Mosaic - Jesus
enters Jerusalem
Student-led
protests against gun violence
Palm Sunday
Last Sunday (March 18), we spoke of two processions –
protests – that took place, one in Mumbai on March 11 and 12 and another that
took place on March 12, 1930, in Gujarat . The
first one was the Farmers protest in Mumbai city and the second one was the
Salt march led by Gandhiji.
This week we begin our reflections again with
processions, since we commemorate the Palm Sunday procession that took place
2000 years ago in the city of Jerusalem .
Palm Sunday inaugurates the Holy Week and it is also the 33rd World
Youth Day. Hence, our reflections revolve around processions, holiness and
youth.
Let us begin with a procession taken out by the youth
in Washington
on March 24, Saturday. Around 500,000 - mainly high school students - gathered
in Washington D.C. for what was known as ‘March For Our
Lives’. The March For Our Lives, was a rally organized by students who survived
the Feb. 14 school shooting in Parkland , Fla. , demanding stricter gun control in the U.S.
NY Times (March 24) reports of protests taking place
in many states in the U.S. as well as in other countries like Geneva, London,
Sydney, Berlin, Paris and Amsterdam. It also reports of ‘counter-protests’
gaining momentum. For instance, NY Times says: “In Salt Lake City , demonstrators carried
pistols, flags and toddlers swaddled in blankets. One of their signs read:
“What can we do to stop mass shootings? SHOOT BACK.” In Boston , opposing groups of protesters shouted
at one another before the police intervened.”
The counter protests lead us to reflect on how crowds
can be swayed either way. Vested interests (like the NRA – National Rifle
Association in the U.S. )
organize processions and protests to safeguard their interests. Such efforts
usually sow dissension and division among the people. We are also sadly aware
of a procession that is going around India to create more disharmony and
hatred. The ‘Ram Rajya Rath Yatra’ organized by the Vishwa Hindu Parishad is an
example of how a procession can generate hatred.
The Indian Express, New Delhi, reported on March 21: “While
the main agenda of the yatra is to administer a pledge to the people for
construction of the Ram temple on the disputed land in Ayodhya, it also seeks to
re-establish ‘Ram Rajya’, include Ramayana in school syllabus, declare Thursday
as the official weekly off in the place of Sunday and observe ‘National Hindu
Day’.”
All of us
know that Ram, for the sake of peace in his father’s kingdom, relinquished the
throne and went to the forest. With VHP trying to
re-establish ‘Ram Rajya’ where peace is the main casualty, Ram would, once
again, go into the forest!
The very
first ‘Palm Sunday’ (Not sure, whether it was a Sunday at all!) saw a
spontaneous procession marching into Jerusalem .
This procession must have entered Jerusalem
like a tornado. Most of
the people in Jerusalem, especially those in power, were caught off-guard by
this ‘tornado’ called Jesus, and His people who amounted to nothing in the eyes
of the Roman authorities as well as the Jewish big-wigs.
Tornado is
also referred to as ‘twister’ since it twists and turns things at will! Jesus’
entry into Jerusalem
must have turned the lives of the religious leaders and the Roman officials
topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the
religious leaders – namely, the Temple
– and began to put things in order. Putting things in order? Well, depends on
which perspective one takes. For those in power, things were thrown completely
out of order; but for Jesus and for those who believed in His ways, this was a
way to set things straight. This is typical of a tornado… uprooting, turning
things topsy-turvy. A tornado is, possibly, a wake-up call to begin anew!
With the
Palm Sunday, begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What
is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial
of another friend, the mock trial, false witnesses, the condemnation of the
innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close
to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be
‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He
wanted to redefine God – a God who was willing to suffer. He had already
defined love as “Greater love has no one than this, that someone lay down his
life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of
laying down one’s life for friends, then God’s love can go further… to lay down
His life for all, including the ones who were crucifying Him. Such a God would
normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus
did that. He had also redefined holiness and made it very clear that in spite
of all the events that took place during this week, one could call this week
Holy since these events resulted in the Supreme Sacrifice.
Death by
crucifixion was the most painful torture the Romans had invented. The cross was
the most despised form of punishment reserved for the worst criminals. Jesus on
the Cross has made this most derogatory symbol of punishment and death into a
symbol of veneration. It is meaningful that St John Paul II, on a Palm Sunday,
gave the youth a cross to carry with them to all the World Youth Days.
Palm
Sunday is also celebrated as the World Youth Day. Pope St John Paul II established this day in
1985, the International Year of the Youth. As we celebrate the 33rd
World Youth Day, this Sunday, we are especially aware of the Synod of Bishops
to be held in Vatican
this year. The 15th Ordinary General Assembly of the Synod of Bishops is
scheduled to take place 3–28 October, 2018, with the theme: "Young People,
Faith, and Vocational Discernment".
The theme
proposed for this 33rd World Youth Day is the assurance given by the
Angel Gabriel to the young village girl, Mary: “Do not be afraid, Mary,
for you have found favour with God.” (Luke 1:30). When we reflect on
these words, some thoughts on courage and grace strike us. The angel tells Mary
not to be afraid and in the same breath gives the reason for not being afraid –
namely, finding favour with God.
We are
aware that youth is associated with bravery, courage, daring etc. This freedom
to face up to the challenges can sometimes be misled and become a façade to
hide the insecurities felt by the youth. We have an example in Nikolas Cruz,
the 19 year old young man, who is accused of shooting to death 17 persons in a Florida school. Nikolas
has not had a healthy family life and was expelled from this school for
disciplinary reasons. Instead of facing up to his inadequacies, he took the
gun-wielding ‘cowboyish’ role to settle scores with the school. The gun gave
him his false security.
In one of
the websites trying to gather support for Nikolas, there is a very poignant
statement: “The kids who need the most love will ask for it in the most
unloving ways.” How true! As we celebrate the World Youth Day, we think of
millions of young men and women who, for lack of love, take upon themselves
self-destructive life style or violence as the way of life. Every act of
terrorism can vouch for this.
We pray
that the Palm Sunday, celebrated as the World Youth Day, and the Holy Week
events inspire every one of us to celebrate this week not as a ritual ceremony
but as an integral part of our lives. Palm Sunday, Holy Week and the World
Youth Day… all the three invite us to keep our focus on the cross, an
instrument of violence and hatred turned into an instrument of love and
salvation!
Student-led
protests against gun violence
குருத்தோலை ஞாயிறு
சென்ற
ஞாயிறு சிந்தனையில் இரு ஊர்வலங்களைப் பற்றி குறிப்பிட்டோம். இவ்வாண்டு, மார்ச் 11,12 தேதிகளில், மும்பை
மாநகரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி, 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, காந்தியடிகள் துவக்கிய உப்பு சத்தியாகிரக ஊர்வலம் என்ற இரு ஊர்வலங்களைக்
குறித்து பகிர்ந்துகொண்டோம்.
குருத்தோலை
ஞாயிறான இன்று, ஊர்வலங்களைப் பற்றி சிந்திக்க மீண்டும்
நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 24,
இச்சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் இடம்பெற்ற ஊர்வலம் அது. அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும்
துப்பாக்கி பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மாணவ, மாணவியர்.
இவ்வாண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த பிப்ரவரி
மாதம் 14ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை,
அமெரிக்க ஐக்கிய நாட்டின்
பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச் செய்துள்ளது. "துப்பாக்கி
கலாச்சாரத்தை வளர்த்துவரும் வயது முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து,
இளையோர் இந்த ஊர்வலத்தை
தலைநகர் வாஷிங்டனில் நடத்தியுள்ளனர்.
மற்றோர்
ஊர்வலம், இந்தியாவின் பல மாநிலங்களில் வலம் வருகிறது. 'இராம இராஜ்ஜிய இரத யாத்திரை' என்ற பெயரில்
நடைபெற்றுவரும் இந்த ஊர்வலம், அயோத்தியில் இராமர் கோவிலை எழுப்பும்
சூளுரையுடன் துவக்கப்பட்டுள்ளது. இராம இராஜ்ஜியத்தை உருவாக்க, இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பதை இராமர் அறிந்தால், அவர் வேதனையடைவார். தன் தந்தையின் இராஜ்ஜியத்தில் அமைதி வேண்டும்
என்ற ஒரே காரணத்திற்காக, தம்பிக்கு அரியணையை வழங்கிவிட்டு, காட்டுக்குச் சென்றவர் இராமர். அவரது பெயரைப் பயன்படுத்தி, மத உணர்வைத் தூண்டி, 'இராம இராஜ்ஜியத்தை' உருவாக்க முயலும் இந்த ஊர்வலத்தைக் கண்டால், இராமர் மீண்டும் காட்டுக்குச் சென்றிருப்பார் என்பது உறுதி.
தனி மனித, அல்லது, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலனை
முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறைகளை வளர்த்துள்ளன. இந்த வன்முறைகள்
நாடுவிட்டு நாடு பரவும் வேளையில் வெடிக்கும் போர்களில், மீண்டும் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. உயிரோடு போர்க்களம் செல்லும்
ஆயிரமாயிரம் இளையோர், சடலங்களாக, அல்லது, நடைப்பிணங்களாகத் திரும்பிவரும்
ஊர்வலங்களை இவ்வுலகம் இன்றும் கண்டுவருகிறது. இதற்கு மாறாக, மக்கள் நலனை மையப்படுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களை ஒருங்கிணைத்து, நம்பிக்கையை வளர்த்துள்ளன.
நம்பிக்கையை
வளர்த்த ஓர் ஊர்வலத்தை இந்த ஞாயிறன்று நாம் கொண்டாட வந்திருக்கிறோம். குருத்தோலை ஞாயிறென
நாம் கொண்டாடும் இந்த விழாவில், இயேசு எருசலேம் நகரில் அமைதியின்
மன்னனாக நுழைந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.
போருக்குப்
புறப்படும் மன்னன் குதிரை மீதும், சமாதானத்தைக் கொணரும் மன்னன் கழுதையின்
மீதும் அமர்ந்து வருவது, இஸ்ரயேல் சமுதாயத்தில் நிலவிய மரபு. தான் அமைதியின் மன்னன்
என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட, இயேசு ஒரு கழுதைக்குட்டியின் மீது
அமர்ந்து எருசலேம் நகருக்குள் நுழைந்தார். எளிமையும், அமைதியும் கொண்ட மன்னராக இயேசு எருசலேமில் நுழைந்த குருத்தோலை ஞாயிறைக்
கொண்டாடும் வேளையில், எளிமையையும், அமைதியையும் விரும்பும் தலைவர்கள் சமுதாயத்தை வழிநடத்தவேண்டும்
என்று மன்றாடுவோம். அதேவேளையில், சுயமாகச் சிந்திக்கும்
திறன்படைத்த தொண்டர்களும், தனிமனிதத் துதி பாடாமல், மக்கள் நலனுக்காக உழைக்க
முன்வரும் தொண்டர்களும், இவ்வுலகில் பெருகவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.
இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எதேச்சையாக, மானசீகமாக அவருக்குமுன் ஊர்வலமாக
சென்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக்
கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை
உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம்
ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம்
கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார்.
அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு
குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, தலைகீழாகப்
புரட்டிப் போட்ட ஒரு சூறாவளியாக அமைந்தது!
குருத்தோலை ஞாயிறு
முதல், உயிர்ப்பு விழா
வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது.
வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்...
ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத்
தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர்
மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள்
சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத்
தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில்
தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத
வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான்
எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக்
கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும்,
மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு,
அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார்.
புனிதவார நிகழ்வுகள் வழியே, நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்
பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.
புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும்
ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும்
கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர்கள்
உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப்
பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில்
அறையுண்ட இயேசு, தன் கொடிய மரணத்தின் வழியே, கோடான கோடி மக்களுக்கு மீட்பைக்
கொணர்ந்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, வத்திக்கானில்
கூடிவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் மையக் கருத்தாக விளங்குவது, இளையோர். இந்த மாமன்றத்திற்கு
முன்னேற்பாடாக குருத்தோலை ஞாயிறன்று, 33வது
உலக இளையோர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. வானதூதர் கபிரியேல், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்"
(லூக்கா 1: 30) என்று இளம்பெண்
மரியாவிடம் கூறிய சொற்கள், இவ்வாண்டு கொண்டாடப்படும் உலக இளையோர் நாளின் விருதுவாக்காக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது வாக்கில் காணப்படும் இரு பகுதிகளை சிறிது ஆழமாக
ஆய்வுசெய்வது பயனளிக்கும். இளம்பெண் மரியாவிடம், 'அஞ்சவேண்டாம்' என்று
கூறும் வானதூதர், அதே மூச்சில், 'கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்' என்றும் கூறியுள்ளார்.
இளையோரிடம், "அஞ்சவேண்டாம், துணிவு கொள்ளுங்கள்" என்று
சொல்லும்போது, இளையோர் பெறவேண்டிய துணிவு, இறைவன் வழங்கும் அருளால் உருவாகவேண்டிய துணிவு என்பதையும் வலியுறுத்திக்
கூறவேண்டும். ஏனெனில், இளையோரை துணிவுகொள்ளச் செய்வதற்கு
பல வழிகள் உள்ளன.
பொதுவாக, இளையோரைக் குறித்துப் பேசும்போது, 'இளம்கன்று
பயமறியாது'
என்று கூறுகிறோம். அவர்கள் துணிவுடன் செயலாற்றத் தூண்டும் வகையில், 'துணிந்தவனுக்கு, தூக்குமேடை
பஞ்சுமெத்தை' போன்ற வீர வசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய கூற்றுகள், இளையோரிடையே
உணர்வுகளைத் தூண்டி, அவர்களது, துணிவை, வீரத்தை, தவறான
வழிகளில் வெளிப்படுத்த வழியாகின்றன.
பல வேளைகளில், இளையோர் கொண்டுள்ள துணிவு, அவர்களது
அச்சத்தை,
இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கும் போலியான துணிவாக வெளிப்படக்கூடும்.
புளோரிடா மாநிலத்தில், பள்ளியில் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட நிக்கோலஸ்
குருஸ் (Nikolas
Cruz) என்ற 19 வயது இளையவர்,
அப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர், வாழ்வில் சந்தித்த பல பிரச்சனைகளைத்
தீர்த்துக்கொள்ள விருப்பமின்றி, தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டார். இறுதியில்,
தன்னை வெளியேற்றிய பள்ளியின் மீது பழியைத் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தார். அவர்
பழக்கப்படுத்திக்கொண்ட துப்பாக்கி, அவருக்கு, தவறான, போலியான துணிவைத் தந்தது. 17
உயிர்களை பலி வாங்கினார்.
இந்தக் கொடுமையால் தங்கள் நண்பர்களை இழந்த அந்தப் பள்ளி மாணவர்கள், தங்களை
இந்த வேதனைக்கு உள்ளாக்கிய இளையவர் நிக்கோலஸ் மீது தங்கள் பழியைத் தீர்த்துக்கொள்ளாமல், துப்பாக்கி
பயன்பாட்டைக் குறித்து கேள்விகள் எழுப்பும் தெளிவைப் பெற்றனர். அதன் விளைவாக, அவர்கள்
பங்கேற்ற கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், அமெரிக்க சமுதாயத்தில், கட்டுப்பாடு
ஏதுமின்றி வளர்ந்துவிட்ட துப்பாக்கி கலாச்சாரத்தைக் கேள்வி கேட்கும் துணிவைப் பெற்றுள்ளனர்.
இது இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள அருள் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.
பழிக்குப் பழி என்ற வெறியை இளையோரிடம் தூண்டி விடுவது எளிது.
அரசியல் தலைவர்கள் பலரும், அரசியல் உலகில் அடியெடுத்துவைக்க நினைக்கும்
பலரும்,
இளையோரின் துடிப்பையும், துணிவையும் தங்கள் சுயநலனுக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி வருவதைக் கண்டு வேதனைப்படுகிறோம்.
இளையோர் உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று, தன்னலத்
தலைவர்களால், தவறான வழிகளில் நடத்திச் செல்லப்படும் இளையோரை, இறைவன்
தன் அருளால் நிறைத்து, அவர்கள் இவ்வுலகில் நன்மையை நிலைநாட்டும் துணிவைப் பெறவேண்டும்
என்று வேண்டிக்கொள்வோம்.
"இளையோர், நம்பிக்கை மற்றும்
அழைத்தலைத் தேர்ந்து தெளிதல்" (Young People, the Faith and
Vocational Discernment) என்ற மையக்கருத்துடன், அக்டோபர்
மாதம் நிகழவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக சிறப்பாக செபிப்போம்.
"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே
எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற
விருதுவாக்குடன் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், அனைத்து
இளையோரையும் செயல்வீரர்களாக, சிறப்பாக, இறைவனின் சொற்படி
செயலாற்றும் வீரர்களாக உருவாக்கவேண்டுமென்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment