31 October, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 8


Letter to the youth – read by Cardinal Lorenzo Baldisseri

இமயமாகும் இளமை - ஒளிமயமான எதிர்காலமாய் திகழுங்கள்

அக்டோபர் 28, கடந்த ஞாயிறன்று, 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுபெற்றது. இதில் பங்கேற்ற மாமன்றத் தந்தையர் இணைந்து, இளையோருக்கென ஒரு மடலை வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 28, இஞ்ஞாயிறன்று, நடைபெற்ற மாமன்ற நிறைவுத் திருப்பலியின் இறுதியில், கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் இம்மடலை வாசித்து, இளையோரிடம் வழங்கினார். இம்மடலில், மாமன்றத் தந்தையர் வெளிப்படுத்தியுள்ள எண்ணங்கள் இதோ:
மாமன்றத் தந்தையர்களாகிய நாங்கள், நம்பிக்கை, பற்றுறுதி, மற்றும் ஆறுதல் ஆகியவற்றை வழங்கும் சொற்களுடன் இளையோரிடம் பேச விழைகிறோம். உங்கள் குரல்கள், மகிழ்வுடன் நீங்கள் எழுப்பிய ஒலிகள், மற்றும், உங்கள் அமைதியான தருணங்கள் வழியே, 'என்றும் இளமையான கிறிஸ்து'வின் குரலை, இந்நாள்களில்,  நாங்கள் கேட்டோம்.
இப்போது உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விழைகிறோம். வாழ்வின் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம், உங்கள் கனவுகளை நனவாக்கி, உங்கள் வரலாற்றை வடிவமைக்கும் என்பதை உறுதியாய் நம்புகிறோம்.
எங்களுடைய பலவீனம், தவறுகள், பாவங்கள் ஆகியவை, திருஅவைமீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்குத் தடையாக இருக்கக்கூடாது. திருஅவை, உங்கள் தாய்; அவர் உங்களை கைவிடமாட்டார்; தூய ஆவியாரின் காற்று வீசும் திசையில் உங்களை வழிநடத்த, திருஅவையாகிய தாய் உங்களுடன் துணை வருகிறார்.
தன் ஒரே மகன் இயேசுவை அளிக்கும் அளவுக்கு கடவுள் அன்புகூர்ந்த இவ்வுலகம், பொருள்கள், குறுகிய கால வெற்றிகள், இன்பம் ஆகியவற்றிலேயே கருத்தாய் இருக்கும்போது; வலுவிழந்தோரை இவ்வுலகம் நசுக்கும்போது; அன்பு, அழகு, உண்மை, நீதி ஆகியவற்றின் மீது, இவ்வுலகின் கவனத்தைத் திருப்பும்வண்ணம், அதை நீங்கள் உயர்த்தவேண்டும்.
உங்களில் ஒரு சிலருடனும், இன்னும், உங்கள் செபம் மற்றும் அன்பு ஆகியவற்றோடும் நாங்கள் ஒருமாத காலம் இணைந்து பயணித்தோம். உங்களோடு இணைந்து, உலகின் ஒவ்வொரு பகுதியிலும், மறைபரப்புப் பணியாளர்களாக செல்ல விழைகிறோம்.
திருஅவைக்கும், இவ்வுலகிற்கும், உங்கள் ஆர்வம் மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. மிகவும் வலுவிழந்தோர், வறியோர், மற்றும் வாழ்க்கையில் காயமடைந்தோர், ஆகியோரை, உங்கள் பயணத்தின் துணையாளர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீங்களே நிகழ்காலம்; ஒளிமயமான எதிர்காலமாய் திகழுங்கள்.

Martha speaks to Jesus

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 8

இலாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும் தங்கள் சகோதரனின் மரணத்தால் நிலைகுலைந்து போயினர். அவர்களது வேதனையைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் பலர் அங்கே வந்திருந்தனர் (யோவான் 11:19) என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். மார்த்தா, மரியா ஆகிய இருவரையும் சுற்றி அமர்ந்திருந்தவர்களுடன், நாமும் கற்பனையில் இணைவோம்.
கூடியிருந்தோர், அவ்விரு சகோதரிகளுக்கும் ஆறுதல் சொன்ன வேளையில், இலாசரைப் பற்றி, அவருடன் தாங்கள் பெற்ற அற்புத அனுபவங்களைப் பற்றி பேசியிருப்பர். அப்போது, இலாசரின் நெருங்கிய நண்பரான இயேசுவைக் குறித்தும் ஒரு சிலர் பேசியிருப்பர். "அவர் ஏன் இன்னும் வரவில்லை?", "அவர் இங்கு இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?" என்ற கேள்விகள் அங்கு கூடியிருந்தோர் நடுவே வலம் வந்திருக்கும். "இயேசு இங்கே இருந்திருந்தால்..." என்ற எண்ணம், மார்த்தாவையும், மரியாவையும் வாட்டி, வதைத்திருக்கவேண்டும்.

இயேசுவும், அவரது சீடர்களும், பெத்தானியாவுக்கு வந்த வேளைகளில், இயேசு, வெவ்வேறு ஊர்களில், முன்பின் அறிமுகமில்லாதவர்கள் பலருக்கு செய்த புதுமைகள் குறித்து சீடர்கள், மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய மூவரிடமும் கதை, கதையாய் சொல்லியிருப்பர். அந்தப் புதுமைகளின் நினைவுகள், அவ்விரு சகோதரிகளின் உள்ளங்களில் மீண்டும், மீண்டும் அலைமோதியிருக்கும். ஊருக்கெல்லாம் நல்லது செய்த இயேசு, தங்கள் சகோதரனைக் காப்பதற்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி, அவர்கள் உள்ளங்களில் வேதனையையும், ஏன், சொல்லப்போனால், கோபத்தையும் கிளறியிருக்கும்.

இயேசுவுக்கு எதிராக, எருசலேமில் உருவாகிவந்த பகைமை உணர்வுகளை அவ்விரு சகோதரிகளும், கேள்விப்பட்டிருந்தாலும், எருசலேமுக்கு அருகில் பெத்தானியா இருந்ததால், அவர் அங்கு வருவது ஆபத்து என்பதை, அவர்கள் உணர்ந்திருந்தாலும், இலாசர் நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டால், இயேசு கட்டாயம் தங்கள் இல்லத்திற்கு வருவார் என்பதையும் அவ்விரு சகோதரிகளும் எதிர்பார்த்திருப்பர்.

"ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" (யோவான் 11:3) என்ற செய்தியை, மார்த்தாவும், மரியாவும் இயேசுவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனுப்பியது, ஒரு செய்தி வடிவில் இருந்தாலும், அதை, ஒரு செபமாகக் கருதலாம் என்று இப்புதுமையின் ஆரம்பத் தேடல் ஒன்றில் சிந்தித்தோம். அவர்கள் அனுப்பிய செபத்தைக் கேட்டதும், இயேசு விரைந்து வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நிகழவில்லை. எனவே, அவ்விருவரின் உள்ளங்களை வேதனையும், கேள்விகளும் நிறைத்தன. செபத்தில் கேட்டது கிடைக்காமல் தவிக்கும் பல்லாயிரம் மக்களின் பிரதிநிதிகளாக, மார்த்தா, மரியா இருவரையும் நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இத்தகையச் சூழலில், இயேசு பெத்தானியா வந்து சேர்ந்தார் என்பதை அறிந்த மார்த்தா, அவரைச் சந்திக்கச் சென்றார். தன் உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த வேதனை, ஏமாற்றம், கோபம் அனைத்தையும் இயேசுவிடம் வெளிப்படுத்தினார்: "ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11,21) என்று முறையிட்டார். வேதனைகள் சூழம்போது, கடவுளை நோக்கி கேள்விகள் எழுப்புவதும், முறையிடுவதும் காலம்காலமாக நடந்துவருகின்றது. அதற்கு, மார்த்தாவும், மரியாவும் விதிவிலக்கல்ல.

துன்பங்கள், அலை, அலையாய் நம்மைச் சூழும் நேரங்களில், அந்த அலைகளில் மட்டும் நம் கவனம் ஆழ்ந்துவிடுவதால், அதே அலைகள் மீது நடந்துவரும் ஆண்டவனைக் காணமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?

எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. ஒரு மனிதர், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கிறார். பயணத்தில், கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக, பாதை முழுவதும் இரு சோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அம்மனிதருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், கூர்ந்து கவனித்த வேளையில், ஒரு சில நேரங்களில், அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறார். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவர் தன் வாழ்வுப் பாதையில், அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறார். உடனே அம்மனிதர், கடவுளிடம், "துன்ப நேரத்தில், என்னை, தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறார். "மகனே, துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தபோது, ஒரு சோடி காலடித்தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில், உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.

அந்த மனிதரைப்போலவே, மார்த்தா, இயேசுவிடம் முறையிடுகிறார். தங்களையும், தங்கள் சகோதரனையும் தவிக்க விட்டுவிட்டு தூரமாய்ப் போய்விட்டார் என்று  மார்த்தா, இயேசுவிடம், தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறார். ஆனால், அவர், உடனே, நம்பிக்கை நிறைந்த சொற்களையும் இணைத்துக் கூறுகிறார். இதோ, மார்த்தாவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்:
யோவான் 11:22-27
மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார். மார்த்தா அவரிடம், "இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்" என்றார்.

தன் சகோதரனைக் காப்பதற்கு இயேசு வரவில்லை என்பதை, ஒரு குற்றச்சாட்டைப் போல் முன்வைத்த மார்த்தா, இறுதி நாளில் தன் சகோதரன் உயிர் பெற்றெழுவான் என்பதையும் கூறுகிறார். அவ்வேளையில், அவரிடம் வெளியான அரைகுறை நம்பிக்கையை உறுதிப்படுத்த, இயேசு, மார்த்தாவிடம் "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவான் 11:25) என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.

இயேசு, தன்னைப் பற்றி, "நானே..." என்று கூறியுள்ள இறை வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில், ஏழு முறை இடம்பெற்றுள்ளன.
வாழ்வு தரும் உணவு நானே - யோவான் 6: 35
உலகின் ஒளி நானே - 8: 12
நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை - 10: 9
நல்ல ஆயன் நானே -  10: 12
உயிர்த்தெழுதலும், வாழ்வும் நானே - 11: 25
வழியும், உண்மையும், வாழ்வும் நானே - 14: 6
உண்மையான திராட்சைச் செடி நானே - 15: 1
என்பவை அற்புதமான 'நானே' வாக்கியங்கள்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னைப்பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆய்வு சேய்தால், அவை எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு, தன்னை பல்வேறு உருவகங்களில் அடையாளப்படுத்தி, இவ்வாக்கியங்களைக் கூறினார் என்பதை உணரலாம்.
இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் இந்தப் புதுமைக்கு முன்னதாக, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில், பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கிய புதுமையைச் சிந்தித்தோம். அந்தப் புதுமையைத் தொடர்ந்து, 10ம் பிரிவில், இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாக அடையாளப்படுத்தி பேசினார்.
"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்ன அந்த வார்த்தைகள், தன் புகழைப் பறைசாற்ற அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும் தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மற்றவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில் இயேசு சொன்ன வார்த்தைகள் இவை.

பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். இயேசு அற்புதங்கள் ஆற்றுகிறார் என்பதைவிட, அவர், ஒய்வு நாளைக் கடைபிடிப்பதில்லை (யோவான் 9:16) என்பதை ஒரு குற்றச்சாட்டாக சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24). அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம்.
சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட அம்மனிதருடன் இயேசு ஆரம்பித்த அந்த உரையாடலில், 'நல்ல ஆயன் நானே' என்று அவர் கூறுகிறார். தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்திய தலைவர்களுக்கு, தன்னைப்பற்றிய உண்மையை இடித்துரைக்கவேண்டும் என்பதற்காக இயேசு இவ்வாறு பேசவில்லை, மாறாக, தன்னால் குணம் அடைந்தவர், மதத் தலைவர்கள் மீது கொண்ட பயத்தினால், வெறுப்பினால், மீண்டும், தன் அகக்கண்களை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு தன்னை ஒரு பாசமுள்ள ஆயன் என்று குறிப்பிடுகிறார்.
அதேவண்ணம், வேதனையால் நொறுங்கிப்போயிருக்கும் மார்த்தாவின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில், இயேசு தன்னையே உயிர்த்தெழுதலாகவும், வாழ்வாகவும் அடையாளப்படுத்துகிறார்.

இயேசுவுக்கும், மார்த்தாவுக்கும் இடையே நிகழ்ந்த இந்த உரையாடலை, நற்செய்தியாளர் யோவான், முதல் கிறிஸ்தவர்களை மனதில் கொண்டு எழுதினார் என்று ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். இந்த எண்ணத்தை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்கவும், மார்த்தாவின் சகோதரி, மரியாவுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை அசைபோடவும், நாம் அடுத்த தேடலில் முயல்வோம்.


28 October, 2018

Looking directly into the eyes of young people… இளையோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து...


Jesus and Blind Bartemaeus - Maria Laughlin

30th Sunday in Ordinary Time

The 15th Ordinary General Assembly of the Synod of Bishops which began in Vatican on October 3, on the theme: "Young People, Faith, and Vocational Discernment" has come to a close this Sunday. We thank God for having guided the 300 plus participants of the Synod, including 34 young men and women, in a healthy sharing of views.

The guide book for this Synod, called the ‘Instrumentum Laboris’, which was published on May 8, 2018, opens with an imagery of the Emmaus experience. Here are the opening lines of this guide book:
Taking care of young people is not an optional task for the Church, but an integral part of her vocation and mission in history. In just a few words, this is the specific scope of the upcoming Synod: just as our Lord Jesus Christ walked alongside the disciples of Emmaus (cf. Lk 24:13-35), the Church is also urged to accompany all young people, without exception, towards the joy of love.

We know that on the way to Emmaus, the Risen Christ, opened the eyes of the discouraged disciples step by step. This Sunday, when the young men and women, not only from the Synod Hall, but all over the world take up their life journey, Jesus will accompany them and open their eyes to see Him alive and active in this world. It is a happy coincidence, or, I would like to term it, a moment of grace, that on the final day of the Synod, this XXX Sunday, we have a gospel event in which Jesus opens the eyes of Bartimaeus (Mark 10: 46-52).

In the Emmaus experience, not only seeing, but careful listening and honest sharing by the disciples helped them discover the Risen Christ. This is the challenge that Pope Francis placed before the participants of the Synod – namely, to sharpen their speaking, hearing and seeing abilities – right at the beginning of the Synod, both in his homily as well as the inaugural address in the Synod hall.

Here are two excerpts, one from the homily, and the other from the inaugural address of Pope Francis on October 3:
Homily:
Anointed by hope, let us begin a new ecclesial meeting. One that can broaden our horizons, expand our hearts and transform those frames of mind that today paralyze, separate and alienate us from young people, leaving them exposed to stormy seas, orphans without a faith community that should sustain them, orphans devoid of a sense of direction and meaning in life.
Hope challenges us, moves us and shatters that conformism which says, “it’s always been done like this”. Hope asks us to get up and look directly into the eyes of young people and see their situations. This same hope asks us to make efforts to reverse situations of uncertainty, exclusion and violence, to which our young people are exposed.

Inaugural Address:
The Synod we are living is a moment of sharing. I wish, therefore, at the beginning of the Synod Assembly, to invite everyone to speak with courage and frankness (parrhesia), namely to integrate freedom, truth and charity. Only dialogue can help us grow… And humility in listening must correspond to courage in speaking.

Since Discernment was part of the main theme of the Synod, Pope Francis mentioned that the exercise of listening also required a time to assimilate and integrate. Hence, he proposed a method of proceeding in the general and group sessions – a time for silence and prayer!
Discernment needs space and time. And so, during the work done in plenary assembly and in groups, after five interventions are made, a moment of silence of approximately three minutes will be observed. This is to allow everyone to recognize within their hearts the nuances of what they have heard, and to allow everyone to reflect deeply and seize upon what is most striking.
A Church that does not listen, shows herself closed to newness, closed to God’s surprises, and cannot be credible, especially for the young who will inevitably turn away rather than approach.

Many of the participants of the Synod, especially the Bishops, young and old, have expressed their appreciation of the participation of the young persons. They have acknowledged that their ‘eyes have been opened’ to see the world of the youth in a new light. At this moment, we turn our attention on ourselves to reflect on how we let our eyes be opened!

We can reflect today’s Gospel in two directions. They are: Calling by name” and “Having proper perspective”. These two ideas are inter-linked. Calling by name gives the basic respect due to a person. But, many a time this basic respect is not given, because of our refusal to have proper perspective – our refusal to see!

All the three synoptic gospels (Matthew, Mark and Luke) record the event of Jesus curing a visually challenged person as the final miracle before the Passion. Only in Mark, the visually challenged person is given an identity - Bartimaeus the son of Timaeus. Usually, in the gospel miracles of curing, the patients are mentioned by general terms: leprosy patient, one possessed, the paralytic, the deaf and mute etc… This is the only miracle where the patient, and that too a blind beggar, is given a proper name. (This reminds us of the only parable where Jesus mentions one of the characters by name – Lazarus, once again a beggar!) This gives us an opportunity to reflect on ‘being called by name’.

All of us were born into this world as a mere number – the 304th child in the hospital, or the fifth child in the family etc. The name given to us changes us from a number to a unique person. Our name is an identity we carry life-long. This identity is precious, provided our names are cherished by people around us. But for many of us, this identity gets twisted, mangled, tarnished, broken, shattered… There are two sides to this coin called ‘calling by name’.

First the bright side of the coin: In the medical profession, the person who becomes a doctor, is often called by the title ‘Doctor’ than by the name. The same goes for Teacher, Professor, Police Inspector etc… These professional titles almost replace the names of the individual. Such practices are followed in religious circles too. The titles - Father, Brother, Sister, Guru, Rabbi, Imam, etc. Calling by these titles is usually a mark of respect!

Now, the darker side of the coin: How do we call those who do menial services like sweeping the streets, mending shoes, cleaning vessels and clothes in our houses? Are they called by their ‘profession’? Do we consider these works as ‘profession’ at all? Do we call these individuals by their names? Do we take the effort to know the names of these persons? Hardly… For most of us those who are involved in these hard labours simply belong to the group of “Hei, you”.
In every institution that I served or visited, I made it a point to learn the names of those who were doing services like the receptionist, the table boys, the sweepers, the peons… and called them by name. I have enjoyed the smile my effort brought to their faces. In the midst of an avalanche of ‘hei, you’ greetings, my attempt to call them by name, surely made a difference. There is a special power behind calling someone by name, especially those who serve us in different ways… Try it. You won’t regret this effort!

The second idea that we can derive from this gospel is “having a proper perspective”.
It is interesting that Mark places the episode of Bartimaeus immediately after the episode of James and John requesting for two thrones (Last Sunday’s gospel).

James and John failed to see anything special in Jesus, since their vision was blinded by the thrones on either side of Jesus. Bartimaeus, on the other hand, recognizes Jesus as the ‘Son of David’ – a title that refers to Jesus as the true King and the true Kingdom of God. When Bartimaeus approaches Jesus, he asks him: “What do you want me to do for you?” (Mark 10:51) This is the same question that Jesus asked last week to James and John (cf. Mk 10:36). They gave a wrong answer. They wanted prestige, something one does not REALLY need, whereas Bartimaeus requests Jesus for a very real need – the ability to see!
Bartimaeus could not see with his physical eyes. But he had a better perspective of Jesus – calling him by the special title: Jesus, son of David. This is an insight that Bartimaeus received even before receiving his bodily sight. He could see with the eyes of the heart… the eyes of faith.

The lovely words of Helen Keller are enlightening: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” I am sure Helen Keller knew what she was talking about.

Let us close our reflection with a short story of how we need to purify ourselves in order to have a proper perspective:
Husband and wife move into a new home. The next day morning, the lady, sipping her coffee, sees through her glass window at the backyard of the next house. She then calls her husband and tells him, “Oh, our neighbour doesn’t know how to wash clothes. See, how dirty they are.” This complaint goes on for three days. On the fourth day, the lady is surprised to see the washed clothes all spick and span. She called her husband and said: “Our neighbour must have heard my comments. Today she has done a good job of washing her clothes.” The husband said, “Honey, this morning I cleaned our window panes.”
Getting a proper perspective is a gift from God. Let us ask along with Bartimaeus, “Rabbi, let me see again.”

We began our reflection on the journey to Emmaus. Let us close with the consoling words of Prophet Jeremiah. Let us hear God speak these words to the youth who have been the focus of the Church for the past 24 days!
Jeremiah 31: 8-9
For thus says the Lord: Behold, I will … gather them from the farthest parts of the earth, a great company, they shall return here. I will make them walk by brooks of water, in a straight path in which they shall not stumble.

Jesus Heals a Man Born Blind, El Greco - 1570

பொதுக்காலம் 30ம் ஞாயிறு

கடந்த 24 நாள்களாக, வத்திக்கானில் நடைபெற்றுவந்த 15வது உலக ஆயர்களின் மாமன்றம், இஞ்ஞாயிறு நிறைவுக்கு வந்துள்ளது. இளையோர், நம்பிக்கையும், அழைத்தல் சார்ந்த தெளிந்து தேர்தலும் என்ற மையக்கருத்துடன், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில், 34 இளையோர் உட்பட, 300க்கும் அதிகமான மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், வழிநடத்தி வந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
நிறைவுற்ற மாமன்றத்திற்கு ஒரு வழிகாட்டியாக உருவாக்கப்பட்ட Instrumentum Laboris என்ற ஏட்டின் முதல் வரிகளிலேயே, இம்மாமன்றத்தின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது:
இளையோரைப் பேணிக்காக்கும் பணி, திருஅவை, தனக்கு விருப்பமானால், தெரிவு செய்யும் பணி அல்ல. மாறாக, அது, திருஅவையின் அழைத்தலிலும், பணியிலும் இணைபிரியாத அங்கம். இதுவே, மாமன்றத்தின் நோக்கம். எம்மாவுஸ் ஊரை நோக்கிச் சென்ற சீடர்களுடன் இணைந்து நடந்த இயேசுவைப்போல் (லூக்கா 24 13-25) திருஅவையும் அனைத்து இளையோருடனும், அன்பின் மகிழ்வை நோக்கி நடந்துசெல்லத் தூண்டப்படுகிறது.

எம்மாவுஸ் சென்ற சீடருடன் இயேசு நடந்து சென்றபோது, அச்சீடர்களின் அகக்கண்களை அவர் படிப்படியாகத் திறந்தார் என்பதை அறிவோம். இந்தப் பயணத்தை உருவகமாகக் கொண்டு நடைபெற்ற ஆயர்கள் மாமன்றம் நிறைவடையும் இஞ்ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை வழங்கும் நிகழ்வு, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

எம்மாவுஸ் பயணத்தில், பேசுதல், செவிமடுத்தல், காணுதல் என்ற மூன்று புலன் திறமைகளின் வழியே, சீடர்கள் இருவரும் உள்ளொளி பெற்றனர். இதே திறமைகளை, உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கொண்டிருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விழைந்தார். அக்டோபர் 3ம் தேதி, புதனன்று, இம்மாமன்றத்தின் துவக்கத் திருப்பலியில், திருத்தந்தை கூறியச் சொற்கள், மாமன்றப் பிரதிநிதிகளுக்கும், நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளன:
"நம்பிக்கை, நமக்குச் சவால் விடுக்கின்றது. 'எப்போதும் இவ்வாறுதான் செய்யப்பட்டது' என்று பரம்பரைப் பழக்கங்களைத் தாங்கிப்பிடிக்கும் மனநிலையைத் தகர்க்க சவால் விடுக்கின்றது. நம் இளையோரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, அவர்கள் வாழும் சூழல்களையும் கூர்ந்து பார்க்க, நம்பிக்கை, நம்மைத் தூண்டுகிறது."

துவக்கத் திருப்பலிக்குப் பின், அன்று பிற்பகல், மாமன்றத்தின் முதல் அமர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய துவக்க உரையில், துணிவுடன் பேசுதல், கவனமுடன் செவிமடுத்தல் என்ற இரு அம்சங்கள் மாமன்றப் பகிர்வுகளில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இளையோரின் கருத்துக்களுக்குச் செவிமடுப்பது, சவால் நிறைந்த பணி என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, "செவிமடுக்காத திருஅவை, புதியனவற்றைக் காணாமல், இறைவனின் ஆச்சரியங்களைக் காணாமல், தன்னையே மூடிக்கொள்ளும் திருஅவையாகத் தோன்றும். அத்தகையத் திருஅவை, இளையோரிடையே நம்பகத்தன்மையை இழந்துவிடும். இளையோர், திருஅவையை நாடிவருவதற்குப் பதில், விலகிச் செல்வர்" என்று கூறினார்.

திறந்த கண்ணோட்டம் கொண்ட திருஅவையே இளையோரைக் கவர்ந்திழுக்கும் என்பதை, மாமன்ற அமர்வுகளில் தாங்கள் கற்றுக்கொண்டதாக, ஒரு சில ஆயர்கள், தங்கள் பகிர்வுகளில் கூறியுள்ளனர். இத்தகைய கண்ணோட்டத்தை அளித்த மாமன்றம் முடிவுறும் இத்தருணத்தில், பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு, இயேசு, பார்வை தந்த புதுமை, இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளதை, இறைவன் நமக்கு வழங்கும் அருள்நிறை வாய்ப்பாக எண்ணிப்பார்க்கலாம். இப்புதுமையை, இரு கண்ணோட்டங்களில் சிந்தித்து பயன்பெற முயல்வோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது என்பவை, அவ்விரு கண்ணோட்டங்கள்.

இந்தப் புதுமை, இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவற்றில், நற்செய்தியாளர் மாற்கு மட்டும், பார்வையற்று, தர்மம் கேட்டு வாழ்ந்த அம்மனிதருக்கு, பெயர் தந்திருக்கிறார். திமேயுவின் மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள புதுமைகளில், குணமடைந்தவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர், பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.

பெயர் சொல்லி அழைப்பது... என்ற நம் முதல் எண்ணத்தில், இரு வேறு பக்கங்கள் உள்ளன. அவை, எதிரெதிர் துருவங்களாய் உள்ளன. ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து, பெயரோ, அடைமொழியோ சொல்லி அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர், அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம், பெயரோ, அடைமொழியோ சொல்லி அவரை இழிவுபடுத்தும், இருள் சூழ்ந்த பக்கம்.
ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவராக பணியாற்றுபவரை, பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது, கூடுதலான மரியாதை வெளிப்படும். இதேபோல், ஆசிரியர், பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை, teacher, professor, inspector என்ற அடைமொழிகளுடன் அழைக்கும்போது, சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும். மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும், தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட, மரியாதையான அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி, குருவே... இப்படி பல பட்டங்கள். பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.

இனி நாம் சிந்திக்க இருப்பது, பெயர் சொல்லி அழைப்பதன் இருளான பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவைச் சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர் ஆகியோரை, நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகளைப் பயன்படுத்தி அவர்களை அழைக்கும்போது, அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின் இயற் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. எனவே, அவர்கள் எல்லாருமே, "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற ஏக வசனங்களால் அழைக்கப்படுகின்றனர். இந்திய சமுதாயத்தை பீடித்துள்ள சாபமான சாதிகளின் அடிப்படையில், ஒரு சிலர், அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு, கேவலமாக அழைக்கப்படுகின்றனர். பெயர் சொல்லி அழைப்பதன் இருள் சூழ்ந்த பக்கங்கள் இவை. நம் அகக்கண்களைக் குருடாக்கும் பழக்கங்கள்.
நம் அகக்கண்கள் பார்வை இழந்திருந்தால், அதற்கு இறைவன் பார்வைத்திறன் தரவேண்டும் என்று மன்றாடுவோம். ஒருவரை, பெயர்சொல்லி அழைக்கும்போது, அழைப்பவரும், அழைக்கப்படுபவரும் மாண்பு பெறும் புதுமைகள் நடப்பதை, வாழ்வில் உணரமுயல்வோம்.

பார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை. உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை பெற்றிருந்தார்.

இயேசுவின் சீடர்களான யாக்கோபும், யோவானும், அவரது இருபுறங்களிலும் அரியணைகளில் அமர விரும்பியதை, சென்ற வார நற்செய்தியாகக் கேட்டோம். அதைத் தொடர்ந்து, பார்வையற்ற பர்த்திமேயுவின் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இவ்விரு நிகழ்வுகளையும், நற்செய்தியாளர் மாற்கு, ஒன்றன்பின் ஒன்றாக, உடனுக்குடன் இணைத்திருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.
சென்ற வாரம் நாம் வாசித்த நற்செய்தியில், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" (மாற்கு 10:36) என்று இயேசு, யாக்கோபு, யோவான் இருவரிடமும் கேட்டபோது, அவர்கள், இயேசுவின் இருபுறமும் அரியணைகளில் அமர்வதைக் குறித்துப் பேசினர். அதே கேள்வியை, இயேசு, இன்றைய நற்செய்தியில், பர்த்திமேயுவிடமும் கேட்கிறார். "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" (மாற்கு 10:51) என்று இயேசு கேட்டதும், அவர் பார்வை பெற விழைவதைக் கூறுகிறார்.
யாக்கோபும், யோவானும், கண்களில் தெளிவானப் பார்வைத்திறனைப் பெற்றிருந்தாலும், இயேசு யார் என்ற உண்மை நிலையைக் காண இயலாதவண்ணம், அரியணை ஆசை, அவர்களின் அகக்கண்களை குருடாக்கி இருந்தது. ஆனால், உடலளவில் பார்வைத்திறன் அற்றிருந்த பர்த்திமேயுவோ, இயேசுவை, அகக்கண்களால் "தாவீதின் மகன்" என்று உணர்ந்திருந்தார். விவிலியத்தில், இந்தப் பட்டத்தை, இயேசுவுக்கு முதன்முதலில் தந்தது, உடலளவில் கண் பார்வையற்று, அதேவைளை, உள்ளத்தளவில் பார்வை பெற்றிருந்த பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும் என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு.

கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."

அகக்கண் கொண்டு பார்க்கும் அற்புதத்தைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. மருத்துவமனை ஒன்றில், இருவர், ஒரே அறையில் தங்கி இருந்தனர். இருவரும் ஏறத்தாழ படுத்த படுக்கையாய் இருந்த நோயாளிகள். அவ்விருவரில், ஒருவருடைய படுக்கை, சன்னலுக்கருகில் இருந்தது. அவர், ஒவ்வொரு நாள் மதியமும், மிகவும் சிரமப்பட்டு, தன் படுக்கையிலேயே, ஒரு மணி நேரம், எழுந்து அமர்ந்திருப்பார். அந்த ஒரு மணி நேரமும், சன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும் பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள் என்று, அவரது வர்ணனை ஒரு மணி நேரம் நீடிக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, அந்த ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த அவர், அந்த ஒரு மணி நேரம், கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக, வெளி உலகைப் பார்த்தார்.
இது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, சன்னலருகே படுத்திருந்தவர் எழவில்லை. முந்தைய இரவு, தூக்கத்திலேயே, அமைதியாக, அவர் இறந்துபோனார். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு, ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே, அவர் தந்த வர்ணனை வழியே, தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம், இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று, இன்னும் அதிக வருத்தம்.
இரு நாட்கள் சென்றபின், அந்த சன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை மாற்றச் சொல்லி, நர்ஸிடம் வேண்டிக்கேட்டார். மாற்றப்பட்டார். மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்" என்று கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். சன்னல் வழியே வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர். பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை, ஒன்றும் இல்லை.
அவருடைய அதிர்ச்சியைக் கண்ட நர்ஸ், அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி, இந்தப் படுக்கையில் இருந்தவர், சன்னல் வழியே பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டபின், அந்த நர்ஸ் சொன்ன செய்தி, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர், அந்த வெற்றுச் சுவரையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது என்று, நர்ஸ் சொன்னது, அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. கண்பார்வை உள்ள அவர், ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும், ஓர் அழகான உலகைக் காண்பதற்கு, கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.

பார்க்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். சன்னலை வைத்து சொல்லப்படும் மற்றொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வந்தனர். அந்தப் பெண்மணி, அடுத்தநாள் காலையில், காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி சன்னல் வழியே அடுத்த வீட்டில் வேலை செய்யும் பெண், துணிகளைக் காய வைப்பதைப் பார்த்தார். "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க, அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு" என்று அப்பெண் தன் கணவனிடம் முறையிட்டார். இந்த முறையீடு, மூன்று நாட்கள் தொடர்ந்தன.
நான்காம் நாள் காலையில், வழக்கம் போல், சன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க, இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா இருக்கு" என்று வியந்து பாராட்டினார்.
கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒன்னும் குறை இல்ல. இன்னக்கி நம்ம வீட்டு சன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்" என்று சொன்னார்.

பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்... தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு அழைக்கவும், இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.

இறுதியாக, இன்று நிறைவுறும் ஆயர்கள் மாமன்றத்தின் பயனாக, இளையோர் கூடுதலான உந்து சக்தி பெற்று, இவ்வுலகையும், கத்தோலிக்கத் திருஅவையையும் வழிநடத்திச் செல்ல, இறைவன் அவர்களுக்கு துணை புரிய வேண்டுவோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் ஆறுதலான சொற்களை, இன்றைய இளையோரை நோக்கி அவர் கூறுவதாக கற்பனை செய்து, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
இறைவாக்கினர் எரேமியா 31:8-9
இதோ! மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன்.


23 October, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 7


Pope John Paul II with the youth

இமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்

1978ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, போலந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொய்டீவா (Karol Józef Wojtyła) அவர்கள் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர், 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, 2ம் ஜான்பால் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் 264வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார். 2ம் உலகப்போரால் அதிக அளவு சிதைந்திருந்த போலந்து நாட்டில் இளையோருடன் இணைந்து, இளம் அருள்பணியாளர் கரோல் அவர்கள், பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருந்தார்.
இளையோருடன் தான் கொண்டிருந்த ஈடுபாட்டைப் புதுப்பிக்க எண்ணிய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், தன் தலைமைப்பணியின் 7வது ஆண்டில், 1985ம் ஆண்டு, உலக இளையோர் நாள் என்ற புதிய முயற்சியை உரோம் நகரில் துவக்கினார். 1987ம் ஆண்டு, ஆர்ஜென்டீனா நாட்டின் தலை நகர் புவனஸ் அயிரஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வை, அவர் தலைமையேற்று நடத்திய வேளையில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
1995ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிவந்தனர். அன்றைய நிலையில், அந்த எண்ணிக்கை, ஓர் உலகச் சாதனையாகப் பதிவானது. அந்நிகழ்வில் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோரிடம் வழங்கிய அறிவுரையின் ஒரு சில வரிகள் இதோ:
"இன்றைய உலகின் கவலைகள் இளையோரை அதிகம் பாதிக்கின்றன. எனவே, உங்களைப்போன்ற இளையோர், நம்பிக்கையிழந்து, விரக்தியடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தகையைச் சூழலில், இவ்வுலகிற்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் பணியை, திருஅவை உங்களிடம் ஒப்படைக்கிறது. மீட்பு தரும் நற்செய்தியை, உலகெங்கும் பறைசாற்றச் செல்லுங்கள். அதை மகிழ்வுடன் செய்யுங்கள். விரக்தியில் விழுவதற்கு அடிக்கடி சோதிக்கப்படும் உலகிற்கு நம்பிக்கை ஊட்டுங்கள். விசுவாசத்தை இழப்பது ஒன்றே விதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமுதாயத்திற்கு, விசுவாசம் ஊட்டுங்கள். கட்டுக்கடங்காத சுயநலத்தைச் சொல்லித்தரும் இவ்வுலகிற்கு அன்பைச் சொல்லித்தாருங்கள்."
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த வேளையில், 9 நாடுகளில், இளையோர் நாள் நிகழ்வுகளை முன்னின்று நடத்தியுள்ளார். அவர், திருஅவையின் தலைமைப் பொறுப்பை, 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, ஏற்றதால், அந்நாளை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

Statue of the ‘Pieta’

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 7

இயேசு பெத்தானியாவுக்கு வந்துகொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட மார்த்தா, அவரைச் சந்திக்க விரைந்தார். இச்சந்திப்பை, நற்செய்தியாளர் யோவான், இவ்வாறு அறிமுகம் செய்துள்ளார்:
யோவான் 11:20-22
இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்" என்றார்.

இப்பகுதியில், "மார்த்தா இயேசுவை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்." என்ற இறைவாக்கியம், விவிலிய விரிவுரையாளர்களிடமிருந்து பல்வேறு கருத்துக்களை வெளிக்கொணரந்துள்ளது. "மரியா வீட்டில் இருந்துவிட்டார்" என்று தமிழில் கூறப்பட்டுள்ள வாக்கியம், ஆங்கில மொழிபெயர்ப்பில், "Mary sat still in the house", அதாவது, "மரியா வீட்டில் அசையாமல் உட்கார்ந்திருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. பெரும் துயரத்தில் ஒருவர் மூழ்கும்போது, செயலிழந்து, உறைந்து போவதை பல வழிகளில் நாம் உணர்ந்திருக்கிறோம்.

பெரும் இழப்புக்களைச் சந்திப்போர் செயலிழந்து, உட்கார்ந்துவிடுவதை, விவிலியத்தின் பல இடங்களில் நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, யோபு, தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து, இறுதியில் தன் உடல் நலனையும் இழந்தபோது, அவர் தரையில், 'சாம்பலில் உட்கார்ந்திருந்தார்' (யோபு 2:8) என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது மூன்று நண்பர்களின் வருகையைக் குறிப்பிடும் ஆசிரியர், அக்காட்சியை இவ்வாறு சித்திரிக்கிறார்:
யோபு 2:11-13
அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர்.... அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர். தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள். அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.

தன் சகோதரன் இலாசரின் மரணத்தால், அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்ந்திருந்த மரியா, வீட்டில் அமர்ந்திருந்தார் என்று நற்செய்தியாளர் யோவான் கூறும் இக்காட்சியைப் போலவே, இயேசுவின் மரணத்திற்குப்பின் நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மத்தேயு பின்வரும் வரிகளில் கூறியுள்ளார்:
மத்தேயு 27:59-61
(அரிமத்தியா ஊரைச் சேர்ந்த) யோசேப்பு (இயேசுவின்) உடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

இயேசுவின் மரணம், அடக்கம் ஆகியவை நிகழ்வதை, 'மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள் (மத்தேயு 27:55-56) என்று குறிப்பிடும் நற்செய்தியாளர் மத்தேயு, நான்கு இறைவாக்கியங்களுக்குப்பின், மீண்டும் பெண்களைக் குறித்துப் பேசும்போது, "மகதலா மரியாவை" பெயர் சொல்லிக் குறிப்பிடுகிறார். ஆனால், "யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவை" பெயர் சொல்லிக் குறிப்பிடாமல், "வேறொரு மரியா" என்று மட்டும் குறிப்பிடுகிறார். இந்த மாற்றத்தை, ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு, அந்த "வேறொரு மரியா" இலாசரின் சகோதரி மரியாவாக இருந்திருக்கக்கூடும் என்று கணித்துள்ளனர். தன் சகோதரன் இலாசரின் அடக்கத்திற்குப்பின் வீட்டில் அசையாமல் அமர்ந்திருந்த மரியா, இப்போது, இயேசுவின் அடக்கத்தைத் தொடர்ந்து, அக்கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்ததை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இயேசுவின் மரணம், அடக்கம் ஆகிய நிகழ்வுகளைச் சிந்திக்கும் வேளையில், கல்வாரிக் குன்றில், சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர் (யோவான் 19:25) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது. இயேசுவின் தாய் நின்றுகொண்டிருந்தார் என்று விவிலியத்தில் கூறப்பட்டாலும், சிலுவையடியில், இயேசுவின் இறந்த உடலைத் தாங்கி அமர்ந்திருந்த அன்னை மரியாவின் உருவமும், அதைச் சுற்றி, கத்தோலிக்க சமுதாயத்தில் வளர்ந்துள்ள பக்தி முயற்சிகளும், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

இறந்த மகனை மடியில் தாங்கி அன்னை மரியா அமர்ந்திருக்கும் காட்சிக்கு வரலாறு, விவிலியம் இரண்டிலும் ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனாலும், கல்வாரியில், அன்னை மரியா சிலுவையடியில் தன் மகனைத் தாங்கி அமர்ந்திருந்தார் என்பது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள ஓர் எண்ணம். இந்த எண்ணத்திற்கு அற்புத கலைவடிவம் தந்து, உலகப்புகழ் பெற்ற சிற்பக் கலைஞர் மிக்கேலாஞ்சலோ அவர்கள் உருவாக்கிய அன்னை மரியாவின் பியெத்தா (Pieta) திருஉருவம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கோடான கோடி மக்களின் உள்ளங்களில், கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தியை வளர்த்து வருகிறது.

இறந்து போன மகனை மடியில் கிடத்தி ஒரு தாயால் எப்படி இவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்க முடியும்? ஒரு வேளை, துன்பத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டதால், உணர்வுகள் அனைத்தையும் இழந்து, அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறாரோ என்று, இந்த அன்னையின் உருவைப் பார்க்கும்போது, நம் மனதில், கேள்விகள் எழுகின்றன.

அன்னை மரியா, தன் மகனை மடியில் தாங்கி அமர்ந்திருக்கும் இந்த நிகழ்வுக்கு, விவிலிய ஆதாரங்கள் அதிகம் இல்லை என்று, "ஆண்டவர் என் ஆயன்" என்ற நூலில் கூறும் யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், தொடர்ந்து, ஓர் அழகான, மாறுபட்ட விளக்கமும் தருகிறார். இறந்த மகனை மடியில் தாங்கி அமர்ந்திருப்பது அன்னை மரியா அல்ல, மாறாக, இறைவனே தாய்மை உருவில் அவ்வாறு அமர்ந்திருக்கிறார் என்று குஷ்னர் அவர்கள் கூறுகிறார். இது வித்தியாசமான, ஆழமான ஓர் எண்ணம். இறைவனை, தாயின் வடிவத்தில் காண்பது, இந்திய, ஆசிய, ஆன்மீகத்திற்குப் புதிதல்ல.

மிக்கேலாஞ்சலோ அவர்கள் வடித்த மரியாவின் உருவில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மரியாவின் இளமையான முகம். இயேசு உயிர் நீத்தபோது, அன்னை மரியாவின் வயது குறைந்தது, 50ஆக இருந்திருக்கும். ஆனால், “பியெத்தாவில் காணப்படும் பெண்ணின் முகம் 20 வயது பெண்ணுக்குரிய முகம். இது முதல் அம்சம்.
நன்கு வளர்ந்துள்ள ஓர் ஆண்மகனை, முழுவதுமாக மடியில் தாங்குவதென்பது, எந்தப் பெண்ணாலும் இயலாத ஒரு செயல். ஆனால், “பியெத்தாவில் வடிவமைக்கப்பட்டுள்ள பெண், அதையும் சாதித்திருக்கிறார். இதற்காக, அந்தப் பெண்ணின் உடையில் பெரிய பெரிய மடிப்புகளை உருவாக்கி, அந்த முழுச் சிலையையும் உறுதியாக ஒரு பிரமிடு போல இருக்கும்படி மிக்கேலாஞ்சலோ அவர்கள் செதுக்கியுள்ளார். இது, இரண்டாவது அம்சம்.

இந்த இரு அம்சங்களும், “பியெத்தாவில் காணப்படும் அந்தப் பெண்ணை இறைவனாக எண்ணிப் பார்ப்பதற்குக் கூடுதல் காரணங்கள். பியெத்தாவில் உள்ள அந்தப் பெண் மரியா என்றும், மரியா தன் கன்னிமையை என்றும் இழக்கவில்லை என்பதைக் காட்டவே மிக்கேலாஞ்சலோ அவரை இளமையோடு வடித்தார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில், அங்கு தாய்மை உருவில் இறைவன் அமர்ந்துள்ளார் என்று எண்ணிப் பார்த்தால், என்றும் இளமையோடு, காலம் என்ற நியதிக்கு உட்படாத இறைவனாக அவரைப் பார்க்கமுடியும். வயதே ஆகாமல், என்றும் இளமையாய் இருப்பவர் இறைவன்.
அதேவண்ணம், நன்கு வளர்ந்துள்ள தன் மகனை முழுவதும் மடியில் தாங்கும் அந்தத் தாயைப் பார்க்கும் போது, இயேசுவை மட்டுமல்ல, துன்புறும் உலகையே மடியில் ஏந்தும் வண்ணம் வலிமை பெற்றவர் தாயான இறைவன் என்பதையும் உணரலாம்.

தன் சகோதரர் இலாசர் இறந்ததைத் தொடர்ந்து, வீட்டில் சலனமற்று அமர்ந்திருக்கும் மரியா, இறந்த இயேசுவின் உடலைத் தாங்கி, அமைதியாக அமர்ந்திருக்கும் அன்னை மரியா ஆகியோர், மரணம் என்ற கொடுமையை பல்வேறு வழிகளில் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் அன்னையரை நம் கண்முன் கொணர்கின்றனர். அவர்கள் அனைவருக்கும், இறைவன், ஆழ்ந்த அமைதியை வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
மார்த்தா, மரியா ஆகிய இரு சகோதரிகள் இயேசுவைச் சந்தித்த நிகழ்வில், நாம் கற்றுக்கொள்ளக்கூடியப் பாடங்களை, அடுத்தத் தேடலில் தொடர்ந்து பயில்வோம்.