14 August, 2011

“You have great faith! Your requests are granted!” “உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்”






Travelling around the country and the world has become almost a necessity these days. Every time we reach a country or a city, we are given ‘Welcome’ messages through signboards and the public address system. When we leave a city, we see the sign: ‘Thank you. Come again.’ I am not a great fan of travelling. I do have my anxieties travelling to new places. Hence, these welcome signboards and messages put me at ease.
I am yet to see a country or a city that openly says: ‘You are not welcome’ or ‘Don’t come again’. In reality, however, we feel the unwelcoming trends and undercurrents flowing freely all over the world. Every time we wish to visit a county, the visa process makes us feel that we are not welcome in that country. Perhaps this ‘you-are-not-welcome’ message is more clearly given to the third world people. Of late, the ‘unwelcome’ mood has erupted into violence in quite a few countries.

The unwelcome atmosphere grows when we divide the world into I vs You, We vs Them etc. Such divisions give way to different types of violence, including terrorist activities, ethnic cleansing, religious clashes, targeted attacks on foreigners, and riots. The recent riots in England have filled one more page in human history in blood. In most of these riots, youngsters take up pivotal role.
Talking of the recent riots in England, Ellen Teague, from Columban Justice and Peace, commented: “In the UK we have seen recent cuts to services which assist marginalised youth, such as youth clubs and employment schemes. We have also seen huge rises in student fees which has put a university education out of the reach of low income families. When interviewed, young people causing trouble in our cities have consistently spoken of anxiety for their futures and alienation from political and legal processes.”

Youngsters who have lost hope of the future have scant regard for the safety of the present as well. Our world, fragmented into hundreds of divisions, creates a sense of fear of ‘the other’ and a loss of hope for a better world. Against such a background, the words from Isaiah sound like an impossible dream.
Isaiah 56:1, 6-7
This is what the LORD says: “Maintain justice and do what is right, for my salvation is close at hand and my righteousness will soon be revealed. And foreigners who bind themselves to the LORD to minister to him, to love the name of the LORD, and to be his servants, all who keep the Sabbath without desecrating it and who hold fast to my covenant—these I will bring to my holy mountain and give them joy in my house of prayer. Their burnt offerings and sacrifices will be accepted on my altar; for my house will be called a house of prayer for all nations.”
Universal salvation is the key theme of this Sunday’s readings. Justice, righteousness, equality, acceptance…. All that the human spirit craves for deep down is expressed as God’s promises in Isaiah – not only to Israelites but also to foreigners.

Such passages from the Bible, although sound very ideal, out of the world, and impossible, have inspired millions to take them seriously. Mohanlal K. Gandhi was one of them who took the Bible, especially the Gospels very seriously. But, what Gandhi saw in real life was far from the ideal life expressed in the Gospels. Here is an anecdote from his own life: M. K. Gandhi in his autobiography tells how, during his days in South Africa as a young Indian lawyer, he read the Gospels and saw in the teachings of Jesus the answer to the major problem facing the people of India, the caste system. Seriously considering embracing the Christian faith, Gandhi went to a white-only church one Sunday morning, intending to talk to the minister about the idea. When he entered the church, however, the usher refused to give him a seat and told him to go and worship with his own people. Gandhi left the church and never returned. “If Christians have caste differences also,” he said, “I might as well remain a Hindu.” (Fr. Munacci) 

Ideal life - the life expressed in the Gospels - and real life seem far removed from one another. We are asked to bridge the gap. Jesus tries to emphasise this ‘gap’ in today’s gospel in a very strange way. (I must admit that this is one of the difficult passages for me to understand… especially the rude language used by Jesus with the Canaanite woman.) The woman perseveres in bridging the gap. Thank God the final lines of today’s gospel end well with Jesus praising the Canaanite woman: Then Jesus said to her, “Woman, you have great faith! Your request is granted.” (Matthew 15: 28)
We spoke of the disenchanted, discouraged youth who took active part in the riots in England. That is only one side of reality. We also have positive news of the youth who are gathering in Madrid for the World Youth Day (August 18-21). We pray earnestly that Jesus would tell these young men and women, “You have great faith! Your requests are granted!”


"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு கூற்று. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் இந்த எண்ணத்தை பிற மாநிலத்தவரிடம், பிற நாட்டினரிடம் சொல்லி, விளக்கம் தந்து, பெருமைபட்டிருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணத்தைச் சொல்ல எனக்குள் தயக்கம் அதிகமாவதையும் உணர்ந்து வருகிறேன். வந்தாரை, தமிழகம் தேடி தஞ்சம் புகுந்தாரை, ஏன்... தமிழகத்திலேயே வாழும் பல பிரிவினரை தமிழகமோ, அங்கு வாழும் தமிழர்களோ உண்மையில் வாழ வைத்திருக்கிறோமா என்ற கேள்வி என் மனதில் இப்போது அடிக்கடி நெருடுகிறது.
தமிழகத்தில் நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வோர் ஊரின் எல்லையைத் தொடும்போதெல்லாம் நம் மனதை மகிழ்விக்கும் ஒரு வாசகம் சாலையோரம் இருக்கும். உதாரணமாக, சென்னையை நோக்கிச் செல்லும்போது, "சென்னை மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஊரின் முகப்பிலும் இத்தகைய வரவேற்பு நமக்குக் காத்திருக்கும். அதேபோல், அந்த ஊரைவிட்டுச் செல்லும்போது, "நன்றி... மீண்டும் வருக" என்று அந்த ஊர் நம்மை மீண்டும் வரவேற்கும்.
அயல் நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு விமான நிலையத்திலும் வரவேற்பு வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும். விமானம் தரையிறங்கியதும், வரவேற்கும் வார்த்தைகள் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்.
உலகில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு நகரமும் "நீங்கள் இங்கே வரக் கூடாது, உங்களுக்கு இங்கே அனுமதியில்லை" என்று பகிரங்கமாக முழங்குவது இல்லை. ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? நாடு விட்டு நாடு செல்பவர்களை, ஊர்விட்டு ஊர் செல்பவர்களை 'வாருங்கள்' என்று வார்த்தையால் சொல்லிவிட்டு, 'வராதீர்கள்' என்று செயல்களால் காட்டும் போக்கு பெருகிவருகிறது இன்றைய உலகில்.

நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று உலகில் பாகுபாடுகள், பிரிவுகள் வளர்ந்து வருவதால், சண்டைகள், கலவரங்கள் பெருகி வருகின்றன. கடந்த பத்து நாட்களாய் இங்கிலாந்து நாட்டில் நடந்த கலவரங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அதற்கு முன், மும்பையில், அதற்கு முன் லிபியாவில், அதற்கு முன் எகிப்தில்... என்று 2011ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டில், நகரில் கலவரங்கள் வெடிப்பதை நாம் பார்த்து, கேட்டு பழகிவிட்டோம். உலகம் தன்னையே ஒரு முறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. இந்த 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது... ஏன் ஒரு பத்து நிமிடங்களாவது உலகம் முழு அமைதியில் சுழல்கிறதா என்பது பெரிய கேள்விக் குறி. குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, அரிவாள் வெட்டு, கத்திக் குத்து என்று பூமி காயப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இக்கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது, காயப்படுவது, உயிர்பலியாவது யார்? இளையோரே. இங்கிலாந்து கலவரங்களில் ஈடுபட்டிருந்த இளையோரைக் குறித்து Ellen Teague என்ற இளம்பெண் செய்தித்தாள் ஒன்றில் கூறியிருந்த எண்ணம் என் கவனத்தை ஈர்த்தது. "நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கையை இளையோர் இழந்து வருகின்றனர். அதனால், இன்றைய உலகை அழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்று அவர் சொன்னது பெருமளவு பொருள் உள்ளதாக எனக்குப் பட்டது. இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:
இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7
ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.
நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணைய முடியும் என்று இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன இறைவனின் உறுதி மொழிகள்.

விவிலியத்தில் இதுபோன்று காணக்கிடக்கும் உறுதி மொழிகள் பலருக்கு மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. இன்றும் தருகின்றன. அவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காந்தி விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை ஆழமாக வாசித்த பின் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கியிருந்த இந்தியாவுக்கு கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை எடுத்துச் சொல்ல அவர் ஒரு ஞாயிறன்று கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில் ஐரோப்பிய இனத்தவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென உள்ள கோவிலுக்கு அவர் செல்ல வேண்டும் என்றும் கூறினார். காந்தி கோவிலை விட்டு வெளியேறினார். மீண்டும் அவர் கிறிஸ்தவக் கோவில் பக்கம் திரும்பவேயில்லை. கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாகவே இருப்பதே மேல்" என்று அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.
இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல. நாம் வாழும் நடைமுறை உலகம் இன்னும் பிளவுபட்டிருக்கிறது என்பதை இந்தியாவில் ஆகஸ்ட் 10ம் தேதி, கடந்த புதனன்று கடைபிடிக்கப்பட்ட 'கறுப்புநாள்' நினைவுபடுத்துகிறது.
பாகுபாடுகளை மீறி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. ஊரின் எல்லைப்பகுதியில், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண் நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார். இஸ்ரயேல் மக்களிடையிலேயே பெண்களுக்குச் சரியான இடம், தகுதி இவை வழங்கப்படவில்லை. அவர்கள் மத்தியிலேயே பெண்கள் பொது இடங்களில் கூட்டத்திற்கு முன் வருவது கூடாது; கூட்டத்தில் பேசக் கூடாது என்று பல விதி முறைகள் இருந்தன. இச்சூழலில், இஸ்ரயேல் இனத்தைச் சாராத, தாழ்த்தப்பட்ட புற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் துணிவுடன் இச்செயலில் ஈடுபட்டிருப்பது நமக்குப் பாடங்கள் தருகின்றன.

தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண் என்று அடுக்கடுக்கான பல தடைகளைத் துணிவுடன் தாண்டி இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம் மீண்டும் மீண்டும் அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். நற்செய்தியில் நமக்குக் காட்டப்படும் இயேசு சில நேரங்களில் புரியாத புதிராக விளங்குகிறார். அவரைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ள ஒரு நற்செய்திப் பகுதி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் கடினமான சொற்களையும் வேறொரு கண்ணோட்டத்துடன் புரிந்து கொண்டு அப்பெண் தன் விண்ணப்பத்தை மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.
இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறும்போது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணையும் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை கூட்டத்திற்கு முன் புகழ்ந்தாரே... அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன.

பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகின் மேலும், நாளைய உலகின் மேலும் நம்பிக்கை இழந்துள்ள இளையோர் ஒருபுறம் என்றால், ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் வருகிற செவ்வாயன்று துவங்கி வருகிற ஞாயிறு வரை நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாளையொட்டி நம்பிக்கையை வளர்க்கும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள இளையோரையும் மறுபுறம் எண்ணி பெருமைப்படுவோம். "இளையோரே, உங்கள் நம்பிக்கை பெரிது... நீங்கள் விரும்பியவாறே உங்களுக்கு நிகழட்டும்என்று இயேசு இவர்களிடம் சொல்வதன் மூலம் வருங்கால உலகில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று மன்றாடுவோம். நாளை, திங்கள் கிழமை, இந்தியாவின் விடுதலை நாளும், அன்னை மரியாவின் விண்ணேற்பு நாளும் இணைந்து வரும் வேளையில், நாட்டில் பிளவுகளும் பிரிவுகளும் மறைந்து வளமையும், ஒற்றுமையும் வளர வேண்டுவோம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று நம் சிந்தனைகளை ஆரம்பித்தோம். முடிவிலும் கணியன் பூங்குன்றனார் எழுதிய ஓர் அழகிய தமிழ் செய்யுளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னோரு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

- கணியன் பூங்குன்றனார்

08 August, 2011

STEPPING OUT INTO THE UNKNOWN கடலின் நடுவில் கடவுள் நம்மோடு


How many of us have seen our ears, nose or mouth directly? A human being is equipped to see certain parts of his/her body - like the hand and the feet - directly. But it is not possible to see one’s ears, nose, mouth, back etc. directly. We can only see their reflections in the mirror. It is strange but true that certain parts of our body, although an integral part of us and are very important in our lives, are not directly visible. The ‘obvious’ is not that obvious!
In the same way, although God is so much part of our lives, we do not see God on so many occasions. Especially when we are engulfed in struggle and pain, God seems remote or even lost. Today’s First Reading from I Kings as well as the Gospel invite us to reflect on how easily and how often we miss SEEING God.
Elijah, the prophet, had challenged the prophets of Baal and Asherah on Mount Carmel, proved them wrong and exterminated them. Hence, Elijah had incurred the wrath of Jezebel, the queen and ran away from the country. The first part of chapter 19 of I Kings gives us a picture of Elijah who preferred to die rather than live in fear. Our reading today is a sequel to this episode, where God invites Elijah to come out of the cave to meet Him.
1 Kings 19:11-13
The LORD said, “Go out and stand on the mountain in the presence of the LORD, for the LORD is about to pass by.” Then a great and powerful wind tore the mountains apart and shattered the rocks before the LORD, but the LORD was not in the wind. After the wind there was an earthquake, but the LORD was not in the earthquake. After the earthquake came a fire, but the LORD was not in the fire. And after the fire came a gentle whisper. When Elijah heard it, he pulled his cloak over his face and went out and stood at the mouth of the cave. Then a voice said to him, “What are you doing here, Elijah?”
When Elijah saw the powerful wind, earthquake and fire he would have felt happy and secure that his God had come with might to fight his cause against the queen. His expectation proved wrong. God came in a gentle whisper. To belie our expectation is the beauty of God – the God of surprises.
The same lesson is reiterated in today’s Gospel as well. The miracle of Jesus walking on the water is given in three gospels – Matthew, Mark and John. The opening lines of today’s gospel are quite significant.
Matthew 14: 22-23
Immediately Jesus made the disciples get into the boat and go on ahead of him to the other side, while he dismissed the crowd. After he had dismissed them, he went up on a mountainside by himself to pray.
This is a sequel to the last Sunday’s gospel where Jesus fed more than 5000 people. Soon after that miracle, Jesus was very keen on dismissing the crowd and forcing his disciples to leave the place. Why this hurry? John’s gospel gives us a clue.
John 6: 14-15
After the people saw the sign Jesus performed, they began to say, “Surely this is the Prophet who is to come into the world.” Jesus, knowing that they intended to come and make him king by force, withdrew again to a mountain by himself.
The Israelites who had been under the tyranny of the Romans were very much attracted by the words of Jesus. Now they had seen him work a major miracle. (Remember… feeding the multitude is the only miracle that is recorded six times – twice in Matthew and Mark and once in Luke and John.) In an over-enthusiastic crowd even a tiny spark is enough to create a huge frenzy. I guess someone in the crowd must have shouted: “This is the King we have been waiting for!” or some such thing. Knowing how a crowd can be swayed by emotions, Jesus wanted to leave that place. He wanted to be by himself in order to pray!
The closing line of the gospel passage quote above goes like this: Jesus withdrew again to the mountain by himself. The word ‘again’ is noteworthy. Jesus was going to the mountain by himself again and again. What for? Not just to escape from the crowds… but to spend time with himself and with his Father. To pray, to reflect, to regain perspective on his otherwise busy life. If only our leaders – political, religious leaders – follow Jesus at least in this regard? Just a wishful thinking…
Jesus did not lock himself up with prayer. He came down to help his disciples struggling with wind and waves. He came to them walking on the sea. This was a symbolic act. In many world religions the sea stands for a power usually in opposition to the divine. Monsters abide in the sea. Many divine beings are depicted as conquering this power.
Jesus walked on the sea to prove a point: When the people offered him an earthly crown, he declined it. His mission was not to fight the Roman empire alone. His mission was to fight all the evil powers.
The disciples failed to recognise Jesus walking on the waters. Not only that… they mistook him for a ghost. When our whole attention is on the troubles around us, we tend to miss God or even mistake God!  A typical example to show how much our perspective gets warped when we are in the eye of a storm. Here is a lovely poem by Jennifer Jill Schwirzer about how mistaken our perception is while we are in trouble.
Footsteps
I had a dream last night of footsteps in the sand
God and I were walking—it must have been hand in hand
For there were two pairs of footsteps in the sand
His footsteps and my footsteps in the sand
And in the dream I had, we walked the peaceful shore
It seemed that we would walk that way, hand in hand forevermore
Two pairs of footsteps in the sand,
His footsteps and my footsteps in the sand.
And then the crashing waves of a wild and angry sea
Broke upon the shoreline of my life
Things I could not control were like churning, turning tides
And angry winds of strife
And when I was almost beaten and needed a helping hand.
There was just one pair of footsteps in the sand.
“You stayed when all was peaceful, but then where did you go?
Perhaps You’d had enough
When fortune fled and friends too, but oh, I needed You
When times got so rough.”
And then He said so gently as patient fathers do:
“When trouble stormed the shoreline, my child, I carried you.”
I had a dream last night of footsteps in the sand
Jesus bore my burden when I could no longer stand
One pair of footsteps in the sand
Just His pair of footsteps in the sand.
While Mark and John round off this miracle with Jesus approaching the disciples and getting them ashore, Matthew has one more interesting addition – that of Peter trying to walk on the sea. The impetuous Peter! “If it is you, Lord, then let me also walk on the sea like you.” We can hear the child in Peter speaking. Jesus was game for it. He says, “Come.” Peter leaves the security of the boat and his friends to venture into the unknown. Soon, he is engulfed by terror and begins to sink. He is saved, both reach the boat and the wind ceases.
In one of the websites, the homilist gives this interesting insight. Jesus could have easily calmed the storm and the wave before asking Peter to step out of the boat. But He did not. That is what happens in life. We cannot wait till every storm and every wave has subsided. We need to step out of the boat, out of the familiar to the unfamiliar fixing our gaze on Jesus. Peter began well looking only at Jesus. But soon his attention was drawn to the waves and the storm. He lost his footing. He began to sink. Fear not, step out, come… Fix your gaze on God, not on the storm…
Let me close with a familiar story (attributed to St Patrick) which calls us to make a leap of faith trusting in God, our parent!
In the middle of a dark winter’s night, in a small Midwest farming community, the two-story home of a young family caught fire. Quickly, parents and children followed their well-practiced emergency plan and made their way through the smoke-filled home out into the front yard. There the father quickly counted heads and realized that their 5 year-old son was not among them. Suddenly he heard a wail and looked up to see the boy at his bedroom window, crying and rubbing his eyes. Knowing the danger of re-entering the house to rescue his son, the father called, “Jump, Son! I’ll catch you!” Between sobs, the boy responded to the voice he knew so well. “But, I can’t see you, Daddy!” The father answered with great assurance. “No, Son, you can’t see me, but I can see you! Jump!” At that, the boy jumped into the smoky darkness and found himself safely cradled in his father’s arms. (http://www.cbcisite.com)

உங்களில் யாராவது உங்கள் காது, மூக்கு, வாய் இவற்றை நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா? நமது உடலில் கை, கால் போன்ற பகுதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதே நேரம் கண், காது, மூக்கு, வாய், முதுகு என்று நம் உடலின் பல பகுதிகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாது. அவற்றின் பிம்பங்களைத் தான் பார்க்கமுடியும். நம்மோடு பிறந்து, நம் உடலின், நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் இந்தப் பகுதிகளை நாம் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருப்பதுபோல், நம் வாழ்வின் ஆதாரமாய், அடித்தளமாய் இருக்கும் இறைவனையும் நாம் பல நேரங்களில் பார்க்க முடியாமல் தவிக்கிறோம். முக்கியமாக, வாழ்வில் துன்பங்கள், போராட்டங்கள் சூழும் நேரங்களில் நம் கடவுள் தொலைந்துபோய் விட்டதைப் போல் உணர்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாம் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், நம் உடலின் பகுதிகளாய் இருக்கும் இந்த உறுப்புக்களைப் போல், நம் கடவுளும் எங்கும், எப்போதும் நம் முன், நம்மைச் சுற்றி இருக்கிறார். மறுக்க முடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் வேரூன்ற இன்றைய ஞாயிறு சிந்தனை நமக்கு உதவியாக இருக்கும். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா மூலமும், நற்செய்தியில் சீடர்கள், அதிலும் சிறப்பாக பேதுரு மூலமும் கடவுளின் பிரசன்னத்தை வாழ்வில் உணர்ந்து கொள்ளும் வழிகளை நாம் கற்றுக் கொள்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா தன் உயிருக்குப் பயந்து குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசன் அல்லது அரசி கையால் இறப்பதற்குப் பதில் இறைவன் கையால் இறப்பதே மேல் என்ற தீர்மானத்தில் குகையில் ஒளிந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், குகையைவிட்டு வெளியே வந்து, தன்னைச் சந்திக்கும்படி இறைவன் எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். குகைக்கு வெளியே இறைவனைச் சந்திக்க வரும் எலியா, சுழல் காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றைக் காண்கிறார். இவை எதிலும் இறைவன் இல்லை. இவைகளுக்குப்  பின் வந்த மெல்லிய ஒலியில் இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.
சக்தி வாய்ந்த அரசனை, அரசியை எதிர்த்து, தன்னைக் காக்க வரும் இறைவன் சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவைகளின் வழியே தன் சக்தியைக் காட்ட வேண்டும். இதுதான் இறைவாக்கினரின், எதிர்பார்ப்பு. நமது எதிர்ப்பார்ப்பும் இதுவே. இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம்.
நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு. இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம். இயேசு கடல் மீது நடந்தது, பேதுரு கடல் மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு கடல் மீது நடந்த புதுமை மத்தேயு, மாற்கு, யோவான் என்ற மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை அல்லது இரவே இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியாலும் நோயாலும் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைக்கிறார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசுவின் இந்த அவசரத்திற்கான காரணத்தை யோவானின் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியில் 5000 பேருக்கு உணவளித்ததும், எழுதப்பட்டுள்ள வரிகள் இவை:
யோவான் நற்செய்தி: 6: 14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்க வேண்டும்... அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்." என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். இதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், இன்று அவர் செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை இயேசுவின் மீது இருந்த மதிப்பை இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார். கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...
மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று எனக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கோஷம் போடும் கும்பல் பாடும் துதிகளிலேயே மயங்கி கனவு காணும் நமது தலைவர்கள் அவ்வப்போது இப்படி கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தனியே தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்? ஹூம்... அன்பர்களே, இப்போது நீங்கள் கேட்டதுஎன் ஏக்கப் பெருமூச்சு.
தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். உரோமையப் பேரரசைக் கவிழ்க்க உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள் என்று இயேசுவை அரசராக்க வந்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது அரசு, அவரது பணி உரோமைய சக்திக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலக, மறு உலக சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவரது விருப்பம். இந்தச் சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில் இயேசு கடல் மீது நடந்தார்.
கடல் மீது நடந்து வருவது இயேசுதான் என்பதைச் சீடர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்திருந்த கடல் அலைகளிலும் காற்றிலுமே இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்க முடியவில்லை. துன்பங்கள், போராட்டங்கள் நேரத்தில் கடவுளைப் பார்க்கமுடியாமல், கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?
எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்த போது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தில், போராட்டத்தில் கஷ்டப்பட்ட நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டு போய் விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்து விட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.
மத்தேயு இன்னுமொரு புதுமையை இங்கு சேர்க்கின்றார். அந்தப் பகுதியைக் கூறும் நற்செய்தியைக் கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 14: 26-32
அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.
சிறு குழந்தைகளைப் பெரியவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் விளையாட்டைப் பார்த்திருப்போம். அந்தக் குழந்தை எந்த வித பயமும் இல்லாமல், சிரித்தபடியே வானத்தில் பறக்கும் காட்சி அழகாய் இருக்கும். அப்பாவோ, அம்மாவோ அருகிருக்கிறார்கள் என்று தெரிந்தால் குழந்தைகளுக்கு அசாத்திய வீரம் வந்து விடும்.
தீப்பிடித்து எரியும் ஒரு வீட்டின் முதல் மாடியில் ஒரு சிறுமி அகப்பட்டுக் கொண்டாள். கீழே இருந்து தந்தை அந்தச் சிறுமியைக் குதிக்கச் சொல்கிறார். குழந்தை அங்கிருந்து கத்துகிறாள்: "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" அப்பா கீழிருந்தபடியே சொல்கிறார்: "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா." என்று தந்தை சொன்னதை நம்பி குதிக்கிறாள் சிறுமி, தந்தையின் பாதுகாப்பிற்குள்.
பேதுரு ஒரு குழந்தை போல பேசுகிறார். இயேசுவும் ஒரு குழந்தையாக மாறி ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலை அளிக்கும் முன்பு காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார் துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறார்.
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்... அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும்... அஞ்சாதீர்கள், துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 

19 June, 2011

Why is our God a Triune God? நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்?


Augustine meets a boy on the beach
This painting of St. Augustine is part of the outside murals in the Augustinian monastery of Quito, Ecuador. It was done by Miguel de Santiago in 1656.

We have entered the ‘Ordinary Time’ of the liturgical year. This implies that we have been having a ‘special time’ till now in our liturgical cycle. Yes, right from the start of the Lenten season through the Easter Season we have had a special time. Today’s feast, the Feast of the Most Holy Trinity, is like a crowning event of this special season. This crowning feast does not warm our hearts like, say, the feast of Christmas or Easter. This feast seems more ‘intellectual’. When I think of the Feast of the Most Holy Trinity, I get more of the image of an international conference than a festive gathering.
The Holy Trinity is a mystery to be contemplated than a concept to be discussed. Most of us remember a very old and much-repeated story about St. Augustine, one of the intellectual giants of the Church. He was walking by the seashore one day, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater from a shell into a small hole in the sand. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love." According to him the Father is the lover, the Son is the loved one and the Holy Spirit is the personification of the very act of loving. This means that we can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God." (http://www.cbcisite.com/Sunday%20Homily.htm)
Many of the deep realities of life and the world are there simply as a gift to be admired and a mystery to be contemplated than an idea to be dissected and labelled into packages. An incident from the life of Franklin D. Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep." The wonder of the power and wisdom of God puts things in perspective for us humans. (http://www.cbcisite.com/Sunday%20Homily.htm) Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective.
When we think of the mystery of the Most Holy Trinity, one is easily reminded of the famous quote from the Bible: "Be still, and know that I am God; I will be exalted among the nations, I will be exalted in the earth." (Psalm 46:10) If at all we wish to understand the great mystery of the Holy Trinity, then we need to raise the proper questions. Not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the Triune God. Why is our God a Triune God? Simply to impress upon us that relationships are very important, rather, they are the most important aspect of human life. The important question for us to ask today is: What does the doctrine of the Blessed Trinity tell us about the kind of God we worship and what does this say about the kind of people we should be?
God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. (http://www.munachi.com/a/atrnty.html)
This day calls us to examine our attitude to relationships in general and, in particular, our attitude towards our parents – especially, aged parents. Today, the third Sunday in June is Father’s Day. The Second Sunday in May was the Mother’s Day. Are these days simply a day for flowers and cards? As we celebrate the Feast of the Triune God, as we celebrate Father’s Day, let us pray that our relationships are more and more sincere and self-sacrificing.

வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தை நாம் ஆரம்பிக்கிறோம். 'பொதுக்காலம்' என்று சொல்லும்போது, இதுவரை நாம் கடந்து வந்தது ஒரு சிறப்புக்காலம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம். ஆம், நாம் கடந்து வந்தது ஒரு சிறப்புக் காலம்தான். கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இந்த விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்.

வாழ்வில் கொண்டாட்டங்கள் ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக பெரிதான, பிரமிப்பான உண்மைகள் வெளிப்படும்போது, அதுவும், மகிழ்ச்சியைத் தரும் உண்மைகள் வெளிப்படும்போது, நமது பதில் எப்படி இருக்கும்? மகிழ்வில் நாம் மூழ்கும் நேரங்களில், பேச்சிழந்து போவோம். கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது அல்லது தரவேண்டியது இன்றைய மூவொரு இறைவன் திருவிழா.
மூவொரு இறைவன் என்றதும், நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நடந்தது இந்தக் கதை. நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார், கடற்கரையில் நடந்தபடியே. அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அந்தச் சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்து கொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
ஒரு குழந்தையின் வழியே தனக்கு ஒரு சவுக்கடி கொடுத்து, தன்னைப் பற்றிய ஒரு புதுப்பாடத்தைச் சொல்லித் தந்த அந்த இறைவனைப்பற்றி, "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று புனித அகுஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது." என்றார் அவர்.
அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று தெளிவாகத் தெரிந்த விண்ணையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத் தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மன நிலையோடு அவர் உறங்கச் சென்றது அவர் தனக்குத் தானே சொல்லித்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கி விடும் முயற்சிகள், அல்லது ஆண்டவனை நமது அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகள் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.
கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவைகளுக்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமான திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்து கொண்டதை, அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கி விட முடியும். வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்க முடியாது.
“The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.”
- Albert Einstein, The World As I See It (1949)
"இந்த உலகில் மிக ஆழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்." என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.
புனித அகுஸ்தின் தன் வாழ்வின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப் பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித் தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.
நாம் வாழும் இன்றைய உலகில், நம் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதான பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று இரு காரணங்கள் உள்ளன. உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் இன்று என்பது முதல் காரணம். இன்று தந்தை தினம் என்பது இரண்டாவது காரணம்.
மேமாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினம் என்று கொண்டாடினோம். ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினம் என்று உலகின் பல நாடுகளில் நாம் கொண்டாடுகிறோம். 1907ம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் Monongah என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 362 பேர் இறந்தனர். இதனால், பல நூறு குடும்பங்கள் தந்தையை இழந்து தவித்தன. இந்த நாளை நினைவுகூரும் விதமாக, 1908ம் ஆண்டு முதல் தந்தை தினம் அறிவிக்கப்பட்டது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம் தந்தைக்கு ஒரு தினம் என்று இந்த உலகம் கொண்டாடி வருகிறது. இந்தக் கொண்டாட்டங்கள் வருடத்தின் ஒரு நாளோடு முடிந்துவிடுவது நியாயமா? அன்னை தினம் மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்து போன ஒரு வியாபாரத் திருநாளாக மாறிவிட்டது என்று சொன்னோம். அதேபோல், தந்தை தினமும் வியாபாரத் திருநாளாக மாறி விட்டது. வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, இந்த நாளில் மட்டும் அவர்களைச் சென்று பார்த்து மலர்களையும், இன்னும் மற்ற பரிசுகளையும் தருவதால் நமது கடமைகள் முடிந்து போய்விடுகின்றனவா?
இன்று மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும் அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். உறவுகளின் ஊற்றான இறைவன் நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லித் தர வேண்டும். அதிலும் சிறப்பாக, தாங்கள் வளர்த்துவிட்ட உறவுகள் தங்களை மறந்து போய்விட்டதால், உறவுகள் மீதே சந்தேகங்களை வளர்த்து வாழும் வயது முதிர்ந்த பெற்றோரின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்குச் சொல்லித் தர வேண்டும்.


12 June, 2011

CELEBRATIONS – THE ‘WHAT’ AND THE ‘HOW’ கொண்டாட்டங்கள் – எதற்காக… எப்படி…



The Influence of the Holy Spirit



Unicef - Ad against child labour


Today, the Feast of the Pentecost, is celebrated on the fiftieth day after Easter. The word Pentecost means the fiftieth day. In the last 50 days we have had quite a few festivals, celebrations starting from Easter. We celebrated Divine Mercy Sunday, Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. Whenever we use the word ‘celebrate’ we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

According to human logic, worldly view, the first Easter should have taken place in full splendour… with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event judging by the standards of celebration set by the world. The first Ascension, once again, was a very quiet affair with Jesus spending quiet moments with the disciples on a hillock before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.
The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic…. I was simply trying my luck with the letter G. There are hundreds of other words to define how these celebrations are defined and conducted by the commercial world. Even if there is nothing to celebrate about, the commercial world would invent reasons to celebrate. The frills are more important than the core in these celebrations. In most of these celebrations ‘what’ is celebrated is less important than the ‘how’ of it. I don’t know why I am reminded of the famous Shakespearean line from Macbeth: ‘sound and fury signifying nothing’ when I think of these commercial celebrations. Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!
Jesus and his disciples defined ‘celebrations’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ left a lasting, life-long impression on the disciples. This ‘what’ has left a deep impression on human history for the past twenty centuries.

While talking of ‘celebrations’, we need to talk about ‘non-celebrations’ too. While the commercial world invents reasons for ‘celebrations’, we are sadly reminded of the darker side of the world where there are issues that are seemingly impossible to celebrate. Last week we reflected on one such issue – the issue of our Environment. June 5 was the World Environment Day. Today, June 12 is the World Day Against Child Labour. Once again, we are staring at a day that cannot be celebrated right now. I wish we do have a chance to CELEBRATE this day when child labour is totally eradicated from the world.
I would like to reflect on Pentecost and World Day Against Child Labour together. The coming of the Holy Spirit is also called the Birthday of the Church. The new-born Church went through very difficult times soon after its birth. The Church had a difficult childhood. From this perspective, the fact that the Feast of the Pentecost has occurred on June 12 seems like a God-given chance for us to reflect on children who have to face a difficult childhood, children who do not have a childhood or lose their childhood very early in their lives.

All of us have reflected on the universal problem of Child Labour in terms of statistics and real life incidents. The World Day Against Child Labour is an International Labour Organization–sanctioned holiday for the purpose of raising awareness and activism to prevent child labour in both economic and military fields. It is currently held each June 12. The ILO created this observance in 2002 and it has been held annually since then. (Wikipedia)
It is painful to note that the world had taken 20 centuries to take note of a horrible crime committed against children. It is more painful to see that in the past few decades children are forcefully employed in the military. The adult world is already guilty of waging senseless wars. To add insult to injury, we have got children also involved in this senseless adventures of adults.
This day offers us another opportunity to seriously think of this problem and muster up enough courage to eradicate such a crime from the world. We pray that the Holy Spirit who guided the Church through Her childhood may give us the precious gifts of wisdom and courage to guide our children out of their slavery.

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டாமா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்த ஒவ்வொரு நிகழ்வும் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.


உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதை விட கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இந்த விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரிய வரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே இந்த விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இந்த விழாக்களில் முக்கியம். இந்த விழாக்களைப் பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.
கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமைய வேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மகிழ்வாக அமையும். இந்தப் பாடங்களை நமக்குச் சொல்லித் தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் ஆகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.


கொண்டாட்டங்களைப் பற்றிச் சிந்திக்கும் வேளையில், கொண்டாட முடியாத சில நாட்களையும் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். கொண்டாட முடியாத ஒரு நாளை நாம் சென்ற ஞாயிறு சிந்தித்தோம். சென்ற வாரம், இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் காட்டிலும், அதே நாள், ஜூன் 5ம் தேதி, உலகச் சுற்றுச்சூழல் நாள் என்ற காரணத்தால், சுற்றுச்சூழலைப் பற்றி நமது சிந்தனைகள் அதிகம் இருந்தன. அந்த நாளை நாம் கொண்டாட முடியாத அளவு சுற்றுச்சூழலுக்கு நாம் ஆபத்தை விளைவித்துள்ளோம் என்பதைச் சிந்தித்தோம். இந்த ஞாயிறன்றும் இரு தருணங்கள், இரு காரணங்கள் இணைந்து வந்து, நமது கவனத்தை ஈர்க்கின்றன. இவ்விரு காரணங்களில் ஒன்றை நாம் கொண்டாட முடிகிறது; மற்றொன்றைக் கொண்டாட முடியாமல் நம் மனம் சங்கடப்படுகின்றது. இன்று தூய ஆவியாரின் பெரு விழா. இதை நாம் கொண்டாட முடியும். இன்று ஜூன் 12 - குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாள் (World Day Against Child Labour). இந்த நாளைக் கொண்டாட மனம் சங்கடப்படுகிறது. இவ்விரு நாட்களும் இணைந்து வந்திருப்பதை இறைவன் நமக்குத் தந்துள்ள அருள் நிறைந்த ஒரு தருணமாகக் காணலாம்.
தூய ஆவியாரின் வருகையை, திருச்சபையின் பிறந்த நாளென்றும் கொண்டாடுகிறோம். பெந்தகோஸ்து நாளன்று புதிதாய்ப் பிறந்தத் திருச்சபை, தன் குழந்தைப் பருவத்தில் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, திருச்சபை என்ற குழந்தையின் பிறந்தநாள், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாளான ஜூன் 12ம் தேதியன்று வந்திருப்பது குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, அதுவும் போராட்டங்களால் சூழப்பட்டக் குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க, நமக்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு தானே! இவ்விரண்டையும் இணைத்து நாம் சில சிந்தனைகளை எழுப்ப முயல்வோம், பாடங்களைப் பயில முயல்வோம்.


ILO என்றழைக்கப்படும் அகில உலகத் தொழில் நிறுவனம் (International Labour Organisation) 2002ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியை குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளாக அறிவித்தது. குழந்தைத் தொழில் என்ற அவலத்தை ஒழிக்க வேண்டும் என்பதை மனித குலம் புரிந்து கொள்ள, இத்தனை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டதே என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இந்த நாளை உண்டாக்கிய பிறகும் இந்த அவலம் இன்னும் இந்த உலகிலிருந்து மறையவில்லையே என்று நாம் வேதனைப் பட வேண்டும்.
மனித வரலாற்றில் குழந்தைகள் எப்போதும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். குடிசைத் தொழில் அல்லது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் இது குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல. அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.
தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு மூலதனமான இயந்திரங்கள் மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களுக்குச் சேவை செய்வதற்கு பெரியவர், சிறியவர் என்று எல்லாரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலைகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.
சிறுவர்கள் ஆலைகளில், தொழிற்சாலைகளில் ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சிறுவர்களில் பலர் அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போரில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில் உயிரையும் இழந்தனர்.
சிறுமிகள் பெரும் செல்வந்தர்கள் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இரவும் பகலும் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயம் இச்சிறுமிகளுக்கு. இவர்களில் பலர் இச்செல்வந்தர்களின் உடல் பசியை வெறும் உணவால் மட்டுமல்ல தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள் இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.
நான் இங்கே பட்டியலிட்ட இந்த நிகழ்வுகள் எங்கோ எப்போதோ நடந்து முடிந்து விட்ட கதை, வரலாறு என்று எண்ண வேண்டாம். இன்றும் தொடர்கின்றன குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இந்தக் கொடுமைகள். இதைவிடக் கொடுமை கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. குழந்தைகளும், சிறுவர்களும் இராணுவங்களில், போர் சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.


குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி, இராணுவங்களில் பயன்படுத்தப்படும் சிறுவர், சிறுமிகளைப் பற்றி புள்ளிவிவரங்கள், கவிதைகள், கதைகள் என்று பல ஆயிரம் முறை கேட்டிருக்கிறோம். இன்று அவற்றை மீண்டும் நமது நினைவுக்குக் கொண்டு வருவோம். குழந்தைத் தொழிலாளர்களை வெறும் எண்ணிக்கையாய் பார்க்காமல், வருங்காலத்தின் நம்பிக்கையாய்ப் பார்க்க நமது மனதில் தூய ஆவியார் தனது உள்ளொளியைத் தர வேண்டும் என்று செபிப்போம்.
தூய ஆவியாரின் திருநாளை, திருச்சபையின் பிறந்த நாளை நாம் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முடியும். அதேபோல், குழந்தைத் தொழிலை ஒழிக்கும் நாளையும் ஒரு திருநாளாக நாம் கொண்டாட முடியும். எப்போது? உலகில் குழந்தைத் தொழிலாளிகள், சிறார் படைவீரர்கள் என்று யாரும் இல்லாதபோது, ஜூன் 12ம் தேதியையும் நாம் நெஞ்சுயர்த்தி ஒரு திருநாளாகக் கொண்டாட முடியும். அதுவரை இக்குற்ற உணர்வுகளால் பாரமான மனதோடு தலை குனிந்தே நாம் வாழ வேண்டும்.
திருச்சபை என்ற குழந்தை, பிறந்த நாள் முதல் சந்தித்த பிரச்சனைகளில் எல்லாம் தூய அவியாரின் துணை இருந்ததால், அவர் தந்த ஞானம், அறிவு, திடம், வலிமை என்ற பல அன்புக் கொடைகளும் இந்தக் குழந்தையை இதுநாள் வரை வழிநடத்தி வந்துள்ளன.
அதேபோல், உலகெங்கும் துன்புறும் குழந்தைத் தொழிலாளிகளை அவர்கள் சிக்குண்டிருக்கும் அடிமைத் தளைகளிலிருந்து விடுவிக்கும் வழிகளைச் சிந்திக்க தூய ஆவியார் நல்லோளியை நமக்குத் தர வேண்டும் என மன்றாடுவோம். இந்தச் சமுதாயக் கொடுமையை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான மன உறுதியையும் தூய ஆவியார் நம் ஒவ்வொருவருக்கும் தர வேண்டும் என்று மன்றாடுவோம்.



 

06 June, 2011

If you don't know how to fix it, please stop breaking it! உடைந்து போன இயற்கையை மேலும் உடைக்காமல் விடுங்கள்!


Bolivia – Nature to Have Same Rights as Humans

http://soulgineering.com/2011/05/28/nature-same-rights-as-humans/

Severn Cullis-Suzuki
http://soulgineering.com/tag/severn-suzuki/

Making connections between world events and the Word of God is one of the preoccupations of any priest before the Sunday Liturgy. This Sunday is the Feast of the Ascension of Our Lord. This Sunday, June 5th, is the World Environment Day (WED). I wanted to see a connection between these two significant days. The First Reading from the Acts of the Apostles, especially the message given by the ‘men-dressed-in-white’, came to my aid instantly.
They were looking intently up into the sky as he (Jesus) was going, when suddenly two men dressed in white stood beside them. “Men of Galilee,” they said, “why do you stand here looking into the sky? This same Jesus, who has been taken from you into heaven, will come back in the same way you have seen him go into heaven.” (Acts 1: 10-11)

The question ‘Why do you stand here looking into the sky?’ brought a smile to me. This was a perfect question to connect the Ascension with the World Environment Day… Here is how it goes! I am trying to say what those two men, perhaps, intended to say: “Okay, folks, Christ has gone to Heaven. Let’s not keep staring into the sky… Let’s turn our gaze on earth. We have more things to accomplish here on earth.”
Here is a brief intro from the Wikipedia on World Environment Day (WED): It is a day that stimulates awareness of the environment and enhances political attention and public action. It is on 5 June. It was the day that the first United Nations Conference on the Human Environment began in Stockholm… World Environment Day is hosted every year by a different city with a different theme and is commemorated with an international exposition in the week of 5 June.

Here is a brief list of some of the themes and the cities.
2000 The Environment Millennium - Time to Act - Adelaide, Australia
2009 Your Planet Needs You - UNite to Combat Climate Change - Mexico City, Mexico
2010 Many Species. One Planet. One Future - Kigali, Rwanda
This year (2011) WED will be celebrated in New Delhi, India with the theme: Forests: Nature at your Service. My interest in this day all the more increased due to the call made by NCCI.
Churches in India are being encouraged to observe June 5 as ‘Green Sunday’ in commemoration of the World Environment Day. The National Council of Churches in India (NCCI) is urging churches to conduct special prayers, sermons and intercessions on World Environment Day which falls on Sunday. (Cathnews India) I thought I would do my bit in promoting this Sunday as Green Sunday by concentrating my reflections on WED alone.
Although WED was established in 1972, (Next year we shall be completing 40 long years of WED!) we have not made much progress in learning how to protect our environment. 20 years back a 13 year old girl tried to teach the world some lessons. The Earth Summit 1992 held in Rio, Brasil was swept away by Severn Cullis-Suzuki, a 13 year old girl from Canada. The six minutes talk that she gave in the summit is still doing enough rounds on the internet. Here is the full text of Severn Suzuki’s talk. The full text is available on: http://ssjothiratnam.com/?p=747

Hello, I'm Severn Suzuki speaking for E.C.O. - The Environmental Children's Organisation. We are a group of twelve and thirteen-year-olds from Canada trying to make a difference: Vanessa Suttie, Morgan Geisler, Michelle Quigg and me. We raised all the money ourselves to come five thousand miles to tell you adults you must change your ways. Coming here today, I have no hidden agenda. I am fighting for my future.
Losing my future is not like losing an election or a few points on the stock market. I am here to speak for all generations to come. I am here to speak on behalf of the starving children around the world whose cries go unheard. I am here to speak for the countless animals dying across this planet because they have nowhere left to go. We cannot afford to be not heard.
I am afraid to go out in the sun now because of the holes in the ozone. I am afraid to breathe the air because I don't know what chemicals are in it. I used to go fishing in Vancouver with my dad until just a few years ago we found the fish full of cancers. And now we hear about animals and plants going extinct every day -- vanishing forever. In my life, I have dreamt of seeing the great herds of wild animals, jungles and rainforests full of birds and butterflies, but now I wonder if they will even exist for my children to see.
Did you have to worry about these little things when you were my age?
All this is happening before our eyes and yet we act as if we have all the time we want and all the solutions. I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!
• You don't know how to fix the holes in our ozone layer.
• You don't know how to bring salmon back up a dead stream.
• You don't know how to bring back an animal now extinct.
• And you can't bring back forests that once grew where there is now desert.
If you don't know how to fix it, please stop breaking it!


Here, you may be delegates of your governments, business people, organisers, reporters or politicians - but really you are mothers and fathers, brothers and sister, aunts and uncles - and all of you are somebody's child.
I'm only a child yet I know we are all part of a family, five billion strong, in fact, 30 million species strong and we all share the same air, water and soil -- borders and governments will never change that. I'm only a child yet I know we are all in this together and should act as one single world towards one single goal. In my anger, I am not blind, and in my fear, I am not afraid to tell the world how I feel.
In my country, we make so much waste, we buy and throw away, buy and throw away, and yet northern countries will not share with the needy. Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to share. In Canada, we live the privileged life, with plenty of food, water and shelter -- we have watches, bicycles, computers and television sets.
Two days ago here in Brazil, we were shocked when we spent some time with some children living on the streets. And this is what one child told us: "I wish I was rich and if I were, I would give all the street children food, clothes, medicine, shelter and love and affection." If a child on the street who has nothing, is willing to share, why are we who have everything still so greedy? I can't stop thinking that these children are my age, that it makes a tremendous difference where you are born, that I could be one of those children living in the Favellas of Rio; I could be a child starving in Somalia; a victim of war in the Middle East or a beggar in India.
I'm only a child yet I know if all the money spent on war was spent on ending poverty and finding environmental answers, what a wonderful place this earth would be!


At school, even in kindergarten, you teach us to behave in the world. You teach us:
• not to fight with others,
• to work things out,
• to respect others,
• to clean up our mess,
• not to hurt other creatures
• to share - not be greedy.
Then why do you go out and do the things you tell us not to do?


Do not forget why you're attending these conferences, who you're doing this for -- we are your own children. You are deciding what kind of world we will grow up in.
Parents should be able to comfort their children by saying "everything's going to be alright", "we're doing the best we can" and "it's not the end of the world".
But I don't think you can say that to us anymore. Are we even on your list of priorities? My father always says "You are what you do, not what you say."
Well, what you do makes me cry at night. You grown ups say you love us. I challenge you, please make your actions reflect your words. Thank you for listening.

One of the most powerful lines from this speech was: “If you don't know how to fix it, please stop breaking it!” If only we could listen to our future generations and stop breaking the universe, the environment and the human family… If we cannot leave a wholesome universe for our next generation, let us at least leave a broken world instead of a completely devastated one for them!
Warning bells do ring now and then about this impending devastation… the last one being from Fukushima, Japan. But, I think most of us live in a dreamy world. May the words of the men in white shake us out of our slumber – ‘Why do you stand here looking into the sky?’ May the assurance of Jesus given to us in today’s Gospel help us as we take up the enormous duty of saving our Planet Earth! “I am with you always, to the very end of the age”. (Matthew 28: 20)


இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா. இன்று ஜூன் 5ம் தேதி - உலகச் சுற்றுச்சூழல் நாள். விண்ணேற்றத் திருநாளையும், உலகச் சுற்றுச்சூழல் நாளையும் இணைத்து சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் இறைத்தூதர்கள் சீடர்களுக்குச் சொன்ன வரிகள் உதவியாக உள்ளன.

திருத்தூதர் பணிகள் 1: 9-11
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.


"ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?" என்று இறைத்தூதர்கள் கேட்ட கேள்வியைக் கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம். "வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்பதில் அர்த்தமில்லை. இந்தப் பூமியைப் பாருங்கள். இங்கு நீங்கள் ஆற்றவேண்டிய பல பணிகள் உள்ளன. அவற்றைத் தொடருங்கள்." என்று இறைத்தூதர்கள் சீடர்களிடம் மறைமுகமாய் உணர்த்தினர். இந்த வார்த்தைகள் நமது பார்வையையும், நமது கவனத்தையும் இந்த உலகை நோக்கித் திருப்புகின்றன. இன்றைய ஞாயிறு சிந்தனையில் நாம் இம்மண்ணை நோக்கி, இவ்வுலகை நோக்கி நம் சிந்தனைகளைத் திருப்புவோம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நமது சுற்றுச்சூழலை எதோ ஒரு வகையில் நாம் பயன்படுத்தி வருகிறோம். நம்மை வாழவைக்கும் இந்தப் பூமியை, நமது சுற்றுச்சூழலை நாம் வாழவைக்கிறோமா? இல்லையே. நமது பேராசையால் நமது பூமியையும், நாம் வாழும் சூழலையும் காயப்படுத்தி வருகிறோம்.
ஸ்வீடன் அரசின் முயற்சியால், ஐ.நா. பொதுஅவை உலகச் சுற்றுச்சூழல் கருத்தரங்கு ஒன்றை 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி துவக்கியது. இதற்குப் பின், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகச் சுற்றுச்சூழல் நாளைப் பற்றி நாம் கொண்டாட அதிகம் காரணங்கள் இல்லை. ஆனால், இந்த நாளைப் பற்றி பாடங்கள் பயில ஆயிரம் காரணங்கள் உள்ளன. 1972ம் ஆண்டு ஆரம்பமான இந்த முயற்சி, வரும் ஆண்டு 2012ல் 40 ஆண்டுகளை நிறைவு செய்யும். இந்த நாற்பது ஆண்டுகளில் மனித குலம் சுற்றுச்சூழலைப் போற்றிக்காப்பது பற்றி அதிகம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தப் பாடங்களை 13 வயது நிரம்பிய ஒரு சிறுமி மனித குலத்திற்குச் சொல்லித் தந்தாள்.
ஸ்வீடன் நாட்டு கருத்தரங்கு முடிந்து, 20 ஆண்டுகளுக்குப் பின் 1992ல் Brasil நாட்டில் பூமிக்கோளத்தின் உச்சி மாநாடு (Earth Summit 1992) ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 172 நாடுகளிலிருந்து பல உயர்மட்டத் தலைவர்கள் வந்திருந்தனர். பல நாட்டுத்தலைவர்கள், பல உலக நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரையும் Severn Cullis-Suzuki என்ற கனடா நாட்டுச் சிறுமி அதிர்ச்சியில், அமைதியில் ஆழ்த்தினாள்.
இச்சிறுமி அந்த உச்சி மாநாட்டில் 6 நிமிடங்களே உரையாற்றினாள். ஆனால், அவள் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. The Little Girl Who Shocked World Leaders Into Silence 'உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி', அல்லது, 'இந்த உலகைச் சில நிமிடங்கள் அசையாது நிறுத்திய சிறுமி' என்ற தலைப்புகளில் இணையதளத்தில் இந்தச் சிறுமியின் உரை இன்றும் காணக் கிடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரம் ஒதுக்கி, இவ்வுரையைக் கேளுங்கள். இதோ Severn Suzukiயின் உரையில் இருந்து ஒரு சிலப் பகுதிகள்:


“நானும் என் நண்பர்கள் மூவரும் எங்கள் சொந்த முயற்சியில் 5000 மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் உங்களைச் சந்திப்பதற்கு. நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.
வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது.”

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”


Severn Suzuki பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அந்தச் சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினாள் அச்சிறுமி.
“நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.
நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க முடியும், நமது இயற்கையை காக்க முடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?
குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:
மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;
மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;
நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;
மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;
எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...
என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”


இறுதியாக, அச்சிறுமி அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தாள்.
“நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு நல்லவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எந்த வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.
பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள். இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.”


அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி. இது நடந்து இப்போது ஏறத்தாழ 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. Severn Suzuki அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள் இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது. மனிதச் சமுதாயம் இன்னும் இயற்கைக்கு இழைத்து வரும் அழிவுகளை நிறுத்தாததால், இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் நமக்கு மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. கேட்கச் செவி உள்ளவர்கள்தாமே நாம்... இந்த எச்சரிக்கையைச் சரியாகக் கேட்டிருக்கிறோமா?
இவ்வாண்டு 2011, ஜூன் 5ம் தேதி இந்தியத் தலைநகரம் புது டில்லி உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மையக் கருத்து: 'காடுகள்: உங்களுக்குப் பணி செய்யும் இயற்கை'. நமக்குப் பணிகள் செய்யும் இயற்கையை நாம் பணிவுடன் அணுகினால், மதிப்புடன் பாதுகாத்தால் நமது அடுத்தத் தலைமுறையினருக்கு நல்லதொரு உலகை நம்மால் விட்டுச் செல்ல முடியும். இந்த ஆண்டு இந்தியாவின் தலைநகரில் உலகச் சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து ஜூன் 5, இந்த ஞாயிறை பசுமை ஞாயிறு என்று கொண்டாட அழைப்பு விடுத்துள்ளன.
"ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?" என்று இறைத்தூதர்கள் கேட்ட கேள்வியை மீண்டும் நினைவுக்குக் கொணர்வோம். வானத்தையேப் பார்த்துக் கொண்டிராமல், நமது சுய நலம் என்ற சிறு கனவுலகிலேயே அடைபட்டுக் கிடக்காமல், இந்த உலகை, சுற்றுச்சூழலைக் காக்க முயற்சிகள் மேற்கொள்வோம். விண்ணேற்றம் அடைந்த பின்னும், 'இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன்' என்று இன்றைய நற்செய்தியில் நமக்கு வாக்களித்துள்ள இறைமகன் இயேசு, நம்மை இந்த நற்பணியில் வழிநடத்த வேண்டுவோம்.