We begin where we left last week… in Green Pastures!
For this week’s reflection, I have relied very much on the fourth chapter of Harold S.Kushner’s book “The Lord Is My Shepherd – Healing Wisdom of the Twenty-Third Psalm”. Towards the end of last week’s reflection on Psalm 23, we tried a ‘mini-meditation’ of visualising a green meadow, across which a gentle breeze blew, and where we heard the distant flute of a shepherd… Seeing a green meadow either in person or in imagination helps us to relax and recuperate. Kushner says: “A psychologist, in an article entitled ‘Why Scenery Makes Us Happy’, suggests that such a landscape ‘fills us with a sense of security, easy access to food and low exposure to predators.’”
When David composed this Psalm, he would have surely recollected how his ancestors were fighting for food and security in alien lands. David must have been thankful to God for keeping him and his generation in relative peace and prosperity. Green pastures where the sheep can afford to lie down and nibble away quietly... or, simply not eat all since they are filled… is a lovely imagery of the good earth that God had gifted us with. Unfortunately, we have abused this gift to a great extent, in the name of progress!
Kushner talks about this progress in the form of a group discussion he had with his friends. “Some time ago, a few friends and I set ourselves the intellectual puzzle of deciding when the twentieth century began. We were obviously not talking about what the calendar said, but rather about what the single biggest difference was between life in the nineteenth century and life in the twentieth. The suggestion that won the most support was the invention of electricity. Electricity liberated us from having to regulate our lives by the rhythms of nature, rising at dawn, and lighting a candle or kerosene lantern to find our way to bed after sunset. It let us rule the night as we ruled the day. That ability to summon light and dispel darkness added greatly to our sense of mastery over the world, with good and bad consequences.”
The mastery we have gained over the world has left us with mixed feelings of rapture and regret. I used to teach a subject called Development Communication, which was very close to my heart. While teaching this subject, I spent a lot of time trying to tell the students as well as myself what true development was. Preparing for this subject every year, left me overwhelmed and saddened at the way we have treated nature. The way I was presenting ‘development’, left quite a few of my students confirmed that I was a hardcore cynic. I feel that there is a lot more regret in me than rapture about the way we have progressed or developed.
The Garden of Eden in Genesis stands as a symbol of nature that was given to us in pristine purity. After having caused enough damage to ecology, all in the name of progress, we are now longing to get back to the Garden of Eden. “For thousands of years we have dreamt of going back. To what, exactly? Eden is a home from which we have been evicted. We stand on the sidewalk on tiptoe and find that the window is just a few inches too high to peer in.” These are the opening lines of a book titled ‘The Ecology of Eden’ written by Evan Eisenberg. Kushner talks of this book in his fourth chapter.
Kushner talks about two cultures - ‘mountain cultures’ and ‘tower cultures’ - discussed by Eisenberg in his book. “In mountain cultures, people live in God’s world. They regard the world of nature with reverence, the kind of heart-filling feeling we get when we gaze at a mountain range… By contrast, in tower cultures, people live in a man-made environment. They regard nature as raw material awaiting their efforts to reshape and improve it. They spend a great deal of time admiring the work of their own hands, and, as a result, God is hard to find.”
People from the tower cultures, in their quest to build higher towers (from Empire State Building to the recent Burj Dubai) have chipped away mountains. With the disappearance of the mountain – the abode of God – the presence of God is diminishing in the world.
Human history has registered quite a few clashes between the mountain culture and the tower culture. One such clash took place in North America when Franklin Pierce, the 14th President of the United States, sent a delegation to Chief Seattle with the request of buying land from the native Americans. Buying land? This must have been a preposterous, repulsive idea to Chief Seattle. The response of the Chief is extremely enlightening. Here is a summary of what Chief Seattle said:
The Most Beautiful Description of Earth – Chief Seattle’s Oration of 1854 (Summary)
http://www.dubrovnik-advance.com/clanak_en.php?id=20060714120420 (When I came across this oration a few years back this link was active. Unfortunately, this link does not seem to work now. But there are quite a few links to give you Chief Seattle’s speech to the U.S. President)
The Indian Chieftain of Seattle’s answer to the Whites’ wishes of purchasing land from the Indians.
How can you purchase or sell the sky, the warmth of the land? That notion is foreign to us. If we do not own the fresh air and the clean, pristine waters, how can you purchase it? All parts of this land are for my people… We are part of the land and the land is a part of us.
We know that the white man does not understand our lifestyle. One part of the land is just the same as the rest, because he is a stranger who comes during the night and takes all of the land he wishes. The land is not his brother but rather his enemy and when he conquers the land, he keeps on moving. He leaves the graves of his forefathers and does not worry.
He seizes the land from his children and does not worry. He acts towards mother-nature and brother-sky as things that you can purchase, rob, sell like it is a herd or some shiny jewelry.
His appetite will devour the land and leave just a desert. I do not know. Our ways are different from yours. The presence of your cities brings pain to the eyes of the red man. Maybe that is because the red man is wild and does not understand. There is no peaceful place in the cities of the white man. There is no place where you can hear the opening of the folios in the springtime or the sounds of crickets nearby. But maybe this is because I am wild and I do not understand.
The air is precious for the red man because everybody and everything breathes the same air – the animals, trees, the men. The white man doesn’t look like he takes good care of the air breathes… All things are connected…
One thing we know, that the white man will discover one day is – our God is the same God. You can now think that you have our land just as much as you want to have our land; but you cannot think that way. He is God to man and his mercy is equal to all men, red and white. This land is dear to Him and to do harm to the land is to scorn His Creation.
We are trying to emulate the mountain culture, since we want to restore some balance in ecology. Chief Seattle’s description of nature can teach us quite a few lessons. May the Good Shepherd lead us back to the Garden of Eden!
Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.
சென்ற வார விவிலியத் தேடலின் இறுதியில் நம் காட்சி தியானத்தில், கற்பனையில் விரிந்த அந்தப் பசும்புல் வெளிக்கு மீண்டும் வந்திருக்கிறோம். அந்தப் புல்வெளியின் ஒரு பகுதியில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஆடுகள் மத்தியில், தன்னையே மறந்து இசையெழுப்பும் ஆயனின் புல்லாங்குழலை மீண்டும் கேட்கிறோம்.
“ஆண்டவர் என் ஆயன், எனக்கேதும் குறையில்லை.
பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.”
திருப்பாடல் 23ன் இரண்டாம் திருவசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் பசும்புல் வெளியைப் பற்றி நம் சிந்தனைகளைத் தொடர்வோம். பரந்து விரிந்த பசும்புல்வெளிகள் மகிழ்வைத் தரும் என்று மனநல அறிஞர்கள் சொல்கின்றனர். அதற்கான காரணங்களையும் சொல்கின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமைக் கம்பளமாய் விரிக்கப்பட்டிருக்கும் புல்வெளியைக் கண்டதும் பாதுகாப்பான ஓர் உணர்வு மனதை நிறைக்கும். நமக்குத் தேவையான உணவு அங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உணர்வு... மறைவிடங்களில் பதுங்கியிருந்து மிருகங்கள் நம்மைத் தாக்காது என்ற உணர்வு... இது போன்ற உணர்வுகளை பரந்த பசும்புல் வெளி நமக்குத் தருகிறதென மனநல அறிஞர்கள் சொல்கிறார்கள்.
இந்தப் பாதுகாப்பு உணர்வுகளை வெளிப்படுத்த தாவீது இவ்வரிகளைச் சொன்ன போது, அவரது முன்னோரைப் பற்றி நினைத்திருப்பார். அடிமைகளாக, அந்நிய நாட்டில் தன் முன்னோர்கள் பசியைத் தீர்க்கவும், பயங்களைப் போக்கவும் ஒவ்வொரு நாளும் போராடியதை நினைத்திருப்பார். தன் முன்னோர்களின் அவல நிலை தனக்கு இல்லை என்பதை எண்ணி, நன்றியோடு இந்த வரியைக் கூறியுள்ளார். நாம் வாழும் காலத்திலும், அச்சுறுத்தும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவைகளிலிருந்து தப்பித்து, ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது நம் தியான முயற்சிகள் வழியே, பசும்புல் வெளியொன்றில், பரிவான ஆயனின் கண்காணிப்பில் நாம் இளைப்பாறுவது மிகுந்த நன்மைகளைத் தரும்.
“பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்.” என்ற இந்த திருவசனத்தைப் பற்றி தன் புத்தகத்தில் விளக்கிச் சொல்லும் யூத குரு Harold S.Kushner, ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். Kushnerம் அவரது நண்பர்களும் ஒரு முறை சந்தித்தபோது, அவர்களுக்குள் அறிவுப் புதிரான ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. “எப்போது 20ம் நூற்றாண்டு ஆரம்பமானது?” என்பது அந்த அறிவுப் புதிர். நாள் காட்டியை வைத்து, இந்தப் புதிருக்கு எளிதில் விடை சொல்லிவிடலாம். 1900 அல்லது 1901ம் ஆண்டு 20ம் நூற்றாண்டு ஆரம்பமானது என்று எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்தப் புதிரின் உள் அர்த்தம் வேறு... அந்தப் புதிரில் சொல்லப்பட்ட 20ம் நூற்றாண்டு என்பது வெறும் வருடங்களைக் கணக்கிடும் சிந்தனை அல்ல. வாழ்வின் மாற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு சிந்தனை. 19ம் நூற்றாண்டில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்வும், 20ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்த வாழ்வும் பெரிதும் மாறுபட எந்த ஒரு நிகழ்ச்சி காரணமானது? என்ற உள் அர்த்தத்தோடு இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. 20ம் நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்கள், பயணம் செய்வதற்காக நாம் பயன்படுத்திய மோட்டார் வாகனம். என்ற நிகழ்ச்சிகளெல்லாம் பேசப்பட்டன. இறுதியில், 20ம் நூற்றாண்டை 19ம் நூற்றாண்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய நிகழ்வு, 20ம் நூற்றாண்டை மனித குலத்திற்கு ஆரம்பித்து வைத்த முக்கிய நிகழ்வு, நாம் கண்டுபிடித்த மின் சக்தி என்று அங்கிருந்தவர்கள் ஒத்துக் கொண்டனர்.
மின்சக்தியைக் கண்டு பிடிப்பதற்கு முன்வரை, நம் முன்னோர்கள் சூரியன் எழும்போது எழுந்து, சூரியன் மறைந்ததும் உறங்கச் சென்றனர். எண்ணெய் விளக்குகள், மெழுகு திரிகள் கைவசம் இருந்தாலும், சூரியனின் மறைவுக்குப் பிறகு, மனிதர்கள் வாழ்வு மிகவும் சுருங்கி இருந்தது.
மின்சக்தி, மின் விளக்குகள் வந்ததும், நினைத்தபோதெல்லாம், வெகு எளிதாக இருளை விலக்க முடிந்தது. சூரிய மறைவுடன் வந்த இருள் என்ற இயற்கை நியதியை நாம் வென்றது போல் உணர்ந்தோம். இரவைப் பகலாக மாற்ற ஆரம்பித்தோம். ஆனால், இதை ஒரு வெற்றி என்று, முன்னேற்றம் என்று சொல்வதற்குத் தயக்கமாக உள்ளது.
மின்சக்தியால், இரவை வென்றபின், இரவைப் பகலாக்கியபின், இரவுக்கே உரிய அமைதி, நிம்மதி, ஒய்வு இவைகளை நாம் வென்றோமா? இழந்தோமா? மனித வரலாற்றில் ஒவ்வொரு முறையும் நாம் இயற்கையை வென்றதாக மகிழ்ந்தோம். பின்னர், ஏன் வென்றோம் என்று வருந்தியும் இருக்கிறோம்.
துவக்க நூலில் நம் முதல் பெற்றோர் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படும் அந்த முதல் தோட்டம் - சிங்கார வனம் - இறைவன் நமக்களித்த அப்பழுக்கற்ற பல இயற்கைக் கொடைகளின் அடையாளம். இயற்கையை வெல்கிறோம் என்ற கற்பனையில் பல ஆயிரம் ஆண்டுகள் அந்தத் தோட்டத்தைச் சீரழித்து விட்டு, மீண்டும் அந்தத் தோட்டம் கிடைக்காதா என்று 2010ம் ஆண்டில் எவ்வளவு ஏங்குகிறோம்?
இயற்கையை வென்ற நம் அறிவியல் சாதனைகளால் இயற்கையும் நாமும் எதிரிகளாகிவிட்டோம். நாமும் கடவுளும் எதிரிகளாகிவிட்டோம். கடவுளோடும் இயற்கையோடும் நாம் மீண்டும் சமாதானமாய் வாழ, மீண்டும் அந்தத் தோட்டத்திற்குள் நுழைய...வழிகளைச் சொல்லும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று Evan Eisenberg என்பவர் எழுதிய "The Ecology of Eden" அதாவது, ‘சிங்கார வனத்தின் சுற்றுச்சூழல்’ என்ற புத்தகம். இந்த புத்தகத்தில் 'மலைக் கலாச்சாரங்கள்' 'கோபுரக் கலாச்சாரங்கள்' என்று இருவகைக் கலாச்சாரங்களைப் பற்றி Eisenberg பேசுகிறார்.
இறைவன் வழங்கியுள்ள படைப்பை வியந்து பாராட்டி, மதித்து, அந்தப் படைப்புடன் ஒன்றித்து வாழ்ந்து வருவது மலைக் கலாச்சாரம். உயர்ந்ததொரு மலையை வியந்து, நிமிர்ந்து பார்க்கும் போது, நம்மையும் அறியாமல், நம் கண்கள் அந்த மலை முகடுகளைத் தொடும் விண்ணையும் பார்க்கும். மலைகள் இறைவனின் உறைவிடம் என்பது விவிலியம் நமக்குச் சொல்லித் தரும் ஒரு பாடம். பல மதங்களில் இந்த நம்பிக்கை உள்ளது.
திருப்பாடல்கள் 68: 16-18
ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே!... இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார். என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்... உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்... கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்.
திருப்பாடல்கள் 121: 1-2
மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
மலைக் கலாச்சாரத்தில் ஊறியிருந்த தாவீதின் பார்வை இது. இதற்கு மாறுபட்டிருப்பது கோபுரக் கலாச்சாரம். மலையைக் கடவுளின் படைப்பாக, இறைவனின் உறைவிடமாகப் பார்த்து இரசிப்பதற்குப் பதில், தான் கட்டவிருக்கும் கோபுரத்திற்குத் தேவையான மூலப் பொருள்களான மண், கல் ஆகியவை இருக்கும் ஒரு கிடங்காக அந்த மலையைப் பார்க்கும் ஒரு பார்வை இது. இயற்கையுடன் ஒன்றித்து வாழாமல், இயற்கையைப் பகைத்து, இயற்கையை அடக்கி ஆள, இயற்கையை வெல்ல… கோபுரங்களைக் கட்டும் கலாச்சாரம் இது. இந்தக் கலாச்சாரத்தில் கோபுரங்கள் வளர, வளர... அந்தக் கோபுரங்களுக்கு மண் கல் இவைகளைத் தந்த மலைகள் காணாமல் போய்விடும். அந்த மலைகளோடு சேர்ந்து இறைவனும் காணாமற் போய்விடுவார். கடவுள் இந்தக் கலாச்சாரத்தில் காணாமற் போய்விடுவதால், உருவாக்கப்பட்ட பொருட்களையே கடவுளென நினைத்து, மனிதர்கள் வழிபட ஆரம்பித்து விடுவர்.
மலைக் கலாச்சார மக்களும், கோபுரக் கலாச்சார மக்களும் மோதிக் கொண்ட சம்பவங்கள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. 1853ல் அமெரிக்காவின் 14வது அரசுத் தலைவராகப் பதவியேற்றவர் Franklin Pierce. இவர் பதவிக்கு வந்த அடுத்த ஆண்டே அமெரிக்காவில் வாழ்ந்து வந்த பழங்குடியினரின் நிலப்பகுதியை விலைக்கு வாங்க முயன்றார். நிலத்தை விலை கொடுத்து வாங்குவதா? நினைத்தும் பார்க்க முடியாத ஒரு சீரழிந்த எண்ணம் அது என்று நினைத்தார் பழங்குடியினரின் தலைவர் Seattle. அவர் அரசுத் தலைவர் Pierceக்கு அழகானதொரு கடிதம் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மலைக் கலாச்சாரத்தின் மகிமையைச் கோபுரக் கலாச்சார மக்களுக்குப் புரிய வைக்க முயலும் ஓர் அற்புதக் கடிதம் இது.
கோபுரக் கலாச்சாரத்தில் அதிகம் மூழ்கி, அதனால் மலைகளை, இறைவன் தந்த அந்தத் தோட்டத்தை முற்றிலும் இழந்துவிடும் ஆபத்தில் இருக்கும் நாம் இப்போது விழிப்புணர்வு பெற்று கூறி வரும் உண்மைகளை 1854ல் அந்தத் தலைவன் கூறினார். தலைவன் Seattleன் முழு மடலையும் மொழிபெயர்த்துக் கூற எனக்கு மிகவும் ஆசை. ஆனால், நேரம் கருதி, அந்த மடலின் ஒரு சில பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். வாய்ப்புள்ளவர்கள் இணையதளத்தில் இந்த மடலைத் தேடிக் கண்டுபிடித்துப் படியுங்கள். சுற்றுச் சூழல் குறித்த பல பாடங்களை இந்த மடல் சொல்லித் தரும்.
வானத்தை, பூமியை எப்படி வாங்கி விற்க முடியும்? அந்த எண்ணமே எங்களுக்கு மிகவும் அந்நியமான, ஏற்றுக் கொள்ள முடியாத எண்ணம். சுத்தமான காற்று, தெளிந்த நீர், அழகிய இந்த பூமி இவைகளை நாம் யாரிடமிருந்து, எங்கிருந்து வாங்கினோம், இப்போது விற்பதற்கு? இவைகளெல்லாம் எங்களுடன் வளர்ந்தவை, எங்களின் ஓர் அங்கம்.
எங்கள் வாழ்வு முறை, கலாச்சாரம் ஆகியவை வெள்ளைச் சகோதரர்களாகிய உங்களுக்கு வினோதமாகத் தெரிகின்றன. நிலம் எங்கள் குடும்பம். அதனால், எங்கள் சொந்தம். உங்களுக்கோ நிலம் ஒரு பொருள். உங்களுக்குச் சொந்தமான பொருள். எனவே, அந்தப் பொருளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள், தொலைக்கிறீர்கள், அழிக்கிறீர்கள். புதிய நிலத்தை வாங்கப் போர்புரிகிறீர்கள், அல்லது இரவோடிரவாக கொள்ளை அடிக்கிறீர்கள். நிலத்தை இப்படி ஒரு பொருளாக பாவிக்கும் உங்கள் பேராசையால், இந்த நிலம் பாலைவனமாகி வருகிறது.
எங்களுக்கு இந்தக் காற்று மிகவும் மதிப்பிற்குரியது. இந்தக் காற்றை நாங்களும், எங்களைச் சுற்றியுள்ள மிருகங்கள், மரங்கள் எல்லாமே சுவாசிக்கிறோம். நீங்கள் இந்தக் காற்றை மதிப்பதில்லை. எனவே இதை மாசு படுததுகிறீர்கள்.
எங்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்த உண்மை உங்களுக்கும் ஒரு நாள் தெரிய வரும். அதாவது, எங்கள் கடவுளும், உங்கள் கடவுளும் ஒருவரே. நாங்கள் மதித்துப் போற்றும் இந்த பூமி எங்கள் கடவுளும் மதிக்கும் பூமி. இந்தப் பூமியை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அந்த இறைவனையே அவமதிப்பதற்குச் சமம்.
இப்படி இயற்கையோடு இயைந்த மலைக் காலாச்சாரத்தில் நாமும் வளர முயல்வோம். அந்த மலைகளில் வாழும் நம் ஆயனாம் இறைவன் நம்மைத் தமது பசும்புல் வெளிகளில் இளைப்பாறச் செய்வாராக.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org
Dear Father,
ReplyDeleteThis is one fantastic reflection,
I read the complete letter in the following link.. http://www.greenosai.org/environment/diversity/53-chief-seattles-letter.html
Our Indian Govt, and the mining investors have to read this reflection. I read some article by Arunthathi Rai...it goes like this... இந்தியா என்றொரு நாடும், ஒரிசா என்றொரு மாநிலமும் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே, தற்போதைய தென் ஒரிசாவிலிருக்கும் அந்த தாழ்ந்த, தட்டையான மலைத்தொடர், டோங்ரியா கோண்டு இன மக்களின் தாயகமாக விளங்கி வருகின்றது. மலைகள் கோண்டு இன மக்களைக் கவனித்துக் கொண்டன. அம்மக்கள் மலைகளைக் கவனித்துக் கொண்டனர். அவற்றை வாழும் தெய்வங்களாய் வழிபட்டனர். இம்மலைகள் அதில் புதைந்திருக்கும் பாக்சைட் கனிம வளத்திற்காக தற்போது விற்கப்பட்டுவிட்டன. கோண்டு மக்களைப் பொறுத்தவரையில், இச்செயல் கடவுளை விற்பதற்குச் சமமானது. கடவுள் ராமனாகவோ, அல்லது அல்லாவாகவோ இருந்தால் ”அந்தக் கடவுள் என்ன விலைக்குப் போயிருப்பார்? ” என்று கேட்கின்றார்கள் அம்மக்கள்.
தட்டையான உச்சிகளைக் கொண்ட இம்மலைகள் அழிக்கப்பட்டால், அவற்றைப் போர்த்தியிருக்கும் பசுமையான காடுகளும் சேர்த்து அழிக்கப்படும். அவற்றிலிருந்து ஊற்றெடுத்து வழிந்து, சமவெளிகளை வளப்படுத்தும் சுனைகளும், ஆறுகளும் அழியும். டோங்ரியா கோண்டு இன மக்களும் அழிந்துபடுவார்கள். இதே வகையான தாக்குதலுக்குள்ளாகியிருக்கும், இந்தியாவின் காடுகளடர்ந்த இதயப் பகுதியில், அதனைத் தாயகமாய் கொண்டு வாழும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களும் அழிக்கப்படுவார்கள்.....
Last time when i came to chennai i went to St.Thomas Mount with my friend, We were overwhelmed by the splendid church and the panaromic view of the city, My friend said " five star ஹோட்டல் கட்ட சரியான இடம்". May be he said this as a joke, but people really forget the Almighty God, Nature and the Peace when they r blindfolded by the Money and Lazy Lavish Living.
Dear Prince,
ReplyDeleteThank you for the prompt comments. It makes me become more alert in my posts. Thank you very much for Arundhati Roy's article on டோங்ரியா கோண்டு tribe. I shall try to read about this more when time permits.
Just a bit curious to know... you have mentioned 'Last time when I came to Chennai...' So, you are not in Chennai? You are not obliged to answer this question. Okay?
Dear Father,
ReplyDeleteIm in madurai for the last three years!. I worked in chennai as a Graphic Designer b4 that. It was a small advertising agency called "Brand Serv" (they closed it during recession).
Thanks, Prince, for the information. I appreciate it. All the best in Madurai, the seat of wisdom - Tamil Sangam.
ReplyDelete