Dr APJ Abdul Kalam
Human
family and the Indian community were honoured by the presence of Dr APJ Abdul
Kalam on planet earth. Hailing from a simple, humble family in Rameswaram – one
of the southern cities in India
– Abdul Kalam rose to the highest position an Indian can dream of… namely, the
President of the largest democracy in the world. When a person is honoured with
a position or with a citation, we tend to believe that that person gets
honoured. But, there are a few persons in the world who have made a position or
a citation more honourable by having their names attached to them. Dr Kalam
made the position of the President of India more honourable. He also made the
highest civilian honour of India ,
namely, ‘Bharat Ratna’, more honourable by being its recipient.
More than
the positions held and honours received by Dr Kalam, he will be remembered,
especially by the youth of India ,
as the architect (or sower) of noble dreams. Dr Kalam himself would prefer to
be remembered as a ‘teacher’ more than by any other roles he had played in his
life. Mr Srijan Pal Singh, who had been a close associate of Dr Kalam for many
years, talks of his conversation with Dr Kalam:
Often he
(Dr Kalam) would ask me, “You are young, decide what will you like to be
remembered for?” I kept thinking of new impressive answers, till one day I gave
up and resorted to tit-for-tat. I asked him back, “First you tell me, what will
you like to be remembered for? President, Scientist, Writer, Missile man, India
2020, Target 3 billion…. What?” I thought I had made the question easier by
giving options, but he sprang on me a surprise. “Teacher”, he said.
Dr Kalam
passed away in the only way he would have loved to bid good-bye to his earthly
life. Mr Singh also talks of this:
Then
something he said two weeks back when we were discussing about his missile time
friends. He said, “Children need to take care of their parents. It is sad that
sometimes this is not happening”. He paused and said, “Two things. Elders must
also do. Never leave wealth at your deathbed – that leaves a fighting family.
Second, one is blessed if one can die working, standing tall without any long
drawn ailing. Goodbyes should be short, really short”.
True to his
wish, he passed away, standing at the podium, as he was addressing the students
of Indian Institute of Management, Shillong.
My
admiration for Dr Abdul Kalam is tinged with a shadow – namely, his
whole-hearted support to make India
a nuclear force in the world. But, when I saw the topic of his final talk,
namely, ‘Creating a Liveable Planet Earth’, I was hoping that Dr Kalam
was negotiating a corner in his uni-directional nuclear journey. To confirm my
hope, here are the words of Mr Singh:
The
topic of lecture at IIM Shillong was ‘Creating a Livable Planet Earth’. He
related the incident (the loss of innocent lives in an attack in Punjab ) to the topic and said, “it seems that man made
forces are as big a threat to the livability of earth as pollution”. We discussed
on how, if this trend of violence, pollution and reckless human action
continues, we will be forced to leave the earth. “Thirty years, at this rate,
maybe”, he said. “You guys must do something about it… it is going to be your
future world”.
I wish to
believe that Dr Kalam was apprehensive of the unbridled power certain sections
of the human family were wielding. That he should talk about ‘Creating a Livable Planet Earth’ at
the fag end of July seemed very apt for me, since the beginning of August brings
to mind how human beings can make this earth ‘totally unlivable’.
Every year,
at the beginning of the month of August haunting memories of Hiroshima
and Nagasaki
(August 6 and 9, 1945) flood our memory. The gory details of this human
massacre are well-known. So, let us not go over those statistics. They can only
feed our curiosity. Has Hiroshima and Nagasaki become only museum
pieces to be visited once a year or, are they schools where we can
learn a lesson or two?
I am afraid
that even Japan
is treating this tragedy as a ‘treasured museum piece’. Why do I say this? If Japan had treated Hiroshima
and Nagasaki as schools, then Fukushima would not have happened. After Fukushima nuclear threat, Japan began to close down its
atomic plants one by one. I was so happy about it that I announced this news in
Vatican Radio with full gusto. Unfortunately, my happiness was short-lived. Japan
has reopened its atomic power plants once again!
Sadly, Japan
as well as the whole world are madly… MADLY… in love with nuclear energy still.
On a day like this, we need to focus on our tragic romance with nuclear energy.
The cenotaph at the Hiroshima Peace Park
is inscribed with an ambiguous sentence: "Let all the souls here rest
in peace; this mistake shall not be repeated." (Wikipedia) But from Hiroshima to Fukushima
nuclear mistakes have been repeated – all over the world! This begins our
reflections…
Why are
mistakes repeated? There could be hundred of reasons. But, I wish to focus on
two of them. The first is… when mistakes are covered up with falsehood and made
to look like the right thing, they tend to be repeated. The mistake of the U.S.
was well covered up. Delayed information, distorted information, downright lies
accompanied the dropping of the atomic bombs. As I was going through many
details of this historic tragedy, something struck me hard. When the atom bomb
was dropped on Hiroshima ,
it was 8.15 a.m. on August 6th. It was still night in most of the U.S.
and the people there were asleep. One can see that this nation is still
struggling to wake up from this sleep and find out the real truth. Here is a
news item to illustrate this uneasiness:
Posted:
Monday, July 30, 2012 9:41 pm
Pax
Christi Metro New York is hosting 'Nuclear
Lies, Nuclear Truths' a lecture, silent procession, prayers and discussion to
mark the 67th anniversary of the bombings of Hiroshima
and Nagasaki this
Sunday 5 August.
In the
immediate aftermath of the attacks on Hiroshima
and Nagasaki , a
few thoughtful Americans questioned the morality of the bombings. Alarmed by
those questions, men such as Conant, Bundy, and Stimson went about creating an
explanation of why atomic bombs were used on Hiroshima
and Nagasaki .
That explanation has been widely accepted; however, the vast majority of
historians who have studied the matter since then believe that the story told
by men like Conant, Bundy, and
Stimson—and
later by Truman—was profoundly misleading.
(Source:
Independent Catholic News – ICN)
Dear friends,
I have quoted from this news item to show that at least some conscientious
persons are still trying to learn from history so that we don’t repeat it. I
was also equally impressed with the stand of the Christians in the U.S. soon after the bombing of Hiroshima
and Nagasaki . In
1946, a report by the Federal Council of Churches entitled Atomic
Warfare and the Christian Faith, includes the following passage:
"As
American Christians, we are deeply penitent for the irresponsible use already
made of the atomic bomb. We are agreed that, whatever be one's judgment of the
war in principle, the surprise bombings of Hiroshima
and Nagasaki
are morally indefensible." (Wikipedia)
When the
mistakes are not covered up in lies, we can surely learn from those mistakes,
since truth will always set us free. But, unfortunately, every government in
the world is dishing out lies as far as nuclear warheads are concerned.
As if the
threat of nuclear warheads is not enough, every country is moving towards
nuclear plants. On this front as well, lots of lies have been told about the
safety of a nuclear plant and about the different accidents that have happened
in nuclear plants. Hence, here is my simple (you may call this ‘simplistic’)
conclusion: Nuclear energy can thrive in the seedbed of lies!
If you wish
to read more truth, kindly read the news feature: HIROSHIMA ,
NAGASAKI
BOMBINGS WERE AVOIDABLE by David Krieger, President, Nuclear Age Peace
Foundation. (IDN-InDepthNews – August 3, 2012)
Why are we
so madly in love with nuclear energy? Is there no other alternative? I am not a
scientist and hence my answer to this question cannot be scientific. But I am a
believer. My belief says that our world can survive, in fact, flourish in safer
environment if we depend on other natural sources of energy – wind, water, sunlight…
My belief says that the universe is designed in such a way that it can sustain
itself when we are able to tap the sources appropriately. The catch words are: tap
and appropriately… Unfortunately, our present generation has
not tapped natural sources of energy but has exploited them
indiscriminately!
Our natural
sources of energy can surely sustain the whole of humanity, provided we decide
to satisfy our needs and not our desires… our unbridled desires of
accumulation. Our mad passion for self above everything else has created more
demands on our resources. Since nature could not satisfy our mad rush for more
and MORE… we looked for artificial sources of energy. Look, where we have
landed up… We have landed on a planet that is waiting to explode any time.
God the
Father has a simple solution to offer in the first reading today: Then the
LORD said to Moses, “Behold, I will rain bread from heaven for you; and the
people shall go out and gather a day's portion every day, that I may
prove them, whether they will walk in my law or not.” (Exodus 16: 4) Gather
only what is needed for the day and not more. Only on the sixth day they were
allowed to gather for two days. We see later in this chapter that there were
people who did not obey this instruction and gathered more. These were the
ancestors of some of the world leaders today who have accumulated mind boggling
amount of wealth. Will they carry this beyond their graves?
And the
people of Israel
did so; they gathered, some more, some less... He that gathered much had
nothing over, and he that gathered little had no lack; each gathered according
to what he could eat. And Moses said to them, "Let no man leave any of it
till the morning." But they did not listen to Moses; some left part of it
till the morning, and it bred worms and became foul; and Moses was angry with
them. Morning by morning they gathered it, each as much as he could eat; but
when the sun grew hot, it melted. (Ex. 16: 17-21)
In the
gospel today Jesus gives another simple solution to those who came seeking him
‘not because they saw signs, but because they ate their fill of the loaves’.
Jesus could see that they were seeking a short cut to fulfil their desires. He
too offers another solution in the very next line : “Do not labor for the
food which perishes, but for the food which endures to eternal life, which the
Son of man will give to you; for on him has God the Father set his seal.”
(John 6: 26-27)
The
solutions given in both these readings sound extremely simple. We can give them
a try. Otherwise, we need to build more temples (nuclear plants) to worship
nuclear energy!
Atomic bomb
mushroom clouds over Hiroshima (left) and Nagasaki (right)
ஜூலை
27, கடந்த திங்களன்று, அப்துல் கலாம் என்ற ஓர் உன்னத மனிதர், இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் வாழ்ந்த காலத்தில்
நாமும் வாழ்ந்தோமே என்ற பெருமை, என் உள்ளத்தை நிறைப்பதுபோல், பல கோடி இந்தியர்களின் உள்ளங்களை நிறைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள இராமேஸ்வரத்தில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, உலகின்
மிகப் பெரும் குடியரசின் தலைவராக உயர்ந்தவர்,
அப்துல் கலாம் அவர்கள்.
குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்தார் என்பதை விட, குடியரசு தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்வைத் தந்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
குடியரசுத்
தலைவர் என்ற அடையாளத்தைவிட, ஓர் அறிவியல் மேதையாக, ஆசானாக, வழிகாட்டியாக, இளையத் தலைமுறையினரின் உள்ளங்களில் கனவுகளை விதைப்பவராக அவரை எண்ணிப்
பார்ப்பதே பொருத்தமாகத் தெரிகிறது. மேகாலயா மாநிலத்தின் தலைநகர், ஷில்லாங் நோக்கி அவர் இறுதிப் பயணம் செய்தபோது, அவரோடு பயணம் செய்த Srijan Pal Singh என்ற இளையவர், அப்துல் கலாம் அவர்களிடம்,
"குடியரசுத்
தலைவர், அறிவியல் ஆய்வாளர், ஏவுகணை பொறுப்பாளர், ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என்று பலவாறு நீங்கள்
அடையாளம் பெற்றுள்ளீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த அடையாளம் எது?" என்று கேட்டதும், எவ்விதத் தயக்கமும் இன்றி, "ஆசிரியர்" என்று உடனே பதிலளித்தார், அப்துல் கலாம் அவர்கள்.
அறிவியல்
உலகம் என்ற வரைபடத்தில், மதிப்பு மிக்க ஒரு தனியிடத்தை, இந்தியாவுக்குப் பெற்றுத்தந்தவர், அப்துல் கலாம் அவர்கள். 2020ல் இந்திய நாடு, உலக அரங்கில் வளர்ச்சியடைந்த ஒரு நாடாக திகழவேண்டும் என்ற கனவை
இளையோர் உள்ளத்தில் ஆழப் பதித்தவர், இவர்.
குடியரசுத்
தலைவராக கனவுகளை விதைக்க ஆரம்பித்த இவர், அப்பொறுப்பிலிருந்து விலகிய பின்னரும், இளையோரைச் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளிக்கும் பணியைத் தொடர்ந்தார்.
அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதாவது, மேகாலயா மாநிலத்தின் தலைநகர், ஷில்லாங்கில்
உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில், இளையோரிடம் உரையாற்றிய வேளையில், அவரது உயிர் பிரிந்தது
என்பது, அவரது வாழ்விற்கு அர்த்தம் தரும் முத்தாய்ப்பாக
அமைந்தது. ஏனெனில் அவர், இரு வாரங்களுக்கு முன்னதாக, இளையவர் Srijan Pal Singh
அவர்களிடம் பரிமாறிக்
கொண்ட ஒரு கருத்து இது:
“பணி செய்தவாறே இறப்பது, உண்மையிலேயே ஓர் ஆசீர்வாதம். நீண்ட காலம் நோயுற்று, இறப்பதைவிட, நின்றபடியே இறப்பது மேல். நாம் விடைபெறுவது, குறுகிய காலத்தில், மிகக் குறுகிய காலத்தில் நடைபெற வேண்டும்.”
“... One
is blessed if one can die working, standing tall without any long drawn ailing.
Goodbyes should be short, really short.”
அறிவியல்
மேதையாக, தலைசிறந்த ஆசானாக வாழ்ந்து மறைந்த அப்துல்
கலாம் அவர்களைப் பற்றி, ஆயிரமாயிரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
அவர் கலந்துகொண்ட அந்த இறுதி நிகழ்வில், அவர் பேசவிருந்த தலைப்பை மையமாகக்
கொண்டு, இன்று, நம் சிந்தனைகளை
எழுப்புவோம். ஷில்லாங்
இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பயிலும் மாணவர்களிடம், "Creating a Liveable Planet Earth" அதாவது, "வாழத் தகுந்த பூமிக் கோளத்தை உருவாக்க..." என்ற தலைப்பில், உரையாற்றச் சென்ற அப்துல் கலாம் அவர்கள், தன் உரையைத் துவங்கிய சில நிமிடங்களில், இவ்வுலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார்.
அணுசக்தியைக் கொண்டு இந்தியா எவ்விதம் முன்னேற முடியும் என்பதை,
அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி பேசிவந்துள்ளார். அணு சக்தி மீது அவர் கொண்டிருந்த
ஆர்வம், பற்று, ஆகியவை, எனக்குள் பல நேரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளன. அவர் எண்ணங்களை ஆமோதிக்கவோ, ஆதரிக்கவோ இயலாத நிலையில் நான் இருக்கிறேன்.
"வாழத் தகுந்த பூமிக் கோளம்" என்ற தலைப்பில் அவர் உரை வழங்கச் சென்றார்
என்று கேள்விபட்டபோது, எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. அணு சக்தியோ, வேறு எந்த சக்தியோ, அதை, தகுந்த முறையில்
பயன்படுத்தினால், இந்த பூமிக் கோளத்தை
வாழத் தகுந்த இடமாக மாற்றமுடியும் என்பதை, அவர் தன் இறுதி உரையாக வழங்கச் சென்றாரோ
என்ற எண்ணம் அது.
"வாழத் தகுந்த பூமிக் கோளம்" என்ற வார்த்தைகள், நம்பிக்கை தரும் வார்த்தைகள்; ஆனால், அதேநேரம், எச்சரிக்கை
வார்த்தைகளாகவும் அவை ஒலிக்கின்றன. அறிவியல் மேதை, அப்துல் கலாம் அவர்கள், இத்தகையதோர் எச்சரிக்கையை ஜூலை மாத இறுதியில், நமக்கு விட்டுச் சென்றுள்ளது, பொருத்தமாகத்
தெரிகிறது. ஏனெனில், இந்தப் பூமிக்
கோளத்தை வாழத் தகுதியற்றதாக மனிதர்கள் மாற்றக்கூடும் என்ற அதிர்ச்சி தரும் உண்மை, 70 ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நமக்கு
வழங்கப்பட்டது.
ஆகஸ்ட்
மாதம் ஆரம்பமானதும், நம் நினைவுகளை ஆக்கிரமிப்பது அணுகுண்டுத் தாக்குதல்கள். ஆம், 70 ஆண்டுகளுக்கு முன், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள், ஜப்பான் நாட்டின்
ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அணுகுண்டு
தாக்குதல்களை நிகழ்த்தியது, அமெரிக்க ஐக்கிய நாடு. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி,
நாம் பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க
வேண்டாம். அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா
என்பதே நம் கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல், ஃபுகுஷிமா (Fukushima) அணுஉலை விபத்து வரை, மனிதகுலம் அணுசக்தியை இன்னும் நம்பி வாழ்கிறதே
என்ற கவலையை இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அணுசக்தியைப்
பற்றி, அணுஉலைகளைப் பற்றி பல கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்ள முடியும். இரு எண்ணங்களை நாம் இன்று அலசுவது, ஓரளவு பயனளிக்கும் என்று
கருதுகிறேன். ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு இந்த எண்ணங்கள் தேவைதானா என்ற கேள்வி எழலாம்.
நம் வாழ்வை இன்று பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில்
விசுவாசக் கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம் என்று எண்ணுகிறேன்.
அணு
சக்தியை காப்பாற்ற, பொய்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது
முதல் எண்ணம். அணுசக்தியின் உண்மைக் கதைகள் எப்போதும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன
என்பதற்கு வரலாற்றில் பல வலுவான சான்றுகள் உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினார்கள்.
அவர்களது
குரலை அடக்கியவர்கள், James Conant,
Harvey Bundy, Henry Stimson என்ற மூவர். இரண்டாம் உலகப்போரை
முடிவுக்குக் கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று இவர்கள் அமெரிக்க
அரசின் சார்பில் பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை அமெரிக்கச் சமுதாயம் அந்தப் பொய்யைச் சீரணிக்க
முடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த
இரவிலிருந்து, பொய்யிலிருந்து, உறக்கத்திலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்பது,
கசப்பான உண்மை.
ஒவ்வோர்
ஆண்டும் ஆகஸ்ட் மாதம் துவங்கியதும், உலகின் பல நாடுகள், குறிப்பாக, ஜப்பானும், அமெரிக்க ஐக்கிய நாடும்,
அணுகுண்டு வீசப்பட்டதன்
கசப்பான, துயரமான நினைவுகளை கடைப்பிடித்து வருகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன், நியூயார்க் நகரில் Pax Christi என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு, ஒரு கருத்தரங்கையும், ஊர்வலத்தையும் நடத்தியது. இந்தக் கருத்தரங்கின் தலைப்பு: 'Nuclear Lies, Nuclear Truths'
"அணுசக்தி சார்ந்த
பொய்களும், உண்மைகளும்".
அணுகுண்டு
தாக்குதல்களைப் பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில்
உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. ஒவ்வொரு நாடும்
பதுக்கிவைத்திருக்கும் அணு ஆயுதங்களைப்பற்றி, அரசுகள் அவ்வப்போது சொல்லும் புள்ளிவிவரங்கள்
பலவும் பொய்களே. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகை ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலகை
அழிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள்,
அணு உலைகளை நம்பி வாழ்கின்றன. நாடுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட
பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்ட அணுமின்
நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று மக்கள் போராடி
வந்தாலும், முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள்,
மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும். இது நமக்குத் தேவையா? ஏற்புடையதா?
இவ்வளவு
ஆபத்தான அணுசக்திக்கு மாற்றாக, ஏனைய சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி, நமது இரண்டாவது சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றது.
இன்றைய உலகின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் இரும்புக் கரங்கள், பாதுகாப்பின்மை
என்ற பிரச்சனை. இந்தப் பிரச்சனையின் ஆணிவேராக இருப்பது, சுயநலமும், பேராசையும் என்று சென்ற ஞாயிறு சிந்தித்தோம். இந்தப் பாதுகாப்பின்மையை
இன்னும் பன்மடங்காக்கும் அணு ஆயுதங்களுக்கும்,
அணு உலைகளுக்கும்
ஆணிவேராக அமைவது, அதே சுயநலமும் பேராசையும்தான்.
அணுசக்திக்கு
மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம்
சக்திகளாக மாற்றமுடியும். அப்படி நாம் மாற்றும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளைப்
போதுமான அளவு நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல்
வளர்ந்திருக்கும் நமது சுயநலத்தையும், பேராசைகளையும் நிறைவு
செய்யும் ஆற்றல் இந்த இயற்கை சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.
தேவைகளை
மட்டும் நிறைவு செய்யும் வாழ்வை ஒவ்வொருவரும் மேற்கொண்டால், நமக்கு இத்தனை பொருட்கள்
தேவையில்லை. மிகுதியான அந்தப் பொருட்களை உருவாக்கும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும்,
அத்தொழிற்சாலைகளை இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை. எப்போது நாம் தேவைகளைத் தாண்டி
ஆசைகளையும், பேராசைகளையும்... வெறிகளாக வளர்த்துக்கொண்டோமோ, அப்போது
அந்த வெறிகளை நிறைவுசெய்ய, இயற்கைச் சக்திகளைத் தாண்டி, அணுசக்தியைத் தேடினோம். பேராசை
வெறியால் நாம் சேர்த்துவைத்துள்ள செல்வங்களைக் காக்க, அணு ஆயுதங்களையும் உருவாக்கினோம்.
அணு
உலைகள் என்ற கோவில்களைக் கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது ஆசைகளையும், பேராசை வெறிகளையும் நீக்கிவிட்டு, நமக்கும், அடுத்தவருக்கும் உள்ள உண்மையானத் தேவைகளை நிறைவேற்றும்
வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்று கனவு காண்பதில் தவறில்லையே... இந்தக் கனவை
எனக்குள் விதைத்தவை, இன்றைய வாசகங்கள்.
எல்லா
உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியைப்பற்றி முதல் வாசகமும், நற்செய்தியும் பேசுகின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பசி என்பது
பொதுவென்றாலும், மனிதரும், மற்ற உயிர்களும் இந்த அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்!!!
பசியால்
வாடும் இஸ்ரயேல் மக்கள், இறைவனையும், மோசேவையும் எதிர்த்து முணுமுணுக்கின்றனர்.
இறைவன், மோசே வழியாக, அவர்களுக்குத் தரும் பதிலுரையை இன்றைய முதல் வாசகத்தில்
இவ்வாறு வாசிக்கிறோம்:
விடுதலைப்பயண
நூல் 16: 4
“இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து
அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள
வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.”
இறைவனின் இந்தக் கூற்றில் ஒரு பகுதி என் நெஞ்சில் 'பளீர்' என, சாட்டையடிபோல் விழுந்தது. தேவையானதை அன்றன்று சேகரித்துக்
கொள்ள வேண்டும். அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள்
ஒரு நாட்டை உருவாக்கும் மக்களாக மாறுவதற்கு இறைவன் பாடங்கள் சொல்லித் தந்தார். பாடங்களை
அவர்கள் பயின்றனரா என்பதைப் பரிசோதிக்க, தேர்வும் வைத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்குத்
தேவையானதை அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். இம்மக்கள் தங்கள் தேவைகளை
மட்டும் நிறைவுசெய்து வாழும் மக்களாக இருப்பார்களா அல்லது பேராசையில் அதிகம் சேர்த்துவைக்கும்
மக்களாக இருப்பார்களா என்பதே, இறைவன் அவர்களுக்குத் தந்த முதல் சோதனை. அந்தச் சோதனையில்
வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு. அடுத்த நாளுக்குச் சேர்த்தவர்களின்
உணவு, புழுவைத்து நாற்றமெடுத்தது என்று, 16ம் பிரிவின் பிற்பகுதியில் (வி.ப. 16: 20) நாம் வாசிக்கிறோம்.
அன்றும்
சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைப்பது,
பேராசை கொண்ட மனிதர்கள் மத்தியில் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதை ஒரு
நோய் என்று சொன்னால், மலைபோல் குவித்துவைப்பதை என்னென்று
சொல்வது? குவித்துவைக்கும் தீராத நோயில் சிக்கித்தவிக்கும்
பலரைப்பற்றி நாம் கேட்கும் செய்திகள், நம்மை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன.
ஆயிரம்
சோடி காலணிகளை ஒரு கண்காட்சி போல் சேர்த்து வைத்திருந்த ஒரு நாட்டின் தலைவி, நகைகளை, புடவைகளைக் குவித்து வைத்திருந்த
ஒரு மாநிலத் தலைவி, பஞ்சு மெத்தையில், பஞ்சுக்குப் பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கி வைத்திருந்த
அமைச்சர், குளிக்கும் தொட்டியைத் தங்கத்தால் செய்திருந்த ஓர் அரசுத் தலைவர், நூறு கோடி
டாலர்கள், அதாவது, 6400 கோடி
ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள ஒரு செல்வந்தர்... இந்த பட்டியலை இன்று முழுவதும்
நம்மால் வாசிக்கமுடியும். இத்தகையோரின் பேராசை நோயினால், அந்நாட்டு மக்கள், முக்கியமாக வறியோர், அடிப்படைத்
தேவைகளையும் இழந்து, அடையும் துன்பங்கள் ஏராளம்.
சேகரித்து
வைக்கும் பேராசை நோய், பல்வேறு அளவுகளில் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த நோயின் பக்கநோயாக
இருப்பது, குறுக்கு வழியைத் தேடுவது. இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
தன்னைத் தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள், நாம் அனைவரும் குறுக்கு
வழி விரும்பிகள் என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது.
யோவான்
நற்செய்தி 6: 24-26
அக்காலத்தில், இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள்
கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில்
அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால்
அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
குறுக்கு
வழிகள் என்ற மாயையையும், பேராசை வெறிகளையும் போக்குவதற்கு
இயேசு சொல்லும் ஒரு வழி:
யோவான்
நற்செய்தி 6: 27
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே
உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.
No comments:
Post a Comment