5th Sunday in Ordinary Time
A little girl was
attending the Sunday Mass regularly in a Church which had a lovely
stained-glass window with the picture of the Good Shepherd. The priest who was celebrating Mass was a tall person and
when he stood on the pulpit and preached, the little girl could not see the
picture of the Good Shepherd. One day, another preacher who was shorter
replaced the tall priest. That day, the little girl told her mother, “Where’s
the man who usually stands there so we can’t see Jesus?”
This is a parable to
help us reflect on how the real Christ, the true Gospel can be hidden from the
people by the one who preaches the Word of God, not only by his physical
stature but also by his eloquence.
We begin our Sunday
reflection with the opening statement of St Paul given in the second reading – 1
Corinthians 2:1-5 – namely, “When I came to you, brothers and
sisters, I did not come proclaiming the mystery of God to you in lofty words or
wisdom.” (1 Cor. 2:1)
Paul who was a
well-trained Pharisee and who could reason and debate persuasively, didn’t use
that approach in preaching the gospel. He made a conscious decision to put the
emphasis on Jesus Christ and Him crucified. Paul was an ambassador, not a
salesman.
In taking this
approach, Paul understood he didn’t cater to what his audience wanted. He
already knew that ‘the Jews demanded signs, and Greeks sought wisdom’ (cf. 1
Cor. 1:22). He was also aware that the city of Corinth was well-known for ‘false
rhetoric and thin thinking’ (Barclay). Paul wished to preach the Gospel in
simplicity. Although Paul had not been with Jesus during His earthly life, he
must have been inspired by the simple, lucid style that Jesus used in his
teaching.
The power of Jesus’
teaching comes from the parables and imageries he had used. Due to this, his
message has withstood the test of times and still makes a lot of sense. When
the gospels were written, the disciples of Jesus could easily recollect the
teachings of Jesus because of those imageries and stories. The layers of
meaning one can find in the parables and imageries seem unending. Matthew has
collated most of the teachings of Jesus in one section (Chapters 5, 6 and 7) which
is commonly referred to as the ‘Sermon on the Mount’. Last Sunday we reflected
on the opening segment of this Sermon – namely, the famous list of the
‘Beatitudes’. The Sermon continues today as well as the following two Sundays and
serves as an apt preparation for the Season of Lent which we begin on February
22.
In today’s gospel
passage - Matthew 5: 13-16 - Jesus uses the famous imageries of Salt and Light – the
most common of every day articles used by all of us. Both have become universal
imageries. We do have phrases like ‘worth one’s salt,’ and ‘taking
something with a grain / pinch of salt.’
The word ‘Light’ is a
rich imagery in almost all the languages of the world. There are very many interesting
English expressions and idioms using ‘light’. Here are just a few of them:
the light of your life, a guiding light, to give (something) the green light,
to be out like a light, light at the end of the tunnel, etc…
A deeper analysis of
just two of the sentences from this Sunday’s Gospel would be enough for our reflections - “You are the salt of the earth… You
are the light of the world…” Jesus did not say that you must be or need
to be the salt or the light of the earth. Nor did he say you will be
the salt or the light. He simply said: “YOU ARE the salt and the light”.
You and I, dear friends, are already the salt of the earth and the light of the
world. To be salt and light is the defining quality of every disciple of
Christ… of every Christian. Hence, it would be helpful to understand what is meant
by ‘being salt’ and ‘being light’.
The very first quality
of salt that comes to mind is its ‘purity’, because it is white and it comes
from the combination of two great gifts of nature, namely, the sun and the
sea. Salt was the most primitive of all
offerings to the gods. Jewish sacrifices were offered with salt. The Orientals
made their oaths with salt to ratify them.
Salt is an essential
ingredient of food; but it cannot become one’s food. It needs to be added in
small quantities to provide the necessary taste. Just because salt is an
essential ingredient of food, it cannot be added more than necessary. An
overdose of salt makes the food unpalatable and it becomes fit only for the garbage.
Salt also preserves food and has some healing qualities, as in the case of sore
throat.
Similarly, a true
disciple is an essential part of this world. He or she cannot stand aloof from
the world but needs to mingle with this world in a proportionate way. When this
proportion is lost, then the world becomes worthless along with the disciple.
When the disciple is present in the world in the proper way and proper measure,
the world can be preserved and, if needed, healed.
The moment Jesus talks
of us as salt of the earth, he adds an immediate warning. What if we lose our
saltiness? – the question raised by Jesus. There are quite a few explanations, some
very scientific, to demonstrate how salt can lose its taste. Salt diluted
beyond the limit, over exposed to elements of nature or exposed to other forces
like electricity… can be some of the reasons given for salt to lose its taste.
Once again, the parallel between salt and a disciple is clear. The salt that
has lost its taste, ‘is no longer good for anything, except to be thrown
out and trampled underfoot.’ (Mt. 5:13)
The image of salt
getting trampled underfoot brings to my mind some sections of humanity who,
like salt, are an essential part of the human society but still get trampled by
society all the time. I am thinking of those labourers involved in cleaning our
roads, toilets etc.
In India even in this
21st century, there are human beings forced to do manual cleaning of
manholes. Quite often we hear of deaths of these workers due to asphyxiation.
The only reason that drives a human being to take on such a demeaning and high-risk
job is grinding poverty. The imagery of ‘salt being trampled underfoot’ also
brings to mind the agricultural labourers who toil hard to put food on our
tables. If these labourers (scavengers and farmers) stop working just for a
day, it would almost choke life out of the world. These very same labourers who
are life-line of the world are denied their life-line and the necessary respect
they fully deserve! The are trampled underfoot!
You are the
light of the world… is
another sentence replete with meaning. The moment we think of the word ‘light’,
the word ‘darkness’ comes to mind. Even if the darkness is overpowering, a tiny
lamp is enough to drive away the darkness. A lamp does not draw attention to
itself, but brings to light all things and persons around it. A lamp – whether
it is a candle, an oil lamp, or an electric lamp – is able to spread light only
when it burns its energy. All these and other characteristics of ‘light’ can be
applied to a true disciple.
How to become a light
to the world is eloquently answered in today’s first reading from Isaiah - Isaiah
58:7-10. It is interesting to note that the first reading is a remote
preparation for Lent, since it talks of ‘fasting’. God raises questions about
the way a ‘fast’ is observed: Is such the fast that I choose, a day for a
man to humble himself? Is it to bow down his head like a rush, and to spread
sackcloth and ashes under him? Will you call this a fast, and a day acceptable
to the LORD? (Is. 58:5)
God, then, goes on to define what true fast means… "Is not this the fast that I
choose: to loose the bonds of wickedness, to undo the thongs of the yoke, to
let the oppressed go free, and to break every yoke? Is it not to share your
bread with the hungry, and bring the homeless poor into your house; when you
see the naked, to cover him, and not to hide yourself from your own flesh? (Is.
58:6-7) If such a fast is taken up, then we can become the light of the world,
assures the Lord:
Then shall your light break forth like the dawn, and your healing shall
spring up speedily; your righteousness shall go before you, the glory of the
LORD shall be your rear guard. 9 Then you shall call, and the LORD will answer;
you shall cry, and he will say, Here I am. "If you take away from the
midst of you the yoke, the pointing of the finger, and speaking wickedness, 10
if you pour yourself out for the hungry and satisfy the desire of the
afflicted, then shall your light rise in the darkness and your gloom be as the
noonday. (Is. 58:8-10)
Both the metaphors of
salt and light have something very important in common. If the salt stays locked
up in a shaker, it doesn't do anything. Only when it comes out of the sterile
security of the shaker and dissolves in the food can it give flavour to what we
eat. The same is true of light. If it stays closed up and hidden away, it
can't illuminate anything. Only when it is in the middle of the dark can it
illuminate and guide. A Church isolated from the world can be neither salt nor light.
Pope Francis has been
sending out warnings about the Church that lives closed in on herself,
paralyzed by fear, and all too distant from problems and sufferings, thus
keeping it from giving flavour to modern life and from offering the true light
of the Gospel. The Pope's response to
the ‘closed-up’ Church is: "We need to go out to the fringes".
In his Apostolic
Exhortation, ‘Evangelii Gaudium’, he has, as if, given a mission statement of
the Church: "I prefer a Church that is bruised, hurting, and dirty
because it has been out on the streets, rather than a Church which is unhealthy
from being confined and from clinging to its own security. I do not want a
Church concerned with being at the centre and then ends by being caught up in a
web of obsessions and procedures."
May God give us the
courage to be ‘salt and light’ that are willing to leave the security of the
salt shaker and the bushel. May our presence in the world bring more taste and
more brightness to the lives of people around us!
Isaiah 58:7
பொதுக்காலம் 5ம் ஞாயிறு
சிறுமி ஒருவர் ஒவ்வொரு ஞாயிறன்றும் தவறாமல் திருப்பலியில்
கலந்துகொண்டார். திருப்பலி நிகழ்ந்த கோவிலில், நல்லாயனான இயேசுவின்
அழகிய உருவம், வண்ணம் தீட்டப்பட்ட கண்ணாடி சன்னலில் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும், திருப்பலி நிகழ்த்திவந்த அருள்பணியாளர் நல்ல உயரம் கொண்டவர் என்பதால், அவர் மறையுரை வழங்கும்
இடத்திற்கு வந்ததும்,
அவருக்குப்பின் இருந்த நல்லாயன் உருவப்படம் சிறுமியின் பார்வைக்கு
மறைக்கப்படும். ஒரு வாரம், திருப்பலி நிகழ்த்த வந்தவர் உயரம் குறைவானவராக இருந்தார்.
அவர், மறையுரை ஆற்ற வந்தபோது, நல்லாயன் உருவம் சிறுமியின் பார்வையிலிருந்து மறைக்கப்படவில்லை.
அன்று, திருப்பலி முடிந்தபின் சிறுமி தன் தாயிடம், "அம்மா, ஒவ்வொரு வாரமும் நான் இயேசுவை பார்க்கமுடியாதவாறு மறைத்து நிற்கும் அந்த சாமியார்
இந்த வாரம் வரலையா?"
என்று கேட்டார்.
இந்த நிகழ்வை நாம் ஓர் உவமையாக எண்ணிப் பார்க்கலாம். நற்செய்தியை
போதிப்பவர்கள், தங்கள் உருவத்தால் மட்டுமல்ல, தங்கள் சொல் திறமையாலும், இயேசுவின் உருவத்தை, அவரது நற்செய்தியை மறைக்கும் ஆபத்து உள்ளது என்பதை அந்தச்
சிறுமியின் கேள்வி நமக்கு உணர்த்துகிறது.
நற்செய்தியையும், அதன் மையமான இயேசுவையும், அதிலும் குறிப்பாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும் போதிப்பதற்கு சொல்வன்மை தேவையில்லை என்பதை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் - 1 கொரிந்தியர் 2:1-5 - புனித பவுல் அடியார் கூறுகிறார்.
சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ
ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும்
என்று நினைக்கவில்லை. (1 கொரி. 2:1-2)
அறிவார்ந்த விளக்கங்களிலும், வாதத் திறமையிலும் சிறந்த பரிசேயரான பவுல் அடியார், தன் திறமைகளை பயன்படுத்தி நற்செய்தியை பகிர்வதற்குப் பதில், உண்மையான இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இயேசுவின் சீடராக அவரோடு வாழும் வாய்ப்பு இல்லாதபோதும், பவுல் அடியார், இயேசுவால் ஆட்கொள்ளப்பட்ட காலத்திலிருந்து, அவரது எளிமையான, தெளிவான போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அதை மக்களிடம் எடுத்துச் செல்வதில் எளிமையைக் கடைபிடித்தார்.
அதேவண்ணம், இயேசுவின் போதனைகளில் வெளிப்பட்ட எளிமை, ஏனைய
சீடர்களின் உள்ளங்களிலும் ஆழமாக இடம்பெற்றன. கதை வடிவில் இயேசு கூறிய உவமைகளும், அவர் பயன்படுத்திய உருவகங்களும் சீடர்களின் நினைவுகளில் ஆழப் பதிந்தன.
அந்நினைவுகளிலிருந்து உருவான நான்கு நற்செய்திகள், இவ்வுவமைகளையும், உருவகங்களையும்
20 நூற்றாண்டுகளாக நமக்கு வழங்கிவருகின்றன. இயேசு பயன்படுத்திய பல உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் அவர் சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.
உருவகங்களின் உதவியுடன் இயேசு கூறிய உண்மைகளை, புனித மத்தேயு, தனது நற்செய்தியின்
5, 6, மற்றும் 7 ஆகிய மூன்று பிரிவுகளில் தொகுத்து வழங்கியுள்ளார். இப்பகுதியை, நாம், ‘மலைப்பொழிவு’ என்றழைக்கிறோம்.
மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக விளங்கும் ‘பேறுபெற்றோர்’ கூற்றுகளை சென்ற ஞாயிறு
நற்செய்தியாகக் கேட்டோம். இன்றும், இனிவரும் இரு ஞாயிறன்றும், இம்மலைப்பொழிவின் சில பகுதிகளை, நாம் நற்செய்தியாக செவிமடுக்கவிருக்கிறோம். இம்மூன்று வாரங்களைத் தொடர்ந்து
நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்கு, இயேசுவின் மலைப்பொழிவு, ஏற்றதொரு தயாரிப்பாக
இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில், - மத்தேயு 5:13-16 - இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய்
இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) என்ற உருவகங்கள் வழியே, ஒவ்வொரு நாள் வாழ்விலும்
பயன்படுத்தப்படும் இரு பொருள்களை இயேசு நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். உப்பும், விளக்கும் இல்லாத இல்லங்கள் இல்லை. மதம், இனம், ஏழை, செல்வந்தர், என்ற பாகுபாடுகள்
ஏதும் இன்றி, எல்லா இல்லங்களிலும்
பயன்படுவது, உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வது
பயனுள்ள முயற்சி.
உப்பும், ஒளியும் எவ்விதம்
உருவாகின்றன என்பதைச் சிந்திக்கும்போது, அவற்றை, தூய்மைக்கு அடையாளங்களாகப்
புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், நாம் ஏற்றிவைக்கும்
ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. நாம் ஏற்றிவைக்கும் மெழுகு, கறுப்பானாலும், வெள்ளையானாலும்
சரி, நாம் ஊற்றிவைக்கும் எண்ணெய், சுத்தமானதாகவோ, மாசடைந்ததாகவோ இருந்தாலும்
சரி, ஏற்றப்பட்ட சுடர், எப்போதும் தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள்
என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும்
என விழைகிறார்.
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக்
கூற்றின் ஆழத்தை உணர, உப்பின் பண்புகளையும்
செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயல்வோம்.
உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், பின்னணியில் இருந்து
செயலாற்றுவது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையில்லை.
ஆனால், உப்பு மட்டுமே உணவாக முடியாது. உணவுக்குச் சுவை சேர்க்கும்
உப்பு, ஓரு குறிப்பட்ட அளவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ‘உப்பு இல்லாத உணவு குப்பையிலே’ என்பதை அறிவோம். அதேபோல், உப்பு அதிகமாக
சேர்க்கப்பட்ட உணவும், குப்பையிலே. உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு, அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார்.
இயேசுவைப் பின்பற்றுவோர், மண்ணுலலகிற்கு உப்பாக
இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?
அவர்கள், உலகிற்குத் தேவையானவர்கள்
என்றாலும், பின்னணியில் இருந்து
செயலாற்றுகிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை. உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும், உலகில் அளவோடு கரைந்து
வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.
நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன
அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும்
தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. (மத்தேயு 5:13) உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பு, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன்
சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப்பொருட்கள்
கலந்தால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளால் மாசடைந்தால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.
மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் மற்றுமோர் எண்ணமும் எழுகிறது. உணவுக்கு அவசியமாகத் தேவைப்படும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து, உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில், எத்தனையோ மனிதர்கள், இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல், உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள், ஒருபோதும் உலகின்
நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள், மனித சமுதாயத்தால்
மிதிக்கப்படுகிறார்கள்.
உலகெங்கும், துப்புரவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலகோடி மக்களை, இந்நேரத்தில் நாம்
எண்ணிப் பார்க்கவேண்டும். யாருடைய கவனத்தையும், எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாமல், ஒவ்வொரு நாளும் பணி செய்யும் இவர்கள், ஒரே ஒரு நாள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டால், உலகின் நிலை என்னவாகும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! பல்வேறு முன்னேற்றங்களை
அடைந்துள்ளதாக உலக அரங்கில் இந்தியா பறைசாற்றி வந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டிலும், மனிதக் கழிவுகளை
அகற்றும் பணியில் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி, தங்கள் கரங்களால் கழிவுகளை அகற்றும் மனிதர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். இவர்களில்
பலர் இப்பணியில் ஈடுபடும்போது, மூச்சுத்திணறி மரணம்
அடைவதையும் பலமுறை நாம் செய்திகளாக வாசிக்கிறோம். 'மனிதரால் மிதிபடும் உப்பாக' விளங்கும் இவர்களுக்காக, இவர்களுடைய பணியில் மாற்றங்கள் உருவாக நாம் இறைவேண்டல் செய்வது அவசியம்.
அதேபோல், உலகெங்கும் உழைக்கும்
உழவர்கள், சேற்றில் கைவைக்கவில்லையெனில்
நாம் சோற்றில் கைவைக்க முடியாது என்பதை அறிவோம். உழவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை
என்ன என்பதையும் நாம் வேதனையுடன் உணர்கிறோம். மனிதர்களால் அடிக்கடி மறக்கப்படும் உழவர்கள், மனிதர்களை மறந்துவிட்டால், இவ்வுலகம் என்னாகும்?
உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும்
உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை மக்களும்,
அரசுகளும் வழங்கவேண்டும் என்று செபிப்போம்.
"நீங்கள் உலகிற்கு
ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில்
தோன்றும். உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல், சுற்றியுள்ளவற்றை
வெளிச்சத்திற்கு கொணர்கிறது.
மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.
உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள
முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். மரக்காலுக்குள்
வைக்காமல், விளக்குத் தண்டின்மீது
வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும்.
அதேபோல், உலகிற்கு ஒளியாக
இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள
இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம்
எண்ணம்.
உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழமுடியும் என்பதை, இறைவன், இன்றைய முதல் வாசகத்தில் - எசாயா 58:7-10 - நமக்கு ஆலோசனைகளாக தருகின்றார். அவர் தரும் ஆலோசனைகளுக்குப் பின்னணியாக, உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அவர், இன்றைய முதல் வாசகத்தில்
கூறுகிறார். விரைவில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்தில், நோன்பு பற்றிய சிந்தனைகள் நமக்குள் எழும் இத்தருணத்தில், "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது?"
(எசாயா 58:5) என்ற கேள்வியை, இறைவன், நமக்கு முன் வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, உண்மையான நோன்பு
எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இறைவன் வரையறுப்பது, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:
எசாயா 58:7
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க
இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு
உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!
இத்தகைய நோன்பு, நம்மை, இவ்வுலகில், ஒளியாக வாழச்செய்யும் என்ற உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்:
எசாயா 58: 8-10
அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை
அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.
உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும்
வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும்
உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து
வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே,
"வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.
சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன்தர
முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், தன் உரைகளில் அவ்வப்போது
கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது
என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும்
என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, பலமுறை தன் உரைகளில்
வலியுறுத்திக் கூறியுள்ளார்.
உப்புக்
குப்பிகளுக்குள் உறங்கி சுகம் காணாமல், மரக்காலுக்குக் கீழ் மறைந்துகொள்ளாமல், உலக மக்கள் வாழ்வில் சுவையும், ஒளியும் சேர்க்க, நாம்
உப்பாக, ஒளியாக செயலாற்றும் துணிவை இறைவன் நமக்கு
வழங்குவாராக! ஆற்றும் செயல்களில், நம்மையே மையப்படுத்தாமல், பின்னணியில் இருந்து கிறிஸ்துவின்
நற்செய்திக்கு சுவையும், ஒளியும் வழங்கும் உப்பாக, ஒளியாக வாழும் வரங்களை
இறைவன் நமக்கு தருவாராக! திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும்
என்று மன்றாடுவோம்.
No comments:
Post a Comment