21 January, 2018

Activating (Not pacifying) Good News செயலாற்ற அழைக்கும் நற்செய்தி


Nineveh: A Message for Today

3rd Sunday in Ordinary Time

This Sunday we are given two figures to reflect on – Prophet Jonah and Jesus, especially from the point of view of them being sent as messengers. Jonah was sent to the people of Nineveh to give them a news – a news of disaster. “Yet forty days, and Nin'eveh shall be overthrown!”  (Jonah 3: 4). In the Gospel of Mark, we see Jesus coming to Galilee preaching the gospel of God… "The time is fulfilled, and the kingdom of God is at hand; repent, and believe in the gospel." (Mk.1:15)
A cursory glance at these two messages given by Jonah and Jesus do not sound like ‘Good News’. But, a deeper reflection gives us a better understanding of what is ‘Good News’.

I would like to echo the thoughts of Pope Emeritus - Benedict XVI on the word ‘good news’ (Evangelion, in Greek) in his book ‘Jesus of Nazareth’:
Both Evangelists designate Jesus’ preaching with the Greek term evangelion — but what does that actually mean?
The term has recently been translated as “good news.”  That sounds attractive, but it falls far short of the order of magnitude of what is actually meant by the word evangelion.  This term figures in the vocabulary of the Roman emperors, who understood themselves as lords, saviors, and redeemers of the world.  The messages issued by the emperor were called in Latin evangelium, regardless of whether or not their content was particularly cheerful and pleasant.  The idea was that what comes from the emperor is a saving message, that it is not just a piece of news, but a change of the world for the better.
When the Evangelists adopt this word, and it thereby becomes the generic name for their writings, what they mean to tell us is this:  What the emperors, who pretend to be gods, illegitimately claim, really occurs here — a message endowed with plenary authority, a message that is not just talk, but reality.  In the vocabulary of contemporary linguistic theory, we would say that the evangelium, the Gospel, is not just informative speech, but performative speech — not just the imparting of information, but action, efficacious power that enters into the world to save and transform.  Mark speaks of the “Gospel of God,” the point being that it is not the emperors who can save the world, but God.  And it is here that God’s word, which is at once word and deed, appears; it is here that what the emperors merely assert, but cannot actually perform, truly takes place.  For here it is the real Lord of the world — the living God — who goes into action.
(As quoted by Daniel B. Clendenin in http://journeywithjesus.net/index.shtml)

Two thoughts expressed by Pope Benedict captured my attention.
1. Good News (evangelion) is meant to bring about change. It need not be ‘good’, meaning pleasant.
2. Good News (evangelion) is meant to make us act. It does not fill us with information, but leads us to transformation.

We live in a world filled with information. It is so filled that there is not much room for personal interpretations and hence, no room for transformation. One of my most favourite books on media is “Amusing Ourselves to Death” written by Neil Postman. This is a scathing criticism on what television had done to the American Society in the 80s. What was written by Postman in 1985 about America is now almost a universal phenomenon.
One of the accusations that Postman levels against TV is that it has kept our human family ‘amused to death’. He says that TV has turned EVERYTHING (be it politics, religion, sports, stock market) into ENTERTAINMENT, including news. We are submerged in an ocean of information which keeps us fully soaked and completely passive. Add to this the other gadgets of communication like the cell phone, the (not-so) smart phone, and very many ‘i-something’… and our deluge of information has become a destructive tsunami. Here is a passage from Postman’s book:
How often does it occur that information provided you on morning radio or television, or in the morning newspaper, causes you to alter your plans for the day, or to take some action you would not otherwise have taken, or provides insight into some problem you are required to solve? For most of us, news of the weather will sometimes have such consequences; for investors, news of the stock market; perhaps an occasional story about a crime will do it, if by chance the crime occurred near where you live or involved someone you know. But most of our daily news is inert, consisting of information that gives us something to talk about but cannot lead to any meaningful action.
(“Amusing Ourselves to Death” Penguin Books, 1985. p.68)

In contrast, the news brought by Jonah and Jesus resulted in meaningful actions. The news of disaster that Jonah brought to Nineveh was not a pleasant news. But, since it shook the people out of their slumber and made them take corrective actions, it saved them. It turned out to be ‘Good News’. Similarly, when Jesus said, “Repent, and believe in the gospel” simple fisher folk like Simon, Andrew, James and John left everything and followed Jesus… a definitive and powerful transformation! These are typical samples of what news, especially ‘good news’, should be like!

One final thought on how one can ‘proclaim’ the good news without uttering a word as in the case of St Francis of Assisi. To him ‘good news’ need not always be ‘preached’… Here is an anecdote from the life of this beloved saint:
One day Francis of Assisi invited one of the young friars to join him on a trip into town to preach. The young friar was so honoured at receiving such an invitation from St. Francis that he quickly accepted. They paused beneath a tree and Francis stooped to return a young bird to its nest. They went on and stopped in a field crowded with reapers and Francis bent his back to help load the hay onto a cart. From there they went to the town square where Francis lifted a bucket of water from the well for an old woman and carried it home for her. All day long he and St. Francis walked through the streets and byways, alleys and suburbs, and they rubbed shoulders with hundreds of people. Each time they stopped, the young friar was sure that St. Francis would stop and preach. But no words of great truth or wise discourse issued from the saint's mouth. Finally, they went into the church, but Francis only knelt silently to pray. At the end of the day, the two headed back home. Not once had St. Francis addressed a crowd, nor had he talked to anyone about the gospel. The young monk was greatly disappointed, and he said to St. Francis, "I thought we were going into town to preach?" St. Francis responded, "My son, we have preached. We were preaching while we were walking and in everything we did. We were seen by many and our behavior was closely watched. It's of no use to walk anywhere to preach unless we preach everywhere as we walk! Preach the Gospel at all times. Use words only if necessary."

Preaching the good news is not an assignment ‘imposed’ on Priests and religious alone. It is an invitation ‘extended’ to all of us. How heavenly this world would be when all of us preach everywhere as we walk!

Repent and Believe in the Gospel

பொதுக்காலம் 3ம் ஞாயிறு

ஒரு தவளைக் கூட்டம் காட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென, அக்கூட்டத்திலிருந்த மூன்று தவளைகள் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டன. இதைக் கண்ட தவளைக் கூட்டம், அந்தக் குழியைச் சுற்றி நின்று கீழே பார்த்தன. அந்த மூன்று தவளைகளும் மீண்டும் மேலே வரும் முயற்சியாக, குதிக்க ஆரம்பித்தன. அவை எவ்வளவு முயன்றும், அந்தக் குழியின் ஆழத்தைத் தாண்டி வெளியில் வருமளவு குதிக்க முடியவில்லை.
இந்தப் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற தவளைகள் ஒரு சேரக் கத்த ஆரம்பித்தன. "நீங்கள் என்னதான் முயன்றாலும் வெளியே வரமுடியாது. எனவே, அங்கேயே தங்கிவிடுங்கள். சாவை எதிர்கொள்ளுங்கள்" என்று தவளைகள் அனைத்தும் சேர்ந்து கத்தின. அந்தக் கத்தலையும் மீறி, மூன்று தவளைகளும் ஒரு சில முறை குதித்துப் பார்த்தன. அவற்றில் இரண்டு தவளைகள், விரைவில் சோர்வுற்று, மற்ற தவளைகள் கத்தியபடியே, குதிப்பதை நிறுத்திவிட்டன.
மூன்றாவது தவளை மட்டும், இன்னும் அதிக முயற்சி எடுத்தது. இறுதியில் அந்தத் தவளை குழியிலிருந்து வெளியே குதித்தது. இதைக்கண்ட மற்ற தவளைகள், "குதிக்கவேண்டாம் என்று நாங்கள் அவ்வளவு கத்தியும் நீ ஏன் கேட்கவில்லை?" என்று கோபமாகக் கத்தின. அப்போது அந்தத் தவளை, "எனக்கு காது சரியாகக் கேட்காது. எனவே, நீங்கள் என்னை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் கத்துகிறீர்கள் என்று எண்ணி, அதிகம் முயற்சி செய்தேன்" என்று புன்சிரிப்புடன் சொன்னது.

வார்த்தைகள், ஆக்கவும், அழிக்கவும் வலிமை வாய்ந்தவை. நாம் வாழும் இன்றைய உலகில், வார்த்தைகள், வார்த்தைகளால் உருவாக்கப்படும் செய்திகள், பெரும்பாலும் அழிவையே அதிகமாய் பேசுவதால், அந்தத் தவளையைப்போல் செவித்திறனற்று வாழ்வது நல்லதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மனிதர்களாகிய நாம் உருவாக்கும் வார்த்தைகளின், செய்திகளின் வலிமையைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு, திருஅவை, நம்மை அழைக்கிறது. இந்தச் சிந்தனைகளின் சிகரமாக, இறைவார்த்தையால் உருவாக்கப்படும் நற்செய்தியின் வலிமையை நாம் ஓரளவு உணர்ந்தால் எவ்வளவோ பயன் பெறலாம்.

நமக்கெல்லாம் பழக்கமான ஓர் அனுபவத்தை அசைபோடுவோம். இரவு நேரம். வீட்டில் தொலைகாட்சியில் செய்திகள் காட்டப்படுகின்றன. தலைப்புச் செய்திகளில் ஆரம்பித்து, அரசியல், உலகம், பங்குச்சந்தை, விளையாட்டு, வானிலை அறிக்கை என்று, செய்திகள் நம்முன் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக 30 நிமிடங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நாம் குறைந்தது 20 செய்திகளையாவது பார்க்கிறோம். நடுவில் வரும் விளம்பரங்களையும் நாம் அறிவிப்புக்களாக, செய்திகளாக எடுத்துக்கொண்டால், நாம் பார்க்கும் செய்திகள் 40க்கும் மேல் இருக்கும்.
தொலைக்காட்சி மட்டுமில்லாமல், நாம் வாசிக்கும் நாளிதழ்கள், கேட்கும் வானொலி, அல்லது நமது செல்லிடப் பேசி, வாட்ஸ்ஸப் வழியே வரும் செய்திகள் என்று நம்மை ஒரு நாளில் வந்தடையும் செய்திகள் குறைந்தது 100 இருக்கும். இந்த நூறு செய்திகளில் எத்தனை செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டுகின்றன? வானிலைச் செய்திகளை நாம் நம்பத் தயாராக இருந்தால், அந்த வானிலை அறிக்கையில் மழை வரும் என்று சொன்னால், அந்தச் செய்தி நம்மைச் செயல்படத் தூண்டும். அதாவது, நாம் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வோம். நம்மில் ஒரு சிலர் பங்குச்சந்தை நிலவரங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் என்றால், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று அன்றைய செய்தி நமக்கு வழிகாட்டலாம். ஒருவேளை விளம்பரங்களில் வரும்  தள்ளுபடி விற்பனைச்  செய்திகள் நம்மை கொஞ்சம் அதிகமாக செயல்பட வைக்கலாம். இப்படி நம்மை வந்தடையும் 100 செய்திகளில் ஓரிரு செய்திகளே நம்மைச் செயலுக்கு அழைத்துச் செல்கின்றன. மற்றபடி நம்மை வந்தடையும் 90க்கும் அதிகமான செய்திகள் நமது அறிவுப் பசிக்கு உணவுதரும் செய்திகள் தான். அச்செய்திகளைப் பற்றி நாம் நமது நண்பர்களோடு பேசி பொழுதைப் போக்கலாம்.
தகவல் தொடர்புகளில், தகவல் பரிமாற்றங்களில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நமது உலகில், செய்திகள் பரிமாறப்படும் வேகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் ஒருசில நிமிடங்களில் நம் வீட்டுக்குக் கொண்டுவரும் அளவு நமது தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது. நம்மை ஒவ்வொரு நாளும் இப்படி ஒரு தகவல் கடலில் மூழ்கச்செய்யும் இந்தச் செய்திகள், எவ்வளவு தூரம் நம்மைச் செயல்பட வைக்கின்றன என்பதே, நாம் இன்று மேற்கொள்ள வேண்டிய ஓர் ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொள்ள நம்மைத் தூண்டுவது இன்றைய ஞாயிறு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், (யோனா 3: 1-5, 10) நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி என்று இறைவாக்கினர் யோனாவை ஆண்டவர் அனுப்புகிறார். அவர் சொல்லி அனுப்பும் செய்தி என்ன? இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்.
மாற்கு நற்செய்தியின் முதல் வரியில் நாம் வாசிப்பது இது: கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:  (மாற்கு 1: 1).
சில வரிகளுக்குப் பின், மீண்டும் முதல் பிரிவு 14ம் இறைவாக்கியத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஞாயிறு நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி பகுதி இந்த வரிகளுடன் ஆரம்பமாகிறது.

யோனாவுக்கு இறைவன் தந்த செய்தி, இயேசு பறைசாற்றிக் கொண்டே வந்த கடவுளின் நற்செய்தி இவ்விரண்டையும் மேலோட்டமாகப் பார்த்தால் இவை நல்ல செய்திகள் போலத் தெரியவில்லை. நினிவே அழியப்போகிறது என்ற செய்தியும், ‘மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளும் நல்ல செய்திகளா? ஆம், இவை நல்ல செய்திகள். நல்ல செய்தியைப் பற்றி, நற்செய்தியைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் செய்திகள்.

நற்செய்தி என்ற சொல், கிரேக்க மொழியில் Euangelion என்று கூறப்படுகிறது. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய “Jesus of Nazareth” என்ற நூலில் Euangelion என்ற கிரேக்க வார்த்தைக்கு அவர் தரும் விளக்கம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
Euangelion என்ற வார்த்தையை நாம் 'நற்செய்தி' அதாவது, 'நல்ல செய்தி' என்று மொழி பெயர்க்கிறோம். இந்த மொழி பெயர்ப்பு நம்மை ஈர்க்கிறது. ஆனால், Euangelion என்ற கிரேக்கச் சொல்லின் ஆழத்தை 'நல்ல செய்தி' என்ற மொழிபெயர்ப்பு புரியவைக்கவில்லை.
இந்த வார்த்தை, உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய வார்த்தை. இப்பேரரசர்கள் மக்கள் மீது முழு அதிகாரம் கொண்டவர்களாக, மக்களையும் இந்த உலகையும் காப்பவர்களாக தங்களையே எண்ணி வந்தனர். அவர்கள் தந்த செய்திகள் எல்லாமே Euangelion என்று சொல்லப்பட்டது. அச்செய்திகள், மகிழ்வான, இதமான செய்திகளாக இருந்தனவா என்பது கணக்கில்லை. பேரரசரிடமிருந்து வந்த செய்தி என்பதால், அது பாதுகாக்கும் சக்தி பெற்றதென்று கருதப்பட்டது. அது வெறும் தகவல்களைத் தரும் செய்தி அல்ல. மாறாக, உலகை மாற்றக்கூடிய அதிலும் உலகை உயர்ந்ததொரு நிலைக்கு மாற்றக்கூடிய வலிமை பெற்ற செய்தி என்று கருதப்பட்டது.
உரோமையப் பேரரசர்கள் பயன்படுத்திய Euangelion என்ற கிரேக்கச் சொல்லை நான்கு நற்செய்தியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் எழுதியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாம் நான்கு நற்செய்திகள் என்று குறிப்பிடுகிறோம்.
தன்னை ஒரு கடவுளாக, மனிதர்களைக் காப்பவராக தவறாக எண்ணி வந்த பேரரசன் பயன்படுத்திய Euangelion என்ற சொல், இயேசுவில் தன் முழுமையானப் பொருளைக் கண்டது.
நாம் இன்று பயன்படுத்தும் ஒரு சில சொற்றொடர்களை Euangelion என்ற வார்த்தையை விளக்க நாம் பயன்படுத்தலாம். தகவல் பரிமாற நாம் பேசுவது informative speech. செயல்படத் தூண்டும் வகையில் நாம் பேசுவது performative speech. நாம் கேட்கும் நற்செய்திகள் நம்மைச் செயல்படத் தூண்டும் செய்திகள் என்று திருத்தந்தை இந்த வார்த்தைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நற்செய்தி என்ற சொல்லில் நல்ல+செய்தி என்ற இரு வார்த்தைகள், இரு அம்சங்கள், இரு உண்மைகள் போதிந்துள்ளதைக் காணலாம். 'நல்ல செய்தி' என்றதும், இதமான, மகிழ்வான செய்தி என்று மட்டும் பொருள் கொள்ளக்கூடாது. நாம் சிந்திக்கும் நற்செய்தி பல நேரங்களில் இதமாக, மகிழ்வாக இருக்காது. 'நினிவே அழியப்போகிறது' என்பது எப்படி இதமான, மகிழ்வான செய்தியாக இருக்க முடியும்? ஆனால், நற்செய்தி என்ற சொல்லுக்கு, நன்மை விளைவிக்கும் செய்தி என்று பொருள் கொண்டால், அதன் முழு அர்த்தமும் விளங்கும். இந்த கோணத்தில் பார்த்தால், ‘நினிவே அழியப்போகிறது என்று யோனா குரல் எழுப்பிக் கூறியதும், அந்த நகர மக்கள் விழித்தெழுந்தனர். யோனா வழங்கிய அந்தக் கொடூரமான செய்தி, அந்நகரைக் காப்பாற்றியது. எனவே, இது நல்ல செய்தியானது. இப்படி சொல்லப்படும் செய்திகள், கத்தியை நினைவுபடுத்துகின்றன.
அறுவைச் சிகிச்சையில், அல்லது சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் கத்திகள் குத்தும், வெட்டும், கிழிக்கும்... ஆனால், இறுதியில் அந்தக் கத்திகள் நன்மைகளை உருவாக்கும். அதுபோன்றது இறைவாக்கு, நற்செய்தி... இந்தப் பொருளில்தான் இறைவார்த்தை இருபுறமும் கூரான வாள் என்று எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகத்தில் சொல்லப்பட்டுள்ளது என எண்ணிப் பார்க்கலாம் - எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12

நற்செய்தி அல்லது நல்ல செய்தியில் இரண்டாம் வார்த்தை செய்தி... இங்கு செய்தி என்ற சொல் வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. செயல்களுக்கு அழைத்துச் செல்லும் செய்திகள் இவை. மிக விரைவில் தொடர்புகள் நடைபெறும் இந்தக் காலத்தில், நொடிக்கு நூறு செய்திகள் என்று நமது வாழ்வை செய்திகள் நிரப்புவதால், அவை நம்மைச் செயலிழக்கச் செய்துள்ளன என்று துவக்கத்தில் சொன்னோம். தேவைக்கு அதிகமாய் ஒரு கடல் போல செய்திகள் நம்மைச் மூழ்கச் செய்கின்றன. இந்தக் கடலில் நாம் ஆழ்ந்து முத்தெடுப்பதும் இல்லை. கடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. இந்தக் கடலில் மிதந்து வருவதிலேயே சுகம் காண்கிறோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... பல நேரங்களில் நாம் வாழ்வில் பகிர்ந்துகொள்ளும் நற்செய்திகள் வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு நற்செய்தியாக மாறவேண்டும் என்பதை அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.
ஒரு நாள் அசிசி நகர் புனித பிரான்சிஸ் தன்னுடன் ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர், மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழையும் நேரத்தில், ஒரு மரத்தின் மேலிருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்திருந்த ஒரு குஞ்சுப் பறவையை, மீண்டும் மரமேறி, அந்தக் கூட்டில் வைத்துவிட்டு இறங்கினார் பிரான்சிஸ். போகும் வழியில், அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன், பிரான்சிஸ் இறங்கி வேலை செய்தார். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள் சென்றதும், அங்கு ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு பிரான்சிஸ் தண்ணீர் இறைக்க உதவினார். அவருடன் அந்தத் தண்ணீர் பாத்திரங்களை அவர் வீடுவரை சுமந்து சென்றார். இப்படி நாள் முழுவதும், அந்த ஊரில் பலருக்கும் உதவிசெய்யும் நோக்கத்துடன், பல பணிகள் செய்தார் பிரான்சிஸ். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாளின் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ், கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.
இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத் தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளை விட வலிமை மிக்கவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோனா வழியாகத் தரப்பட்ட அந்த அழிவுச் செய்தி நினிவே மக்களை மனம் மாற்றியது. அழிவிலிருந்து காத்தது. இன்றைய நற்செய்தியில் "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு விடுத்த அந்த அழைப்பு பலரை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்தது. அவர்களில் அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மீன்பிடித் தொழிலாளிகள், இயேசுவின் அழைப்பைக் கேட்டு, செயல்பட்டனர். தங்கள் உடைமைகள், உறவுகள் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

நன்மை பயக்கும் செய்திகளைத் தரும் கருவிகளாக நாம் மாறவேண்டும். நாம் பரிமாறும் செய்திகள், வெறும் தகவல் பரிமாற்றமாக இல்லாமல், செயலுக்கு, அதுவும், உன்னதமானச் செயலுக்கு, மக்களைத் தூண்டும் சவால்களாக அமையவேண்டும். அனைத்திற்கும் மேலாக, வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வின் வழியே நற்செய்தியைப் பறைசாற்றும் கருவிகளாக நாம் அனைவரும் மாறவேண்டும் என்று மன்றாடுவோம்.


14 January, 2018

Introduced to God by the roadside வழியோரம், கடவுளின் அறிமுகம்


Peter and Andrew with Jesus

2nd Sunday in Ordinary Time - Pongal

On January 14, Sunday, Pongal (harvest festival) is celebrated in Tamilnadu and in most other Tamil speaking communities around the world. Recently, the State of Virginia in the U.S. has designated January 14, Pongal Day as a special holiday for the state. I am sure that this recognition was a great consolation for the thousands of Tamils living around the world.
A similar consolation was experienced last year during Pongal. On Pongal day, the eyes of thousands of Tamil people all over the world were turned towards Marina Beach, Chennai. Young men and women, as well as family persons, children and senior citizens in tens of thousands gathered in Marina Beach demanding the re-instatement of ‘Jallikattu’ - the bull-fight, banned a few years back.

Hats off to the youth of Tamil Nadu, who had not sought the support of any political party as well as the support of the tinsel world. They had taken care not to be divided on lines of caste, religion, political allegiance, fan club etc. They had not resorted to any violence and have gone from strength to strength. To me, this was truly a people’s movement – especially a youth movement, where no individual stole the limelight. The Central and State governments as well as various MNCs were forced to take note of this event, and also take stock of their dubious, underhand dealings with people.

This ‘dharmic’ protest by the youth gave hope as to what the youth can do if they unite for a purpose. We pray that such purposeful coming together of the youth takes place whenever there is a need to set things right. Unfortunately, after the ‘Jallikattu’ protest, the youth have not been able to muster strength to protest against other atrocities like the NEET exam. The lengthy protests taken up by the Tamilnadu farmers in Delhi also did not get enough support of the youth. We pray that the youth may truly become a constructive force to bring about social change in Tamil Nadu and all over India.

On January 14, the Church invites us to commemorate the World Day of Migrants and Refugees. In 1914, Pope St Pius X instituted this Day and this year the Church commemorates the 104th edition of this World Day. The message of Pope Francis given for this world day is titled: “Welcoming, protecting, promoting and integrating migrants and refugees”. The Pope begins his message with the quote from Leviticus 19:34: “You shall treat the stranger who sojourns with you as the native among you, and you shall love him as yourself, for you were strangers in the land of Egypt: I am the Lord your God”.

Through these words, God reminds each one of us that we are travellers on earth – better still, pilgrims. We are not the owners or permanent residents here on earth. All of us are passing through this world as pilgrims just once. If only we understood this truth and consider all the people in the world as co-pilgrims, there will be lot less problems. Unfortunately, some world leaders consider themselves as owners of their respective countries and hence want to protect their ‘property’ by raising walls and treating people from other countries as ‘encroachers’! Our present day leaders are guilty of allowing the problem of Refugees and Immigrants to spiral into unprecedented levels. We are guilty of allowing most of our children grow up in make-shift tents.

In his message Pope Francis challenges us saying, “Every stranger who knocks at our door is an opportunity for an encounter with Jesus Christ, who identifies with the welcomed and rejected strangers of every age (Matthew 25:35-43).” He then goes on to spell out our response to the epidemic of ‘rootless and roof-less people’ with the help of four verbs: “to welcome, to protect, to promote and to integrate”.

One of the Tamil poets by name ‘Kaniyan Poongunranar’ has enunciated the broad-minded Tamil culture that welcomes every one as a relative. “Yaathum Oore, Yavarum Kelir” which means, “All the towns are our neighbourhood and all the people, our relatives”. We pray that on Pongal festival, which brings near and dear ones together from far and wide, reminds us strongly that all of us are knit together into a noble human family where there is neither immigrant nor refugee!

Let us now turn our attention to this Sunday’s readings…
    
The first reading and the Gospel talk about how God gets introduced to us in various ways. In the first reading we hear how God gets introduced to Samuel when he was a child (I Samuel 3:3-10, 19). Andrew and Simon Peter meet Jesus as adults (John 1: 35-42). There are a few lessons – old and new – that we can learn from these two events.

God meets Samuel in the temple. Samuel has been serving in the temple for quite some time. The opening line of this passage says that Samuel was lying down within the temple of the LORD. (I Sam. 3:3) This indicates that he was all the time in the temple. Still he had not met God.
I am reminded of the small fish swimming in the ocean. It was swimming here and there as if searching for something. A big fish asked the small fish: “What are you searching for?” The small fish answered: “The ocean”. It is possible to be immersed in the ocean and still not be aware of it.
It is possible to be in God’s presence and still not be aware of God as in the case of Samuel. Samuel was a child and, hence, his ignorance need not be made much of. What about us who have taken God for granted in our lives and begin searching for God mainly when things became tough for us?

In the Gospel we come across two adults getting introduced to Jesus. In the case of Samuel, God gets introduced in the temple whereas in the Gospel, Jesus gets introduced on the roadside. Both in the Bible as well as in human history, God gets introduced more often in very ordinary circumstances and places than in the holy of holies. Since it is so ordinary, many of us tend to miss the importance of it. Even in the case of the two disciples of John, they could have missed Jesus. But, they took extra efforts. They followed Him.
The two disciples… followed Jesus. Jesus turned, and saw them following, and said to them, "What do you seek?" And they said to him, "Rabbi" (which means Teacher), "where are you staying?" He said to them, "Come and see." They came and saw where he was staying; and they stayed with him that day, for it was about the tenth hour. (John 1: 37-39)

It is interesting to note that the very first words spoken by Jesus, in the Gospel of John, are in the form of a pertinent question: "What do you seek?" At the beginning of a New Year, we seek so many things to make our life better. If Jesus were to ask each of us "What do you seek?", what would be our answer. What are we seeking in 2018? 
Two questions ‘What do you seek?’ and ‘Where are you staying?’ as well as an invitation ‘Come and see’ are the main focus of this passage and it gives us two fundamental characteristics of a true disciple… Seeking God and Staying with God.

I have read this passage from John’s Gospel quite many times and have interpreted it in very many ways. This time, one aspect of this passage struck me for the first time… the idea of Andrew taking efforts to introduce the Lord to his brother Simon. As siblings, we tend to introduce our brothers and sisters to many things and persons in life. But how many of us introduce God to our own brothers and sisters? In how many families God is a topic of our conversations? The family that prays together, not only stays together, but also becomes familiar with God!

Another aspect of this passage is the humility of Andrew. He brings Peter to Jesus and Jesus seems to pay more attention to Peter, calling him ‘the rock’ etc. The meeting between Jesus and Peter began a historical relationship that has survived 20 centuries. This does not seem to have disturbed Andrew one bit. He came from the school of John the Baptist who often spoke of how ‘Jesus must increase and he must decrease’. In reality, John did just that. After introducing Jesus to his disciples he disappeared from the scene. Andrew too, after introducing Jesus to Peter, remained incognito! We can surely pray for this wonderful grace of getting our own near and dear ones introduced to God and disappearing, once God takes over.

We pray that the Pongal festival brings more hope to the farmers in Tamilnadu and India. We pray that the youth power in India reaps a bumper harvest of noble deeds. We pray that all the world leaders take sincere efforts to address the problems of the Immigrants and Refugees. We pray also our families become schools where God is introduced as a loving person.

2017 Pro-Jallikattu Protests

இமயமாகும் இளமை - நம்பிக்கையை விதைத்த தமிழக இளையோர்

2017ம் ஆண்டு, சனவரி 14, பொங்கல் திருநாளன்று, உலகில், பெரும்பாலானோரின் பார்வை, மெரினா கடற்கரையை நோக்கித் திரும்பியிருந்தது. 2017ம் ஆண்டு, சனவரி மாதம், இலட்சக்கணக்கான இளையோர், மெரினா கடற்கரையில் மேற்கொண்ட போராட்டம், நம் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளது. மெரினா கடற்கரையில் துவங்கி, தமிழகமெங்கும், கண்ணியமான முறையில், நடைபெற்ற அந்தப் போராட்டத்தின் விளைவாக, தடைசெய்யப்பட்டிருந்தஜல்லிக்கட்டு விளையாட்டு, மீண்டும், தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.
சுயவிளம்பரம் தேடும் நடிகர்களையும், தலைவர்களையும் சார்ந்திராமல், அரசியல் நாற்றம் அறவே இல்லாமல் நடத்தப்பட்ட அந்த அறப்போராட்டம், நம்மை வியக்கவைத்தது; இளையோர் மீது நம்பிக்கையை விதைத்தது. கொள்கைகளை மையப்படுத்தி, திரண்டுவந்த இளையோர், இன்னும் பல சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, திரண்டு வரவேண்டும் என்ற வேண்டுதலை, இறைவனின் சந்நிதியில், பொங்கல் திருநாளன்று சமர்ப்பிப்போம்.

Learn some amazing facts about this harvest festival

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - பொங்கல் திருநாள்

தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும், இஞ்ஞாயிறன்று, பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எல்லா நாடுகளிலும், ஆண்டின் பல்வேறு நாட்களில், அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம், மனித உழைப்பு, இறைவனின் கருணை அனைத்தும் இணைந்து, நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.
வேளாண்மையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், நம் உள்ளங்களில் மகிழ்வான எண்ணங்களை உருவாக்கும் அதே வேளை, வேளாண்மை செய்வோரைப் பற்றிய கவலைகளையும் நெருடல்களையும் உருவாக்கத் தவறவில்லை. சேற்றில் இறங்கி, வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயப் பெருமக்கள், தங்கள் உழைப்பிற்கேற்ற பலனை அறுவடை செய்வதில்லை என்பதை, தமிழக விவசாயிகள், டெல்லியில் மேற்கொண்ட தொடர் போராட்டத்தால் உணர்த்த முயன்றனர். அவர்களது போராட்டத்திற்கு தகுந்த ஆதரவு இல்லாமல் போனது, உள்ளத்தில் வேதனையை உருவாக்குகிறது.
பொங்கிவரும் பாலில் நீர் தெளித்து அடக்குவதுபோல், நம் மகிழ்வை அடக்கிவிடும் இந்த நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில், நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு, இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

சனவரி 14, இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றத்தாரர் உலக நாளை, கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கிறது. 1914ம் ஆண்டு, திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்களால் நிறுவப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு, 104வது முறையாக சிறப்பிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான மக்களை, குறிப்பாக, குழந்தைகளை, நாடற்ற நாடோடிகளாக அலையவிடுவது, இன்றைய உலக அரசுகள் செய்துவரும் பெரிய அநீதி. இவ்வுலகில் பிறக்கும் எவரும், இவ்வுலகிற்கு உரிமையாளர்கள் அல்ல, அனைவருமே இங்கு பயணிகள், சிறப்பாக, திருப்பயணிகள் என்பதை நாம் உணர்ந்தால், புலம் பெயர்ந்தோரை நமது துணைப் பயணிகளாக ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும். இதற்கு மாறாக, சில அரசுத்தலைவர்கள், தங்கள் நாட்டை அவர்களது தனிப்பட்ட சொத்தாகக் கருதி, தங்கள் நாட்டைச் சுற்றி சுவர்கள் எழுப்புவதும், வேற்று நாட்டவரை, தங்கள் உரிமைச் சொத்தில் குறுக்கிடுபவர்களாக குற்றம் சாட்டி, அவர்களை விரட்டியடிப்பதும், வேதனை தரும் உண்மை. நாம் அனைவருமே இவ்வுலகில் பயணிகள் என்பதையும், எனவே, அயலவரை, குறிப்பாக, அன்னியரை, உடன் பயணிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும், லேவியர் நூலில் இறைவன் நமக்கு தெளிவாக நினைவுறுத்தியுள்ளார்:
உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்... (லேவியர் நூல் 19:34)
சங்க காலப் புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றனார் அவர்கள், யாதும் ஊரே யாவரும் கேளிர் அதாவது, எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் உறவினரே என்று எழுதிய பொன்னான வரிகள், தமிழரின் பரந்த மனப்பான்மையை நமக்கு மீண்டும் நினைவுறுத்துகின்றன. அன்று அவர் பறைசாற்றிய அந்த அற்புத மனப்பான்மையில், தமிழர்கள் மட்டுமின்றி, இவ்வுலக மக்கள் அனைவருமே வளர்ந்தால், உலகில் உறவுகளற்ற புலம்பெயர்ந்தோர் இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி.

இனி, இன்றைய ஞாயிறு வாசகங்களின் மீது ஒரு பார்வை....
நம் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில், இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதை, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை, முதல் வாசகமும் (1 சாமுவேல் 3: 3ஆ-10, 19), வளர்ந்துவிட்ட நிலையில் அந்திரேயா, மற்றும் பேதுரு இருவருக்கும், இயேசு அறிமுகமாகும் நிகழ்வை, இன்றைய நற்செய்தியும் (யோவான் 1: 35-42) படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த இரு நிகழ்வுகளுமே, சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.
சிறுவன் சாமுவேலுக்கு, ஆண்டவரின் இல்லத்தில், இறைவன் அறிமுகமாகிறார். ஆண்டவரின் இல்லமே அவன் வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும், அந்தப் புனிதமான இடத்தில், அச்சிறுவனால், இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
நம் வாழ்வை ஆய்வு செய்யும்போது, நமக்கு அதிக பழக்கமான இடங்களிலும், சூழல்களிலும் இறைவன் தன்னை அறிமுகப்படுத்திய நேரங்களில், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் அவதியுற்றிருக்கிறோம். குறிப்பாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம்.
கடற்கரையில் இறைவனும், பக்தனும் இணைந்து நடந்து சென்ற கதை நமக்கு நினைவிருக்கும். கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்த பக்தன், தானும், இறைவனும் வாழ்வில் இணைந்து நடந்ததன் அடையாளமாக இரு சோடி காலடித்தடங்கள் பதிந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு சில வேளைகளில் அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான், பக்தன். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடித்தான். உடனே பக்தன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிட்டான். இறைவன், பதில் மொழியாக, "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது, ஒரு சோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு, அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரங்களில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார்.
சிறுவயதில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இறைவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவருடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் போனதால் இத்தவறுகள் நடந்தன. இத்தவறுகளைத் தீர்க்கும் வழிகளை, இன்றைய நற்செய்தி சொல்லித்தருகிறது.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவை, தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம், இயேசுவின் அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை, இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது.

வழியோரம் அறிமுகமான இயேசுவை, வழியோரமாகவே விட்டுவிட்டு, தங்கள் வழியில் செல்லவில்லை, அச்சீடர்கள். அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இந்நிகழ்வைக் கூறும் யோவான் நற்செய்தியின் வரிகளைக் கேட்போம்:
யோவான் நற்செய்தி 1: 38-39
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள் என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

இயேசு பேசிய முதல் சொற்களாக, யோவான் நற்செய்தியில் நாம் காண்பது, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற பொருள் செறிந்த கேள்வி. இதைத் தொடர்ந்து, "வந்து பாருங்கள்" என்ற அழைப்பை இயேசு விடுக்கிறார்.
ஒவ்வொரு புதிய ஆண்டிலும் நாம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக, இத்தேடல்கள், நமது வாழ்வை, கூடுதலான நலமும், வசதியும் நிறைந்ததாக மாற்றும் தேடல்களாக அமைகின்றன. நம்மிடம், இன்று, இயேசு, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினால், நமது பதில் என்னவாக இருக்கும் என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது பயனளிக்கும். 2018ம் ஆண்டு, நாம் தேடுவது என்ன?

"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பும், அந்த அழைப்பை ஏற்று, சீடர்கள் இயேசுவுடன் தங்கியதும், இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இறைவனை, இயேசுவை, உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள். அடுத்ததாக, தாங்கள் பெற்ற அனுபவத்தை, பிறரும் பெறவேண்டுமென்ற ஆவலில், அவர்களை இறைவனிடம் அழைத்துச் செல்வதும், உண்மையான சீடரின் பண்பு. இதையே, அந்திரேயா செய்தார்.

அந்திரேயா முதலில் இயேசுவைச் சந்திக்கிறார். பின்னர், தான் பெற்ற இன்பம் தன் சகோதரனும் பெற வேண்டும் என்று, பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். நம் குடும்பங்களில், உடன்பிறந்தோரும், உறவுகளும், வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக, பலரை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம், இறைவனை, அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது.
இந்த அறிமுகம் நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் அவசர உலகில், இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும். இறைவனை நம் குடும்பங்களில் அறிமுகப்படுத்த, அவருடன் உறவை வளர்க்க, குடும்ப செபங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

அந்திரேயா தன் உடன் பிறந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும் இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா' 'பாறை' உறுதியானவர் என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்து வந்த சகோதரன் மீது இயேசு தனி கவனம் காட்டியது, அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வந்த திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார்; மறைந்துபோனார். அவரது சீடராக இருந்த அந்திரேயாவும், அதே மன நிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்கவேண்டும் என்று எண்ணினார் அந்திரேயா. அவர் எண்ணியபடியே, இயேசுவும், பேதுருவும் படைத்த அந்த வரலாறு, 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது.

உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவர் ஒருவருக்கு இறைவனை அறிமுகம் செய்வதற்கும், அனைவரும் இணைந்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த மனப்பான்மையுடன், மனித குடும்பத்தை உருவாக்குவதற்கும் இறைவன் நமக்கு நல்வழிகாட்ட மன்றாடுவோம்.


09 January, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அறிமுகம் / பகுதி 2


Cover page of the book : “The Law of the Garbage Truck”


இமயமாகும் இளமை - உங்கள் நாள் குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!

'குப்பையற்ற நாள்' (Garbage-free day) என்ற தலைப்புடன், சமூக வலைத்தளத்தில் வலம்வரும் ஒரு சிறுகதை இது. இந்தக் கதையை, ஓர் இளைஞர், தான் பெற்ற சொந்த அனுபவமாகக் கூறியுள்ளார்:
விமான நிலையம் செல்வதற்கு 'டாக்சி'யில் ஏறினேன். போகும் வழியில், திடீரென மற்றொரு கார், எங்கள் பாதையில் குறுக்கிட்டது. டாக்சி ஓட்டுனர் 'பிரேக்' அடித்து வண்டியை நிறுத்தினார். குறுக்கே வண்டியை ஒட்டி வந்தவர், தன் காரின் கண்ணாடியை இறக்கி, டாக்சி ஓட்டுனரைப் பார்த்து கத்தினார். நான் பயணம் செய்த டாக்சியின் ஓட்டுனரோ, அவரைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தார். கத்திக்கொண்டிருந்தவர், எதோ முணுமுணுத்தபடியே, தன் காரை ஒட்டிச் சென்றார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த நான், "தப்பு செய்தது அவன். அவனைப் பார்த்து ஏன் கையசைத்து புன்னகை செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அப்போது, அந்த டாக்சி ஓட்டுனர் சொன்னது, அழகான ஒரு பாடம். அந்தப் பாடத்திற்கு, 'குப்பை லாரி விதிமுறை' (The Law of the Garbage Truck) என்று பெயரிட விழைகிறேன். டாக்சி ஓட்டுனர் சொன்னது இதுதான்:
"நம்மைச் சுற்றியுள்ள பலர், குப்பை லாரிகளைப் போன்றவர்கள். எரிச்சல், வருத்தம், ஏமாற்றம் என்று பல குப்பைகளைச் சுமந்து அலைகின்றனர். குப்பைகள் கூடக் கூட, அதை எங்காவது கொட்டவேண்டும் என்று துடிக்கின்றனர். சிலவேளைகளில், தங்கள் குப்பையை, அவர்கள், உங்கள் மீது கொட்டிவிடுவர். அவ்வேளைகளில், புன்னகையோடு அவர்களுக்குக் கையசையுங்கள். அவர்கள் கொட்டிய குப்பையை நீங்கள் சுமந்து சென்று, உங்கள் அலுவலகம், அண்டைவீடு, முக்கியமாக, உங்கள் குடும்பம் என்ற இடங்களில் அந்தக் குப்பையைப் பரப்பாதீர்கள்" என்று கூறினார், டாக்சி ஓட்டுனர்.
இந்தக் கதையை வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டவர், இறுதியில் கூறும் ஒரு வாழ்த்துரை இதுதான்: இன்று, உங்கள் நாள், குப்பையற்ற நாளாக இருக்கட்டும்!
ஊரில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றும் இளையோர் அணிகளைப் பற்றி செய்திகளில் வாசிக்கிறோம். பெருமிதம் கொள்கிறோம். அதே வேளையில், இளையோர், தங்கள் உள்ளங்களில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

Miracles: Experience God’s Power in Your Life

புதுமைகள் – அறிமுகம் / பகுதி 2

சனவரி 7, கடந்த ஞாயிறு, திருக்காட்சிப் பெருவிழாவைச் சிறப்பித்தோம். இவ்விழாவை, மூன்று அரசர்கள் அல்லது, மூன்று ஞானிகள் திருவிழா என்றும் அழைக்கிறோம். குழந்தை இயேசு பிறந்ததைக் காண்பதற்கு, இரு குழுக்கள் சிறப்பான அழைப்பைப் பெற்றன. இவற்றில், முதலில் அழைக்கப்பட்ட இடையர் குழுவினருக்கு நாம் விழா எடுப்பதில்லை. ஆனால், அழைக்கப்பட்ட ஞானிகளுக்கு விழா எடுக்கிறோம். ஏன் இந்த வேறுபாடு என்பதைச் சிந்திப்பது, புதுமைகள் குறித்த நம் தேடலுக்கு உதவியாக இருக்கும்.
இடையர்களுக்கு, வானதூதர்கள் நேரடியாகத் தோன்றி, கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவித்தனர். நள்ளிரவில், வானத்தில், இயற்கைச் சூழலிலிருந்து வெகுவாக வேறுபட்ட ஒரு நிகழ்வை நேரடியாக அனுபவித்ததால், இடையர்களுக்கு இயேசுவின் பிறப்புச் செய்தியை புதுமையென்று ஏற்பதற்கு, எவ்விதத் தயக்கமும் தோன்றியிருக்காது.
இதற்கு மாறாக, கீழ்த்திசை ஞானிகளுக்கோ, வானில் தோன்றிய ஒரு விண்மீன் வழியே, கிறிஸ்து பிறப்பு அறிவிக்கப்பட்டது. பல்லாயிரம் விண்மீன்கள் நடுவே தோன்றிய அந்த விண்மீன், ஞானிகளுக்கு எந்த செய்தியும் சொல்லவில்லை. அந்த விண்மீன் சொல்வது, நல்லதொரு செய்தியாகத்தான் இருக்கவேண்டும் என்று நம்பிய ஞானிகள், அதைத் தொடர்வதற்குத் தீர்மானித்தனர். இயேசுவின் பிறப்பு என்ற புதுமையைக் கண்டனர்.

இவ்வுலகில், இன்றும், அற்புதமானச் செய்திகள், ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளன. இச்செய்திகளில் சில, இடையர்கள் அனுபவித்ததுபோல, சராசரி, இயல்பு வாழ்விலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. அவ்வேளைகளில், அவற்றை, அற்புதங்கள், புதுமைகள் என்று எளிதில் ஏற்றுக்கொள்கிறோம். இவற்றிற்கு மாறாக, இன்னும் பல புதுமைகள், எளிதான அடையாளங்கள் வழியே நம்மைச் சுற்றி நிகழ்கின்றன. அவற்றை நாம் சரிவரப் புரிந்துகொண்டால், நமது வாழ்வு, அற்புதங்களால், புதுமைகளால் நிறைந்துவிடும். இதையே, கீழ்த்திசை ஞானிகள், நமக்குச் சொல்லித் தருகின்றனர். இத்தகைய மனநிலையுடன், புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.

இயேசு ஆற்றியதாக, நான்கு நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுமைகளின் எண்ணிக்கை 35 என்பது, பொதுவான கருத்து. இவற்றோடு, கன்னியிடமிருந்து பிறந்தது, உயிர்த்தெழுந்தது, விண்ணகம் சென்றது என்ற புதுமைகளை இணைத்து, இயேசு ஆற்றியப் புதுமைகள் 40 என்று ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். எந்த ஒரு நற்செய்தியாளரும், அனைத்துப் புதுமைகளையும் ஒரே நூலில் தொகுத்துத் தரவில்லை.
ஒரு சில புதுமைகள், ஒரு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக, இயேசு கானா திருமணத்தில் தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ளது (யோவான் 2:1-11). அதேபோல், நயீன் நகர் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பிக்கும் புதுமை, லூக்கா நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 7:11-17). இதற்கு மாறாக, இயேசு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது (மத். 14:13-21; மாற். 6:30-44; லூக். 9:10-19; யோவா. 6:1-14).

இயேசு ஆற்றியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகளில், பாதிக்கும் மேற்பட்டவை, நோயுற்ற மக்களுக்கு நலமளிக்கும் புதுமைகளாக அமைந்துள்ளன. உயிரற்றோருக்கு உயிரளிக்கும் புதுமைகள், மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளன. இயற்கையின் மீது இயேசு தன் சக்தியைப் பயன்படுத்தும் புதுமைகளாக, கடல் மீது நடத்தல், கடலை அமைதிப்படுத்துதல் போன்ற சில புதுமைகள் பதிவாகியுள்ளன.

நான்கு நற்செய்திகளிலும், புதுமைகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்கள், புதுமைகளின் ஒரு சில அம்சங்களை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும்.
துனாமிஸ் (Dunamis) என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'வல்லமை' என்று பொருள். இறைவனின் வல்லமையால் நிறையப்பெற்ற இயேசு, இயற்கையை மீறிய வல்லமையோடு, புதுமைகள் ஆற்றினார். இரத்தப் போக்கினால் வருந்தியப் பெண், இயேசுவின் மேலுடையைத் தொடும் நிகழ்வில், நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:
மாற்கு 5: 29-30
"(இயேசுவின் மேலுடையைத்) தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே, இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து, மக்கள் கூட்டத்தைத் திரும்பிப்பார்த்து, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று கேட்டார்."

புதுமைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு சொல், ‘தேரெசா (Teresa). இந்தச் சொல், புதுமைகள் நிகழும்போது மக்களிடையே ஏற்பட்ட வியப்பு, திகைப்பு, மலைப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
புயல்காற்று சூழ்ந்த படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, விழித்தெழுந்து, காற்றையும், அலைகளையும் அடக்கியபோது, மக்களெல்லாரும், "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" என்று வியந்தனர். (மத். 8:27)
தீய ஆவி பிடித்தவரை இயேசு குணமாக்கியபோது, சூழ இருந்த மக்கள் "அனைவரும் திகைப்புற்று, 'இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்." (மாற்கு 1:27)
பேய்பிடித்த சிறுவனை இயேசு குணப்படுத்தி, அவனது தந்தையிடம் ஒப்படைத்தபோது, "எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்." (லூக்கா 9:43)
வியப்பு, திகைப்பு, மலைப்பு என்ற மூவகை உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல், ‘தேரெசா’.

இயேசுவின் புதுமைகளைப்பற்றி பேசும்போது, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் மூன்றாவது சொல், 'செமெயியோன்' (Semeion). கிரேக்க மொழியில் இந்தச் சொல்லுக்கு, 'அடையாளம்' என்று பொருள். இந்தச் சொல்லை, நற்செய்தியாளர் யோவான், அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். கானா திருமணத்தில், இயேசு, தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றியதும், யோவான் கூறும் விளக்கம் இவ்வாறு அமைந்துள்ளது:
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். (யோவான் 2:11)
அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கும் புதுமையைத் தொடர்ந்து, "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4:54) என்ற விளக்கத்துடன், இரண்டாம் புதுமையை, யோவான் நிறைவு செய்துள்ளார்.
ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமைக்குப்பின், "இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள்" (யோவான் 6:14) என்ற சொற்களை, யோவான் பதிவு செய்துள்ளார்.

இயேசு ஆற்றிய புதுமைகளைக் கண்டவர்கள், வியப்பு, மலைப்பு, திகைப்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தியதோடு, இன்னும் சில அழகான, ஆழமான உணர்வுகளையும் வெளிப்படுத்தினர் என்பதை, நாம் நற்செய்தியில் காண்கிறோம்.
எடுத்துக்காட்டாக, இரவு முழுவதும் மீன் பிடிப்பு இன்றி சோர்ந்திருந்த சீமோன் பேதுருவிடம் மீண்டும் மீன் பிடிக்கும்படி இயேசு பணித்தபோது, அதற்கு செவிமடுத்து, பேதுரு வலையை வீசவே, திரளான மீன்கள் வலையில் விழுந்தன. "இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்றார்" (லூக்கா 5:8) என்று நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார்.
பத்து தொழுநோயாளரை இயேசு குணப்படுத்தும் புதுமையில், அவர்களை குருக்களிடம் காட்டும்படி இயேசு அவர்களை அனுப்பி வைக்கிறார். அவ்வேளையில் நிகழ்ந்ததை, லூக்கா நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:
லூக்கா 17: 14ஆ-16
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.

புதுமைகளைக் கண்டு, தன்னுடைய தகுதியின்மையை உணர்தல், அல்லது நன்றியால் நிறைதல் என்ற புனிதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மாற்றாக, ஏரோது மன்னன், இயேசுவின் புதுமைகளை, கண்கட்டி வித்தையைப்போல் வேடிக்கைப் பார்க்கும் ஆவலில் இருந்தான் என்று நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம். தன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இயேசு, கலிலேயாவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த ஆளுனர் பிலாத்து, அவரை, ஏரோதிடம் அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ந்தனவற்றை, லூக்கா நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்.
லூக்கா 23: 8-9
இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.
இயேசுவின் புதுமைகளை, மேஜிக் வித்தைகளாகக் கருதாமல், நன்றி உணர்வுடன் அவற்றை அணுகிச் செல்வோம், இனி வரும் தேடல்களில்.