24 January, 2011

Silent, salient Inaugurations அமைதியான, ஆழமான, ஆரம்பங்கள்

Galilee - The centre of the Ministry of Jesus

Bang… Dazzle… Explode… I am trying to arrange alphabetically different terms that the commercial world would be happy to propose as the formula – ‘sure-fire formula’ – for any inauguration. Most of the product launches and the launching of political parties have been very spectacular. But, after the inauguration, they probably disappeared without a trace in history. We don’t need to cite examples here.
History, however, has shown us that there have been contrary formulas, namely, very silent inaugurations, which have stood the test of times. One such example would be the Congregation of the Missionaries of Charity founded by Blessed Mother Teresa of Calcutta. Here is one of the earliest incidents that began a silent revolution by the ‘Saint of the Gutters’ as written by Fr Raymond J.DeSouza:
In 1952, Mother Teresa found a woman dying in the streets, half-eaten by rats and ants, with no one to care for her. She picked her up and took her to the hospital, but nothing could be done. Realizing that there were many others dying alone in the streets, Mother Teresa opened within days Nirmal Hriday (Pure Heart), a home for the dying. In the first 20 years alone, over 20,000 people were brought there, half of whom died knowing the love of the Missionaries of Charity. Nirmal Hriday is where one dying man, lying in the arms of Mother Teresa after being plucked from the gutters and bathed and clothed and fed, told her, "I have lived like an animal, but now I am dying like an angel."
http://www.catholiceducation.org/articles/catholic_stories/cs0464.htm

Looking at the courage of this frail woman, 12 other women joined her. The Missionaries of Charity was begun - a very silent inauguration that has lasted 60 years. Mother Teresa and her 12 followers take our minds back to Jesus and his 12 disciples. Today’s Gospel talks of the way in which Jesus inaugurated his public ministry… by proclaiming his first message and by calling his first disciples. Today’s liturgy gives us an opportunity to think of inaugurations – their style and content.

The style of inauguration: In today’s Gospel, Matthew describes Jesus’ inauguration with the imagery of light. This imagery was already spoken of by Prophet Isaiah as we hear it from the first reading. The imagery of light for inauguration is a lovely metaphor. I am thinking two kinds of light symbolising the spectacular but empty inaugurations and the silent one - lightning and sunlight. Inaugurations as proposed by the commercial world can be compared to lightning. Flash, bang… gone. Theoretically speaking, the average lightning bolt contains a billion volts at 3,000 amps, or 3 billion kilowatts of power, enough energy to run a major city for months. (http://www.mikebrownsolutions.com/tesla-lightning.htm) Till date, lightning has caused more damages than being useful. Commercial, political inaugurations can be compared to lightning.

As against this, imagine what sunlight can do and, actually, does to the world. Sunlight comes up not with a bang, not abruptly like a lightning, but very silently, imperceptibly. But, we know that without sunlight nothing can survive on earth. Jesus’ public ministry is compared to the sunlight. “The people walking in darkness have seen a great light; on those living in the land of deep darkness a light has dawned.” (Isaiah 9: 2; Matthew 4:16)

Another aspect of inauguration is the content. When great leaders appear before the public for the first time, what they say and do count. Their words and actions would almost define what type of a leader he or she would be. My mind goes back exactly 50 years. 1961, on January 20th John F.Kennedy was sworn in as the 35th President of the United States. He began his inaugural address with these words: “We observe today not a victory of party, but a celebration of freedom – symbolizing an end, as well as a beginning – signifying renewal, as well as change.” Towards the end of this inaugural address, he said: “And so, my fellow Americans: ask not what your country can do for you—ask what you can do for your country. My fellow citizens of the world: ask not what America will do for you, but what together we can do for the freedom of man.” – a well-known quote. JFK was one of the youngest presidents of the US and hence was looked upon as a much needed change in the U.S. political history. His inaugural speech defined him, in a way!

The inaugural words of Jesus in his public ministry were: “Repent, for the kingdom of heaven has come near.” (Matthew 4: 17). His first action was to gather a few fishermen with an invitation: “Come, follow me.” Repentance and following of Jesus are two key aspects of Christian life. All of us would easily agree that each Christian is called to repentance; but many of us would hesitate to affirm that every Christian is called to follow Jesus. We would think that ‘following Jesus’ is a privilege of the Religious and Priests.

Both repentance and following of Jesus are basic to Christian calling and both are intrinsically connected. Repentance calls for some radical changes. Change is usually challenging. It is easier when these changes are external – like change of one’s profession, abode etc. But, when the change is internal like the one demanded by Jesus, it needs support. We are ready to change for a person whom we love. If we are drawn towards Jesus by love and if we are ready to follow Him, then we would be willing to change from within, even if this is very difficult.
We have the examples of Simon, Andrew, James and John who were willing to change their entire life giving up their livelihood, their boats, nets… even their father. Such a change in one’s life, such a following of Jesus is meant to make one available for ‘proclaiming the good news of the kingdom, and healing every disease and sickness among the people’ as was, and still is evident from Mother Teresa and her followers. Let us pray for silent and meaningful inaugurations of mission and ministry in ourselves and in the world! Let’s repent and follow Jesus!

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.

ஆடம்பரங்கள் அட்டகாசமாய், ஆடம்பரமாய், ஆர்ப்பாட்டமாய், பிரமாதமாய், பிரமிப்பூட்டுவதாய்... இருக்க வேண்டும், அனைவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்குப் பிறகு?... பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு வகையான சிந்தனை. உலகில் பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பின்பற்றும் சிந்தனை, வழிமுறை இது. இந்நிறுவனங்களின், கட்சிகளின் ஆரம்பவிழாக்கள் பல கோடி ரூபாய் செலவில் அமர்க்களமாய் இருக்கும். அந்த ஆரம்பங்களைப் பார்த்தால்... “அடடே, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது” என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் வரலாற்றில் எந்த ஒரு சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவைகளுக்கு உதாரணங்கள் சொல்லத் தேவையில்லை.

இதற்கு முற்றிலும் மாறாக ஓர் உதாரணத்தை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். அன்னை தெரேசா ஆரம்பித்த பிறரன்பு சகோதரிகள் சபை. உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது இந்தச் சபை. தனியொரு பெண்ணாக, பிறந்த நாட்டை விட்டு, வேறொரு நாட்டில் அன்னை தெரேசா ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்ப விழாவும் இல்லை. ஆர்ப்பாட்டம், அலங்காரம் இல்லை. அந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்டு இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர். இப்படி ஆரம்பமான பிறரன்பு சகோதரிகள் சபை இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இன்றும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பணிகள் தொடர்கின்றன. புதியதொரு வரலாறு எழுதப்பட்டு வருகின்றது.
பிறரன்பு சேவையில் இறங்கிய ஒரு பெண், அவரைச் சுற்றி வேறு 12 பெண்கள்... இது நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. அந்த நினைவு இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவும், அதே வரிகளை தன் நற்செய்தியில் மீண்டும் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். அட்டகாசமான ஆரம்பங்களுக்கும், ஆழமான, அர்த்தமுள்ள ஆரம்பங்களுக்கும் ஒளி ஓர் அழகிய உருவகம். இயற்கையில் நாம் காணும் மின்னலையும், சூரியஒளியையும் சிந்திக்கலாம். அட்டகாசமான ஆரம்பங்களை மின்னலுக்கு ஒப்பிடலாம். பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலிலும் மாபெரும் நகரங்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான மின்சக்தி தரக்கூடிய அளவு கோடி, கோடி Watts மின்சக்தி வெளிப்படுகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலைக் கிரகித்து சேமிக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள் பயனில்லாமல் தோன்றி மறைகின்றன. பல சமயங்களில் மின்னல்களால் தீமைகள் விளைவதும் உண்டு. அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை.
இதற்கு மாறானது சூரியஒளி. இரவு முடிந்து பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் நமது பகல்வேளை ஆரம்பமாகும். இப்படி அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால் பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு பகலவனைப் போல் ஆரம்பமானது. “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.” (எசாயா 9: 2; மத்தேயு 4: 16)

ஒவ்வொரு தலைவனும் மக்கள் முன்னிலையில் சொல்லும் முதல் கூற்றுகள், செய்யும் முதல் பணி ஆகியவை அந்தத் தலைவன் எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குச் சொல்லும் அடையாளங்கள். ஐம்பதாண்டுகளுக்கு முன் செல்வோம். "இன்று நாம் ஒரு அரசியல் கட்சியின் வெற்றியைக் கொண்டாடவில்லை, மாறாக நமது விடுதலையைக் கொண்டாடுகிறோம்" என்று ஒரு நாட்டின் அரசுத் தலைவர் பதவியேற்ற நாளில் தன் உரையை ஆரம்பித்தார். 1961ம் ஆண்டு சனவரி 20ம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜான் F.கென்னடி தன் பதவியேற்பு விழாவில் கூறிய முதல் வார்த்தைகள் இவை. அந்த உரையின் இறுதியில் "நாடு உனக்கு என்ன செய்ததென்று கேட்காதே; மாறாக, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளையும் அவர் கூறி முடித்தார்.

"நமக்கு முன் உள்ள பணிகள் என்னைத் தாழ்ச்சி அடையச் செய்கின்றன; உங்கள் நம்பிக்கை என்னை நன்றியுள்ளவனாக்குகிறது; நமது முன்னோரின் தியாகங்கள் என் மனதை நிறைக்கிறது." என்று தன் உரையை இரு ஆண்டுகளுக்கு முன் இப்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா ஆரம்பித்தார். “நாம் நிற்கும் இந்த வளாகத்தில் உள்ள எந்த உணவகத்திலும் 60 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை ஓர் இருக்கையில் அமர்ந்து காப்பி குடித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்று இதோ நான் உங்கள் முன் இந்நாட்டின் தலைவனாக உறுதிமொழி எடுக்க முடிந்திருக்கிறது” என்று அதே உரையில் ஒபாமா கூறினார். இப்படி ஒவ்வொரு தலைவனும் முதல் முதலாகச் மக்கள் முன் அறிக்கையிட்டுச் சொல்வதில் அவர்களது எண்ணங்கள், அவர்களது தீர்மானம் ஆகியவை கணிக்கப்படும்.

இயேசு என்ற தலைவன் மக்கள் முன் சொன்ன முதல் வார்த்தைகள் என்று மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்திகளும் சொல்வது இதுதான்: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4: 17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு செய்த முதல் வேலை... தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது... லூக்கா, யோவான் ஆகிய நற்செய்திகளிலும் இதையொத்த வார்த்தைகளும், செயல்களும் கூறப்பட்டுள்ளன. (காண்க: மத்தேயு 4; மாற்கு 1; லூக்கா 4; யோவான் 1).
ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஒரு பெரும் புதுமையைச் செய்து அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகையும் அவருக்குச் சொல்லித் தந்தது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் இருந்து குதிக்கச் சொன்னது. இயேசு தன் பணிவாழ்வை, தன் பகிரங்க வாழ்வை ஆரம்பித்த விதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் ஒரு சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மன மாற்றம் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானது. இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இயேசுவைப் பின்தொடர்தல் என்பது துறவறத்தார், குருக்கள் ஆகியோருக்குத்தான்; அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இல்லை என்பது நாமாகவே எடுத்துக் கொண்ட ஒரு முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின் தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற உண்மை விளங்கும்..
மாற்றம் என்பது பழைய நிலையை விட்டு புதிய நிலைக்குச் செல்வது. வேலை மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என்று இந்த மாற்றங்கள் வெளிப்புற மாற்றங்கள். ஓரளவு எளிதான மாற்றங்கள். உள்ளமாற்றம், மனமாற்றம் என்பது மிகவும் கடினமானது. நமது மனதில் ஆணிவேர் விட்டு வளர்ந்து விட்ட எண்ணங்கள், ஆசைகள், பழக்கங்கள் இவற்றை மாற்றி, புதிய எண்ணங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. மனமாற்றம் உண்டாக ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது அன்பு, பாசம், காதல்... நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது அந்த இன்னொருவருக்காக நம்மிடம் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.
கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும் நாம் இவ்விதம் இணைத்துப் பார்க்க முடியும். இயேசுவின் மீது கொண்ட ஆழமான ஈடுபாட்டால், அவரைப் பின் செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். தங்கள் வாழ்வின் அடிப்படைகளான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள் தந்தை என்று பலவற்றையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு முற்றிலும் மாறியதைப் போல், நமது வாழ்வும் இயேசுவின்மீது கொண்ட ஈடுபாட்டால் முற்றிலும் மாற அவரைப் பின் தொடர முயல்வோம்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

No comments:

Post a Comment