29 June, 2019

Leadership and Discipleship of Love அன்பின் தலைமைத்துவமும், சீடத்துவமும்


The Son of Man has no place to lie down

13th Sunday in Ordinary Time

Of all the places in the world, it was “in Antioch the disciples were for the first time called Christians.” (Acts 11:26). The people of Antioch found something special in the disciples to give them this wonderful title that has become a sublime identity for the past 20 centuries. The Bishop of Antioch, St Ignatius, must have been a great example of this Christian identity. St Ignatius was condemned to death by Emperor Trajan and was taken to Rome for his martyrdom. On his way to Rome, St Ignatius wrote seven wonderful letters to various Christian communities. In the letter addressed to the Christian community in Rome, Ignatius refers to them as the church ‘which presides in charity’.

At the time of St Ignatius of Antioch, Rome was identified more as the centre of politics, commerce and culture. But, St Ignatius wished that the Church in Rome was identified more as a ‘church presiding in charity’. Jesus would not have asked for more! This was precisely what Jesus wanted from his disciples: “By this all men will know that you are my disciples, if you have love for one another.” (John 13:35)

This criterion of love as THE Christian identity was preserved and passed on from generation to generation for the past 20 centuries. On June 29, Saturday, we celebrated the Feast of Sts Peter and Paul, the two pillars of the Christian community, who took enormous effort to cultivate the civilization of love among Christians. Their leadership was steeped in love. Following the feast of these two leaders, comes this Sunday with the theme of leadership and discipleship.
In his letter to Galatians, (given as the II Reading for this Sunday - Galatians 5:1,13-18), St Paul makes a passionate appeal to the churches in Galatia: Through love be servants of one another. For the whole law is fulfilled in one word, ‘You shall love your neighbour as yourself.’ But if you bite and devour one another take heed that you are not consumed by one another. (Gal. 5:13-15)

The Christians being bitten and devoured by the hungry beasts in Roman Colosseum was the imagery very familiar to Paul and his contemporaries. Paul uses this imagery to warn his community. ‘Biting and devouring’ has, unfortunately, become an accepted norm of behaviour in almost all the fields today - be it politics, trade, media, education or healthcare! Unfortunately, biting, especially back-biting has seeped into even the holy realms of religion. In such a situation, it would be helpful if each of us can take an examen of consciousness into how much we indulge in this ‘biting and devouring’!

The Gospel today (Luke 9: 51-62) talks about Jesus, the unique Leader and his followers. In this passage four incidents are mentioned. All the four can teach us lessons for life.

The first one is about the disciples – James and John. Jesus, on his way to Jerusalem, was not received well in a town. James and John were seething with rage. They wished to bring down fire from heaven to destroy the town. For James and John, the ‘sons of thunder’, hurling thunder and lightning, fire and brimstone from heaven, must have been child’s play! Moreover, they were the ones who wanted to be seated at the right and left of the Lord. (Mt. 20:20-21)
I am just wondering what our political leaders would have done in a situation like this. Here are two very energetic, enthusiastic followers who are willing to go the full distance – destroying a town for the ‘crime’ of not giving due respect to their leader. Our leaders would have been thrilled to have such sycophants and, in all probability, they would be given some important portfolios in the ministerial cabinet. Thank God, Jesus is not like them. He turned to his disciples and rebuked them. He was probably very angry with them, since they wanted to use heavenly powers for destruction.

How easy it is to use power for destruction! It is painful that our political leaders seem to judge loyalty in terms of how much destruction can be wrought by the followers. They don’t stop there… When natural calamities occur, they capitalise on the destruction wrought by nature in order to gain political mileage. Be it floods, or drought, or lack of drinking water, our political leaders have mastered the art of playing politics and gaining political mileage from every tragedy. They do this with absolutely no shame or qualm of conscience.

The second incident is about a person who approached Jesus and said: “I will follow you wherever you go.” (Lk 9:57). Jesus must have turned around and looked at this person with deep love and concern. The word ‘wherever’ used by this person must have grabbed the attention of Jesus. Where was Jesus going? To Jerusalem. As the opening lines of today’s Gospel says, he set his face to go to Jerusalem (Lk. 9:51), knowing what was awaiting him there. He was going for a head-on collision with the political and religious authorities. At that moment, should he encourage another disciple to follow him? That was the concern of Jesus.
Inadvertently, our mind goes to the present day political leaders who would be more concerned in taking along more followers, especially during a clash. In the ego clashes that occur between big leaders, the followers get hurt and killed. Rarely do leaders get hurt or killed! As citizens of the world, we feel ashamed of having such pathetic specimens of leadership. We are more ashamed of the followers who have such blind loyalty to these leaders.
Jesus tries to tell this person what would be awaiting him if he were to follow him ‘wherever he goes’. There is really nowhere… “Foxes have holes, and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.” (Luke 9:58) This statement from Jesus is more of an invitation to share his vagabond life. How many of us really believe that all human beings are only PILGRIMS on earth?

The third and fourth incidents are similar. Two persons want to fulfil their family duties BEFORE following Jesus. At first glance, the response of Jesus seems rather rude. “Don’t bother about burying your parents or saying goodbye to the family members… Just plunge into action. Follow me HERE and NOW. No delays.” The reference of Jesus to the man with a plough, turns our attention to the first reading today. The incident narrated in this passage is quite dramatic:
I Kings 19: 19-21
So Eli′jah departed from there, and found Eli′sha the son of Shaphat, who was plowing… Eli′jah passed by him and cast his mantle upon him. And he left the oxen, and ran after Eli′jah, and said, “Let me kiss my father and my mother, and then I will follow you.” And he said to him, “Go back again; for what have I done to you?” And he returned from following him, and took the yoke of oxen, and slew them, and boiled their flesh with the yokes of the oxen, and gave it to the people, and they ate. Then he arose and went after Eli′jah, and ministered to him.

From this passage it is not clear whether he was allowed to say goodbye to his parents. But, it is quite clear that he said a definitive goodbye to his earlier life. He slaughtered his oxen, burnt his ploughing equipment. The courage and commitment of Eli′sha must have inspired Jesus to challenge one of followers with the words: “No one who puts his hand to the plow and looks back is fit for the kingdom of God.” (Lk. 9:62)

Following Jesus, the real leader, requires a HERE-and-NOW decision. If not, we may be submerged in the flood of cares and concerns of this world. We may also begin to drift along with the flood, namely, going with the crowd! Pope Francis, in one of his Angelus messages made this appeal specially to the youth present in St Peter’s Basilica:
Dear brothers and sisters, remember this well: Do not be afraid to go against the current! Be courageous! And like this, just as we do not want to eat food that has gone bad, we will not carry with us rotten values, that ruin life and take away our hope. Forward!

We  pray that all of us are able to identify the stale food of rotten values served by false leaders and follow our unique Master HERE and NOW! “If today you hear his voice, harden not your hearts…” (Ps.95: 7-8)

Who Puts His Hand to the Plow?

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு

இயேசுவின் சீடர்களுக்கு, 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயரை முதன்முதலில் வழங்கியப் பெருமை, அந்தியோக்கியா நகரைச் சேரும் (திருத்தூதர் பணிகள் 11:26). அந்நகரின் ஆயராகப் பணியாற்றிய புனித இக்னேசியஸ் (St Ignatius of Antioch), உரோமைய அரசன் டிராஜனால் (Trajan) கைது செய்யப்பட்டு, உரோம் நகரில் தன் மறைசாட்சிய மரணத்தைச் சந்திக்கச் சென்றார். அவர் சென்ற வழியில், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அற்புதமான மடல்களை எழுதி அனுப்பினார். இறுதியாக, உரோம் நகரில் இருந்த கிறிஸ்தவக் குழுமத்திற்கு, புனித இக்னேசியஸ் எழுதிய மடலில், "உரோமையத் திருஅவை, பிறரன்பால் தலைமை வகிக்கிறது" என்று கூறினார்.
அன்றைய காலக்கட்டத்தில், உரோம் நகரம், அரசியல், வணிகம், கலாச்சாரம், கலை என்ற பல்வேறு துறைகளுக்கு தலைமைத்துவம் பெற்ற நகரம் என்று கருதப்பட்டது. அந்நகரில் வாழ்ந்த கிறிஸ்தவக் குழுமம், இத்தகையத் துறைகளில் தலைமைத்துவம் பெறுவதைத் துறந்து, பிறரன்பில் தலைமைத்துவம் பெறவேண்டும் என்பதை, புனித இக்னேசியஸ் தன் மடல் வழியே வலியுறுத்தினார். அரசியல், வணிகம், கலாச்சாரம் என்ற பல துறைகளில் தன் தலைமைத்துவத்தை நிலைநாட்டிய உரோமையப் பேரரசு வீழ்ந்துவிட்டது. ஆனால், அன்பை, தலைமைத்துவமாகக் கொண்டாடிய கிறிஸ்தவம், இன்றளவும் வாழ்ந்து வருகிறது.

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவான் 13:35) என்று, இறுதி இரவுணவில் இயேசு கூறிய பிரியாவிடைச் சொற்களைப் பின்பற்றி வாழ்ந்த சீடர்கள், அன்பு மட்டுமே கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தவேண்டும்; அன்பு மட்டுமே, கிறிஸ்தவக் குழுமங்களில் தலைமைத் தாங்கவேண்டும் என்ற பாரம்பரியத்தை, கிறிஸ்தவ வரலாற்றில் நிலைநாட்டினர். இந்த அன்பு பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த புனித பேதுரு, புனித பவுல் என்ற இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவை, ஜூன் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.
இப்பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இஞ்ஞாயிறன்று, வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தலைமைத்துவம், தலைவர், தொண்டர், தலைவரைப் பின்பற்றுதல் என்ற கருத்துக்களைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன. கிறிஸ்துவின் தொண்டர்களிடையே அன்புக்கு முதலிடம் வழங்கப்படவேண்டும் என்பதை, புனித பவுல் இன்றைய 2ம் வாசகத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்:
கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5: 13-15
சகோதரர், சகோதரிகளே, ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

கொலோசெயம் போன்ற உரோமைய அரங்குகளில், கிறிஸ்தவர்களை, விலங்குகள் கடித்து விழுங்குவதை, தன் கண்களால் கண்ட புனித பவுல், அதே உருவகத்தை பயன்படுத்தி, கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குதல்" என்று புனித பவுல் பயன்படுத்தியுள்ள உருவகம், இன்றைய அரசியல், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம்... என்ற பல்வேறு துறைகளில், சர்வ சாதாரணமாகப் பின்பற்றப்படும் வெறியாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிலவேளைகளில், மதம் சார்ந்த துறைகளிலும், பிறரைக் கடித்து விழுங்கும் போக்கு பரவி வருவது வேதனை தரும் உண்மை. இத்தகைய வெறி, நம் வாழ்வை, எவ்வகையில், ஆட்டிப்படைக்கிறது என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது, நமக்கு உதவியாக இருக்கும்.

இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனின் உன்னதப் பண்புகளை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது. அத்துடன், அவரைத் தொடரும் சீடர்களும், தொடர விழையும் ஏனைய இளையோரும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளைக் குறித்து சவால்களையும் நம்முன் வைக்கின்றது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9:54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். இவ்விருவரும் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள் என்பதும், நம் நினைவுக்கு வருகிறது. (மத்தேயு 20:20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் தொண்டர்களின் ஆவேசத்தைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய பதவிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பார். இயேசு, நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர், உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வேறுபட்டவர் ஆயிற்றே! எனவே, ஆவேசப்பட்ட சீடர்களுக்கு, அவர், வேறுபட்ட பதிலைத் தந்தார்.

இயேசு அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார் (லூக்கா 9:55) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் அவ்வாறு கடிந்துகொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர், அச்சீடர்கள். கடவுளின் சக்திகளை, தவறான நோக்கங்களுக்கு, அதுவும், அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அச்சீடர்களின் சுயநலத்தை இயேசு  கடிந்துகொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றை, அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். தன்னலமிக்க இத்தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி, வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

தாங்கள் அழிவை உருவாக்குவது போதாதென்று, பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும், அழிவையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்றிக்கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். இயற்கைப் பேரிடர்களான வெள்ளமாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும், தண்ணீரின்றி மக்கள் தவித்தாலும், அவற்றை மூலதனமாக்கி, அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் வியாபாரங்கள், நம் மனங்களை இரணமாக்குகின்றன. இயற்கை பேரிடர் உட்பட, அனைத்தையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்ற விரும்பும் இந்த அரசியல் தலைவர்களின் உள்ளங்களில், அடிப்படை மனித உணர்வுகளை, இறைவன் விதைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வு, இயேசுவைத் தொடர விழையும் ஓர் இளைஞனைப் பற்றியது. "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" (லூக்கா 9:57) என்று சொல்லும் அவ்விளைஞனை இயேசு ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான், அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும், இயேசு உணர்ந்திருந்தார். இந்நேரத்தில், இந்த மோதலில், ஒரு தொண்டரையும் ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.
மீண்டும், இன்றையத் தலைவர்கள், நம் நினைவுக்கு வருகின்றனர். போராட்டங்களை முன்னின்று நடத்தி, அடிபட்ட தலைவர்கள், ஆயிரத்தில் ஒருவராக, இல்லை, இல்லை... இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பர். பொதுவாக, போராட்டம், எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்வது, நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் அல்ல.

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை என்றார். (லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாமல், நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் ஓரளவு பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு அந்த இளைஞனுக்குத் தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய ஓர் உன்னத மனிதர் நினைவுக்கு வருகிறார். 1998ம் ஆண்டு முதல், 2018ம் ஆண்டு முடிய திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர் இவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சொத்தை குவித்திருக்கும் தலைவர்களை நமக்குத் தெரியும்.

திருவாளர் மானிக் ஷொர்கார் அவர்கள் பணியாற்றிய அதே இந்தியாவில், மக்களுக்குப் பணியாற்றுவதாகக் கூறும் பல்வேறு தலைவர்கள் உடுத்தும் உடை, பல இலட்சம் ரூபாய் என்றும், இவர்கள் ஒரு நாளில் செலவழிக்கும் தொகை, பல கோடி ரூபாய் என்றும் அறியும்போது, நம் உள்ளங்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றன. உணவு, உடை, உறைவிடம் என்று பல வழிகளிலும் பாதுகாப்பை இழந்து தவிக்கும் கோடான கோடி வறியோர் வாழும் இந்தியாவில், நம் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, ஒவ்வொரு நாளும், பல்லாயிரம் கோடி ரூபாய். இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், இத்தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையான பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனரா என்று கேள்வி எழுகின்றது!

இன்றைய நற்செய்தியில் நாம் காணும், மூன்றாவது, நான்காவது நிகழ்வுகளில், இரு இளையோர், தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் கூறும் பதில்களை, மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே" என்று சொல்கிறார்.

திரும்பிப் பார்க்காமல், தனக்கு வந்த அழைப்பை ஏற்ற ஓர் இளைஞனைப்பற்றி நமக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன், தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த வேளையில், இறைவாக்கினர் எலியா அங்கு வந்து, அவரை, இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல், அவரது முழு அர்ப்பணத்தைக் காட்டுகிறது.
அரசர்கள் முதல் நூல் 19: 21
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல (லூக்கா 9:62) என்ற சவாலை தன் சீடர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம், இந்த நல்லெண்ணத்தை அடித்துச் செல்ல வாய்ப்புண்டு.

நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, அவ்வப்போது, எதிர் நீச்சலும் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். நல்லது செய்யும் வேளையில், நீங்கள் சந்திக்கும் ஏளனங்கள், மற்றும் எதிர்ப்பு அலைகளில், எதிர் நீச்சல் போட துணிவு கொள்ளுங்கள்.
ஒருமுறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில், பல்லாயிரம் இளையோரிடம் சிறப்பான ஓர் அழைப்பை விடுத்தார். திருத்தந்தை இளையோருக்கு வழங்கிய இந்த அழைப்புடன், இன்றைய ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம்:
"நான் சொல்வதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமெனச் செல்லும் உலக போக்கிற்கு எதிராக, எதிர் நீச்சல் போட தயங்கவேண்டாம். துணிவு கொள்ளுங்கள்... கெட்டுப்போன உணவை நாம் உண்பது கிடையாது. அதேபோல், கெட்டுப்போன விழுமியங்களை மனதில் சுமந்து வாழவேண்டாம். முன்னேறுங்கள்!"
தவறான கருத்தியல்கள் என்ற கெட்டுப்போன உணவைப் பரிமாறும் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகவும், உண்மையான, உன்னதத் தலைவர்களைப் பின்பற்றவும், இறைவன் நமக்குத் தெளிவைத் தருவாராக! அன்பை தலைமைத்துவமாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாக வாழ்வோமாக!

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.


No comments:

Post a Comment