28 February, 2011
GOD OR MONEY? GOD OR WORRY? கடவுளா செல்வமா? கடவுளா கவலையா?
“A Few Buttons Missing” is a book written by James T.Fisher and L.S.Hawley in 1951. Fisher, a psychiatrist by profession, talks about the Sermon on the Mount in his book:
"If you were to take the sum total of all authoritative articles ever written by the most qualified of psychologists and psychiatrists on the subject of mental hygiene--if you were to combine them and refine them and cleave out the excess verbiage--if you were to take the whole of the meat and none of the parsley, and if you were to have these unadulterated bits of pure scientific knowledge concisely expressed by the most capable of living poets, you would have an awkward and incomplete summation of the Sermon on the Mount. And it would suffer immeasurably through comparison. For nearly two thousand years the Christian world has been holding in its hands the complete answer to its restless and fruitless yearnings. Here ... rests the blueprint for successful human life with optimum mental health and contentment."
http://www.defendingyourfaith.org/Jesus.htm
We have been reflecting on the different sections of this Sermon for the past four Sundays. Today is the fifth time we are fortunate to visit this Sermon. Next week we shall, as it were, conclude this 'mini-series'. In today’s Gospel passage (Matthew 6: 24-34) Jesus makes three statements… call them suggestions, advice, challenges:
• You cannot serve both God and money.
• Do not worry about your life, what you will eat or drink; or about your body, what you will wear.
• Do not worry about tomorrow, for tomorrow will worry about itself. Each day has enough trouble of its own.
All these statements sound very ideal and out-of-this-world. But, on deeper analysis, they can be seen as very down-to-earth. It is a question of perspective!
Today’s passage begins with a big challenge that a person cannot serve two masters. While reading this line, my mind instinctively thought of politicians. Who said 'You cannot serve two masters'? We have been serving TWO, even THREE masters for so many years, they would say. They would easily serve several masters at the same time, not letting any of them know where their true allegiance lies.
Tamil Nadu is gearing up for elections and there would be shift of allegiances and forging of alliances. Enmity and friendship would be redefined at every election time. Since the public memory is quite short lived, all the political leaders would be making fresh statements contradicting their previous ones. All these would prove that they could serve more than two masters. Their ultimate master is money. They would do anything; go any distance to serve their great master - Mammon. Jesus makes a specific reference to this in the very next sentence: You cannot serve God and money.
You cannot serve God and money… What did Jesus mean by this? Depending on which word gets the most emphasis, the meaning would change as well. YOU (meaning, Jesus’ disciples) cannot serve both God and money. You CANNOT (meaning, that it would be against the very nature of a disciple) serve both God and money. Similarly we could stress the words SERVE, BOTH and AND. I would like to emphasise the word SERVE. A true disciple of Jesus cannot SERVE God and money.
For Jesus there is nothing wrong with money provided it is kept in its proper place. One can earn, save, and share money; but cannot SERVE money. I was struck by Jesus putting money on par / in competition with God. Can money compete with God? Unfortunately, yes and, worse still, it can win the race.
To worry or not to worry is a crucial human question. In the second part of today’s Gospel, Jesus answers this question in his own style. Erma Louise Bombeck was an American humorist who achieved great popularity for her newspaper column that described suburban home life from the mid-1960s until the late 1990s. Bombeck also published 15 books, most of which became best-sellers. She once wrote about a little guy named Donald. Donald was worrying about going to school. Here is how he expressed his anxieties. “My name is Donald. I don’t know anything. I have a new underwear, a loose tooth and I didn’t sleep last night because I’m worried. What if the bell rings and a man yells, ‘Where do you belong,’ and I don’t know? What if the trays in the cafeteria are too tall for me to reach? What if my loose tooth comes out when we have our heads down and are supposed to be quiet? Am I supposed to bleed quietly? What if I splash water on my name tag and my name disappears and no one knows who I am?”
http://lakewoodwindow.org/
I am sure most of us smiled reading the list of worries enlisted by poor little Donald. Poor Donald! Poor all of us! We tend to drown in a teaspoon of worry. To worry or not to worry? Does Jesus tell us simply to brush aside worries; sweep them under the carpet; pretend that there is no care in the world? What does Jesus mean by saying ‘do not worry about your life’? I would like to see this as a sequel to the previous section of today’s Gospel, where Jesus had indicated how money can replace God. Here Jesus indicates that we can be drowned in worries so much that God would disappear from our life. Once again God is put in competition with worries.
In today’s Gospel Jesus tries to tell us in a very simple but elegant way that God is much bigger than our worries. Unfortunately, when we are beset with worries it is much hard for us to believe these words of Jesus. Our worries seem much more tangible and over powering than God. Granted. But, by just worrying about actual and imagined things – like poor Donald – what do we achieve? Can any one of you by worrying add a single hour to your life? This challenge of Jesus is pretty simple and straightforward.
If we can put money and worry in their proper place, if we develop a habit of seeing them in the proper perspective, if we do not replace God with money or worry… we are on the right track! The closing words of Jesus in today’s Gospel are truly golden words:
Do not worry about tomorrow, for tomorrow will worry about itself. Each day has enough trouble of its own.
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.
"ஒரு சில பொத்தான்களைக் காணோம்" (A Few Buttons Missing) என்பது 1951ல் James T.Fisher என்பவரால் எழுதப்பட்ட புத்தகம். மனநல மருத்துவரான Fisher தன் அனுபவங்களையெல்லாம் நகைச்சுவை கலந்து எழுதியுள்ளார். புத்தகத்தின் இறுதி பக்கங்களில் வாழ்வில் தான் கற்ற சில பாடங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பாடங்களில் ஒன்று இயேசுவின் மலைப்பொழிவைப் பற்றியது:
"உலகின் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள், அறிஞர்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களையும் ஒன்று திரட்டுவோம். அவைகளில் உள்ள தேவையற்ற வார்த்தைகளை எல்லாம் எடுத்துவிடுவோம். மனநலம் பற்றி ஆடம்பரமற்ற, கலப்படமற்ற உண்மைகளை எல்லாம் திரட்டினால், அவற்றில் இயேசு போதித்த மலைப்பொழிவின் சில பகுதிகளையாவது காணலாம். மன நலத்துடன், மன நிறைவுடன் வாழும் வழியைக் காட்டும் அற்புத திசைக்காட்டி இந்த மலைப்பொழிவு." என்று Fisher கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 33வது அரசுத் தலைவராக இருந்த Harry Truman சொன்ன கூற்றுகளில் ஒன்று இது: "மலைப்பொழிவு தரும் பாடங்களினால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, உலகிலோ இல்லை."
கிறிஸ்தவம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து, உலகத்தலைவர்களை, பெரும் அறிஞர்களைக் கவர்ந்துள்ள இயேசுவின் மலைப்போழிவைக் கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் சிந்தித்தோம். இன்று ஐந்தாம் முறையாக சிந்திக்க வந்திருக்கிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு மூன்று அறிவுரைகளைத் தருகிறார்:
• கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது.
• எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என்று கவலை கொள்ளாதீர்கள்.
• நாளைக்காக கவலைப் படாதீர்கள். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் இயேசு கூறும் வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் நாம் வாழும் இன்றைய உலகின் அரசியல் குறித்து நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. தமிழகம் விரைவில் தேர்தல்களைச் சந்திக்க இருப்பதால், இவ்வரிகளை ஓரளவு சிந்திப்பது பயனளிக்கும்.
இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நல்ல பண்புகள் உள்ள ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் பணியாளர், அத்தலைவன் மீது உள்ள மதிப்பினால், அன்பினால் அவருக்குப் பணிவிடை செய்வார். தலைவன் தரும் ஊதியம், அல்லது பிற பயன்கள் இவைகளுக்காகச் செய்யப்படும் பணிவிடை அல்ல இது. அவைகளையெல்லாம் தாண்டி, பணியாளரின் பணிவிடை அமைந்திருக்கும். சில குடும்பங்களில் பல ஆண்டுகள் முழு விசுவாசத்துடன் பணிபுரிபவர்களைப் பார்த்திருக்கிறோம், அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தலைவனின் மகன் தலையெடுத்து வரும்போது, அவரிடம் தன் தலைவனிடம் இருந்த பண்புகள் இல்லையென்றால், பணியாளர் அவருக்கு உழைக்கத் தயங்கி விலகுவதையும் பார்த்திருக்கிறோம்.
“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது” என்ற இயேசுவின் கூற்று, நமது அரசியல் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பொருந்தாது. இந்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் வேறொரு தெய்வத்திற்குப் பணியாளர்கள். பணம் என்ற தெய்வத்திற்கு இவர்கள் அனைவரும் பணிவிடை செய்பவர்கள்.
இயேசு இன்றைய நற்செய்தியில் செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். "கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும் இத்தலைவர்களும் தொண்டர்களும் உள்ளூர ஏளனமாய்ச் சிரித்துக் கொள்வார்கள். இயேசு சொல்வதை மறுத்து இவர்கள் சொல்வது இதுதான்... ‘கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது’ என்று யார் சொன்னது... நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான், என்று சொல்பவர்கள் இவர்கள்.
"கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறியுள்ள இவ்வார்த்தைகளைப் பலமுறை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இம்முறை வாசித்தபொழுது, என் மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. கடவுளுக்கு இணையாக உயிரற்ற ஒரு பொருளை இயேசு முன் வைக்கிறாரே... கடவுளுக்கு இணையாக, கடவுளுக்குப் பதிலாக, கடவுளுக்கும் மேலாக உயிரற்றப் பொருளை, செல்வத்தை வைக்க முடியுமா? இது சாத்தியமா? என்ற அதிர்ச்சிக் கேள்விகளுக்கு இது சாத்தியமாகியுள்ளது, சரித்திரமும் ஆகியுள்ளது என்ற பதில்கள் கிடைக்கும். கடவுளுக்குப் பதில் செல்வத்தைக் கடவுளாக்கி, வழிபடும், பணிவிடை செய்யும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.
இயேசுவின் இந்தக் கூற்று செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டதாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவைகளை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அடுத்த அறிவுரை:
உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
இந்த அறிவுரையைப் பற்றி பேச எனக்குச் சிறிது தயக்கம், பயம். என் உடன்பிறந்தோர், உற்றார், நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது நான் இயேசுவின் இந்த அறிவுரையை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அவர்களில் பலர் எனக்குத் தந்த பதில் இதுதான்: "சாமி, உங்களுக்கென்ன, புள்ளயா, குட்டியா கவலைப்படுவதற்கு? கவலைப்பட வேண்டாம்னு நீங்க ஈசியா சொல்லிடுவீங்க. ஆனா, எங்க நிலைலே இருந்தீங்கனாத் தெரியும்." இது அவர்களின் வாதம். நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். குடும்ப பாரங்கள் உள்ளவர்களின் கவலைகள் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. உண்மைதான். ஆனால், கவலைகளின் சுமைகளால் நமது உள்ளங்கள் நசுங்கிவிடாமல் காக்கும் வழிகளையும் சிறிது சிந்திப்பது நல்லதென்று நினைக்கிறேன். முயன்று பார்ப்போம்.
கடவுளையும், செல்வத்தையும் இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் ஒப்புமைப்படுத்தி பேசிய இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் ஒப்புமைப் படுத்துகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு நம்மைக் கவலைகளால் நாமே சூழ்ந்து கொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகள் விரைவில் நம்மை மூழ்கடிக்கும்.
Erma Louise Bembeck என்ற எழுத்தாளர் 1960களில் அமெரிக்க நகர வாழ்வைப் பற்றி சிறு, சிறு பகுதிகளாக நாளிதழ்களில் எழுதி வந்தார். வேடிக்கையும் கருத்தும் நிறைந்த தன் எழுத்துக்களால் பல நல்லெண்ணங்களை விதைத்துள்ளார். இவரது எண்ணங்கள் 15 புத்தகங்களாய் வெளிவந்துள்ளன. பள்ளிக்குச் செல்ல பயந்த Donald என்ற சிறுவனைப் பற்றி Bembeck ஒரு நாள் எழுதிய ஒரு சிறு பகுதி இது:
"என் பெயர் Donald. எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய ஒரு பல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் இதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதால், இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. என் பள்ளியில் உள்ள உணவகத்தில் நாற்காலிகள் அதிக உயரமாய் இருந்தால், நான் எப்படி அதில் ஏறி அமர முடியும்? நான் பள்ளியில் முகம் கழுவும்போது, என் சட்டையில் குத்தப்பட்டுள்ள அட்டையில் தண்ணீர் பட்டு, என் பெயர் அழிந்துவிட்டால், என்ன செய்வேன்? ஆடிக் கொண்டிருக்கும் என் பல் வகுப்பு நடக்கும்போது, விழுந்துவிட்டால், என்ன செய்வேன்? கொட்டும் இரத்தத்தை யார் துடைப்பார்கள்?"
சிறுவன் Donaldன் இந்தக் கவலைப் பட்டியலை வாசிக்கும்போது, வயது முதிர்ந்துவிட்ட நமக்கு மனதில் ஒரு இலேசான கேலிச் சிரிப்பு எழுகிறது... இல்லையா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... எத்தனை முறை நாம் சிறுவன் Donald ஆக மாறியிருக்கிறோம், இன்றும் மாறி வருகிறோம். தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒரு நடிகர் மனநல மருத்துவரிடம் பட்டியலிடும் "பயங்கள்" நம் நினைவுக்கு வரலாம். "எனக்கு எல்லாம் பயமயம். கவிதை பயமெனக்கு... கதை பயமெனக்கு." என்று அந்த நடிகர் சொன்ன பட்டியல் நம்மில் சிரிப்பை வரவழைத்திருக்கலாம். ஆனால், அந்த பயங்கள் போலவே நாமும் எல்லாவற்றையும் கவலை மயமாக்குவதையும் சிந்திக்கலாம்.
"கவலைப்படாதீர்கள்" என்று மட்டும் இயேசு கூறிச் சென்றிருந்தால், அவருக்கென்ன... இறைமகன், பிரமச்சாரி... எளிதாகச் சொல்லிவிட்டார் என்று நாம் குறை கண்டுபிடித்திருப்போம். கவலை கொள்ளாமல் இருக்க இயேசு வழிகளையும் சொல்லியிருக்கிறார். கவலைக்குப் பதில் கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கவலைப்படுவதால் உங்களில் யார் தன் உயரத்தைக் கூட்டமுடியும் என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால் ஒருவேளை நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டு. உலகின் பல நாடுகளில், அதுவும் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது இன்றைய புள்ளிவிவரங்கள்.
கவலைப் படுவதால், உடல் உயரத்தைக் கூட்ட முடியாது, உடல் நலத்தையும் கூட்ட முடியாது. செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்ற வேண்டாம், அவைகளுக்குக் கோவில் கட்டவோ, அவைகளுக்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.
இயேசு இன்று நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள் நம் மனதில் ஆழமாய் பதிய வேண்டும். மிகவும் எளிதான, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை இது:
நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org
Half Filled-Empty Cup பாதி நிறைந்த-நிறையாத கிண்ணம்
This is the third part of our reflections on the line “My cup overflows” in Psalm 23. Last week we rounded off our reflection on how our perspective can change our worldview. We spoke of the warped worldview created by the media in our last reflection as well as on Sunday. If we believe what the media says day after day we will be filled only with despair and desire – desire for revenge and despair about our world. The world with all its blessings and complications exists outside; but the worldview exists totally within us. What was David’s worldview?
Now and then we have mentioned that Psalm 23 is one of the masterpieces of David and that he wrote this psalm reminiscing all that had happened in his life. If David was reviewing his life, he had a choice of being engulfed in despair and desire for revenge or being engulfed in the blessings of the Shepherd. David made the positive choice. He chose to look at the half-filled cup rather than the half-empty cup. He was not talking of the half-filled cup but went one step ahead to say: “My cup overflows.”
In the last reflection on this line, we spoke about the positive traits of gratitude. If gratitude is so beneficial, if it makes us happier about our lives, why is it hard for so many people to cultivate the habit of feeling grateful? Harold Kushner gives two reasons for this malady in us.
One is a sense of entitlement. If we have grown up believing that we deserve only the best, we will respond to every gift, whether from God or from friends, like the petulant child who examines a new toy and complains, “I wanted the newer model.” For people who feel entitled, it is not enough to be alive and well; they resent every blemish, every limitation on their physical grace and athletic skill. It is not enough for them to have a loving partner and healthy children; they envy the glamorous romances of celebrities and the honor-roll achievements of the children next door. They are never satisfied because they measure their wealth not by what they have but by what others have that they lack. (Harold Kushner)
I guess these ‘entitled’ people will not be happy with their overflowing cup when they see the cup of another person overflowing a little more than theirs. According to Kushner, the second reason for not feeling grateful in life is self-sufficiency. These are “people who cannot bring themselves to utter the words ‘Thank you,’ because they need to feel self-sufficient. ‘I don’t need anything from anybody. I can take care of myself.’ How sad not to need anybody (and how mistaken to claim that we don’t). How sad not to be able to accept a gift graciously because being on the receiving end of a gift might make us feel weak and needy.” (Kushner)
The overflowing cup reminds me of the story of the half-filled cup. This story or parable tells us clearly that it is our perspective that causes us to give thanks or to give up. The half-filled cup which can make one happy, can also be seen as a half-empty cup, thus creating sadness and longing. Life events are like the weather which is not under our control. But the way we react to the weather is in our hands. Rain or sunshine can cause one to feel happy and another sad. Even in the same person, rain can leave him or her happy on a particular day and sad another day.
When some unpleasant event occurs in our life, it leaves us mostly sad. But, over the course of time, that same event may turn out to be a ‘blessing in disguise’. There are lots of stories in every religion and culture to stress the idea of blessing in disguise. There are very many stories related to ‘Titanic’… stories of those who travelled by the ship and those who missed the voyage. Here is one of them:
Years ago in Scotland, the Clark family had a dream. Clark and his wife worked and saved, making plans for their nine children and themselves to travel to the US. It had taken years, but they had finally saved enough money and had gotten passports and reservations for the whole family on a new liner to the US.
The entire family was filled with anticipation and excitement about their new life. However, 7 days before their departure, the youngest son was bitten by a dog. The doctor sewed up the little boy but hung a yellow sheet on the Clarks' front door. Because of the possibility of rabies, they were being quarantined for 14 days.
The family's dreams were dashed. They would not be able to make the trip to America as they had planned. The father, filled with disappointment and anger, stomped to the dock to watch the ship leave--without the Clark family. The father shed tears of disappointment and cursed both his son and God for their misfortune.
Five days later, the tragic news spread throughout Scotland--the mighty "Titanic" had sunk. The unsinkable ship had sunk, taking hundreds of lives with it. The Clark family was to have been on that ship, but because the son had been bitten by a dog, they were left behind in Scotland.
When Mr. Clark heard the news, he hugged his son and thanked him for saving the family. He thanked God for saving their lives and turning what he had felt a tragedy into a blessing.
http://titanic3.tripod.com/stories.html
We pray that the Shepherd helps us see all the blessings that come our way in different shapes and sizes… and more especially when it comes in disguise!
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.
திருப்பாடல் 23ன் எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது என்ற அழகியதொரு வரியில் இது நமது மூன்றாம் விவிலியத் தேடல். இந்த வரி நன்றியுணர்வால் நம் உள்ளங்களை நிரப்பும். அதனால் இந்த உலகமே நமது மனக் கண்களில் அழகாய் மாறும் என்று சென்ற தேடலில் சிந்தித்தோம். இந்த அழகிய கண்ணோட்டத்தை அழிக்கும் வகையில் ஊடகத்துறை காட்டும் இருளான உலகம் உண்மை உலகம் அல்ல; ஊடகங்கள் காட்டும் உலகத்திற்குப் பதிலாக நமது எண்ணங்களில் நன்மை நிறைந்த உண்மையான உலகைப் பார்க்கப் பழகவேண்டும் என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம்.
ஊடகங்கள் காட்டும் உலகைப் பற்றிச் சிந்திக்க கடந்த ஞாயிறு மீண்டும் ஒரு முறை நமக்கு வாய்ப்பு கிடைத்தது. 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று பழிவெறி கொண்டு திரியும் உலகமே ஊடங்கள் காட்டும் உலகம். இருந்தாலும், மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று இயேசு விடுத்த சவாலை நிறைவேற்றும் மக்களும் இந்த உலகில் உள்ளனர் என்று ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்தோம்.
இவ்விரு நாட்களிலும் நாம் கூறிய எண்ணம் இதுதான். ஊடகம் காட்டும் உலகம்தான் உண்மை உலகம் என்று நாம் நம்பினால் நம் உள்ளம் வெறுப்பில் நிறைகிறது. வெறுப்பு, பகைமை எனும் அமிலம் ஊற்றப்பட்ட பாத்திரமாய் நமது மனம் மாறும்போது, அது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அமிலத்தில் கரைகிறது. இந்தப் போக்கை முறியடிக்க, நமது உள்ளமெனும் கிண்ணத்தில், பாத்திரத்தில் இறைவன் பொழியும் அருள் அமுதத்தை நாம் நிரப்பினால், நம் மனமெனும் பாத்திரம் காப்பாற்றப்படும், மனம் நிறைந்து வழியும்.
திருப்பாடல் 23ன் ஆசிரியர் தாவீது என்று அவ்வப்போது நினைத்துப் பார்க்கிறோம். தாவீது தன வாழ்வைத் திரும்பிப் பார்த்து, அசைபோட்டு எழுதிய பாடல் இது என்றும் சிந்தித்தோம். அவர் திரும்பிப் பார்த்த வாழ்வில் நடந்ததெல்லாமே சுகமான, நலமான நிகழ்வுகள் அல்லவே. அவர் நினைத்திருந்தால், அந்நிகழ்வுகளின் விளைவாக, தன் மனதை வெறுப்பில், பகைமையில், பழி உணர்வில் நிறைத்திருக்கலாம். அவர் அதற்கு மாறாக, தன் வாழ்வை அன்பு, அமைதி என்ற அமுதங்களால் நிறைத்ததால், "என் பாத்திரம் நிறைந்து வழிகின்றது" என்று அவரால் அழுத்தந்திருத்தமாய்ச் சொல்ல முடிந்தது. வெறுப்பில் தன்னை அவர் நிறைத்திருந்தால், திருப்பாடல் 23 என்ற அரும்பெரும் கருவூலத்தை இந்த உலகம் இழந்திருக்கும்.
வாழ்வில் நிறைவைக் காண முடியாமல், நன்றி சொல்ல முடியாமல் கசப்புடன் நாம் வாழ்வைக் கழிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு என்று சொல்கிறார் Harold Kushner. வாழ்வில் எப்போதும் மிகச் சிறந்தவைகளே எனக்கு வந்து சேர வேண்டும். அது என் பிறப்புரிமை என்ற எண்ணம் முதல் காரணம். இந்த எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் தங்களுக்கு வரும் பல பரிசுகளையும் நுணுக்கமாக ஆராய்வார்கள். புண்ணியத்திற்குக் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பதம் பார்த்தது போல் ஆராய்வார்கள். அப்பரிசுப் பொருட்களைச் சுற்றியிருக்கும் காகிதம் சிறிது கிழிந்திருந்தாலும் அது நல்ல பரிசல்ல என்று அந்தப் பரிசைப் பிரிக்காமலேயே தீர்மானித்து விடுவார்கள். அல்லது, தங்களுக்கு வந்த பரிசை பிறருக்கு வந்துள்ள பரிசுகளோடு ஒப்புமைப் படுத்துவார்கள். மற்றவர்கள் பரிசு எப்போதும் தங்களது பரிசை விடச் சிறந்ததாக இருப்பதுபோல இவர்களுக்குத் தெரியும். அது இவர்களை ஏக்கத்தில் விட்டுவிடும். தங்கள் கிண்ணம் நிறைந்து வழிந்தாலும், அடுத்தவருடைய கிண்ணம் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வழிகிறதே என்ற ஏக்கமும், பொறாமையுமே இவர்களது மனதில் நிரம்பி வழியும்.
நன்றி கூறமுடியாமல் போவதற்கு இரண்டாவது காரணம்: இவர்கள் தாங்கள் வாழும் உலகில் தாங்கள் மட்டுமே போதும்; அடுத்தவரின் உதவிகள் தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு வந்தவர்கள். பிறரிடமிருந்து எதைப் பெற்றாலும், அது தங்களை வலுவற்றவர்களாய் காட்டி விடும் என்ற பயத்தில் வாழும் பரிதாப மனிதர்கள் இவர்கள். தங்கள் மனமென்னும் பாத்திரத்தில் நல்லவைகளை நிறைக்க பிறர் வரும்போது, தங்கள் பாத்திரங்களை மூடி வைப்பார்கள். மற்றவர்கள் என்னதான் முயன்றாலும், மூடிய பாத்திரங்களை நிறைக்க முடியாதே.
நிரம்பி வழியும் பாத்திரம் குறித்து திருப்பாடலின் ஆசிரியர் பேசும் போது, மற்றொரு பாத்திரம் என் நினைவுக்கு வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்த பாத்திரம். பாதி வரை நிரப்பப்பட்ட பாத்திரம். இந்தப் பாத்திரத்தை இருவர் பார்க்கின்றனர். இன்னும் பாதி நிறையவில்லையே என்று ஒருவர் ஏங்குகிறார். அடடே! பாதிவரை நிறைந்துவிட்டதே என்று மற்றொருவர் மகிழ்கிறார். நம்மை மகிழ்வில் அல்லது துயரத்தில் ஆழ்த்துவது வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அல்ல; அந்நிகழ்ச்சிகளைக் காணும் நம் கண்ணோட்டம் என்ற உண்மையைக் கூறும் உவமை இது. பாதி வரை நிறைந்துள்ள பாத்திரம் வெளியில் இருக்கும் எதார்த்தம். அதைப் பார்க்கும் பார்வையால் நமக்குள் உண்டாகும் ஏக்கம், எதிர்பார்ப்பு அல்லது நிறைவு, மகிழ்ச்சி ஆகியவை உள்ளே இருக்கும் எதார்த்தம்.
வானிலை அறிக்கைகளைத் தினமும் கேட்கிறோம். பல நேரங்களில் அங்கு சொல்லப்படுவதற்கு முற்றிலும் மாறாக நடப்பதையும் பார்க்கிறோம். வானிலை நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால், அந்த வானிலை உருவாக்கும் மனநிலை நம் கட்டுப்பாட்டில் முற்றிலும் உள்ளது. கொட்டும் மழை ஒருவரை துயரத்தில் ஆழ்த்தும், மற்றோவரை குழந்தையாய் மாற்றி மழையில் விளையாட வைக்கும். எரிக்கும் வெயில் ஒருவருக்கு எரிச்சலூட்டும், மற்றொவருக்கு மகிழ்வைத் தரும். ஒரே மனிதருக்குள்ளும் மழையோ, வெயிலோ ஒரு நாள் மகிழ்வையும் வேறொரு நாள் சோகத்தையும் உருவாக்குவதில்லையா?
வானிலையைப் போலவே, வாழ்வின் நிகழ்வுகளையும் நம்மால் அதிகம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அந்நிகழ்வுகள் நம்மில் உண்டாக்கும் எண்ணங்கள், உணர்வுகள் இவைகள் முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு நிகழ்வு நடக்கும் போது, முக்கியமாக ஏமாற்றம் தரும், துயரம் தரும் ஒரு நிகழ்வு நடக்கும்போது, பொதுவாக நம்மில் வேதனையும், கோபமும் பெருமளவில் தோன்றும். காலம் செல்லச் செல்ல அதே நிகழ்வுகள் மனதில் அமைதியை, நன்றியை உருவாக்குவதும் நாம் வாழ்வில் அனுபவத்தில் உணர்ந்துள்ள பாடங்கள்தானே! நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும், நம்மை வந்தடையும் எல்லா அனுபவங்களும் 'நல்லவை' 'அற்புதமானவை' என்ற அட்டைகள் ஒட்டப்பட்டு வரும் பரிசுகள் அல்ல. பல நல்ல நிகழ்வுகள் துன்பம் என்ற மாறுவேடத்தில் வருகின்றனவே!
ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் - Blessing in disguise, அதாவது, மாறுவேடத்தில் வரும் ஆசீர்வாதங்கள். இந்த மாறு வேடத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், ஆசீர்வாதங்களையும் இழந்துபோகும் ஆபத்து உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கருத்தை வலியுறுத்தும் பல கதைகள் உண்டு.
Titanic என்ற கப்பலைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். அந்தப் புகழ்பெற்ற கப்பலில் பயணம் செய்தவர்கள், செய்யத் தவறியவர்கள் பற்றி பல கதைகள் உண்டு. அவைகளில் ஒன்று இது. ஸ்காட்லாந்தில் வாழ்ந்தது கிளார்க் (Clark) குடும்பம். கணவன், மனைவி, ஒன்பது குழந்தைகள். Titanic என்ற கப்பலில் பயணம் செய்து, அமெரிக்காவை அடைந்து அங்கு தங்கள் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமென்று, கணவனும் மனைவியும் இரவு பகலாய் உழைத்து பணம் சேர்த்தனர். குழந்தைகளும் உழைத்தனர். பல ஆண்டுகள் சேர்த்த பணத்தைக் கொண்டு அனைவருக்கும் Passport மற்றும் பயணச்சீட்டு எல்லாம் வாங்கிவிட்டனர். பயணம் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன், அவர்கள் கடைசிக் குழந்தையை ஒரு வெறி நாய் கடித்துவிட்டது. அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் வீட்டின் முன்கதவில் ஒரு மஞ்சள் காகிதத்தை ஒட்டிவைத்தார். அதாவது, அக்குடும்பத்தில் உள்ளவர்கள் பிறரோடு 15 நாட்களுக்குப் பழகக் கூடாது என்று தடை விதிக்கும் அறிவிப்பு அது. வீட்டுத் தலைவன் மனமுடைந்து போனார். ஒரு வாரம் கழித்து, Titanic கப்பல் கிளம்பிச் செல்வதைத் துறைமுகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. தன் கடைசி மகனையும், அவனைக் கடித்த நாயையும், இப்படி நடக்கும்படி செய்துவிட்ட கடவுளையும் ஒவ்வொரு நாளும் சபித்தார்.
Titanic கப்பல் கிளம்பி ஐந்து நாட்கள் சென்று, அக்கப்பல் மூழ்கியச் செய்தி வந்தது. உடனே கிளார்க் வீட்டுக்கு ஓடிச்சென்று தன் கடைசி மகனைக் கட்டியணைத்து, முத்தமிட்டு, அழுதார். கடவுளிடம் மன்னிப்பு கேட்டார். சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், தன் மகனைக் கடித்த அந்த வெறி நாய்க்கும் அவர் ஒரு சிலை வடித்திருப்பார்.
நம்மில் எத்தனை பேர் எத்தனை முறை மாறுவேடத்தில் வந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளோம்? கடவுளின் கருணை ஒவ்வொருவர் வாழ்விலும் பல வடிவங்களில் வருகின்றது. பல நேரங்களில் மாறுவேடங்களிலும் வருகின்றது. வெள்ளமென பாய்ந்து வருகிறது. பேரருவி என கொட்டிக் கொண்டே இருக்கிறது. இந்த அருவிக்குக் கீழ் நமது மனம் எனும் பாத்திரத்தை வைத்தால், அது எத்தனை பெரிய பாத்திரமாய் இருந்தாலும் ஒரு நொடியில் நிறைந்து விடும். எனவே, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நாம் "எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது" என்பதை மட்டுமே சொல்லமுடியும். இப்படி ஒரு நிறைவில், பூரிப்பில் நாம் சொல்லும்போது, அதனால் மேலும் பலனடையப்போவது நாமே!
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

21 February, 2011
Turning the other cheek… Going the extra mile… மறு கன்னத்தைக் காட்டவும்... இன்னொரு மைல் நடக்கவும்...
Three weeks back, when we began our Sunday reflections on the Sermon on the Mount, we mentioned that speaking about this Sermon on January 30th, the day of Gandhi’s assassination, was quite appropriate, since this Sermon was a great source of inspiration to Gandhi. We are reflecting on this Sermon for the fourth week in succession. Today we are referring to Gandhi once again… but, this time to the movie ‘Gandhi’.
In this movie, the great Indian leader is walking one day with a Presbyterian missionary, Charlie Andrews. The two suddenly find their way blocked by young thugs. The Reverend Andrews takes one look at the menacing gangsters and decides to run. Gandhi stops him and asks, "Doesn't the New Testament say if an enemy strikes you on the right cheek, you should offer him the left?" Andrews mumbles something about Jesus speaking metaphorically. Gandhi replies, "I'm not so sure. I suspect he meant you must show courage; be willing to take a blow, several blows, to show you will not strike back nor will you be turned aside."
The words of Jesus asking his disciples to turn the other cheek is given to us in today’s gospel (Matthew 5: 38-48). These words have been a source of inspiration as well as a subject for very different interpretations. Gandhi’s interpretation in this movie sounds quite chivalrous. According to Gandhi, turning the other cheek meant showing courage in adversity. This could be one of the interpretations and not the only one.
The words of Jesus lend themselves to myriads of interpretations. We need to look at the words of Jesus in the context. If not, there will be the danger of quoting His words out of context. For instance, Jesus who asked his disciples ‘to turn the other cheek’ did not do it himself. We see this in the high priest’s house during the trial of Jesus.
Meanwhile, the high priest questioned Jesus about his disciples and his teaching. “I have spoken openly to the world,” Jesus replied. “I always taught in synagogues or at the temple, where all the Jews come together. I said nothing in secret. Why question me? Ask those who heard me. Surely they know what I said.”
When Jesus said this, one of the officials nearby slapped him in the face. “Is this the way you answer the high priest?” he demanded. “If I said something wrong,” Jesus replied, “testify as to what is wrong. But if I spoke the truth, why did you strike me?” (John 18: 19-23)
We need to see the context in which Jesus did not turn his other cheek. During His trial (as in many other trials) when Jesus was speaking the truth, he was being silenced by the slap of the official. Hence, Jesus had to speak up. This is the context.
Coming to our gospel today, Jesus poses quite a few challenges to his disciples: “You have heard that it was said, ‘Eye for eye, and tooth for tooth.’ But I tell you, do not resist an evil person. If anyone slaps you on the right cheek, turn to them the other cheek also. And if anyone wants to sue you and take your shirt, hand over your coat as well. If anyone forces you to go one mile, go with them two miles. Give to the one who asks you, and do not turn away from the one who wants to borrow from you.” (Matthew 5: 38-42)
All these challenges are given by Jesus not to exhibit one’s courage, not even to gain one’s spiritual stamina. If we turn the other cheek only for our own benefit, it is of less importance. We need to turn the other cheek; we need to go the extra mile in order to win over the enemy.
Does the disciple of Jesus have enemies? No. Remember last week’s challenge of leaving the offering at the altar even at the thought of others having a misunderstanding with us? Hence, a disciple of Jesus does not have enemies. But, if others behave as enemies, then it is the duty of the disciple to win them over. To do this, the disciple needs to take up all the challenges given by Jesus in today’s gospel: turning the other cheek, handing over the coat, and walking the extra mile.
When I was searching the internet with the phrase – turn the other cheek – I came across very many life events that inspired me. These events are not simply stories of forgiveness. They are stories where the ‘enemy’ was won over by the ‘disciple’. Here is one of them:
A Short Lesson on Turning the Other Cheek - With Stories That Show How it is Better!
It was 8:30pm and over a hundred men and some women partners were all gathered in a park eating a really lovely meal served up to the poor and homeless in Sydney, Australia. One of my friends had finished his meal and was standing chatting when a big angry man came up and smashed him on the cheek with a punch. Nick, my friend recovered from the shock and said, "Do you need to do that again?" The thug hit him with another hard punch and he got the same reply from Nick, "Do you need to do that again?" The thug hit Nick, who was a black belt in his own right, four times and four times Nick asked the same question. The heart of the thug was broken through this and he began to weep. He said, "Why won't you ring the police and put me in jail?"
Nick realized that this man was having a real hard time being out in free society after being locked up in the jail routines for too many years. Nick put his arm around him and said, "Do you want to come with me and have a nice brewed coffee and we will have a good chat?"
http://ezinearticles.com/?A-Short-Lesson-on-Turning-the-Other-Cheek---With-Stories-That-Show-How-it-is-Better!&id=2315414
Those of you who would like to read more, please read these inspiring events:
Turning the Other Cheek
March 28, 2008, 7:46 pm
Produced for Morning Edition by Michael Garofalo.
http://www.commonwealmagazine.org/blog/?p=1846
Modern Day Turn the Other Cheek
This is an unbelievable example of Christlike love. See this Deseret News story. A young child was horribly injured in a fireworks accident, but instead of putting the person responsible in jail, the mother as well as the injured child are fighting to keep him out of jail.
Litigious world can't fathom compassion
Published: Tuesday, Sept. 2, 2008 12:10 a.m. MDT By Doug Robinson, Deseret News
http://www.deseretnews.com/article/700255622/Litigious-world-cant-fathom-compassion.html?pg=1
Such events do happen day after day around us. Only a few get the attention of the media. Unfortunately, our media seems to revel in stories of ‘Eye for eye and tooth for tooth’ more often. We are aware of the famous quote: “An eye for an eye will make the whole world blind,” attributed to Gandhi. There is also a Chinese Proverb which says: “Whoever pursues revenge should dig two graves; one for the avenged and one for himself.”
Let us close our reflections more on a positive note. When I was reflecting on this passage, one of my friends reminded me about Gladys Staines, the wife of Graham Staines who was burnt alive along with his two sons Philip and Timothy in Orissa, India (22nd January, 1999). When Dara Singh, who was convicted of these murders, was sentenced to death, Gladys made a plea to commute the death sentence. She also made a public statement that she had forgiven those who had committed this crime. She believed that only in forgiveness can hope survive. Let us grow in courage and hope to turn the other cheek and go the extra mile to win over persons suffering from hatred!
Jesus is not suggesting that any human being become a doormat, by turning the other cheek. Self defence is not forbidden under the new covenant. Self defence is not retaliation or revenge, but the restraining of further evil. Turning the other cheek does not mean that Christians are required to “prove their worth” by allowing themselves to be, or even inviting themselves to become, victims of violence and exploitation. Jesus is clearly advocating a new covenant which offers his peace, rather than the humanly orchestrated peace which is usually achieved through retaliation and aggression.
President Abraham Lincoln often spoke kindly of Southerners, who of course during the Civil War were the enemies of the Union and its armies. A woman challenged Lincoln about his kindness, and told him that he should speak of Southerners as “enemies” and that he should intend to “destroy them.” President Lincoln is said to have replied, “Do I not destroy my enemies when I make them my friends?” (Greg Albrecht)
http://www.ptm.org/uni/resources/ptmupdate/051010/1.html
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.
'காந்தி' திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருக்கிறோம். அத்திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தியும் அவரது நண்பரான கிறிஸ்தவ போதகர் சார்லி ஆண்ட்ரூஸும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழி மறைத்து நிற்கும். அவர்களைக் கண்டதும், சார்லி அவ்விடத்தை விட்டுச் சென்று விடலாம் என்று காந்தியிடம் சொல்வார். காந்தி அவரிடம், "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்." என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "அப்படித் தெரியவில்லை எனக்கு. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும் திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து துணிவுடன் நிற்க வேண்டும்." என்று சொல்வார்.
காந்தியின் இந்தக் கூற்று ஒன்று 'ஹீரோத்தனமாக'த் தெரியலாம், அல்லது பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். நம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்களும் அடிகளைத் தாங்கிக் கொள்வார்கள்... ஆனால், சிறிது நேரம் கழித்து தான் பெற்ற அடிக்கு பல மடங்கு திருப்பித் தருவார்கள். மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவின் கூற்று துணிச்சலா? மதியீனமா? புனிதமா? இக்கேள்வி இயேசுவின் காலத்திலிருந்து நம்மைத் தொடர்கிறது.
இன்றைய நற்செய்தி இக்கேள்வியை, இந்த விவாதத்தை மீண்டும் கிளறி விடுகிறது. இயேசுவின் கூற்றுகளை, வெறும் மேற்கோள்களாகக் காட்டுவது எளிது. ஆனால், அவைகளை இயேசு கூறிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளுடன் பார்க்கும்போதே அவரது வார்த்தைகளின் பொருளை ஓரளவாகிலும் புரிந்து கொள்ள முடியும்.
மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைத்ததும், இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வும் நினைவுக்கு வரும். (யோவான் 18 : 22-23) தலைமைக் குருவின் காவலர் இயேசுவைக் கன்னத்தில் அறைந்தபோது, மறுகன்னத்தைக் காட்டுவதற்குப் பதில், "ஏன் என்னை அடிக்கிறீர்?" என்று இயேசு கேள்வி கேட்டார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரும். அவர் போதித்தது ஒன்று, அவர் செய்தது ஒன்று என்று அவசர முடிவுகளும் மனதில் எழும். எனவேதான் இயேசுவின் கூற்றுகளை சூழ்நிலையுடன் பார்ப்பது நல்லது என்று சொன்னேன்.
தலைமைக் குருவுக்கு முன் விசாரணை நடந்தபோது, உண்மைகள் புதைக்கப்படக் கூடாது என்ற வேட்கையில் இயேசு பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறிய சங்கடமான உண்மைகளை மௌனமாக்க காவலர் அறைந்தார். அந்தச் சூழ்நிலையில் உண்மை வெளிவர வேண்டும் என்பது முக்கியம் என்று இயேசு உணர்ந்ததால், தன்னை மௌனமாக்க நினைத்த காவலரை எதிர்த்து கேள்வி கேட்டார்.
தன்னை அறைந்த காவலரை எதிர்த்து கேள்வி எழுப்பிய இயேசு, இன்றைய நற்செய்தியில் "மறு கன்னத்தைக் காட்டுங்கள்" என்று எந்தப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் என்பதை உணர முயல வேண்டும். மறு கன்னத்தைக் காட்டுவது மட்டுமல்ல. உள்ளாடையைப் பறித்துச் செல்பவருக்கு மேலாடையையும் அவர் கேட்காமலேயே கொடுக்கச் சொல்கிறார். ஒரு மைல் தூரம் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்பவருடன் இரண்டு மைல் நடக்கச் சொல்கிறார். இவைகள் அனைத்திற்கும் இயேசு சொல்லும் ஒரு காரணம் இன்றைய நற்செய்தியில் தரப்பட்டுள்ளது. இப்பகுதியை மலைப்பொழிவின் மையம் என்று விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
மத்தேயு 5 : 43-45
“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக, பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.”
மறு கன்னத்தைக் காட்டுவது பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்பது நல்லது. "மறு கன்னத்தைக் காட்டு." அல்லது "மறு கன்னம்" The Other Cheek என்ற வார்த்தைகளில் பல நல்ல விளக்கங்கள், குதர்க்கமான விளக்கங்கள், விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.
கண்ணுக்குக் கண்... பல்லுக்குப் பல் என்பது பழையச் சட்டம். "கண்ணுக்குக் கண்" என்று உலகத்தில் எல்லாரும் பழிவாங்கும் படலத்தில் இறங்கினால், உலகமே விரைவில் குருடாகிப் போகும் என்று காந்தி சொல்லிச் சென்றார். சரி... பழிக்குப் பழி வேண்டாம். அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லியைப் போல், அல்லது நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவது போல், "துஷ்டனைக் கண்டால், தூர விலகலாம்" அல்லவா?
துஷ்டனைக் கண்டு நாம் ஒதுங்கிப் போகும்போது, நமக்கு வந்த பிரச்சனை தீர்ந்து விடலாம். ஆனால், அந்தப் பிரச்சனையின் பிறப்பிடம், அந்த துஷ்டன் மாறும் வாய்ப்பை நாம் தரவில்லையே. அதைத் தான் இயேசு தரச் சொல்கிறார். நமது மறு கன்னத்தைக் காட்டும்போது, நமது மேலாடையையும் சேர்த்துத் தரும்போது, நமது பகைவர் மாறும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.
மறு கன்னத்தைக் காட்டுவது, மேலாடையைத் தருவது, கூடுதல் ஒரு மைல் நடப்பது ஆகிய நற்செயல்கள் நாம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் சிறந்த வழிகள் என்று நாம் சிந்தித்தால், அதுவும் இயேசுவின் கண்ணோட்டம் அல்ல.
குத்துச் சண்டை பயிற்சிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பயிற்சிகளில் சில சமயம் குத்துச் சண்டை வீரர்களின் உடலின் சில பகுதிகளை உறுதியாக்க, வேறொருவரிடம் அப்பகுதிகளில் குத்துக்களைப் பெறுவர் வீரர்கள். இப்படி குத்துவதை நாம் தாக்குதல் என்று கூடச் சொல்வதில்லை, அவைகள் பயிற்சிகள். அதேபோல், ஒருவர் நம்மை அறையும்போது, நாம் ஆன்மாவில் பலம் பெறுவதற்காக மீண்டும் அவர் அறைய வேண்டுமென்று அடுத்த கன்னத்தைக் காட்டுவது நம் சொந்த பலனுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சி. இப்படி செய்வதால், ஆன்மா பலம் பெறக்கூடும்... மறு கன்னத்தைக் காட்டும் நாம் சுற்றி நின்று பார்ப்பவர்கள் மனதில் ஹீரோக்கள் ஆகக்கூடும். ஆனால், நமக்கு இந்த நன்மைகள் சேரும் நேரத்தில் நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாறுதல்கள் எதுவும் இல்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், மேலாடையையும் சேர்த்துக் கொடுப்பதால் நமது பகைவரிடம் மாறுதல்கள் வர வேண்டும். அம்மாறுதல்கள் வரும் வரை நாம் இந்த நற்செயல்களைத் தொடர வேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் இன்று வைக்கும் சவால்.
மறுகன்னத்தைக் காட்டியதால் பகைவரிடம் உண்டான மன மாற்றங்கள், அவர்கள் பெற்ற மறு வாழ்வு இவைகளைக் கூறும் பல நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உலகில் நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் ஒரு பகுதியில் இரவு 8 மணிக்கு ஒரு பூங்காவில் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் தினமும் வழங்கப்படும். பொருளாதாரச் சரிவால் பலர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தனர். Nick என்ற இளைஞனும் இக்கூட்டத்தில் ஒருவன். அவன் கராத்தேயில் ஓரளவு திறமை பெற்றவன். அவன் அன்று தன் உணவை முடித்த வேளையில், அவனை விட பலம் மிகுந்த ஒருவன் திடீரென Nickஇடம் வந்து அவனது முகத்தில் குத்தினான். நிலை தடுமாறி விழுந்தான் Nick. சுதாரித்து அவன் எழுந்து, தன்னைக் குத்தியவனிடம், "மீண்டும் குத்துவதற்கு விருப்பமா?" என்று கேட்டான். அந்த பலசாலி மீண்டும் குத்தினான். "மறுபடியும் குத்த விரும்புகிறாயா?" என்று Nick அவனிடம் கேட்டான். இப்படி நான்கு அல்லது ஐந்து முறை குத்தியபின், அந்த பலசாலி கீழே அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதான். Nick அவனருகே அமர்ந்தான். பலசாலி Nick இடம், "நான் உன்னைக் குத்தினேன் என்று காவல் துறைக்குச் சொல்... அவர்கள் வந்து என்னைக் கைது செய்யட்டும்." என்று அழுதபடியே சொன்னான்.
அந்த பலசாலி பல ஆண்டுகள் சிறையில் இருந்தவன். விடுதலை பெற்று வந்ததிலிருந்து உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாததால், அவனால் வெளி உலகில் வாழ முடியவில்லை. மீண்டும் சிறைக்குத் திரும்புவதே மேல் என்று அவன் எண்ணினான். Nick அவனிடம், "சரி, வா. நாம் போய் ஒரு காபி அருந்தியபடியே பேசுவோம்." என்று அவனை அழைத்துச் சென்றான். பலசாலியின் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தன்னைச் சிறைக்குள் அடைத்துக் கொள்வதே மேல் என்று எண்ணிய அந்த மனிதனைச் சூழ்ந்திருந்த சிறைகளிலிருந்து வெளியே கொண்டு வந்தது Nick அவனிடம் தன் மறு கன்னத்தைக் காட்டிய அந்த நிகழ்ச்சி.
மறு கன்னத்தைக் காட்டும் பல வீரர்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்களின் வீரச் செயல்களில் நூற்றில் ஒன்று அல்லது ஆயிரத்தில் ஒன்று என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக் காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி நமது பெரும்பாலான செய்திகள் "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே. பழிக்குப் பழி என்று நமது மனித வரலாற்றை இரத்தத்தில் எழுதும் நம்மைப் பற்றி சொல்லப்படும் ஒரு சீனப் பழமொழி இது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவன் இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
வெறுப்பின் உச்சங்களை மனித வரலாறு எட்டிய ஒரு சில நேரங்கள் என்று நினைத்துப் பார்த்தால், ஆப்ரிக்காவின் Rwanda நாடு மனதில் வரும். Hutu, Tutsi ஆகிய இனங்களுக்கிடையே ஆழமாய் புரையோடிப் போன பழி உணர்வுகளைப் பற்றி அங்குள்ள ஒரு போதகர் கூறும் அழகிய கருத்து இது: "பழிக்குப் பழி என்ற வெறுப்பைச் சுமந்து திரியும் மனம் அமிலத்தைச் சுமந்துள்ள ஒரு உலோகக் கிண்ணத்தைப் போன்றது. கிண்ணத்தில் அமிலம் இருக்கும் வரை அந்த அமிலம் கிண்ணத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக அரித்துக் கொண்டே இருக்கும், கிண்ணத்தை முற்றிலும் அழித்து விடும் ஆபத்து உண்டு."
பழிக்குப் பழி என்ற அமிலத்தை வெளியில் எறிந்துவிட்டு, அன்பு எனும் அமுதத்தை மனதில் நிரப்புவோம். பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவர் மனதிலும் அழியாமல் பதிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை. 1999ம் ஆண்டு சனவரி மாதம் ஒரிஸ்ஸாவில் தன் கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸையும், Philip, Timothy என்ற தன் இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்ட Gladys Staines பற்றிய செய்திகளை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று Gladys சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம். மன்னிப்பதால், மறு கன்னத்தைக் காட்டுவதால் வளரும் நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்ள முயல்வோம். நாம் மறு கன்னத்தைக் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களை மனம் மாற்றும் கனிவும், துணிவும் நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/
17 February, 2011
GREAT TO BE GRATEFUL நன்றி நினைப்பது நன்று
(Kindly visit this blog... It is quite inspiring. It will help you a LONG WAY in being grateful)
Last week we began our reflections on the verse “My cup overflows” of Psalm 23. Overflowing cup is a symbol of gratitude. Gratitude is one of the noblest attributes of a human being. It is more than a feeling. It is a point of view, a way of life. I would like to spend more time reflecting on this capacity of a human being – the capacity to be grateful.
I would like to reflect on four aspects of ‘Gratitude’. I am sure there are many more…
The First Aspect: Gratitude is always attached to Goodness. Wow, G and G! In Tamil as well, there is a similarity between the words gratitude and goodness… Nanri and Nanru. Here is a famous couplet form Thirukkural:
Nanri marappathu nanranru nanrallathu
Anre marappathu nanru.
Its translation goes like this:
Forgetting to be thankful is not good, whereas forgetting unpleasant things immediately is good.
Sometimes what seemed very unpleasant turned out to be good and we were thankful for them too.
The Second Aspect: Gratitude is not always expressed in words. More often gratitude is shown through non-verbal communication. When we read Psalm 23, it is very clear that the author is filled with gratitude; but not even once has he used the word ‘thanks’ or similar words throughout the Psalm. I wish to draw a parallel here with a life situation.
When a child grows up, most parents are very keen to teach the child to say “Thank you; Thanks Uncle; Thanks Auntie” etc. for any small gift given to the child or any favour shown. As soon as the child begins to speak, ‘Thanks’ is one of the first words taught to the child. Although we insist that the child says thanks for gifts received, it is a very different scenario at home. Let us imagine a scene at home. Daddy has bought a new dress for the child. The moment the child sees the dress, she runs to her Dad; hugs him and plants a sweet kiss on his cheeks. The next day the child wears the dress to school and parades it before all the children and lets the whole world know that her Dad bought it. The word ‘Thank you’ may or may not have been uttered by the child; but all those who see the child can easily understand that she is filled with gratitude for her Dad. I am sure all of us can relive some of those very precious moments in our families and among friends when gratitude was shown more eloquently through teary eyes, a squeeze of hands, a warm hug etc.
The author of Psalm 23 enumerates all that the Shepherd has done in his life and it is easy to read the word THANK YOU, LORD between each line of this Psalm. This sense of gratitude expressed by the psalmist reaches its peak in this line: “My cup overflows.”
The Third Aspect: Gratitude is rooted in the sense that life is a gift. The essence of the gift is that it comes to you from someone else, not by your own efforts. (Harold Kushner) The centre or source of gratitude is not oneself but the other or The Other (God). For all the good things we come across in our lives we spontaneously say, ‘Thank you’ or ‘Thank God’. In English there is no such expression as ‘Thank me’. Even when we achieve success through our efforts, we still tend to say ‘Thank God’. When we are saved from danger, even if this saving required some of our skills, we still say ‘Thank God’ or we think of someone else who has helped us through the danger… This is the beauty of gratitude… that it does not find the source or reason in oneself.
The Fourth Aspect: The remarkable thing about gratitude is that, like forgiveness, it is a favor we do ourselves more than it is something we do for the recipient of our thanks. God would have us develop the habit of gratitude for all the blessings of our lives, not because He needs our thanks but because when we acknowledge those blessings we come to feel differently about His world and live happier lives as a result. (Harold Kushner)
We come to feel differently about His world and live happier lives as a result… These words of Kushner almost read like a fairy tale… ‘They-lived-ever-after-happily’ stuff. We do not easily believe when someone says that this world would be different and our lives would be better. Why? It may be due some ideas of the world that are etched in our minds. It would be good to check how we feel about this world right now. Only then can we understand how differently we can feel about His world. How do we feel about the world now?
Having taught communication and the media for a few years, I can safely say that most of us form an idea of the world from what we read, hear and see in the media. The media claims that it just reflects the world around us. Without going into too many details about how the media works, I can say that that claim of the media is false! The media does not reflect reality; but constructs reality. Unfortunately, the world constructed by the media is only a partial, warped reality of the world. This is only 10% of the total reality. The other 90% of the world is good. Since only the darker side of the world is ‘news-worthy’, the media tends to project this 10% world day after day. When we keep hearing only such news, we tend to form a pessimistic view of the world. Hence, when someone says that this world can be different, we tend to brush aside such notions as fairy-tale stuff.
Here is a suggestion: Let us assume that most of us spend at least one hour per day with the media – reading newspapers, listening to the radio or watching TV. This means that we expose our minds to be influenced by the darker 10% world as painted by the media FOR ONE HOUR. If this is so, why not spend at least TWO HOURS per day consciously thinking about and thanking God for the 90% world that goes unnoticed by the media? 90% of the world that is GOOD? Many of you who read these lines would have already formed your own opinion on this suggestion. One of those opinions may be something like this… What a waste of time to spend TWO HOURS per day thinking about the good world!
Recently, one of my friends had sent this story via email to me:
A wise man once sat in a group and cracked a joke. All laughed like crazy. After a moment he cracked the same joke again and a little less people laughed this time. He cracked the same joke again and again. When there was no laughter in the crowd, he smiled and said: "When u can't laugh on the same joke again and again, then why do u keep crying over the same thing over and over again?”
I am asking myself a similar question. When I can form a darker opinion about the world because of the 10% world presented by the media, why can’t I form a brighter opinion of the world because of the real 90% world? This means I need to repeatedly tell myself that this world is good. Humans are slaves to habits. Why can’t I break the habit of thinking negatively about the world and form the habit of developing positive ideas of this world? I need to see the half-empty cup as half-filled cup. This shift comes by practice, by habit. In fact, such a habit would eventually lead me to believe that ‘my cup overflows.’
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.
திருப்பாடல் 23ன் "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்ற வரியில் நம் தேடலை சென்ற வாரம் ஆரம்பித்தோம். நன்றி என்பது ஒரு மன நிலை, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உலகையும் பார்க்கும் ஒரு மன நிலை. இந்த மன நிலையை இன்னும் சிறிது ஆழமாய் அடுத்தத் தேடலில் சிந்திப்போம். என்று சென்ற தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.
நன்றி என்ற சொல்லில், அந்த உணர்வில் ஒரு சில அழகான எண்ணங்கள் பொதிந்துள்ளன. முதல் எண்ணம்... நன்றி என்பது நல்லவைகளுக்குச் சொல்லப்படும் ஒரு சொல். ஒரு சில வேளைகளில் தீமை போல வரும் சில பிரச்சனைகளும் பின்னர் நன்மையாய் மாறும்போது, நாம் நன்றி உணர்வு கொள்கிறோம். தமிழில் 'நன்றி' என்ற சொல்லைப்போலவே ஒலிக்கும் மற்றொரு சொல் 'நன்று'. இவ்விரு சொற்களையும் இணைத்து நாம் எண்ணிப்பார்க்க நமக்குப் பெரிதும் உதவியாய் இருப்பது நமது 108வது திருக்குறள்.
"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."
நன்றி என்பதை வார்த்தைகளில் நாம் சொல்லாத நேரங்களே அதிகம் என்பது நன்றியைக் குறித்த இரண்டாவது எண்ணம்... நன்றி என்ற வார்த்தையை இத்திருப்பாடல் முழுவதிலும் ஓரு முறைகூட ஆசிரியர் பயன்படுத்தவில்லை. என் ஆயனாம் இறைவன் எனக்கு இவைகளைச் செய்தார், செய்கிறார், இனியும் செய்வார் என்று அவர் கூறும் ஒவ்வொரு கூற்றும் அவர் உள்ளம் நன்றியால் நிறைந்திருப்பதை நமக்குத் தெளிவாக்குகிறது. வாய் வார்த்தையாய் சொன்னால்தான் நன்றியா? வேறு எத்தனையோ வகைகளில் நம் நன்றியை வெளிப்படுத்தலாமே!
குழந்தைப் பருவத்திலிருந்து நமக்குச் சொல்லித் தரப்படும் ஒரு முக்கியப் பாடம் நமக்கு யாராவது எதையாவது கொடுத்தால், உடனே 'நன்றி' சொல்ல வேண்டும் என்ற பாடம். குழந்தையொன்று பேச ஆரம்பித்ததும், அதற்கு முதலில் சொல்லித் தரப்படும் வார்த்தைகள் 'அம்மா, அப்பா'. அதற்கு அடுத்தபடியாக நாம் சொல்லித்தரும் வார்த்தைகள்: Thank you, Thanks Auntie, Thanks Uncle என்ற வார்த்தைகள். ஒரு குழந்தைக்கு ஒரு பொருளை நாம் கொடுத்ததும், அக்குழந்தை பெற்றோரின் தூண்டுதல் ஏதுமின்றி, தானாகவே சிரித்த முகத்துடன் நன்றி சொன்னால், அக்குழந்தை நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளதென்று நாம் பெருமைப்படுகிறோம்.
ஆனால், வீட்டில் இந்தக் காட்சி கொஞ்சம் மாறும். குழந்தைக்கு அன்னை உணவூட்டி விடுகிறார். ஒவ்வொரு வாய் உணவைப் பெற்றதும், அக்குழந்தை நன்றி சொன்னால் அது செயற்கையாய் இருக்கும். அதற்குப் பதில், ஊட்டப்படும் உணவை அக்குழந்தை இரசித்து உண்பதே அம்மாவுக்கு அக்குழந்தை சொல்லாமல் சொல்லும் நன்றி. சாப்பிட்டு முடித்ததும், இறுதியில் அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் அதுவும் நன்றி சொல்லும் ஒரு வகை.
அப்பா வாங்கித் தந்த ஓர் அழகான உடையைக் கண்டதும், குழந்தை ஓடிச் சென்று அப்பாவை அணைத்து முத்தமிடுகிறது. பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு வெளியில் ஓடிச் சென்று தன் நண்பர்களுக்கு அதைக் காட்டி, மூச்சுக்கு மூச்சு 'என் அப்பா வாங்கித் தந்தார்' என்று குழந்தை பறை சாற்றுகிறது. இச்சம்பவங்களில் நன்றி என்ற வார்த்தையைக் குழந்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், குழந்தையின் நன்றியுணர்வு அதன் செயல்களில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. நம் ஒவ்வொருவரது குடும்பங்களிலும் இதுபோல் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடைபெறுகின்றன. குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் 'நன்றி நவிலல்' என்று ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ இல்லாமல் நன்றி உணர்வுகள் பரிமாறப்படுகின்றன.
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இத்திருப்பாடலை நோக்கும்போது, தனக்கு இறைவன் செய்த நன்மைகளை ஆசிரியர் ஒவ்வொன்றாகச் சொல்லும்போதே அவரது நன்றியையும் சேர்த்து சொல்கிறார். அந்த நன்றி உணர்வுகளின் ஓர் உச்சமாக அவர் கூறுவது: "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்ற இந்த வரி.
நன்றியைப் பற்றிய மூன்றாவது எண்ணம்... நன்றி உணர்வுக்கு ஊற்று, ஆரம்பம், காரணம் நாம் அல்ல; மற்றவர்களே. நம் சொந்த முயற்சிகளுக்கு நமக்கு நாமே நன்றி சொல்வதில்லை. கடினமாய் உழைத்தோம். உழைத்ததற்கேற்றபடி அந்த மாத ஊதியம் கிடைத்தது. "ஊதியம் கிடைத்த எனக்கு நன்றி." என்று சொல்லிக் கொள்கிறோமா? இல்லையே. ஒருவேளை, ஊதியம் தந்த நிறுவனத்தின் தலைவனுக்கு நேரடியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், மனதுக்குள் நன்றி சொல்வோம்... நம்மை இதுவரை அந்த நிறுவனம் பணி செய்ய அனுமதித்ததற்கு.
Thank YOU என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. Thank ME என்று சொல்வதில்லை. ஒரு முயற்சி எடுத்தோம், வெற்றி பெற்றோம். ஒரு ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டோம். இவைகளில் நமது முயற்சி, நமது திறமைகள் வெளிப்பட்டாலும், இறுதியில் நாம் Thank God அதாவது, கடவுளுக்கு நன்றி என்றே அதிகம் சொல்கிறோம். நன்றி உணர்வின் மையம் நாமல்ல. நம்மையும் கடந்த ஒரு சக்தி நமக்குப் பின் நின்று நம்மைக் காத்துள்ளது, வழி நடத்தியுள்ளது என்ற உணர்வு நமக்கு எழுகிறதே... அதுதான் நன்றியுணர்வின் அழகு. நன்றியுணர்வின் ஆரம்பம் நாமல்ல; மற்றவர்களும், கடவுளும்...
நன்றி என்ற சொல்லின், உணர்வின் நான்காவது அற்புதம், அழகு என்ன தெரியுமா? அவ்வுணர்வால் அதிக அளவு பயன் பெறுவது நாம்தான். நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு பிறருக்கோ, கடவுளுக்கோ நாம் நன்றி சொல்லும்போது, அதுவும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் உண்மையான நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, அதைக் கேட்கும் மற்றவர்கள் ஒருவேளை, ஓரளவு மகிழலாம். ஆனால், அந்த உணர்வை வெளிப்படுத்தும் நாம் இன்னும் அதிகம் மகிழ்கிறோம், பெருமளவில் பயன் பெறுகிறோம் என்பது உண்மை.
இது மன்னிப்பு வழங்குவதைப் போன்றது என்று சொல்கிறார் Harold Kushner. நாம் மன்னிப்பைப் பெறும்போதும் வழங்கும்போதும் பெருமளவில் நிம்மதி, ஆறுதல் அடைகிறோம். மனக்காயங்கள் ஆறுகின்றன. அதேபோல், உண்மையான நன்றி உணர்வை வெளிப்படுத்தும்போது, பெருமளவில் நிறைவடைகிறோம், பயனடைகிறோம்.
இத்தனை அழகிய அம்சங்கள் கொண்ட நன்றி உணர்வால் நம் உள்ளம் அடிக்கடி நிறையும்போது, வாழ்வின் சிறு, சிறு காரியங்களும் அழகாக மாறும்; இந்த உலகமே அழகாக மாறும்...
இந்த உலகம் அழகாக மாறும் என்று நான் சொன்னதும், “உலகம் அழகாக மாறுமா? இந்த உலகம் அழகாய் மாற வாய்ப்பு ஏதும் உண்டா? நீங்கள் சொல்வதென்ன கனவுலகமா?” என்று உங்கள் மனதில் கேள்விகள் எழுந்தால், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘உலகம்’ என்ற வார்த்தையைக் கேட்டதும், பயம், சலிப்பு, சந்தேகம் இவைகளே நம்மிடம் அதிகமாய் எழும் உணர்வுகள். ஒவ்வொரு நாளும் இந்த உலகைப் பற்றி செய்திதாள்களும், வானொலியும், தொலைக்காட்சியும் சொல்லும் செய்திகள், இவ்வகைச் சந்தேகக் கண்ணோட்டத்தை நம்மில் உருவாக்கியுள்ளன. உலகின் இருண்ட பகுதிகளையே நாள் தவறாமல் படம் பிடித்து, தலைப்புச் செய்திகளாக்கி நம் ஊடகங்கள் நமக்குச் சொல்வதால், நம் உள்ளங்கள் இப்படி நினைக்கின்றன.
ஊடகத்துறை காட்டும் உலகம் உண்மை உலகம் அல்ல... அல்ல... அல்ல. ஊடகம் காட்டும் இருண்ட உலகம் உண்மையான உலகத்தின் 10 விழுக்காடாக இருக்கலாம். மீதி 90 விழுக்காடு உலகம் நல்ல முறையில் தான் இயங்கிக் கொண்டு வருகிறது. நாள் தவறாமல், இந்த 10 விழுக்காடு உலகத்தையே பார்க்கும்படி ஊடகங்கள் நம்மை வற்புறுத்துகின்றன. அதற்கு ஒரு மாற்றாக, ஒவ்வொரு நாளும் 90 விழுக்காடு நல்ல உலகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது நம் கடமை. பரிதாபமாய் காட்டப்படும் உலகைப் பற்றி படிக்க, பார்க்க நாம் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒதுக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த 10 விழுக்காட்டு இருள் உலகத்திற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கும் நாம் 90 விழுக்காட்டு நல்ல உலகத்தைப் பற்றி சிந்திக்க குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஒதுக்க வேண்டாமா? ஆனால், நாம் அப்படி செய்வதில்லையே... ஏன்? நல்ல உலகைப் பற்றி சிந்திக்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள் என்று நான் சொல்லும்போதே, நம்மில் பலருக்கு இது என்ன வேலையற்ற வேலை என்ற எண்ணம் மனதில் ஓடலாம்.
அண்மையில் மின்னஞ்சலில் என் நண்பர் ஒருவர் அனுப்பிய ஓர் அழகான சம்பவம் மனதில் எழுகிறது. ஒரு சிறு கூட்டத்தில் வயது முதிர்ந்த ஒருவர் ஒரு 'ஜோக்' அடித்தார். அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து, அவர் அதே 'ஜோக்'கை மீண்டும் அடித்தார். சூழ இருந்தவர்களில் ஒரு சிலரே மீண்டும் சிரித்தனர். ஆனால் சிரிப்பில் அவ்வளவு தீவிரம் இல்லை. மூன்றாம் முறை, நான்காம் முறை என்று அதே 'ஜோக்'கை மீண்டும் மீண்டும் அடித்தபோது, சூழ இருந்தவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிறிது கோபமடைந்தனர். அப்போது அவர் சொன்னார்: “ஒரு 'ஜோக்'கிற்கு உங்களால் மூன்று, நான்கு முறைகளுக்கு மேல் சிரிக்க முடியவில்லை. ஆனால், ஒரு சோகத்திற்கு மட்டும் மீண்டும், மீண்டும் அழுகிறீர்களே அது ஏன்?” என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தார்.
அதேபோன்றதொரு கேள்வியை நான் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் இந்த உலகம் மோசம் என்பதை நிரூபிக்கும் வகையில் வரும் ஒரே மாதிரியான செய்திகளை மீண்டும் மீண்டும் படிக்கிறோம். உலகம் மோசம் என்றும் நம்ப ஆரம்பிக்கிறோம். ஆனால், இந்த உலகம் நல்லது என்று சொல்லும் எண்ணங்களை ஏன் நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சொல்லி நம் நம்பிக்கையை வளர்க்கவும், நன்றி உணர்வை வளர்க்கவும் மறுக்கிறோம்?
மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் பழக்க வழக்கங்களின் அடிமைகள்... ஊடகங்கள் சொல்லும் இருளான உலகையேப் பார்த்து, பார்த்து மனக் கண்களின் பார்வைத்திறனைக் குறைத்துக் கொள்வதற்குப் பதில், உலகில் தீமைகளை விட நன்மைகளே அதிகம் என்ற உண்மையை நமக்கு நாமே தினமும் சொல்லப் பழகிக் கொள்வோமே! நமது பாத்திரம், கிண்ணம், நமது உலகம் இறைவனின் அருளால் இன்றும், இன்னும் நிறைந்து வழிகிறது என்று சொல்லிப் பழகினால் என்னதான் நடக்கிறதென்று பார்ப்போமே! நமது பாத்திரம் தொடர்ந்து நிரம்பி வழியும்.
இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org
13 February, 2011
But I say unto you… ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்...
Fire & Water Yin Yang
wire, acrylic, mosaic on wood ~ 10/06
http://www.fluidikons.com/new%20works.htm
For the third week in succession, we are reflecting on the words of Jesus, compiled by Matthew as the Sermon on the Mount. Last week we considered two imageries used by Jesus – Salt and Light. This week we begin our reflections with the imageries of Fire and Water, given in the first reading for this Sunday from the Book of Sirach. The passage given today is very direct and lucid. Here it is:
SIRACH 15: 15-20
If you will, you can keep the commandments, and to act faithfully is a matter of your own choice. He has placed before you fire and water: stretch out your hand for whichever you wish. Before a man are life and death, and whichever he chooses will be given to him. For great is the wisdom of the Lord; he is mighty in power and sees everything; his eyes are on those who fear him, and he knows every deed of man. He has not commanded any one to be ungodly, and he has not given any one permission to sin.
Fire and water are placed before us and we are asked to stretch out our hand to… touch? take? whichever we wish. In the same way, life and death are before us and we are asked to choose. It is simple common sense that between fire and water we would stretch out our hands only towards water. Between life and death, we would choose only life. But… wait a moment! Things are not that simple and clear in life. Common sense does not guide all our choices all the time. There are other factors like habits, emotions and situational pressures. We can surely think of moments when we stretched out our hands towards fire. Burning fire is attractive with its dancing flames. Even a child gets attracted towards fire; but on no account we allow a child to get close to fire. But, as grown ups haven’t we chosen fire over water quite a few times in our lives? Haven’t we played with fire?
Sirach also talks of the choice between Life and Death. The famous Jesuit, Walter Burghardt, focused in on the phrase, ‘Before a man are life and death, whichever he chooses shall be given to him.’ He goes on to state that to the ancient Hebrews, life meant far more than the period between conception and death. Life was what proceeded from loving and obeying God. And death was not just that which followed the last breath on earth. To the ancient Hebrews, death was the rejection of the living God. “Seek the Lord and you will live,” the prophet Amos tells the people. He was not just speaking of eternity. He was speaking of living life to its fullest right now. And, conversely, isolate yourself from the love of the Lord, and you will join the living dead. (Homily from Father Joseph Pellegrino - http://homilies.net/)
The idea of loving and obeying God was reduced to following the Laws of Moses. Even here, the Israelites tended to follow the ‘letter’ of the Law than the ‘spirit’. This is the main theme of today’s lengthy Gospel passage – Matthew 5: 17-37. Jesus differentiates between the letter and spirit in two formulas… “You have heard that it was said … But I say unto you.” For the Jews who heard Jesus speak this way, this must have sounded too presumptuous. A carpenter’s son from Nazareth trying to be greater than Moses and the Prophets? Unthinkable! Hence, Jesus begins today’s discourse with a clarification:
Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them. For truly I tell you, until heaven and earth disappear, not the smallest letter, not the least stroke of a pen, will by any means disappear from the Law until everything is accomplished. Therefore anyone who sets aside one of the least of these commands and teaches others accordingly will be called least in the kingdom of heaven, but whoever practices and teaches these commands will be called great in the kingdom of heaven. (Matthew 5: 17-19)
Jesus is not setting aside the Law; but sets it up on a higher plane. He challenges his listeners to follow the spirit of the Law and live rather than follow the letter of the law and become living dead. The challenge of Jesus can be understood better if we take one set of the Laws – the laws prescribed for temple offerings. The Laws prescribed many details about the type of offering to be made for different occasions. For instance, minute details were given as to how old must the sacrificial lamb be and that it should be without any blemish etc. When anyone brings from the herd or flock a fellowship offering to the LORD to fulfill a special vow or as a freewill offering, it must be without defect or blemish to be acceptable. (Lev. 22:21)
The Laws dealt mostly with external requirements. They did not speak much on the internal requirements. Jesus brings the latter into focus. He says: “Therefore, if you are offering your gift at the altar and there remember that your brother or sister has something against you, leave your gift there in front of the altar. First go and be reconciled to them; then come and offer your gift.” (Matthew 5: 23-24)
This passage is a favourite one of mine. It gives us a very high standard of reconciliation. You are at the altar to offer your gift. There you remember… Remember what? Remember that you have something against your brother or sister? NO… Remember that your brother or sister has something against you… This is the benchmark. Even when your brother or sister has something against you and you happen to remember it, then you cannot proceed to offer your gift. Your first duty is reconciliation; only then comes the offering of the gift.
I was just wondering what would be Jesus’ response if I asked him, “What if I had something against my brother or sister?” I can well imagine Jesus responding this way: “Well, if that is the case, forget about bringing any gift to the altar. Your first job is to be reconciled even before approaching the altar.” This is a very great challenge for us. If this challenge of Jesus is taken very seriously, then most of our Sunday Masses will have to come to an end by the time we come to the offertory. Almost all of us, including the priest, will have non-reconciled relationships. They need to be mended before offering the gifts. We need to become a better gift internally before we can offer the external gift at the altar.
Throughout today’s gospel, Jesus offers us quite a few challenges. In fact the whole Sermon on the Mount is very challenging. It makes us wonder whether such a life is possible here on earth. It makes us hunger and thirst for such a life here on earth. Such wonder, such hunger and thirst are steps to the altar of holiness.
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.
தொடர்ந்து, மூன்றாவது வாரமாக நாம் இயேசுவின் மலைப்பொழிவைச் சிந்திக்க வந்திருக்கிறோம். சென்ற வாரம் நமது சிந்தனைக்கு இயேசு கூறிய இரு உருவகங்களைச் சிந்தித்தோம். உப்பும், விளக்கும். இந்த வாரம் நமது சிந்தனைகளை வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம். நீரும், நெருப்பும். இன்றைய முதல் வாசகம் இந்த உருவகங்களை நமக்குத் தருகிறது. சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மிக எளிய வார்த்தைகளில் அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களை நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாசகத்தின் முதல் பகுதியை மட்டும் இப்போது கேட்போம்.
சீராக்கின் ஞானம் 15: 15-17
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா... எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான விடைகளை எளிதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே மேல் என்றும், சாவை விரும்புவதை விட வாழ்வை விரும்புவதே மேல் என்றும் நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால், வாழ்வில் நம்மை அறிவு மட்டும் வழிநடத்துவது இல்லையே. உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று வேறு பல அம்சங்களும் நம்மை வழிநடத்துகின்றனவே. சுடும் என்று தெரிந்தும், புண்படுவோம் என்று தெரிந்தும், நெருப்பைத் தேடிச் சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி எடுத்த நேரங்களை நினைத்துப் பார்க்கலாம்.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு எப்போதும் பார்க்க அழகாக இருக்கும். அந்த அழகைத் தேடி குழந்தை ஒன்று தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை செல்வதை நாம் அனுமதிப்பது இல்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை நாம் அந்த ஈர்ப்பினால் நெருப்புடன் விளையாடி புண்பட்டிருக்கிறோம்? வாழ்வின் எத்தனைப் பகுதிகள் நெருப்பில் சாம்பலாகியுள்ளன? இயற்கையில், இறைவனின் படைப்பு என்ற வகையில் நீர், நெருப்பு இரண்டும் நல்லவைகளே. ஆனால், அவைகளை நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து, நன்மை விளையலாம்; தீமையும் விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு முன் இருக்கும்போது, கைநீட்டி நாம் எடுத்துக்கொள்ள நீரே நல்லது. நெருப்போடு விளையாட வேண்டாம். நெருப்போடு விளையாடும் பலரை, சிறப்பாக இளையோரை, இந்நேரத்தில் நினைத்து அவர்கள் தங்கள் விபரீத போக்குகளை விட்டு நல்வழி வந்து சேர வேண்டுவோம்.
சீராக்கின் ஞானம் தரும் மற்றொரு கேள்வி - வாழ்வா, சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச் சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி விரும்ப முடியும்? வாழ்வைத் தான் விரும்ப வேண்டும் என்று எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு இவை குறித்து Walter Burghardt என்ற இயேசுசபை குரு கூறும் விளக்கம் இந்தக் கேள்வியை மற்றொரு கோணத்தில், இன்னும் சிறிது ஆழமாய் பார்க்க உதவும்.
சீராக் கூறும் வாழ்வு மூச்சு விடுதல், இதயம் துடித்தல் போன்ற உடல் செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டவை அல்ல. இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை, சீராக்கைப் பொறுத்தவரை, இறைவன் மீது பற்று கொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு. அதேபோல், அவர் கூறும் சாவு நமது மூச்சு நின்று போகும்போது நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்கள் சாக முடியும். இறைவாக்கினர்களைப் பொறுத்தவரை, இறைவனின் வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சு விடும் நடைப்பிணங்களே. எனவே சீராக் வாழ்வையும், சாவையும் நம்முன் வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறார் என்று விளக்குகிறார் Walter Burghardt.
இறைவனின் வழி வாழ்வதை இஸ்ரயேல் மக்களில் பலர் இறை சட்டங்களின்படி, மோசே தந்த சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும் என்ற அளவில் நினைத்துப் பார்த்தனர். மோசேயின் சட்டங்களையும் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக்கொள்ள முயன்றனர். எனவே, குருட்டுத்தனமாய் சட்டங்களைப் பின்பற்றி அவர்கள் வாழ்ந்த வாழ்வு வெறும் மூச்சு விடும் நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை இயேசு தன் மலைப்பொழிவில் தெளிவுப்படுத்தினார்.
"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்.... ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என்று இன்றைய நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. "நான் உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு கூறிய இந்த வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஓர் ஊரிலிருந்து திடீரென வந்த இந்த தச்சனின் மகன் மோசேயின் சட்டத்தை மாற்றி எழுதுகிறாரே என்று கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம் கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.
அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் இயேசு தன நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான் வரவில்லை. அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக, ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில் உள்ள அதன் ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய சட்டங்களை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார். ஒரே ஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதை நாம் உணர முயல்வோம். காணிக்கை பற்றிய மோசேயின் சட்டங்களை இயேசு எவ்விதம் எண்ணிப்பார்க்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
மோசேயின் காணிக்கைச்சட்டங்கள் கோவிலுக்குக் கொண்டுவரப்படும் காணிக்கைகளைப் பற்றியே அதிகம் பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக் குட்டிகள், புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்க வேண்டும் என்பவைகளே மோசேயின் சட்டங்களாய் இருந்தன. இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறத்தில் உன் கைகளில் ஏந்தி வரும் காணிக்கைகள் ஒரு புறம் இருக்கட்டும். காணிக்கை செலுத்த வந்த உன் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார்.
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)
காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு மனதில் நெருடல் எழுகிறது. தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... நம் சகோதரர் சகோதரிகள் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதை உணர்ந்த உடனேயே, நமது காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன் நல்லுறவை உருவாக்க நாம் செல்ல வேண்டும். காணிக்கைகள் காத்திருக்கலாம் என்று சொல்கிறார்.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில், நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால்... என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் இப்படி இருந்திருக்கும். நீ மனத்தாங்கல் கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க வேண்டாம். முதலில் நல்லுறவைப் பற்றி சிந்தித்து, செயல்படு. பின்னர் உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.
காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும் உண்மையில் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் நம் திருப்பலி நேரங்களில் விழைந்தால், நமது இன்றைய ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில் மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம். நமது காணிக்கையைச் செலுத்தும் முன், பிறருடன் ஒப்புரவு பெற வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில், அதற்கடுத்த நிலையையாவது நாம் தேட வேண்டும்... அதாவது, நமது மனத்தாங்கலைத் தீர்க்கும் ஓர் ஆவலை நாம் பெறுவதற்கு, ஒரு நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு இறைவன் இன்று நமக்கு அருள் தர வேண்டும் என்று செபிப்போம்.
காணிக்கைச் சட்டங்களைப் போலவே, இன்றைய நற்செய்தி முழுவதும் இயேசு எடுத்துக்காட்டும் மோசேயின், இஸ்ரயேலின் பல சட்டங்களும் வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள் நமது அந்தரங்கத்தை, உள்புறத்தைச் சார்ந்தவை.
தொடர்ந்து மூன்றாம் வாரமாய் இயேசு தன் மலைப்பொழிவின் மூலம் சவால்களை நம்முன் வைக்கிறார். இப்படியும் வாழ முடியுமா என்ற கேள்வியை, பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை. இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவைகளுக்காக நம் மனதில் எழும் கேள்விகள், பிரமிப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நம்மைப் புனிதத்திற்கு அழைத்துச் செல்லும் படிகற்கள்.

11 February, 2011
Overflowing Cup… நிரம்பி வழியும் கிண்ணம்
It’s dinner time, dear friends. What better time to think of dinners than the Season of Christmas and New Year! Today we begin our reflections on the fifth verse of Psalm 23: “You prepare a table before me in the presence of my enemies…” Sitting at table prepared by the Lord is a consoling thought for a new year.
These were the opening lines of my reflection at the beginning of this year (Jan.5, 2011) when we did Psalm 23 – Part 28. Now it is Part 33 and we are in the last line of the fifth verse, namely: “My cup overflows.” Overflowing cup is a lovely symbol in most religions and most cultures. Coming from Tamilnadu, I can easily imagine the bubbling pot of Pongal and the milk boiling over the vessel during housewarming ceremonies. I can also think of ‘Amudha Surabi,’ the vessel that was always filled with food. As a Christian, I am also reminded of at least two biblical events spontaneously – the miraculous oil that filled all the jars in the house of the widow who came seeking the help of Prophet Elisha (II Kings 4: 1-7) as well as the stone jars in the wedding of Cana that were filled to the brim with water, which was miraculously turned into wine. (John 2: 1-11)
Overflowing cup is a symbol of abundance, fulfilment and, above all, gratitude. Gratitude is one of the noblest of all human emotions. Every religion, every culture talks of gratitude. Gratitude is more than remembering to mumble ‘Thank you’ when someone has done you an act of kindness. It is more than an obligation, a ritual of politeness. Gratitude is a way of looking at the world that does not change the facts of your life but has the power to make your life more enjoyable. (Harold Kushner)
If we can think of Gratitude as a coin, then we can see that it has two sides – Giving and Taking or Giving and Receiving. We give thanks to the person who gives us a gift. A Benedictine monk by the name of David Steindl-Rast has written a lovely book entitled Gratefulness, the Heart of Prayer. At one point, he alerts us to the way in which our language betrays us by making us think that life is mostly about taking. We take a trip, we take a vacation, we take a drive, we take an exam, we take a drink, ‘and finally when I am worn out by all that taking, I take a nap.’ But Steindl-Rast points out that we can’t take those things without at the same time giving – giving our time, giving our attention, giving our thanks. ‘I will hardly fall asleep until I give myself to the nap and let the nap take me.’ We don’t really take a vacation so much as we give ourselves over to the airplane, the hotel, the exotic locale we are visiting. (Harold Kushner)
A sincere, grateful heart sees our whole life as a gift. God gave you a gift of 86,400 seconds today. Have you used one to say "thank you?" ~William A. Ward. If we can set aside a few of these God-given seconds daily to thank God for all that we have received, we can surely feel our hearts enlarged. If we can do this daily just before going to bed, we can be assured of peaceful rest. We can take this rest by giving ourselves thankfully in God’s hands. We don’t need to wait for great things to happen, before we can say a ‘thank you’. Even very ordinary things need to fill us with gratefulness. Just a silly question… When was the last time, if at all, did you say thanks to the big toes in your feet? When was the last time you thanked God for the grass lawn that you trampled on? Chances are we have never done this.
The second chapter of the book ‘Gratefulness, the Heart of Prayer’ is titled: Surprise and Gratefulness. Here is an extended quote from this chapter:
Surprising sometimes means unpredictable, but it often means more. Surprising in the full sense somehow means gratuitous. Even the unpredictable turns into surprise the moment we stop taking it for granted… Our eyes are opened to that surprise character of the world around us the moment we wake up from taking things for granted.
A close brush with death can trigger that surprise. For me that came early in life. Growing up in Nazi-occupied Austria, I knew air raids from daily experience. And an air raid can be an eye-opener. One time, I remember, the bombs started falling as soon as the warning sirens went off. I was on the street. Unable to find an air raid shelter quickly, I rushed into a church only a few steps away. To shield myself from shattered glass and falling debris, I crawled under a pew and hid my face in my hands. But as bombs exploded outside and the ground shook under me, I felt sure that the vaulted ceiling would cave in any moment and bury me alive. Well, my time had not yet come. A steady tone of the siren announced that the danger was over. And, there I was, stretching my back, dusting off my clothes and stepping out into a glorious May morning. I was alive. Surprise! The buildings I had seen less than an hour ago were now smoking mounds of rubble. But that there was anything at all struck me as an overwhelming surprise. My eyes fell on a few square feet of lawn in the midst of all this destruction. It was as if a friend had offered me an emerald in the hollow of his hand. Never before or after have I seen grass so surprisingly green.
Surprise is no more than a beginning of that fullness we call gratefulness. But a beginning it is.
(David Steindl-Rast)
Let me close with one more passage that I had received via email long time back. Whenever I think of the theme of being thankful, this passage easily comes to mind.
If you woke up this morning with more health than illness... you are more blessed than the million who will not survive this week.
If you have never experienced the danger of battle, the loneliness of imprisonment, the agony of torture, or the pangs of starvation... you are ahead of 500 million people in the world.
If you can attend a religious meeting without fear of harassment, arrest, torture, or death... you are more blessed than three billion people in the world.
If you have food in the refrigerator, clothes on your back, a roof overhead and a place to sleep... you are richer than 75% of this world.
If you have money in the bank, in your wallet, and spare change in a dish someplace...you are among the top 8% of the world's wealthy.
If you hold up your head with a smile on your face and are truly thankful... you are blessed because the majority can, but most do not.
If you can hold someone's hand, hug them or even touch them on the shoulder... you are blessed because you can offer God's healing touch.
If you prayed yesterday and today...you are in the minority because you believe God does hear and answer prayers.
If you can read this message, you just received a double blessing in that someone was thinking of you, and furthermore, you are more blessed than over two billion people in the world that cannot read at all.
We shall continue to consider the ‘overflowing cup’ next week.
Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.
"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
திருப்பாடல் 23ன் 5ம் திருவசனத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். புத்தாண்டு புலர்ந்துள்ள இந்த வேளையில் நாம் மேற்கொள்ளும் முதல் விவிலியத் தேடலில் இத்திருவசனம் மனதில் இதமான எண்ணங்களை உண்டாக்குகிறது.
இவ்வாண்டின் துவக்கத்தில் (சனவரி 5, 2011) நாம் மேற்கொண்ட முதல் விவிலியத் தேடலின் ஆரம்ப வரிகள் இவை. கடந்த ஐந்து வாரங்களாய் திருப்பாடல் 23ன் ஐந்தாம் திருவசனத்தில் நம் தேடலைத் தொடர்ந்துள்ளோம். இன்று இத்திருவசனத்தின் இறுதி வரியில் நமது தேடலை ஆரம்பிக்கிறோம்… "எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
நிரம்பி வழியும் பாத்திரம் அல்லது கிண்ணம் பல மதங்களில், பல கலாச்சாரங்களில் ஆழமான கருத்துக்களைச் சொல்லும் ஓர் அடையாளம். நிரம்பி வழியும் பாத்திரம் என்றதும், பொங்கல் திருநாளில் முழவதும் நிறைந்து, பொங்கி வழியும் பொங்கல் பானை மனதில் தோன்றுகிறது. புதுமனை புகுவிழாவில் பொங்கி வழியும் பால் பாத்திரம் மனதில் தோன்றுகிறது. அள்ள, அள்ள குறையாத அமுதசுரபியும் நிரம்பி வழியும் ஒரு பாத்திரம் தானே. விவிலியத்தில் அரசர்கள் இரண்டாம் நூல் 4ம் பிரிவில் (2 அரசர்கள் 4: 1-7) இறைவாக்கினர் எலிசாவின் ஆசீரால் ஏழை கைம்பெண்ணின் வீட்டில் இருந்த அனைத்து பாத்திரங்களிலும் எண்ணெய் நிறைந்த சம்பவம் மனதில் எழுகிறது. யோவான் நற்செய்தி இரண்டாம் பிரிவில் (யோவான் 2: 1-11) வரும் கானாவூர் திருமணத்தில் விளிம்பு வரை நிரப்பப்பட்ட தொட்டிகளில் இருந்த நீர் இனிய திராட்சை இரசமாக மாறியது நினைவுக்கு வருகிறது.
நிரம்பி வழியும் பாத்திரம் அல்லது கிண்ணம் என்ற அடையாளத்தின் பின்னணியில் அதிகம் போதிந்திருப்பன... ஆசீர்வாதங்கள், மனநிறைவு, நன்றி ஆகிய உயர்ந்த எண்ணங்கள். மனித உணர்வுகளில் மிக உயர்ந்ததோர் இடத்தில் இருப்பது நன்றி உணர்வு. எனவே உலகின் எல்லா மதங்களிலும் இந்த உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், மதங்களின் உயிர்நாடிகளில் ஒன்று நன்றி.
உண்மையான நன்றி ஒப்புக்காக, சடங்காக சொல்லப்படும் வெறும் வாய் வார்த்தை அல்ல. இது ஒரு மனநிலை. நாம் உலகைப் பார்க்கும் பார்வை எப்படிப்பட்டதென்று சொல்லும் ஒரு மன நிலை இந்த நன்றி உணர்வு.
நன்றியை இரு பக்கங்கள் கொண்ட ஒரு நாணயமாக சிந்திக்கலாம். அந்நாணயத்தின் இரு பக்கங்கள் - பெறுவதும் தருவதும் அல்லது, எடுப்பதும். கொடுப்பதும்... இவ்விரண்டும் பிரிக்க முடியாதவை. நன்மையொன்றைப் பெறுகிறோம். நன்றியைத் தருகிறோம்.
"நன்றி நிறைந்திருப்பது, செபத்தின் மையம்" (Gratefulness, the Heart of Prayer) என்பது Benedictine சபையைச் சார்ந்த சகோதரர் David Steindl-Rast என்பவர் எழுதிய ஒரு நூல். இந்நூலில் சொல்லப்பட்டுள்ள ஓர் அழகான கருத்து இது...
நாம் மேற்கொள்ளும் பல செயல்களுக்கு ஆங்கிலத்தில் 'take' அதாவது எடுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். We take a trip, we take a vacation, we take an exam, we take medicines… தமிழிலிலும் சில சமயங்களில் நாம் விடுமுறை எடுத்தல், ஓய்வெடுத்தல், முயற்சியெடுத்தல் போன்ற 'எடுத்தல்' சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எடுப்பதாக நாம் கூறும் எந்த ஒரு செயலிலும் நாம் கொடுக்கவும் செய்கிறோம். நாம் விடுமுறை எடுக்கிறோம் சரி... ஆனால், அந்த விடுமுறையைச் சரியாக எடுக்க, நமது நேரத்தைக் கொடுத்து, அறிவாற்றலைக் கொடுத்து திட்டமிட்டு, பயணங்கள் மேற்கொள்ளாவிட்டால், விடுமுறையை எடுக்க முடியாது. அதேபோல், நமது நேரத்தைக் கொடுத்தால் தான் ஓய்வை எடுக்க முடியும். முயற்சி எடுப்பதற்கு நமது சக்தியைக் கொடுக்க வேண்டும். எனவே, வாழ்வில் கொடுக்காமல் நம்மால் எதையும் எடுக்க முடியாது. தராமல் எதையும் பெற முடியாது.
வாழ்க்கை முழுவதுமே நாம் பெற்றுள்ள, அல்லது நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு கோடை. “இறைவன் இன்று உனக்கு 86,400 நொடிகள் என்ற கொடைகள் கொடுத்துள்ளார். அவைகளில் ஒரு நொடியையாவது பயன்படுத்தி 'உமக்கு நன்றி' என்று சொன்னாயா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் William A. Ward.
அன்புள்ளங்களே, இன்று நேரம் கிடைத்தால்... இல்லை, இல்லை. இன்று முயற்சியெடுத்து, நேரம் எடுத்து அல்லது சிறிது நேரம் ஒதுக்கி நான் சொல்லவிருப்பதைச் செய்து பாருங்கள். அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். அது உங்கள் அலுவலக அறையாக இருக்கலாம், உங்கள் வீட்டின் ஓர் அறையாக இருக்கலாம். அல்லது வெளிப்புறத்தில் ஒரு பூங்காவாக, அல்லது நீங்கள் பயணம் செய்யும் வாகனமாக இருக்கலாம். இடம் முக்கியமல்ல. அங்கு நீங்கள் உருவாக்கவிருக்கும் மனம், சூழ்நிலை முக்கியம். நீங்கள் தேர்ந்துள்ள இந்த இடத்தில் தனியே அமர்ந்து, உங்களைச் சுற்றியுள்ள பொருட்களை, நபர்களைப் பாருங்கள். ஒவ்வொரு பொருளின் மீது, ஒவ்வொரு நபரின் மீது உங்கள் கண்கள் பதியும்போது, இவைகள், இவர்கள் நமக்குக் கிடைத்த அன்பளிப்புகள், நாம் கேட்காமலேயே நமக்குத் தரப்பட்ட அன்பளிப்புகள் என்பதை உணர்ந்து பாருங்கள். உள்ளம் பெருமளவில் நிறைவு பெறும். ஒவ்வொரு நாளும் இரவில் உறங்கப் போகும் முன் அன்றைய நாள் முழுவதையும் நம் மனக்கண் முன் ஓடவிட்டு, நாம் சந்தித்த நபர்கள், பெற்ற அனுபவங்கள் ஒவ்வொன்றையும் மெதுவாக அசைபோட்டு, அவைகளுக்காக, அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொன்னால், மன நிறைவோடு நாம் உறங்கலாம்.
வாழ்வில் நன்றி சொல்வதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. பெரிதாய், சிறிதாய், மிகச் சிறிதாய் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன பல பரிசுகள். இவைகளில் பலவற்றை நாம் பரிசாக, அன்பளிப்பாகக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு சின்னத்தனமான கேள்வியை கேட்க விழைகிறேன். நமது கால் கட்டை விரலுக்கு அல்லது நமது காலடியில் அவ்வப்போது மிதிபடும் புல்தரைக்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா?
சகோதரர் David Steindl-Rast எழுதிய "நன்றி நிறைந்திருப்பது, செபத்தின் மையம்" என்ற புத்தகத்தில் இரண்டாவது பிரிவின் தலைப்பு "வியப்பும் நன்றி நிறைதலும்" (Surprise and Gratefulness). ஒவ்வொரு முறையும் நம்மை ஏதாவது ஒரு நிகழ்ச்சி வியப்பில் ஆழ்த்தும்போது, நம்மையும் அறியாமல் நன்றி சொல்கிறோம். வியப்பு என்பது மிக பிரமாண்டமாய் வர வேண்டும் என்பதில்லை. சில வேளைகளில் மிகச் சாதாரணமானவை, மிகச் சிறியவை நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்று கூறும் David, அதை விளக்க தன் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். சிறுவனாய் இருந்த போது, சாவை மிக அருகில் பார்த்தவர் David. அவர் வாழ்ந்தது நாத்சி இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்ட Austriaவில். ஒரு நாள் அவர் ஒரு கோவிலுக்கருகே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென குண்டுத் தாக்குதல் ஆரம்பமானது. அவர் கோவிலுக்குள் சென்று பதுங்கினார். கோவிலைச் சுற்றிலும் குண்டுகள் விழுந்தன. கோவிலின் கண்ணாடி சன்னல்கள் தெறித்தன. அரை மணி நேரம் கழிந்து, தாக்குதல் முடிந்ததென அறிவிக்கும் சங்கு ஒலித்தது. சிறுவன் David கோவிலை விட்டு வெளியே வந்தார். அரை மணி நேரத்திற்கு முன் அவர் நடந்து வந்த அந்த தெருவில் இருந்த அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாய், சாம்பலாய் இருந்தன. அந்த அழிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறு புல்தரை பசுமையாய் இருந்தது. ஒரு புல்தரை இவ்வளவு அழகாக இருக்குமா என்பதை சிறுவன் David வியந்து பார்த்ததாகக் கூறியுள்ளார். வாழ்வில் சின்னச் சின்ன கொடைகளையும் கண்டு வியப்படையும் மனதை அன்று தான் கற்றுக் கொண்டதாக David கூறியுள்ளார்.
நம் கால் கட்டைவிரல், நம் காலடியில் இருக்கும் புல்தரை என்று நம்மைச் சுற்றியுள்ளவைகளை நினைத்து வியப்படையாமல், நம்மிடம் இல்லாதவைகளுக்கு ஏங்கி நம் நேரத்தை அதிகம் செலவிடுகிறோமா என்பதைச் சிந்திக்கலாம். எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் நான் வாசித்த ஓர் உவமை போன்ற கதை இது:
நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்தப் பெண் மிக அழகாக இருந்தாள். எனக்கு அந்த அழகு இல்லையே என்று கொஞ்சம் ஏக்கம். அவள் சிரித்தபடியே சுற்றியிருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த இடமே கலகலப்பாய் இருந்தது. அவளது கலகலப்பு என்னிடம் இல்லையே என்று மனம் புழுங்கியது. அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்தாள். அப்போது தான் தெரிந்தது அவளுக்கு இருந்தது ஒரு கால் தான் என்று. குச்சி ஊன்றி என்னைக் கடந்து செல்லும்போது, என்னைப் பார்த்தும் அவள் சிரித்தாள்.
நான் ஒரு விளையாட்டுத் திடலுக்குச் சென்றேன். அங்கு ஓர் அழகான சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவனது நீலக் கண்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கும் அப்படி கண்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கினேன். அவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடாமல் ஓரத்தில் இருந்து விளையாட்டை இரசித்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்று, "நீயும் போய் விளையாட வேண்டியதுதானே!" என்று சொன்னேன். நான் சொன்னது எதுவும் அவனைப் பாதிக்க வில்லை. அவன் விளையாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குக் கேட்கும் திறன் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எப்போதும் நன்றி நிறைந்த மன நிலையில் வாழ வேண்டும் என்பதை உலகளாவிய ஒரு பார்வையுடன், எனக்குச் சொல்லித் தந்த மற்றொரு மின்னஞ்சல் செய்தி இது:
நீங்கள் இன்று காலை ஓரளவு சுகத்துடன் கண் விழித்திருந்தால், பேறு பெற்றவர்கள். இந்த வார இறுதிக்குள் இறக்கவிருக்கும் பத்து லட்சம் மக்களை விட நீங்கள் பேறு பெற்றவர்கள்.
போர் அபாயம், சிறை வாசம், சித்திரவதைகள் ஏதும் இல்லாமல் உங்கள் வாழ்வு செல்கிறதென்றால், நீங்கள் பேறு பெற்றவர்கள். உலகில் ஒவ்வொரு நாளும் 50 கோடி மக்களுக்கு இந்த நிலை இல்லை.
பயமேதுமின்றி உங்களால் ஒரு சமய வழிபாட்டில் கலந்து கொள்ள முடிந்தால், நீங்கள் உலகின் 30 கோடி மக்களை விட பேறு பெற்றவர்கள்.
உடுத்த உடையும், இரவில் உறங்க ஒரு வீடும் உங்களுக்கு இருந்தால், உலகின் 75 விழுக்காட்டு மக்களை விட நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள்.
உங்களால் இந்த மின்னஞ்சலை வாசிக்க முடிந்தால், வாசிக்க விருப்பம் இருந்தும் வாசிக்க முடியாமல் தவிக்கும் 20 கோடி மக்களை விட நீங்கள் எவ்வளவோ மேலான இடத்தில் இருக்கிறீர்கள்.
"எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது." என்று திருப்பாடல் ஆசிரியருடன் நாமும் சேர்ந்து வியப்போடு நன்றியோடு பாடுவோம். நன்றி என்பது ஒரு மன நிலை, நம்மை, நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கும் ஒரு மன நிலை. இந்த மன நிலையை இன்னும் சிறிது ஆழமாய் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

Subscribe to:
Posts (Atom)