31 March, 2011

TAKING OVER GOD’S HOUSEHOLD... கடவுள் நம்மில் குடியேற...



Last week when I finished writing the reflections on the last verse of Psalm 23, the title that flashed across my mind was ‘At Home in God’s House’. I patted myself on my back for combining both ‘Home’ and ‘House’ in the same phrase. The word ‘Home’ has quite a few layers of meaning. ‘To be at home’ and ‘to feel at home’ are special phrases which have no direct connection with the physical structure called a house or a home. It is a special concept that talks of ease, comfort, freedom, security… all rolled into one word – HOME.

We can be at home or feel at home in a place, feel at home with someone, be at home doing something or feel at home simply doing nothing. A few examples come to mind. Bathroom singers feel at home singing while taking a shower. True friends feel at home in their group, shedding all inhibitions, becoming children.

Children truly feel at home irrespective of where they are provided they know that their parents are around. We have all seen tiny tots displaying their artistic skills in the walls and floors of their house. They grab anything within their reach and throw them around. If the father or mother tell them, “I’m watching you!” the child feels thrilled to continue its mischief with a giggle. This is a perfect picture for ‘being at home’ or ‘feeling at home’.

Can we feel this sense of freedom, abandon in the house of God? The answer to this question, according to Harold Kushner, depends on the level of relationship we have with God. For the author of the Twenty-third Psalm, dwelling in God’s house, having the sense that every moment of his day is being lived under God’s watchful eye, is the most reassuring, comforting thought he can have…. What might it mean to us? The answer may depend on where we are in our lives. For a young child, there are few things more important and reassuring than the knowledge that his parent is there watching out for him, and few things more unsettling than the fear that the parent might not be there…

But a few years later, the young child grows into a sulky, withdrawn teenager. ‘Momma, come and see what I can do’ is replaced by ‘Stay out of my room’ and ‘Will you just get off my back and let me live my life?’ What has happened? One of the defining characteristics of adolescence is self-consciousness, the feeling that people are looking at you and judging you. For the first time in their lives, adolescents are making ethical decisions, making choices about their values and their behavior without parental guidance and authority. (Kushner)


To highlight these two stages of one’s relationship with God, Kushner cites passages from Genesis and the Book of Job. Adam and Eve are perfect examples of children totally carefree in the Garden of Eden. The moment they took decisions about right and wrong by eating the forbidden fruit, they entered adolescence and tried to avoid God. They became very self-conscious about their nakedness.

For Adam and Eve, for the typical adolescent, living in the presence of God is intimidating, a source of potential shame and imminent condemnation. When Job’s friends try to comfort him after a series of disasters have made his life miserable, they speak to him in the accents of childhood: Don’t despair, our heavenly Father is watching over us constantly. And Job responds like an adolescent: You’re right, God is always watching over us – to catch us in a mistake and have a reason to punish us. (Kushner)

The words spoken by Job in chapters 6 and 7 are poignant and Job sounds like a sulking adolescent asking his parent to ‘get off his back’. Here is just a sample:

Will you never look away from me, or let me alone even for an instant? If I have sinned, what have I done to you, you who sees everything we do? Why have you made me your target? Have I become a burden to you? (Job 7: 19-20)


As we grow older, we carry with us fragments of both views, the child’s sense of reassurance that his parents are there for him and the adolescent’s need for a life free of watchful eyes and judgemental authorities. Ultimately we come up with an outlook that reconciles the two. We come to realise that God invites us into His house, into His presence, not simply to protect us and not only to judge us, but to establish a relationship with us, and the basis of that relationship is God’s expectation of moral behaviour. God says to us, as one might say to a child who is no longer a child, If you are going to live in My house, I expect certain things of you. God says this not in order to restrict us or to punish us when He catches us in a mistake, but to show that He takes us seriously and to invest our lives with significance by telling us that He cares how we live. (Kushner)

The idea of God inviting us to live in His house, in His presence is similar to the parent who hands over the responsibility of his business and his household management to his son or daughter since they have ‘come of age’. It is as if the parent now wishes to live under the care of the grown up child. God tells us that we need to take over His house and run it. Once such a mature relationship has blossomed between God and me, I don’t need to be bothered whether God is ‘watching over’ me. I have imbibed the spirit of my Father, of this household and no one need to tell me how to run God’s house.

It is with such a sense of responsibility, fulfilment, the psalmist is saying: “I shall dwell in the house of the Lord all the days of my life.”


Dear Friends, This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


“‘நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்’ என்று திருப்பாடல் ஆசிரியரைப் போல் பெருமையோடு சொல்லும் பக்குவம் பெற இறையருளை வேண்டுவோம்.” என்று சென்ற தேடலை நாம் நிறைவு செய்தோம். இறைவன் இல்லத்தில், இறைவன் கண்காணிப்பில், இறைவனோடு வாழும் பக்குவம் என்பது என்ன, இப்பக்குவத்தை எவ்விதம் பெறுவதென்று இன்றையத் தேடலில் சிந்திப்போம்.

இல்லம், வீடு ஆகிய வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் House மற்றும் Home ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Home என்பது உள்ளங்கள் சேர்ந்து உருவாக்கும் ஒரு கூட்டுணர்வை, குடும்ப நிலையைக் குறிக்கிறதென்று கூறினோம். Home என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் மற்றொரு அழகான அர்த்தமும் உண்டு. To be at home, To feel at home என்று சொல்லும்போது, பாதுகாப்பான ஒரு சுதந்திர நிலையை அல்லது உணர்வைப் பற்றி பேசுகிறோம். பிறர் நம்மைக் கண்காணிக்கின்றனர், நம்மைக் கணிக்கின்றனர் என்ற கவலை எதுவும் இல்லாமல், நாம் நாமாக, இயல்பாக இருப்பதையே feeling at home என்ற சொற்றொடர் குறிக்கிறது. பாடும் திறமை அதிகம் இல்லாத ஒரு சிலர் பாத்ரூமில், குளியலறையில் மனம் விட்டுப் பாடுகிறோமே... உண்மையான நண்பர்கள் மத்தியில் எந்தக் கூச்சமும் இல்லாமல் குழந்தையைப் போல் பாடி, ஆடி மகிழ்கிறோமே... அந்த நேரங்களில் நாம் உணரும் சுதந்திரத்தைத் தான் To be at home, To feel at home என்ற சொற்றொடர்களால் கூறுகிறோம்.

வழக்கமாய் இந்த சுதந்திர உணர்வை அவரவர் இல்லங்களில் அதிகம் உணர்வோம். அதிலும், இந்தச் சுதந்திரத்தை மிக அதிகமாக உணர்வது, பயன்படுத்துவது குழந்தைகள்தான். குழந்தையொன்று வீட்டின் தரையில், சுவர்களில் தன் ஓவியத்திறனை வெளிப்படுத்துவதை ஒவ்வொரு குடும்பத்திலும் நாம் பார்த்திருக்கிறோம். சில நேரங்களில் இக்குறும்புகளைக் குழந்தைகள் செய்யும்போது, "நீ செய்றத நான் பாத்துகிட்டுத் தான் இருக்கேன்" என்று பெற்றோர் சொல்வார்கள். அதைக் கேட்டு, இன்னும் அதிக குதூகலத்துடன் குழந்தைகள் தங்கள் குறும்பைத் தொடர்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். மனதில் இந்த அனுபவத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்.” என்ற வார்த்தைகளை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

ஆண்டவரின் இல்லத்தில் இதுபோன்ற சுதந்திரத்தை நாம் அனுபவிக்க முடியுமா? "நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று கடவுள் தன் கண்காணிப்பை நமக்கு உணர்த்தும்போது, அது நமக்குள் சந்தோசம் தருமா, அல்லது சங்கடம் தருமா? இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவு எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் தீமானிக்க வேண்டும். நாம் குழந்தை நிலையிலும் கடவுள் நமது பெற்றோர் நிலையிலும் இருக்கின்றோமா? அல்லது, நாம் வளர் இளம் பருவம் அதாவது Adolescents என்ற நிலையில் கடவுளோடு பழகுகிறோமா? அல்லது, Adult to Adult என்று முதிர்ச்சி அடைந்த நிலையில் கடவுளுடன் பழகுகிறோமா? இந்த மூன்று நிலைகளில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து, அவரது இல்லம், அவரது தொடர்ந்த கண்காணிப்பு நமக்கு சந்தோசம் தருமா, சங்கடம் தருமா என்பதைக் கணக்கிட முடியும்.


குழந்தைக்கு வீடு ஒரு விளையாட்டுத் திடல். சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் குழந்தை, அவ்வப்போது பெற்றோரின் கவனம் தன் மீது இருக்கிறதா என்பதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளும். சுவரில் கிறுக்குவது, தொலைபேசி, தொலைக்காட்சி பெட்டி, கம்ப்யூட்டர் இவைகளைப் பயன்படுத்துவது, நாளிதழைக் கிழிப்பது, உறவினர் தரும் பொருளை இடது கையால் வாங்குவது போன்ற பல செயல்களில் ஈடுபடும் குழந்தைக்கு தான் செய்வது நல்லதா, கேட்டதா என்ற அளவுகோல் கிடையாது. பெற்றோரின் அனுமதி உண்டா இல்லையா என்பது மட்டுமே குழந்தையின் அளவுகோல். குழந்தையைப் பொறுத்தவரை பெற்றோரின் கண்காணிப்பில் இருப்பது பாதுகாப்பான, சந்தோசமான, சுகமான, நிம்மதி தரும் ஓர் அனுபவம். அதைத் தாண்டி, குழந்தைக்கு எதுவும் அதிகம் தெரியாது.

இதே குழந்தை வளர் இளம் பருவத்தில், அதாவது, Adolescent வயதில் அடியெடுத்து வைக்கும்போது, இதே பெற்றோரின் கவனம் சந்தோசத்திற்குப் பதில், சங்கடத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் நுழையும் சிறுவன், அல்லது சிறுமிக்கு உலகமே தன்னைக் கண்காணிப்பதை போன்ற உணர்வு உண்டாகும். அதுவரை அம்மா, அல்லது அப்பா சொன்னதைக் கேட்டு வாழ்ந்தவர்கள், இனி தனித்து முடிவுகள் எடுக்க முயல்கிறார்கள். அந்த முடிவுகள் சரியா தவறா என்ற குழப்பம் வேறு. தன்னையொத்த மற்ற இளையோர் சொல்வதும், செய்வதும் அவர்களுக்கு ஒரு முக்கிய அளவுகோல் ஆகிறது. இந்தப் பருவத்தில் அம்மா, அப்பா, இன்னும் மற்ற பெரியவர்களின் கண்டிப்பும், கண்காணிப்பும் சந்தோஷத்தைவிட, சங்கடத்தையே அதிகம் தருவதாக இவர்கள் உணர்கின்றனர்.

சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் குழந்தைக்கும், பெற்றோருக்கும் இருக்கும் உறவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விவிலியத்தில் நாம் காணும் உறவு முதல் பெற்றோர் கடவுளுடன் கொண்டிருந்த உறவு. ஆதாம், ஏவாள் இருவரும் ஏதேனில் இருந்த தோட்டத்தில் நல்லது கேட்டது என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லாமல், கடவுளின் பிரசன்னத்தில் எப்போதும் வாழ்ந்த அந்த நிலையை தொடக்க நூல் இரண்டாம் பிரிவில் வாசிக்கிறோம். குழந்தைகளாய், சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த இவர்கள் நல்லது கேட்டதை உணர்த்தும் கனியை உண்டதும், வளர் இளம் பருவத்தினரைப் போல், கடவுளின் குறுக்கீட்டை விரும்பாமல் விலகிச் சென்றனர்.


கடவுளோடு கொண்டுள்ள நமது உறவு வளர் இளம்பருவத்தில் இருந்தால், கடவுளின் இல்லத்தில், கடவுளின் கண்காணிப்பில் வாழ்வது சங்கடமாக இருக்கும். யோபுவின் வாழ்வில் இதற்கு ஓர் எடுத்துக்காட்டை நாம் காணலாம். யோபு சந்தித்த அடுக்கடுக்கான சோதனைகளை, வேதனைகளை நாம் அனைவரும் அறிவோம். அவரது நண்பர்கள் அவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்கின்றனர். யோபு ஒரு குழந்தையைப்போல் தன் இறைவனை அணுக வேண்டும் என்ற நோக்கத்தில், "மனம் தளராதீர், கடவுள் உம்மைக் கண்காணித்து வருகிறார்." என்று ஆலோசனை தருகின்றனர். வளர் இளம் பருவத்தினர் போல் யோபு இதற்கு பதில் சொல்கிறார். "கடவுள் கண்காணிக்கிறார்... உண்மைதான். நான் எப்போது தவறு செய்வேன், என்னைப் பிடிக்கலாம் என்ற நோக்கத்தில் அவர் என்னைக் கண்காணிக்கிறார்." என்ற எண்ணத்தை யோபு நண்பர்களிடம் சொல்கிறார்.

யோபு நூலில் 6, 7 ஆகிய இரு பிரிவுகளில் அவர் கூறும் பதில் உள்ளத்திலிருந்து வெடித்து எழும் வேதனை, கோபம் அனைத்தையும் வெளிப்படுத்துகிறது. பெற்றோர் எப்போதும் தன்னைக் கண்காணிக்கின்றனர் என்பதை உணரும் ஓர் இளைஞன் அல்லது இளம்பெண் எரிச்சலுடன் பேசும் வார்த்தைகளின் எதிரொலிபோல் ஒலிக்கும் யோபுவின் வார்த்தைகளைக் கேட்போம்:

யோபு 7 : 19-20

எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா? மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?


குழந்தைப் பருவம், வளர் இளம் பருவம், இளம்பருவம் இவைகளைத் தாண்டி நாம் முதிர்ச்சி அடையும்போது, Adult to Adult என்ற நிலையில் பெற்றோருடன் உறவு கொள்கிறோம். ஒரு பக்கம் பெற்றோரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. அதே நேரம், நம் தனிப்பட்ட சுதந்திரமும் தேவைப்படுகிறது. இந்த இரண்டையும் சரிவரக் கலக்கும் பக்குவத்தை நாம் பெறும்போது, வாழ்க்கை சுமுகமாய்ச் செல்கிறது. கடவுள் உறவிலும் நாம் முதிர்ச்சி அடையும்போது, கடவுளின் கண்காணிப்பு, நம் சுதந்திரம் இரண்டும் கலந்த ஓர் உறவை வளர்க்க வேண்டும். இதைத் தான் இறையுறவில் நாம் கொள்ளவேண்டிய பக்குவம் என்று சென்ற தேடலில் குறிப்பிட்டேன்.

பக்குவப்பட்ட இந்த Adult to Adult உறவின் உச்சமாக, "ஆண்டவரின் இல்லத்தில் என்றென்றும் வாழ" நாம் அழைக்கப்படுகிறோம். பிள்ளைகள் வளர்ந்துவிட்டனர், பொறுப்புடன் வாழ்வர் என்ற நம்பிக்கையில் வீட்டுப் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைப்பதில் பெருமை கொள்ளும் பெற்றோர் போல, இறைவனும் நம்மிடம், "இதோ என் வீடு... இனி இது உன் வீடு" என்று அவருடன் வாழ விடுக்கும் ஓர் அழைப்பிற்கு திருப்பாடல் ஆசிரியர் சொல்லும் பக்குவமான பதிலே, “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகள்.

நன்மை, நேர்மை அனைத்திற்கும் ஊற்றான இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் இந்த Adult to Adult - முதிர்ச்சி அடைந்த உறவை வளர்க்க விரும்புகிறார். இந்த உறவு நிலையை அடைந்தபின், இறைவன் என்னை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறாரே என்ற எண்ணமோ, சங்கடமோ எழாது. ஏனெனில், இறைவனின் இல்லத்தில் அவரைப் போல், அவரின் பிம்பமாக என் வாழ்வும் எப்போதும் நேரியதாய், நன்மை நிறைந்ததாய் இருக்கும்.

சரி, நேர்மையாய், நன்மை நிறைந்த வாழ்க்கை வாழ்வதால் என்ன பயன்? இது நமக்குள் அடிக்கடி எழும் கேள்வி. அதற்கு திருப்பாடல் ஆசிரியர் கூறும் ஒரே பதில்: “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகள். வாழ்வின் ஒரே பயன், இறைவனோடு, அவரது இல்லத்தில் என்றென்றும் வாழ்வதுதான். இந்த வாழ்வு தரும் நிறைவை நாம் அவ்வப்போது உணர்ந்திருக்கிறோம்.


யாரும் நம்மைப் பார்க்கின்றனர், அல்லது பார்க்கவில்லை என்ற கவலை ஏதும் இல்லாமல், பலன் எதையும் எதிர்பார்க்காமல், நம் மனதில் நல்லதென்று பட்டதை நாம் செய்திருக்கிறோம். அந்த நேரத்தில் நம் மனதில் உருவாகும் அந்த உயர்ந்த உணர்வு, தூய்மையான சுதந்திரம் இறைவனின் இல்லத்தில் வாழும் அனுபவத்திற்கு ஈடானது. சொல்லப்போனால், நாம் இறைவனின் இல்லத்திற்குச் சென்று குடியேறுவதற்கு பதில், இறைவன் நமக்குள் வந்து குடியேறும் நேரங்கள் இவை.

இதுபோன்ற தூய நேரங்கள் வாழ்வில் பெருகுவதையே, திருப்பாடல் ஆசிரியர் “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்” என்ற வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

27 March, 2011

Privatising Water and Partitioning God… தண்ணீரை, கடவுளைப் பிரிக்காதே



There was a cartoon I saw sometime back which showed a little boy kneeling by his bed saying his bedtime prayers. He prayed: "As you know God, Monday is the first day of school. I hope you won't lose sight of me in the crowd. Amen." Then he climbs in bed, thinks for a minute, and then crawls out again and adds to his prayer: "Oh, and by the way God, I'll be the one wearing the red shorts and a Dallas Cowboys T-shirt." http://www.cbcisite.com/Sunday%20Homily.htm

“Don’t lose sight of me in the crowd” is the earnest prayer of human beings. We wish to stand out in a crowd, to be unique, special. The thirst for recognition is inherent in almost all of us. Thirst is one of the key themes in today’s gospel (John 4: 5-42) and, naturally, its answer – ‘water’. The Samaritan woman in today’s gospel stands as our representative before Christ, speaking for all of us.

This Sunday as well as the next two Sundays, the gospel texts will put us in touch with three of the most significant spiritual symbols of our Faith: water, light and life, symbols closely connected with Easter. Today’s gospel revolves around the well in Samaria, with a discourse on water. Next Sunday it will be the curing of the visually handicapped person, with thoughts on light. The third week – the final week before the Holy Week – it will be the miracle of raising Lazarus from the dead and the discourse on life.

All the three passages are taken from the Gospel of John. This gospel is not a simple narrative of Jesus’ life but a theological treatise as well. The conversation between Jesus and the Samaritan woman is one of the longest (if not the longest) conversation recorded in the four gospels. This conversation reveals quite a few lessons on oneself, Jesus and God. Quite often we tend to feel that we know enough about self, Jesus and God and thus lose out on newer insights. We need to keep ourselves open to surprises, since we know that ‘The God of Surprises’ is one of the basic, beautiful attributes of God!

Today’s gospel gives us a picture of Jesus who surprises us, even shocks us. He voluntarily initiates a conversation with a Samaritan woman who comes to the well at mid day. The woman’s late visit to the well (women, usually, gathered at the well early in the morning) may suggest that she was an outcast in the village, even among the Samaritans, because of her questionable living situation! Jesus begins this discourse expressing his need for water. When a Samaritan woman came to draw water, Jesus said to her, “Will you give me a drink?” (John 4: 7) A simple request for water opens up quite many issues and ultimately ends on sublime themes related to God and worship. Here is the first lesson from today’s gospel: that no place is alien to talk about God. We know that in villages, the well, the tea shop and the tree in the village square are good spots for gossips, political opinions and even philosophical thoughts. Jesus shows us that a well-side conversation can also be profoundly divine!

The initial reaction of the Samaritan woman is a grim reminder of how the human family has not progressed in certain areas even after centuries. The Samaritan woman said to him, “You are a Jew and I am a Samaritan woman. How can you ask me for a drink?” (John 4: 9) You-and-I distinction even in the case of a basic need. Thirst knows no caste and religion. Hence, it would be highly impossible for any one to refuse water to the one who is thirsty. But, with water becoming more and more a private property and hence scarce and costly, it is becoming more and more delicate to request water and to share water even in dire situations.

Two years back, the great Indian environmentalist Sunderlal Bahuguna, has said: “Nations all across the world are facing a water crisis that is deepening with the passing of each day… This situation demands immediate notice and remedial measures from our governments and policymakers. Otherwise, mankind has to face the wrath of an inevitable third world war on the issue of water.” http://www.thaindian.com/newsportal/enviornment

As we are reflecting on the gift of water, we are agonisingly aware of different disturbing news items that come out of Japan every hour. The latest one from BBC (27 March 2011) goes like this: Radioactivity in water at reactor 2 at the quake-damaged Fukushima nuclear plant has reached 10 million times the usual level, company officials say. Human family is paying the price of misusing the natural gifts God gave us.

The thirst of Jesus and the hesitation of the Samaritan woman still echo in different parts of the world. The great natural gift of God – water – has, unfortunately, been used as a political and caste weapon dividing people. The conversation between Jesus and the Samaritan woman also highlights another division among people. Not only the gifts of God, but God himself/herself is divided under various pretexts. Jesus is rather emphatic in saying that true God and true worship do not divide the people: “Woman,” Jesus replied, “believe me, a time is coming when you will worship the Father neither on this mountain nor in Jerusalem… Yet a time is coming and has now come when the true worshipers will worship the Father in the Spirit and in truth, for they are the kind of worshipers the Father seeks. God is spirit, and his worshipers must worship in the Spirit and in truth.” (John 4: 21-24)

I don’t think that any one could make this clearer and easier than Jesus. Curiously, Jesus begins this statement with a request… almost a plea: “Woman, believe me…” It is hard for us to believe that God can be worshipped in such simplicity. But, that is the true worship ‘the Father seeks’.

Lenten season is a call to conversion. Let us be converted to using God’s gifts properly without avarice and monopoly. Let us be converted not to divide God into various human slots, but allow God to be God and try to worship God in Spirit and in Truth.


Dear Friends, This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


வார இதழ் ஒன்றில் வெளியான நகைச்சுவையுடன் நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம். ஒரு சிறுவன் இரவு படுக்கப் போகுமுன், முழந்தாள் படியிட்டு செபிக்கிறான். "இறைவா, நாளை நான் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள். அங்கிருக்கும் கூட்டத்தில் என்னைப் பார்க்காமல் இருந்து விடாதேயும்." என்று செபித்துவிட்டு, படுத்துக் கொள்கிறான். சிறிது நேரத்தில், என்ன நினைத்தானோ தெரியவில்லை, மீண்டும் படுக்கையைவிட்டு எழுந்து முழந்தாள்படியிட்டு செபிக்கிறான்: "இறைவா, சொல்ல மறந்துவிட்டேன். நாளை நான் பள்ளிக்கு ஒரு சிவப்புச் சட்டை அணிந்திருப்பேன். கவனமாய்ப் பார்க்கவும்." என்று கடவுளிடம் தன் அடுத்த நாள் அடையாளத்தைக் கோடிட்டுக் காட்டுகிறான்.

கூட்டத்தில் என்னைப் பார்க்காமல் இருந்துவிடாதீர்; மக்கள் மத்தியில் என்னை மறந்துவிடாதீர்... என்று இந்தச் சிறுவனைப் போல் நாம் வாய் வார்த்தைகளால் வேண்டவில்லை என்றாலும், பல முறை இது போல் உணர்ந்திருக்கிறோம். கூட்டத்தில் ஒருவராய் கரைந்து விடவோ, மறக்கப்படவோ நம்மில் யாருக்கும் விருப்பம் இருப்பதில்லை. பிறர் நம்மைக் கண்டுகொள்ள வேண்டும், நம்மை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற தாகம் மனிதர்களாகிய நமக்குப் பொதுவான ஒரு தாகம். நம் எல்லார் மனதிலும் இருக்கும் இத்தகைய ஏக்கங்களின், தாகத்தின் ஒரு பிரதிநிதியாக இன்று ஒரு பெண்ணை நாம் நற்செய்தியில் சந்திக்கிறோம்.

ஒரு பெண்... ஒரு சமாரியப் பெண்... யூத சமுதாயத்தால் ஓரம் கட்டப்பட்டவர். அதுவும் இந்தப் பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது ஆறாவது மனிதரோடு வாழ்பவர். சமுதாயம், சமயம், நன்னெறி என்று நாம் உருவாக்கியிருக்கும் அனைத்து அளவுகோல்களின்படி, ஒரு மனிதப் பிறவியாகக் கருதப்படுவதற்குகூட தகுதியற்ற இப்பெண்ணை நற்செய்தியாளராக உருமாற்றுகிறார் இயேசு.

உயிர்ப்புத் திருவிழாவை நோக்கி நாம் தவக்காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இந்த உயிர்ப்புப் பெருவிழாவுடன் தொடர்புடைய மூன்று அடையாளங்கள்... தண்ணீர், ஒளி, வாழ்வு. இந்த ஞாயிறன்றும், இதைத் தொடரும் இரு ஞாயிறுகளிலும் இம்மூன்று அடையாளங்களை வலியுறுத்தும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இயேசு சமாரியப் பெண்ணைச் சந்திப்பதும், தண்ணீர் குறித்து பேசுவதும் இந்த வாரம் தரப்பட்டுள்ள நிகழ்ச்சி. பார்வை இழந்த ஒருவருக்கு இயேசு பார்வை வழங்குவதும், ஒளியைக் குறித்துப் பேசுவதும் அடுத்த வாரம் நாம் வாசிக்கும் நற்செய்தி. இறந்த லாசரை உயிர்ப்பித்து, வாழ்வைப் பற்றி இயேசு பேசுவது மூன்றாம் வாரம் தரப்பட்டுள்ள ஒரு நற்செய்தி. இம்மூன்று நிகழ்ச்சிகளும் யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டவை.

நான்கு நற்செய்திகளிலும் யோவான் நற்செய்தி தனித்துவம் மிக்கது. இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுடன் சேர்த்து, இறையியல் பாடங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறியுள்ளார் யோவான். இறையியல் பாடங்கள் என்றால் இறைவனைப் பற்றியது மட்டுமல்ல, நம்மைப் பற்றியும் தெளிவுபடுத்தும் பகுதிகள் இவை. இன்றைய நற்செய்தியில் இயேசு சமாரியப் பெண் ஒருவரைச் சந்திக்கும் அந்த நிகழ்வின் மூலம் இயேசுவைப்பற்றி, கடவுளைப்பற்றி, நம்மைப்பற்றி யோவான் தெளிவுபடுத்தும் ஒரு சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.

இப்படி நான் சொன்னதும் ஒரு சிலருக்கு மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்புண்டு. கடவுளைப் பற்றி, இயேசுவைப் பற்றி, நம்மைப் பற்றி புதிதாக எதைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்? என்ற கேள்வி அது. மிக ஆபத்தான ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்குப் பின்னணியாக நம் மனதில் ஓடும் எண்ணம் என்ன? கடவுளைப் பற்றியும், நம்மைப் பற்றியும் இன்னும் தெரிந்து கொள்ள ஒன்றும் புதிதாய் இல்லை என்ற எண்ணம். இந்த எண்ணத்தால், நம் மனங்களை மூடி வைக்கிறோம், எத்தனையோ நல்ல பாடங்களை நாம் இழந்திருக்கிறோம்.

இது இப்படித்தான், இதற்குமேல் இதில் ஒன்றுமில்லை என்று வாழ்வின் பல விஷயங்களுக்கு நாம் இலக்கணம் வகுத்து, எல்லைக் கோடுகளை வரைந்து, அடையாள அட்டைகள் ஒட்டி, முத்திரை குத்தி நம் எண்ணங்களையும், மனதையும் சுருக்கி விடுகிறோம். முக்கியமாக, கடவுளுக்கு இப்படி இலக்கணங்களும், எல்லைகளும் வகுப்பது நம்மிடையே இருக்கும் ஒரு போக்கு. இன்று இந்தப் போக்கிற்கு, இந்த சோதனைக்கு இடம் கொடுக்காமல், கடவுளைப் பற்றியும், நம்மைப் பற்றியும் புதிதாக என்ன தெரிந்து கொள்ள முடியும் என்று முயன்று பார்ப்போம். இதுபோன்ற முயற்சிகளுக்கு தவக்காலம் நல்லதொரு தருணம்.

பலநூறு அம்சங்கள், இலக்கணங்கள், கடவுளுக்கு உண்டு என்பது நமக்குத் தெரியும். அவருக்குள்ள ஒரு முக்கிய, அழகான அம்சம்... அவர் ஆச்சரியங்களின் கடவுள்... The God of Surprises. நாம் கடவுள் மேல் சுமத்தும் இலக்கணங்களை, வரம்புகளை மீறி, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அவரது அழகு. நற்செய்தியில் இன்று நாம் சந்திக்கும் இயேசு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்... சொல்லப்போனால், நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் செயல்பாடுகள் இவை:

• இயேசு சமாரியர்கள் வாழும் பகுதிக்குச் சென்றார்.

• அப்பகுதியில் உணவு வாங்கி வர தன் சீடர்களை அனுப்பி வைத்தார்.

• அங்கிருந்த ஒரு கிணத்தருகே களைப்புடன் அமர்ந்தார்.

• அங்கு வந்த ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசினார்.

• அதுவும், நடத்தைச் சரியில்லாத ஒரு சமாரியப் பெண்ணிடம் வலியச் சென்று பேசினார்.

ஒரு சராசரி யூதன் செய்யக்கூடாத பல செயல்களை இயேசு துணிந்து செய்தார். இயேசு அந்தப் பெண்ணிடம் வலியச் சென்று தன்னை அறிமுகப்படுத்திய வார்த்தைகள்: "குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்." வெகு எளிதாக, மேலோட்டமாக ஆரம்பமான இந்த உரையாடல் வெகு ஆழமான உண்மைகளைத் தொடுகின்றது. சமாரியப் பெண்ணைப் பற்றி, தன்னைப் பற்றி, தந்தையாம் கடவுளைப்பற்றி பல அற்புதமான உண்மைகள் இவை.

நற்செய்தியில் காணப்படும் அனைத்து உரையாடல்களிலும் யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல்தான் மிக நீளமானது. இந்த உரையாடலின் முடிவில் சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்ந்த ஒரு பெண் அந்த ஊரையே இயேசுவின் பாதம் கொண்டு வந்து சேர்த்த பெருமையைப் பெறுகிறார். இறைவனைப் பற்றிப் பேச யாருக்குச் சிறிதும் தகுதியில்லை என்று உலகம் ஒதுக்கி வைத்ததோ, அவர்களே இயேசுவை உலகறியச் செய்த தலைசிறந்த சாட்சிகள் ஆயினர் என்பதை விவிலியம் பல இடங்களில் கூறியுள்ளது.

இந்த நற்செய்திப் பகுதி இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளைக் கிளறி விடுகிறது. பல பாடங்களையும் சொல்லித் தருகிறது. கிணற்று மேட்டில் நடக்கும் ஓர் உரையாடல் இது. கிணற்று மேடு, டீக்கடை பெஞ்ச், ஊரின் நடுவே உள்ள ஆலமரத்தடி என்று வெகு சாதாரண, வெகு எளிய இடங்களில் சமுதாயம், அரசியல், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் அலசப்படுவது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்த மிகச் சாதாரணமான இடங்களில் இறைவனைப் பற்றிய பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம் என்பதை இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் சமுதாயப் பிளவுகள் குறுக்கிடுவதை இந்த உரையாடல் தெளிவாக்குகிறது. இந்தப் பிளவுகளைக் கடந்து செல்லும்போதுதான் உயிருள்ள ஊற்று நீரை நாம் பருக முடியும் என்பதை இயேசு தெளிவாக்குகிறார். தண்ணீரைப் பற்றி பேசும்போது, பல சமுதாய எண்ணங்களும் மனதில் அலைமோதுகின்றன. இறைவன் தந்த அற்புத கொடைகளில் ஒன்றான தண்ணீரைப் பல வழிகளில் நாம் சீரழித்துள்ளோம். தண்ணீர் தொடர்பாக மனித சமுதாயம் இழைத்துள்ள பல குற்றங்களில், சமுதாயத்தைப் பிரிக்கும் ஓர் ஆயுதமாக தண்ணீரை நாம் மாற்றியுள்ளோம் என்பதே, என்னைப் பொறுத்தவரை, நமது பெரும் குற்றம். "மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று எழுந்தால், அது குடிக்கும் நீராலேயே உருவாகும்" என்று இந்தியாவின் மற்றொரு காந்தி என்று அழைக்கப்படும் சுந்தர்லால் பகுகுணா கூறியுள்ளார். இதே அச்சத்தை உலகத் தலைவர்கள் பலரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கிணறு, ஒரு குளம் என்று பிரித்து தண்ணீரை ஒரு சாதிய ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தியாவுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும் கிணற்றடியில் நடத்திய ஒரு பாடத்தின் வழியாக இயேசு சாட்டையடி வழங்குகிறார். இறைவனின் கொடையான தண்ணீரை சாதி, இனம் என்ற கூறுகளில் பிரித்துள்ளது போதாதென்று, இறைவனையும் பல காரணங்களுக்காகப் பிரித்து கூறுபோடும் மடமை முயற்சிகளில் மனித சமுதாயம் ஈடுபட்டுள்ளதையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக் காட்டுகிறார். இறைவனைத் தொழுவதற்கு மலைகளையும், எருசலேம் புனித நகரையும் தேடாதீர்கள் என்று கூறும் இயேசு, தொடர்ந்து அப்பெண்ணிடம் கூறும் அழகிய எண்ணங்களை இன்றைய நற்செய்தியிலிருந்து கேட்போம்:

யோவான் நற்செய்தி 4 : 21-24 இயேசு சமாரியப் பெண்ணிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள்... உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்” என்றார்.

கடவுளையும், இயேசுவையும் சிறைப்படுத்தும் பல இலக்கணங்கள், எல்லைக் கோடுகள் அனைத்தும் இன்றைய நற்செய்தியில் அழிக்கப்படுகின்றன. அதேபோல், மனிதர்கள் மீது நாம் சுமத்தும் பாகுபாடுகள், முத்திரைகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. சமூகத்தால் தாழ்த்தப்பட்ட சமாரியப் பெண்ணை, நன்னெறி அளவுகோலின்படி கீழ்த்தரமானவர் என்று முத்திரை குத்தப்பட்ட சமாரியப் பெண்ணை தன் நற்செய்தியை அறிவிக்கும் பணியாளராய் இயேசு மாற்றும் அற்புதத்தை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம்.

இலக்கணங்களை, வரம்புகளைத் தாண்டிய உண்மை இறைவனைக் கண்டுகொள்ளவும், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதிலும் பிளவுகளை வளர்த்து வரும் இந்த சமுதாயம், பாகுபாடுகளைத் தாண்டி உயிருள்ள ஊற்றான இறைவனைப் பருகவும் இந்த தவக்காலம் நமக்கு உதவுவதாக.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

24 March, 2011

AT HOME IN GOD’S HOUSE… இறைவனின் இல்லத்தில்...



“And I shall dwell in the house of the Lord forever.” The closing line of Psalm 23 gives us the cosy comfort of home-coming. It is the finale, the catharsis we enjoy at the end of a play or a novel. Right from the time of Aristotle’s poetics through the time of Shakespeare we have been trained to look for closure in most of our writing. Our dramas have three acts – the exposure, the conflict and the resolution (variously called closure or climax).
Psalm 23, says Harold Kushner follows this pattern: “We can read the Twenty-third Psalm as a drama in three acts. Act one is serene, pastoral. The psalmist feels safe and secure, and he thanks God, his faithful shepherd, for providing him with that security. Act two turns dark and stormy. The psalmist’s life is interrupted by trauma, tragedy, and bereavement… He finds himself alone in a dark valley. Then he learns that he is not really alone… He comes to understand that only because God was with him was he able to find his way out of the darkness… In act three, he realises that his understanding of God, his relationship to God, has matured as well. God is no longer just the one who follows him through his travails, God now offers him something more permanent, an invitation to dwell in His house.”

Kushner then goes on to discuss what it means to dwell in the house of the Lord. In English we use the words ‘house’ and ‘home’ with very different meanings. House is more often a physical construction whereas ‘Home’ is an emotional, even a spiritual term. “‘Home’ is such an evocative word. It speaks of love, of an enduring relationship. Robert Frost defines it as ‘something you somehow don’t have to deserve.’” (Kushner)
Another quote that is very poetic in bringing out the difference between house and home goes like this: “A house is made of walls and beams; a home is built with love and dreams.” (Christian Morganstern)

One of the uppermost thoughts associated with ‘home’ is security. Security that comes not from the four walls and a roof, but from living among those who love us and accept us as we are. For the psalmist, the house of the Lord is worth living in all the days of one’s life because of the presence of the Lord and nothing else. Here are some lovely lines from other psalms:
One thing I ask from the LORD, this only do I seek:
that I may dwell in the house of the LORD all the days of my life,
to gaze on the beauty of the LORD and to seek him in his temple.
(Psalm 27:4)
The last line of this passage clearly tells us that the Lord is present in this hose. Without this presence, even magnificently built palaces do not become the choice of the psalmist.
How lovely is your dwelling place, LORD Almighty!
My soul yearns, even faints, for the courts of the LORD;
my heart and my flesh cry out for the living God…
Better is one day in your courts than a thousand elsewhere;
I would rather be a doorkeeper in the house of my God
than dwell in the tents of the wicked.
(Psalm 84: 1-2,10)

Similar thoughts are expressed by Jesus in his final promise to his disciples. “My Father’s house has many rooms; if that were not so, would I have told you that I am going there to prepare a place for you? And if I go and prepare a place for you, I will come back and take you to be with me that you also may be where I am.” (John 14: 2-3)
The Father’s house would become meaningful to the disciples not because it has many rooms, but because Jesus will be with the disciples. That is what makes the Father’s house special.

Like the two sides of a coin, every issue has two sides. Thoughts about ‘home’ are not always pleasant. There are many homes where family members, although living in physical proximity, have drifted far away from one another. For them ‘home’ has become a veritable prison. Some of these family members, instead of searching for the root cause of these estranged relationships within themselves, tend to blame the construction of the house (‘vasthu’ etc.) for their problems. Their solution to mending relationships is a change of house. Changing a house may be an easy solution; but creating a home is still a far more challenging proposition.

Living in the house of the Lord all the days of our life also poses quite a few challenges. Living in the presence of God can be comforting as well as intimidating – depending on our relationship to the Lord. “For the author of the Twenty-third Psalm, dwelling in God’s house, having the sense that every moment of his day is being lived under God’s watchful eye, is the most reassuring, most comforting thought he can have.” (Kushner)

How comfortable, how much ‘at home’ do we feel in God’s house, with God for the rest of this life as well as eternity… FOREVER?


Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


நாம் அனைவரும் வாழ்வின் பல நேரங்களில் அடைந்துள்ள ஓர் அனுபவத்துடன் இன்றைய விவிலியத் தேடலை ஆரம்பிப்போம். ஒவ்வொரு நாளும் மாலையில் அன்றைய வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறோம். அங்கு வந்ததும் என்ன நடக்கிறது? காலணிகளைக் கழற்றிவிட்டு, உடையை மாற்றி, எளிதான உடைகளை அணிந்துகொண்டு, ஒரு சாய்வு நாற்காலியில், அல்லது ஒரு பாயில் அமர்ந்து ஒரு செம்பு தண்ணீரைக் குடித்திருக்கிறோம். அல்லது அம்மா சுடச்சுடக் கொண்டுவந்து தரும் காபியைக் குடித்திருக்கிறோம். அந்த நேரத்தில் நாம் அடையும் ஒரு நிறைவு, மகிழ்வு தனிப்பட்ட ஒன்று. இந்த நிறைவை, மகிழ்வைத் தரும் இடத்தைத்தான் நாம் இல்லம் என்கிறோம்.
இந்த ஓர் உணர்வுடன் இன்றைய நம் தேடலை ஆரம்பிப்பதற்கு காரணம் உண்டு. இன்று நம் தேடலில் திருப்பாடல் 23ன் இறுதி வரியைச் சிந்திக்க வந்திருக்கிறோம். "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" என்பன இத்திருப்பாடலின் இறுதி வார்த்தைகள். ஒரு சில மொழிபெயர்ப்புகளில் ‘நெடுநாள்’ என்பதற்குப் பதில், 'என்றென்றும்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்." என்ற வார்த்தைகள் தரும் பாதுகாப்பான உணர்வுடன் நம் தேடலை இன்று ஆரம்பிக்கிறோம்.

அரிஸ்டாட்டில், ஷேக்ஸ்பியர் காலம் துவங்கி, நம் காலம் வரை இலக்கிய வழக்கின்படி எழுதப்பட்டுள்ள பெரும்பாலான நாடகங்கள் மூன்று அங்கங்கள் கொண்டவை. முதல் அங்கம் கதை உருவாகும் களத்தை விவரிக்கும். இங்கு எல்லாம் சுமுகமாக, அமைதியாக நடைபெறும்.
இந்தச் சுமுகமானச் சூழலில் பிரச்சனை உருவாகும். அந்தப் பிரச்சனை பல வடிவங்கள் பெற்று, வலுவடைந்து, கதையில் உள்ள அனைவரையும் பாதிக்கும். கதையின் நாயகன் இந்தப் பிரச்சனைகளுடன் மோதி, அவற்றைத் தீர்க்க முயல்வார். இது இரண்டாம் அங்கம்.
நாயகனின் முயற்சிகள், மற்றவர்களது உதவிகள், கடவுளின் அருள் என்று பல அம்சங்கள் இணைந்து, பிரச்சனை தீர்க்கப்படும். நன்மையின் பக்கம் இருந்த அனைவரும் மகிழ்வில் நிறைவர். கதை முடியும். இது மூன்றாவது அங்கம்.

இந்த இலக்கிய வழக்கைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு கவிதையாக திருப்பாடல் 23ஐ நாம் காணலாம். இதன் முதல் அங்கத்தில் பசுமைப் புல்வெளி, அமைதியான நீர்நிலை, தேவையான உணவு, ஒய்வு எல்லாவற்றையும் அனுபவிக்கும் ஓர் ஆடாகத் தன்னை வர்ணித்தார் அதன் ஆசிரியர்.
இந்தச் சுமுகமானச் சூழலில் இருள், சாவு, எதிரிகள் என்று பிரச்சனைகள் எழுந்தன. பிரச்சனைகள் தன்னைச் சூழ்ந்தபோது, தன்னுடன் ஆயனாம் ஆண்டவனும் இருந்தார் என்பதையும் ஆசிரியர் உணர்ந்தார். இது இரண்டாம் அங்கம்.
ஆயன் உடனிருக்கிறார் என்ற அந்த நம்பிக்கையில் திருப்பாடலின் ஆசிரியர் இருளும் சாவும் நிறைந்த பள்ளத்தாக்கைக் கடந்து வெளியேறினார். அவரைப் புடைசூழ்ந்து வந்த அருள் நலமும், பேரன்பும் அவரை இறைவனின் இல்லத்திற்கு வந்து சேர்த்துள்ளன என்று மூன்றாம் பகுதியில் கூறியுள்ளார்.

"நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்." என்ற இந்த வரியில் முதலில் நம் கவனத்தை "ஆண்டவரின் இல்லம்" என்ற வார்த்தைகள் ஈர்க்கின்றன. நாம் குடும்பமாய் வாழுமிடத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் இரு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். House மற்றும் Home. தமிழில் இதை வீடு மற்றும் இல்லம் என்று சொல்லலாம்.
கல், மண், சிமென்ட், கம்பிகள் என்று பல பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டிடத்தை House, வீடு அல்லது மாளிகை என்று சொல்கிறோம். ஓர் இல்லம் உருவாக பொருட்கள் தேவையில்லை மனங்கள் தேவை. மனங்கள் ஒன்றி உருவாகும் ஓர் அமைப்பையே நாம் Home அல்லது இல்லம் என்று சொல்கிறோம்.

“A house is made of walls and beams; a home is built with love and dreams.”
கற்களால் கம்பிகளால் கட்டப்படுவது வீடு.
கனவால், கனிவால் உருவாக்கப்படுவது இல்லம். - Christian Morganstern

“Home is something you somehow don’t have to deserve.”
இதை அடைய நாம் தகுதி உள்ளவர்கள்தானா என்ற கவலையைச் சிறிதும் உருவாக்காத ஓர் இடமே நமது இல்லம்.
Robert Frost

இல்லம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நம் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பை நான்கு சுவர்களோ, தலைக்கு மேல் உள்ள கூரையோ தருவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் இதயங்கள் தரும் பாதுகாப்பே நாம் இல்லத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். 'ஆண்டவரின் இல்லத்'தைக் குறித்து திருப்பாடல் ஆசரியர் வேறொரு திருப்பாடலில் கூறியுள்ள அழகிய வரிகளும் நமக்குப் பழக்கமான வரிகள்தாம்:

திருப்பாடல்கள் 27: 4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்: ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்: அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

இந்த வரிகளில் ஆசிரியர் கூறும் 'ஆண்டவனின் இல்லம்' வெறும் கட்டிடம் அல்ல. கடவுளின் அருகாமை, அதனால் கிடைக்கும் கடவுளின் முக தரிசனம், கடவுளின் வழிநடத்தும் பரிவு ஆகியவை இருப்பதாலேயே அந்த இல்லத்தில் தான் நெடுநாள் வாழ விரும்புவதாகக் கூறுகிறார் ஆசிரியர். கடவுள் இல்லாத வெறும் கட்டிடம் பெரிய அரண்மனையாய் இருந்தாலும் அதில் தங்க விரும்பவில்லை என்பதையும் வேறொரு திருப்பாடலில் கூறியுள்ளார்.

திருப்பாடல்கள் 84: 1, 10
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது… வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது: பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.

இதேயொத்த எண்ணங்களையே இயேசுவும் தன் சீடர்களுக்குக் கூறியுள்ளார்.
யோவான் நற்செய்தி 14: 1-3
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

தன் தந்தையின் மாளிகையில் பல அறைகள் உண்டு என்று ஆரம்பிக்கும் இயேசு, இறுதியில் அங்கு தன் சீடர்களுடன் தான் இருப்பேன் என்ற உறுதியையும் தருகிறார். அந்த உறுதியாலேயே உறைவிடங்கள் பல உள்ள மாளிகை இல்லமாக மாறுகிறது.

நாணயத்தின் இரு பக்கங்கள் போல், எந்த ஓர் உண்மைக்கும் மறுபக்கமும் இருக்குமல்லவா? அன்பிற்கும் பாதுகாப்பிற்கும் இலக்கணமாய் அமைவது இல்லங்கள் என்று சொல்கிறோம். எல்லா இல்லங்களும், எல்லா நேரங்களிலும் அன்பை, பாதுகாப்பை அளிக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது. இல்லத்தில் வாழ்பவர்கள் இடையே இரகசியங்கள், ஒளிவு மறைவுகள் அதிகமாகும்போது சந்தேகங்கள் என்ற கார்மேகங்களும் திரளும். புயல்கள் உருவாகும். புயல்கள் உருவானபின், அன்பையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய இல்லங்கள் சந்தேகச் சிறைகளாக மாறிவிடும்.
ஒரு சிலர் இந்தப் புயல்களுக்கான காரணங்களைத் தங்கள் உள்ளங்களில், உறவுகளில் தேடாமல், தாங்கள் வாழும் வீடுகள் கட்டப்பட்ட முறை சரியில்லை என்று குறை கூறுவதையும் நாம் பார்க்கிறோம். வீட்டை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்றும் நம்புகின்றோம். வெறும் கல்லாலும் மண்ணாலும் எழுந்த வீட்டை எளிதில் மாற்றி விடலாம். ஆனால், உள்ளங்களை, உறவுகளை அவ்வளவு எளிதில் மாற்ற முடிகிறதா? மனங்கள் மாறாமல், வெறும் வீடு மாற்றம் செய்வதால் இல்லத்தை உருவாக்க முடியாது.

கடவுளின் இல்லம் என்று சொல்லும்போது, அங்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அந்த இல்லத்தில் வாழும் பக்குவம் நமக்கில்லையென்றால், அந்த வீட்டில் வாழ்வது எளிதல்ல. இறைவனோடு வாழ்வது என்பது அவரது அருகாமை, அவரது தொடர்ந்த பார்வை, கண்காணிப்பு இவைகளையும் உள்ளடக்கியது. இந்த எண்ணம் நம்மை அமைதியில் ஆழ்த்தலாம், அல்லது சங்கடத்திலும் ஆழ்த்தலாம். கடவுளின் தொடர்ந்த கண்காணிப்பில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றாலும், அந்தப் பார்வையில் வாழும் பக்குவம் நாம் பெற வேண்டும். “நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் (அல்லது, என்றென்றும்) வாழ்ந்திருப்பேன்.” என்று திருப்பாடல் ஆசிரியரைப் போல் பெருமையோடு சொல்லும் பக்குவம் பெற இறையருளை வேண்டுவோம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
http://www.vaticanradio.org/

21 March, 2011

CALLED TO CHANGE மாற்றத்திற்கான அழைப்பு




Last Sunday, the First Sunday of Lent, we were given the privilege of seeing a very private experience of Jesus, probably one of the most vulnerable moments of his life… the temptations. Today, the Second Sunday of Lent, gives us the opportunity to see him in one of his most glorious moments… the transfiguration. I would like to begin this reflection with a class on human anatomy.

Human skin is an amazing organ -- protective, waterproof, and exceedingly useful. It's also constantly changing and regenerating itself… Your skin is composed of several layers… It takes roughly one month for new cells to get all the way to the top layer, meaning the skin you have a month from today will be completely new compared to the skin you have now.
(How many skin cells do you shed every day? by Ed Grabianowski)

Quite a few gels and lotions are advertised with false claims that they can keep my skin fresh, young, ageless and changeless! Blatant lie! No lotion can keep our skin changeless even for an hour. Here are some ‘enlightening’ facts about our skin:
Scientists estimate that the human body is made up of around 10 trillion cells in total. Your skin makes up about 16 percent of your body weight, which means you have roughly 1.6 trillion skin cells [source: BBC]. Of course, this estimate can vary tremendously according to a person's size. The important thing is that you have a lot of skin cells. Of those billions of skin cells, between 30,000 and 40,000 of them fall off every hour. Over a 24-hour period, you lose almost a million skin cells [source: Boston Globe]… In other words, your house is filled with former bits of yourself. In one year, you'll shed more than 8 pounds (3.6 kilograms) of dead skin.
(How many skin cells do you shed every day? by Ed Grabianowski)
http://health.howstuffworks.com/skin-care/information/anatomy/shed-skin-cells.htm

Change is an essential part of human beings as well as other living forms. When change ends, we usually presume that life has ended. But, even after death, change (we call it decay) takes place. We are invited to think of this most common phenomenon of human beings on the II Sunday of Lent when we think of change – change of place for Abram, and the transfiguration of Jesus.

Change can happen in bits and pieces, as in the case of our skin, or in sudden moment as it happened on 11th March in Japan. Since we are reflecting on change, we shall in a special way pray for the Japanese people that they recover from this sudden, tragic change and its consequences soon.

Last week we reflected that everyone born will have to face temptations. This week we reflect on another common human phenomenon – CHANGE! Change is a key theme during the Lenten season - change of heart, change of our lifestyle. Most of us would tend to believe that when our surrounding changes we also change. On deeper analysis, we can see that radical, lasting changes can begin mostly from within. Here is a story from the master storyteller Fr Anthony de Mello in his famous book ‘The Song of the Bird’:

CHANGE THE WORLD BY CHANGING ME
The Sufi Bayazid says this about himself; “I was a revolutionary when I was young and my prayer to God was: ‘Lord, give me the energy to change the world.’”
“As I approached middle age and realized that half my life was gone without my changing a single soul, I changed my prayer to: ‘Lord, give me the grace to change all those who come in contact with me. Just my family and friends, and I shall be content,’”
“Now that I am an old man and my days are numbered, my one prayer is, ‘Lord, give me the grace to change myself.’ If I had prayed for this right from the start I should not have wasted my life.”

http://www.arvindguptatoys.com/arvindgupta/songofbird.pdf

The first reading from the Book of Genesis talks of the baby steps Abram took in order to be changed to Abraham. God invites Abram to leave his familiar surroundings into the unknown, trusting in God alone. Not a great deal, one would say, if this were to happen when a person was in the prime of life. But, when Abram was called for this adventure he was 75 years old. Baby steps at the age of 75? Here is this invitation from God:

Genesis 12: 1-4
The LORD had said to Abram, “Go from your country, your people and your father’s household to the land I will show you. I will make you into a great nation, and I will bless you; I will make your name great, and you will be a blessing. I will bless those who bless you, and whoever curses you I will curse; and all peoples on earth will be blessed through you.”
So Abram went, as the LORD had told him; and Lot went with him. Abram was seventy-five years old when he set out from Harran.

When I read this passage, my mind instinctively turned to many senior persons who, in a way, are ‘forced’ to take the leap into the unknown. I am thinking of parents who have to shift their familiar surroundings in order to be with their children who have settled down in another country. Spare a moment to pray for them. God promised to Abram: “I will bless you; I will make your name great, and you will be a blessing… and all peoples on earth will be blessed through you.” May senior persons who have to face the tough decision of uprooting and planting themselves in unfamiliar circumstances be filled with God’s blessings and become a blessing to others!

Change that begins from within can transform people and transform the world around them. This change is more than helped by true love. Here is another story from ‘The Song of the Bird’ that ties up change and love of God quite neatly:

DON’T CHANGE
I was a neurotic for years. Anxious, depressed, selfish. And everyone kept telling me to change.
And I resented them, and agreed with them, and wanted to change, but simply couldn’t, no matter how I tried. What hurt the most was that, like the others, my closest friend kept urging me tochange. So I felt powerless and trapped.
One day he said “Don’t change. I love you as you are.”
Those words were music to my ears: “Don’t change. Don’t change. Don’t change... I love you as you are.”
I relaxed. I came alive. And, suddenly, I changed!
Now I know that I couldn’t really change till I found someone to love me whether I changed or not.
Is this how you love me, God?

http://www.arvindguptatoys.com/arvindgupta/songofbird.pdf

In the Transfiguration event given in Matthew’s Gospel, (Matthew 17: 1-9) we see this transforming love of God in the most endearing affirmation: “This is my Son, whom I love; with him I am well pleased. Listen to him!” (Mt. 17:5).

Dear friends, this Sunday we pray for the following intentions:
That the people of Japan who have been devastated by the changes in nature as well as their own invention – the atomic energy – may come out of this crisis with God’s grace…
That seniors who are forced to change from familiar surroundings to strange places may be blessed by God abundantly and thus become a blessing themselves…
That we learn deeper lessons of ‘change’ that is an inevitable part of our human experience…

Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


ஓர் உயிரியல் பாடத்துடன் நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று ஆரம்பிப்போம். நமது உடலில் பொதுவாக 10 இலட்சம் கோடி செல்கள் (10 trillion cells) உள்ளன. அவற்றில் 16 விழுக்காடு, அதாவது, ஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி செல்கள் நமது தோல் பகுதியாக உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 40,000 செல்கள் ஒவ்வொரு மணி நேரமும் இறந்து, புது செல்கள் உருவாகின்றன.
உங்கள் சருமத்தை இளமை மாறாமல் அதே நிலையில் வைத்திருக்க எங்கள் கம்பெனியின் 'க்ரீமை'ப் பயன்படுத்துங்கள் என்று சொல்லும் அனைத்து விளம்பரங்களும் அப்பட்டமான பொய். உலகின் எந்த ஒரு ‘க்ரீமு’ம் நமது தோலை ஒரு நாள் கூட மாறாமல் வைத்திருக்க முடியாது. ஒரு நாளைக்கு நாம் 10 லட்சம் செல்களை இழக்கிறோம், உருவாக்குகிறோம். நமது தோலிலிருந்து இறந்து விழும் செல்கள் நுண்ணிய தூசி போன்ற குப்பையாக நமது வீடுகளில் சேகரிக்கப்படுகின்றன. எனவே, எதோ ஒரு 'க்ரீம்' நமது தோலை இளமை மாறாமல் காக்கும் என்பதை நம்புவதற்குப் பதில், ஒவ்வொரு நொடியும் நமது உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதை நம்புவதே மேல்.
நமது தோலிலோ உடலிலோ மாற்றங்கள் இல்லையெனில் அதற்கு ஒரே ஓர் அர்த்தம், நமது உடலில் உயிர் இல்லை என்பதுதான். இறந்த நம் உடலும் புதைக்கப்பட்டால், அங்கும் மாற்றங்கள் தொடரும். மனிதராய் பிறந்த அனைவருக்கும், உயிரினங்கள் அனைத்திற்கும் உள்ள ஓர் அடிப்படை நியதி... மாற்றம்.

நமது உடலில் அல்லது மேல்தோலில் ஏற்படுவது போல், மாற்றங்கள் வாழ்வில் மெதுவாக, சிறுகச் சிறுக வரலாம். அல்லது இம்மாதம் 11ம் தேதி ஜப்பானில் உருவானதுபோல் நொடிப் பொழுது மாற்றங்கள் நம் உலகையும், வாழ்வையும் தலை கீழாய் புரட்டிப் போடலாம். மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும் வேளையில் ஜப்பானில் இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வு தலைகீழாக மாறியுள்ளதை எண்ணி அவர்கள் நல வாழ்வை நோக்கி மீண்டும் மாறி வர அவர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம்.

தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். இக்காலத்தில் நாம் அடிக்கடி பேசும் அல்லது சிந்திக்கும் ஓர் எண்ணம் - மனமாற்றம். மனம் மாறும்போது, அதற்கு இணையாக வாழ்வு மாறும், இவ்வுலகமும் மாறும். மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? நமக்குள்ளிருந்தா அல்லது வெளி உலகிலிருந்தா? பல நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள், நமது சூழல் மாறினால் நாமும் மாறுவோம் என்று எண்ணுகிறோம், நம்புகிறோம். தீர ஆராய்ந்தால், நமக்குள் இருந்து வரும் மாற்றங்களே பிற மாற்றங்களின் அடித்தளமாய் அமையும்.... நமக்குள் இருந்து எழும் மாற்றங்களே நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உணரலாம்.

மாற்றங்களைப் பற்றி, அதுவும் நமக்குள் இருந்து ஆரம்பமாகும் மாற்றங்களைப் பற்றி பேசும்போது, அருள்தந்தை Anthony de Melloவின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்தார்: நான் புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் இருந்தபோது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் செபம் சிறிது மாறியது: "கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது இதுதான்: "கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம்தா!" என்பதே என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். ஒரு வேளை என்னைச் சுற்றியிருந்தவர்களும், இந்த உலகமும் மாறியிருக்கும்.

மாற்றங்களை, மனமாற்றங்களை சிந்திப்பதற்கு இன்றைய ஞாயிறு நல்லதொரு தருணம். ஆபிரகாம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடக்க நூல் இன்றைய முதல் வாசகமாகத் தருகிறது. இயேசு அடைந்த உருமாற்றத்தை இன்றைய நற்செய்தி சொல்கிறது.

ஆபிரகாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பழக்கப்பட்ட ஓரிடத்திலிருந்து புதிய ஓர் இடத்திற்குச் செல்லும்படி இறைவன் அவரை அழைக்கிறார். (தொடக்க நூல் 12:1) இந்த மாற்றத்திற்கு இறைவன் அவரை அழைத்தபோது, ஆபிரகாமின் வயது 75. அந்த வயதில் ஒருவரால் பழக்கப்பட்ட இடங்களைவிட்டு, புதிய நாட்டிற்குப் போகமுடியுமா? சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். இன்று நாம் சந்திக்கும் ஓர் எதார்த்தம்.
என் நண்பர் ஒருவரது பெற்றோர் மதுரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்தவர்கள். அத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சென்னையில் வாழும் தங்கள் மகனோடு சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது. அவர்கள் சென்னைக்கு வந்தபின் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். மதுரையில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டைக் காட்டிலும், சென்னையில் அவர்கள் இருந்த வீட்டில் வசதிகள் அதிகம் இருந்தன. இருந்தாலும், அவர்கள் எதையோ இழந்தவர்கள் போல் சோகமாய் இருந்தனர். நீரைவிட்டு வெளியே எறியப்பட்ட மீன்களைப் போல் அவர்கள் தவித்ததை உணர முடிந்தது. மதுரையும், சென்னையும் தமிழ் நாட்டின் பகுதிகள் தான். இருந்தாலும் அவர்களுக்கு அந்த வயதில் வந்த அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ் நாட்டை விட்டு, இந்தியாவின் பிற மாநிலங்களில் சென்று தங்க வேண்டியுள்ள வயதான பெற்றோரை எண்ணிப் பார்ப்போம். இந்திய மண்ணை விட்டு பிற நாடுகளில் வயதான காலத்தில் சென்று வாழ வேண்டிய பெற்றோரை எண்ணிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் நமது வேண்டுதல்களுக்கு உரியவர்கள். வயதான காலத்தில் பழக்கப்பட்டச் சூழல்களில் இருந்து புதிய சூழல்களுக்குத் தள்ளப்பட்டுள்ள, அல்லது புதியச் சூழல்களில் திணிக்கப்பட்டுள்ள இவர்களை நினைக்கும்போது, நீரை விட்டு வெளியேற்றப்பட்ட மீன், வேரோடு பிடுங்கப்பட்ட செடி அல்லது மரம் ஆகியவைகளே நமது எண்ணங்களில் பதியும் உருவகங்கள். ஆபிரகாமுக்கு இறைவன் இந்த அழைப்பைத் தந்தபோது, கூடவே தன் முழுமையான அசீரையும் தருவதாகக் கூறுகிறார். அது மட்டுமல்ல, ஆபிரகாமே ஓர் ஆசியாக மாறுவார் என்றும் இறைவன் வாக்களிக்கிறார். இறைவன் ஆபிரகாமிடம் சொல்வதைக் கேட்போம்:

தொடக்கநூல் 12 : 1-4
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.

வயது முதிர்ந்த காலத்தில் பழக்கப்பட்டச் சூழல்களை விட்டு, புதியச் சூழல்களுக்குச் செல்லும் பெற்றோர் ஆபிரகாமைப் போல் இறையாசீரைச் சுமந்து செல்லவும், அதன் வழியாக இறையாசீராகவே இவர்கள் மாறவும் வேண்டுமென செபிப்போம்.

இன்றைய நற்செய்தி இயேசுவின் உருமாற்றத்தைப் பற்றிக் கூறியுள்ளது. இயேசுவின் உருமாற்றத்தைப் பல கோணங்களில் சிந்திக்கலாம். இந்த உருமாற்ற நிகழ்வின் உச்சக்கட்டத்தை மட்டும் இப்போது சிந்திப்போம். இந்த உச்சக்கட்டத்தில் இயேசு தந்தையின் அன்புக்குரிய மகன் என்று புகழப்படுகிறார். உண்மையான அன்பு நல்ல மாற்றங்களை உருவாக்கும் வலிமை பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். Anthony de Melloவின் மற்றொரு கதை இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.
பல வழிகளிலும் பக்குவமின்றி நடந்து வந்த ஓர் இளைஞனிடம் அனைவரும்: "தம்பி, நீ மாற வேண்டும்! மாற வேண்டும்!" என்ற ஒரே ‘கோரஸா’கச் சொல்லி வந்தனர். மாற வேண்டுமே என்ற கவலையில் அவன் இன்னும் மோசமாக மாறினான். அவன் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட ஒரு பெண் ஒரு நாள் அவனிடம் "நீ உண்மையிலேயே மிக நல்லவன். நீ மாற வேண்டிய தேவையே இல்லை." என்று கூறினார். அன்று முதல் அவன் மாற ஆரம்பித்தான்.

மலை என்பது இறைவன் வாழும் இடம் என்பதை இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்திருதது போல் இயேசுவும் உணர்ந்திருந்தார். அன்று தன் சீடர்களுடன் மலைக்குச் சென்றதும், இறைவனின் பிரசன்னமும் அன்பும் தன்னைச் சூழ்ந்ததை அவர் உணர்ந்திருப்பார். அந்த உணர்வே அவரை உருமாற்றியிருக்க வேண்டும். இயேசு தனித்து உணர்ந்த தந்தையின் அன்பை இறைவன் சீட்கள் வழியே உலகறியச் செய்கிறார்.
இயேசுவுக்கும், சீடர்களுக்கும் நடந்த இந்த அற்புதமான, உன்னதமான உச்சக்கட்ட பூரிப்பிலேயே அனைவரும் தங்கிவிடலாம் என்று பேதுரு ஆலோசனை சொல்கிறார். கடவுளின் அன்பு நம்மில் உருவாக்கும் மாற்றங்கள் நம்முடைய தனிச் சொத்து என்று அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட முடியாது. மீண்டும் மலையை விட்டு இறங்க வேண்டும், அதுமட்டுமல்ல... மற்றொரு மலைமேல் இறக்க வேண்டும் என்பதையும் இயேசு உடனடியாக தன் சீடர்களுக்குச் சொல்கிறார். இயேசு அவர்களுக்கு உடனடியாக நினைவுபடுத்துகிறார். இறையன்பைச் சுவைப்பது பணி வாழ்வுக்கும், தியாகத்திற்கும் இட்டுச் செல்லவேண்டும். இல்லையெனில் அவ்வன்புக்கு அர்த்தம் இருக்காது என்பதை இயேசு தெளிவாக்குகிறார்.

தவக்காலத்தின் இந்த இரண்டாம் ஞாயிறன்று ஆபிரகாமின் வாழ்வில் மாற்றங்களை நிகழ்த்த இறைவன் கொடுத்த அழைப்பையும் இயேசுவின் உருமாற்றத்தையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம் மனதில் எழும் ஒரு சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
நிலநடுக்கம், சுனாமி, அணுக்கதிர் வீச்சு ஆகிய அடுக்கடுக்கான ஆபத்துக்களைச் சந்தித்துள்ள ஜப்பான் மக்கள் இரண்டாம் உலகப் போரில் சந்தித்த அணு அழிவு என்ற துயரச் சாம்பலிலிருந்து உயிர்பெற்று உயர்ந்தது போல், இப்பேரிடர்களிலிருந்தும் உயிர் பெற்று எழ வேண்டுமென அவர்களுக்காகச் சிறப்பாகச் செபிப்போம்.
75 வயதில் தன் நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு அழைக்கப்பட்ட ஆபிரகாம், இறையாசீரைச் சுமந்து சென்றதுபோல், இறை அசீராகவே மாறியதுபோல், தங்கள் சூழ்நிலைகளை மாற்றவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் வயதான பெற்றோர் ஆபிரகாமைப் போல் செல்லும் இடமெல்லாம் இறையாசீரைச் சுமந்து செல்பவர்களாக மாற அவர்களுக்காகச் செபிப்போம்.
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் வேளையில், தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழ் நாட்டிலும் இன்னும் பிற மாநிலங்களிலும் மக்கள் வாழ்வை மையப்படுத்திய நல்ல மாற்றங்கள் உருவாக வேண்டும் என்றும் சிறப்பாக செபிப்போம்.
ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாற வேண்டும் என்று இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லித் தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக் கொள்ள ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
http://www.vaticanradio.org/

DEEPLY DIVINE ‘HESED’ பாத்திரம் அறியாது கொட்டும் பேரன்பு



We are reflecting on the last verse of Psalm 23: “Surely goodness and mercy shall follow me all the days of my life…” My heart goes out to Japan which is still reeling under the complex problems of the earthquake, tsunami and atomic radiation. More than the earthquake and the tsunami, the atomic radiation must be haunting them very much, reviving memories of the atomic holocaust they suffered in 1945.
This catastrophe has been looked at from different angles, different perspectives. This is seen as an occasion to learn some lessons, especially about relying so much on atomic power. Already we have heard that China is re-thinking its rush to build many nuclear reactors. The tragic events make Japan, once again, a model in resilience and hard work. Many countries in the world believe that this country will rise with greater determination as it had done after Hiroshima-Nagasaki disaster. We pray that the hope-filled lines of Psalm 23, especially the line: “Surely goodness and mercy shall follow me all the days of my life…” give enough strength and hope to the people of Japan.

Different perspectives on Japan give us different emotions. As we have already mentioned, it is not the events themselves, but the perspective on the events that fills us with hope or despair. Talking of perspectives, I am reminded of one of the experiences I had a few years back. I was living with another very elderly Jesuit – over 90 years old – in a Jesuit Community. He was very sympathetic to the poor. He would give away money to anyone who came asking for help. Some would misuse his generosity and his lapse of memory and get money repeatedly. For instance, a lady would bring a child and ask for help to procure medicine and food for the child. Within an hour, another lady would bring the same child once again and ask for money. Once I spoke to this elderly Jesuit about how people were cheating him. I asked him point blank whether he was aware that he was getting cheated. His response was quite significant. He said: “Well, I know people cheat me. I am helping around 30 to 40 people daily. Even if many of them cheat me, I am sure that among them at least a few would truly be in need. Why would I deny help to these few people who are really in need just because of others who cheat me?” Different perspectives… I was bothered about those who were cheating the elderly Jesuit while he was bothered about those who were really in need. The sympathetic love of this priest is a reflection of ‘Hesed’ – the lovingkindness of God mentioned in the last verse of Psalm 23. Such was the kindness shown by the shepherd who left the 99 sheep in order to go in search of the one sheep that had strayed. Apparently illogical… deeply divine!

It would be helpful to reflect on the idea of ‘hesed’ (or chesed) found in Jewish thought:
In traditional musar literature (ethical literature), chesed is one of the primary virtues. The tannaic rabbi Simon the Just taught: "The world rests upon three things: Torah, service to God, and bestowing kindness (chesed)" Chesed is here the core ethical virtue…
Chesed is closely linked in tradition with compassion. Lack of compassion marks a people as cruel. The repeated injunctions of the Law and the Prophets that the widow, the orphan and the stranger should be protected show how deeply, it is argued, the feeling of compassion was rooted in the hearts of the righteous in ancient Israel.
http://en.wikipedia.org/wiki/Chesed

For the people of Israel, the idea of showing compassion, especially showing compassion to a stranger, is not simply an obligation that comes from the law. It is a natural consequence of reliving what they have been. They have been strangers in Egypt. There are quite a few references to this injunction of showing compassion to strangers.

Exodus 22: 21-23
Do not mistreat or oppress a foreigner, for you were foreigners in Egypt. Do not take advantage of the widow or the fatherless. If you do and they cry out to me, I will certainly hear their cry.
Leviticus 19: 34
The foreigner residing among you must be treated as your native-born. Love them as yourself, for you were foreigners in Egypt. I am the LORD your God.
Deuteronomy 10: 18-19
He defends the cause of the fatherless and the widow, and loves the foreigner residing among you, giving them food and clothing. And you are to love those who are foreigners, for you yourselves were foreigners in Egypt.

Such thoughts do not seem to be prevalent these days between the Israel – Palestine countries. Let us be careful not to point accusatory fingers only towards them, since in most countries in the world people are divided and sub-divided as ‘strangers and foreigners’. The world is bursting with problems of refugees and ‘displaced’ people. We pray that true ‘hesed’ surrounds the whole world.

The closing thoughts on this line come, as usual, from Harold Kushner.
Is the psalmist’s confident prayer that ‘hesed’ will follow him all the days of his life an expression of hope that people will treat him mercifully…? Or is it a prayer that he will be blessed with the capacity to be merciful, to be forgiving, all the days of his life? Probably both…
When the psalmist speaks of “goodness and mercy following him all the days of his life,” I understand that as a vision of a world where goodness and mercy will characterize every stage of the lifespan, where adolescents will be merciful to one another instead of treating one another cruelly out of their own insecurity, a world where husbands and wives will bless each other with unearned love instead of “keeping score”, a world where the elderly will find contentment in the last chapters of their lives because people will treat them with respect and honour, “forgiving” them for the limitations that old age might impose on them…
When the psalmist writes “Surely goodness and mercy shall follow me…,” he is expressing confidence, born of all his experiences with God, that he will be blessed with God’s love, not because of who he is but because of who God is.

(Harold S. Kushner)

Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
http://www.vaticanradio.org/ and keep in touch. Thank you.


2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியாவின் பல கடற்கரைப் பகுதிகளை அழித்த சுனாமியைப் போல், மார்ச் 11, வெள்ளியன்று மற்றுமொரு சுனாமி ஜப்பானைத் தாக்கியுள்ளது. சுனாமி என்ற வார்த்தையை உலகிற்கு அறிமுகம் செய்ததே ஜப்பானியர்கள்தாம். பல பயங்கர நிலநடுக்கங்களையும், சுனாமிகளையும், சந்தித்துள்ள அவர்களுக்கே இம்முறை நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமி, இவைகளைத் தொடர்ந்து அணுசக்தி மின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துக்கள் ஜப்பானியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த நிகழ்வுகளைக் குறித்து வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை நாம் கேட்டு வருகிறோம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமைதிக்கும் உலக வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் ஜப்பான் மக்களுக்கு ஏன் இந்தக் கொடுமை? என்று கேள்வியை எழுப்புகிறோம்.
உலகின் முதல் தர நாடுகளில் ஒன்றான ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், உலகில் பல நாடுகளுக்கு இது ஒரு பாடம். அதிலும் அணு சக்தியை அதிகமாய் நம்பி வாழும் பல வளரும் நாடுகளுக்குத் தரப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை இது என்பதும் நாம் கேட்கும் ஒரு கருத்து.
சாம்பலில் இருந்து எழுந்துவந்த Phoenix பறவையைப் போல் உலகப் போருக்குப் பின் உழைப்பால் உயர்ந்த ஜப்பானியர்கள், இந்த இயற்கைப் பேரிடருக்குப் பின்னும் காட்டும் பொறுமை, மேற்கொண்டுள்ள முயற்சிகள் உலகை வியப்படைய வைத்துள்ளது. அம்மக்களிடம் இருந்து உலக மக்கள் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்கள் உள்ளன என்பதும் நாம் பேசி வரும் ஒரு கருத்து.

நிகழ்ந்தது ஒன்று. அதைக் காணும் கண்ணோட்டம், அதிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல. வாழ்வில் நடப்பவைகளைப் பற்றிய நம் கண்ணோட்டமே நம் மனதை உறுதியாய் நிற்க வைக்கும், அல்லது, நம்பிக்கையிழந்து நொறுங்கிப் போகச் செய்யும். திருப்பாடல் 23 நமக்குச் சொல்லித் தருவதும் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு கண்ணோட்டமே. உலகில் துன்பங்கள் படைதிரண்டு வந்தாலும், இறைவனின் அருள் நலமும், பேரன்பும் நம்மைப் புடைசூழ்ந்து வரும் என்பதைத் திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். நாம் சிந்தித்து வரும் திருப்பாடல் 23 முழுவதும், சிறப்பாக, இப்போது நாம் சிந்திக்கும் ஆறாம் திருவசனம் தொடர்ந்து துன்பங்களைச் சந்தித்து வரும் ஜப்பான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் தேடலை இன்று ஆரம்பிப்போம்.

கண்ணோட்டங்களைப் பற்றிப் பேசும்போது, என் சொந்த அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்து வந்த இயேசு சபைத் துறவிகள் இல்லத்தில் 90 வயதைத் தாண்டிய ஒரு குருவும் வாழ்ந்து வந்தார். ஏழைகளைக் கண்டதும் மனமிரங்கி, தன்னிடம் உள்ள பணத்தைத் தர்மம் செய்வது அவர் வழக்கம். அவரது இரக்கக் குணத்தைப் பயன்படுத்தி, ஞாபகச் சக்தி குறைந்த அவரது வயதைப் பயன்படுத்தி, ஒரு சிலர் அவரை ஏமாற்றவும் செய்தனர். குழந்தையொன்றைத் தூக்கி வந்து, அக்குழந்தைக்கு உணவும், மருந்தும் வாங்கப் பணமில்லை என்று சொல்லி ஒரு தாய் அவரிடம் பணம் பெறுவார். அரைமணி நேரம் கழித்து, இன்னொரு பெண் அதேக் குழந்தையைத் தூக்கி வந்து உணவுக்கும், மருந்துக்கும் பணம் பெறுவார். இப்படி வயது முதிர்ந்த அந்த குருவை ஏமாற்றிப் பணம் பெறுபவர்களைப் பற்றி ஒருநாள் நான் அவரிடம் பேசினேன்: "சாமி, பல ஏழைகளுக்கு நீங்க உதவிகள் செய்றீங்க... நல்லதுதான்... ஆனா, நீங்க செய்ற உதவி உணமையிலேயே தேவையில இருக்கிறவங்களுக்குப் போய் சேருதான்னு பாக்க வேண்டாமா? பல பேரு உங்கள ஏமாத்தி பணம் வாங்கிட்டுப் போறாங்களே, அது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இன்று நினைவுக்கு வருகிறது. "ஒரு நாளைக்கு சுமார் 30 பேருக்கு நான் உதவிகள் செய்றேன். அதுல ஒருத்தர் ரெண்டு பேராவது உண்மையிலேயே தேவை உள்ளவங்களா இருப்பாங்க. எமாத்றவங்கள என்ன செய்யமுடியும்? அவுங்களுக்காகப் பயந்து, உணமையிலேயேத் தேவை உள்ளவங்களுக்கு எப்படி உதவாம இருக்க முடியும்?" என்று அவர் என்னிடம் மறு கேள்வி கேட்டார். ஏமாற்றுகிறவர்களை மட்டும் எண்ணிப்பார்த்தது என் கண்ணோட்டம்; தேவையில் இருப்பவர்களை மட்டும் எண்ணிப் பார்த்தது அவரது கண்ணோட்டம்.

"பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டும்." "ஆற்றில் கொட்டினாலும், அளந்து கொட்ட வேண்டும்." என்ற பழமொழிகள் இந்த 90 வயது குரு ஏற்றுக்கொள்ள மறுக்கும் பழமொழிகள். உண்மைத் தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவிகள் செய்வதற்காக, பலரிடம் ஏமாந்து போனாலும் பரவாயில்லை என்று சிந்திக்கும் இந்த குரு கடவுளின் Hesed என்ற பேரன்புக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு. தகுதி, தரம் பாராமல் தரப்படும் Hesed என்ற அன்பு பைத்தியக்காரத்தனமான அன்பாகத் தெரியும். தவறிப்போன ஓர் ஆட்டைத் தேடி, மற்ற 99 ஆடுகளை விட்டுச் செல்லும் ஆயன், எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மீண்டும் வந்த மகனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் விருந்து கொடுக்கும் தந்தை ஆகிய உவமைகள் இந்தப் பைத்தியக்காரத்தனமான அன்புக்கு எடுத்துக்காட்டாக இயேசு கூறும் உவமைகள்.
தகுதி, தரம் இவைகளைப் பார்க்காமல் தாராளமாய் நம்மை வந்து சூழ்ந்துகொள்ளும் பேரன்பைப் பற்றி திருப்பாடல் 23ன் ஆசிரியர் கூறியுள்ள இறுதி வரியில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

பல்வேறு பெயர்களால் நாம் கடவுளை அழைத்தாலும், கடவுள் ஒருவரே என்று சொல்கிறோம். அதேபோல், அன்பு, கனிவு, கருணை, காதல், பரிவு, பாசம் என்று நாம் பயன்படுத்தும் பல்வேறு சொற்கள் ஒரே உண்மையின், ஒரே உணர்வின் பல்வேறு முகங்கள். இந்தப் புனித உணர்வைச் சொல்ல தமிழில் பல வார்த்தைகள் இருப்பது போல், எபிரேய மொழியில் பல வார்த்தைகள் உண்டு. இந்த உணர்வுகளின் ஓர் ஒட்டமொத்த வார்த்தையாக Hesed பயன்படுத்தப்படுகிறது. Hesed என்ற வார்த்தைக்கு இஸ்ரயேல் மக்கள் மத்தியில் நிலவி வந்த எண்ணங்களைப் புரிந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

Hesed என்பது இஸ்ரயேல் மக்கள் வாழ்வின் அடிப்படை நியதி. அவர்களைப் பொறுத்தவரை இந்த உலகம் மூன்று தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. Torah என்று அழைக்கப்படும் இறைச் சட்டங்கள் முதல் தூண். இறைவனுக்குப் புரியும் பணிகள் இரண்டாவது தூண். அன்பு காட்டுவது மூன்றாவது தூண்.

இஸ்ரயேல் மக்களின் பாரம்பரியத்தில் ஆழமாய் ஊறிய ஓர் எண்ணம்... ஓர் உணர்வு... கருணை, பரிவு. இறைச் சட்டங்களும், இறைவாக்கினர்களும் மீண்டும் மீண்டும் இந்த உண்மையை வலியுறுத்தி வந்துள்ளனர். அதிலும் சிறப்பாக, சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களான, ஏழைகள், அனாதைகள், விதவைகள், அந்நிய நாட்டவர் மீது தனிப்பட்ட பரிவு காட்ட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் விவிலியம் சொல்கிறது.
இந்தக் கருணை, பரிவு வெறும் கடமைக்காகச் செய்யப்படுவதல்ல, மாறாக, தங்கள் வாழ்வின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரு பாடமாக இஸ்ராயலர்களின் கருணை அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக, அந்நிய நாட்டவர் மீது இஸ்ரயேல் மக்கள் பரிவு காட்ட காரணமாய்ச் சொல்லப்படுவது என்ன?... ஒரு காலத்தில் அவர்களும் வேற்று நாட்டில் அன்னியராய் இருந்தனர் என்ற உண்மை. இதை வலியுறுத்தும் பல பகுதிகளை விவிலியத்தில் வாசிக்கிறோம். இதோ ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்:

விடுதலைப்பயணம் 22: 21-23
அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

லேவியர் 19: 34
உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

இணைச்சட்டம் 10: 18-19
அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.19 அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்: ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

நாம் வாழ்ந்து வரும் இக்காலத்தில் இஸ்ரயேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே இந்தப் பரிவும், கனிவும் வெகுவாகக் குறைந்துள்ளது என்பது நாம் கண்டு வரும் எதார்த்தம். அவர்களை மட்டும் குற்றவிரல் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டாம். சொந்த நாட்டுக்குள் அன்னியராய், அகதிகளாய் வாழும் மக்கள் உலகின் பல நாடுகளில் அதிகமாகி வருவதையும், மதம், மொழி, நிறம், குலம் என்று மனித குலத்தை பலநூறு பிரிவுகளாக்கி, அன்னியரை அநியாயமாய் நடத்தும் போக்கு அதிகரித்து வருவதையும் வேதனையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம். Hesed பற்றி எண்ணும்போது, மனித குலத்தில் பிரிவுகள் எல்லாம் மறைந்து, பரிவு வளர வேண்டுமென செபிப்போம்.

“உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்” என்ற இவ்வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கும்படி நம்மை Harold Kushner தூண்டுகிறார்.

அருள் நலமும், பேரன்பும் வாழ்நாளெல்லாம் நம்மைப் புடைசூழ்ந்து வந்தால், உலகம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்ற அற்புதமான கற்பனையை Kushner நம் கண் முன் கொண்டு வருகிறார். அந்தக் கற்பனையை நமதாக்குவோம். நம் செபமாக்குவோம்.
அந்த உலகில்... இளமைப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும் இளையோர் பாதுகாப்பற்ற உணர்வில் தவிக்க மாட்டார்கள். மற்றவர்களை எப்போதும் சந்தேகமாய்ப் பார்த்து அவர்களையும் பாதுகாப்பற்ற நிலைக்கு உட்படுத்தாமல், அனைவரையும் கனிவோடு கருணையோடு நடத்துவார்கள்.
அந்த உலகில்... கணவனும், மனைவியும் தங்களுக்கு ஏற்பட்டக் காயங்களை மட்டும் கணக்குப் பார்த்து, மனத்தைக் கடினமாக்கிக்கொள்ளாமல், தங்கள் வாழ்க்கைத் துணையைக் கனிவோடு நடத்துவார்கள்.
அந்த உலகில்... வயது முதிர்ந்தவர்கள் நாளை எப்படி விடியப் போகிறதோ என்ற கவலையோடு உறங்கப் போகாமல், இனி தங்கள் வாழ்நாளெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கனிவால் எல்லாமே நலமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் கண் அயர்வார்கள்.
அந்த அழகான உலகில் இயற்கையிலும் வாழ்விலும் ஏற்படும் சுனாமிகளை நாம் மனதளவிலாவது சமாளிக்க முடியும்.
அந்த அழகான உலகை நாம் உருவாக்கி, அனைவரையும் வாழ வைக்கும் வரம் வேண்டுவோம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
http://www.vaticanradio.org/

13 March, 2011

The Logic of Temptations அறிவுப்பூர்வமான சோதனைகள்




Once upon a time a certain mother was tempted to quit – quit her job, quit her family, quit her parish, quit everything. When the parish priest suggested she read about the temptation of Jesus, she said that she had already and that all the demands which were made on her, presumably with God’s approval and even connivance, were about the same as being asked to jump off the parapet of the temple. How was she supposed to do everything in the family – bring in money, cook the meals, clean the house, worry about the kids, help with the home work, keep an eye on the TV the kids were watching – when no one else seemed worried about these things? She loved her job and she loved her family, but she was tired and all she wanted to do was quit. Well, said the parish priest, why not go on strike. The woman thought about that and decided she would.
She contracted a case of blue flu – too sick to go to her job, too sick to take care of the house, too sick to help with homework, too sick to worry about the kids, too sick to do anything but lie in bed and watch TV. The doctor was summoned and suggested that she needed a long rest. You know what happened then? The mother found that it was all BORING. The daytime soaps were particularly BORING! So she improved rapidly, especially when everyone promised that they would help (which they did, but often just made the mother’s task more complicated). Temptations, said the mother, look a lot better before you give into them than afterwards.

(Homily from Father Andrew M. Greeley - http://www.agreeley.com/homilies.html)

Temptations come in different shapes and sizes… mostly very attractive. Only after they take root in our lives do they show their true colours. Every year, the First Sunday of Lent invites us to think about temptations. Today’s first reading talks of the temptation faced by our first parents. (Genesis 2: 7-9; 3: 1-7) The Gospel talks of temptations faced by Jesus. (Matthew 4: 1-11) EVERY human being was, is, and will be tempted. No exceptions. Not even Jesus.

All the three synoptic gospels talk of this experience of Jesus. Scripture scholars say that when an event is reported in all the four gospels or in the three synoptic gospels, then it must have been a significant event in the life of Christ. The temptation-event in the life of Jesus is different from the other events. While there were quite a few witnesses to the other events, Jesus was the only eyewitness to this event. Why did Jesus, who shunned all publicity, tell His disciples about this experience he had alone in the desert? Perhaps He wanted us to learn quite a few lessons from this most common of all human experiences.

The first lesson is given in the words of the mother in the story we have just read. Temptations look a lot better before you give into them than afterwards. The façade of temptations is more attractive. I am sure many of us have seen the Life of Christ enacted on stage. In almost all these stage plays, the scene of the devil tempting Jesus is a must. It would be a dramatic scene with the devil usually clothed in black, with the face painted also in black, with protruding teeth, with two horns and with a loud, scary voice entering the stage. If Satan comes in this fashion, then all of us would flee the scene of drive away this horrible creature from our sight. All of us know that Satan comes clothed in light… And no wonder, for Satan himself masquerades as an angel of light. (II Cor. 11:14)

All the three temptations that Jesus faced were ‘good’ temptations, very logical. This is the second lesson we need to learn about temptations – that they are very logical. Jesus was hungry; therefore He was asked to turn the stones into bread. Jesus wanted to begin his public ministry; therefore He was asked to begin his ministry with a bang… by jumping off the pinnacle of the Temple. Jesus wanted to gain the whole world for His Father; therefore He was asked to make compromises with the devil. All the three ‘therefore’s sound very logical.

Satan also uses an opening salvo to ‘hook’ Jesus into doing his bidding. “If you are the Son of God, tell these stones to become bread.” “If you are the Son of God, throw yourself down.” On the one hand this looks like a childish challenge. Kids throw such challenges at one another “Hey, Tom, if you are so brave, why don’t you climb this tree? Why don’t you do this… and why don’t you do that? etc. But, a closer analysis of these ‘childish challenges’ also gives us a clue that the Satan was trying to define what the Son of God must be like. If Jesus was the Son of God, He must use His powers to gratify himself, to make a spectacular entry into human history, to make compromises with evil forces even to the point of total surrender to them… In short, this is a short cut… a path of least resistance… an unholy compromise.

Jesus tries to respond to these challenges in his own style. He rewrites the definition of the Son of God. According to Jesus, if someone uses his / her special powers to satiate one’s own needs or to seek popularity, he or she is a magician and not the Son of God. Jesus, who refused to satiate his own hunger in the desert, used his special powers to feed thousands in a remote place similar to the desert. Jesus, who refused to surrender to the Satan with a strong rebuttal: “Away from me, Satan!”, was willing to surrender to the Father while He was in his most vulnerable moment on the Cross. These are some of the lessons Jesus tries to teach us about temptations. Are we listening? Lenten season is a good time to learn from the desert-school of Jesus.

Here is a conversation between Calvin and Hobbes that serves as a wake-up call. "Do you believe in the devil? You know, a supreme evil being dedicated to the temptation, corruption, and destruction of man?" "I'm not sure that man needs the help."

Dear Friends,
This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit
www.vaticanradio.org and keep in touch. Thank you.

இல்லத்தலைவி ஒருவர் தன் பங்குத்தந்தையைச் சந்திக்கச் சென்றார். தன் மனதில் இருந்த குழப்பத்தையெல்லாம் அவரிடம் கொட்டினார்: "சாமி, எல்லாத்தையும் விட்டுட்டு, எங்கேயாவது, கண்காணாத இடத்துக்கு போயிடணும் போல இருக்கு." என்று அவர் ஆரம்பித்தார். வீட்டு வேலை, அலுவலக வேலை, பங்குக்கோவில் வேலை என்று அனைத்தையும் விட்டுவிட அவர் நினைத்தார். பங்குத்தந்தை பலவிதமான ஆலோசனைகள் தந்தார். எதுவும் அந்த இல்லத்தலைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை. இறுதியாக, "எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்குப் பதில், ஒரு வாரத்திற்கு 'strike' வேலை நிறுத்தம் செய்யுங்கள்." என்று பங்குத்தந்தை சொன்ன ஆலோசனையை ஏற்றுக் கொண்டார் இல்லத்தலைவி.
வீட்டுக்குச் சென்றவர் தனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, படுத்துக்கொண்டார். அலுவலகத்திலிருந்தும் விடுமுறை எடுத்துக்கொண்டார். அவரது நிலையைக் கண்ட கணவனும், பிள்ளைகளும் அவர் மீது தனி கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்தனர். இரண்டு நாட்கள் சென்றன. படுத்திருந்த வீட்டுத்தலைவிக்கு 'போர்' அடித்தது. தொலைக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து அலுத்துப் போனது. உதவி செய்வதாக கணவனும், பிள்ளைகளும் வேலைகள் செய்து விட்டுச் சென்றபின், சமையலறையைப் பார்த்த வீட்டுத்தலைவி பயந்து போனார். அவர்கள் செய்த வேலைகளை மீண்டும் சரி செய்ய இன்னும் பல நாட்கள் ஆகுமே என்று பயந்தார்.
ஒரு வாரம் வேலை நிறுத்தம் செய்யலாம் என்ற தீர்மானத்தில் இருந்தவர் இரண்டு நாட்களில் வேலைநிறுத்தத்தை முடித்தார். மீண்டும் தன் பணிகளை ஆரம்பித்தார். மூன்றாம் நாள் அவரைக் காண பங்குத்தந்தை வந்தபோது, அவர் வீட்டு வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தார். பங்குத்தந்தையைக் கண்டதும் வீட்டுத் தலைவி, "சாமி, எந்த ஒரு சோதனையும் வரும்போது அழகாகத்தான் இருக்கு. சோதனைக்கு இடம் கொடுத்த பிறகுதான் அதனுடைய உண்மை உருவம் தெரியுது." என்று அவர் தான் பெற்ற ஞானோதயத்தை, அறிவொளியைப் பங்குத் தந்தையிடம் பகிர்ந்து கொண்டார்.
நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். சோதனைகள் நம்மை அணுகும்போது அழகாக, நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும்... நம் மனதில் வந்து குடியேறிய பின் கதையே வேறுவிதமாய் மாறும். எந்த ஒரு சோதனைக்கும் முகம் அழகாக இருக்கும், முதுகு அழுக்காக, அருவருப்பாக இருக்கும். சோதனைகளைப் பற்றி நாம் இன்னும் சிறிது அறிவொளி பெற இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று சோதனைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு ஓர் அழைப்பு தரப்படுகிறது. இன்றைய முதல் வாசகம் நமது முதல் பெற்றோர் சந்தித்த சோதனையையும், நற்செய்தி இயேசு சந்தித்த சோதனையையும் சொல்கின்றன. சோதனை என்பது மனிதராய்ப் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எந்த ஒரு சூழலிலும் சோதனைகள் வரும். இறைவனின் புனிதமான சன்னதியிலும், இரைச்சல் நிறைந்த சந்தையிலும் சோதனைகள் வரும். கனிகள் பழுத்துத் தொங்கும் தோட்டத்திலும், மனித நடமாட்டமே இல்லாத பாலை நிலத்திலும் சோதனைகள் வரும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனைத் தனியே சந்திக்கச் சென்றிருந்த இயேசுவைச் சோதனையும் சந்தித்தது. இந்தச் சோதனைகளை இயேசு சந்தித்தார் என்பதற்கு ஒரே ஒரு சாட்சிதான் உண்டு. இயேசு மட்டுமே அந்த சாட்சி. தனிப்பட்ட வகையில் அவர் சந்தித்தச் சோதனைகளைப் பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளும் கூறுகின்றன. சுய விளம்பரத்தைச் சுத்தமாக விரும்பாத இயேசு, தனக்குத் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த இந்தச் சோதனைகளை ஏன் பிறரோடு பகிர்ந்து கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. தான் சந்தித்தச் சோதனைகள், அவற்றைத் தான் வென்ற வழிகள் இவைகளைப் பகிர்ந்து கொண்டால், மற்றவர்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இயேசு சீடர்களிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கலாம். இயேசுவின் இந்த அனுபவம் சொல்லித்தரும் பாடங்கள் என்ன?

சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கேன். அந்த நாடகங்களில் எல்லாம் அவர் சோதிக்கப்பட்ட காட்சி கட்டாயம் இருக்கும். அந்தக் காட்சிகளில் சாத்தான் கருப்பு உடையுடன், முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகள் வைத்து, நீண்ட இரு பற்களோடு பயங்கரமாய் சிரித்துக் கொண்டு வரும். சிறு வயதில் பல முறை நான் அந்தக் காட்சியைப் பார்த்து பயந்திருக்கிறேன். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது அதை விரட்டி அடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்க இருக்கும் சாத்தான்களும், அவை கொண்டு வரும் சோதனைகளும் பயத்தில் நம்மை விரட்டுவதற்கு பதில், அன்போடு நம் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்கின்றன என்பதுதானே நம் அனுபவம். சோதனைகளும், சாத்தான்களும் அவ்வளவு அழகானவை.

மேலோட்டமாகப் பார்த்தால், இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளும் நல்ல சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.

இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம் கல்லை அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். நேரம் அறிந்து, தேவை உணர்ந்து வந்த ஒரு சோதனை. தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனேயே தீர்த்துவிடத் துடிக்கும்போது குறுக்கு வழிகளில் செல்லும் சோதனைகள் அதிகமாகின்றன.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, உலகை மீட்பதற்கு எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை அலகை இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தின் மேலிருந்து இயேசு குதிக்க வேண்டும். அப்படி குதித்தால், உடனே வானங்கள் திறந்து, விண்ணவர் ஆயிரமாய் இறங்கி வந்து, இயேசுவின் பாதம் தரையைத் தொடாமல் அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வருவதற்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும் இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் கடினமான பணி, இறுதி 3 நாட்கள் கடும் வேதனை, இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடக்கும். சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி. தமிழ் நாட்டில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தச் சோதனையின் பல எதிரொலிகள் கேட்கப்போகின்றன.

இவ்விரு சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே அழகான வரிகள். "நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்." "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்." சிறுவர்கள் விளையாடும் போது, இது போன்ற சவால்கள் எழும். "நீ வீரனாய் இருந்தா... இந்தப் பூச்சியைப் பிடிச்சிடு, அந்த மரத்துல ஏறிடு..." போன்ற சவால்கள். சவால்களைச் சந்திக்காவிட்டால், அந்தச் சிறுவன் வீரன் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு விடும். இதற்கு பயந்து, வீர சாகசங்கள் செய்து அடிபட்டுத் திரும்பும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம்.

இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். "நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன் புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயத் தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள புதுமை செய்ய வேண்டும்.

தன் சக்தியை நிலை நாட்ட புதுமைகள் செய்பவர்கள் வித்தைகள் காட்டும் மந்திரவாதிகளாய் இருக்க முடியுமே தவிர, இறைவனாகவோ, இறைமகனாகவோ இருக்க முடியாது. தன் சுய தேவைகளுக்கு, சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். “மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை” என்று இணைச்சட்ட நூலில் மோசே சொன்ன வார்த்தைகளைக் கூறுகிறார். (இணை. 8:3) தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம்... இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. திருப்பாடல் 91: 11-12 என்ற பகுதியை, இறை வார்த்தையைப் பயன்படுத்தி அலகை ஆலோசனை வழங்குகிறது. சாத்தானுக்கு வேதம், விவிலியம் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. "சாத்தானும் வேதம் ஓதும்" (Even the devil can quote the Bible) என்ற பழமொழி உண்டு. வேதங்கள், வேதநூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை. உண்மை, நீதி இவை அடிக்கடி விலை பேசப்படும் நமது நீதி மன்றங்களில் விவிலியத்தின் மீது அல்லது பிற வேத நூல்களின் மீது சத்தியப் பிரமாணங்கள் கொடுக்கப்படுகின்றன. வேதனை மேல் வேதனை... போதுமடா சாமி.

மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே! அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் ஒரு 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டும். சாத்தானோடு சமரசம் செய்ய வேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார். விளையாடியது போதும் என்று இயேசு சாத்தானை விரட்டி அடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, "தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன்" என்று இறைவனிடம் சரணடைந்தார்... உலகைத் தன் வசமாக்கினார்.
தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும்... இப்படி நடப்பதற்குக் காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும்... நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.

சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுருக்கு வழிகளில் பலன் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை வந்தடையும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக் கொண்டதை செயலாக்க விருப்பமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தவக்காலம் நல்லதொரு நேரம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி:
www.vaticanradio.org