New Heaven and New Earth
5th Sunday of Easter
"New"
is one of the most popular magic wands used by the advertisers to market
products and services to customers. From food, clothes, soap and shampoo, to
cell phones, computers and cars, the promise of something ‘new’ easily captures
our attention.
The
Liturgical readings of this Sunday also talks about the concept of ‘new’. “Then I saw a new heaven and a new
earth”, says John in the Book of Revelation (Rev. 21:1) and “A new commandment I give to you”,
says Jesus in today’s Gospel (John 13:34) Juxtaposing the ‘newness’ promised by
the advertisers, with the ‘newness’ promised by the Bible can give us some
enlightening lessons for our life.
We are
aware that the ‘new’ promised by the advertisers becomes ‘stale’ in a matter of
days and, sometimes, even hours. Still, this magic wand holds our attention.
Moreover, it appeals to our inclination to get ahead of others in getting the
‘new’ one!
Due to the
constant procession of ‘new’ things, our houses are cluttered with quite a few
‘unnecessary’ things. We are also driven to follow the ‘throw-away’ culture, in
order to make room for ‘newer’ things. Thus, our houses tend to become museums;
our tendency to throw away, creates mountains of waste with scant regard for
our environment. Against such a situation, we are invited to reflect on the
concept of ‘a new heaven and a new
earth’.
The opening
lines of the second reading from the Book of Revelation, invite us to reflect
on our environment and our common home – the earth! Then I saw a new
heaven and a new earth; for the first heaven and the first earth had passed
away, and the sea was no more. (Rev. 21:1)
The phrase the
sea was no more catches our attention. As with many other ancient
cultures,
in ancient
Hebrew thought, the sea was a dangerous place. This idea is expressed in quite
a few passages in the Bible. The primeval waters of Genesis 1 are frightening
and chaotic. During "de-creation" (the Flood), the primeval waters
deluge the earth, although Noah's family is rescued. The Red
Sea too is the scene of divine rescue, although the waters flood
back once the Hebrews have crossed to dry land, killing the pursuing Egyptians.
In the Book
of Revelation, the sea is the abode of the beast, the opposing force against
God. “And I saw a beast rising out of the sea, with ten horns and seven
heads, with ten diadems upon its horns and a blasphemous name upon its heads.” (Rev.
13:1) Hence, when John writes that in the new earth, the sea was no more,
we can see that God has overcome the dark force of the sea to establish the new
creation.
Some
biblical commentators believe that the statement there was ‘no longer any sea’
is a figurative reference to there being no more divisions among humanity. In
our current world, the oceans provide natural barriers between nations.
According to this interpretation, John’s vision predicts that, in the new
earth, humanity will be not be separated by any means.
Another
sentence from the opening verse - the first heaven and the first earth
had passed away
- is a sad
reminder that our present earth and the atmosphere are slowly ‘passing away’.
Against this slow death process which is not getting enough attention of our
present generation of world leaders, young men and women have taken up the
fight for their future.
What a 15
year old high school student – Greta Thunberg – began with the sign-board Skolstrejk för
klimatet (school strike for the climate) in front of the Swedish
Parliament, now has gathered momentum throughout the world. On 15 March 2019,
an estimated 1.4 million students in 112 countries around the world joined her
call in striking and protesting. Another event is scheduled for 24 May 2019. (Source: Wikipedia)
UN General
Secretary António Guterres has endorsed the school strikes initiated by
Thunberg, admitting that "My generation has failed to respond properly to
the dramatic challenge of climate change. This is deeply felt by young people.
No wonder they are angry."
It is a
positive, hopeful sign that the youth have joined hands all over the world to
save the planet earth. At the same time, we also hope and pray that the youth
wake up to the destruction of our human family by extreme views. White
supremacy, Islamic State and Hindu fundamentalism are signs of our painful
divisions, often snaring our youth to follow the insane path of violence.
Targeting the youth, the hate-filled rhetoric flood our social media with fake
news.
Against
this hate-filled rhetoric, today’s readings give us alternatives. Today’s
readings tell us about love, hope and transformation that took place among the
first Christians when they were faced with tough situations. Both the passages
from the Acts of the Apostles as well as the Book of Revelation talk of hope.
This hope was born amidst the most trying period of Christian history. The Book
of Revelation was written by St John when he was
exiled by Roman emperor Domitian to the island of Patmos .
One can imagine Christians huddled together in some hidden cave, or underground
place reading the consoling and uplifting words of St John :
Revelation
21:3-5
I
heard a loud voice from the throne saying, “Behold, the dwelling of God is with
men. He will dwell with them, and they shall be his people, and God himself
will be with them; he will wipe away every tear from their eyes, and death
shall be no more, neither shall there be mourning nor crying nor pain any more,
for the former things have passed away.” And he who was seated on the throne
said, “Behold, I am making all things new.”
The hope
these words created in them, the hope born of love, had kept them alive amidst
all those tough years. The great Roman Empire ,
which relied on power, is no more, whereas Christianity, which relied only on
love and hope, has flourished for the past 20 centuries.
Early
Christians were identified by the sharing of their wealth, as suggested in the
Acts. (Cf. Acts 2: 44-45; 4: 32-35) This sharing was prompted by their sharing
of the Bread which was a lovely commemoration of what Jesus did during the Last
Supper. It is during this Supper, Jesus gave them the new commandment of love.
We recall this in today’s Gospel:
John 13:
34-35
Jesus
said to his disciples: “A new commandment I give to you, that you love one
another: just as I have loved you, you also are to love one another. By this
all people will know that you are my disciples, if you have love for one
another.”
What was
‘new’ about the ‘new commandment’? “Love one another just as I have loved you.”
It is not a love that expects to be loved back… It is not “Love me just as I
have loved you.” It is simply a love that is ready to give and give… not give
and take. Unfortunately, in some of our relationships, this give-and-take,
becomes take-and-take! Jesus, on the other hand was proposing the ‘new’
commandment to ‘give-and-give’. Jesus also made it clear that this
‘give-and-give’ love will be a sign by which everyone can recognise the true
disciple.
The
renowned French artist Paul Gustave Dore once lost his passport while traveling
in another country in Europe . When he came to
a border crossing, he explained his predicament to one of the guards. Giving
his name to the official, Dore hoped he would be recognized and allowed to
pass. The guard, however, said that many people attempted to cross the border
by claiming to be persons they were not. Dore insisted that he was the man he
claimed to be. “All right,” said the official, “we’ll give you a test, and if
you pass it we’ll allow you to go through.” Handing him a pencil and a sheet of
paper, he told the artist to sketch several peasants standing nearby. Dore did
it so quickly and skillfully that the guard was convinced he was indeed who he
claimed to be. Dore’s action, rather than his words, confirmed his identity. In
today’s Gospel, Jesus gives us the mark of Christian identity: “By this all
people will know that you are my disciples, if you have love for one another.”
(John 13:35).
I am sure
all of us have heard stories centred on the theme of love. In the lovely book, Chicken
Soup for the Soul, there's a story about a man who came out of his office
one Christmas morning and found a little boy from a nearby project looking with
great admiration at the man’s new vehicle. The little boy asked, "Does
this car belong to you?" And the man said, "Yes. In fact my brother
gave it to me for Christmas. I've just gotten it." With that, the little boy's eyes widened. He
said, "You mean to say that somebody gave it to you? And you didn't have
to pay anything for it?" And the
man said, "That's right. My brother
gave it to me as a gift." With that the little boy let out a long sigh and
said, "Boy, I would really like..."
And the man fully expected the boy to say, "I would like to have a
brother like that, who would give me such a beautiful car," but instead
the man was amazed when the little boy said, "Wow! I would like to be that
kind of brother. I wish I could give
that kind of car to my little brother."
The little
boy really understood what Jesus said to his disciples – “Love one another just
as I have loved you.” This little boy is a good example of the ‘newness’ of the
Love proposed by Jesus, namely, to give and give and not count the cost! (St
Ignatius of Loyola)
Greta
Thunberg - 'School strike for the climate'
உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு
"புதியது"
என்ற சொல், விளம்பரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும்
மந்திரச்சொல். உணவு, உடை, சோப்பு, ஷாம்பு என்று துவங்கி, கைப்பேசி, கணணி, கார், என, அனைத்தையும், இந்த மந்திரச்சொல் விற்பனை செய்கிறது. மீன்பிடிக்கும் தூண்டில்களில் குத்தப்பட்டுள்ள
புழுக்களைப்போல், ஊடகக் கடலில் ஒவ்வொருநாளும் தோன்றும் 'புதியது' என்ற சொல், கடைகளை நோக்கி நம்மை, படையெடுக்க வைக்கின்றது.
'புதியன'வற்றைத் தேடிச்செல்லும்
நமக்கு, இன்றைய ஞாயிறு வாசகங்கள், வேறு வகையான 'புதியன'வற்றைப் பற்றி பாடங்களைப் புகட்டவருகின்றன. "நான் புதியதொரு
விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன்" (திருவெளிப்பாடு 21:1)
என்று, 2வது வாசகத்தில் யோவானும், "புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்"
(யோவான்
13:34) என்று, நற்செய்தியில் இயேசுவும் கூறும் சொற்களை, நாம் இன்றைய வழிபாட்டில்
கேட்கிறோம். விளம்பர, வர்த்தக உலகம் வரையறுக்கும் 'புதியது' என்ன என்பதையும், இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வரையறுக்கும் 'புதியது' என்ன என்பதையும், இணைத்துச் சிந்திப்பது, வாழ்க்கைக்குத் தேவையான சில தெளிவுகளைத்
தரும்.
விளம்பரங்களில்
அறிமுகமாகும் 'புதியது', நாளையோ, அடுத்த வாரமோ, 'பழையது' ஆகிவிடும் என்பதை அறிவோம். இருப்பினும், அந்தச் சொல்லின் மந்திரச் சக்திக்கு நாம் பல நேரங்களில்
பலியாகிறோம் என்பதை மறுக்க இயலாது. மேலும், அறிமுகமான 'புதியதை', அடுத்தவர் பெறுவதற்கு முன்,
நாம் பெற்றுவிடவேண்டும்
என்ற போட்டியையும், இந்த மந்திரச்சொல் தூண்டிவிடுகிறது.
விளம்பரங்களின்
தூண்டுதல்களால் இன்று உலகில் நிகழ்ந்துள்ளது என்ன? நம் இல்லங்களில்,
பொருள்கள் குவிந்துவருகின்றன; தூக்கியெறியும் கலாச்சாரம் வளர்ந்துவருகிறது.
தேவைக்கதிகமாகக் குவித்துவைப்பதையும், பூமிக்கோளத்தைப்பற்றிய அக்கறை
ஏதுமின்றி, குப்பை மலைகளை உருவாக்குவதையும் வாடிக்கையாக்கிவிட்ட
இன்றையச் சூழலில், 2ம் வாசகத்தில் கூறப்பட்டுள்ள 'புதியதொரு விண்ணகத்தையும்,
மண்ணகத்தையும்' புரிந்துகொள்ள முயல்வோம். இந்த வாசகத்தின் பொருளைப் புரிந்துகொள்வதற்கு
முன், திருவெளிப்பாடு நூல் உருவான பின்னணியை முதலில்
எண்ணிப்பார்ப்போம்.
இயேசுவின்
சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்த
முதல் கிறிஸ்தவர்களும், துவக்கத்தில் சந்தித்தவை, வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை
வேட்டையாடியது. மிருகங்கள், கிறிஸ்தவர்களை கிழித்து உண்பதை, ஆயிரக்கணக்கான உரோமையர்கள்
கூடிவந்து இரசித்தனர். உரோமைய அரசர் தொமீசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது.
புனித யோவானை, பத்மு (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார், தொமீசியன்.
இக்கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை… அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.
அதிகாரத்தை
நம்பி வாழ்ந்த உரோமைய அரசு, இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம், இன்று, உலகெங்கும்
பரவியுள்ளது. அன்பும், நம்பிக்கையும் நிறைந்த மீட்புச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று, நம்மிடையே, புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளது.
புனித யோவான், பத்மோஸ் தீவில் வாழ்ந்தபோது, கிறிஸ்தவர்களுக்கு, ஊக்கமும், நம்பிக்கையும்,
அளிக்கும் வகையில், திருவெளிப்பாடு நூலை எழுதினார்.
யோவான்
எழுதிய திருவெளிப்பாடு நூலிலிருந்தும், நற்செய்தியிலிருந்தும் நாம் இன்று கேட்கும்
சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்று
நாம் கேட்கும் 2ம் வாசகத்தின் அறிமுக வரிகள்,
இன்றைய. உலகை
அச்சுறுத்திவரும் சுற்றுச்சூழல் சீரழிவைக் குறித்து சில எண்ணங்களை நமக்குள் தூண்டுகின்றன:
திருவெளிப்பாடு
21: 1
பின்பு
நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும்
மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமல் போயிற்று.
இந்த
அறிமுக வரிகளில், "கடலும் இல்லாமல் போயிற்று" என்று கூறியிருப்பது, நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது. பல பழங்கால மக்களினங்கள் நடுவே,
கடலைப் பற்றிய அச்சங்கள் நிலவியதைப்போலவே, யூதர்கள் நடுவிலும், பொதுவாக, கடலைக் குறித்து எதிர்மறை எண்ணங்கள்
பரவியிருந்தன. யோவான் எழுதிய திருவெளிப்பாட்டு நூலில், கடவுளுக்கு எதிரான விலங்கு வாழ்வது கடலில் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக்
கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப்
பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன." (தி.வெ. 13:1) எனவே, "கடலும் இல்லாமல் போயிற்று" என்று அவர் கூறியிருப்பது,
தீய சக்தியின் மீது
இறைவன் கொள்ளும் வெற்றியைக் குறிப்பிடுகிறது.
இன்னும்
சில விவிலிய விரிவுரையாளர்கள், 'கடல் இல்லாத புதிய
மண்ணகத்திற்கு' மற்றுமோர் அழகான விளக்கம் அளித்துள்ளனர்.
நாம் வாழும் உலகில், கண்டங்களைப் பிரிப்பது, கடல். அந்தக் கடல் இல்லாமல் போனால், கண்டங்கள் அனைத்தும் இணைந்து, மண்ணகமெல்லாம்,
ஒரே நிலப்பரப்பாக, ஒரே மக்களாக மாறும் புதியதொரு விண்ணகத்தையும்
புதியதொரு மண்ணகத்தையும் யோவான் கற்பனை செய்துள்ளார் என்று, விரிவுரையாளர்கள்
விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு, உருவாகும் புதிய மண்ணகத்திலும், விண்ணகத்திலும், நிகழும் அற்புதங்களை யோவான் குறிப்பிட்டுள்ளார்.
திருவெளிப்பாடு
21: 3-4
இதோ!
கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள்
அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர்
அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது.
இன்றைய
2ம் வாசகத்தின் அறிமுக வரிகளில், முன்பு இருந்த (அதாவது, நாம் இன்று வாழும்) விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன என்று
யோவான் கூறும் சொற்கள், இன்றைய உலகம், சிறிது, சிறிதாக, மறைந்து, அழிந்துவரும்
அவலத்தை நினைவுறுத்துகின்றன. இந்த அழிவைத் தடுத்து நிறுத்த, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
பயிலும் இளையோர் முன்வந்துள்ளனர்.
2018ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' (Skolstrejk för
klimatet - 'School strike for the climate')
என்ற சொற்கள் எழுதப்பட்ட
அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார்.
"எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர்.
எனவே, எங்கள் எதிர்காலத்திற்காகப் போராட வந்துள்ளேன்" என்று, இளம்பெண் துன்பர்க் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
இவரைத்
தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை
மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “When adults act like children, children must take
action” அதாவது, “வயதில் வளர்ந்தவர்கள் குழந்தைகளைப்போல் செயல்படும்போது,
குழந்தைகள், செயல்களில் ஈடுபடவேண்டும்” என்ற அறிவிப்புடன், போராட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
ஏப்ரல்
17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய
புதன் பொது மறைக்கல்வி உரையில் கலந்துகொள்ள,
புனித பேதுரு வளாகத்திற்கு
வந்திருந்த இளம்பெண் துன்பர்க் அவர்கள், மறைக்கல்வி உரைக்குப்பின், திருத்தந்தையைச்
சந்தித்தபோது, "திருத்தந்தையே, சுற்றுச்சூழல் மீது நீங்கள் காட்டிவரும் அக்கறை, எங்களுக்கு நம்பிக்கை தருகிறது" என்று கூறினார். அவரிடம் திருத்தந்தை, "தொடர்ந்து போராடுங்கள்" என்று கூறினார். பூமிக்கோளத்தின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீரழிவு, ஆகியவற்றைக் குறித்து அக்கறையேதும் இல்லாமல்,
நடந்துகொள்ளும் அரசியல் தலைவர்களுக்கு சவால்விடும் இளையோர், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவார்கள் என்று நம்புவோம்.
இளம்பெண்
கிரேட்டா அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, இவ்வாண்டு, மார்ச் 15ம் தேதி, 112 நாடுகளில் 14 இலட்சம் மாணவ, மாணவியர் வகுப்புக்களைப் புறக்கணித்து, ஊர்வலங்கள் மேற்கொண்டனர். அடுத்த நிகழ்வு, இம்மாதம் 24ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கோளத்தைக் காக்கும் உன்னதக் குறிக்கோள்,
உலகின் பல நாடுகளில்
வாழும் இளையோரை இணைத்திருப்பது, நமக்கு நம்பிக்கை தருகிறது. அதே
வேளையில், மனித சமுதாயத்தை பிரித்து, காயப்படுத்தும் பிரச்சனைகளையும் இதே ஒற்றுமையுடன்
அவர்கள் தீர்க்கவேண்டும் என்பது, அவர்களுக்கு முன் இருக்கும் ஒரு
சவால். உலகின் பல நாடுகளில் இன்று, பல்வேறு வடிவங்களில் அடிப்படைவாதம் வளர்ந்துவருகின்றது. உலகெங்கும்
பரவியுள்ள புலம்பெயர்ந்தோரைத் தடுத்து நிறுத்த,
வெள்ளையின மேன்மையை (White supremacy) வலியுறுத்தும் அடிப்படைவாதக் குழுக்கள்,
ஐரோப்பாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் வளர்ந்துவருகின்றன. ‘இஸ்லாமிய அரசு’, மற்றும், இந்து
அடிப்படைவாதக் குழுக்களைச் சார்ந்தோர், மதத்தை பயன்படுத்தி, மதியற்ற வன்முறையை வளர்க்கின்றனர். ஆபத்தான இச்சூழலில், பூமிக்கோளத்தைக் காக்க இணைந்திருக்கும் இளையோர், மனிதகுடும்பத்தையும் காக்க இணைந்துவரவேண்டும், என்று மன்றாடுவோம்.
மனித
குடும்பத்தைக் காக்கக்கூடிய ஆணிவேர், பிறரன்பு. கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேரும்
அதுவே. அன்பைத் தவிர, வேறு எதுவும், முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம்
பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின்
அடையாளம் அமைந்திருந்தது என்பதை, திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது (காண்க.
திருத்தூதர் பணிகள் 4:32). கிறிஸ்தவர்களை ஒன்றணைத்த அப்பம் பகிர்தல் என்ற அற்புத நிகழ்வை,
முதன் முதலாக, கிறிஸ்து, இறுதி இரவுணவில் உருவாக்கியபோது, தன் சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற முக்கியமான அன்புக் கட்டளையை
இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:
யோவான்
நற்செய்தி : 13: 34-35
இயேசு
தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை
எல்லாரும் அறிந்து கொள்வர்”
என்றார்.
தான்
ஒரு 'புதிய' ஒரு கட்டளையைத்
தருவதாக, இயேசு, தன் சீடர்களிடம் கூறினார். அவர்
கூறியதில் இருந்த 'புதியது' எது? நாம் செலுத்தும் அன்பு, மீண்டும் நமக்கு செலுத்தப்படும் என்று
எதிர்பார்க்காமல் பிறர் மீது நாம் காட்டும் அன்பே உயர்வானது. இதைத்தான் இயேசு, 'புதிய' கட்டளையாகத் தந்தார்: “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும், என்னிடம் அன்பு
செலுத்துங்கள்” என்று சொல்வதற்குப் பதில்,
“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும், ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள்.” என்ற 'புதிய' கட்டளை வழியே உன்னதமான ஒரு சவாலை
நமக்கு விட்டுச்சென்றார். இத்தகைய அன்பே, சீடர்களின் அடையாளம் என்ற 'புதிய' இலக்கணத்தையும் வகுத்தார் இயேசு.
19ம்
நூற்றாண்டில் (1832 – 1883) வாழ்ந்த Paul Gustave Dore
என்ற பிரெஞ்சு ஓவியர், ஐரோப்பாவின் வேறொரு நாட்டில் பயணம் செய்த வேளையில், அவரது கடவுச் சீட்டு (Passport) காணாமல் போனது. அவர் ஐரோப்பாவின் ஒரு நாட்டிலிருந்து, மற்றொரு நாட்டிற்குள் நுழைய விழைந்தபோது, எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம், தான் கடவுச்சீட்டை தொலைத்துவிட்டதாகக்
கூறினார். அங்கிருந்த அதிகாரிகள், அவரை நம்பவோ, நாட்டுக்குள் அனுமதிக்கவோ மறுத்துவிட்டனர். அவர்களில் ஒருவர், "நீங்கள் உண்மையிலேயே புகழ்பெற்ற ஓவியர் Doreதான் என்றால், அங்கே நிற்கும் தொழிலாளர்களை வரைந்து
காட்டுங்கள்" என்று கூறி, அருகே நின்ற ஒரு குழுவை சுட்டிக்காட்டினார்.
Dore
அவர்கள் உடனே ஒரு
காகிதத்தை எடுத்து, மிக விரைவாக, மிக அழகாக, அந்தக் காட்சியை வரைந்து முடித்தார். அதைக் கண்ட அதிகாரிகள், அவர் உண்மையிலேயே Dore என்று நம்புவதாகக் கூறி,
அவரை தங்கள் நாட்டுக்குள்
அனுமதித்தனர்.
Dore அவர்கள், தான் யார் என்ற அடையாளத்தை, சொற்களை விட, செயல் வழியே நிலைநாட்டினார். கிறிஸ்துவின் சீடர்கள் என்ற
அடையாளமும், அவர்கள் செலுத்தும் அன்புச்செயல்களில் வெளிப்படவேண்டும் என்று, இயேசு,
இன்றைய நற்செய்தி வழியே நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
இயேசு
தம் சீடர்களிடம், “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும்
அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார்.
பெறுவதைவிட,
தருவதே, அன்பின் இலக்கணம் என்பதை வலியுறுத்தும், ஆயிரமாயிரம் கதைகளில், என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...
உணவகத்திற்கு
முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன்
பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத்
தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர்
உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே
எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று
ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!"
என, சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப்
போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும்
என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சொன்னான்.
அன்பைப்
பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அதுவும், விலையுயர்ந்த ஓர் அன்பளிப்பாக அளிப்பது, இயேசுவின்
சீடர்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்டும். இத்தகைய அன்பு வளரும் இடங்களில், உண்மையான
கிறிஸ்தவமும், நம்பிக்கையும், செழித்து வளரும். புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு
மண்ணகத்தையும், புதியதொரு மனிதக் குடும்பத்தையும், அன்பின் வழியே உருவாக்கும்
வரத்தை இறைவன் நம் அனைவருக்கும் வழங்குவாராக!
Fridays for
Future demos in Savona and Genova , Italy
No comments:
Post a Comment