26 January, 2014

Change begins from US (Republic Day of India) மாற்றம்... முதலில் நம்மிடமிருந்து...


65th Republic Day of India

This Sunday falls on January 26. Let me speak of January 26 first, since it happens to be the Republic Day of India. This is the 65th Republic Day of India. On this day the people of India said ‘Enough is enough’… Yes, the people of India who have been under the yoke of various kings for thousands of years and have been ‘colonised’ by foreigners for hundreds of years said, “Enough is enough… We don’t need anyone to rule us. We can rule ourselves”. Of course, these words have not been recorded in history; but this, in essence, is what the people of India have told the world on January 26, 1950 – the First Republic Day!
Today, in the 21st Century, India is the BIGGEST DEMOCRACY in the world! Such lofty thoughts make us hold our heads high. But, the memories of the past 64 years of democracy, place a heavy millstone around our necks and we can only hang our heads in shame. The Democracy we gave ourselves is buried in the filthy politics of our ‘uncrowned maharajahs’ – the politicians!

One of the most popular definitions of Democracy was given by Abraham Lincoln: “Democracy is the government of the people, by the people, for the people.” The moment I thought of this quote, my mind instinctively thought of another popular quote of Lincoln, namely: “You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all the people all the time.” Is there an intrinsic connection between these two quotes of Lincoln, I wonder! Has ‘fooling all the people all the time’ got anything to do with Democracy as we see it today all over the world and more especially in the biggest Democracy of the world?

Republic Day – the special day when the people of India gave themselves the power to rule themselves – calls for celebrations. India does celebrate Republic Day… But, unfortunately, in the last 20 years or more, the Parade in New Delhi is projected as THE CELEBRATION of this wonderful day. This parade does portray the various cultures of the people of India… sure! But, unfortunately, this parade has become more of a show of (show-off) Indian armaments to the world! This is VERY UNFORTUNATE… to say the least! India is trying to impress the world with… what?

Making impressions is a big preoccupation of the commercial as well as the political worlds! Most of the product launches and the launching of political parties have been very spectacular. But, after the inauguration, they probably disappeared without a trace in history. With the Parliamentary Elections round the corner, political parties are talking a lot… They are trying to make an impression on the people with their eloquence. In effect, they are ‘sound and fury signifying nothing’! We don’t need to cite examples here.
History, however, has shown us that there have been other examples, contrary formulas, namely, very silent inaugurations, which have stood the test of times. One such example would be the Congregation of the Missionaries of Charity founded by Blessed Mother Teresa of Calcutta. Here is one of the earliest incidents that began a silent revolution by the ‘Saint of the Gutters’ as written by Fr Raymond J.DeSouza:
In 1952, Mother Teresa found a woman dying in the streets, half-eaten by rats and ants, with no one to care for her. She picked her up and took her to the hospital, but nothing could be done. Realizing that there were many others dying alone in the streets, Mother Teresa opened within days Nirmal Hriday (Pure Heart), a home for the dying. In the first 20 years alone, over 20,000 people were brought there, half of whom died knowing the love of the Missionaries of Charity. Nirmal Hriday is where one dying man, lying in the arms of Mother Teresa after being plucked from the gutters and bathed and clothed and fed, told her, "I have lived like an animal, but now I am dying like an angel." http://www.catholiceducation.org/articles/catholic_stories/cs0464.htm

Looking at the courage of this frail woman, 12 other women joined her. The Missionaries of Charity was begun - a very silent inauguration that has created a unique history for more than 60 years. Mother Teresa and her 12 followers take our minds back to Jesus and his 12 disciples. Today’s Gospel talks of the way in which Jesus inaugurated his public ministry… by proclaiming his first message and by calling his first disciples. Today’s liturgy gives us an opportunity to think of inaugurations – their style and content.

The style of inauguration: In today’s Gospel, Matthew describes Jesus’ inauguration with the imagery of light. This imagery was already spoken of by Prophet Isaiah as we hear it from the first reading. The imagery of light for inauguration is a lovely metaphor. I am thinking two kinds of light symbolising the spectacular but empty inaugurations and the silent, meaningful ones. The two kinds of light are - lightning and sunlight. Inaugurations as proposed by the commercial world can be compared to lightning. Flash, bang… gone. Theoretically speaking, the average lightning bolt contains a billion volts at 3,000 amps, or 3 billion kilowatts of power, enough energy to run a major city for months. (http://www.mikebrownsolutions.com/tesla-lightning.htm) Till date, lightning has caused more damages than being useful. Commercial, political inaugurations can be compared to lightning.
As against this, imagine what sunlight can do and, actually, does to the world. Sunlight comes up not with a bang, not abruptly like a lightning, but very silently, imperceptibly. But, we know that without sunlight nothing can survive on earth. Jesus’ public ministry is compared to the sunlight. “The people walking in darkness have seen a great light; on those living in the land of deep darkness a light has dawned.” (Isaiah 9: 2; Matthew 4:16)

Another aspect of inauguration is the content: The inaugural words of Jesus in his public ministry were: “Repent, for the kingdom of heaven has come near.” (Matthew 4: 17). His first action was to gather a few fishermen with an invitation: “Come, follow me.” Repentance and following of Jesus are two key aspects of Christian life. All of us would easily agree that each Christian is called to repentance; but many of us would hesitate to affirm that every Christian is called to follow Jesus. We would think that ‘following Jesus’ is a privilege of the Religious and Priests.
Repentance and following of Jesus are basic to Christian calling and both are intrinsically connected. Repentance calls for some radical changes. Change is usually challenging. It is easier when these changes are external – like change of one’s profession, abode etc. But, when the change is internal like the one demanded by Jesus, it needs support. We are ready to change for a person whom we love. If we are drawn towards Jesus by love and if we are ready to follow Him, then we would be willing to change from within, even if this is very difficult. We have the examples of Simon, Andrew, James and John who were willing to change their entire life giving up their livelihood, their boats, nets… even their father.

Change is the cry of the hour… especially in India, as it is facing the Parliamentary Election! The President of India, Shri Pranab Mukherjee, addressed the nation on the eve of 65th Republic Day and talked of what is expected of … rather, what the youth expects from the Government.
“The aspirational young Indian will not forgive a betrayal of her future. Those in office must eliminate the trust deficit between them and the people. Those in politics should understand that every election comes with a warning sign: perform, or perish,” he contended.

While the President spoke of the ‘change’ from top-down, the Hindu also published an article of some youth who were questioned on what change they would want in India… They have mentioned the changes required at every walk of life from the government as well as from people. The title of the article hits the nail on the head: “Let’s be the change” (The Hindu, Bangalore Edition, Jan.24)

Let the change begin from…. Each of US!


The First Disciples of Jesus
Stained glass window, inside Saint Peter the Apostle Church, Parsippany, NJ, USA
Photograph - Loci B. Lenar

சனவரி 26, இஞ்ஞாயிறன்று, இந்தியாவில் 65வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மன்னர்களால் ஆளப்பட்ட இந்தியா, சில நூறு ஆண்டுகள், அன்னியர்களால் ஆளப்பட்டது. இவ்வாறு, முடியாட்சியை சுமந்து வருந்திய இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்று உலகறியப் பறைசாற்றிய நாள் குடியரசு நாள். இந்த வரலாற்றுப் பின்னணி, நம் மனங்களை உண்மையிலேயே பெருமையுறச் செய்கிறது. 21ம் நூற்றாண்டில், உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியாதான் என்ற உலகச்சாதனை, நம்மை மேலும் தலைநிமிரச் செய்கிறது.
இந்த வரலாற்றுப் பெருமைகளை விழுங்கிவிடும் வேதனை எண்ணங்களும் மனதை நெருடுகின்றன. கடந்த 64 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆட்சியைச் சிந்திக்கும்போது, இது  குடியாட்சியா அல்லது, குடியாட்சி என்ற போர்வையில் ஒரு சில முடிசூடா மன்னர்கள் நடத்தும் சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வி மனதை வதைக்கிறது.
இந்திய மக்களுக்கு, குறிப்பாக, வறுமையில் வாடும் பல கோடி இந்திய மக்களுக்கு, இந்த 65வது குடியரசு நாள், மக்களாட்சியை நிலைநாட்டும் ஒரு நாளாக அமையவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். அணுகிவரும் பாராளுமன்றத் தேர்தலில், குடியரசை மீண்டும் ஆட்சியில் அமரச்செய்யும் தன்னலமற்றத் தலைவர்களை, இந்திய மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும் இறைவனிடம் உருக்கமாகச் செபிப்போம்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவில் எதைக் கொண்டாடுகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசு நாளன்று, மக்களாட்சியைப் பறைசாற்றும் அம்சங்களைக் கொண்டாடுவது பொருத்தமானது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பு ஒன்றே குடியரசு நாளின் முக்கிய கொண்டாட்டம் என்று உலகிற்குக் காட்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில், மக்களின் கலாச்சாரங்கள் அணிவகுத்துச் செல்கின்றன என்றாலும், இந்திய அரசின் இராணுவ வலிமையே பெருமளவு விளம்பரப்படுத்தப்படுகின்றது. இதுதான் குடியரசு நாள் கொண்டாட்டமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கொண்டாட்டங்கள் ஆடம்பரமாய், ஆர்ப்பாட்டமாய், பிரமாதமாய், பிரமிப்பூட்டுவதாய் இருக்கவேண்டும், என்பது உலகில் பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பின்பற்றும் சிந்தனை. இந்நிறுவனங்களின், கட்சிகளின் ஆரம்பவிழாக்கள் பல கோடி ரூபாய் செலவில் அமர்க்களமாய் இருக்கும்; எதிர்பார்ப்பை உருவாக்கும். இவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் வரலாற்றில் எவ்விதச் சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை.
இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்புச் சகோதரிகள் சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது இச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில் தனியொரு பெண்ணாக அன்னை தெரேசா ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், ஆர்ப்பாட்டமும் இல்லை. அப்பெண்ணின் மன உறுதியைக் கண்டு இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர். இவ்விதம் ஆரம்பமான பிறரன்புச் சகோதரிகள் சபை, இன்று உலகெங்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பணிகளைத் தொடர்கின்றது. அர்த்தமுள்ள ஒரு வரலாறு எழுதப்பட்டு வருகின்றது.
பிறரன்புச் சேவையில் இறங்கிய ஒரு பெண், அவரைச் சுற்றி 12 பெண்கள் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த நினைவு இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.(எசாயா 9: 2; மத்தேயு 4: 16)
ஒளி ஓர் அழகிய உருவகம். அட்டகாசமான, அர்த்தமற்ற ஆரம்பங்களையும், அமைதியான, அர்த்தமுள்ள ஆரம்பங்களையும் இயற்கையில் நாம் காணும் மின்னல், சூரியஒளி என்ற இருவகை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தலாம். அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை. பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலும் பலகோடி 'வாட்ஸ்' (Watts) மின்சக்தி கொண்டது. ஒரே ஒரு மின்னல் உருவாக்கும் சக்தியைப் பயன்படுத்தமுடிந்தால், மும்பை அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான மின்சக்தி தரமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமிக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள் பயனில்லாமல் தோன்றி மறைகின்றன. பல சமயங்களில் மின்னல்களால் தீமைகள் விளைவதும் உண்டு. அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை.
இதற்கு மாறானது சூரியஒளி. இரவு முடிந்து பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் சூரியன் உதயமாகிறது. இப்படி அமைதியாய் உதிக்கும் சூரியஒளியால் பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு ஆதவனைப்போல் ஆரம்பமானது.

இயேசு என்ற தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ள வார்த்தைகள் இவையே: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4:17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு செய்த முதல் வேலை... தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது...
ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஒரு பிரம்மாண்டமான புதுமையைச் செய்து அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகையும் அவருக்குச் சொல்லித்தந்தது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் இருந்து குதிக்கச்சொன்னது. ஆனால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்தவிதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று ஒரு சில மீனவர்களிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம் அனைவருக்கும் தேவையான ஓர் அழைப்பு. இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவைப் பின்தொடர்தல் என்பது துறவறத்தார், அருள் பணியாளர்கள்  ஆகியோருக்குத்தான்; அனைவருக்கும் அல்ல என்பது பொதுவாக நாம் எடுக்கும் முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற உண்மை விளங்கும்..
மாற்றம் என்பது, பழைய நிலையை விட்டு விலகி, புதிய நிலைக்குச் செல்வது. வேலை மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என்ற இந்த மாற்றங்கள் வெளிப்புற மாற்றங்கள். ஓரளவு எளிதான மாற்றங்கள். உள்ளமாற்றம், மனமாற்றம் என்பது மிகவும் கடினமானது. நமது மனதில் ஆணிவேர்விட்டு வளர்ந்துவிட்ட எண்ணங்கள், ஆசைகள், பழக்கங்கள் இவற்றை மாற்றி, புதிய எண்ணங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. இவ்வகை மாற்றங்கள் உருவாக ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது, அன்பு, பாசம், காதல்... நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த மற்றொருவருக்காக நம்மிடம் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும் நாம் இந்தக் கோணத்தில் இணைத்துப் பார்க்க முடியும். இயேசுவின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டு, அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவினால் ஈர்க்கப்பெற்று, அவரது அழைப்பை ஏற்று, சீடர்கள் அவரைப் பின்சென்றனர். தங்கள் வாழ்வின் ஆதாரங்களான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு முற்றிலும் மாறியது.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றங்கள் நாமாக இருப்போம்' (‘Let’s be the change’ – The Hindu, January 24, 2014) என்ற தலைப்புடன் நாளிதழ் ஒன்றில் அண்மையில் நான் வாசித்த ஒரு செய்தி என் மனதில் தோன்றுகிறது. அணுகிவரும் பாராளுமன்றத் தேர்தலும், குடியரசு நாளும் உங்கள் மனதில் உருவாக்கும் ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், இளையோரிடம் கருத்து கேட்டபோது, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற கருத்து பல இளையோரிடமிருந்து வந்தது. மிகவும் அற்புதமான ஒரு கருத்து. இந்த உறுதி, இன்றைய இளையோர் அனைவரிடமும் பரவினால் கட்டாயம் இந்தியா ஒரு தலைசிறந்த குடியரசாக உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர் இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம்.


19 January, 2014

Selfless Self-respect தன்னலமற்ற தன் மதிப்பு

Behold The Lamb Of God Icon – Peter Murphy

Two sets of ideas which seem poles apart are juxtaposed this Sunday. Yes… Today’s Liturgy presents to us readings that talk of self-respect and respect for others. This Sunday also calls our attention to those who have been stripped of self respect. Yes… January 19, this Sunday, is also the World Day of Migrants and Refugees observed (mind you… I am not using the word ‘celebrated’) by the Catholic Church. In 1914, when the world was shocked by the news of World War I, St Pius X, the then Holy Father, instituted this World Day. This year marks the Centenary Year of this World Day. While the liturgical readings talk of self respect, this Sunday also talks of those who are denied self respect in many ways.
Self respect is a seed planted in every human being at birth. This seed can either grow well and bear fruit or wither away depending on how the family nurtures this seed. A well-knit family is a like a field that is fenced around so that the plants can grow without danger from outside predators. When such protection is lacking in the family, the plants, naturally, become a prey to outside forces. The plants get devoured by unwanted social, psychological and spiritual predators.

The seed of self respect planted in each of us needs careful nurturing. Proper growth in self respect calls for proper self-knowledge. Respect for one’s self breeds respect for others. All these thoughts are reflected in the three readings of this Sunday:
Prophet Isaiah says: “I am honoured in the eyes of the LORD and my God has been my strength.” (Is. 49: 5). St Paul says that we are ‘sanctified in Christ Jesus and called to be his holy people’. (I Cor. 1: 2). The Gospel of John brings to focus two great persons who admired and respected one another – John the Baptist and Jesus.

A few years back, I received a lovely Powerpoint Presentation sent via email by one of my Jesuit friends. ‘VALUE WHAT YOU HAVE’ was the title. Here is the text of that presentation:
The owner of a small business, a friend of the poet Olavo Bilac, met him on the street and asked him, “Mr Bilac, I need to sell my small farm, the one you know so well. Could you please write an announcement for me for the paper?”
Bilac wrote: “For sale: A beautiful property, where birds sing at dawn in extensive woodland, bisected by the brilliant and sparkling waters of a large stream. The house is bathed by the rising sun. If offers tranquil shade in the evenings on the veranda.”
Some time later, the poet met his friend and asked whether he had sold the property, to which he replied: “I’ve changed my mind when I read what you had written. I realised the treasure that was mine.”
Sometimes we underestimate the good things we have, chasing after the mirages of false treasures. We often see people letting go of their children, their families, their spouses, their friends, their profession, their knowledge accumulated over many years, their good health, the good things of life. They throw out what God has given them so freely, things which were nourished with so much care and effort.
Look around and appreciate what you have: your home, your loved ones, friends on whom you can really count, the knowledge you have gained, your good heath… and all the beautiful things of life that are truly your most precious treasure…
(Those of you who wish to see this Powerpoint presentation, kindly visit: http://www.slideshare.net/karolharvey/song-of-the-birds)

The theme of ‘valuing what we have – especially all the hidden treasures in our lives’ reminds me of another familiar story. In a small village lived a beggar who sat at a particular place day after day to ask for alms. He would not move to any other place. It looked as if he owned that piece of land as his own. After a few years, the beggar died on the very spot where he was begging. The people of the village decided to bury him at the same spot. When they began to dig for his burial, they found a treasure trove buried under the very same spot where the beggar sat all those years, begging.

Of all the treasures we can possess, the most precious treasure is ourselves. This treasure may or may not be approved and appreciated by the world. But, what is most important is that we are honoured in the eyes of the Lord. This is the core of the first reading today (Isaiah 49: 5). A person who respects him/herself is capable of respecting others. This is illustrated in the Gospel. St John the Baptist was already a popular preacher. If he had chosen to remain popular, he could have done so, ignoring Jesus walking towards him. But, the moment John saw Jesus, he knew that the one superior to him had arrived and he did not hesitate to acknowledge it (John 1: 29-34). Jesus on his part, showered on John one of the best compliments ever given to a human being – Matthew 11:11. Acknowledging another as superior to oneself should spring from one’s own self appreciation. Otherwise, it would be false humility and would sound faked and hollow. John and Jesus were self-assured, self-respecting persons and hence they were able to appreciate the other.

This Sunday also calls our attention to persons who are deprived of self-respect in a big way, namely, those who are forced to leave their countries for various reasons. When World War I broke out in 1914, Pope Pius X created the World Day of Migrants and Refugees so that broken families, displaced people will be supported by the prayers of the Catholic Church. This year marks the Centenary Year of this World Day. For this occasion, Pope Francis has given a message. 

I wish to bring to your attention some key sentences from this message, titled - Migrants and Refugees: Towards a Better World:
A better world will come about only if attention is first paid to individuals; if human promotion is integral, taking account of every dimension of the person, including the spiritual; if no one is neglected, including the poor, the sick, prisoners, the needy and the stranger (cf. Mt 25:31-46); if we can prove capable of leaving behind a throwaway culture and embracing one of encounter and acceptance.
Migrants and refugees are not pawns on the chessboard of humanity. They are children, women and men who leave or who are forced to leave their homes for various reasons, who share a legitimate desire for knowing and having, but above all for being more…As the Church accompanies migrants and refugees on their journey, she seeks to understand the causes of migration, but she also works to overcome its negative effects, and to maximize its positive influence on the communities of origin, transit and destination.
Finally, in considering the situation of migrants and refugees, I would point to yet another element in building a better world, namely, the elimination of prejudices and presuppositions in the approach to migration. Not infrequently, the arrival of migrants, displaced persons, asylum-seekers and refugees gives rise to suspicion and hostility. There is a fear that society will become less secure, that identity and culture will be lost, that competition for jobs will become stiffer and even that criminal activity will increase. The communications media have a role of great responsibility in this regard: it is up to them, in fact, to break down stereotypes and to offer correct information in reporting the errors of a few as well as the honesty, rectitude and goodness of the majority.
A change of attitude towards migrants and refugees is needed on the part of everyone, moving away from attitudes of defensiveness and fear, indifference and marginalization – all typical of a throwaway culture – towards attitudes based on a culture of encounter, the only culture capable of building a better, more just and fraternal world. The communications media are themselves called to embrace this “conversion of attitudes” and to promote this change in the way migrants and refugees are treated.

Those who would like to see the full text of the message of Pope Francis for the World Day of Migrants and Refugees, kindly visit:

அண்மையில், பொங்கல் பெருநாளைக் கொண்டாடினோம். இவ்விழா பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டாலும், இவ்விழாவின் முக்கியக் காரணம் அறுவடை. சில நூறு மணிகளாக நாம் நிலத்தில் விதைத்தவற்றை, பல்லாயிரம் மணிகளாக அறுவடை செய்வதைக் கொண்டாடும் நாள் பொங்கல் பெருநாள். தரையில் விழுந்த விதை தானாகவே வளர்கிறது என்பது உண்மைதான். ஆனால், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு கரிசனையுடன், கவனிப்புடன் வளர்க்கப்படும் விதைகள் பல நூறு மடங்கு பயன்தரும் என்பது அதைவிட முக்கியமான உண்மை.
அழகிய அறுவடைத் திருநாளையொட்டி வரும் இஞ்ஞாயிறு வழிபாடு, இரு வேறு துருவங்களாய் தெரியும் சிந்தனைகளை நம்முன் வைக்கிறது. நல்ல நிலங்களில் வளரும் பயிர்களைப் போல, பாதுகாப்பானச் சூழல்களில் வளர்ந்து, நம்மை நாமே அடையாளம் கண்டுகொள்வதால், நாம் எவ்விதம் நமக்கும் பிறருக்கும் பயன்தரும் கருவிகளாக மாறமுடியும் என்ற அழகான எண்ணங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம் உள்ளத்தில் விதைக்கின்றன. இது ஒரு துருவம்.
இதற்கு நேர்மாறான துருவமாக, விதைக்கப்படவும், வேரூன்றவும் நிலமின்றி, பதர்களைப் போல, சருகுகளைப் போல அலைந்து திரியும் மக்களை எண்ணிப்பார்க்கவும் இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. சனவரி 19, இஞ்ஞாயிறன்று, குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1914ம் ஆண்டு திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், கத்தோலிக்கத் திருஅவையில் இவ்வாண்டு, 100வது முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. தாய்நாட்டில் தங்கள் சுய அடையாளங்களை இழந்து, தஞ்சம்புகும் அடுத்த நாடுகளிலும் அன்னியர்களாக, தவறான அடையாளங்களுடன் வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாகும் மக்களை எண்ணிப்பார்ப்பது நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவாலான மற்றொரு துருவம். இவ்விரு துருவங்களையும் இணைத்துச் சிந்திக்க, இறைவன் இந்த ஞாயிறு வழிபாடு வழியாக நம்மை அழைக்கிறார்.

நமக்கே உரித்தான அடையாளங்களைப் புரிந்துகொள்வதைப்பற்றிச் சிந்திக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த ஓர் அற்புதமான கதை நினைவுக்கு வருகிறது. Value What You Have - அதாவது, உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக என்ற தலைப்புடன் என்னை வந்தடைந்த சிறுகதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Olavo Bilac என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஇடம் கேட்டுக்கொண்டார். Bilac பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:
"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழலும், அமைதியும் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.
ஒரு சில வாரங்கள் சென்று தன் நண்பரைச் சந்தித்த Bilac, "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.
நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

நம்மிடம் உள்ள உண்மையான கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், தூரத்துக் கானல்நீரை, துரத்துவதால் வாழ்வின் பெரும் பகுதியை, நாம் வீணாக்குகிறோம். நம் உண்மை அடையாளங்களை உலகிற்கு உணர்த்தாமல், அவரைப்போல், இவரைப்போல் என்று போலி முகமூடிகளை அணிந்து எமாற்றமடைகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான, மாயைகளைப் பெறுவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம். நாம் நாமாகவே வாழ்வதற்கு, நம்மைப்பற்றிய தெளிவு முதலில் நமக்கு வேண்டும். இந்தத் தெளிவு நம்மைப்பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்குமுன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில் நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை இறைவாக்கினர் எசாயாவைப் போல் நாமும் நெஞ்சுயர்த்திச் சொல்லவேண்டும்.
இறைவாக்கினர் எசாயா 49: 1,5
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்... ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்.

ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு, யோவான் நிலைதடுமாறவில்லை. தன் உண்மையான நிலை, தன் மதிப்பு அனைத்தும் இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்தான் அடங்கியுள்ளது என்று தன்னைப்பற்றியத் தெளிவு யோவானுக்கு இருந்தது. தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை இறைவன் பேரில் திருப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.
யோவான் நற்செய்தி 1: 29,34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்... இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.

தன்னை விட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்வதற்கு, தன்னம்பிக்கையும், தன்னைப்பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். தன்னைப்பற்றியத் தெளிவான எண்ணங்களும், தன்னைப்பற்றிய சரியான மதிப்பும் கொண்டிருந்தால் மட்டுமே அடுத்தவரை உயர்வாக எண்ணமுடியும், மதிக்கமுடியும்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, புகழுரைகள் சொன்னார். இயேசுவும் திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகச்சிறந்த புகழுரை வழங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு நற்செய்தி 11: 11) என்று இயேசு கூறினார். இயேசுவும் யோவானும் ஒருவரையொருவர் புகழ்ந்துகொண்டது, வெறும் முகத்துதி அல்ல. இருவரும் தங்களை உள்ளூர உயர்வாக மதித்தவர்கள், எனவே அவர்களால் அடுத்தவரின் உயர்வையும் மனதார உணரமுடிந்தது. வாயாரப் புகழமுடிந்தது.

இதுவரை நாம் சிந்தித்தது... இந்த ஞாயிறு வழிபாடு, நம் முன் வைத்துள்ள முதல் துருவம். இனி, இரண்டாவது துருவம்...
தங்கள் சுய மாண்பை இழந்து, அடுத்தவர்களால் இகழப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடியேற்றதாரரையும், புலம் பெயர்ந்தோரையும் எண்ணிப்பார்க்க தாய் திருஅவையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நம்மை இந்த ஞாயிறு அழைக்கின்றனர். சனவரி 19, இந்த ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் குடியேற்றதாரர், புலம்பெயர்ந்தோர் 100வது உலக நாளையொட்டி, திருத்தந்தை அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். "சீரியதோர் உலகை நோக்கி" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள அச்செய்தியிலிருந்து ஒரு சில வரிகளை எண்ணிப்பார்ப்பது பயனளிக்கும்:

சீரியதோர் உலகை உருவாக்குதல் என்பது வெறும் கட்டுக்கதையோ, கனவோ அல்ல; மனிதரின் முழுமையான முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நம்மால் சீரியதோர் உலகை உருவாக்க முடியும்.
பொருளாதார முன்னேற்றம் மட்டுமே சமுதாய முன்னேற்றம் என்று எண்ணும்போது, அச்சமுதாயத்தில், வறியோர், முதியோர், நோயுற்றோர், அன்னியர், சிறையிலிருப்போர் போன்றவர்கள் தேவையற்றவர்களாகிவிடுகின்றனர். தேவையற்றதைத் தூக்கியெறியும் கலாச்சாரம் வெகுவாக வளர்ந்துள்ள இன்றையச் சூழலில், பொருளாதார அடிப்படையில் 'தேவையற்றவர்' என்று முத்திரை குத்தப்பட்ட மனிதர்களையும் தூக்கி எறியும் ஆபத்து அதிகரித்துள்ளது. நாடுவிட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் அன்னியர்கள் 'தேவையற்றவர்' என்ற முத்திரை குத்தப்படுகின்றனர். சதுரங்க விளையாட்டில், காவல் வீரர்கள் எளிதில் பலியாவதுபோல, சமுதாயம் என்ற சதுரங்கத்தில், அன்னியர்கள் எளிதாகப் பலியாகின்றனர்.

சீரியதோர் உலகை உருவாக்குவதற்கு, உலகில் நிலவும் வறுமையைக் களைவது மிகவும் அவசியம். நாடுவிட்டு நாடு செல்வோர் இன்று பெருமளவில் கூடியிருப்பதற்கு, உலகின் பல நாடுகளிலும் தாண்டவமாடும் வறுமை ஒரு முக்கிய காரணம். நாடுகளிடையிலும், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் வறுமையைக் களையும் முயற்சிகள் பெருகினால், மக்கள் தங்கள் நாடுகளிலேயே வேரூன்றி வாழும் வாய்ப்புக்களும் பெருகும்.

சீரியதோர் உலகை உருவாக்குவதற்கு முக்கியமான தேவை... முற்சார்பு எண்ணங்களை முற்றிலும் நீக்குவது. அன்னியராய், அகதிகளாய் ஒரு நாட்டிற்குள் வருவோரைக் குறித்து தவறானக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிப்பது பெரும் ஆபத்து. நாட்டுக்குள் நுழைந்துள்ள அன்னியரால் தங்கள் நாட்டின் பாதுகாப்பும், கலாச்சாரமும் குலைந்துவிடும்; தங்கள் வேலைவாய்ப்புக்கள் பறிக்கப்படும்; நாட்டில் வன்முறையும், குற்றங்களும் பெருகும் என்ற பல முற்சார்பு எண்ணங்கள் மக்கள் மனதில் வேரூன்றி விடுகின்றன. இவ்வெண்ணங்களை மக்களிடையே விதைப்பன நமது ஊடகங்கள். நாட்டிற்குள் தஞ்சம் தேடிவரும் அன்னியரைக் குறித்து உண்மையான, சரியான தகவல்களை ஊடங்கள் வழங்கினால், பாதகமான முற்சார்பு எண்ணங்கள் நீங்கிஅன்னியருக்கு அடைக்கலம் தரக்கூடிய பரந்த மனது வளர வாய்ப்புண்டு.
அகதிகளாய், அன்னியராய் நாடுவிட்டு நாடு செல்வோருக்கு அன்னை மரியாவும், புனித யோசேப்பும் அழகிய எடுத்துக்காட்டுக்கள். பதவி வெறி பிடித்த ஏரோதின் கொடுமையிலிருந்து குழந்தை இயேசுவைக் காப்பதற்காக, எகிப்திற்குத் தப்பிச் சென்ற அன்னைமரியாவும், புனித யோசேப்பும், நாடுவிட்டு நாடு துரத்தப்படும் மக்களுக்குப் பாதுகாவல் அருள்வார்களாக!

சொந்த நாட்டையும், அடையாளத்தையும் இழந்து, உலகில் அலையும் மக்கள் தங்கள் தாயகம் திரும்பி, நலமுடன், மாண்புடன் வாழும் வழிகள் உலக நாடுகள் அனைத்திலும் உருவாகவேண்டும் என்று சிறப்பாகச் செபிப்போம். நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மதிப்பை முதலில் நமக்குள் நாமே வளர்த்துக்கொண்டு, பிறருக்கும் அவரவருக்குரிய மதிப்பை வழங்க ஆரம்பித்தால், உலகம் மதிப்பு பெறும், மீட்பு பெறும்.
மதிப்பை விதைப்போம். மாண்பை அறுவடை செய்வோம்.


12 January, 2014

Another Epiphany in the Jordan… யோர்தான் நதியில்... மற்றொரு அறிமுகம்...


Baptism of Christ - by Daniel Bonnell

There are at least a few hundred stories illustrating the bond between parents and children. This story – The Father’s Eyes’ – is one of my favourites on this theme.

This teenager lived alone with his father, and the two of them had a very special relationship. Football was the all consuming passion of the teenager. Since his stature did not match his passion, he was, most of the time, warming the bench as a substitute. Even though the son was always on the bench, his father was always in the stands cheering. He never missed a game. This young man was still the smallest of the class when he entered high school. But his father continued to encourage him but also made it very clear that he did not have to play football if he didn't want to. But the young man loved football and decided to hang in there. All through high school he never missed a practice, nor a game, but remained a bench warmer all four years. His faithful father was always in the stands, always with words of encouragement for him.
When the young man went to college, he decided to try out for the football team as a "walk-on." Everyone was sure he could never make the cut, but he did. The coach admitted that he kept him on the roster because he always put his heart and soul into every practice, and at the same time, provided the other members with the spirit and hustle they badly needed. The news that he had survived the cut thrilled him so much that he rushed to the nearest phone and called his father. His father shared his excitement and was sent season tickets for all the college games.
This persistent young athlete never missed practice during his four years at college, but he never got to play in the game. It was the end of his senior football season, and as he trotted onto the practice field shortly before the big play-off game, the coach met him with a telegram. The young man read the telegram and he became deathly silent. Swallowing hard, he mumbled to the coach, "My father died this morning. Is it all right if I miss practice today?" The coach put his arm gently around his shoulder and said, "Take the rest of the week off, son. And don't even plan to come back to the game on Saturday.”
Saturday arrived, and the game was not going well. In the third quarter, when the team was ten points behind, a silent young man quietly slipped into the empty locker room and put on his football gear. As he ran onto the sidelines, the coach and his players were astounded to see their faithful team mate back so soon. "Coach, please let me play. I've just got to play today," said the young man. The coach pretended not to hear him. There was no way he wanted his worst player in this close playoff game. But the young man persisted, and finally feeling sorry for the kid, the coach gave in. "All right," he said. "You can go in."
Before long, the coach, the players and everyone in the stands could not believe their eyes. This little, unknown kid who had never played before, was doing everything right. The opposing team could not stop him. He ran, he passed, blocked and tackled like a star. His team began to triumph. The score was soon tied. In the closing seconds of the game, this kid intercepted a pass and ran all the way for the winning touchdown. The fans broke loose. His team mates hoisted him onto their shoulders. Such cheering you've never heard! Finally, after the stands had emptied and the team had showered and left the locker room, the coach noticed that the young man was sitting quietly in the corner all alone. The coach came to him and said, "Kid, I can't believe it. You were fantastic! Tell me what got into you? How did you do it?"
He looked at the coach, with tears in his eyes, and said, "Well, you knew my dad died, but did you know that my dad was blind?" The young man swallowed hard and forced a smile, "Dad came to all my games, but today was the first time he could see me play, and I wanted to show him I could do it!"

The bond between parents and children go much beyond physical abilities. The father of the boy could not see his son playing. Still, he believed in him and that faith made the son a star when needed. Our Heavenly Father whom we don’t see, made a star of his Son Jesus on the banks of the river Jordan. This is given as our Gospel today – The Feast of the Baptism of Our Lord. (Matthew 3: 13-17)

Jesus stepped into the river Jordan to begin his public ministry. In the Baptism of our Lord, there are two thoughts that are worthy of our attention and reflection: Jesus stepping into the running waters and Jesus mingling with the common people.
Standing on solid ground is much safer than stepping into a running stream or a river. Jesus chose to do this in order to demonstrate that he was willing to step into the insecure, unknown future relying only on his Father. Stepping into the running water is also a lovely symbol to show that Jesus’ ministry would be life-giving as does running water.
Jesus mingled with the crowd when he approached John the Baptist. This identification made John very uncomfortable. Still, Jesus insisted that it would be this way… His way! Identifying with the people we serve, is the first and fundamental condition of any ministry.

Jesus stepping into the running waters and mingling with the common people must have pleased the Father very much and hence he took great pride in introducing his son to the world: “This is my Son, whom I love; with him I am well pleased.” (Mt. 3:17)

தந்தை-மகன் உறவைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவற்றில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கதை இது. டீன்ஏஜ் இளைஞன் ஒருவன் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவரிடையிலும் மிக ஆழமான, அழகான உறவு இருந்தது. இளைஞன் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல் அந்த விளையாட்டிற்கு ஏற்றதுபோல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, பயிற்சியாளர் கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவன் ஓரத்திலிருந்து தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பான். தன் மகன் களமிறங்கி விளையாடவில்லையெனினும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.
ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், இந்த இளைஞனையும் சேர்த்து. போட்டிக்கு முந்தின நாள், இளைஞனின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர் இளைஞனை ஆதரவாய் அணைத்து, ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். போட்டியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டியில், இளைஞனின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின்போது அந்த இளைஞன் திரும்பிவருவதை, குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து விளையாட வந்திருந்தான் அவன். கால்பந்தாட்டத்தின் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத்திடலுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அவனுக்கும், அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும் பார்த்திருந்தனர். எனவே, அவரைப் புதைத்த அன்றே அவன் விளையாட வந்திருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
திடலுக்கு வந்த இளைஞன், பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவுசெய்து என்னை விளையாட அனுமதியுங்கள்." என்று கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக்கொண்டிருந்தச் சூழலில், இவனை விளையாட அனுமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் பயந்தார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. மேலும், கண்ணீர் நிறைந்திருந்த அந்த இளைஞனின் கண்களில் தெரிந்த ஆர்வம், பயிற்சியாளரை ஏதோ செய்தது. இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது, இந்த இளைஞனாவது மகிழ்வடையட்டுமே என்ற எண்ணத்தில், அனுமதி தந்தார்.
இரண்டாவது பாதியில், அந்த இளைஞனின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அந்த இளைஞனைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்தபின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.
இளைஞன் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வைத் திறன் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். இளைஞன் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்குப் பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று, இந்த ஆட்டத்தைத்தான், முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். அவர் பார்க்கிறார் என்பதற்காக, அவரை மகிழ்விக்க நான் என் முழு திறமையை இன்று வெளிப்படுத்தினேன்." என்று அவன் சொல்லி முடிக்கும்போது, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது... ஆனந்தக் கண்ணீர்.

புறக் கண்களால் பார்க்க முடியாத ஒரு தந்தை, தன் மகனை, அவனது கனவிலும், திறமைகளிலும் வளர்த்த கதை இது. புறக் கண்களால் மனிதர்கள் பார்க்க முடியாத விண்ணகத் தந்தை தன் மகன் இயேசுவின் கனவுகளைத் துவக்கிவைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தை அவரை உலகிற்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்... என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மத்தேயு 3: 17) என்று.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் மனிதக் குழந்தை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே அதிகமான காலம். உடலளவில் ஒரு குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு பருவங்களாக நாம் கொண்டாடுகிறோம். அதேபோல், உள்ளத்தளவில், அறிவுத் திறனில் அவர்கள் வளர்வதையும் நாம் பல வழிகளில் கொண்டாடுகிறோம். ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன்னையே ஆளும் திறமை பெறுவதை, பல கலாச்சாரங்களும் மதங்களும் சடங்குகள் வழியாகக் கொண்டாடுகின்றன. இனி இந்த இளைஞன் அல்லது இளம் பெண் இந்த உலகைத் தனியே சந்திக்கும் திறமை பெற்றுள்ளனர் என்று இக்கொண்டாட்டங்கள் வழியே நாம் பறைசாற்றுகிறோம்..

நமது மனித வளர்ச்சியின் படிகளை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதிலும், நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வை நாமே நிர்ணயிக்கும் முக்கிய நிலையை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு ஒரு நல்ல தருணம். இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதை இன்று நாம் கொண்டாடுகிறோம். தன் வாழ்வையும், பணியையும் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்த இயேசு, தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார். அவர் எடுத்து வைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.
உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி தொடரும் தன் பணிவாழ்வில், தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?
ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழவும் வளரவும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் தளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?.

அந்த ஆற்று நீரில் இயேசு தனியே தன் திருமுழுக்கைப் பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக தன் பணியின் நோக்கத்தை இயேசு உலகறியச் செய்தார். விண்ணகத் தந்தையும் தன் பங்கிற்கு தன் அன்பு மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இவரே என் அன்பார்ந்த மைந்தர் என்று தந்தை வானத்திலிருந்து முழங்கியபோது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு இறைவாக்கினர் எசாயா மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்... உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்... இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இறுதியாக, அன்புள்ளங்களே, சிறப்பான சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம். கடந்த டிசம்பர், மற்றும் நடைபெறும் சனவரி மாதங்களில் பல இளையோர் தங்கள் குருத்துவப் பயிற்சியை முடித்துவிட்டு, அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். குழந்தைகளாய் இருந்தபோது திருமுழுக்கு பெற்ற அவர்களுக்கு, இதுவும் ஒருவகை திருமுழுக்கு அனுபவமே. இறைவனின் அன்பார்ந்த மக்கள் என்ற உறுதிப்பாட்டை உள்ளூர உணர்ந்தவர்களாய், இவர்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் எசாயா கூறும் இறை ஊழியர்களாய் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள சிறப்பாக செபிப்போம்.
அடுத்துவரும் நாட்களில் பொங்கல் திருவிழாவையும், உழவர் திருவிழாவையும் கொண்டாடவிருக்கிறோம். இயற்கையும், மனித உறவுகளும் உழவர்களுக்கு உற்றதுணையாக இருந்து அவர்களை வாழவைக்க வேண்டும் என்றும், உழவர்கள் வாழ்வதால், இவ்வுலகமும் வாழவேண்டும் என்றும் இறைவனிடம் சிறப்பாக மன்றாடுவோம்.
அதேபோல், சனவரி 14, இச்செவ்வாயன்று முகம்மது நபி அவர்கள் பிறந்தநாளான மிலாடி நபி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நண்பர்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை இப்புதிய ஆண்டில் மீண்டும் ஒருமுறை உணர்வதற்கு, இஞ்ஞாயிறு வழிபாட்டின் வழியாக, இறைவன் நம் அனைவருக்குமே நல்லொளியைத் தரவேண்டும் என்று ஒருவர் ஒருவருக்காக வேண்டிக்கொள்வோம்.


06 January, 2014

Socialism of God இறைவனின் பொதுவுடைமை


Epiphany – Mustard Seeds

Today is the Feast of the Epiphany. First and foremost, this Feast tells us one basic truth about God. God is not a private property of any human group. In all probability this day must have shocked quite a few orthodox Jews. They were very sure that the one and only true God was theirs, EXCLUSIVELY. They were very, very sure that the revelations in the Burning Bush and on Mount Sinai were special privileges given only to the people of Israel.
God must have laughed at this idea; but in His/Her parental love would have allowed them to hold on to this ‘exclusivism’. God waited for the opportune time. By inviting the wise men from the East to visit the Divine Babe at Bethlehem, God had broken the myth of the Jews that God was their ‘exclusive property’! God is a true iconoclast, indeed!

God cannot be the private property of any human group. This message is still very relevant to us, especially in the light of all the divisions created by various individuals and groups who have used God and religion as a political weapon. 2014 will the see the general election of the biggest democracy in the world – India. God is already being used as a trump card for the vote bank!
God is surely not party to any divisive force! Unifying, reconciling… these are God’s ways. Let us pray on the Feast of the Epiphany that the whole human family may live together as just that… HUMAN FAMILY… so that it can become a divine family.

Although this feast is mainly about Jesus revealing himself to the whole world (that’s why this feast is called the Epiphany), still, popularly, the main characters of this feast seem to be the so called ‘Magi’. Very little is known about these persons (Kings? Wise men? Astrologers?) in the Bible. Only Matthew’s Gospel (Matthew 2: 1-12) talks about these persons. But, their effort in following the star has inspired countless men and women to ‘follow the star’ in their lives.

When reflecting on the Magi, one main thought for our consideration today can be: Following a star. The moment I hear the word ‘star’, many thoughts rush in. The first time, probably, I heard this term was in my KG class… “Twinkle, twinkle little star…” From then on, I have learnt of quite a few ‘stars’ in my life.
The term ‘star’ is used to indicate someone or something special. Unfortunately, in India this term has been used very generously. We have too many stars – mega stars, super stars! It is unfortunate that those who ‘follow these stars’ are actually chasing a mirage and reach nowhere. The less said about this, the better. Let us get back to the wise men from the East…

Following a star is possible only at night. Stars are not visible during the day. This means that these wise men must have done most of their journey in the night – not an easy option given their mode of transport etc. It must have been very difficult to gaze upon one little star among the hundreds on a clear sky. What if the sky was not clear? Then they would have to wait until clouds and mist clear. So, their journey must have taken nights, many nights. On quite a few of those nights they may have lost sight of the star due to various reasons. Still, they persisted. This alone is reason enough to celebrate!
Patience and persistence seem to have become obsolete words in our dictionary. For us living in the 21st century, there seems to be no time to look to the heavens to gaze upon stars. We are dazzled and even blinded by too many artificial stars and hence real stars have receded from our view. We hardly look up. Or, possibly, we look up to the skies only when dark clouds gather. We look up to the skies with a question: Will it rain? Similarly, when dark clouds gather in our hearts, we again look up to the skies with the famous clichéd question: Is there a God up there?
Doubts drive us to look up, whether they are doubts about rain or pain. When the wise men followed the star, doubts were raging in their hearts too. But, they were driven more by desire than by doubts and hence could reach their destination.

Following a star also means following an ideal. To follow such stars one needs to look not with the physical eye but with an inner eye, the eyes of our heart.
Leo Buscaglia (Popularly known as the Love Doctor) once told a story that happened while he was a professor at the University of Southern California.  He had a student, Joel, who was brilliant and filled with potential.  Joel, however, had lost his meaning and purpose for living.  His Jewish tradition and background did not serve him. God had become a meaningless symbol.  He had no motivation to live another day and no one could convince him otherwise.  On his way to take his life, he stopped by Leo’s office.  Fortunately, the good doctor was in.          
The student told Leo that he had lots of money, clothes and cars.  He had been accepted at several of the top engineering schools for their masters programs.  He had everything going for him even good looks. Women circled around him like sharks.  Yet he had nothing inside…He had created an invisible gulf that no one could cross.          
Leo said, “Before you take your life, I want you to visit some old people at the Hebrew Home which is adjacent to our campus.”  “What for?” Joel countered.  Leo said, “You need to understand life through the eyes of your heart.”  “The eyes of my heart?” he asked.  “Yes, you need to experience what it is like to give to those who have lost their connection to a meaningful life.  Go to the desk and ask if there are people there who have not been visited for a long time by anyone. You visit them.”  “And say what?”  “I don’t know,” Leo said, “Tell them anything that will give them hope.”  Notice Leo’s strategy – We get back what we give. When we give away what we have, our barriers dissolve.
Leo did not see the student for months.  In fact, he had largely forgotten about him.  One day during the fall, he saw him with other students, a bus and a group of seniors, some who were in wheel chairs.  Joel had organized a trip to the baseball game with a group of his new senior friends who had not been to a game in years.  The two chatted for a moment.  Just before parting Joel said, “Thanks for helping me find the ‘eyes of my heart.’”  Leo nodded and smiled.
"Using The Eyes Of Your Heart" - Sermon Preached By Rev. Richard E.Stetler

I pray also that the eyes of your heart may be enlightened in order that you may know the hope to which he has called you, the riches of his glorious inheritance in the saints. (Ephesians 1:18)

சிறுவயதில் நான் பார்த்த கிறிஸ்மஸ் நாடகங்களில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் யார் தெரியுமா? மூன்று இராஜாக்கள். அந்த மூன்று பேரும் பளபளப்பாய் உடை அணிந்து, தலையில் தங்க மகுடம் வைத்து வருவார்கள். சிறுவயதில் என்னை, தங்கள் ஆடம்பரத்தால் ஈர்த்த இந்த அரசர்கள், இன்று எனக்கு ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள்.
மூன்று அரசர்கள், மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரைப்பற்றி வரலாற்றுப்பூர்வமான விவரங்கள் அதிகம் இல்லை. மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாக பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள், முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.

இன்று நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சி. இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
கடவுளின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கும் எண்ணங்கள் இந்த புத்தாண்டில் வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம். புலர்ந்திருக்கும் இவ்வாண்டில் இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நிகழவிருக்கின்றன. மக்களைப் பிரிப்பது ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள அரசியல் தலைவர்கள், இறைவனையும், மதங்களையும் மூலதனமாக்கி ஓட்டு வேட்டை நடத்திவருகின்றனர். இந்த வேட்டையில் மக்கள் பலியாகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பாக செபிப்போம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதைச் சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும்போதும், சந்தித்தபின்னும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் மனதில் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்கள் பல எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், முக்கியமாக, தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்து வேதனையாய் இருக்கிறது.

இந்த ஞானிகளை "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஞானிகள் கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள்.
இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நம்மில் பலர் நம்பி வருகிறோம். இவ்வாறு, கோள்களும் விண்மீன்களும் நம் வாழ்வை நடத்துவதாக நம்பி, நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடுவது பயனளிக்கும்.
திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித் தரும் ஓர் அழகிய பாடம்.

வானில் தோன்றிய ஒரு விண்மீனை தங்கள் எண்ணங்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஞானிகள் தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும் தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து அவர்கள் நடந்திருக்க வேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும் மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள.
சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு நமக்கு வெறும் உடல் கண்கள் பயனற்றவை. இதயக் கண்கள், மனக் கண்கள் தேவை.

அன்பு மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr Love) என்று புகழ்பெற்ற லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியர் சொன்ன ஒரு கதை இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம் ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப்போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.
தான் சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப் சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை ஜோயல் புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ விளக்கினார். "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்கவேண்டும்." "இதயக் கண்களா?" என்று ஜோயல் அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்க ஆரம்பித்தார். "வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்து, அந்த முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப்பார். அங்குள்ளவர்களில் யார் எந்த ஓர் உறவினரும் வராமல் பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ அவர்களைச் சென்று பார்." என்று லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம் என்ன சொல்லவேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும் எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன் வழியாக நாம் வாழ்வில் அர்த்தத்தைப் பெற முடியும் என்பதே லியோ கொடுத்த இந்த ஆலோசனையில் பொதிந்திருந்த இரகசியம்.
இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கினர். ஜோயல் தன் ஆசிரியர் லியோவிடம் வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்." என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளைப் பிடித்தபடி ஜோயல் பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார். விரக்தியால் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஜோயல், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது.

இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனஉறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த வேண்டுவோம்.