Jesus riding into Jerusalem on a donkey
All eyes on India … at least
the eyes of the media and the business world. The people belonging to the
greatest democracy in the world are exercising their democratic power these
days. Yes, India
has gone to elections from April 7th. For the past three months or more,
India
had witnessed innumerable processions and meetings organised by the political
parties. Almost all these meetings have been a show of strength for the
different leaders. This show of strength is usually achieved by ‘buying’ people!
Against such an ‘organised
artificiality’, there have been processions and meetings that showed the
spontaneous ‘people power’. One can think of the following Anna Hazare had when
he emerged as a charismatic leader in 2011. His call to abolish corruption in India met with
overwhelming, spontaneous response from the people – from the elite to the illiterate!
Unfortunately, this ‘people power’ was nullified by some political power games
in the following months.
Such ‘people power’
was evident in countries like Tunisia ,
Egypt , Libya , and in many other countries
in 2011. People in these countries gathered together without much pre-planning.
The spontaneity and enthusiasm of the people in the above instances shook the
so-called ‘well-established-powers’!.
This was the case
2000 years ago. People power took to the streets in Jerusalem . All of a sudden, the Roman and Temple powers were shaken by a tornado which came in the
form of Jesus, when he was given a warm welcome by the people of Jerusalem ! This is what
we celebrate on Palm Sunday.
When I was
searching for thoughts on the Palm Sunday, I came across a historic event,
namely, “Palm Sunday Tornado 1920” – I could not have asked for a better
starting point for my refelctions. Palm Sunday and Tornado seem like a perfect match which unfold many a
thought.Tornadoes, I am told,
are a common feature in the U.S., especially in the months of March and April.
Here is the excerpt from an article in Wikipedia:
The Palm
Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant
tornadoes across the Midwest and Deep South
states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215
injured.
Here is
another excerpt from the same article that acknowledges the discrimination
prevalent in those days. According to Thomas P. Grazulis, head of the
Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920,
could have easily been much higher, since the deaths of non-whites were omitted
as a matter of official state protocol, even when it came to fatalities from
natural disasters.
Right
through human history discrimination has ruled supreme. Among the Israelites
too there were those who did not count. These ‘non-countable’ people created a
tornado in Jerusalem
when Jesus entered the city. Most of the people in Jerusalem , especially those in power, were
caught off-guard by this ‘intruder’ called Jesus and His ‘non-countable’ people.
Tornado has
another name ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry
into Jerusalem
must have turned the lives of the religious leaders and the Roman officials
topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the
religious leaders – namely, the Temple
– and began to put things in order. Putting things in order? Well, depends on
which perspective one takes. For those in power, things were thrown completely
out of gear; but for Jesus and for those who believed in His ways, this was a
way to set things straight. This is typical of a tornado… uprooting, turning
things topsy-turvy. A tornado is, possibly, a call to begin anew!
With the
Palm Sunday begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What
is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial
of another friend, the mock trial, the condemnation of the innocent and the
brutal violence unleashed on Jesus…? None of these comes close to the
definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’.
By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine
God – a God who was willing to suffer. He had already defined love as “Greater
love has no one than this, that someone lay down his life for his friends.”
(John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for
friends, then God’s love can go further… to lay down His life for all,
including the ones who were crucifying Him. Such a God would normally be
unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He
had also redefined holiness and made it very clear that in spite of all the
events that took place during this week, one could call this week Holy since these
events resulted in the Supreme Sacrifice. Death by crucifixion was the most
painful torture the Romans had invented. The cross was the most despised form
of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has made
this most derogatory symbol of punishment and death into a symbol of veneration
and a channel of salvation. The crucified Jesus has turned the lives of
millions upside down.
One
final thought. The
Palm Sunday is also celebrated as the World Day of the Youth by the Catholic
Church. Tomorrow, April 14, people belonging to the Tamil culture celebrate the
New Year Day. Every New Year brings to mind new resolutions. These resolutions
are usually meant to better one’s personal life. But, there have been great
thinkers and poets who have also dreamt of the betterment of human society in
general. One such poet is Bharathi Thasan, who took up this pen name since he
was a great admirer of Bharathi, the immortal Tamil poet. Bhrathi Thasan has
dreamt of a world where selfishness and war are to be weeded out.
These lines
of Bharathi Thasan comes to mind, because tomorrow, April 14, is also ‘Global
Day of Action on Military Spending (GDAMS)’. Each Spring, the Stockholm
International Peace Research Institute (SIPRI) releases global military
spending.
Summarizing
some key details from the SIPRI’s Year Book 2013 summary on military
expenditure:
- World military expenditure in
2012 is estimated to have reached $1.756 trillion;
- The total is higher than in any
year between the end of World War II and 2010;
- This corresponds to 2.5 per
cent of world gross domestic product (GDP), or approximately $249 for each
person in the world;
249 dollars per each person in
the world will be a great resource to wipe out poverty and famine around the
globe. That is a surer way to peace than to pile up arms to safe-guard peace!
Palm Sunday, World Day of the Youth and Global
Day of Action on Military Spending when taken together, seem to reflect the
dream of the Prophet Zechariah. The entry of Jesus into Jerusalem
was already dreamt by the Prophet Zechariah as a process of ‘disarmament’: Rejoice greatly, O Daughter of Zion ! Shout, Daughter of Jerusalem ! See, your king comes to you,
righteous and having salvation, gentle and riding on a donkey, on a colt, the
foal of a donkey.
This dream is further expanded to
include the mission of this king:
I will take away the chariots
from Ephraim and the war-horses from Jerusalem ,
and the battle bow will be broken. He will proclaim peace to the nations. His
rule will extend from sea to sea and from the River to the ends of the earth. (Zechariah 9: 9-10)
Isn’t this our dream too? A world
without weapons? A world without war?
May the Prince of Peace as envisaged
by Zechariah, the Palm Sunday Tornado, bring true peace to so many countries
torn by war and hatred. May the Youth, the architects of a ‘world without war’
dream of peace!
WRI (War Resisters’
International) statement
on the Global Day of Action on
Military Spending
உலகின் மிகப்பெரும் குடியரசின் மக்கள் தங்கள் கைவசம் உள்ள ஒரே
ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆம், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி
முடிய இந்தியாவின் எதிர்கால வரலாற்றை மக்கள் எழுதி வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
இடம்பெறும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல், இம்முறை, பல்வேறு
எதிர்பார்ப்புக்கள், ஐயங்கள், அச்சங்கள் மத்தியில்
நடைபெற்று வருகின்றது.
கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் கூட்டங்களும், ஊர்வலங்களுமாய்
நாடு ஒலி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தேர்வுகளை எழுதும் இளையோர், குழந்தைகள், வயதில் முதிர்ந்தோர், நோயுற்றோர்
என்று பலரின் தேவைகளைப்பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல்,
அரசியல் தலைவர்கள் நடத்திய கூட்டங்களும், கூச்சல்களும் தற்போது
ஓரளவு அடங்கியுள்ளன.
பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஊர்வலங்களும்
ஒருவரது பெருமையை, சக்தியைப் பறைசாற்ற மேற்கொள்ளப்படும் செயற்கையான
முயற்சிகளே. இவற்றிற்கு முற்றிலும் மாறாக, 2011ம் ஆண்டு,
புது டில்லியில் ஏப்ரல் 5ம் தேதி ஒரு முயற்சி ஆரம்பமானது. இந்தியச் சமுதாயத்தின் கழுத்தை
ஒரு கருநாகமாய்ச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கும் ஊழலைக் கேள்விகேட்க, கட்டுப்படுத்த
Jan Lokpal மசோதா,
சட்டமாக்கப்பட வேண்டுமென்று, 72 வயதான Anna Hazare அவர்கள், புது டில்லியில் ஆரம்பித்த
‘சாகும்வரை உண்ணாவிரதம்’ என்ற போராட்டம் பல இலட்சம் மக்களின் கவனத்தை
ஈர்த்தது. அறிக்கைகளும், விளம்பரங்களும் அதிகமின்றி திரண்ட இந்த மக்கள்
ஆதரவு, மத்திய அரசை ஆட்டிப்படைத்தது. உயர்ந்ததொரு நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்
போராட்டத்திலும், அதைத் தொடர்ந்து உருவான மக்கள் இயக்கத்திலும், இப்போது அரசியல் கலந்துவிட்டதைக்
காணும்போது மனம் வேதனைப்படுகிறது.
இதே 2011ம் ஆண்டில், எந்த முன்னேற்பாடும், முன்னறிவிப்பும் இல்லாமல்
திரண்ட மக்கள் சக்தியை, மக்களின் விடுதலை வேட்கையை, நாடுகள் பலவும்
கண்டன. துனிசியாவில் ஆரம்பமான இந்தப் புரட்சி, பின்னர், எகிப்து, லிபியா என்று
பல நாடுகளில் பரவியது. மக்கள் சக்தியை உணர்த்திய இக்கூட்டங்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கையை
வளர்த்தன. அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தின. இத்தகைய
ஒரு கூட்டம், ஓர் ஊர்வலம், இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னர், எருசலேம்
நகரில் நடந்தது. அந்த ஊர்வலத்தை நாம் குருத்து ஞாயிறென்று கொண்டாடுகிறோம்.
இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக
ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்து ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday
Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில்
1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்து ஞாயிறன்று உருவான சூறாவளிக்காற்று, மழை, புயல் இவற்றால்
பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர்.
1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மார்ச் முதல், ஜூன் முடிய உள்ள
நான்கு மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி
சூறாவளிகள். சூறாவளி தாக்கும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் கொண்டாடப்படுகிறது.
குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்துச் சிந்திப்பது,
பொருளுள்ளதாகத் தெரிகிறது. முதல் குருத்து ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம்
நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப்
போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி
அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு
பெயர்த்து, வேறு இடங்களில் சேர்க்கும், அனைத்தையும் தலைகீழாகப்
புரட்டிப்போடும்.
இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்து
ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம். இயேசு தன் பணிவாழ்வை
ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக
மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்தக் குருத்தோலை
ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம்
கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலைகீழாக்கினார்.
எனவே, இந்தக் குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப்போட்ட
ஒரு சூறாவளிதானே!
போட்டிகளில், போரில் வெற்றிபெற்று
வரும் வீரர்களுக்கு குருத்தோலை வழங்குவது உரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ
சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம்
குருத்தோலை. வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும்
குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள்
வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக.
போட்டியில் ஒருவர் வெற்றிபெற்றால், மற்றவர்கள் தோற்க
வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போர்க்களத்தில்
கிடைக்கும் வெற்றிக்கு, பல்லாயிரம் உயிர்கள் பலியாகவேண்டும்.
போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும்
வெற்றியைப் பெற்றுத்தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், வரலாற்றில்
புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஓர் இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும்
வாழ்கிறார். இனியும் வாழ்வார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர்
சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன்
வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் அவர்கள், இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று
சிந்திக்க வேண்டியதொன்று:
"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல.
அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம்.
இவற்றை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின்
பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக
உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."
ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது
வியப்புக்குரியதுதான். வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான
பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும்
அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, மற்றவரின்
இரத்தமின்றி, அதேநேரம், தன் இரத்தத்தால்,
இயேசு என்ற மன்னன் உருவாக்கிய இந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது. இந்த
அரசைப் பறைசாற்ற திருஅவை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு.
இறுதியாக ஒரு சிந்தனை: ஏப்ரல் 14, இத்திங்களன்று, தமிழ் புத்தாண்டு
நாளைக் கொண்டாடுகிறோம். புத்தாண்டு நாளன்று வாக்குறுதிகள் எடுப்பது பல கலாச்சாரங்களிலும்
காணப்படும் வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும்
வாக்குறுதிகள் இவை. தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல, சமுதாய வாழ்வையும்
மேம்படுத்த, கனவுகள் தேவை, கனவுகளை
நனவாக்க மனஉறுதியுடன் கூடிய வாக்குறுதிகள் தேவை.
தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும்
தேவையான கனவை, வாக்குறுதியாக முழங்கிச் சென்றுள்ளார், புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன். அவர் முழங்கிய வாக்குறுதி இதோ:
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு
செய்வோம்)
பாரதிதாசனின் இவ்வரிகளை இன்று எண்ணிப்பார்க்க ஒரு முக்கியக்
காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14, இத்திங்களன்று, ஓர் உலக
நாள் கடைபிடிக்கப்படுகின்றது. "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்"
உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் இராணுவச்
செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. 2012ம் ஆண்டு உலக நாடுகள் இராணுவத்திற்கு
செலவிட்ட மொத்தத் தொகை... 1,75,300 கோடி டாலர்கள்.
அதாவது, 1,05,18,000 கோடி ரூபாய். இத்தொகையின் பிரம்மாண்டத்தை
வெறும் பூஜ்யங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இத்தொகையைக் கொண்டு
வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தால், நம் உலக அரசுகளின்
மதியற்ற இராணுவ வெறியைப் புரிந்துகொள்ள முடியும்.
2012ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்டத் தொகையை
உலகில் உள்ள மனிதர்களுக்குப் பிரித்துக்கொடுத்தால், ஒவ்வொருவருக்கும்
249 டாலர்கள், அதாவது, 14,940 ரூபாய்
கிடைக்கும். இத்தகைய நிதி உதவி கிடைத்தால், அனைவரும் பாதுகாப்பு
உணர்வுடன் வாழமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாது... இல்லையா?
குருத்து ஞாயிறு, அதைத் தொடரும் தமிழ்
புத்தாண்டு நாள், அதே நாளில் கடைபிடிக்கப்படும் "இராணுவச்
செலவை எதிர்க்கும் நாள்" ஆகிய அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும்போது, அமைதியின்
மன்னன் இயேசு எருசலேமில் நுழைவதை குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகள்
நம் எண்ணங்களில் எதிரொலிக்கின்றன:
இறைவாக்கினர் செக்கரியா
9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி.
இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்:
கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய
மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில்
குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான
வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு
கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல்
நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல்
போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே
கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார்.
இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில்
நுழைய வேண்டுவோம்.
சிறப்பாக, தங்கள் எதிர்காலம் வளமாக அமையவேண்டும் என்ற
கனவோடு, தகுதியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டிருக்கும் இந்திய மக்களின் கனவுகள் நனவாகவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
அத்துடன், ஒவ்வொரு குருத்து ஞாயிறன்றும் கத்தோலிக்கத்
திருஅவை உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது.
போரற்ற புத்தம் புது பூமியை உருவாக்கும் முக்கியச் சிற்பிகள் இளையோர் என்பதால், அவர்களை
இறைவன் இன்று சிறப்பாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் மன்றாடுவோம்.
No comments:
Post a Comment