15 December, 2022

All will be well… அனைத்தும் நலமாகவே அமையும்...

 
4th Sunday of Advent

4th Sunday of Advent
 
Today is the Fourth Sunday of Advent. Next Sunday we celebrate Christmas. Today we light the fourth candle in the traditional advent wreath. We shall begin our reflections with the significance of lighting a candle. Lighting a candle need not be confined to a liturgical or devotional situation. We have the beautiful example of South Africa where lighting a candle brought about a radical change in the oppressive, ‘whites only’ regime.

When South Africa was groaning under the yoke of apartheid, the people began a silent revolution of ‘lighting candles’. Fr Ron Rolheiser, a Catholic priest and a member of the Missionary Oblates of Mary Immaculate, writes about this ‘revolution’, and connects it to our tradition of lighting the advent candles, in his weekly column titled - ‘Advent Hope’:  People of faith began to pray together and, as a sign of their hope that one day the evil of apartheid would be overcome, they lit candles and placed them in their windows so that their neighbours, the government, and the whole world would see their belief. And their government did see. They passed a law making it illegal, a politically subversive act, to light a candle and put it in your window. It was seen as a crime, as serious as owning and flaunting a gun. The irony of this wasn’t missed by the children. At the height of the struggle against apartheid, the children of Soweto had a joke: “Our government,” they said, “is afraid of lit candles!”
It had reason to be. Eventually those burning candles, and the prayer and hope behind them, changed the wind (meaning, the political situation) in South Africa. Morally shamed by its own people, the government conceded that apartheid was wrong and dismantled it without a war, defeated by hope, brought down by lit candles backed by prayer. Hope had changed the wind.

During the season of advent, Christians are asked to light candles as a sign of hope. Unfortunately, this practice, ritualized in the lighting of the candles in the advent wreath, has in recent years been seen too much simply as piety (not that piety doesn’t have its own virtues, especially the virtue of nurturing hope inside our children). But lighting a candle in hope is not just a pious, religious act; it’s a political act, a subversive one, and a prophetic one, as dangerous as brandishing a firearm.
To light an advent candle is to say, in the face of all that suggests the contrary, that God is still alive, still Lord of this world, and, because of that, “all will be well, and all will be well, and every manner of being will be well,” irrespective of the evening news.

“All will be well and every manner of being will be well” are the famous words that came out of the optimism of Mother Julian of Norwich who lived from 1342 until about 1430, turbulent years both for the Church and for the world. These are the hope-filled words of a mystic who lived through the worst visitation of the plague. It is good for us to recollect these encouraging words, especially as we go through many plagues created by human beings.

The consoling thought of ‘all will be well’ is given to us in the first reading – Isaiah 7:10-14 and the Gospel – Matthew 1:18-24. We are given two characters – King Ahaz and Joseph – who are struggling to believe that what is happening to them ‘will be well’.

In the first reading we meet Ahaz, the king of the tribe of Judah, at war with the tribe of Israel. Pekah, the king of Israel, entered into an alliance with the king of Syria (Rezin) and the two of them went to Jerusalem to besiege it.
When Judah’s King Ahaz learned of the coalition against him, his heart sank along with his people. Ahaz was an evil king and could not reasonably expect God’s intervention for him. But God had not given up on Judah. God sent the prophet Isaiah to Ahaz to give him a promise of the perpetuity of Judah: Then Isaiah said, “Hear now, you house of David! … The Lord himself will give you a sign: The virgin will conceive and give birth to a son, and will call him Immanuel.” (Isaiah 7:13-14)

In the Gospel we meet Joseph who is struggling to understand the shattering news of Mary being pregnant. The solution for his inner struggle arrives in the form of a dream. Today’s Gospel talks of Joseph meeting an angel in his dreams. Joseph is a silent saint. No word of his is recorded in the gospels. Indeed, no word was needed, since his whole life was a great Gospel!
Joseph is honoured by the Church as well by popular devotion as the patron and guardian of so many aspects of human life. He is the patron of the Catholic Church, of virgins, of families, of labourers, of immigrants, of holy death and many, many more... I wish to add one more to this list. I wish to honour St Joseph as the guardian and patron of dreams. It is interesting that both Joseph, the Patriarch (in the Old Testament – Genesis - Chapters 37 to 50) as well as Joseph, the Husband of Mary (in the New Testament) are portrayed as ‘dreamers’.

Joseph is mentioned in Matthew’s gospel only on three occasions. In all of them, he is portrayed as being visited by the angel of God in his dreams. One of those instances is given as today’s gospel:
Matthew 1: 18-24. Two other instances where Joseph is mentioned, also speak of the angel visiting him in dreams: Matthew 2: 13-14 and Matthew 2: 19-21

Analysis of these three passages will give us good reasons to say that Joseph is indeed the guardian and patron of dreams. Joseph must have felt extremely happy to have been betrothed to Mary, probably the most admired young girl in Nazareth. But his joy was short lived. His dreams of having a glorious life with Mary, came crashing down when he learnt that Mary was pregnant. It was left to him to either make this public or solve this problem more quietly. He decided on the latter. He was a gentleman to the core. If Joseph had decided on making this public, he would have been honoured; but Mary would have faced death by stoning.
As Joseph was struggling to solve this problem, the angel came to him in a dream. If Joseph was a selfish person thinking only of his honour and did not care about Mary, the angel would have found it difficult to enter Joseph’s conscious or subconscious (dream) world. God would find it difficult to enter a selfish person’s heart. The more selfless and sensitive a heart is, the brighter the chances of divine interventions… not only during waking hours but also during dreams!

All human beings dream. Then why make Joseph the patron of dreams? I can think of two reasons. There could surely be more.
Reason 1: Joseph was capable of interpreting his dreams as good news even during his agony. For many of us this may not be easy. When we are hemmed in by trials all around us, we tend to lose our normal, day to day activities, especially our sleep. Even if we manage to get some sleep, we may get more nightmares than dreams. Joseph must have been in such a predicament after learning that Mary was pregnant. Still, he recognised his dreams as divine promptings and interventions. Only persons without deceit, persons who are just, are capable of this. Don’t we wish we could be like Joseph
Reason 2: It is easy to dream dreams; but not easy to act on them. In all the three gospel passages we cited, Joseph woke up from sleep and followed the instructions from the angel. If these instructions were easy, cosy things, then we won’t mind following them. Easy, cosy instructions are dictated to us through our ‘commercial dreams’… a cream would change our complexion in a matter of days, or a toothpaste would make our friends flock around us all the time. We tend to follow these commercial dreams, don’t we? The instructions that Joseph received in his dreams were demanding, tough decisions – taking a pregnant woman as his wife, taking a baby and his mother at night and travelling to a strange land… Don’t we wish we could be like Joseph? Don’t we wish to honour St Joseph as the Patron of dreams?

Fr Ronald Rolheiser, in his homily on ‘Joseph and Christmas’ brings out another aspect of Joseph as revealed in today’s gospel:
Joseph is presented to us as an "upright" man, a designation that scholars say implies that he has conformed himself to the Law of God, the supreme Jewish standard of holiness. In every way he is blameless, a paradigm of goodness, which he demonstrates in the Christmas story by refusing to expose Mary to shame, even as he decides to divorce her quietly.
Then, after receiving revelation in a dream, he agrees to take her home as his wife and to name the child as his own. Partly we understand the significance of that, he spares Mary embarrassment, he names the child as his own, and he provides an accepted physical, social, and religious place for the child to be born and raised. But he does something else that is not so evident: He shows how a person can be a pious believer, deeply faithful to everything within his religious tradition, and yet at the same time be open to a mystery beyond both his human and religious understanding.
What does one do when God breaks into one's life in new, previously unimaginable ways? How does one deal with an impossible conception?... In essence what Joseph teaches us is how to live in loving fidelity to all that we cling to humanly and religiously, even as we are open to a mystery of God that takes us beyond all the categories of our religious practice and imagination.
Isn't that one of the ongoing challenges of Christmas?

By recognising his dreams as divine promptings, and by taking concrete actions on his dreams, Joseph saved not only Mary and Jesus, but also saved the world by letting the Saviour become ‘Emmanuel’ – God among us! May St Joseph, the Patron of Dreams, help us dream dreams and be ready to pay the price to make them come true! May this final week of preparation for Christmas help us to light candles of hope in our family circle as well as in our neighbourhood with the message – “All will be well and every manner of being will be well”!

All shall be well

திருவருகைக்காலம் - 4ம் ஞாயிறு

இன்று திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு. அடுத்த ஞாயிறு நாம் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். இன்று, நமது பாரம்பரிய திருவருகைக்கால வளையத்தில் வைக்கப்பட்டுள்ள நான்காவது மெழுகுதிரியை ஏற்றிவைக்கிறோம். மெழுகுதிரியை ஏற்றுதல் என்பதை நாம் பொதுவாக வழிபாடு தொடர்பான நிகழ்வாகவே கருதுகிறோம். ஆனால், மெழுகுதிரிகளை ஏற்றிவைத்ததன் வழியே, தென் ஆப்ரிக்க மக்கள், தங்கள் நாட்டை ஆண்ட அநீதியான அரசையே மாற்றி அமைத்தனர் என்பதை, வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

தென் ஆப்ரிக்கா, இனவெறி கொண்ட வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட அரசால் வதைக்கப்பட்டபோது, அங்கு வாழ்ந்த மக்கள், ‘மெழுகுதிரியை ஏற்றிவைத்தல்' என்ற ஒரு மௌனமான புரட்சியை மேற்கொண்டனர். இந்தப் புரட்சியை, திருவருகைக் காலத்தில் மெழுகுதிரியை ஏற்றிவைக்கும் நம் பாரம்பரிய பழக்கத்துடன் இணைத்து, அருள்பணி Ron Rolheiser என்பவர், 'திருஅவருகைக்கால எதிர்நோக்கு' என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ:
இனவெறி அடக்குமுறையின்போது, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த நம்பிக்கையாளர்கள், செபிக்கத் துவங்கினார்கள். தங்கள் நாட்டில் நிலவும் இனவெறி என்ற தீமையை ஒரு நாள் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, தங்கள் அயலவர், அரசு அதிகாரிகள், ஏன்... இந்த உலகமே காணவேண்டும் என்ற எண்ணத்துடன், அவர்கள், மெழுகுதிரிகளை ஏற்றி, தங்கள் இல்லங்களின் சன்னல்களில் வைத்தனர். அவர்களது எண்ணங்களை அரசு அதிகாரிகள் புரிந்துகொண்டனர். உடனே, ஓர் அரசாணையையும் வெளியிட்டனர். மெழுகுதிரிகளை ஏற்றுவது, துப்பாக்கியை வைத்திருப்பதற்கு இணையான குற்றம் என்று கூறி, அந்தச் செயலைத் தடுக்க முயன்றனர். இந்த அடக்குமுறையைக் கண்டு, தென் ஆப்ரிக்காவின் குழந்தைகள், "எங்கள் நாட்டில், எரியும் மெழுகுதிரிகளைக் கண்டு, அரசு பயப்படுகிறது" என்று கேலி செய்தனர்.
அரசு அவ்வாறு பயப்படுவதற்கு காரணம் இருந்தது. எரியும் திரிகளும், அவற்றிற்குப் பின்புலத்தில் சொல்லப்பட்ட செபங்களும், எரியும் திரிகள் வெளிப்படுத்திய நம்பிக்கையும், அந்த நாட்டின் அரசியல் சூழலையை மாற்றின. இனவெறி தீமையானது என்பதை உணர்ந்த அரசு, தன் நிலையை மாற்றியது. ஆயுதங்கள் ஏதுமற்ற ஒரு அமைதிப்போர், தென் ஆப்ரிக்காவின் இனவெறி அரசை கவிழ்த்து, மக்களாட்சியைக் கொணர்ந்தது.

திருவருகைக் காலத்தில், நம்பிக்கையை வெளிப்படுத்த, மெழுகுதிரிகளை ஏற்றிவைக்குமாறு தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். ஆனால், பொருள் நிறைந்த இச்செயல், ஆலயங்களில் வெறும் வழிபாட்டுச் சடங்காக மட்டுமே நிகழ்ந்துவருகிறது. வழிபாட்டுச் சடங்குகளும், பக்தி முயற்சிகளும், நம் உள்ளங்களில், குறிப்பாக, குழந்தைகளின் உள்ளங்களில் நம்பிக்கையை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் மெழுகுதிரிகளை ஏற்றிவைப்பது, அரசியல் மாற்றத்தைக் கொணரும் ஒரு செயல்பாடாக, இறைவனின் சக்தியைப் பறைசாற்றும் ஒரு செயல்பாடாக இருக்கவேண்டும்.
இவ்வுலகை இருள் எவ்வளவுதான் சூழ்ந்தாலும், அதை மீறி, கடவுள், உயிரோட்டம் உள்ளவராக, நம் நடுவே வாழ்ந்து வருகிறார் என்பதை, நாம் ஏற்றிவைக்கும் மெழுகுதிரிகள் உணர்த்தவேண்டும். நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம், ஊடகங்கள் வழியே, ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடையும் செய்திகளைத் தாண்டி, "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற உண்மையை, நாம் ஏற்றிவைக்கும் மெழுகுதிரிகள் பறைசாற்ற வேண்டும்.

"அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற ஆழமான உண்மையை, 14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் Norwich நகரில் வாழ்ந்த Julian என்ற ஞானப் பெண்மணி கூறினார்.
ஜூலியன் அவர்கள் வாழ்ந்த காலம் பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்த காலம். குறிப்பாக, கொள்ளை நோயினால் மக்கள் அதிகம் துன்புற்ற காலம் அது. இன்று மனிதர்களாகிய நாம் நமக்கே உருவாக்கிவரும் பல்வேறு உடல், உள்ள, சமுதாய நோய்களுக்கு நடுவே, ஜூலியன் அவர்கள் "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்று கூறிய சொற்களை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.

அனைத்தும் நலமாகவே அமையும்என்ற ஆறுதலான சொற்கள், இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்திலும் (எசாயா 7:10-14), நற்செய்தியிலும் (மத்தேயு 1:18-24) வெவ்வேறு வடிவங்களில் ஒலிக்கின்றன. இவ்விரு வாசகங்களிலும், நாம் சந்திக்கும் அரசன் ஆகாசு மற்றும் யோசேப்பு ஆகிய இருவரும் தங்கள் வாழ்வில் அனைத்தும் நலமாகவே அமையும்என்பதை நம்புவதற்கு போராடியவர்கள்.

யூதாவின் அரசனான ஆகாசுக்கு எதிராக இஸ்ரயேல் அரசனும், சிரியாவின் அரசனும் இணைந்து, படை திரண்டு வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ஆகாசு மனமுடைந்து போனார். அவருடன் சேர்ந்து, யூதாவின் மக்கள் அனைவரும் மனம் கலங்கியிருந்தனர். தான் தீய வழிகளில் சென்றவர் என்பதை, அரசன் ஆகாசு உணர்ந்திருந்ததால், இறைவன் தனக்கு உதவி செய்யமாட்டார் என்று அவர் தீர்மானம் செய்திருந்தார். ஆனால், இறைவன், ஆகாசுவை கைவிடாமல் அவருக்கும், யூதா குலத்து மக்களுக்கும்  இறைவாக்கினர் எசாயாவின் வழியே நம்பிக்கை தரும் வாக்கினை வழங்குகிறார்: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; ... ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.(எசாயா 7:13-14)

அனைத்தும் நலமாகவே அமையும்என்ற உண்மையை நம்புவதற்குப் போராடிவந்த யோசேப்பை நற்செய்தியில் சந்திக்கிறோம். சென்ற ஞாயிறன்று, பாலை நிலம் மலர்களால் பூத்துக் குலுங்கும் என்று இறைவாக்கினர் எசாயா, சொன்ன சொற்களை, நடைமுறைக்கு ஒத்துவராத, மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று எண்ணிப்பார்த்தோம். நடைமுறை வாழ்வுக்கு முரணாக, திருமணத்திற்கு முன்னதாகவே கருவுற்றிருந்த இளம்பெண் மரியாவை ஏற்றுக்கொள்வதா, விலக்கிவிடுவதா என்ற கடினமானக் கேள்வியுடன் போராடிவந்த யோசேப்புக்கு, இறைவனின் தூதர், ஒரு கனவின் வழியே விடை தருவதை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம்.

மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) புலம்பெயர்ந்தோராக எகிப்தில் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.
முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நல்ல செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்புவைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.
இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு க்ரீமைப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்புவை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

இன்றைய நற்செய்தி, யோசேப்பைக் குறித்து வேறொரு பாடத்தையும் நமக்குச் சொல்லித் தருகிறது. இந்த எண்ணங்களை அருள்பணி Ron Rolheiser அவர்களின் கருத்துக்களுடன் இணைத்து, பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
யோசேப்பு இஸ்ரயேல் பாரம்பரியத்தில் ஊன்றி வளர்ந்த, நேர்மையான பக்திமான். பாரம்பரியத்தை மீறுவதென்பதை அவர் கனவிலும் கருதியிருக்கமாட்டார். இறைவனின் தூதர், அவரது கனவில் சொன்ன செய்தி, பாரம்பரியத்திற்கு முரணானதாகத் தெரிந்தது யோசேப்புக்கு. திருமணத்திற்கு முன் ஒரு பெண் கருவுற்றால், அவர் இறைவனின் கட்டளைகளை மீறியவர்; இஸ்ரயேல் இனத்திற்குக் களங்கம் விளைவித்தவர் என்று மோசே தந்த சட்டமும், பாரம்பரியமும் சொல்கின்றன. இதற்கு நேர்மாறாக, கனவில் யோசேப்புக்குக் கிடைத்த செய்தி இருந்தது. கன்னியான ஒரு பெண் கருத்தரித்திருப்பது கடவுளின் செயல்; அதுவும் அவர் கருவில் தாங்கியிருப்பது கடவுளையே என்பது, பாரம்பரிய எண்ணங்களில் வளர்ந்திருந்த யோசேப்புக்கு, பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

பாரம்பரியம், சட்டம் ஆகியவற்றில் யோசேப்புக்கு ஆழ்ந்த, வெறித்தனமான பற்றும், பக்தியும் இருந்திருந்தால், மரியாவின் நிலையை அறிந்ததும், ஊரைக்கூட்டி, பாரம்பரியத்தை நிலைநாட்டியிருப்பார். மரியாவின் மீது அவரே முதல் கல்லையும் எறிந்திருக்கக்கூடும். ஆனால், யோசேப்பு, பாரம்பரியத்தை, சரியான முறையில் புரிந்தவராய் இருந்ததால், பாரம்பரியத்தைக் கடக்கக் கூடியவர் கடவுள் என்பதை உணர்ந்திருந்தார். கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கும் ஆகாசுக்கு, இறைவாக்கினர் எசாயா வழியாக, இறைவன் தந்த அடையாளமும் இதுதானே என்பதை, யோசேப்பின் மனம் எண்ணிப் பார்த்திருக்கும். தன்னிடம் அடையாளம் கேட்கும்படி இறைவன் அழைத்தபோது, அந்த அழைப்பை ஏற்கத் தயங்கிய ஆகாசுவுக்கு நேர்மாறாக, தன் கனவில் கூறப்பட்டவைகளை மனதார நம்பி, செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை, நம்மோடு, ‘எம்மானுவேலா’கத் தங்கவைத்தார்.

சாத்திரம், சம்பிரதாயம் சட்டம், பாரம்பரியம் இவை அனைத்துமே மனிதகுலத்தைக் காப்பாற்ற தேவையானவைதான். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து நிற்பவர் கடவுள். பாரம்பரியங்களைக் கடந்த, அல்லது அவற்றிலிருந்து முரண்பட்ட ஒரு வழியில் கடவுள் வந்து நம்மோடு தங்குவதாக இருந்தால், அவரை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா? பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது பாரம்பரியங்களை உடைத்து வரும் கடவுளைச் சந்திக்க நாமும் பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது உடைத்துச் செல்ல வேண்டியிருக்கும், புனித யோசேப்பைப் போல.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம்.
கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு முந்தைய இறுதி வாரத்தில், நம் குடும்பங்களிலும், நாம் வாழும் சூழல்களிலும் "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற உண்மையைப் பறைசாற்றும் நம்பிக்கை திரிகளை ஏற்றிவைப்போம்! கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!

No comments:

Post a Comment