Abraham and Isaac walking up the
mountain
II Sunday of Lent
Last
Sunday, the First Sunday of Lent, we were given the privilege of seeing a very
private experience of Jesus, probably one of the most vulnerable moments of His
life, namely, the temptations. Today, the Second Sunday of Lent, we are given
the opportunity to see Him in one of His most glorious moments… the
transfiguration. Last Sunday the Gospel took us to the desert. This Sunday the
Gospel invites us to the mountains. In fact, the First Reading and the Gospel of
today’s Liturgy take us to two different mountains to see two very different events,
almost diametrically opposite to one another. Let’s go to the mountains…
When I was
reflecting on the mountains, being an Indian, my mind, naturally, turned to
Mount Everest in the Himalayas . This is
considered to be the highest peak on earth. It is called the Third Pole of the
earth. The North Pole had been reached in 1909; the South Pole in 1911. But
Everest had defied all human efforts. Reaching its summit seemed beyond mere
mortals. On May 29, 1953, Edmund Hillary from New Zealand and a Sherpa guide,
Tenzing Norgay, (Nepalese Indian) were the first human beings ever to reach
Everest's summit. After the success of Edmund and Tenzing, more than 4000 men
and women have conquered this peak – the youngest being 13+ years and the
oldest 80+ years!
Although
mountains pose so many challenges, there are still thousands who keep climbing
them year after year. Mountains hold a great magical charm on human beings from
time immemorial. Asian tradition talks of great monks who had gone to mountain
tops seeking ‘enlightenment’. The thrill of reaching ‘the top of the world’,
the great silence of the peaks, the pure air and water on mountain tops have
been sources of attraction for human beings. The lovely aspects of silence,
purity and identification with nature have prompted many religions to ascribe
mountains as the abode of gods.
Today’s
Liturgy gives us two events that took place on mountain tops… two different
mountain tops and two very different events. We shall spend more time on the event
related to Abraham. The opening line from Genesis, that describes this event,
is quite perplexing:
Genesis
22: 1-2
After
these things, God tested Abraham, and said to him,… "Take your son, your
only son Isaac, whom you love, … and offer him
as a burnt offering upon one of the mountains of which I shall tell
you."
God
tested Abraham.
How many times we have attributed our trials to God saying: “Why does God test
me so much?” When people pose such a question to me, a Priest, I don’t have
easy answers to offer them, except the examples of Abraham, Job or Mary.
“Go
from your country and your kindred and your father’s house to the land that I
will show you.” (Genesis 12:1)
was the first invitation given by God to Abraham. From then on, Abraham was put
through many trials. The test presented to us in today’s Liturgy was, probably,
the greatest of them all – namely, to kill his own son and offer him as a
sacrifice to God.
God chose a
mountain top for this painful sacrifice. Abraham must have grown up with the
hope that God lived on mountains and a person meeting God on a mountain, would
come down filled with God’s gift. Now, Abraham is asked to go up the mountain,
not to be filled but, rather, to be deprived of the precious gift God had given
him at the ripe old age of 100 (Gen.21:5). This was a reversal which was way
beyond Abraham’s reasoning capacity. Still Abraham begins this torturous
journey, relying not on his reasoning power, but the power of his faith.
The test of
Abraham was more poignant in that he had to travel three days with his son
Isaac to perform this sacrifice. What would they have spoken on the way? Every
time Abraham saw his beloved son, his heart must have bled. Why would God do
this? Isn’t it already cruel enough to ask Abraham to sacrifice his son? Then,
why make him go through this torture of three days?
At the end
of those three days, when they reach the mountain, Abraham makes his son Isaac
carry the firewood meant for his own sacrifice. When Isaac poses the innocent
question about the lamb, Abraham must have turned aside in order to hide his
tears, and mumbled the famous line: “God will provide!” (Gen. 22:8)
Some
scripture scholars would explain this event as a fore-shadow of the Sacrifice
of Jesus on Calvary . The Passion of Jesus was
spread over three days of torture. Like Isaac, Jesus also carried the wood on
which he would be sacrificed. The torture that Abraham had to undergo was an
indication of what God the Father must have undergone during the Passion and
Death of His beloved Son.
Abraham
went up the mountain to perform a sacrifice. He met God and returned home
filled with blessings. In the Gospel of today we meet the three disciples who
went up the mountain and met God. This would strengthen them for later
sacrifices in their lives. Trials leading up to blessings or blessings that
strengthen us to face trials are two sides of the coin called faith!
In today’s
Gospel, we meet, once again, the impetuous Peter who wanted to prolong the glorious
‘experience’ of the Transfiguration, by
erecting tents. Peter had seen an ‘ordinary’, day to day edition of Jesus up to
that point. Now, he was surprised by the ‘glorious’ Jesus whose ‘garments
became glistening, intensely white, as no fuller on earth could bleach them’. (Mark
9:3) Peter wished to remain there for the rest of his life.
Peter
said to Jesus, “Master, it is well that we are here; let us make three booths,
one for you and one for Moses and one for Eli′jah.” (Mark 9:5) Evangelist Mark is quick to add his
remarks: For he did not know what to say. (Mk. 9:6) Very often we
do have a similar temptation of putting God in cosy tents we have made.
God
intervened and said, “This is my beloved Son; listen to him.” (Mk.
9:7) This was an indirect reminder to Peter as well as to us, not to
be lost in the moment, but to keep silent and listen to the Son. What would the
Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people
to ‘transfigure’ them.”
Getting
down from the cosy comfort of the Transfiguration to the ‘disfigured’ world
requires lot of faith. Evidently,
we know very well, that our faith is not that of Abraham, and that the road is
still long. Let us get down from the mountain, along with Jesus, in order to
transfigure the world!
Lessons from the Mountain!
தவக்காலம் 2ம் ஞாயிறு
உலகில்
வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உள்ளன
என்பதை புவியியலில் படித்திருக்கிறோம். உலகின் மூன்றாவது துருவம் என்று கருதப்படுவது,
இந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம். கடல் மட்டத்திலிருந்து
இச்சிகரம் 8,848 மீட்டர், (29,029 அடி) உயரமானது.
உலகின்
வடதுருவத்தை 1909ம் ஆண்டும், தென்துருவத்தை 1911ம் ஆண்டும் மனிதர்கள்
சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை
அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி நியூசிலாந்து
நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலரி (Edmund
Hillary) அவர்களும்,
நேபாள இந்தியரான டென்சிங் நோர்கே (Tenzing
Norgay) அவர்களும்,
இந்தச் சாதனையை முதல் முறை செய்தனர். இவர்களைத்
தொடர்ந்து, இதுவரை 4000த்தி்ற்கும் அதிகமானோர் இச்சிகரத்தை
எட்டிப் பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
எவரெஸ்ட்
மலைச்சிகரம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு மலைச்சிகரங்கள்,
எட்டுவதற்கு மிகக் கடினமானவை என்பதை அறிந்தும்,
அச்சிகரங்களை அடைய
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் முயன்று வருகிறார்கள். மலைச் சிகரங்கள் அப்படி
ஓர் ஆர்வத்தை மக்கள் மனங்களில் தூண்டி வருகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி
அடைவதில்லை, பல முயற்சிகள், மரணத்தில் முடிந்துள்ளன.
இருந்தாலும், மலைச் சிகரங்கள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும்
ஈர்ப்பு, தணியாத ஓர் ஈர்ப்பு.
மலைச்சிகரங்கள்...
உடலிலும் மனதிலும் மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடம். மலை முகடுகளில் நிலவும் அமைதி, இயற்கையின் அழகிய ஒலி, மலைச் சிகரங்களில் வீசும் தூய்மையான
காற்று, அங்கு நிலவும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வைத்
தூண்டும். அமைதி, தூய்மை, புத்துணர்வு
என்ற அழகிய அனுபவங்களைத் தருவதால், மலைகள், இறைவனின் இருப்பிடங்களாக,
பல மதங்களிலும், கலாச்சாரங்களிலும் கருதப்படுகின்றன.
மலைச்சிகரங்களை
அடைய ஒருவர் மேற்கொள்ள வேண்டிய தியாகங்கள், மலையுச்சியில் நிகழும் மாற்றங்கள், அற்புதங்கள், அந்த அற்புதங்களிலேயே தங்கிவிடாமல், மீண்டும் தரையிறங்கி வந்து, நாம் சந்திக்கவேண்டிய சராசரி வாழ்க்கை,
என்ற பல கோணங்களில் நம்மைச் சிந்திக்க அழைக்கின்றன, இன்றைய ஞாயிறு வாசகங்கள்.
சென்ற
ஞாயிறன்று, பாலை நிலத்தில், இயேசுவை, வலுவற்ற நிலையில் சந்தித்த நாம், இந்த ஞாயிறு, மலையுச்சியில், அவரை, உன்னதமான ஒரு நிலையில் சந்திக்க
வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் வேறுபட்ட
இரு நிகழ்வுகள், இன்றைய ஞாயிறு வழிபாட்டில் தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில், ஆபிரகாம்
வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை, நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.
தொடக்கநூலிலிருந்து
வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் அறிமுக வரிகள், நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும்
ஓர் ஆழமான கேள்வியை நினைவுபடுத்துகின்றன:
தொடக்கநூல்
22 : 1-2
அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்!” என, அவரும் “இதோ! அடியேன்” என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும்
மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.
‘கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார்’ என்று இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். வாழ்வில் நாம் அவ்வப்போது,
அல்லது, அடிக்கடி கேட்பது: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னிடம்
எழுப்பும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், பல
வேளைகளில் பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில்
எனக்கே ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம்
வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த
சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை
வெல்வதன் வழியே, மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும்
ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்" என்ற பதிலே, எனக்கும் பிறருக்கும்
ஓரளவு தெளிவைத் தந்த பதில்.
வாழ்க்கையோடு
போராடும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தப் போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டனரா,
இல்லையா, என்பதைவிட, அவர்கள் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்ட பக்குவம், நமக்குப் பாடமாக
அமைகின்றது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில்
இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து,
மோசே, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று, பலருக்கும் 'சோதனை மேல் சோதனை' கூடிக்கொண்டே சென்றதை நாம் பார்க்கிறோம்.
ஆபிரகாமை
இறைவன் சோதித்த நிகழ்வின் வழியே நாம் பயிலக்கூடிய பாடங்கள் பல உள்ளன. இறைவன் ஆபிரகாமுக்குத்
தந்தது, ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு
பிறந்தபோது, அவரது வயது 100 (தொ.நூல் 21:5). ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள
விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று
கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
"உன்
நாட்டிலிருந்து... புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்"
(தொ.நூல் 12:1) என்பதில் ஆரம்பித்து, இறைவன் வழங்கிய கட்டளைகள் அனைத்திற்கும் மறுப்பு ஏதும் சொல்லாமல்
பணிந்து பழகிப்போன ஆபிரகாமுக்கு, மகனைப் பலிதரவேண்டுமென இறைவன் கொடுத்த கட்டளை
பேரதிர்ச்சியைத் தந்திருக்கும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார்.
அது ஒரு மலை.
மலைகள்
இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர்
ஆபிரகாம். நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்வதற்கு
இறைவன் தன்னை ஒரு மலைக்கு அழைக்கிறார் என்ற எண்ணம், ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும்.
இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தைக் கொஞ்சம்
ஆழமாகச் சிந்திப்பது நல்லது.
ஒரு நொடியில்
உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது, மாதக் கணக்கில்,
சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அத்தகையச்
சித்ரவதையை, ஆபிரகாம் அனுபவித்தார். இறைவன் கேட்ட இந்தப் பலியை, வீட்டுக்கருகில், ஆபிரகாம்
நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய அவர் மூன்று நாள் பயணத்தை
மேற்கொண்டார். அந்த மூன்று நாட்களும் அந்தத் தந்தையின் மனம் எத்தகையச் சித்ரவதையை அனுபவித்த்ருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
வழியில் தந்தையும், மகனும் என்ன பேசியிருக்க முடியும்? தன் மகனைக் கண்டபோதெல்லாம், ஆபிரகாமின் உள்ளம், இரணமாகி,
இரத்தம் சிந்தியிருக்கும்.
அவர்கள்
மலையை அடைந்தபின், ஆபிரகாம், சிறுவன் ஈசாக்கின் தோள் மீது
விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு
மலைமீது ஏறுகிறான். போகும் வழியில், தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான
ஆட்டுக்குட்டி எங்கே?" (தொ.நூல் 22:7) என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அக்குழந்தையின் கேள்வி, ஆபிரகாமின்
நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். கண்களில் பொங்கியக் கண்ணீரை
மறைப்பதற்கு, தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, ஆபிரகாம், "கடவுளே பார்த்துக்கொள்வார்
மகனே" என்று, ஏதோ ஒரு பதிலை, ஒப்புக்காகச் சொல்லி, சமாளிக்கிறார்.
மகனைப்
பலிதருவது என்பதே, மிக, மிக அரக்கத்தனமான கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக
நிறைவேற்ற விடாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று
நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு
கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு,
பல வழிகளில், கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள்
தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்து, மலைமீது ஏறியதுபோல், இயேசுவும் சிலுவையைச் சுமந்து, கல்வாரி மலைமீது ஏறினார்.
ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், ஆபிரகாம் துன்புற்றார். பாடுகளின்போது,
இயேசு கேட்ட கேள்விகளுக்கு, விண்ணகத் தந்தை பதில் ஏதும் தரவில்லை. இந்த நிகழ்வில் ஆபிரகாம்
மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும், இயேசுவின்
பாடுகளின்போது, வேதனை அடைந்தார். இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப்
பலியை நினைவுறுத்துகிறது. என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மகனைப்
பலி கேட்ட இறைவன், இறுதியில், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில்,
இறையனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில், இயேசுவின்
தோற்ற மாற்றம் என்ற இறையனுபவம் பெற்ற சீடர்களிடம், இறைவன், பலியை எதிர்பார்க்கிறார்.
வேதனைகளின் உச்சக்கட்டமாக இறையனுபவத்தைப் பெறுவதும், இறையனுபவத்தின்
உச்சக்கட்டமாக, வேதனைகளை அனுபவிக்க துணிவு கொள்வதும், நம்பிக்கை
என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.
இயேசுவின்
தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில், நற்செய்தியாளர் மாற்கு பதிவு செய்துள்ள
வரிகள், நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித்
தருகின்றன. இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கண்ட பேதுரு, தன்னிலை மறந்து, பரவசத்தில் மூழ்கினார். பேதுரு இயேசுவைப்
பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும்
எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். (மாற்கு 9:5).
அதுவரை
இயேசுவை சாதாரண மனித நிலையில் கண்டு பழகிப் போயிருந்த பேதுருவுக்கு, 'வெள்ளை வெளேரென ஒளி வீசிய'
இயேசுவின் தோற்றம்,
பேரானந்தத்தை அளித்திருக்க வேண்டும். அந்த இயேசுவை விட்டுவிட மனமின்றி, பேதுரு, கூடாரம் அமைக்க முன்வந்தார். பேதுருவின்
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. (மாற்கு 9:6) என்ற கூற்றை இணைத்துள்ளார்.
இது நமக்கு
ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. ஆழமான இறையனுபவங்கள் நம்மை நிறைக்கும் வேளையில், சுயநல எண்ணங்கள் பிறந்தால்,
கடவுளுக்கு ஒரு கூடாரம்
அமைத்து, அவரை அங்கேயே பூட்டிவைத்து, அவர்மீது தனிப்பட்ட உரிமை கொண்டாடும் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம்.
சொல்வது
என்னவென்று அறியாது, பேசிய பேதுருவுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என்
அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்"
(மாற்கு
9:7) என்பதே.
அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? “இங்கே தங்கியது போதும். வாருங்கள்
மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம்” என்று இயேசு கூறுவார்.
கடவுள்
அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுள் தங்குவதற்கு, கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கடவுளை, கோவில்களிலேயே தங்கவைப்பதோ,
அங்கேயே நாம் தங்கிவிடுவதோ தவறு. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத்
திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
தோற்ற
மாற்றம் அடைந்த இயேசு, சீடர்களை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து
இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும்
பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்!
No comments:
Post a Comment