18 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 44

Touching Jesus’s garments

அக்டோபர் 15, கடந்த சனிக்கிழமை, இந்தியாவின் வாரணாசியில் கூடிய 1 இலட்சத்திற்கு அதிகமானோர் நடுவில் திடீரென ஏற்பட்ட ஒரு நெரிசலில், 25 உயிர்கள் பலியாயின; 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஊர்வலமாக, ஒரு பாலத்தைக் கடந்துகொண்டிருந்த கூட்டத்தில், பாலம் இடிந்து விழப்போகிறது என்று யாரோ கிளப்பிவிட்ட ஒரு வதந்தியால் இந்த விபத்து நிகழ்ந்ததெனச் சொல்லப்படுகிறது.
எந்த ஓர் ஊர்வலத்திலும், பல்வேறு எண்ணங்கள் வலம்வரும். ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள், எதற்காகச் செல்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பர். ஆனால், ஊர்வலம் செல்லும்போது, ஆர்வத்தால் தூண்டப்பட்டு, வழியில் இணைபவர்களும் உண்டு. இன்னும் சிலர், ஊர்வலத்தில் கலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இணையக்கூடும்.
கூட்டங்களை, ஊர்வலங்களைப் பற்றி இன்றைய விவிலியத் தேடலில் எண்ணிப்பார்க்க இரு காரணங்கள் உண்டு. வாரணாசியில் ஏற்பட்ட அந்த துயர நிகழ்வில் இறந்தோர், மற்றும் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் நமது அனுதாபங்கள் நிறைந்த செபங்களை எழுப்புவது, முதல் காரணம். நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையிலும் ஓர் ஊர்வலம் இடம்பெறுகிறது என்பது இரண்டாவது காரணம்.

இறக்கும் நிலையிலிருந்த தன் மகளை, இயேசு குணமாக்கவேண்டும் என்று, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் வேண்டியதையடுத்து, யாயிரையும், இயேசுவையும் பின்தொடர்ந்து ஒரு கூட்டம் ஊரவலமாகக் கிளம்பியது.
யாயிரின் இல்லம் நோக்கிச் சென்ற அந்த ஊர்வலத்தில், பல்வேறு நோக்கங்கள் கொண்டவர் கலந்துகொண்டனர். சாகக்கிடக்கும் மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம், யாயிர் மனதிலும், இயேசுவின் மனதிலும் மேலோங்கியிருக்க வேண்டும். தொழுகைக்கூடத் தலைவரின் மகள் சாகக்கிடக்கிறார் என்ற செய்தியும், அவரைக் குணமாக்க இயேசு செல்கிறார் என்ற செய்தியும் ஊரெங்கும் பரவியதால், 'என்னதான் நடக்கப்போகிறது' என்று காண ஆர்வம் கொண்டவர்கள், அந்த ஊர்வலத்தில் இணைந்திருக்கவேண்டும். தொழுகைக்கூடத் தலைவரே தங்கள் தலைவர் இயேசுவின் முன் மண்டியிட்டுவிட்டார், இனி தங்கள் புகழ் நாடெங்கும் பரவப்போகிறது என்ற பெருமையுடன், சீடர்கள் அந்த ஊர்வலத்தில் சென்றிருக்கவேண்டும். இயேசுவின் பணிகளில் குறைகாண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், மீண்டும் குறைகாணும் நோக்கத்துடன், அந்த ஊர்வலத்தில் கலந்திருக்கவேண்டும்.
வேதனை, எதிர்பார்ப்பு, பெருமை, குறைகாணும் ஆர்வம் என்ற பல்வேறு உணர்வுகள் கலந்திருந்த அந்த ஊர்வலத்தில், நம்பிக்கை என்ற உணர்வும் நுழைந்தது. பன்னிரு ஆண்டுகளாய் தன்னை வதைத்துவந்த இரத்தப்போக்கு நோயை, இயேசு குணமாக்குவார்; அவரது ஆடையின் ஓரங்கள் போதும் தன்னைக் குணமாக்குவதற்கு என்ற அபார நம்பிக்கையுடன், ஒரு பெண், இயேசுவை நெருங்கினார். பன்னிரு ஆண்டுகளாய் பல வழிகளிலும் தனிமைபடுத்தப்பட்டு, நடைப்பிணமாக வாழ்ந்துவந்த அவர், இந்தக் கூட்டத்திலும் தனிமையை உணர்த்திருக்கவேண்டும். எனினும், அவர் மனதில் எரிந்த நம்பிக்கைச் சுடர், அவரை இயேசுவின் அருகில் கொண்டு சேர்த்தது. இயேசுவின் "ஆடையைத் தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்று போயிற்று" (மாற்கு 5:29) என்று நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.

எந்த ஒரு புதுமையிலும், உடல் அளவில் நோயை குணமாக்குவது மட்டும் இயேசுவின் நோக்கமல்ல, மாறாக, அந்தப் புதுமை வழியே, சமுதாயத்திற்கு நன்மை கொணர்வதையும் இயேசு விரும்பினார் என்பதை அறிவோம். இந்தப் புதுமையிலும், சமுதாயத்தை குணமாக்கும் புதுமையை இயேசு தொடர்கிறார். நோயுள்ள பெண் இயேசுவைத் தொட்டதும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரிக்கிறார்:
மாற்கு 5:30-32
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்றார்கள்.

இயேசுவுக்கும், சீடர்களுக்கும் இடையே நிகழ்ந்த அந்த உரையாடலில், பொருள் நிறைந்த கருத்து ஒன்று பொதிந்துள்ளது. "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்பது, இயேசுவின் கேள்வி. "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!" என்பது, சீடர்களின் பதில். சீடர்களின் பதிலைக் கேட்ட இயேசு, வியப்புடன் புன்னகை செய்திருக்கவேண்டும். அந்த வியப்புக்கும், புன்னகைக்கும் பின்புலத்தில், இயேசுவின் மனதில் ஓடிய எண்ணங்களை நான் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கிறேன்:
"சீடர்களே, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று நான் கேட்ட வார்த்தைகளை மாற்றி, என்னைத் தொட்டவர் யார்?’ என்று நான் கேட்டதாகக் கூறினீர்களே, நீங்கள் சொன்னதுதான் முழுமையான உண்மை. இக்கூட்டத்தில் ஒருவர், என் ஆடையைத் தொட்டதன் வழியே, என்னையேத் தொட்டுவிட்டார்" என்ற எண்ணங்கள் இயேசுவின் புன்னகை வழியே வெளிப்பட்டன. தன்னைத் தொட்ட அந்தப் பெண்ணை, இயேசு, கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார்.

இயேசுவின் ஆடையைத் தொட்டதால், அப்பெண், உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக உள்ளத்தில் வேரோடியிருந்த வேதனைகள், தலைமுதல் கால்வரை புரையோடிப் போயிருந்த வெறுப்புக்கள் எல்லாம் அப்போது கரைந்தன.
இரத்தப்போக்கு நோயுற்ற பெண்ணென்று தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல்... அச்சமுதாயத்தை இந்நிலைக்குக் கொண்டுவந்திருந்த சட்டங்கள், சம்பிரதாயங்கள் மேல்... அச்சட்டங்களை இம்மியும் பிசகாமல் காப்பாற்றிய மதத்தலைவர்கள் மேல்... இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல்... பன்னிரு ஆண்டுகளாய், அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்பு, வர்மம், வேதனை வெறி எல்லாம் அக்கணத்தில் விடைபெற்று மறைந்தன. முழுமையான விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், அவர்களைத் தீட்டுப்படுத்திய தன்னைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்பதை அப்பெண் அறிந்திருந்தார். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தன் மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று, அந்தப் பெண், கூட்டத்தின் நடுவே நின்று, தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5:33) என்று நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்திருக்க வேண்டும். தங்கள் அனைவரையும் தீட்டுப்படுத்திய அந்தப் பெண்ணை கல்லெறிந்து கொல்லவேண்டும் என்ற வெறியில், மதத் தலைவர்கள் கற்களைத் தேடியிருக்கவேண்டும். தங்கள் தலைவரின் ஆடையைத் தொட்டதால், அவரையேத் தீட்டுப்படுத்திவிட்ட அப்பெண் மீது, சீடர்களுக்கும் கோபம் எழுந்திருக்க வேண்டும். கோபமும், கொலைவெறியும் தலைதூக்கிய அவ்வேளையில், அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் கூறியுள்ளார்: இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். (மாற்கு 5:34)
இச்சொற்களை இயேசு கூறிய வேளையில் அவரது மனதில் மேலும் பல வார்த்தைகள் எழுந்திருக்கவேண்டும். "உன்னால் இன்று இக்கூட்டத்தில் பலர் குணம் பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர், இன்று உன்னால் குணம் பெற்றனர். அமைதியுடன் போ!" என்று அசீர் வழங்கினார் இயேசு.

அப்பெண்ணின் நம்பிக்கையை இயேசு கூட்டத்தின் நடுவே பாராட்டியதைத் தொடர்ந்து, கூட்டத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது.
மாற்கு 5:35-36
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.

Christ raising the daughter of Jairus

யாயிரின் இல்லத்தில் இருந்தவர்கள், நம்பிக்கை இழந்திருந்ததால், சிறுமியின் அடக்கத்திற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன. அவ்வேளையில் அங்கு சென்ற இயேசு, சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறார் என்று சொன்னதும், ‘அவர்கள் நகைத்தார்கள்  என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் கூறுகின்றனர். நம்பிக்கை இழந்து நகைத்த அக்கூட்டத்தை வெளியேற்றிவிட்டு, இயேசு, அச்சிறுமியின் கரங்களைப் பற்றி உயிர் கொடுத்து, அவரை எழச் செய்தார்.

இரத்தப்போக்கு நோயுள்ள பெண் நலமடைந்த புதுமையிலும், யாயிரின் மகள் உயிர்பெற்ற புதுமையிலும் 'தொடுதல்' என்பது மையமான நிகழ்வாகிறது. இஸ்ரயேல் சட்டங்களின்படி, நோயுள்ள பெண்ணைத் தொடுவதும், அவரால் தொடப்படுவதும் பிறரைத் தீட்டுப்படுத்தும். அதேபோல், இறந்த உடலைத் தொடுவதும் ஒருவரைத் தீட்டுப்படுத்தும். தன்னைத் தொட்டு, தீட்டுப்படுத்திய பெண்ணைக் கடிந்துகொள்வதற்குப் பதில், அவரை 'மகளே' (மாற்கு 5:34) என்று பரிவுடன் இயேசு அழைத்ததன் வழியே, சட்டத்தைத் தாண்டிய மனிதாபிமானத்திற்கு இயேசு முதலிடம் தருகிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல், யாயிரின் மகளை, கையைப்பிடித்து எழுப்பியதன் (லூக்கா 9:54) வழியே, இறந்த உடலைத் தொடுவது கூடாது என்று கூறும் சட்டத்தை இயேசு கேள்விக்குள்ளாக்குகிறார்.

யாயிரின் மகளை இயேசு குணமாக்கும் புதுமையைக் காண்பதற்காக, பெருந்திரளாக, ஊர்வலமாகப் புறப்பட்ட கூட்டம், ஐந்து பேர் மட்டுமே கொண்ட ஒரு சிறு குழுவாக மாறியது. பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்கள், சிறுமியின் தாய், தந்தை என்ற ஐந்து பேர் மட்டுமே இந்தப் புதுமையைக் கண்டனர். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும்தொழுகைக் கூடத் தலைவரின் மகள் உயிர்பெற்ற நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச் செய்தியாக ஊரெங்கும் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இயேசு, “‘இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5:43) என்று இப்புதுமை முடிவடைகிறது.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இரத்தப்போக்கு நோயுள்ள பெண் ஆரம்பித்த ஒரு முயற்சியை புதுமையாக்கி, அந்தப் புதுமையை, இயேசு, ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.


16 October, 2016

The peace gained on our knees முழந்தாள் படியிட்டால் முழுமையான நிம்மதி

 PRAYERS ANSWERED:
Miner Esteban Rojas kneels after reaching the surface
29th Sunday in Ordinary Time

October 12, 2010. Midnight. Most of Chile was awake with anticipation. At 12.10 a.m. on October 13, a narrow tube like structure emerged out of the rocks and out came Florencio Avalos, a 31 year old miner. His seven year old son and his wife ran to him with tears streaming down their cheeks. Florencio embraced them and kissed them. The whole nation erupted in joy. This cheer and joy continued every hour following this incident. The joy and pride of this nation matched the joy and pride of USA on July 20, 1969 when Neil Armstrong set foot on the moon. Setting foot on the moon was surely a great achievement for Armstrong, for USA as well as for humankind. Equally great was the achievement of the 33 miners from Chile setting foot on the earth after 69 days.

On August 5, 2010, 33 miners entered their usual shift, 2500 feet below the ground level, in the copper and gold mines in Atacama region. A landslide deposited 700,000 tonnes of rock to block the passage. All the 33 miners were literally buried alive. Efforts at contacting them failed and hope began to dwindle. After 17 days, on August 22, they were located and a note saying that all the 33 were alive was sent through a hole. Locating them after 17 long days of suspense, was the first miracle. Initial calculations predicted that it would take anywhere between 3 to 4 months to rescue the miners. So, the families were reconciled to be united to their loved ones for Christmas. The continual efforts bore fruit and all the 33 miners were saved in half the time predicted earlier.

The rescue operation in Chile has a special significance to our liturgical readings today, especially the first reading from Exodus (17: 8-13) and the Gospel passage from Luke (18: 1-8). Both the readings speak of the role of prayer in the midst of struggles we face in our lives.
Here is an extract from the article in Wikipedia titled: 2010 Copiapó mining accident.
Religious activities of trapped miners
When a shaft was completed to provide relief for the men, they asked for religious items, including Bibles, crucifixes, rosaries, statues of the Virgin Mary and other saints. Pope Benedict XVI sent each man a rosary which was brought personally to the mine by the archbishop of Santiago, Cardinal, Francisco Javier Errázuriz Ossa. After three weeks in the mine, one man who was civilly married to his wife 25 years earlier asked her to marry him in a sacramental marriage in the Church. They set up a makeshift chapel in the mine, and Mario Gómez, the eldest miner, spiritually counselled his cohorts and led daily prayers. When they were rescued the miners were all wearing similar t-shirts. The T-shirts, sent down by a brother of one of the miners had "Thank you Lord" on the front and "To Him be the glory and honor" on the back. The quotation was taken from the Book of Psalms 95 verse 4: "...in his hands are the depths of the earth."
As one story in the Daily Mail put it "A deep religious faith powered this rescue; miners and families and rescuers alike believe their prayers were answered." Both government representatives and the Chilean public have repeatedly attributed divine providence with keeping the miners alive and the Chilean public has viewed this rescue operation as a miracle. Chile's president Sebastián Piñera stated, "When the first miner emerges safe and sound, I hope all the bells of all the churches of Chile ring out forcefully, with joy and hope. Faith has moved mountains." When Esteban Rojas, one of the miners, stepped out of the rescue device, he immediately knelt on the ground with his hands together in prayer then raised his arms above him in adoration. His wife then wrapped around him a religious tapestry with Mary on it as they hugged and cried. Though most of the trapped miners were Roman Catholic, three were Protestant or Baptist, and two others were converted during the time.

The trapped miners praying together, while stuck in the belly of the earth, reminds me of Jonah’s prayer in the belly of the whale as well as the early Christians holding underground prayer meetings. Their faith was nurtured by these prayers as well as by the imageries their leaders provided them with. One such imagery often used by early Christians is the mythic bird phoenix. It is significant that the tube like capsule used for bringing the Chilean miners to the surface was named ‘phoenix’, to remind people of the legendary bird which rises out of ashes. The whole operation was named ‘Operation St Lawrence’, the patron of miners. The statue of St Lawrence was taken in a procession around the accident site.

Dire needs bring people to their knees, as it brought Moses. Once the needs are fulfilled, do we forget prayer? The answer lies in the passages from Luke’s Gospel for today as well for the 17th Sunday in Ordinary Time – Luke 11: 1-13 and Luke 18: 1-8.  In both these passages Jesus gives us lovely lessons on prayer, not as a lofty philosophical treatise, but as simple life stories. Isn’t Christ telling us clearly, that prayer should become part of our life and not remain as a subject of intellectual discussion or an antidote used only during emergencies and dire needs? Prayer is the air we breathe, not an oxygen mask!

There are hundreds of stories about the power of prayer. Here is one of them I received via email. It is titled: How much does a prayer weigh?
Louise Redden, a poorly dressed lady with a look of defeat on her face, walked into a grocery store. She approached the owner of the store in a most humble manner and asked if he would let her charge a few groceries. She softly explained that her husband was very ill and unable to work, they had seven children and they needed food. John Longhouse, the grocer, scoffed at her and requested that she leave his store.
Visualizing the family needs, she said: 'Please, sir! I will bring you the money just as soon as I can." John told her he could not give her credit, as she did not have a charge account at his store.  Standing beside the counter was a customer who overheard the conversation between the two. The customer walked forward and told the grocer that he would stand good for whatever she needed for her family. The grocer said in a very reluctant voice, "Do you have a grocery list?” Louise replied "Yes sir" "O.K." he said, "put your grocery list on the scales and whatever your grocery list weighs, I will give you that amount in groceries."
Louise, hesitated a moment with a bowed head, then she reached into her purse and took out a piece of paper and scribbled something on it. She then laid the piece of paper on the scale carefully with her head  still bowed. The eyes of the grocer and the customer showed amazement when the scales went down and stayed down. The grocer staring at the scales, turned slowly to the customer and said begrudgingly, "I can't believe it."        
The customer smiled and the grocer started putting the groceries on the other side of the scales. The scale did not balance so he continued to put more and more groceries on them until the scales would hold no more. The grocer stood there in utter disgust. Finally, he grabbed the piece of paper from the scales and looked at it with greater amazement. It was not a grocery list, it was a prayer which said:  "Dear Lord, you know my needs and I am leaving this in your hands." The grocer gave her the groceries that he had gathered and placed on the scales and stood in stunned silence. Louise thanked him and left the store. The customer handed a fifty-dollar bill to John as he said, "It was worth every penny of it." It was sometime later that John Longhouse discovered the scales were broken; therefore, only God knows how much a prayer weighs.

Mass for the families of the Chile miners
பொதுக்காலம் - 29ம் ஞாயிறு

உலகமக்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அற்புத நிகழ்ச்சி 2010ம் ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவில் நிகழ்ந்தது. தென் அமெரிக்காவின் சிலே நாட்டில், மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது.
சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் பாறையான நிலப்பரப்பில், துளை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அந்தத் துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio Avalos என்ற இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடிவந்த அவரது மகன் Bairoவையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார், Florencio. இந்தக் காட்சியைக் கண்டு பலரது கண்களில் ஆனந்த கண்ணீர். பூமிக்கடியில் ஏறத்தாழ எழுபது நாட்கள் புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டச் சாதனையை, சிலே நாடும், இவ்வுலகமும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அன்றிரவு கொண்டாடியது.
சிலே நாட்டுச் சாதனை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர் 12 நள்ளிரவு துவங்கி, அக்டோபர் 14ம் தேதி அதிகாலை வரை 33 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.

புதையுண்ட தொழிலாளர்களுக்கு, பல வழிகளில், உதவிகள் அனுப்பப்பட்டன. உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள், ஏராளம்.
அப்போது திருத்தந்தையாக இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை அனுப்பிவைத்தார். இத்தொழிலாளர்கள் தாங்கள் அடைபட்டிருந்த இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்துவந்தனர் என்பதை இவர்கள் தங்கள் பகிர்வுகளில் பின்னர் வெளியிட்டனர். இதைக் கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய அரசில் முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த வாழ்வு என் நினைவில் அலைமோதியது. அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில், அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்த்தேன். உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு உறுதி தந்ததெல்லாம் அவர்கள் கூடிவந்து செபித்த நேரங்கள். இன்றும் உலகின் சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதே நிலையில் துன்புறுவதை நாம் நினைவில் கொண்டு, அவர்களுக்காக இறைவனிடம் நம் செபங்களை எழுப்புவோம்.

சிலே நாட்டின் Atacama பகுதியில் மீட்புப் பணி துவங்கிய நேரம் முதல், சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ் அவர்களின் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள் இச்சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."

மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.

செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில் வெற்றிகொண்டதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.
செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள் நிறைந்த பாடங்கள், இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.
அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா 18: 1) இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.

மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, ஒரு மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த ஓர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டார்.
அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், ஒரு வாடகைக் காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.  

வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார் ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக் கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச் சென்றார். வழியில், திடீரென, எவ்வித முன்னறிவிப்புமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத் அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக்  கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.
அந்த செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், ‘இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று கூறினார்.


செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற இறைவனிடம் வரம் வேண்டுவோம்.

11 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 43

Jairus begging Jesus to heal his daughter

"இந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவு கிறிஸ்துவர்களின் இரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும்"... நைஜீரியாவில் உள்ள Boko Haram என்ற ஓர் அடிப்படைவாதக் கும்பல் நான்கு ஆண்டுகளுக்குமுன், விடுத்த எச்சரிக்கை இது. அவர்கள் எச்சரித்தபடியே, குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள்... எப்பாவமும் அறியாத உயிர்கள், கொல்லப்பட்டன. கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் இவ்வுலகில் சிந்தப்படும் இரத்தத்தைப்போல், வேறு எந்த காரணத்திற்காகவும் அவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்காது என்பது, நாம் மறுக்கமுடியாத உண்மை.
நைஜீரியாவில் இரத்தம் சிந்தப்பட்டதை, உயிர்கள் கொல்லப்பட்டதை நாம் செய்தித்தாள்களில் பார்த்தோம். ஆனால், அதே கொடுமைகளின்போது, நைஜீரியாவில் மனித உயிர்களைக் காப்பாற்ற பலர் இரத்ததானம் கட்டாயம் செய்திருப்பர். இவை, எந்த ஊடகத்திலும் பெரிதாகச் சொல்லப்படவில்லை.
அதேபோல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், புஜ் (Bhuj) எனுமிடத்தில் 2001ம் ஆண்டு, சனவரி, 26, குடியரசு நாளன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின்போது, இந்துக்களும், இஸ்லாமியரும் வரிசையில் நின்று இரத்ததானம் செய்தனர். இந்துக்கள் இரத்தம், இஸ்லாமியர் உடலிலும், இஸ்லாமியர் இரத்தம், இந்துக்கள் உடலிலும் செலுத்தப்பட்டது. ஆனால், அதே மாநிலத்தில், அடுத்த ஆண்டு, நிகழ்ந்த கலவரங்களில், இந்துக்களும், இஸ்லாமியரும் ஒருவர் ஒருவருடைய இரத்தத்தை வீதிகளில் சிந்தினர். இக்கலவரங்களுக்கு ஊடகங்கள் தந்த கவனம், அங்கு நிகழ்ந்த நல்ல காரியங்களுக்குத் தரப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
ஊடகங்கள் சொல்லாத, அல்லது சொல்ல மறுக்கும், மறைக்கும் நல்ல செய்திகளை எண்ணிப் பார்க்க, இந்த விவிலியத் தேடலில் ஒரு வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இரத்தம், உயிர் என்ற இரு இணைபிரியா உண்மைகளைச் சிந்திக்க இந்த விவிலியத் தேடல் வழியாக முயல்வோம்.

விவிலியத்தில், இரத்தம், பொருள்நிறைந்த ஓர் அடையாளம். இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் அடிமைகளாய் இருந்தபோது, அவர்களை விடுவிக்க, இறைவன், அந்நாட்டின்மேல் பல துயரங்களை அனுப்பினார். அவற்றில் முதல் துயரம்... நைல் நதி இரத்தமாய் மாறியத் துயரம். இந்த இரத்தம், எகிப்து மன்னனையும், மக்களையும் எச்சரித்த இரத்தம். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் கிளம்பிய அந்த இரவில், கதவு நிலைகளில் பூசப்பட்ட செம்மறியின் இரத்தம் ஒரு கேடயமாக, கவசமாக மாறி, அவர்கள் உயிரைக் காத்தது. இவ்விதம் உயிரைப் பறிக்கவும், காக்கவும் இரத்தம் அடையாளமாக இருந்தது.

இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, உயிர்களுக்கெல்லாம் ஊற்றான இறைவனுக்கு மட்டுமே இரத்தம் சொந்தமாக வேண்டும். எனவே, அவருக்கு அளிக்கப்படும் பலிகளில் மட்டுமே இரத்தம் சிந்தப்பட வேண்டும். மற்ற வழிகளில் சிந்தப்படும் இரத்தம், நமக்கு எதிராக இறைவனிடம் முறையிடும். தொடக்க நூல் 4ம் பிரிவில், காயின், ஆபேலைக் கொன்றதும், இறைவன் காயினிடம் சொன்ன வார்த்தைகள்:  நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. (தொ.நூ. 4: 10)  சிந்தப்படும் மிருகங்களின் இரத்தம், இறைவனுக்கு உகந்த பலியாக மாறும். ஆனால், சிந்தப்படும் மனிதர்களின் இரத்தம் நமக்குப் பழியாக மாறும்.
இரத்தத்தைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான எண்ணம்... இரத்தம் உடலில் இருக்கும்வரை அது உயர்வாக, வாழ்வாகக் கருதப்பட்டது. நோயின் காரணமாக, உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அந்த இரத்தம் களங்கமென்று, தீட்டென்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தை மையப்படுத்திய ஒரு புதுமையை இன்றைய விவிலியத் தேடலில் நாம் சிந்திக்க வந்திருக்கிறோம்.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ள இந்நிகழ்வில், இரு புதுமைகள் நிகழ்கின்றன. மூன்று நற்செய்தியாளர்களும், இவ்விரு புதுமைகளை இணைத்து சொல்லியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளலாம். அது நமது வாழ்க்கைக்கும் தேவையான ஒரு முக்கிய பாடம். அதாவது, இறைவனைப் பொருத்தவரை, மையங்கள் ஓரமாகும், ஓரங்கள் மையமாகும் என்பதே, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது, பயனளிக்கும்.

கெரசேனர் பகுதியிலிருந்து விரட்டப்பட்டு படகேறி புறப்பட்ட இயேசுவுக்கு, மறுகரையில் வரவேற்பு கிடைத்தது. வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவை அணுகினார். இறக்கும் நிலையில் இருந்த தன் மகளைக் காக்கும்படி வேண்டி, அவர் இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இப்புதுமையின் ஆரம்ப வரிகள் சொல்கின்றன. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி.
நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக் கூடத் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை முதல் பக்க படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.

ஒருவேளை, இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும்... யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு அக்கேள்வி எழுந்திருக்கும். தொழுகைக் கூடத்தின் தலைவன் இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தி, காட்டுத் தீபோல் எருசலேம்வரை பரவி, மதத்தலைவர்களை ஆத்திரப்பட வைத்திருக்கும்.
யாயிர், தன் தேவையைச் சொன்னதும், இயேசு புறப்பட்டார். 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' - மாற்கு 5:24 என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை தலைப்புச் செய்திகள் என்று நாம் சிந்தித்தது எதுவும் இந்த இரட்டைப்புதுமைகளின் முக்கியச் செய்தியாகவில்லை. பார்ப்பதற்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும் ஓரங்களாகி விட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த கதை, மையமாக மாறியது. அதுதான்... பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண் குணமடையும் அந்தப் புதுமை. அந்தப் பெண்ணை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:
மாற்கு 5:25-26
பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.

உடலளவில் அடைந்த துன்பங்களைவிட, குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் ஒதுக்கிவைக்கப்பட்ட துன்பம், அப்பெண்ணை மிகவும் வேதனைப்படுத்தியிருக்கும். அவரை யாரும் தொடக்கூடாது, அவர் யாரையும், எதையும் தொடக்கூடாது. அவர் தொட்டதெல்லாம் தீட்டுப்பட்டதென ஒதுக்கிவைக்கப்பட்டன. குடும்பத்திலும், சமுதாயத்திலும் நிகழும் வைபவங்களில் அவர் கலந்துகொள்ளக் கூடாது. கோவிலுக்குப் போகக்கூடாது, சமைக்கக் கூடாது, வீட்டு வேலைகள் செய்யக்கூடாது, தன் குழந்தைகளைத் தூக்கக்கூடாது... இவ்வாறு, அவர் மீது சுமத்தப்பட்ட தடைகள், ஏறத்தாழ அவரை உயிரோடு சமாதியில் வைத்தன. ஒரு நடைப்பிணமாக அவர் வாழ்ந்தார்.
இந்தக் கொடுமை, ஒரு சில நாட்கள் நீடித்தத் துன்பம் அல்ல. 12 ஆண்டுகள், அதாவது, 144 மாதங்கள், 4383 நாட்களாக நீடித்தக் கொடுமை இது. இந்தக் கொடுமையிலிருந்து விடுதலைபெற அவர் தன்னிடம் இருந்த செல்வத்தையெல்லாம் மருத்துவர்களுக்கு கொடுத்துவிட்டார் என்றும், நாளுக்கு நாள் அவரது நிலை மேலும் மோசமாகி வந்ததென்றும் நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார்.

அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். அவர் முண்டியடித்து, முன்னேறிக் கொண்டிருந்தார்.
ஒரு பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண் கூட்டத்தில் இருந்தாரா? அநியாயம்! அக்கிரமம்! அலங்கோலம்! அபச்சாரம்!..
இரத்தப்போக்கு நோயுள்ள பெண் சமூகத்தினின்று விலக்கி வைக்கப்பட வேண்டும் என்பது இஸ்ராயலர்களின் விதி. ஆனால், இவரோ கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் மனமெங்கும் ஒரே மந்திரம்: "நான் அவர் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு 5:28)

அந்தப் பெண்ணுக்குத் தெரியும்... இயேசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று அவருக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள் இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப்பற்றி.
கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில் இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.
"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று வந்த பெண்ணை, இயேசு ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, வழியில் நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. சமுதாயத்தின் ஓரங்களில், விளிம்புகளில் உள்ளவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு நன்கு தெரிந்தக் கலை. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார். அந்தப் பெண்ணின் வழியே, சுற்றியிருந்த கூட்டத்தை இயேசு குணமாக்கியதை நாம் அடுத்தவாரம் சிந்திப்போம்.



09 October, 2016

Lessons from leprosy patients தொழுநோயாளர்கள் சொல்லித்தரும் பாடங்கள்


Naaman  washing in Jordan


28th Sunday in Ordinary Time

There is an ancient legend about two angels who flew to earth to gather people's prayers. Wherever people bowed in prayer by their bedside at night, in a chapel, or on the side of a mountain the angels stopped and gathered the prayers into their baskets. Before long the basket carried by one of the angels grew heavy with the weight of what he had collected, but that of the other remained almost empty. Into the first were put prayers of petition. "Please give me this....Please I want that." Into the other went the "Thank you" prayers. "Your basket seems very light," said one angel to the other. "Yes," replied the one who carried the ‘Thank-you' prayers. "People are usually ready enough to pray for what they want, but very few remember to thank God when their requests are granted."

This is the experience of most of us, right? On a daily basis, we send our seemingly endless list of ‘wants’ to God, whereas our note of ‘thanks’ seems very short and sent rarely. This Sunday we are invited to reflect on one of the noble sentiments that human beings are capable of – that of being thankful. We are invited to meet two leprosy patients who teach us this noble sentiment of gratitude.

In the first reading (2 Kings 5:14-17) we meet Na′aman, commander of the army of the king of Syria, who comes to the house of Prophet Eli′sha to get cured of his leprosy. The opening lines of today’s reading paints a very docile Na′aman: “So he (Na′aman) went down and dipped himself seven times in the Jordan, according to the word of the man of God.” (2 Kgs 5:14) The background story is anything but docile. Na′aman came to the land of the Israel with a body infected with leprosy and a heart filled with pride. He had to undergo a complete transformation – a rebirth, so to say, in order to get healed. When he emerged from the river Jordan, “his flesh was restored like the flesh of a little child, and he was clean” says this passage. His flesh could become  that of a child, since his heart had become child-like before he could enter the river Jordan.

After this miracle, he went back to thank the Prophet Eli′sha. The Prophet, who refused to meet Na′aman when he had come before him in his full regal pride, met him when he had become a docile child. Na′aman  requested Eli′sha to allow him to carry two mules’ burden of earth from the promised land. We can be assured that for the rest of his life, Na′aman would have remained a docile child, ever thankful to God.

We meet another leprosy patient – a Samaritan – in the Gospel of Luke (Luke 17:11-19). This miracle of the cure of the ten leprosy patients is recorded only in the Gospel of Luke. It is interesting that Luke, at every given opportunity, turns the spotlight on the Samaritans, through a famous parable – the Good Samartan – as well as this miracle.

We begin our reflections on a ‘miracle’ that was already taking place when the ten leprosy patients approached Jesus. The opening line of the gospel passage gives us a clue to this ‘miracle’. On the way to Jerusalem he was passing along between Samar′ia and Galilee.  And as he entered a village, he was met by ten lepers, who stood at a distance  and lifted up their voices and said, “Jesus, Master, have mercy on us.” (Luke 17:11-13) This means that this was a place where Jews and Samaritans were present. From this area, ten leprosy patients met Jesus. Were they Jews? Were they Samaritans? Not sure. But, surely, they were leprosy patients. That was their main identity. Due to this disease, both Jews and Samaritans banished them from their communities. This rejection from the community brought them together, irrespective of their original identities – Jew or Samaritan! This is a ’miracle’ by itself!

We can surely think of moments when pain, misfortune and disaster bring people together irrespective of their caste and creed. I recall one such experience from my life. It was 1977 when one of the Jesuit Colleges in South India - St Joseph’s College, Trichy, - was flooded. Those living around the college, who had lost their houses, took refuge in the second and third floors of the college building. They were people from different castes, religions, and class structures. For the next few days they shared the college building, shared the food packets distributed by the government. The flood waters not only demolished the walls of their houses, but also the walls of their social structures. Unfortunately, when the floods receded, they went back to rebuild, not only the walls of their houses, but also the walls of social segregation.

Many of us still remember 9/11 of 2001 – the Twin Tower attack in New York. Many write ups were published in the web about this tragedy. One of those write-ups was about how this tragedy brought the people of New York and, perhaps, the whole of the US, together. Here is a passage written by Cheryl Sawyer, a professor.
As the soot and dirt and ash rained down,
We became one color.
As we carried each other down the stairs of the burning building,
We became one class…
As we fell to our knees in prayer for strength,
We became one faith…
As we gave our blood in lines a mile long,
We became one body.
As we mourned together the great loss,
We became one family.

Pain and tragedy bring people together. The artificial lines we draw within the human family are erased when we face a disaster. But, when the tragedy passes, the old battle lines are re-drawn. This was the case among the ten persons afflicted with leprosy. They were sharing one identity – leprosy patients – when they met Jesus. But when they were cured of their bodily leprosy, they contracted their social leprosy! Nine of those ten were probably Jews who did not want to take the Samaritan along with them when they went to meet the priests. The Samaritan, must have understood their predicament. He did not want to embarrass them in front of the priests. So, he went back to Jesus. Jesus was both happy and sad to see the Samaritan. Happy, because he saw a grateful person. Sad, because this Samaritan was, once again, isolated.

Let us turn our attention to the key theme of today’s liturgy, namely, the idea of thanksgiving. The world has two classes of people – ones who are thankful and others who are not. What is the proportion of these groups? One to nine… the Gospel tells us today. If we examine our daily thoughts, the same proportion is maintained. Namely, when one thankful thought enters our hearts, there are nine other complaints that choke this. When we examine our pattern of prayer too, we find out that for every one prayer of thanksgiving, there are nine prayers of petition… give me this, give me that!
Let us close our reflection with an inspiring anecdote from Rev. John Kavanaugh S.J.
Perhaps the most grateful person I've ever heard of was an old woman in an extended care hospital. She had some kind of a wasting-away disease, her different powers fading away over the march of months. A student of mine happened to meet her on a coincidental visit. The student kept going back, drawn by the strange force of the woman's joy. Though she could no longer move her arms and legs, she would say, "I'm just so happy and grateful to God that I can move my neck." When she could no longer move her neck, she would say, "I'm just so glad and thankful I can hear and see." When the young student finally asked the old woman what would happen if she lost her senses of hearing and sight, the gentle lady said, "I'll just be so grateful that you come to visit."
We have heard of people who are incorrigible optimists. This lady is incorrigibly thankful. How happy our lives would become, if we can learn the art of becoming incorrigibly thankful! 

Two quotes on thanksgiving are worth considering: Meister Eckhart wrote wisely, "The most important prayer in the world is just two words long: Thank you." In our present society, these two words are being used less frequently, not only to God but to one another. Another quote goes this way: “God has two homes - one in heaven and the other in a humble, thankful heart” - Izaak Walton.
Luke 17:11-19 – Now Thank We All Our God

பொதுக்காலம் - 28ம் ஞாயிறு

உலகைச் சுற்றிவந்த இரு வானதூதர்களைப் பற்றிய ஒரு பாரம்பரியக் கதை இது. இருவரும் தனித்தனியே சுமந்து சென்ற கூடைகளில், உலகிலிருந்து எழுப்பப்படும் செபங்களையெல்லாம் சேகரித்த வண்ணம் சென்றனர். அந்த நாள் இறுதியில், ஒரு வானதூதரின் கூடை நிறைந்து வழிந்ததால், அவரால் அதைச் சுமக்க முடியாமல் தடுமாறினார். மற்றொருவரின் கூடையிலோ மிகக் குறைந்த செபங்களே இருந்தன.
முதல் தூதர், இவ்வுலகிலிருந்து விண்ணப்பங்களாக எழும் செபங்களைத் திரட்டினார். மற்றொருவரோ, இவ்வுலகிலிருந்து நன்றியாக எழும் செபங்களைத் திரட்டினார். 'இது வேண்டும், அது வேண்டும்' என்ற வேண்டுதல்கள் திரட்டப்பட்டக் கூடை நிரம்பி வழிய, 'இதற்கு நன்றி, அதற்கு நன்றி' என்ற நன்றி செபங்கள் திரட்டப்பட்டக் கூடையோ, ஏறத்தாழ காலியாக இருந்தது.
கிடைத்த நன்மைகளுக்கு நன்றி சொல்லும் நேரங்களைவிட, இன்னும் தேவை என்று விண்ணப்பிக்கும் நேரங்களே நம்வாழ்வில் அதிகம் என்பதை நாம் அறிவோம். மனித உணர்வுகளில், மிக அரிதாகிவரும் நன்றி உணர்வைக் குறித்து இரு தொழுநோயாளர்கள் வழியே கற்றுக்கொள்ள, இந்த ஞாயிறு வழிபாட்டில் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழுநோயால் துன்புற்ற,  சிரியா நாட்டுப் படைத்தலைவன் நாமான், இஸ்ரயேல் நாட்டில் வாழும் கடவுளின் அடியவரான எலிசாவைத் தேடிச் செல்கிறார். "அந்நாட்களில் நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார்" (2 அரசர்கள் 5: 14) என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. இவ்வரிகளை வாசிக்கும்போது, யோர்தான் நதியில், மிக எளிதாக, சுமுகமாக இப்புதுமை நிகழ்ந்ததைப்போல் உணர வாய்ப்புண்டு. ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்தது வேறு.

படைத்தலைவன் நாமான், உடலளவில் நலம் பெறுவதற்குமுன், அவரது ஆணவம், கோபம் என்ற பல நோய்களிலிருந்து அவர் நலம்பெற வேண்டியிருந்தது. தன் பணபலத்தைப் பயன்படுத்தி, தன் உடல் நலனை வாங்கிவிட முடியும் என்ற கற்பனையோடு சிரியா நாட்டிலிருந்து, இஸ்ரயேல் நாட்டிற்கு சென்ற நாமான், முற்றிலும் மாறவேண்டியிருந்தது. ஏறத்தாழ, அவர் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது. இதைத்தான், இன்றைய வாசத்தின் அடுத்த வரி அழகாகச் சித்திரிக்கிறது. யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழுந்த நாமானின் "உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது" (2 அர. 5:14) என்று வாசிக்கிறோம். அவர் யோர்தானுக்குச் செல்லும் முன்னரே, ஒரு குழந்தையைப்போல் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டதால், ஒரு சிறு பிள்ளையைப் போன்ற உடலையும் அவரால் பெறமுடிந்தது.
ஆணவத்தோடு, படைத்தலைவனாக, தன் வீட்டுக்கு முன் வந்து நின்ற நாமானைச் சந்திக்க மறுத்த இறைவாக்கினர் எலிசா, குழந்தை மனதோடு, சிறு பிள்ளையின் உடலோடு யோர்தானிலிருந்து திரும்பி வந்த நாமானைச் சந்திக்கிறார். நாமானிடம் உருவான மாற்றங்கள் அழகானவை!
சிரியாவிலிருந்து நாமான் புறப்பட்டபோது, உடலில் தொழுநோயையும், உள்ளத்தில் ஆணவத்தையும், உடன் வந்தவர்கள் வழியே தன் செல்வத்தையும் சுமந்து சென்றார். அவர் சிரியாவுக்குத் திரும்பிச் சென்றபோது, உடலிலும், உள்ளத்திலும் முழு நலம் பெற்று, இஸ்ரயேல் நாட்டின் மண்ணைச் சுமந்து சென்றார். தான் கொண்டு செல்லும் செல்வத்தைக்கொண்டு இறைவனையே விலைபேச முடியும் என்ற கற்பனையுடன் சென்ற நாமான், விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற கொடையைப் பெற்றுத் திரும்பினார். தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம், அவர், உண்மையான நன்றி உணர்வுடன் வாழ்ந்திருப்பார் என்று நம்பலாம்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் மற்றொரு தொழுநோயாளர், நன்றி உணர்வு கொண்டவர் என்று, இயேசுவிடம் பாராட்டு பெறுகிறார். நன்றியுணர்வைப்பற்றி சொல்லித்தருவதே இப்பகுதியின் முக்கிய நோக்கம் எனினும், மற்றுமொரு முக்கியமான பாடத்தையும் இன்றைய நற்செய்தி சொல்லித் தருகிறது. இந்தப் பாடம், இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளிலேயே சொல்லித்தரப்படுகிறது.
இயேசு கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்ற கூற்றுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. யூதர்களும், சமாரியர்களும் கலந்து வாழ்ந்தப் பகுதிகள் அவை. அர்த்தமற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமுதாயமும், சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்தப் புறக்கணிப்பு, அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது, மனித சமுதாயம் பலவகைகளில் இணைந்து விடுகிறது. பல ஆண்டுகளுக்குமுன், பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. அந்நகரிலிருந்த தூய வளனார் கல்லூரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள், கல்லூரிக் கட்டடத்தில் தஞ்சம் புகுந்தனர். சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாரும் சேர்ந்து கல்லூரி கட்டடத்தில் தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
அவர்கள் வீட்டுச் சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் உள்ளத்தில் கட்டப்பட்டிருந்த பிரிவுச்சுவர்கள் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்தபின், மீண்டும் அவரவர் வீட்டுச் சுவர்களை கற்களால் எழுப்பியபோது, அவர்கள் உள்ளங்களிலும் பிரிவுச்சுவர்கள் கட்டப்பட்டுவிட்டன என்பது கசப்பான உண்மை.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால், தொழுநோய் நீங்கியதும், என்ன நடந்திருக்கும் என்பதை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்" என்று நற்செய்தி கூறுகிறது.
திரும்பிவந்த அவரைக் கண்டதும், "மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்கா 17: 17) என்று இயேசு தேடுகிறார். இந்தக் கேள்வியில் இயேசுவின் ஏக்கம் தெளிவாகிறது. அவர்கள் அனைவரும் தன்னிடம் திரும்பிவந்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஏக்கம் அல்ல அது. நோயுற்றிருந்தபோது பத்துபேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, நிச்சயம் மகிழ்ந்திருப்பார். அவர்களிடம் அவர் கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கத்தை இயேசு இந்தக் கேள்வியில் வெளிப்படுத்தினார்.
அந்த ஒற்றுமை எங்கே போனது? போகும் வழியில், அது காணாமல்போனது.

நோயாளி என்ற ஒரே குலத்தில் இருந்த அவர்கள், நோய் நீங்கியதும் யூதர் என்றும், சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" (லூக்கா 17: 15) என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். குருக்களிடம் தாங்கள் போகும்போது, இந்தச் சமாரியனோடு போனால், மீண்டும் பிரச்சனைகள் வருமே. இது நாள் வரை அவர்களை வாட்டி வதைத்த தொழுநோய் என்ற தீட்டோடு, ஒரு சமாரியனோடு அவர்கள் சேர்ந்திருந்தது, மற்றொரு தீட்டாக மாறுமே.

தொழுநோயுற்றபோது தன்னுடன் துன்பத்தில் இணைந்தவர்கள் மனதில், இப்போது வேற்றுமை எண்ணங்கள் புகுந்துவிட்டன என்பதை, அவர்களின் வெப்பப் பார்வையிலேயே அந்த சமாரியர் உணர்ந்திருக்கவேண்டும். அவராகவே அவர்களை விட்டு விலகுகிறார். அனால், அவருக்குள் ஒரு சின்ன கலக்கம். தன்னை இவ்வளவு அன்போடு குணமாக்கியவர், "குருக்களிடம் காட்டுங்கள்." என்று கட்டளையிட்டாரே. என்ன செய்யலாம்? என்ற கலக்கம் அது. அவரது மனதில் ஒரு தெளிவு பிறக்கிறது. தன்னை குணமாக்கியவரே ஒரு பெரும் குரு. தெய்வம். அவரிடமே சரண் அடைவோம் என்ற தெளிவோடு அந்தச் சமாரியர் இயேசுவிடம் திரும்ப வருகிறார்.
திரும்பி வந்த சமாரியரைப் பார்த்து, இயேசுவுக்கு ஒருபுறம் மகிழ்வு. மறுபுறம் வேதனை. நன்றிக்கடன் செலுத்தவந்த சமாரியரைப் பார்த்து மகிழ்வு. ஆனால், அவர் மீண்டும் தனிமைபடுத்தப்பட்டது, ஒதுக்கப்பட்டது குறித்து, இயேசுவுக்கு வேதனை. அந்த வேதனை, "மற்ற ஒன்பது பேர் எங்கே?" என்ற வார்த்தைகளாக வெளிவருகின்றன.
இயேசுவின் வேதனை நிறைந்த இக்கேள்விக்கு நாம் இன்றும் பதில் சொல்லமுடியாமல் தடுமாறுகிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போதும், கலவரங்கள், போர்கள் என்று மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும், மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோமே, இது ஏன்? இன்றைய நற்செய்தி, இக்கேள்வியை நமக்கு முன் வைக்கிறது. நமது பதில் என்ன?

இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்லித்தரும் முக்கியமானப் பாடமான நன்றி உணர்வின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம். உலகில் உள்ள மக்களை இரு குழுக்களாகப் பிரிக்கலாம். நன்றியுள்ளவர்கள், நன்றி மறந்தவர்கள். இவ்விரு குழுக்களில், ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருப்பார்கள்? இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டது போல, ஒன்றுக்கு ஒன்பது என்பதுதான் அந்த கணக்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நம்முடைய சொந்த வாழ்விலும் இதே கணக்கு நிலவுகிறதா என்பதை ஓர் ஆன்மீக ஆய்வாக இன்று மேற்கொள்ளலாம். நம்மில் பலருக்கு, நன்றி உணர்வு ஒன்று எழுந்தால், அதை அழுத்தி, புதைத்துவிட ஒன்பது பிற எண்ணங்கள் எழுந்துவரும். இதனால், நாம் நன்றி சொல்லும் நேரங்களைவிட, கவலைகளையும், கோபதாபங்களையும் சொல்லும் நேரங்கள்தாம் அதிகமாகின்றன. நமது செபங்களைச் சிறிது ஆய்வு செய்தால், அவற்றில், பத்தில் ஒன்பது பகுதி குறைகளை வெளியிடும் விண்ணப்பச் செபங்களாகவும், பத்தில் ஒரு பகுதி மட்டுமே நிறைகளைக் கூறும் நன்றி செபங்களாகவும் இருக்கலாம்.

முதியோர் இல்லம் ஒன்றில், இடம்பெற்ற ஒரு நிகழ்வோடு நம் ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம். அந்த முதியோர் இல்லத்தில் நோயுற்று படுத்திருந்த, ரோசி என்ற வயதான பெண்ணின் உடலில், ஒவ்வொரு பகுதியாக செயலிழந்து வந்தது. அவ்வில்லத்தில் பணியாற்றச் சென்ற ஓர் இளைஞர், ரோசி அவர்களிடம் காணப்பட்ட மகிழ்வைக்கண்டு ஆச்சரியமடைந்தார். நேரம் கிடைத்தபோதெல்லாம், அந்த இளைஞர், ரோசி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
நாளடைவில், ரோசியால் தன் கைகளையும், கால்களையும் அசைக்க முடியாமல் போனது. "என் கழுத்தை அசைக்க முடிகிறதே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அவர் கூறிவந்தார். ஒருவாரம் சென்று, ரோசியால் தன் கழுத்தையும் அசைக்க முடியவில்லை. "என்னால் பார்க்கவும், கேட்கவும் முடிகிறதே...  அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று ரோஸி புன்சிரிப்புடன் கூறிவந்தது, இளையவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
"உங்களால் பார்க்கவும், கேட்கவும் முடியாமல் போனால் என்ன செய்வீர்கள்?" என்று அந்த இளைஞர் ரோஸியிடம் கேட்டார். அதற்கு அவர், "நீ என்னை தினமும் பார்க்க வருகிறாயே, அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" என்று அமைதியாகச் சொன்னார்.
இல்லாததை எண்ணி, ஏக்கத்தில் வாழ்வதைவிட, உள்ளதை எண்ணி, நன்றியுடன் வாழ்வது மேல்.

அக்டோபர் 7,8,9 ஆகிய மூன்று நாட்கள் வத்திக்கானில் மரியன்னையின் யூபிலி சிறப்பிக்கப்படுகின்றது. நன்றியின் இலக்கணமாக வாழ்ந்த அன்னை மரியா, நாம் நன்றியுள்ளவர்களாக என்றும் வாழ, நம்மை வழிநடத்துவராக!