28 February, 2010

BE STILL… I AM GOD! அமைதி கொள். நானே கடவுள் என உணர்ந்து கொள்.




Have you heard thunderclaps lasting for more than five minutes? I have. For two to three hours. These thunderclaps were not from the clouds. They were from the waterfalls. Yes, two gigantic waterfalls created a noise that was more powerful than the sound of thunderclaps. I am talking of the Niagara Falls. When I reached that place, I could feel the ground reverberate a clear 200 meters away from the falls. As I approached the spot, my heart was pounding. I have heard the word – breathtaking. That day I understood its meaning. The sight of the Niagara took my breath away. I stood there speechless, teary-eyed.

Here are some interesting facts about the Niagara from:
http://www.niagarafallslive.com/facts_about_niagara_falls.htm
There are THREE FALLS – the American Falls, the Bridal Veil Falls and the Canadian/Horseshoe Falls
American Falls & Bridal Veil Falls
length of brink: 1060 feet
height: 176 feet (due to rocks at the base actual fall is 70 feet)
volume of water: 150,000 U.S. Gallons per second
Canadian "Horseshoe" Falls
length of brink: 2600 feet
height: 167 feet
volume of water: 600,000 U.S. gallons per second
One fifth of all the fresh water in the world lies in the four Upper Great Lakes-Michigan, Huron,
Superior and Erie. All the outflow empties into the Niagara river and eventually cascades over
the falls.

My first thoughts were on the fresh water that flows through, or, rather, thunders down the two falls – a combined 750,000 gallons or 2,850,000 litres of FRESH WATER in ONE SECOND! To understand these numbers, I would like to think of this in terms of Chennai’s perennial thirst. Chennai, according to a recent estimate has around 4,500,000 people. If you presume that each person requires 6 litres of fresh water to drink per day, Chennai requires 27,000,000 litres per day. This volume flows through the falls in less than TEN SECONDS. If there is some way in which this water can be collected just for ONE HOUR, it will take care of the drinking water requirements of Chennai for ONE WHOLE YEAR!

Please don’t think that I am doing some promo for Niagara or trying to link up Chennai and Niagara. These numbers and the comparative facts stun us. Yes, stun us into silence. That is what happens when one meets something out of this world.
Not only Niagara… there are thousands or such breathtaking facts and figures around the world. A lovely sunset, a lonely flute played in a silent valley, a vast stretch of sweet smelling flowers and their fragrance that fills miles around… If one can take time to see, miracles abound. The common experience of human beings when faced with ‘wonders’ is SILENCE!
Silence is more eloquent than words in all the deep experiences of human life. Imagine the following situation: One of our very close family members is in the ICU fighting for survival. We are standing near the ICU. At that moment, one of our close friends rushes in. He / she comes close to us and hugs us. We can see tears in his / her eyes. No words spoken. Words would probably be out of place there. Without any word, we can understand the love, concern and support of our friend. Silence is more eloquent, surely!

If silence can do such wonders in the human sphere, imagine what it can do when we are dealing with the divine. Most of the contemplatives have experienced great silence in God’s presence. Words become superfluous in God’s presence. The Psalmist tells us this:
Psalm 46: 8-10a.
Come and see the works of the LORD…
He makes wars cease to the ends of the earth; he breaks the bow and shatters the spear, he burns the shields with fire.
“Be still, and know that I am God…”

We are asked to see the works of the Lord and… BE STILL. When we are faced with the marvels God could work, we are asked not to blow the trumpet. We are told: Be still, and know that I am God. I am thinking of many countries where, under the pretext of proclaiming the marvels of God, annoying measures have been taken resulting in violence. When such a manipulation occurs, God and religion become more of a divisive, political weapon than a unifying, peaceful means. If only humanity can learn how to be still in the presence of God!…
This was the lesson learnt by Peter, James and John when they witnessed Jesus’ transfiguration! This event is recorded in all the synoptic gospels. Here is the passage from Luke.

Luke 9: 28-36 (Matt. 17: 14-18; Mark 9: 14-27)
Jesus took Peter, John and James with him and went up onto a mountain to pray. As he was praying, the appearance of his face changed, and his clothes became as bright as a flash of lightning. Two men, Moses and Elijah, appeared in glorious splendor, talking with Jesus. They spoke about his departure, which he was about to bring to fulfillment at Jerusalem. Peter and his companions were very sleepy, but when they became fully awake, they saw his glory and the two men standing with him. As the men were leaving Jesus, Peter said to him, "Master, it is good for us to be here. Let us put up three shelters—one for you, one for Moses and one for Elijah." (He did not know what he was saying.)
While he was speaking, a cloud appeared and enveloped them, and they were afraid as they entered the cloud. A voice came from the cloud, saying, "This is my Son, whom I have chosen; listen to him." When the voice had spoken, they found that Jesus was alone. The disciples kept this to themselves, and told no one at that time what they had seen.

The nearer we are to God, the greater the silence. I wish to suggest that each of us can begin this silence in our personal lives. We can begin with one minute of ‘absolute’ silence in daily life… This silence can slowly be stretched to five, ten minutes. Ten minutes of ‘absolute’ silence daily can be a great source of strength! What is this ‘absolute’ silence? A silence where there is NOTHING - no thought, no word, no wish, no prayer, no petition, just SILENCE! Possible? Worth trying.
Deep experiences of God should take us back to the people. This is what happens in the final part of the Transfiguration event. Peter wanted to prolong the ‘experience’ by erecting tents. God intervened and said, “This is my Son. Listen to him.” An indirect reminder to Peter not to blabber, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

ஒரு முழு ஆறு அருவியாகக் கொட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு முழு ஆறு இரண்டாகப் பிரிந்து, 1,060 அடி அகலமுள்ள ஒரு பகுதி 176 அடி உயரமான ஒரு அருவியாகவும், 2,600 அடி அகலமுள்ள ஆற்றின் மற்றொரு பகுதி ஒரு குதிரை லாடத்தைப் போல் வளைவாக 167 அடி உயரமான ஒரு அருவியாகவும் விழும் அழகை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தேன்.
ஆம் அன்பர்களே, நான் சொல்வது நயாகரா நீர்விழ்ச்சியைப் பற்றி. இந்தியாவின் பல இடங்களில் மணல் ஓடும் ஆறுகளையே பார்த்து பழகிவிட்ட எனக்கு அருவியாகக் கொட்டும் அந்த ஆற்றைப் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்த இரு அருவிகள் வழியாக ஒரு நொடிக்கு 750,000 காலன் அதாவது 28 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர், சுத்தமான, குடிப்பதற்கு உகந்த தண்ணீர் வந்து விழுகின்றது.
இந்த எண்களைப் புரிந்து கொள்ள ஒரு கணக்கு சொல்கிறேன். சென்னையின் தற்போதைய மக்கள் தொகை 45 லட்சம் என்று சொல்லப்படுகிறது. ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான குடி நீர் 6 லிட்டர் என்று கணக்கிட்டால், ஒரு நாளைக்கு சென்னைக்குத் தேவையான குடி நீர் 2 கோடியே 70 லட்சம் லிட்டர். இந்தத் தண்ணீர் அந்த அருவியின் வழியே பத்து நொடிகளில் கீழே விழுகிறது. ஒரு மணி நேரம் அங்கு விழும் தண்ணீரை மட்டும் சேகரித்தால், சென்னைக்குத் தேவையான குடிநீர் ஒரு வருடத்திற்கு வரும். (The population of Chennai, India is 4328063 according to the GeoNames geographical database. The data for this record was last updated 2009-03-17.)

அன்பு நெஞ்சங்களே, நயாகராவைப் பற்றிய சுற்றுலா விவரங்களை நான் தருவதாக எண்ண வேண்டாம். அந்த அற்புத காட்சி இத்தனை ஆண்டுகள் ஆகியும் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டதால் உங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். நயாகரா போன்ற இயற்கை அற்புதங்கள் உலகில் பல ஆயிரம் உள்ளன. அவைகளில் சிலவற்றை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதுவரை படங்களில் பார்த்து ரசித்த அந்த பிரம்மாண்டமான அருவியை அன்று நேரில் பார்த்தபோது, எனக்கு என்ன நடந்தது என்பது தான் இன்றைய ஞாயிறு சிந்தனைக்குத் தேவை. நயாகராவைப் பார்த்த நான் பிரமிப்பில், வியப்பில் பேச முடியாமல் உறைந்து போனேன். கண்களில் லேசாக கண்ணீர்.
அழகிய ஓர் உதயம், பனியும் மேகமும் உறங்கும் மலை முகடுகள், பனித்துளியைத் தாங்கி, சூரிய ஒளியில் வைரமாய் மின்னும் மலர்கள், கள்ளமில்லா குழந்தையின் சிரிப்பு, நிசப்தமான ஒரு சமவெளியில் தூரத்தே ஒலிக்கும் அழகிய புல்லாங்குழல் இசை, காற்றில் கலந்து வரும் மலர்களின் மணம்... அன்புள்ளங்களே, வாழ்வில் இப்படி நாம் சந்திக்கும் அற்புதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரம்மாண்டமாக வந்தாலும் சரி, மென்மையாக வந்தாலும் சரி இந்த அனுபவங்களுக்கு நம்மில் பலர் தரும் ஒரே பதில் மௌனம். “இயற்கையின் மொழிகள் புரிந்து விடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை” என்று நான் கேட்ட ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது.
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் மனிதரின் மொழிகள் கொண்டு பேச முடியாமல் தவித்த நேரங்கள் பல உண்டு.
வேதனையில் உள்ளம் உறைந்து போகும் போது...
கோபத்தின் எல்லையைக் கடக்கும் போது...
மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடும் போது...
இப்படி உணர்ச்சிகளின் உச்சத்தை நாம் தொடும் போதெல்லாம், பேச்சிழப்போம், கண்ணீர் விடுவோம்.
இந்த அனுபவம் பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற இயேசுவின் சீடர்கள் மூவருக்கும் ஒரு நாள் ஏற்பட்டது. இயேசு உருமாறியதைக் கண்ட இந்த சீடர்கள் பேச்சிழந்தனர். மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று நற்செய்திகளிலும் இந்த நிகழ்ச்சி கொடுக்கப் பட்டுள்ளது. இன்று நாம் லூக்கா நற்செய்தியிலிருந்து இந்த நிகழ்வை கேட்போம்.
(லூக்கா 9: 28-36; மத். 17: 1-8; மாற். 9: 2-8)

சில மாதங்களுக்கு முன் இயேசு உருமாறிய நிகழ்ச்சியை விவிலியத் தேடலில் சிந்தித்தோம். அன்று நம் சிந்தனைகளெல்லாம் இயேசுவைப் பற்றி, உருமாற்றத்தைப் பற்றி அதிகம் இருந்தன. இன்று அந்த உருமாற்றம் சீடர்களிடம் உருவாக்கிய மாற்றங்களை சிந்திப்போம். இயேசு உருமாறியதைக் கண்ட சீடர்கள், பேச்சிழந்தனர், பயந்தனர், பின்னர் அவர்களுள் பேதுரு மட்டும் என்ன பேசுகிறோம் என்பதை உணராது எதையோ பேசினார்.
பேச்சு, அல்லது மொழி பெரும்பாலும் அறிவு சார்ந்த ஒரு செயல். எழுகிற எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கிறோம். நம் எண்ணங்கள் எல்லாவற்றையும் வார்த்தைகளாக வடிக்க முடியாது, அதேபோல் நம் எண்ணங்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நம்மால் பேச முடியாது. இவை நமக்குத் தெரிந்த தகவல்கள் தாம்.
எண்ணங்களின் வேகத்திற்கே ஈடுகொடுக்க முடியாத வார்த்தைகள், உணர்வுகள் என்று வரும் போது இன்னும் ஊமையாகி விடுகின்றன. நம் உணர்வுகளுக்கு ஓரளவே வார்த்தை வடிவம் கொடுக்க முடியும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சொற்களைத் தாண்டிய, சொற்களில் அடங்காத, சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகள் எழும்போது... அந்த உணர்வுகள் மனதை நிறைக்கும் போது, சொற்கள் விடை பெற்று போய்விடும், அவற்றைத் தேடித் போவது வீண் முயற்சி.

ஒரு உதாரணம் சொல்கிறேன்... நமக்கு நெருங்கிய ஒருவர் அதிக நோயுற்று கவலைக்கிடமாய் மருத்துவமனையில் இருக்கிறார். நாம் அந்த மருத்துவமனையின் ICUவுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். நம் மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்போது அங்கு வந்து சேரும் நம் நெருங்கிய நண்பர் ஒருவர் நம் அருகில் வந்து நம் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார். அல்லது ஆறுதலாய் நம்மை அணைக்கிறார். அவர் கண்களில் லேசாக கண்ணீர். ஒரு வார்த்தையும் பரிமாறப் படவில்லை. வார்த்தைகள் தேவையில்லை. நம் நண்பரின் அன்பு, பரிவு, ஆதரவு... எல்லாவற்றையும் அந்த மௌனத்தில் நாம் உணர்வோம். அப்படிப்பட்ட நேரங்களில் வார்த்தைகள் பேசப்படுவது கூட சரியான முறையாக இருக்காது. “இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை” அந்தத் திரைப்படப் பாடலின் அடுத்த வரிகள் இவை.
உணர்வுகளின் உச்சங்கள், பெருமலையின் சிகரங்கள் போன்றவை. உயர்ந்ததொரு மலையின் உச்சியில் நிற்கும் போது அங்கு நிசப்தம் தான் தெளிவாகக் கேட்கும். அதேபோல் உணர்வுகளின் உச்சங்களிலும் அமைதி, நிசப்தம் அதிகம் இருக்கும். வாழ்க்கையின் பெரும் பகுதிகளுக்கு, அதுவும் ஆழமான பகுதிகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனமே அழகு. வாழ்வின் எதார்த்தம், உண்மை இதுதான், அன்பர்களே. இத்தனை வார்த்தைகளைக் கொட்டி இந்த உண்மையை விளக்குகிறேன் என்று என்னை நினைத்து நானே பரிதாபப்படுகிறேன்.

மனித உறவுகள், அதில் எழும் உணர்வுகள் இவைகளுக்கே வார்த்தைகள் தேவையில்லை என்றாகும் போது, இறைவனைக் காணும் போது, இறைவனை உள்ளூர உணரும் போது வார்த்தைகளைத் தேடுவது வீணான முயற்சி. ஆழ்நிலை தியானங்களில் அதிகம் தேர்ந்தவர்கள் சொல்வது இதுவே. திருப்பாடலில் இந்த அறிவுரை அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. திருப்பாடல் 46ல் ஒரு பகுதி இது:

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 46: 8-10
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்: வில்லை ஒடிக்கின்றார்: ஈட்டியை முறிக்கின்றார்: தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.

இறைவனின் செயல்களைக் கண்டதும், நாம் என்ன செய்ய வேண்டும்? நம் பதில் எப்படி இருக்க வேண்டும்? ஆரவாரமாய் அவரது புகழைப் பாடி, எக்காளம் ஒலித்து, ஊரை, உலகத்தைக் கூட்டி கடவுளின் பெருமைகளைப் பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அப்படித் தானே?... இல்லை. மாறாக, திருப்பாடல் ஆசிரியர் சொல்வது இது:
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள். (திருப்பாடல்கள் 46: 10)
ஆங்கிலத்தில் இது இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. Be still, and know that I am God. (Ps. 46:10). அதாவது, ஆடாமல், அசையாமல் இரு. நானே கடவுள் என்று உணர்ந்துகொள்.
எவ்வளவுக்கெவ்வளவு கடவுளை நெருங்குகிறோமோ, அவரை உணர்கிறோமோ, அவரது செயல்களை, பெருமையை உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அமைதி காப்பதே நல்ல பதில். கடவுளை, அவர் செயல்களை மக்கள் உணர வேண்டுமென ஊர்வலங்கள் நடத்தி, ஒலிபெருக்கிகளில் முழங்கி அதனால், உண்டாகும் பல வன்முறைகளைக் கண்டு வரும் நம் நாட்டில் கடவுளை அவரவர் கண்டு அமைதியில் அந்த அனுபவத்தை அசை போட்டால், மக்களிடையே இன்னும் அழகான அமைதி உருவாகும் இல்லையா?
இந்த அமைதி முதலில் நம்மிடமிருந்து ஆரம்பமாக வேண்டும். எண்ணங்களுக்கு அப்பால், வார்த்தைகளுக்கு அப்பால், ஆழ்ந்த நிசப்தத்தை வாழ்வின் ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது உணர்வது எவ்வளவோ நன்மைகள் தரும். ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் என்று ஆரம்பித்து, ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த அமைதியைச் சுவைத்துப் பாருங்கள். முயன்று பாருங்கள்.

கடவுள் அனுபவம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், நானும் கடவுளும் என்று அந்த அனுபவத்தைத் தனிச் சொத்தாக்குவதில் அர்த்தமில்லை என்பதை இயேசு உருமாறிய இந்த நிகழ்வின் கடைசிப் பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது "நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு மேகங்களின் வழி இறைவன் சொன்ன பதில்: "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவி சாயுங்கள்." பேசுவதைக் குறைத்துக் கொண்டு, கேட்க வேண்டும். இறைவார்த்தையைக் கேட்க வேண்டும்.
அந்த இறைவன், இறை மகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார். கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்ல வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம். உருமாறிய கடவுளைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு இறை மகன் இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? அந்த மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.

24 February, 2010

FORGIVING = BREATHING மன்னிப்பது, சுவாசிப்பதைப் போல்…






Ahmad Khatib


Palestinian Ismael Khatib with Samah Gadban, a Druze girl in Israel who received a heart from Khatib's son after he was killed by Israeli soldiers in 2005.

Lenten Season is a good time to reflect on the seven statements of Jesus on the Cross. Each of these statements is a treasure trove. It is impossible to comprehend these statements completely or give adequate explanations for all of them.
One of these statements is: “Father forgive them, for they know not what they do.” (Luke 23:34) This statement is given only in Luke and nowhere else. There is usually a footnote attached to this statement: “Some early manuscripts do not have this sentence.” Did Jesus really say this? In all probability, YES, an emphatic YES. Only a person like Jesus could have said such a statement under such circumstances.
Forgiveness was the hallmark of the life of Jesus. He spoke about forgiveness whenever possible. He healed the sick by saying: “Go, your sins are forgiven.” – not simply a physical healing but a total salvation. Instead of sitting in judgement over the woman caught in adultery, he sent her away healed and forgiven. (John 8) Most of his parables spoke about forgiveness, the prodigal son being the most famous among them. (Luke 15) All in all, he preached and practised forgiveness all his life. He breathed forgiveness and hence when he was about to stop breathing, he wanted to leave that as his last breath.
It would be hard for us to deal with all that Jesus did and said about forgiveness. We shall focus on just one aspect of forgiveness taught by Jesus. How many times do we forgive someone who errs? Here are two gospel passages that deal with this question.

Luke 17: 3-4
“If your brother sins, rebuke him, and if he repents, forgive him. If he sins against you seven times in a day, and seven times comes back to you and says, ‘I repent,’ forgive him.”
Matthew 18: 21-22
Then Peter came up and said to him, “Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?” Jesus said to him, “I do not say to you seven times, but seventy times seven.”

7, 70, 7x70… Dear Friends, this is not a lesson in numbers. Forgiveness goes beyond numbers and calculations. When Peter asked Jesus whether forgiving seven times would be sufficient enough, Peter would have imagined that Jesus would appreciate him. Forgiving someone seven times was quite a generous gesture for a Jew. But, Jesus tells him to go beyond.

I imagine the conversation between Jesus and Peter in this fashion:
Peter: Lord, how often will my brother sin against me, and I forgive him? As many as seven times?
Jesus: Peter, your question is pretty surprising to me. How often to forgive your brother? It is like asking me, ‘How often should I breathe?’ If you don’t breathe, you die. If you don’t forgive, you die too.

Forgiving = breathing.
Peter must have been stumped. So are we all. To say that forgiving should be as much part of us as breathing seems too contrived, too much of an exaggeration, isn’t it? But, it is surely worth the try.

There are people in the world who have tried this and have lived out forgiveness to the full. I am sure most of us have heard of many instances where people were ready to forgive way beyond expectations. I am reminded of how a father went to the death row to meet the young man who had raped and killed his teenage daughter and later told the media that putting that man to death was surely not a solution and that he would want that man to come out of prison to lead a better life.
I have heard of a documentary “As We Forgive” made by Laura Waters Hinson about the people of Rwanda. Here is the synopsis of the movie:
Over twenty years after one-in-eight Rwandans were senselessly butchered in a horrifying wave of genocide, two young women come face to face with the men who slaughtered their families and attempt to summon the strength to reconcile the past. As the Rwandan court system becomes hopelessly overwhelmed by a massive backlog of court cases related to the 1994 tragedy, over 50,000 genocide perpetrators are forced by the government to return to the very neighborhoods they once vowed to destroy. In a vacuum of justice, the only hope for the survivors who wish to forget about those dark days is reconciliation. But how do you forgive the people who destroyed everything you ever loved? Rather than focusing on the despair that still lingers strong in Africa, director Laura Waters Hinson and narrator Mia Farrow instead focus on the rebirth of Rwanda by tracing the stories of Rosaria and Chantal, two women who are willing to relive the pains of their past if it means that their fellow countrymen can have the opportunity to learn from the mistakes of their past. ~ Jason Buchanan, All Movie Guide.
(http://www.fandango.com/asweforgive_v452061/summary)

In February 2009, inspired by this movie Catherine Claire Larson wrote a book: As We Forgive: Stories of Reconciliation from Rwanda
Here is a review of the book: From Publishers Weekly.
Rwanda—bloodied, scarred and nearly destroyed by the 1994 brutality of the Hutu genocide of Tutsis—is now called an uncharted case study in forgiveness by author Larson, who was inspired by the award-winning film As We Forgive. Individual stories form prototypes: there is Rosaria, left for dead in a pile of bodies, who forgives her sisters killer. And Chantal, whose family is brutally murdered yet who forgives her neighbor for the crimes. Devota, mutilated and left for dead, survives, forgives and eventually adopts several orphans. Each story is horrible and deeply personal as Larson mines the truths of forgiveness deep in each ones tale. Helpful interludes offer readers hands-on ways to facilitate forgiveness and take the next step to reconciliation in their own lives. This isn’t an easy book to read or digest, yet its message is mandatory: Forgiveness can push out the borders of what we believe is possible. Reconciliation can offer us a glimpse of the transfigured world to come.
Copyright © Reed Business Information, a division of Reed Elsevier Inc. All rights reserved.

One of the best incidents of forgiveness and reconciliation comes from Palestine. In November 2005 Ahmad Khatib, a 12 year old boy was killed by the Israeli soldiers who mistook his toy gun for real. His parents Ishmael Khatib and Ablah are simple people and Ishmael is a mechanic. Both the parents decided to do something marvellous. They decided to donate all the organs of Ahmad to the hospital in Israel. Many Palestinians were furious with this decision. When asked about this decision, Ishmael said: “They (Israeli forces) killed my son who was healthy, and we want to give his organs to those who need them. No one can tell me what to do. I feel very good that my son’s organs are helping six Israelis . . . I feel that my son has entered the heart of every Israeli. We are doing it for humane purposes and for the sake of the world’s children and the children of this country. I have taken this decision because I have a message for the world: that the Palestinian people want peace — for everyone.”
His mother, Ablah, said: “We have no problem whether it is an Israeli or a Palestinian (who receives his organs) because it will give them life.” (A victory over death and hate, Nov. 9, 2005 - http://www.timesonline.co.uk/tol/news/world/middle_east)
This gesture of Ishmael is all the more marvellous since he spent time in Israeli jails in the 1980s as a militant who fought against occupation. But now he runs the Ahmed Khatib Center for Peace, a small youth center in the Jenin refugee camp. http://www.arabamericannews.com/

Forgiveness is in the air that we breathe in, provided we learn how to breathe. Is it too much to say that forgiving should be as much part of us as breathing? Not really.

சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதை தான். சமுதாயத்தில் நடக்கும் பல தீமைகளைத் தனி ஆளாய்த் தீர்க்கும் ஹீரோ; அப்படி தீமைகளை ஒழிக்க, தீமைகள் செய்யும் வில்லன்களைத் தீர்த்துக்கட்டும் ஹீரோ இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். நமது நாயகர்கள் அண்மைக் காலங்களில் எதையாவது ஒரு வசனத்தை, ஏதாவது ஒரு செய்கையைத் திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் கைத்தட்டலைப் பெறுவார்கள்.
அதே போல், இந்தத் திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்க முடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை." என்று சொல்வார். இப்படி சொல்லி விட்டு, மன்னிப்பு கேட்ட வில்லனைத் தீர்த்து கட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற பெயரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்று ஒரு சில ஹீரோக்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.
இதற்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி அன்று கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்தி வந்த இயேசு மன்னிப்பு தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், செயல் என்று நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்தரவதை செய்தது போதாதென்று இன்னும் தன்னைச் சுற்றி நின்று கேலி செய்து கொண்டிருந்த அந்த வீரர்களை, அவர்களுக்குப் பின் இருந்து அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களை, மதத் தலைவர்களை... அனைவரையும் மனதார மன்னித்தார். அவர்களை இறைவனும் மன்னித்து, அவர்களைக் காக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' என்று சொன்னார்.

நமது திரைப்பட நாயகர்கள், மிருகங்களாய் மாறிய மனிதரைப் பழி வாங்க, அவர்களும் மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்ற தெய்வமாக மாறினார்.
எந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராகவோ, தெய்வமாகவோ வளர அவரது பிறப்பு, வளர்ப்பு இன்னும் பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் கற்றுக் கொள்ளும் பாடங்கள் இறுதி வரை ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது நமக்குத் தெரிந்த உண்மைகள். இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர் சிறு வயது முதல் ரோமைய அராஜக்கத்தைப் பல வழிகளிலும் பார்த்து வந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு அதைக் கொல்ல வேண்டுமென்று கட்டாயம் இல்லையே. வேறு வழிகள் உள்ளனவே. அவற்றில் மிகவும் உன்னதமான வழி அன்பு வழி. அன்பினால் எதையும் வெல்ல முடியும் என்பதைத் தான் இயேசு தன் வாழ்வில், சிறப்பாக சிலுவை மரணத்தில் நிரூபித்தார்.
சிறு வயது முதல் இந்த அன்பு வழியை அவருக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்து வந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும் இயேசுவை ஓரளவாகிலும் உருவாக்கியிருக்க வேண்டும். மன்னிப்பை குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு அந்த பெற்றோர் ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படி ஒரு அன்புச் சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால் ஒரு பரந்த மனம், பரந்த பார்வை இவற்றைப் பெற முடிந்தது.
பிறந்தது முதல் பல கொடுமைகளுக்கு ஆளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும் கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, சிறப்பாக, அந்தச் சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டுவோம்.

மன்னிப்பைப் பற்றி இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் பேசினார். மன்னிப்பைச் செயலாக்கினார். நோயுற்றோரைக் குணமாக்கிய போது உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கூறி குணம் அளித்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தீர்ப்பிடாமல் மன்னித்து அனுப்பினார். (யோவான் 8) ஊதாரி பிள்ளை போன்ற அற்புதமான கதைகள் வழியே கடவுளின் நிபந்தனை அற்ற அன்பை, அதனால் வரும் மன்னிப்பை அழகாகச் சொன்னார். அன்புள்ளங்களே, இன்று நேரம் கிடைத்தால், தயவு செய்து லூக்கா 15ம் அதிகாரத்தை நிதானமாய் வாசித்துப் பாருங்கள்.
மன்னிப்பைப் பற்றி இயேசு சொன்னவைகளை, செய்தவைகளை எல்லாம் சிந்திக்க பல விவிலியத் தேடல்கள் தேவைப் படும். பின்னர் முயற்சி செய்வோம். இன்று அவர் மன்னிப்பைப் பற்றி கூறிய ஒரு கருத்தை மட்டும் சிந்திப்போம். ஒருவர் தவறு செய்யும் போது, எத்தனை முறை மன்னிப்பது? நமது சிந்தனைக்கு உறுதுணையாக இரு நற்செய்தி வாசகங்களைக் கேட்போம்.

லூக்கா நற்செய்தி 17 3-4
அக்காலத்தில் இயேசு கூறியது: “உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.”

மத்தேயு நற்செய்தி 18 21-22
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”

ஏழு முறை மன்னிக்கலாமா? இது கேள்வி. ஏழு முறை அல்ல, எழுபது தடவை ஏழுமுறை. இது பதில். தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது கணக்குப் பாடம் அல்ல. இங்கு சொல்லப்பட்டுள்ள எண்கள் கணக்கைத் தாண்டியவை. யூதர்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ள எண்கள். 7,12,40... இப்படி. இதில் ஏழு என்பது ஒரு நிறைவான எண். எனவே, பேதுரு ஏழு முறை மன்னிக்கலாமா? என்ற இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏதோ பெரிய ஒரு சாதனையைப் பற்றி தான் பெசிவிட்டதைப் போன்று அவர் எண்ணியிருக்கலாம். இயேசு, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கச் சொன்னார். அதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னார்.
இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்து விடும். அதே போல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்து விடும்.” இப்படி சொல்வதற்கு பதில், இயேசு "எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியது போல் கோடிக் கணக்கில் மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். மனித வரலாற்றில் புனிதர்கள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் மன்னிப்பிற்கு அற்புதமான சாட்சி பகர்ந்திருக்கிறார்கள்.
அண்மைக் காலங்களில் நான் கேட்டவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்ட ஒரு செய்தி இது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரமதான் பண்டிகை காலத்தில், Ahmad Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் இஸ்ராயேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த வீரர்கள் Ahmad ஐச் சுட்டனர்.
வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அந்தச் சிறுவனை இஸ்ராயேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmad ஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவனது தந்தையும், தாயும் Ahmadன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ராயேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ராயேல் படை என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது மன்னிப்பின் உச்சக்கட்டம்.
Ishmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். Ishamael சாதாரண ஒரு மெக்கானிக். அந்தப் பெற்றோரின் இந்த செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, Ishmael சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ராயேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்." அந்தப் பெற்றோரை இஸ்ராயேல், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாத குழுக்களும் பாராட்டின. அரசுகளும், தீவிரவாத குழுக்களும் கொண்டு வர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய இஸ்ராயேல் ஒப்புரவை ஒரு எளிய மெக்கானிக் குடும்பம் ஒரு சிறிய அளவில் கொண்டு வந்தது மறுக்க முடியாத உண்மை.
இது போன்ற ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இனியும் நடக்கும். நம் வாழ்விலும் மன்னிப்பை தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றைச் சிந்திப்போம். அவ்வப்போது நடந்து வரும் இந்த அற்புதங்களை தினம் தினம் நடத்தினால், ஒவ்வொரு நொடியும் நடத்தினால், மன்னிப்பு மழையில் இந்த உலகம் நனைந்தால்... மன்னிப்பது சுவாசிப்பதைப் போல் நம் ஒவ்வொருவருக்கும் நம் இயல்பாகவே மாறிவிட்டால்... அழகான கனவுகள் என்று சொல்லவேண்டாம். நாம் நினைத்தால் இந்தக் கனவுகளை நனவாக்க முடியும். இறை அருளை வேண்டுவோம்.

21 February, 2010

TEMPTATIONS… ALL AROUND US. சோதனை மேல் சோதனை


Every First Sunday in Lent is assigned to temptation. Assigned to? Well, devoted to temptation. Devoted to? Hmm… Whichever way you say this, it jars. Right? That is what temptation does to us. It makes us feel uncomfortable. Yet it is an essential part of human life. No one escapes temptation. Not even Jesus. Today’s Gospel talks about this. How do we see temptation and the tempter… call him / her satan, devil, the evil one, whatever?
Last year when I was discussing this topic with a friend of mine, the moment he saw the theme temptation, he broke into an old Tamil film song that talked of the hero being beset with problems. (Sothanai mel sothanai podhumadaa saami) Lord, enough of this wave after wave of temptations and tribulations, he cries! One can easily feel the sense of desperation that runs through that song.
For people who believe strongly in fate, temptations are seen as predestined plan to attack us for no reason at all. Temptations are like the flash floods that carry us alive. When we begin to imagine temptations in such a way, we seem to give undue power to temptations. We know that temptations are powerful. But, are we simply puppets in the hands of the tempter? To attribute so much power to temptations and the evil forces that manufacture these temptations leave us with lot of negativity in life.
The present generation suffers from what I would like to call ‘negative-syndrome’. Part of this ‘negative syndrome’ comes out of our media which revels in highlighting disasters, destruction, scandals and more tragedies. Why do the media indulge in these? Nothing sells like tragedy and disaster. That is why.
We know that the world is a mixed bag of the good and the bad. For every disaster that happens, there is always a blessing that happens too. In the recent earthquake that devastated Haiti, there were many distressing facts and figures. There were equally, if not more, uplifting events. The media was more interested in reporting the negatives more than the positives. Since we hear and see such negative news day after day, we tend to give up on the world very quickly. This is the most dangerous temptation our present generation faces! The temptation of believing that there are far too many evil forces around us and that we can do nothing about them.
We can surely learn a lesson or two… or perhaps, three from the three temptations that Jesus faced. Here is Luke’s account of the temptations of Jesus.

Luke 4:1-13 (New International Version - UK)
Jesus, full of the Holy Spirit, left the Jordan and was led by the Spirit into the wilderness, where for forty days he was tempted by the devil. He ate nothing during those days, and at the end of them he was hungry.
The devil said to him, "If you are the Son of God, tell this stone to become bread."
Jesus answered, "It is written: 'People do not live on bread alone.'"
The devil led him up to a high place and showed him in an instant all the kingdoms of the world. And he said to him, "I will give you all their authority and splendor; it has been given to me, and I can give it to anyone I want to. If you worship me, it will all be yours."
Jesus answered, "It is written: 'Worship the Lord your God and serve him only.' [c]"
The devil led him to Jerusalem and had him stand on the highest point of the temple. "If you are the Son of God," he said, "throw yourself down from here. For it is written:
" 'He will command his angels concerning you to guard you carefully;
they will lift you up in their hands, so that you will not strike your foot against a stone.'"
Jesus answered, "It is said: 'Do not put the Lord your God to the test.'"
When the devil had finished all this tempting, he left him until an opportune time.

The devil did not tempt Jesus with anything bad. All the suggestions were harmless, innocent, and attractive. This is the first lesson we learn from temptations… that almost all temptations are good and attractive! The devil, almost all the time, comes clothed in light. The second lesson? That temptations or the devil come at the most opportune moment. Jesus was hungry. He needed to eat something. Needs and wants are the seedbed for temptations… more in the case of wants than needs.
The devil tries to hook Jesus with a challenge… “If you are the Son of God…” I am reminded of how children goad one another into bravery or bravado. “Hey, if you are brave enough, climb this tree, do this or do that…” Such a challenge implies that if someone does not take up the challenge, he/she is a coward. The definition of bravery is in climbing the tree. Such bravado usually leaves our kids with a few bruises, or broken bones!
The devil tries to tell Jesus what it means to be a Son of God… Turn these stones into bread. What for? If the devil had at least suggested that Jesus could satisfy his hunger with the bread, there would be some meaning in turning stones into bread. But, both the gospel accounts of Luke and Matthew mention that the devil wanted the stones to be turned into bread. Period. This is simple magic, simple exhibition of power. The devil seems to say that such a magic would prove or establish Jesus as the Son of God. The devil was trying to give Jesus a job description of the Son of God. Jesus did not want to fit into this definition as prescribed by the devil. Jesus who did not want to use his power to satisfy his personal need of hunger, would use the same power later on to feed thousands. Power is not to be used to enhance one’s own needs and wants.

The second temptation was too good to be true. The devil was offering the whole world on a platter. After all, Jesus came as a human being just to win over the world. Now, it was offered on a platter. Of course, there were strings attached to this offer. Jesus needed to make compromises, a simple surrender to the devil. Jesus, who refused this offer, would later on surrender to God the Father while on the cross. Through that surrender, he would win the world. Compromises and the resultant corruption seem to have seeped into all the spheres of human life today. Compromise seems to be the rule rather than the exception.

The third temptation of Jesus would have thrilled any one of us living today. We live in an ‘instant’ world. We need quick results. Instead of spending 30 years of seclusion in Nazareth, 3 years of hard public life, 3 days of hunger and brutal treatment, and the final 3 hours of excruciating torture on the cross, all Jesus needed to do was to jump down from the pinnacle of the Jerusalem temple. The whole world would be at his feet. The moment he jumped, heavens would have opened; myriads of angels would have come to carry him down to the ground in one of the most spectacular special-effects-scene. The whole of Jerusalem, nay, the whole world would have witnessed who the Messiah was. One moment of brilliance, instant success. What else one could ask for? Thank God, Jesus was not an ‘instant’ person. He chose the 30+3+3+3 path!

'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare). Jesus was tempted, but did not fall. The famous ‘Our Father’ has the petition: Lead us not into temptation. The translation of this petition in Tamil is closer to what Shakespeare is talking about. It says, “Do not make us fall in temptation.” ‘Being tempted’ happens to all of us; but ‘falling’ is our personal choice. Let us pray that the Lord gives us enough backbone to stand erect and not fall.


ஒவ்வொரு ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் ஒரு வசந்த காலம், புத்துயிர் தரும் காலம், நம்மைப் புதுப்பிக்கும் காலம் என்று தவக்காலத்தைப் பற்றி கொஞ்சம் வித்தியாசமாக சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இன்று சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், ஓடிவிடவேண்டும் போல் எனக்குத் தோன்றும். அவ்வளவு பயம். சோதனை ஒரு எதிரிபோலவும், என்னைத் தாக்குவதற்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு மிருகம் போலவும் என் கற்பனையில் பல உருவங்கள் உலா வருவதால் இந்த பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம் என்பது முதலில் நாம் உணர வேண்டிய உண்மை என விளங்கும். சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை. இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் நமக்கு நல்ல பாடங்கள்.

சென்ற ஆண்டு தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரை பற்றி இன்னொரு குருவோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழைய திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி." என்ற பாடல். இந்தப் பாடலைப் பாடும் படத்தின் நாயகனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள், தீர்க்க முடியாதது போல் தோன்றும் பிரச்சனைகள். எனவே, விரக்தியில், சோகத்தில் இந்தப் பாடல் பாடப்படும்.
சில சமயங்களில் திரைப்படங்களில் காட்டப்படும் சூழ்நிலைகளைத் தாண்டி சில திரைப்பட பாடல்களை நாம் அடிக்கடி கேட்டு வருவதால், அந்தப் பாடல்கள் கூறும் சொற்கள் நம் நினிவுகளில் ஆழமாய் பதிந்து விடும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள், ஒரு வேளை என் நண்பரைப் போல் சில சூழ்நிலைகளில் இந்தப் பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும் போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத் தன்மை மனதை ஆக்ரமிக்கும்.

நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம் எனவே நம்மால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்பன போன்ற எண்ணங்களை, உணர்வுகளை பல சமயங்களில் நாம் உணர்ந்திருக்கிறோம். தலைவிதி, தலை எழுத்து என்ற எண்ணங்களில் ஊறிப் போயிருக்கும் இந்திய மனங்கள் சோதனைகளைப் பார்க்கும் கண்ணோட்டம் என்ன? நம்மால் சமாளிக்க முடியாத ஒரு பெரும் படையைச் சந்திப்பது போலவும், தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போலவும் நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படி சோதனைகளைப் பற்றிய எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஒரு அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். இது ஒரு ஆபத்தான எண்ணம்.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதை நாம் நம்ப வேண்டும். நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளர வேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள் வெறும் கற்பனைக் கதைகளா? கட்டுக் கதைகளா? அல்லது நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா?

சோதனைகளுக்கு, அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்து தொடர்புச் சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. இதே எண்ணத்தை உறுதிப்படுத்தும் திரைப்படப் பாடல்கள், அதுவும் அடிக்கடி கேட்கப்படும் பாடல் வரிகள் ஆழ் மனதில் இடம் பிடித்து விடுகின்றன. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று சொல்ல வைத்து விடுகின்றன. இப்படி ஓர் இயலாத் தன்மை நமக்கு ஊட்டப்படும் போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை, ஒரு மாயை நம்மில் வளர்வது பெரும் சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

இயேசு சோதனைகளைச் சந்தித்தது, அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கும்.
லூக்கா நற்செய்தி 4 1-13
அக்காலத்தில், இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், “இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே” என்றார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

சிறு வயதில் இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில் சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, பயங்கரமாய் சிரித்துக் கொண்டு வரும். பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், ஆர்வமாய் நம்மை கவருகின்றன என்பதுதான் உண்மை. சோதனைகள், சாத்தான்கள் அவ்வளவு அழகானவை. இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும் போதுதானே, அவற்றை எப்படியாகிலும் நிறைவேற்றும் சோதனைகளும் கூடவே வரும்?
சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள். "நீர் இறைமகன் என்றால், இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்." சிறுவர்கள் விளையாடும் போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தால்... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அந்தச் சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்கு பயந்து வீர சாகசங்கள் செய்து அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.
இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். "நீர் இறை மகன் என்றால்..." என்று சொல்லும்போது, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இறைமகன் என்பதை நிரூபிக்க, நிலை நாட்ட, புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுய நலத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதுமை செய்ய வேண்டும்.
தன் சக்தியை நிலை நாட்ட புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்க முடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுய நலனுக்கு, சுய தேவைக்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.
இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலும் அழகானது. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்ற இணைச் சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை. 8:3)
தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகள் திறமைகள் எதற்கு? சுய தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம், இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும். சாத்தானோடு சமரசம்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்ட வட்டமாக மறுத்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும்... இப்படி நடப்பதற்கு காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும்... நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

மூன்றாவது சோதனை? இறைமகன் உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். உடனே, வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையை தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஒரு ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.
30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் படும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் தேவையில்லை. ஒரு நொடிப் பொழுது போதும். ஒரு எருசலேம் தேவாலய சாகசம் போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானைக் கடினமாக விரட்டி அடிக்கிறார்.

மூன்றாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. சென்ற இரு சோதனைகளிலும் சாத்தான் வெறும் ஆலோசனைகள் சொல்ல, சாத்தானின் வாயடைக்க இயேசு இறை வாக்குகளைப் பயன்படுத்துகிறார். மூன்றாவது சோதனையில் அலகை இறை வார்த்தையைப் பயன்படுத்தி ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "Even the devil can quote the Bible" என்ற பழமொழி உண்டு. வேதங்கள், வேத நூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஒரு உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதி மன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி. 'Tis one thing to be tempted, another thing to fall' (William Shakespeare) சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் வரிகள். இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளை சந்திக்கும் போது, அந்த இறைமகன் சொல்லித் தந்த அற்புத செபத்தின் வரிகளை நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்."

Rising from the ashes… சாம்பலிலிருந்து மீண்டும்...














We have begun the Lenten Season. When I was browsing through the internet to figure out my message for Lent, I came across the idea that the word Lent comes from the Anglo Saxon word ‘Lencten’ which means Spring. Spring and Lenten Season… seemed like a good combination.
Usually, when we think of Lent, the symbols of ash and sackcloth dominate our imagination. The ideas of fasting and penance with a tinge of guilt feelings creep in. For a change, it might be better to think of this Lenten Season in terms of Spring, Phoenix and Ash.
Spring: I have experienced something like a winter for the first time in my life in Rome. Winter in Rome pales in comparison to winter elsewhere in Europe or the U.S. Still, for me coming from South India, this was a different winter! It is a season that makes one stay indoors mostly. Since this season is preceded by the Fall season, trees and plants are pretty barren, devoid of leaves. These trees and plants almost wear a dead look under the snow. But, life does not give up. Under the heavy cover of snow life begins to germinate. Come Spring… life will be in full blossom. Lenten Season is an invitation to revive, to renew life like the Spring.
Phoenix: This legendary bird is surely an excellent symbol for the season of Lent. Here is what Wikipedia says about this bird: A phoenix is a mythical bird with a colorful plumage and a tail of gold and scarlet (or purple, blue, and green according to some legends). It has a 500 to 1,000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg arises, reborn anew to live again. The new phoenix is destined to live as long as its old self…
http://en.wikipedia.org/wiki/Phoenix_(mythology)
Ash: We are so accustomed to seeing fire as a source of destruction. We forget that fire can be life-infusing. We know the clichéd phrase ‘gold in the furnace’. Many wonders like the rebirth of the phoenix and purification of gold are still possible from fire. Our idea of ash is also loaded with destruction. But we know that ash is used as manure and ash is used in cleansing metal surfaces.
We have begun the Lenten Season with Ash Wednesday… a good beginning indeed. Let us rise up from ash like the phoenix, get purified like gold and enjoy the spring called the Lent.

Picture Sources:


http://unexpressedemotions.files.wordpress.com/2008/07/phoenix-bird6.jpg
அன்புள்ளங்களே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக புதுமைகளைப் பற்றி பல சிந்தனைகளைப் பகிர்ந்து வந்தோம். இயேசு ஆற்றிய புதுமைகள் என்று மட்டும் பார்க்காமல், இயேசு உருமாறியது, சக்கேயு உருமாற்றம் பெற்றது, திருமுழுக்கு யோவான் பிறப்பு, கீழ்த்திசை ஞானிகளின் பயணம் என்று இன்னும் பல நற்செய்தி நிகழ்ச்சிகளைப் புதுமைகளாகச் சிந்தித்தோம். புதுமைகளைத் தொடர்ந்து சிந்திக்க நமக்குக் கிடைத்துள்ள அருமையான ஒரு வாய்ப்பு இந்த தவக்காலம். அன்பு நெஞ்சங்களே, இந்த தவக்காலம் முழுவதையுமே ஒரு புதுமையாக, புதுமைகள் நிகழும் ஒரு காலமாகச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
தவக்காலத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் என்ன? சென்ற நவம்பர் மாதம் திருவருகைக் காலத்தை நாம் ஆரம்பித்த போது, ஒரு எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். திருவருகைக் காலம் எதிபார்க்கும் காலம். எதை எதிர்பாக்கிறோம் என்பதைப் பொறுத்து, திருவருகைக் காலம் மகிழ்வான, நம்பிக்கை வளர்க்கும் காலமாய் இருக்குமா அல்லது துயரமான, நம்பிக்கையை வேரறுக்கும் காலமாக இருக்குமா என்று முடிவு செய்யலாம் என்பதை ஓர் உதாரணத்தோடு சிந்தித்தோம். அயல் நாட்டில் வேலைசெய்யும் தந்தை கிறிஸ்மஸ் விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறார் என்றால் அவர் வரவுக்காக ஆனந்தமான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், அதே தந்தை வேலையை விட்டு விலக்கப்பட்டு வீடு திரும்புகிறார், அல்லது அங்கு நடந்த ஒரு விபத்தில் உடல் ஊனமுற்று திரும்புகிறார் என்றால்... நம் மனநிலையில் எவ்வளவு வேறுபாடான உணர்வுகள் இருக்கும்.
திருவருகைக் காலத்தைப் போலவே, தவக்காலத்தையும் பல கோணங்களில் நாம் பார்க்கலாம். தவக்காலத்தைப் பற்றிய வரலாற்றுத் தெளிவு பெற இந்த விவிலியத் தேடலில் முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lencten என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம் தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஒரு அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

பொதுவாக, தவக்காலம் என்றதும் சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று வருத்தத்தில் ஆழ்த்தும் அடையாளங்கள் மனதை நிரப்பும். சோகம், துயரம், மன வருத்தம், ஒருவகை குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.
தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? தவக்காலத்திற்கு Phoenix பறவை எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்க வேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் காலம். இந்தக் குளிர் காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, இந்த இரு காலங்களிலும் மரங்கள் செடிகள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும். பனியில் உறைந்து போன தாவர உயிரினங்களைப் பார்க்கும் போது, இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் தான் மேலோங்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனி விலகியதும் அந்தத் துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்து வரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம்.
Phoenix பறவையும் அப்படியே. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை அந்த வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும் போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளி வரும். இந்தப் பறவை, இந்தக் கதை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கி விட்டு சிந்தித்தால், கற்பனையில் பார்க்க அழகான ஒரு காட்சி இது. நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை. நெருப்பை அழிக்கும் கருவியாகப் பார்த்து பழகி விட்ட நமக்கு, பல சமயங்களில் இந்த நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் மறந்து போக வாய்ப்புண்டு.
தீயில் இடப்படும் பொன் இன்னும் கூடுதலாக மின்னுவதைப் போல், தன்னையே தீயிட்டு கொளுத்திக்கொள்ளும் Phoenix மறுபிறவி எடுத்து வருவது போல் இந்த தவக்காலம், அங்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மையும் புதுபிறப்பாக மாற்ற வேண்டும். நம்மையும் புடமிட்டு மெருகேற்ற வேண்டும். தவக் காலத்தை திருநீற்று புதன், அல்லது சாம்பல் புதனோடு நாம் ஆரம்பிக்கிறோம். சாம்பலையும் நாம் அடிக்கடி அழிவின் அடையாளமாகவே பார்க்கிறோம். சாம்பல் உயிர் வளர்க்கும் உரமாக பயன்படுவதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். பொன்னைப் புடமிட நெருப்பு பயன்படுவது போல், இன்னும் பல உலோகங்களை சுத்தமாக்க சாம்பலும் பயன்படுகிறது இல்லையா? நெருப்பு, சாம்பல், Phoenix பறவை, வசந்தம் என்ற எண்ணங்களோடு நம் தவக்கால முயற்சிகள் ஆரம்பமாகட்டும்.

எந்த ஒரு முயற்சியுமே நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். சீனாவின் பீஜிங்கில் 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் என்ற தடகள வீரர் பெற்ற தங்கப் பதக்கங்களின் செய்திகளையும், நீச்சல் போட்டிகளில் Michael Phelpsன் உலக சாதனைகளையும் பார்த்தோம், கேட்டோம். போட்டிகளின் போது கிடைக்கும் புகழ், ஆரவாரம் இவைகளின் பின்னணியில் அந்த வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள்... பல ஆண்டுகளாய் நடந்த கடினமான முயற்சி, பயிற்சி இவைகள் கண்ணுக்குத் தெரியாத கடும்தவங்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
உடல் பயிற்சி முயற்சி போலவே, தவ முயற்சிகளும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவைகளே. இறைவனை நேரில் காண்பதற்கு, அல்லது அவரது சிறப்பான அருள் ஒன்றைப் பெறுவதற்கு கடுமையான தவ முயற்சிகளை மேற்கொண்ட ஞானிகளைப் பற்றி நம் இந்திய பாரம்பரியத்தில் பல கதைகள் உண்டு. பந்தயத்திற்கான பயிற்சிகளையும், நற்செய்தியை அறிவிக்க தேவையான தன்னடக்கம், தவ முயற்சிகளையும் இணைத்து பவுல் அடியார் கூறும் அழகான வரிகள் இவை:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9: 24-27
பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும் பரிசு பெறுபவர் ஒருவரே... பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம். நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன். பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்.
திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4: 7-8
நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்: நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

கடந்த ஞாயிறு கானடாவின் Vancouverல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி யிருக்கும் இந்த நேரத்தில் பந்தய வீரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், நம் தவ முயற்சிகளையும் இணைத்து சிந்திப்பது நல்லது. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, அறிவு ரீதியாகவோ, பயிற்சிகள், முயற்சிகள் இருந்தால் நல்ல பலனும் உண்டு.
உடல், மனம், அறிவு இவை ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த, மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் வழிமுறைகள் உண்டு. தவக்கால முயற்சிகளுக்கும் நல்ல வழிமுறைகள் உண்டு. நாம் இந்த ஏழு வாரங்களிலும் இந்த வழி முறைகளைக் கற்றுக்கொள்ள கல்வாரி போகலாம். அங்கு சிலுவையில் தொங்கிய படி தன் போதனைகளை நடத்திய இறைமகன் இயேசுவின் காலடியில் அமர்ந்து தவக்கால பாடங்களைப் பயில ஆரம்பிப்போம்.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களை நம் தவக்காலத்தின் ஏழு வாரங்களுக்கான பாடங்களாக எடுத்துக் கொள்வோம். இந்த வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்களை சொன்ன அந்தச் சூழலைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். எந்த ஒரு மனிதனும் சாகப்போகும் நேரத்தில் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில் அவர் சொல்வது மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப் படுகிறார் என்று தெரிந்தால், அந்த நேரத்தில் தன் வேதனையையும் பொறுத்துக் கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள் இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில் அந்த சிலுவையில் இந்த தவக்காலத்திற்கான நம் பாடங்களைச் சொல்லித் தருகிறார்.
இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். ரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக அவர்கள் கண்டுபிடித்தது சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருப்பதால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு அந்த இரு ஆணிகளில் அறைந்த கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரண ஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே அவர்கள் மீண்டும் மேலே எழுந்து வர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளி வரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்."
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு. மன்னிப்பு பெறுவது, மன்னிப்பு வழங்குவது. இந்த கருத்துக்களை வரும் விவிலியத் தேடலில் சிந்திப்போம். நாம் ஆரம்பித்துள்ள இந்த தவக்காலம் புதுமைகளால், புதிய வாழ்வளிக்கும் வசந்தத்தால் நம்மை நிறைக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் வேண்டிக்கொள்வோம்.




14 February, 2010

VALENTINE Hijacked… இடம் மாறும் மையமும் ஓரங்களும்...

The Sermon on the Mount, especially the Beatitudes given for this Sunday lend themselves to good reflections, but I wish to spend time reflecting on February 14th - Valentine’s Day. Valentine (or St Valentine) may not be a historical figure. But, the legend around him is quite interesting. I am not sure how many of you know the stories about Valentine. I have read them for the first time. Let me share them with you.
The Roman festival of Lupercalia in February began a festival of love. In the third century, Claudius II was the emperor of Rome and was keen on having soldiers who were single rather than married men. To realise his ideal army, he banned love and marriage from his empire. Valentine, a priest, defied the emperor’s edict and got couples married in secret. When the emperor learnt of this, he imprisoned Valentine, tortured him and, finally, beheaded him on February 14th around the year 270.
While Valentine was in prison, he cured the blind daughter of the jailor. On the day of his execution, he wrote a note to this girl in which he used the famous phrase: “From your Valentine” While Valentine was in prison, the couples who were united in marriage by him, would come with flowers to meet him, or, would send him flowers as a token of their love for him.
When I read these stories about Valentine, the following thoughts crossed my mind:
The business world has simply hijacked this festival to suit its purpose – the purpose of ‘selling love’. Let me explain. Flowers were sent to Valentine when he was in prison. At present, probably no other festival sells so many flowers – especially, red roses – as Valentine’s Day. 189 million stems of roses are sold in the U.S. on Valentine's Day and 1.2 billion throughout the year. (http://wiki.answers.com/)
Here are some more details: According to TheRomantic.com, 110 million Valentine's roses are sold and delivered in a three-day period surrounding February 14th, the vast majority of which are red. Of those 110 million, 73% are purchased by men and only 27% are purchased by women… (http://news.holidash.com/2010/02/09/how-many-roses-are-sold-on-valentines-day/)
There are lot more statistics on how many chocolates, how many cards, and how many gifts – especially, diamond rings – are purchased on this day. All in all, this festival is a great occasion to ‘sell love’.
The parting words scribbled by Valentine to the jailor’s daughter are now the ‘mantra’ of this festival. “From your Valentine” or “To my Valentine”. Almost all the greeting cards printed for this festival end with these words… To make these words sound more ‘authentic’, there is a story that Valentine fell in love with the girl he cured. It is anybody’s guess where this story may have come from. May I have a ‘pinch of salt’, please?

I wish to reflect further on how the business world has hijacked this festival as well as other festivals and made them into profitable business propositions. Those who live in cities can see a shift of locus for our festivals. Earlier a festival was celebrated in one’s family, in a Church, Temple or Mosque, in the village or town square. Nowadays festivals seem to be celebrated in supermarkets, malls, hotels, disco places or holiday resorts… A clear shift from the religious, social worlds to the business world.
The business world has interpreted traditional festivals and has multiplied festivals in the last thirty to forty years. What is more tragic is that the coming generations would not even know which is the core of a festival and which are the fringes. Already I can see this happening – namely, the core becoming the fringe and fringes being brought to the centre.
I would like to share a parable to illustrate the interchange of core and fringes. A man bought a car. The latest TV was given to him as a gift for purchasing the car. The man forgot the car he purchased and took home the TV! What do you think of this man? To put it very politely, he is quite strange!
Another woman was given a rare painting as a gift. The painting came wrapped in a lovely gift-wrap. The lady dumped the painting in the trash, framed the gift-wrap and hung it on the wall. Strange, again… very strange.
All of us are strange. How easy it is for us to interchange core and fringes. The business world, which thrives on fringes has replaced the core of festivals with fringes… more especially for Valentine’s Day.

Whatever be the story of Valentine, it is a story of love conquering hatred. Claudius wanted men to join the army and hence banned love and marriage. No war, no army – even for the holiest of reasons – can be justified. Any attempt to break this chain of hatred is praiseworthy. This was what Valentine did and he did this silently. If Valentine had wished, he could have gathered all the youth of Rome into an army of love and waged a war of love against emperor Claudius. The youth would have easily joined this love force. Dear friends, I would like you to re-read the previous two sentences. I have used terms like ‘army of love’, ‘war of love’ and ‘love force’… terribly mis-matched words! Let me repeat… No war, no army – even for the holiest of reasons – can be justified. Valentine fostered love even though he knew that he was up against an emperor. This is the core of the original Valentine’s Day! Unfortunately, Valentine’s Day, February 14, 2010, is more about roses, cards, gifts, chocolates… etc. etc. Love comes with a price tag! Those who have no money… forget love. Whoever said, “Blessed are the poor…” was terribly mistaken.
Dear friends, I began this reflection talking of the Beatitudes. Kindly read today’s gospel: Luke 6: 20-26. Luke’s version of the list of beatitudes is special since it gives not only the blessing but the warning too.

இன்று பிப்ரவரி 14. Valentine's Day அல்லது காதலர் தினம் என்று அழைக்கப்படும் இந்த நாளைப் பற்றி நான் பேசவில்லையென்றால், நான் ஏதோ வேறு ஒரு உலகத்தில், வேறு ஒரு கோளத்தில் இருந்து வந்தவன் என்று கூட நீங்கள் நினைக்க வாய்ப்புண்டு. ஏனெனில், பிப்ரவரி 14 அவ்வளவு புகழ் பெற்ற ஒரு திருவிழாவாக மாறிவிட்டது.
மனித வாழ்வில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் கட்டாயம் தேவை. இவைகள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், எதற்கு திருவிழா, ஏன் கொண்டாட்டம் என்பதை உணர்வது நல்லது. அதுவும் அண்மைக்காலங்களில் மிகவும் பிரபலமாகி இருக்கும் இந்த நாளின் காரண, காரியங்களைப் பற்றி சிந்திப்பது மிகவும் நல்லது.
நான் சிறுவனாக இருந்த போது கொண்டாடப்பட்ட விழாக்களைப் போல் இப்போது குறைந்தது ஐந்து மடங்கு திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன. திருவிழாக்கள், அதனால் உண்டாகும் மகிழ்வு இவற்றிற்கு நான் எதிரி அல்ல. ஆனால், இந்த விழாக்களை வியாபார உலகம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமதிகமாக ஆக்கிரமித்து வருகிறதென்பதும், பல புதிய விழாக்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதென்பதும் கவலை தரும் போக்கு.
வியாபார உலகத்தின் ஆக்கிரமிப்பு எப்படிபட்டது? வீடுகளிலும், கோவில்களிலும், ஊரின் பொது இடங்களிலும் கொண்டாடப்பட்டு வந்த விழாக்கள் இப்போது, supermarket அல்லது maalகளிலும், உணவு விடுதிகள், டிஸ்கோ இடங்கள் என்று வியாபாரத் தலங்களிலும் அதிகம் கொண்டாடப்படுகின்றன. விழாக்களின் உள் அர்த்தங்களை சிந்திக்க விடாமல், மேல் பூச்சுக்களில் நம்மை மயங்க வைத்து, இந்த மேல் பூச்சுக்கள்தாம் விழாக்களின் மையப்பொருள் என்று சொல்லும் அளவுக்கு விழாக்களை வியாபார உலகம் மாற்றிவிட்டதென்பதை ஓரளவாகிலும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

பிப்ரவரி 14 விழாவுக்கு இன்னொரு தனி சிறப்பு உண்டு. கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக இந்தியாவில் இந்த விழாவைக் குறித்த காரசாரமான விவாதங்கள், பல வன்முறை கலந்த கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவாதங்கள் நல்ல விதமாக, அறிவு பூர்வமாய் நடந்தால், இந்த விழாவைப்பற்றிய உண்மைகள், உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும். ஆனால், இந்த கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் நம் தொடர்பு சாதனங்கள் ஒரு நாடகம் போல காட்டுவதால், இந்த விழாவை தேவைக்கும் அதிகமாக புகழ் உச்சிக்கு இவை கொண்டு சென்று விட்டனவோ என்று எனக்கு கலக்கமும் உண்டு. இந்த நாடகங்களை நாம் பார்த்து ரசிக்கிறோம், கை தட்டுகிறோம்... ஆனால், விழாவின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுகிறோம் என்றே நினைக்கிறேன். இந்த விழாவைப் பற்றி கொஞ்ச நேரமாகிலும் சிந்திக்க உங்கள் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்க நினைக்கிறேன்.

ஒரு கற்பனைக் கதை அல்லது உவமையோடு என் சிந்தனைகளை ஆரம்பிக்கிறேன். ஒருவர் ஒரு கார் வாங்கினார். கார் வாங்கியதால், ஒரு டி.வி. இலவசமாக அவருக்கு வழங்கப்பட்டது. அவர் வாங்கிய காரை வீட்டுக்கு ஓட்டிச் செல்லாமல் அங்கேயே விட்டு விட்டு, இலவசமாக கொடுக்கப்பட்ட டி.வி.யை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து அழகு பார்த்தார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்னொருவருக்கு, அவரது நண்பர் அதிக விலையுயர்ந்த, அழகான ஓவியம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அந்த ஓவியம் ஒரு காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தது. பரிசைப் பெற்றவர், அந்த விலையுயர்ந்த ஓவியத்தைப் பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, பரிசு சுற்றப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து ரசித்தார். அதை சட்டமிட்டு தன் வீட்டில் மாட்டினார். இவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நினைக்க என்ன இருக்கிறது? இருவரும் சுய நினைவை, சுய சிந்தனையை இழந்தவர்கள் என்று சொல்லமாட்டோமா? சொல்வோம். ஆனால், அதே போல் நாம் எத்தனை முறை நடந்திருக்கிறோம்? மையங்களை ஒதுக்கி விட்டு, ஓரங்களில் நம் கவனங்கள் நின்று விடவில்லையா? ஓரங்களைப் பெரிதுபடுத்தி, ஓரங்களுக்கு மாலையிட்டு, மரியாதைகள் செய்து ஓரங்களை மையங்களாக்கவில்லையா?

நாம் கொண்டாடும் பல திருநாட்களில் மையங்களும் ஓரங்களும் இடம் மாறிவிட்டன. யார் இந்த மாற்றத்தைச் செய்தது? நான் ஏற்கனவே கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு சிந்தனையில் பகிர்ந்து கொண்டதைப் போல், நம் வியாபார உலகம் இந்தத் திருநாட்களின் உண்மையான அர்த்தங்களை மையங்களிலிருந்து ஓரத்திற்கு ஒதுக்கி விட்டு, அந்த வியாபார உலகம் உருவாக்கிய ஓரங்களை... அதாவது, மலர்கள், வாழ்த்து அட்டைகள், அலங்காரங்கள், பரிசுப் பொருட்கள் என்ற இந்த ஓரங்களை மையத்திற்குக் கொண்டு வந்து கொலுவேற்றிவிட்டது. திருநாட்கள் வழியாக நமக்கு வந்து சேரும் அர்த்தங்கள் எனும் பரிசுகள் குப்பைக்குப் போய்விட்டன. அந்தத் திருநாட்களில் வாங்கப்படும் பல்வேறு பொருட்கள் என்ற அந்த பரிசு சுற்றப்பட்ட காகிதங்கள் சட்டமிட்டு மாட்டப்படும் அளவுக்கு மதிப்பு பெற்றுள்ளன.

மையமும் ஓரமும் மிக அதிகமாய் மாற்றப்பட்டுள்ள ஒரு விழா இந்த பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் Valentine விழா. இந்த விழாவுக்கான ஒரு மையம் இந்த விழா எழுந்த சூழல். இதன் வரலாறு. இந்த வரலாறு நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உரோமையப் பேரரசில் பிப்ரவரி 14 என்பது உரோமைய தேவர்கள், தேவதைகளின் அரசியான ஜூனோவின் திருநாள். இந்தத் திருநாளைத் தொடர்ந்து, Lupercalia என்ற திருநாளும் வரும். இத்திருநாட்களைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.
மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் Claudius மன்னனாய் இருந்தபோது, போருக்கு, படைக்கு ஆட்கள் சேர்ப்பது பெரும் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, Claudius இந்த பிப்ரவரி 14க்கான திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அந்த நேரத்தில் உரோமையில் இருந்த Valentine என்ற கத்தோலிக்க குரு அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்தி வைத்தார். இதை அறிந்த அரசன், அந்த குருவைக் கைது செய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். Valentine சிறையில் சித்திரவதைகள் அனுபவித்தபோது, சிறைக் காவலரின் பார்வையற்ற மகளைக் குணமாக்கினார் என்ற கதை ஒன்று உண்டு. 270ஆம் ஆண்டளவில், பிப்ரவரி 14 அன்று Valentine தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார்.

மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே (அவை எந்த காரணங்களுக்காய் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும்) வெறுப்பை, வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. இந்த வெறியை ஊட்டி வளர்க்க வீரர்கள் முன்வரவில்லை என்று Claudius காதலை, திருமணங்களைத் தடை செய்தான். அன்பைத் தடுத்தால் தானே, வெறியை உருவாக்க முடியும். அன்பைத் தடை செய்ய தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினான்.
வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க Valentine செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருத்தாத சொற்றொடர்). Valentine போராட்டம், கலவரம் என்று மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த குரு அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.

மனித வரலாற்றில் வெறுப்பு, வெறி இவைகளே படை பலம், ஆட்பலம், அதிகார பலம் இவைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. அன்போ, அதைச் சார்ந்த அற்புதங்களோ அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன.
படை பலத்தோடு ஆண்ட அரசன் Claudiusக்கு திருநாள் எதுவும் இல்லை. ஆனால், அன்பை வளர்த்த Valentineக்கு திருநாள் உண்டு. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்க வைக்கும் அளவுக்கு, Valentine's Day என்பதற்கு காதலர் தினம் என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வியாபார உலகம் அடையும் இலாபத்திற்கு நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில் அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது.
இந்தத் விழா எவ்வளவு தூரம் வியாபாரமாகிவிட்டதென்பதற்கு இரு எடுத்துக்காட்டுகள். Valentine சிறையில் இருந்த போது, அவரால் திருமணத்தில் இணைத்து வைக்கப்பட்ட பல இளையோர் சிறையில் அவரைச் சந்தித்து, மலர்களையும், தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல பரிசுகளையும் கொடுத்தனர் என்ற கதையும், Valentine தலை வெட்டப்படுவதற்கு முன், குணமான அந்தப் பெண்ணுக்குத் தன் கைப்பட எழுதிய ஒரு வாழ்த்தை அனுப்பினார் என்ற வேறொரு கதையும் உண்டு. இந்த அன்பு பரிமாற்றங்கள் இன்று வியாபாரமாகி, இந்த விழாவுக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மலர்கள் விற்கப்படுகின்றன. Valentine அந்தப் பெண்ணுக்கு “From your Valentine” - அதாவது, “உன்னுடைய Valentineஇடமிருந்து” என்ற வார்த்தைகளை அவர் இறுதி வாழ்த்தாக எழுதி அனுப்பியதும் தற்போது வியாபாரமாகிவிட்டது.

பிப்ரவரி மாதத்தில், கிறிஸ்தவ பாரம்பரியத்தில் தவக்காலம் ஆரம்பமாகும். இந்த ஆண்டு தவக்காலம் வரும் பிப்ரவரி 17 திருநீற்று புதனோடு ஆரம்பமாக உள்ளது. வழக்கமாக, திருநீற்று புதனுக்கு முன்னால் ‘கார்னிவல்’ (Carnival) என்ற பெயரில் இன்னும் பல வரம்பு மீறும் கொண்டாட்டங்களை வியாபார உலகம் ஆரம்பித்துள்ளதும், அந்த கொண்டாட்டங்களில் இளையோர் ஈடுபடுவதும் கவலை தரும் மற்றொரு போக்கு...
பிப்ரவரி 14 என்று நினைக்கும் போது, உண்மை அன்பை, உண்மைக் காதலைக் கொண்டாடுவதற்கு பதில், அந்தப் புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும் வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று குழம்பிப் போயிருக்கும் நம் இளையோருக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்க இறை அருளை வேண்டுவோம்.

அன்பின் பலத்தை மட்டும் நம்பி வாழ்ந்த Valentine க்கு அடிப்படை காரணமாக இருந்தவர் இயேசு. அவரும் அன்பின் பலத்தை மட்டும் தன் வாழ்வில் நம்பி வாழ்ந்தவர். அவர் தந்த அந்த அற்புதமான மலைப் பொழிவு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நற்செய்திக்கு விளக்கங்கள் தேவையில்லை. பேறுபெற்றோர் என்று இயேசு மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் பட்டியலிடும் புண்ணியங்கள் நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், சமயம் என்ற வட்டங்களைக் கடந்து, இயேசுவின் மழைப் பொழிவு பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியுள்ளது.
இன்று நமக்குத் தரப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியில் தனி சிறப்பு உண்டு. இந்தப் பகுதியில், பேறு பெற்றோர் என்று இயேசு கூறும் ஆசீர் மொழிகளைத் தொடர்ந்து, எச்சரிக்கைகளையும் இயேசு நமக்கு விடுத்துள்ளார். அந்த நற்செய்தியோடு நம் சிந்தனைகளை, எண்ணங்களை நிறைவு செய்வோம்.

லூக்கா நற்செய்தி - 6: 17, 20-26

07 February, 2010

Proud to be HUMBLE… துணிவிலிருந்து பிறப்பதே பணிவு...




“Humility is the foundation of all the other virtues hence, in the soul in which this virtue does not exist there cannot be any other virtue except in mere appearance.” Saint Augustine.

Ladies and Gentlemen, I am proud to introduce Humility. Pride (the real, healthy pride) and humility are two sides of the same coin. Humility is, probably, one of the most misunderstood virtues. The moment we think of humility, our minds would, probably, picture a silent, reserved person who does not even raise his / her head, a person who will seek the corner seat in the last row… etc. This is not the true picture of humility. Such humility, more often, would be false humility. True humility overflows from a heart filled with healthy pride. Here is a sample from Sir Isaac Newton: “If I have seen further than others, it is by standing upon the shoulders of giants.” Newton begins this quote by saying that he had seen further than others. There is a sense of pride and fulfilment in that statement. But, he acknowledges the help of others in his life. That is humility.
You may be wondering whether I am writing a treatise on humility. Dear Friends, humility is a common thread that runs through all the three readings found in this Sunday’s liturgy. To be more specific, here are the verses I am referring to:

Isaiah 6:5I am a man of unclean lips, and I live among a people of unclean lips
I Cor. 15:8-10Last of all he (Christ) appeared to me also, as to one abnormally born. For I am the least of the apostles and do not even deserve to be called an apostle, because I persecuted the church of God. But by the grace of God I am what I am, and his grace to me was not without effect.
Luke 5:8 When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!"

Those who beg for alms sometimes demean themselves as nothing, nobody, etc. Such statements come out of need and desperation. The statements we heard in today’s readings do not come from desperation. On the contrary, Isaiah, Paul and Peter are making these statements after their encounter with the divine, after they have been overwhelmed by God’s presence. These statements are, in essence, what true humility is. A true, proper perspective of who we are and what we can be with God.
I am sure all of us have met truly great persons in our lives. They hardly seem great; much less they impose their greatness on others. They don’t take any special effort to be humble or great. Both greatness and humility simply emanate from them. On the contrary, those who are small, need to exhibit their greatness as well as their other ‘virtues’.
Here is a nice story from ‘Illumination-Experiences on Indian Soil’ by Sri Chinmoy:
The King's Humility
One day a sage came to a King for an interview. The sage had to wait for a long time because the King was very busy. Finally, the King said he could come in.
When the sage entered the hall, the first thing he did was to take off his hat and bow to the King. Immediately the King took off his crown and bowed to the sage. The ministers and others who were around the King asked, "What are you doing? He took off his hat because he is an ordinary man. But you are the King. Why should you take off your crown?"
The King said to his ministers, "You fools, do you think I wish to remain inferior to an ordinary man? He is humble and modest. His humility is a peerless virtue. He showed his respect to me. If I did not take off my crown, then I would be showing less humility than an ordinary man, and I would be defeated by him. If I am the King, I should be better than everybody in everything. That is why I took off my crown and bowed to him!”

http://www.writespirit.net/stories_tales/stories_by_sri_chinmoy

Here are the words from one of the great pillars of Christianity – St Paul:
Christ said to me, "My grace is sufficient for you, for my power is made perfect in weakness." Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ's power may rest on me. That is why, for Christ's sake, I delight in weaknesses, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong. (II Cor. 12:9-10)

பிப்ரவரி 07 - நாளும் ஒரு நல்லெண்ணம்
Bankei என்ற சென் குரு உரையாற்றுகையில் மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். இதைக் கண்ட Nichiren என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே அவர் Bankei போதித்துக் கொண்டிருக்கும் போது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், போதகரே, உம்மை மதிக்கும் எவரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்." என்றார். Bankei அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்." என்றார்.
Nichiren அவர் அருகில் சென்றார். Bankei புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்." என்றார். Nichiren அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்." என்றார். Nichiren அப்படியே செய்தார். இப்போது, Bankei அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் ஒர் உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.
வெள்ளம் வரும் போது, வளைந்து கொடுக்கும் நாணல் பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம் வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.

ஞாயிறு சிந்தனை
Shakespeare எழுதிய புகழ் பெற்ற ஒரு நாடகத்தில் வரும் பிரபலமான வரிகள் இவை:
A rose by any other name would smell as sweet
ரோஜா மலரை என்ன பெயரிட்டு அழைத்தாலும், அதன் மணம் அதே இனிமையோடு இருக்கும் என்பது அதன் பொருள். எந்த மலருக்கும் இது பொருந்தும். பெயரை மாற்றுவதால் ஒரு பொருளின் அடிப்படை குணம் மாறுவதில்லையே.
அதேபோல், மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு புண்ணியத்தைப் பல பெயர்களால் அழைக்கிறோம். அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் இந்த புண்ணியம் அழைக்கப்படுகிறது. இந்தப் புண்ணியத்தைப் பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை.
தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கமுடைமை என்று வள்ளுவர் அறத்துப்பாலில் கூறும் பத்து குறள்களை, அன்பர்களே, தயவுசெய்து ஒருமுறை இன்று வாசித்துப்பாருங்கள். 121 முதல் 130 வரையிலான பத்து குறள்களில் நாம் அனைவரும் மகிழ்வோடு, நிம்மதியோடு பெருமையோடு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வழிகளை மிக எளிமையாக வள்ளுவர் கூறியுள்ளார்.
தன்னடக்கம், புலனடக்கம் சிறப்பாக நாவடக்கம் என்ற பல எண்ணங்களைக் கூறியுள்ளார். நாம் அடிக்கடி இந்தக் குறள்களைக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அடிக்கடி கேட்கும் உண்மைகள் உள்ளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அடிக்கடி கேட்டிருந்தாலும், இன்று மீண்டும் ஒருமுறை இக்குறள்களில் ஒரு சிலவற்றைக் கேட்போம்:
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய விளக்கவுரை இப்போது ஏன் என்று குழம்பிப் போயிருக்கும் அன்பர்களே, இன்றைய ஞாயிறு வாசகங்களையும், இக்குறள்களோடு இணைத்து சிந்திக்க அழைக்கிறேன்.
இந்த ஞாயிறு திருவழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ள மூன்று விவிலிய வாசகங்களிலும் பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. எசாயா, பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத் தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகளை இந்த மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியை கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு அப்போஸ்தலர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, இயேசு தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 15:8 - எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
நற்செய்தியில் இயேசு பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன் பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சியில், பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா. 5:8 - “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்”

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி என்பது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து வரும் போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும். குறையில் உள்ளவர்கள் தங்களையே தாழ்த்திச் சொல்லும் வார்த்தைகள் ஏக்கத்திலிருந்து வருவன. பிறரிடம் கையேந்தி தர்மம் தேடுவோர் தங்களையேத் தாழ்த்திக் கொள்வது போன்ற நிலை அது. நிறைவிலிருந்து சொல்லப்படும் உண்மைகளில் எந்த உள்ளர்த்தமோ, தேடலோ, ஏக்கமோ இருக்காது.
தன்னிடம் உள்ள நிறை குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே பணிவு. ஒரு சின்ன உதாரணம்: நான் கல்லூரியில் வகுப்புகள் எடுக்கும் போது, அன்றைய பாடத்திற்கு என்னால் முடிந்தவரை தயாரிப்போடு செல்வது வழக்கம். அன்றைய பாடத்தோடு தொடர்புடைய, அதுவும் அண்மையில் வந்த தகவல்களைச் சேகரித்து செல்வேன். இருந்தாலும், என்னை விட தொடர்பு சாதனங்களில் அதிகம் திறமையும், அறிவும் கொண்ட மாணவர்கள் என் வகுப்பில் இருந்தனர் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்தது ஆசிரியருக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு கேள்விகள் கேட்பர். வேறு சிலர் உண்மையில் அந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கேள்விகள் கேட்பர். கேள்வி எந்த கோணத்தில் வந்தாலும் சரி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு முழுமையான பதில் தெரிந்தால், நான் விளக்கம் தருவேன். பாதி தெரிந்தால், அல்லது சரிவரத் தெரிய வில்லை என்றால், அடுத்த நாள் அதைப்பற்றி சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். தனக்குத் தெரியவில்லை, அடுத்த நாள் அது பற்றி தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்லும் ஆசிரியர்கள் மேல் மாணவர்களுக்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஆனால், இப்படிச் சொல்வதற்கு துணிவு, தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய தெளிவு இவைகள் தேவை. இவைகள் இல்லாத போது, சில ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களை இழிவாக, குறைவாக நினைப்பார்களோ என்ற பயத்தில் தெரியாதவைகளை, தெரிந்தது போல் அரையும் குறையுமாகச் சொல்லும் போது மாணவர்கள் மதிப்பில் பல படிகள் இறங்கி விடுவர் அந்த ஆசிரியர்கள்.
நிறைவும், குறையும் இரட்டைப் பிறவிகள். துணிவும் பணிவும் அதேபோல் இரட்டைப் பிறவிகள். இன்னும் சொல்லப்போனால், துணிவிலிருந்து பிறப்பதே பணிவு. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடாகத் தெரியலாம். ஆனால், நிதானமாகச் சிந்தித்தால், தெளிவு கிடைக்கும். நான் சொல்லும் துணிவு உண்மையின் அடிப்படையில் எழுகின்ற துணிவு. வன்முறையையே வாழ்வாக்கி இருக்கும் ரவுடிகள், தாதாக்கள் காட்டும் துணிவு உண்மையில் துணிவல்ல, தங்கள் பயத்தை மூடி மறைக்கும் ஒரு வேஷம். தன்னை நன்கு உணர்ந்தவர்கள் தங்கள் திறமைகள், குறைகள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்களில் இறங்குவார்கள். குறையுள்ள பகுதிகளில் பணிவோடு விலகிக் கொள்வார்கள். இவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களானால், தனது திறமை, சக்தி இவைகளை மட்டும் நம்பாமல், இறைவன் நமக்குபின் இருந்து செயல் படுகிறார் என்ற நம்பிக்கையோடு குறையுள்ள பகுதிகளிலும் துணிந்து இறங்குவார்கள். துணிவில் பிறக்கும் பணிவுக்கு இதுதான் நான் காணும் விளக்கம். இந்தத் துணிவை, அதில் பிறந்த பணிவை பெரும் சாதனையாளர்களிடம் பார்க்கிறோம். அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான் இன்னும் அதி தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல் ஏறி நின்றேன்.
இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற எசாயா, பவுல், பேதுரு இவர்களின் பணிவை இன்றைய வாசகங்களில் கேட்டோம்.
தன்னிறைவு, தன்னைப் பற்றிய தெளிவு, துணிவு இவைகள் இல்லாத போது அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே தேவைக்கும் அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும், அல்லது தற்பெருமையோடு தவிக்க வேண்டியிருக்கும். அல்லது, மிகவும் பரிதாபமாக போலி தாழ்ச்சியுடன், பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும். போலி தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. இந்திய ஆன்மீகவாதி ஒருவர் சொன்ன கதை இது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக் கொண்டு, அந்த ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு பிறகு அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட நான் குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?"

அரசன் தந்த விளக்கத்தைக் கேட்டு, தன் தாழ்ச்சியிலும் தன் பெருமையை நிலை நாட்டிய அரசனைக் கண்டு அமைச்சர் வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இது.
வாழ்வில் சாதனைகள் பல புரிந்தாலும், தன்னடக்கத்தோடு வாழ்ந்த பலர் தாழ்ச்சியைப் பற்றி கூறியுள்ளனர்.
நம்மை விட உயர்ந்தோரிடம் பணிவாயிருப்பது நம் கடமை. நமக்கு இணையாய் இருப்போரிடம் பணிவாய் இருப்பது நல்ல பழக்கம். நமக்குக் கீழே பணிபுரிவோரிடம் பணிவாய் இருப்பதே உன்னதமானது, பெருமைக்குரியது. Benjamin Franklin
தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். Monica Baldwin
இதையே நம் தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் வேறொரு வகையில் சொல்கிறார்: அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும்.

இறுதியாக, அன்புள்ளங்களே, தன்னிறைவு, தன்னம்பிக்கை இவைகளில் வளர்ந்து, இறைவனின் அருளோடு செயல்பட்ட பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது இந்த ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 9-10

கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.