PRAYERS
ANSWERED:
Miner
Esteban Rojas kneels after reaching the surface
29th Sunday in Ordinary Time
October 12,
2010. Midnight. Most of Chile
was awake with anticipation. At 12.10 a.m. on October 13, a narrow tube like
structure emerged out of the rocks and out came Florencio Avalos, a 31 year old
miner. His seven year old son and his wife ran to him with tears streaming down
their cheeks. Florencio embraced them and kissed them. The whole nation erupted
in joy. This cheer and joy continued every hour following this incident. The
joy and pride of this nation matched the joy and pride of USA on July 20, 1969 when Neil
Armstrong set foot on the moon. Setting foot on the moon was surely a great
achievement for Armstrong, for USA
as well as for humankind. Equally great was the achievement of the 33 miners
from Chile
setting foot on the earth after 69 days.
On August
5, 2010, 33 miners entered their usual shift, 2500 feet below the ground level,
in the copper and gold mines in Atacama region. A landslide deposited 700,000
tonnes of rock to block the passage. All the 33 miners were literally buried
alive. Efforts at contacting them failed and hope began to dwindle. After 17
days, on August 22, they were located and a note saying that all the 33 were
alive was sent through a hole. Locating them after 17 long days of suspense,
was the first miracle. Initial calculations predicted that it would take
anywhere between 3 to 4 months to rescue the miners. So, the families were
reconciled to be united to their loved ones for Christmas. The continual
efforts bore fruit and all the 33 miners were saved in half the time predicted
earlier.
The rescue
operation in Chile
has a special significance to our liturgical readings today, especially the
first reading from Exodus (17: 8-13) and the Gospel passage from Luke (18:
1-8). Both the readings speak of the role of prayer in the midst of struggles
we face in our lives.
Here is an
extract from the article in Wikipedia titled: 2010 Copiapó mining accident.
Religious
activities of trapped miners
When a
shaft was completed to provide relief for the men, they asked for religious
items, including Bibles, crucifixes, rosaries, statues of the Virgin Mary and
other saints. Pope Benedict XVI sent each man a rosary which was brought personally
to the mine by the archbishop of Santiago, Cardinal, Francisco Javier Errázuriz
Ossa. After three weeks in the mine, one man who was civilly married to his
wife 25 years earlier asked her to marry him in a sacramental marriage in the
Church. They set up a makeshift chapel in the mine, and Mario Gómez, the eldest
miner, spiritually counselled his cohorts and led daily prayers. When they were
rescued the miners were all wearing similar t-shirts. The T-shirts, sent down
by a brother of one of the miners had "Thank you Lord" on the front
and "To Him be the glory and honor" on the back. The quotation was
taken from the Book of Psalms 95 verse 4: "...in his hands are the depths
of the earth."
As one
story in the Daily Mail put it "A deep religious faith powered this
rescue; miners and families and rescuers alike believe their prayers were
answered." Both government representatives and the Chilean public have
repeatedly attributed divine providence with keeping the miners alive and the
Chilean public has viewed this rescue operation as a miracle. Chile 's president Sebastián Piñera stated,
"When the first miner emerges safe and sound, I hope all the bells of all
the churches of Chile
ring out forcefully, with joy and hope. Faith has moved mountains." When
Esteban Rojas, one of the miners, stepped out of the rescue device, he
immediately knelt on the ground with his hands together in prayer then raised
his arms above him in adoration. His wife then wrapped around him a religious
tapestry with Mary on it as they hugged and cried. Though most of the trapped
miners were Roman Catholic, three were Protestant or Baptist, and two others
were converted during the time.
The trapped
miners praying together, while stuck in the belly of the earth, reminds me of
Jonah’s prayer in the belly of the whale as well as the early Christians
holding underground prayer meetings. Their faith was nurtured by these prayers
as well as by the imageries their leaders provided them with. One such imagery
often used by early Christians is the mythic bird phoenix. It is significant
that the tube like capsule used for bringing the Chilean miners to the surface
was named ‘phoenix’, to remind people of the legendary bird which rises out of
ashes. The whole operation was named ‘Operation
St Lawrence ’, the
patron of miners. The statue of St Lawrence was taken in a procession around
the accident site.
Dire needs
bring people to their knees, as it brought Moses. Once the needs are fulfilled,
do we forget prayer? The answer lies in the passages from Luke’s Gospel for
today as well for the 17th Sunday in Ordinary Time – Luke 11:
1-13 and Luke 18: 1-8. In
both these passages Jesus gives us lovely lessons on prayer, not as a lofty
philosophical treatise, but as simple life stories. Isn’t Christ telling us
clearly, that prayer should become part of our life and not remain as a subject
of intellectual discussion or an antidote used only during emergencies and dire
needs? Prayer is the air we breathe, not an oxygen mask!
There are
hundreds of stories about the power of prayer. Here is one of them I received
via email. It is titled: How much does a prayer weigh?
Louise Redden,
a poorly dressed lady with a look of defeat on her face, walked into a grocery
store. She approached the owner of the store in a most humble manner and asked
if he would let her charge a few groceries. She softly explained that her
husband was very ill and unable to work, they had seven children and they
needed food. John Longhouse, the grocer, scoffed at her and requested that she
leave his store.
Visualizing
the family needs, she said: 'Please, sir! I will bring you the money just as
soon as I can." John told her he could not give her credit, as she did not
have a charge account at his store.
Standing beside the counter was a customer who overheard the conversation
between the two. The customer walked forward and told the grocer that he would
stand good for whatever she needed for her family. The grocer said in a very
reluctant voice, "Do you have a grocery list?” Louise replied "Yes
sir" "O.K." he said, "put your grocery list on the scales
and whatever your grocery list weighs, I will give you that amount in
groceries."
Louise,
hesitated a moment with a bowed head, then she reached into her purse and took
out a piece of paper and scribbled something on it. She then laid the piece of
paper on the scale carefully with her head
still bowed. The eyes of the grocer and the customer showed amazement
when the scales went down and stayed down. The grocer staring at the scales, turned
slowly to the customer and said begrudgingly, "I can't believe
it."
The customer
smiled and the grocer started putting the groceries on the other side of the
scales. The scale did not balance so he continued to put more and more
groceries on them until the scales would hold no more. The grocer stood there
in utter disgust. Finally, he grabbed the piece of paper from the scales and
looked at it with greater amazement. It was not a grocery list, it was a prayer
which said: "Dear Lord, you
know my needs and I am leaving this in your hands." The grocer
gave her the groceries that he had gathered and placed on the scales and stood
in stunned silence. Louise thanked him and left the store. The customer handed
a fifty-dollar bill to John as he said, "It was worth every penny of
it." It was sometime later that John Longhouse discovered the scales were
broken; therefore, only God knows how much a prayer weighs.
Mass for
the families of the Chile
miners
பொதுக்காலம் - 29ம் ஞாயிறு
உலகமக்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அற்புத நிகழ்ச்சி 2010ம்
ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவில் நிகழ்ந்தது. தென் அமெரிக்காவின் சிலே நாட்டில், மக்கள்
தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெடித்தது.
சிலே நாட்டின் Atacama
என்ற பகுதியில் பாறையான நிலப்பரப்பில்,
துளை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அந்தத் துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது.
அந்தக் குழாயிலிருந்து Florencio Avalos என்ற இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன்
ஓடிவந்த அவரது மகன் Bairoவையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார், Florencio. இந்தக்
காட்சியைக் கண்டு பலரது கண்களில் ஆனந்த கண்ணீர். பூமிக்கடியில் ஏறத்தாழ எழுபது நாட்கள்
புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டச் சாதனையை, சிலே நாடும், இவ்வுலகமும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
அன்றிரவு கொண்டாடியது.
சிலே நாட்டுச் சாதனை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
இருந்தாலும் அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன். 2010ம்
ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம்
ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால்
ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும்
நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது.
அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள்
கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி
அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையே ஒரு புதுமை என்று
பலர் கூறினர். சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர்
12 நள்ளிரவு துவங்கி, அக்டோபர் 14ம்
தேதி அதிகாலை வரை 33 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை
இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.
புதையுண்ட தொழிலாளர்களுக்கு, பல வழிகளில், உதவிகள் அனுப்பப்பட்டன.
உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக
உதவிகள், செப உதவிகள், ஏராளம்.
அப்போது திருத்தந்தையாக இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன்
கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை அனுப்பிவைத்தார். இத்தொழிலாளர்கள் தாங்கள் அடைபட்டிருந்த
இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்துவந்தனர்
என்பதை இவர்கள் தங்கள் பகிர்வுகளில் பின்னர் வெளியிட்டனர். இதைக் கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய அரசில் முதல் கிறிஸ்தவர்கள்
வாழ்ந்த வாழ்வு என் நினைவில் அலைமோதியது. அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில், அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த
கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்த்தேன். உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில்
ஒவ்வொரு நாளும் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு உறுதி தந்ததெல்லாம் அவர்கள் கூடிவந்து
செபித்த நேரங்கள். இன்றும் உலகின் சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதே நிலையில் துன்புறுவதை
நாம் நினைவில் கொண்டு, அவர்களுக்காக
இறைவனிடம் நம் செபங்களை எழுப்புவோம்.
சிலே நாட்டின் Atacama பகுதியில் மீட்புப் பணி துவங்கிய
நேரம் முதல், சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ் அவர்களின் திரு
உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள் இச்சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர்
12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சாதனை முடிந்ததும்,
அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின்
நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."
மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து சிந்திக்க
இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள்
இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.
செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில் வெற்றிகொண்டதை,
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப்
பயணம் 17: 8-13) நமக்குக்
கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக
இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல்
மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக்
குலைத்து, அவர்களது தோல்வியை
உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின்
செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.
செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம்
என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா
நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள்
நிறைந்த பாடங்கள், இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.
”அவர்கள்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்” என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா
18: 1) இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன
ஒரு நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது
கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த
வேண்டுதல் முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.
மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல
நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர்
அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ
உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக
மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில
உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, அக்கழகம்
அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில்
பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, ஒரு மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று
உருவானதால், அருகிலிருந்த ஓர்
ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும்
என்று கேட்டார்.
அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது
என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், டாக்டர்
அகமத் விரும்பினால், ஒரு வாடகைக் காரில்
அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு
நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார் ஒன்றை பதிவுசெய்து,
செல்லவேண்டிய ஊருக்கு வழியைக் கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச் சென்றார். வழியில், திடீரென, எவ்வித முன்னறிவிப்புமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார்.
அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும்
சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம்
தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார்.
வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய
அப்பெண், டாக்டர் அகமத் அவர்கள், இருந்த
நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது
சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய
உணவையும், தேநீரையும் பரிமாறிய
அந்தப் பெண், தான் துவங்கிய
செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனமுருகி, கண்ணீருடன்
அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு
வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப்
பெண், "இறைவன் என் வேண்டுதல்கள்
அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில்
தரவில்லை" என்று கூறினார்.
அந்த செபம் என்ன, அந்தத்
தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில்
உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர்.
என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திறமை
கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது
மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், ‘இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு’ என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்"
என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர்
வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று,
அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்"
என்று கூறினார்.
செபத்தைக் குறித்து,
தொடர்ந்து செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது
வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற இறைவனிடம் வரம் வேண்டுவோம்.
No comments:
Post a Comment