30 June, 2013

Leaders and Mis-leaders தலைவன், தொண்டன், உயிர்பலி


Discipleship
http://srflorence.wordpress.com

Three years back, during the summer, one of my friends told me this sad episode. A new Tamil movie was released the previous week featuring a popular actor. Usually films are released on Fridays, right? On Thursday night one of the youngsters, who was a die-hard fan of this actor, spent the whole night pasting posters for the movie throughout the town. Early next morning, this young man was standing in the long queue for the first-day-first-show ticket, almost for three to four hours, unmindful of the scorching heat of May. No sleep, no food… He got his ticket and then reality set in. He felt hungry and drowsy. He did not want to miss the first show. So, he decided to get some tea just across the road. As he was crossing the road, he fainted and a speeding lorry ran over him. He died on the spot. Sad… really sad…
Did this really happen? Not very sure. But, dear friends, all of us know that similar incidents CAN HAPPEN and HAVE HAPPENED quite many times in India. Only in India? Again, not so sure. We in India display our hero worship in a way unparalleled in the rest of the world. We know the amount of frenzy that can set in when a movie star or a cricket star appears in public. Sometimes, such frenzy turns into madness and violence can result. How many lives have been lost due to this madness / violence! More so in the area of politics. There have been immolations and murders committed for political leaders.
Why are we talking of all these now? The Gospel today (Luke 9: 51-62) talks about Jesus, the leader and his followers.

This Gospel passage talks of four incidents. All the four can teach us lessons for life. The first one is about the disciples – James and John. Jesus, on his way to Jerusalem, was not received well in a town. James and John were seething with rage. They wished to bring down fire from heaven to destroy the town. A fitting lesson to those people who should have known better. For James and John, the sons of thunder, hurling thunder and lightning, fire and brimstone, from heaven must have been child’s play! Moreover, they were the ones who wanted to be seated at the right and left of the Lord. (Mt. 20: 20-21)
I am just wondering what our political leaders would have done in a situation like this. Here are two very energetic, enthusiastic followers who are willing to go the full distance – destroying a town for not giving due respect to their leader. Our leaders would have been thrilled to have such sycophants and, in all probability, given them some important portfolios in the ministerial cabinet. Thank God, Jesus is not like them. He turned to his disciples and rebuked them. He was probably very indignant at them, since they wanted to use heavenly powers for destruction.
How easy it is to use power for destruction! It is painful that our political leaders seem to judge loyalty in terms of how much destruction can be wrought by the followers. Not only that… When they don’t wreak havoc, they seem to capitalise on havocs created from natural calamities. In the recent floods that have destroyed Uttarakhand, our leaders have been playing politics without any shame. Here are some of the headlines that caught my attention:
Uttarakhand floods: Politics over people's pain takes centre stage (Headlines Today, June 24)
No politics should be done over Uttarakhand floods: Akhilesh Yadav (Economic Times, June 25)
Uttarakhand floods: Samajwadi Party accuses Congress of playing politics (Yahoo news, June 27)

The second incident is about a person who wanted to follow Jesus wherever he went. As was his wont, Jesus must have turned around and looked at this person with deep love and concern. The word ‘wherever’ must have grabbed the attention of Jesus. Where was Jesus going? To Jerusalem. As the opening lines of today’s Gospel says, he was determined to go to Jerusalem, probably knowing what was awaiting him there. He was going for a head-on collision with political and religious authorities. At that moment, should he take another disciple along? That was his concern.
Inadvertently, my mind goes to the present day political leaders who would be more concerned in taking along more followers especially during a clash. In the ego clashes that occur between big leaders, the followers get hurt and killed. As an Indian, I feel ashamed of having such power mongers. I am more ashamed of the followers who have such blind loyalty to these leaders.
Jesus tries to tell this person what would be awaiting him if he were to follow him ‘wherever he goes’. There is really nowhere… “Foxes have holes, and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.” (Luke 9:58) This statement from Jesus is more of an invitation to share his vagabond life. How many of us really believe that all human beings are only PILGRIMS on earth?

The third and fourth incidents are similar. Two persons want to fulfil their family duties BEFORE following Jesus. At first glance, the response of Jesus seems rather rude. “Don’t bother about burying your parents or saying goodbye to the family members… Just plunge into action. Follow me HERE and NOW. No delays.
The reference of Jesus to the man with a plough, reminds me of the first reading today – taken from the First Book of the Kings 19: 19-21. The incident narrated in this passage is quite dramatic:
Elijah went from there and found Elisha son of Shaphat. He was ploughing with twelve yoke of oxen, and he himself was driving the twelfth pair. Elijah went up to him and threw his cloak around him. Elisha then left his oxen and ran after Elijah. "Let me kiss my father and mother good-by," he said, "and then I will come with you." "Go back," Elijah replied. "What have I done to you?"
So Elisha left him and went back. He took his yoke of oxen and slaughtered them. He burned the ploughing equipment to cook the meat and gave it to the people, and they ate. Then he set out to follow Elijah and became his attendant.

From this passage it is not clear whether he was allowed to say goodbye to his parents. But, it is quire clear that he said a definitive goodbye to his earlier life. He slaughtered his oxen, burnt his ploughing equipment… In 1519, Capitan Hernando Cortez  and his followers left Cuba and landed in Mexico. In order to motivate his followers to face all the hardships of Mexico and not think of Cuba again, Captain Cortez burnt the ship in which they reached Mexico. The English expression “burning the boats” may have stemmed from this incident. Elisha burning the ploughshare was a spontaneous, courageous act of a follower. Cortez burning the ship was more of a compulsion imposed on the followers.

Following Jesus, the real leader, requires HERE and NOW decision. If not, we may be submerged in the flood of cares and concerns of this world. We may also begin to drift along with the flood, namely going with the crowd!
Pope Francis, in his Angelus message last Sunday (June 23) made this appeal towards the end. This was directed mostly to the youth present in St Peter’s Basilica:
Dear brothers and sisters, remember this well: Do not be afraid to go against the current! Be courageous! And like this, just as we do not want to eat food that has gone bad, we will not carry with us rotten values, that ruin life and take away our hope. Forward!

We know of the famous saying ‘Justice delayed, is justice denied.’ Similarly, I feel that delaying to act on an inspiration is denying it. Today is a gift and that is why we call it the ‘present’. Let us make use of this gift properly. “If today you hear his voice, harden not your hearts…” (Ps.95: 7-8)

3 ஆண்டுகளுக்கு முன், என் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட வேதனையான நிகழ்ச்சி இது. தமிழில் ஒரு புதுத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தின நாள், அந்தத் திரைப்படத்திற்கானச் சுவரொட்டிகளை இரவு முழுவதும் ஒட்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அடுத்த நாள், அந்த ஹீரோவின் படத்தை முதல் காட்சியில் பார்க்கும் ஆர்வத்தில் (வெறியில்??) கோடை வெயிலில், பல மணி நேரம் வரிசையில் நின்று, டிக்கட் வாங்கிவிட்டார். முதல் காட்சிக்கு டிக்கட் பெறும்வரையில் அவர் அவராகவே இல்லாததால், பசி, உறக்கம் என்ற தன் தேவைகள் அனைத்தையும் மறந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு தன் உடல் பசி தெரிந்தது. காட்சி ஆரம்பமாவதற்குள், ஒரு டீயும், பன்னும் சாப்பிடலாம் என்று அவர் அந்தத் திரை அரங்கத்தின் முன் இருந்த கடைக்குச் செல்ல, சாலையைக் கடக்கும்போது, மயக்கத்தில் தடுமாறி, அந்தப் பக்கம் வேகமாக வந்த ஒரு லாரியில் அடிபட்டு... அந்த இடத்திலேயே இறந்தார்.
இரசிகர்கள் என்ற பெயரில், சினிமா நடிகர்களுக்காக, அல்லது விளையாட்டு (கிரிக்கெட், கால் பந்தாட்டம்) வீரர்களுக்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் காணப்படும் ஆர்வம், சில சமயம் வெறியாக மாறும்போது, அங்கு வெடிக்கும் வன்முறைகளில் ஒரு சில உயிர்கள் பறிபோயுள்ளன. இது, பல நாடுகளிலும் காணப்படும் அவலம்.
சினிமா, விளையாட்டு இவற்றால் அழியும் உயிர் பலிகளைவிட, அரசியல் விளையாட்டில் இன்னும் அதிகமாக உயிர்கள் பலியாவதை இந்தியாவில் பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்காகத் தீ குளிப்பது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வது... என்று நடக்கும் உயிர் பலிகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன.

தலைவன், தொண்டன், உயிர்பலி இவைகளைப்பற்றி ஏன் இந்த விவாதம்? இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனையும், அவரைத் தொடரும் சீடர்களையும், தொடர விழையும் ஏனைய இளையோரையும் மையப்படுத்தி அமைந்துள்ளது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு:
இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9: 54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். நினைவிருக்கிறதா? இந்த இருவரும்தான் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள். (மத். 20: 20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தொண்டர்களின் இத்தகைய ஆவேசத்தைக் கண்டு, அதுவும், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் அவர்களது ஆவேசத்தைக்  கண்டு உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய அப்பதவிகளை ஒதுக்கிக்  கொடுத்திருப்பார். இயேசு நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர் உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வித்தியாசமானவர் ஆயிற்றே!
ஆவேசப்பட்ட சீடர்களுக்கு இயேசு தந்த பதில் என்ன? அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். (லூக்கா 9: 55) அவர் கடிந்து கொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர் அந்தச் சீடர்கள். கடவுளின் சக்திகளைத் தவறான நோக்கங்களுக்கு, அதுவும் அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அவர்களது சுயநலத்தை இயேசு அதிகம் கடிந்து கொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம்... இவைகளை அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தன்னலத் தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.
இது மட்டுமல்ல, தாங்கள் அழிவை உருவாக்காமல் இருந்தாலும், பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும் அழிவையும் தங்கள் ஆதாயமாக்கிக் கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். கடந்த இரு வாரங்களாக, உத்தராகண்ட் மாநிலத்தில் பல்லாயிரம் மக்களைப் பாதித்துள்ள வெள்ளம், அரசியல் தலைவர்களால் ஒரு பகடைக் காயாக மாறியுள்ளதைக் கண்டு நம் மனங்கள் இரணமாகின்றன. ஜூன் 24, 25, 27 ஆகிய நாட்களில் ஒரு சில செய்தித்தாள்களில் வெளியான தலைப்புக்கள் இதோ:
உத்தராகண்ட் வெள்ளம்: மக்களின் துயரங்களைவிட, அரசியல் விளையாட்டுக்கள் முதலிடம் பெறுகின்றன (ஜூன் 24)
உத்தராகண்ட் வெள்ளத்தை வைத்து அரசியல் செய்யவேண்டாம் - உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் (ஜூன் 25)
உத்தராகண்ட் வெள்ளம்: காங்கிரஸ் அரசியல் விளையாடுகிறதென்று சமாஜ்வாதி கட்சி புகார் (ஜூன் 27)
பல வழிகளிலும், அழிவை ஆதாயமாக்கும் இந்த அரசியல் தலைவர்களுக்கு இறைமகன் இயேசு நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையில் நாம் உதவிகள் செய்யமுடியும் என்பதைச் சிந்திப்போம்.

இரண்டாவது நிகழ்வு:
இயேசுவைத் தொடர நினைக்கும் ஓர் இளைஞன், "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்று சொல்கிறார். இயேசு அவரை ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான் அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும் இயேசு ஓரளவு உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில், இந்த மோதலில், இன்னும் ஒரு தொண்டரை ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.
மீண்டும் நம்ம ஊர்த் தலைவர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். போராட்டங்களை முன்னின்று நடத்தி, அடிபட்ட தலைவர்கள் ஆயிரத்தில் ஒருவராக, இல்லை, இல்லை... இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பர். பொதுவாக, போராட்டம்,  எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு, ஒதுங்கிக்கொள்வது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் இல்லையே...

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லைஎன்றார். (லூக்கா 9: 58)
பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாது. இவ்விதம் நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.
பிழைக்கத் தெரியாத தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் நினைவுக்கு வருகிறார். இம்மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் மானிக் சர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள் நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சேர்த்திருக்கும் தலைவர்களை கோடிக்கணக்கில் நமக்குத் தெரியும்.
சென்ற ஆண்டு வெளியான ஒரு தகவலின்படி, (Mail Online - 29, September, 2012) அமெரிக்க அரசுத்தலைவரையும், அவரது குடும்பத்தையும் ஓராண்டு பாதுகாக்க, மக்கள் வரிப்பணத்திலிருந்து 140 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும், பிரித்தானிய அரசக் குடும்பத்தைப் பாதுகாக்க 6 கோடி டாலர்கள் செலவாகின்றன என்றும் தெரிய வந்துள்ளது. இத்தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையான பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனரா என்பது பெரும் கேள்விக் குறியே! இத்தகையச் செய்திகளை வாசிக்கும்போது, தலைவர்களின் உண்மையான பாதுகாப்பு எதில் அடங்கியுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது!

மூன்றாவது, நான்காவது நிகழ்வுகள்:
இச்சம்பவங்களில் இரு இளையோர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, கணக்குகளை முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் சொல்லும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன.
தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்." என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே." என்று சொல்கிறார்.

இந்த ஞாயிறுத் திருப்பலியில் நாம் வாசிக்கும் முதல் அரசர் நூலில் ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன் தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். எலியா என்ற இறைவாக்கினர் வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்து கொண்டார். "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்." என்று கேட்கும் எலிசாவுக்கு, அந்த அனுமதியை எலியா கொடுத்தாரா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் வியப்பைத் தருகிறது.
அரசர்கள் முதல் நூல் 19: 21
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை ஆற்றோடு கொண்டுசெல்ல வாய்ப்புண்டு.
நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, எதிர் நீச்சல் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். ஜூன் 23, கடந்த ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் இளையோரிடம் சிறப்பான ஓர் அழைப்பை விடுத்தார். திருத்தந்தையின் இந்த வார்த்தைகளுடன் இன்றைய ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம்:
"இதை, நன்கு நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமெனச் செல்லும் உலக போக்கிற்கு எதிராக, எதிர் நீச்சல் போட தயங்கவேண்டாம். துணிவு கொள்ளுங்கள்... கெட்டுப்போன உணவை நாம் உண்பது கிடையாது. அதேபோல், கெட்டுப்போன விழுமியங்களை மனதில் சுமந்து வாழவேண்டாம். முன்னேறுங்கள்!"

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.


23 June, 2013

Jesus-Who?... A Personal Invitation இயேசு யார்?... கேள்வி அல்ல, அழைப்பு

Who do you say I am
Recently, the Hollywood movie ‘Man of Steel’ was released in many countries. This is, probably, the 10th attempt to bring ‘Superman’ to the screens, starting from 1951. The background information on how this comic character was created gives us a link to our Gospel today (Luke 9: 18-24). 80 years back, in 1933, two high school students - Jerry Siegel and Joe Shuster – created the ‘Superman’ character. The first version of this character was portrayed ‘as a bald telepathic villain bent on world domination’. This attempt did not receive warm welcome. Hence, they changed the ‘Superman’ as a hero using his extraordinary powers to save the world. This ‘Superman’ became an instantaneous success. The rest is history.
We do have quite a few characters – Superman, Spider-man, Batman, Wonder Woman, Power Girl – who have special powers, which others don’t possess. Most of these characters are born like other human beings, but achieve this special stature by realising their potentials step by step. This journey of discovering their extraordinary self, begins with the basic question: ‘Who am I?’.

‘Who am I?’ sounds like a philosophical question. Behind this question lurks diffidence, at times and desire, at other times. Diffidence of not being sure who we really are and, more especially, who we seem to be to others. ‘Know thyself’ was proposed, by Socrates, as the crowning wisdom a human being could achieve. Desire for self-knowledge has made sages spend their entire life on the question: Who am I? The end of such a life-time search was Enlightenment! While sages went to mountain tops to face the question of ‘Who am I?’, most of us face this question in our daily lives, within our families and work situations. This ‘Who am I?’ question is closely linked to ‘Who am I to others – my family, my friends, my colleagues…?’ In other words this question is similar to what we hear from the Gospel today… ‘Who do people say that I am?’ (Luke 9: 18-24)

I have heard that in government circles an exercise is taken up every day. What appears on the TV as evening news and what appear in the morning papers are collected, categorised, prioritized and given to the Prime Minister and the Chief Minister. A special officer is appointed to do this. This is only a hearsay information and you are welcome to take it with more than a pinch of salt. But, I guess such an exercise is in place in any organisation. We are aware of service agencies which provide ‘special information’ to the higher-ups!
This exercise is undertaken to feel the pulse of the people. More often, this exercise is undertaken with some trepidation. I guess the first question that confronts most of the political leaders in the morning will be: what do the people think of me and my government? In other words, who do people say that I am?

Why did Jesus ask these questions? Was he worried about his popularity? Nope! There were other reasons. This is how I interpret this Gospel event. Jesus was interested in helping his disciples share some of the popular trust people had in Him. He also wanted to prepare them for the passion message he was going to share with them. Jesus was probably giving his disciples the bitter pill (predicting his passion) coated with sugar (a profession of faith, a faith shared by common people)!

These questions of Jesus are not addressed to His disciples alone. Down the centuries they have been addressed to all of us. They have perennial value, in season and out of season.
Who do people say that Jesus is?
On quite many occasions, surveys have been undertaken to discover who has influenced the history of humankind. Almost in all of them, Jesus Christ has figured either in the first place or within the first three positions. Such has been his influence.

Who do people say that Jesus is?
People have said and, still, are saying so many things… good and bad, true and false, profession of faith and downright blasphemy! Ocean of opinions… Jesus is an inexhaustible source of inspiration. I am reminded of the famous passage “One Solitary Life”

One Solitary Life
He was born in an obscure village, a child of a peasant woman.
He worked in a carpenter shop until He was thirty,
Then became an itinerant preacher.
He never wrote a book.
He never held an office.
He never did one thing that usually accompanies greatness.
He had no credentials but Himself.
While still a young man, public opinion turned against Him.
His friends ran away.
One denied Him.
He went through the mockery of a trial.
He was nailed to a cross between two thieves.
His executioners gambled for His only piece of property - His coat.
He was laid in a borrowed grave.
Nineteen wide centuries have come and gone.
Today He is the centerpiece of the human race.
All the armies that ever marched,
All the navies that ever sailed,
All the parliaments that ever sat,
And all the kings that ever reigned put together,
have not affected the life of man upon this earth as powerfully as that
One Solitary Life.

Author Unknown / Public Domain

Who do you say that I am?
Hey, wake up… this question is personally addressed to you and me. Who do I say that Jesus is? All the answers I have been memorising since childhood may not be helpful. Neither is Jesus interested in my memorised answers. I am now asked to face this question seriously, personally.
More than a question, it is an invitation – an invitation to be convinced of the person of Jesus so that I can follow Him more closely. Most of us become speechless and, perhaps, embarrassed by such a direct question… such a confrontation… rather, ‘care-frontation’!

Here is a story of a world famous trapeze artist who was performing death defying stunts over a canyon exceedingly deep. In one such stunt, he was taking a wheelbarrow filled with rocks over the rope. He was blindfolded too! When he had completed this particular stunt, one of his ardent fans rushed to him, grabbed his hands and told him that he was surely the best in the world. The artist felt happy about these compliments. Then he asked his fan whether he believed in his capacity to do all these dare-devil stunts. “I believe you are the best, ever!” was his firm, affirmative answer. Then the trapeze artist told him, “Okay then, now I would like to perform the final adventure. I shall take this wheelbarrow once again over the rope. This time you sit in it.” (Story taken from “At Home With God” by Hedwig Lewis, S.J.) I presume that that ardent fan must have disappeared into thin air, when he was given this ‘invitation’!


It is so easy to answer the ‘theoretical’ question: “Who do people say that I am?” But when Jesus turns around and says, “Who do YOU say that I am?” I feel like running away from this ‘care-frontation’. Am I ready to sit in the wheelbarrow and be transported by Jesus over the canyon… the canyon between reason and faith? Hm… yes, perhaps… well, you see… it’s actually like this… No clear answer seems to be forthcoming. Well, dear friends, there is no easy answer to this question. I wish there is an easy answer! “Who do you say that I am?” is a crucial question we can try and answer during this Year of Faith!

Who do you say Jesus is Kurt-Willems
'எஃகு மனிதர்' (Man of Steel) என்ற ஹாலிவுட் திரைப்படம், ஜூன் 14ம் தேதி உலகின் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. நம்மில் பலருக்குத் தெரிந்த 'சுப்பர்மேன்' என்ற 'காமிக்' படத்தொடர் நாயகனை மையப்படுத்திய கதை இது. 1933ம் ஆண்டு, Jerry Siegel, Joe Shuster என்ற இரு பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட காமிக் கதை நாயகன்... சூப்பர்மேன். Krypton என்ற மற்றொரு கோளத்தில் பிறந்து, ஒரு குழந்தையாக மண்ணை வந்தடையும் சூப்பர்மேன்’, ஏனைய மனிதர்களைவிட வேறுபட்ட, உயர்ந்த பல சக்திகள் கொண்டவர். சூப்பர்மேன்கதையிலும், இன்னும் சக்திகள் பெற்ற ஏனைய நாயகர்களின் கதைகளிலும் பொதிந்துள்ள அடிப்படை தத்துவம் என்ன? ஒருவர் தன்னைப்பற்றியத் தெளிவைப் பெற்றால், அவரது சக்திகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தமுடியும் என்பதுதான் அந்தத் தத்துவம். தன்னைப்பற்றியத் தெளிவு பெற 'நான் யார்?' என்ற தேடலில், 'சூப்பர்மேன்' இறங்குகிறார். உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நேரம், அல்லது பல நேரங்களில் சந்திக்க வேண்டிய, சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி: 'நான் யார்?'

"நான் யார்?" என்றத் தேடலின் விடையாக, "உன்னையே நீ அறிவாய்" “Know thyself” என்று கிரேக்கப் பேரறிஞர் சாக்ரடீஸ் கூறிச்சென்றார். தன்னை அறிதலே அனைத்து அறிவுகளிலும் தலைசிறந்தது; ஏனைய அறிவுகள் அனைத்தும் இதன் தொடர்ச்சியாக உருவாகின்றன என்பது சாக்ரடீஸ் கூறிய பெரும் உண்மை. 'நான் யார்?' என்ற இத்தேடல், மலையுச்சிகளில், காடுகளில் ஆழ்நிலை தியானத்தில் மிகச் சிலர் மேற்கொள்ளும் முயற்சி. ஆனால், நம்மில் பலர் இக்கேள்வியை நம் சாதாரண வாழ்வில், நம் குடும்பங்களில், பணியிடங்களில் பலமுறை சந்திக்கிறோம். 'நான் யார்?' என்ற கேள்வியின் பின்புலத்தில் புதைந்திருக்கும் வேறு கேள்விகளும் உண்டு. நான் யாரென்று பிறர் கூறுகின்றனர்? ... மக்கள் மத்தியில் நான் யார்?, என் உறவுகள், நண்பர்கள் மத்தியில் நான் யார்? என்பன அக்கேள்விகள்.

இயேசுவுக்கும் இத்தகையக் கேள்விகள் எழுந்தன. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது.
லூக்கா 9: 18-24

இயேசு தன் சீடர்களுடன் தனித்திருந்த வேளையில், "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?", "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரு கேள்விகளை கேட்டார் என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. இச்சூழல் நம்மை ஒரு கற்பனை காட்சிக்கு அழைத்துச் செல்கிறது.

தலைவர் ஒருவர் நண்பர்களோடு நடந்து கொண்டிருக்கிறார். திடீரென, தலைவர், நண்பர்கள் பக்கம் திரும்பி, "மக்கள் என்னப்பத்தி என்ன சொல்றாங்க?" என்று கேட்கிறார். நண்பர்கள் சில நிமிடங்கள் திகைத்து நிற்கின்றனர். அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் பலவாறாக இருக்கும். அந்தத் தலைவர் மக்களுக்கு நல்லது செய்யும் தலைவராக இருந்தால், துவக்கத்தில் ஏற்படும் தயக்கத்திற்குப் பிறகு, பல உண்மையான பதில்கள் வெளிவரும். ஆனால் அந்தத் தலைவர் ஒரு தாதாவாகவோ அல்லது ஒரு அரசியல்வாதியாகவோ இருந்தால்... இக்கேள்விக்கு உண்மையான பதில் சொல்ல முடியாமல், அவருடைய நண்பர்கள் தடுமாறிப் போவார்கள்.
மக்கள் தங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகம். உண்மைக்குச் செவிக்கொடுத்து, மனசாட்சியின்படி நடந்துகொள்பவர்களாக அவர்கள் இருந்தால், மக்களின் கருத்துக்கள் அவர்களை மாற்றவேண்டும். ஆனால், இத்தலைவர்களைச் சுற்றியுள்ள 'ஜால்ராக்கள்' அவர்களிடம் உண்மையைச் சொல்வார்களா, அப்படியேச் சொன்னாலும், அதை அத்தலைவர்கள் ஏற்றுகொள்வார்களா என்பதெல்லாம், பெரும் கேள்விக்குறியே!

நம் கற்பனையைத் தொடர்வோம். இன்னும் சிறிது தூரம் சென்றதும், தலைவர் மீண்டும் திரும்பி, "மக்கள் சொல்றது இருக்கட்டும். நீங்க என்னைப்பத்தி என்ன சொல்றீங்க?" என்று கேட்டால், நண்பர்கள் திகைப்பில் உறைந்து நின்றுவிடுவர். உடன் பதில்கள் வராது... ஏனெனில், இக்கேள்விக்கு ஆழ்மனதிலிருந்து பதில் வரவேண்டும். அந்நேரத்தில் யாராவது ஒருவர், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலைச் சொல்ல ஆரம்பித்தால், மற்றவர்களும் தங்கள் மனதில்பட்டதைச் சொல்ல, அங்கு ஒரு நல்ல கருத்து பரிமாற்றம் நடைபெறும்.
இந்தப் பரிமாற்றம் உண்மைப் பரிமாற்றமாக இருக்க, தலைவர் உண்மைத் தலைவராக இருக்கவேண்டும். தலைவர், தவறான வழி செல்பவராக இருந்தால், இந்தப் பரிமாற்றத்தில் வெளியாவதேல்லாம் தலைவருக்குச் சாமரம் வீசும்  வார்த்தைகளாகவே இருக்கும். இது, தலைவருக்கும் தெரியும், சுற்றியுள்ள 'ஜால்ராக்களு'க்கும் தெரியும்.

நமது நற்செய்திக்கு வருவோம். இயேசு இந்த நற்செய்தியில் கேட்கும் இரு முக்கியமான கேள்விகள்: மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? நீங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
என்னென்னவோ சொல்லி விட்டார்கள்... நல்லதும், பொல்லாததும்... உண்மையும், பொய்யும்... விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும்... அளவுகளின்றி சொல்லி விட்டார்கள். இவ்வளவு சொன்னாலும், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இயேசுவைப்பற்றி. இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம்.
உலகின் செம்மறி அவர்... செம்மறிகளை வழிநடத்தும் ஆயன் அவர்...
குற்றப்பழி சுமந்த குற்றவாளி... குற்றங்களைச் சீர்தூக்கி, நீதி வழங்கும் நீதிபதி...
தாகம் தீர்க்கும் வாழ்வு நீர்... தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் சிலுவையில் தவித்தவர்...
மக்களின் பசிபோக்கும் வானக உணவு... தன் பசிபோக்க புதுமை செய்ய  மறுத்தவர்...
மனித குலத்தை மீட்பவர்... தன்னையே மீட்க முடியாமல் சிலுவையில் இறந்தவர்...
இத்தகையக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, இயேசுவை ஓர் இலக்கணத்தில் அடக்க முயல்வது வீண் முயற்சி என்பது நமக்குத் தெளிவாகிறது.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"
அன்று இயேசு தன் சீடர்களிடம் தொடுத்த இந்தக் கேள்வியை, இன்று நம்மிடமும் தொடுக்கிறார். சிறு வயது முதல் அம்மா, அப்பா, குருக்கள், அருள்சகோதரிகள், ஆசிரியர்கள் அனைவரிடமும், புத்தகங்கள் வழியாகவும் நான் பயின்றவைகளைப் பட்டியலிட்டு,  "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற இயேசுவின் முதல் கேள்விக்குப் பதில் ஒப்பித்துவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. அறிவுப்பூர்வமான, மனப்பாடங்கள் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நாம் அனுபவித்து உணர்ந்த நம்பிக்கையே இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தர முடியும்.

முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள் நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். இரண்டாவது கேள்விக்கு நாம் தரும் பதில் நமது வாழ்க்கையை மாற்றும். இந்தச் சவாலைத்தான் இயேசு இன்று நற்செய்தி  வழியாக நமக்குத் தருகிறார். "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு எழுப்பிய நேரடியான கேள்விக்கு, பேதுரு அன்று சொன்னது ஆழமான பதில். ஆனால் பேதுரு வெளியிட்ட விசுவாச அறிக்கைக்குப் பின், அங்கு நடந்தது வியப்பைத் தருகிறது. "இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் இயேசு கண்டிப்பாய்க் கூறினார்" என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். பேதுருவிடம் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரிடமும் இந்த எச்சரிக்கையைத் தரும் இயேசு, தொடர்ந்து தன் பாடுகளைப் பற்றிப் பேசுகிறார். அதுமட்டுமல்ல, அந்தப் பாடுகளில் பங்கேற்க, தன் சீடர்களையும் அழைக்கிறார்.
இயேசு கூறியதை நாம் இவ்வாறு எண்ணிப் பார்க்கலாம்: "என்னைப்பற்றி ஓரளவு புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். நல்லது. இன்னும் என்னை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், என்னைப்போல நீங்களும் துன்பப்பட வேண்டும். என்னையும் என் வார்த்தைகளையும் சரியாக புரிந்துகொண்டால், என் செயல்பாடுகளிலும், என் சிலுவையிலும் உங்களுக்குப் பங்கு உண்டு" என்ற உண்மையை இயேசு தன் சீடர்களுக்கு உணர்த்துகிறார்.

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும்.

நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்தாடிகளைப் பார்த்திருப்போம். இவர்களில் ஒரு சிலர் நடந்து மட்டும் சாகசங்கள் செய்வதில்லை. கயிற்றின் மேல் படுத்தல், சாப்பிடுதல், சைக்கிள் சவாரி செய்தல்... இப்படி அவர்களது சாகசங்கள் பல விதம்...
உலகப் புகழ்பெற்ற ஒரு கழைக்கூத்தாடி பெருநகர் ஒன்றில், இரு அடுக்கு மாடி கட்டிடங்களுக்கிடையே கயிறு கட்டி சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்று நூறு செங்கல்கள் அடுக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது.
அதையும் அற்புதமாக அவர் முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடிவந்து அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை உள்ளதா?" என்று கழைக்கூத்தாடி கேட்டார்.
"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப் பற்றி மற்றவர்கள் என்னிடம் சொன்னபோது, நான் அவைகளை நம்பவில்லை. இப்போது நானே நேரில் அவைகளைக் கண்டுவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை." என்று ஆர்வமாய்ச் சொன்னார்.
"மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி." என்று கேட்டார் கழைக்கூத்தாடி.
"உம்.. சொல்லுங்கள்." என்று இரசிகர் ஆர்வமாய் பதில் சொன்னார்.
"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளு வண்டியோடு நடக்கப் போகிறேன். இந்த முறை, அந்த செங்கல்களுக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார்.
அந்தக் கழைக் கூத்தாடியின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதற்கு ஆர்வமாய் இருந்த அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

விவிலியத்திலும், கோவிலிலும் இயேசுவைச் சந்தித்து, அவரது அருமை பெருமைகளைப் பேசுவதோடு, இயேசுவுடன் நாம் கொள்ளும் தொடர்பு நின்றுவிடுமா? அல்லது, அவர் தரும் அழைப்பை ஏற்று, அவரை நம்பிக்கையோடு தொடர்ந்து, அவர் பணியிலும், பாடுகளிலும் பங்கேற்க நாம் தயாராக இருக்கிறோமா?
"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று இயேசு நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்வது, வெறும் கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. இயேசுவின் இந்த அழைப்புக்கு, மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

16 June, 2013

Mercy and Faith meet (11 C – Ordinary Time) கருணையும் நம்பிக்கையும் சந்திக்கும்


Magdelene anointing Jesus' feet

Last Sunday, we spoke about the Gospel of Luke –the Gospel of Mercy – being the source of our Sunday liturgies for the next 25 weeks… until the end of our Year of Faith! Mercy and Faith!
Mercy can surely help Faith grow! The word ‘mercy’ often gives us the picture of a condescending attitude shown to someone weak and fragile. But the way in which Jesus showed mercy was not to make the persons, receiving this gift, feel smaller, but to make them realise their real worth. Last week such a merciful gift was given to the widow of Nain. Restoring her son to life, Jesus made sure that her life was restored to some dignity.
In today’s Gospel (Luke 7: 36 - 8:3), once again, Jesus extends his mercy to a lady who was branded as a ‘sinner’. His mercy restored the lady to her rightful place in society. In fact the lady was given her due dignity in front of those who thought themselves to be ‘dignified’.

This story of the woman anointing Jesus, appears in all the four Gospels, (Mt.26:6-13; Mk.14:3-9; Lk.7:36-50; Jn.12:1-8) with a variety of differences, but the same root story. We can assume that this incident must have made a deep impression on the disciples of Jesus. Hence, all the four evangelists have recounted this incident. Of all these versions, the Lukan version is more popular. It has brought the woman to the centre of the event.
A Pharisee, by name Simon, invited Jesus for a meal. This itself must have been quite a remarkable event and must have been the talk of the town. The evangelist could have easily elaborated on this remarkable event at length. But, what happened was very different. The dinner, the Pharisee, the invitees… even Jesus receded into the background. Only the lady who barged into the scene, uninvited, stole the limelight. Paradoxically, this lady had only a tag, a label – sinner – and no name. This non-entity became the centre of the event not only on that day, but for generations to come. This is the promise given by Jesus himself in Matthew’s Gospel: “I tell you the truth, wherever this gospel is preached throughout the world, what she has done will also be told, in memory of her.” (Matt. 26:13)

Simon, the Pharisee, was shocked by what he saw. “If this man were a prophet, …”, Simon mused, trying to fit Jesus into his definition of a prophet. Jesus loved being an iconoclast – breaking definitions, traditions… all that fettered the human being. Jesus was least interested in ‘playing the prophet’. He was more interested in being the Saviour of the woman who was at His feet. Here was the woman who, according to many around Jesus, was way too much damaged to be saved!
While Jesus was busy trying to heal the lady and trying the restore her dignity, Simon and the other Pharisees were busy writing their harsh judgement against Jesus. How easy it is for us to take the seat of judgement! How easy it is to judge others from our own narrow and coloured vision!

Here is a poem titled ‘The Cookie Thief’ written by Valerie Cox which is doing quite a few rounds in the emails now and then.
A woman was waiting at an airport one night,
With several long hours before her flight.
She hunted for a book in the airport shops.
Bought a bag of cookies and found a place to drop.

She was engrossed in her book but happened to see,
That the man sitting beside her, as bold as could be.
Grabbed a cookie or two from the bag in between,
Which she tried to ignore to avoid a scene.

So she munched the cookies and watched the clock,
As the gutsy cookie thief diminished her stock.
She was getting more irritated as the minutes ticked by,
Thinking, ‘If I wasn’t so nice, I would blacken his eye.’

With each cookie she took, he took one too,
When only one was left, she wondered what he would do.
With a smile on his face, and a nervous laugh,
He took the last cookie and broke it in half.

He offered her half, as he ate the other,
She snatched it from him and thought… oooh, brother.
This guy has some nerve and he’s also rude,
Why he didn’t even show any gratitude!

She had never known when she had been so galled,
And sighed with relief when her flight was called.
She gathered her belongings and headed to the gate,
Refusing to look back at the thieving ingrate.

She boarded the plane, and sank in her seat,
Then she sought her book, which was almost complete.
As she reached in her baggage, she gasped with surprise,
There was her bag of cookies, in front of her eyes.

If mine are here, she moaned in despair,
The others were his, and he tried to share.
Too late to apologize, she realized with grief,
That she was the rude one, the ingrate, the thief.

Instead of preparing labels for others and sticking them on people around, it would more helpful for our growth if we took stock of ourselves and put our house in order.

One of the lovely ways to put our house in order is to reconcile ourselves with God and with others. Forgiveness is a great gift that we can receive from God and also a gift that we can give to ourselves and to others. Often times, it becomes easier to forgive others than to forgive ourselves. Carrying old hurts becomes a major block towards self-reconciliation and self-integration. Yes, only when we are able to forgive ourselves, we achieve healing and integration within. David Seamands, the Methodist pastor, in his book “Healing of Damaged Emotions” writes about our emotional hurts and compares them with a phenomenon from nature:
"We can explain this by an illustration from nature. If you visit the far West, you will see those beautiful giant sequoia and redwood trees. In most of the parks the naturalists can show you a cross section of a great tree they have cut, and point out that the rings of the tree reveal the developmental history, year by year. Here's a ring that represents a year when there was too much rain. Here's where the tree was struck by lightning. Here are some normal years of growth. This ring shows a forest fire that almost destroyed the tree. Here's another of savage blight and disease. All of this lies embedded in the heart of the tree, representing the autobiography of its growth. And that's the way it is with us. Just a few minutes beneath the protective bark, the concealing, protective mask, are the recorded rings of our lives. There are the scars of ancient, painful hurts...

This healing is a life-long task, but we can begin today… Let us close these reflections with some thoughts on forgiveness:
  • Forgiveness is unconditional or it is not forgiveness at all. Forgiveness has the character of "in spite of," but the righteous ones give it the character of "because." – Tillich
  • ‘Pardon’ contains the word donum or gift. ‘Forgive’ contains the word, ‘give’.
  • Forgiveness is standing up and facing the future without the weight of the past.
  • When we sin, we cut the string – the string that ties each of us to God. Then God ties it up again, making a knot...thereby bringing us a little closer to God.
That is a good imagery.
Here are two more imageries of forgiveness that are close to my heart:
  • When you look towards the Light or walk towards the Light, the burden of our guilt will fall behind you as a shadow. But the moment you turn away from the Light or walk away from the Light, the shadow (guilt) will fill your way.
  • Imagine a tiny waterfall gently falling on the rocks. If you place a vessel, a dirty vessel at that, under the falls, the dirt will be washed away and the vessel will be filled. If, on the other hand, you feel ashamed to expose the dirt inside the vessel and keep the vessel turned upside down, the water will still be falling on the vessel but the vessel cannot be cleaned or filled up. Water cannot force itself in. God’s grace and love are like the gentle waterfall that keeps pouring down. If we can place ourselves open to this outpouring of love not bothered about how clean we are, we will be cleansed. We will be filled!
'கருணையின் நற்செய்தி' என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி, அடுத்த 25 வாரங்களுக்கு, நமது ஞாயிறு வழிபாடுகள் அமையும் என்று சென்ற வாரம் குறிப்பிட்டோம். கருணைக்கு ஓர் எடுத்துக்காட்டாக, நயீன் நகர் கைம்பெண்ணின் மகனுக்கு மீண்டும் உயிரளித்ததால், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட அந்தக் கைம்பெண்ணுக்கும் இயேசு மறுவாழ்வு தந்தார் என்பதைச் சென்ற வாரம் சிந்தித்தோம். சமுதாயத்தால் பழித்துரைக்கப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு இயேசு மறுவாழ்வு தரும் நிகழ்வு இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.
லூக்கா நற்செய்தி 7ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வில், பரிசேயர் ஒருவரது இல்லத்தில் இயேசு விருந்துண்ண சென்றார். ஊர் மக்களால் பழித்துரைக்கப்பட்ட ஒரு பெண், அழைப்பேதும் இன்றி உள்ளே நுழைந்து, இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவினார்.
இயேசுவை அழைத்த அந்தப் பரிசேயருக்கு "சீமோன்" என்று பெயர் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழையாமல் நுழைந்த பெண்ணுக்கோ பெயரேதும் இல்லை. அவர் ஒரு "பாவி" என்ற அடைமொழிமட்டும் அவர்மேல் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பாவி, அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, இன்று நமக்கும் ஒரு நற்செய்தியாக மாறுகிறார். மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும் நம் வாழ்வில் நிகழும் நன்மைகளைச் சிந்திக்க நம்மை அழைக்கிறார்.

அந்தப் பெண்ணைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பலருக்கும் அதிர்ச்சி, கோபம், எரிச்சல்... காரணம்... அவர் ஒரு விலைமகள். தன் உடலை விலைக்கு விற்பவர். அழையாமல் நுழைந்த அந்தப் 'பாவி', பரிசேயர் ஒருவரது பரிசுத்தமான வீட்டையும், அங்கு வந்திருந்த அனைவரையும் தீட்டுப்படுத்திவிட்டார்.
இத்தகைய கண்டனக் கனல் தெறிக்கும் அவர்கள் எண்ணங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், இயேசுவின் பாதங்களைத் தேடிவந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலத்தைப் பூசினார். இதைக் கண்ட பரிசேயர்கள், நீதி இருக்கைகளில்... இல்லை, இல்லை, அநீதி இருக்கைகளில் அமர்ந்து கண்டனத் தீர்ப்புக்களை எழுத ஆரம்பித்தனர். அந்தப் பெண்ணுக்கு அல்ல... அவருக்கு ஏற்கனவே அவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். இப்போது, அவர்கள் தீர்ப்பு, கண்டனம் அனைத்தும் இயேசுவை நோக்கி இருந்தன.
இயேசுவைப் பொருத்தவரை, அந்தப் பரிசேயர்களோ, அவர்கள் தன்மீது சுமத்திக் கொண்டிருந்த தவறான தீர்ப்புக்களோ... எதுவுமே முக்கியமல்ல. அவரைப் பொருத்தவரை, அவரது காலடியில் இருந்த அந்தப் பெண்தான் முக்கியம்.

"இவள் ஒரு பாவிப் பெண்" என்று ஊரெல்லாம் சொன்னபோது... இயேசு அவரை "பாவம், அந்தப் பெண்" என்று சொன்னார். "பாவம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் வழியில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்! 'பாவம்' என்ற சொல்லில் கண்டனம் ஒலிக்கும், கனிவும் ஒலிக்கும். பயன்படுத்துபவரின் மனநிலையை, கண்ணோட்டத்தைப் பொருத்தது அது.
உலகம் இவரைப் "பாவி" என்று முத்திரை குத்தி, குத்தி... இந்தப் பெண் தலை நிமிர முடியாமல், தாழ்த்தப்பட்டிருந்தார். இன்று, முதன் முறையாக, மற்றொரு மனிதர் முன் தன்னையே மனதாரத் தாழ்த்திக்கொண்டார். தன்னையே மனமுவந்து தாழ்த்திக் கொண்ட அந்தப் பெண்ணை இயேசு தூக்கி நிறுத்தினார். அதுவும் தங்களையே உயர்ந்தோர் என்று எண்ணிக்கொண்டிருந்த அந்த பரிசேயர் கூட்டத்திற்கு முன் அந்தப் பெண்ணை உயர்த்தினார்.

இந்நிகழ்வின் வழியாக, இயேசுவும், அந்தப் பெண்ணும் மன்னிப்பு பற்றி சொல்லித்தரும் பாடங்கள் பல. மன்னிப்பின் முதல் படி... தன்னிலை உணர்தல், முக்கியமாக, தன் குறைகளை உணர்தல். நம்முடைய உண்மை நிலையையும், நமது குறைகளையும் உணரத் தயங்கும் நாம், இயேசுவை அழைத்திருந்த பரிசேயரைப் போல, வெகு எளிதாக பிறரிடம் குறைகள் காண்கிறோம்.
அடுத்தவரைத் தீர்ப்பிடும் அவசரம் நமக்குள் எவ்வளவு எளிதாக எழுகிறது என்பதைக் கூறும் ஒரு கவிதை இது. Valerie Cox என்பவர் எழுதிய இக்கவிதை விமான நிலையத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு. கடந்த சில ஆண்டுகள் வலைத்தளத்தில் வலம் வரும் இக்கவிதையின் தலைப்பு : 'பிஸ்கட் திருடர்'. (The Cookie Thief)

விமான நிலையம் ஒன்றில் தன் பயணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண், 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கினார். ஒரு நாற்காலியில் அமர்ந்து, தான் கொண்டுவந்திருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். அருகிலிருந்த நாற்காலியில் மற்றோர் இளைஞர் ஏற்கனவே அமர்ந்து, செய்தித்தாள் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். இளம்பெண் அருகிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த இளைஞரும் அதே பாக்கெட்டிலிருந்து எடுத்து சாப்பிட்டார். தன்னிடம் உத்தரவு கேட்காமலேயே அந்த இளைஞர் அவ்விதம் எடுத்து சாப்பிட்டதால், இளம்பெண்ணுக்கு எரிச்சல் உண்டானது. இருந்தாலும், பொது இடமாயிற்றே என்று கோபத்தை அடக்கிக்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் அந்தப் பெண் பிஸ்கட் எடுக்கும்போதெல்லாம், இளைஞரும் எடுத்துக்கொண்டார். இறுதியில் ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. "சரி, நல்ல பழக்க வழக்கம் ஏதும் தெரியாத இந்த மனிதர் இப்போது என்ன செய்கிறார் பார்ப்போம்!" என்று அந்தப் பெண் காத்திருந்தார். அந்த இளைஞரோ, அந்த பிஸ்கட்டை எடுத்து, அதைப் பாதியாக உடைத்து, ஒரு பாதியை அப்பெண்ணிடம் புன்முறுவலுடன் நீட்டினார். பதிலுக்கு புன்முறுவல் ஏதும் இளம்பெண்ணிடமிருந்து வரவில்லை. "இப்படியும் நன்றிகெட்ட பிஸ்கட் திருடர்கள் இருக்கிறார்களே!' என்று எண்ணியபடியே, அவர் தன் விமானம் நோக்கி விரைந்தார்.
விமானத்தில் அவர் தன் இருக்கையில் அமர்ந்தபின்னும், அவரது கோபம் தணியவில்லை. சிறிதுநேரம் சென்று, விமானம் கிளம்பியதும், தன் பைக்குள் வைத்திருந்த புத்தகத்தை எடுக்க பையைத் திறந்தபோது, அவருக்கு அதிர்ச்சி... அந்தப் பைக்குள், அவர் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பிரிக்காமலேயே இருந்தது.
அப்படியானால்... அந்த இளைஞர் அருகில் அமர்ந்து அவர் சாப்பிட்டதெல்லாம் அந்த இளைஞர் வாங்கி வைத்திருந்த பிஸ்கட்டுகள்... இங்கிதம் தெரியாமல், நன்றியில்லாமல் நடந்துகொண்டது யார்? பிஸ்கட்டைத் திருடியது யார்? என்பதை இளம்பெண் அப்போதாகிலும் உணர்ந்திருக்கவேண்டும்.
அடுத்தவர்களை எளிதில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பரிசேயர்களைப் போல், அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதை விடுத்து, நம்முடைய உண்மை நிலையை உணர, அங்குள்ள குறைகளை உணர தூய ஆவியார் நமக்கு ஒளிதர வேண்டுவோம்.

தன்னிலை உணர்ந்து, தன் குறைகளை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. தன் குறைகளிலிருந்து விடுதலைபெற, மன்னிப்பு பெறவேண்டும். மன்னிப்பு என்றதும், இறைவனிடமிருந்தும், அடுத்தவரிடமிருந்தும் பெறும் மன்னிப்பையே நாம் பெரும்பாலும் எண்ணிப் பார்க்கிறோம். அவற்றைவிட கடினமான ஒரு மன்னிப்பையும் நாம் பெற பழகவேண்டும். அதாவது, நம்மை நாமே மன்னிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
நம்மில் பலர் நமது குற்றங்களை மன்னிக்கமுடியாமல் அவற்றின் வடுக்களை நீண்ட காலம் சுமந்து வருந்துகிறோம். Methodist சபையைச் சேர்ந்த David Seamands என்ற இறை பணியாளர், மனநலம் பெறுவதைப்பற்றி எழுதியுள்ள ஓர் அழகான நூல் - “Healing for Damaged Emotions” அதாவது, 'பழுதாக்கப்பட்ட உணர்வுகளை குணமாக்குதல்'. இந்நூலில், மரங்களையும், மனங்களையும் இணைத்து அவர் கூறும் ஓர் ஒப்புமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது: பல ஆண்டுகள் வாழ்ந்த மரங்களை குறுக்காக வெட்டும்போது, அந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பல வட்டங்கள் இருப்பதைக் காணலாம். அந்த வட்டங்கள் ஒவ்வொன்றும் அந்த மரத்தின் வரலாற்றைச் சொல்லும். அந்த மரம் வளர்ந்தபோது, ஓர் ஆண்டில் வறட்சி இருந்திருந்தால், அதைக் கூறும் ஒரு வளையம், வெள்ளம் வந்திருந்தால், அதைக் கூறும் வளையம், மரத்தை மின்னல் தாக்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டும் வளையம், மரம் வளர்ந்த காட்டுப்பகுதியில் நெருப்பு சூழ்ந்திருந்தால், அதைக் காட்டும் ஒரு வளையம் என்று... அந்த மரம் வளர்ந்தபோது சந்தித்த பல அனுபவங்களை அந்த வளையங்கள், வரலாறாகச் சொல்லும். அதேபோலத்தான் மனித மனமும்... நாம் பெற்ற பல அனுபவங்கள் நமது உள்ளத்தில் பலவகை பதிப்புக்களை விட்டுச் செல்கின்றன. முக்கியமாக, நமது குழந்தைப்பருவ அனுபவங்களில் சில நாம் வாழ்நாள் முழுவதும் தாங்கிச் செல்லும் பதிப்புக்களை உருவாக்குகின்றன.
இப்பதிப்புக்கள், பாதிப்புக்களாக மாறாமல் காப்பது நமது கையில் உள்ளது. இந்தக் காயங்களை நமக்குள் உருவாக்கியவர்களை மன்னிப்பதற்கு நாம் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மன்னிப்பை தரவும் பெறவும் முடியாதவர்கள் வாழ்வு நரக வாழ்வாக மாறிவிடும். மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும் பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும் மன, நோய்கள் நீங்கும். அதன் தொடர்ச்சியாக, உடல் நோய்களும் நீங்கி, நலம் பெருகும்.

மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்... பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை வாழ்வோம்.
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:
  • கடந்த காலம் என்ற சுமையை இறக்கி வைத்துவிட்டு, எதிர்காலத்தைப் பார்க்க எழுந்து நிற்பதே மன்னிப்பு.
  • நாம் பாவங்கள் புரியும்போது என்ன செய்கிறோம்? கடவுளுக்கும், நமக்கும் உள்ள உறவைத் துண்டிக்கிறோம். துண்டிக்கப்பட்டதைச் சரி செய்ய, கடவுள் அந்த உறவுக் கயிற்றில் முடிச்சொன்று போடுகிறார். அறுந்த கயிற்றில் முடிச்சு விழும்போது, அதன் நீளம் குறைகிறது. நாமும், இறைவனும் நெருங்கி வருகிறோம்.
இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.
  • இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால் குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும். அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு விலகி நடந்தால், நம் குற்றங்கள் என்ற நிழல்களே நம்மை வழிநடத்தும்.
  • குழாய் நீரைப்போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும் அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம். அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால், பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும் நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து, வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து வைக்காமல், கவிழ்த்து  வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது. நிறையாது.
இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச்சுற்றி எப்போதும் கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.