27 July, 2014

Discovering True Values… உண்மை மதிப்பை உணர்ந்திட…

First World War centenary logo

We begin this Sunday’s reflection with Monday. Yes, Monday, July 28, is a special day in the history of the world. It was on July 28, 1914, the European War (or, as it was popularly known, World War I) began. More than 9 million lives were lost during this senseless tragedy. When the war ended four years later, the human family resolved never again to wage war. But, this was not to be! Two decades later, (1939 to 1945) World War II erupted, resulting in the massacre of 50 to 85 million lives. No one is even sure about the number of deaths… hence, this large variation in the estimation! The chief architect of this massacre was identified as Hitler, with his deranged mind.

As we commemorate the First Centenary of the First World War, we are sadly aware that every decade has produced many more monsters of massacre. Right now, the senseless massacre that is going on in Gaza, is a powerful reminder to us that when power is invested in the hands of deranged minds, innocent people will have to pay a heavy price. So, we begin our Sunday Reflection with a prayer for peace.

We pray that the world leaders, especially those in Israel and Palestine, will be gifted with wisdom, as was gifted to Solomon. We read in today’s first reading – I Kings 3: 5,7-12 – that Solomon begs of God to give him wisdom with the specific purpose of ruling God’s people justly:  “Give thy servant therefore an understanding mind to govern thy people, that I may discern between good and evil” (I Kgs 3:9) was Solomon’s supplication. God appreciates Solomon in the following words: “Because you have asked this, and have not asked for yourself long life or riches or the life of your enemies, but have asked for yourself understanding to discern what is right, behold, I now do according to your word. Behold, I give you a wise and discerning mind, so that none like you has been before you and none like you shall arise after you.” (I Kgs. 3: 11-12)
My critical mind involuntarily raised the question: Which of the present day world leaders would have asked for an understanding and discerning mind over wealth, vengeance and long life! I could come up with… zero… none!

Of all the riches and treasures one can desire in this world, a discerning mind is a gift of the highest order. Today’s Gospel gives us an opportunity to think of the treasures that we bump into in our life’s journey. The parables of the hidden treasure in the field and the pearl of great value give us an opportunity to reflect on the treasures we receive from God.
Our first thoughts are on the words ‘treasure’ and ‘pearl’. Treasure usually refers to a valuable object we discover from the earth. Many times, this treasure is a precious stone like a diamond. When Jesus compares the treasure and the pearl to the kingdom of heaven, my mind was thinking of the ‘diamond’ and the ‘pearl’ as symbols of the Kingdom.

The way a ‘diamond’ and a ‘pearl’ are formed, gives us some clues about the characteristics of the Kingdom. Carbon molecules, under great pressure and temperature, become a diamond. I guess the higher the pressure and greater the temperature, the diamond formed, will be of greater value. Similarly, in our lives, the values of the kingdom tend to shine forth when great pressure and temperature affect us. The way a carbon molecule responds to pressure and temperature can be a lesson for us!
Turning our attention to the ‘pearl’, we find that when a foreign element – like a water drop – enters the oyster, it creates a protective shell around the ‘intruder’ and this turns out a pearl. This again shows how when unwanted, uninvited elements creep into our lives, we need to make them into ‘pearls’. Thus the first lesson taught by a diamond and a pearl is that struggles bring out the best in us. Similarly, the Kingdom values are formed not in a cozy milieu, but more often amidst opposition.

‘Diamond’ (Treasure) or ‘pearl’, although precious in themselves, need a person to acknowledge their preciousness. A ‘treasure’ buried in the ground and a ‘pearl’ enclosed inside an oyster at the bottom of an ocean, do not become valuable, unless someone discovers them. Similarly, the precepts of the Kingdom are valuable only when there are those who discover them and follow them.

Discovering these precious ‘treasures’ is an art. Not every one of us does this. Here is a small anecdote that reflects on how we, although surrounded and sustained by the ‘treasures’ of the Kingdom, still fail to recognise them.
More than a century ago, a great sailing ship was stranded off the coast of South America.  Week after week the ship lay there in the still waters with not a hint of a breeze.  The captain was desperate; the crew was dying of thirst.  And then, on the far horizon, a steamship appeared, heading directly toward them.  As it drew near, the captain called out, "We need water!  Give us water!"  The steamship replied, "Lower your buckets where you are."  The captain was furious at this cavalier response but called out again, "Please, give us water."  But the steamer gave the same reply, "Lower your buckets where you are!"  And with that they sailed away!  The captain was beside himself with anger and despair, and he went below.  But a little later, when no one was looking, a yeoman lowered a bucket into the sea and then tasted what he brought up: It was perfectly sweet, fresh water!  For, the ship was just out of sight of the mouth of the Amazon.  And for all those weeks they had been sitting right on top of all the fresh water they needed!  What we are really seeking is already inside us, waiting to be discovered!

‘VALUE WHAT YOU HAVE’ is a lovely incident that tells us how we fail to see the treasures that surround us:
The owner of a small business, a friend of the poet Olavo Bilac, met him on the street and asked him, “Mr Bilac, I need to sell my small farm, the one you know so well. Could you please write an announcement for me for the paper?”
Bilac wrote: “For sale: A beautiful property, where birds sing at dawn in extensive woodland, bisected by the brilliant and sparkling waters of a large stream. The house is bathed by the rising sun. If offers tranquil shade in the evenings on the veranda.”
Some time later, the poet met his friend and asked whether he had sold the property, to which he replied: “I’ve changed my mind when I read what you had written. I realised the treasure that was mine.”
Sometimes we underestimate the good things we have, chasing after the mirages of false treasures. We often see people letting go of their children, their families, their spouses, their friends, their profession, their knowledge accumulated over many years, their good health, the good things of life. They throw out what God has given them so freely, things which were nourished with so much care and effort.
Look around and appreciate what you have: your home, your loved ones, friends on whom you can really count, the knowledge you have gained, your good heath… and all the beautiful things of life that are truly your most precious treasure…

It is not enough to discover the ‘treasures’, but pay the price for them. The persons in today’s Gospel ‘sold all that they had’ in order to get the treasure and the pearl. This is possible only when we see the great value of the discovery we have made. The world today seems to define ‘value’ only in terms of ‘useful’ and ‘profitable’. This ‘commercial’ yardstick tends to measure even our relationships in these terms. From this perspective, senior persons, sick persons are ‘measured’ as of less or no value at all… Hence, they can be disposed, thrown away. Pope Francis keeps warning us quite often about this ‘throw-away’ culture that tends to blunt our conscience.

As we hear the parables of the treasure and the pearl, we pray that we may have the eyes and heart to discover the innumerable treasures God has stacked up inside and around us. May we become bold to sacrifice everything we have in order to possess the values of the Kingdom! Above all, may this Monday, July 28, serve as a strong reminder to us that we lose everything and gain nothing by war!

Pearl of Great Price

மூன்றாவது வாரமாக, ஞாயிறு நற்செய்தி வாசகங்கள், நம்மை வயல்வெளிக்கு அழைத்து வந்துள்ளன. முதல் வாரம், நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் பற்றியும், இரண்டாவது வாரம், விதைகளோடு விதைக்கப்பட்ட களைகளைப் பற்றியும் சிந்தித்த நாம், இன்று, நிலத்தில் மறைந்து கிடக்கும் புதையலைப் பற்றிச்  சிந்திக்க அழைப்பு பெற்றுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. வலைபற்றிய உவமைக்கு இன்றைய நற்செய்தியில் முழு விளக்கமும் தரப்பட்டுள்ளது. எனவே, நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற மற்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

மனித வரலாற்றில், 'புதையல்' என்ற சொல், பொதுவாக பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். உலகின் பல நாடுகளில், பூமிக்கடியிலிருந்து கிடைத்துள்ள வைரங்கள், அரச மகுடங்களில் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசைப் பற்றிய அழகிய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றன.
வைரத்தை குறிப்பிடும் 'diamond', என்ற ஆங்கிலச் சொல், 'உடைக்க முடியாத' என்ற பொருள்படும் 'adamas' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. உடைக்க முடியாத வைரத்தைப் போல, இறையரசும் உடைக்கமுடியாத உறுதி பெற்றது என்பது நாம் பெறும் முதல் தெளிவு.
அதிக மதிப்பின்றி, காலடியில் மிதிபடும் நிலக்கரியே வைரமாக மாறுகிறது என்பது நாம் கற்றுக்கொள்ளும் அடுத்த வியப்பான பாடம். பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அங்கு உருவாகும் வைரமும் உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல்வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளும் மனதில் உருவாகின்றன என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

வைரத்திலிருந்து நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதமும் நமக்கு இறையரசின் மற்றொரு பண்பைச் சொல்லித் தருகிறது. வெளி உலகிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது.
அதேபோல், நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை, நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்.

புதையலும், முத்தும் நமக்கு மற்றொரு பாடத்தையும் சொல்லித் தருகின்றன. புதையலும், முத்தும் தன்னிலேயே மதிப்பு மிக்கவை என்றாலும், யாராவது ஒருவர் அவற்றைக் கண்டெடுக்கும்போதுதான் அவற்றின் மதிப்பு முழுமையாக வெளிப்படும். பூமிக்கடியில், மண்ணில் புதைந்திருக்கும் புதையலுக்கோ, ஆழ்கடலில் சிப்பிக்குள் சிறைப்பட்டிருக்கும் முத்துக்கோ மதிப்பில்லை. எப்போது அவை ஒருவருடைய கவனத்தை ஈர்க்கின்றனவோ, அப்போதுதான் அவற்றின் மதிப்பு வெளிப்படுகின்றது. அதேபோல், இறையரசு என்ற உண்மை உலகெங்கும் பரவியிருந்தாலும், அதைக் கண்டுணரும் மனிதர்கள் வழியே அதன் முழு மதிப்பும் வெளிப்படுகிறது.

மதிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. நம்மில் பலர் 'மதிப்பு' என்ற வார்த்தையை, 'விலை' என்ற வார்த்தையுடன் இணைத்திருப்போம். ஒரு பொருள், ஒரு செயல், ஒரு கருத்து இவற்றின் மதிப்பை இவ்வுலகம் 'விலை' என்ற அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இன்றைய உலகில் எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனையான போக்கு. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது.
நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட தலைவர் தேர்தலில் வென்றாலோ அல்லது தோற்றாலோ, அதுவும் பங்குச் சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது.

இவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை பேசப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம் செல்கின்றன. அன்பு, நேர்மை, தியாகம் போன்ற ஏனைய உன்னதமான அளவு கோல்களை நாம் படிப்படியாக மறந்துவருகிறோம்.
வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இலாபம், நஷ்டம் என்ற கண்ணோட்டத்தில் வாழ்வின் உறவுகளை அளப்பது ஆபத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, வயது முதிர்ந்தவர்கள் உபயோகமற்றவர்கள், அவர்களால் எவ்வித இலாபமும் இல்லை. அதேபோல், நோயுற்றோர், அதிலும் குறிப்பாக, தீராத நோயுற்றோர் எவ்வகையிலும் உபயோகமற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றனர். 'தூக்கியெறியும் கலாச்சார'த்தால் இவ்வுலகம் எவ்வளவு தூரம் சிதைந்து வருகிறது என்பதை திருத்தந்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூறி வருகிறார். அதேபோல், வர்த்தக உலகின் இலாப, நஷ்ட அடிப்படையில் நமது உறவுகள் மாறிவருவதைக் குறித்தும் திருத்தந்தை அவ்வப்போது வருத்தத்துடன் எச்சரித்து வருகிறார்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கு, இத்தகைய துணிச்சலான முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும், புதையல்களும் அடிக்கடி தோன்றினாலும், அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல், நாம் குழம்பி நிற்கிறோம். இதனை வலியுறுத்த இதோ சில கதைகள்:

Olavo Bilac என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடி வந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Olavo Bilacஇடம் கேட்டுக்கொண்டார். Bilac பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:
"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்" என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Olavo Bilac.
ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.
நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப்பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பல் பயணிகளிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்குக் கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர் தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலந்த 'டெல்டா' பகுதி என்பதை கப்பலில் இருந்தவர்கள் உணரவில்லை. சக்தியோடு பாய்ந்த நதி நீர், கடல் நீரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளிவிட்டிருந்தது. சுவையான குடிநீர் தங்களைச் சூழ்ந்திருந்தபோதும், கப்பலில் இருந்தவர்கள் தாகத்தால் தவித்தனர்.

ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர்.  பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போல, தன் பண்ணை வீட்டின் அழகை, அடுத்தவர் சொன்ன வார்த்தைகளைக் கொண்டு புரிந்துகொண்ட மனிதரைப் போலத்தான் நாமும்... வாழ்வில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களைத் தெரிந்துகொள்ளாமல் தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, அன்புள்ளங்களே, ஜூலை 28, இத்திங்கள், உலக வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்பதால், நமது சிந்தனைகளை இத்திங்களை நோக்கித் திருப்புவோம். 1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, முதல் உலகப் போர் துவங்கியது. 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த அந்தப் போரின் எதிரொலிகள் இன்னும் இவ்வுலகில் ஓயவில்லை. காசாப் பகுதியில் குடிமக்களைக் கொல்லும் இஸ்ரேல், பாலஸ்தீன வன்முறைக் குழுக்களின் வெறி இன்னும் தீர்ந்ததுபோல் தெரியவில்லை. கடந்த பத்து நாட்களில், உக்ரைன், தாய்வான், மாலி நாடுகளில் நிகழ்ந்துள்ள விமான விபத்துக்களில் ஏறத்தாழ 600 உயிர்கள் பலியாயின.
இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும்; அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் மன்னன் சாலமோன், நீடிய ஆயுள், செல்வம், எதிரிகளின் சாவு என்ற வரங்களை இறைவனிடம் கேட்காமல், "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" (1 அரசர்கள் 3: 9) என்று வேண்டியதைப் போல், உலகத் தலைவர்கள், குறிப்பாக, இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், குறிப்பாக, இவ்விரு தரப்பின் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவனிடம் வேண்டுவோம்.


20 July, 2014

Sowing weeds of violence வளரும் வன்முறைக் களைகள்


Discerning Wheat and Weeds 

We come to this Sunday’s liturgy with a heavy heart. Our heart is heavy due to the unbridled abuse of brute power unleashed by the Israel army on innocent civilians in Gaza; the senseless retaliation of the Hamas; and the mysterious crash of the Malaysian Airlines in Ukraine, killing 298 persons.
Our heart bleeds at the thought of the price paid by innocent civilians, especially children, for the senseless hatred sown and harvested by adults with warped, fundamental thinking. We bring the massacre that is going on in Gaza to this Sunday’s liturgy for two reasons: The first is – that this ‘war’ in Gaza affects all of us. The second reason is – in today’s liturgy Jesus talks of how easy it is for us to mix up the wheat and the weeds. (Matthew 13: 24-30)

The senseless massacre perpetrated in Gaza has many unseen layers by which all of us become ‘part-time-players’. Let me try to explain. Here is a mail sent by Avaaz, the voice of conscience operating via the internet. ‘The Guardian’ considers Avaaz "the globe's largest and most powerful online activist network".
This mail is titled “Israel-Palestine: This is how it ends”. Here are some extracts that give us an idea that ‘we are all in this together’.
As a new round of violence kicks off in Israel-Palestine and more children are killed, it's not enough just to call for another ceasefire. It’s time to take definitive non-violent action to end this decade long nightmare.
Our governments have failed -- while they have talked peace and passed UN resolutions, they and our companies have continued to aid, trade and invest in the violence. The only way to stop this hellish cycle of Israel confiscating Palestinian lands, daily collective punishment of innocent Palestinian families, Hamas firing rockets, and Israel bombing Gaza is to make the economic cost of this conflict too high to bear.
We know it works -- when EU countries issued guidelines not to fund the illegal Israeli settlements it caused an earthquake in the cabinet, and when citizens successfully persuaded a Dutch pension fund, PGGM, to withdraw, it created a political storm.
This may not feel like a direct way to stop the current killing, but history tells us that raising the financial cost of oppression can pave a path to peace. Click to call on 6 key banks, pension funds and businesses to pull out -- If we all take smart action now and turn up the heat, they could withdraw, the Israeli economy will take a hit, and we can turn the calculation of the extremists politically profiting from this hell upside down:
What caught my attention in this write-up was that the pension funds of unsuspecting senior citizens of other countries have been invested in Israel. It is thus that we, the unsuspecting citizens, are made ‘part-time players’ of such senseless tragedies. That is reason no.1 to bring this conflict to our liturgy and pray for lasting peace in the Holy Land! We pray that the Good Lord gives us enough wisdom to see through the manipulations of the MNCs that rope us into bloody wars!

Reason no.2 is that today’s gospel invites us to think of the wheat and the weeds that grow within us and around us. In the tragic situation prevailing in Gaza, the media, as usual, is projecting only those who sow the ‘weeds’. But, there are many persons on both sides of this conflict who are sensible and who wish to sow and reap good seeds of peace.
For instance, Adam Keller, a peace activist from Israel has invited people to join him in a Peace Demonstration in Habima Square in Tel Aviv, on Saturday, 19 July 2014, around 8 p.m. The appeal Mr Keller has sent via the media is very strong and disturbing. Here are a few lines from his appeal:
It is forbidden to shoot at civilian populations. It is forbidden and still it happens. Both sides do it. Hamas shoots on the population of Israel. The IDF shoots at the population of Gaza.
Two equal sides? Far from it. The State of Israel has enormous military and economic strength. With massive financial assistance from the United States the State of Israel built the “Iron Dome” system, a great technological achievement which protects us. Therefore, the missile attacks on Israeli cities are mostly a nuisance. The air raid alarms are irritating, a bit disruptive to the routine of life, sometimes frightening – but not much more.
Gazans have no Iron Dome, no protection whatsoever against the death which falls down on them from the air and the sea and the land. The State of Israel is pounding Gaza, killing and killing and killing. True – The State of Israel has no premeditated purpose of killing innocent civilians, women and men and the elderly and children playing football on the beach. There is no premeditated purpose – but there is a reality. The killing of unarmed civilians in Gaza is going on, day by day and hour by hour. More than two hundred Palestinians have been killed. A large part of them were unarmed civilians, dozens of them were children. And it goes on.
Hence, Adam Keller, founder member of the Israeli peace campaign Gush Shalom, is inviting people to join with peace and human rights organizations in a protest against the cruel and unnecessary war called ” Operation Protective Edge”.
When I read this powerful write-up of Mr Keller, I did make a background check on who this person is. I was impressed by the information given in Wikipedia about this person:

Adam Keller (born 1955 in Tel Aviv-Yafo) is an Israeli peace activist who was among the founders of Gush Shalom, of which he is a spokesperson… Keller has served several prison terms for refusing reserve military duty in the 1967-occupied territories. In April-May 1988, Reserve Corporal Adam Keller was charged with "insubordination" and "spreading of propaganda harmful to military discipline" in that while on active military duty he had written on 117 tanks and other military vehicles graffiti with the text: "Soldiers of the IDF, refuse to be occupiers and oppressors, refuse to serve in the occupied territories!" as well as placing on electricity pylons in the military camp where he was serving - and on inside doors of the stalls in the officers' toilet - stickers with the slogans "Down with the occupation!". Keller was convicted and sentenced to three months imprisonment. (Wikipedia)

Whether the peace demonstration that took place in Tel Aviv will bear fruit or not… only time will tell. We know that weeds grow faster than regular plants of grain. Hence, they are more easily seen. The weeds of violence that sprout by the dozens daily get easy media coverage, while so many positive efforts take longer time to bear fruits.
It requires a lot more patience to grow a regular plant. This is the key theme in today’s parable. The owner of the fields is presented as the personification of patience. When his workers wanted to gather the weeds, this is the wise response of the owner: 'No; lest in gathering the weeds you root up the wheat along with them. Let both grow together until the harvest; and at harvest time I will tell the reapers, Gather the weeds first and bind them in bundles to be burned, but gather the wheat into my barn.' (Mt. 13: 29-30)

While weeds of violence make headlines day after day, the wheat of peace and reconciliation take longer time to grow. They require lots of patience. They may never make the headlines at all. Hence, they require perseverance too!
Patience, perseverance, prayer are the key themes proposed by Pope Francis in restoring peace in the land where the Prince of Peace was born! Let us join the Holy Father in this peace effort with determination!


Israel-Palestine - This is how it ends - Avaaz Campaign

கனத்த இதயத்துடன் நாம் இந்த ஞாயிறு சிந்தனையைத் துவக்குகிறோம். இரத்தவெறி கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்றுவரும் இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளை எண்ணியும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, உக்ரைன் நாட்டில் எரிந்து விழுந்த மலேசிய விமானத்தில் உயிரிழந்தோரை எண்ணியும் நம் மனம் கனத்துப் போயுள்ளது.
உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ சில நாடுகள் சண்டையிடுவதை நாம் ஏன் ஞாயிறு சிந்தனைக்குக் கொணரவேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்று உலகின் எந்த ஒரு மூலையில் பிரச்சனைகள் வெடித்தாலும், அவை உலகில் ஏனைய நாடுகளையும், அங்கு வாழும் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல், இரு சிறு நாடுகளுக்கிடையே நிகழும் பிரச்சனை அல்ல. அதன் பின்னணியில் பல நாடுகள், பல பன்னாட்டு நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுடன் தொடர்புகொண்டுள்ள நாம் என்று அனைவரும் இந்தப் பிரச்சனையின் ஒரு பகுதியாகிறோம்.

இஸ்ரேல் இராணுவம், வரைமுறை ஏதுமில்லாமல், அப்பாவி மக்கள் மீது தன் படைபலத்தைக் காட்டிவருகிறது என்றால், அந்த நாட்டை, அந்நாட்டின் இராணுவத்தை அத்தனை சக்தி மிக்கதாக மாற்றியதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். புரியவில்லையா? விளக்க முயல்கிறேன்.
இஸ்ரேல் நாட்டில், பல அரசுகளும், வங்கிகளும் தங்கள் பணத்தை பல வழிகளில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பணத்தின் ஒருபகுதி முதியோரின் ஓய்வுத் தொகையிலிருந்து திரட்டப்பட்ட பணம் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. தங்கள் ஓய்வு காலத்தின் பாதுகாப்பு கருதி முதியோர் தங்கள் அரசிடமும், வங்கிகளிலும் தங்கள் ஓய்வூதியத்தை செலுத்தியுள்ளனர். சில அரசுகளும், வங்கிகளும், இஸ்ரேல் அரசின் பல திட்டங்களில் இந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளன. இஸ்ரேல் அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று, அதன் வலிமை மிக்க இராணுவம். எனவே, தீர ஆய்வு செய்தால், அரசிடமும், இவ்வங்கிகளிலும் தங்கள் ஓய்வூதியத்தை ஒப்படைத்த முதியவர்களும், இஸ்ரேல் இராணுவம், தற்போது மேற்கொண்டுள்ள இத்தாக்குதல்களுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக உள்ளனர் என்பதுதானே எதார்த்தம்?

ஓய்வுகாலம் என்ற நிலத்தில் பாதுகாப்பு என்ற பயிரை வளர்க்க, முதியோர் தங்கள் பணத்தை அரசிடமும், இவ்வங்கிகளிலும் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் ஒப்படைத்த பணம், வன்முறை என்ற களைகளை வேற்று நாடுகளில் வளர்த்துவிட்டன. உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ சில நாடுகள் போரில் ஈடுபட்டால், அதில் நாமும் ஏதோ ஒருவகையில் பிணைக்கப்படுகிறோம் என்பது ஓரளவாகிலும் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த வயல்களின் உரிமையாளர்களுக்கு நல்ல விதைகளைக் கொடுத்தவரைப் பற்றி சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். அதேபோல், இவ்வுலகம் என்ற வயலில் களைகள் அதிகம் வளர்ந்தால், அதற்கு நாம் அனைவரும் பொறுப்பு என்ற உணர்வுடன் இன்றைய ஞாயிறு சிந்தனையைத் தொடர்வோம்.

இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், நிலத்தில் விதைக்கப்பட்ட கோதுமையையும், களைகளையும் குறித்து இயேசு அழகான ஓர் உவமையைக் கூறியுள்ளார். இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளிலும், அமைதியை விரும்பும் கதிர்களாக வளர்ந்துள்ள மக்கள் பல்லாயிரம். அவர்கள் நடுவே, வெறுப்பு, வன்முறை, பழிக்குப் பழி என்ற உணர்வுகளை வளர்க்கும் களைகளாக அரசுகளும், ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களும் வளர்ந்துள்ளன. இந்தக் களைகள் தற்போது, அவ்விரு நாடுகளிலும் வளர்ந்துள்ள மக்கள் என்ற கதிர்களை விழுங்கி வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் பிறந்தாலும், இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, அமைதியை நிலைநாட்ட அங்கு வளர்ந்துள்ள ஓர் அழகிய கதிரின் பெயர், Adam Keller. Tel Aviv நகரில், Gush Shalom என்ற அமைதி இயக்கத்தை நிறுவிய Adam Keller என்ற யூதர், இஸ்ரேல் இராணுவத்தில், கட்டாயத்தின் பேரில் இணைந்தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் பணியாற்ற மறுத்தார். எனவே பல முறை சிறை தண்டனை பெற்றார். அமைதியை விரும்பும் அழகிய கதிராக வளர்ந்துள்ள Adam Keller அவர்கள், ஜூலை 18, இச்சனிக்கிழமை, Tel Aviv நகரில் Habima என்ற சதுக்கத்தில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னின்று நடத்தினார். அந்தப் பேரணிக்கு அவர் விடுத்த அழைப்பில், இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடைபெறும் மோதலைக் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்:
அப்பாவி குடிமக்களைச் சுடுவது எந்த ஒரு நாட்டிலும் விதி முறைகளுக்கு முரணானது. எனினும் இரு தரப்பினரும் இந்த விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இவ்விரு தரப்பினரும் சமமான, இணையான அமைப்புக்களா? இல்லவே இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு அள்ளித்தரும் நிதி உதவியுடன் இஸ்ரேல் அரசு, தன்னைக் காத்துக்கொள்ள "Iron Dome", அதாவது, "இரும்புக் கூரை" என்ற தற்காப்புத் தொழில்நுட்பத்தைக் அமைத்துள்ளது. எனவே, Hamas நடத்தும் தாக்குதல்கள், இஸ்ரேல் பகுதியில் அதிக சேதத்தை உருவாக்காத வாண வேடிக்கைகளாக மாறுகின்றன. அதிகப்படியாக, இஸ்ரேல் மக்கள் இழப்பதெல்லாம் இரவுத் தூக்கம்தான். ஆனால், இந்த 'இரும்புக் கூரை' வசதி இல்லாத ஏழை பாலஸ்தீன குடிமக்கள், இஸ்ரேல் இராணுவத்தால் பெருமளவில் கொல்லப்படுகின்றனர்.
கடற்கரையில் கால்பந்தாட்டம் ஆடிய சிறுவர் முதல், வயது முதிர்ந்தோர் வரை, ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பலியாகின்றன. இஸ்ரேல் இராணுவமும், Hamas போராளிகளும் மேற்கொண்டுள்ள அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துமாறு, இச்சனிக்கிழமை இரவு, Habima சதுக்கத்தில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. அமைதியை விரும்புவோர், நம் எதிர்காலச் சந்ததியரைக் காப்பாற்ற விரும்புவோர் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள்.

அமைதிக் கதிர்களை வளர்க்க விரும்பும் Adam Keller அவர்கள், களைகளை அகற்றி, கதிர்களை வளர்க்கும் பணிக்கென அனைவருக்கும் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நமது ஊடகங்கள், கதிர்களை விட, களைகளைப் பற்றி பேசுவதிலேயே குறியாக இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மை. கடந்த இரு நாட்களாக ஊடகங்கள், களைகளின் தாக்கத்தைப் பற்றிக் கூறும் பல செய்திகளில் ஒன்றை இங்கே தர விழைகிறேன்:

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பங்குக் கோவிலின் அடுத்த கட்டிடம் தரைமட்டமானது. காசா பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென, அன்னை தெரேசாவின் அருள் சகோதரிகள் நடத்திவரும் இல்லத்தை ஆபத்து சூழந்ததால், அங்கிருந்த சகோதரிகள், மாற்றுத் திறன் கொண்ட 28 குழந்தைகளுடனும், வயதான 9 பெண்களுடனும் பங்குக் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், இவ்வியாழன் நடந்த தாக்குதலால் குழந்தைகளும் சகோதரிகளும் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் அருள் சகோதரி ஒருவர் (Laudis) கூறினார்.
இந்தச் செய்தியை ஆய்வு செய்யும்போது, அன்னை தெரேசா அருள் சகோதரிகள் அப்பகுதியில் ஆற்றிவரும் அன்புப் பணிகள் என்ற பயிர்களைப் பாழாக்கும்வண்ணம், இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்கள் களைகளைப் போல் வளர்ந்து, கதிர்களைக் கொன்றுவிடும் ஆபத்தை உணர்கிறோம்.

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளிடையே நிலவி வரும் அர்த்தமற்ற உயிர் புலிகளைப் பற்றி இந்த ஞாயிறு பேசுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று... பழிக்குப் பழி, அழிவு என்ற களைகளை வளர்த்துவரும் இவ்விரு நாடுகளும், அமைதிக் கதிர்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற வேண்டுதல் நம்மிடமிருந்து எழவேண்டும். இது முதல் காரணம்.
கதிர்களை வளர்க்க இவ்வுலகில் பொறுமை கூடுதலாகத் தேவை என்பதை இன்றைய உவமை நமக்குச் சொல்லித் தருகிறது. இது இரண்டாவது காரணம். கதிர்களும், களைகளும் இணைந்து வளரும் உலகிற்கு இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். அங்கு நடப்பதெல்லாம் வெறும் போர் என்ற களைகள் மட்டுமல்ல. அமைதி முயற்சிகளும் அங்கு ஏராளமாக நடைபெற்று வருகின்றன.

எடுத்துக்காட்டாக, Adam Keller என்ற அந்த அமைதி விரும்பி, இச்சனிக்கிழமை மேற்கொண்ட பேரணி, அமைதி, அன்பு, மன்னிப்பு என்ற விதைகளை விதைத்துள்ளன என்று நம்புவோம். Adam Keller நடத்திய பேரணியின் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
வன்முறை என்ற களையின் தாக்கம் உடனடியாக வெளிப்படும். ஆனால், அன்பு, அமைதி, ஒப்புரவு என்ற கதிர்கள் வளர, அவற்றின் தாக்கத்தை உணர நமக்குப் பொறுமை வேண்டும். இந்தப் பொறுமையை இன்றைய உவமையில் நில உரிமையாளர் வடிவில் நாம் காண்கிறோம். தாங்கள் விதைத்த கோதுமை கதிர்கள் மத்தியில் பகைவன் ஒருவன் களைகளை விதைத்துவிட்டான் என்பதை அறிந்ததும், பணியாளர்கள் செயலில் இறங்கத் துடித்தனர். அவர்கள் ஆத்திரத்திற்கும், ஆர்வத்திற்கும் மாற்று மருந்தாக, நிலா உரிமையாளர் அவர்களுக்கு பொறுமையின் பாடங்களைச் சொல்லித் தந்தார். இதோ நற்செய்தியின் அந்த அழகியப் பகுதி:
மத்தேயு நற்செய்தி 13: 29-30
பணியாளர்கள் அவரிடம், “நாங்கள் போய் களைகளைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், 'முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன் என்றார்.

இந்தப் பொறுமையையும், களைகள் மத்தியில் கதிர்களும் வளரும் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் புனித பூமி திருப்பயணம் முதல், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 8ம் தேதியன்று இவ்விரு நாடுகளின் தலைவர்களும் வத்திக்கான் வந்திருந்து, திருத்தந்தையின் முன்னிலையில் அமைதிக்காக வேண்டினர். இவ்வெள்ளி காலையில், இஸ்ரேல் அரசுத் தலைவர், Shimon Peres அவர்களையும், பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, தான் அவ்விரு நாடுகளுக்காக தொடர்ந்து செபித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரம் வேண்டுவோம். அமைதியின் இளவரசனாம் இயேசு பிறந்த புனித பூமியில், அமைதிக் கதிர்கள் மீண்டும் செழித்து வளரவேண்டும் என்று, திருத்தந்தையுடன் இணைந்து, அறுவடையின் தலைவராம் தந்தை இறைவனிடம் மன்றாடுவோம்.

13 July, 2014

Sowing generously அளவின்றி அள்ளி வீசப்படும் விதைகள்


Garrett Walker – The Sower

I feel happy and elated when someone says that life on earth is guaranteed as long as song, dance and story-telling live. Here is a quote from Oren Lyons, a Native American Faithkeeper: “Life will go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen.”
John Shea, an expert on the theme of ‘storytelling in world religions’, also talks of the power of stories in his famous book ‘Stories of God – An Unauthorized Biography’:
“When we reach our limits, when our ordered worlds collapse, when we cannot enact our moral ideals, when we are disenchanted, we often enter into the awareness of Mystery. We are inescapably related this Mystery which is immanent and transcendent, which issues invitations we must respond to, which is ambiguous about its intentions, and which is real and important beyond all else. Our dwelling within Mystery is both menacing and promising, a relationship of exceeding darkness and undeserved light. In this situation with this awareness we do a distinctively human thing. We gather together and tell stories of God to calm our terror and hold our hope on high.”

Every major religion in the world has given us inspiring stories of God. Many religious leaders believe that stories play a vital role in shaping our relationship with God. Most of us have grown with stories of God from our childhood. If we have not out-grown this phase, we are truly blessed.
Jesus, the master storyteller, knew the power of stories. He did not give any lengthy treatise on God and His Kingdom. Most of his teachings have been clothed in stories, imageries and parables. The religious leaders of his times presented God as a cold, distant God represented by the ‘stony laws’. Jesus, on the other hand, brought this God close to the people through His stories as a loving Father.
“Why do you speak to them in parables?” was the question addressed to Jesus in today’s Gospel. To understand why Jesus spoke in parables, we turn to Anthony de Mello, S.J. In his book ‘One Minute Wisdom’, there is a lovely story:
The Master gave his teaching in parables and stories, which his disciples listened to with pleasure - and occasional frustration, for they longed for something deeper.
The Master was unmoved. To all their objections he would say, "You have yet to understand, my dears, that the shortest distance between a human being and Truth is a story."
Another time he said, "Do not despise the story. A lost gold coin is found by means of a penny candle; the deepest truth is found by means of a simple story."

Why am I giving a ‘treatise’ on stories? Two reasons: Number One – today’s Gospel, as we mentioned earlier, brings to focus the question – why Jesus spoke in parables. Number Two – from this Sunday onwards till the Feast of Christ the King in November, we shall be journeying through 20 Sundays of the Ordinary Time in the liturgical cycle. Of these 20 Sundays, 10 Sundays present us with 10 parables of Jesus recorded in Matthew. We begin this ‘parable series’ with one of the most famous parables of Matthew - the Parable of the Sower.
When I use a phrase like ‘the most famous’, I am conscious of the danger it entails. Anything ‘famous’ tends to become ‘ordinary’ due to over-exposure. We tend to feel that ‘we have seen that and heard that’! The famous quotes and parables of Jesus are no exception to this danger. As if forestalling the danger, resulting from this ‘taken-for-granted’ attitude to the words of Jesus, He gives a warning today at the end of the parable: “He who has ears, let him hear.” (Mt. 13:9) Jesus wants us to pay attention… But, attention to what? The sower, the seed or the soil?
Traditionally we have focused almost exclusively on the terrains where the seed falls, in order to look at what is our attitude as we listen to the Gospel. However it is important to pay attention to the sower and his way of sowing.

Jesus begins the parable with a matter-of-fact statement : A sower went out to sow. The sower scatters seeds ‘along the path’, ‘on rocky ground’ and ‘upon thorns’. This action of the sower springs up the question: Was he careless or was he generous? If we reflect on this action with the idea that the seed represents God’s word, then it is better to attribute ‘generosity’ of the sower to his ‘scattering seeds everywhere’.
That’s how Jesus sowed his message. They saw him go out every morning to announce the Good News of God. He sowed his Word among the simple people who welcomed it, and also among the Scribes and Pharisees (hard rocky ground) who rejected it. Jesus was keen on scattering seeds to those surrounded by thorns of sin and sickness. He never got tired.

By depicting the reckless generosity of the sower, Jesus says that those of us who are over-cautious and calculative in sowing the seeds only on well ploughed and watered lands, are doing a disservice to the word of God. With all the available lessons on efficiency from the management gurus, we tend to measure our every effort in sowing God’s word. In spite of all our caution, God’s word still manages to have a life of its own. This is ascertained in today’s first reading from Prophet Isaiah.
Isaiah 55: 10-11
For as the rain and the snow come down from heaven, and return not thither but water the earth, making it bring forth and sprout, giving seed to the sower and bread to the eater, so shall my word be that goes forth from my mouth; it shall not return to me empty, but it shall accomplish that which I purpose, and prosper in the thing for which I sent it.

Thank God, the word of God does not depend on our plans! In fact, the reckless generosity with which Jesus scattered God’s word has been followed by many generous followers. Let me finish these reflections with a lovely story that talks of how generosity pays:
There was once a farmer who grew award-winning corn. Each year he entered his corn in the state fair where it won first prize. One year a newspaper reporter interviewed him and learned the farmer’s strategy for growing winning corn. What was it? Simply this: the farmer shared his seed corn with his neighbours.
“How can you afford to share your best seed corn with your neighbours when they are entering corn in competition with yours each year?” the reporter asked.
“Why” said the farmer, “don’t you know? The wind picks up pollen from the ripening corn and swirls it from field to field. If my neighbours grow inferior corn, cross-pollination will steadily degrade the quality of my corn. If I am to grow good corn, I must help my neighbours grow good corn.”
Source: reported in James Bender How to Talk Well (New York: McGraw-Hill Book Company, Inc., 1994) http://storiesforpreaching.com/good-corn/

Sowing the seed ‘along the path’, ‘on rocky ground’ and ‘upon thorns’ is a real challenge. The challenge become tougher when we are asked not only to sow on the fertile ground under our care, but also share good seeds with our neighbours! May our journey in the parables of Jesus become ever more adventurous!  
A final note would be to break the narrow view of ‘sowing the seed’ as ‘preaching the word of God’. Sowing the seed is more often and more effectively done by the way each one of us lives God’s word in our lives. That way this parable does not refer to the sower as those who ‘preach’ but all of us who ‘practice’!


"உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் பாடுவதற்கும், ஆடுவதற்கும், கதை சொல்வதற்கும், கதை கேட்பதற்கும் இருக்கும்வரை வாழ்வு தொடரும்" என்று அமெரிக்கப் பழங்குடியில் பிறந்த வழக்கறிஞர் Oren Lyons அவர்கள் கூறியுள்ளார். கலையும் கதையும் இவ்வுலகில் இருக்கும்வரை வாழ்க்கை தொடரும் என்பது, மனதுக்கு நிம்மதி தரும் ஓர் எண்ணம். இவ்வுலகின் இயக்கத்தையும், இவ்வுலகை இயக்கும் கடவுளையும் கலை வடிவில், கதை வடிவில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.
கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. எனவே, கதைகள் இல்லாத மதங்களே இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு குழந்தைக்கும் கடவுளை அறிமுகம் செய்ய பயன்படும் சிறந்த கருவி கதைகளே. வயதில் முதிர்ந்த பின்னரும் கதைகளின் மீது நம் ஈடுபாடு குறையாமல் இருந்தால் அதை தனிப்பட்ட ஒரு வரம் என்றே சொல்லவேண்டும். கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளைப்பற்றி, கடவுளின் அரசைப்பற்றி விரிவான இறையியல் விளக்கங்களை சொல்லித் தரவில்லை. கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இயேசு ஏன் உவமைகள் வழியே கற்பித்தார் என்பதைப் புரிந்துகொள்ள, புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டி, Anthony de Melloவின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை உதவியாக இருக்கும்:
குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள் சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."
உண்மைக்கும், நமக்கும், உண்மைக் கடவுளுக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி கதைகளே என்று இயேசு உணர்ந்திருந்தார். அதுவரை, மதத் தலைவர்களால் இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், கல்லில் பொறிக்கப்பட்ட கட்டளைகளில் உறைந்திருந்த கடவுள். அவர் மக்களிடமிருந்து வெகு தூரத்தில் வாழ்ந்துவந்தார். அத்தகையக் கடவுளை, கனிவான ஒரு தந்தையாக, கதைவடிவில், இயேசு தன் இஸ்ரயேல் மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்துவைத்தார். கதைகளைப்பற்றி, இந்த அறிமுகத்தை இன்று தருவதற்கு இரு காரணங்கள் உண்டு.

இயேசு ஏன் உவமைகளில் பேசினார் என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம் என்பது ஒரு காரணம். இன்று முதல் நவம்பர் மாத இறுதிவரை நாம் பயணம் செய்யவிருக்கும் நமது வழிபாட்டு ஆண்டில், இன்னும் 20 ஞாயிறுகள் உள்ளன. இவற்றில், 10 ஞாயிறுகள் மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய அற்புதமான உவமைகளைச் சிந்திக்கும் வாய்ப்பு பெறுகிறோம் என்பது மற்றொரு முக்கியமான காரணம். நற்செய்தியாளர் மத்தேயு தொகுத்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமை' இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. புகழ்பெற்றவை எதையும், அடிக்கடி கேட்கவும், பார்க்கவும் வாய்ப்புக்கள் எழுவதால், ", இது நமக்குத் தெரிந்ததுதானே!" என்ற ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. இயேசுவின் புகழ்பெற்ற கூற்றுக்களுக்கும் குறிப்பாக, அவர் சொன்ன புகழ்பெற்ற உவமைகளுக்கும் இதே ஆபத்து உள்ளது. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" (மத்தேயு 13:9) என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார். இவ்வார்த்தைகளை இயேசு கூறும்போது, "நான் சொன்ன உவமையைக் கூர்ந்து கவனியுங்கள்" என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
எதைக் கவனிப்பது? இயேசு கூறும் இவ்வுவமையில், விதைப்பவர், விதை, விளைநிலம் என்ற மூன்று கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில், விதை, விளைநிலம் இரண்டையும் குறித்து இயேசு விளக்கங்கள் தருகிறார். இந்த உவமையைச் சிந்திக்கும்போதெல்லாம், நமது சிந்தனைகளும் பொதுவாக விதை, விளைநிலம் என்பனவற்றையேச் சுற்றிவந்துள்ளன. இன்று, ஒரு மாற்றமாக, நாம் விதைப்பவர் மீது நமது கவனத்தைத் திருப்புவோம்.

விதைப்பவர் எடுத்துச் சென்ற விதைகள், விளைநிலத்தில் மட்டுமல்ல, சுற்றியிருந்த பாதை, பாறைகள், முட்புதர்கள் என்று பல இடங்களிலும் விழுந்தன என்று இயேசு கூறினார். இது விதைப்பவரின் கவனக்குறைவால் நிகழ்ந்ததா அல்லது, விதைப்பவர் தாராள மனதுடன் விதைகளை அள்ளித் தெளித்தாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இயேசுவின் இவ்வுவமை, இறை வார்த்தையை மையப்படுத்தியது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, விதைப்பவர் இவ்வாறு செயல்பட்டது, அவரது தாராள மனதைக் காட்டுகிறது என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.
விதை விழும் இடம், பாதையோரமாக இருந்தால் என்ன, பாறையாக இருந்தால் என்ன, முட்புதராக இருந்தால் என்ன... அவற்றிலும் விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை. பாதையோரம் விழுந்தால் பயன்தருமா? பாறையிலும், முட்புதரிலும் விதைப்பது மதியீனம் அல்லவா? என்று கணக்குப்பார்த்து, தயங்கித் தயங்கிச் செயல்படுவோர், இறை வார்த்தை என்ற விதைக்கு தடை விதிப்பவர்களே!

நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன:
இறைவாக்கினர் எசாயா 55: 10-11
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இயேசு அறிமுகப்படுத்தும் விதைப்பவர் வழியாக நமக்கு நல்லதொரு பாடத்தை புகட்டுகிறார். அதாவது, இனம், குலம், மதம், தரம் என்ற பல எல்லைகளை நாமே வரையறுத்துக்கொண்டு, அந்த எல்லைகளுக்குள் மட்டுமே இறைவார்த்தை என்ற விதையைப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பது தவறு என்பதை இயேசு இந்த விதைப்பவர் வழியே சொல்லித்தருகிறார்.
நிபந்தனைகள் ஏதுமின்றி, தங்கு தடையின்றி, தாராளமாக, இறைவார்த்தையை அள்ளித் தெளிக்கவேண்டும் என்பதை இயேசு உவமையில் மட்டும் கூறாமல், தன் வாழ்விலும் கடைபிடித்தார். மதத் தலைவர்கள் என்ற பாறைகளில் அவர் விதைத்த வார்த்தைகள் வெறுப்பாக வெடித்தாலும் அவர் சளைக்காமல் தொடர்ந்து விதைத்தார். பாவம் என்ற முட்புதர்களில் சிக்கியிருந்தோரிடம், அவர் விதைத்த வார்த்தைகள் சென்றடைந்தன என்பதை நற்செய்தியில் நாம் அடிக்கடி காண்கிறோம்.

இறைவார்த்தையை விதைப்பது என்றதும், கோவில்களிலும், வேறு பல மத மேடைகளிலும் இறைவார்த்தையைப் பறைசாற்றுவதை மட்டும் எண்ணவேண்டாம். இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் விளைச்சல்! பாகுபாடுகள் பார்க்காமல், கேள்விகள் கேட்காமல் விதைகளைத் தெளிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, பொருள் நிறைந்த கதையொன்று நினைவுக்கு வருகிறது...
நாட்டிலேயே தலைசிறந்த சோளத்தை வளர்ப்பவர் என்ற விருதை திருவாளர் மைக்கிள் அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் பெற்றுவந்தார். அவரது தொடர் வெற்றியின் இரகசியத்தை அறிய, ஒரு நாளிதழின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார். பேட்டியின்போது திரு.மைக்கிள் பகிர்ந்துகொண்ட ஒரு விவரம் நிருபருக்கு வியப்பாக இருந்தது. திரு.மைக்கிள் அவர்கள், தன் நிலத்தைச் சுற்றியிருந்த மற்ற நில உரிமையாளர்களுக்கு, தன்னிடம் இருந்த சிறந்த விதைகளைக் கொடுத்தார் என்பதே அந்த வியப்பான விவரம்.
"உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுடன் போட்டி போடுகிறவர்கள் என்பதை அறிந்தும், நீங்கள் ஏன் அவர்களுக்கு சிறந்த விதைகளைத் தந்தீர்கள்?" என்று நிருபர் கேட்டபோது, திரு.மைக்கிள் கூறிய விளக்கம் இதுதான்: "இதைப்பற்றி ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்? நன்கு வளர்ந்துள்ள சோளக் கதிரின் மகரந்தத் தூள் காற்றில்  கலந்து அடுத்த நிலங்களில் உள்ள சோளக் கதிர்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன, இல்லையா? அப்படியிருக்க, என் நிலத்தைச் சுற்றியுள்ளவர்கள் நிலங்களில் தரக் குறைவான சோளக் கதிர்கள் வளர்ந்தால், அது என் கதிர்களின் தரத்தையும் குறைத்துவிடுமே! அதனால், நான் தலை சிறந்த சோளத்தை உருவாக்க வேண்டுமென்றால், என்னைச் சுற்றியிருப்போரும் நல்ல சோளத்தை உருவாக்க வேண்டும். எனவேதான் நல்ல விதைகளை சுற்றியுள்ள நில உரிமையாளர்களுக்கும் தருகிறேன்" என்று அவர் சொன்ன பதில் வியப்பைத் தந்தாலும், ஆழ்ந்ததோர் உண்மையையும் சொல்லித் தருகின்றது.


விதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். நாம் இறைவார்த்தை வழி, உன்னத வாழ்வு வாழ்வதற்கு, நம்மைச் சுற்றியிருப்போரும் உன்னத வாழ்வு பெறவேண்டும் என்ற உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்குத் துணை புரிவாராக!

06 July, 2014

Christ’s Yoke Fits Well கிறிஸ்துவின் நுகம் பொருத்தமாக இருக்கும்

My Yoke

On July 4, the U.S. Independence Day, the Statue of Liberty in Manhattan, New York, becomes one of the focal points of the celebrations. The Jewish American poet Emma Lazarus saw the statue as a beacon to the world. A poem she wrote in 1883, appears on a bronze plaque in the pedestal of this famous statue. This poem, titled ‘The New Colossus’, captured what the statue came to mean to the millions who migrated to the United States seeking freedom.
A few lines from this poem serve as the starting point for our Sunday reflections. The poet has composed some lines of this poem as spoken by the ‘mighty woman with a torch, whose … name is Mother of Exiles’:
“Give me your tired, your poor,
Your huddled masses yearning to breathe free,
The wretched refuse of your teeming shore.
Send these, the homeless, tempest-tost (tossed) to me,
I lift my lamp beside the golden door!”

These words seem to echo what Jesus once said: “Come to me, all who labour and are heavy laden, and I will give you rest.” (Matthew 11:28) These words of Jesus have given millions of people, down these 20 centuries, courage and strength to face the burdens of life.
When we hear these words today, they sound more like a ‘spiritual-pacifier’ than real life solution. We seem to think that there are many ways to get rid of our ‘heaviness’ – be it physical, mental or psychological. We, the so-called grown-ups, seem to think that we have better solutions to get rid of stress than the promise of Jesus. As if knowing our line of thought, Jesus prefaces his invitation with words of caution in the first part of today’s Gospel.
At that time Jesus declared, “I thank thee, Father, Lord of heaven and earth, that thou hast hidden these things from the wise and understanding and revealed them to babes; yea, Father, for such was thy gracious will.” (Mt. 11: 25). This is another form of the caution given elsewhere by Jesus that ‘unless we become like children, we cannot enter the Kingdom of God’ (Mt. 18:3). We seem to place more trust in the ways suggested by the world to conquer our burdens.

The world offers many so-called remedies to the problem of stress: - Get away - Run away - Fly away - Take a pill to ease your nerves - Take a drink to drown your sorrows - Take a shot to kill the pain - Get drunk, take drugs, sleep a lot.  But the truth is… most of them don’t work. How misleading the world can be! Here is a parable:
Have you heard about the farmer who went to a government bureaucrat specializing in animal health? The farmer sought help from the “expert” because ten of his chickens had suddenly died. The government expert instructed the farmer to give aspirin to all the surviving chickens. Two days later, however, the farmer returned. Twenty more chickens had died. What should he do now? The expert said quickly: “Give all the rest castor oil.” Two days later, the farmer returned a third time and reported 30 more dead chickens. The government expert now strongly recommended penicillin. Two days later a sad farmer showed up. All the rest of his chickens had now died. They were all gone. “What a shame,” said the expert, “I have lot more remedies!”

As against the false, quick-fix solutions offered by the world, Jesus gives us a firm promise. He does not tell us to run away from the problems. He does not promise a magic touch by which all our worries would vanish. He promises ‘rest’ and his own presence in our stress-filled life.
The imagery of the yoke which he uses in this context is a master stroke. Here are the words of Jesus: “Take my yoke upon you, and learn from me; for I am gentle and lowly in heart, and you will find rest for your souls. For my yoke is easy, and my burden is light.” (Mt. 11: 29-30)
The words of Jesus, “Take my yoke upon you…” lead us into deeper reflection. Let us first think of the ‘yoke’. As we know, the yoke is used to align two oxen for the purpose of ploughing. The yoke that sits on the neck of these two oxen, though painful, is a useful instrument for a productive task. In using this imagery, Jesus is calling us to face pain for a productive purpose.

When Jesus says, “Take my yoke upon you…” he seems to be saying two different things. He may be saying “Take the yoke I have prepared for you” or “Become a partner in my yoke, namely, the yoke I am already carrying”.
William Barclay makes the following statement in his commentary on this passage of Matthew: “There is a legend that Jesus made the best ox-yokes in all Galilee, and that from all over the country men came to him to buy the best yokes that skill could make. In those days as now, shops had their signs above the door; and it has been suggested that the sign above the door of the carpenter's shop in Nazareth may well have been: ‘My yokes fit well’. It may well be that Jesus is here using a picture from the carpenter's shop in Nazareth where he had worked throughout the silent years.” Keeping this commentary of Barclay in mind, we can interpret the words of Jesus ‘Take my yoke upon you’, as “Take the yoke I have prepared for you. It will fit you well”.

The second interpretation seems to make more sense to me, namely, Jesus is inviting us to ‘become a partner in the yoke he is already carrying’. Jesus has already taken this yoke on himself and asks us to join him. We are in this together – Jesus and us! That is the reason Jesus says with so much assurance: For my yoke is easy, and my burden is light. (Mt. 11: 30) Jesus knows that a sorrow (burden) shared is halved! 

To accept these words of Jesus we need to become like children. For a child, no burden is great when the parent is around. This child-like trust was evident in the life of Good Pope St John the 23rd. During the Second Vatican Council days, Pope St. John XXIII used to submit all his anxieties to God by this prayer every night: “Lord, Jesus, I’m going to bed. It's your Church. Take care of it!” 
The President Dwight David Eisenhower knew about that inner rest derived from submitting daily lives to God. He had it even while he was the leader of armed forces in World War II. His every decision during that awful conflict had monumental consequences. How did he deal with the pressure? He shared with his former pastor, Dean Miller, that he didn't try to carry his burden alone. Some nights when the strain became too great, Eisenhower would simply pray, "Lord, with your grace I've done the best I can. You take over until morning."

All of us are pilgrims on earth carrying our load of worries. We have a knack of gathering more and more burdens as we go along this earthly journey. When we consider the famous invitation of Jesus, “Come to me, all who labor and are heavy laden…”, we can ask for two graces: First – that we may be able to distinguish between ‘necessary’ and ‘unnecessary’ burdens that we accumulate, so that we can ‘off-load’ unnecessary baggage sooner than later. Second – that we trust this invitation of Jesus not simply as a ‘spiritual-pacifier’ but as a more realistic solution. In addition, we pray that God gives us enough light to understand that Jesus is with us to share the burden! 
May we, like children, heed to the loving invitation of Christ with a heart filled with trust: “Come to me, all who labor and are heavy laden, and I will give you rest. Take my yoke upon you, and learn from me; for I am gentle and lowly in heart, and you will find rest for your souls. For my yoke is easy, and my burden is light.”

Emma Lazarus Quotes

ஜூலை 4, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாடு சுதந்திர நாளைக் கொண்டாடியது. தங்கள் நாடுகளில் அடக்குமுறை பிரச்சனைகளைச் சந்தித்த பல்லாயிரம் மக்கள், 18 மற்றும், 19ம் நூற்றாண்டுகளில் சுதந்திரத்தைத் தேடிச்சென்ற ஒரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கியது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க இம்மக்கள் அமெரிக்கக் கடற்கரையை நெருங்கியபோது, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திரத் தேவதையின் சிலை அவர்களை வரவேற்றது.
இச்சிலை வைக்கப்பட்டுள்ள மேடையில், கவிதையொன்று பொறிக்கப்பட்டுள்ளது. Emma Lazarus என்ற யூதப் பெண்கவிஞர் இயற்றியுள்ள அக்கவிதையின் ஒரு சில வரிகள் நமது ஞாயிறு சிந்தனையை இன்று ஆரம்பித்து வைக்கின்றன:
"உங்கள் நடுவே களைப்புற்று, வறுமையுற்று,
சுதந்திரத்தைச் சுவாசிக்க ஏங்கும் மக்களை எனக்குக் கொடுங்கள்.
உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற
மக்களை எனக்குக் கொடுங்கள்.
வீடற்று, புயல்சூழ்ந்த கடலில் தத்தளிக்கும்
மக்களை என்னிடம் அனுப்புங்கள்..."

சுதந்திரத் தேவதை விடுக்கும் அழைப்பை நம்பி அமெரிக்கக் கரையை அடைந்த மக்களை அந்நாடு வரவேற்ற வரலாற்றை நாம் அறிவோம். இத்தகைய அழைப்பு தற்போது அங்கு கிடையாது. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
சுதந்திர தேவதையின் மேடையில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், இன்று நாம் கேட்கும் நற்செய்தியின் எதிரொலியாக அமைந்துள்ளது. அன்றும், இன்றும், என்றும் மாறாமல் ஒலிக்கும் இயேசுவின் இந்த அழைப்பு, பொருளுள்ளதாக விளங்குகிறது:
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11: 28)

காயப்பட்டக் கடவுளை நமக்கு அடையாளம் காட்டும் விழா, இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று இரு வாரங்களுக்கு முன் நாம் குறிப்பிட்டோம். அவ்விழாவைத் தொடர்ந்து வந்த வெள்ளியன்று, காயப்பட்ட அந்த இறைவன், ஈட்டியால் குத்தப்பட்ட தன் இதயத்தை நமக்கு வெளிப்படுத்திய விழாவாக, இயேசுவின் திரு இதயப் பெருவிழாவையும் நாம் சிறப்பித்தோம். அப்பெருவிழாவின்போது நமக்கு வழங்கப்பட்ட நற்செய்தி, இஞ்ஞாயிறன்று மீண்டும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. விவிலியத்தின் ஒரு சில கூற்றுகள், எத்தனை முறை ஒலித்தாலும், அவை பொருளுள்ள வார்த்தைகளாக இருக்கும். இயேசுவின் இதயத்திலிருந்து வரும் பொருள் செரிந்த இவ்வழைப்பு, இத்தனை நூற்றாண்டுகளாக பல கோடி மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் வழங்கி வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். (மத்தேயு 11: 28)

கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவது, எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், இதை ஓரு மென்மையான ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும் நாம் நினைப்பதால், இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். நாம் வாழ்வில் சந்திக்கும் சுமைகளைச் சமாளிக்க பல அறிவுப்பூர்வமான வழிகளை நாம் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இந்தத் தயக்கம் நமக்குள் உருவாகிறது.
நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். இது இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசுவின் வார்த்தைகளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். வயதில் வளர்ந்துவிட்டதால், இவ்வுலக வழிகளை கற்றுக்கொண்டதால் நாம் இயேசு கூறும் வழிகளிலிருந்து விலகிச் செல்வதை அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். இவ்வுலகம் காட்டும் வழிகள் சரியானவைதானா என்ற கேள்வி அடிக்கடி நமக்குள் எழுந்தவண்ணம் உள்ளது. பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான பல வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது. கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறையைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார் அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன் இப்படி அனைத்து கோழிகளும் அநியாயமாய் இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.

வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகின் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சனைகளைத் இவ்வுலகம் எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால் பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்" என்றோ கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்!
நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை விடுமுறைகள், மயக்கவைக்கும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள்... தீர்வாக அமையும் என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் நம்மைத் தூண்டும் பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள்.

இதற்கு நேர்மாறாக, இயேசு கூறுவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரும் வாக்குறுதி. அத்துடன், இன்றைய நற்செய்தியில் அவர் கூறும் மற்றொரு உருவகம் மிக ஆழமான, அர்த்தமுள்ள உருவகம். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது இயேசு விடுக்கும் அடுத்த அழைப்பு.
இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதகுப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம். கலிலேயா பகுதியில் நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், William Barclay அவர்கள் கூறியுள்ளார். Barclay அவர்கள் இந்த வரிகளுக்கு விளக்கம் தரும்போது, நாசரேத்தில் இயேசுவின் தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், பொறிக்கப்படும் வார்த்தைகள் இவ்விதம் இருந்திருக்கும்... அதாவது, "உங்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே அங்கு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை இரு வழிகளில் சிந்திக்கலாம். அல்லது, ஒன்று, இயேசு தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்து தருவார். அதாவது, நம்மை மிகவும் அழுத்தி வதைக்காத நுகத்தையே அவர் நம் தோள் மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; தன் நுகத்தில் நம்மையும் இணைவதற்கு அழைக்கிறார் என்ற பொருளை உணர்கிறோம். அவரோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்துகிறார்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க இயேசு கூறும் தீர்வுகள்.

சுமைகளைச் சுமப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், இச்சுமைகளை இனம் காணும் தெளிவு நமக்கு வேண்டும். தேவையான சுமைகளை நாம் சுமப்பதில் தவறில்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான, தேவையற்ற சுமைகளை இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று முதலில் மன்றாடுவோம்.

வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இறைவனும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும் இறைவன் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றும் மன்றாடுவோம். நமது இந்த வேண்டுதலுக்கு புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையை நாம் நாடலாம். ஏனெனில் அவர் தன் சுமைகளை எவ்விதம் சுமப்பது என்ற பக்குவத்தைப் பெற்றவர்.
புனிதரான திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் துவக்கியவேளையில், கவலைகள் பலவற்றை அவர் சுமக்க நேரிட்டது. அவ்வேளையில் அவர் ஒவ்வோர் இரவும் உறங்கப் போவதற்குமுன் சிறு செபம் ஒன்றைச் சொன்னார்: "ஆண்டவரே, இயேசுவே, நான் இப்போது உறங்கச் செல்கிறேன். இது உமது திருஅவை. இதனை நீர் பாதுகாத்தருளும்" என்ற வார்த்தைகளுடன் உறங்கச் சென்றதால், தன்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower அவர்கள், 2ம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், இராணுவத் தளபதியாகப் பணிபுரிந்தவர். அந்நாட்களில், பிரச்சனைகளின் பாரத்தால் பல நாட்கள் துவண்டார். அந்நாட்களில் உறங்கச் செல்லும் முன் அவர், "இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்" என்ற செபத்துடன் உறங்கச் சென்றதாக தன் கோவில் போதகிடம் கூறியுள்ளார்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை மறுப்பதற்குத் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.