30 May, 2020

‘What’ is celebrated at Pentecost பெந்தக்கோஸ்து நாளில் ‘எதை’க் கொண்டாடுகிறோம்

Pentecost in the Upper Room 
 
 Pentecost Sunday

Pentecost. The very word, along with images of tongues of fire, spells magic and mystery. But, the word simply means the fiftieth (day). Every year, the 50 days between the Easter and the Pentecost are filled with many celebrations. Easter Sunday, followed by Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now the Pentecost are great festivals coming in quick succession. We are not done yet. Following the Pentecost, come the Feasts of the Holy Trinity, the Body and Blood of Christ, and the Sacred Heart of Jesus. Every one of these Feasts calls for celebrations.

Whenever we use the word ‘celebration’ we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? We wonder. According to the present ‘worldly standards’, the first Easter should have been ‘celebrated’ in full splendour, with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, in every sense of the word!
The first Ascension, once again, was a very subdued affair with Jesus spending quiet moments with the disciples on a hillock, outside the city, before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer in the ‘upper room’. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.

The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic…. There are very many ways by which celebrations are packaged and delivered by the commercial world. Ask an ‘event manager’! In most of these celebrations ‘what’ is celebrated is less important than ‘how’ it is celebrated. The frills are more important than the core. When we think of these commercial celebrations, the famous line from Macbeth flashes across our minds: “It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing.” Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!

Jesus and his disciples defined ‘celebration’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ that the disciples discovered, left a lasting, life-long impression on them. This ‘what’ has left a deep impression on human history for the past twenty centuries.

This year, all of us had a taste of what the ‘original’ Easter, Ascension and Pentecost were like. Most of us stayed home to ‘celebrate’ these great mysteries of our Christian Faith. Instead of getting distracted by the external frills of the festival, we were given the opportunity to get to the ‘what’ of these feasts by listening to God’s words, and, in some mysterious ways, sharing in the ‘original’ events that took place in and around Jerusalem 2000 years back!

It would do us a world of good to reflect on the ‘what’ of the Feast of the Pentecost. This Feast is the fulfilment of what Christ promised to his disciples, namely, the Holy Spirit. Jesus said that the Holy Spirit would take over! The Holy Spirit really took over the lives of the Apostles. They were not the same after the Pentecost.
This Feast gives us an assurance that the Holy Spirit is here to stay in each of us. Although ‘in him we live and move and have our being’ (Acts 17: 28), we don’t recognise the Spirit – just like the little fish, swimming in the sea, kept searching for the sea. Here is a small anecdote that reflects on how we, although surrounded and sustained by the Holy Spirit, still fail to recognise the Spirit.

More than a century ago, a great sailing ship was stranded off the coast of South America.  Week after week the ship lay there in the still waters with not a hint of a breeze.  The captain was desperate; the crew was dying of thirst.  And then, on the far horizon, a steamship appeared, heading directly toward them.  As it drew near, the captain called out, "We need water!  Give us water!"  The steamship replied, "Lower your buckets where you are."  The captain was furious at this cavalier response but called out again, "Please, give us water."  But the steamer gave the same reply, "Lower your buckets where you are!"  And with that they sailed away!  The captain was beside himself with anger and despair, and he went below.  But a little later, when no one was looking, a yeoman lowered a bucket into the sea and then tasted what he brought up: It was perfectly sweet, fresh water!  For, the ship was stuck on the delta region of the great Amazon River.  And for all those weeks they had been sitting right on top of all the fresh water they needed! 

How often we have been like those sailors? What we are really seeking is already inside us, waiting to be discovered, waiting to be embraced: the Holy Spirit of God who has been living within us from the moment of our Baptism. This is ‘what’ this Feast is all about – to recognise the treasure buried within us!

Another ‘what’ of this Feast is to recognise that God’s presence can be felt strongly when a community of believers come together in prayer (cf. Acts 1:14). Fr Ron Rolheiser explains how “Pentecost Happened at a Meeting”. Here are a few excerpts from his reflections:
Pentecost happened at a meeting! One of the central events that shaped Christian history and history in general, happened not to an individual off praying alone or to a monk on a mountain-top or to a solitary Buddha meditating under a tree. None of these. Pentecost happened at meeting and it happened to a community, to a church congregation assembled for prayer, to a family of faith gathered to wait for God’s guidance. Moreover it happened in a common room, a meeting room, in one of those humble, church-basement, type of rooms. It can be helpful to remember that. Our search for God should take us not just into private places of quiet and contemplation but, equally, into meeting rooms.

Where Christianity is different from most other world religions is partly on this very point. In Islam, Buddhism, Hinduism, and Taoism, spirit and revelation break into the world very much through an individual, particularly an individual who is deeply immersed in private prayer. God speaks deeply to those who pray deeply.

Christian spirituality and Judaism have no argument with that. … However, where Christianity and Judaism differ somewhat from some of the other world religions is in our belief that there is an equally privileged experience of God that can be had only in a group, in community, in family, at a meeting… “For where two or three meet in my name, I shall be there with them!” In Christian and Jewish spirituality there are two non-negotiable places where we meet God, alone and in the family. These are not in opposition, but complementary, relying on each other to keep our experience of God both deep and pure.

The present day world is more interested in shaping us as individuals than as community. It is keener on developing communication gadgets rather than communication skills among human beings. The more we are surrounded by these gadgets, the more we tend to isolate ourselves from the human family. When the world is placing more and more emphasis on ‘virtual’ communication, the Feast of the Pentecost seems to reiterate that in ‘real’ communion – especially in prayerful communion – with others we can experience the outpouring of the Holy Spirit.

For the past few weeks we have been forced to rely on our gadgets of communication to be in touch with the world. We have also ‘participated’ in our liturgical celebrations via the media. During this lockdown, we have realised that this ‘virtual’ communication cannot replace our real, face to face communication with others.

Although this virus has caused lots of pain on the human family, it has, indirectly, taught us some deeper truths about the human family. We humans have created artificial divisions among ourselves and have built walls and weapons to keep these divisions strong. But an unseen ‘enemy’ has nullified all these artificial divisions and made us feel that basically we are fragile human beings and that the whole human family suffers the same way due to an unknown, unseen virus.

Hopefully, when we begin the ‘post-pandemic’ life, we don’t go back to creating and safeguarding divisions, but begin in full earnest at building up an unified human family. This is the appeal given by St Paul in the second reading today. Let us close our thoughts with his appeal:
I Corinthians 12:3-13
4 Now there are varieties of gifts, but the same Spirit; 5 and there are varieties of service, but the same Lord; 6 and there are varieties of working, but it is the same God who inspires them all in every one. 7 To each is given the manifestation of the Spirit for the common good.
12 For just as the body is one and has many members, and all the members of the body, though many, are one body, so it is with Christ. 13 For by one Spirit we were all baptized into one body—Jews or Greeks, slaves or free—and all were made to drink of one Spirit.  

Pentecost Experience 
 தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

இஞ்ஞாயிறன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் பெந்தக்கோஸ்து. பெந்தக்கோஸ்து என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். வழிபாட்டு ஆண்டில், உயிர்ப்புப் பெருவிழாவுக்கும், பெந்தக்கோஸ்து நாளுக்கும் இடைப்பட்ட 50 நாள்களில் பல்வேறு விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று... வரிசையாக, பல விழாக்கள், வழிபாட்டு ஆண்டின் இந்தக் காலக்கட்டத்தை நிறைக்கின்றன. அதேபோல், தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவையடுத்து, மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்கள் தொடர்கின்றன.
இவ்வாண்டோ, தவக்காலம் துவங்கி, புனித வாரம், உயிர்ப்புப்பெருவிழா, அதைத்தொடர்ந்த அனைத்து ஞாயிறுகளிலும் நமது திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை, இல்லங்களில் இருந்தவண்ணம் கொண்டாடினோம். வழிபாட்டு விழாக்கள் மட்டுமின்றி, நமது இல்ல விழாக்களையும் இதே நிலையில் கொண்டாடி வருகின்றோம்.

வழிபாட்டு விழாக்களையோ, வாழ்வின் விழாக்களையோ, கொண்டாடினோம், அல்லது, கொண்டாடுகிறோம், என்று சொல்லும்போது, எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதைக் காட்டிலும், எதைக் கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது. கொண்டாட்டங்களுக்கு உலகம் வகுத்துள்ள இலக்கணம், அளவுகோல் ஆகியவை, கொண்டாட்டங்கள் எப்படி அமையவேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரான உண்மைகள். கொண்டாட்டங்களுக்கென உலகம் வகுத்துள்ள இலக்கணத்தின்படி, இந்த மறையுண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை! மாறாக, இந்நிகழ்வுகள், முதன்முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகை, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய ஓர் அனுபவம். கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை ஈர்க்காமல் நடைபெற்றன.

இதையொத்த ஒரு சூழலை, கொரோனா கிருமியின் உலகளாவியப் பரவல் இவ்வாண்டு நமக்கு உருவாக்கியுள்ளது. இந்த மறையுண்மைகள் முதல்முறை நிகழ்ந்தபோது நிலவிய அமைதியானத் தருணங்களை கடந்த சில வாரங்களாக நாம் வாழ்ந்துவருகிறோம். இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேளையில், இதுவரை நாம் தவறவிட்ட பல்வேறு உண்மைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்குள் உருவாகியிருக்கக்கூடும். அவ்வுண்மைகளில் ஒன்றாக, விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைப்பற்றிய ஒரு வேறுபட்ட புரிதலும் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு புது இலக்கணம் தரும் வகையில், இவ்விழாக்களை கொண்டாடிய இயேசுவும், அவரது அன்னையும், சீடர்களும், நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றனர். கொண்டாட்டம் என்பது, பிறரது கவனத்தை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், நாம் கொண்டாடும் விழாவின் மையக்கருத்து, எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். அவ்விதம் அமையும் கொண்டாட்டங்கள், ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நமக்குள் மாற்றங்களை உருவாக்கும். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள், முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்களை விதைத்ததால், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் வாழ்வுக்குத் தேவையான புதுப்புது அர்த்தங்களை நம்மால் காணமுடிகிறது.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா வழங்கும் பல்வேறு அர்த்தங்களில் ஒன்று - அவர் வானிலிருந்து இறங்கிவந்து சிறிதுகாலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்குள் எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்ற உண்மை. அருளின் சுனையாக நமக்குள் என்றும் உறையும் இறை ஆவியாரை உணராமல், நாம், நம் தாகத்தைத் தணிக்க, கானல் நீரை தேடிக்கொண்டிருக்கிறோம்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று திடீரென தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும், கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. கப்பலில் ஓரளவு உணவு இருந்ததால், அவர்களால் சமாளிக்க முடிந்தது. ஆயினும், அவர்களிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற அவசரச்செய்தியை அனுப்பினார், கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று, கப்பல் தலைவர், கடும்கோபத்துடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகில் நின்ற கப்பல் பணியாளர்களில் ஒருவர், தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீராக இருந்ததை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலக்கும் இடம்.

குடிநீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போலத்தான் நாமும்... வாழ்வுப் பயணத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களை தெரிந்துகொள்ளாமல், தாகம் கொண்டு தவிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருக்கும் குடும்பம், தொழில், நண்பர்கள் என்ற கொடைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
நமக்குள் இருக்கும் நல்லவற்றை தெளிவுபடுத்தும் ஒளியாகவும், நல்லவற்றை உருவாக்கும் ஊற்றாகவும் நம்முள் எப்போதும் உறைந்திருப்பவர், தூய ஆவியார். இவரது வருகைப் பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், இவர் என்றும் நம்முள் உறையும் இறைவன் என்பதை, முழுமையாக நம்பும் வரத்தை, வேண்டுவோம்.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை நாம் திருஅவை பிறந்தநாள் என்றும் அழைக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும் பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்த விதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் இவற்றை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.
திருஅவை என்ற குழந்தை பிறந்தது ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியாரின் வருகை என்ற அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டிலோ, மலையுச்சியிலோ ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. ஓர் இல்லத்தின் மேலறையில், அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில் (காண்க. தி.பணிகள் 1:14), தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு இறை அனுபவம் கிடைக்கும் என்று ஏறத்தாழ எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவ மதத்திலும், இத்தகைய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் செபத்தில் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, அந்த மேலறையில், தூய ஆவியார் வந்திறங்கிய நிகழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது.

அர்த்தமுள்ள வகையில் மனிதர்கள் இணைந்து வருவதைத் தடுக்கும் வழிகள் இன்று உலகில் பெருகி வருகின்றன. நாம் வாழும் இன்றைய உலகம் நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, அந்தத் தனிமையில் நாம் நிறைவைக் காணமுடியும் என்ற மாயையை உருவாக்கி வருகிறது. வியத்தகு முறையில் வளர்ந்துள்ள தொடர்புசாதனக் கருவிகள், நம்மை உண்மையிலேயே இணைக்கின்றனவா? அல்லது, இக்கருவிகளின் தோழமையில், நாம் மனித உறவுகளை, தொடர்புகளை இழந்து வருகிறோமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
கருவிகள் இல்லாமல் தொடர்புகளே இல்லை என்று கூறும் அளவு, கருவிகளின் ஆக்கிரமிப்பு வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், தூய ஆவியாரின் பெருவிழா, திருஅவை என்ற குழந்தை பிறந்த நாள், நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான்: திருஅவை என்பது, ஒவ்வொருவரும் தனித்து உணரும் கற்பனை அனுபவம் அல்ல; குழுவாக, குடும்பமாக, இணைவதில் உருவாகும் ஓர் அனுபவமே, திருஅவை.

கடந்த சில வாரங்களாக இறைமக்கள் என்ற குடும்பமாக நாம் கூடிவர இயலாத நிலை நீடிக்கிறது. இந்த முழு அடைப்பு நீங்கி, நாம் மீண்டும் இறை மக்களாக இணைந்து வரும் வேளையில், நாம் தனி தீவுகள் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் சார்ந்து வாழும் குடும்பம் என்ற உண்மையை தூய ஆவியார் நம் அனைவருக்கும் உணர்த்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

கொரோனா தொற்றுக்கிருமி நமக்கு பல்வேறு எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியிருந்தாலும், அது உணர்த்தியுள்ள ஒரு முக்கியமான பாடம் உண்டு. அதாவது, மனிதர்களாகிய நாம், எத்தனையோ பிரிவுகளை நமக்குள் உருவாக்கியிருந்தாலும், அந்தப் பிரிவுகளைக் காக்கும் வெறியுடன், சுவர்களையும் ஆயுதங்களையும் உருவாக்கியிருந்தாலும், அப்பிரிவுகளையும், தடைகளையும் தாண்டி, நாம் அனைவரும், அடிப்படையில் சக்தியற்ற மனிதர்கள்தாம் என்ற உண்மையை கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நமக்கு உணர்த்தி வருகின்றது.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உணர்வை திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், உடல் என்ற அழகிய உருவகத்தைப் பயன்படுத்தி நமக்கு உணர வைத்துள்ளார். 
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12: 4,7,12-13
அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், ஒருவகையில் அறிவொளியும், உள்ளத் தூய்மையும் பெற்றுள்ள நாம், இனிவரும் நாள்களில், நம் வாழ்வைத் தொடரும் வேளையில், மனித குடும்பத்தை கூறுபோடும் பிளவுகளையும் பிரிவுகளையும் மீண்டும் உருவாக்காமல், ஒரே குடும்பத்தை கவனமாகக் கட்டியெழுப்பும் மனதை, அந்த தூய ஆவியார், நம் ஒவ்வொருவருக்கும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

26 May, 2020

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2


"எந்த அளவையால் அளக்கிறீர்களோ..." (மத்தேயு 7:2)

விதையாகும் கதைகள் : எந்த அளவையால் அளக்கிறீர்களோ...

ஒரு கிராமத்தில் வாழ்ந்த ரொட்டிக்கடை உரிமையாளர், அக்கிராமத்தில், வெண்ணெய் விற்கும் ஒருவரிடம், தன் கடைக்கு, ஒவ்வொருநாளும், ஒரு கிலோ வெண்ணெய் தரும்படி சொன்னார். அதன்படி, வெண்ணெய் வியாபாரி, ஒவ்வொருநாளும் தவறாமல் ஒரு கிலோ வெண்ணெயை அவரது கடையில் கொடுத்துவந்தார். ஒருநாள், ரொட்டிக்கடைக்காரருக்கு மனதில் இலேசான சந்தேகம் வந்தது. வெண்ணெய் வியாபாரி கொடுக்கும் வெண்ணெய் ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. அவர் உடனே கடையில் இருந்த தராசில் அதை நிறுத்துப் பார்த்தபோது, அது, ஒரு கிலோவுக்கு குறைவாக இருந்தது. அடுத்த சில நாள்கள், அவர் கடைக்கு வந்த வெண்ணெயை நிறுத்துப் பார்க்கையில், அது, ஒவ்வொருநாளும், எடை குறைவாகவே இருந்தது. எனவே, ரொட்டிக்கடை உரிமையாளர், காவல் துறையிடம் புகார் அளிக்கவே, அவர்கள் சென்று, வெண்ணெய் வியாபாரியை கைது செய்து, நீதி மன்றத்திற்கு இட்டுச் சென்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க வந்த நீதிபதி, வெண்ணெய் வியாபாரியிடம், "உங்களிடம் இருக்கும் எடைக்கல் சரியான அளவில்தான் உள்ளதா?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "ஐயா, என்னிடம் எடைக்கல் எதுவும் இல்லை" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதி, "பின் எப்படி நீங்கள் வெண்ணெயை எடைபோடுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "நான் ஒவ்வொருநாளும், 1 கிலோ வெண்ணெயை ரொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து 1 கிலோ எடையுள்ள ரொட்டியை வாங்கி வருவேன். அடுத்த நாள், அந்த ரொட்டியை என் தராசில் எடையாகப் பயன்படுத்தி, வெண்ணெயை எடைபோட்டு, ரொட்டிக்கடைக்கு எடுத்துச்செல்வேன்" என்று கூறினார். நீதி மன்றத்தில் அமர்ந்திருந்த ரொட்டிக்கடை உரிமையாளரின் முகம் அதிர்ச்சியில் உறைந்துபோனது.
"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது.

அவரை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். (மாற்கு 8:33)

ஒத்தமை நற்செய்தி  படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2

புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர், ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் இருவரும் உள்ளே உறங்கச் சென்றனர். நள்ளிரவில் ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, கண்விழித்த ஷெர்லாக் ஹோம்ஸ் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன், மேலே பார். என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகின்றன" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.
உடனே, வாட்சன், "கண்ணுக்குத் தெரியும் இந்த விண்மீன்களைத் தாண்டி, இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை, நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக், தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பனே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.
இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில், நகைச்சுவைத் துணுக்குகள், வெறும் சிரிப்பை மட்டுமல்ல. சிந்தனையையும் தூண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில், எது மிகவும் தெளிவாக, எளிதாகத் தெரியவேண்டுமோ, அதைத்தவிர ஏனையவற்றை வாட்சன் கண்டார் என்பதை எண்ணி, சிரிக்கிறோம். பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைக் காணமுடிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையை, காணமுடியாமல் போயிற்றே என்று, அவர் மீது பரிதாபப்படுகிறோம். வாட்சனை எண்ணி பரிதாபப்படும் நம் எண்ணங்களை நம்மீது திருப்பினால், நாமும், பல்வேறு தருணங்களில், இத்தகைய நிலையில் இருந்திருக்கிறோம் என்பதை உணர்வோம்.

கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் (Helen Keller) அவர்கள் கூறிய அழகான சொற்கள் நினைவுக்கு வருகின்றன: "காணும் திறன்பெற்ற பலருடன் நான் நடந்து செல்கிறேன். ஆனால், அவர்கள், கடலிலும், வானிலும் எதையும் காண்பதில்லை. வெறும் பார்க்கும் திறன்பெற்று திருப்தியடையும் இவர்களைவிட, பார்வையற்ற ஒளியில் நான் பாய்மரம் விரித்துச் செல்வது எவ்வளவோ மேல்."
அதேவண்ணம், ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய மற்றொரு கூற்றும் மிக ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. "உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்" “The most beautiful things in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” என்பதே அவரது அழகியக் கூற்று.

இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? (மாற்கு 8:17-18) என்று வேதனையுடன் தன் சீடர்களிடம் இயேசு கேள்விகளை எழுப்பிய நிகழ்வை சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இயேசு எழுப்பிய இக்கேள்விகள், மாற்கு நற்செய்தியில், தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த நிகழ்வுக்கு ஓர் அறிமுகம் போன்று பயன்படுகின்றன. கண்ணிருந்தும் காணமுடியாத தன் சீடர்களைப்பற்றி கவலையடைந்த இயேசு, பார்வையற்ற ஒருவரை குணமாக்குகிறார். மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இப்புதுமையின் அறிமுக வரிகளை இவ்வாறு வாசிக்கிறோம்:
மாற்கு 8:22-23
அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

இப்புதுமையின் நிகழ்களம் 'பெத்சாய்தா' என்ற குறிப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. 'பெத்சாய்தா' என்பது, 'பெத்' மற்றும் 'சாய்தா' என்ற இரு சொற்களின் இணைப்பில் உருவான சொல். 'பெத்' என்ற சொல்லின் பொருள், 'இல்லம்' அல்லது 'வீடு'. 'பெத்' என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியில், பெத்லகேம், பெத்தானியா, பெத்பகு போன்ற சொற்கள் ஒரு சில ஊர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. 'பெத்லகேம்' என்றால், 'அப்பத்தின் வீடு' என்றும், 'பெத்தானியா' என்றால், 'துயரத்தின் வீடு' என்றும் 'பெத்பகு' என்றால், 'அத்திப் பழங்களின் வீடு' என்றும் பொருள். அதேவண்ணம், 'பெத்சாய்தா' என்ற சொல்லுக்கு, 'வேட்டையாடும் வீடு' அல்லது, 'மீன்பிடிக்கும் வீடு' என்ற பொருள் வழங்கப்படுகிறது. 'பெத்சாய்தா' என்ற ஊரில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அந்நகருக்கு அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கணிப்பு.

'பெத்சாய்தா' என்ற ஊரின் பெயர், நான்கு நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி முதல் பிரிவில், இயேசு தன் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சீடர்களில் ஒருசிலர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெத்சாய்தா ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை, நற்செய்தியாளர் யோவான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்:
யோவான் 1:43-44
மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.

இயேசு தன் பன்னிரு திருத்தூதர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி திரும்பி வந்த திருத்தூதர்களை இயேசு பெத்சாய்தாவுக்கு அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்:
லூக்கா 9:10
திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.

இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா சென்றிருப்பதை அறிந்த மக்கள் அவர்களைத் தொடர்ந்து அங்கு சென்றதாகவும், அவர்களுக்கு இயேசு இறையரசை அறிவித்ததோடு, அவர்கள் நடுவே புதுமைகள் செய்ததையும் நற்செய்தியாளர் லூக்கா 9ம் பிரிவில் குறிப்பிடுகிறார். குறிப்பாக, 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தப் புதுமை, பெத்சாய்தா நகருக்கருகே பாலைநிலத்தில் நடைபெற்றதாக லூக்கா கூறியுள்ளார்.
சீடர்கள் ஒருசிலரின் வாழ்விடமாகவும், புதுமைகள் நிகழ்ந்த இடமாகவும் பெத்சாய்தா நகரை நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே நகரம், இயேசுவின் கண்டனத்தையும் பெற்றது என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர்:
மத்தேயு 11:20-22; காண்க. லூக்கா 10:13
இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

பெத்சாய்தா நகரில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் அம்மக்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடும் இயேசு, மீண்டும் ஒருமுறை, அந்நகரில், வல்ல செயலொன்றை நிகழ்த்துகிறார். அதனை நற்செய்தியாளர் மாற்கு மட்டுமே பதிவுசெய்துள்ளார்.

மாற்கு நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள தனித்துவமானப் புதுமைகள் இரண்டையும் இணைத்து சிந்திக்கும்போது, ஒரு சில ஒப்புமைகளை நம்மால் காணமுடிகிறது. 7ம் பிரிவில் இடம்பெறும், முதல் புதுமையில், காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். (மாற்கு 7:32) என்று கூறப்பட்டுள்ளது. அதேவண்ணம், இப்புதுமையிலும், அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர் (மாற்கு 8:22) என்று வாசிக்கிறோம். குறையுள்ள இவ்விருவரையும் இயேசுவிடம் அழைத்து வந்த நல்ல உள்ளங்களைப் பற்றி சிந்திக்கும்போது, அத்தகைய நற்பணிகளை இன்றளவும் தொடர்ந்து ஆற்றிவரும் நல்லோருக்காக, குறிப்பாக, நோயுற்றோர் பலரை திருத்தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நல்ல உள்ளங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

அடுத்து, இவ்விருவரையும் இயேசு கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று (மாற்கு 7:33). என்று முதல் புதுமையிலும், அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். (மாற்கு 8:33) என்று இரண்டாவது புதுமையிலும் கூறியுள்ளார்.

மூன்றாவது ஒப்புமையாக நாம் காண்பது, இயேசு இவ்விருவரையும் குணமாக்கிய முறை. இவ்விரு புதுமைகளிலும் இயேசு தன் உமிழ்நீரைப் பயன்படுத்தி, இவ்விருவரின் குறைகளை நீக்குகிறார். இயேசு பயன்படுத்திய இந்த முறையால், பார்வையற்றவர் படிப்படியாக பார்வை பெறும் நிகழ்வை நாம் அடுத்த தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.


23 May, 2020

Stories of hope, to future generations நம்பிக்கை கதைகள், நம் தலைமுறையினருக்கு


“The Great Commission” Matthew 28: 16 – 20

Ascension of Our Lord
World Day of Social Communications

After attending a convention led by Billy Graham, a woman wrote to him: “Dear Sir, I feel that God is calling me to preach the Gospel. But the trouble is that I have twelve children. What shall I do?” The televangelist replied: “Dear Madam, I am delighted to hear that God has called you to preach the Gospel. I am even more delighted to hear that He has already provided you with a congregation in your own home.”
Humorous though this may sound, it is the simple truth. While the lady saw the children as a hurdle to pursue her mission of preaching the Gospel, Mr Graham saw them as the means to fulfil that mission. All of us have a ‘congregation’ in our own families where we are called to share the good news and make disciples. This is the core message of the Feast we are celebrating today – the Feast of the Ascension!

This Feast is not about Jesus going up into heaven in a splendid show of glory. It is more about the final message Jesus shared with his disciples. In the Gospels, as well in the Acts of the Apostles, there are different versions of where and when the Ascension took place. Was it in Jerusalem, in Bethany or in Galilee? Was it forty days later or soon after the Resurrection? These are unanswered questions. The Evangelists and the author of the Acts of the Apostles were not interested in the historical details of the event. They were more interested in the message – the Mission – entrusted to the disciples by Jesus. It will be a worthwhile effort to focus our attention on the farewell message of Jesus.

This message, like many other statements of Jesus, has been interpreted by Christians in very different, sometimes, contrary ways. The parting message of Jesus given in today’s Gospel goes like this: Go therefore and make disciples of all nations (Matthew 28:19). In the Gospel of Mark, the message is: Go into all the world and proclaim the good news to the whole creation. (Mark 16:15).

The moment we hear the phrases ‘making disciples’ and ‘proclaiming the good news’, our minds tend to assign these ‘duties’ to Bishops,  Priests and Religious. It would be good to take a look at those standing around Jesus when these mission statements were made. They were all simple family persons – fishermen, tax collector etc.
Moreover, most of us may imagine churches and pulpits as appropriate places to proclaim the good news, as did the mother of the twelve children. Billy Graham tried to bring her back to the solid ground by saying that the family – familiar surrounding – is the best ‘pulpit’. By choosing Galilee as the place to give his special mission, Jesus has already made it clear that familiar, day to day surroundings are the best places to proclaim the good news.

During the time of Jesus, the land of Israel was divided into three parts - Judea, Samaria and Galilee. Of these, Judea, with the temple of Jerusalem, was considered holy, noble and cultured. The Jews who lived in Judea considered the neighbouring Samaria an unholy area due to the presence of the Samaritans. Galilee, which was at the north, was also considered contaminated due to foreign influence.
Jesus chose Galilee as the ‘headquarters’ of his ministry. It was Galilee where Jesus chose his disciples for the first time and it was Galilee where he and his disciples spent quality time together. It was the same Galilee where Jesus met his disciples for the final time and gave them the great mission. By choosing Galilee, Jesus gives us a clear indication that the Gospel needs to be proclaimed starting from familiar surroundings.

This idea of proclaiming the good news in familiar surrounding makes more sense this year when we had been asked to stay home during the Lenten season, the Holy Week and, in some countries, even during the Feast of the Ascension. We can surely examine and see whether our houses have become places of ‘gospel proclamation’ as well as the school of formation for ‘making disciples’!

How are we to ‘proclaim the good news’ and ‘make disciples’ in an effective way? Many interpretations have been given to this statement and, accordingly, many methods of this ‘proclamation’ have been adopted. Here is one such attempt described by Joseph Bayly in his book ‘The Gospel Blimp’. It is about the attempt of Christian neighbours reaching out to the community for Christ. The family purchased a hot air balloon – blimp – to broadcast the Gospel to the community and dropped "bombs" on the town (These "bombs" were Gospel passages wrapped in coloured cellophane). They were also blaring Gospel songs so loudly from the blimp that the people had to run away closing their ears and the dogs began howling in response. In spite of the trouble and expense of this attempt to proclaim the good news, it failed miserably.

The point Joseph Bayly was making is that there is no substitute for loving, caring, and personal witness, even though this is slow, time-consuming, likely to cause anxiety and even likely to create some hostility. Relying heavily on fancied tools of communication to proclaim the good news, sometimes, may backfire.

It is significant that on the Feast of the Ascension, the Church celebrates the 54th World Day of Social Communications. Pope Francis has published this year’s message with the title: “That you may tell your children and grandchildren” (Ex 10:2) - Life becomes history

Every year, the message for the World Day of Social Communications is published on January 24, the Feast of St. Francis de Sales, the patron saint of Catholic writers and the Catholic press. When Pope Francis published this year’s message on January 24, there was hardly any symptom of the pandemic that was to sweep the world in a month’s time. But, it is significant that the quote used in the title of this message was taken from the Book of Exodus. In this book, the ten plagues that ravaged Egypt are described from chapter 7 to chapter 12. In this section, the Lord tells Moses to recount to his children and grandchildren what signs the Lord had worked among the Egyptians and the Israelites during the plagues.   

While the COVID 19 pandemic is keeping most of us locked up, it is a good time to reflect on what the Lord has done to us and also to recount his blessings to our children and grandchildren.
Pope Francis has devoted his message to theme of story telling. Here are the opening lines of this year’s message:
I would like to devote this year’s Message to the theme of storytelling, because I believe that, so as not to lose our bearings, we need to make our own the truth contained in good stories. Stories that build up, not tear down; stories that help us rediscover our roots and the strength needed to move forward together. Amid the cacophony of voices and messages that surround us, we need a human story that can speak of ourselves and of the beauty all around us. A narrative that can regard our world and its happenings with a tender gaze. A narrative that can tell us that we are part of a living and interconnected tapestry. A narrative that can reveal the interweaving of the threads which connect us to one another.

The opening lines of this message seem to speak to us specifically during this pandemic. The mainstream media as well as the social media have been filled with stories that have torn the human family to pieces. In this midst of this ‘cacophony of voices and messages’ we are called to narrate stories that build up our confidence in humanity and pass on these stories to our children and our grandchildren. Such stories of tenderness have been shared in our media now and then. But, unfortunately, the overwhelming stories of tragedy have injected too much negativity in our common narrative.

Pope Francis, in his message pays special attention to how ‘disinformation’ and ‘falsehood’ have brainwashed many of us. He goes on to tell us that we need wisdom, courage, patience, and discernment to ‘rediscover stories’ that help us not to lose hope:
In an age when falsification is increasingly sophisticated, reaching exponential levels (as in deepfake), we need wisdom to be able to welcome and create beautiful, true and good stories. We need courage to reject false and evil stories. We need patience and discernment to rediscover stories that help us not to lose the thread amid today’s many troubles. We need stories that reveal who we truly are, also in the untold heroism of everyday life.

Pope Francis, in this message reminds us that Jesus was a great story teller. This great story teller, before his departure, called his disciples and asked them to continue proclaiming these stories of hope and love.

Let us close our thoughts with some powerful thoughts on how ‘story-telling’ will help us survive great tragedies of life. Life on earth is guaranteed as long as song, dance and story-telling live. Here is a quote from Oren Lyons, a Native American Faithkeeper: “Life will go on as long as there is someone to sing, to dance, to tell stories and to listen.”
John Shea, an expert on the theme of ‘storytelling in world religions’, also talks of the power of stories in his famous book ‘Stories of God – An Unauthorized Biography’:
“When we reach our limits, when our ordered worlds collapse, when we cannot enact our moral ideals, when we are disenchanted, we often enter into the awareness of Mystery... Our dwelling within Mystery is both menacing and promising, a relationship of exceeding darkness and undeserved light. In this situation, with this awareness, we do a distinctively human thing. We gather together and tell stories of God to calm our terror and hold our hope on high.”

When we celebrate the Feast of the Ascension, as well as the World Day of Social Communications, we pray that every one of us cherish and nourish stories of hope and pass them on to our children and grandchildren. Thus, the world will be filled with the courageous proclamation of Good News and that all of us can become a grand family of true disciples!   

Theme of the 54th World Communications Day

ஆண்டவரின் விண்ணேற்றம்
உலக சமூகத் தொடர்பு நாள்

புகழ்பெற்ற விவிலியப் போதகர், பில்லி கிரஹாம் (Billy Graham) அவர்கள், 67 ஆண்டுகளாக தன் போதகப்பணியை இடைவிடாமல் ஆற்றி, 2014ம் ஆண்டு, தன் 96வது வயதில் ஒய்வு பெற்றார். 2018ம் ஆண்டு, தன்100வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஆலயங்கள், அரங்கங்கள், மற்றும் தொலைகாட்சியில் அவர் ஆற்றியுள்ள உரைகள், பல கோடி மக்களின் உள்ளங்களைத் தொட்டன.
அவரது உரைகளை, தொடர்ந்து கேட்டுவந்த ஓர் இல்லத்தலைவி, ஒருநாள், கிரஹாம் அவர்களுக்கு மடலொன்றை அனுப்பினார். "அன்பு ஐயா, நற்செய்தியைப் போதிக்கும்படி, கடவுள் என்னை அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால், எனக்கு பன்னிரு குழந்தைகள் உள்ளனர். அதுவே எனக்குள்ள பிரச்சனை. நான் என்ன செய்யட்டும்?" என்று அப்பெண் எழுதியிருந்தார்.
சில நாள்கள் சென்று, கிரஹாம் அவர்களிடமிருந்து, அந்த இல்லத்தலைவிக்கு பதிலொன்று வந்தது. "அன்பு அம்மையாரே, நற்செய்தியைப் போதிக்கும்படி கடவுள் விடுக்கும் அழைப்பை நீங்கள் உணர்ந்துள்ளதைக் கேட்டு, எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதைவிட, எனக்கு, கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், உங்கள் நற்செய்தி போதனைகளைத் துவங்குவதற்கு, கடவுள் ஏற்கனவே, உங்கள் வீட்டிற்குள் ஒரு சபையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்பதே!" என்று கிரஹாம் அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்.

உங்கள் வீட்டிற்குள்ளேயே நீங்கள் நற்செய்தியைப் போதிக்கமுடியும் என்று, கிரஹாம் அவர்கள் கூறியது, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும், விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருளுக்கு நம்மை அழைத்துவருகிறது. இப்பெருவிழாவின் கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம் அடைந்த நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்(மத்தேயு 28:19) என்ற கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும் குறிப்பிட்டுள்ளன.

'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் துறவியர் என்ற குறுகலான எண்ணம் எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதே இவ்விழா நமக்கு உணர்த்தும் முதல் உண்மை. அடுத்து, பறைசாற்றும் பணிகளை ஆற்ற சிறந்த இடங்கள், கோவில், பிரசங்க மேடை, மக்கள் கூடிவரும் அரங்கம் என்ற கற்பனைகளை நீக்கவும், இவ்விழா நம்மை அழைக்கிறது.

நற்செய்தியைப் போதிக்க, இறைவன் தன்னை அழைப்பதாக அந்த இல்லத்தலைவி சொன்னபோது, பில்லி கிரஹாம் அவர்களைப் போன்று, தானும் மேடைகளில் ஏறி போதிப்பதை, அவர்  நினைத்துப் பார்த்திருப்பார். தனக்கு இறைவன் வழங்கியுள்ள இந்த அழைப்பிற்கு, ஒரு தடையாக தன் குடும்பம் இருக்கின்றது என்பதை, அவர் தன் மடலில், சொல்லாமல் சொல்லியிருக்கிறார். கிரஹாம் அவர்கள் அனுப்பிய பதிலில், இல்லத்தலைவியின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்க அவர் அழைக்கிறார். இல்லத்தலைவியின் நற்செய்திப் போதனைக்கு, அவரது குடும்பம் ஒரு தடையல்ல, மாறாக, அதுவே, அப்பணிக்கு தகுந்த ஆரம்பம் என்பதை, கிரஹாம் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. இயேசு தன் சீடர்களை இறுதியாகச் சந்தித்த நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, கலிலேயாவில் நிகழ்ந்ததென்று, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுவது, நம் கவனத்தை ஈர்க்கிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில், யூதேயா, சமாரியா, கலிலேயா ஆகிய மூன்று பகுதிகள் இருந்தன. இவற்றில், எருசலேம் கோவிலை மையமாகக் கொண்டிருந்த யூதேயா, உயர்ந்த, புனிதமிக்க பகுதியாகக் கருதப்பட்டது. இதற்கடுத்திருந்த சமாரியா பகுதியோ, இஸ்ரயேல் மக்களின் பார்வையில் மிகத் தாழ்ந்ததாகக் கருதப்பட்டது. வடக்கில், ஏனைய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த கலிலேயா, பிற இனத்தாருடன் கலப்படம் கொண்ட பகுதியாக, புனிதம் குறைந்த பகுதியாகக் கருதப்பட்டது.

இயேசு, தன் நற்செய்தியை அறிவிக்க, இறையரசை அறிமுகப்படுத்த, கலிலேயாவைத் தேர்ந்தெடுத்தார் (மத். 4:12-17). கலிலேயக் கடற்கரையில் அவர் தேர்ந்தெடுத்த சீடர்களுடன் இறுதி சந்திப்பை மேற்கொண்டது, மீண்டும் கலிலேய மலைப்பகுதியே! தன் பணிவாழ்வைத் துவக்கிய அதே பகுதிக்கு, தான் சீடர்களைத் தேர்ந்தெடுத்த அதே பகுதிக்கு, தன் சீடர்களை மீண்டும் அழைத்து, அங்கிருந்து அவர்களது நற்செய்திப் பணி துவங்கவேண்டும் என்று இயேசு பணிக்கிறார். நற்செய்தியைப் பறைசாற்றுதல், சீடர்களை உருவாக்குதல் போன்ற உன்னத பணிகள், அவரவர் வாழும் சூழல்களில், இல்லங்களில் துவங்கவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வழியே இயேசு நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறார். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இதுவே!

ஏனைய ஆண்டுகளை விட இவ்வாண்டு, விண்ணேற்றப் பெருவிழாவை நாம் இல்லங்களில் இருந்தவண்ணம் கொண்டாடுவது, இவ்விழாவின் கருப்பொருளை, அதாவது, நற்செய்தியின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நாம் வாழும் சூழல்களில் உருவாகவேண்டும் என்ற கருப்பொருளை மீண்டும் நம் உள்ளங்களில் பதிக்க வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்போ என்று எண்ணத் தோன்றுகிறது.
கடந்த சில வாரங்களாக, பொது வழிபாடுகளுக்கு கோவில்கள் மூடப்பட்ட நிலையில், நம் இல்லங்கள், வழிபாட்டுத் தலங்களாக மாறியிருக்க வாய்ப்புண்டு. தொலைக்காட்சி அல்லது ஏனைய ஊடகங்கள் வழியே, நற்செய்தியின் பறைசாற்றல், இல்லங்களில் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்த வாய்ப்புக்களை நாம் எவ்வாறு பயன்படுத்தியுள்ளோம் என்பதை சிந்திப்பது நல்லது. இனிவரும் நாள்களில், தொடர்ந்து, நம் இல்லங்களை ஆலயங்களாக மாற்றவும், நம் குடும்பங்களில் நற்செய்தியின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நடைபெறவும், இறைவன் நம்மை வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.
இல்லங்களில், விண்ணேற்றப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடும் வேளையில், இயேசு நம் இல்லங்களைத் தேடிவருவதாகவும், உலகெங்கும் சென்று சீடர்களை உருவாக்குதல், நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்பவை, பிரம்மாண்டமான பணிகள் என்றாலும், அவை நம் இல்லங்களில், அடக்கமாக, அமைதியாக துவங்கவேண்டும் என்ற அன்புக்கட்டளைகளை அவர் வழங்குவதாகவும் கற்பனை செய்வது பயனளிக்கும்.

'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர், 'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில், நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில், Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை மேற்கொள்ள இத்தகைய வானூர்தியைப் பயன்படுத்தின. அதே முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய வாசகங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, வானூர்தியிலிருந்து, ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்தப் பைகள், ஏறத்தாழ குண்டுகள் போல், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தியிலிருந்து, நற்செய்தி பாடல்கள் மிகச் சப்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டன. மக்கள் அதைக் கேட்டு தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. விவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த 'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர்.
நேரடியான மனிதத்தொடர்பு இன்றி, தொடர்புக்கருவிகளை மட்டும் நம்பி, பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை, இறைவனிடமிருந்தும், நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை, ஜோ பெய்லி அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார்.

மே 24, இஞ்ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில், 54வது உலக சமூகத் தொடர்பு நாள் சிறப்பிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாவலர் என்று கருதப்படும் புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் (St Francis de Sales) அவர்களின் திருநாளான சனவரி 24ம் தேதியன்று, உலக சமூகத் தொடர்பு நாளுக்குரிய செய்தியை, திருத்தந்தையர் வெளியிட்டு வருகின்றனர்.
2020ம் ஆண்டு, சனவரி 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டுக்குரிய செய்தியை வெளியிட்ட வேளையில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தைப் பற்றிய விவரங்கள், அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே வெளியாகியிருந்தன. இச்செய்தியை வெளியிட்ட வேளையில், இந்நோயின் உலகளாவிய பரவலையோ, அதன் விளைவாக நம்மீது சுமத்தப்பட்ட முழு அடைப்பையோ குறித்து, திருத்தந்தை, எள்ளளவும் எண்ணியிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அவர் இவ்வாண்டுக்கென தேர்ந்தெடுத்த தலைப்பும், அதனுடன் இணைத்திருந்த விவிலிய மேற்கோளும், இன்றைய நிலையை, பொருத்தமாகப் பிரதிபலிக்கின்றன.
நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வாயாக" (வி.ப. 10:2) என்று, விடுதலைப் பயண நூலில் காணப்படும் மேற்கோளையும், "வாழ்வு வரலாறாக மாறுகிறது" என்ற சொற்களையும், திருத்தந்தை, இச்செய்தியின் தலைப்பாக வழங்கியுள்ளார். எகிப்தில் ஏற்பட்ட பத்து பெருந்துன்பங்கள் (கொள்ளை நோய்கள்), விடுதலைப்பயண நூலின் 7ம் பிரிவில் துவங்கி, 12ம் பிரிவு முடிய விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நோய்கள் பரவிவந்த காலத்தில், ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம், என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" (வி.ப. 10:1-2) என்று கூறிய அந்த வாக்கியங்களின் ஒரு பகுதி, 54வது உலக சமூகத் தொடர்பு நாளின் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள கூறியுள்ள கருத்துக்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் உருவாகியுள்ள நெருக்கடி நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய உண்மைகளாகத் தெரிகின்றன. 'கதை சொல்லுதல்' என்ற மையக்கருத்தையொட்டி, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியின் ஒரு சில கூற்றுகள் இதோ:
"இவ்வாண்டின் செய்தியை 'கதை சொல்லுதல்' என்ற பொருளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். உண்மைகள் அடங்கிய நல்ல கதைகளை நாம் உருவாக்கவேண்டும். கட்டியெழுப்பும் கதைகள் வேண்டும், சீரழிக்கும் கதைகள் அல்ல. நம்மைச் சுற்றி ஓலமிடும் பல்வேறு குரல்கள் நடுவே, மனிதத்தின் அழகை வெளிப்படுத்தும் கதைகள் வேண்டும்."
"உயர்தர தொழில் நுட்பங்களின் உதவியுடன் இன்று பொய்மை கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது. இந்தப் பொய்மையை நிராகரிக்கும் துணிவு நமக்குத் தேவை. உண்மையான, அழகான, நன்மை தரும் கதைகளை உருவாக்கவும், வரவேற்கவும் நமக்கு ஞானம் தேவை. ஒவ்வொருநாளும் வெளிப்படும் நமது அடிப்படை நன்மைத்தனத்தைக் கூறும் கதைகளைக் கண்டுபிடிக்கும் பொறுமையும், பகுத்தறிதலும் நமக்குத் தேவை."
கொரோனா தொற்றுக்கிருமியைப்பற்றி வெளிவந்த, இன்னும் வெளிவந்துகொண்டிருக்கும் விவரங்களில் பெரும்பாலானவை, நம் நம்பிக்கையைக் குலைத்துள்ளன. இவற்றின் நடுவே, ஆங்காங்கே, மனிதத்தை உயர்த்திப்பிடிக்கும் கதைகளும் பேசப்படுகின்றன.

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவையும், 54வது உலக சமூகத் தொடர்பு நாளையும் கொண்டாடும் இந்நாளில், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்று இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை ஏற்று, தங்கள் வாழ்வின் வழியே நற்செய்தியைப் பறைசாற்றிவருவோரை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம். கொரோனா தொற்றுக்கிருமியின் கோரப்பிடியிலிருந்து மக்களை, குறிப்பாக, வறியோரை காக்க போராடிவரும் அன்புள்ளங்கள் அனைவருக்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
நல்ல, நம்பிக்கை தரும் செய்திகளின் பறைசாற்றலும், சீடர்களின் உருவாக்கமும் நம் குடும்பங்களிலிருந்து, நம் தினசரி வாழ்க்கையிலிருந்து துவங்கவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.