08 October, 2009

PLEASE CHOP OFF YOUR HAND AND FEET! தயவுசெய்து கையை, காலை வெட்டிக்கொள்ளுங்கள்!

Here is the Sunday Reflection that I shared on Sep 27th. As you can see this again comes pretty late… I keep telling myself “better late than never”. I seem to have lost time sequences… Living in different time zone? You may say that!
The Gospel for the 26th Week in Ordinary Time talks of scandals (Mark, 9:38-48). Scandals caused to ‘the little ones’. I can surely hear you saying, “Oh, tell me something new.” Well, dear friends, we are so much immersed in scandals that they don’t seem to make any impact on us.
I have spoken mainly on how we develop habits which are harmful to us and to others… In the context of Jesus asking us to chop off hands and feet as well as pluck out our eyes, I have talked of such decisions taken in hospitals to save lives. Life or limb? Especially in cases when gangrene has set in. Why do we land up in such situations? I have made some simple analysis (simplistic, perhaps…) of one who suffers from diabetes.
Developing healthy habits is good for all of us. Won’t you agree? Isn’t Jesus saying the same thing in Mark’s Gospel. A bit too strong. Most medicines are bitter.

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
மாற்கு நற்செய்தி 9/38-48
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், ' போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர் ' என்றார்.39 அதற்கு இயேசு கூறியது: ' தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ' 42 ' என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.44 உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்.45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.46 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.

நேற்று மாலை இங்கு வானொலியில் என்னோடு பணியாற்றும் நண்பர் க்ரிஸ்டோபருடன் ஞாயிறு சிந்தனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். "இந்த ஞாயிறு நற்செய்தியை நற்செய்தின்னு சொல்றதுக்கே தயக்கமாயிருக்கு, ஏன்னா, இயேசு கையை, காலை வேட்டிகிறதைப் பத்திக் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கார்" என்று சொன்னேன்.
அந்த நற்செய்தியை ஒருமுறை பார்த்த கிறிஸ்டோபர், "நல்ல வேளை, இயேசு அவங்கவுங்க தங்களுடைய கையையோ, காலையோ இழக்குறதைப் பத்தி தானே சொல்லியிருக்கார், அடுத்தவங்க கையையோ, காலையோ வெட்டச் சொல்லலியே." என்று நகைச்சுவைத் கலந்த தொனியில் சொன்னார்.
அவர் சொன்ன நகைச்சுவை கூற்று என் சிந்தனையை ஆரம்பித்து வைத்தது. இயேசு வாழ்ந்த காலம், வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். நம் சினிமாக்களில் "ஆவூன்னா அரிவாளைத் தூக்கிடுறான்களே" என்று நகைச்சுவை நடிகர்கள் குறிப்பிடுவது நினைவுக்கு வரலாம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், ஏசுவே அவர்களைப் பார்த்து "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு." (மத்தேயு, 6 - 38 - 39 ) என்று முற்றிலும் மாறுபட்ட பாடங்களைச் சொல்லிதர ஆரம்பித்தார். அவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்படி சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், கோபமாக, கடுமையாகப் பேசும் யேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான்.
சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், சட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அந்த யேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான்.
அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இந்த இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந்து வருகின்றன என்று தேடித் பார்க்க வேண்டும். பின்னணியை விட்டுவிட்டு இயேசுவின் வார்த்தைகளைத் தனியே எடுத்து வெறும் மேற்கோளாக ஒரு சிலர் பேசும் போது, நான் சங்கடத்தில் நெளிந்ததுண்டு. மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும் போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? போன வார நற்செய்தியின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம். போன வாரம் ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப் போல் மாறுங்கள் என்று கூறிய இயேசு, இந்தக் குழந்தைகளுக்குப் பெரியோர் மூலம் ஏற்படும் அவலங்களை நினைத்துப் பார்க்கிறார். சூடாகிப் போகிறார். குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தைகள் மனம் கொண்டவர்கள், ஏழைகள்... சமுதாயத்தில் சிறியவர்கள்... "இந்த சிறியவர்களில் ஒருவருக்கு இடறலாய் இருப்பவனின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, அவனைக் கடலில் அழுத்தி விடுவது அவனுக்கு நல்லது” என்று சொல்கிறார்.
சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். இப்படி சமுதாயத்திலிருந்து ஒவ்வொருவரையாக கடலில் தள்ளினால், கடல் நிறைந்து விடும், நிலம் காலியாகிவிடும். இதற்கு ஒரு மாற்று? இயேசு சொல்லும் அடுத்த வாக்கியங்கள். சமுதாயத்தில் விஷமாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால் இவைகளை வெட்டி போடுங்கள் என்று கோபமாகச் சொல்வது போல் தெரிகிறது.
ஆஸ்த்ரேலியாவில் நடந்த ஒரு சம்பவம். ரயில்வேயில் பணி புரிந்த ஒருவர், தனியே எதோ ஒரு இடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்து விடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு. ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு வசதிகள் குறைவு. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக் கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொறுத்த வரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.
இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்த கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? காயப்பட்டு புரையோடிப் போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும் போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது. உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலை ஒரு நாளில் வரும் நிலை அல்ல. இந்த நிலை வழக்கமாக சிறுக, சிறுகத் தான் வரும். பாம்பு கடித்து கையை வெட்டிக் கொள்வது போன்ற சம்பவங்கள் ரொம்ப அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், கொஞ்சம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
உதாரணமாக, முதலில் சர்க்கரை வியாதி வரும். அந்த நிலை வருவதைப் பல சமயங்களில் தடுக்கலாம். பலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனை. சரி... அந்த குறை இருக்கிறதென்று கண்டு பிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, ஒரு சில மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், இந்தக் குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும். அப்படி வாழ்பவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இந்தக் கட்டுப்பாடெல்லாம் இல்லாமல், அல்லது இந்த காட்டுப்பட்டை எல்லாம் அடிக்கடி மீறி, வம்பை வாங்கியவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். வழியில் போகும் ஓணானை எடுத்து, மடியில் போட்டுக்கொண்டு கஷ்டப் படுகிறவர்கள் இவர்கள். கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்வில், திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும் அவர்களுக்கு வரும் மற்றொரு எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக் கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும் போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.
தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்க வேண்டும்.
இவைகள் எல்லாருக்குமே நல்லதுதானே!
இயேசு இவைகளைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார்.
அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ... அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன் படி வாழ்வது நமக்கு நல்லதுதானே!

No comments:

Post a Comment