30 August, 2015

Empty Rituals and Enriching Realities வெற்றுச் சடங்குகளும், வெளிச்சமாகும் உண்மைகளும்




Avoid Ritualistic Worship


22nd Sunday in Ordinary Time

I am sure many of you have heard of the Jesuit priest Anthony de Mello, who blazed a unique trail for himself in the world of spirituality. Of course, he had also been the centre of quite a few controversies… I love his stories. One of his stories is the starting point of our Sunday reflection today… The Guru’s Cat, published in his book ‘The Song of the Bird’.
Here is the original version as given by Fr de Mello:
Each time the guru sat for worship with his students, the ashram cat would come in to distract them, so he ordered them to tie it when the ashram was at prayer.
After the guru died, the cat continued to be tied at worship time. And when the cat expired, another cat was brought into the ashram to make sure that the guru’s orders were faithfully observed at worship time.
Centuries passed and learned treatises were written by the guru’s scholarly disciples on the liturgical significance of tying up a cat while worship is performed.

When I read the Gospel passage for this Sunday, this story spontaneously presented itself to me. Kindly allow me to embellish this story a bit… to drive home a point – the point about rituals!
When the guru died, the cat, which was attached to the guru, did not bother to go to the prayer hall. But the ashram members thought that it was odd to begin their worship without the cat. So, they searched the ashram, found the cat, brought it to the prayer hall, tied it to the particular pillar and then sat down for prayer.
When the cat died, the members of the ashram went all over the town to look for a cat that was the exact replica of the one that died. They made sure that the new cat was tied to the same pillar and then sat down for their prayer.
Centuries passed; many things had changed in the ashram. But the one thing that had not changed was the ‘cat-rite’ that had to be done at the time of prayer… Pardon me if my embellishment looks a bit laboured!

The cat which was considered a distraction during the worship, over time, became essential for the worship. Prayer was considered more precious than the cat and hence, it was tied up. But, over the years, the cat became more precious than prayer and, therefore, their worship was tied to a cat-rite. This is the power of rituals!

Our day to day life is filled with lots of rituals, starting from the way we freshen up in the morning. These rituals are a help to us, as long as they remain… helps. The moment they assume more importance, they can become hell, instead of help. This is not a simple play on words. We are only painfully aware of the amount of violence unleashed when some rituals are tampered with.

Today’s Gospel passage is about the ritual washing practised by the Israelites. This ritual was only a tiny part of the life of Israelites filled with hundreds of other rituals. These rituals were defined and redefined by the religious leaders… Year after year, these rituals and their prescriptions seemed to expand… against the warning given to them by Moses, not to do so. We read this warning of Moses in the first reading today:
Deuteronomy 4 : 1-2
"And now, O Israel, give heed to the statutes and the ordinances which I teach you, and do them; that you may live, and go in and take possession of the land which the LORD, the God of your fathers, gives you. You shall not add to the word which I command you, nor take from it; that you may keep the commandments of the LORD your God which I command you.

Moses gave them a simple instruction… don’t add or delete anything, just follow them in life. Jesus was aware that this warning of Moses was not heeded. The religious leaders seemed to derive special pleasure in imposing rules and more rules on the innocent people. It is said, that out of the 10 commandments given by God to Moses, the Scribes and the Pharisees created 613 ‘commandments’ (mitzvot). When I browsed through the Wikipedia, I found an interesting detail about the ‘positive’ and ‘negative’ commandments. Guess what? The ‘negative’ commandments were more numerous than ‘positive’ commandments. Here is what I found in the Wikipedia:
The 613 commandments include "positive commandments", to perform an act (mitzvot aseh), and "negative commandments", to abstain from certain acts (mitzvot lo taaseh). The negative commandments number 365, which coincides with the number of days in the solar year, and the positive commandments number 248, a number ascribed to the number of bones and main organs in the human body (Babylonian Talmud, Makkot 23b-24a). This is yet again one more trait of tradition, which prescribes more ‘Don’t’s than ‘Do’s!

Another aspect of these commandments was that the authors, namely, the so called religious leaders, kept heaping more burdens on simple people and, not so much on themselves. Hence, we see Jesus giving a warning to the simple people about these leaders:
Mathew 23: 1-4
Then said Jesus to the crowds and to his disciples, "The scribes and the Pharisees … bind heavy burdens, hard to bear, and lay them on men's shoulders; but they themselves will not move them with their finger.

A society which carries a heavy load of tradition, cult, ritual etc., tends to ‘deify’ these rituals. Such a situation alienates them from God and ties them to the rituals. A warning to this effect was given by Prophet Isaiah to which Jesus makes an allusion in today’s Gospel. Here is the original warning, as given by Isaiah:
Isaiah 29: 13
And the Lord said: "Because this people draw near with their mouth and honor me with their lips, while their hearts are far from me, and their fear of me is a commandment of men learned by rote.”
When tradition and rituals assume the place of the deity, passionate (most of the time, blind) observance follows. We have the sad account of this ‘blind observance’ as narrated by a police officer, Lt. Col Ahmed Burqibah, Deputy Director of Dubai Police’s Search and Rescue Department:

Speaking to Emirates 24|7, recounting some of the worst incidents he had encountered in his tenure, Lt. Col Burqibah said that this incident took place at a beach in Dubai.
“This is one of the incidents which I cannot forget. It shocked me and many others who were involved in the case. The Asian father took his wife and kids to the beach for picnic and fun. The kids were swimming in the beach when suddenly, the 20-year-old girl started drowning and screaming for help. Two rescue men were at the beach, and they rushed to help the girl. However, there was one obstacle which prevented them from reaching the girl and helping her. This obstacle was the belief of this Asian man who considered that if these men touched his daughter, then this would dishonour her. It cost him the life of his daughter.”
Lt. Col. Burqibah added that the father of the girl did not want the rescue men to touch his daughter as they were strange men. “The father was a tall and strong man. He started pulling and preventing the rescue men and got violent with them. He told them that he prefers his daughter being dead than being touched by a strange man.”
The officer pointed out that this delay and fight with the girl’s father cost the girl her life. She drowned. Lt. Col. Burqibah added that the girl’s father was later arrested by Dubai Police for stopping the rescue team from saving his daughter’s life and doing their job. The incident happened many years ago. Similar incidents continue to haunt human history now and then.

Let me close today’s reflections with three intentions of prayer, connected with two world days we have observed the past week and one to be observed coming week:

August 29 – International Day Against Nuclear Tests
Since nuclear weapons testing began in the mid-twentieth century, with the first test on 16 July 1945 (by the U.S.), nearly 2,000 have taken place. The international instrument to put an end to all forms of nuclear testing is the 1996 Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT), which has however yet to enter into force. 2010 marked the inaugural commemoration of the International Day against Nuclear Tests.
Moreover, “convinced that nuclear disarmament and the total elimination of nuclear weapons are the only absolute guarantee against the use or threat of nuclear weapons,” the U.N. General Assembly designated 26 September as the “International Day for the Total Elimination of Nuclear Weapons", which is devoted to furthering the objective of the total elimination of nuclear weapons, through the mobilization of international efforts. The International Day for the Total Elimination of Nuclear Weapons was observed for the first time in September 2014.

We are painfully aware that both these days, instituted by the U.N., to put a moratorium on nuclear activities, have been more of a ritual observance, rather than a serious commitment from the world nations. It is the hope of the UN that one day all nuclear weapons will be eliminated. Until then, there is a need to observe these international days against nuclear threats, as we work towards promoting peace and security world-wide.

August 30 – International Day of the Disappeared
This Day draws attention to those who have been imprisoned without their friends or relatives knowing where or why. Wikipedia has this disturbing note on Iraq and Sri Lanka:
A 1999 study by the United Nations found that Sri Lanka had the second highest number of disappearances in the world (after Iraq). In 2003 the Red Cross stated that it had received 20,000 complaints of disappearances during the Sri Lankan Civil War of which 9,000 had been resolved but the remaining 11,000 were still being investigated.

September 1 – World Day of Prayer for the Care of Creation

Below is Pope Francis' letter announcing the “World Day of Prayer for the Care of Creation”

I wish to inform you that I have decided to set up also in the Catholic Church, the “World Day of Prayer for the Care of Creation” which, beginning this year, will be celebrated on the 1st of September, as the Orthodox Church has done for some time now.  
The ecological crisis therefore calls us to a profound spiritual conversion: Christians are called to “an ecological conversion whereby the effects of their encounter with Jesus Christ become evident in their relationship with the world around them.”
The celebration of the Day on the same date as the Orthodox Church will be a valuable opportunity to bear witness to our growing communion with our orthodox brothers.   We live in a time where all Christians are faced with identical and important challenges and we must give common replies to these in order to appear more credible and effective.

As we reflect on the danger of empty rituals, we pray that our life is filled with more substantial values than shallow, empty rituals. We also pray that our effort to celebrate the First World Day of Prayer for the Care of Creation helps us wake up to the challenges of ecology!

Day of Prayer for the Care of Creation



பொதுக்காலம் 22ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

முனிவர்கள் பலர் வாழ்ந்துவந்த ஓர் ஆசிரமத்தில், நாள் தவறாமல் பூஜைகள் நிகழ்ந்தன. அந்த ஆசிரமத்தின் தலைவர், ஒரு பூனையை வளர்த்துவந்தார். வெள்ளை நிறம் கொண்ட அந்தப் பூனைக்கு, முன்னிரு கால்கள் மட்டும், சாம்பல் நிறத்தில் இருந்தன. பூஜை நேரங்களில், அப்பூனை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எனவே, ஆசிரமத் தலைவர், அப்பூனையை, பூஜை மண்டபத்தில் இருந்த ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். ஒவ்வொரு நாளும், பூஜை ஆரம்பித்ததும், பூனையும் அங்கு வந்ததால், அது வந்ததும், அதைத் தூணில் கட்டி வைத்துவிட்டு, பூஜை துவங்கியது.

சில மாதங்கள் கழித்து, அந்த ஆசிரமத் தலைவர் திடீரென காலமானார். மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்றார். தலைவர் இறந்தபிறகு, அவரால் வளர்க்கப்பட்டப் பூனை, பூஜை மண்டபத்திற்குச் செல்வதை நிறுத்தியது. ஆனால், ஆசிரமத்தில் இருந்தவர்கள், ஒவ்வொரு நாளும், பூனையைத் தேடி கண்டுபிடித்து, அதைக் கொண்டுவந்து ஒரு குறிப்பிட்டத் தூணில் கட்டியபிறகே தங்கள் பூஜையைத் துவக்கினர்.

இன்னும் ஓராண்டு கழித்து, அந்தப் பூனையும் இறந்தது. ஆசிரமத்தில் இருந்தவர்கள், அடுத்த நாள், பூஜையைத் துவக்குவதற்கு முன், மற்றொரு பூனையைத் தேடி, ஊருக்குள் சென்றனர். அதுவும், இறந்துபோன பூனையைப் போலவே, வெள்ளை நிறத்தில் உடலும், முன்னிரு கால்கள் சாம்பல் நிறத்திலும் உள்ள பூனையை, பல இடங்களில் தேடி, அலைந்து கண்டுபிடித்தனர். புதியப் பூனையை, ஆசிரமத்திற்குக் கொண்டுவந்து, முந்தின பூனை கட்டப்பட்டிருந்த அதேத் தூணில், அதைக் கட்டியபிறகே, தங்கள் பூஜையை ஆரம்பித்தனர்.

பல ஆண்டுகள் சென்றபின், அந்த ஆசிரமத்தில் இருந்த முனிவர்கள் பலரும், வேறு இடங்களுக்கு மாறிச் சென்றனர், புது முனிவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அந்த ஆசிரமத்தில், மாறாமல் காப்பாற்றப்பட்ட ஒரே ஒரு மரபு, பூனை மரபு... பூனை இல்லாமல் அந்த ஆசிரமத்தில் பூஜை இல்லை, என்ற சட்டம் வகுக்கப்பட்டது. அச்சட்டமும் மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது. எவ்வகைப் பூனையை வாங்கவேண்டும், அந்தப் பூனையை, பூஜை மண்டபத்தில், எந்தத் தூணில் கட்டவேண்டும், என்று... ஒவ்வோர் ஆண்டும், இச்சட்டத்தில், பல நுணுக்கங்கள் இணைக்கப்பட்டன. பூஜைக்கும், பூனைக்கும் உள்ள பிரிக்கமுடியாதத் தொடர்பைக் குறித்து, பக்கம், பக்கமாகப் பல நூல்கள் எழுதப்பட்டன.

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டிகளில் ஒருவரான அருள்பணி, அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய, 'The Song of the Bird' என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது.



பூஜைக்கு இடையூறாக இருந்ததால் தூணில் கட்டப்பட்டது, பூனை. ஆனால், நாளடைவில், பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற நிலைக்கு அந்த ஆசிரமத்தினர் தள்ளப்பட்டனர். பூனை, பூஜைக்கு இடையூறாக இருந்ததென்ற ஆரம்பம் மறக்கப்பட்டது. அதற்கு முற்றிலும் மாறாக, பூஜை செய்வதற்கு, பூனை தேவைப்பட்டது. பூனையைவிட பூஜை முக்கியம் என்பது மறக்கப்பட்டு, பூஜையைவிட பூனை முக்கியம் என்ற நிலை உருவானது. மரபுகளுக்கு உள்ள சக்தி இது.

நமக்குத் தேவை என்று நாம் ஆரம்பிக்கும் பழக்க வழக்கங்கள், மரபாக, மந்திரச் சடங்காக மாறும்போது, அந்த மரபைப் பாதுகாக்க நாம் தேவை என்ற நிலையை உருவாக்கிவிடும். ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை (மாற்கு 2:27) என்று இயேசு கடிந்துகொண்டது நமக்கு நினைவிருக்கலாம். இன்றைய நற்செய்தியில் மரபு பற்றிய விவாதம் எழுகிறது... கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது.



சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன:

மாற்கு நற்செய்தி 7: 3-4

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.



அளவுக்கு மீறிய கவனத்துடன் இச்சடங்கைப் பின்பற்றியதால், விளைந்த ஓர் ஆபத்தை விளக்க, வில்லியம் பார்க்லே (William Barclay) என்ற விவிலிய அறிஞர் கூறிய ஒரு கதை என் நினைவுக்கு வருகிறது:

யூத குரு ஒருவர், உரோமையர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்கு, ஒவ்வொரு நாளும், குடிப்பதற்குத் தேவையான அளவு நீர் வழங்கப்பட்டது. இந்த யூத குரு மட்டும், தினமும் தாகத்தால் வாடி, வதங்கி, வந்தார். இதைக் கண்ட சிறைத் தலைவர், அந்த குருவுக்கு வழங்கப்படும் நீர் என்னவாகிறது என்று அறிய விழைந்தார். அவர், யூத குருவின் சிறைக்குச் சென்ற வேளையில், அங்கு யூத குரு, கழுவும் சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் முழுவதையும் அந்தச் சடங்கிற்கென மீண்டும் மீண்டும் ஊற்றி, தன்னையே சுத்தம் செய்து கொண்டிருந்தாரே தவிர, அந்த நீரை அவர் சிறிதும் பருகவில்லை.

இந்த அளவு, முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியை, சர்ச்சையை உருவாக்கிவிட்டது. கழுவாதக் கைகளுடன் சீடர்கள் உண்டதை, பரிசேயரும், மறைநூல் அறிஞர், அதுவும், எருசலேம் என்ற தலைமைப் பீடத்தில் இருந்துவந்த அறிஞரும், கண்டு அதிர்ச்சி அடைந்தனர், தவறைச் சுட்டிக்காட்டினர் என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. கழுவாதக் கைகளுடன் சீடர்கள் சாப்பிட்ட நிகழ்வு, கழுவாதக் கைகளுடன் கர்ணன் தர்மம் செய்த கதையை நினைவுக்குக் கொணர்கிறது.

ஒருமுறை, கர்ணன், குளிப்பதற்கு முன், தன் இடது கையில் பிடித்திருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிருந்து எண்ணெயை வலது கையில் ஊற்றி, உடலெங்கும் தேய்த்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் ஓர் அந்தணர் அவரிடம் வந்து, யாசகம் கேட்டார். உடனே, கர்ணன், தன் இடது கையால், தங்கக் கிண்ணத்தை அந்தணர்க்குத் தர்மமாகக் கொடுத்தார். அந்தணர் உடனே, "கர்ணா, இடது கையால் தர்மம் கொடுத்தால், கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் தீங்குவரும் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது. எனவே, கையைக் கழுவிவிட்டு, உன் வலது கையால் தர்மம் கொடு" என்று கேட்டுக்கொண்டார். கர்ணன் ஒரு புன்சிரிப்புடன், "அந்தணரே, அந்த சாஸ்திரம் எனக்கும் தெரியும். ஆனால், நான் இடது கையிலிருந்து வலது கைக்கு கிண்ணத்தை மாற்றுவதற்குள், என் மனம் மாறிவிடலாம் அல்லவா? எனவேதான், தர்மத்தை உடனே செய்தேன்" என்று பதில் சொன்னார். வலது கையால் கொடுத்தால்தான் தர்மமா? கொடுக்கின்ற தர்மத்தை விட, அதை இவ்வாறுதான் கொடுக்கவேண்டும் என்று நாம் வகுத்துக்கொண்ட சாஸ்திரங்கள் முக்கியமாகிப் போகும்போது, தர்மமே தொலைந்து போகும் ஆபத்து உள்ளது.



துபாய் கடற்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு துயர நிகழ்வை, அப்பகுதியில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஒருவர், அண்மையில் ஊடகங்களில் பகிர்ந்துகொண்டது, இம்மாதத் துவக்கத்தில் செய்தியாக வெளியானது.

நடுத்தர வயதுடைய ஒருவர், தன் குடும்பத்துடன், துபாய் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது 20 வயது மகள், திடீரென, அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அப்பெண் உதவிக்காக குரல் எழுப்பினார். இத்தகைய ஆபத்துக்களில் அவசர உதவி செய்வதற்காக, கடற்கரையில் நியமிக்கபட்டிருந்த இரு காவல் வீரர்கள், உடனே கடலில் இறங்கி, அப்பெண் இருந்த திசை நோக்கிச் சென்றனர். அவர்களை, அப்பெண்ணின் தந்தை தடுத்தார்.

வயதுக்கு வந்த தன் பெண்ணை, முன்பின் அறிமுகமில்லாத இருவர் தொடுவதை, தான் அனுமதிக்க முடியாது என்று அவர்களுடன் போராடினார் தந்தை. தன் மகள் இறந்தாலும் பரவாயில்லை, அவளை, அறிமுகமில்லாத ஆண்கள் தொடக்கூடாது. அது, தங்கள் சமய மரபில் பெரும் அவமானம் என்று தந்தை, அவ்வீரர்களுடன் போராடியதால், அவரது மகள் கடலில் மூழ்கி இறந்தார். மரபைக் காப்பாற்றுவதற்காக, மகளைப் பறிகொடுத்த அந்தத் தந்தையை, காவல்துறை கைது செய்தது. தன் மகளின் உயிரைவிட, தன் சமய மரபுகள், சம்பிரதாயங்கள் பெரிது என்று எண்ணிய தந்தையைப் போல வாழும் பலரை, நாம் அவ்வப்போது சந்திக்கிறோம்.



இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இறைவனோ, தலைவர் மோசேயோ இந்த சட்டங்களைக் கூட்டவில்லை. இவற்றைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று இன்றைய முதல் வாசகத்தில் மோசே மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

இணைச்சட்டம் 4: 1-2

இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.



சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான, எளிய முறையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew: "613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன என்று சொல்வோரும் உண்டு.)

இதில் மற்றொரு தவறான போக்கு என்னவென்றால், நுணுக்கமான இச்சட்டங்கள், மதத்தலைவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், மக்கள் மீது இன்னும் அதிக சுமைகளைச் சேர்ப்பதாய் இருந்தது. இதையும் இயேசு ஒருமுறை மக்களிடம் சுட்டிக்காட்டினார்: மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள்.(மத்தேயு 23 : 1-4) என்று கூறினார்.



சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், மரபுகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:

எசாயா 29 : 13

என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!



மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் William Barclay அவர்கள், ஒரு குட்டிக் கதை மூலம் கூறியுள்ளார்.

மதப் பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் பொது வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர் அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர் மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.



மறைந்த நம் முன்னோரின் வாழும் நம்பிக்கை, பாரம்பரியமாக உருவெடுக்கிறது. ஆனால், பாரம்பரியத்தனம், வாழ்வோரின் இறந்த நம்பிக்கையாக மாறிவிடுகிறது என்று சொன்னவர், லூத்தரன் சபையைச் சேர்ந்த, Jaroslav Pelikan என்ற இறையியல் அறிஞர்.

Jaroslav Pelikan once said, "Tradition is the living Faith of the dead. Traditionalism is the dead faith of the living."



உதடுகளால் மட்டுமல்லாமல், உள்ளத்தாலும், தன் முழு வாழ்வாலும் இறைவனுடனும், இறைவனின் வறியோருடனும் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசாவின் எண்ணங்களுடன் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். அருளாளர் அன்னை தெரேசாவின் திருநாளை, செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமை, கொண்டாடவிருக்கிறோம்.



நம்மில் பலர் தொடுவதற்கே அஞ்சும் ஆயிரமாயிரம் மனிதர்களைக் குப்பைத் தொட்டிகளிலிருந்தும், சாக்கடைகளிலிருந்தும் மீட்டு, அவர்களைக் கழுவி, மருந்திட்டு, உணவூட்டி... அவர்களை மீண்டும் மனிதர்கள் என்ற நிலைக்கு உயர்த்திட இவ்வன்னை செய்த பணி, மிகக் கடினமானது. இப்பணியை அவர் 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தார். இவரது பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் இவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவறத்தில் சேர்ந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துச் செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா பத்திரிகையாளரிடம் சொன்னார்.



அந்த அன்னையின் உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஆயிரமாயிரம் உள்ளங்களை இறைவனை நோக்கி நடத்தியுள்ளன. உதடுகளாலும், உள்ளத்தாலும் இறைவனுக்கு நெருக்கமான அருளாளர் அன்னை தெரேசாவின் பரிந்துரையால், நாமும், நம் சொல்லாலும், செயலாலும், இறைவனை நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.



அடுத்தடுத்து, மூன்று சிறப்பான நாள்கள் - ஆகஸ்ட் 29, 30, செப்டம்பர் 1

அணுசக்தி ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1945ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாடு அணுசக்தி ஆய்வை முதல் முறை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6, 9 ஆகிய நாள்களில், ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு, அணுகுண்டுகளை வீசி, 1,29,000த்திற்கும் அதிகமான உயிர்களைக் கொன்றது.  

இதுவரை உலகின் பல நாடுகளில் 2000த்திற்கும் அதிகமான தருணங்களில் அணுசக்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஐ.நா.அறிக்கையொன்று கூறுகிறது.

அணுசக்தி ஆய்வை இனி யாரும் மேற்கொள்ளக்கூடாது என்ற ஒப்பந்தம் - Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT), 1996ம் ஆண்டு, நிறைவேற்றப்பட்ட போதிலும், இன்றுவரை உலக அரசுகள் பல இந்த ஒப்பந்தத்தை மீறி, அணு ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளன.

2010ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் அணுசக்தி ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், 2014ம் ஆண்டுமுதல், அணு ஆயதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரு நாள்களையும், வெறும் சம்பிரதாயமான நாள்களாக மட்டுமே உலக அரசுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.



உலக அரசுகளின் அடக்குமுறையால், எவ்விதத் தகவலும், அடையாளமும் இன்றி, காணாமற் போகும் மனிதர்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 30ம் தேதி, காணாமற் போனவர்களின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு, ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, அரசுகளின் அடக்குமுறையால், எவ்வித தடயமும் இன்றி காணாமற்போகும் மக்களின் எண்ணிக்கையில், ஈராக் முதலிடத்தையும், இலங்கை இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. இன்றளவும் இந்த நிலையில் பெரும் மாற்றங்கள் இல்லை.



அணு ஆயுதங்களின் துணைகொண்டும், அடக்கு முறைகளின் துணைகொண்டும் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுதல், காணாமல் போதல் என்ற இன்றையச் சூழலில், மனித சமுதாயத்தின் மனசாட்சியை விழித்தெழ வைப்பதற்கு, ஆகஸ்ட் 29, 30 ஆகிய நாட்களில் நாம் கடைபிடிக்கும் அணுசக்தி ஆய்வுகளுக்கு எதிர்ப்பு நாள்மற்றும், காணாமற் போனவர்களின் உலக நாள் என்ற இவ்விரு உலக நாள்களும் உதவி செய்யவேண்டும் என்று மன்றாடுவோம்.



ஆகஸ்ட் 29, 30 ஆகிய நாட்களைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவை ஒரு சிறப்பான உலக செப நாளை முதல் முறையாக மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையர்களின் தூண்டுதலால், ஆர்த்தடாக்ஸ் சபைகள், கடந்த சில ஆண்டுகளாக, செப்டம்பர் 1ம் தேதியை, படைப்பைப் பராமரித்து, பாதுகாப்பதற்கு செபிக்கும் நாளாகச் சிறப்பித்து வருகின்றன. அவர்கள் காட்டும் நல்வழியைப் பின்பற்றி, அதே நாளன்று, கத்தோலிக்கத் திருஅவையும் படைப்பைப் பாதுக்காக்கும் செபநாளை கடைபிடிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே, நமது ஞாயிறு வழிபாட்டில், இந்த மூன்று சிறப்பான நாள்களையும் மையப்படுத்தி, நம் செபங்களை இறைவனை நோக்கி எழுப்ப முயல்வோம்.


 

23 August, 2015

Decision, to move mountains… மனமிருந்தால்... மலையும் வணங்கி வழிவிடும்

The Power of ONE - Dashrath Manjhi
On August 21, last Friday, the film, “Manjhi – The Mountain Man” was released. It is a biopic of a man called Dashrath Manjhi, a poor labourer from the state of Bihar. This film is getting quite a bit of media attention right now. It may also get some awards. But, the person on whom this film is based, has left this world without any recognition or reward.

The following is a write-up from www.thebetterindia.com on Dashrath Manjhi:
This is the story of an ordinary man. This is the story of Dashrath Manjhi: the man who moved a mountain, so that his people could reach a doctor in time.
It was 1960. Landless laborers, the Musahars, lived amid rocky terrain in the remote Atri block of Gaya, Bihar, in northern India. In the community of Gehlour, they were regarded the lowest of the low in a caste-ridden society, and denied the basics: water supply, electricity, a school, a medical center. A 300-foot tall mountain loomed between them and all the basic facilities that they had always longed for.

Like all the Musahar men, Dashrath Manjhi worked on the other side of the mountain. At noon, his wife Phaguni would bring his lunch. He would watch and wait for Phaguni. That day, she would come to him empty handed, injured. As the harsh sun beat down, Phaguni tripped on loose rock, and was badly injured. Her water pot shattered. She slid down several feet, injuring her leg. Hours past noon, she limped to her husband. He was angry at her for being late. But on seeing her tears, he made a decision. He decided that he was not going to wait for anyone to solve his problems, he was going to do-it-himself.

Dashrath bought a hammer, chisel, and crowbar. He had to sell his goats, which meant a lower income for his family. He climbed to the top, and started chipping away at the mountain. Years later, he would recount, “That mountain had shattered so many pots and claimed so many lives. I could not bear that it had hurt my wife. If it took all my life now, I would carve us a road through the mountain.”

He would start early in the morning, chip the mountain for a few hours, then work on the fields, and come back to work on the mountain again. He would hardly sleep. The villagers gradually began to respect him, and started donating food to his family. He eventually quit his wage job, and started spending as much time as he could, breaking the mountain.

Then, Phaguni fell ill. The doctor was in Wazirganj, which stood just on the other side of the mountain, but the road leading to it was 75 kilometers long. Unable to make the journey, she passed away. Her death not only enraged him more, it spurred him on.

It was not an easy task. He would often get hurt by the rocks falling from the unyielding mountain. He would rest and then start again. After 10 years, as Manjhi chipped away, people saw a cleft in the mountain and some came to help. Manjhi broke through that last thin wall of rock, and walked into the other side of the mountain. After 22 years, Dashrath Das Manjhi, the common man, the landless laborer, had broken the mountain: he had carved out a road 360 feet long, 30 feet wide. Wazirganj, with its doctors, jobs, and school, was now only 5 kilometers away. People from 60 villages in Atri could use his road. Children had to walk only 3 kilometers to reach school. Grateful, they began to call him ‘Baba’, the revered man.

But Dashrath did not stop there. He began knocking on the Government’s doors, asking for the road to be tarred and connected to the main road. He did the unthinkable to get the government’s attention. He walked along the railway line all the way to New Delhi, the capital. He submitted a petition there, for his road, for a hospital for his people, a school and water. In July 2006, Dashrath went to the then Bihar Chief Minister Nitish Kumar’s ‘Junta Durbar’. The minister, overwhelmed, got up and offered ‘Baba’ his chair, his minister’s seat; a rare honor for a man of Manjhi’s social status.

The government rewarded his efforts with a plot of land; Manjhi promptly donated the land back for a hospital. They also nominated him for the ‘Padma Shree’, but the forest ministry officials fought the nomination, calling his work illegal. “I do not care for these awards, this fame, the money,” he said. “All I want is a road, a school, and a hospital for our people. They toil so hard. It will help their women and children.” It would take the government 30 years more to tar the road. On August 17, 2007, Dashrath Manjhi, the man who had conquered a mountain lost his battle with cancer. All his life – spanning 73 years – he had toiled for his people and for no personal gain.

“I started this work out of love for my wife, but continued it for my people. If I did not, no one would,” Manjhi’s words reflect the reality of India and many other poor countries, where people expect the government to make decisions for them. If only each of us decide to do something – big or small – to change our present condition… this world would become a far better place!

I am speaking of Dashrath Manjhi at such length for two reasons:
Reason 1:  This is my way of paying respect to this noble person. We are sadly aware that the title ‘Padma Shree’ was denied to him, since he broke through a mountain without the government permission. After his death, the politicians from Bihar were making suggestions that he could be considered for ‘Bharat Ratna’. In case, the Indian Government decides to honour him with this title (which is very unlikely), it would be a true honour to the title rather than to Shri Manjhi. Whether the Government decides to honour him with titles or not, I am certain, that Shri Manjhi is already revered in the hearts of thousands of persons all over the world. My first reason is, therefore, to add to the number of persons paying respect to Shri Manjhi – from among you!

Reason 2: Dashrath Manjhi gives us a lesson in one of the basic human capacity – the capacity to decide! Decision making is one of the features of this Sunday’s liturgical readings.

Today’s readings talk about Joshua and Simon Peter making decisions under difficult circumstances. “As for me and my house, we will serve the LORD” (Joshua 24: 15) was the decision of Joshua. When he speaks of his house, it can be taken as not only his close family but also his kith and kin… and even his domestic employees! In the Gospel of John, Simon Peter makes a similar decision for the twelve disciples when Jesus asks the poignant question: “Do you also wish to go away?” Simon Peter answered him in one of the oft-quoted Bible verses: “Lord, to whom shall we go? You have the words of eternal life; and we have believed, and have come to know, that you are the Holy One of God.” (John 6: 68-69) Peter spoke on behalf of his friends!

Two aspects of these decisions struck me. The first aspect is the ‘collective’ tone of the decision. Both Joshua and Peter make use of the ‘we’ word! They were speaking on behalf of the whole group. The word ‘we’ seems to be receding from our vocabulary in subtle ways. I wish we become aware of this trend and take the necessary precautions. When crucial decisions have to be made in families, collective responsibility seems to take the backseat.
When an individual speaks for the group, we can assume that that person has a good knowledge of the group and has gained the confidence of the group as well. Such healthy knowledge and trust will be a great help in families, especially when they are going through tough times.

The second aspect of these decisions is the tough situation in which they were made. When life moves smoothly, there is hardly any need for decisions. Even if there are a few tiny decisions to be made, they can be made easily. It is during times of crisis that we need to make major decisions – as in the case of Joshua, Peter and … Manjhi.

Let me close these reflections with an email I received long time back. It contained photographs with the title: Pictures to Help You Restore Your Faith In Humanity.
All the photographs were packed with positive energy. These pictures depicted small or big decisions – acts of kindness – performed by individuals for those in need. There was the picture of a person who removes his sandals and gives it to a poor girl who is bare-footed, and this takes place on the pavement on a hot, sunny day (presumably).
Another picture showed a young girl holding an umbrella over an older man unable to walk and crawling on a wooden board to cross the road in drenching rain… There were quite a few people on the road witnessing this, which meant that only the young girl took the decision to help the older person.

Two pictures in this collection, touched me deeply. They depicted how decision and dedication go hand in hand as in the case of Shri Dashrath Manjhi. The first picture showed a 97 years old woman, who is bent almost double by hunchback, feeding a man lying on a cot. When I read the caption for this picture, I choked… A mother (97 years old) in China, feeding and taking care of her paralysed son (60 years old) everyday for more than 19 years. A reminder of the amazing spirit of human compassion and, more importantly, motherly love. The mother could have decided to send her son to the care centre, especially when she herself required assistance. But, she had taken a decision and followed it with dedication for more than 19 years!

Another picture in this collection that tugged at my heart was taken in a hospital. It showed a young father and a mother kissing goodbye to their dying child, while the hospital staff stand around the bed and pay their respects. The caption written under the picture, once again, moistened my eyes…
A father and mother kissing their dying little girl goodbye. If you are wondering why all the medic people are bowing: in less than an hour, two small children in the next room will be able to live, thanks to the little girl's kidney and liver.

All of us keep taking decisions in life – big, small, crucial, casual, tough, easy… At this moment, we pray especially for those who are at crossroads in their lives – in terms of making proper decisions on job, life-partner, way of life etc. May Dashrath Manjhi, the 97 years old Mom, the young parents of the dying child, as well as Joshua and Simon Peter help us make the right decisions! Human-centred decisions relying on God!
-------------------------------------------

For those of you who are interested, here is another story of a noble lady from West Bengal, who decided to turn her tragic experience towards helping others – as in the case of Shri Dashrath Manjhi:

Subhasini Mistry is the founder of the ‘Humanity Hospital’ in Hanspukur, West Bengal – a hospital dedicated to the poor. I came to know of this lady through an email sent by one of my friends with the title: ‘A hospital story’. While searching more on this lady, I came across the other article in the Weekend Leader written by Anita Pratap – ‘Humanity Hospital was built by a woman whose husband died for want of medical help’ (24 Aug 2012)
Subhasini herself made a decision about forty years back when she lost her husband due to medical negligence. Through her tears and fears, Subhasini made an oath that fateful day. No one should suffer her fate. Basic medical attention could easily have saved her husband who had nothing more than a bout of gastro enteritis. But poverty and callous hospital staff had killed her husband. She vowed she would do what it takes to spare people of this nightmare. She would build a hospital for the poor. (Anita Pratap)
When people heard of her decision, they laughed at her. But she was determined. She made her son Ajoy pursue medicine. In 1993, the foundation stone for the Humanity Hospital was laid… The rest is history! How did she achieve all this? She says: “Inner Strength.” She adds with rustic wisdom: “God in his infinite grace gave me a vision at the darkest moment in my life. From then on, my life had a purpose. I used whatever strength God gave me to make sure other poor people did not lose their loved ones for lack of medical attention.” (Anita Pratap)

Subhasini Mistry and the Humanity Hospital
"மான்ஜி - மலை மனிதர்" (Manjhi - The Mountain Man) என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 21) வெளியானது. 'தஷ்ரத் மான்ஜி' (Dashrath Manjhi) என்ற தனியொரு மனிதர், 22 ஆண்டுகளாக ஒரு குன்றை வெட்டியெடுத்து, அதன் நடுவே பாதையொன்றை அமைத்த வரலாறு, திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம், வசூலையும், விருதுகளையும் பெறக்கூடும். ஆனால், இத்திரைப்படம் உருவாக அடித்தளமாக இருந்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், எவ்வித விருதும் பெறாமல், தன் 73வது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.
1959ம் ஆண்டு தஷ்ரத் மான்ஜி அவர்களின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால் மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது. தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.
தஷ்ரத் மான்ஜி அவர்களின் மரணத்திற்குப் பிறகு, பீகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில், மான்ஜி அவர்கள் உருவாக்கிய பாதையை, உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலுடன் ஒப்பிட்டுப் பேசியவர்கள் உண்டு. இந்த ஒப்புமைக்கு ஒரு முக்கியக் காரணம், அந்த மலைப்பாதையும், தாஜ்மஹாலும் உருவாக, அடிப்படைக் காரணம்... மனைவி மீது கொண்ட ஆழ்ந்த அன்பு.
மன்னர் ஷாஜஹான், தன் கனவில் உருவாக்கியிருந்த காதல் சின்னத்தை, பெருமளவு செல்வத்தைக் கொண்டு, பல்லாயிரம் தொழிலாளர்களைப் பயன்படுத்தி, நனவாக்கினார். மான்ஜி அவர்களோ, தன் கனவில் கண்ட அந்தப் பாதையை, தன் இரு கைகளைக் கொண்டு நனவாக்கினார். அந்தக் குன்றைக் குடைவதற்கு, அவர் சுத்தியலும், உளியும் வாங்க, தன் ஒரே சொத்தான ஆட்டுக் குட்டியை விற்றார் என்றும் சொல்லப்படுகிறது.

தஷ்ரத் மான்ஜி அவர்களைப் பற்றி நான் இவ்வளவு விரிவாகப் பேசுவதற்கு இரு காரணங்கள் உண்டு. "தனி மனித சக்தியை, குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்ற தலைப்பில், ஆறு மாதங்களுக்கு முன், என்னை வந்தடைந்த ஒரு மின்னஞ்சல் வழியே, மான்ஜி அவர்கள் எனக்கு அறிமுகமானார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், அவரைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள முயன்றேன். 'பாரத இரத்னா' என்ற விருதுக்கு இவர் தகுதியானவர் என்று பீகார் மாநில அதிகாரிகள் சொன்னபோது, அதை முழுமையாக ஆதரித்தேன். மான்ஜி அவர்களுக்கு, இந்தியக் குடியரசு இந்த விருதை வழங்கினால், அது அந்த விருதுக்குக் கிடைக்கும் கூடுதல் மதிப்பு என்பது என் கருத்து. மான்ஜி அவர்களுக்கு இந்திய அரசு விருதுகள் வழங்கவில்லையெனினும், அவர் பல்லாயிரம் மக்களின் மனங்களில் தனியொரு அரியணையில் வீற்றிருப்பார் என்பதை நான் உணர்கிறேன். அந்த மாமனிதருக்கு இந்த ஞாயிறு சிந்தனை வழியாக நான் செலுத்தும் அஞ்சலியே என் பகிர்வு. இதன் வழியாக, அவர் உங்கள் உள்ளங்களிலும் அரியணை பெற்றால் மகிழ்வேன். இது, இவரைக் குறித்து நான் பேசுவதற்கு, முதல் காரணம்.

இரண்டாவது காரணம்... இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனித குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:
"நானும் என்  வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம். யோவான் நற்செய்தியில், "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் நற்செய்தி 6: 68) என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப்  பறைசாற்றும் கூற்றுகள் இவை.

நமது பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி, காரண, காரியங்களை அலசி, ஆராய்ந்து, கணக்குப் பார்த்து முடிவெடுப்பது ஒரு வகை. வர்த்தக உலகிலும், அரசியல் உலகிலும், எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும், இந்த யுக்தி பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.
பகுத்தறியும் திறனையும் தாண்டி, பரிதவிக்கும் மனதையும், பரந்து விரிந்த ஒரு கண்ணோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு, முடிவெடுப்பது, மற்றுமோர் உயர்ந்த வகை. இத்தகைய முடிவுகள் அறிவிலிருந்து பிறப்பதைக் காட்டிலும், ஆழ்மனதிலிருந்து பிறக்கும். இத்தகையதோர் முடிவை செயல்படுத்தியவர், தஷ்ரத் மான்ஜி அவர்கள். யோசுவாவும், பேதுருவும் கூறும் வார்த்தைகள், உள்ளத்திலிருந்து எழும் முடிவுகளாக ஒலிக்கின்றன.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும், இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. வாழ்வில் எல்லாமே நலமாகச் செல்லும் வேளைகளில், முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. அந்நேரங்களில் சிறு, சிறு முடிவுகள் தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது, முடிவுகள் எடுப்பது, கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே, இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே, பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான் நற்செய்தி 6: 68-69
ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்.

"வேறு யாரிடம் போவோம்?" என்று பேதுரு கூறுவதை, "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்த வாழ்வு, உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனையச் சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, கொடூரமான மரணம் வரை அவர்களை அழைத்துச் சென்றபோதும், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருந்ததால், சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

Forbes என்ற அமெரிக்க இதழில், உலகின் சக்திமிகுந்த பெண்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும். அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மனிதாபிமானச் செயல்கள், ஊடகம் என்ற பல துறைகளில் புகழ்பெற்றவர்களாக விளங்கும் 100 பெண்களின் பெயர்கள் வெளியாகும். சக்திமிகுந்த பெண்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தப் பட்டியலில், சுபாசினி மிஸ்திரி (Subhasini Mistry) என்ற வங்காளப் பெண்ணின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று நான் தேடினேன். கிடைக்கவில்லை. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெண்களுக்கு ஈடாக, ஏன், அவர்களைவிட கூடுதல் சக்திமிகுந்தவராக வாழ்ந்தவர், சுபாசினி மிஸ்திரி அவர்கள். இந்த அன்னையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
இவரைப் பற்றிய விவரங்களை முழுமையாகக் கூற இங்கே நேரம் இல்லை. சுபாசினி அவர்களுக்கு, தற்போது 70க்கும் மேல் வயதாகிறது. இவரது கணவர், தெருவில் காய்கறி விற்கும் வேலை செய்தார். சுபாசினிக்கு 23 வயதானபோது, இவர் கணவர் ஒருநாள் வயிற்றுவலியால் துடிக்க, சுபாசினி அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார். அது ஓர் அரசு மருத்துவமனை என்றாலும், அங்கிருந்தவர்கள் இவரிடம் பணம் எதிர்பார்த்தனர். சுபாசினியிடம் பணம் இல்லாததால், அவரது கணவரை யாரும் கவனிக்கவில்லை. அவர் வலியில் துடிதுடித்து இறந்தார்.
அந்நேரத்தில், சுபாசினி அவர்களின் மனதில் ஒரு முடிவு உருவானது. தான் எப்படியும் ஒரு மருத்துவமனையை எழுப்பி, அங்கு, ஏழைகளுக்கு, உடனடியான, இலவசமான உதவிகள் செய்யவேண்டும் என்ற முடிவு அது. இதை ஒரு சபதம் என்றே சொல்லவேண்டும். அவரது சபதத்தைக் கேட்ட மற்றவர்கள், அவரை எள்ளி  நகையாடினர். வீதியில் காய்கறி விற்கும் சுபாசினியின் இந்த சபதம், ஏழேழு பிறவி எடுத்தாலும், எட்டமுடியாத ஒரு கனவு என்றே திரும்பத் திரும்பச் சொல்லிவந்தனர். சுபாசினி, இந்த முடிவெடுத்த பின், இருபது ஆண்டுகள் அயராது உழைத்தார். தன் மகன் Ajoy Mistryஐ மருத்துவம் படிக்கவைத்தார். இவ்விருவரின் தளராத முயற்சியால், Humanity Hospital - மனிதாபிமான மருத்துவமனை - இன்று வங்காளத்தின் Hanspukurல் உயர்ந்து நிற்கிறது.  
கட்டடம் என்ற அளவிலோ, மருத்துவ வசதிகள் என்ற அளவிலோ இம்மருத்துவமனை பிரம்மாண்டமாக உயரவில்லை, ஆனால் வறியோரின் மனதில் மனிதாபிமான மருத்துவமனை ஒரு கோவிலாக உயர்ந்து நிற்கிறது. சுபாசினி என்ற ஓர் ஏழைப் பெண், தான் அனுபவித்த மிகக் கொடிய துன்பத்தின் நடுவில் எடுத்த ஒரு முடிவு, இன்று பல நூறு ஏழைகளைக் காப்பாற்றும் ஒரு கோவிலாக நிற்கிறது.
இவரைப் பற்றிய கட்டுரையொன்று The Weekend Leader என்ற இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் அனிதா பிரதாப் அவர்கள், சுபாசினி மிஸ்திரி அவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வி கேட்டார்: "எப்படி உங்களால் இவ்வளவு சாதிக்க முடிந்தது?" என்று அவர் கேட்டதற்கு, . சுபாசினி அவர்கள் சொன்ன பதில் நமக்கு இன்று பாடமாக அமைகிறது.
"என் வாழ்வின் மிகவும் இருளான நாளன்று கடவுள் எனக்கு ஒளி தந்தார். அன்றிலிருந்து என் வாழ்வில் ஒரு குறிக்கோள் இருந்ததாக நான் உணர்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எடுத்த ஒரே ஒரு முடிவுக்காகப் பயன்படுத்தினேன். ஏழை என்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் தனது அன்பு உறவின் மரணத்தைக் காணக்கூடாது என்பதே அம்முடிவு." என்று சுபாசினி அவர்கள், அக்கட்டுரையின் ஆசிரியரிடம் சொன்னார்.

தங்கள் சொந்த வாழ்வில் பெரும் துயரங்களைச் சந்தித்தாலும், அத்துயரங்களின் பாரத்தால் நொறுங்கிப் போகாமல், அத்துயரங்களை மற்றவர்கள் அடையக் கூடாது என்ற மேலான எண்ணத்துடன், ஆக்கப் பூர்வமான முடிவுகளை எடுத்து, அவற்றிற்கு செயல்வடிவம் கொடுத்த தஷ்ரத் மான்ஜி, சுபாசினி மிஸ்திரி போன்ற உயர்ந்த உள்ளங்களுக்காக இறைவனுக்கு இன்று சிறப்பான நன்றி செலுத்துவோம். இவர்கள் உள்ளத்தில் தோன்றிய அந்த உறுதியில், ஒரு சிறிதளவாகிலும், நம் உள்ளத்திலும் தோன்ற, இறைவனை இறைஞ்சுவோம்.
வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்புள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.