Boy gives bread and fish to Jesus
From her personal experience, Mother Teresa relates a story showing how
generous the poor are, and how ready to share what little they have with others
because they themselves have experienced hunger and poverty. Learning of a poor
Hindu family in Calcutta
who had been starving for many days, Mother Teresa visited them and gave a
parcel of rice to the mother of the family. She was surprised to see that the
woman divided the rice into two equal portions and gave one to her Moslem
neighbor. When Mother Teresa asked her why she had done such a sacrificial
deed, the woman replied: “My family can manage with half of what you brought.
My neighbor’s family is in greater need because they have several children who
are starving."
We salute this lady and millions of other magnanimous persons, who,
although they live in poverty, yet teach the world the power and beauty of
sharing. Today’s Gospel talks of how Jesus fed more than 5000 persons
‘miraculously’ from limited resources at His disposal.
Very few
events from the life of Christ are recorded by all the four Evangelists. One
such event is the miracle of Jesus feeding more than 5000 people. This is the
only miracle recorded by all the Evangelists. (Matthew 14: 13-21, Mark 6:35-44,
Luke 9:12-17, and John 6:1-14)
We talk of
the CONTEXT of this miracle and one of the INTERPRETATIONS of
this miracle. The context would give us an opportunity to examine our present
day world. The interpretation would help us go back to the times of First
Christians and help us learn SHRAING.
CONTEXT:
Herod’s
banquet versus Jesus’ banquet: In today’s gospel, Matthew intentionally contrasts two
"banquets": one hosted by Herod which resulted in the death of John
the Baptist (Matt 14:1-12), and the feeding of a large crowd by Jesus near the
shore of the Sea of Galilee (14:13-21). The
opening lines of today’s gospel gives us the context… the death of John the
Baptist.
Matthew’s
gospel (14: 1-12) talks of the banquet of Herod. Invited guests, plenty of
food, over eating and drinking, entertainment … this banquet ended with a
murder, the beheading of John the Baptist.
Herod's
banquet took place in an environment of scheming and arrogance and concluded
with a murder. Prior to feeding the crowd that was following him, Jesus felt
compassion for their needs and healed their sick. Herod's banquet was held at a
royal court. Jesus' meal with this crowd was performed in a
"deserted" place or wilderness.
Herod’s
banquet is a sad reminder of what our world is facing today – PLENTY as well as
POVERTY.
I don’t wish
to overload you with STATISTICS. I just want to let you know that our world has
enough and more resources for everyone to live a decent life. This is not
happening since we lack the sense of SHARING.
Over the
past twenty-five years, food production has exceeded world population growth by
about 16%. This means that there is no good reason for any human being in
today's world to go hungry. Someone has noted that the average person BLINKS
his eyes 13 times every minute, and in every minute 13 people starve to death. The
problem is not how much food is available; the problem is distribution. The
problem of distribution is not confined to the so called developing countries,
but to the so called developed countries as well… to INDIA
as well as to the US .
“The
problem in feeding the world’s hungry population lies with our political lack
of will, our economic system biased in favour of the affluent, our militarism,
and our tendency to blame the victims of social tragedies such as famine. We
all share responsibility for the fact that populations are undernourished.
Therefore, it is necessary to arouse a sense of responsibility in individuals,
especially among those more blessed with this world’s goods.” (Pope St John
XXIII, Mater et Magistra)
INTERPRETATION:
The Miracle
of Jesus feeding the hungry people by multiplying food is the usual,
traditional interpretation. But, there are other Biblical scholars who think
that this was not a miracle of multiplication done by one person, but the
‘multiplier effect’ created by one person resulting in a miraculous sharing.
The latter
interpretation is prompted by one detail given by John’s Gospel, namely, a
little boy was having five barley loaves and two fish (John 6:9). How is it
that a child carried food to the desert? When a family goes on a journey,
children do not think of carrying food. This is the job of the parents. They
foresee what would be required by children and get prepared.
For the
Jews, this foresight was almost second nature. Having suffered slavery and
shortage of food for generations, they were careful to carry food whenever they
left their house. So, here was a family which had come to the desert to meet
Jesus. The mother of the family had prepared five loaves and two fish for the
family to eat. The child was simply carrying the food packet. We can easily
presume that many of those who were there around Jesus, carried some food.
As it was
getting late, they began to feel pangs of hunger. They were hesitant to open
their packets since they knew that what they had was insufficient to feed the
crowd. Hesitations, questions, calculations are typical of adults. Thank God,
children are different. Hence, the miracle happened. The little lad heard Jesus
discussing with his disciples about feeding the people. Without a second
thought, the lad offered what he had carried from home – five loaves and two
fish! Once the crowd saw this, then it was easy for them to open their packets
and share…
Five loaves
+ two fish + Jesus’ blessing = more than 5000 people fed + 12 baskets of
left-overs!
Not a
simple mathematics, but pure magic! I consider this – namely, that Jesus and
the child inspiring the people to share – a much more powerful miracle than
simply Jesus multiplying the loaves!
The world
needs extraordinary miracles of sharing. How do we get rid of the scandal of
millions dying of hunger? We can pray for God’s direct intervention; we can
hope for efficient actions of governments; we can fight with the haves to share
with the have-nots… OR, as the little lad we can start sharing.
Here is a
lovely story that demonstrates the ‘ripple effect’ created by a young lad…
A young lad,
13 years old, read about Dr. Albert Schweitzer's missionary work in Africa . He wanted to help. He had enough money to buy one
bottle of aspirin. He wrote to the Air Force and asked if they could fly over
Dr. Schweitzer's hospital and drop the bottle down to him. A radio station
broadcast the story about this young fellow's concern for helping others.
Others responded as well. Eventually, he was flown by the government to
Schweitzer's hospital along with 4 1/2 tons of medical supplies worth $400,000
freely given by thousands of people. This, of course, would be the equivalent
of millions of dollars today. When Dr. Schweitzer heard the story, he said,
"I never thought one child could do so much.”
Let me close these reflections with a news item I had collected two
years back:
Spearheading
a revolution with handful of rice (Source: UCAN-India)
A small
community in Mizoram despite having not much to depend on for themselves have
been religiously paying their tithes – “a handful rice.”
This
community in the northeast not only supports itself financially, but has also
managed to send out hundreds of missionaries. Behind their success is a simple
practice called "a handful of rice."
Lalua
lives in a tiny, remote village in Mizoram. Her family sustains on a meager
income of less than $1 a day. Despite abject poverty, simple women like Lalua
are spearheading a revolution that's sweeping the world of missions.
"Buhfai
tham" is a practice where each Mizo family puts aside a handful of rice
every time they cook a meal. Later, they gather it and offer it to the church.
The church, in turn, sells the rice and generates income to support its work.
"It
is not our richness or our poverty that makes us serve the Lord, but our
willingness," said Rev. Zosangliana Colney, leader of Mizoram Presbyterian
Church. "So we Mizo people say, 'As long as we have something to eat every
day, we have something to give to God every day.'"
I rest my
case.
Boys
sharing food
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச்
சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை
அன்னை அறிந்ததால், அவரைத்
தேடிச் சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்ற அப்பெண், அடுத்து செய்தது
அன்னையை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை அப்பெண் இரு பங்காகப் பிரித்தார்.
ஒரு பங்கை, தன்
வீட்டுக்கு அருகில் வாழ்ந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை
அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்க
முடியும். ஆனால், அடுத்த
வீட்டிலோ அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் பல நாட்கள் பட்டினியால் துடிக்கின்றனர்
என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.
அன்னை தெரேசா மட்டுமல்ல, அவரது பரிவால் தொடப்பட்ட பல்லாயிரம்
வறியோரும் நற்செய்தியை வாழ்வாக்கியுள்ளனர். இந்த நல்ல உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி
கூறி, இன்றைய ஞாயிறு சிந்தனையைத்
துவக்குகிறோம். இவ்வுலகில் பெருமளவு பெருகிவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு
மாற்று மருந்தான பகிர்வைக் குறித்து சிந்திப்பதற்கு இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.
மக்களின் பசியைப் போக்க, இறைவன் விடுக்கும் அழைப்பு இறைவாக்கினர் எசாயா நூலில்
இவ்வாறு ஒலிக்கிறது:
இறைவாக்கினர் எசாயா 55: 1-2
இறைவன் கூறுவதாவது:
தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.
உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்?
மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி நற்செய்தியில் எழுப்பப்படுகிறது.
இருந்தாலும், இறைவனை நம்பி, உணவு பரிமாற்றம்
ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள்
வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.
இவ்விரு வாசகங்களையும்
இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை
தெளிவாகும். இறைவன் ஒன்றுமில்லாமையிலிருந்து உணவை உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை.
மனிதர்களின் ஒத்துழைப்பை இறைவன் நாடுகிறார் என்ற உண்மையை உணர முடியும்.
தானியங்களையும், பழங்களையும் இயற்கை வழியே இறைவன் தந்தாலும், அவற்றை உணவாக, பானமாக மாற்றி உண்பதற்கு மனித உழைப்பு தேவை. வறியோரின் கடின
உழைப்பால் உருவான உணவை, அவர்களுக்கே
கிடைக்காதவண்ணம், பணத்திற்காக பதுக்கி வைப்பது குறித்து முதல் வாசகத்தில் கேள்விகள்
எழுப்பப்பட்டுள்ளன. உருவாக்கிய உணவை, தனக்கு மட்டும் என்று ஒளித்துவைக்காமல் மற்றவர்களோடு
பகிர்ந்து கொண்டால், உலகின் பசியைப் போக்க முடியும்
என்பதை இரு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன.
தனிமையான ஓரிடத்திற்குச்
சென்ற தன்னைத் தொடர்ந்துவந்த மக்கள்மீது இயேசு பரிவு கொண்டார் என்று நற்செய்தியில்
சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பரிவுதான் புதுமையைத் துவக்கிவைத்தது.
அடுத்து, தங்களிடம் உள்ள உணவு இவ்வளவுதான் என்று சீடர்கள்
கூறியது புதுமையின் அடுத்தக் கட்டம். உணவைப் பணமாக மாற்றும் பேராசையினால், உணவை மறைக்கும் சுயநலத்தால் உலகில் உள்ள உணவின் உண்மை
நிலை தெரியாமல் போகிறது; பசியும், பட்டினியும் தாண்டவமாடுகிறது. உண்மையைக் கூறமுடியாமல்
நம்மைத் தடுக்கும் பேராசையும், சுயநலமும்
நீங்கினால், அனைவருக்கும் உணவு கிடைக்கும்
வாய்ப்பு உண்டு என்பதை சீடர்கள் கூறிய உண்மையும், அதைத் தொடர்ந்த புதுமையும் சொல்லித்
தருகின்றன. உணவைப் பொருத்தவரை, இன்றைய
உலகின் உண்மை நிலை இதுதான்:
ஐ.நா.
வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில்
என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 710 கோடி. 740 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உலகில்
தினமும் உற்பத்தியாகிறது. இருந்தாலும், 130 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.
கணக்கிட்டுப் பார்த்தால், 170 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது.
இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில்
பெரும்பாலானோர் குழந்தைகள்.
இந்தத் தேவையற்ற மரணங்கள்
நிறுத்தப்பட வேண்டுமானால், பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.
5000க்கும் அதிகமான மக்களுக்கு இயேசுவும், சீடர்களும் உணவளித்த இந்தப் புதுமை,
நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில்
சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம்.
மற்றொரு கண்ணோட்டம் - சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. இந்தக் கண்ணோட்டத்தில்
சிந்திக்க நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் நாம்
காணும் ஒரு சிறு குறிப்பு.
ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு
நற்செய்திகளும் கூறினாலும், யோவான் நற்செய்தியில் மட்டும்,
அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்று குறிப்பாகச்
சொல்கிறது. சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற
கேள்வியை எழுப்பினால், பல எண்ணங்கள் பதிலாகக் கிடைக்கின்றன. பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக உணவு எடுத்துச்
செல்லவேண்டும் என்று சிறுவர், சிறுமிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத்
தேவையான உணவைத் தயாரித்து, எடுத்துச்செல்வது... பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இத்தகைய
முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவின்றி
தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்
செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில்,
ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது எவ்விடம் என்பதை சரியாக அறியாததால்,
குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத்
தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை
சிறுவன் சுமந்து வந்திருந்தான்.
மாலை ஆனதும் பசி வயிற்றைக்
கிள்ள ஆரம்பித்தது. அங்கிருந்த பல யூதர்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. ஆனால்,
யார் முதலில் பிரிப்பது? பிரித்தால்,
பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின்
படிப்பினைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது?
இந்தக் கேள்விகளில் பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கியிருந்தார்கள்.
மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடுவது நல்லது என்று சீடர்கள் சிந்தித்தனர். நல்லவேளை, குழந்தைகளின்
எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இல்லாததால், அந்தப் புதுமை நிகழ
வாய்ப்பு உருவானது.
மக்களுக்கு உணவளிப்பது
பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட ஒரு சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும்
இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும்
கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அச்சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் உள்ளதையெல்லாம் பெருமையுடன் தந்ததை
நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும்
தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத
விருந்து.
ஒரு சிறுவன் ஆரம்பித்த
பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கிருந்தவர்களுக்கு
பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் உண்டதுபோக மீதியை 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது.
இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம்.
தனியொருவராய் இயேசு அப்பங்களைப்
பலுகச்செய்தார் என்பது புதுமைதான். ஆனால், தன் அற்புதச் சக்தி கொண்டு அப்பங்களைப் பலுகச் செய்ததைவிட, தன் படிப்பினைகளால் மக்கள் மனதை மாற்றி, இயேசு, அவர்களைப்
பகிரச்செய்தார் என்பதை நான் மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கிறேன்.
வானிலிருந்து இறைவன் இறங்கி
வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான்
இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர்
நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, அச்சிறுவனைப் போல் நம்மில் யாரும் பகிர்வு என்ற புதுமையை ஆரம்பித்து வைக்கலாம்.
பல ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்காவில், கடினமானச்
சூழலில், வறுமைப்பட்ட மக்களுக்குப் பணியாற்றிவந்த மருத்துவர்
Albert Scheweitzer அவர்களைப்
பற்றி 13 வயது நிறைந்த ஒரு சிறுவன் கேள்விப்பட்டான். அவருக்கு தன்னால் இயன்ற உதவியைச்
செய்ய எண்ணியச் சிறுவன், தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு,
'ஆஸ்பிரின்' மாத்திரைகள் வாங்கினான். தான் வாங்கிவைத்திருக்கும்
மாத்திரைகளை, மருத்துவர் Scheweitzer அவர்களிடம் எடுத்துச் செல்ல முடியுமா?
என்று கேட்டு, அமெரிக்க விமானப் படைத் தளபதிக்கு
மடல் ஒன்றை அனுப்பினான் அச்சிறுவன்.
அச்சிறுவன் அனுப்பிய மடலைப்
பற்றி அத்தளபதி ஒரு நாள் வானொலியில் பேசினார். இதைக் கேட்ட பலர், மருத்துவர் Scheweitzer அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். உதவிகள்
வந்து குவிந்தன. சில நாட்கள் சென்று, அச்சிறுவன், 4 1/2 டன் எடையுள்ள மருந்துகளையும், 40,000 டாலர்களையும்
எடுத்துக் கொண்டு, மருத்துவர் Scheweitzer அவர்களைக் காண விமானத்தில்
பறந்தான். இதைப் பற்றி கேள்விப்பட்ட மருத்துவர் Scheweitzer அவர்கள், "ஒரு
சிறுவனால் இவ்வளவு சாதிக்கமுடியும் என்பதை என்னால் சிறிதும் எண்ணிப் பார்க்க முடியவில்லை"
என்று கூறினார்.
மனம் இருந்தால், அந்த மனதில் பரிவிருந்தால், பகிரவேண்டும் என்ற கனவிருந்தால், மலைகளாக உயர்ந்து நிற்கும்
தடைகளும், தலைவணங்கி வழிவிடும்.
தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில்
உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது.
இல்லாதோர், போராட்டங்களை மேற்கொண்டு, இருப்போரின் உலகை அழிக்கமுடியும். அந்த அழிவைத்
தடுக்க, இருப்பவர்கள் ஆயுதங்களை நம்பி வாழ வேண்டியிருக்கும். இருப்பவர்கள் பக்கமே பெரும்பாலும்
சாயும் உலக அரசுகள், ஆயுதங்கள்
வாங்க செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒருபங்கை மக்களின் தேவைகளுக்காகச் செலவிட்டால்,
ஆயுதங்களே தேவையில்லாமல் போகும் என்பது கசப்பான ஓர் உண்மை. இருப்பவர்கள்
இல்லாதவர்களிடமிருந்து தங்கள் உலகைக் காப்பதற்குப் பதில், இல்லாதவர்களோடு
இந்த உலக வளங்களை பகிர்ந்து கொண்டால், அனைவருமே நலமாக,
மகிழ்வாக வாழமுடியுமே! பகிர்ந்துகொள்ளும் மனதை நாம் வளர்த்துக்கொள்ள
வேண்டுமென்று இந்த ஞாயிறு வழிபாடு நமக்குச் சவால் விடுக்கிறது. நமது பதில் என்ன? பகிர்வுப் பாடங்களை, பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள பணிவான மனதை இறைவன்
நமக்குத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment