14 March, 2024

Buried grain – manifold grains புதையுண்ட மணி – பன்மடங்கு மணிகள்

A grain of wheat must die…

5th Sunday of Lent

Of the four seasons of the year, Spring is labelled as the season of hope, since the apparently dormant life in winter, buried under the snow, springs back to life. The weather experts (cf. AccuWeather) have designated March 19, Tuesday, the Feast of St Joseph, as the official first day of spring for 2024. This date marks the vernal equinox. The weather experts have even announced the exact time of the equinox as 11:06 P.M. EDT – Eastern Daylight Time. This is the astronomical beginning of the spring season in the Northern Hemisphere and the autumn season in the Southern Hemisphere. The weather experts seem to use the same vocabulary that is used for the arrival of a train or an aircraft. But, we know that the spring season does not spring up at the given hour. It has had a long gestation period under the blanket of snow and slowly (not abruptly) paints the world in multi-coloured leaves and flowers.

Our generation, accustomed to ‘instant’ and ‘ready-made’ products, does not have the patience to see this slow, imperceptible change that takes place in nature. Humankind will be a lot wiser if we learn to live with and learn from the cycles of nature, rather than try to portray them as machines that bring about changes at the touch of a button!

For us, Christians, spring season began along with Lenten Season. On the First Sunday of Lent, we spoke about Lent and the Spring Season. Today, the Fifth Sunday of Lent, we are back to this theme. To add more relevance to this theme of hopeful changes that mark Lent and Spring, today’s Gospel brings us one of the famous sayings of Jesus about the ‘grain of wheat’.
Last week we reflected on one of the most famous quotes from the Bible known as the ‘gospel of all the gospels’, namely, “For God so loved the world that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life.” (John 3: 16) Today we have another equally famous quote from John’s gospel, namely, “Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit.” (John 12: 24)

Both these verses from John’s gospel have been used as independent quotes without much reference to the context in which Jesus spoke these words. In fact, the whole of John’s gospel is considered more of a theological treatise rather than a historical narration. Hence most of the verses from this gospel can be used as independent quotes without much reference to the context. Still, it would be helpful to reflect on what prompted Jesus to say the words we hear in today’s Gospel.

The opening lines of today’s gospel (John 12:20-33) give us the context in which Jesus spoke the famous ‘parable’ of the grain of wheat. Here are the opening lines: Now among those who went up to worship at the feast were some Greeks. So, these came to Philip … and said to him, "Sir, we wish to see Jesus." (John 12: 20-21)
Philip, along with Andrew, approach Jesus and tell him about the desire of the Greeks. In response to the representation made by Philip and Andrew, Jesus says: “The hour has come for the Son of Man to be glorified. Truly, truly, I say to you, unless a grain of wheat falls to the ground and dies, it remains just a grain of wheat; but if it dies, it produces much fruit. Whoever loves his life loses it, and whoever hates his life in this world will preserve it for eternal life.” (John 12:23-25)
The response of Jesus seems very disconnected to the request of the Greeks, wishing to see Him. Since the Greeks must have come seeking some spiritual wisdom from Jesus, he could have easily spoken to those foreigners a great parable. After all, he was known as a master story teller. Instead, he talks about his death, using the parable of ‘the grain of wheat’. Why did the Greeks come to see Jesus? Why did Jesus speak about his death, through the parable of the grain of wheat?

The answers to these questions are given by Fr Munachi Ezeogu, a Roman Catholic Priest from Nigeria and a Scripture scholar. In his homily on today’s gospel passage, he has interpreted that the Greeks came to see Jesus since they were concerned about the safety of Jesus in Jerusalem and wanted to take him away to their country and hence, Jesus spoke about his impending death. This explanation seems quite plausible, and I wish to share Fr Ezeogu’s views here:
The Greek philosopher Socrates is regarded as one of the wisest men of all time. This man… devoted his life to exposing ignorance, hypocrisy and conceit among his fellow Athenians and calling them to a radical re-examination of life… But those in power arrested him, tried him and sentenced him to death… Subsequent generations of Greeks came to regard Socrates as a martyr for truth. They resolved never again to persecute anyone on account of their beliefs.

By the time of Jesus, the Greeks had become among the most broad-minded people in the world. Various religious and philosophical traditions flourished among them and vied for popularity. We see in today's gospel that among the huge crowds that had come to Jerusalem for the Passover feast, were some Greeks. It did not take these Greeks long to see that all was not well in Jerusalem. So, they came to see Jesus. Why did they come to see Jesus? Although John has somewhat spiritualised the story, thereby giving the impression that they came to seek admission into the "body" of Christ (cf. John 12:32), it is more probable that they came to alert Jesus of the seriousness of the danger surrounding him and to suggest to him to flee with them to Greece, the land of freedom. The response that Jesus gives to their request shows that it has to do with his impending death and that he has chosen to stay and face it rather than seek a way to escape it.

If the Greeks, in their short stay in Jerusalem for the Passover festival, could pick up the dangerous plots that were brewing, Jesus would have also sensed them. But He chooses to stay on and face the consequences. He begins his response with the famous line: “The hour has come for the Son of man to be glorified.”
Thrice in John’s gospel we see the line ‘the hour has NOT yet come’. The first time was in the wedding at Cana: When the wine failed, the mother of Jesus said to him, "They have no wine." And Jesus said to her, "O woman, what have you to do with me? My hour has not yet come." (John 2: 3-4) On two more occasions during the public ministry of Jesus the phrase ‘his hour had not yet come’ is used. (cf. John 7:30; 8:20). Now Jesus declares that the hour has come… The hour for what? The hour to become a life-giving seed by sacrificing life.

The purpose of the grain of wheat is twofold – either it can be ground into a flour to become food, or, buried in the ground and yield manifold grains. The imagery of the seed falling to the ground and, thus, becoming a life-giving source, has inspired millions of Christians to become life-giving seeds. One among them is St Ignatius of Antioch. Legend says that as Bishop Ignatius was led to the Colosseum to be thrown among the lions, he said: “I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.”

Down the centuries, the courage and determination shown by Jesus and his followers have rubbed off on so many noble and courageous souls. One of the recent examples is Mr Alexei Navalny who was killed on February 16 by Vladimir Putin, the President of Russia. We think of Mr Navalny especially today, March 17, when ‘fake elections’ are being conducted in Russia in which Putin is seeking his fifth term as president of Russia.

After the burial of Mr Navalny on March 1, his wife Yulia Navalnaya made a special appeal to the supporters of Mr Navalny to line up at the polling booths on March 17. Knowing full well that no protest can stop Putin from becoming the President once again, Ms Navalnaya has made this appeal with the fond hope that the grain of wheat – her husband – will yield rich harvest. Here are some excerpts from the news story that appeared on March 6 on ‘the Guardian’ about the call of Ms Navalnaya:
The widow of the late Russian opposition leader Alexei Navalny has called for people to protest against Vladimir Putin at polling booths in the forthcoming presidential election. Yulia Navalnaya urged her supporters to protest against Putin by voting en masse at noon local time in the 17 March election, forming large crowds and overwhelming polling stations.
She said the action would also be a way to honour her late husband, who came up with the idea in one of his last public messages before his sudden death in an Arctic prison. “I want to do what he thought was right,” Navalnaya said in a video published on Wednesday (March 6) on YouTube. “There are many people around you who are anti-Putin and anti-war, and if we come at the same time, our anti-Putin voice will be much louder.”

The polling protest has been labelled “midday against Putin”... Navalnaya called on her supporters to vote for “any candidate except Putin”. She said: “You can ruin the ballot, you can write ‘Navalny’ in big letters on it. And even if you don’t see the point in voting at all, you can just come and stand at the polling station and then turn around and go home.”
Navalnaya, who is hoping to take over her husband’s mantle as leader of the Russian opposition, also said she had drawn hope from the tens of thousands that turned out last week for the funeral of her husband. She said: “Looking at you, I am convinced that everything is not in vain, and this thought gives me strength. Now you all know that there are actually a lot of us, all those who love and support Alexei, who share his ideas and as long as we have each other, it’s not over.” According to a count by the Russian independent outlet Mediazona, at least 27,000 people came to say farewell to Navalny at Borisovsky cemetery on the outskirts of Moscow.

The death of Mr Navalny, if it brings out his supporters to the polling booths this Sunday, will be a true testimony of what Jesus had predicted in today’s Gospel: “Truly, truly, I say to you, unless a grain of wheat falls to the ground and dies, it remains just a grain of wheat; but if it dies, it produces much fruit.”
Let us hope and pray that the supporters of Alexei Navalny can come together and help the people to hope that democracy is possible in Russia.

We can surely think of this event as an inspiration for us, Indians, to line up at the polling booths once elections dates are announced. We need to root out the weeds that have taken root in our Parliament and replace them with healthy grains of wheat that will, hopefully, restore democracy in India.

Death that brings life

தவக்காலம் 5ம் ஞாயிறு

இயற்கையில் இடம்பெறும் நான்கு பருவக்காலங்களில், வசந்த காலத்திற்குத் தனியொரு மந்திரசக்தி உண்டு. குளிர்காலத்தில், பனியில் புதைந்து, இறந்துபோனதுபோல் தோன்றும் தாவர உயிர்கள், வசந்தம் வந்ததும், மீண்டும் உயிர் பெற்று எழுவது, இயற்கை நமக்குச் சொல்லித்தரும் நம்பிக்கை பாடம். நம் தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும் அனைத்தும் அழிந்துவிட்டதைப்போல் தோன்றினாலும், அங்கும் நம்பிக்கையின் தளிர்கள் வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நம்பிக்கைப் பாடத்தைப் பயில, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் வசந்தகாலம் வரும். இவ்வாண்டு, மார்ச் 19, வருகிற செவ்வாய், புனித யோசேப்பு திருநாள், வசந்தகாலத்தின் முதல் நாள் என்ற அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. பனியில் புதைந்திருக்கும் தாவர உலகில், வசந்தகாலம், வண்ணமயமான பல மாற்றங்களைக் கொணரும். இயற்கையில் மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமும், நம் வாழ்வில் நன்மைதரும் மாற்றங்களைக் கொணரும் தவக்காலமும், மார்ச் மாதத்தில் இணைந்துவருவது, இறைவன் வழங்கும் கொடை.

தவக்காலத்திற்கும், வசந்தக்காலத்திற்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பை, நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சிந்தித்தோம். தவக்காலத்தின் 5ம் ஞாயிறான இன்று, வசந்தக்காலத்தைப்பற்றி, மீண்டும் ஒருமுறை சிந்திக்க வந்திருக்கிறோம். தாவர உலகம் இறந்து, புதைந்து, மீண்டும் உயிர்பெற்றெழும் வசந்த காலத்தை நினைவுறுத்தும் வகையில், அழகான ஒரு கூற்றை, இறைமகன் இயேசு, இந்த ஞாயிறு நற்செய்தியில் நமக்கு வழங்குகிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.(யோவான் 12:24) சவால்கள் நிறைந்த இந்தக் கூற்று, தியாகத்தை வலியுறுத்தும் ஒரு மேற்கோளாகப் பயன்படுத்துப்படுவதை நாம் அறிவோம். இயேசு எத்தகையச் சூழலில் இதைக் கூறினார் என்பதை புரிந்துகொள்வது பயனளிக்கும்.

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் ... பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள். (யோவான் 12: 20-21) என்ற சொற்கள் வழியே, நற்செய்தியாளர் யோவான் இச்சூழலை பதிவு செய்துள்ளார்.
ஆர்வமாக, ஆவலுடன், தன்னைக் காண வந்த கிரேக்க நாட்டவரை, இயேசு வரவேற்று, அவர்களுக்கு நம்பிக்கை தரும் நாலு வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறும் வார்த்தைகள், கலக்கத்தை, அச்சத்தை உருவாக்கும் வார்த்தைகளாக ஒலிக்கின்றன. எருசலேமுக்கு கிரேக்கர்கள் ஏன் வந்தார்கள்? அவர்கள் ஏன் இயேசுவை காண விழைந்தார்கள்? அவர்களிடம் இயேசு ஏன் இப்படி ஒரு பதிலைத் தந்தார்? என்ற கேள்விகளுக்கு நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முனாச்சி என்ற அருள்பணியாளர், (Fr Munachi E. Ezeogu) தன் மறையுரையில் தரும் விளக்கம், புதிதாகவும், புதிராகவும் உள்ளது. அதேவேளையில், ஒரு சில தெளிவான பாடங்களையும் சொல்லித்தருகிறது.

அருள்பணி முனாச்சி அவர்கள் கூறுவது இதுதான்கிரேக்கர்கள் உரோமையர்களைவிட கலாச்சாரத்தில் உயர்ந்தவர்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற மேதை சாக்ரடீசை தாங்கள் கொன்றது பெரும் தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். சாக்ரடீசின் கொலைக்குப் பின், எந்த ஒரு தனி மனிதரையும், அவர் பின்பற்றும் கொள்கைகளுக்காகவோ, அவர் மக்களிடையே பரப்பிவரும் கருத்துக்களுக்காகவோ கொல்வதில்லை என்று உறுதியான தீர்மானம் எடுத்தவர்கள் கிரேக்கர்கள். எனவே, அவர்கள் மத்தியில் பல்வேறு சிந்தனையாளர்கள் சுதந்திரமாக வாழமுடிந்தது, பேசமுடிந்தது. தங்கள் நாட்டின் அறிஞர்கள் வழங்கிய சிந்தனைகள் போதாதென்று, பல கிரேக்கர்கள், அண்டை நாடுகளுக்கும் சென்று, அங்குள்ள சிந்தனையாளர்களைச் சந்தித்து, தங்கள் அறிவைப் பெருக்கிக்கொண்டனர். தங்கள் சுதந்திரச் சிந்தனையை வளர்த்துக்கொள்ள விரும்பிய கிரேக்கர்களில் ஒரு சிலர், இயேசுவைத் தேடி, எருசலேம் நகருக்கு வந்தனர்.

எருசலேமில் அவர்கள் இயேசுவைத் தேடியபோது, ஒரு கசப்பான உண்மையை முதலில் கண்டுபிடித்தனர். இயேசு என்ற அந்த இளையவருக்கு எதிராக அந்நகரில் உருவாகியிருந்த எதிர்ப்பும், வெறுப்பும், கிரேக்கர்களை அதிர்ச்சியடையச் செய்தன. எனவே, அவர்கள் இயேசுவைச் சந்தித்ததும், தாங்கள் கண்டுபிடித்த உண்மைகளை அவருக்கு எடுத்துச்சொல்லி, சிந்தனைச் சுதந்திரம் உள்ள கிரேக்க நாட்டுக்கு தங்களுடன் வரும்படி அவரை அழைத்திருக்க வேண்டும். அவர்கள் தந்த அழைப்பை ஏற்க மறுத்த இயேசு, ‘தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று பேச ஆரம்பிக்கிறார்.

ஊருக்குப் புதிதாய் வந்த வேற்று நாட்டினரே இயேசுவுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்திருந்தார்கள் என்றால், இயேசுவுக்கு அது தெரியாமலா இருந்திருக்கும்? கட்டாயம் இயேசு இதை உணர்ந்திருப்பார். அந்த ஆபத்திலிருந்து தப்பித்துப் போகாமல், அதை நேருக்கு நேர் சந்திக்க அவர் முடிவெடுத்தார். அந்த கசப்பான முடிவை, இன்றைய நற்செய்தியில், பல விதங்களில் கூறியுள்ளார் இயேசு.

இயேசு சொன்ன முதல் வாக்கியம்: மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. (யோவான் 12:23) யோவான் நற்செய்தியில் "நேரம் வரவில்லை" என்ற வார்த்தைகள் மும்முறை சொல்லப்பட்டுள்ளன. கானாவில் நடந்த திருமணத்தின்போது மரியா அவரிடம் 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்று சொன்னதும், இயேசு அவரிடம், அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே (யோவான் 2:3-4) என்று முதல் முறையாகச் சொல்கிறார். மீண்டும் யோவான் நற்செய்தியில் இரு இடங்களில் அவருடைய நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைத் தொடவில்லை (யோவான் 7:30) அவரைப் பிடிக்கவில்லை (யோவான் 8:20) என்று வாசிக்கிறோம். தன் நேரம் இன்னும் வரவில்லை என்று அதுவரை உணர்ந்திருந்த இயேசு, இன்று, தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... மாட்சி பெறும் நேரம் என்றால், அதைத் தொடர்ந்து, அரியணை, மணிமகுடம், அரசாட்சி என்ற தோரணையில் இயேசு பேசியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, இயேசு கூறியவை, மேலும் புதிராக உள்ளன. அவர் தொடர்ந்து கூறிய வார்த்தைகள், காலம் காலமாக, பலருடைய உள்ளங்களில், குறிப்பாக, மறைசாட்சிகளின் உள்ளங்களில், உறுதியை, வீரத்தை விதைத்துள்ள வார்த்தைகள்: கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.(யோவான் 12: 24)

கோதுமை மணி படைக்கப்பட்டதற்கு, முக்கியமான இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, அது, மாவாக அரைபட்டு, உணவாக மாறி, வேறொரு உயிரை வளர்க்கவேண்டும். அல்லது, அது, விதையாக மாறி, தன் இனத்தைப் பெருக்கவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் நிறைவேற, கோதுமை மணி, தன் சுய உருவை, உயிரை இழக்கவேண்டும்.
கோதுமை மணி, மாவாக அரைபட்டு, அப்பமாக மாறுவதை, மறைசாட்சியாக உயிர் துறந்த அந்தியோக்கு நகரின் புனித இஞ்ஞாசியார் அழகாகக் கூறியுள்ளார். தான் சிங்கங்களுக்கு உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்த அவர் சொன்ன வார்த்தைகள் இவை: "இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு, கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காக படைக்கப்பட்ட கோதுமை மணி நான்." (I am God's wheat, ground fine by the lion's teeth to be made purest bread for Christ.)

புனித இஞ்ஞாசியாரைப் போல, பல்லாயிரம் மறைசாட்சிகள், மரணம் வரை உறுதியாக நிலைத்திருக்க, கோதுமை மணியைக்குறித்து இயேசு கூறிய இந்த இறை வாக்கியம் தூண்டுதலாக இருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த வீர உள்ளங்களின் வரலாற்றில், நம் நினைவில் இறுதியாகப் பதிந்திருப்பவர், இரஷ்ய நாட்டின், அலெக்ஸெய் நவால்னி (Alexei Navalny) அவர்கள். 1999ம் ஆண்டுமுதல் இரஷ்ய நாட்டின் பிரதமராகவும், அரசுத்தலைவராகவும் தன்னையே நிலைநாட்டிவரும் விளாடிமிர் புடின் என்ற ஆணவம் நிறைந்த அரக்கனை எதிர்த்து குரல் கொடுத்துவந்தவர் நவால்னி அவர்கள். அவரைக் கொல்ல புடின் மேற்கொண்ட பல முயற்சிகளை வென்று போராடி வந்த நவால்னி அவர்கள், இறுதியில், இரஷ்யாவின் ஆர்க்டிக் பனிப்பகுதியில் உள்ள சிறையில், இவ்வாண்டு பிப்ரவரி 16ம் தேதி கொல்லப்பட்டார். 

நவால்னி அவர்களை இன்று, மார்ச் 17, ஞாயிறன்று நாம் நினைவுகூர ஒரு முக்கிய காரணம் உண்டு. இரஷ்ய நாட்டின் அரசுத்தலைவராக தற்போது வன்முறை ஆட்சி செய்துவரும் விளாடிமிர் புடின், 5வது முறையாக அரசுத்தலைவராகப் பொறுப்பேற்பதற்கு, மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, அந்நாட்டில், போலியான ஒரு தேர்தல் நாடகத்தை நடத்துகிறான். இவ்வேளையில், நவால்னி அவர்களின் ஆதரவாளர்கள் வாக்களிக்கும் இடங்களுக்கு இந்த ஞாயிறு மதியம் வந்து கூடுமாறு, நவால்னி அவர்களின் மனைவி, ஹூலியா நவால்னயா (Yulia Navalnaya) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்லப்பட்ட தன் கணவரின் அடக்க நிகழ்வு மார்ச் 1ம் தேதி நடைபெற்றபோது, இரஷ்ய அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், ஆயிரக்கணக்காக மக்கள் மாஸ்கோவில் கூடியிருந்ததை நவால்னயா அவர்கள் பாராட்டினார். அதே துணிவோடு, மார்ச் 17, ஞாயிறன்று நடுப்பகல் நேரத்தில், நவால்னி அவர்களின் ஆதரவாளர்கள் நாடெங்கிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் கூடிவரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் புடினுக்கு எதிராக வாக்களிக்கலாம், அல்லது, வாக்குச் சீட்டுகளில், நவால்னி என்ற பெயரை எழுதி, வாக்கை செல்லாததாக மாற்றலாம், அல்லது, வாக்களிக்காமல் மீண்டும் இல்லம் திரும்பலாம். ஆனால், மதிய நேரத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, நாடெங்கிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் கூடிவரவேண்டும் என்று, நவால்னயா அவர்கள் கூறியுள்ளார்.

அவ்வாறு கூடிவந்தால், தங்களைப் போல் பல்லாயிரம் பேர் புடின் ஆட்சியை எதிர்க்கின்றனர் என்பதையாவது ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள முடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று எண்ணி, வாக்களிப்பதை புறக்கணித்து, வீட்டில் முடங்கியிருப்பதைக் காட்டிலும், வீட்டைவிட்டு வெளியேறி, வாக்குச் சாவடிகளில் நடுப்பகல் நேரத்தில் கூடிவருவதால், இந்த நாட்டில் மாற்றத்தை விரும்பும் மக்களின் சக்தியை நாம் உணரமுடியும் என்று ஹூலியா நவால்னயா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடினின் அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுத்த அலெக்ஸெய் நவால்னி என்ற ஒரு கோதுமை மணி கொலையுண்டு, புதைக்கப்பட்டதால், மார்ச் 17, பல்லாயிரம் இரஷ்ய மக்கள் இணைந்து வர வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வாதிகார ஆட்சியை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை உருவாக வாய்ப்புள்ளது. இதைத்தான் இயேசு: கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறிச் சென்றார்.

இரஷ்யாவில் நல்லாட்சியை அமைக்க விரும்பும் மக்கள், மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, வாக்குச் சாவடிகளில் கூடிவந்து, புதைக்கப்பட்ட நவால்னி என்ற கோதுமை மணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்று நம்புவோம், அதற்காக மன்றாடுவோம்.

அதேபோல், இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில், நல்ல பல மாற்றங்கள் நிகழவேண்டும் என்று நம்பிக்கையுடன் செபிப்போம். இரஷ்யாவில் இந்த ஞாயிறு நடைபெறும் நிகழ்வுகள், நாம் தேர்தலன்று மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாக, தூண்டுதலாக அமையவேண்டும். கடந்த பத்தாண்டுகளாக, நமது பாராளுமன்றத்தில் வேரூன்றியிருக்கும் களைகளை அகற்றிவிட்டு, நல்ல கோதுமை மணிகளை தேர்ந்தெடுத்து விதைக்கவும், அவற்றின் பலன்களை அனுபவிக்கவும் இறைவன் நமக்கு தெளிவையும், மன உறுதியையும் தருவாராக! 


No comments:

Post a Comment