Palm Sunday
The people
belonging to the greatest democracy in the world – India – have begun the
process of choosing their leaders for the next five years. Although in the past
ten years, there have been many attempts, by the present fascist government, to
destroy the secular, democratic fabric of India, we are hopeful that we can
still claim that our country is still the greatest democracy in the world. We
hope and pray that God will give the people of India, the necessary wisdom, and
a courageous conscience to choose the proper leaders who will save this country
from fascism.
In the context of
the upcoming elections, India is witnessing many processions (‘roadshow’ as it
is called) and meetings organised by the political parties. Almost all these
meetings have been a show of strength for the different leaders. This show of
strength is usually achieved by ‘buying’ people! In a recent ‘roadshow’, even
school children have been used (in blatant violation of the election campaign
codes), to show ‘numbers’. Against such an ‘organised artificiality’, there
have been processions and meetings that showed spontaneous ‘people power’.
Let us walk down the memory lane, to reflect on some of the protests organised
by the people in the past few years.
Exactly six years
back, on March 24, 2018, which was the eve of Palm Sunday, around
500,000 - mainly high school students - gathered in Washington D.C. U.S.A., for
what was known as the ‘March For Our Lives’. This ‘March For Our Lives’, was a
rally organized by students who survived the school shooting in Parkland, Florida,
on February 14, 2018. The students were demanding stricter gun control in the
U.S.
‘New York Times’ (March 24, 2018) reported of protests
taking place in many states in the U.S. as well as in other cities around the
world, like, Geneva, London, Sydney, Berlin, Paris and Amsterdam. It also
reported of ‘counter-protests’ gaining momentum. For instance, NY Times
reported: “In Salt Lake City, demonstrators carried pistols, flags and toddlers
swaddled in blankets. One of their signs read: “What can we do to stop mass
shootings? SHOOT BACK.”
While we feel elated by the protests in Washington,
the counter protests force us to reflect on how crowds can be swayed either
way. Vested interests (like the NRA – National Rifle Association – in the U.S.) organized processions and protests
to safeguard their interests – namely, sale of guns. Such efforts usually sow
dissension and division among the people. We are sadly aware of processions and
rallies that are conducted around India to create more disharmony and hatred.
In 2017, in the
month of January, young women and men of Tamil Nadu took up a peaceful protest in
Marina Beach, Chennai, against the ban of ‘Jallikattu’, the traditional
bull-fight. It was a well-organized protest with utmost control, thus telling
the Indian government that people’s power can achieve results.
Such ‘people
power’ was evident in countries like Tunisia, Egypt, Libya, and in many other
countries in 2011. What started as the "Jasmine Revolution" in Tunisia , then
spread to other countries and was labelled as ‘the Arab Spring’. People in
these countries gathered together without much pre-planning. The spontaneity
and enthusiasm of the people in the above instances shook the so-called
‘well-established-powers’!
This was the case
2000 years ago. People power took to the streets in Jerusalem . All of a sudden, the Roman as well
as the Religious Powers in Jerusalem were shaken by a tornado which came in the
form of Jesus, when he was accorded a spontaneous, enthusiastic welcome given by
the people who had gathered in Jerusalem for the Passover! This is what we
celebrate on Palm Sunday.
When I was
searching for thoughts on the Palm Sunday, I came across a news item, titled: “Palm
Sunday Tornado 1920”. I could not have asked for a better starting point
for my reflections. ‘Palm Sunday’
and ‘Tornado’ seem like a perfect match which unfold many a thought. Tornadoes, I am told, are a common feature
in the U.S., especially in the months of March and April.
The article “Palm
Sunday Tornado 1920” published in Wikipedia spoke about how even in a disaster
like a tornado, discrimination had seeped in. Here is an excerpt from the
article in Wikipedia:
The Palm Sunday
tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes
across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left
over 380+ dead, and at least 1,215 injured.
Here is another
excerpt from the same article that acknowledges the discrimination prevalent in
those days. According to Thomas P. Grazulis, head of the Tornado Project,
the death toll in the southern states on Palm Sunday 1920, could have easily
been much higher, since the deaths of non-whites were omitted as a matter of
official state protocol, even when it came to fatalities from natural
disasters.
Right through human
history discrimination has ruled supreme. Among the Israelites too there were
those who did not count. These ‘taken-for-granted’, ‘not-to-be-counted’ people
created a tornado in Jerusalem when Jesus entered the city. Most of the people
in Jerusalem, especially those in power, were caught off-guard by this
‘intruder’ called Jesus and His ‘not-to-be-counted’ people.
Tornado has another
name ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have
turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy.
As if this was not enough, Jesus entered the very fortress of the religious
leaders – namely, the Temple
– and began to put things in order. Putting things in order? Well, depends on
which point-of-view one takes. For those in power, things were thrown
completely out of gear; but for Jesus and for those who believed in His ways,
this was a way to set things straight. This is typical of a tornado… uprooting,
turning things topsy-turvy. A tornado is, possibly, a call to begin anew!
May this Palm Sunday help
us to allow Jesus to enter our lives. Perhaps, His entry into our lives may
upset our plans and challenge us to put things in order!
We turn our attention
to the second idea – the Holy Week which begins with the Palm Sunday. Of
all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy
about it? What is so holy about the betrayal of a friend, the denial of another
friend, the mock trial, the condemnation of an innocent, young carpenter and
the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the
definition of holiness. But, for Jesus, definitions are there only to be
‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, Jesus
wanted to redefine God – a God who was willing to suffer.
Jesus had also
redefined holiness and made it very clear that in spite of all the unholy and
unjust events that took place during that week in Jerusalem, one could call that
week Holy, since those events culminated in the Supreme Sacrifice – the
Sacrifice on Calvary! This is the reason we are invited to celebrate this week
as the Holy Week!
The liturgical
celebrations of the Holy Week have an inherent danger. They can make us pious
spectators of the final days of the life of Jesus. We are aware that the
Passion of Christ was not a mere ritual, but the combination of many social
evils to which Jesus was subjected to. Those social evils are still prevalent
among us today – false accusations, sham trials and condemnation, especially of
the poor. There is a danger that we ‘watch’ with wide open eyes the liturgy of
the Holy Week as mere rituals and, after leaving the church, close our eyes to
the social evils that still perpetuate the Passion of Christ in our days.
Going through the
liturgical events of Palm Sunday and the Holy Week as mere rituals without any
reference to the society around us is a real danger to our Christian life. This
danger has been expressed by Geoffrey Studdert Kennedy, an Anglican pastor and
poet who served as a chaplain during World War I, in his poem titled –
‘Indifference’.
When Jesus came to
Golgotha, they hanged Him on a tree,
They drove great
nails through hands and feet, and made a Calvary;
They crowned Him
with a crown of thorns, red were His wounds and deep,
For those were
crude and cruel days, and human flesh was cheap.
When Jesus came to
Birmingham (a
city in England), they simply passed Him by.
They would not hurt
a hair of Him, they only let Him die;
For men had grown
more tender, and they would not give Him pain,
They only just
passed down the street, and left Him in the rain.
Still Jesus cried,
‘Forgive them, for they know not what they do,’
And still it rained
the winter rain that drenched Him through and through;
The crowds went
home and left the streets without a soul to see,
And Jesus crouched
against a wall, and cried for Calvary.
After having witnessed
the horrors of World War I, Pastor Kennedy was convinced that our life spent in
the cosy comforts of the church needs to be cleansed and we need to combine our
social life and the devotional practices. He said: “The social life must be
brought right into the heart of our devotion, and our devotion right into the
heart of our social life… There must be free and open passage between the
sanctuary and the street. We must destroy within ourselves our present feeling
that we descend to a lower level when we leave the song of the angels and the
archangels and begin to study economic conditions, questions of wages, working hours
and housing. It is hard, very hard, but it must be done. It must be done not
only for the sake of the street, but for the sake of the sanctuary, too...”
May this Palm Sunday
and the Holy Week that follows, help us to create a free and open passage
between the sanctuary and the street, so that we can travel from one to another
more easily. May we participate in the liturgical celebrations of the Holy Week
more meaningfully, so that we are inspired to take part in meaningful
activities among the people who undergo the Passion of Christ in their
day-to-day life.
குருத்தோலை ஞாயிறு
உலகின் மிகப்பெரிய குடியரசு என்றழைக்கப்படும் இந்திய நாடு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தங்கள் குடியரசைக் காப்பாற்றக்கூடிய தகுதிபெற்ற தலைவர்களைத்
தேர்ந்தெடுக்கும் முயற்சியைத் துவங்கியிருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள
மத சார்பற்ற
குடியரசு என்ற உன்னத கொள்கைக்கு எதிராக, இந்து அடிப்படைவாதக் கருத்துக்களைத் திணிக்க, கடந்த பத்தாண்டுகளாக, பாசிச
கொள்கைகள் கொண்ட ஒரு கட்சி முயன்றுவருவதை உலகம் அறியும். இந்த அடிப்படைவாத அராஜகத்தை,
வருகிற தேர்தலில், ஒரு முடிவுக்குக் கொணர்வதற்குத் தேவையானத் தெளிவையும், துணிவையும் இறைவன் இந்திய மக்களுக்கு வழங்குவார் என்று நம்புவோம், அதற்காக வேண்டுவோம்.
ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி முடிய இந்தியாவில்
நடைபெறவிருக்கும் தேர்தல் விழாவையொட்டி, தற்போது பல ஊர்வலங்களும், கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இவற்றில் கலந்துகொள்ள மக்கள் பணம் கொடுத்து
திரட்டப்படுகின்றனர் என்பது பொதுவான கருத்து. அண்மையில், மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி, இந்தியப் பிரதமர்
தமிழகத்தில் மேற்கொண்ட ஓர் ஊர்வல நாடகத்தில், 50 பள்ளிகளிலிருந்து
மாணவ மாணவியர் பிரதமர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டதைக் கண்டோம்.
தேர்தல் பிரச்சார விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய அற்பத்தனமான
முயற்சிகள், கூட்டம் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கேவலமான ஒரு யுக்தி. பணம் கொடுத்து, அல்லது, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களைத் திரட்ட முயலும் இத்தகைய முயற்சிகளுக்கு
முற்றிலும் மாறாக, மக்கள் தாங்களாகவே கூடிவந்துள்ள கூட்டங்களும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டங்களில்
ஒருசில, மக்களின் சக்தியை உலகறியச் செய்துள்ளன. அண்மைய ஆண்டுகளில், மக்களின் சக்தியை உணர்த்திய ஒரு சில கூட்டங்களை நினைவுகூர முயல்வோம்.
சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, மார்ச் 24, குருத்தோலை ஞாயிறுக்கு முந்தைய நாள், சனிக்கிழமை, உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தைச் சேர்ந்த 5 இலட்சத்திற்கும்
அதிகமான இளையோர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் பேரணியையும், கூட்டத்தையும் நடத்தினர். இவ்வாண்டைப் போலவே, 2018ம் ஆண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த
பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று, அமெரிக்காவின்
ஃபுளோரிடா மாநிலத்தில், ஓர்
உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின்
பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச் செய்துள்ளது. "துப்பாக்கி கலாச்சாரத்தை
வளர்த்துவரும் வயது முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து, இளையோர் இந்த ஊர்வலத்தை தலைநகர் வாஷிங்டனில்
நடத்தினர்.
வாஷிங்டனைப்
போலவே, அமெரிக்காவின் பல்வேறு
மாநிலங்களிலும், உலகின் பெரு நகரங்களான
ஜெனீவா, இலண்டன், சிட்னி, பெர்லின், பாரிஸ் மற்றும் பல நகரங்களிலும்,
அன்று இளையோரின் ஊர்வலங்களும், கூட்டங்களும் நிகழ்ந்தன.
'எங்கள் வாழ்வுக்காகப்
பேரணி' - ‘March For Our Lives’ - என்ற பெயரில் நடத்தப்பட்ட இப்பேரணிகளில்
பல இலட்சம் இளையோர் பங்கேற்றனர். அதே வேளையில், இளையோர் நடத்திய இந்தப் பேரணிகளுக்கு எதிராக, அமெரிக்க ஐக்கிய நாட்டில், துப்பாக்கிகளை
விற்பனை செய்யும் நிறுவனங்களின் தூண்டுதலால், ஒரு சில இடங்களில், கலக்கார கும்பல்களும் கோஷங்கள் எழுப்பின.
'ஜல்லிக்கட்டு' என்ற பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்காக, 2017ம் ஆண்டு, சனவரி மாதம், சென்னை மெரீனா
கடற்கரையில், தமிழகத்தின் இளம் பெண்களும், இளைஞர்களும்
இணைந்து, மேற்கொண்ட ஒரு போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களை, தலைநிமிரச் செய்தது. அரசியல் நாற்றம் அறவே
இன்றி நடத்தப்பட்ட இந்த அறப்போராட்டம்,
நம்பிக்கையை
விதைத்தது. அதேவண்ணம், 2011ம் ஆண்டு,
'அரபு
வசந்தம்' ('Arab Spring') என்ற பெயரில் துனிசியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில், இளையோர் இணைந்து
நடத்திய போராட்டங்களும் நம் நினைவுகளில் ஆழப் பதிந்துள்ளன.
மக்களின், குறிப்பாக, எளிய மக்களின் சக்தியை உணர்த்தும்வண்ணம்
நடைபெற்ற இந்த ஊர்வலங்கள், மற்றும், கூட்டங்களைப் போல், 2000 ஆண்டுகளுக்கு முன், எருசலேம் நகரில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.
உரோமைய அதிகாரத்திற்கும், யூத மதத் தலைவர்களின்
அதிகாரத்திற்கும் சவால் விடுக்கும்வண்ணம் நடைபெற்ற அந்த ஊர்வலம், எருசலேமில் பாஸ்கா விழாவைக் கொண்டாட வந்திருந்த
எளிய மக்களால், எவ்வித வற்புறுத்லும் இன்றி, இயல்பாக, எதேச்சையாக நிகழ்ந்தது. இதைத்தான்
இன்று, குருத்தோலை ஞாயிறன்று
நாம் கொண்டாடுகிறோம்.
இன்று
நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைக் காண
நேர்ந்தது. அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில், 1920ம் ஆண்டு, மார்ச் 28ம்
தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான 38 சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர்
இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின்
வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வெளிவரும் ஒரு செய்தி, சூறாவளிகள். சூறாவளி உருவாகும்
மாதங்களில் குருத்தோலை ஞாயிறும் இடம்பெறுகிறது.
குருத்தோலை
ஞாயிறு - சூறாவளி இவை இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, பல எண்ணங்கள்
உருவாகின்றன. முதல் குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது.
அது, இயற்கையில் உருவான சூறாவளி அல்ல,
இயேசு
என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில், எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி.
சூறாவளி
என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும்.
இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது,
முதல்
குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், மதத்தலைவர்கள் உருவாக்கிவைத்திருந்த பல
கட்டமைப்புக்களை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த பல தவறுகளை, தலைகீழாக மாற்றின
என்பதை உணரலாம்.
இயேசு
தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து,
யூத
மதத்தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின்
சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகாரக்
கோட்டையாக விளங்கிய எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை,
பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!
இந்த குருத்தோலை ஞாயிறு நம்மையும் விழித்தெழச்செய்யும் ஓர்
அழைப்பாக விளங்கட்டும். நம் வாழ்விலும் இயேசு நுழைந்து, அங்கு மாற்றங்களை
- அவை தலைகீழ் மாற்றங்களானாலும் சரி - உருவாக்கவேண்டுமென்று விழைவோம், வேண்டுவோம்.
அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனிதவாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம்
என்று கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும்
ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்?
இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம்.
ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகள் எதிலும் புனிதம் வெளிப்படையாகத் தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்.
மற்றொரு நண்பர் அவரை தனக்குத் தெரியாது என்று மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர்.
மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது.
இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும்,
தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல்
சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்ட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை புனிதமான
நிகழ்வு என்று சொல்ல இயலுமா? புனிதம் என்ற சொல்லுக்கு, மாற்று இலக்கணம் எழுதவேண்டியுள்ளதே. ஆம்... வேறோர் இலக்கணம்
எழுதப்பட்டது. கடவுள் என்ற மாபெரும் மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு.
கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக,
எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே
நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை,
இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள்
பல உள்ளன.
புனிதவாரம் முழுவதும், குறிப்பாக, இவ்வாரத்தின் இறுதி
மூன்று நாள்கள் நடைபெறும் பல திருவழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார்.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஓர் ஆபத்து உள்ளது. அதாவது, இந்த வழிபாட்டு
நிகழ்வுகளை, சடங்குகளாக, வரலாற்று நிகழ்வுகளாக காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடும் ஆபத்து உள்ளது.
அன்று, இயேசுவின் பாடுகளுக்கு அவரை இட்டுச்சென்றது, அன்றைய சமுதாயத்தில்
நிலவிய கொடுமைகள். அதே கொடுமைகள் இன்று நாம் வாழும் சமுதாயத்திலும் தொடர்ந்து நிகழ்கின்றன.
இயேசுவுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு, அவர் மீது
பரிதாபம் கொள்வதோடு நமது பங்கேற்பு நின்றுவிட்டால், புனிதவாரம், வெறும்
சடங்காக மாறிவிடும். இந்த திருவழிபாட்டு நிகழ்வுகள், இன்றைய சமுதாயக்
கொடுமைகள் குறித்து சிந்திக்கவும், அவற்றை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்தவும் நமக்கு உதவினால், நம் புனிதவார முயற்சிகள்,
பொருளுள்ளவையாக அமையும்.
நமது
கோவில்களில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகள், சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நம்மை
அழைத்துச் செல்லவேண்டும். சமுதாயத்தில்
இன்று, பல்வேறு அநீதிகளால் நசுக்கப்பட்டு, இயேசுவின் பாடுகளில் தொடர்ந்து
பங்கேற்கும் மக்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வதற்கு, நாம் பங்கேற்கும் வழிபாட்டு
நிகழ்வுகள், நம்மைத் தூண்டவேண்டும். அவ்வாறு இல்லையெனில், துன்பப்படும் இயேசுவைக் கண்டும் காணாமல்
செல்லும் அக்கறையற்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இக்கருத்தை, Geoffrey
Studdert Kennedy என்ற
ஆங்கிலிக்கன் போதகர் ஓர் அழகிய கவிதையில் கூறியுள்ளார். Kennedy அவர்கள், முதல் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயப் படைவீரர்கள் நடுவே ஆன்மீகப் பணியாற்றியவர்.
Kennedy அவர்கள் எழுதிய ‘Indifference’ - 'அக்கறையற்ற நிலை' என்ற கவிதையின் வரிகள் இதோ:
இயேசு, கொல்கொதா வந்தபோது, அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர்
அவரது
கரங்களையும், கால்களையும் ஆணிகளால்
துளைத்தனர்
தலையில்
சூட்டிய முள்முடியால் ஆழமான காயங்களை உருவாக்கினர்
அவை, கொடுமையான நாள்கள், மனித உயிர் மலிவாகிப்போன நாள்கள்.
இயேசு, பர்மிங்காம் (இங்கிலாந்தின் இன்றைய
நகர்) வந்தபோது, மக்கள் அவரைக் கடந்து
சென்றனர்
அவரை
எந்த வகையிலும் அவர்கள் துன்புறுத்தவில்லை, அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை
தெருவோரத்தில், குளிரில் இயேசு நடுங்கிக்கொண்டிருந்ததை யாரும்
உணரவில்லை
இயேசு,
"இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னெவென்று
இவர்களுக்குத் தெரியவில்லை" என்று கதறி அழுதார்.
குளிர்காலப்
பனி இயேசுவை மூடி, அவரை குளிரில் உறையவைத்தது
கடந்து
சென்ற மக்களெல்லாம் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்
சுவர்
ஓரமாக, குளிரில் நடுங்கியபடி, கடவுளை நோக்கி, 'கல்வாரியைத் தாரும்' என்று இயேசு கதறினார்.
இயேசுவின்
பாடுகள் என்ற வரலாற்று நிகழ்வை, வழிபாட்டு நிகழ்வாகக் கொண்டாடும் இந்த புனித வாரத்தில், கோவில்களில் நிகழும் வழிபாடுகளில் பொருளுள்ள
முறையில் பங்கேற்கவும், அந்த பங்கேற்பின் பயனாக
நம் வீதிகளில் நிகழும் கொடுமைகளைக் களைவதற்குத் தேவையானத் தெளிவையும், துணிவையும் பெறவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.