா நாடு, பாபிலோனிய மன்னரால் கைப்பற்றப்படும்; கொடும் துன்பங்கள் தொடரும் என்ற உண்மையை, மன்னரான செதேக்கியாவிடம் கூறினார், எரேமியா. மிகவும் கசப்பான இந்த உண்மையை, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், மன்னர் தடுமாறினார். மன்னரது தடுமாற்றத்தை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில தலைவர்கள், எரேமியா, ஒரு குற்றவாளி என, பொய்யான பழியைச் சுமத்தி, அவரைக் கொல்லும்படி மன்னரைத் தூண்டினர். உண்மையைப் பேசியதால், உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை, இறைவாக்கினர் எரேமியா நம் நினைவுக்குக் கொணர்கிறார். அவர்களில் ஒருவர், எல் சால்வதோர் நாட்டில், கசப்பான உண்மைகளைப் பறைசாற்றிவந்த ஒரு பேராயர்.

1970களில், அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன், எல் சால்வதோர் அரசு, ஏழைகளை, வதைத்து வந்தது. கருணை ஏதுமின்றி, வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு, அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என, சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர், ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பினார். இந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின், 1980ம் ஆண்டு, மார்ச், 24ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், கூலிப்படையினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் எடுத்துரைத்த உண்மைகள், பலருக்கு, குறிப்பாக, சக்திமிகுந்த செல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சங்கடத்தை விளைவித்தன என்பதை நன்கு உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ அவர்கள், தனது மரணத்தைப் பற்றியும் பேசத் தயங்கவில்லை. ஒருமுறை அவர் ஏழை விவசாயிகளுக்கு உரை வழங்கியபோது, "உங்கள் குருக்களையும், ஆயரையும் அவர்கள் கொன்றுவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குரலை ஓங்கி, ஒலிக்கச் செய்யும் ஒலிபெருக்கியாகச் செயல்படுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினார்களாக மாறவேண்டும்... உயிர்ப்பு இல்லாத மரணத்தை நான் நம்பவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், சால்வதோர் மக்களில் நான் மீண்டும் உயிர்ப்பேன்" என்று கூறினார் பேராயர்.

சால்வதோர் மக்களில் மட்டுமல்ல, உலக மக்கள் நடுவிலும் பேராயர் ரொமேரோ அவர்கள், உயிர்பெற்று வாழ்கிறார் என்பதற்கு, உலக அரங்கிலும், கத்தோலிக்கத் திருஅவையிலும் அவர் பெற்றுள்ள புகழ், சான்றாக விளங்குகிறது. 1998ம் ஆண்டு, ஆங்கிலிக்கன் சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில், 20ம் நூற்றாண்டின் மறைசாட்சிகள் என்ற பெயரில் ஒரு சிலரின் உருவச் சிலைகள், ஆலயத்தின் வெளிமாடத்தில் வடிவமைக்கப்பட்டன. அவர்களில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், மற்றும் பேராயர் ரொமேரோ ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. 2010ம் ஆண்டு, ஐ.நா.அவை, பேராயர் ரொமேரோ அவர்கள் கொலையுண்ட மார்ச் 24ம் தேதியை, உண்மை அறியும் உலக உரிமை நாள் (International Day for the Right to the Truth) என்று அறிவித்தது.
2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையால், ஓர் அருளாளரென எனவும், 2018ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதி, ஒரு புனிதரெனவும் அறிவிக்கப்பட்டார். எல் சால்வதோர் நாட்டிற்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களிலும், புனித ரொமேரோ, ஓர் இறைவாக்கினராக, இன்றும் உயிர்பெற்று வாழ்கிறார்.

பேராயர் ரொமேரோ போலவே நம்மிடையே ஓர் தீப்பிழம்பாக வாழ்ந்து, மறைந்த இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களை இந்த ஞாயிறன்று நினைவுகூர்வது பொருத்தமாக உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினர், தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்தபோது, அவர்களது உரிமைகளை மீண்டும் பெற்றுத்தரப் போராடிய அருள்பணி ஸ்டான் அவர்களை, இந்திய நடுவண் அரசும், இந்திய நீதித்துறையும் சிறையில் அடைத்து கொன்றது. இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா சேறு நிறைந்த பாழுங்கிணற்றில் இறக்கப்பட்ட நிகழ்வை வாசிக்கும்போது, அருள்பணி ஸ்டான் அவர்கள், 84 வயதில், உடல் நலம் குன்றியவராய் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு, நம் நினைவுகளை வதைக்கின்றது.

சிறையில் இருந்தபோதும், அவர் ஓர் இறைவாக்கினர் போலவே வாழ்ந்து, இறுதியில் 2021ம் ஆண்டு, ஜூலை 5ம் தேதி மும்பை மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இறையடி சேர்ந்ததன் முதலாம் ஆண்டு நினைவு சென்ற மாதம் சிறப்பிக்கப்பட்ட வேளையில், அவரைக் குறித்து, மனித உரிமை ஆர்வலரான அருள்பணி செட்ரிக் பிரகாஷ் (Cedric Prakash) என்பவர் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு சில வரிகள் இதோ:
தங்கள் சுயநலனை மட்டும் மையப்படுத்தி, மக்களை வதைத்துவரும் சுயநல சக்திகளுக்கு, ஸ்டான் போன்ற இறைவாக்கினர்கள், எப்போதுமே சங்கடமாக இருந்து வருகின்றனர். தங்கள் திட்டங்களுக்குத் முட்டுக்கட்டையாக இருக்கும் இவர்களை அப்புறப்படுத்துவதில் இந்த சுயநல சுறாமீன்கள் கவனமுடன் செயலாற்றுகின்றனர். ஓர் உண்மையான இயேசு சபை துறவியாக வாழ்ந்த ஸ்டான் அவர்கள், புனித இக்னேசியஸ் சொன்னதுபோலவே இந்த உலகில் தீயை மூட்டி வந்தார்.

ஓர் இறைவாக்கினராக பணியாற்றியதால், தன்னைச் சூழ்ந்துவரும் ஆபத்துக்களையும், நெருங்கிவரும் மரணத்தையும் நன்கு உணர்ந்த புனித ரொமேரோ, தன் மரணத்தைப் பற்றி முன்னுரைத்ததுபோலவே, அருள்பணி ஸ்டான் அவர்களும் தன் மரணத்தைப் பற்றி கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது:
"எனக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது, எனக்கு மட்டும் நிகழ்வது அல்ல. இது, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வழிமுறை. தற்போது ஆட்சியில் இருக்கும் சக்திக்கு எதிராக குரல் எழுப்பியதால், கேள்விகள் கேட்டதால், முற்போக்குச் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர்கள், தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவை அடக்கியாளும் சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சிந்தனையாளர்கள் அனைவரையும் மௌனமாக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த அடக்கு முறையில் நாங்கள் சிக்கியுள்ளோம். இந்த வன்முறைக்கு நானும் உள்ளாகியிருக்கிறேன். இருந்தாலும், நான் ஒன்றும் பேசாத பார்வையையாளன் அல்ல. என்ன விலையானாலும் அதைக் கொடுக்க நான் தயார்" என்று அருள்பணி ஸ்டான் அவர்கள் கூறினார்.

தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், இறைவாக்கினர்களால் அமைதிகாக்க இயலாது. அவர்கள் பேசும் உண்மைகள், இவ்வுலகில் தீயை மூட்டும்; அமைதியைக் குலைத்து, பிளவை உருவாக்கும். தீயை மூட்டவும், பிளவை உண்டாக்கவுமே தான் இவ்வுலகிற்கு வந்ததாக, இயேசு, இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார். (லூக்கா நற்செய்தி 12: 49-53) "உலகில் தீ மூட்ட வந்தேன், அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்" என்று இயேசு கூறும் வார்த்தைகள், நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாகுகின்றன. அதிலும் குறிப்பாக, தான் கொணரும் பிளவுகள், குடும்பத்திற்குள் உருவாகும் என்று இயேசு சொல்வது, நமக்குள் கூடுதலானச் சங்கடங்களை உருவாக்குகிறது. நமது சங்கடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இயேசு, தெளிவாக, தீர்க்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில், இயேசு மூட்டவந்த தீயைப்பற்றி புரிந்துகொள்ள முயல்வோம். தீ மூட்டுதல் என்ற செயலால், ஆக்கப்பூர்வமான விளைவுகளும் உருவாகும், அழிவும் உருவாகும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, நமது இல்லங்களில், சமையலறையில், தீ மூட்டுவதை எண்ணிப்பார்ப்போம். குடும்பத்திற்கு உணவு படைக்கவேண்டும் என்ற அன்பினால், சமையலறையில் மூட்டப்படும் தீ, ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரும். ஆனால், எத்தனையோ இல்லங்களில், புகுந்த வீட்டை நம்பி வந்த பெண்ணைக் கொளுத்துவதற்கு அதே சமையலறை தீ, ஒரு கருவியாக அமைவது, நாம் அறிந்த வேதனையான உண்மை. இயேசு, இவ்வுலகின் மீது கொண்ட அன்பினால் தீமூட்ட வந்தார். அந்தத் தீயில், தானே தகனமாகவேண்டும் என்பதையும், அவர், இன்றைய நற்செய்தியில், மறைமுகமாகக் கூறியுள்ளார் - லூக்கா 12: 49-50.

இறைவாக்கினர், உண்மை என்ற தீயை மூட்டும் வேளைகளில், பிரச்சனைகள் உருவாகும். பலவேளைகளில், குடும்பத்திற்குள் பிளவுகள் உருவாகலாம். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகக் கூறியுள்ளார்:
லூக்கா 12: 52-53
இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

தந்தை-மகன், தாய்-மகள், மாமியார்-மருமகள் சண்டைகள், அனைத்து இல்லங்களிலும் உள்ளதுதானே, இதை ஏன் இயேசு பெரிதுபடுத்தவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இயேசு கூறும் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் ஆத்திரத்தில், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எழும் சண்டைகள் அல்ல. மாறாக, மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் உருவாகும் பிளவுகள்.

குடும்பங்களில் எழும் பிரச்சனைகளுக்கு, நன்னெறி, நற்செய்தி இவற்றின் அடிப்படையில் தகுந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்குப் பதிலாக, குடும்பத்தில் எவ்வகையிலாவது அமைதி நிலவினால் போதும் என்ற எண்ணத்துடன், உண்மைகளை மூடி மறைத்து, பூசிமெழுகி வாழ்வதால், உண்மையான அமைதியை நாம் இழக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
இயேசு இவ்வுலகில் மூட்டிய தீ, நம் உள்ளத்தில் பற்றியெரியவும், உண்மையை, நீதியை, அமைதியை வளர்க்கும் முயற்சிகளை, நம் உள்ளங்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து துவங்கவும், உண்மை அமைதியின் அரசனான இறைவனை இறைஞ்சுவோம்.

நமது இறுதி சிந்தனைகள், இந்தியாவின் 75வது சுதந்திர நாளை நோக்கி திரும்புகின்றன. மண்ணில் தீயை மூட்டவும், உண்மைகளை எடுத்துரைக்கவும் அழைக்கப்பட்டுள்ள இறை வாக்கினர்களை இன்றைய வழிபாட்டில் நினைவு கூர்ந்தோம். இந்த இறைவாக்கினர்களுக்கு நேர் எதிர் துருவங்களாக விளங்குபவர்கள் இன்றைய அரசியல் தலைவர்கள். அவர்களும் இவ்வுலகில் தீயை மூட்டுகிறார்கள். தங்கள் பதவியையூம், அதிகாரத்தையும் தக்கவைத்தக்கொள்வதற்காக, வெறுப்பு என்ற தீயை மக்கள் நடுவே மூட்டுகிறார்கள். அந்த தீயில் மக்கள் எரிந்து கருகுவதைக் கண்டு, நீரோ மன்னரைப்போல் தங்கள் இசைக்கருவிகளை மீட்டி மகிழ்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்ற உண்மையை எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களின் குரலை அடக்க அவர்களின் குரல்வளையை நெறித்து கொலை செய்கின்றனர்.

இந்தியா கொண்டாடும் சுதந்திர நாள், உலகெங்கும் உண்மையான சுதந்திரம் பெறவேண்டும் என்ற தேவையை நினைவுறுத்துகிறது. உண்மையான சுதந்திரத்தில் இவ்வுலகம் வளர்வதற்கு, பற்றியெரியும் இறைவாக்கினர்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் தோன்றவேண்டும் என்று மன்றாடுவோம். அத்தகைய இறைவாக்குரைக்கும் பணிக்கென இறைவன் நம்மை அழைக்கும்போது, அந்த அழைப்பை ஏற்கும் துணிவை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்றும் மன்றாடுவோம்.

04 August, 2022

A treasure in heaven விண்ணுலகில் குறையாத செல்வம்


19th Sunday in Ordinary Time

Last Sunday in the context of the parable of the foolish rich man (Luke 12: 13-21), Christ gave us a sharp warning: “Take heed, and beware of all covetousness; for a man’s life does not consist in the abundance of his possessions.” (Luke 12:15).  This Sunday’s liturgy is a sequel to what we reflected on last week. This week’s Gospel begins ten verses later… Luke 12: 32-48. In the intervening ten verses 22-31, Jesus talks about the lessons we could learn from the birds of the air and the lilies of the field. It is interesting that we, who have learnt, from the birds, the art and science of flying, have not learnt so many other lessons which birds can teach. One among them is the trust these birds have in getting provided by the Heavenly Father.

Today’s Gospel opens with the reassuring words of Jesus about the care of the Heavenly Father. “Fear not, little flock, for it is your Father’s good pleasure to give you the kingdom.” (Luke 12: 32). Instead of trusting God for our future, we go to great lengths to provide for our future. Sometimes this ‘providing for the future’ goes to sickening attempts at amassing wealth. Against this mad drive to store more and more wealth, even to the point of building bigger barns like the rich fool, Jesus, in today’s gospel, tells us how to build up a treasure in heaven: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33)

History tells us about the ways in which human beings have saved their wealth… starting from the days when we had to protect the cattle which were our main asset, to the present day when we have to protect papers (currencies) and metals (mostly gold, diamonds and platinum) in so many ways…

While searching for all the means we have invented to protect our treasures from thieves and moth, as well as from law and taxes, I came across some information from a book – ‘Stolen Indian Wealth Abroad – How to Bring it back?’ - a compilation of articles (by Dr R Vaidyanathan, Sri.S.Gurumurthy, Sri.M.R.Venkatesh, and Sri.Arun Shourie) published in May 2009. This book talks about how the rich – politicians, government officials, business magnets, film artists and cricketers – have stashed away black, dirty money and what it has done to India and to the world… or, what this money could do to India and to the world, if brought back.

Although India leads in terms of the amount of black money stashed away in other countries, it is not the only guilty country. In 2005, a book written by Raymond W.Baker - Capitalism’s Achilles Heel: Dirty Money And How To Renew The Free Market System claims that the black money in the year 2001 was $11.5 trillion which was increasing at the rate of $1 trillion every year, out of which $500 billion was stolen from developing countries.

I was curious to figure out what 1 trillion dollars would mean. If you wish to do this search, you can go to google and simply type ‘1 trillion dollars’. You will get 29,700,000 results in 0.46 seconds under various topics like:
What does one TRILLION dollars look like?
Visualizing One Trillion Dollars
What is a trillion dollars?
Videos for one trillion dollars
One Trillion Dollars Visualized etc.

One of those topics is: Numb and number: Is trillion the new billion? – which gives us many, many ways of understanding this number. This topic grabbed my attention due to the words ‘numb’ and ‘number’… In 1 trillion dollars we are talking of a number all right. But, this ‘number’ can surely make us ‘numb-er’ (higher level of inability to think, feel, or react normally).
One of the sites talking about 1 trillion dollars, gives us this idea, namely, if you can spend one million dollars a day, you need one million days, which is around 2740 years to spend 1 trillion dollars. Instead of simply playing with numbers as if they were only a matter of zeroes, we get a better picture if we can think of 1 trillion dollars in other contexts.

I tried to convert 1 trillion dollars in Rupees and tried to make sense of this ‘numb-er’ in the Indian context. If this money was distributed to every one – all the one billion plus people – in India, each one would get around 78,000 Rupees. This means that if the money stashed away in tax havens in one year (JUST ONE YEAR) is distributed to all the people in India, each one will get 78,000. For some, this would be pocket money. But, I know that there are people whose annual income is around 78,000 Rupees. Leaving aside all the well-to-do in our country, if this money were to be distributed to those who live below poverty line, they can live in reasonable comfort for at least three years.

Baker’s book seems to claim that the ‘unaccounted’ money was around 11.5 trillion dollars in 2001 which grows at the rate of 1 trillion dollars per year. If we go with Baker’s estimation, right now in 2022 there must be 33 trillion dollars of black money in tax havens. If this money can be distributed to the really, really poor people ALL OVER THE WORLD, they will be able to live in dignity (without begging) for TEN YEARS. Imagine, dear friends, a world where there would be no beggars at all… Wouldn’t that be heaven on earth?

Involuntarily our mind recalls the promise of creating ‘heaven on earth’ in India made by our present Prime Minister by bringing the ‘stolen’ money back to our country and making a deposit of 15 lakhs of rupees in everyone’s account. All of us know that after the present government took over, multiple 15 lakhs have been deposited in the bank accounts of a few rich people while the poor citizens of India to whom 15 lakhs were promised, lacked basic necessities to survive. Especially during the time of COVID-19 pandemic, the chasm between the rich and the poor in India has become fathomless. Having got tired of the fake promises of the present government, some have started raising questions. On February 3, 2020 there was an article in ‘India Today’ website with the following headline and lead: Rs 15 lakh promise: PM Modi, Amit Shah face charges of cheating, dishonesty in Ranchi court
The complainant HK Singh, an advocate, has filed a case against PM Modi and Amit Shah, accusing them of cheating people by promising to credit Rs 15 lakh in every person's bank account if they come to power.

As against the false heavens promised by our politicians, Jesus invites us to find ways and means to create our ‘treasure in heaven’. Here is the suggestion given by Jesus in today’s Gospel: “Sell your possessions and give to the poor. Provide purses for yourselves that will not wear out, a treasure in heaven that will not be exhausted, where no thief comes near and no moth destroys.” (Luke 12: 33) What Jesus is saying is a bit radical… to sell our possessions! What we need to do is simply give away what is superfluous.. (black money is, certainly, superfluous.) and this world would become heaven.

A final thought on how to ‘give to the poor’. Most of the time, we tend to give to the poor with much publicity, in which we assume a high position and, consequently, make the poor cringe before us to receive the benefits of our ‘giving’. A few days back, one of my friends (a priest) sent me a WhatsApp message on an award winning Iranian short film. This one-minute film shows how we can give to the poor without making them feel humiliated, but rather, feel dignified.

Here is the story line of this film: A financially broken father walks into a convenience store with his daughter. He looks furtively around to see whether anyone is watching him and then picks up bread from the shop and is about to walk away when the shopkeeper stops him, making the daughter confused. She asks her father as to what happened. Her father is about to apologize when the shopkeeper tells the girl, “Your father forgot the change” and hands over some cash to him. The man is on the brink of shedding tears. Another customer who has been watching this incident calls to the girl’s father and tells him, “Sir, you are also forgetting the bag of rice” and hands it over to the father.
At this moment, a text appears on the screen: Lesson learnt: Every thief is not a thief. Some could be poor and needy. We should help them in such a way that they are not humiliated (especially in front of relatives and children)…
You can watch this short (one-minute) video on YouTube: Award winning Iranian Short Film - Father , Daughter and Shopkeeper, posted on Jul 23, 2022

Today’s Gospel calls us to wake up and be accountable. Here are the closing words of Jesus in today’s Gospel: “From everyone who has been given much, much will be demanded; and from the one who has been entrusted with much, much more will be asked.” (Luke 12: 48b)

Where your treasure is…

பொதுக்காலம் 19ம் ஞாயிறு

தன் நிலத்தில் விளைந்தவை அனைத்தும் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற மயக்கத்தில் வாழ்ந்த அறிவற்ற செல்வனை கடந்த ஞாயிறு திருவழிபாட்டில் சந்தித்தோம். அன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கிய ஓர் எச்சரிக்கை இவ்வாறு ஒலித்தது. இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாதுஎன்றார். (லூக்கா 12:15)

அறிவற்ற செல்வனைப்பற்றிய அந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறைவாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம், அதே 12ம் பிரிவின் 32ம் இறைவாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட 10 இறைவாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம், வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.

தந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு, அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது: சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். (லூக்கா 12:32)
இதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ: உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். (லூக்கா 12:33-34)

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில் நான் ஈடுபட்டிருந்தபோது, திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளதை அறியமுடிந்தது. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.

2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து, அதை அயல்நாடுகளில் பதுக்கிவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back?) என்பது, இந்நூலின் தலைப்பு.

செல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று எண்ணவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System). தனியுடைமை, முதலாளித்துவம் இவற்றால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில் அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.
பிரமிப்பும், அதிர்ச்சியும் தரும் இத்தகைய எண்ணிக்கை விளையாட்டுக்களை ஒதுக்கிவைத்துவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழமுடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம், வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள், ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும் உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே.

தற்போது இந்தியாவின் பிரதமராக இருப்பவர், இந்தியாவை விண்ணுலகமாய் மாற்றப்போவதாகக் கூறி மக்களின் வாக்குகளைப் பெற்றார். குறிப்பாக, யாரும், யாரிடமும் கையேந்தாமல் வாழ்வதற்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் வைப்பு நிதியை உருவாக்கப்போவதாகக் கூறி, 2014ம் ஆண்டு, மக்களின் வாக்குகளைப் பெற்றது, இப்போது நினைவுக்கு வருகிறது. அந்தப் பொய்யான வாக்கு நிறைவேறுவதற்குப் பதில், தற்போதைய அரசின் ஆட்சி காலத்தில் ஒரு சில செல்வந்தர்களின் வங்கிக் கணக்கில் மட்டும் 15 இலட்சம் அல்ல, பல்லாயிரம் முறை 15 இலட்சங்கள் குவிந்துள்ளதை நாம் வேதனையோடு உணர்கிறோம்.

மக்களை ஏமாற்ற, நம் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாக, நாம் இவ்வுலகிலும், மறு உலகிலும் செல்வம் சேர்ப்பது எப்படி என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் அழகாக அறிவுறுத்தியுள்ளார்.
உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.” (லூக்கா 12:33) என்று இயேசு கூறும் அறிவுரை, தர்மம் செய்யும் வேளையில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதையும் சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது.

பொதுவாக, நாம் தர்மம் செய்யும்போது, நம்மை உயர்ந்த ஓரிடத்தில் வைப்பதும், நம்மிடம் கையேந்துபவர்களை தாழ்ந்ததோர் இடத்தில் வைப்பதும் நாம் பின்பற்றும் போக்கு. நாம் செய்யும் தர்மத்தின் வழியே, தர்மம் பெறுபவரையும் மதிப்புடன் நடத்தமுடியும் என்பதை, ஓர் இரானிய குறும்படம் மிக அழகாகக் காட்டுகிறது. இந்த ஒருநிமிட படத்தின் கதை இதோ:
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே, ரொட்டியை திருடிவிடுகிறார். திருடிவிட்டு திரும்ப எத்தனிக்கும் வேளையில், அந்தக் கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதைப் பார்க்கும் மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, "என்ன நடக்கிறது?" என்று கேட்கிறாள்.
இதைப் புரிந்துகொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, கடைக்காரரிடம் மன்னிப்புக் கேட்க முயல்கிறார். அதற்குள், அந்தக் கடைக்காரர், தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். "எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்துவிட்டு, மீதியை வாங்க மறந்துவிட்டார்" என்று சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி, அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார் கடைக்காரர். குற்ற உணர்வில் மூழ்கி, கண்களில் நீர் மல்க, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைக்கும்போது, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர்ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு, "சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்துவிட்டுப் போகிறீர்களே, தயவுசெய்து எடுத்துச் செல்லுங்கள்." என்று சொல்லி, அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.

அவ்வேளையில், திரையில் பின்வரும் சொற்கள் பதிவாகின்றன:
Lesson learnt: Every thief is not a thief. Some could be poor and needy. We should help them in such a way that they are not humiliated (especially in front of relatives and children)…
நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம்: ஒவ்வொரு திருடரும், உண்மையில் திருடர் அல்ல. அவர்களில் சிலர் வறுமைப்பட்டவராய், தேவையில் உள்ளவராய் இருக்கக்கூடும். அவர்களுக்கு நாம் உதவிகள் செய்யும்போது, அவர்கள் அவமானமடைந்து போகாதவண்ணம் உதவிகள் செய்யவேண்டும். குறிப்பாக, அவர்களது உறவினர்கள், இன்னும் குறிப்பாக, அவர்களது குழந்தைகள் முன் அவர்கள் அவமானமடையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

விண்ணுலகில் குறையாத செல்வத்துடன் வாழ விழையும் நாம், நம்மிடம் உள்ளது நமக்கென மட்டும் என்ற சுயநலத்துடன் செல்வங்களை சேர்க்காமல், வறியோருடன் பகிர்ந்துகொள்ள முயல்வோம். அப்படி பகிருத்துக்கொள்ளும் வேளையில், வறியோரின் மாண்பை உயர்த்தும்வண்ணம் நம் பகிர்வு அமையட்டும்.