04 October, 2009

Married life... knowing not what they do? தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல்...

Dear Friends,
I am back. Where did I go? Nowhere… Then, why this long gap of TEN DAYS? I see that my last post was on Sep. 24th. There are reasons… Excuses? Well, may be. The Pope’s visit to the Czech Republic kept me busy. Some friends had come to Rome. Well, here comes one important reason.. There have not been any comments on my blog. Do my friends read it at all?
One of my friends wrote a mail asking me why I had become so lazy. It was a wake up call. So, here I am again trying to activate my blog. This is the Sunday Reflection I had recorded today – Sat, Oct. 03.
I have begun today’s reflections with a short account of St Francis of Assisi. He is one of my favourite saints. Why? No particular reason. May be, because he was so much in tune with nature? May be, he is the one who is said to have begun the lovely custom of erecting cribs during Christmas? May be the lovely prayer “Make me a Channel of Your Peace”? May be the film… Brother Sun, Sister Moon in which some of the scenes were quite captivating. If you, my friend, have not watched this movie, please do so at your own risk… it will touch your heart. So… where was I? Yes, St Francis is one of my favourite saints.
Today’s Gospel (Mark 10: 2-16) talks of married life and divorce, and, of course talks of children… third week in succession Jesus (or Mark) brings in children for our reflection and consideration. I have begun the reflections with an apologetics… Whenever I said a wedding Mass, especially when I was asked to preach the homily during a wedding Mass, I felt inadequate. Why so? Mainly, because I saw in the congregation couples who have much deeper and more enriching knowledge about married life. Who am I to talk of married life in front of such knowledgeable people? I remember the wedding Mass I celebrated a few years back in a town near Madurai. I began the homily, but I had already requested three/four married persons to share their wisdom. I thought it was a great homily. I wish I could do this more often.
Here is a story with which my friend Joe Antony began his homily in a wedding Mass. A young man walks into the presbytery to book the date for his wedding. The parish wishes to know how much catechism this young man knows. So, he asks him, “Has Jesus said anything about wedding? If so, what?” The young man thinks for a while. Then comes his confident reply: “Yes, Father, Jesus has said something about wedding: ‘Father, forgive them for they know not what they are doing.’” I have used this story to begin my reflections. People do take lots of care in arranging weddings… In India, months, sometimes, years go in match making. So many calculations made, so much background information collected… still, we are left with so many broken homes. Where do we go wrong?
Today’s Gospel begins with a question: Is it right for the man to divorce his wife? Given the Israelite background, this question is simply a reiteration of the law of Moses. I have gone a bit on the tangent. Imagine if Jesus were to reply to this question this way: “Well, my friends you ask me ‘Is it right for the man to divorce his wife?’ Let me ask you another question: ‘Is it right for the woman to divorce his husband?’” I am sure the group that stood around Jesus would have been shocked to silence on hearing Jesus.
Jesus, in my opinion, is capable of such constructive shocks. Let me give you another instance. The episode of the woman caught in adultery (John 8: 1-11). The chief priests and scribes say: “This woman was caught red-handed in the act of committing adultery. The Law says that she should be stoned to death. What do you say?” Jesus could have easily said: “You say that she was caught in the act of committing adultery. Where is the man?” That would have silenced his critics. I remember vaguely having seen such a scene enacted in one of the plays staged in Pune during my theology days. The great Fr Cyril Desbruslais was the author and director of the play. The spirit of Jesus trying to put some sense into the people of his times is to be admired. The statement of Jesus in John’s Gospel is equally strong and to the point. “The one who has not sinned, let him stone her first.”In today’s Gospel too Jesus is trying to set right the perspective of his disciples. Ultimately, he seems to tell them that if only we have treated ladies on par with men, most of the problems would have been solved. In God’s creation both man and woman are equal. None great, or small! The same old question that was raised last Sunday: Who is the greatest among them? The answer: the child. Today’s Gospel once again has the situation of Jesus getting children around him. For the past three Sundays Jesus is trying to tell us through Mark that children are our best teachers. As adults we have not done well when it comes to relationships, especially relationships that matter – like marital relationship. Why don’t we learn the wisdom that comes from children?



ஒரு கதையோடு ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பிக்கிறேன். கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் கிறிஸ்தவ மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்கு தந்தை சோதிப்பார். அப்படி ஒரு முறை, திருமணத்திற்கு நாள் குறிக்க வந்த ஒரு இளைஞனிடம் பங்கு தந்தை கேட்டார்:
“இயேசு திருமணத்தைப் பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அப்படி சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருக்கிறார்?” வந்திருந்த இளைஞன் தயங்கினான். பின்னர் சொன்னான்: "சொல்லியிருக்கிறார், சாமி. தந்தையே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்."
அன்பர்களே, திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? நல்ல கேள்வி. எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்?
குலம், கோத்திரம், நாள், நட்சத்திரம் இவைகளெல்லாம் பொருந்தி வருகின்றனவா என்று ஏகப்பட்ட ஆராய்ச்சிகள். அடுத்ததாக, படிப்பு, தொழில், சம்பளம், சொத்துக்கள் என்று ஒரு நீண்ட கணக்கு ஆராய்ச்சி. எவ்வளவு தருவது, எவ்வளவு பெறுவது என்று ஒரு வியாபார ஒப்பந்தம்.
இந்த ஆராய்ச்சிகளுக்கு நாம் செலவிடும் நேரம், ஏற்றுக்கொள்ளக்கூடியது தானா?
இத்தனைப் பொருத்தங்களும் பார்த்து நடத்திவைக்கபடும் திருமணங்கள் வெற்றிகரமாக அமைகின்றனவா? அப்படி அமையாவிட்டால், ஒருவர் ஒருவரைச் சுட்டி காட்டும் படலம் ஆரம்பமாகும்.
திருமண வாழ்வுக்கு முன்னேற்பாடாக எதை நாம் அறிய வேண்டும்? பழைய திரை படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
"கட்டடத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம். காதலுக்கு மனப் பொருத்தம் அவசியம்."
மனப் பொருத்தம் நம்மில் எத்தனைப் பேர் பார்க்கிறோம்? இனம், குலம், மதம், பணம் என்று எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கும் நாம், குணம், மனம் இவற்றின் பொருத்தம் பார்ப்பது ரொம்ப அரிது. மனம், குணம் இவைப் பொருந்த வில்லை என்றால்?... இவை போகப் போகச் சரியாகி விடும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். மனம், குணம் இவைகளில் என்னதான் பொருத்தம் பார்த்தாலும், நாளுக்கு நாள் மாறக்கூடிய இவைகளுக்கு என்ன உத்தரவாதம்? இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, பல ஆண்டுகள் பழகியபின் மேற்கொள்ளப்படும் காதல் திருமணங்களில் கூட இந்த உத்தரவாதம் இல்லையே. இப்படி பலவாறான எண்ண ஓட்டங்கள். உத்தரவாதத்தைப் பற்றி பேசும் போது, மற்றொரு எண்ணம் எழுகிறது. பொருட்களை வாங்கும் போது உத்தரவாதம் பார்த்து வாங்குகிறோம். தேர்ந்தெடுத்தப் பொருள் சரியில்லை என்றால், திருப்பிக் கொடுத்து விட்டு, வேறு ஒன்று வாங்கி வருகிறோம். திருமண உறவில், வாழ்வில் இப்படி மாற்ற முடியுமா?
இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்திக்குப் பின்னணி. சீடர்கள் கேட்கும் கேள்வி இது: "கணவன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" மனைவி எதோ ஒரு பொருள் போலவும், அந்தப் பொருளை ஆண்மகன் திருப்பிக் கொடுப்பது போலவும்.. இந்தக் கேள்வியின் தொனி அப்படி! இஸ்ராயலர்கள் மத்தியில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சமூக நிலை சரியாக இல்லை. இன்றும் இதேபோல் சூழ்நிலை பல சமுதாயங்களில் உள்ளது.
இவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இயேசு இப்படி செய்திருக்கலாமோ என்று நான் நினைப்பதுண்டு. "கணவன் மனைவியை விலக்கி விடுவது முறையா என்று கேட்கிறீர்கள். சரி! மனைவி கணவனை விலக்கி விடுவது முறையா என்று நான் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?" இப்படி இயேசு கேட்டிருந்தால், அவர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
இயேசுவை வித்தியாசமாக நினைத்துப் பார்க்கும் என் முயற்ச்சிகளில் மற்றுமொரு சம்பவத்தை இங்கே கூற வேண்டும். யோவான் நற்செய்தியில் இந்த சம்பவம். (யோவான் 8: 1-11) ஏசுவுக்கு முன்னால் விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர், பரிசேயரும், மதத் தலைவர்களும். அவர்கள் சொல்லும் வார்த்தைகள்: "இப்பெண், விபச்சாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டவள். இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். நீர் என்ன சொல்கிறீர்?" அவர்களுக்கும் இயேசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்க வேண்டும். "விபச்சாரத்தில் கையும், களவுமாகப் பிடிபட்டவள் என்று சொல்கிறீர்கள், அந்த ஆண் எங்கே?" என்று கேட்டு, அவர்களைச் சங்கடத்தில் வாயடைக்கச் செய்திருக்கலாம். மாறாக, இயேசு குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் பாவங்களைத் தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார் என்று ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரது மௌனத்தைக் கலைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் முயன்றதால், "உங்களில் பாவம் இல்லாதவர் இவள் மேல் கல் எறியட்டும்." என்றார். சரியான நெத்தியடி அது!
இன்றைய நற்செய்தியிலும் சீடர்களுடைய கேள்வியில் இருந்த தவறான மதிப்பீடுகள், முரண்பாடுகள் இவற்றை நேரடியாகச் சொல்லாமல், "ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம்" என்று ஆணித்தரமாய் சொல்கிறார், இயேசு.
ஆணும் பெண்ணும் சமம்...
அன்பர்களே, இந்த உண்மையை மட்டும் இந்த உலகம் உணர்ந்தால்...
இந்த உண்மையின் ஆழத்தை மட்டும் இந்த உலகம் மீண்டும் மீண்டும் அசை போட்டால்...
இந்த உண்மையின் ஆழத்தை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடிந்தால்...
அப்படி புரிந்து கொள்வதன் மூலம், இவ்வுண்மையை மனதார ஏற்றுக் கொள்ள முயன்றால்...
ஆண்-பெண் உறவுகள் எவ்வளவோ நலமுடன், சக்தியுடன் வளரும். திருமண வாழ்வின் பிரச்சனைகள் தீரும்.
ஆணா, பெண்ணா, நீயா, நானா,,, யார் பெரியவர் என்ற கேள்வியை எழுப்பாமல், இருவரும் இணை என்று உணரும் போது, வாழ்க்கைப் பிரச்சனைகள், சிறப்பாக, திருமண வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வழியுண்டு.
யார் பெரியவர் என்று போன வார நற்செய்தியில் கேள்வி எழுப்பிய சீடர்கள் மத்தியில் இயேசு ஒரு குழந்தையை வைத்தார். இந்த வார நற்செய்தியிலும், இயேசு "குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள். இறையாட்சி அவர்களதே" என்கிறார்.
இந்த மூன்று வாரங்களாய் குழந்தைகளிடமிருந்து பாடங்கள் கற்று கொள்ள இயேசு தொடர்ந்து கூறி வருகிறார்.வாழ்க்கையின் பிரச்சனைகளைச் சமாளிக்க, வளர்ந்துவிட்ட நமக்கு தெரியவில்லை என்றால், குழந்தைகளிடம் பாடங்கள் கற்றுக்கொள்ளலாமே!

No comments:

Post a Comment