His Word, like a burning fire
22nd Sunday in Ordinary Time
When the Second
Millennium – the 20th century – was coming to a close, many opinion
polls were conducted on various aspects of the century. One of them was
conducted by researchers at UW–Madison and Texas A&M University. They compiled
the list reflecting the opinions of 137 leading scholars of American public
address. The experts were asked to recommend speeches on the basis of social
and political impact, and rhetorical artistry. The mastery and magic of Dr
Martin Luther King Jr.’s famous “I Have a Dream” speech earned it top honours
in a new list of the 100 best political speeches of the 20th century.
Here is a write-up
about this famous speech, given in Wikipedia:
That speech
delivered from the steps of the Lincoln Memorial, was a defining moment of the
American Civil Rights Movement. Delivered to over 200,000 civil rights
supporters, the speech was ranked the top American speech of the 20th century
by a 1999 poll of scholars of public address. According to U.S. Representative
John Lewis, who also spoke that day as the President of the Student Non-Violent
Coordinating Committee, "Dr. King had the power, the ability, and the
capacity to transform those steps on the Lincoln Memorial into a monumental
area that will forever be recognized. By speaking the way he did, he educated,
he inspired, he informed not just the people there, but people throughout
America and unborn generations." (Wikipedia)
Yes, generations would
have profited by this speech via channels like YouTube. We are thinking of this
speech today, since we remembered this speech last Friday, August 28. We are
also thinking of the speaker - Dr Martin Luther King Jr., since this Sunday’s
liturgy invites us to reflect on the life of a prophet, a disciple of Christ.
Martin, without doubt, was a prophet and a disciple of Christ in the 20th
century.
Just to refresh our
memory, here are a few lines from this famous speech:
I have a dream that
one day this nation will rise up and live out the true meaning of its creed:
"We hold these truths to be self-evident: that all men are created
equal."
I have a dream that
my four little children will one day live in a nation where they will not be
judged by the colour of their skin but by the content of their character.
I have a dream
today.
I have a dream that
one day, down in Alabama, with its vicious racists, with its governor having
his lips dripping with the words of interposition and nullification; one day
right there in Alabama, little black boys and black girls will be able to join
hands with little white boys and white girls as sisters and brothers.
I have a dream
today.
I have a dream that
one day every valley shall be exalted, every hill and mountain shall be made
low, the rough places will be made plain, and the crooked places will be made
straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see
it together.
Reading this speech in
2020, images of ‘black and white persons joining hands’ flood our minds, not as
citizens of an equal society, but to protest against the killing of George
Floyd (May 25) and the shooting of Jacob Blake (August 23) in the back, in
front of his children. The protests organized in quite a few countries under
the banner ‘Black Lives Matter’, tell us clearly that the dream of Martin
Luther King is far from reality – not only in the U.S. but all over the world!
On the 57th
anniversary of the famous speech “I Have a Dream”, the Bishops of the United
States have urged Catholics to pray and fast for an end to racism. Bishop
Shelton Fabre, chair of the anti-racism committee of the U.S. bishops’
conference, asked Catholics to pray and fast for an end to racism, either on
Friday (Aug.28) or on September 9, the feast of St. Peter Claver – the Jesuit priest
and abolitionist who ministered to African slaves in 17th-century South
America.
The
mainstream, as well as, social media in the U.S. enjoy relative freedom. Hence,
the atrocities and the racial unrest in the U.S. have been seen by the whole
world. Such atrocities do happen in other countries as well, but are not seen
due to the control by the government.
I have watched “I Have
a Dream” speech in the YouTube many times. I have been impressed with the way
Martin Luther King got the whole crowd engaged in what he was saying. Although
this was a political speech, it was received as a homily since people responded
to his words with their approval of ‘Yes’ and ‘Amen’. Martin, a Baptist
preacher, had interwoven the dreams of Prophets Isaiah and Amos along with his
own.
Dr King not only spoke
like a prophet but also led the life of a prophet. Most of the prophets were
called to point out what was wrong with their society. They had to tell people
the bitter truth. When Martin spoke about the racially segregated American
society, and spelt out his dreams for that society, he was 36 years old. The
very next year, in 1964, King became the youngest person to receive the Nobel
Peace Prize. Four years later, in 1968, he was killed. No prophet has been
accepted in his own country, or, for that matter, by the world at large.
Many Prophets, when
they stood up against powerful kings, drunk with unlimited power, were killed mercilessly.
The first martyr in the New Testament is St John the Baptist for challenging
King Herod. On August 29, this Saturday we commemorated the beheading of St
John. John was a fire-brand all through his life and he blazed a trail, which
was followed by thousands of prophets!
The world tried to
‘integrate’ Prophets in the mainstream life and failed miserably. Hence, they
were eliminated. Knowing that the life of a prophet is always to swim against
the current, many prophets tried to flee from their mission. But God pursued
them until they completed their mission. In the first reading today, Jeremiah
expresses his agony of being a prophet.
Jeremiah 20:7-9
You deceived me,
LORD, and I was deceived; you overpowered me and prevailed.
I am ridiculed all
day long; everyone mocks me.
Whenever I
speak, I cry out proclaiming violence and destruction.
So the word of
the LORD has brought me insult and reproach all day long.
But if I say, “I
will not mention his word or speak anymore in his name,” his word is in my
heart like a fire, a fire shut up in my bones.
I am weary of
holding it in; indeed, I cannot.
Truly agonising words!
Jesus, a model and an
inspiration for all the Prophets, knew that the world around him would not
tolerate him and his message. Today’s gospel (Matthew 16: 21-27) begins with
Jesus predicting his passion and death. Peter, as a true representative of the
world, and, all of us, takes him aside to put some sense into Him. Jesus, who
had given one of the best compliments to Peter for his confession (as heard in
the last Sunday’s gospel) now calls him a Satan. Jesus then goes on to talk
about the price a prophet needs to pay and the ultimate reward awaiting a
prophet.
The world needs
prophets… prophets like Jeremiah, prophets like Martin Luther King Jr. The
world needs to hear the bitter truth of what is wrong with it. Most of us
prefer to keep silent and not speak up when things go wrong. That is why Martin
Luther King once said: “History will have to record that the greatest
tragedy of this period of social transition was not the strident clamor of the
bad people, but the appalling silence of the good people.” Very true even
today!
The opening slate of
the famous movie JFK by Oliver Stone shows a quote by an American poet Ella Wheeler Wilcox: “To sin by silence when we
should protest makes cowards out of men.” President John F Kennedy (JFK),
as we all know, was shot dead in November 1963, the same year that Martin
Luther King delivered his memorable “I have a dream” speech. In the movie
script of JFK, there is a line spoken by the actor playing the role of Jim
Garison, the District Attorney of Orleans Parish,
The scare tactics employed
using the COVID-19 virus, have given free rein for many world leaders to
unleash autocratic anarchy. Anyone who raises a voice, any prophet who tells
the truth is put behind bars without proper trial. We need to pray that the
post-COVID world will see many prophets challenging the dictatorial behaviour
of the present day leaders.
Let me close these
reflections with quotes from a famous Jewish writer Elie Wiesel. Eliezer Wiesel
is a Romania-born American novelist, political activist, and Holocaust survivor
of Hungarian Jewish descent. He is the author of over 50 books, the best known
of which is ‘Night’, a memoir that describes his experiences during the
Holocaust and his imprisonment in several concentration camps. Wiesel was
awarded the Nobel Peace Prize in 1986.
“I swore never to
be silent whenever and wherever human beings endure suffering and humiliation.
We must always take sides. Neutrality helps the oppressor, never the victim.
Silence encourages the tormentor, never the tormented.” Elie Wiesel
“The opposite of
love is not hate, it's indifference. Indifference, to me, is the epitome of
evil. Because of indifference, one dies before one actually dies.” Elie Wiesel
On August 29, this
Saturday, many shrines of our Lady of Good Health have begun the Novena to Our Lady
culminating on September 8, the Feast of the Birth of Virgin Mary. We pray,
through the intercession of our Lady of Good Health, that God drives away the
COVID-19 virus, as well as the viruses of social inequality and injustice away
from us.
His Word, like a burning fire
பொதுக்காலம் 22ம் ஞாயிறு
இருபது
ஆண்டுகளுக்குமுன், இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நாம் நெருங்கியவேளையில், அந்த நூற்றாண்டை,
பின்னோக்கிப் பார்த்தோம். அந்த நூற்றாண்டைப்பற்றிய ஆய்வுகளும், கருத்துக்கணிப்புகளும்
மேற்கொள்ளப்பட்டன.
20ம்
நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த சொற்பொழிவுகளைக் குறித்து, அமெரிக்க ஐக்கிய
நாட்டில் உள்ள Wisconsin-Madison மற்றும் Texas A&M என்ற இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள்
நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் இறுதியில்,
அந்நாட்டில், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின்
லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய
"I have a dream" அதாவது, "எனக்கொரு கனவு உண்டு" என்ற உரையே, தலை சிறந்த
உரை என்று கணிக்கப்பட்டது.
1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, சக்திமிக்க அந்த உரை வழங்கப்பட்டதால், அந்நிகழ்வை
நினைவுகூர்ந்த இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும்
இனவெறியை இறைவன் குணமாக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், கத்தோலிக்கர்
அனைவரும், உண்ணா நோன்பிருந்து இறைவனை மன்றாடுமாறு, அந்நாட்டு
ஆயர்கள் அழைப்பு விடுத்தனர். அந்த உரை
வழங்கப்பட்டு, 57 ஆண்டுகள் கழிந்தபின்னரும், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கண்ட சமத்துவமும், நீதியும், இன்னும்
நிறைவேறாதக் கனவாகவே உள்ளன என்பதை அந்நாட்டில் நிகழ்ந்த கொடுமைகள் நினைவுறுத்தின.
இவ்வாண்டு, மே, 25ம் தேதி, மின்னியாபொலிஸ்
நகரில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd) அவர்கள், காவல் துறையைச்
சேர்ந்த ஒருவரால் கழுத்தில் மிதிபட்டு இறந்தது, ஆகஸ்ட் 23ம் தேதி, கடந்த ஞாயிறன்று, கெனோஷா என்ற நகரில்,
கறுப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் (Jacob
Blake) அவர்கள், காவல்துறையினரால் ஏழுமுறை சுடப்பட்டு, உயிருக்குப் போராடிக்
கொண்டிருப்பது, ஆகிய நிகழ்வுகள், மார்ட்டின் லூத்தர் அவர்கள் கண்ட கனவிலிருந்து வெகு தூரம் விலகி நிற்கும் அமெரிக்க
ஐக்கிய நாட்டை, உலகிற்கு காட்டிவருகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஊடகங்களும், சமுதாய
வலைத்தளங்களும், சற்று சுதந்திரமாகச் செயல்படுவதால், இச்செய்திகள் உலகெங்கும் பரவியுள்ளன. ஆனால், பல்வேறு நாடுகளில், ஊடகங்களும்,
சமுதாய வலைத்தளங்களும், வெகுவாக முடக்கப்படுவதால், இத்தகைய அநீதிகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சமத்துவமின்மை, அநீதி ஆகியவை, அனைத்து
நாடுகளிலும், நீக்கமற நிறைந்துள்ள கிருமிகள் என்பதை, கண்ணுக்குத் தெரியாத
ஒரு கிருமி, ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவுறுத்தி வருகிறது.
சமுதாய
அநீதிகள் என்ற கிருமிகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க, இந்த
ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன. "எனக்கொரு கனவு உண்டு" என்ற
அந்த உரையை வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த
ஓர் இறைவாக்கினர் என்பதை மறுக்கமுடியாது.
1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்டனில், ஆபிரகாம் லிங்கன்
நினைவு மண்டபத்தின் முகப்பில் நின்றபடி, 36 வயது நிரம்பிய இளம் கிறிஸ்தவப் போதகர் மார்ட்டின்
அவர்கள் வழங்கிய உரை, ஒரு மறையுரை அல்ல. அது ஓர் அரசியல் உரை. இருந்தாலும், அவர் வழங்கிய
அந்த அரசியல் உரையை, ஒரு மறையுரையைப் போல மக்கள் கேட்டு, ஆமென், ஆமென் என்று அடிக்கடி
சொல்வதை, வீடியோப் பதிவுகளில் நாம் காணமுடிகிறது.
இதோ,
அவ்வுரையின் ஒரு சில வரிகள்....
எனக்கொரு
கனவு உண்டு... "எல்லா மனிதரும் சமம் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும்
ஓர் உண்மை" என்று இந்த நாடு சொல்லும் உறுதிப்பிரமாணம் உண்மையாகும் என்ற கனவு எனக்கு
உண்டு.
எனக்கொரு
கனவு உண்டு... எனது நான்கு பிள்ளைகளும் வாழப்போகும் இந்த நாட்டில், அவர்களது குணத்தையும்
அறிவுத்திறனையும் பார்த்து அவர்கள் மதிக்கப்படுவார்களே தவிர, அவர்களது தோல் நிறத்தை
வைத்து அல்ல என்ற கனவு எனக்கு உண்டு.
ஒவ்வொரு
பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள்
சம நிலமாக்கப்படும், கோணலான
பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக்
காண்பர். எனக்கொரு கனவு உண்டு...
இறைவாக்கினர்கள்
எசாயா, ஆமோஸ் ஆகியோர் கண்ட கனவுகளைத்
தன் கனவுடன் இணைத்து, மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரையை, அங்கு கூடியிருந்த இரண்டு
இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரமாய் வரவேற்றனர். வார்த்தைகளில் சொல்லமுடியாமல்,
அவர்கள் உள்ளத்தில் புதைந்திருந்த பல ஏக்கங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்த மார்ட்டின்
அவர்களின் கனவை, தங்கள் கனவாக, நன்றியோடு ஏற்றுக்கொண்டனர். அந்த உரையைத்தொடர்ந்து,
அமெரிக்காவில், கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வேண்டும் என்ற போராட்டம், உச்சநிலையை
அடைந்தது. மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரை, ஊடகங்களிலும், சமூக
வலைத்தளங்களிலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பல கோடி மக்களை சென்றடைந்துள்ளது.
அவர்கள் மனதை சமத்துவ சமுதாயம் நோக்கி நடத்திச் சென்றுள்ளது.
ஆனால், மார்ட்டின் அவர்கள் வழங்கிய
அந்த உரை, எல்லா மக்களையும் மகிழ்விக்கவில்லை. அந்த உரையைக் கேட்ட பலர், தங்கள் தூக்கத்தை, நிம்மதியை இழந்தனர். சமத்துவக்
கனவை மக்கள் மனதில் விதைத்த மார்ட்டின் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தால், வெள்ளையினத்தவரின்
ஆதிக்கத்திற்கு பெரும் ஆபத்து என்று அவர்கள் நினைத்தனர். 36ம் வயதில் கறுப்பின மக்களிடையே
நம்பிக்கையை வளர்த்த மார்ட்டின் அவர்கள், 37வது வயதில் உலக அமைதிக்கென வழங்கப்படும்
நொபெல் விருதைப் பெற்றார். ஈராண்டுகள் சென்று, 39வது வயதில், சுட்டுக்கொல்லப்பட்டார். இறைவாக்கினர் எவரும்,
இவ்வுலகின் வெற்றிகளைக் குவித்ததாக, நிம்மதியாக வாழ்ந்ததாக, வரலாறு கிடையாது.
இன்னும் குறிப்பிட்டு
சொல்லவேண்டுமெனில், அதிகாரம் என்ற போதையில்
மூழ்கியிருக்கும் தலைவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் இறைவாக்கினர்கள் கொடூர
மரணங்களுக்கு உள்ளாயினர் என்பதை வரலாறு பலமுறை நமக்கு உணர்த்தியுள்ளது. இவர்களின் ஒரு
முன்னோடியாக, நாம், புனித திருமுழுக்கு யோவானை எண்ணிப்பார்க்கலாம். மன்னன் ஏரோதின்
தவறைச் சுட்டிக்காட்டிய யோவானின் தலை வெட்டப்பட்ட நாளை, ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.
தன் சொல், செயல், அனைத்தின் வழியாகவும், தீமையைச் சுட்டெரிக்கும் சுடராக வாழ்ந்த திருமுழுக்கு
யோவானைப்போல், பல்லாயிரம் இறைவாக்கினர்கள்,
வரலாற்றில் ஒளிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், 20ம் நூற்றாண்டு
இறைவாக்கினர்களில் ஒருவராக, மார்ட்டின் லூத்தர்
கிங் ஜூனியர் அவர்களை நாம் எண்ணிப்பார்க்கலாம்.
மகாத்மா
காந்தி அவர்களின் அகிம்சைக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், வெள்ளையினத்தவருக்கு எதிராக
மேற்கொண்ட சமஉரிமை போராட்டத்தில், காந்தியைப்போல, அகிம்சை வழிகளையே கடைபிடித்தார்.
இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல என்பதையும், எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக உயிர்
தியாகம் உட்பட, பல தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், மார்ட்டின் அவர்கள் உணர்ந்திருந்தார்.
"ஒரு கொள்கைக்காக இறக்கத் துணியாதவன், வாழவே தகுதியற்றவன்" என்பது,
மார்ட்டின் அவர்களின் புகழ்பெற்ற ஒரு கூற்று.
இறைவாக்கினர்கள்
பலர், இறைவன் வழங்கிய கொள்கைகளை தங்கள் வாழ்வில் பின்பற்றியவர்கள். அக்கொள்கைகளைவிட்டு
விலகி வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துச்சொல்லும் பணியை, இறைவன்
அவர்களுக்கு அளித்தார். விவிலியத்தில் நாம் சந்திக்கும் ஒரு சில இறைவாக்கினர்கள், இறைவன்
அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து, ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும்வரை, இறைவன் அவர்களை
விடவில்லை. இப்படி, தன்னை இடைவிடாமல் துரத்திவந்த இறைவனிடம், இறைவாக்கினர் எரேமியா
பேசுவதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கிறோம். - இறைவாக்கினர் எரேமியா 20: 7-9
“நான் வாயைத் திறந்தாலே
உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச்
சொல்லவேண்டியுள்ளது. ‘எனக்கு ஏன் வம்பு’ என்று, பேசாமல் இருந்தாலும்,
உமது வார்த்தைகள், என் மனதில், நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கின்றன” என்று, ஆண்டவரிடம்
முறையிடுகிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்த எரேமியாவைப்போல,
பலகோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.
இத்தகையைச்
சூழலில், நம்மில் பலர், மௌனம் காப்பதே சிறந்த வழி என்று எண்ணுவது
இயல்பு. மௌனம் காக்க முடிவெடுப்போரைக் குறித்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள்
கூறிய ஒரு கூற்று, நினைவில்கொள்ளத்தக்கது:
“சமுதாய மாற்றத்தை நோக்கிச்செல்லும் இக்காலத்தின் மிகப்பெரும் வேதனை
என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலரது கூப்பாடு அல்ல...
நல்லவர்களின் அதிர்ச்சியூட்டும் அமைதியே, பெரும் வேதனைதரும் காரியம்.” மார்ட்டின் அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள், இன்றும், பொருள் உள்ளவைகளாகத் தெரிகின்றன.
மௌனம் காப்பதே சிறந்த வழி என்று நம்மில் பலர் நினைப்பதைக்
குறித்து, Ella
Wheeler
Wilcox என்ற அமெரிக்க கவிஞர் கூறும் சொற்கள், கூர்மையாக நம் உள்ளங்களில் பதிகின்றன::
"எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய வேளையில் மௌனம் காத்து, பாவம் புரிவது, நம் அனைவரையும் கோழைகளாக்குகிறது".
மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், தன் புகழ்பெற்ற
உரையை வழங்கிய அதே 1963ம் ஆண்டு, அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ஜான் F.கென்னடி அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து நடந்த
ஒரு வழக்கை மையப்படுத்தி JFK என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. மக்கள் காக்கும் மௌனத்தைப்பற்றி, Ella Wheeler அவர்கள் கூறிய சொற்கள், இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றுகின்றன.
கென்னடி அவர்கள் அரசுத்தலைவராக இருந்தபோது, வியட்நாம் போர்
உச்சக்கட்டத்தை அடைந்தது. அவ்வேளையில், கென்னடி அவர்கள்,
அப்போரிலிருந்து தங்கள் நாட்டை விலக்கிக்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். அந்தப் போரினால்
இலாபம் திரட்டிவந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த செல்வந்தர்கள், அரசுத்தலைவர்
கென்னடி அவர்கள் போரிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை மாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால், கென்னடி அவர்கள், தன் முடிவில் தீவிரமாக இருந்ததைக் கண்ட அச்செல்வந்தர்கள், அரசுத்தலைவரைக் கொன்றனர் என்ற கதைக்கருவை அடிப்படையாகக்கொண்டு, இத்திரைப்படம்
அமைக்கப்பட்டிருந்தது.
அரசுத்தலைவர் ஜான் F.கென்னடி அவர்களைக்
கொன்றது, தனியொரு மனிதர் அல்ல, அவருக்குப் பின்புலத்தில் சதிகாரக் கும்பல் ஒன்று செயல்பட்டது
என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க, வழக்கறிஞர் ஜிம் கேரிசன் (Jim Garison) என்பவர் வாதிடும்
காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. கேரிசன் அவர்களின் வேடத்தில் நடிப்பவர், ஒரு காட்சியில் பேசும் வசனம், இன்றைய நம் சிந்தனைகளுக்கு,
குறிப்பாக, நாம் வாழும் இந்த கொள்ளைநோய் காலத்திற்கு, கூடுதலான அர்த்தம் வழங்குகின்றது:
"உண்மையைச் சொல்வது, சிலநேரங்களில் நம்மை அச்சுறுத்துகிறது. அரசுத்தலைவர் கென்னடி அவர்களையும் அது
அச்சுறுத்தியது. ஆனால், அவர் துணிவுள்ளவராக இருந்தார். உன்னை நீயே அச்சத்திற்குள்
அடைத்துக்கொண்டால், தீயோர் இந்த நாட்டை அபகரிப்பதற்கு நீ வழிவகுக்கிறாய். அதன்
பின், எல்லாருமே அச்சத்தில் வாழவேண்டியுள்ளது" என்று கேரிசன் அவர்கள் நீதிமன்றத்தில் கூறுவார்.
நாம் வாழும் கொள்ளைநோய் காலத்தில், அச்சுறுத்தல் என்ற யுக்தி, எவ்விதம் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது
என்பதை நாம் உணர்கிறோம். கோவிட்-19 தொற்றுக்கிருமியைப்பற்றி, குழப்பமான, முரணான
கருத்துக்களையும், அந்தத் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொருநாளும்
வெளியிட்டு, மக்களை அச்சத்தில் அடைபட்டுக்கிடக்க வைத்துவிட்டன, அரசுகளும், ஊடகங்களும். இந்த அச்சத்தையும், அதனுடன் விதிக்கப்பட்டுள்ள
ஊரடங்கு உத்தரவுகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அநீதியான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் மக்கள் மீது திணித்துவரும் பல அரசியல்
தலைவர்களை, அண்மைய ஆறு மாதங்களில் உலகின் பல நாடுகளில் கண்டுவருகிறோம்.
இந்த
உலகம் நம்மீது திணிக்கவிரும்பும் அநீதிகளுக்கு துணைபோகும்போது, இவ்வுலகம் நம்மை பாராட்டும், நாம் உலகையே வென்றதுபோன்ற
உணர்வையும் தரும். அதற்கு மாறாக, நம்
மனசாட்சி சொல்வதைக் கேட்டு வாழும்போது, போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும், அந்தப் போராட்டத்தில், மார்ட்டின் லூத்தர் கிங்
ஜூனியர் அவர்களைப்போல், மகாத்மா
காந்தியைப்போல், நம் உயிரையும் வழங்கவேண்டியிருக்கும்.
இந்த சவாலை இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். ஒரு
கேள்வியின் வடிவில் இயேசு விடுத்த இந்தச் சவாலை, இலொயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சேவியரிடம்
கூறி, அவரை விழித்தெழச் செய்தார். இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த
உன்னத சவால்:
மத்தேயு
நற்செய்தி 16: 26
மனிதர்
உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும்
பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
இந்தக் கொள்ளைநோயோடு வாழ்வதற்கும், கொள்ளைநோயை வெல்வதற்கும் நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் ஒரு முக்கியப்
பகுதியாக, கொள்ளைநோய் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டங்கள் தவறு என்பதை எடுத்துச்சொல்லும்
இறைவாக்கினர்கள், துணிவுடன் வெளிவரவேண்டும் என்று சிறப்பான முறையில் மன்றாடுவோம்.
ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று, நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருத்தலங்கள் அனைத்திலும் கொடியேற்றப்பட்டு, நவநாள் பக்தி முயற்சிகள் துவங்கியுள்ளன. இந்த அன்னையின் பரிந்துரையால் நம்மைச்
சூழ்ந்திருக்கும் கோவிட்-19 கொள்ளைநோயும், இன்னும், நம் உலகை பல காலமாகச் சூழ்ந்து வதைக்கும் அநீதிகள், பாகுபாடுகள் ஆகிய கொள்ளைநோய்களும் நம்மைவிட்டு நீங்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.
இறைவாக்கினராக
வாழ, ஒவ்வொருநாளும், பல வடிவங்களில் நமக்கு வரும்
அழைப்புக்களை ஏற்க,
இறைவன்
நமக்கு அருளையும், துணிவையும் வழங்குவாராக!