27 April, 2014

Messengers of Mercy கருணையின் தூதர்கள்


West Michigan Catholic priest has connection to canonization of two popes this weekend

Ever since Pope Benedict XVI announced his renunciation as the Head of the Catholic Church, on Feb.11, 2013, Vatican has become, as it were, the ‘centre’ of the world – especially the media world. The Catholic Church, seems to be going on a roller-coaster ride … Renunciation, Conclave, Election of Pope Francis and all that followed in the past one year, including the World Youth Day in Rio de Janeiro.
April 27, this Sunday, once again, Vatican becomes the eye of the media storm as well as the focus of the world in general. Bl.John XXIII and Bl.John Paul II are canonised at St Peter’s Square at 10.00 a.m. by Pope Francis. What a combination… Pope John XXIII, Pope John Paul II and Pope Francis – all, very popular Popes… all of them, people’s Popes! This day will be a VERY, VERY SPECIAL DAY in the history of the Catholic Church. TWO LIVING POPES TAKE PART IN THE CANONISATION MASS OF TWO FORMER POPES!

Although at every special Mass we recite the creed in which we say that we believe in the ‘One HOLY, Catholic, Apostolic’ Church, the history of the Catholic Church has not always been that ‘holy’. There have been many occasions when the Church was buried by the unholy adventures of unholy persons. But, God has raised the Church from its grave as often as she was buried! The Church, down these 20 centuries, have shown the world holy persons from different walks of life and helped us see holiness from various angles. This Sunday, when Pope Francis declares Pope John XXIII and Pope John Paul II as Saints, it gives us one more opportunity to reflect on holiness.

Fr Thomas Rosica, the Chief Executive Officer of Salt and Light Media in Canada, has recently written a book titled: John Paul II – A Saint for Canada. In his “Introduction: Santo Subito!”, he talks of what a ‘canonization’ signifies:
That a person is declared “Blessed” or “Saint” is not a statement about perfection. It does not mean that the person was without imperfection, blindness, deafness or sin. Nor is it a 360-degree evaluation of the pontificate or of the Vatican.
Beatification and canonization mean that a person lived his or her life with God, relying totally on God’s infinite mercy, going forward with God’s strength and power, believing in the impossible, loving enemies and persecutors, forgiving in the midst of evil and violence, hoping beyond all hope, and leaving the world a better place. That person lets those around him or her know that there is a force or spirit animating his or her life that is not of this world, but of the next. Such a person lets us catch a glimpse of the greatness and holiness to which we are all called, and shows us the face of God as we journey on our pilgrim way on earth.

When Pope Francis was returning to Rome from Rio, he spoke of the canonization of the two Popes that would send a clear message to the Church and the world at large. This ‘message’ would be that the world needs many more ‘merciful’ persons like Good Pope John and the Great John Paul! Pope Francis, when asked about the date he selected for the canonization of Popes John XXIII and John Paul II, said it signified that a new “age of mercy” is needed in the Church and the world. Both these saintly Popes have been, unquestionably, ‘messengers of mercy’!

The Sunday after Easter, is called the Divine Mercy Sunday. It was very appropriate that late Pope John Paul II was beatified on the Divine Mercy Sunday. In the year 2000 John Paul II established the Sunday after Easter as the Divine Mercy Sunday. Five years later, in 2005, he passed away on April 2, the Eve of the Divine Mercy Sunday. After another six years, he was beatified and now, after nine years, getting canonized on the Divine Mercy Sunday.

The Gospel of John (20:19-29) talks of the famous incident where Jesus invites Thomas to touch him and believe – an invitation to taste His mercy! Thomas, unfortunately, seems to hold an unenviable post, namely, the model of one of the most common human experiences called doubting. Kindly spare a thought for Tom, I mean St Thomas, the Apostle. He was not the only one to doubt the Resurrection of Jesus. All the disciples were caught in a web of doubt and fear. Only Thomas verbalised their collective doubt - “Unless I see…!” John’s Gospel glides over the fact that the other disciples doubted too. Luke’s Gospel makes it more explicit - (Luke 24: 36-39)

Some of us may have already taken the judgement seat trying to pronounce our judgement on Thomas: “What a pathetic man! After having lived with Jesus so closely for three years, this guy still doubted Jesus!” Those of us who have not suffered from doubts – especially doubts about those with whom we have lived closely for years – throw the first stone at Thomas.
Well, after having listened to hundreds of treatises on Resurrection, I still have my moments of hesitation about this sublime, crucial truth of Christianity. How can I judge Thomas, who came from the Jewish background where the idea of Resurrection was not that clear and strong?
If I were present in Jerusalem on the last few days of Jesus’ life, I would have had more doubts than Thomas, especially after having seen those last few hours on Calvary. So, I dare not take the judgement seat. Let me see whether I can stand along with the ‘accused’ Thomas and the other disciples and try to see this incident from their perspective.

The disciples left their trade, their parents, their everything... to follow Jesus. In those three years, Jesus became everything to them. He was their world. This world was brutally uprooted and nailed to the cross. The vacuum created by the absence of Jesus was filled by doubts and fear. Their doubts were very real. One of them betrayed Him and another denied Him. They could no longer believe in one another, neither could they believe in themselves. The way most of them ran away from the scene of the arrest of Jesus was still very raw. Probably most of them did not even attend the funeral of Jesus, since they were already buried in their own fears and worries. They decided to lock themselves up behind closed doors. They had already built their tomb in the upper room.

Jesus did not want his loved ones see decay. He wanted to open their graves and bring them alive. Hence, He entered their ‘tomb’ and stood among them. How did He come in? All the doors were locked… then, how could He? That was and, still, is the beauty of Jesus. The God of surprises! From his birth, He had surprised the Jewish world. It was the trademark of Jesus to defy expectations. He had done it once again. Closed doors and closed tomb are not a big deal for Jesus.

Closed doors have close connections with both St John XXIII and St John Paul II. When Pope John XXIII announced the Second Vatican Council, many around him, inside Vatican, were shocked and looked at him with serious doubts. But, Good Pope John was determined to open the doors of the Catholic Church, which was almost getting suffocated behind closed doors. Similarly, John Paul II opened the doors of the Communistic world and let Christ in. His efforts, once again, was looked upon with doubts and resistance!

It is appropriate that these two stalwarts of the 20th century Catholic Church are being raised to Sainthood, on Divine Mercy Sunday, when Christ with his infinite mercy, passed through closed doors to help Thomas, and, through him, helped other disciples touch Him. We don’t know for sure whether Thomas responded to the invitation of Jesus to touch Him. But, we are very sure that Thomas was ‘touched’ by divine mercy and he made that wonderful acclamation: “My Lord and My God!” (John 20:28), the first human being to acknowledge Christ as God.  
We are thankful to Thomas since his doubt brought out one more ‘beatitude’ from Jesus – a beatitude addressed to all of us: “Blessed are those who have not seen and yet have believed."
Thank you, my Lord and my God! Thank you, Thomas!
  
அன்பு நெஞ்சங்களே, கத்தோலிக்கத் திருஅவை வலராற்றில் ஏப்ரல், 27, இந்த ஞாயிறு, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நாள். முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர், 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் இந்நாளில் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர். இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

ஏப்ரல், 27, இந்த ஞாயிறு, உலகில் பல கோடி மக்களின் கவனம் வத்திக்கானை நோக்கித் திரும்பியிருக்கும். ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களையும், முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான்பால் அவர்களையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். இந்நாள், திருஅவை வரலாற்றில் ஒரு தனியிடம் பெறும் நாள். வாழும் இரு திருத்தந்தையர் இணைந்து, மறைந்த இரு திருத்தந்தையரை புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, திருஅவை வரலாற்றில் அற்புதமான, அழகானதோர் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

திருஅவை வரலாற்றைப் புரட்டும்போது, அங்கு எல்லாமே, அழகாக, அற்புதமாக அமையவில்லை. 'திருஅவை' என்ற வார்த்தையில், 'திரு' என்பது புனிதத்தைக் குறிக்கும் வார்த்தை. நாம் பயன்படுத்தும் 'விசுவாசப் பிரமாண'த்தில், "ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன்" என்று ஒவ்வொரு ஞாயிறன்றும் சொல்கிறோம்.
ஆனால், நாம் புனிதம் என்று அறிக்கையிடும் இத்திருஅவை, தன் புனிதத்தை இழந்து புதைந்துபோன நாட்கள் பல உண்டு. ஒவ்வொருமுறையும், இறைவன் அருளால் தாய் திருஅவை உயிர்பெற்று எழுந்துள்ளது. புனிதமற்ற மனிதர்களால் சிதைந்துபோன திருஅவை, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, புனிதமான மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டி வருகிறது. நாம் நினைத்தால், ஒவ்வொருவரும் புனிதம் அடையலாம் என்பதை நினைவுறுத்தி வருகிறது.
முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், 2ம் ஜான்பால் என்ற இரு திருத்தந்தையரையும் புனிதர்களாகக் கொண்டாடும் இந்தப் பெருவிழாவில் புனிதத்தைப் பற்றியும், இவ்விரு புனிதர்களைப் பற்றியும் சிந்திப்பது நம்மை மேன்மைப்படுத்தும். நாமும் புனிதராகலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கும்.
கனடாவில், 'Salt and Light' என்ற ஒரு தொலைக்காட்சி மையத்தை நடத்திவரும் அருள் பணியாளர் Thomas Rosica என்பவர், ஒரு மாதத்திற்கு முன் வெளியிட்ட ஓர் அழகிய நூல் John Paul II - A Saint for Canada, கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் ஜான்பால். இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், புனிதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:
"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல...
முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர் கடவுளின் கருணையைச் சார்ந்து, அவருடன் வாழ்ந்தார்; கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில், அவர் இவ்வுலகம் விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச் சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."
அருள் பணியாளர் Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இந்தக் குணநலன்கள் பலவற்றையும் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள் - திருத்தந்தை 23ம் ஜான் மற்றும், திருத்தந்தை 2ம் ஜான் பால்.

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்க ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள், புனிதராக உயர்த்தப்படுவது மிக,மிகப் பொருத்தமானது. ஏனெனில், இவர்தான், உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று 2000மாம் ஆண்டு உருவாக்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேர்ந்தார். 6 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று இவர் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று இவர் புனிதராகவும் உயர்த்தப்படுகிறார்.
இவ்விரு திருத்தந்தையரையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, அவர் "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார். 'இரக்கத்தின் கால'த்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் பறைசாற்றிய இரு திருத்தந்தையரை இறை இரக்க ஞாயிறன்று புனிதர்களாக அறிவிப்பது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது.

இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல சூழல்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, மனதில் அமைதியை உருவாக்கும் நேரத்தில் இந்த இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். அப்படி ஒரு சிகரத்தைத் தன் சீடர்கள் தொடுவதற்கு இயேசு உதவிய ஒரு நிகழ்ச்சியை இன்றைய நற்செய்தியாக நாம் வாசிக்கிறோம்.
உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைப்பதுபோல், சந்தேகப்படும் யாரையும் சந்தேகத் தோமையார்என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார். இந்தச் சந்தேகத் தோமாவை இறை இரக்கத்தின் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார் இயேசு.

தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை நாம் பல நேரங்களில் சந்தேகப்படும்போது, தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். எதையும் நம்பமுடியாமல், சந்தேகச் சமுத்திரத்தில் மூழ்கியிருப்போம். ஆகவே, தோமாவைத் தீர்ப்பிட நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளை விட்டு எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம். தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக்கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டன. எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விட்டுவிடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.
சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை, சீடர்களால் நம்ப முடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஓர் அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிகளுக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல். இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும்போது, சந்தேகம் எழும். அறிவு அந்தச் செயலை ஏற்க மறுக்கும்.
ஆனால், அறிவும் அறிவியலும் சொல்வதை மட்டும் வைத்து வாழ்க்கையை நடத்திவிட முடியாதே. இரண்டும் இரண்டும் நான்குதான். ஆனால், சில சமயங்களில் இரண்டும் இரண்டும் ஐந்தாகலாம் அல்லது, மூன்றாகலாம். இதைப் புரிந்துகொள்ள மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவு இங்கே உதவாது. எத்தனை முறை இதுபோன்ற அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கின்றன! பல சமயங்களில் அறிவை விட மனம் சொல்வது மிக அழகானதாய், அற்புதமானதாய், உண்மையாய் இருந்திருக்கிறது. என்பதை நாம் மறுக்கமுடியுமா?

சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு இயேசு கூறிய பதில்: இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்”. (யோவான் 21: 27,29) இந்தச் சொற்களை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி வாழாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு. நம்பிக்கையோடு என்னை நீ தொடுவதால், நீயும் தொடப்படுவாய்."

இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)
இயேசுவை கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவிலும் பறை சாற்றினார் தோமா.
அறிவைக் கடந்த இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கம் சந்தேகப் புயல்களை அடக்கும்சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

இன்று புனிதராக உயர்த்தப்படும் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டப்போவதாக அறிவித்தபோது, சூழ இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்; அவரைச் சந்தேகக் கண்களுடன் பார்த்தனர். ஆயினும், அவர் உயிர்த்த இயேசுவை நம்பி, தூய ஆவியின் தூண்டுதலுக்குச் செவிமடுத்து, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் துவக்கினார். பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த திருஅவையில் புதிய காற்று வீசட்டும் என்று முழங்கியவர் 'நல்லத் திருத்தந்தை' என்று அழைக்கப்படும் 23ம் ஜான். அவர் துவக்கிய பொதுச்சங்கத்தை அவரால் முடிக்க முடியவில்லை என்றாலும், அந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திருஅவையில் ஒரு நிலநடுக்கத்தையே உருவாக்கியது என்று சொல்லலாம்.
அதேபோல், கம்யூனிச உலகில் பெரும் நிலநடுக்கத்தைக் கொணர்ந்தவர் திருத்தந்தை 2ம் ஜான்பால். கம்யூனிச ஆதிக்கத்தில் தளையுண்டு கிடந்த பல நாடுகளை, தலைநிமிர்ந்து வாழச் செய்தவர் இவர். இவ்விரு புனிதர்களின் பரிந்துரையால், நாமும் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையோடு, நாளைய உலகைச் சந்திப்போம்.


14 April, 2014

WWW - World Without War போரற்ற பூமி

Jesus riding into Jerusalem on a donkey

All eyes on India… at least the eyes of the media and the business world. The people belonging to the greatest democracy in the world are exercising their democratic power these days. Yes, India has gone to elections from April 7th. For the past three months or more, India had witnessed innumerable processions and meetings organised by the political parties. Almost all these meetings have been a show of strength for the different leaders. This show of strength is usually achieved by ‘buying’ people!
Against such an ‘organised artificiality’, there have been processions and meetings that showed the spontaneous ‘people power’. One can think of the following Anna Hazare had when he emerged as a charismatic leader in 2011. His call to abolish corruption in India met with overwhelming, spontaneous response from the people – from the elite to the illiterate! Unfortunately, this ‘people power’ was nullified by some political power games in the following months.
Such ‘people power’ was evident in countries like Tunisia, Egypt, Libya, and in many other countries in 2011. People in these countries gathered together without much pre-planning. The spontaneity and enthusiasm of the people in the above instances shook the so-called ‘well-established-powers’!.
This was the case 2000 years ago. People power took to the streets in Jerusalem. All of a sudden, the Roman and Temple powers were shaken by a tornado which came in the form of Jesus, when he was given a warm welcome by the people of Jerusalem! This is what we celebrate on Palm Sunday.

When I was searching for thoughts on the Palm Sunday, I came across a historic event, namely, “Palm Sunday Tornado 1920” – I could not have asked for a better starting point for my refelctions. Palm Sunday and Tornado seem like a perfect match which unfold many a thought.Tornadoes, I am told, are a common feature in the U.S., especially in the months of March and April. Here is the excerpt from an article in Wikipedia:
The Palm Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215 injured.
Here is another excerpt from the same article that acknowledges the discrimination prevalent in those days. According to Thomas P. Grazulis, head of the Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920, could have easily been much higher, since the deaths of non-whites were omitted as a matter of official state protocol, even when it came to fatalities from natural disasters.

Right through human history discrimination has ruled supreme. Among the Israelites too there were those who did not count. These ‘non-countable’ people created a tornado in Jerusalem when Jesus entered the city. Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘intruder’ called Jesus and His ‘non-countable’ people.
Tornado has another name ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Putting things in order? Well, depends on which perspective one takes. For those in power, things were thrown completely out of gear; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a call to begin anew!

With the Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine God – a God who was willing to suffer. He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during this week, one could call this week Holy since these events resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the most painful torture the Romans had invented. The cross was the most despised form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has made this most derogatory symbol of punishment and death into a symbol of veneration and a channel of salvation. The crucified Jesus has turned the lives of millions upside down.

One final thought. The Palm Sunday is also celebrated as the World Day of the Youth by the Catholic Church. Tomorrow, April 14, people belonging to the Tamil culture celebrate the New Year Day. Every New Year brings to mind new resolutions. These resolutions are usually meant to better one’s personal life. But, there have been great thinkers and poets who have also dreamt of the betterment of human society in general. One such poet is Bharathi Thasan, who took up this pen name since he was a great admirer of Bharathi, the immortal Tamil poet. Bhrathi Thasan has dreamt of a world where selfishness and war are to be weeded out.
These lines of Bharathi Thasan comes to mind, because tomorrow, April 14, is also ‘Global Day of Action on Military Spending (GDAMS)’. Each Spring, the Stockholm International Peace Research Institute (SIPRI) releases global military spending.
Summarizing some key details from the SIPRI’s Year Book 2013 summary on military expenditure:
  • World military expenditure in 2012 is estimated to have reached $1.756 trillion;
  • The total is higher than in any year between the end of World War II and 2010;
  • This corresponds to 2.5 per cent of world gross domestic product (GDP), or approximately $249 for each person in the world;
249 dollars per each person in the world will be a great resource to wipe out poverty and famine around the globe. That is a surer way to peace than to pile up arms to safe-guard peace!

Palm Sunday, World Day of the Youth and Global Day of Action on Military Spending when taken together, seem to reflect the dream of the Prophet Zechariah. The entry of Jesus into Jerusalem was already dreamt by the Prophet Zechariah as a process of ‘disarmament’: Rejoice greatly, O Daughter of Zion! Shout, Daughter of Jerusalem! See, your king comes to you, righteous and having salvation, gentle and riding on a donkey, on a colt, the foal of a donkey.
This dream is further expanded to include the mission of this king:
I will take away the chariots from Ephraim and the war-horses from Jerusalem, and the battle bow will be broken. He will proclaim peace to the nations. His rule will extend from sea to sea and from the River to the ends of the earth. (Zechariah 9: 9-10)
Isn’t this our dream too? A world without weapons? A world without war?

May the Prince of Peace as envisaged by Zechariah, the Palm Sunday Tornado, bring true peace to so many countries torn by war and hatred. May the Youth, the architects of a ‘world without war’ dream of peace!

WRI (War Resisters’ International) statement
on the Global Day of Action on Military Spending

உலகின் மிகப்பெரும் குடியரசின் மக்கள் தங்கள் கைவசம் உள்ள ஒரே ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆம், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி முடிய இந்தியாவின் எதிர்கால வரலாற்றை மக்கள் எழுதி வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல், இம்முறை, பல்வேறு எதிர்பார்ப்புக்கள், ஐயங்கள், அச்சங்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றது.
கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் கூட்டங்களும், ஊர்வலங்களுமாய் நாடு ஒலி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தேர்வுகளை எழுதும் இளையோர், குழந்தைகள், வயதில் முதிர்ந்தோர், நோயுற்றோர் என்று பலரின் தேவைகளைப்பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல், அரசியல் தலைவர்கள் நடத்திய கூட்டங்களும், கூச்சல்களும் தற்போது ஓரளவு அடங்கியுள்ளன.

பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும் ஒருவரது பெருமையை, சக்தியைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் செயற்கையான முயற்சிகளே. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, 2011ம் ஆண்டு, புது டில்லியில் ஏப்ரல் 5ம் தேதி ஒரு முயற்சி ஆரம்பமானது. இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கேள்விகேட்க, கட்டுப்படுத்த Jan Lokpal மசோதா, சட்டமாக்கப்பட வேண்டுமென்று, 72 வயதான Anna Hazare அவர்கள், புது டில்லியில் ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம் என்ற போராட்டம் பல இலட்சம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அறிக்கைகளும், விளம்பரங்களும் அதிகமின்றி திரண்ட இந்த மக்கள் ஆதரவு, மத்திய அரசை ஆட்டிப்படைத்தது. உயர்ந்ததொரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திலும், அதைத் தொடர்ந்து உருவான மக்கள் இயக்கத்திலும், இப்போது அரசியல் கலந்துவிட்டதைக் காணும்போது மனம் வேதனைப்படுகிறது.

இதே 2011ம் ஆண்டில், எந்த முன்னேற்பாடும், முன்னறிவிப்பும் இல்லாமல் திரண்ட மக்கள் சக்தியை, மக்களின் விடுதலை வேட்கையை, நாடுகள் பலவும் கண்டன. துனிசியாவில் ஆரம்பமான இந்தப் புரட்சி, பின்னர், எகிப்து, லிபியா என்று பல நாடுகளில் பரவியது. மக்கள் சக்தியை உணர்த்திய இக்கூட்டங்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தன. அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தின. இத்தகைய ஒரு கூட்டம், ஓர் ஊர்வலம், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், எருசலேம் நகரில் நடந்தது. அந்த ஊர்வலத்தை நாம் குருத்து ஞாயிறென்று கொண்டாடுகிறோம்.

இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்து ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்து ஞாயிறன்று உருவான சூறாவளிக்காற்று, மழை, புயல் இவற்றால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச் முதல், ஜூன் முடிய உள்ள நான்கு மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி தாக்கும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் கொண்டாடப்படுகிறது. குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்துச் சிந்திப்பது, பொருளுள்ளதாகத் தெரிகிறது. முதல் குருத்து ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்து, வேறு இடங்களில் சேர்க்கும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம். இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார். எனவே, இந்தக் குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

போட்டிகளில், போரில் வெற்றிபெற்று வரும் வீரர்களுக்கு குருத்தோலை வழங்குவது உரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம் குருத்தோலை. வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றிபெற்றால், மற்றவர்கள் தோற்க வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போர்க்களத்தில் கிடைக்கும் வெற்றிக்கு, பல்லாயிரம் உயிர்கள் பலியாகவேண்டும்.

போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத்தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஓர் இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இனியும் வாழ்வார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் அவர்கள், இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:
"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவற்றை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியதுதான். வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும் அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, மற்றவரின் இரத்தமின்றி, அதேநேரம், தன் இரத்தத்தால், இயேசு என்ற மன்னன் உருவாக்கிய இந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது. இந்த அரசைப் பறைசாற்ற திருஅவை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு.

இறுதியாக ஒரு சிந்தனை: ஏப்ரல் 14, இத்திங்களன்று, தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறோம். புத்தாண்டு நாளன்று வாக்குறுதிகள் எடுப்பது பல கலாச்சாரங்களிலும் காணப்படும் வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும் வாக்குறுதிகள் இவை. தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல, சமுதாய வாழ்வையும் மேம்படுத்த, கனவுகள் தேவை, கனவுகளை நனவாக்க மனஉறுதியுடன் கூடிய வாக்குறுதிகள் தேவை.
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் தேவையான கனவை, வாக்குறுதியாக முழங்கிச் சென்றுள்ளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவர் முழங்கிய வாக்குறுதி இதோ:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)

பாரதிதாசனின் இவ்வரிகளை இன்று எண்ணிப்பார்க்க ஒரு முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14, இத்திங்களன்று, ஓர் உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் இராணுவச் செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. 2012ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு செலவிட்ட மொத்தத் தொகை... 1,75,300 கோடி டாலர்கள். அதாவது, 1,05,18,000 கோடி ரூபாய். இத்தொகையின் பிரம்மாண்டத்தை வெறும் பூஜ்யங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இத்தொகையைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தால், நம் உலக அரசுகளின் மதியற்ற இராணுவ வெறியைப் புரிந்துகொள்ள முடியும்.
2012ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்டத் தொகையை உலகில் உள்ள மனிதர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் 249 டாலர்கள், அதாவது, 14,940 ரூபாய் கிடைக்கும். இத்தகைய நிதி உதவி கிடைத்தால், அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாது... இல்லையா?

குருத்து ஞாயிறு, அதைத் தொடரும் தமிழ் புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" ஆகிய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது, அமைதியின் மன்னன் இயேசு எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகள் நம் எண்ணங்களில் எதிரொலிக்கின்றன:
இறைவாக்கினர் செக்கரியா  9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.
சிறப்பாக, தங்கள் எதிர்காலம் வளமாக அமையவேண்டும் என்ற கனவோடு, தகுதியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். அத்துடன், ஒவ்வொரு குருத்து ஞாயிறன்றும் கத்தோலிக்கத் திருஅவை உலக இளையோர் நாளைக்  கொண்டாடுகிறது. போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும் முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதால், அவர்களை இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.


06 April, 2014

“Take away the stone” "கல்லை அகற்றுங்கள்"

Jesus Raises Lazarus to Life

Jeremy was born with a twisted body, a slow mind and a chronic, terminal illness that had been slowly killing him all his young life. Still, his parents had tried to give him as normal a life as possible and had sent him to St. Theresa's elementary school. At the age of 12, Jeremy was only in second grade, seemingly unable to learn.
His teacher, Doris Miller, often became exasperated with him.  He would squirm in his seat, drool and make grunting noises. At other times, he spoke clearly and distinctly, as if a spot of light had penetrated the darkness of his brain. Most of the time, however, Jeremy irritated his teacher.
One day, she called his parents and asked them to put Jeremy in a special school. While the mother was trying to hold back her tears, the father spoke: "Miss Miller," he said, "there is no school of that kind nearby.  It would be a terrible shock for Jeremy if we had to take him out of this school. We know he really likes it here." Doris let Jeremy stay on in the school.

Spring came, and the children talked excitedly about the coming of Easter. Doris told them the story of Jesus, and then to emphasize the idea of new life springing forth, she gave each of the children a large plastic egg. "Now," she said to them "I want you to take this home and bring it back tomorrow with something inside that shows new life.  Do you understand?"
"Yes, Miss Miller!" The children responded enthusiastically - all except for Jeremy.  He just listened intently; his eyes never left her face. He did not even make his usual noises. Had he understood what she had said about Jesus' death and resurrection?  Did he understand the assignment?

The next morning, 19 children came to school, laughing and talking as they placed their eggs in the large wicker basket on Miss Miller's desk. After they completed their math lesson, it was time to open the eggs. In the first egg, Doris found a flower. "Oh yes, a flower is certainly a sign of new life," she said. A small girl in the first row waved her arms. "That's my egg, Miss Miller," she called out.  The next egg contained a plastic butterfly, which looked very real.  Doris held it up.  "We all know that a caterpillar changes and turns into a beautiful butterfly. Yes, that is new life, too" little Judy smiled proudly and said, "Miss Miller, that one is mine"

Then Doris opened the next egg.  She gasped. The egg was empty!  Surely it must be Jeremy 's, she thought, and, of course, he did not understand her instructions. Because she did not want to embarrass him, she quietly set the egg aside and reached for another.
Suddenly Jeremy spoke up. "Miss Miller, aren't you going to talk about my egg?" Flustered, Doris replied, "But Jeremy - your egg is empty!"  He looked into her eyes and said softly, "Yes, but Jesus' tomb was empty too!"  Time stopped.  When she could speak again, Doris asked him, "Do you know why the tomb was empty?"  "Oh yes!" Jeremy exclaimed.  "Jesus was killed and put in there.  Then his Father raised him up!"  The recess bell rang.  While the children excitedly ran out to the school yard, Doris cried. The cold inside her melted completely away.
Three months later Jeremy died.  Those who paid their respects at the mortuary were surprised to see 19 eggs on top of his casket, ….. all of them empty.

An Emotional Easter Egg Story (Abridged) - http://www.mostmerciful.com/easter-egg.htm

As we approach Easter, we are given a glimpse into the life after. Jeremy’s lesson is highlighted in today’s Gospel – John 11: 1-45. This Gospel passage talks of one of the most popular miracles of Jesus – the Raising of Lazarus from the dead. Jesus had raised quite many people from the dead; but the case of Lazarus was special. In the other cases (the son of Nain’s widow or the daughter of Jairus) Jesus was present soon after the person died. In the case of Lazarus, Jesus came to Bethany after four days. Among the Jews there was a belief that the soul of the buried person lingered on for three days in the grave and on the fourth day it departed forever and the body began to decay. So, when Jesus arrived at Bethany, it was really too late. Lazarus had begun to decay.
How many times in our lives we have felt that God came too late, or did not come when required! Mary and Martha expressed this to Jesus… “If you had been here, my brother would not have died.” (John 11: 21, 32) We expect God to come in a particular way and in a particular time; but God comes at an unexpected time and way. One of the most beautiful aspects of God is… Surprise… the God of Surprises!

We can pay attention to the words of Jesus spoken in front of the tomb of Lazarus. The first command of Jesus was: “Take away the stone.” (Jn. 11:39) To roll away the stone was not a big deal for Jesus. A word or, even a thought from him would have accomplished the task. But, Jesus wanted the people around him to do that. God would like us to do what we can, and not expect God’s intervention at every moment in our lives. The faith proclaimed by Martha began the process of this miracle. “Lord,” Martha said to Jesus, “if you had been here, my brother would not have died. But I know that even now God will give you whatever you ask.” (Jn. 11: 21-22) Jesus wanted to instill such a trust in the people standing around the tomb, who had given up on Lazarus, since it was already the fourth day. Jesus wanted to tell them, “Whether it is four days or four thousand years, God can open the graves and bring out miracles if only we trust.”    
Such a trust is expressed by the Prophet Ezekiel in the first reading given in today’s liturgy:
This is what the Sovereign LORD says: My people, I am going to open your graves and bring you up from them; I will bring you back to the land of Israel. Then you, my people, will know that I am the LORD, when I open your graves and bring you up from them. I will put my Spirit in you and you will live, declares the LORD. (Ez. 37: 12-14) Ezekiel speaks these inspiring words after his famous vision of the valley in which dry bones turn into a mighty army. (Ez. 37: 1-11)

Opening the grave or rolling away the tomb stone is our job and giving life is God’s work. But, there was a problem with the rolling away of the stone. Martha expressed this problem directly to Jesus: “But, Lord,” said Martha, the sister of the dead man, “by this time there is a bad odour, for he has been there four days.” (Jn. 11: 39) Martha, although a very practical lady, was still living in the past and Jesus invited her to live in the present and in the future. Martha is an example for many of us who wish to live in the past, especially with the past hurts, unpleasant memories… We tend to carry around the dead weight of the past.

I am reminded of a story… a repulsive story, perhaps… but one with a very good lesson. In Virgil, there is an account of an ancient king, who was so unnaturally cruel in his punishments that he used to chain a dead man to a living criminal. It was impossible for the poor wretch to separate himself from his disgusting burden. The carcass was bound fast to his body -- its hands to his hands; its face to his face; the entire dead body to his living body. Then he was put into a dungeon to die suffocated by the foul emissions of the stinking dead body…
(http://www.cbcisite.com/Sunday%20Homily.htm) The story is surely very repulsive. But quite many of us live with such repulsive habits… the habit of carrying the past with us… especially past hurts!

The second command of Jesus was: “Lazarus, come out!” (Jn. 11: 43) Lazarus who was buried for four days came out just as he was buried. We can surely learn to believe that many of our dreams buried deep within can come alive if only we could hear God’s call. We need to be sensitive to hear this call echoing in the tombs we have built over our dreams and hopes.

The third command of Jesus was: “Take off the grave clothes and let him go.” (Jn. 11: 44) Even though Lazarus could walk out of the tomb, he still needed the help of others to set him completely free. We need to learn how to untie the knots and chains people are bound with. If we fail to do so, there is every possibility that these persons would not be able to emerge out of their graves.

Raising people from the dead is surely not within our power… that is left to God. But we can surely do our bit… We can roll the stone away, we can untie the people who have managed to come out of their graves. If in case we are buried, we can hear God’s call and come out of our tombs.

Raising of Lazarus

குணமாக்க முடியாத ஒரு நோயுடன் பிறந்த ஜெரமியின் (Jeremy) உடலும் மனமும் வளர்ச்சியில் குன்றியிருந்தன. அவனது வாழ்நாட்கள் எண்ணப்பட்டிருந்தன. 12 வயதான ஜெரமி, 6 வயது குழந்தைகளுடன் படித்துவந்தான். வகுப்பு நடக்கும்போது, சில நேரங்களில் கத்துவான். அபூர்வமாக, ஒரு சில நேரங்களில் அவன் தெளிவாகப் பேசுவான். உடலின் பல செயல்பாடுகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லாததால், வகுப்பில் சங்கடமானச் சூழல்கள் எழுந்தன.
வகுப்பின் ஆசிரியர் டோரிஸ் (Doris) பொறுமை இழந்தார். ஜெரமியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, அவர்கள் மகனை ஒரு சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி அவர் கூறியபோது, அவர்கள் இருவரும் கண்கலங்கி நின்றனர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் சிறப்புப் பள்ளிகள் ஏதும் இல்லை என்றும், ஜெரமிக்கு அந்தப் பள்ளி மிகவும் பழகிப் போய்விட்டதால், அவனை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது அவனை மிகவும் பாதிக்கும் என்றும் கூறி, ஆசிரியரிடம் விண்ணப்பித்தனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்ட ஆசிரியர், அரைகுறை மனதோடு இணங்கினார்.
உயிப்புத் திருநாள் நெருங்கி வந்தது. ஆசிரியர் டோரிஸ் அவர்கள், இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு விளக்கிக் கூறினார். பின்னர், வகுப்பில் இருந்த 19 குழந்தைகளிடமும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் முட்டையைக் கொடுத்தார். புது வாழ்வைக் குறிக்கும் ஏதாவது ஓர் அடையாளத்தை, அந்த முட்டையில் போட்டு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். குழந்தைகள் அனைவரும் மகிழ்வுடன் பிளாஸ்டிக் முட்டையைப் பெற்றுக்கொண்டனர். ஜெரமி, பிளாஸ்டிக் முட்டையை வாங்கியபோது ஒன்றும் பேசவில்லை. தான் சொன்னது அவனுக்கு விளங்கியிருக்குமா என்று ஆசிரியர் குழம்பி நின்றார்.
அடுத்தநாள் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், அவரது மேசைமீது 19 முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் முதல் முட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஒரு சின்னப் பூ வைக்கப்பட்டிருந்தது. புது வாழ்வுக்கு, பூத்திருக்கும் மலர் ஓர் அழகிய அடையாளம் என்று கூறிய ஆசிரியர், அந்த முட்டையைக் கொண்டு வந்த சிறுமியைப் பாராட்டினார்.
அடுத்த முட்டைக்குள் ஒரு பிளாஸ்டிக் வண்ணத்துப் பூச்சி இருந்தது. கூட்டுப் புழுவிலிருந்து அழகாக வெளியேறும் வண்ணத்துப் பூச்சி புது வாழ்வுக்கு தகுந்த அடையாளம் என்று ஆசிரியர் அடுத்த சிறுமியைப் பாராட்டினார்.
மூன்றாவது முட்டையை எடுத்த ஆசிரியர், திகைத்து நின்றார். அந்த முட்டையில் எதுவும் இல்லை, காலியாக இருந்தது. அதைக் கொணர்ந்தது ஜெரமியாகத்தான் இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கணித்தார். தான் சொன்னதை ஜெரமி புரிந்துகொள்ளாததால் அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணி, ஆசிரியர் டோரிஸ், அந்த முட்டையை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்ததை எடுக்கச் சென்றார்.
அப்போது, ஜெரமி கையை உயர்த்தி, "மிஸ், என்னுடைய முட்டையைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!" என்று சொன்னான். "ஜெரமி, உன் முட்டையில் எதுவும் இல்லையே, என்ன சொல்வது?" என்று ஆசிரியர் கேட்டார்.
"மிஸ், இயேசுவின் கல்லறை காலியாகத்தானே இருந்தது" என்று சிறுவன் ஜெரமி சொன்னதும், ஆசிரியர் அதிர்ந்துபோனார். வகுப்பில் அமைதி நிலவியது. ஜெரமி தொடர்ந்து, "இயேசு கொல்லப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை உயிர்ப்பித்தார். எனவே, கல்லறை காலியானது" என்று தெளிவாகக் கூறினான். ஆசிரியர் டோரிஸின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மூன்று மாதங்கள் சென்று, சிறுவன் ஜெரமி இறைவனடி சேர்ந்தான். அவனை வைத்திருந்த அந்தப் பெட்டிக்கு மேல், 19 முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும், ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தன.

உயிர்ப்புத் திருநாளை நெருங்கி வந்துள்ளோம். இவ்வேளையில், கல்லறை காலியாகும், நமது வாழ்வு தொடரும் என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியாக வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45).

இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை, இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுகிறது. இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.

யோவான் நற்செய்தி 11: 21-22
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்என்றார். மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, இவர்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்ட தங்களையும், தங்கள் திருஅவையையும், இறைவன், உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இயேசு, இலாசரை உயிருடன் கொணர்ந்த புதுமை உதவியது.

இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புத காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 திருவசனங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37: 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.  

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, எதுவாக இருந்தாலும், கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இப்புதுமையை நிகழ்த்த, கடவுள் நம் ஒத்துழைப்பை விரும்புகிறார். இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன் நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். இயேசு தன் வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது நமக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க, இயேசு புதுமைகள் செய்யவில்லை. புதுமைகளின் வழியே மக்களின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். இயேசு அவர்களது அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையை மூடியிருந்த கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். அல்லது, நம்மை நாமே இவ்விதம் புதைத்துக் கொண்ட நேரங்களை நினைத்துப் பார்ப்போம்.

புகழ்பெற்ற உரோமையக் கவிஞர் Virgil, ஓர் அரசனைப் பற்றிக் கூறும் கதை (வரலாறு?) இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசர் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டி விடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல் இத்தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இச்சித்ரவதையை நம்மில் பலர் நமக்கே கொடுத்துக் கொள்கிறோம்.. இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம். அல்லது, எத்தனை முறை இது போல் பிணங்களுடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம். நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து "வெளியே வாருங்கள்" என்று இயேசு இன்றைய நற்செய்தி வழியாக நம்மை அழைக்கிறார்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மை, கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக் கொணரவேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.