07 July, 2019

Travelling light… Giving blessings குறைந்த சுமை, நிறைந்த ஆசீர்...


Lamb among wolves

14th Sunday in Ordinary Time

We begin this Sunday’s reflection with a story about a young professor who sat at his desk and was browsing through that day’s mail and papers on his desk, discarding most to the wastebasket. He had earned degrees in Theology and Philosophy while at the same time serving as a curate for a small congregation. He had just published a book titled: The Quest of the Historical Jesus, in 1905 which was well received and made him more famous. He also achieved renown as an authority on the music of J.S. Bach. An organist of international repute, he produced a great edition of Bach’s works and wrote a six-hundred-page study of the composer.
As he was shuffling through the mail, he noticed a magazine, which was not even addressed to him but had been delivered to his office by mistake. His eyes fell upon an article titled “The Needs of the Congo Mission.” Casually he began to read when he was suddenly consumed by these words: "The need is great here. We have no one to work the northern province of Gabon in the central Congo. And it is my prayer as I write this article that God will lay His hand on one - one on whom, already, the Master's eyes have been cast - that he or she shall be called to this place to help us."
The young professor - Albert Schweitzer - closed the magazine and wrote in his diary: "My search is over." He decided to leave behind all his accomplishments and answer that call. His friends and colleagues thought he was mad.  But his mind was made up.  He devoted to the study of medicine for the next 7 years; earned a medical degree with a specialty in tropical diseases and presented himself to the Paris Missionary Society, which sent him with his wife to the area of Africa now called Gabon.  Within months he had designed and built an African-village-style hospital. He spent the rest of his life… 60 years, helping the poor and the sick in Africa. Dr Albert followed strictly the guidelines for the preaching and healing mission Jesus gave to the seventy-two disciples, as described in today’s Gospel, (Luke 10: 1-12, 17-20) and he became one of the great Christian missionaries of the twentieth century.

Last week’s Gospel talked about the criteria in following Jesus. This week’s Gospel talks about the criteria of a true labourer of God’s Kingdom. Here is the first part of today’s Gospel passage:
Luke 10: 1-5
After this the Lord appointed seventy-two others and sent them two by two ahead of him to every town and place where he was about to go. He told them, “The harvest is plentiful, but the workers are few. Ask the Lord of the harvest, therefore, to send out workers into his harvest field. Go! I am sending you out like lambs among wolves. Do not take a purse or bag or sandals; and do not greet anyone on the road. When you enter a house, first say, 'Peace to this house.'…”

“The harvest is plentiful, but the workers are few. Ask the Lord of the harvest, therefore, to send out workers into his harvest field” is a stock quotation used in praying for vocations. Jesus surely asks us to pray for vocations; but not for ‘vocations’ in the narrow sense of priestly or religious vocations. Jesus wants to get as many persons as possible to sow the seeds of God’s Kingdom and harvest the fruits. The more, the merrier!

It would be interesting to reflect on the concept of ‘harvest’! Many of us may have seen the harvesting done by giant machines, but how many of us have seen harvesting done by human hands? Harvesting is an art. Many of us may have a sarcastic smile at the idea of calling harvesting an art. We’ll not realize the intricacies of this art unless we get down and begin harvesting. It surely is an art and requires special skills. It is not only a pack of individual skills. The art of harvesting in a group come into play. Jesus wants his workers to have special skills – both individual and communitarian. He lists out certain criteria for his workers. Let us talk about three of them.

The first criterion: Lambs among wolves. Sending lambs among wolves seems like a sure formula for disaster. But, we know that lambs have not only walked among wolves, but have conquered them.
Remember David? When he went against Goliath, he had 1:1000 chance of surviving the duel, leave alone winning. If you read 1 Samuel 17: 4-7, you will get an idea of who this Goliath is.

Remember Gandhi? “Who is this half naked fakir?” was the derisive remark hurled against him by the British. But this docile lamb walked among the wolves and won over independence for India.

On July 5, Friday, the media picked up the comments made by Mohammed Barkindo, the secretary general of OPEC on the movement to ‘save the planet for the future generation’ initiated by Greta Thunburg, a 16 year old from Sweden. At age 15, Greta began protesting outside the Swedish parliament about the need for immediate action to combat climate change and has since become an outspoken climate activist. Greta Thunberg and other climate activists have said it is a badge of honour that the head of the world’s most powerful oil cartel believes their campaign may be the “greatest threat” to the fossil fuel industry.

David, Gandhi, Martin Luther King Jr., Nelson Mandela, Mother Teresa… Greta Thunburg and many other weak human beings are lambs who walk among wolves and fulfill their mission.

Okay, now that lambs have to walk among wolves, they need to get prepared. Right? They need to protect themselves for any eventuality. Right? Wrong. We remember David once again. He refused the armour that was given to him and relied on his usual sling and stone. He relied more on his God who would save him.

When a person has faith in God, nothing else is required. This is what Jesus says in his second criterion: No preparations, just go. “Do not take a purse or bag or sandals.” Jesus seems to say: “Go on a journey, begin work, but take nothing with you.”

This proposal from Jesus sounds ridiculous to the over-smart, over-efficient, well-prepared generation, ticking all the boxes when going on a journey or when beginning a work. All over the world we come across interesting sights of how people from various continents travel. We are often amused seeing kids tagging a suitcase along with them. This is our way of travelling, our way of getting into a job… simply our way of doing things! Hence, Jesus asking us not to take anything, sounds like a good joke, very impractical, to put it more politely.

This criterion of Jesus needs to be seen from the perspective of our final journey on earth. How many of us truly believe that we are all pilgrims on this planet? Not many. What Jesus tries to tell us here will have to be followed every bit in our last journey, right? No purse, no bag, no sandals on our final journey to the graveyard… Less luggage, more comfort. No luggage, absolute comfort. Why can’t we begin practising this ‘detachment’ already now?

It is easy for Jesus to say so, since he had nothing as his own, we may say. But, there is the famous myth of Alexander, the Great… The last three wishes of Alexander also give us the perspective of a pilgrim. Alexander wanted to be buried with both his empty hands kept outside his coffin. When his general, a close friend of him, asked him for an explanation, Alexander seems to have said: “I wish people to know that I came empty handed into this world and empty handed I go out of this world.”

Walk boldly among wolves; take nothing with you… but give. This is the third criterion for the worker. Give blessings… blessings of peace on those whom you meet. The ability to give while one has no possessions, is the highest form of giving. Kahlil Gibran talks about ‘Giving’ in his famous book – ‘The Prophet’:

You give but little when you give of your possessions.
It is when you give of yourself that you truly give…

There are those who give little of the much which they have - and they give it for recognition and their hidden desire makes their gifts unwholesome.
And there are those who have little and give it all.
These are the believers in life and the bounty of life, and their coffer is never empty.
There are those who give with joy, and that joy is their reward.
And there are those who give with pain, and that pain is their baptism.
And there are those who give and know not pain in giving, nor do they seek joy, nor give with mindfulness of virtue;
They give as in yonder valley the myrtle breathes its fragrance into space.
Through the hands of such as these God speaks, and from behind their eyes He smiles upon the earth…

You often say, "I would give, but only to the deserving."
The trees in your orchard say not so, nor the flocks in your pasture.
They give that they may live, for to withhold is to perish.

All the three criteria laid out in today’s Gospel, seem out of the world, not practical. But, only such ‘out-of-the-world’ dreams have made humanity better. Jesus does not give his workers ‘practical’ platitudes amounting to nothing. He keeps inviting his workers to go towards the ideal, the dream, even if it means going ‘out-of-the-world’! What is improbable or impossible for this world, is invaluable for the Kingdom of God!

Lambs can surely walk among wolves without any protection. Isaiah had already dreamt of lamb and wolf feeding together. (Isaiah 11:6; Isaiah 65:25.) Jesus seems to be taking this dream to the next level where the lambs, walking among the wolves with no protective gear, can offer blessings of peace to those wolves! Nothing is impossible to God and to his labourers who believe!

The seventy returned with joy – Luke 10:17

பொதுக்காலம் - 14ம் ஞாயிறு

ஜெர்மனியின் Strasbourg நகரில், இளம் பேராசிரியர் ஒருவர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதக்கட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார். அவர், இறையியலிலும், மெய்யியலிலும் பட்டங்கள் பெற்று பேராசிரியராகப் பணியாற்றியவர். மறையுரை வழங்குவதில் தனக்கென தனியிடம் உருவாக்கியிருந்தவர். அவர் (1906ம் ஆண்டு) வெளியிட்ட "வரலாற்று இயேசுவைத் தேடுதல்" (The Quest of Historical Jesus) என்ற நூல், புகழின் உச்சியில் அவரை நிறுத்தியது. இசை மேதையான Johann Sebastian Bach அவர்களின் படைப்புக்களை 'ஆர்கன்' இசைக்கருவியில் வாசித்து, உலகப் புகழ் பெற்றிருந்தவர். அந்த இசை மேதையைக் குறித்த ஓர் ஆய்வை வெளியிட்டு, மக்களை வியக்கவைத்தவர்.
பல துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றிருந்த அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் ஒவ்வொரு நாளும் கடித வடிவில் வந்தன. அன்று அவருக்கு வந்திருந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த இதழின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது. "காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே... கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வரிகளை வாசித்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர், தனது நாள் குறிப்பேட்டைத் திறந்து, "என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார்.

அன்றுவரை அவர் செய்துவந்த அனைத்தையும் விட்டுவிட்டு, அவர், ஆப்ரிக்காவில் பணியாற்ற முடிவுசெய்தார். அவர் மதியிழந்துவிட்டாரோ என்று எண்ணி, அவரது உறவினர்களும், நண்பர்களும், அவர் எடுத்திருந்த முடிவை மாற்றுவதற்கு முயன்றனர். ஆனால், இயலவில்லை.
30 வயது நிறைந்த அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவர் பணியாற்ற விழைந்த ஆப்ரிக்க மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஆப்ரிக்காவின் பின்தங்கியப் பகுதி ஒன்றில், தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகள், அவர், ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைத்தார். இறைவனின் அழைப்பு, ஆல்பர்ட் அவர்களின் வாழ்வை வேறு திசையில் அழைத்துச் சென்றாலும், இறைவன் மீது தன் முழு நம்பிக்கையை வைத்து, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம். இந்த உழைப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். - லூக்கா நற்செய்தி 10: 1-5

அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் வாசிக்கிறோம். பொதுவாக, தேவ அழைத்தலுக்காகச் செபிக்கும்போது, இச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறத்தார் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழ வாய்ப்புண்டு. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளை ஆய்வு செய்தால், இயேசு, 72 பேரை புதிதாக நியமித்து, தன் பணிக்கென அனுப்பிய வேளையில், இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்பதை உணர்கிறோம்.
இயேசுவுடன் வாழ்ந்த பன்னிருத் திருத்தூதர்கள், ஏனைய 72 சீடர்கள் அனைவருமே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள். எனவே, “அறுவடைக்கு வேலையாள்கள் தேவை என்று இயேசு கூறியது, குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் வேலையாள்களை நினைத்து, இயேசு, இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது உண்மை.

இவ்வழைப்பில் இயேசு குறிப்பிட்டுள்ள 'அறுவடை' என்ற செயலை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்க முயல்வோம். அறுவடை செய்வது ஒரு தனிப்பட்டக் கலை. ஓ, இது என்ன பெரிய கலை? பயிர் வளர்ந்துள்ளது, கையில் அரிவாளை எடுத்து, அறுத்துத் தள்ளவேண்டியதுதானே என்ற ஏளன எண்ணங்கள், ஒரு சிலர் மனங்களில் எழலாம். இத்தகைய எண்ணங்கள் கொண்டிருப்போரின் கையில் அரிவாளைக் கொடுத்து, வயலில் இறங்கி, அறுவடை செய்யச் சொன்னால் தெரியும், வெட்டப்படுவது, கதிர்களா? கைவிரல்களா? என்று.
அடுத்து, அறுவடை என்பது எப்போதும் ஒரு கூட்டு முயற்சி. அறுவடை செய்பவர்கள், தனித்துச் செயல்படுவதில்லை. எல்லாரும் சேர்ந்து, ஒரே வரிசையில், அறுத்தபடியே முன்னேறுவர்.
இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை அறுவடை செய்ய, தனித் திறமைகள் பெற்றிருக்கவேண்டும். அதேநேரத்தில், பிறரோடு இணைந்து உழைக்கும் திறமையும் பெற்றிருக்கவேண்டும். இறையரசுக்காக உழைப்பவர்கள் பெற்றிருக்கவேண்டிய திறமைகளை, இன்றைய நற்செய்தியில், ஒரு சில நிபந்தனைகளாகச் சொல்கிறார் இயேசு.

முதல் நிபந்தனை: "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதா? இது விபரீதமான முயற்சியாகத் தெரிகிறதே என்று நாம் தயங்கலாம். ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள், வீரக்கதைகளாகத் தொடர்ந்து நடந்துவருகின்றன என்பது நமக்குத் தெரியும்.
அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்த கோலியாத்து என்ற மனித மலையோடு (காண்க. 1 சாமுவேல், 17: 4-7) மோத புறப்பட்ட தாவீது, நம் நினைவுக்கு வருகிறார். அந்த மோதலில் யார் வென்றது, ஓநாயா, ஆட்டுக்குட்டியா என்பது நாமறிந்த வரலாறு.
"யார் இந்த அரை நிர்வாணப் பரதேசி?" என்று, ஆங்கில அரசு ஏளனமாகப் பார்த்த காந்தியடிகள் நம் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக்குட்டி, ஓநாய்களாய் வலம்வந்த ஆங்கில அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது உலகறிந்த வரலாறு.
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' (Skolstrejk för klimatet - 'School strike for the climate') என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர். எனவே, எங்கள் எதிர்காலத்திற்காகப் போராட வந்துள்ளேன்" என்று, இளம்பெண் துன்பர்க் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், “Fridays for Future’’, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு அழிவை உருவாக்கும் தொழில் நிறுவனங்களின் பெரும் செல்வந்தர்கள், பள்ளி மாணவ, மாணவியரியரின் போராட்டம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்று எண்ணி வந்தனர். ஆனால், இளையோரின் போராட்டம் இன்று பல தொழில் நிறுவனங்களின், குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யும் வங்கிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
நிலத்தடி எரிசக்திகளை ஏற்றுமதி செய்யும், பெட்ரோலிய நாடுகளின் கூட்டமைப்பான OPEC, கிரேட்டா துன்பர்க் அவர்களின் போராட்டத்தைக் குறித்து தற்போது, கலக்கமடைந்துள்ளது. OPEC நிறுவனத்தின் தலைமைச் செயலர், மொஹம்மத் பார்கிண்டோ (Mohammad Barkindo) அவர்கள், இளம்பெண் கிரேட்டா அவர்களின் போராட்டம் நிலத்தடி எரிசக்தியை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் என்று, ஜூலை 5, இவ்வெள்ளியன்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள், எதிர்காலத்திற்காகப் போராடி வரும் எனது தலைமுறைக்குக் கிடைத்த சிறந்ததொரு பாராட்டு இது என்று கூறியுள்ளார்.
பல இலட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள OPEC கூட்டமைப்பு, 16 வயது இளம்பெண்ணின் போராட்டத்தால் நிலை தடுமாறி இருப்பது, ஓநாய்கள் நடுவே ஆட்டுக்குட்டிகள் தலைநிமிர்ந்து சென்றால் என்ன நடக்கும் என்பதை நினைவுறுத்துகிறது. தான் கொண்டுள்ள குறிக்கோளில் தெளிவும், அதை அடைவதற்கு எதையும் தியாகம் செய்யும் துணிவும் கொண்ட இளம்பெண் கிரேட்டா போன்றோரை மனதில் கொண்டு, "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" என்ற உருவகத்தை இயேசு பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் போகவேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. சரி. அதற்குத் தகுந்ததுபோல், எல்லா ஏற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டாமா? மீண்டும் தாவீது நம் நினைவுக்கு வருகிறார். கோலியாத்தை எதிர்த்துச் செல்லும்போது, தற்காப்புக்காக, அவருக்கு கவசம் தேவைப்படும் என்று மற்றவர்கள் நினைக்க, தாவீதோ, தன் மீது போடப்பட்ட கவசங்களையெல்லாம் கழற்றிவைத்துவிட்டு, ஒரு கவணையும், கல்லையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார், இளையவர் தாவீது. அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? ஆயனாக இருந்த தாவீது, ஆண்டவனை அதிகம் நம்பியவர். தன்னையும், தன் ஆடுகளையும், இரத்த வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையால் விளைந்த வீரம் அது (1 சாமுவேல், 17: 37). நம்பிக்கை இருந்தால் போதும், நம் கையில் வேறெதுவும் வேண்டாம் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். "பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்லவேண்டாம்" என்று ஒலிக்கிறது, இயேசுவின் இரண்டாவது நிபந்தனை.

எவ்வித ஏற்பாடும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதா? பணியாற்றச் செல்வதா? சரியாகப்படவில்லையே. இப்படிச் சொல்ல வைக்கிறது, நாம் வாழும் காலம். உண்பதற்கு, உடுத்துவதற்கு, உடல் பயிற்சி செய்வதற்கு, ஏன்?... உறங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் 'management' காலத்தில் நாம் வாழ்கிறோம்.
நமது பயணங்களை எண்ணிப் பார்ப்போம். பயணம் என்று சொன்னதும், நாம் சுமந்து செல்லும், அல்லது, இழுத்துச் செல்லும் பெட்டிகள் நம் மனக்கண்களில் அணிவகுத்து நிற்கும். இதற்கு நேர் மாறாக, நமது பயணங்களுக்கு எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது, நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாகத் தெரிகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள ஆழமான உண்மைகள் புரியும்.
நாம் எல்லாருமே இவ்வுலகில் வழிபோக்கர்கள்தாம். போகும் வழியில், நாம் பொருள்களை சேகரித்துக்கொண்டே போனால், இறுதியில், என்ன செய்யப் போகிறோம்? நம் இறுதிப் பயணத்தின்போது, இயேசுவின் இந்த ஆலோசனையை முற்றிலும் பின்பற்ற வேண்டியிருக்குமே. ஒன்றுமே எடுத்துச் செல்லமுடியாத அந்த இறுதிப் பயணத்திற்கு முன்னேற்பாடாக, இப்போதிருந்தே, திரட்டுதல், குவித்தல், சேர்த்து வைத்தல் போன்ற நோய்களிலிருந்து, கொஞ்சம், கொஞ்சமாய், விடுதலை பெறலாமே!

இயேசுவுக்கு இது எளிதாக இருந்திருக்கும். ஏனெனில், அவரிடம் சொத்து என்று ஒன்றுமே இல்லை. ஆனால், உலகத்தில் பல நாடுகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டிவைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டரும், இதே கருத்தைத்தானே தன் இறுதி மூன்று ஆசைகளில் ஒன்றாக சொல்லிச் சென்றார். தனது சவ ஊர்வலத்தில், திறந்தபடி இருந்த வெறும் கைகளை, சவபெட்டிக்கு வெளியில், மக்கள் பார்க்கும்படி அவர் வைக்கச் சொன்னார். அதற்கு காரணம் கேட்ட தளபதியிடம், வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு செல்வோம் என்ற பாடத்தை மக்கள் உணரவேண்டும் என்று சொன்னார், மாவீரன் அலெக்சாண்டர்!

வெறுங்கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று கூறும் இயேசு, கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இல்லங்களில் எல்லாம் அமைதி என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இது தன் பணியாளர்களுக்கு இயேசு தரும்  மூன்றாவது நிபந்தனை.

ஒன்றுமில்லாத நிலையிலும் கொடுப்பது, உயர்ந்த கொடை. அத்தகைய 'கொடுத்தலை'ப்பற்றி சிந்திக்கும்போது, கவிஞர் கலீல் கிப்ரான் (Khalil Gibran) அவர்கள் எழுதிய கொடுப்பது (On Giving) என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. 'இறைவாக்கினர்' (The Prophet) என்ற கவிதைத்தொகுப்பில், காணப்படும் அக்கவிதையின் சில வரிகள்...
நீ சேர்த்துவைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது, வெகு குறைவாகவே கொடுக்கிறாய். எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே கொடுக்கிறாய்.
தங்கள் உடைமைகளிலிருந்து சிறிது கொடுப்பவர்கள் உண்டு. பேரும், புகழும் தேடி அவர்கள் தரும் அக்கொடை, முழுமையானதல்ல.
வேறுசிலர், தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயானாலும், அனைத்தையும் கொடுக்கின்றனர். இவர்கள், வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; இவர்களது கருவூலம், காலியாவதே கிடையாது.
சிலர் மகிழ்வோடு தருவர்; அந்த மகிழ்வே, அவர்கள் பெறும் வெகுமதி.
சிலர் வேதனையோடு தருவர்; அந்த வேதனையே, அவர்கள் பெறும் திருமுழுக்கு.
இன்னும் சிலர், மகிழ்வோ, வேதனையோ இன்றி தருவர்; புண்ணியம் செய்கிறோம் என்ற எண்ணம் ஏதுமின்றி தருவர்.
தான் மணம் தருகிறேன் என்பதை உணராமல், தன் நறுமணத்தைப் பரப்பும் மலரைப் போல் தருபவர் இவர்கள்.
இவ்வாறு தருபவர் கரங்கள் வழியே, கடவுள் பேசுகிறார்; இவர்கள் கண்கள் வழியே கடவுள் இவ்வுலகைப் பார்த்து, புன்னகைக்கிறார்.
"தகுதியானவருக்கு மட்டுமே நான் தருவேன்" என்று நீ அடிக்கடி சொல்கிறாய். உன் தோட்டத்தில் உள்ள மரங்களோ, உன் பண்ணையில் இருக்கும் மிருகங்களோ அவ்வாறு சொல்வதில்லையே. அவை தருகின்றன; அதனால், வாழ்கின்றன. அவை தராமல் பதுக்கி, சேர்த்து வைத்தால், அவை அழிந்துவிடும்.

தன் சீடர்களுக்கு இயேசு வழங்கியுள்ள இந்த மூன்று நிபந்தனைகளுமே நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற தயக்கம் எழுகிறது. மனித இயல்பு, உலக வழக்கு என்ற குறுகிய வட்டங்களை நம்மைச் சுற்றி வரைந்துகொண்டு சிந்திப்பதால் நமக்குள் எழும் தயக்கம் இது. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்கமுடியாமல், சிறைப்படுத்தப்படுகின்றன.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்" (எசாயா 65:25) என்ற கனவை, இறைவாக்கினர் எசாயா மொழிந்தார். இயேசு அந்தக் கனவையும் தாண்டி, இன்றைய நற்செய்தியின் வழியே சொல்வது இதுதான்: "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுமின்றி, ஓநாய்களிடையே செல்லும் ஆட்டுக்குட்டிகள், ஓநாய்களுக்குச் சமாதான ஆசீரை வழங்கட்டும்" என்பது, இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.

இயேசு கூறிய நிபந்தனைகளைக் கேட்டு, அவரது சீடர்களின் உள்ளங்களில், 'இது நடைமுறைக்கு ஒத்து வருமா?' என்ற கேள்வி எழுந்திருக்கும். இருப்பினும், அவர்கள், தங்கள் தலைவனை நம்பி பயணித்தனர். பலன் அடைந்தனர். அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, ஒன்றுமில்லாத நிலையில் சென்றனர், திரும்பி வந்தபோது, நிறைவுடன் வந்தனர். தங்கள் நிறைவைக் குறித்து, அவர்கள் வியந்து பேசும்போது, இயேசு அவர்களுக்கு மீண்டும் ஒரு சவாலை முன்வைக்கிறார்.

நீங்கள் அடைந்த வெற்றியைக் குறித்து ஆரவாரம் செய்யாதீர்கள், "தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக்கா 10:20) என்று இயேசு வழங்கும் சவாலுடன், இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.
திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.(He who fails to plan, plans to fail) என்பன போன்ற மேலாண்மைப் பாடங்கள் வழியே, திட்டங்கள் தீட்டுதல், அவற்றைத் திறம்பட முடித்தல், செல்வங்களைச் சேர்த்தல் என்ற வழிகளை நம் வாழ்வில் திணிக்கும் இன்றைய உலகின் அளவுகோல்களை ஒதுக்கிவைக்கும் துணிவை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். மறு உலகில் நம் பெயர்கள் நிரந்தரமாக எழுதப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, அவரது பணியில் ஈடுபடும் தாராள உள்ளத்தை, நமக்கு அருளவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.



No comments:

Post a Comment