26 April, 2015

Sacrificing self / others உயிரைக் கொடுப்பவர் / எடுப்பவர்


"StJohnsAshfield StainedGlass GoodShepherd Portrait" by Stained glass: Alfred Handel, http://commons.wikimedia.org/wiki 

4th Sunday of Easter – Good Shepherd Sunday

The moment the word ‘titanic’ is mentioned, a huge luxury liner floats across one’s mind and, probably, sinks as well. The word ‘titanic’ originally means ‘of exceptional strength, size, or power’. Based on this meaning, the ship ‘Titanic’ set sail from Southampton, England, with an aura of ‘unsinkable assurance’, although this was not publicly stated. Four days after leaving Southampton, Titanic collided with an iceberg and sank in the North Atlantic Sea.
Although this tragedy leaves us with lots of questions, quite a few remarkable incidents of courage and sacrifice that emerged on board, leaves us also with a sense of admiration and wonder. One of them is about three priests – Fathers Thomas Byles, Juozas Montvila, and Joseph Benedikt Peruschitz. These three priests declined the offer of getting into the life-boats and stayed on with the people, stranded on the ship, offering them final absolution and praying with them as the ship plunged into the icy waters of the Atlantic. The bodies of the three priests were never recovered.

Born as the eldest of seven children of a Congregationalist minister, Fr Thomas Byles converted to Catholicism. Ordained a priest in 1902, he was assigned to be the parish priest at Saint Helen’s in Ongar, Essex in 1905.  The parish was poor and had few parishioners, but Father Byles was devoted to them and served them generously until 1912 when he left for New York, to bless the wedding of his brother (who also converted to Catholicism).
Father Juozas Montvila was a 27 year old priest from Lithuania fleeing Tsarist oppression.  He had been ministering to Ukrainian Catholics and he had been forbidden to do so any longer by the Tsarist regime that was attempting to force Eastern Rite Catholics into the Russian Orthodox Church. Father Montvila planned to serve the numerous Ukrainian Catholic immigrants in the United States.
Father Joseph Benedikt Peruschitz was a 41 year old Catholic priest from Germany. He was on his way to join the faculty at Saint John’s Abbey in Collegeville, Minnesota. Although all the three priests set out with ‘private missions’, they joined hands in the common mission of becoming shepherds of the abandoned people on board the Titanic.

Father Byles did not view his trip on the Titanic as a vacation from his priestly duties. He spent Saturday April 13, hearing confessions, and on Sunday April 14, he said two masses for the second and third class passengers. When the Titanic struck the iceberg, Father Byles was walking on the upper deck reading his breviary. He immediately sprang into action. He assisted many third class passengers up to the boat deck and onto the life boats. As the ship was sinking, he said the rosary and heard confessions. Near the end, he gave absolution to more than a hundred passengers trapped on the stern of the ship after all the lifeboats had been launched.
Like Father Byles, Fathers Montvila and Peruschitz went among the passengers, praying with all, Catholic and non-Catholic, and granting absolution. Also like Father Byles they were offered seats in the lifeboats and declined them, realizing that the place for a priest was on board the Titanic with those who were about to die. Like the good shepherd described by Jesus in today’s Gospel (John 10: 11), all the three laid down their lives for the sheep. A stained-glass window placed in the church of St Helen as a memorial to Fr Byles depicts Christ the Good Shepherd.

When the Centenary of the sinking of the Titanic was commemorated in 2012, it reopened some of the ‘wounds’ in our collective consciousness. This is the case with many more commemorations of centenaries. Last year the Centenary of the First World War was observed. Since that war lasted four years, (1914 to 1918), there will be some more commemorations connected with WWI in the coming years. Last week (April 23, 24) two centenaries were commemorated - the massacre of the Armenian people (around 1.5 million as claimed by Armenia) by Ottomon Empire and the Gallipoli war which claimed the lives of almost 140,000 soldiers.
Many leaders who have been the cause of many massacres, and battles have not been the victims… Only innocent people have died in millions. The greed for power nurtured by individuals has been ‘dressed-up’ as ‘slogans’ and ‘political ideals’ for which innocent civilians and soldiers are sacrificed. These leaders have crowded the pages of past history as well as the present. These selfish megalomaniacs have been referred to as ‘thieves and hirelings’ by Jesus in today’s Gospel (John 10: 10, 12-13).

We tend to get a ‘kick’ out of pointing fingers at others – especially when leaders, both political and religious, are on the other side of our pointing finger! Every time we do this, we are also brought to realise the hard truth that there are other fingers pointing towards us. These fingers pointing towards us tell us that these ‘thieves and hirelings’, did not drop down from the skies all on a sudden. They have been part of a family, a school and a community. Hence, these leaders have been formed by parents, elders, teachers, and friends like us. As we look around in families and other circles of influence, we find that there are ‘true shepherds’ as well as ‘thieves and hirelings’. The more the latter, the larger the risk for the future generations!
In this context, we need to talk about a video that is doing the rounds in the media, especially in social networks like facebook, twitter and YouTube. It is about a small girl handling a real machine gun! Here is an extract from the news that appeared on BBC a few days ago.
The small Kurdish girl pictured firing a huge machine gun
BBC Trending – April 22, 2015
The girl looks about six or seven years old. She chats away with an off-camera adult, possibly her father, who asks her how many Islamic State fighters she has killed. "Four hundred!" she says, speaking in a Kurdish dialect local to Sulaymaniyah in northern Iraq.
Then the little girl leans over a machine gun bigger than she is, and using both hands, she fires away into the distance. As the shots echo across the desert, the man behind the camera eggs her on: "Kill! Kill!" http://www.bbc.com/news/blogs-trending-32384631  
If the off screen voice belongs to the father of the child, it is really a tragedy! Most of the leaders we have spoken of in today’s reflections may have been fed with the ‘poison of hatred’ in their childhood, by those very close to them – namely, parents, teachers and friends. If only our families can become nurseries where love and forgiveness are planted and nurtured, we can resolve all the problems we face.

As we celebrate the Good Shepherd Sunday, the Church invites us to celebrate the World Day of Prayer for Vocations. Pope Francis, in his message for this 52nd World Day, says:
To offer one’s life in mission is possible only if we are able to leave ourselves behind. On this 52nd World Day of Prayer for Vocations, I would like reflect on that particular “exodus” which is the heart of vocation, or better yet, of our response to the vocation God gives us…
At the root of every Christian vocation we find this basic movement, which is part of the experience of faith. Belief means transcending ourselves, leaving behind our comfort and the inflexibility of our ego in order to centre our life in Jesus Christ.
We are deeply aware that the world is twisted and tortured by tornadoes of selfishness. The best way to tackle this problem is to make our families live this exodus – the experience of ‘going out’ and ‘leaving behind’!

Let me close with another moving, up-lifting real-life incident that shows a priest who, true to his vocation, acts as a true shepherd on a battlefield: A soldier dying on a Korean battle field asked for a priest. The Medic could not find one. A wounded man lying nearby heard the request and said, “I am a priest.” The Medic turned to the speaker and saw his condition, which was as bad as that of the other. “It will kill you if you move,” he warned. But the wounded chaplain replied. “The life of a man’s soul is worth more than a few hours of my life.” He then crawled to the dying soldier, heard his confession, gave him absolution and the two died peacefully.
Jesus-Good-Shepherd-13


உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு

'டைட்டானிக்' (Titanic) என்ற சொல்லைக் கேட்டதும், பிரம்மாண்டமான கப்பல் ஒன்று நம் மனக்கடலில் மிதந்து வரும். புகழ்பெற்ற அக்கப்பல், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, அட்லான்டிக் கடல் நடுவே, பனிப்பாறையில் மோதி, கடலில் மூழ்கியது என்பதும் நம் நினைவில் பதிந்திருக்கும். "எதுவும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்ற ஆணவ அறிக்கையுடன் ஏப்ரல் மாதம் 10ம் தேதி புறப்பட்ட 'டைட்டானிக்', ஏப்ரல் மாதம் 15ம் தேதி இரு துண்டுகளாகப் பிளவுபட்டு, கடலில் மூழ்கியது. அக்கப்பல், மூழ்கி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கும் நேரத்தில் நிகழ்ந்த வீரச் செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒளி விளக்குகளாக இன்றும் நம் மனங்களுக்கு நிறைவு தருகின்றன. அந்த ஒளி விளக்குகளில் ஒன்று, Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள் பணியாளர்களைப் பற்றியது.
'டைட்டானிக்' மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று அருள் பணியாளர்களும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டனர். மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்களது பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை; இவர்களது உடல்களும் மீட்கப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களைப் பெருமையுடன், நன்றியுடன் இன்றும் எண்ணி வருகின்றனர். இன்று நாம் கொண்டாடும் நல்லாயன் ஞாயிறன்று, இவ்வருள் பணியாளர்களைப்பற்றி சிந்திப்பது பயனளிக்கும்.

ஆங்கிலிக்கன் சபையில் பிறந்த Thomas Byles அவர்கள், தன் 24வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்து, 32வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தன்னைப்போல கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்த தன் தம்பியின் திருமணத் திருப்பலியை நிகழ்த்த, 42 வயதான அருள்பணி Byles அவர்கள், நியூ யார்க் நகர் நோக்கி பயணம் செய்தார். டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 14, ஞாயிறன்று, அருள்பணி Byles அவர்களும், அருள்பணி Peruschitz அவர்களும் கப்பலில் பயணித்த கத்தோலிக்கர்களுக்கு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர்.
41 வயதான அருள்பணி Benedikt Peruschitz அவர்கள், புனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் Minnesota  மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்க, கப்பலில் சென்று கொண்டிருந்தார்.
இம்மூன்று அருள் பணியாளர்களில் இளையவரான அருள்பணி Juozas Montvila அவர்கள், டைட்டானிக் கப்பலில் பயணித்தபோது, அவரது வயது 27. லித்துவேனியா நாட்டில் பிறந்த இவர், தன் 23வது வயதில் கீழைவழிபாட்டு முறை திருஅவையில் அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இரஷ்ய அரசின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டிருந்த கத்தோலிக்கர்களுக்கு, இரகசியமாக அருள்பணி புரிந்த இவர், அமேரிக்கா சென்று, இன்னும் சற்று சுதந்திரமாக தன் அருள் பணிகளைத் தொடரும் நோக்கத்துடன் கப்பலில் புறப்பட்டார்.

இம்மூவரின் வாழ்விலும் நல்லாயன் இயேசுவின் பண்புகள் வெளிப்பட்டதை உணர்கிறோம். அச்சுறுத்தும் ஓநாய்கள் சூழ்ந்தாலும், தன் ஆடுகளுக்குத் தேவையான ஆன்மீக உதவிகள் செய்த அருள்பணி Montvila அவர்கள், வேற்றுநாட்டில் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன் கப்பல் பயணம் மேற்கொண்டார்.
இளையோரை நல்வழிப்படுத்தும் நல்லெண்ணத்துடன், நாடுவிட்டு நாடு செல்ல, கடல் பயணம் மேற்கொண்டவர், அருள்பணி Peruschitz அவர்கள்.
இங்கிலாந்தின் Essex பகுதியில், St Helen என்ற கோவிலில், 10 ஆண்டுகளாக பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி Byles அவர்கள், தன் தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்தச் சென்று கொண்டிருந்தார்.

இவ்விதம், தங்களுக்கெனத் தனிப்பட்டத் திட்டங்களுடன் புறப்பட்ட இம்மூவரும், ஆபத்து சூழ்ந்த நேரத்தில், தங்கள் திட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, இறைமக்களான ஆடுகளுக்காக தங்கள் உயிரையும் வழங்கத் துணிந்தனர்.
இம்மூவரையும் புனிதர்களாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், இம்மூவரும் மக்கள் மனங்களில் புனிதமான ஓரிடம் பெற்றுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அருள்பணி Byles அவர்கள், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த St Helen கோவிலில் இவர் நினைவாக வைக்கப்பட்டுள்ள ஒரு வண்ணக்கண்ணாடி சன்னலில் (stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

ஒவ்வொரு முறையும் நூற்றாண்டு நினைவுகள் கொண்டாடப்படும்போது, வரலாற்றுக் காயங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. 2012ம் ஆண்டு 'டைட்டானிக்' கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவைக் கடைபிடித்தபோது, ஒரு சில மனிதரின் ஆணவம், 1500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது என்ற எண்ணம், நம்மை மீண்டும் காயப்படுத்தியது. 2014ம் ஆண்டு, முதல் உலகப்போர் துவங்கியதன் நூற்றாண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்த உலகப் போரின் இரத்தம் நிறைந்த வரலாற்றின் நூற்றாண்டு நினைவுகள், 2018ம் ஆண்டு முடிய அவ்வப்போது கடைபிடிக்கப்படும்.
இவ்வாண்டு, ஏப்ரல் 23, 24 தேதிகளில் ஆர்மேனியாவின் தலைநகர், Yerevanல் ஆட்டமோன் (Ottomon) அரசால் கொல்லப்பட்ட 15 இலட்சம் ஆர்மேனியர்களைப் புனிதர்களாக அறிவித்து, அவர்கள் நினைவு சிறப்பிக்கப்பட்டது. முதல் உலகப்போரில் அதிக அளவு உயிர்களைப் பறித்த மோதல், துருக்கி நாட்டின் Gallipoli வளைகுடாவில் நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. 1,31,000 வீரர்கள் கொல்லப்பட்ட அந்நிகழ்வின் நூற்றாண்டு நினைவு, ஏப்ரல் 24, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்த நினைவுகள் கடைபிடிக்கப்பட்டபோது, பல அரசியல் விவாதங்களும், வரலாற்றுக் காயங்களும் மீண்டும் திறக்கப்பட்டன. இலட்சக்கணக்கில் நிகழ்ந்த இந்த உயிர்ப்பலிகள், வரலாற்றுப் புள்ளிவிவரங்களாக, அரசியல் வாக்குவாதங்களுக்கு துணைபோகும் குறிப்புக்களாக மட்டுமே இன்று நம்மிடையே பயன்படுகின்றன. இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் யாரும் இந்த மனித வேட்டையில் உயிரிழந்ததாக வரலாறு சொல்லவில்லை.

தன்னலம், பேராசை, பழிவாங்கும் வெறி ஆகியத் தனிமனிதத் தீமைகளுக்குக் கொள்கை என்ற சாயம் பூசி, அக்கொள்கைகளுக்காக, மக்களைப் பலி கொடுக்கும் தலைவர்கள், மனித வரலாற்றின் பக்கங்களை அன்றும், இன்றும் நிரப்பி வருகின்றனர். இத்தகையத் தலைவர்களை, 'கூலிக்கு மேய்ப்பவர்' என்று இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். "நல்ல ஆயர், ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்... கூலிக்கு மேய்ப்பவர், ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்" (யோவான் 10: 11-12) என்று இயேசு கூறியதையும் தாண்டி, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இன்றைய நிலை. ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவர் நல்ல ஆயர் என்று இயேசு கூறியதற்கு நேர் எதிர் துருவமாக, ஆடுகளின் உயிர்களை எடுக்கும் போலி ஆயர்கள் பெருகியுள்ளது இன்று நாம் சந்திக்கும் ஆபத்து.

சுட்டுவிரல் கொண்டு மற்றவரைச் சுட்டிப் பேசும்போது எழும் வழக்கமான நெருடல் இப்போதும் நமக்குள் எழுகிறது. பதவி வெறி பிடித்த அரசுத் தலைவர்களையும், குறிப்பாக, இன்றைய நாட்களில், மத வெறி பிடித்த மதத் தலைவர்களையும், போலி மேய்ப்பர்கள் என்று சுட்டிக்காட்டிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்தப் போலி ஆயர்கள் அனைவரும் வானத்திலிருந்து குதிக்கவில்லை; மாறாக, ஏதோ ஒரு குடும்பத்தில் பிறந்து, பள்ளியில் பயின்று, ஒரு சமுதாயத்தால் வளர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மை, கூரிய விரல்களாக நம்மைக் குத்திக்காட்டுகின்றது.
நம்மைக் குத்தும் விரல்களை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொண்டால், நம் குடும்பங்கள், பள்ளிகள், சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும், 'நல்ல ஆயர்களும்', 'கூலிக்கு மேய்ப்பவர்களும்' வழிகாட்டிகளாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 'கூலிக்கு மேய்ப்பவர்களின்' கூட்டம் அதிகமானால், அடுத்தத் தலைமுறை எவ்விதம் வழிகாட்டப்படும் என்பதை எண்ணிப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

பத்து நாட்களுக்கு முன் (ஏப்ரல் 16, 2015), உலக ஊடகங்களில், குறிப்பாக, facebook, twitter, YouTube (Young Kurdish YPG Girl Use PKM – YouTube) போன்ற சமுதாய வலைத்தளங்கள் வழியே பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோச் செய்தி, அதிர்ச்சியில் என்னை உறையவைத்தது. ஈராக் நாட்டின் குர்திஷ் (Kurdish) இனத்தைச் சேர்ந்த 6 அல்லது 7 வயதே நிறைந்த ஒரு சிறுமி, ஏதோ ஒரு பாலை நிலத்தில் எதையோ பார்த்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் பயன்படுத்துவது விளையாட்டுத் துப்பாக்கி அல்ல, தொடர்ச்சியாக பல குண்டுகளைச் சுடும் உண்மையான 'மஷின் துப்பாக்கி' அது. இந்த வீடியோவைப் படமாக்கியவர், அச்சிறுமியின் தந்தை என்பது ஊடகங்களின் கணிப்பு. வீடியோ காமிராவை இயக்கிக் கொண்டிருந்த அவர், சிறுமியிடம், "நீ இன்று எத்தனை ISIS தீவிரவாதிகளைக் கொன்றாய்?" என்று கேட்க, அச்சிறுமி காமிரா பக்கம் திரும்பி, தன் பிஞ்சு விரல்களை நீட்டி, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், "400 பேர்" என்று கூறுகிறாள். தொடர்ந்து அச்சிறுமியிடம், "கொல், அவர்களைக் கொல்" என்று அக்குரல் கூற, சிறுமியும் தொடர்ந்து சுடுகிறாள்.
மனதை அதிரவைக்கும் இந்த வீடியோ, இன்றைய உலகின் வன்முறைகளுக்கு ஏதோ ஒருவகையில் பதில் தருகிறது. பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. ஏப்ரல் 26ம் தேதி நாம் கொண்டாடும் இந்த 52வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.

நல்லாயன், இறையழைத்தல் என்ற இரு எண்ணங்களையும் இணைக்கும் ஓர் உண்மைச் சம்பவம் இது. கொரியாவில் நடந்துவந்த போரின் உச்சக்கட்டம். போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஓர் அருள்பணியாளரைச் சந்திக்க வேண்டுமென்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர் திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் அருள்பணியாளருக்கு எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரருக்கு அருகில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஓர் அருள்பணியாளரை்" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து." என்று அந்த அருள்பணியாளரிடம் எச்சரித்தார். அதற்கு அந்த அருள்பணியாளர், "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்" என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து வந்தார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரரின் இறுதி நேரத்தில் அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரரும், அருள்பணியாளரும் அமைதியாக இறந்தனர்.

ஏப்ரல், மே மாதங்கள்... முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

19 April, 2015

Love and loyalty in your hands உள்ளங்கையில் ஒளிரும் உண்மை

Crucified hands


On October 23, 2011, an earthquake of 7.2 magnitude struck the town of Van in Turkey. As in many other natural calamities, the loss of life in Van was increasing by the hour. Yet, there also emerged some very poignant human stories of saving lives. Here is one such report from thestar.com:
After 48 hours, a miracle emerged from a narrow slit in the rubble of a Turkish apartment building: a 2-week-old baby girl, half-naked but still breathing. Stoic rescue workers erupted in cheers and applause at her arrival — and later for her mother's and grandmother's rescues… The fact that three generations were saved in a dramatic operation was all the more remarkable because the infant, Azra Karaduman - her first name means desert flower in Turkish, reports CBS News correspondent Mark Phillips - was later declared healthy after being flown to a hospital in Ankara, the Turkish capital.
Mark Philips, the CBS correspondent said, “It is, the small human stories not the big statistics that capture the imagination…” This is true. In the natural calamities of earthquake and tsunami that occurred in Turkey and Japan (2011), in Haiti (2010) and in the Asian countries (2004), the statistics may have faded from our memory; whereas, the stories of rescue have not only captured our imagination, but have increased our faith in humanity and in God.

On January 26, 2010, 15 days after the earthquake that devastated Haiti, Darlene Etienne, a 16 year old girl, was rescued from the crumbled concrete and twisted steel. This was reported as an Easter experience. In the same year, when 33 miners in Chile were rescued from the bowels of the earth after 69 days of struggle, all the bells in the country were rung in thanksgiving. The president of the Chilean Bishops Conference, Bishop Alejandro Goic Karmelic urged the whole nation to undertake fasting and prayer from October 12 when the rescue mission was started. Once the rescue mission was completed, he asked them to continue their prayers of thanksgiving for making Chile, a witness to the power of Christ’s Resurrection. Many of those miners, after their ‘resurrection’, went around the world, sharing their faith-experience. It is the unmistakable presence of God that inspired the men to refer to Him as the “34th man” in the mine. Jose Henriquez, one of the rescued miners, explained: “We began to feel the presence of this friend, of this invisible miner. We couldn’t see him but he was down there with us. We weren’t 33 down there but 34 and we were all very clear about that.”

Those who are involved in rescue operations as well as those who witness these ‘miracles’ either in person or over the TV, break into a spontaneous applause. Most of them break into tears too. I am surely one of them. Extreme joy and extreme sadness bring tears. These extreme situations also leave us stunned in disbelief. “Oh, my God, I can’t believe this” is the cry of a person bursting with joy or buried in agony. We hear of a similar situation in today’s Gospel: They (the disciples) still disbelieved for joy, and wondered… What Jesus did with the stupefied disciples was more stupefying. The same verse talks about this: And while they still disbelieved for joy, and wondered, Jesus said to them, "Have you anything here to eat?" (Luke 24:41)

The idea of the Resurrection was not a clear concept for the disciples, brought up in the Jewish tradition. So, Jesus could have easily taught them about the Resurrection, by showing himself in all his glory as he had done once earlier on Mount Tabor. Such a revelation would have cleared the doubts of the disciples once and for all. Jesus had other ideas. A brilliant manifestation of his glory would have surely dazzled the disciples; but, would that have left a lasting impression on them? I wonder! The way Jesus, the master-par-excellence, chose to reveal the great mystery of the Resurrection left lasting impressions on the disciples and changed their life entirely.

“Have you anything here to eat?” was the way Jesus began his lessons. In most of the post-resurrection encounters of Jesus with his disciples, food became a central element. Jesus sharing a meal with them can be seen from two perspectives.
The first perspective is drawn from our own life situations. When a family loses a dear one, especially if it is the sudden death of a younger person, the family would be devastated. The family members will neither eat nor sleep. Those who are close to this family will somehow force the family members to eat something. I see Jesus doing something similar among his disciples. The disciples of Jesus as well as Mother Mary must have stopped eating after the tragedy at Calvary. So, Jesus came to them to force them to eat by sharing a meal with them.

The second perspective comes from the way Jesus and his disciples had been sharing food during their life together. Since their life had become very hectic, private moments of sharing a meal must have become rare. When such ‘private moments’ arrived, they were moments of deep sharing – not only sharing of food, but also sharing of their inner selves. The peak moment of such a sharing occurred three days back when Jesus shared the Paschal meal with his disciples. It was during that meal that he had assured them of his continued presence in the form of food – bread and wine.
When Jesus met them after the Resurrection, he wanted to remind them of that Special Supper. He also wanted to tell them that nothing had changed. By sharing another meal with them, he assured them that his presence continued with them.
Sharing of food, a very common feature in daily life is not simply the filling of one’s stomach with some edible stuff. It is filled with so many other aspects of human life. Especially when a meal is shared among those who are very close, food assumes a sacramental meaning.

Before sharing this meal, Jesus did another simple gesture among his disciples. Here is the first part of today’s gospel: “As they were saying this, Jesus himself stood among them. But they were startled and frightened, and supposed that they saw a spirit.  And he said to them, "Why are you troubled, and why do questionings rise in your hearts? See my hands and my feet, that it is I myself; handle me, and see; for a spirit has not flesh and bones as you see that I have." And when he had said this, he showed them his hands and his feet. And while they still disbelieved for joy, and wondered, he said to them, "Have you anything here to eat?"

Jesus showed them his pierced hands and feet as proofs of his Resurrection rather than the torn screen of the Temple or the empty tomb. Once again, Jesus made the experience of his Resurrection much more personal than a grand exhibition of his power and majesty. His pierced hands and feet were a deeper testimony of his power of love than any other outward manifestation. I am reminded of a lovely story from Tolstoy that talks about ‘hands’:
Tolstoy once told a story of a Czar and Czarina who wished to honour the members of their court with a banquet. They sent out invitations and requested that the guests come with the invitations in their hands. When they arrived at the banquet the guests were surprised to discover that the guards did not look at their invitations at all. Instead they examined their hands. The guests wondered about this, but they were also curious to see who the Czar and Czarina would choose as the guest of honour to sit between them at the banquet. They were flabbergasted to see that it was the old scrub woman who had worked to keep the palace clean for years. The guards, having examined her hands, declared, "You have the proper credentials to be the guest of honour. We can see your love and loyalty in your hands." http://cbci.in/Sunday-Reflections.aspx
Sharing of a meal, showing the wounded hands and feet had such a lasting impact on the disciples that they became messengers of the Resurrection even to the point of laying down their lives. The Risen Christ is not a magician who dazzles us momentarily by his brilliance, but a Saviour who accompanies us in the day to day events of our lives making a great difference!
Azra Karaduman – When rescued (inside the circle) and now…

2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின் Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர் அளவு) பல்லாயிரம் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அன்றைய நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றனர். பிறந்து, 2 வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை, நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரங்கள் சென்று, இடிபாடுகளின் நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டது. அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில், குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet) மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள் அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு, "பாலைநிலத்து மலர்" என்பது பொருள் என்றும், 2 வாரக் குழந்தை, இரு தலைமுறைகளைக் காப்பாற்றியது என்றும், இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.
அமெரிக்கத் தொலைகாட்சி நிறுவனம் (CBS) இச்செய்தியை ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர் சொன்ன வார்த்தைகள் பொருளுள்ளவையாக ஒலித்தன: "பெரிய, பெரிய புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக் கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011), ஹெயிட்டியில் (2010) பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர், காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில் பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவில் உயிர்கள் மீட்கப்பட்டக் கதைகள், நம்மை அதிகம் கவர்ந்தன என்பது மட்டுமல்ல; நம் உள்ளங்களில் நம்பிக்கை விதைகளை நட்டன என்பதையும் மறுக்க முடியாது.

2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால் எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின், Darlene Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டார் என்ற செய்தியை, ஓர் உயிர்ப்பு என்று ஊடகங்கள் விவரித்தன. அதே 2010ம் ஆண்டு, சிலே நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக் கொண்டாடப்பட்டது.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் 2300 அடி ஆழத்தில் தாமிர, மற்றும் தங்கச் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் அரைமைல் தூரத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது.
அக்டோபர் 12ம் தேதி, அதாவது, அத்தொழிலாளிகள் புதைக்கப்பட்டு, 69 நாட்களுக்குப் பின், சிலே அரசு, மீட்புப் பணியின் இறுதிக் கட்டத்தைத் துவக்கியபோது, சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ் அவர்களின் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள், மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதையுண்டவர்களில் முதல் தொழிலாளி சுரங்கத்தைவிட்டு வெளியேறியபோது, அந்நாட்டின் கோவில் மணிகள் அனைத்தும் ஒலித்தன என்று சொல்லப்படுகிறது. இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."
கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், கதவுகளை மூடி, தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி, இயேசுவை உலகறியச் செய்ததுபோல், முற்றிலும் மூடப்பட்டு, இனி வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் கிடைக்காது, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள், வெளியே வந்த பின், பல ஊர்களுக்கு, பல நாடுகளுக்குச் சென்று இயேசுவை உலகறியச் செய்து வருகின்றனர். "அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால் எங்களுடன் 34வது பேராக, இறைவன் எப்போதும் உடன் இருந்தார்." என்று இவர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

அழிவை உறுதிப்படுத்தும் இயற்கைப் பேரிடர்களின் நடுவில், ஆங்காங்கே உயிர்கள் மீட்கப்படும் அற்புதங்கள் நிகழும்போது, நம்மையும் அறியாமல் நாம் கூறும் சொற்கள், இவ்விதம் ஒலிக்கும்: “Oh my God, I can't believe this”கடவுளே, என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று மகிழ்வின் உச்சத்தில் நாம் கத்தியிருக்கிறோம். இதே வார்த்தைகளை, துயரத்தின் புதைமணலில் புதைந்துபோனபோதும் நாம் சொல்லிக் கதறியிருக்கிறோம். மகிழ்வு, துயரம் இரண்டின் உச்சநிலைகளும் நம்ப முடியாத ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றன. மகிழ்வின் சிகரத்தில் நிறுத்தப்பட்ட இயேசுவின் சீடர்களைப் பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். (லூக்கா நற்செய்தி 24: 41)
தனது உயிர்ப்பை நம்பமுடியாத அளவு வியப்பும், மகிழ்வும் அடைந்த சீடர்களை இன்னும் அதிகமாய் வியப்பில் ஆழ்த்தி, உயிர்ப்பின் வல்லமையை இயேசு அவர்களுக்குக் காட்டியிருக்கலாம். அதற்குப் பதிலாக, தன் உயிர்ப்பை நிரூபிக்க, இயேசு செய்தது, மிகவும் எளிமையான, சர்வ சாதாரணமான ஒரு செயல். அது நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” (லூக்கா நற்செய்தி 24: 41) என்று சர்வ சாதாரணமாக இயேசு கேட்கிறார்.
உயிர்த்தபின் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில் உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை, நாம் இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதல் கோணம்: பொதுவாக எந்த ஒரு குடும்பத்திலும் நிகழ்வது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அதுவும் வாழவேண்டிய வயதில் ஒருவர் மரணம் அடைந்தால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தாங்கமுடியாத துயரத்தில் மூழ்குவர். உணவும், உறக்கமும், அவர்கள் எண்ணங்களிலிருந்து விடைபெறும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அக்குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், எப்பாடு பட்டாவது, அவர்களை உண்ணும்படி வற்புறுத்துவர்.
இந்தக் கோணத்தில் நாம் இயேசுவின் செயலைச் சிந்திக்கலாம். தனது மரணத்தால் மனமுடைந்து போயிருக்கும் சீடர்களும், அன்னை மரியாவும், கடந்த மூன்று நாட்களாக உண்ணாமல் இருந்ததால், அவர்களை மீண்டும் உண்ணும்படி வற்புறுத்தவே, இயேசு உணவைப் பற்றிப் பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பரிவுள்ள ஒரு தாயின் அன்பு, உயிர்த்த இயேசுவில் வெளிப்படுவதைக் காணலாம்.
இரண்டாவது கோணம்: இயேசுவும் அவரது சீடர்களும் கடந்த மூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் அதிகம் மூழ்கிப் போயிருந்தவர்கள். எனவே, நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ட நேரங்கள் மிகக் குறைவே. அப்படி அவர்கள் சேர்ந்து உணவு உண்ட அரிய நேரங்களில், அவர்கள் மத்தியில் உணவு மட்டும் பகிரப்படவில்லை, உணர்வுகளும் உண்மைகளும் பகிரப்பட்டன. அந்த ஆழமான பரிமாற்றங்களின் உச்சமாக, மூன்று நாட்களுக்கு முன், அவர்கள் உண்ட அந்த இறுதி பாஸ்கா இரவுணவு அமைந்தது. அந்த இறுதி இரவுணவின் தாக்கம், இன்னும் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆழ்ந்த உறவுகளை, உண்மைகளை வெளிப்படுத்திய அந்த இரவுணவை மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்த, இயேசு உயிர்த்த பின்பும், அவர்களோடு உணவருந்த வந்திருந்தார் என்றும் எண்ணிப் பார்க்கலாம்.

இறுதி இரவு உணவின்போது, தன் பிரசன்னத்தை உலகில் தொடர்ந்து நிலைநிறுத்த, இயேசு உணவைப் பயன்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். உயிர்ப்புக்குப் பின் தனது பிரசன்னம் தொடர்கிறது என்பதை மீண்டும் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதற்காக, இயேசு உணவை மீண்டும் பயன்படுத்துகிறார். உயிர்ப்பு என்பது நம்மை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒரு பெரிய மந்திரச் செயல் அல்ல. நமது சாதாரண, அன்றாட வாழ்வில், நம்முடன் இணைந்த ஓர் அற்புதமே உயிர்ப்பு, என்ற ஓர் உண்மையை, இந்த உணவுப் பகிர்தலில் இயேசு சொல்லித் தந்தார். இந்த நிகழ்வின் வழியே, இயேசு தன் சீடர்களிடம் சொல்லாமல் சொன்னது இதுதான்:
"கல்வாரிச் சிலுவையும், கல்லறையும் நம் உறவை அறுத்துவிட்டதென நீங்கள் எண்ணுகிறீர்கள். சிலுவையும், கல்லறையும் நம் உறவை அழித்துவிட முடியாது.  உங்களுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நான், இதோ உங்களோடு வாழ்வைத் தொடர வந்துள்ளேன். எனவே, உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று இயேசு கேட்டார். உணவின் வழியாக, உயிர்ப்பைப்பற்றியும், தொடரும் தன் உறவைப்பற்றியும் இதைவிட அழகான பாடங்களைச் சொல்லித்தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

உணவின் வழியாக உயிர்ப்பின் பேருண்மையைக் கூறிய இயேசு, அதற்கு முன்னதாக, காயப்பட்ட தன் கரங்களையும், கால்களையும் சீடர்களுக்குக் காட்டுகிறார். அவை, மற்றுமோர் எளிய அடையாளம். இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) அவர்கள் எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகிறது.
அரசர் ஒருவர், தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்து, அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள் தங்கள் அழைப்பிதழைக் கையோடு கொண்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பணியாளர்களில் ஒருவர், சிறப்பு விருந்தினராக, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விருந்தில் அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அனைவரும் அழைப்பிதழைக் கொண்டு வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாயில் காப்பவர்கள், பணியாளர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி, சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கைகளைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு, உங்களுக்கே உள்ளது; அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும் உங்கள் உள்ளங்கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச் சென்று, அரசருக்கும், அரசிக்கும் நடுவே அமர வைத்தனர்.
உள்ளங்கை உணர்த்தும் உண்மைகளை உணர, உள்ளம் திறந்திருக்கவேண்டும்!

காலியானக் கல்லறை, அங்கு தோன்றிய வானதூதர், எருசலேம் கோவிலில் இரண்டாகக் கிழிந்தத் திரை என்ற பிரமிப்பூட்டும் அடையாளங்களைவிட, ஆணிகளால் அறையப்பட்டக் கரங்களும், கால்களும், சீடர்களின் மனங்களில், உயிர்ப்பின் அடையாளங்களாய், ஆழப் பதியவேண்டும் என்று இயேசு விழைந்தார்.
வெகு வெகு எளிதான வாழ்வு அனுபவங்களின் வழியாக, உயிர்ப்பு என்ற பேருண்மையை இயேசு எடுத்துரைத்ததால், சீடர்களின் உள்ளங்களில் இந்த மறையுண்மை வெகு ஆழமாகப் பதிந்தது. ஆழப் பதிந்தது மட்டுமல்லாமல், இந்த மறையுண்மைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் வாழ்வு மாறியது. தான் உயிர்த்ததை பிரம்மாண்டமான ஒரு சக்தியாக இறைமகன் இயேசு காட்டியிருந்தால், அது, ஒரு நொடிப்பொழுது வியப்பில், சீடர்களை, பரவசம் அடையச் செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வு மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வை மாற்றும் ஒரு சக்தியாக இயேசு உயிர்ப்பைக் காட்டியதால், அதன் தாக்கம் சீடர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது.

கிறிஸ்தவ மறையின் ஆணிவேரான 'உயிர்ப்பு' என்ற பேருண்மையை, அறிவுக்கெட்டாத ஏட்டளவு உண்மையாக இயேசு சொல்லித் தரவில்லை, மாறாக, அந்த மறையுண்மையை உணவு, காயப்பட்ட கரங்கள், கால்கள் போன்ற எளிதான மனித நிகழ்வுகளின் மூலம் இயேசு அன்று தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்தார். இன்று நமக்கும் சொல்லித் தருகிறார்.
கடவுள் மந்திர, மாயங்கள் செய்யும் மந்திரவாதி அல்ல. நம் வாழ்வில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யும் அன்பர் அவர்.
மாயங்கள் செய்து, மலைக்க வைப்பது, மந்திரவாதியின் கைவண்ணம் - வாழ்வில்
மாற்றங்கள் செய்து, நிலைக்க வைப்பது, இறைவனின் அருள்வண்ணம்.


12 April, 2015

Touch and taste the Mercy of God கடவுளின் கருணையை தொட்டு சுவைக்க...

'My Lord and my God' - Illustration by: J. ALAN VOKEY/JAVOK.COM
Divine Mercy Sunday
Any Tom, Dick and Harry, the moment he/she begins to doubt, becomes only a Tom. Doubting Tom. Unfortunately, Tom seems to hold a monopoly over one of the most common human experiences called doubting. Kindly spare a thought for Tom, I mean St Thomas, the Apostle. He was not the only one to doubt the Resurrection of Jesus. All the disciples were shrouded in a cloud of doubt and fear. Only Thomas verbalised their collective doubt. “Unless I see…” This Sunday’s Liturgy focuses on the encounter of Thomas with Jesus. – (John 20:19-31)
John’s Gospel glides over the fact that the other disciples doubted too. Luke’s Gospel makes it more explicit.
Luke 24: 36-37
While they were still talking about this, Jesus himself stood among them and said to them, "Peace be with you." They were startled and frightened, thinking they saw a ghost. He said to them, "Why are you troubled, and why do doubts rise in your minds? Look at my hands and my feet. It is I myself! Touch me and see; a ghost does not have flesh and bones, as you see I have."
Both Luke and John talk of Jesus showing them his hands, feet and side. He also invited them to touch Him. If these disciples (sans Thomas) simply accepted Jesus’ Resurrection, then this invitation to ‘touch and see’ was un-called-for. Jesus must have seen the doubt in their eyes, although they did not speak out. Only our poor Tom seems to have spoken out. For our reflection, we shall consider all the disciples as ‘doubting Thomases’.

Some of us may have already taken the judgement seat trying to pronounce our judgement on Thomas: “What a pity! After having lived with Jesus so closely for three years, this guy still doubted Jesus!” Well, after having listened to hundreds of treatises on Resurrection, I still have my moments of hesitation. How can I judge Thomas, who came from the Jewish background where the idea of Resurrection was not that strong?
If I were present in Jerusalem on the last few days of Jesus’ life, I would have had more doubts than Thomas, especially after having seen those last few hours on Calvary. So, I dare not take the judgement seat. Let me see whether I can stand along with the ‘accused’ Thomas and the other disciples and try to see this incident from their perspective.

The disciples left their trade, their parents, their everything... to follow Jesus. In those three years, Jesus became everything to them. He was their world. This world was brutally uprooted and nailed to the cross. The vacuum created by the absence of Jesus was filled by doubts and fear. Their doubts were very real. One of them betrayed him and another denied him. They could no longer believe in one another, neither could they believe in themselves. The way most of them ran away from the scene of the arrest of Jesus was still very raw. Probably most of them did not even attend the funeral of Jesus, since they were already buried in their own fears and worries. They decided to lock themselves up and wait for the inevitable… the certainty of their own execution by the Romans. They had already built their tomb in the upper room.

Jesus did not want his loved ones to see decay. He wanted to open their graves and bring them alive. Hence, He entered their ‘tomb’ and stood among them. How did He come in? All the doors were locked… then, how could He? That was and, still, is the beauty of Jesus. The God of surprises! From his birth, He had surprised the Jewish world. It was the trademark of Jesus to defy expectations. He had done it once again.
Surprise and the sense of wonder are part of the world of a child… not that of an adult since the adult world is governed more by ‘safe’ logic and intellectual assumptions. In this adult world two and two is ALWAYS four. In a child’s world two and two can sometimes be FIVE! It is this adult world of logic that brings in doubts.
Thomas was an adult all right. Unfortunately, he went a bit far. He was still smarting from the pain of the last few days and hence he did not want to believe the ‘stories’ of his companions. They too had been hallucinating like the women who went to the tomb, he thought. He wanted solid proof, tangible proof that can be seen and touched. “Unless I see… and touch…” he demanded. He got more than he asked for.
When Jesus offered him this solid proof, Thomas became a child again. We are not sure whether Thomas went the full distance of his verification process, meaning, whether he touched Jesus at all. The Gospel of John is silent on this. But, this Gospel is loud and clear about the profession of faith that Thomas made:  “My Lord and my God!”. Thomas was the first human being to call Jesus by the title ‘God’. This was indeed a ‘child-like giant leap’ for a proof-seeking adult!

Today, the Second Sunday of Easter, is also celebrated as the Divine Mercy Sunday. I was thinking of the connection between Divine Mercy and Doubting Thomas. What occurred to me was simple: namely, when someone is struggling under the cloud of doubt, the least others can do is to sympathise… to show some mercy, compassion… to give him/her the benefit of the doubt… to accompany the one struggling with the ghosts of doubt. We see this in the encounter between Jesus and Thomas. Jesus was, in some way, ‘playing’ with Thomas and other disciples. We see this in most of the post-resurrection narratives! Jesus seemed to be familiar and yet unfamiliar!
We are thankful to Thomas for being absent the first time when Jesus appeared to the other disciple. Otherwise such a lovely encounter would not have taken place. We are more thankful to Thomas since his doubt brought out one more ‘beatitude’ from Jesus – a beatitude addressed to all of us: “Blessed are those who have not seen and yet have believed."(John 20:29)

Our closing thoughts are on the ‘history’ of the Divine Mercy Sunday and the declaration of the Holy Year of Mercy by Pope Francis.
In the Jubilee Year 2000, Pope John Paul II established the Divine Mercy Sunday and integrated it as part of the Liturgical calendar. In 2005, he passed away on the eve of this Divine Mercy Sunday and six years later he was beatified on the same Divine Mercy Sunday. Last year, 2014, he was canonised along with Pope John XXIII on Divine Mercy Sunday.
When Pope Francis was returning to Rome from Rio, after the World Youth Day, he spoke of the canonization of the two Popes that would send a clear message to the Church and the world at large. This ‘message’ would be that the world needs many more ‘merciful’ persons like Good Pope John and the Great John Paul! Pope Francis, when asked why he chose the Divine Mercy Sunday for the canonization of Popes John XXIII and John Paul II, said that it signified that a new “age of mercy” was needed in the Church and the world. Both these saintly Popes have been, unquestionably, ‘messengers of mercy’!

‘Mercy’ is a key theme of the Papacy of Pope Francis. He made this very obvious on March 13, 2015. On the Second Anniversary of his Election as the Holy Father, Pope Francis, during the evening celebration of the Sacrament of Reconciliation, said that he had decided to declare ‘the Holy Year of Mercy’ commencing on December 8, 2015, running up to November 20, 2016. Here are a few lines from his homily delivered in St Peter’s Basilica on March 13:
Dear brothers and sisters, I have often thought of how the Church may render more clear her mission to be a witness to mercy; and we have to make this journey… Therefore, I have decided to announce an Extraordinary Jubilee which has at its centre the mercy of God. It will be a Holy Year of Mercy.
This Holy Year will commence on the next Solemnity of the Immaculate Conception and will conclude on Sunday, 20 November 2016, the Solemnity of Our Lord Jesus Christ, King of the Universe and living face of the Father's mercy... I am confident that the whole Church, which is in such need of mercy for we are sinners, will be able to find in this Jubilee the joy of rediscovering and rendering fruitful God’s mercy, with which we are all called to give comfort to every man and every woman of our time. Do not forget that God forgives all, and God forgives always. Let us never tire of asking forgiveness.


Jubilee Year of Mercy
இறை இரக்கத்தின் ஞாயிறு
கருணையின் வடிவே கடவுள் என்பதை எல்லா மதங்களும் ஆணித்தரமாகச் சொல்கின்றன. கருணையே வடிவான கடவுளைக் கொண்டாட திருஅவை நம்மை இன்று அழைக்கிறது
உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, கடவுள் கருணையின் ஞாயிறு, அல்லது இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்கத்தின் ஞாயிறை வழிபாட்டு காலத்தின் ஒரு பகுதியாக 2000மாம் ஆண்டில் இணைத்தவர், திருத்தந்தை 2ம் ஜான்பால். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய இரவு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இறைவனின் இரக்கத்தில் இரண்டறக் கலந்தார். 2011ம் ஆண்டு, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், முத்திப்பேறு பெற்றவராகவும், 2014ம் ஆண்டு, இதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தையர், 2ம் ஜான்பால் அவர்களையும், 23ம் ஜான் அவர்களையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, அவர் "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார்.

"இரக்கம் காட்டுவதில் இறைவன் சலிப்படைவதே இல்லை" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சலிப்பின்றி பயன்படுத்தி வரும் தாரக மந்திரம். இவ்வுலகம் ஏங்கித் தவிக்கும் இரக்கத்தையும், அந்த இரக்கத்தின் ஊற்றான இறைவனையும், கொண்டாட, ஒரு சிறப்பு ஆண்டினை ஒதுக்கி, அதை, 'இரக்கத்தின் புனித ஆண்டு' (Holy Year of Mercy) என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் அறிவித்துள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையில் பொதுவாக, 25, 50, 100 என்ற எண்களைக் கொண்ட ஆண்டுகள், ஜுபிலி ஆண்டுகளாக, புனித ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த எண்களைக் கொண்டிராத வேறு சில ஆண்டுகளை, சிறப்பான புனித ஆண்டுகளாக திருத்தந்தையர் அறிவிப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, நமது மீட்பர் இயேசு உயிர் துறந்தது, கி.பி.33ம் ஆண்டு என்ற கணக்கை அடிப்படையாகக் கொண்டு, 1983ம் ஆண்டில், மீட்பின் வரலாறு 1950 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாட, சிறப்பு ஜுபிலி ஆண்டை, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள் அறிவித்தார். தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இரக்கத்தின் புனித ஆண்டை' அறிவித்துள்ளார். 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல உற்பவத் திருநாளன்று 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவடைந்தது. 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், 'இரக்கத்தின் புனித ஆண்டு' 2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருநாளன்று நிறைவடையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, மார்ச் 13ம் தேதி, தன் தலைமைப் பணியின் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்த நாளன்று, 'இரக்கத்தின் புனித ஆண்டை' அறிவித்தது, பொருத்தமாக இருந்தது. அவரது தலைமைப் பணியின் உயிர்நாடி, இரக்கம் என்பதை, இந்த அறிவிப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது. மார்ச் 13, மாலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 'இறைவனோடு 24 மணி நேரம்' என்ற முயற்சியை, ஒப்புரவு அருள் அடையாள வழிபாட்டுடன் அவர் ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் வழங்கிய மறையுரையில், 'இரக்கத்தின் புனித ஆண்டை' முதன் முறையாக அறிமுகம் செய்து வைத்தார். அவரது மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஒரு சில வரிகள் இதோ:
"அன்பு சகோதர, சகோதரிகளே, இரக்கத்தின் சாட்சியாக, திருஅவை எவ்விதம் பணியாற்ற முடியும் என்பதை அடிக்கடி சிந்தித்து வருகிறேன். எனவே, ஒரு சிறப்பான ஜுபிலி ஆண்டை அறிவிக்க நான் முடிவு செய்துள்ளேன். பாவிகளாகிய நாம், 'இரக்கத்தின் புனித ஆண்டில்' கடவுளின் கருணையை மீண்டும் ஒருமுறை சுவைத்து மகிழ்வோம் என்பது என் நம்பிக்கை. கடவுளின் கருணை தரும் சுகத்தை, இன்றைய உலகின் ஒவ்வோரு மனிதரும் உணர்வதற்கு நாம் உதவ வேண்டும்... மறந்து விடாதீர்கள்... கடவுள் எல்லாரையும் மன்னிக்கிறார், எப்போதும் மன்னிக்கிறார். எனவே, மன்னிப்பு வேண்டுவதில் நாம் சலிப்படைய வேண்டாம்."

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 'இரக்கத்தின் புனித ஆண்டை'யொட்டி, அவர் எழுதியுள்ள சிறப்பு 'பாப்பிறை ஆணை அறிக்கை' (Papal Bull of Indiction), ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை மாலை, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய நாள் மாலை வழிபாட்டின்போது, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள 'புனித கதவு'க்கு முன், வெளியிடப்படுகிறது. இந்தப் புனிதக் கதவு, இவ்வாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று திறக்கப்படும். உரோம் நகரில் அமைந்துள்ள ஏனைய மூன்று (புனித மேரி மேஜர், புனித லாத்தரன், புனித பவுல்) பசிலிக்கா ஆலயங்களின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவுகளும், இதேபோல், டிசம்பர் 8ம் தேதியன்று திறந்துவைக்கப்படும். அடுத்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முடிய திறந்து வைக்கப்படவிருக்கும் புனிதக் கதவுகள், நமக்காக எப்போதும் திறந்தே இருக்கும் இறைவனின் இதயத்தை நினைவுறுத்தும் ஓர் அடையாளம்.

இருகரம் விரித்து, இதயத்தைத் திறந்து, காத்திருக்கும் இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் பலச் சூழல்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். குறிப்பாக, நம் வாழ்வில் சந்தேகப் புயல்கள் வீசும்போது, இறைவன், அவற்றை அடக்கி, அமைதியைக் கொணரும் நேரத்தில், இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். சந்தேகப் புயலில் சிக்கித் தவித்தச் சீடர்களை, குறிப்பாக, தோமாவை, தன் இரக்கத்தின் சிகரத்திற்கு இயேசு அழைத்துச்சென்ற நிகழ்வை, இன்றைய நற்செய்தியாக (யோவான் 20:19-31) வாசிக்கிறோம்.

சந்தேகத்திற்கு ஓர் அடையாளமாக, ‘தோமையார் என்று அழைக்கப்படும் தோமா சுட்டிக்காட்டப்படுகிறார். உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அவ்வாறே, சந்தேகப்படும் யாரையும் சந்தேகத் தோமையார் என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் அடையாளமாகவே மாறிவிட்டார். இயேசுவின் உயிர்ப்பை அவர் சந்தேகப்பட்டார் என்றதால் அவருக்கு இந்த அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.
நாம் நான்கு நற்செய்திகளையும் அலசிப் பார்த்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழிலையும், குடும்ப உறவுகளையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று மாறிவந்த நேரத்தில், அந்த உலகம், ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. எருசலேமில், கல்வாரியில் சீடர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு, அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவனே இந்தக் கொடுமைகள் நடக்கக் காரணமாய் இருந்ததால், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தொலைந்து போனது. சிலுவையில், ஒரு கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள். அந்த கல்வாரிக்குப்பின், சிலுவைக்குப்பின் ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்துவிட்டனர்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட ஓர் அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்தச் சீடர்களை இயேசு அப்படியே தவிக்கவிட்டுவிடவில்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்டக் கதவுகள், இயேசுவுக்கு, ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை.  இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.

மூடப்பட்டக் கல்லறை, சாத்தப்பட்டக் கதவு என்ற தடைகள் அனைத்தையும் தாண்டி, சீடர்கள் வாழ்வில் இயேசு மீண்டும் நுழைந்தது, அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கவேண்டும். ஆனந்த அதிர்ச்சிகளால் நாம் தாக்கப்படும்போது, "என்னால் இதை நம்பமுடியவில்லையே!" என்று, சந்தேகமும் மகிழ்வும் கலந்த ஓர் உணர்வில் திணறுகிறோம்.
இயேசுவை மீண்டும் உயிரோடு சந்தித்தச் சீடர்களுக்கு, குறிப்பாக, தோமாவுக்கு இந்த நிலை உருவானது. தன் உயிர்ப்பை நம்பமுடியாமல் தவித்தச் சீடர்களின் சந்தேகத்தைப் போக்க, இயேசு அவர்களில் ஒருவராக மீண்டும் மாறினார். அவர்களிடம் இருந்த உணவைப் பகிர்ந்துகொண்டார். தன்னைத் தொட்டுப் பார்க்க அழைப்பு விடுத்தார். இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்றார். (யோவான் 20: 27,29)

நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும் சிந்தனையையும் இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்து காட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க, சில வேளைகளில், வாய் வார்த்தைகள் மட்டும் போதாது; ஆங்கிலத்தில் சொல்வதுபோல், 'physical proof', உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையை நிரூபணமாக அளித்ததாலும் தோமாவையும், மற்ற சீடர்களையும், அவர்கள் புதைந்து போயிருந்த நம்பிக்கையற்ற கல்லறைகளிலிருந்து இயேசு உயிர்ப்பித்தார்.

தன்னைத் தொடும்படி இயேசு தந்த அழைப்பைக் கேட்டு, தோமா அவரைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் வழியே அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20: 28) என்ற மிக மிக ஆழமான மறையுண்மையை தோமா பறைசாற்றினார். இயேசுவை, கடவுள் என்று அறிக்கையிட்ட முதல் மனிதப்பிறவி தோமாதான். இயேசு, தோமாவை, இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்டுணர்ந்த அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் பறைசாற்றினார் திருத்தூதர் தோமா.
உயிர்த்த இயேசுவை நம்புவதற்கு, நிபந்தனைகள் விதித்தார், தோமா. இயேசுவோ, நிபந்தனைகள் ஏதுமின்றி அவரைத் தேடிச்சென்று, தன் இரக்கத்தால், அன்பால் அவரை நிரப்பினார். சந்தேகத்தில் சிறைப்பட்டிருந்த தோமா, அச்சிறையிலிருந்து விடுபட்டதும், இறை இரக்கத்தின் திருத்தூதராக உலகெங்கும் சென்று, சந்தேகச் சிறைகளில் தவித்த பலருக்கு நற்செய்தியை அறிவித்தார்.

இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாடும் நாம், நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வோரு நாளும் தேடிவரும் இறைவனை நம் வாழ்வில் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற மன்றாடுவோம். நம் குடும்ப உறவுகள், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கியிருந்தால், இறைவனின் இரக்கம், சந்தேகச் சிறைகளைத் தகர்த்து, நம்மை விடுதலை செய்ய மன்றாடுவோம். முன்பு எப்போதும் இல்லாத வகையில், இவ்வுலகிற்கு தற்போது மிகவும் தேவையான இரக்கம் என்ற உன்னதப் பண்பு, இவ்வாண்டின் இறுதியில் துவங்கவிருக்கும் 'இரக்கத்தின் புனித ஆண்டில்' இவ்வுலகெங்கும் இரக்கம் நிலைபெறவேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.
இறைவனின் இரக்கம், சந்தேகப் புயல்களை அடக்கும்சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். அந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.