22 December, 2013

Dreams Deliver ‘Emmanuel’ ‘கடவுள் நம்மோடு’ - கனவுகள்


Angel appears to Joseph in a dream

Christmas is just around the corner… ‘Around the corner’ is a lovely expression to add excitement and expectation. I am sure thousands are children are spending these last few days and nights dreaming of their Christmas gifts. They are also dreaming of Santa Claus bringing these gifts to them. Of course, some grown ups are trying the kill these dreams of children, calling those dreams dangerously childish. In general, adults look at dreams as childish. Imagine a world without dreams! It would be unimaginable!
This year we celebrated the Golden Jubilee of the famous speech – ‘I have a dream’ – delivered by the great Martin Luther King Junior on August 28, 1963. We must acknowledge that although his dream of equality between races has not been fully realised, it has been realised up to a certain extent by putting a black person in the White House. The dream of Martin Luther found its echo in Nelson Mandela who fought for this equality in South Africa. Last week we spoke of the Indian poet Bharathiyar who dreamt of a Free India – free not only from the British rule but also from the chains of caste and gender discriminations. The world would be a lot poorer if these ‘dreamers’ had not dared to dream the seemingly impossible!

We are talking of dreams today, since today’s Gospel talks of Joseph meeting an angel in his dreams. The New Testament identifies Joseph as ‘the just man’. Joseph is a silent saint. No word of his is recorded in the gospels. Indeed no word was needed, since his whole life was a great Gospel!
Joseph is honoured by the Church as well by popular devotion as the patron and guardian of so many aspects of human life. He is the patron of the Catholic Church, of virgins, of families, of labourers, of immigrants, of holy death and many, many more... (The patronage list given under St Joseph is stunning. Those who wish to see this list, please go to: http://saints.sqpn.com/saint-joseph/ I wish to add one more to this list. I wish to honour St Joseph as the guardian and patron of dreams. It is interesting that both Joseph, the Patriarch as well as Joseph, the Husband of Mary are portrayed as ‘dreamers’. Joseph is mentioned in Matthew’s gospel only on three occasions. In all of them, he is portrayed as being visited by the angel of God in his dreams. One of those instances is given as today’s gospel:
Matthew 1: 18-24
Now the birth of Jesus Christ took place in this way. When his mother Mary had been betrothed to Joseph, before they came together she was found to be with child from the Holy Spirit. And her husband Joseph, being a just man and unwilling to put her to shame, resolved to divorce her quietly. But as he considered these things, behold, an angel of the Lord appeared to him in a dream, saying, "Joseph, son of David, do not fear to take Mary as your wife, for that which is conceived in her is from the Holy Spirit. She will bear a son, and you shall call his name Jesus, for he will save his people from their sins…When Joseph woke from sleep, he did as the angel of the Lord commanded him and took Mary as his wife.
Two other instances where Joseph is mentioned, also speak of the angel visiting him in dreams:
Matthew 2: 13-14 and Matthew 2: 19-21

Analysis of these three passages will give us good reasons to say that Joseph is indeed the guardian and patron of dreams. Joseph must have felt extremely happy to have been betrothed to Mary, probably the most admired young girl in Nazareth. But his joy was short lived. His dreams of having a glorious life with Mary, came crashing down when he learnt that Mary was pregnant. It was his choice to either make this public or solve this problem more quietly. He decided on the latter. He was a gentleman to the core. If Joseph had decided on making this public, he would have been honoured; but Mary would have faced death by stoning.
Three years back, all of us were quite disturbed by the famous (infamous?) news about Sakineh Ashtiani, a 43 year old mother, who was accused of adultery and sentenced to death by stoning by the court in Iran. While this news captured the headlines, there were gory details as to how this sentence would be carried out. The accused lady would be buried up to her neck and then people (are they human beings?) would stand around and throw stones at her head until she died.
Last December the gang rape of a young woman in Delhi sent shock waves around the world. This case is still causing pain to the collective conscience of India. For every one or two of these instances that capture media attention, thousands of women are brutally murdered and buried without any trace of attention. If this was the case in the ‘civilized society’ of 21st century, it must have been worse during the time of Joseph and Mary.
As Joseph was struggling to solve this problem, the angel came to him in a dream. If Joseph was a selfish person thinking only of his honour and did not care about Mary, the angel would have found it difficult to enter Joseph’s conscious or subconscious world. God would find it difficult to enter a selfish person’s heart. The more selfless and sensitive a heart, the brighter the chances of divine interruptions… not only during waking hours but also during dreams!

All human beings dream. Then why make Joseph the patron of dreams? I can think of two reasons. There could surely be more.
Reason 1: Joseph was capable of interpreting his dreams as good news even during his agony. For many of us this may not be easy. When we are hemmed in by trials all around us, we tend to lose our normal, day to day activities, especially our sleep. Even if we manage to get some sleep, we may get more nightmares than dreams. Joseph must have been in such a predicament. Still, he recognised his dreams as divine promptings and interventions. Only persons without deceit, persons who are just, are capable of this. Don’t we wish we could be like Joseph?
Reason 2: It is easy to dream dreams; but not easy to act on them. In all the three gospel passages we cited, Joseph woke up from sleep and followed the instructions from the angel. If these instructions were easy, cosy things, then we won’t mind following them. Such instructions are dictated to us through our ‘commercial dreams’… a cream would change our complexion in a matter of days, or a toothpaste would make our friends flock around us all the time. We tend to follow these dreams, don’t we? The instructions that Joseph received in his dreams were demanding, tough decisions – taking a pregnant woman as his wife, taking a baby and his mother at night and travelling to a strange land… Don’t we wish we could be like Joseph? Don’t we wish to honour St Joseph, the Patron of dreams?

By recognising his dreams as divine promptings, and by taking concrete actions on his dreams, Joseph saved not only Mary and Jesus, but also saved the world by letting the Saviour become Emmanuel among us! May St Joseph, the Patron of Dreams, help us dream dreams and be ready to pay the price to make them come true!

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நெருங்கிவிட்டது. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழா காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றிய கனவுகள் பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது 'சாந்தாகிளாஸ்' என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கனவையும் குழந்தைகள் இந்நாட்களில் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இக்கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்ற அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி இவ்வுலகம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் (1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி) கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்று முழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு தென் ஆப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, அண்மையில் புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான் இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

கனவுகளைப்பற்றி, கனவுகள் காண்போரைப்பற்றி இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இந்த ஞாயிறு நற்செய்தியின் நாயகனாக விளங்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பதுபோல, அவர் ஒரு நேர்மையாளர். அவர் பேசியதாக நற்செய்தியில் ஒரு வார்த்தைகூட எழுதப்படவில்லை. அவர் ஒன்றும் பேசியிருக்கத் தேவையில்லை, ஏனெனில் அவரது வாழ்வே ஒரு முழு நற்செய்தியாக இருந்தது.
மரியாவின் கணவராய், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாய் யோசேப்பு தனிப்பட்ட ஓர் இடத்தை நம் மனங்களில் பிடித்துள்ளார். கத்தோலிக்கத் திருஅவையின் காவலர் என்ற உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ள புனித யோசேப்பை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர், நற்படிப்புக்குக் காவலர், நல்மரணத்திற்குக் காவலர்... என்று பலவழிகளில் புனித யோசேப்பைப் பெருமைப்படுத்துகிறோம்.
என்னைப் பொருத்தவரை, மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம். இதை நான் ஒரு விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ கூறுவதாக எண்ணவேண்டாம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு என்பதுதான் நமது இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையம். முதலில் இன்றைய நற்செய்தியைக் கேட்போம்.

மத்தேயு நற்செய்தி 1: 18-24
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார்... யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மேலும் இருமுறை யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்பின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், பாடங்கள் பல நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். யோசேப்பு பயங்கரமான ஒரு சங்கடத்தில் சிக்கியிருப்பதை உணரலாம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. ஊரே போற்றும் அந்த உத்தமப் பெண் தனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது தனது பெருமை என்று எண்ணிவந்த யோசேப்புக்குக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிர்ச்சி இது. அவர் மனதில் வீசிய சூறாவளியை ஓரளவு நாம் உணரலாம்.
இச்சூழலில் யோசேப்பு தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே கொண்டு செல்லப்பட்டு, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார். மரியாவின் கதை முடிந்திருக்கும், நம் மீட்பின்  கதையும் முடிந்திருக்கும், அல்லது, வேறுவிதமாய் அமைந்திருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டில், சகினே அஷ்டியானி (Sakineh Ashtiani) என்ற 43 வயது தாய் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டுமென்று ஈரான் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அத்தண்டனை எவ்வளவு கொடூரமாய் நடத்தப்படுகிறதென்ற விவரங்கள் தரப்பட்டன. தண்டனை பெற்ற பெண் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்படுவார். அவரைச்சுற்றி நின்று மற்றவர்கள் (மனிதர்களா அவர்கள்?) அப்பெண்ணின் தலைமீது கல்லெறிந்து அப்பெண்ணைக் கொலை செய்வார்கள் என்ற விவரங்கள் தரப்பட்டன. இவ்விவரங்களை வாசித்தபோது, நாம் மனித குலத்தில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியத் தலைநகர் டில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த ஓர் இளம்பெண்ணைப் பற்றிய வழக்கு இன்னும் இந்தியாவில் காயங்களை உருவாக்கி வருகின்றதே!
பத்திரிகை, தொலைக்காட்சி இவை வழியாக வெளிச்சத்திற்கு வரும் இத்தகையச் சம்பவங்கள் ஒன்றிரண்டு என்றால், வெளிச்சத்திற்கு வராமல் கொன்று புதைக்கப்படுவது ஆயிரமாயிரம் பெண்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கலாச்சாரம், அறிவியல் என்று பல வழிகளிலும் வளர்ந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில் பெண்கள் நிலை இப்படி என்றால், யோசேப்பு வாழ்ந்த இஸ்ரயேல் காலத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்தச் சிக்கலான சூழலில் யோசேப்பின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், அவரிடம் இறைவனின் தூதர் நெருங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்.என்பதே கனவில் யோசேப்பு பெற்ற செய்தி என்றும் நாம் சிந்திக்கலாம்.

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்பும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், யோசேப்பு, கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு க்ரீமைப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும்  நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

ஆனால், மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும் தாயோடும் எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவைகளை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது.
சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவைகளைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று அழைக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன்.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகளை வளர்ப்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!


No comments:

Post a Comment