To Whom
Shall We Go?
21st Sunday in Ordinary Time
For the
past four consecutive Sundays we have been reflecting on passages taken from
the 6th chapter of John’s Gospel, popularly known as the ‘Eucharistic
Discourse’. This chapter begins with the grand miracle of sharing initiated by
a boy, bringing 5 loaves and 2 fish to Jesus. Following this loving gesture,
Jesus hosts a grand, miraculous dinner satisfying the hunger of 5000 plus
people. Having witnessed the facility with which Jesus could satisfy their
hunger, people came looking for him for easy solutions to their problems.
Jesus did
not make it easy for them. He made it clear to them that the physical hunger
could easily be satisfied; but, to satisfy other hungers that arise only in
human beings, more sacrifices were required. Jesus did not mince words when he
told them that he was willing to give his ‘flesh and blood’ to satisfy the
hunger of the people.
As the
discourse progressed, it became more and more challenging. The simple ‘bread’
became ‘flesh’. At one point Jesus told them very clearly: “I am the
living bread which came down from heaven;… and the bread which I shall give for
the life of the world is my flesh.” (John 6:51). This was the turning
point in the discourse and, hence, we heard this sentence repeated on the
previous two Sundays in our Liturgy. Jesus went one step further to tell them,
that eating his flesh and drinking his blood, were the only way to life. “Truly,
truly, I say to you, unless you eat the flesh of the Son of man and drink his
blood, you have no life in you.” (John 6:54)
The
disciples who heard this statement were shocked and even repulsed. Eating the
flesh and drinking the blood of their master were too much for them. They knew
that it was time to decide. We hear in today’s Gospel that ‘many of his
disciples, when they heard it, said, “This is a hard saying; who can listen to
it?”… After this many of his disciples drew back and no longer went about with
him. (John 6:60,66)
The final
part of chapter 6 of John which we read as today’s Gospel, talks of the moment
of truth, the moment of decision making. This gives us an opportunity to think
of one of the most potent capacity only we – the human beings – are endowed
with, namely the capacity to DECIDE! While all the other creatures, in any given
situation, act on their instinct, human beings can take stock of the situation,
control their instinct and act on their ‘informed’ will power. Decisions are an
integral part of human life… decisions, big and small.
Today’s
readings talk about Joshua and Simon Peter making decisions under difficult
circumstances. “As for me and my house, we will serve the LORD”
(Joshua 24: 15) was the decision of Joshua. When he speaks of his house,
it can be taken as not only as his close family but also his kith and kin… and
even his domestic employees! In today’s Gospel, Simon Peter makes a similar
decision on behalf of the twelve disciples. When Jesus asks the poignant
question: “Do you also wish to go away?” Simon Peter answered him in one of the
oft-quoted Bible verses: “Lord, to whom shall we go? You have the words
of eternal life; and we have believed, and have come to know, that you are the
Holy One of God.” (John 6: 68-69)
Two aspects
of these decisions strike us. The first aspect is the ‘plurality’ of the
decision. Both Joshua and Peter make use of the ‘we’ word! The word ‘we’ seems
to be receding from our vocabulary in subtle ways and the dangerous ‘I’ word
seems to be making subtle inroads into our lives. Hope we become aware of this
trend and take necessary precautions. When crucial decisions have to be made in
families, collective responsibility seems to take the backseat.
When an
individual speaks for the group, we can assume that that person has a good
knowledge of the group and has gained the confidence of the group as well. Such
healthy knowledge and trust will be a great help in families, especially when
they are going through tough times.
As we are
reflecting on collective decision making process in families, we are aware that
the World Meeting of Families 2018 – WMOF 2018 is in progress in Dublin, Ireland.
This world meeting began on August 21 and will come to an end on Sunday, August
26 with the Holy Mass celebrated by Pope Francis. The overarching theme for
WMOF2018 is “The Gospel of the Family: Joy for the World”. This theme was
chosen by Pope Francis from the opening words of The Joy of Love (Amoris
Laetitia) - the post-synodal apostolic exhortation written by him addressing
the pastoral care of families.
Coming back
to decision making and families, we are sadly aware that ‘collective
decision-making process is almost nil in our families. There is more and more
‘touch-me-not’ or ‘leave-me-alone’ attitude prevalent in families. This leads
to individuals making wrong decisions. We can learn from Joshua and Peter how
to take responsible decisions on behalf of our near and dear ones.
The second
aspect of the decisions made by Joshua and Peter, is the tough situation in
which they were made. When life moves smoothly, there is hardly any need for
decisions. Even if there are a few tiny decisions to be made, they can be made
easily. It is during times of crisis that we need to take major decisions – as
in the case of Joshua, Peter.
Let me
close these reflections with an email that has been going around in the
internet. It contained photographs with the title: Pictures to Help You
Restore Your Faith In Humanity.
All the
photographs were packed with positive energy. These pictures depicted small or
big acts of kindness done by individuals for those in need. There was the
picture of a person who removes his sandals and gives it to a poor girl who is
bare-footed, and this takes place on the pavement on a hot, sunny day
(presumably).
Another
picture showed a young girl holding an umbrella over an older man unable to
walk and crawling on a wooden board to cross the road in drenching rain. There
were quite a few people on the road witnessing this, which meant that only the
young girl took the decision to help the older person.
Two
pictures in this collection touched me deeply. They depicted how decision and
dedication go hand in hand. The first picture showed a 97 years old lady, who
is bent almost double by hunchback, feeding a man lying on a cot. When I read
the caption for this picture, I choked! A mother (97 years old) in China,
feeding and taking care of her paralysed son (60 years old) everyday for more
than 19 years. A reminder of the amazing spirit of human compassion and, more
importantly, motherly love. The mother could have decided to send her son
to the care centre, especially when she herself requires assistance. But, she
had taken a decision and followed it with dedication for more than 19 years!
Another
picture in this collection that tugged at my heart was taken in a hospital. It
showed a young father and a mother kissing goodbye to their dying child, while
the hospital staff stand around the bed and pay their respects. The caption
written under the picture, once again, moistened my eyes…
A father
and mother kissing their dying little girl goodbye. If you are wondering why
all the medic people are bowing: in less than an hour, two small children in
the next room are (will be) able to live thanks to the little girl's kidney and
liver.
The
devastating floods in Kerala have shattered the life of thousands of people. It
has also brought out very noble, humane decisions taken by thousands. We salute
the decisive action taken by the army, police and fire fighters. We are deeply
touched by the noble deeds of fishermen. We are more deeply touched when we
learnt that the fishermen refused the offer of money from the Chief Minister of
Kerala.
Khais
Mohmmed from Fort Kochi said in a video post that he and his colleagues were
happy to hear the words of praise from the chief minister for the role they
played in going to the remotest areas amid pouring rain and dangerous waters to
rescue the marooned. "We are really happy that I and my friends rescued
several people. What made us happier was when you said that we (fishermen) are
your army. But after that we heard that for our services we will be paid Rs.
3,000. Sir, that made us really sad as we do not want money for saving the
lives of fellow humans," Mr Mohmmed said.
The
decision made by one of those fishermen – Jaisal K.P. – to become a ‘stepping
stone’ for women to get into rescue boats speaks volumes of the love and
concern of the fishermen, expecting nothing in return. Jaisal KP, a 32-year-old
Tanur resident, hunched on a flooded road to help elderly women step into an
NDRF inflatable boat, winning applauds across the country. He stepped in to
help the National Disaster Response Force (NDRF) team and rescued three
stranded women – one with an infant – in Vengara's Muthalamad area.
All of us
keep taking decisions in life – big, small, crucial, casual, tough, easy… At
this moment, we pray especially for those who are at crossroads in their lives
– in terms of making proper decisions on Job, Life-partner, Way of life etc.
Let the 97 years old Mom, the young parents of the dying child, Jaisal, the
fisherman, as well as Joshua and Simon Peter help us make the right decisions!
God-and-people-centred decisions!
Jaisal KP
making himself as a stepping stone
To Help
Restore Your Faith in Humanity
பொதுக்காலம் 21ம் ஞாயிறு
கடந்த
நான்கு வாரங்களாக ஞாயிறு வழிபாடுகளில் யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப்
பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இன்று ஐந்தாவது வாரமாக, இப்பிரிவின் இறுதிப் பகுதி நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.
6ம் பிரிவு, அற்புதமான ஒரு விருந்துடன் துவங்கி, இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா
என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழலுடன் முடிகிறது. 6ம் பிரிவின் துவக்கத்தில், சிறுவன் ஒருவன் வழங்கிய ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும், 5000த்திற்கும் அதிகமான மக்களை, ஒரு பகிர்வுப் புதுமைக்கு அழைத்துச் சென்றது.
அப்புதுமையால்
நிறைவுபெற்ற மக்கள், அத்தகைய உணவும், பகிர்வும் மீண்டும், மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
இயேசுவைத் தேடிச் சென்றபோது, அவர், கொஞ்சம், கொஞ்சமாக அவர்களது எண்ணங்களை வேறு
திசைகளில் திருப்பினார். பெரியதொரு சவாலை அம்மக்கள்முன் வைத்தார்.
ஏனைய
உயிரினங்களைப் போலவே, மனிதருக்கும் உருவாகும் வயிற்றுப்பசியை
உணவைக்கொண்டு போக்கிவிடலாம்; ஆனால், மனிதர்களுக்கு மட்டுமே உருவாகும் வேறு பல பசிகளைப் போக்க, ஒருவர் தன்னையே முழுமையாக வழங்கவேண்டும் என்பதே, இயேசு அவர்கள் முன் வைத்த சவால்.
உலகினரின்
பசியைப் போக்க, "எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு
வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (யோவான் 6:51) என்று இயேசு கூறியதைக் கேட்ட மக்கள்
அதிர்ச்சியுற்றனர். இயேசு இன்னும் ஒருபடி மேலே சென்று, 'என் சதையை உண்டு, இரத்தத்தைக் குடிப்பவரே நிலைவாழ்வு
பெறமுடியும்' (யோவான் 6:54) என்று அழுத்தந்திருத்தமாகக்
கூறினார். சவால்கள் நிறைந்த இச்சொற்கள், சூழ இருந்தோரை, அதிர்ச்சியில், இன்னும் சொல்லப்போனால், அருவறுப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். எனவே, அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர். (யோவான் 6:60)
அற்புத
விருந்துடன் ஆரம்பமான ஒரு நிகழ்வு, அதிர்ச்சி தரும் சவாலாக தங்களை
அடைந்தபோது, மக்களும், சீடர்களும் முடிவெடுக்க இயலாமல் தடுமாறினர். இயேசுவைப் பின்தொடர்ந்தால், எளிதாக உணவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள், இயேசு விடுத்த சவால்களைச் சமாளிப்பது கடினம் என்று உணர்ந்து, அவரை விட்டு விலகினர்.
இதையொத்த
ஒரு சூழலை, இன்றைய முதல் வாசகத்திலும் காண்கிறோம்.
யோசுவா, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்பதை
உணர்ந்து, மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்த்து, அவர்கள் முன் ஒரு சவாலை வைக்கிறார். ஆண்டவரைப் பின்தொடர்வதா, வேற்று தெய்வங்களைப் பின்தொடர்வதா என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து, "இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது
முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்."
(யோசுவா 24:15) என்று தன் முடிவைப் பறைசாற்றுகிறார்.
மனித
வாழ்வில் நாம் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம் முடிவெடுப்பது. இந்த அடிப்படை அனுபவத்தை
ஆழமாகச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.
"நானும்
என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" (யோசுவா 24: 15) என்று யோசுவா சொல்வதை இன்றைய முதல்
வாசகத்தில் கேட்கிறோம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற
புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லும் சீமோன் பேதுருவை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.
யோசுவாவும், சீமான் பேதுருவும் கூறிய சொற்களில் உள்ள ஒரு பொதுவான அம்சம் நம்
கவனத்தை ஈர்க்கிறது. இருவருமே தங்கள் முடிவை ஒருமையில் எடுப்பதாகக் கூறவில்லை. தங்களைச்
சார்ந்திருப்பவர்களுக்கும் சேர்த்தே அவர்கள் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு
ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்”
(யோசுவா 24: 15) என்று
உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை அவரது குடும்பத்தினர்
என்று மட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த
வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும்
ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம்,
பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், பன்னிரு சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.
தங்கள்
குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள்
குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, இவர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கை
பெற்றவர்களே, மற்றவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும் நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பார்க்கலாம்.
'தாமரை இலை மேல் நீர்' போல, 'பட்டும் படாமலும்' உள்ள உறவுகள், மேற்கத்திய நாடுகளில், குடும்பங்களில் வளர்ந்துள்ளதைத் தெளிவாகப் பார்க்கலாம். அத்தகைய
ஒரு போக்கு, தற்போது, ஆசிய நாடுகளிலும்
பரவிவருவதை நாம் காணலாம். குடும்பத்தில் ஒருவர் முடிவெடுக்கும்போது, அதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ விரும்பாமல் ஒதுங்கிவிடுவது, குடும்பங்களில் நிலவும் ஆபத்தான போக்கு. இந்தப் போக்கு, தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது.
ஆகஸ்ட்
21, கடந்த செவ்வாய் முதல், 26 இஞ்ஞாயிறு
முடிய அயர்லாந்தின் டப்ளின் மாநகரில், குடும்பங்களின் உலக மாநாடு நடைபெறுகிறது.
இச்சனிக்கிழமை, மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாநாட்டில்
கலந்துகொள்கிறார். இவ்வேளையில், குடும்ப உறவுகள் வலுப்பெற்று, அனைவருக்கும் நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல் நம்மிடையே
வளர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
முடிவுகள்
எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும் இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே
நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில்
முடிவுகள் எடுக்கும் தேவையே எழுவதில்லை. சிறு,
சிறு முடிவுகள் அந்நேரங்களில்
தேவைப்பட்டால், அவை எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில்
சவால்கள் நம்மை நெருக்கும்போது முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?
கேரள
மாநிலத்தைப் புரட்டிப்போட்ட பயங்கர வெள்ளமும்,
அவ்வெள்ளத்தின் நடுவில்
ஊற்றெடுத்த தியாகச் செயல்களும் நம் சிந்தனைகளில் இன்னும் பதிந்துள்ளன. பொதுவாக, வெள்ளம், தன் பாதையில் உள்ள அனைத்தையும்
அடித்துச் செல்லும்; அதே வேளையில், வேறு பலவற்றைக் கொண்டுவந்து சேர்க்கும். கேரளாவின் வெள்ளம், ஏறத்தாழ 400 உயிர்களைக் கொண்டு சென்றது. அதே வேளையில், இவ்வெள்ளம் மக்களை ஒன்றாகக் கொண்டுவந்து சேர்த்தது.
இவ்வெள்ளத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து உதவிய இராணுவ வீரர்களையும், உதவிக்கரம் நீட்டிய ஆயிரமாயிரம் மக்களையும் இறைவனின் சன்னதியில்
எண்ணிப்பார்த்து, வணங்குகிறோம், அவர்களுக்காக நன்றி கூறுகிறோம். குறிப்பாக, இவ்வெள்ளத்தில் உதவிய மீனவர்களை சிறப்பாக எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.
அவர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணிகளுக்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்போவதாக மாநில முதல்வர்
அறிவித்தபோது, அதை மறுத்துவிட்ட மீனவர்கள், மனிதாபிமானத்தோடு தாங்கள் மேற்கொண்ட பணிகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம்
என்று முதலிவரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
எதையும்
எதிர்பார்க்காமல், மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம்
செயலாற்றிய உன்னத மீனவர்கள், நம் அனைவருக்கும் பாடங்கள் புகட்டுகின்றனர்.
அந்த மீனவர்களில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்சல்
(Jaisal K.P.) என்ற மீனவரின் செயல் நம் நினைவுகளில் ஆழப்பதிந்துள்ளது. உயிர் காக்கும்
படகு அருகிலிருந்தாலும், அதில் ஏறுவதற்கு பெண்களால் இயலவில்லை
என்பதை உணர்ந்த ஜெய்சல் அவர்கள் ஒரு முடிவெடுத்தார். உயிர்காக்கும் படகுக்கு அருகே, தன் முகம் வெள்ளநீரில் பதியும் வண்ணம் குனிந்து நிற்க, அவரது முதுகை ஒரு படிக்கட்டுபோல பயன்படுத்தி, பல பெண்கள் அந்த படகுக்குள் ஏறிச் சென்ற காட்சி, மீனவர்களின் அன்பு, தியாகம், வீரம் ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. மக்களை பாதுக்காக்க, தன்னையே ஒரு படிக்கட்டாக மாற்ற முடிவெடுத்த ஜெய்சல் அவர்கள், இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதைப் பறைசாற்றும்
தூதர்.
இக்காட்சியைக்
கண்டபோது, சில ஆண்டுகளுக்குமுன் மின்னஞ்சலில் வந்து
சேர்ந்த சில புகைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. "நன்மை இவ்வுலகில் இன்னும் நடமாடுகிறது"
என்ற கருத்துடன் தொகுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் அந்த மின்னஞ்சலில் வந்திருந்தன.
தகிக்கும் கடற்மணலில் செருப்பில்லாத ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக்
கழற்றித் தரும் ஒரு மனிதர்.... கால்களை இழந்து,
பலகையில் அமர்ந்தபடியே
நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், கொட்டும் மழையில் சாலையைக் கடப்பதற்காக
தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண்... இப்படி பல படங்கள்...
இத்தொகுப்பில்
இருந்த அனைத்துப் படங்களில் இரண்டு என் கவனத்தை அதிகம் ஈர்த்தன. முதுகுத் தண்டுவடம்
வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயல் இழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு
உணவு ஊட்டுகிறார். இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் உள்ளது.
அடுத்த
படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருந்தது... மரணத்தின் வாயிலில் இருக்கும் ஒரு
பச்சிளம் குழந்தைக்குக் கண்ணீருடன் முத்தமிட்டு விடை பகரும் ஓர் இளம் தாய்... அக்குழந்தையின்
படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன்
வணக்கம் செலுத்தியபடி நிற்கிறார்கள். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும்
விளக்கமும் படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வாழப்போகும் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில்
இருக்கிறார்கள்... என்பதே அவ்விளக்கம்.
கேரள
வெள்ளத்திலும், இன்னும் இங்கு கூறப்பட்ட மனதைத் தொடும்
நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படையாக ஓர் அம்சம் உள்ளது... இத்தருணங்கள் அனைத்திலும் சிறிதான
அல்லது பெரிதான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. மழைக்குக் குடைபிடிப்பதும், காலணிகளைத் தருவதும் சிறிய செயல்களாக இருக்கலாம்... இறந்துகொண்டிருக்கும்
தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருவது பெரும் செயலாக இருக்கலாம்...
முக்கியமான
முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக்
கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை
எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.
யோவான்
நற்செய்தி 6: 68-69
“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே
கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்”
"வேறு
யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால்
எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும்.
ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது
நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று
முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை
விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு
அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. அந்தப் புதுவாழ்வு... உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான்
பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
97 வயதான
போதிலும் தன் மகனைத் தொடர்ந்து காப்பாற்றும் அந்த முதுமைத் தாய், இறக்கும் நிலையில் இருந்த தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம்
செய்த இளம் பெற்றோர், வெள்ள நீரில் தன்னையே ஒரு படிக்கட்டாக அமைத்து, மக்களைக் காத்த மீனவர் ஜெய்சல் போன்ற உன்னத உள்ளங்களின் வாழ்வால்
நாமும் தூண்டப்பட வேண்டுமென இறைவனை இறைஞ்சுவோம்.
வாழ்வின்
முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக்
கொணர்வோம். முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியச் சூழலில், குடும்பத்தினர் இணைந்து
வந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல, இன்னும் பல்லாயிரம் உன்னத உள்ளங்களைப் போல, இறைவனை
நம்பி, இறைவனைச் சார்ந்து, மக்கள் சார்பாக நம்
வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.