27 January, 2013

The present is a PRESENT இன்று... ஓர் இனிய கொடை



We begin this Sunday’s reflection with some ‘politics’. The word ‘politics’ has become unacceptable, especially in religious contexts. This is because politics is identified with party politics played by our politicians. Today’s Gospel from Luke Chapter 4: 16-21 inspired me to think of ‘politics’ in its original, right sense.
We begin with two historical events and two recent events… On January 26, 1950, India celebrated its first Republic Day. This year is the 64th anniversary of this great republic. This day has become more of a show of India’s power – specifically, its military power. As other powers are being more fore-fronted, the real power – the power of people – seems to recede further and further. Indian Republic seems to have become a distant memory and a past history! This is not the plight of India alone.
The second historical event that draws our attention today is the International Holocaust Remembrance Day observed on January 27th every year. This is an international memorial day for the victims of the Holocaust, the genocide that resulted in the annihilation of millions of Jews and other innocent people by the Nazi regime and its collaborators. This day was designated by the United Nations General Assembly, since on January 27, 1945, the prisoners of the largest Nazi death camp, Auschwitz-Birkenau, were liberated by the Soviet troops. The Republic Day of India as well as the International Holocaust Remembrance Day strongly drive home the message that the world stands in need of liberation, STILL!

Jesus proclaimed that he was anointed to proclaim liberation to captives. Luke 4: 16-21 is one of my favourite passages in the Bible. This is popularly known as the Manifesto of Jesus – his inaugural address before he took up his public ministry. Unfortunately, the word ‘manifesto’ has many shady connotations now, since the word has been misused by political parties and candidates. Recently two such ‘manifesto’s were brought to my notice – the speech given by Rahul Gandhi while he assumed a key position in his political party, and the speech given by Barack Obama when he assumed the leadership of the U.S. government for the second term. I have not paid close attention to both these talks due to my prejudicial notions of both these leaders. In general, when political leaders speak, I have hard time trying to turn off my internal speaker which seems to discredit whatever they are saying.
As against such empty rhetoric, it would help us to analyse the manifesto or Jesus given in today’s gospel. It is quite interesting to see that Jesus did not create this manifesto. He simply borrowed it from Isaiah. Real leaders speak to the people from their hearts; they are not interested in being brilliantly original. They are more interested in getting the attention of the people and inspiring them with hope rather than getting their applause. Jesus did this in Nazareth. After quoting extensively from the Prophet Isaiah, Jesus made it his own by the master stroke he gave at the end – the punch line. "Today this Scripture has been fulfilled in your hearing."

Jesus spoke this punch line when all eyes were turned on him. Hence, his words must have gone home. What was so special about these words? The word ‘Today’ was special. Let me explain.
The Israelites living at the time of Jesus were trained to look to the future. Many of their teachers and religious leaders had insisted on the time to come. That was a safer bet than telling them that salvation had already come, since things looked as miserable as before. Jesus changed that perspective. He said TODAY fulfilment had come.
We have surely heard of the famous phrase: Grace of the Present Moment. Jesus lived the present, the here-and-now moment all his life. He tried his best to instil this thought into his people through his words and deeds. In his miracle at Cana (labelled as his first sign), “he told the workers, ‘Now draw some out and take it to the master of the banquet.’” (John 2:8). When Jesus told the workers ‘now’, it was not clear whether water had turned into wine. Still, the workers did it and it was already wine! Perhaps this was Jesus’ way of teaching people to trust the here and now!
When he asked the ten leprosy patients to go and show themselves to the priests, they were not cured yet. As they were going, they were healed. (Luke 17). Similarly, he tells the paralytic to carry his bed and walk immediately. (Matthew 9). The miracle of feeding the people stranded in the desert once again illustrates that Jesus believed in the here and now. When the disciples asked Jesus to send the people away, he asked them how much food they had there and then. (Mark 6:38) He began the miracle with what they had, not with what they would have or could have had.
In the famous prayer taught by Jesus, he asks us to pray: ‘Give us TODAY our daily bread.’

The crowning moment of this ‘here and now’ creed came out when he was hanging on the cross. One of the two men crucified along with Jesus, made an impossible request, namely, to give him a place in the Kingdom. How could someone think of a Kingdom while hanging on a cross? Anyone in that position would have given up on the Kingdom or, at least, postponed such thoughts. If Jesus were a normal political leader, he could have poured out his anger and desperation on the guy who was talking of the Kingdom. Not Jesus. Although he was fighting for every breath on the cross, Jesus still spoke with assurance, “I tell you the truth, TODAY you will be with me in paradise.” (Luke 23:43) What better proof is needed to say that Jesus was a PRESENT, HERE-AND-NOW person. The grace of the present moment was overflowing in him.

Living in the present moment is a real challenge. A quick look at a typical day in our life would prove this point. The moment we wake up, many thoughts crowd our mind… most of them either memories of what happened the previous day, especially the sad ones, or anxieties of the day ahead of us. I am not sure how many of us notice the myriad little miracles that happen around us day after day… like the water that refreshes our mouth and face every morning, the exercises that awaken the body fully. If we are in the habit of doing yoga, or meditation in the morning, I don’t know how many of us are aware of the cool air that enters our nostrils when we breathe in and the hot air that is breathed out.
How many of us eat our meals, not being involved in what we are doing? The result? More visits to the doctor! Being more and more involved in the here and now, cherishing the ‘grace of the present moment’ can help not only our soul but also our body.

If only we are totally involved with the present moment, we can surely avoid many, many mistakes and subsequent regrets. Living in regrets is one sure way to kill TODAY. Jesus told the people in Nazareth that ‘today’s could bring them salvation. Jesus is still giving us the same good news.
Today, if you hear his voice, do not harden your hearts… (Psalm 95: 7-8)

Dear Friends,
If you click on the 'Play' button below, you can listen to the homily in Tamil as broadcast on Vatican Radio.

இரு வரலாற்று நினைவுகள், அண்மைய இரு நிகழ்வுகள் நமது ஞாயிறு சிந்தனைக்கு அடித்தளமாக அமைகின்றன. முதல் வரலாற்று நினைவு... இந்தியக் குடியரசு நாள். 1950ம் ஆண்டு சனவரி 26ம் தேதி இந்தியாவில் முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்டது. இச்சனிக்கிழமை 64வது குடியரசு நாள் கடைபிடிக்கப்பட்டது. முதல் குடியரசு நாள் கொண்டாடப்பட்டது என்றும், 64வது குடியரசு நாள் கடைபிடிக்கப்பட்டது என்றும் சொல்லும்போதே, என் எண்ணங்கள் தெளிவாகியிருக்கும். மக்களை ஓரங்களில் ஒதுக்கிவிட்டு, மந்திரிகளையும், பண மூட்டைகளையும் மையப்படுத்தும் அவலம், மக்களாட்சி என்ற பெயரில் பல நாடுகளிலும் அரங்கேறி வருகின்றது.

நாம் சிந்திக்கும் மற்றொரு வரலாற்று நினைவு நாள் - ஒவ்வோர் ஆண்டும் சனவரி 27ம் தேதி கடைபிடிக்கப்படும் 'அகில உலக தகன நினைவு நாள்' (International Holocaust Remembrance Day). இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்கள், மனித வரலாற்றில் ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளன. இந்த மரண முகாம்களிலேயே மிகப் பெரிய Auschwitz-Birkenau முகாம்களில் இருந்தோரை 1945ம் ஆண்டு சனவரி 27ம் தேதி இரஷ்யப் படையினர் விடுவித்தனர். இந்த நாளின் நினைவாக, சனவரி 27ம் தேதி அகில உலக தகன நினைவு நாள் எனக் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியக் குடியரசு நாளும், அகில உலக தகன நினைவு நாளும் சொல்லும் அடிப்படை செய்தி... உண்மையான மனித விடுதலை அனைவருக்கும் தேவை!

பல வடிவங்களில் தளையுண்டிருக்கும் மனிதர்களுக்கு விடுதலை வழங்கவே தான் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளதாக இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார் இயேசு. தன் பணிவாழ்வின் துவக்கத்தில் அவர் ஆற்றிய முதல் உரை லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது என்று ஆரம்பமாகும் நற்செய்தி வார்த்தைகள் இயேசு தன் பணிவாழ்வைத் துவக்கியபோது அறிவித்த 'கொள்கை விளக்க அறிக்கை' (Manifesto)!
பொதுப்பணியைத் துவக்கும் பலர் முக்கியமான உரைகள் நிகழ்த்துவதைக் காண்கிறோம். அண்மையில் இரு அரசியல் தலைவர்கள் நிகழ்த்திய உரைகளை நாம் கேட்டிருப்போம், வாசித்திருப்போம், விமர்சனமும் செய்திருப்போம். இந்திய அரசியல் கட்சியொன்றின் முக்கிய பொறுப்பை ஏற்ற இராகுல் காந்தியும், இரண்டாம் முறையாக அமெரிக்க அரசுத் தலைவர் பொறுப்பை ஏற்ற பாரக் ஒபாமாவும் ஆற்றிய உரைகள் இவை. மக்களுக்காக உழைப்பதே தங்கள் கனவு என்பதை இவ்விருவரின் உரைகளும் பல வழிகளில் உணர்த்த முயன்றன.
உலகத் தலைவர்களின் உரைகளை கேட்கும்போது, அவர்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுகொள்ள முடியாமல் போராடுகிறோம். இதற்குக் காரணம்... உரையாற்றும் தலைவருக்கும், அவரது கூற்றுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள். இவரை நமக்குத் தெரியாதா? இவர் சொல்வதற்கும், இவரது வாழ்வுக்கும்  தொடர்பில்லையே என்ற எண்ணங்கள் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

தன் பணிவாழ்வின் துவக்கத்தில் இயேசு ஆற்றிய உரையை இன்றைய நற்செய்தி இவ்விதம் கூறுகிறது:
லூக்கா நற்செய்தி 4: 16-21
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்றுஎன்றார்.

இயேசுவின் இந்த அற்புத உரையைப் பல்வேறு கோணங்களில் நாம் சிந்திக்கலாம். இன்றைய நற்செய்தியின் இறுதியில் அவர் சொல்லியிருக்கும் ஒரே ஒரு கூற்றை மட்டும் சிறிது ஆழ்ந்து சிந்திக்க உங்களை அழைக்கிறேன்... நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று
இன்றைய நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல. இயேசு வாழ்ந்த காலத்தில், நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு யூதர்கள் அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், அந்தத் தொழுகைக் கூடத்தில், இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்து விட்டது என்று இயேசு அழுத்தந்திருத்தமாய் கூறினார்.

இயேசு உலகில் வாழ்ந்தபோது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவைகளைச் சிந்தித்தால், அவர் நிகழ்காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு ஒரு விரக்தியுடன் என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம் என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." (லூக்கா 23:43) இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது.  நிகழ் பொழுதின் அருள்என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.

நிகழ் பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது தினசரி நிகழ்வுகளைக் கொஞ்சம் அலசுவோம். காலையில் நாம் எழுந்ததும், முகத்தில் தெளிக்கும் அந்த நீரினால் அங்குள்ள உயிரணுக்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து முகமெல்லாம் இரத்த ஓட்டம் பரவுகிறதே... இதை நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்? காலையில் ஆரம்பித்து, நாம் அனுபவித்து இரசிக்கக்கூடிய ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் இரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக, சாப்பிடும்போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப்போய் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப்போல் சாப்பிடுவது மருத்துவ கண்ணோட்டத்தின்படி நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள்தானே... இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில் பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின்விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், மருந்துக்கும் மருத்துவர் பக்கம் போகத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிகப் பயன் தரும்.

நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் இயேசு வாசித்த ஏசாயாவின் சொற்கள் பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக்கூடியது. அவைகளைப் பற்றி சிந்திக்காமல், இன்று, இப்போது என்று நான் பேசியது இன்றைய நற்செய்திக்குத் தகுந்த விளக்கம் இல்லை என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம். 
உடலளிவிலும், மனதளவிலும் கட்டுண்டு கிடந்த மனித சமுதாயத்தை விடுவிக்கவே தான் வந்ததாக இயேசு கூறிய இந்த வார்த்தைகளுக்கு விளக்கங்கள் தேவையில்லையே! சமுதாய நீதி  பற்றிய கனவுகள் என்றோ எப்போதோ நனவாகும் என்று எண்ணிக்கொண்டிருந்த, வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இன்றே, இப்போதே என்று இயேசு கொடுத்த பாடங்கள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்துவிட்டது என்று அவர்களை நம்பவைக்க இயேசு முயன்றது, அவரது முதல் வெற்றி என நான் நினைக்கிறேன்.

இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால்... அவ்வண்ணமே நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல் படுவோம். தீர்வுகளை அன்றே காண்போம். குறையற்ற சமுதாயம் உறுதியாக உருவாகும். உருவாகும்என்பது எதிர்காலம். சீரியதொரு சமுதாயம் உருவாகிறது; உருவாகிவிட்டது; நல்லவைகள் நடக்கின்றன என்று நம்புகின்றோம்.

20 January, 2013

Up to the Brim… விளிம்பு வரை நிரப்பி...


The Stained Glass Window in Capitol Drive Lutheran ChurchMilwaukee


The month of ‘Thai’ in the Tamil calendar begins with the popular festival Pongal. One of the popular statements about this month is: “Come Thai, avenues will open.” (Thai piranthaal, vazhi pirakkum). Avenues will open… Avenues paved with dreams. The dream of childbirth, graduation, getting employed, getting married, building a house… Human capacity for dreams is endless. Among these dreams, some may turn out to be nightmares too. One such dream that has nightmare written all over is the wedding day. Even if every little detail is given utmost care, things do go wrong on the day of the wedding. Most of the troubles on a wedding day revolve around the food. This is what happened at Cana in Galilee. Although Jesus takes the limelight of this ‘first sign’, we shall spend time reflecting on the side actors – namely, Mary who initiated the miracle and the workers who completed it. I am sure Jesus would not mind sharing the limelight with them!
Here are the opening verses of the gospel passage from John: On the third day there was a wedding at Cana in Galilee, and the mother of Jesus was there. Jesus also was invited to the wedding with his disciples. (John 2:1-2)
The mother of Jesus was there. Was she invited? Not clear; but she was there. This can also be interpreted that she had gone to Cana much ahead of the wedding day, just to help out. She was there taking care of all their needs. This is the beauty of Mary. She goes where there is a need, not waiting for an invitation. Don’t we know how she went in haste to the house of Elizabeth once she learnt that Elizabeth was pregnant? The same readiness to help out must have brought Mary to Cana much ahead of the wedding.

Even on the day of the wedding, she was always on the lookout for anything that was needed. She probably was the first one to notice the shortage of wine. She went to Jesus and made this request: “They have no wine.” What type of a request is this? If Mary had followed this up with something like… “Kindly do something about it”, then the request would be complete. But just to state that they don’t have wine does not make it a request. Right? Wrong. Dear Friends, this was not only a proper request but, as some spiritual writers say, this statement of Mary was a good prayer. A prayer? Yes, a model prayer.
Most of us think of prayer as a list of petitions. Instead, prayer can also be just a silent acknowledgement of what we are. Sitting in the presence of God silently and laying our life bare in God’s presence is a good prayer. Such a prayer does not come easy. This type of prayer requires more trust and hope than the prayer where we submit a list of to-do’s to God.
Mary stated the true situation at the wedding. Nothing more, nothing less. If this was simple enough, then came another simpler statement from Mary. She told the workers standing nearby: “Do whatever he tells you.” Once again, an excellent statement that calls for total abandonment to God. If only we could bare our heart in front of God and do WHATEVER Jesus tells us, life would be a lot simpler and safer.

What Jesus told the workers was, once again, simple… shockingly simple. Here is the main part of the miracle – the first sign of Jesus – at Cana:
John 2: 5-12
His mother said to the servants, "Do whatever he tells you."
Now there were six stone water jars there for the Jewish rites of purification, each holding twenty or thirty gallons. Jesus said to the servants, "Fill the jars with water." And they filled them up to the brim. And he said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine, and did not know where it came from (though the servants who had drawn the water knew), the master of the feast called the bridegroom and said to him, "Everyone serves the good wine first, and when people have drunk freely, then the poor wine. But you have kept the good wine until now." This, the first of his signs, Jesus did at Cana in Galilee, and manifested his glory. And his disciples believed in him.

Mary had given the workers an intriguing direction: “Do whatever he tells you.” The workers were awaiting some directions from Jesus. They had plenty to do. They were quite tensed about the shortage of wine. Although they saw nothing special in this stranger, still they awaited his directions. Though they weren’t impressed with this gentleman, they knew that the lady who directed them to Jesus was very kind and gentle working with them for the past few days. She had solved quite many problems they faced. This young man happened to be her son. So… they awaited his directions.
Jesus looked around. He saw the stone jars nearby. Then came the bolt from the blue: "Fill the jars with water." What? Is he serious? We can well imagine the shock experienced by those workers. To help us understand better what Jesus asked them to do, we can imagine a present day wedding. Imagine a wedding that takes place in a remote village or a small town where houses or reception halls do not have running water. Naturally, large vessels or plastic buckets filled with water would be placed at the entrance to the dining hall for people to wash their hands and feet. In some places they would have cement tubs filled with water. It is unthinkable that any one would drink water from these vessels. Jesus wanted the workers to fill up those vessels.

Was this a joke? There was shortage of wine and this man told them to fill up jars meant for purification. Are we missing something here? What is he trying to prove? Such thoughts were filling up the minds of the workers. Still, they began doing what Jesus told them to do. Something in Jesus’ voice made them follow his directions. They could see that he was quite serious about what he was saying.
Once the jars were filled up, Jesus said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine Wait! When did the water become wine? Usually, when Jesus performed a miracle, either a word was spoken or a gesture was done. In this event, no such mention is made. There is nothing like “Jesus stretched out his hand and blessed the water…” etc. John mentions nothing of this. Then, how come the water turned into wine?

Here is the master stroke from John. Jesus makes two statements: "Fill the jars with water." and "Now draw some out and take it to the master of the feast." Between these two statements, John’s master stroke comes in the form of a sentence. They (the workers) filled them up to the brim. Dear friends, this act of the workers paved the way for the miracle. This act was part of the miracle.
If the workers felt funny or furious with Jesus’ directions, they would have done the job half heartedly. Only half jars would have been filled. But, John says that they FILLED THE JARS UP TO THE BRIM. This means that some change had occurred in their hearts. This change of heart paved the way for the change of water into wine. I am sure, dear friends, that most of us have experienced this in our lives. Whenever we had done something with our whole heart, not only were our hearts filled with peace and joy to the brim, but quite a few other changes did happen.

What followed this change of water into wine also is worth reflecting on. After tasting the superior wine, the master of the banquet was curious to know what had happened. He checked with the bridegroom and he too was ignorant. Once again, as an aside John mentions that the servants knew. I would like to see this as John’s way of saying that those who were important in the wedding feast, including the bridegroom, were not part of the miracle. Only the workers were.
In a wedding feast we use many articles. Not all of them are of equal importance. Just check any wedding album. You can see what I am trying to say. In a wedding album the special chairs and the car used by the couple would figure in most of the pictures. What about the wash tubs, the vessels used for washing our hands etc.? Do they figure in our albums? Hardly. Unfortunately, the same is true about the workers. Although they slog the whole day, they are hardly given their due recognition.

Changing water into wine was surely a miracle. Changing the order of importance was another miracle that took place in Cana. The workers were an integral part of the miracle. The jars used for washing purposes had become the vessels of God’s grace, abundance and miracle. Fringe persons, fringe things had taken the centre-stage while the central figures had vanished from the limelight. The Kingdom of God, as some authors would say, is all about reversals. At Cana in Galilee the Kingdom was inaugurated with a lovely reversal! At the beginning of another new year it would be good to think of the core and fringes of our lives.

Dear Friends,
I have tried something new here, thanks to my friend Steve... If you click on the 'Play' button below, you can listen to the homily in Tamil as broadcast on Vatican Radio.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ள ஓர் நம்பிக்கை. தை பிறந்ததும் பல குடும்பங்களில் திருமண வைபவங்கள் நடைபெறும். திருமணம் என்றாலே, பலவிதமான, பலமான ஏற்பாடுகள் செய்யப்படும். என்னதான் வரிந்து, வரிந்து ஏற்பாடுகள் செய்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறைகள் எழத்தான் செய்யும். கலிலேயாவின் கானாவில் நிகழ்ந்த ஒரு திருமணத்தில் இயேசு கலந்து கொண்டார். அந்தத் திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குறையையும், அந்தக் குறை தீர்க்கப்பட்ட அழகையும் இன்று நாம் சிந்திக்க வந்திருக்கிறோம்.
திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டு நேரங்களில்தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும், பிரச்சனைகள் வெடிக்கும். கானாவில் நடந்த திருமணத்திலும் சாப்பாட்டு விடயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் திருமணங்களில், திராட்சை இரசம் தீர்ந்து போவதென்பது பெரிய மானப்பிரச்சனை.
திருமணங்களில் குறைகள் ஏற்படும்போது, அவைகளைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார். அன்னை மரியா தன் மகனிடம் இந்தக் குறையை எடுத்துரைத்த அழகை யோவான் நற்செய்தி இவ்வாறு கூறுகிறது.
யோவான் 2: 3
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்றார்.
பல இறையியல் வல்லுனர்கள் மரியாவின் இந்தக் கூற்றை அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு எதார்த்தமான கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது என்று ஒரு சிலர் தயங்கலாம். ஆம், இது ஓர் அழகிய செபம்.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களைச் சமர்பிப்பதற்குப் பதில், உள்ளத்தைத் திறந்து, உண்மைகளைச் சொல்வது... இன்னும் அழகான, உயர்வான செபம். இந்த செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை நம்மைவிட அந்த நல்ல தேவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும் என்று எண்ணுவதற்கு நிறைவான நம்பிக்கை வேண்டும்.
இவ்வகைச் செபத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறு கற்பனை உதவும் என்று நம்புகிறேன். பச்சிளம் குழந்தை ஒன்று அழுகிறது. அது வாய் வார்த்தைகளால் தன் தேவைகளைச் சொல்வதில்லை. குழந்தையின் அழுகையை வைத்தே அதன் தேவையைத் தாய் உணர்ந்துகொள்வார். அது பசி அழுகையா, தூக்க அழுகையா, வலியில் எழுந்த அழுகையா என்பதை, குழந்தை வார்த்தைகளால் சொல்லத் தேவையில்லை.
இதோ, மற்றொரு கற்பனை... வீட்டுத்தலைவன் செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டதைப் பார்க்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? தயவுசெய்து செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப்போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள். மரியாவும் இப்படி ஓர் உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார் - "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது." நம்முடைய செபங்கள் இவ்வகையில் அமைந்துள்ளனவா என்பதைச் சிந்திப்பது நல்லது.

கானாவில் நிகழ்ந்த புதுமையில் அன்னை மரியாவின் பங்கு இது. இனி தொடர்வது... திருமண இல்லப் பணியாளர்களின் பங்கு... 'இரசம் தீர்ந்துவிட்டது' என்று இயேசுவிடம் 'சிம்பிளாக'ச் சொன்ன மரியன்னை, பின்னர், பணியாளர்களைப் பார்த்து, இன்னும் 'சிம்பிளாக' "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிவிட்டு அகன்றார். அதன்பின், அந்தத் தாயைப் பற்றி எவ்வித கூற்றும் இல்லை இன்றைய நற்செய்தியில். தன் மகன் புதுமை ஆற்றும்போது, அருகில் நின்று, 'இது என் மகன்' என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து, அங்கு எழும் பிரமிப்பில், மகிழ்வில் தனக்கும் பங்கு உண்டு என்பதை நிலைநாட்டி... அன்னை மரியா இப்படி எதுவும் செய்யவில்லை. நல்லது ஒன்று நிகழும் என்ற நம்பிக்கையில் அவர் அங்கிருந்து அகன்றார். அன்னை மரியாவிடம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் நம் வாழ்நாள் முழுமைக்கும் போதாது.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று அன்னை மரியா சொல்லியதைக் கேட்ட பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்த இளைஞனை அவர்கள் இதுவரைப் பார்த்ததில்லை. அவரைப் பார்த்தால், பிரச்சனையைத் தீர்த்து வைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில் கை, கால் கழுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த ஆறு தொட்டிகளைக் கண்ட இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார்.
இந்தக் காட்சியை நாம் வாழும் காலத்திற்கு ஏற்றதுபோல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்து கொள்வோம். கை, கால் கழுவ குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், பிளாஸ்டிக் வாளிகளில் அல்லது சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் வைத்திருப்போம். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை... அந்தத் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.

இயேசு சொன்னதைக் கேட்ட பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதேநேரம், இயேசு சொன்ன கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எதோ ஒருவகை நம்பிக்கையைத் தந்தது. தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப்போல் இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு நடந்ததைக் கூறும் யோவான் நற்செய்தி இதோ:
யோவான் நற்செய்தி, 2: 5-9
இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?

வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில் அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை. "தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது அவர் கைகளை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஒரு அழகிய வாக்கியத்தை இணைத்துள்ளார். இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்  என்று இயேசு சொன்னதும், அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொறுத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை நீர் நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது.

இயேசு சொல்லியதைக் கேட்டு, குழப்பத்தோடும், கோபத்தோடும் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், தொட்டிகளை அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த உள்ள மாற்றம்தான் தண்ணீரையும் இரசமாக மாற்றியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் பல அற்புதமான மாற்றங்களையும் உருவாக்கும். புத்தாண்டின் துவக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு பாடத்தை நாம் பயில்வது பயனளிக்கும்.
இறுதியாக, இந்நாட்களில் திருமண உறவில் இணையும் மணமக்கள் வாழ்வில் அன்னை மரியாவும், இயேசுவும் பங்கேற்கவும், அந்த அன்னையின் பரிந்துரையால் மணமக்கள் வாழ்வில் இறைவன் அற்புதங்களை ஆற்றவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

13 January, 2013

Immersing and dissolving in Jordan யோர்தானில் கரைந்து...


Baptism of the Lord

What I am going to share now may not be pleasant. But, I need to share this experience of mine. Eighteen years back a Jesuit friend of mine died in a road accident on the New Year Day. He was returning home on his two-wheeler after celebrating the midnight Mass and the morning Mass. He died due to the rash driving of a bus driver. I accompanied another Jesuit to the mortuary of the Government Hospital, Chennai to identify the body. We are sadly aware that the Year-end-New-Year parties have multiplied over the past years and, subsequently, the road accidents too. Therefore, when we arrived at the mortuary, we could see that the mortuary was filled with bodies, literally stacked one over another. It was a heart-rending sight, indeed! We managed to identify our fellow Jesuit among the pile.
My priest friend and I stayed in the mortuary for about ten minutes, but it looked like 10 hours. The memory of seeing my Jesuit friend ‘dumped’ with so many other dead persons, was too much for me. For many days and months that scene was etched strongly in my memory. I must say that the visit to the mortuary on the first day of the year was a moment of ‘enlightenment’ for me. Those lifeless bodies gave me a different perspective on life. This was, in my opinion, another baptism…. Baptism by fire.
I can think of so many who had received such baptism by fire. Saul being blinded on his way to Damascus, the canon ball that shattered the leg of Ignatius of Loyola, Gandhi being thrown out of the train in South Africa, the gutters and slums of Kolkatta for Mother Teresa… These must have been baptism by fire for these great souls. Today we are invited to reflect on the Baptism of Jesus.
Luke 3: 15-16, 21-22

Dear Friends, here is the gist of a cartoon that I saw long back. Two friends are chatting.
First friend: I have just one question to ask God.
Second friend: What is it?
First friend: Why don’t you do something about all the injustice in the world?
Second friend: Good question. Why don’t you ask God?
First friend: I am afraid He would ask me the same question.

Why don’t you do something about all the injustice in the world? Down the centuries millions of people have asked this question to God and will continue to ask. I have thought of asking God this very same question… but, I was afraid. I knew that this question would come back to me like a boomerang.
From a purely human perspective, we can say that Jesus must have grappled with this question too. Although he was leading a peaceful life in Nazareth, he must have been troubled by all that were happening around him. He must have been sad to see how so many of his friends tried to find a solution to these problems by starting or joining some fundamental, even terrorist groups. Was Jesus tempted to follow this way? We can surely add this too as one of his temptations… a quick solution to all the troubles!

Having weighed all the options, Jesus made up his mind. He would simply immerse himself with the people, dissolve himself among the people. Simply being with the people would do a lot of good for himself and the people. He was thinking of the miracle that leaven and yeast could do for the dough. He would later use this imagery to explain what his Kingdom was all about. Again he asked, "What shall I compare the kingdom of God to? It is like yeast that a woman took and mixed into a large amount of flour until it worked all through the dough." (Luke 13:20-21)
Being identified with the people was the core of the mystery of Incarnation. Jesus stood among the people in Jordan to be baptised.

Jesus chose the running waters of Jordan as the launching pad of his mission. Stepping into the running water is a lovely symbol for Jesus’ mission. Running water does give one an unsteady feeling. Is Jesus trying to tell us that his mission will also be surrounded by unsteady aspects? Running water is a symbol of life and growth. Is Jesus trying to tell us that his life will be poured out as running water to help others grow?

Jesus was aware that standing among the people in the Jordan was not an easy decision. To become a leaven and change the whole lot of people was a tough task. What if the flour was not good? No amount of leaven or yeast could change that dough. From what he had seen among his people, he could only sense more of despair and dejection than any sign of hope among them. How would he change such a despondent people? He could see the tunnel all right… but, the light at the end of the tunnel?... Still, Jesus would take up this mission of becoming one among them, since his faith in his Father was immense.

All of us have often heard the popular story of a man slipping and falling down a precipice. On his way down he grabs a plant and hangs on to it for dear life, literally. From such a precarious position his mind turns to God. He calls on God and God answers him. God then asks him a straightforward question: “Do you believe in me?” “Yes” was the man’s response - more a desperate shriek than a solemn affirmation. Then God says, “If you really believe in me, then let go off the plant.”
I vaguely remember a sequel to this story. When God tells him to let go, there is a moment of silence. Then the man shouts at the top of his voice: “Is there a better God out there to save me?”
I wish to take the story further. I can imagine a person with unwavering faith in God hanging on to that plant. God asks him to let go and he does so immediately. The beauty is that when he lets go, he does not fall down the precipice, but begins to float and fly up.

Something similar was happening to Jesus in the river Jordan. He knew that he was in the right place at the right time. His heart was already flying. This happy moment was about to be spoilt by John the Baptist. He seemed to recognise Jesus. He too was longing for some solution to all the woes around him. He saw the solution in the person of Jesus. He wanted to proclaim to the whole world that here was the Christ who would solve all their problems. Jesus had to silence him and receive the Baptism. Becoming a leader by the loud proclamation of John the Baptist was an easy solution for Jesus. But, he preferred the more difficult one… namely, to get dissolved among the people and thus lead them to the Father.
God was thrilled to see the mystery of the Incarnation unfold, once again, so beautifully in Jordan. God was a proud parent. And the voice of this proud parent rang from heaven: “You are my Son, whom I love; with you I am well pleased.”

Dear Friends,
I have tried something new here, thanks to my friend Steve... If you click on the 'play' button below, you can listen to the homily in Tamil as broadcast on Vatican Radio.


18 ஆண்டுகளுக்கு முன் சனவரி 1, புத்தாண்டு தினத்தன்று நடந்த ஒரு சம்பவம், என் மனதில் ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. நானும், மற்றொரு குருவும் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். எங்கள் இயேசு சபையைச் சார்ந்த ஒரு குரு அன்று காலை சாலை விபத்தில் இறந்துவிட்டார். புத்தாண்டு விழாவுக்கான நள்ளிரவு, மற்றும் காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு, தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர் வேறொரு வாகன ஓட்டியின் தவறால் உயிரிழந்தார். அவரது உடலை அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து மீட்டுவரச் சென்றிருந்தோம். அந்தச் சவக்கிடங்கில் நான் அடைந்த அதிர்ச்சியை என்னால் பல மாதங்கள் மறக்க முடியவில்லை. புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கும் அந்த இரவில் நடக்கும் சாலை விபத்துக்களை நாம் அறிவோம். எனவே, அந்தச் சவக்கிடங்கில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதுவும், அச்சடலங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகத் தாறுமாறாகப் போடப்பட்டிருந்தன. அத்தனை சடலங்களின் மத்தியில் எங்கள் குருவை அங்கிருந்த காவல் துறையினரிடம் அடையாளம் காட்டினோம். நானும், என்னுடன் வந்த குருவும் அந்தச் சவக்கிடங்கில் செலவிட்ட நேரம் ஒருவேளை 10 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அது பல மணி நேரங்கள் போல் தெரிந்தது.
அந்தச் சவக்கிடங்கில் ஆரம்பித்து பல நாட்கள், இரவும் பகலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி: வாழ்க்கை இவ்வளவுதானா? அந்த சவக்கிடங்கில், இறந்த உடல்களுக்கு மத்தியில் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு எனக்குக் கிடைத்ததை உணர்ந்தேன். அந்தப் புத்தாண்டு நாள் என் வாழ்வைப் பெருமளவு புரட்டிப்போட்டது என்றே சொல்லவேண்டும். மனித வரலாற்றில் எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப்போட்ட சம்பவங்கள் உள்ளன.

கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர கொலை வெறியோடு தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை தந்த இறைவன், சவுலின் வாழ்வைப் புரட்டிப்போட்டார். பாம்பலோனா கோட்டையில், காலில் பட்ட குண்டு, லயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வைப் புரட்டிப்போட்டது.
தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட மோகன்தாஸ் காந்தியின் அந்தப் பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. அவரை மகாத்மாவாக்கியது. கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. அதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்வும், அந்த அனுபவத்திற்குப் பின் தொடர்ந்த வாழ்வும் வேறுபட்டு நின்றன. புதியதோர் வாழ்வில் அவர்கள் அடியெடுத்து வைத்ததைப் போன்ற உணர்வு அது. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த திருமுழுக்கு என்றே சொல்லவேண்டும். இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப்போட்ட அவரது திருமுழுக்கை நாம் இன்று சிந்திக்கலாம்.

முன்பு ஒரு முறை படித்த சிரிப்புத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர். நான் கடவுளைப் பார்த்தால், ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன் என்று ஒரு நண்பர் ஆரம்பிக்கிறார். என்ன கேள்வி?” என்று அடுத்தவர் கேட்கிறார். கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா?” என்பதே தன் கேள்வி என்று நண்பர் சொல்ல, நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே?” என்று அடுத்தவர் சொல்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், முதல் நண்பர், அதே கேள்வியை கடவுள் என்கிட்டே திருப்பி கேட்டா?” என்று சொல்கிறார். சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைப் பற்றவைக்கும் நெருப்புக் குச்சிகள்.  இல்லையா?

கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா? என்ற இந்தக் கேள்வியைப் பல கோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. ஏன்? எனக்கும் இதே பயம். இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி நான் ஏவிவிட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக என்னைத் தாக்குமோ என்ற பயம்.
மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தானுண்டு, தன் வேலையுண்டு, தன் தாயுண்டு என்று இயேசு வாழ்ந்தபோது, அவரைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும்.
இந்த அநியாயங்களுக்கு விடை தேடி இளையோர் பலர் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அக்குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்தச் சிந்தனைகளின் விடையாக, அவர் எடுத்த முதல் முடிவு... மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு. அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

இயேசு யோர்தானில் மக்களோடு மக்களாய் இறங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க முடியும் என்பதற்கு பல கதைகள் நாம் கேட்டிருக்கிறோம். இதோ நமக்குப் பழக்கப்பட்ட ஒரு கதை.
பாதாளத்தில் தவறி விழுந்து விடும் ஒருவர், ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு கடவுளைப் பார்த்து வேண்டுகிறார். கடவுள் அவரிடம் நீ உண்மையிலேயே என்னை நம்புகிறாயா?” என்று கேட்பதற்கு, ஆம் என்று அம்மனிதன் மரண பயத்தில் அலறுகிறார். கடவுள் அவரிடம், நீ என்னை முழுவதும் நம்புவதாக இருந்தால், நீ பற்றியிருக்கும் அந்த மரத்தின் கிளையை விட்டுவிடுஎன்று சொல்கிறார். நமக்குத் தெரிந்த கதை இது.
இந்தக் கதையின் தொடர்ச்சியாக யாரோ ஒருவர் கூறிய ஒரு கற்பனை இது... பற்றியிருக்கும் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், கொஞ்ச நேரம் அம்மனிதன் சிந்திக்கிறார். பின்னர், இன்னும் உரத்தக் குரலில், "வேறு கடவுள் யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்ற?" என்று அலறுகிறார். கடவுளிடமிருந்து வரும் அழைப்புகள் நம் நம்பிக்கைக்குச் சவால்களாக அமையும்போது, நம்மில் எத்தனைபேர், எத்தனைமுறை மற்ற கடவுள்களைத் தேடியிருக்கிறோம்!
தந்தையின்மீது ஆணித்தரமான நம்பிக்கை கொண்ட இயேசுவைப் போல வாழ்ந்த பலர், அந்தச் சூழலில் என்ன செய்திருப்பார்கள் என்றும் நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், இவர்கள் கிளையை ஆனந்தமாய் விட்டுவிடுவர். இதில் என்ன அற்புதம் என்றால், அந்தக் கிளையை விட்டதும், அவர்கள் அந்த பாதாளத்தில் கீழே விழுவதற்குப் பதில் மேலே பறக்க ஆரம்பித்திருப்பர். இயேசுவுக்கு அப்படி ஓர் அற்புத உணர்வு அந்த யோர்தான் நதியில் ஏற்பட்டது.

தந்தைமீது நம்பிக்கை கொண்டு, தன் பணியைத் துவக்க, இயேசு தன் முதல் அடியை யோர்தான் நதியில் எடுத்துவைத்தார். அவர் எடுத்து வைத்த முதல் அடியையே தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்துவைத்தார்என்பது நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.
உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. ஓடும் நீரில் நிற்பது உறுதியற்ற ஓர் உணர்வைத் தரும். தனது பணிக்காலத்தில் சந்திக்கப்போகும் நிலையற்றச் சூழல்கள் ஓடும் நீரைப் போல் இருக்குமென்று இயேசு சொல்லாமல் சொன்னாரோ? தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் தனக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?
ஓடும் நீரில் மற்றொரு அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழ, வளர வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?

யோர்தான் நதியில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். மக்களோடு மக்களாக கலந்து வந்த இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்தார். இயேசுவைக் கண்டதும், "இதோ மெசியா" என்று உரக்கக் கத்த நினைத்தார் அவர். இயேசு அவரை அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்தப் பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது.
தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும்போது, அவர்களை அரவணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த அரவணைப்பையும், ஆசீரையும் அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்:"என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."
உள்ளப் பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். அன்னையும் தந்தையுமான இறைவன், நம்மை வாரி அணைத்து, உச்சி முகந்து, இந்த அன்பு மொழிகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லட்டும்.


07 January, 2013

Decisions… Decisive Actions திட்டங்கள்... திட்டவட்டமான செயல்கள்


The Wisemen from the East

Last Sunday we celebrated the Feast of the Holy Family. This Sunday we are celebrating God’s extended family. Yes… this is the core message of the Feast of the Epiphany. This Feast tells us one basic truth about God. God is not a private property of any human group. As far as God is concerned, the larger the family, the better… the more the merrier!
This idea must have shocked quite a few orthodox Jews. They were very sure that the one and only true God was theirs, EXCLUSIVELY. God must have laughed at this idea; but in His/Her parental love would have allowed them to hold on to this ‘exclusivism’. God waited for the opportune time. By inviting the wise men from the East to visit the Divine Babe at Bethlehem, God had broken the myth of exclusivity! A true iconoclast, indeed!
God cannot be the exclusive treasure of any human group. This message is still very relevant to us, especially in the light of all the divisions created by various individuals and groups who have used God and religion as a political weapon. God is surely not party to any divisive force! Unifying, reconciling… these are God’s ways. Let us pray on the Feast of the Epiphany that the whole human family may live together as one inclusive, divine family.

Although this feast is mainly about Jesus revealing himself to the whole world (that’s the Epiphany), still, popularly, this feast is about the so called ‘Magi’. Very little is given about these persons (Kings? Wise men? Astrologers?) in the Bible. Only Matthew’s Gospel talks about these persons (Matthew 2: 1-12). Matthew simply mentions ‘wisemen from the East’. There is not even a mention of the number. Tradition has made them not only Kings, but also made them THREE KINGS because in Matthew’s gospel three gifts (gold, frankincense and myrrh) have been mentioned. Keeping this traditional point of view, we can say that today’s gospel talks of FOUR kings – three from the East and one, residing in Jerusalem, Herod.

Fr Ron Rolheisser makes a lovely observation on these four persons.
The wise men follow the star, find the new king, and, upon seeing him, place their gifts at his feet. What happens to them afterwards? We have all kinds of apocryphal stories about their journey back home, but these, while interesting, are not helpful. We do not know what happened to them afterwards and that is exactly the point. Their slipping away into anonymity is a crucial part of their gift. The idea is that they now disappear because they can now disappear. They have placed their gifts at the feet of the young king and can now leave everything safely in his hands. His star has eclipsed theirs. Far from fighting for their former place, they now happily cede it to him. Like old Simeon, they can happily exit the stage singing: Now, Lord, you can dismiss your servants! We can die! We're in safe hands!
And Herod, how much to the contrary! The news that a new king has been born threatens him at his core since he is himself a king. The glory and light that will now shine upon the new king will no longer shine on him. So what is his reaction? Far from laying his resources at the feet of the new king, he sets out to kill him. Moreover, to ensure that his murderers find him, he kills all the male babies in the entire area. An entire book on anthropology might be written about this last line. Fish are not the only species that eats its young! But the real point is the contrast between the wise men and Herod: The former see new life as promise and they bless it; the latter sees new life as threat and he curses it.

We have just begun a new year. Do we see the New Year as a blessing or a threat? Are we willing to surrender to the divine and then joyfully slip away into anonymity? Or, are we going to cling on to our own stardom – whether recognised as such by others or not?

Every New Year opens with promises and resolutions. It is one thing to make resolutions and quite a different thing to put them to practice. Here is a small anecdote to highlight the difference.
The son asked his father, “There are three frogs sitting on the wall of a well. If one of them decides to jump in, how many would be left on the wall?” The father felt that this was too simple. “Oh, there would be two” he answered. The son said, “Wrong, dad. All the three would be sitting on the wall, since one of them only decided to jump and did not do it.”

When the wisemen decided to follow the star, they must have faced quite many questions and ridicules. But, they did not give up. Their journey must have been torturous. Following a star is possible only at night. Stars are not visible during the day. This means that these wise men must have done most of their journey in the night – not an easy option given their mode of transport etc. It must have been very difficult to gaze upon one little star among the hundreds on a clear sky. What if the sky was not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their journey must have taken nights, many nights. Relentlessly they pursued their decision to follow the star. This alone is reason enough to celebrate!

The term ‘star’ is used to indicate someone or something special. Unfortunately, the commercial world uses this term very generously… It creates too many stars – mega stars, super stars – mainly from the entertainment world and the sports field! It is also unfortunate that lots of people ‘follow these stars’ and reach nowhere. The less is said about this, the better.
For us living in the 21st century, real stars in the sky are rare to see. With our city lights blinding our eyes, and the smog constantly spreading a blanket over our heads, it is hard to see clear skies and stars. To see the stars, we must get out of our cities… and there seems to be no time for that. We have no time to look up. We are dazzled and even blinded by too many artificial stars and hence real stars have receded from our view. We hardly look up.

A parting thought on ‘following a star’ is this: When we begin to follow a star, let us look for real, inspiring stars even if this means lots of challenges and lots of hardships.
“This is my quest
To follow that star
No matter how hopeless
No matter how far”
"The Impossible Dream"
from MAN OF LA MANCHA (1972) written by Joe Darion

மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேட்டான். இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும் என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?” என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், “, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும் என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல் புன்னகை பூத்தார்.
அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள்என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு, விளக்கத் தொடங்கினான்: மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள் தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும்.
தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம்.
மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத் தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்...  மூன்று ஞானிகளுக்கோ அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும் உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர் ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு தருணம். இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய் இருக்கிறது.

வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல் அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம்.
இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும் (யோவான் 3:30) இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே.  இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான்.
இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான். காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய “The Other Wise Man” மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.
அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.
அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.
பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார். சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார்.
அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.